Archive for the ‘தியாகராஜர்’ Category

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது, பாடகர்கள் எதிர்ப்பு, அரசியல்வாதிகள் ஆதரவு, அரசியலாக்கப் பட்டு, சித்தாந்தமும் சேர்ந்த நிலை (2)

மார்ச் 25, 2024

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது, பாடகர்கள் எதிர்ப்பு, அரசியல்வாதிகள் ஆதரவு, அரசியலாக்கப் பட்டு, சித்தாந்தமும் சேர்ந்த நிலை (2)

சர்ச்சைக்குட்பட்ட பாடகராக இருந்து வந்துள்ளார்: டி.எம்.கிருஷ்ணா, ஒரு பாடகர் என்பதை விட, ஏதோ அரசியல்வாதி என்ற முறையில், சமீபத்தில் மக்கள் அவரை காண ஆரம்பித்துள்ளனர். கர்நாடக பாடகர் என்பதை விட, ஒரு நவநாகரிகமான, ஜாலியான பேர்வழி போன்று தான், அவரது செயல்கள், பேச்சுகள், நையாண்டி விமர்சனங்கள் முதலியன் இருந்து வருகின்றன. அவரது அத்தகைய வீடியோக்களும் திகைப்பாக இருக்கின்றன. கர்நாடக பாடகர்கள் சினிமாவில் பாடினாலே கொஞ்சம் குறைவானது என்ற எண்ணமும் இருந்தது. அந்நிலையில், இவரது போக்கு கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாகவே இருந்து வந்துள்ளது. ஏதோ தான் முற்போக்குவாதி என்று காட்டிக் கொள்ள அவ்வாறெல்லாம் பேசினாலும், தொடர்ந்து செய்யும் விமர்சனங்கள் எல்லைகளை மீறித்தாண் உள்ளது.

ஜேம்ஸ் வசந்தன் ஆதரித்து பதிவு செய்தது; இந்நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த விவகாரத்தில் டிஎம் கிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்[1]. இதுதொடர்பாக தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர்[2], “கர்நாடக சங்கீத இசை உலகின் உயரிய விருதானசங்கீத கலாநிதிஇந்த ஆண்டு பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு சங்கீத உலகத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது. கிருஷ்ணாமிகப்பெரிய ஞானஸ்தன்; அபாரமான கலைஞர்என ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிற சங்கீத உலகம் இந்த விருது விஷயத்தில் இரண்டாகப் பிரிகிறதென்றால் அது இசையின் அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகிறதுதானே?? ”வேறென்ன பிரச்சனை? அவருடைய சமூகநீதிப் பார்வையும், அதைப் பளீரென்று உரத்த குரலில் அஞ்சாமல் சொல்லும் இயல்புந்தான். கடந்த சில ஆண்டுகளாக அவர் முன்னெடுத்து வரும் சில கோட்பாடுகள்தான் காரணம். ’சபாக்களில் பிராமண ஆதிக்கம் இருக்கிறது; அதைக் களைய வேண்டும். சாஸ்திரீய சங்கீதத்தை வெகுஜனத்துக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.’ என்று அவர் வெளிப்படையாகக் சொன்னதுதான் இசை உலகத்தில் பெரிய பூதத்தைக் கிளப்பிவிட்டு, பாரம்பரியத்தை  உலுக்கி, பலரது சினத்தைத் தூண்டியது.”

ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து விமர்சித்தது: ”யாரை மேல்மட்டச் சமூகம் தீண்டாமல் ஒதுக்கி வைத்ததோ அவர்களோடு சேர்ந்து ஆல்காட் குப்பத்திலும், சேரிகளிலும் கர்நாடக இசையை எளிமைப்படுத்திப் பாடினார். மூன்றாம் பாலினத்தவரோடு சேர்ந்து ஒரு கச்சேரி நடத்தினார். இதைப்போல பல கலைகலாச்சாரப் புரட்சிகளைத் தொடர்ந்து செய்கிறார். 21-ம் நூற்றாண்டு பாரதியைப் பார்ப்பது போல் இருக்கிறதா? இவரும் பிராமணர்தான்!” ”ஆனால் பிராமணியத்தின் தவறான சில பகுதிகளைக் களைய முயற்சிக்கிறவர். இன்றைய சங்கீத உலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஞ்சனிகாயத்ரி சகோதரிகள் டி.எம். கிருஷ்ணா தலைமையில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிற இசை விழாவைப் புறக்கணிப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.”  ”அந்த அறிக்கையில், டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்து பேசியிருக்கிறாராம். அதனால் அவர் ரொம்ப ஆபத்தானவராம். பாடகி சின்மயி இவர்களது அறிக்கைக்கு எதிர் அறிக்கை விட்டிருக்கிறார். ’ஆன்மீகத்தின், சங்கீத உலகத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று இப்போது கொதிக்கிறீர்களேஇதே சங்கீத உலகில் பல பெரிய மனிதர்கள், வித்வான்கள் தங்களிடம் இசை பயில வரும் பல குழந்தைகளின் கற்பை சூறையாடுகிறார்கள், காப்பாற்றுங்கள் என்று ‘Me Too’ இயக்கத்தில் நாங்கள் குரலெழுப்பி கூக்குரலிட்டபோது எதுவுமே நடக்காதது போல அமைதி காத்தீர்களே. அப்போது உங்கள் பொறுப்பும், அக்கறையும் எங்கே போனது?,’ என்று கேட்டிருப்பதாக ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார்[3]. இந்த விவகாரத்தில் பலரும் டிஎம் கிருஷ்ணாவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது[4].

கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணாவுக்கு ஆதரவு தெரிவிப்பது: அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார். ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது. பெரியார் பிராமணர்கள் கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தை திணிக்க நினைத்தவர் பெரியார். ஏற்கெனவே சாரு நிவேதிதா இவரைப்பற்றி நன்றாகவே அலசி எழுதியுள்ளார்[5].

பிராமண விமர்சனமாக மாறி, தூஷணத்தில் முடிந்துள்ள நிலை: விமர்சனத்தை விமர்சிக்கும் விமர்சனங்கள் ஜாதியம், செக்யூலரிஸம், சமூதாயம் என்றெல்லாம் பேசுவதை கவனிக்கலாம்[6]. மதவாத கண்ணோட்டத்திலும், சாதிய ஏற்றத் தாழ்வுகளை கட்டி அழும் பிற்போக்கு கருத்து நிலையில் ரஞ்சனி காயத்திரி சகோதரிகள் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மீது காழ்ப்புணர்வை கருத்துக்களாக கொட்டி வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது[7]. இப்படி கம்யூனிஸவாதிகளிடமிருந்து ஆதரவு வந்துள்ளதையும் கவனிக்கலாம். ஆக ஏற்கெனவே அரசியலாக்கப் பட்டது வெளிப்படுகிறது. சித்தாந்த ரீதியில், பிறகு,, கட்சிகள் இணைவது, நிச்சயமாக இசையின் மீதான ஆர்வம் இல்லை. ஆக, இப்பொழுது, இந்த சர்ச்சை முடிவாக,பிராமணர்களை விமர்சிப்பது, எதிர்ப்பது, தூஷிப்பது என்ற நிலையில் முடிந்துள்ளது.

© வேதபிரகாஷ்

23-03-2024


[1] குமுதம், TM Krishna: ”TM கிருஷ்ணாவின் சமூகநீதிப் பார்வை தான் பிரச்சினை..?” களமிறங்கிய ஜேம்ஸ் வசந்தன்!, Mar 21, 2024 – 17:33

[2] https://kumudam.com/TM-Krishna:-James-Vasanthan-supported-to-TM-Krishna-for-Sangita-Kalanidhi-award-issue

[3] தமிழ்.பிஹைன்ட்.த.டாக்கீஸ், சங்கீத உலகத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று இப்போது கொதிக்கிறீர்களேடி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது சர்ச்சை குறித்து ஜேம்ஸ், By Rajkumar- மார்ச் 23, 2024

[4] https://tamil.behindtalkies.com/james-vasanthan-over-tm-krishna-issue/

[5]  சாரு நிவேதிதா, டி.எம். கிருஷ்ணா, March 22, 2024; https://charuonline.com/blog/?p=14480

[6] தினகரன், இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு; டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கி இருப்பது பொருத்தமானது: முத்தரசன் வரவேற்பு, March 22, 2024, 5:09 pm

[7] https://www.dinakaran.com/caste-inequality-dm-krishna-award-mutharasan-reception/