Posts Tagged ‘நாத்திக மூட நம்பிக்கை’

சனாதன ஒழிப்பு வெறுப்புப் பேச்சு, உச்சநீதி மன்றதில் உதயநிதி வழக்கு, ஆஜராகி வழக்காடும் ஆரிய வக்கீல்!

மார்ச் 5, 2024

சனாதன ஒழிப்பு வெறுப்புப் பேச்சு, உச்சநீதி மன்றதில் உதயநிதி வழக்கு, ஆஜராகி வழக்காடும் ஆரிய வக்கீல்!

பிடிஐ பாணியில் உதயநிதி வழக்குப் பற்றிய செய்தி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி [02-09-2023] ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது[1]. இதில் பங்கேற்று பேசிய தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்[2], ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை,’’ என்று பேசினார்[3]. இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது[4]. பலர் அத்தகைய பொறுப்பற்றப் பேச்சை எதிர்த்து கருத்தும் தெரிவித்தனர்[5]. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், பிஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன[6]. வழக்கம் போல, இச்செய்தியும் பல நாளிதழ்கள், இணைத்தளங்கள் முதலியவற்றில் வந்திருந்தாலும், பிடிஐ பாணியில் குறிப்பிட்ட வரிகள் மட்டுமப்படியே பதிப்பித்துள்ளனர்[7]. தலைப்புகளை மட்டும் மாற்றியுள்ளனர்[8]. ஆக, அவர்களின் கருத்து சுதந்திரமும் அந்த அளவில் உள்ளது தெரிகிறது.

சுருக்கமாக வெளியிடப் பட்ட செய்தி, தமிழகத்தில் ஊடகத்தைக் கட்டுப் படுத்துகிறவர் யார்?: தமிழகத்தை பொறுத்த வரையிலும் மின் மற்றும் அச்சு ஊடகங்களை, பெரும்பாலும் திமுக தான் கட்டுப்படுத்துகின்றது. அவரது ஊடக சாம்ராஜ் வலுவானது என்பதனை, நிச்சயமாக அனைவரும் அறிந்தது எனலாம். முன்பு தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் எவ்வாறு, சன் குடும்பத்தினால் கட்டுப்படுத்தப்பட்டன, என்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. லைசன்ஸ் கொடுப்பது, புதுப்பிப்பது என்பதில் கூட பல சிக்கல்கள் இருந்ததை அப்பொழுது தனியார் தொலைக்காட்சி சேனல்கள் நடைபெறுபவர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தது. இப்பொழுதும் அதிமுக போன்ற கட்சிகள் இருந்தாலும், அவரது சேனல்கள் ஒன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் முறையில் இல்லை. எனவே இத்தகைய செய்திகளுடன் பொழுது இந்த ஊடகங்கள் எல்லாம் செய்தியை வெளியிட்டு அமைதியாகி விட்டனர். ஆராய்ச்சி செய்து, நுணுக்கமாக அதில் உள்ள விவரங்கள் முதலியவற்றை எல்லாம் கொடுப்பது என்பது எல்லாம் இல்லை. ஏதோ வழக்குச் சென்றது, சார்பாக ஒரு வக்கீல் ஆஜரானார், வழக்கு தள்ளி போடப்பட்டது என்றுதா தான் செய்திகள் முடிந்து காணப்படுகிறன. தவிர இதைப் பற்றிய நுணுக்கமான ஆலோசனை எதுவும் காணப்படவில்லை.

உதயநிதியின் வெற்ப்புப் பேச்சு ஏன் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது?: ஒரு மாநில அமைச்சர், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, ஆட்சியில் அதிகாரத்தில் பணிகள் ஈடுபடுகிறார். ஆகவே அமைச்சர் என்ற முறையில் அவர் பேசுவது, நடந்து கொள்வது, மற்ற நடவடிக்கைகள் எல்லாமே அந்த அரசியல் சட்டத்தின் கருத்துகளுக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும். ஆகவே, தன்னுடைய சித்தாந்தம், தன்னுடைய கட்சி மற்றும் விருப்பு-வெறுப்பு கொண்ட பாவங்கள், அதற்கு ஏற்றபடி வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெறுப்பு பேச்சுகள், குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றும் மதங்களுடைய உணர்வுகளை தொடர்ச்சியாக புண்படும்படி பேசி வருவது எல்லாம் நடந்து கொண்டே இருக்கின்றன. அந்நிலையில் நிச்சயமாக அவ்வாறு பேசுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இதனால் தான் இந்தியா முழுவதும் பலருடைய கவனத்திற்கு இந்த பேச்சு கவனத்தில் வந்த போது மற்ற மாநிலங்களிலும் கூட இவருக்கு எதிராக புகார் கொடுக்கப் பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், திடீரென்று, திமுக இந்திய அளவில் அரசியல் செய்ய வேண்டும் என்றும் வேலை செய்து வருகிறது. திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, ஸ்டாலின் தான் பிரதம மந்திரி என்பது போல புத்தகங்களையுன் வெௐஇயிடப் படுள்ளன.

உச்சநீதி மன்றம் கண்டித்தது: இந்த வழக்குகளை ஒன்றாக இணைக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அமர்வில் இந்த மனு 02-03-2024 அன்று விசாரணைக்கு வந்தது[10]. அப்போது நீதிபதிகள், ‘‘அரசியலமைப்பு சட்டப் பிரிவு 19(1)() மற்றும் பிரிவு 25 அளித்துள்ள கருத்து சுதந்திர உரிமையை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தற்போது பிரிவு 32-ன் கீழ் பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் (உதயநிதி ஸ்டாலின்) மனு தாக்கல் செய்துள்ளீர்கள்[11]. நீங்கள் ஒன்றும் சாதாரண நபர் அல்ல[12]. ஒரு மாநிலத்தின் அமைச்சர்[13]. உங்கள் பேச்சு எந்த அளவுக்கு தாக்கம், பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்,’’ என்றனர்[14]. சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘நீங்கள் சாதாரண நபர் அல்ல[15]. மாநிலத்தின் அமைச்சர்[16]. உங்கள் பேச்சு எந்த அளவுக்கு தாக்கம், பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினர்[17]. இவ்வாறு தெரிவித்த செய்தியும் நாட்டில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது[18].

15-03-2024 அன்று வழக்கு விசாரணை தள்ளி வைக்கப் பட்டது: உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, கருத்து சுதந்திரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் அர்னாப் கோஸ்வாமி, முகமது ஸுபைர், நூபுர் சர்மா ஆகியோரது முந்தைய வழக்குகளை சுட்டிக்காட்டி வாதிட்டார்[19]. ‘‘சனாதன தர்மம் தொடர்பான இந்த வழக்கை எதிர்கொள்ள மாட்டேன் என்று ஒருபோதும் கூறவில்லை. பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக மாற்றி, நியாயமாக விசாரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறேன்,’’ என்றார்[20]. இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிப்பது தொடர்பான விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்[21].  15-03-2024 அன்று விசாரணை எப்படி இருக்கும் என்பதை கவனிக்கலாம்[22].

திராவிடம் பேசி மக்களை ஏமாற்றி வருவது: இப்பொழுது வேடிக்கை என்னவென்றால் உச்ச நீதிமன்றத்தில் உதயநிதிக்கு ஆஜராகும் வக்கீல் அபிஷேக் மனு சிங்வி. அவர் இவர் காங்கிரஸ்காரர், ஆரியர், வடநாட்டவர், தமிழ் தெரியாதவர் என்றெல்லாம் இருக்கின்ற நிலையில் இருந்தாலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில் கையாளுவதற்கு இவர் தான் தேவைப்படுகிறார் என்பதையும் நோக்கத் தக்கது. திராவிடம், தமிழ் தேசியம், இந்தியாவிலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள், என்றெல்லாம் பிரிவினைவாதம் தொடர்ந்து திராவிட கட்சிகள் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பேசி வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆட்சியை பிடிப்பதற்கு எப்படி ஒரு பிராமண ஆலோசகர் – பிரசாந்த் கிஷோர், பிஹாரி, தேவைப்பட்டாரோ, அது போல இப்பொழுதும் சட்ட ரீதியில் வழக்கில் இந்த தப்பித்துக்கொள்ள ஒரு வடநாட்டவர் தேவைப்படுகிறார். ஆகவே இவர்களுக்கு கொள்கை ரீதியில் எந்த அளவுக்கு பிடிப்பு இருக்கிறது அல்லது இவ்வாறு பேசி-பேசி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதையும் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

05-03-2024


[1] தமிழ்.இந்து, சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம், செய்திப்பிரிவு, Published : 05 Mar 2024 06:09 AM Last Updated : 05 Mar, 2024 06:09 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1210866-supreme-court-condemns-udhayanidhi-stalin-s-talk-about-sanatana-dharma.html

[3] தினமலர், சனாதன விவகாரம்: பேச்சு சுதந்திர உரிமையை மீறியதாக உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு, மாற்றம் செய்த நாள்: மார் 05,2024 10:33

[4] https://m.dinamalar.com/detail.php?id=3567893

[5] தினமணி, விளைவுகளை உணா்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்க வேண்டும்: சநாதன தா்ம சா்ச்சை பேச்சு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து, Din, Updated on: 05 மார்ச் 2024, 1:08 am.

[6] https://www.dinamani.com/newdelhi/2024/Mar/04/udayanidhi-stalin-should-have-spoken-after-eating-the-consequences-supreme-court-comments-on-sanatana-thama-chatchai-talks

[7] தமிழ்.ஒன்.இந்தியா, உதயநிதி ஸ்டாலின், பின்விளைவுகளை பற்றி யோசித்து பேசியிருக்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் கருத்து, By Mathivanan Maran Updated: Monday, March 4, 2024, 14:42 [IST]

[8] https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-advices-udhayanidhi-stalin-over-remarks-against-sanatana-dharma-588241.html

[9] புதியதலைமுறை, சனாதனம் குறித்த பேச்சின் பின் விளைவுகள் தெரியாதா? – அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி, webteam, Published on:  04 Mar 2024, 2:42 pm

[10]https://www.puthiyathalaimurai.com/tamilnadu/supreme-court-asks-udhayanidhi-stalin-in-sanatana-remark

[11] விகடன், சனாதன கருத்து: `நீங்கள் சாமானியர் அல்லதுஷ்பிரயோகம் செய்கிறீர்கள்!’ – உதயநிதியைக் கண்டித்த கோர்ட், VM மன்சூர் கைரி, Published: 04-03-2024 at 2 PM; Updated: 04-03-2024 at 2 PM666

[12] https://www.vikatan.com/government-and-politics/judiciary/supreme-court-slams-dmks-udhayanidhi-stalin-over-remarks-on-sanatana-dharma

[13] நக்கீரன், விளைவுகள் என்ன என்பது உங்களுக்கு தெரியாதா?” – அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 04/03/2024 | Edited on 04/03/2024.

[14] https://www.nakkheeran.in/24-by-7-news/india/supreme-court-question-minister-udayanidhi-sanathanam

[15] ஜனம்.தமிழ், சனாதன வழக்கு : அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி, Web Desk Web Desk  Mar 4, 2024, 03:34 pm IST,

[16] https://janamtamil.com/91281278/

[17] இடிவி.பாரத், பின்விளைவு தெரியாமல் பேசினீர்களா? – சனாதன தர்மத்தை விமர்சித்த உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Mar 4, 2024, 1:50 PM IST; Updated : Mar 4, 2024, 5:23 PM IST.

[18] https://www.etvbharat.com/ta/!bharat/supreme-court-adjourns-minister-udhayanidhi-stalin-petition-on-sanatana-dharma-remark-case-tns24030402687

[19] ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Sanatan Dharma Controversy: ’நீங்கள் சாமானியர் அல்ல; அமைச்சர்!’ சனாதனம் விவகாரத்தில் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி , Kathiravan V HT Tamil, Mar 04, 2024 01:32 PM IST.

[20] https://tamil.hindustantimes.com/tamilnadu/you-are-not-a-layman-you-are-a-minister-supreme-court-questions-dmks-udhayanidhi-stalin-over-remarks-on-sanatana-131709538623484.html

[21] மின்னம்பலம், சனாதன பேச்சு…..உதயாநிதி மீது உச்சநீதிம்மன்றம் அதிருப்தி!,, மார்ச்.04, 2024 13:40 PM IST.

[22] https://minnambalam.com/political-news/sanatana-speech-supreme-court-displeasure-on-udayanidhi/

மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதி – பெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா, அரசியலா? (2)

ஜனவரி 19, 2024

மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதிபெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா, அரசியலா? (2)

ஆன்மீகம், அரசியல், திமுக, நாத்திகம், அரசியல் ஆக்குவது: ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[1]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது[2]. ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை[3]. எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் என்றார்[4]. “கால் வலி இருப்பதால் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து யோசிக்கிறேன்” என இபிஎஸ் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு[5], இருக்கலாம், “அவர் தவழ்ந்து தவழ்ந்து நிறைய போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வரலாம்” என்று கூறிச் சென்றார்[6]. இப்பொழுது, “ஆன்மீகம்” என்று சொல்லிக் கொண்டு திமுக புதிய வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயல்கிறது. ஆன்மாவை நம்பாத இந்த நாத்திகர்கள் ஏன் ஆன்மிகத்தைப் பற்றிப் பேச வேண்டும்?, பெரியாரிஸ பொய்மை, நாத்திக வெறுப்பு, இந்துவிரோத போக்கு என்ற கலவை ஆன்மீகமாக இருக்கமுடியாது.

உதயநிதி கூறியிருக்கும் ஒவ்வொரு வாக்கியமும், திமுகவின் முகமூடியைக் கிழித்து, சுயமுகத்தைக் காட்டுகிறது: இப்படியான வசனத்தை யாராவடு எழுதி கொடுத்துப் பேசினரா அல்லது விவரங்களைப் புரிந்து பதில் அளித்தாரா, அரிவிஜீவிகளான, ஊடக வல்லுனர்கள் எப்படி ஏற்றுக் கொண்டனர் என்று கவனிக்க வேண்டும்:

  • ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல
  • திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது
  • ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[7]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது
  • ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை
  • எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்

ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல: கடந்த 70 ஆண்டு திராவிடத்துவ, பெரியாரிஸ சித்தாந்த பேச்சுகள், எழுத்துகள் மற்றும் அரசியலை வைத்து கவனித்தால், இவர்கள் மாறப்போவதில்லை, இதுவரை பெற்றுள்ள அந்த பிம்பத்தையும் வேறு விதமாக சித்தரிக்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். ஆகவே மறுபடியும் தேர்தலுக்காக இவ்வாறு பேச்சை மாற்றி மாற்றி பேசுவது என்பது இவர்களுக்கு உரிய கலை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் முன்னரே இவருடைய தாத்தா ராமரைப்பற்றி எப்படி எல்லாம் பேசி இருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும், அதைல்லாம் மறுபடியும் எங்கே எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆக இதுவரையில் இந்து விரோதத் தன்மையுடன் தான் இருந்து கொண்டுள்ளதால், மக்கள் இவர்களெல்லாம் ராமர் கோவில் திறப்பிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் அல்லது மத நம்பிக்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றெல்லாம் யாரும் நம்ப போவதில்லை. இங்கு கூட “மத நம்பிக்கை” என்று சொல்லும் போது, இந்து மதம் எல்லாம் என்றும் ஒன்னும் சொல்லவில்லை. ஆகவே இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான்.

திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது: இதுவும் வழக்கமாக சொல்கின்ற சாக்குதான். திமுக நிச்சயமாக எந்த மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது, அதாவது இந்து மதத்தை தவிர என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பெரியாரிஸம், பகுத்தறிவு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இந்து மதத்தை தான் அவர்கள் எதிர்த்து வருகிறார்களே தவிர, நிச்சியமாக மற்ற மதங்களை விமர்சித்தது கிடையாது. அந்த மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் எதிராக இருந்ததும் கிடையாது. ஆகவே, மறுபடியும் மறுபடியும், திரும்பத் திரும்ப, இத்தகைய வசனங்களை பேசி மக்களை ஏமாற்றுவது என்பது நிச்சயமாக எடுபடாது. இப்பொழுது உள்ள நிலையில் நிச்சயமாக இவர்கள் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால், அந்த முரண்பாடு இக்கால இளைஞர்களின் மனதில் நன்றாகவே பதில் ஆரம்பித்துள்ளது. ஆகவே நிச்சயமாக அவர்கள் அதற்கான ஜனநாயக ரீதியிலான முடிவையும் காண்பார்கள். அதாவது தேர்தல் எனும் பொழுது, தேர்தல் வைத்து தான் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அதில் அவர்களுக்கு உண்டான பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டிய காலம் நிச்சயமாக அருகில் உள்ளது எனலாம்.

ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[8]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது: பிரச்சனை இல்லை என்றால் பிறகு எதற்கு இத்தகைய வசனங்கள் எல்லாம் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது? இது இவர்கள் தீர்மானத்தில் நடக்கும் விஷயம் அல்ல, ஒட்டுமொத்தமான பல கோடி இந்துக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் தான் இது நடந்து கொண்டிருக்கிறது. ஏன் உச்ச நீதிமன்றமும் இதற்கு தீர்ப்பை கொடுத்து விட்டது. ஆக, அந்த வழக்கில் இருப்பவர்கள் ஒப்புக்கொண்டு தான் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. அந்த கும்பாபிஷேகம் போன்ற மற்ற சடங்குகளை இப்பொழுது செய்ய தீர்மானித்துள்ளனர். ஆகவே தான் அவர்கள் அந்த கோவில் திறப்பு விழாவை இவர்கள் ஒன்று எதிர்ப்பது, ஆதரிப்பது என்பதால் மட்டும் ஒன்று ஆகி விடப்போவதில்லை. இவ்வாறு பாட்டு பாடிக் கொண்டிருப்பதால் என்ன முக்கியத்துவம் ஏற்பட போகிறது என்பதும் ஒன்றும் இல்லை.

ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை: இங்கு இங்கு தான் உதயநிதியின் மனதில் உள்ள அந்த அப்பட்டமான இந்து விரோதம் வெளிப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம் அங்கிருந்து மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பது மிகவும் அபத்தமான பேச்சு. இது எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது என்பதும், இவர் என்னவோ பெரிய இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளை விட பெரிய புத்திசாலி மாதிரியும், அதிக பிரசங்கத்தனமாக பேசுவது, எல்லாம் முடிந்து கோவிலும் கட்டி விழா கொண்டாட வேண்டிய தருணத்தில், இத்தகைய அபத்தமான பேச்சு பேசுவது மிகவும் கேவலமாக இருக்கிறது. அ[ப்படி பேசுவது என்பதும், இந்த திராவிட தூதர்களுக்கு சரித்திரம் என்பது எந்த அளவுக்கு சூன்யமாக இருக்கிறது என்பது புரிந்து கொள்ளலாம். பாபருடைய தளபதி அங்கிருந்த கோவிலை இடித்து மசூதி கட்டினான் என்று தீர்மானம் ஆகி, உச்சநீதிமன்றத்தில் பதிவாகி, பிறகு அந்த வழக்கில் இருந்த சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒப்புக்கொண்ட பிறகுதான் இவையெல்லாம் நடைபெறுகின்றன. ஆகவே இந்நேரத்தில் உதயநிதி, திமுக அல்லது இந்த பெரியாரிஸவாதிகள், இந்துவிரோதிகள் இந்த இல்லை என்பது சொல்வதால் மட்டும் என்னென்ன வழி விட போகிறது?

எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்: ஆன்மாவை மறுத்தது பெரியாரிஸம். ஆத்மாவை மறுத்தது நாத்திக-இந்துவிரோதம். திராவிட சித்தாந்தம் ஆன்மா இல்லை, ஆத்மா இல்லை என்று உளறி வந்து கொண்டிருக்கின்ற நிலையில், ஆன்மீகம் என்று பேச ஆரம்பித்துள்ளனர். இந்த பகுத்தறிவுவாதிகள் இப்பொழுது ஆன்மீகத்தை பற்றி அதிகமாக பேசி வருகின்றது தமாஷாக இருக்கிறது. ஆன்மீகத்தை நாங்கள் எதிர்ப்பதில்லை, ஆன்மீகம் எங்களுக்கு உடன்பாடு தான் – இப்படியெல்லாம் பேசுவதும் வேடிக்கையாக இருக்கிறது. ஆகையால் இவ்வாறு தொடர்ந்து முரண்பட்ட வாதங்களை வைப்பது, மக்களை ஏமாற்றுவது தான். நிச்சயமாக சீக்கிரமாக அவர்களது முகமுடிகள் கிழிந்து, மற்ற எல்லா மக்களுக்கும் தெரியப்போகிறது. இப்பொழுதே தெரிய ஆரம்பித்து விட்டது. ஆகவே, இதேபோல ஒரு பக்கம் நான் கிறிஸ்துவன் தான், நான் முஸ்லிம்களை ஆதரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டும், அல்லேலூயா என்று கத்திக் கொண்டும், இன்னொரு பக்கம் இந்துக்களை விமர்சித்துக் கொண்டோம் இப்படியே 70 ஆண்டுகள் ஓட்டிவிட்டாகியது. இனியும் இதே போன்ற பாரபட்சமான போக்கை கட்டுப்பட்டு வந்தார் நிச்சயமாக மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

19-10-2024


[1] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/minister-udhayanidhi-stalin-about-dmk-views-on-ayodya-ram-temple

[3] தமிழ்.சமயம், மசூதியை இடித்து கோயில் கட்டியதை ஏத்துக்க முடியாதுஅயோத்தி ராமர் கோவில் குறித்து உதயநிதி பரபரப்பு!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 18 Jan 2024, 2:43 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-udayanidhi-stalin-said-they-did-not-agree-with-the-demolition-of-the-mosque-and-construction-of-the-temple/articleshow/106954516.cms

[5] தமிழ்.டைம்ஸ்.நௌ, மசூதியை இடித்து கோயில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடடு இல்லை” – உதயநிதி ஸ்டாலின் , செய்திப்பிரிவு, Published : 18 Jan 2024 5.00 AM.

[6] https://tamil.timesnownews.com/tamil-nadu/ayodhya-ram-temple-udhayanidhi-stalin-says-about-dmk-stand-article-106947144

[7] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

[8] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

கடவுள் இல்லை என்பவன் முட்டாள்; ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி- இப்படி அறிவிக்கும் பதாகை ஏன் திராவிடத்துவாதிகளை பாதிக்க வேண்டும்?

நவம்பர் 22, 2023

கடவுள் இல்லை என்பவன் முட்டாள்; ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டிஇப்படி அறிவிக்கும் பதாகை ஏன் திராவிடத்துவாதிகளை பாதிக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்பவன் முட்டாள்; ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி:சென்னையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன், தனக்கு சொந்தமான தனியார் கட்டடத்தில், ‘கடவுள் இல்லை என்பவன் முட்டாள்; ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டிஎன, பதாகையை வைத்திருந்தார். அதனை போலீசார் உதவியுடன் அரசு அதிகாரிகள் அகற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்த தேவநாதன், கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த நமது யாதவ மகா சபையின் பெயர் பதாகையை இரவோடு இரவாக தலைமை அலுவலகத்திலிருந்து அகற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. அகற்றப்பட்ட பதாகையில் உள்ள அதே வாசகங்களுடன் தமிழகம் முழுவதும் வைக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.ஒவ்வொரு மாவட்ட யாதவ மகா சபை, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர,கிளை அலுவலகங்களிலும் கடவுள் இல்லை என்பவன் முட்டாள், ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற யாதவ மகா சபையின் வாசகம் கொண்ட பெயர் பதாகை வைக்கப்படும். அதிகார பலத்தை கொண்டு மாற்று சிந்தனை கொண்டவரை எல்லாம் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்ற அறிவாலயத்தின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை[1]: “கடவுள் இல்லை என்பவன் முட்டாள்” யாதவ மகாசபை நிறுவனர் திரு. தேவநாதன் யாதவ் அவர்கள் அலுவலுகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர் நள்ளிரவில் அகற்றம் இந்துமுன்னணி கண்டனம் – தமிழகம் முழுவதும் வைக்கப்படும் என்ற யாதவ மகாசபை அறிவிப்பிற்கு பாராட்டுக்கள், என்று பாராட்டி, பதாகையை அகற்றியதற்கு, கண்டனமும் தெரிவித்துள்ளார்[2]. யாதவ மகாசபை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, ‘கடவுள் இல்லை என்பவன் முட்டாள்’ என்ற போர்டை அகற்றியதற்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது[3]. அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை[4]: “சென்னையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன், தனக்கு சொந்தமான தனியார் கட்டடத்தில், ‘கடவுள் இல்லை என்பவன் முட்டாள்; ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டிஎன, வைத்திருந்த பதாகையை, போலீசார் உதவியுடன் அரசு அதிகாரிகள் அகற்றியிருப்பது, அநாகரிகமான செயல்[5]. தேவநாதன் வைத்த போர்டை அகற்றும் போலீசார், ‘கடவுளை மற; கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்; கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டிஎன, வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளையும், போர்டுகளையும் அகற்றுவது தானே நியாயமானதாக இருக்கும்? அதை செய்யவில்லையே ஏன்? முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, காவல் துறை, தி.மு..,வின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்பது வேதனையான உண்மை. ஒரு போர்டை அகற்றினால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இதுபோல போர்டு வைப்போம் என செயல்படுத்தும் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதனை, ஹிந்து முன்னணி பாராட்டுகிறது,” இவ்வாறு கூறியுள்ளார்[6].

காவல்துறை பாரபட்சமாக செயல்படுவது ஏன்?: மேலும் கடவுள் இல்லை! கடவுளை பரப்பியவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்! என ஈவேரா கும்பல் கூறி வருகிறது, அவர்களுக்கு அதனை சொல்ல உரிமை இருக்கும் பொழுது ‘கடவுள் இல்லை என சொல்கிறவன் முட்டாள், ஆன்மீகத்தை வணங்காதவன் காட்டுமிராண்டி என சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா? ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது எனக் கூறியே  போராட்டத்தில் ஈடுபட்டனர்[7]. தற்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்று விடுத்துள்ளனர்[8]. இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, யாதவ மகாசபை சார்பில் தேவநாதன் ‘கடவுள் இல்லை என்பவன் முட்டாள்! ஆன்மீகத்தை நம்பாதவன் காட்டுமிராண்டி’ இந்த வாசகத்தை தமிழகத்தில் மூளை முடுக்குகளில் எல்லாம் எடுத்துச் செல்ல தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஒரு போர்டு வைத்த யாதவ மகாசபையை தற்பொழுது அந்த போர்டை அகற்றுகிறேன் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்ட வைத்து விட்டனர்.

மயிலையில் 50 பேர் கைது: இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்து முன்னணி, பாஜக மற்ற அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கபாலீஸ்வரர் கோவில் அலுவலகத்திற்குச்சென்று மனு கொடுக்க முயன்றனர்[9]. அப்பொழுது, போலீஸார் செல்லவிடாமல் தடுத்தனர். இதனால், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாரை கைது செய்தனர்[10]. பிறகு அவர்கள் விடுவிக்கப் பட்டனர். இவ்வாறு ஒருதலைபட்சமாக செயல்பட்ட போலீஸாரின் நிலை திகைப்பாக இருந்தது. பதாகையை போலீசார் உதவியுடன் அரசு அதிகாரிகள் அகற்றினர்.  அப்படியென்றால், அரசு அதிகாரிகளுக்கு யார் ஆணையிட்டது?  அந்த பதாகைக்கு யார் எதிர்ப்புத் தெரிவித்தது? அந்த பதாகையில் இருக்கும் வாசகங்கள் யாரை பாதிக்கின்றது? நிச்சயமாக கடவுள் நம்பிக்கையுள்ளவர், ஆன்மீகத்தை உண்மையாக நேசிப்பவர் கவலைப்பட மாட்டார்கள். அப்படியென்றால், போலி நாத்திகர்கள், புரட்டு ஆன்மீகவாதிகள், ஆன்மீகப் போர்வையில் உலாவரும் வேடதாரிகள் போன்ற பொய்யர்கள் தான் கவலைப் பட்டிருப்பார்கள்.

எழும் கேள்விகளுக்கு திராவிடத்துவவாதிகள் பதில் சொல்வார்களா?:

  1. ‘கடவுள் இல்லை என்பவன் முட்டாள்; ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி’என, பதாகையை போலீசார் உதவியுடன் அரசு அதிகாரிகள் அகற்றினர்.
  2. அப்படியென்றால், அரசு அதிகாரிகளுக்கு யார் ஆணையிட்டது? போலீசாருக்கு யார் ஆணையிட்டு அவர்களுக்கு உதவச் சொன்னது?
  3. போலீசார், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அந்த பதாகை-வாசகங்கள் யாரை பாதிக்கின்றன?
  4. நாங்கள் பார்க்காத நீதிமன்றமா என்றெல்லாம் மார்தட்டும் விராதிவீரர்கள் இருக்கும் இந்த திராவிட மண்ணில் யார் பயந்தது?
  5. இதே தோரணையில் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று புகார் கொடுத்தால், அதனை இதே போல எடுத்து விடுவார்களா?
  6. புகார்தாரர்கள் வெளிப்படையாக வரலாமே, ஏன் மறைந்து கொண்டிருக்கிறார்கள்? அதிலும் ஆளும் கட்சி தான் உதவுகிறது என்றால்???
  7. இங்கும் எதிர்த்தவர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள், அதாவது பாரபட்ச நடவடிக்கை அரசால் எடுக்கப் பட்டிருக்கிறது!
  8. கடவுள் இல்லை என்பவன் முட்டாள்; ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி என்றால் அவர்களுக்குத் தான் கோபம் வரவேண்டும்.
  9. அப்படியென்றால் யார் அந்த முட்டாள், காட்டு மிராண்டி? எந்த கடவுளை இல்லை என்றான், எந்த ஆன்மீகத்தை அறியாமல் இருக்கிறான்?
  10. இந்து கடவுளை எதிர்க்கும் கூட்டங்கள் தான் அவை, ஏனெனில், அவை மற்ற மத-கடவுளரை, எதிர்ப்பதில்லை, தூஷிப்பதில்லை!
  11. பகுத்தறிவோடு, செக்யூலரிஸ நாத்திகம் மூலம், இந்துவிரோத ஆன்மீகத்துடன் அதிநவீன அறிவாளிகளாக, பிரஹஸ்பதிகளாக இருக்கிறார்கள்!

இந்நிகழ்ச்சி நிச்சயமாக வரலாற்றில் இடம் பெறும்: திராவிடத்துவ வரலாற்றை பொறுத்தவரையில் இந்த சம்பவம் நிச்சயமாக அந்த இயக்கத்திற்கு சாதகமாக இல்லை என்பது நன்றாகவே வெளிப்பட்டு விட்டது. கடவுள் இல்லை என்று கடவுள் மறுப்பு கொள்கை கொண்டதாக தெரிவித்துக் கொண்டு இந்து விரோதமாக தான் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதை இப்பொழுது நன்றாக வெளிப்பட்டு விட்டது. இதற்கு ஆட்சியில் இருக்கின்ற திமுகவும் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதும் தெரிந்து விட்டது. ஆகவே பகுத்தறிவு என்றும், இல்லை செக்யூலரிசம் என்றோ, இல்லை வேறு எந்த சித்தாந்தத்தின் முகமூடி அணிந்து கொண்டும், இனிமேல் மக்களை ஏமாற்றும் இத்தகைய பிரச்சாரங்களை செய்து ஏமாற்றுவது என்பது நடக்காது என்பதும் நன்றாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே பாரபட்சமிக்க இத்தகைய இந்து மதத்தை எதிர்ப்பது, தூஷிப்பது என்பது மட்டும் பகுத்தறிவும் ஆகாது. நிச்சயமாக தமிழகத்தில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தான் அதிலும் முக்கியமாக அவர்கள் எல்லாம் இந்துக்கள் தான். ஆகையால் எங்கள் கட்சியினர் கூட இந்துக்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி வருவதனால் இனிமையிலும் அவர்களது இத்தகைய முழு இந்துவிரோதத் தன்மையினை இனி மேலும் மறைத்து வைக்க முடியாது. ஜனநாயகரீதியில் மக்கள் செயல்பட ஆரம்பிக்கும் பொழுது கூடிய காலத்தில் அவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள், மறைந்தும் போவார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

22-11-2023.


[1]  இந்து முன்னணி, கடவுள் இல்லை என்பவன் முட்டாள் போர்டு அகற்றம் ஹிந்து முன்னணி கண்டனம், பதிவு செய்த நாள்: நவ 19,2023 00:19.

[2] https://hindumunnani.org/read-news.php?news=1634

[3] தினமலர், கடவுள் இல்லை என்பவன் முட்டாள் போர்டு அகற்றம் ஹிந்து முன்னணி கண்டனம், பதிவு செய்த நாள்: நவ 19,2023 00:19.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3484484

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கடவுள் இல்லை என்பவன் முட்டாள்.. போர்டு அகற்றிய போலீஸ்.. மயிலாப்பூரில் கொந்தளித்த இந்து அமைப்புகள், By Jeyalakshmi C, Updated: Monday, November 20, 2023, 18:58 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/hindu-organizations-protested-mylapore-police-remove-poster-no-god-stupid-in-chennai-558553.html

[7] நியூஸ்.24, முட்டாள்காட்டுமிராண்டிகடவுள் இல்லை எனும் கும்பலை கதறவிட்ட யாதவ மகா சபா..., BY WEB TEAM, NOVEMBER 21, 2023.

[8] https://www.tnnews24air.com/posts/Yadava-Mahasabha-who-God–to-the-latest-tamil-current-update

[9] தினமலர், மயிலையில் 50 பேர் கைது | Police storm private property to remove board | நவம்பர் 21,2023 19:39 IST…

[10] https://m.dinamalar.com/video_detail.php?id=269969

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக் கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலை – செக்யூலரிஸஅரசா, பெரியாரிஸ-நாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (2 )

நவம்பர் 17, 2023

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக்கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலைசெக்யூலரிஸ அரசா, பெரியாரிஸநாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (2 )

விதவிதமான வழக்குப் பதிவு: போலீஸாரின் அறிக்கையின் படி, கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி காலை வரை-

  1.  உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும்,
  2. தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும்,
  3. அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் என மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  4. விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டட்ம 118வது சட்டப்பிரிவின் படி 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்.
  5. மேலும், நேர கட்டுப்பாட்டை மீறியும், தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-ன் படி வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது[1].
  6. பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், குடிசை பகுதிகள் போன்ற பட்டாசு தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது[2].

சரி, இத்தனை ஆண்டுகளாக, அத்தகைய வெடிகள் வெடிக்கப் படவில்லையா? அப்பொழுது ஒன்றும் நடக்கவில்லையா?

ஆயிரக்கணக்கில் பொது மக்களை வெடிவெடித்தார்கள் என்று கைது செய்வதால் என்ன பெருமை கொண்டார்கள்?: இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது[3]. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவ.12 மற்றும் நவ.13 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்காக குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலான நேரத்தை தவிர்த்து[4], மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது[5]. அதில் 2,095 பேர் கைது செய்யப்பட்டனர்[6]. இதில் அதிகபட்சமாக சென்னையில் 558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2005 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது[8]. இப்படியெல்லாம் சொல்லிக் கொள்ள பெருமையாகவா இருக்கிறது?

சென்னையில் பதிவு செய்யப் பட்ட வழக்குகள்: மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது[9]. தொடர்ந்து இந்த தனிப்படை போலீஸார், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது[10].சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மாசு அளவு 100 ஐ தாண்டி இருந்தது. சென்னை, பெருங்குடி- 178, அரும்பாக்கம் – 159, ராயபுரம் – 115, வேளச்சேரி – 117 என அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100-ஐ தாண்டியது அதேபோல வேலூர், கடலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் காற்று மாசு மோசமடைந்து உள்ளது[11]. தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது[12].

பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?[13]: திருவள்ளூர்- திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்ததாகவும் சுமார் 111 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[14].

மதுரை- மதுரை மாநகர் பகுதிகளில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாநகர காவல்துறையினர் 141 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்- தஞ்சாவூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது‌. அதில் 40 பேர் கைது செய்யப்பட்டு சொந்த பினையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை- விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 27 வழக்குகளும் நெல்லை மாநகரப் பகுதியில் 20 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம்- வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி- தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு குறிப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 16 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி- புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 56 பேர் மீது புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பாரபட்சம் மிக்க நடவடிக்கைகள் இந்துவிரோதமாக இருப்பது ஏன்?: தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதால் மட்டும் தான் மாசு உண்டாகி, சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பது போன்ற பிரமையை உண்டாகி வைக்கப் பட்டுள்ளது. மற்ற வழிகளில் எவ்வாறெல்லாம் மாசு தினம்-தினம் உண்டாகி-உண்டாக்கி சுற்றுச்சூழலை பதித்து வரப் படுகிறது என்று எடுத்துக் காட்டப் படுவதில்லை. அதே போல, மற்ற பண்டிகைகளின் மீது, கோடிக்கணக்கில் உயிர்கள் கொலை செய்யப் படுகின்றன. அப்பொழுது, யாரும் உயிர்கொலை செய்யாதே என்று அறிவுருத்துவது இல்லை, உயர்நீதி-உச்சநீதி மன்றங்களுக்குச் செல்வதில்லை. திக-திமுகக்கரர்கள் வசை பாடுவதில்லை, தூஷிப்பதில்லை.  இதே பெரியாரிஸ-நாத்திக கோஷ்டிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மாறாக வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். பிறகு, இத்தகைய முரண்பாடுகளை செக்யூலரிஸ நாட்டில் எவ்வாறு புரிந்து கொள்வது?

© வேதபிரகாஷ்

16-11-2023


[1] தமிழ்.இந்து,தமிழகம் முழுவதும் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு @ தீபாவளி , செய்திப்பிரிவு, Published : 13 Nov 2023 10:14 PM; Last Updated : 13 Nov 2023 10:14 PM.

[2]   https://www.hindutamil.in/news/tamilnadu/1152686-2206-cases-of-breaking-firecrackers-across-tamil-nadu-registered-at-diwali-~XPageIDX~.html

[3] தினமணி, கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 11 போ் கைது, By DIN  |   Published On : 15th November 2023 03:15 AM  |   Last Updated : 15th November 2023 03:15 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2023/nov/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4106087.html

[5] நக்கீரன், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு; ‘தமிழகம் முழுவதும் 2,206 வழக்குகள் பதிவு’ – காவல்துறை தகவல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 13/11/2023 (23:29) | Edited on 13/11/2023 (23:44)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/2206-cases-registered-across-tamil-nadu-police/

[7] மாலைமுரசு, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு மீறல்தமிழ்நாடு முழுவதும் அதிக வழக்குகள் பதிவு!, Webteam, Nov 13, 2023 – 17:39.

[8] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Violation-of-timing-in-bursting-of-firecrackers

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Diwali 2023: பட்டாசு நேரம்.. விதிமீறியதால் 2095 வழக்குகள்.. தமிழ்நாடு காவல்துறை அதிரடி!, By: உமா பார்கவி,Published at : 12 Nov 2023 07:20 PM (IST)  | Updated at : 13 Nov 2023 03:10 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/chennai/chennai-regitered-case-118-members-for-bursting-fire-crackers-in-violation-rules-150096

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Diwali 2023: அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 118 மீது வழக்குப்பதிவுபோலீஸார் அதிரடி!, Karthikeyan S HT Tamil, Nov 12, 2023 02:03 PM IST.

[12] https://tamil.hindustantimes.com/tamilnadu/118-cases-filed-for-violating-sc-order-on-bursting-firecrackers-in-chennai-131699777684917.html

[13] தமிழ்.நியூஸ்.18, விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?, FIRST PUBLISHED : NOVEMBER 13, 2023, 9:34 AM IST; LAST UPDATED : NOVEMBER 13, 2023, 12:40 PM IST;

[14] https://tamil.news18.com/tamil-nadu/chennai-police-registerd-555-cases-of-bursting-firecrackers-beyond-the-permitted-time-1230516.html

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

ஒக்ரோபர் 23, 2023

 

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

 

“மக்கள் சேவையே மகேசன் சேவை” திராவிட ஆட்சியில் எப்படி நடக்கிறது என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள்: எப்படி அரசியல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்துவிரோதிகள், எந்த பிரச்சினையையும் அவ்வாறே மாற்றியமைத்து, பலன் பெற முயற்ச்சிக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். தேர்தல் சமயத்தில் இந்துவிரோத அரசியல்வாதிகள் “ஒழுங்குப் பிள்ளை” போல பட்டை-கொட்டைகளுடன் கோவில்களுக்கு வருவது, கும்பிடுவது அறிந்ததே. ஏனெனில், இந்துக்களின் ஓட்டு தேவை. அதே போல, ஒரு பக்கம் பிள்ளையார் சிலை உடைத்து, “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று கூவி ஆட்சிக்கு வந்ததும் தெரிந்த விசயமே. அப்படி, “இந்து திருடன்” என்று அவமதித்து, வனவாசம் சென்று ஜோதிடரைப் பார்த்து, பரிகார யாகம் செய்து, மறுபடியும் ஆட்சிக்கு வந்த கதையும் தெரிந்த விசயமாகி விட்டது. இப்பொழுது அவரின் மகன், மறுமகள், பேரன் என்று அதே ஆன்மீகம்-துன்மார்க்கம் என்ற விளையாட்டுகளில் இறங்கியிருப்பது “ஆன்மீக ஆதரவு” பேச்சில் வெளிப்படுகிறது.

ஆன்மீகம் என்றால் என்ன ஆன்மீகம். பெரியார் ஆத்மாவே இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு, எங்கிருந்து ஆன்மீகம் வரும்?: ஆன்மீகம் என்ற சொல் ஆத்மா என்ற சொல்லின் மீது தான் ஆதாரமாக உருவானது. அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆத்மா உண்டு, அதன் மூலமாக அறியப்படுவது என்னவென்றால் மனிதனுக்கு இறப்பு உண்டு இறந்த பிறகும் வாழ்க்கை ஒன்று போன்ற நம்பிக்கைகளை அடக்கியது ஆத்மா, ஆத்மவியல், ஆன்மீகம் முதலியவை. அவ்வாறு இருக்கும் பொழுது, பெரியாரிஸம், நாத்திகம் அதிலும் குறிப்பாக இந்து விரோதத் தன்மையுடன் கூறும் இந்த சித்தாந்தனத்தில் எவ்வாறு ஆன்மீகம் உள்ளே வந்துப் புகும் அல்லது ஸ்டாலின் சொல்வது போல எவ்வாறு அது தங்களது திராவிடத்துவ கொள்கைக்கு உடன்பட்டு இயைந்து ஒத்துப் போய் எதிர் தன்மையை இல்லாத நிலையில் இருக்கும் என்பது அவர்கள் தான் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. எனவே இது தேர்தல் காலத்தில் மக்களை குறிப்பாக இந்துக்களை ஏமாற்ற பேசும் பேச்சாகவே வெளிப்படையாகப் புலப்படுகிறது. ஏனெனில் வருகிறது கடந்த கால பேச்சுகள், நடத்தைகள், நடவடிக்கைகள், எழுதிப் பேசி அச்சில் வந்திருக்கின்ற புத்தகங்கள், நோட்டீஸ்கள், எல்லாமே இவர்களுக்கு இவர்களின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தி வந்து, ஏற்கவே ஆவணங்களாக அமைந்துள்ளன.

அரசியல் பேச்சுகள் இந்துக்களுக்கு உதவுவது இல்லை, பாதகமாகத்தான் இருந்து வருகின்றன: நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற செய்தி எல்லா மின்-அச்சு ஊடகங்களிலும் வந்துளளது. கலைஞர் செய்தி, முரசொலி முழுவதுமாக வெளியிட்டுள்ளன், மற்றவை சுருக்கமாக, ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளன. சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் விங் 2.0 / Wing2Point0 ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக அரசியல் செய்ய எல்லா யுக்திகளும் கையாளப் படுகின்றன எனூ தெரிகிறது. அதில் வியாபார ரீதியில் எல்லோருமே இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.பணம் கொடுத்தால் வேலைக்கு வருவார்கள்.

திராவிடத்துவ-பாஜக மோதல்களில் இந்துமதம் தாக்கப் படுவது: முதல்வர் பேசுகையில், “ தி.மு..,வை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கங்களை அழிப்போம் எனக்கூறியவர்கள் இங்கு தான் வந்து அடைக்கலம் ஆனார்கள்[1]. இது வரலாறு……….. என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள்.….சமூக வலைதங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டுபோய் சேர்க்கும்[2]ஒருவர் பலநாள் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்துவிடும்[3]. என்னை பொறுத்தவரை எதிர்மறை பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட நேர்மறையான பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியானது[4]. அரசியவாதிகளை தாண்டி ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடமும் அத்துமீறல், மிரட்டல், அடக்குமுறையை ஏவுகிறது பாஜக[5]. இப்படிப்பட்ட சமூக வைரஸாதான் நாம் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறோம். பாஜகவின் சாதி தன்மை தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிரானது அல்ல. இந்தியாவிற்கே எதிரானது[6]. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. சாதி மதத்தின் பெயரால் பிளவுப்படுசத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கக் கூடி ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக்கொண்டிருக்கிறோம்[7]. …. பாசிசத்திற்கு எதிராக நேரடியாக மோதி கொண்டுள்ளோம்[8]. கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது தான் .தி.மு.., .தி.மு..,வும் பா..,வும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்[9]. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்பதால், பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.மிசா, தடா, பொடா என அனைத்தையும் பார்த்துவிட்டோம். மிரட்டல் எல்லாம் கடந்து வந்துவிட்டோம்[10]…… அவர்களின் தற்போதைய முக்கிய வேலை,…….
பாஜக சொல்வதனால் மட்டும் அவை அறியப் படுவதில்லை, ஊடகங்களே நன்றாக விளம்பரம் கொடுத்து வருகின்றன: ஸ்டாலின் தொடர்கிறார், “பாஜகவின் இப்போதைய ஒரே வேலை என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார் என்பதை பார்ப்பதுதான்[11]. துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, ”பாத்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார்”- எனப் பரப்புகிறார்கள்[12]. தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோயிலுக்கும்தான் துர்கா செல்கிறார்…….என்னை மனைவி கோயிலுக்கு செல்வது அவரது விருப்பம்[13]. நான் அதை தடுக்க விரும்பவில்லை[14]. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல[15]……., கோயிலும் – பக்தியும் அவரவர் உரிமை – விருப்பம்! ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெகு மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான்[16]. தலைவர் கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில்: ”கோயில் கூடாது என்றல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது!…. கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மீகத்தையும் – அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். ”

© வேதபிரகாஷ்

23-10-2023


[1] கலைஞர் செய்தி, “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல” : முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேச்சு!, Lenin, Updated on : 21 October 2023, 05:00 PM.

[2] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/10/21/we-are-not-enemies-of-spirituality-said-cm-mk-stalin

[3] நக்கீரன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல” – முதல்வர் மு..ஸ்டாலின், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 21/10/2023 (11:40) | Edited on 21/10/2023 (12:01).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-are-enemy-aryan-domination-and-not-spirituality-says-cm-mk-stalin

[5] தினமணி, நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, By DIN  |   Published On : 21st October 2023 12:51 PM  |   Last Updated : 21st October 2023 12:51 PM.

[6] https://www.dinamani.com/tamilnadu/2023/oct/21/we-are-not-enemies-of-spirituality-cm-stalins-speech-4093802.html

[7] தினமலர், நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் ஸ்டாலின் பேச்சு, மாற்றம் செய்த நாள்: அக் 21,2023 17:11

[8] https://m.dinamalar.com/detail.php?id=3463060

[9] தினத்தந்தி, ஆரியத்துக்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல: முதல் அமைச்சர் மு. ஸ்டாலின், தினத்தந்தி அக்டோபர் 21, 12:46 pm

[10] https://www.dailythanthi.com/News/State/we-are-the-enemy-of-aryam-not-spirituality-prime-minister-mk-stalin-1077268

[11] தமிழ்.நியூஸ்.18, ஆன்மீகத்திற்கு அல்ல.. ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிமுதலமைச்சர் மு..ஸ்டாலின் திட்டவட்டம், LAST UPDATED : OCTOBER 21, 2023, 3:20 PM IST.

[12] https://tamil.news18.com/chennai/dmk-govt-not-against-for-spirituals-its-against-only-for-religious-suppression-1202874.html

[13] விகடன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல!” – முதல்வர் ஸ்டாலின், VM மன்சூர் கைரி, Published: 22-10-2023 at 2 PM; Updated:Yesterday 22-10-2023 at 2 PM

[14] https://www.vikatan.com/government-and-politics/politics/cm-stalin-speech-in-dmk-it-wing-meetin-at-chennai

[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நான் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல! என் மனைவி எந்த கோயிலுக்கு போறாங்க என்பதை பார்ப்பதே பாஜக வேலை!முதல்வர் ஸ்டாலின், vinoth kumar; First Published Oct 21, 2023, 1:00 PM IST; Last Updated Oct 21, 2023, 1:09 PM IST.

[16] https://tamil.asianetnews.com/politics/i-am-not-an-enemy-of-spirituality-cm-stalin-speech-tvk-s2vbid

சிவன் – பார்வதி கு.க., செய்தனரா? தி.மு.க., – எம்.பி., சர்ச்சை பேச்சு – உதாரணத்திற்கு இந்து மதம் தான் கிடைத்ததா?

ஜூலை 12, 2023

சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சுஉதாரணத்திற்கு இந்துமதம் தான் கிடைத்ததா?

தர்மபுரி தி.மு.., – எம்.பி., செந்தில்குமாரின் தொடர்ச்சியான இந்து தூஷண பேச்சுகள்: ‘வடமாநிலத்தில் விநாயகருக்கு பின், சிவன் – பார்வதி கு.க., செய்தார்களா?’ என, தர்மபுரி, தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், தனியார் ‘டிவி’க்கு அளித்த போட்டியில் நக்கலாக பேசியது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி கடந்தாண்டு 2022, ஜூலையில் துவங்கிய போது, ஹிந்து மத முறைப்படி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு, தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பூமி பூஜைக்கு வைத்த செங்கல்லையும் காலால் தள்ளினார். இதேபோன்று, நல்லம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியிலும், தி.மு.க.,வினரை கண்டித்தார். செக்யூலரிஸ ரீதியில் இந்துக்களை எதிர்ப்பது என்பது பெரியாரிஸ ஆத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்கு கைவந்த கலையாக மாறிவிட்டது. அண்ணாதுரை-கருணாநிதி இந்துதுவேச பாணி ஸ்டாலின் மூலமும் தொடர்கிறது. விவாக மந்திரங்களை கேவலமாக பேசியதை வீடியோ மூலம் அறிந்து கொள்ளலாம். பிறகு, தலைவன் எப்படியோ, தொண்டன் அப்படித்தானே இருப்பான்?

சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சு: இதனால் அவர் ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுவதாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது[1]. இந்நிலையில், அவர் பொது சிவில் சட்டம் குறித்து சமீபத்தில் தனியார் ‘டிவி’க்கு பேட்டியளித்தார்[2]. இதில், ‘வட மாநிலத்தில் சிவன் – பார்வதிக்கு, விநாயகருடன் முடிந்து விட்டது[3]. முருகர் என்பவர் இருப்பது தென்மாநிலத்துக்கு வந்தால் மட்டும் தான் தெரியும். அங்கு, சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என, குறிப்பிட்டது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது[4]. தேர்தல் நேரத்தின் போது மட்டும், தி.மு.க.,வினர் தாங்கள் ஹிந்துகளுக்கு எதிரி இல்லை என, இரட்டை வேடம் போடுவதாக, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[5]. செந்தில்குமாரிடம் கேட்டபோது, ”பொது சிவில் சட்டம் குறித்து, தனியார் டிவி.,யில் என்னிடம் கேள்வி கேட்ட போது, பொது சிவில் சட்டத்தில், பா.ஜ., முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும்[6]. வட மாநிலத்தில், சிவன் – பார்வதியின் மகன் விநாயகர் என்பதை மட்டும் உறுதி செய்து, தென்மாநிலத்தில் மட்டும் அவர்களின் மகனாக அறியப்பட்ட முருகனையே வழிபட முடியாத நிலையை ஏற்படுத்துவர் என்பதை சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறினேன்[7]. எந்த கடவுளையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை,” என்றார்[8].

தர்மபுரி மாவட்ட பா.ஜ., தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கூறியதாவது[9]: “தர்மபுரி தி.மு.., – எம்.பி., செந்தில்குமார், தேர்தல் நேரத்தின் போது, தான் ஹிந்து என்றும், வன்னியர் என்றும் மக்களிடம் ஓட்டு கேட்டு வெற்றி பெற்றார். அதன் பின், ஹிந்து மத வழிபாட்டுக்கு எதிராகவும், ஹிந்து கடவுளுக்கு எதிராகவும் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து, தன் அறியாமையால், சிவன்பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா என, ஹிந்து மக்கள் மனம் வேதனைப்படும் படி பேசியுள்ளார். இதேபோன்று, முஸ்லிம், கிறிஸ்தவ கடவுள்கள், குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா என, அவரால் பேச முடியுமா? தன்னை தேர்ந்தெடுத்த மாவட்ட மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல், மத்திய பா.., அரசு செய்யும் நலத்திட்டங்களுக்கு, தன் பெயரை விளம்பரப்படுத்தும் அவர், ஹிந்து கடவுள்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்கு மட்டுமின்றி, தி.மு.., அரசுக்கும், ஹிந்துக்கள் வரும் லோக்சபா தேர்தலில் தக்க பதிலடி தருவர்,” இவ்வாறு, அவர் கூறினார்[10].

தமிழகத்தில் பகுத்தறிவு போர்வையில் இந்து தூஷணம் வளர்த்த விதம்: 1940 களிலிருந்து, ஈவேரா பகுத்தறிவு போர்வையில் இந்துவிரோத கருத்துக்களை ஆபாசமாக பேசி, எழுதி வந்துள்ளது முறையாகக் கண்டிக்கப் படவில்லை. அத்தகைய தூஷணங்களை தமிழ்-தமிழ் என்ற பெயரில், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் மேடைகளில் தொடர்ந்தனர். அவர்கள் ஆட்சியிலும் பெரியாரின் வசைப்பாடல்கள் தொடர்ந்தன. திக-திமுக மேடை பேச்சாளர்கள் இத்தகைய தூஷணங்களைத் தொடர்ந்து செய்தனர். அண்ணாதுரை, கருணாநிதி முதலமைச்சர் ஆனதால், 1970களிலிருந்து அவை இன்னும் மோசமாகி வளர்ந்தன. இப்படி பேசுவதையே திராவிடத்துவவாதிகள் பிழைப்பாகக் கொண்டு வளர்ந்தனர், கஞ்சி குடித்து-கேக் தின்று வளர்க்கப் பட்டனர்.ஊடகங்கள் வளர்ந்து பரவிய நிலையில் 1980களில் அவர்கள் தங்களது பேச்சுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில், அத்தகைய ஆபாச, அறுவருப்பான, மோசமான, கேவலமான பேச்சுகளை பொது மக்கள் ஏற்கவில்லை, குறிப்பாக பெண்கள் எதிர்க்கவும் செய்தனர் என்பது தெரியவந்ததால், குறைத்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் ஒரளவுக்குக் கட்டுப் படுத்தப் பட்டாலும், திராவிடக்கழகப் பிரிவுகள் பூணூல் அறுப்புப் போர்வையில், வேறு விதமாக இந்துவிரோத தூஷணங்களை செய்தனர். பாப்பாத்தி-ஜெயலலிதாவை, ஆரிய அம்மையாரை எதிர்க்கிறேன் என்று கருணாநிதியே பலவிதங்களில் இந்து-துவேசத்தைக் கக்கியுள்ளது பதிவாகியுள்ளது.

2021ல் திமுக பதவிக்கு வந்த பிறகு: இப்பொழுது ஸ்டாலின் முதலமைச்சராகியப் பிறகு, மறுபடியும் எல்லா இந்துவிரோத கும்பல்களும், இந்துதுவேச கூட்டங்களும், இந்துவசைப்பாடும் துரோகிகளும் பலவித உருவங்களில், சித்தாந்தங்களுடன் செயல்பட்டு வருகிறார்கள். 1990களிலிருந்து ஊடகங்களில் அதிகமாகவே ஊடுருவியுள்ளார்கள். பிறகு, சினிமாக்களிலும் அவை – பாடல்கள், வசனங்கள், சித்தரிப்பு முதலியவை மூலம் – வெளிப்பட ஆரம்பித்தன. இந்நிலையில் செந்தில்குமார் அங்கு வடக்கில், சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என்றதில் என்ன வியப்பு? ஏ இந்துவே, இதை நீ இந்துவாக, ஹிந்துவாக, சைவனாக, அசைவனாக, வைஷ்ணவனாக, காலமுகனாக, எப்படி எதிர்ப்பாய்?

இந்தியாவில் கருத்து சுதந்திரம் இந்துக்களுக்கு மட்டும் வித்தியாசமாக கட்டுப்படுத்துவது ஏன்?: இப்பொழுது, யாராவது இந்துதூஷணமாக பேசிவிட்டால், முதலில் பொதுவாகக் கண்டுக் கொள்வதில்லை. பிறகு, எந்த இந்துவாவது, இதே போல மற்ற கடவுளரை வைத்து பேசுவாயா, விமர்சனம் செய்வாயா என்று சாதாரணமாகக் கேட்டப் போதும் கவலைப் படவில்லை. ஆனால், இந்துக் கடவுளுக்கு பதிலாக, மற்ற கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்ட பொழுது, அந்த மற்ற மதத்தினர் விழித்துக் கொண்டனர். இதனால் பயந்த இந்துவிரோதி பேச்சாளர்கள் மறுபடியும் தம்மை கட்டுப் ப்டுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். இன்றைக்கு ஊடகங்கள் வாயிலாக, உலக நடப்புகள், நிகழ்வுகள் எல்லாம் ஒரளவுக்கு தெரிய வருகிறது. அப்பொழுது, மற்ற நாடுகளை விட இந்தியா பல்மடங்கு சிறந்து விளங்குகிறது என்ற உண்மையும் விளங்குகிறது. பாலஸ்தீனம், சிரியா, லெபனான், ஆப்கானிஸ்தான், மற்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளுக்குச் சென்று வாழ்ந்தால், நிலைமை என்னாகும் என்பது புரிந்து விட்டது.

ஸ்டாலின் – சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்[11]: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-07-2023 அன்றுதான், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான உயர்அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில், சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்[12]. இந்த நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. இந்து கடவுகள் குறித்து தவறான விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் பேசி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில், தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.  இந்துமதம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.  இது சர்ச்சையான நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார். இவர் இந்து மதங்களையும், இந்து மத சடங்குகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், இவர்மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், மற்ற மதங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே, உடனே சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

செந்தில்குமாரும், கனல் கண்ணனும்: சமீபத்தில் நடிகர் கனல்கண்ணன், சமூக வலைதளங்களில் வெளியான ஒரு மதம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டதால், கைது செய்யப்பட்டார். இது சர்ச்சையானது. முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கைது செய்யப்படுவாரா ? மதம் குறித்து அவதூறு கருத்தை கூறிய செந்தில் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவார் என உறுதியாக நம்புகிறேன் என பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பொதுமக்களும், தமிழக முதல்வர் கூறுவது உண்மை என்றால், உடனே செந்தில்குமார் எம்.பி. கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

12-07-2023


[1] தினமலர், சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சு, Added : ஜூலை 11, 2023  23:47; https://www.dinamalar.com/news_detail.asp?id=3373130

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3373130

[3] மீடியான், வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்களா? தி.மு.க. எம்.பி. திமிர் பேச்சு!, Karthikeyan Mediyaan News, ஜூலை 12, 2023.

[4] https://mediyaan.com/dharmapuri-dmk-mp-senthilkumar-insult-hindu-gods-shiva-parvathi/

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணாங்களா? திமுக எம்.பி. சர்ச்சை பேச்சு!, Manikanda Prabu, First Published Jul 12, 2023, 10:14 AM IST;  Last Updated Jul 12, 2023, 10:17 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-mp-senthilkumar-controversy-speech-on-lord-shiva-and-parvathy-rxo2ih

[7] தமிழ்.வெப்துனியா, சிவன்பார்வதி பற்றி தர்மபுரி எம்பியின் சர்ச்சை கருத்து..!, Written By Mahendran, Last Updated : புதன், 12 ஜூலை 2023 (11:41 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/senthil-kumar-mp-says-about-sivan-and-parvathi-123071200034_1.html

[9] தினமலர், சிவன்பார்வதி கு.., செய்தார்களா? தி.மு.., – எம்.பி., பேச்சால் புது சர்ச்சை, மாற்றம் செய்த நாள்: ஜூலை 12,2023 07:13;

https://m.dinamalar.com/detail.php?id=3373766

[10] https://m.dinamalar.com/detail.php?id=3373766

[11] பத்திரிக்கை.காம், இந்து தெய்வங்கள் குறித்து திமுக எம்பியின் சர்ச்சை கருத்து..! நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு, JUL 12, 2023

[12] .https://patrikai.com/dmk-mps-controversial-comment-on-hindu-deities-will-the-tamilnadu-government-take-action/

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகம் நடத்தப் பட்டது – PTI-பாணியில் செய்தி வெளியீடு – விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை–சென்சார் செய்யப் பட்டது போலும்! (2)

மார்ச் 19, 2023

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகம் நடத்தப் பட்டது PTI-பாணியில் செய்தி வெளியீடு விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை சென்சார் செய்யப்பட்டது போலும்! (2)

ஹோமங்கள் நடந்தன, தானங்கள் கொடுக்கப் பட்டன: மகா சண்டிஹோம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நிறைவுற்று பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர், மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார்கள், புனிதநீர் கலசங்களை தலைகளில் தாங்கி, கோயிலை வலம் வந்து “கோயில் கருவூலத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு அபிசேக ஆராதனை செய்தனர்[1]. இந்த ஹோமத்தில் கலந்துகொண்ட உள்ளூர் பெண்களுக்கு, திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் உணவு பரிமாறி, புடவை, மாங்கல்ய பொருட்களை வழங்கினார்[2]. அதாவது முறைப்படி சுமங்கலிகளுக்கு தானம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர். வழங்கறிஞர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்பு கணவன் எந்த மந்திரங்களை பழித்துரைத்தானோ, அதே மந்திரங்கள் ஓதப் பட்டு சடங்குகள் நடந்தது-நடத்தப் பட்டது தான் ஸ்டாலின் விதியா, கடவுள் நிர்ணயித்ததா, காக்கா உட்கார பனம் பழம் விழுந்ததா என்பதையெல்லாம் கே. வீரமணி தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவர் ஆரம்பித்திருக்கும் திராவிட ஆராய்ச்சி மையமும் ஆராய்ச்சி செய்யலாம், மாநாடு-கருத்தரங்கம் நடத்தலாம்.

பீமரத சாந்தி என்றால் என்ன?: பீமரத சாந்தி, ஒருவருக்கு அதிபௌதீகம் (இயற்கை), அதிதைவீகம் (தெய்வங்கள்), அத்யாத்மீகம் (தன் செயல்கள்) ஆகியவைகளால் தனக்கு ஏற்படும் தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ளவும், 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் எனும் ருத்தரனை அமைதிப் படுத்தும் நோக்கில் பீமரத சாந்தி எனும் சடங்கு செய்யப்படுகிறது. “ஜனனாத்பரம் ப்ரதிவர்ஷே ஜன்ம மாஸே ஜன்மநக்ஷத்ரே ஆயுஷ்ய ஹுவனம் குர்யாத்” என்கிற வாக்கிற்கிணங்க, ஜன்ம நட்சத்திரம் வரும் ஒவ்வொரு வருஷமும் ஆயுள் விருத்திக்காகவும், மற்ற நற்பலன்களைப் பெறவும் ஆயுஷ்ஹோமம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவைகளை ஒவ்வொரு ஆண்டும் செய்ய இயலாவிடினும் மனிதன் தனக்கு “ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம்” என்னும் இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ கார்ய பலன் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் கண்டிப்பாக அவனது 59, 60, 61 மற்றும் 70 வது வயது துவக்கம், 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 வது ஆண்டு நிறைவு ஆகிய கால கட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு 60, 61 ஆம் ஆண்டு வரை ஆட்படுகிறான். அப்பொழுது ஈசனின் அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி உக்ர ரத சாந்தி என்கிற சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா எனப்படும்.

70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டுபீமரத சாந்திஎனும் சடங்கு செய்தல் வேண்டும்: 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டு ” பீமரத சாந்தி ” எனும் சடங்கு செய்தல் வேண்டும்.78 ஆம் ஆண்டின் துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு “விஜயரத சாந்தி” எனும் சடங்கு செய்ய வேண்டும். இதைச் செய்தாலே பூரண ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாத்திர கருத்து. அதன்பிறகு 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று “சகஸ்ர சந்திர தர்சன” சாந்தி செய்தல். அன்றே சிலர் சதாபிஷேகம் எனும் 108 ருத்ர காலபிஷேகம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது. எனினும் 100 வது ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் அன்று செய்யப்படும் சாந்தியே “சதாபிஷேக கனகாபிஷேகம்” என்று பெயர் பெற்ற சடங்காகும். இது “அஷ்டோத்ர சதருத்ர கலாபிஷேகம்” எனப்படும்.

01-03-2023- ஸ்டாலின் அரசியல் ரீதியில் பிறந்த நாள் விழா கொண்டாடியது: முன்னதாக அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கண்டார்[3]. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உள்ளிட்டோர் ஆங்காங்கு கேக் வெட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடினர்[4]. குறிப்பாக, இந்த பிறந்த நாள் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையில், மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலின் தனது கணவருக்கு 70 வயது பூர்த்தியடைந்த நிலையில், அவருக்காக யாகம் செய்து வழிபாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நாத்திகஆத்திக நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் சடங்குகள் ஏன்?:

  1. பீமரத சாந்தி என்றால் என்ன, அதன் அர்த்தம் என்ன, அது பெரியாரிஸ, அண்ணாயிஸ, திராவிட, திராவிடத்துவ மாடல்களில் வருமா?
  • 08-03-2023 அன்று திருக்கடையூரில் ஸ்டாலினுக்கு பீமரத சந்தி நடக்க, 06-03-2023 அன்று நாகர்கோவிலில் சனாதனத்தை எதிர்த்து ஸ்டாலினே பேசுகிறார்!
  • ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம் எனும் பாவ கார்ய தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ள நடத்தப் படும் யாகம் பலன் தருமா?
  • 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்ற ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்த, பீமரத சாந்தி  சடங்கு நடத்தப் படுகிறது!
  • சிவபெருமான் எமனிடமிருந்து மார்க்கண்டேயனை மீட்டு, அவனை சிரஞ்சீவியாக மாற்றினார் என்று புராணம் கூறுகிறது!
  • முன்னர் விவாக மந்திரங்களை தூஷித்துப் பேசியுள்ளார். செத்த பாடையை என்றும் மதித்ததில்லை. பிறகு அது பலன் கொடுக்குமோ?
  • விசுவாசத்துடன் பெண் / பதிவிரதை மாமனாருக்கு காசியில் பிண்டப் பிரதானம், பதிக்கு பீமரத சாந்தி என்றெல்லாம் செய்கிறார்!
  • வீட்டில் பூஜை அறையில் விக்கிரங்களை வைத்துக் கொண்டு, அதே செத்த பாடையில் சுலோகங்கள் சொல்லி பூஜைகளும் நடக்கின்றன!
  • இத்தகைய இந்துவிரோத-இந்து ஆதரவு, இந்துதுவேஷ-ஆஷா, பதி-சதி அல்லது சதி-பதி முரண்பாடுகளும் திராவிட மாடலா, ஸ்டாக்கில் வந்ததா?
  1. திக-திமுகவா, திமுக-அதிமுக இரட்டைக்குழலா, மனைவி-துணைவி சம்பிரதாயமா, பதி-சதி அல்லது சதி-பதி முரண்பாடா, போராட்டமா?
  1. இந்த திரைச்சீலை விலகட்டும், முகமூடி கிழியட்டும், போலித் தனங்கள் மறையட்டும், நாடக வேடங்கள் களையட்டும்!

© வேதபிரகாஷ்

09-03-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Durga Stalin Pooja: நீண்ட ஆயுள் வேண்டும்முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவருக்காக பீமரத சாந்தி யாகம்,By: எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை | Published at : 07 Mar 2023 03:42 PM (IST); Updated at : 07 Mar 2023 03:42 PM (IST);

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/durga-stalin-special-pooja-for-cm-mk-stalin-thirukadaiyur-amirthakadeswarar-temple-tnn-105329

[3] இடிவிபாரத், பீமரத சாந்தி யாகம்செய்த துர்கா ஸ்டாலின்!.. எதற்கு தெரியுமா?, Published on: Mar 7, 2023, 3:19 PM IST.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/worship-of-durga-stal-by-bhimaratha-shanti-yaga-at-thirukadaiyur-abirami-amman-temple-for-mk-stalin/tamil-nadu20230307151911597597558

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் மற்றும் பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்த கட்டிடம் இடிப்பு – தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவில்லை!

மார்ச் 19, 2023

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் மற்றும் பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்த கட்டிடம் இடிப்பு – தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவில்லை!

அம்மணி அம்மன் மடம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம்(அம்மணி அம்மன்) பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி அந்த கோபுரத்தினைக் கட்டி முடித்தவர் பெண் சித்தரான அம்மணி அம்மாள். 17ம் நூற்றாண்டு இறுதியில் அவர் ஜீவ சமாதி அடைந்தார். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணி அம்மாள் கட்டியதால் அம்மணி அம்மன் கோபுரம் என அழைக்கப்பட்டு வரும் வடக்கு கோபுரம் எதிரில் அவர் வாழ்ந்த மடம் உள்ளது. இதில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் எதிரில் இக்கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடம் உள்ளது. 17ம் நூற்றாண்டிற்குப் பிறகு, அவ்விடத்தை பலர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. திருவண்ணாமலை கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் பல இவ்வாறுதான் ஆக்கிரமிப்புகளில் உள்ளன, இந்த இடம் ஆக்கிரமிப்பில் சென்றதால், 1978ல் முதன்முதலாக விஸ்வ ஹிந்து பரிஷத் கோர்ட்டுல் வழக்கு தொடர்ந்தது. 2015ல் கே. ஆர். குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த 37 வருடங்களில் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பொதுவாக, இங்கு முன்பு பிச்சாண்டி, இப்பொழுது ஏ.வ. வேலு அவர்களின் ஆதிக்கம் தான் உள்ளது. சுற்றியுள்ள படங்கள் ஒவ்வொன்றாக கடை வளாகம், லாட்ஜ் என்று மாறிக் கொண்டிருக்கின்றன.

பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்துக் கொண்டது: இந்த அம்மணி அம்மன் மடத்தை திருவண்ணாமலையை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் / ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடு கட்டியும், மடத்தின் முன்பு கார் நிறுத்தும் ஷெட்டும் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது[1]. அப்படியென்றால், பிஜேபி கட்சிக்குள் முரண்பாடு உள்ளது தெரிகிறது. அதிகாரம், அந்தஸ்து, பணம் என்று வந்துவிட்டால், அரசியல்வாதி இப்படித்தான் இருப்பான் போலிருக்கிறது. இதன் மதிப்பு சுமார். ரூ.50 கோடி இருக்கும் என்று தெரிகிறது. ரூ.30 கோடி என்று தினகரன் குறிப்பிடுகிறது. கோவிலுக்கு சொந்தமான அந்த மடத்தை அவரிடம் இருந்து மீட்க அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் 2015ல் வழக்கு தொடரப்பட்டது[2]. வழக்கினை விசாரித்த திருவண்ணாமலை சார்பு நீதிமன்றம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இப்பொழுது திமுக அரசு இருப்பதனால், அவர்களுக்கு லட்டு தின்கின்ற கதை தான். அதனால், உடனடியாக இடிக்க கிளம்பிவிட்டதில் எந்த வியப்பும் இல்லை.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: இதையடுத்து நேற்று 18-03-2023 காலை வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். அவர்கள் அங்சு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றதால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நேற்று 18-03-2023 காலை முதல் மதியம் வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அம்மணி அம்மன் கோபுரத் தெருவிற்குள் யாரும் செல்லாதவாறு போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் கோவில் பணியாளர்கள் அம்மணி அம்மன் மடத்தில் இருந்த அறைகளை காலி செய்து மூடி ‘சீல்’ வைத்தனர்[3]. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கோயிலுக்கு அருகில் உள்ள  மடத்துக்குள் 25க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்கள் இருந்ததால், அவற்றை போலீசார் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றினர்[4]. இவற்றையெல்லாம் யார் வைத்திருந்தனர் என்று தெரிவிக்கப் பட்வில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், கோயில் இணை ஆணையர் குமரேசன், ஆர்டிஓ மந்தாகினி மற்றும் நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அம்மணி அம்மன் மடம் இடிப்பு: தொடர்ந்து மாலை 4 மணியளவில் திடீரென கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அம்மணி அம்மன் மடமும் இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது[5]. இது ஆணையில் இல்லை என்றாலும், அவ்வாறு செய்யப் பட்டது[6], ஏதோ உள்நோக்கத்தைக் காட்டுகிறது. இதையடுத்து அந்த முகப்பு பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது[7]. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆன்மிகவாதிகள் இந்து அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்[8]. அதனை தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது மடம் பாதி இடிக்கப்பட்டு காணப்பட்டு உள்ளது[9]. இதையடுத்து அவர்கள் இடிக்கப்பட்ட மடத்தின் அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் நிர்வாக அலுவலர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது[10]. சேகர்பாபுவைப் பொறுத்த வரையில், இதை பெரிய பிரச்சினையாகக் காட்டி, 30 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்டேன் என்று பிரகடனப் படுத்திக் கொள்வார்.

பொக்லைன் எந்திரங்கள் அகற்றம்: தொடர்ந்து அந்த இடத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கிருந்து பொக்லைன் எந்திரங்கள் அகற்றப்பட்டது. இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், ”கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் பழமையான மடத்தை அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இடித்து உள்ளனர். இதனை இடிப்பதற்கான என்ன. காரணம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனை கண்டித்து அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும் என்றனர். இன்று என்ன நடந்தது என்பதை இனி மேல் தான் கவனிக்க வேண்டும். பழங்கால கட்டிடங்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்று இந்திய தொல்துறை சட்டங்களே கூறுகின்றன, ஆனால், அத்துறை இதில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் வியப்பாகத் தான் இருக்கிறது. தொல்லியல் படித்த, படிக்கும், இவ்விவரங்கள் அறிந்த அம்ர்நாத் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், மற்ற வல்லுனர்களும் இதனைக் கண்டிக்கவில்லை. இதையும் திராவிட மாடல் எனலாம் போலும்!

© வேதபிரகாஷ்

19-03-2023


[1] தினத்தந்தி, அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் மடமும் இடிக்கப்பட்டதால் இந்து அமைப்பினர் போராட்டம், PreviousNext, தினத்தந்தி, மார்ச் 18, 4:55 pm (Updated: மார்ச் 18, 10:24 pm).

[2] https://www.dailythanthi.com/News/State/ammani-amman-mutt-removal-of-encroaching-buildings-caused-by-police-presence-922383

[3] தினகரன், அண்ணாமலையார் கோயில் இடத்தில் பாஜ மாநில நிர்வாகி ஆக்கிரமித்து கட்டிய அடுக்குமாடி கட்டிடம் இடிப்பு: ரூ.30 கோடி மதிப்பு நிலம் மீட்பு, 2023-03-19@ 00:26:09; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=848946

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=848946

[5] சமயம்.காம், கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகர்திருவண்ணாமலையில் சுமார் 23800 சதுர அடி நிலம் மீட்பு, Curated by Mohammed Ghowse | Samayam Tamil | Updated: 18 Mar 2023, 12:25 pm

[6] https://tamil.samayam.com/latest-news/vellore/thiruvannamalai-annamalaiyar-occupied-temple-land-retrieval-from-bjp-member/articleshow/98750432.cms

[7] இ.டிவி.பாரத், அண்ணாமலையார் நிலத்தை சுருட்டிய பாஜக பிரமுகர்.. 23,800 சதுர அடி ஆக்கிரமிப்பு அகற்றம்., Published on: 18-03-2023, 13 hours ago / 8.00 pm

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/encroachment-removal-in-thiruvannamalai-ammani-amman-madam/tamil-nadu20230318192915328328069

[9] அக்னி முரசு, அம்மணி அம்மாள் வாழ்ந்த மடம் இடிப்பு, March 18, 2023.

[10] https://www.agnimurasu.com/2023/03/demolition-of-the-monastery-where-ammani-ammal-lived.html?amp=1

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (1)

திசெம்பர் 23, 2022

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (1)

இனிகோ இருதயராஜ் லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அடத்திய கிறிஸ்துமஸ் விழா: சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது[1]. இனிகோ இருதயராஜ் 13 ஆண்டு காலமாக ஆண்டுதோறும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்[2].  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்[3]. நிகழ்ச்சியில் பேசிய அவர், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றி நடந்தால் உலகம் அமைதியாக திகழும் என்றார்[4]. விழாவில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மேடையில் இருந்த கிறிஸ்தவ பேராயர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்[5]. மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றகழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது, இவ்வாறு அவர் பேசினார்[6]. சென்ற முறை கலையரசி நடராஜன் போன்றோரை வரவழைத்துப் பேச விட்டது போல, இம்முறை, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்று ஒரு சாமியாரை வரவழைத்து பேச வைத்துள்ளார்கள். அவரு தமது வேலையைக் கச்சிதமாக செய்து முடித்துள்ளார். ஆக, ஒவ்வொரு முறையும், இந்த கிருத்துவ மேடை, விழா மற்றும் அமைப்பு, இந்து விரோதம், இந்து எதிர்ப்ப்ய், காழ்ப்பு-தூஷணம் போன்றவற்றில் தான் ஈடுபட்டு வருகிறார்கள்.

20-12-2022- முதலமைச்சர் ஸ்டாலினின் உரை: அவரது போதனைகளின்படி அனைவரிடமும் அன்பு செலுத்தும் அரசு திமுக அரசு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்[7]. அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்[8]. சிறுபான்மையினர் நலனிற்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என சுட்டிக்காட்டினார். சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு என்பதை அனைவரும் அறிவார்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்[9]. தமது தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்[10]. சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு எனும்போது, பெரும்பான்மையினரை தூஷித்து வருவது எப்படி என்றுதான் திராவிட மாடலில் சொல்லவில்லை.

இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளது: “நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்,” என்றது, ஏதோ அதிசயத்தை நிகழ்த்தியது காட்டியுள்ளது போல இருக்கிறது. அதாவது, பரத நாட்டியம் ஆடும் பொழுது, இவரையே “ஏசு கிறிஸ்து” ரேஞ்சில் தூக்கிப் பிடித்து, போற்ரிப் பாடியதை வைத்துப் பார்க்கும் பொழுது, ஸ்டாலினை அந்த வகையில் போற்றி புகழ்ந்துள்ளது தெரிகிறது. ஏசு அதிசயம் செய்தார் போன்ற கதையை, இனி ஸ்டாலினுக்கும் புனைய ஆரம்பித்து விடுவார்கள் போலும். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற 2 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது, மாற்று திறனாளிகளுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடை பாதை அமைத்தது போன்ற சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், அந்த “சிறப்பு நடை பாதை” என்னவாயிற்று என்பதை மறந்து விட்டது தெரிகிறது.

பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா: சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர்,  அந்த உதவித் தொகை கிடைப்பதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார். கிறிஸ்தவ மதத்தினர் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்[11].  “இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். சூரியநயினார் கோவில் சிவகர யோகிகள் மடத்தின் – மகாலிங்க தேசிக பரமாச்சார்யார் சுவாமிகள் அவர்களும், ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூடத்தைச் சேர்ந்த முகமது இம்ரானுல்லாஹ் பாகவி அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே இது அன்பின் பெருவிழாவாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவே சாட்சி”. இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பது தமது கடமை என்றும் அவர் கூறினார்[12].  விழாவில் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். கிறிஸ்துமஸ் விழாவில் பரதநாட்டியம் முதல்வர் ஸ்டாலின் முன் ஆடிய மாணவிகள் அசத்தினர்[13] என்கிறது, ஆனால், இந்த கூத்தை இந்துக்கள் யாரும் நம்புவதாக இல்லை. நிச்சயமாக, தங்களுக்கு எதிராக, இவ்வாறு கூட்டத்தைக் கூட்டியிருக்கின்றனர் என்பது தான் புலப்ப் படுகிறது.

பரத நாட்டியம் ஆடிபாடி போற்றியதுசாமியார் பேசியது: தினத்தந்தி, “தீந்தமிழே, முதல்வரே, தமிழகத்தின் முதல்வரே, தமிழகத்தின் தங்கத் தளபதியே, தமிழக மண்ணில், நிலத்தில் அற்புதம் தினைத்து அடித்தளம் அமைத்து விடியல் நாயரே, வாழ்த்துகிறோம், உம்மை வணங்குகிறோம், வரவேற்கிறோம் முதலமைச்சரே”,.என்று பாடி ஆடியது வியப்பாக இருந்தது[14]. முன்பு, கபாலீஸ்வரர் கோவிலில், கருணாநிதிக்கு, “போற்றி,” சொன்னது போல, இங்கு, ஸ்டாலினுக்கு பாடி-ஆடியுள்ளனர். பரத நாட்டியத்தை ஏர்கெனவே கிருத்துவர்கள் தங்களது மதமாற்றும் திட்டங்களுக்கு உபயோகப் படுத்தி வருகிறார்கள். இப்பொழுது, இந்த நாத்திக-பெரியாரிஸ்ட் கொள்கை போர்வையில் இவ்வாறு செய்திருப்பதை கவனிக்கலாம். நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் சூரியனார் கோவில் ஆதீனம்.  “திருக்கயிலாய கந்த பரம்பரை வாமதேவ சந்தானம், 28 ஆவது குருமஹா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்று பெரிய பெயராக இருந்தாலும், நிச்சயமாக, பலருக்கு இவர் யார் என்று தெரியவில்லை, ஏதோ, ஒரு உதாரணத்திற்கு, இவரைக் கூட்டி வந்தது போலத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

22-12-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, இது தான் திமுக அரசு அரசின் அடையாளங்கள்..” கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், By Vigneshkumar, Published: Tuesday, December 20, 2022, 23:04 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-cm-stalin-list-of-schemes-implemented-for-minorities-by-dmk-490538.html

[3] தினகரன், சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் உரை, 2022-12-20@ 20:35:29

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=824129

[5] மாலை மலர், அனைவரையும் ஒரு தாய் மக்களாக கருதி தி.மு.. அரசு இயங்கி வருகிறதுமுதலமைச்சர் மு..ஸ்டாலின் பெருமிதம், By Maalaimalar, 21 டிசம்பர் 2022 10:58 AM (Updated: 21 டிசம்பர் 2022 12:15 PM).

[6] https://www.maalaimalar.com/news/state/tamil-news-dmk-considers-all-people-as-one-mother-without-distinguishing-between-people-551239

[7] நியூஸ்.7.தமிழ், நலத்திட்டங்களின் சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம்முதலமைச்சர் மு..ஸ்டாலின், by LakshmananDecember 20, 2022

[8] https://news7tamil.live/cm-mk-stalin-speech-in-christmas-function.html

[9] மாலை மலர், தி.மு.. ஆட்சியில் இத்தனை சாதனைகளா? – கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம், By மாலை மலர், 21 டிசம்பர் 2022 1:59 AM

[10] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-says-tn-govt-always-concerned-about-the-welfare-of-minority-people-551161

[11] கலைஞர்.செய்திகள், தி.மு. அரசின் அடையாளங்கள் இதுதான்.. கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு..ஸ்டாலின்!, Lenin

Updated on : 20 December 2022, 09:35 PM

[12] https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2022/12/20/christmas-function-cm-mk-stalin-speech

[13] தினத்தந்தி, கிறிஸ்துமஸ் விழாவில் பரதநாட்டியம்முதல்வர் ஸ்டாலின் முன் ஆடிய மாணவிகள் | mk stalin By தந்தி டிவி 21 டிசம்பர் 2022 8:27 AM

[14] https://www.thanthitv.com/latest-news/bharatanatyam-at-the-christmas-function-girls-danced-in-front-of-chief-minister-stalin-156931

பூமி பூஜை எதிர்ப்பில் வெளிப்பட்ட இந்துவிரோதம் – இனி இமாம், பாஸ்டர், வீரமணி, எல்லோரும் வந்து பூஜைகள் செய்ய வேண்டுமாம்! பெரியாரிஸ போதையில் வாக்கு சொன்ன திராவிட பூஜாரி (2)

ஜூலை 18, 2022

பூமி பூஜை எதிர்ப்பில் வெளிப்பட்ட இந்துவிரோதம்இனி இமாம், பாஸ்டர், வீரமணி, எல்லோரும் வந்து பூஜைகள் செய்ய வேண்டுமாம்! பெரியாரிஸ போதையில் வாக்கு சொன்ன திராவிட பூஜாரி (2)

தினமலர் பல உதாரணங்களைக் கொடுத்து, திமுகவினரின் போலித்தனத்தை எடுத்துக் காட்டியது: செந்தில்குமாரின் இந்த செயலுக்கு ஹிந்து மதத்தினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், பல அரசு விழாக்களில் காலம் காலமாக பூமி பூஜை இவ்வாறு தான் செய்யப்பட்டு வருகிறது எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பல திமுக எம்எல்ஏ.,க்களே இவ்வாறான பூஜைகளில் பங்கேற்றுள்ளதையும் பகிர்ந்து தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 27ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த வடக்கு மாவட்ட திமுக அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மகனும், எம்எல்ஏ.,வுமான உதயநிதி, ஹிந்து மத பூஜைகளை செய்து கொடுக்கப்பட்ட செங்கலையே அடிக்கல் நாட்டினார்.

பூமிபூஜைகள் நடந்த விவரங்கள்: அதேபோல், கடந்தாண்டு 2021 டிசம்பரில் கிருஷ்ணகிரி நகராட்சி சின்ன ஏரி மேம்படுத்தும் பணி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 10 சாலை பணிகள் என மொத்தம் 5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்[1]. இந்த நிகழ்ச்சியிலும் செந்தில்குமார் எம்.பி ஆட்சேபித்த பூஜையே செய்யப்பட்டது[2]. கடந்த 2022 மே மாதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சியில் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-22ன் கீழ் ரூ.2.18 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை மேம்பாடு செய்தல் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று துவக்கி வைத்தார். கடந்த 2022 ஜூன் மாத துவக்கத்தில் மன்னார்குடி மேம்பாலம் அருகில் தமிழக அரசின் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமாக ரூ.39 லட்சத்தில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையில் திமுக எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவருமான டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

முஸ்லிமான மஸ்தானே கலந்து கொண்ட பூமிபூஜை: அதே 2022 ஜூன் மாதம் இறுதியில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை அமைச்சர் கே.எஸ்.செஞ்சி.மஸ்தான் தொடங்கி வைத்தார். இதிலும் பூஜையுடன் விழா நடைபெற்றது. ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, என்ன ஒரு முஸ்லிம் கலந்து கொண்டாரே என்று கூட எதிர்க்கவில்லை, விம்ர்சனம் இல்லை. இதிலிருந்து, முஸ்லிம்களின் இரட்டை வேடங்களையும் அறிந்து கொள்ளலாம். திடீரென்று, ஷிர்க் என்றெல்லாம் கத்துவார்கள், ஆர்பாட்டம் செய்வார்கள், ஆனால், இத்தகைய முரண்பாடுகள் வரும் போது அமைதியாக, கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.  

செந்தில்குமாரின் இந்துவிரோதம் மர்மமாக இருக்கிறது: இப்படி காலம்காலமாக கட்சி விழாக்கள் மட்டுமின்றி அரசு விழாக்களில் பூஜைகளுடன் பணிகள் துவங்கப்படும் வழக்கம், திமுக அரசு பொறுப்பேற்றதும்கூட தொடர்ந்துதான் வருகிறது. ஆனால், தருமபுரி எம்.பி செந்தில்குமார் ஏதோ திமுக அரசு பொறுப்பேற்றதும் அனைத்து மதத்தினருக்கான கட்சி என்பதால் ஹிந்து சமுதாயத்தை மட்டுமன்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் என பேசியுள்ளார். தங்கள் கட்சியை சேர்ந்தவர்களே எப்போதும் தொடரும் வழக்கமான பூஜையை தொடர்ந்து வருகின்றனர் என்பது அவருக்கு தெரியவில்லையோ என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த விடியோவை தானே, டுவிட்டரில் போட்டு, பரப்பி, கவனத்தை ஈர்ப்பது, ஏதோ உள்நோக்கத்துடன் செய்துள்ளாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. இத்தகையை காட்டமான, ஆக்ரோஷமான, இந்து எதிர்ப்பு ஏன் என்றும் அலச வேண்டியுள்ளது.

இந்துவிரோத அஜன்டா ./ திட்டம் ஏன்?: கடந்த சில நாட்களில் தமிழகத்தில் ஏகப்பட்ட, ரீரியஸான பல விசயங்கள், அரசை பாதித்து வருகிறது. முக்கியமாக அணைகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வருவது, அதை தாக்குப் பிடிக்க முடியாமல், திறந்து விடுவதால், விளையும் விளைவுகளை கவனிப்பது, தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் மழை காலம் வரும் நிலையில், மழைநீர் வடிகால் கால்வாய்கள் அடைப் பட்டுக் கிடப்பது, கடந்த ஒரு வருடமாக கண்டுகொள்ளாமல் இருந்தது, இப்பொழுது, திடீரென்று அரைகுறையாக வேலை மேற்கொண்டுள்ளது, கொரோனா மீண்டும் அச்சுருத்துவது, கல்வித்துறை பிரச்சினைகள் என்று மிரட்டும் நிலையில், திசைத் திருப்ப, இந்த நாடகங்கள் நடக்கலாம், முதல்வரே கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவருக்குக் கவலை இல்லை, ஆனால் சாதாரண மக்கள் நிலை என்னாவது? மறுபடியும் “லாக்-டவுன்” என்றால், சாதாரண மக்களால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே, எம்பியின் நாடகமா, உண்மையான எதிர்ப்பா, செக்யூலரிஸமா, திராவிட மாடலா என்று கவனிக்கத் தக்கது. ஆனால், அதில் இந்துவிரோதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • தமிழக இந்துக்கள் திராவிட கட்சிகள் இந்துவிரோத கூட்டங்கள் தான் என்று அறிந்து-புரிந்து கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது.
  • மேடை தமிழ் பேசி, சினிமா ஜாலம் காட்டி, இலவசங்கள் கொடுத்து, பிறகு பணமும் கொடுத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வரும் முறை கண்டு கொழுத்து விட்டார்கள்.
  • அக்கொழுப்பு செக்யூலரிஸ திமிர் அல்ல, சமதர்ம அகங்காரமும் அல்ல, வெளிப்படும் அதர்ம ஊழல், துருக்ஷ-அரக்க குரூரம்.
  • பரம்பரை துவேசம், பாரம்பரிய தூஷணம், பண்பற்ற தாக்குதல், கொலைவெறித்தனம், கோவில் அழிப்புகளில் வெளிப்படும்.
  • ஔரங்கசீப், மாலிகாபூர், குண்டு வைக்கும் வகையறாக்களாக மாறி, திராவிட பாம்பு(bomb)களாகவும் மாறியுள்ளனர்.
  • ‘சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?’ என்று கொக்கரித்தவர் செய்து காட்டுகின்றனர்.
  • சுந்தபாண்டியன் மாலிகாபூரைக் கூப்பிட்டது போல, தமிழக இந்துக்கள் இந்த இந்துவிரோதிகளை ஆட்சியில் ஏற்றி விட்டனர்.
  • இனி அனுபவித்து தான் ஆகவேண்டும், கோவில், குளம், ஏரி, நதி, மடம், என்று எல்லா இடங்களிலும் இவர்களது ஔரங்கசீப்புத்தனம் இருக்கும்.
  • 90 வயது ராமராயர், 80 வயது வல்லாளன் சதியால் கொலை செய்யப்படுவார்கள், காக்க சிவாஜி போன்றோர் தான் வர வேண்டும்.
  • ஜெயச்சந்திரன் போன்ற துரோகிகளை, இந்துவிரோதிகளை தர்மயுத்தத்தில் ஜெயிக்க முடியாது, ஏனெனில், அவர்கள் அதை பின்பற்றமாட்டார்கள்..

© வேதபிரகாஷ்

18-07-2022


[1] தினமலர், திமுக.,வினர் பங்கேற்ற பூமி பூஜைகள்: செந்தில் குமார் எம்.பி.,க்கு தெரியாதது ஏனோ?, Updated : ஜூலை 17, 2022  17:55 |  Added : ஜூலை 17, 2022  17:44

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3078891