Archive for the ‘எரித்துக் கொலை’ Category

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மற்ற மதகுருமார்களின் குற்றங்களை மறைக்கவா அல்லது 2019 தேர்தல் பிரச்சார ஒத்திகையா? (3)

ஜூலை 27, 2018

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மற்ற மதகுருமார்களின் குற்றங்களை மறைக்கவா அல்லது 2019 தேர்தல் பிரச்சார ஒத்திகையா? (3)

Increasing Church crimes in India

சட்டங்களை மதிக்காமல் குற்றங்கள் செய்வது யார்?: இந்நாட்டு சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக, விசாரணை இன்றி குற்றங்கள் நடப்பது போன்று, இப்பொழுது ஏன் சித்தரிக்கப் பட வேண்டும். சமீப காலத்தில்,தொடர்ச்சியாக, இந்தியாவில், கிருத்துவ மததலைவர்கள், கார்டினல், பிஷப் முதல் சாதாரண பாஸ்டர் வரை, பற்பல குற்றங்களில் ஈடுபட்டு, விவரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன, போதாகுறைக்கு, பாதிக்கப் பட்ட கிருத்துவர்களை போலீஸாருக்கு செல்ல விடாமல், நீதிமன்றங்களை அணுகாமல் தடுத்து, சர்ச்சுகளில் கட்டப் பஞ்சாயத்து போல நடத்தி, எல்லாவற்றையும் மறைத்து, அமுக்கி விடுகிறார்கள். அத்தகைய, இந்நாட்டின் சட்டதிட்டங்களை மீறிய குற்றங்கள் அதிகமாகி வருகின்ற வேலையில், சிலர் போலீஸாரிடமும் புகார் கொடுத்ததன் மூலம், பாலியல் குற்றவாளிகள் பற்ரிய விவரங்கள் அதிகமாகவே வந்துள்ளன. இதனால், அதிர்ந்து போன சர்ச்சுகள், தங்களுக்குள்ள அதிகாரம், பணம் முதலியவற்றை பயன்படுத்தி, ஊடகங்களில் அவற்றைப் பற்றிய விவரங்கள் வராமல் தடுக்க முயற்ச்சித்து வருகின்றன. இவை, கன்னியாஸ்திரிக்கள் மற்றும் கிருத்துவ பெண்கள் கற்பழிப்பு விவகாரங்கள் மூலம் வெளிவந்து விட்டன. வாடிகன், சிபிசிஐ போன்றவை உண்மைகளை மறைக்க ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளன. ஆகவே, லிஞ்சிங் விசயத்தை வைத்துக் கொண்டு, அனைத்துல ரீதியில் இந்தியாவைப் பற்றி அவதூறை ஏற்படுத்த முயன்று வருவது கவனிக்கத் தக்கது.

Miinesota lynching

அமெரிக்க ஊடகத்தின் ஒப்பாரிஜூலை 2018[1]: அன்னி கோவன் என்ற அமெரிக்கப் பெண்மணி, இவ்வாறு விவரித்துள்ளார், “இவ்வருடத்தில், ஒரு தீவிரவாத இந்து சாமியார் தனது கருத்தை வெளிப்படுத்தியதிலிருந்து, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றி வாழும் முஸ்லிம்கள் கனவில் கூட காணாத வாழ்வினை வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலில், விழிப்புடன் இருக்கும் இந்துக்கள், எருமைகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். சட்டத்திற்குப் புறம்பாக, பசுக்களைக் கடத்துகிறார்களா என்று தேட ஆரம்பித்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு பசு புனிதமானது, கடத்திச் செல்பவர்களிடமிருந்து காக்கப்பட வேண்டியது. சில முஸ்லிம்கள் இவ்விசயத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிறகு டஜன் கணக்கில் கசாப்புக் கடைகள் மற்றும் 50,000 மாமிசக் கடைகள் மூடப்பட்டன; இதனால் சிகப்பு மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழும் முஸ்லிம்களுக்கு உணவு அரிதானது. இந்த மாமிச வியாபரத்தையே தொழிலாகக் கொண்ட குரேஷி என்கின்ற முஸ்லிம்கள், தங்களது வேலையை இழக்க வேண்டியதாயிற்று…….”

 Lymching propaganda against Modi

இந்துக்களில் சிலரும் பசு மாமிசம் சாப்பிடும் போது, முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படுவதேம்?: இதில்[மேற்குறிப்பிடப் பட்ட வாஷிங்டன் போஸ்ட் செய்தியில்] –

  • ஒரு தீவிரவாத இந்து சாமியார்,
  • சட்டத்திற்குப் புறம்பாக, பசுக்களைக் கடத்துகிறார்களா,
  • பசு புனிதமானது,
  • சிகப்பு மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழும் முஸ்லிம்களுக்கு உணவு அரிதானது,
  • முஸ்லிம்கள், தங்களது வேலையை இழக்க வேண்டியதாயிற்று.

போன்ற சோற்றொடர்கள், விசமத் தனமானது என்பதை கவனிக்கலாம். உண்மையில் நடப்பதை விவரிப்பதை விட, சில விவரங்களை வைத்துக் கொண்டு, இந்துமுஸ்லிம் பிரச்சினையாக இதனை மாற்றும் முயற்சியை சுலபமாக கண்டறியலாம்[2]. மேலும் எவ்வாறு பல துறை அதிகாரிகள், ஏனென்டுகள் முதலியோர் வழியில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, வண்டிகளை அனுப்பி வைக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறார். அதாவது, இது சட்டத்தை மீறிய வியாபாரம், அதில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று இரு கூட்டத்தினரும் சம்பந்தப் பட்டுள்ளனர். ஆகவே, வியாபார ஒற்றுமையை மறைத்து, மேலாக நடக்கும், பசு விவகாரத்தை பெரிது படுத்த வேண்டிய நோக்கம் ஏன் என்ற கேள்வி தான் எழுகின்றது. ஏனெனில், இந்துக்களில் சிலரும் பசுமாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பது தெரிந்த விசயமே. ஆனால், அதை ஊடகக் காரர்கள் பெரிது படுத்துவதில்லை. அவர்களுக்கு பசு மாமிசம் கிடைக்காமல் போகிறது என்று அழவில்லை. ஆக, இதெல்லாம், ஊடகக் காரர்களின் மிக்க பாரபட்சத்தினை, மதரீதியிலான சிந்தனையை மற்ரும் அவர்களது கலவரமூட்டும் போக்கினை எடுத்துக் காட்டுகிறது. உண்மையில், இதுதான், அபாயகரமானது எனலாம்.

Child trafficking in 2013

1984 சீக்கியகளுக்கு எதிராக நடந்த கலவரம், கூட்டுக் கொலைகள்: 1984ல் இந்திரா காந்தி கொலை செய்யப் பட்டபோது, சீக்கியர்கள் தாக்கப் பட்டனர். அதில் 2,800 சீக்கியர்கள் [தில்லியில் மட்டும் 2,100] கொல்லப்பட்டனர் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், 8,800 [தில்லியில் மட்டும் 3,000] கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது. இதெல்லாம் கூட்டுக் கொலையில் தான் வரும், அது மட்டுமல்லாது, சீக்கியர்களை குறிவைத்து நடத்தப் பட்ட கலவரக் கொலைகள் ஆகும். அதற்கு, ராஜிவ் காந்தியும், “ஒரு பெரிய மரம், வேர்களுடன் விழுந்தால், சுற்றியிருக்கும் பூமி பாதிக்கப் படத்தான் செய்யும்,” என்ற்ற விதத்தில் பேசியது நினைவில் இருக்கலாம். அக்டோபர் 31 முதல் நவம்பர் 3ம் தேதி வரை, தொடர்ந்து கலவரம், கொலை, கொள்ளை, சூரையாடல் நடந்ததன. இப்படி  பல்லாயிரக் கணக்கான நடந்த கூட்டுக் கொலையினை மறந்து, ஏதோ 2014லிருந்து தான் நடக்கின்றன என்று ஊடகத்தினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுதான்ன் திகைப்பாக இருக்கிறது. எந்த கொலையும் நியாயப்படுத்தப் படவில்லை, ஆனால், அதேபோல, நடக்கும் குற்றங்களும் ஒரே மாதிரியாக அலசப்பட வேண்டும். அதற்கு ஊடகக் காரர்களின் தார்மீகம் பதில் சொல்லியாக வேண்டும்.

Buffaloes are penned outside a cattle fair in Pinjari, on May 4, 2018-taken away for slaughter in UP

ஊடகங்கள் பொறுப்புடன், உண்மை தகவல்களை கொண்டு, இந்த விசங்களை அணுக வேண்டும்: மேலே குறிப்பிட்ட விவரங்கள் மூலம், கீழே சில விவரங்கள் சுருக்கமாகக் கொடுக்கப்படுகின்றன.

  1. லிஞ்சிங் என்று வர்ணிக்கப்படுகின்ற கூட்டுக்கொலை, பல இடங்களில் தன்னிச்சையாக, பொது மக்கள் வெகுண்டெழுந்ததால் நடைபெறுகிறது, இது யூத-கிருத்துவ-முகமதிய மததண்டனை போல, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதில்லை.
  2. எந்த மதகுருவும் விசாரித்து, தண்டனை அறிவித்து, நிறைவேற்றப்படும் தண்டனையும் அன்று.
  3. கசாப்புக் கடைகளில் மாடுகளைக் கொன்பது, விற்பது, வாங்குவது, மாட்டுக்கறி சமைத்து தின்பது, ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருகின்றன. கடந்த காலத்தில், ஏற்றுமதி செய்வதும் நடந்து வருகின்றது. அப்பொழுதெல்லாம், இப்பிரச்சினையை எழுப்பப்படவில்லை.
  4. கோஷாலைகள் வைத்து, பசுக்கள்-மாடுகள் கொல்லப்படக் கூடாது போன்ற இயக்கங்களும் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருகின்றன. இன்றும், அரசியல் நிர்ணய சட்டத்தில் “பசுவதை கூடாது” என்றுள்ளது.
  5. பசுவதை விசயங்களில், பிரச்சினைகள், கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அப்பொழுதும் மதசாயம் பூசப்பட்டாலும், இத்தகைய அதிரடி பிரச்சாரங்கள், ஊடகங்கள் மூலம் நடத்தப்படவில்லை.
  6. 2014-18 ஆண்டுகளில் தான் எல்லாமே நடந்தன, நடக்கின்றன, திட்டமிட்டு நடத்தப் படுகின்றன. அதற்கு இந்துமத தலைவர், ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மற்றைந்துத்துவக் காரர்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்று முடிச்சுப் போடுவதும் நடக்கிறது.
  7. மேலும்,அவர்களின் மொத்த உரையாடலை வெளியிடாமல், ஒரே வார்த்தை, வரி அல்லது வரியின் பகுதியை, இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்காமலும், அத்தகைய பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
  8. ஜைன மதகுருமார்கள், ஜீவகாருண்ய கூட்டத்தினர், புலால் உண்ணாதே என்பதால் எல்லோருமே உண்ணாமல் நிறுத்தி விடவில்லை.
  9. கசாப்புக் கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. போதாகுறைக்கு, அந்நிய கடைகளும், நவநாகரிக தோற்றத்துடன் போட்டிப் போடுகின்றன. அக்கடைகளை மூடு என்று யாரும் போராட்டம் நடத்தவில்லை. அவர்களும் எதிர்ப்பவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.
  10. ஆகவே, ஊடகங்கள் பொறுப்புடன், உண்மை தகவல்களை கொண்டு, இந்த விசங்களை அணுக வேண்டும். ஏதோ 2019-தேர்தல் பிரச்சாரத்தை செய்யும் பாணியில் ஈடுபடக் கூடாது.

© வேதபிரகாஷ்

27-07-2018

Cow Smuggling Rampant From Assam's Dhubri To Bangladesh Via Brahmaputra River

[1] Washington Post, Cows are sacred to India’s Hindu majority. For Muslims who trade cattle, that means growing trouble. By Annie Gowen July 16, 2018.

[2]  India — In the year since an extremist Hindu monk was tapped to lead one of India’s biggest states, the country’s Muslim cattle traders have seen their lives change in ways they could not have imagined. First, mobs of Hindu vigilantes emboldened by the monk’s victory began swarming buffalo trucks on the road, intent on finding smugglers illegally transporting cows, which are sacred to the Hindu faith and protected from slaughter in many places in India. Some Muslim men have been killed by lynch mobs. Then dozens of slaughterhouses and 50,000 meat shops were closed, severely limiting access to red meat, a staple of the Muslim community’s diet. Hundreds from the Qureshi clan, Muslims in the meat trade for centuries, lost their jobs.

https://www.washingtonpost.com/world/asia_pacific/cows-are-sacred-to-indias-hindu-majority-for-muslims-who-trade-cattle-that-means-growing-trouble/2018/07/15/9e4d7a50-591a-11e8-9889-07bcc1327f4b_story.html?noredirect=on&utm_term=.82c263eb8d92

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – இது போன்ற கூட்டுக்கொலை, இந்தியாவின் பண்பாடு அன்று, மற்ற நாடுகளின் மதநம்பிக்கையில் உருவானது (1)

ஜூலை 27, 2018

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – இது போன்ற கூட்டுக்கொலை, இந்தியாவின் பண்பாடு அன்று, மற்ற நாடுகளின் மதநம்பிக்கையில் உருவானது (1)

Miinesota lynching

இந்தியாவில்தரும அடிகொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது முதலியவை தெரிந்த விசயங்கள்: சமீபகாலத்தில் லிஞ்சிங் (Lynching), மாப்-லிஞ்சிங் (mob lynching) போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஊடகங்களில், விவாதங்களில் காணப்படுகின்றன[1]. மக்கள் சேர்ந்து கொண்டு ஒருவரை அடித்துக் கொல்வது,  குறிப்பாக தூக்கில் போடுவது சட்டப்படியான விசாரணை இன்றி குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவரைக் கொல்வதையே “லிஞ்சிங்”  என்று சில ஆங்கில அகராதிகள் விளக்கம் கொடுக்கின்றன என்று ஆகார் படேல் எழுதுகிறார்.[2]இருப்பினும், இச்சொற்பிரயோக மூலம் உறுதியாக அறியப்படவில்லை[3]. 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் இருவரின் பெயர்கள் அவ்வாறு இருந்தது அதனால் உண்டானது என்று விக்கிபிடியா கூறுகிறது[4]. அமெரிக்காவில், துலுத் என்ற இடத்தில் வெள்ளையர் மூன்று கருப்பரைக் கொன்றதால், “துலுத் லிஞ்சிங்” அமெரிக்காவில் பெருத்தத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது இந்தியாவில் நடப்பது, தானாக நடக்கும் “பொது தாக்குதல்” வன்முறையாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப் படுகிறது[5]. முன்பெல்லாம் “பிள்ளைப் பிடிப்பவர்களை” அடிப்பது, அடித்துக் கொல்வது இந்தியாவில் தெரிந்த விசயமாக இருந்து வந்தது. ஆனால், அப்பொழுதெல்லாம், ஊடகங்களில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. “தரும அடி” கொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது எல்லாம் நடந்து வந்தன. ஆனால், உயிர் போகும் வரை அடிக்க மாட்டார்கள். முதலில், இதன் பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.

Child lifting cases in Tamilnadu

பிள்ளைப் பிடிப்பவர்கள் யார்?: பொதுவாக 1930-50களில் பிள்ளைகளை / குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவர்கள் துலுக்கர் மற்றும் வெள்ளையர் என்பது தெரிந்த விசயமாக இருந்தது. குழந்தைகளுக்கு சோறூட்டும் போது, குறும்பு செய்யும் போது, “புள்ளப் புடுக்கிறவங்க கிட்டே புடுச்சிக் கொடுத்துடுவேன்,” என்று மிரட்டுவது வழக்கமாக இருந்தது. “பூச்சாண்டி” காட்டுவது, பூச்சாண்டி பிள்ளைப் பிடிப்பது போன்ற பிரயோகங்கள் சாதாரணமாக வழங்கப் பட்டன. அதாவது, சாதாரண பெண்களுக்கும் அவ்வுண்மை தெரிந்திருந்தது. துலுக்கர் குழந்தைகளை, பிள்ளைகளை, பெண்களை தூக்கிக் கொண்டு போனது விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் இடைக்காக சரித்திரம் அதனை விவரங்களுடன் பதிவு செய்துள்ளது. அதேப்போல, ஐரோப்பிய வர்த்தகர், மிஷினரிகள், மற்றவர் அடிமை வியாபாரத்திற்காக, பிடித்துக் கொண்டு சென்று விற்றனர், பண்ணைகளில் வேலை செய்ய வைத்தனர். டாக்ட்ரைன் ஆப் லாப்ஸ் [Doctrine of Lapse] கொள்கை மூலம் ஆண் வாரிசு இல்லாத ராஜ்யங்களையும் கவர்ந்து கொண்டனர். பிள்ளைகளையும் கவர்ந்து சென்றனர். அத்தகைய பாரம்பரியங்களில் வந்தவர்கள் தாம், இன்று இந்தியர்களை, குழந்தை கடத்தல்காரர்களை, கூட்டுக் கொலை செய்கின்றனர் என்று எழுதுகிறார்கள். அதனை லிஞ்சிக் கூட சேர்த்து, காட்டு மிராண்டி இந்தியர்கள், இந்துத்துவ வெறியகள், தினம்-தினம் மக்களைக் கொன்று வருகின்றனர் [குறிப்பாக முஸ்லிம்களை] என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Duluth lynching- 1920

யூதகிருத்துவதுலுக்க நாகரிகங்களில் கூட்டுக்கொலை பலவிதங்களில் அமூல்படுத்தப்பட்டு வந்தது: உண்மையில், இப்பழக்கம் இந்தியாவில் இல்லை, இருந்ததில்லை. வளைகுடா நாகரிகங்களில் குற்றம் புரிந்தவர்களை, குறிப்பாக, தங்களது நம்பிக்கைக்கு விரோதமாக காரியங்களில் ஈடுபட்டவர்களை சேர்ந்து அடித்துக் கொல்லும் மற்றும் கற்களால் எரிந்து கொல்லும் பழக்கம் இருந்து வந்தது. ஹஜ்ஜில் சாத்தான் மீது கல்லெறிதல் என்ற சடங்கு இன்றளவிலும் வருடாவருடம் செய்து வருகின்றனர். இங்கிருக்கும் ராவணப் பிரியர்கள் போல, அங்கு சாத்தான் பிரியர்கள் யாரும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. உயிரோடு கட்டிவைத்து, பொது இடங்களில் எரித்துக் கொல்லும் [burning at stake]  பழக்கமும் 19ம் நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவில் இருந்து வந்தது. இது கிருத்துவர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த தண்டனை முறையாகும். மந்திரகாரிகள், சூன்னியகாரிகளைத் தேடி பிடித்து [witch hunting] கொல்லும் முறைக்கும் இது பயன்படுத்தப்பட்டது. “விட்ச்-ஹன்டிங்” என்ற வார்த்தை பிரயோகம் உண்டானது. இது பெண்களைக் கொல்ல, பிரத்யேகமாக பயன்படுத்தப் பட்ட முறை. தவிர பைபிளுக்கு விரோதமான கருத்துகளை வெளியிட்டனர் என்று விஞ்ஞானிகளும் அவ்வாறே கொல்லப்பட்டனர்.   யூத-கிருத்துவ-துலுக்க நாகரிகங்களில் இவை பரவலாக இருந்தன. இன்றும் தாலிபான், ஐசிஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள், குரூர ஜிஹாதிகள் இத்தகைய குரூர கொலைகளை செய்து வருகிறார்கள். அவர்களே, புகைப்படங்கள், வீடியோ எடுத்து பெருமையாக போட்டு, காட்டி வருகிறார்கள்.

Inquisition, torture, mass killing

அந்நிய கொலைவெறி முறைகளை மறந்து, மறைத்து, ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது: இந்தியாவில் கும்பல் கொலை, கூட்டுக் கொலை, தாக்கிக் கொலை என்று தினம்-தினம் ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், முன்னமே குறிப்பிட்ட படி, இவையெல்லாம் பலவிதங்களில், ரகங்களில், முறைகளில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்-அல்லாத மற்ற நாகரிகங்கள் தாம். யூத, கிருத்துவ மற்றும் முகமதிய மதங்கள் இத்தகைய மத-தண்டனைகள் – Witch-hunting, burning at stake, inquisition, crucifying[6], hacking, என்று பல வழிகளில் கோடிக்ககணக்கான மக்களைக் கொன்றுக் குவித்தன. பெண்கள் தான் அழிவிற்குக் காரணம் என்ற நம்பிக்கையில் தேடி-தேடி பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து எரித்துக் கொன்ற முறை விட்ச்-ஹன்டிங். சூனியகாரிகளை, பெண் மந்திரவாதி கொலை என்றதனை குரூரக் கிருத்துவர்கள் 19ம் நூற்றாண்டு வரை செய்து வந்தனர். ஜோன் ஆப் ஆர்க் [Joan of Arc] என்ற பெண்ணின் குரூர கொலை எல்லோரையும் பாதித்தது பிரபலமானது. பைபிளுக்கு ஒத்துவராத கருத்துகளை வெளியிடும் யாராக இருந்தாலும், எரித்துக் கொலை செய்யும் முறை பார்ன்ங்-அட்-ஸ்டேக் [burning at the stake] முறையாகும். இதில் பெரிய விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். உதாரணத்திற்கு[7], ஜியோட்ரானோ புரோனோ [Giordano Bruno c. 1548-1600] என்ற விஞ்ஞானி, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றதால் எரித்துக் கொல்லப்பட்டார்.  அன்டோய்னே லவாஸ்சியர் [Antoine Lavoisier 1743-1794], ஆக்ஸிஜன் தான் மனிதன் உயிர் வாழமுடிகிறது என்றதால் கொல்லப்பட்டார். அதேபோல, மைக்கேல் சர்விடஸ் [Michael Servetus 1511-1553] ரத்த சுழற்சிக்கு இருதயம் தான் காரணம் என்று எடுத்துக் காட்டியதற்காக கொல்லப்பட்டார்.

Burning at stake-1

மதத் தண்டனைகள் [Inquistion உட்பட]: இன்குஸிஷன் என்பது, பைபிளுக்கு ஒத்துவராத மற்றும் கிருத்துவ மதம் அல்லாதவர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறை. மதவிரோதிகளை, தூஷணவாதிகளை, குற்றம் புரிந்தவர்களை சிலுவையில் அறைந்து கொல்லும் முறை குரூஸிபிக்ஷன் எனப்படும். லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கிருத்துவ மதவெறியர்களால் அஸ்டெக் (Aztec), மாயா (Maya), இன்கா (Inca) போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவில், கோவாவில் கிருத்துவர்கள் இத்தகைய முறியில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றிருக்கின்றனர்[8]. மதவிரோதிகளை, தூஷணவாதிகளை, யாதாவது ஒரு ஆயுதத்தால், வெறியுடன் பலமுறை அடித்து, வெட்டிக் கொல்வது ஹாக்கிங். கல்லால் அடித்து / கல்லடித்துக் கொலை செய்வது புனிதமான கொலையாகக் கருதப்பட்டு வந்தது, வருகிறது, இன்றும் நடக்கிறது. காஷ்மீரத்தில் கல்லடி ஜிஹாத் / கலாட்டா நடந்து வருகிறது. Massacre, slaughter, mass murder, mass execution, extermination, carnage, முதலியவையெல்லாம் மக்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறைகள். இவ்விதமான கொலைகள் தான் திட்டமிட்டு செய்வது, குரூரமானது, குறிப்பிட்ட நம்பிக்கையாளர்களுக்கே உரித்தானது. முகமதிய / இஸ்லாத்தில் “ஜிஹாத்” என்ற முறையில் காபிர்களை பலமுறைகளில் கொன்று வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

27-07-2018

Duluth lynching- 1920, interpreting in India

[1] Asian Age, The story of India and its lynch mobs, Aakar Patel, Published : Jul 1, 2018, 5:37 am IST; Updated : Jul 1, 2018, 5:36 am IST

Aakar Patel is Executive Director of Amnesty International India. A former editor, Patel is a senior columnist and a translator of Urdu and Gujarati works.

http://www.asianage.com/opinion/oped/010718/the-story-of-india-and-its-lynch-mobs.html

[2]  Lynching – (of a group of people) kill (someone) for an alleged offence without a legal trial, especially by hanging.

Wikipedia- Lynching is a premeditated extrajudicial killing by a group. It is most often used to characterize informal public executions by a mob in order to punish an alleged transgressor, or to intimidate a group.

[3] The origins of the word “lynch” are obscure, but it likely originated during the American revolution. The verb comes from the phrase “Lynch Law”, a term for a punishment without trial. Two Americans during this era are generally credited for coining the phrase: Charles Lynch and William Lynch, who both lived in Virginia in the 1780s. Charles Lynch has the better claim, as he was known to have used the term in 1782, while William Lynch is not known to have used the term until much later. There is no evidence that death was imposed as a punishment by either of the two men. In 1782, Charles Lynch wrote that his assistant had administered “Lynch’s law” to Tories “for Dealing with Negroes, &c.”

[4] In the United States, lynchings of African Americans, typically by hanging, became frequent in the South during the period after the Reconstruction era and especially during the decades on either side of the turn of the 20th century. https://en.wikipedia.org/wiki/Lynching

[5] http://www.asianage.com/opinion/oped/010718/the-story-of-india-and-its-lynch-mobs.html

[6] The act of putting to death by nailing or binding to a cross. Among the modes of Capital Punishment known to the Jewish penal law, crucifixion is not found; the “hanging” of criminals “on a tree,” mentioned in Deut. xxi. 22, was resorted to in New Testament times only after lapidation (Sanh. vi. 4; Sifre, ii. 221, ed. Friedmann, Vienna, 1864). Crucifixion by Kaufnann Kohker and Emil G. Hirsh, for more details see at: http://www.jewishencyclopedia.com/articles/4782-crucifixion

[7] ஏனெனில், குறிப்பாக தலைசிறந்த விஞ்ஞானிகள் இவ்வாறு கொல்லப்பட்டனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அஸ்டெக், மாயா, இன்கா போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்ற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

[8] Inquisition in Goa, Goa Inquisition போன்ற புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.