Archive for the ‘சமத்துவ பொங்கல்’ Category

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள், எதிர்ப்பது, “நம்ம ஊர் பொங்கலா,” பிஜேபியா, முருகனையா? கலவரம் மூட்டும் திட்டத்தில் துலுக்கர் (2)

ஜனவரி 12, 2021

எஸ்.டி.பி.., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள், எதிர்ப்பது, நம்ம ஊர் பொங்கலா,  பிஜேபியா, முருகனையா? கலவரம் மூட்டும் திட்டத்தில் துலுக்கர் (2)

இப்பொழுது 2021ல் பாஜக புறநகர் மாவட்ட அலுவலகம் சூறையாடப்பட்டது (10-01-2021): இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மேலமடை போலீஸ் சிக்னல் அருகே உள்ள பாஜக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் 6 பேர் கொண்ட கும்பல் 10-01-2021, ஞாயிறு அன்று மாலை உள்ளே புகுந்து அங்குள்ள சேர், டேபிள்கள் மற்றும் பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் எல்.முருகன்ஆகியோரது புகைப் படங்களை அடித்து சேதப்படுத்தினர். மதுரை அண்ணா நகர் காவல்உதவி ஆணையர் லில்லி கிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன் நேரில் சென்று தாக்குதலின்போது அங்கிருந்த பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரனிடம் விசாரித்தனர். கட்சி அலுவலகம் மற்றும் சிவகங்கை சாலையில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை சேகரித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அக்கட்சியினர் கட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் செய்தனர். செய்தியாளர்களின் பலவேறு கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், ‘மதுரையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதன் பின் சில விஷமிகள் உள்ளனர், பயங்கரவாதிகள் தேச விரோதிகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்[1], இப்போதே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்[2].

முருகனை, ஆதிதிராவிட ஆணையின் துணைத் தலைவராக இருந்தாலும், பிஜேபி தலைவராக இருப்பினும், துலுக்கர் எதிர்ப்பது ஏன்?: இப்பொழுதைய அரசியல் சூழ்நிலையில், இக்கேள்வி முக்கியமாகிறது. முருகன் ஒரு எஸ்.சி என்று யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை. திருமா வளவன் போன்ற பிம்பத்தை உருவாக்க முடியவில்லை. இந்துத்துவவாதியாக மாறிவிட்டதால், அந்த ஜாதிய அடையாளம் போய்விட்டது போன்ற நிலை ஏற்பட்டுள்லது. அதனால் தான், மற்ற கட்சிகள் முருகனை தைரியமாக எதிர்க்கின்றன கூட்டணி என்ற வலைமற்றும் வளையத்திலிருந்து, அதிமுக லாவகமாக தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது எனலாம். சசிகலா வைத்து, அரசியல் செய்யலாம், ஆனால், ஊழல் என்பதை மறந்து செய்ய வேண்டும். அரசியலில், இதெல்லாம் சகஜமப்பா என்றால், அதிமுக ஒன்றாகலாம், பிஜேபியுடன் கூட்டு வைக்கலாம். அப்பொழுது, ஒழுக்கம் சுத்தம், தர்மம், நியாயம் என்றெல்லாம் பிஜேபி பேச முடியாது. பிஜேபி தனித்து நின்றாலும் யாருக்கும் லாபமில்லை. பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் இரண்டு மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ஆக, பிஜேபியுடன் கூட்டு வைக்கும் திராவிட கட்சி அத்தகைய பேரத்தில் தான் ஈடுபடும். அந்நிலையில், திராவிட கட்சிகள் தங்கள் பலம் பெருகுவதாக நினைத்துக் கொண்டால், தகவல் கிடைத்தால், தனித்து நிற்க திட்டம் போடலாம். ஆனால், 2024 வரை பிரச்சினை வரக்கூடாது. நவீன் பட்நாயக், மம்தா போன்ற வலுவுள்ள தலைவராக மாறினால் (தேர்தலில் அதிக இடங்களில் ஜெயித்தால்), அவ்வாறு இருக்கலாம்.

பிஜேபியின் கண்டுகொள்ளா மனோபாவம்அரசியல் சமரசம்: பிஜேபி “வேல் யாத்திரை,” என்று ஆர்பாட்டம் செய்ததோடு சரி, பிறகு, அமைதியாகி விட்டார்கள். கிறிஸ்தவ பாதிரிகள், பிஜேபியில் சேர்ந்தார்கள் என்று ஆர்பாட்டம் செய்தார்கள். ஆனால், அடுத்த நாள், ஆளுக்கு ஆள், மறுப்புத் தெரிவித்து, விலகி விட்டார்கள். அதிமுகவுடன், கூட்டணி கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சி-அதிகாரத்தை வைத்து, அப்படியே அமுக்கி விடலாம், என்ற மமதை தான் வெளிப்படுகிறது. முறையாக, தமிழகத்தில் நிலையாக, இந்த்துத்துவ சித்தாந்தத்துடன் நிலைக்க வேண்டும், மக்களை கவர்ந்து, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற போக்கே காணப்படுவதில்லை. அமீத் ஷா வருவார், எல்லாமே மாறிவிடும், இல்லை, சசிகலா வெளியே வந்தால், எல்லாம் சரியாகி விடும் போன்ற யேஷ்யங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், இத்தகைய, கிறிஸ்தவ-துலுக்க திட்டங்கள் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் போலும்.. இவர்களால் அத்தகைய மேடைகள் போட்டு, இந்து ஆதரவையும் அல்லது நாத்திக-கிறிஸ்தவ-துலுக்க எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை, அரசியல், கூட்டணி, பதவி ஆசை போன்றவற்றால் அடங்கி, சுருங்கிக் கிடக்கின்றனர். இந்துத்துவம், இந்துத்த்வவாதங்கள், இந்துத்துவவாதிகள் வாய்சொற்களில், சமூக ஊடகங்களில் வீராப்பு காட்டுவதோடு சரி. உருப்படியாக எதையும் செய்வதில்லைமரசியல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

அரசியல் சூழலில் இத்தகைய நிகழ்வுகள் காட்டுவது என்ன?: பிஜேபி, தமிழகத்தில் நிலையான அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்றால், எல்லா விசயங்களையும் அலசிப் பார்க்க வேண்டும். இப்பிரச்சினையைப் பொறுத்த வரையில், “நம்ம ஊர் பொங்கல்”  விசயத்திலும், ஏன் பிஜேபிக்கு எதிராக இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

  1. ஆக, எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர்[3] என்பதில், அரசியலையும் மீறிய செயல்திட்டம் இருப்பதை அறியலாம்.
  2. முஸ்லிம்கள் / துலுக்கர் எதிர்ப்பது வேறு, இவ்வாறு மற்ற கட்சிகளும் சேர்ந்து எதிர்ப்பது வேறு.
  3. மசூதி இருப்பதால், அத்தெரு வழியாகச் செல்லக் கூடாது என்பதும், துலுக்கரின் திட்டம் என்றே ஆகிறது.  கலவரம் உண்டாக்க போட்ட திட்டம் தான்.
  4. பொதுத் தெருக்களில் யாரும் நடக்கக் கூடாது, செல்லக் கூடாது என்பதே இருக்கும் பல சட்டப் பிரிவுகளை மீறும் குற்றமாகிறது. ஆனால், போலீஸார் அதனை கண்டுகொள்ளவில்லை. இங்கு போலீஸார் ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளனர்.[4]
  5. பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பள்ளிப் பிள்ளைகள், ஒருவர் மீது ஒருவர் கோள் சொல்லும் வகையில் உள்ளது. ஏனெனில், துலுக்கரின் கலவர போக்கு தெரிந்த விசயமாகும்.
  6. பிஜேபியும் புதிய-புதிய விதங்களில் தேர்தல் நேரங்களில் செய்து வருகின்றது. குறிப்பிட்ட சித்தாந்தம் இல்லாமல், எல்லா முறைகளையும் பின்பற்றி வருகிறது. சில நேரங்களில் செக்யூலரிஸம், பல நேரங்களில் சமத்துவம், மறுபடியும் கம்யூனலிஸம், இந்துத்துவம், மற்ற மதத்தினருடம் சமரசம் என்ற குழப்பவாத போக்குடன் இருக்கிறது. இதனால், தேவையில்லாத விமர்சனங்களுக்கு உள்ளாகிறது.
  7. மற்ற திராவிட கட்சிகள், இதை விட மோசமான, குழப்பங்களை செய்தாலும், கண்டுகொள்வதில்லை, ஏனெனில், பார்ப்பனியம்-சமஸ்கிருதம்-இந்தி என்று எதர்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகி விடுகின்றன.
  8. இப்பொழுது, அதிமுகவே வேறு விதமாக பேசி வருகிறது. அமித் ஷா முன்பு பேசியது மறந்து விட்டது போலாகி விட்டது.
  9. இவையெல்லாம், பிஜேபிக்கு சாதகமாக இல்லை.  இதனால் தான், சிறிய கட்சிகள், திருமா வளவன் போன்ற தலைவர்கள் பிஜேபியை தாக்க, மற்ற முறைகளை கையாளுகிறார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் பிஜேபிகாரர்கள் விழுகிறார்கள்.
  10. தனித்துவத்தை நிலைநாட்டி, தனது பலத்தை மெய்ப்பித்தால் ஒழிய, மக்களின் நம்பிக்கையை எந்த கட்சியும் பெற முடியாது.

© வேதபிரகாஷ்

11-01-2021


[1] NEWS18 TAMIL, நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் ஜெ.பி. நட்டாஎல்.முருகன், LAST UPDATED: JANUARY 11, 2021, 2:23 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/jp-nadda-attends-namma-ooru-pongal-sur-392479.html

[3] Times of India, Muslims object to BJP’s Namma Ooru Pongal campaign at Thirupalai in Madurai, Devanathan Veerappan | TNN | Updated: Jan 10, 2021, 17:59 IST.

Tension prevailed in Thirupalai in Madurai city as a few Muslims from the area objected to the procession carried out by BJP as part of the party’s Namma Ooru Pongal campaign on Sunday. A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated. He was received by his partymen and was taken to the celebration venue in the morning. While crossing a mosque in Thirupalai, a few muslims gathered and objected to the loud music that was played during the procession. Tension escalated when someone threw footwear at the crowd. A car belonging to a BJP member was damaged. A team of policemen, who were posted for security reasons intervened and brought the situation under control.

[4] A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated.

https://timesofindia.indiatimes.com/city/madurai/tamil-nadu-muslim-community-members-in-madurai-object-bjps-pongal-celebration-procession/articleshow/80199170.cms

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள், எதிர்ப்பது, “நம்ம ஊர் பொங்கலா,” பிஜேபியா, எதை? (1)

ஜனவரி 11, 2021

எஸ்.டி.பி.., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள், எதிர்ப்பது, நம்ம ஊர் பொங்கலா,  பிஜேபியா, எதை? (1)

நம்ம ஊர் பொங்கல்” என்று பிஜேபி ஆரம்பித்தது: தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியின் சார்பில் “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில், பிஜேபி இவ்வாறு கொண்டாடுகிறது என்று தெரிகிறது, ஏனெனில், சென்ற வருடத்தில், இத்தகைய ஆர்பாட்டங்கள் எல்லாம் இல்லை. “சமத்துவ பொங்கல்,” என்று திமுக ஆர்பாட்டம் செய்து வருகிறது, இருப்பினும், நாத்திகத்தால், அதன் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் 09-01-201 அன்று நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருப்பாலை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் எல். முருகன் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். மதுரை திருப்பாலையில் மந்தை திடல் உள்ளது. இதையொட்டி, அப்பகுதியில் பாஜக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருந்தன[1]. ஆனால் பாஜகவின் கொடிகளை 09-01-201 அன்று இரவு அப்புறப்படுத்தி இருப்பதும், சுவர் விளம்பரங்களை அழித்திருப்பதும் தெரியவந்தது[2]. இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மந்தை திடல் பகுதியில் போலீஸார் 10-01-2021 அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மாட்டு வண்டியில் வந்த பிஜேபிமுருகனை SDPI, விடுதலை சிறுத்தைகள், திமுகவினர் எதிர்த்து கோஷமிட்டது: இந்நிலையில் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை 11 மணி அளவில் பள்ளிவாசல் சாலை வழியாக கார்களில் மந்தைத் திடலுக்குச் சென்றனர். அவர் மாட்டு வண்டியில் வந்தார். அவர் வரும் வழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திமுகவினர் திரண்டு எல். முருகனை கடுமையாக விமர்சித்து முழக்கம் எழுப்பினர். பிறகு அங்கு வந்த போலீசார் அவர்களை  கட்டுப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து பழமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்றின் வழியாக எல். முருகன் மாட்டுவண்டியில் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  இதற்கு இஸ்லாமியர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கார்களை வழிமறித்து கல் வீசி தாக்கினர்.  இதில் பாஜக நிர்வாகி ஹரிஹரன் உட்பட பலரது கார்கள் சேதம் அடைந்தன.  இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் பாஜகவினருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது,

பரஸ்பர குற்றச்சாட்டுகள் வைத்தது: அவரை நிர்வாகிகள் மாட்டு வண்டியில் அழைத்து ஊர்வலமாக சென்றனர்[3]. திருப்பாலை பெரியார் நகர் பகுதியில் எல்.முருகன் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர்[4]. மேலும் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்[5]. இது குறித்து அவர்கள் கூறுகையில், பா.ஜ.க.வினர் அத்துமீறி பள்ளிவாசல் முன்பு ஒலிபெருக்கி கட்டியதாகவும், அதனை தட்டி கேட்டபோது பிரச்சினையில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்தனர்[6]. ஊர்வலமாக சென்றவர்கள் பள்ளிவாசல் மீது செருப்பை வீசியதாகவும், அவதூறாக பேசியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர்[7]. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்[8]. இதற்கிடையே காலையில் இரு தரப்பினரும் கல், காலணிகளை வீசியும் மோதியதாக கூறப்படுகிறது[9]. இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்[10]. இவையெல்லாம் உண்மையா-பொய்யா என்று தெரியவில்லை, ஊடகங்களும் உறுதியாக சொல்லவில்லை. போலீஸாரும், விசாரித்து உண்மை அறிந்தார்களா என்று தெரியவில்லை.

தெருவில் மசூதி உள்ளதால் செல்லக் கூடாது என்று தடுத்தது: இரு தரப்பினரையும் போலீஸார் சமரசம் செய்தனர். இதையடுத்து எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரின் வாகனங்கள் வேறு வழியாக மந்தைத் திடலுக்குச் சென்றன. இதில், பிஜேபி தோற்று விட்டதை அறிந்து கொள்ளலாம். விழா முடிந்து பள்ளி வாசல் வழியாக பாஜகவினர் திரும்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என இஸ்லாமியர் கோரிக்கை விடுத்தனர். எனவே மூன்று மாவடி வழியாக பாஜகவினர் திரும்பிச் செல்ல போலீஸார் ஏற்பாடு செய்தனர். இது அந்த தோல்வியை உறுதி செய்கிறது. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், திருப்பாலை பகுதியில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தான் உண்மையான, தீவிரமான பிரச்சினை வருகிறது. இவ்வாறு, குறிப்பிட்டத் தெருவில், சாலையில் போகக் கூடாது என்றெல்லாம் சொல்லவோ, தடுக்கவோ, மிரட்டவோ யாருக்கும் உரிமை கிடையாது. உண்மையில் அவ்வாறு மிரட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மசூதி உள்ளது, அதனால், அவ்வழியாக செல்லக் கூடாது என்பது அபத்தமானது. இது பிள்ளையார் ஊர்வலம்-கலவரம் போன்ற பிரச்சினை உண்டாக்கும் போக்காகத் தெரிகிறது. அதாவது, பயமூட்டுவதில், மிரட்டுவதில், கலவரம் மூட்டுவதில், துலுக்கரின் திட்டமுறைகளை அறிந்து கொள்ளலாம். பயமூட்டுதல் என்பது சிறந்த வழி என்பது துலுக்கர்களுக்குத் தெரிந்துள்ளது.

முஸ்லிம்கள்/துலுக்கர் எப்பொழுதும் கலவரம் செய்யத் தயாரக இருப்பது: தலித்–முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன? என்ற தலைப்பில், அப்பொழுது பதிவு செய்தேன். இதே எல். முருகன் தான் அப்பொழுது, தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார். கலவரம் நடந்த இடங்களுக்குச் சென்று பார்த்தார். இன்று அவருக்கே, இந்த கதி ஏற்பட்டுள்ளது!

  • ஜனவரி 2016ல் பொங்கல் சமயத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது[1]. காணும் பொங்கலையொட்டி நடந்த கலைநிகழ்ச்ச்சியில் தகராறு ஏற்பட்டதால், மோதல் ஏற்பட்டது. காவலர்களும் தாக்கப்பட்டனர்.
  • டிசம்பர் 2017ல் தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது.
  • ஏப்ரலில் [24—04-2018] பிணம் எடுத்துச் சென்றபோது கலவரம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது[7]. ஏப்ரலில் “காலனி தெரு”வை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (62) இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது.
  • மே 2018 [05-05-20118] மாதத்தில் நடந்த கலவரம்: இந்நிலையில் 05-05-2018 அன்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். “அன்று பிணம் என்றும் பார்க்க்காமல், ஈவு-இரக்கம் இல்லாமல், தடுத்தாயே, நீ எப்படி இன்று இந்த வழியாக செல்கிறாய், வேறு வழியாகச் செல்ல வேண்டியது தானே?,” என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது.

© வேதபிரகாஷ்

11-01-2021


[1] தமிழ்.இந்து, பொங்கல் விழாவுக்கு எதிர்ப்பு: மதுரையில் பாஜகவினர் கார்கள் மீது கல் வீச்சு; புறநகர் மாவட்ட அலுவலகம் சூறை, Published : 11 Jan 2021 03:24 AM Last Updated : 11 Jan 2021 07:38 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/621200-bjp-pongal-festival.html

[3] ‘நக்கீரன்,நம்ம ஊரு பொங்கல்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பா..எல்.முருகனுக்கு எதிர்ப்பு!, அண்ணல், Published on 10/01/2021 (19:01) | Edited on 10/01/2021 (19:19).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/opposition-bjp-l-murugan-who-came-attend-namma-uru-pongal-program

[5] மாலைமலர், பாஜக தலைவர் முருகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்பரபரப்பு, பதிவு: ஜனவரி 11, 2021 09:27 IST.

[6] https://www.maalaimalar.com/news/topnews/2021/01/11092753/2245468/Tamil-News-protest-against-Madurai-BJP-Murugan-vist.vpf

[7] ஏசியா.நெட்.நியூஸ், எல்.முருகனை நேருக்கு நேர் எச்சரித்த திமுக, விடுதலை சிறுத்தை தொண்டர்கள்.. மதுரையில் பரபரப்பு.., By Ezhilarasan Babu, Chennai, First Published Jan 11, 2021, 11:21 AM IST

[8] https://tamil.asianetnews.com/politics/dmk-and-vck-cadres-warn-l-murugan-face-to-face-excitement-in-madurai–qmr9ma

[9] தினத்தந்தி, பா... தலைவர் முருகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்பா... அலுவலகம் சூறையாடப்பட்டதால் பரபரப்பு, பதிவு: ஜனவரி 11,  2021 04:38 AM.

[10] https://www.dailythanthi.com/News/State/2021/01/11043824/BJP-For-the-visit-of-Chairman-Murugan-Stir-in-protest.vpf