Archive for the ‘மடாதிபதி’ Category

குரு, குருபூர்ணிமா, வியாஸ பூர்ணிமா: இந்துக்களின் ஆசிரியர் நாள் – கொண்டாட வேண்டி யதினம்!

ஜூலை 4, 2023

குரு, குரு பூர்ணிமா, வியாஸ பூர்ணிமா: இந்துக்களின் ஆசிரியர் நாள் கொண்டாட வேண்டிய தினம்!

குரு பூர்ணிமா, வியாஸ பூர்ணிமா: குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (ஜூன்-சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். பொதுவாக எல்லா புராணங்களையும் வியாசர் எழுதினார், தொகுத்தார் என்றதால், அவரை குருவாக பாவிக்கப் படுகிறது. இது இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா என்ற நாடுகளில் கொண்டாடப் படுகிறது. அதாவது, பழங்கால இந்தியா – பாரதம் என்ற போகூள பரப்பில் இந்து மதம் / சனாதனம் பரவியிருந்த நிலையில் இருந்த பாரம்பரியத்தைக் காட்டுகிறது. இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு. மடங்களிலும் தத்தமது முதல் மடாதிபதியை முதல் குருவாகக் கொண்டு, அந்நாளில் போற்றி ஆராதனை செய்வர்.

ஜைனபௌத்தர்களுடனும் தொடர்ந்த குரு பூர்ணிமா: குரு மாறலாம், குருவை மாற்றலாம், ஆனால், அந்த அந்தஸ்து-போற்றுதல் மாறாது. சித்தாந்த மரபிலும் ஜைனர், பௌத்தர், மற்ற பிரிவுகள் தத்தம் மதத்தலைவர்களை குருவாக பாவித்து கொண்டாடி வருகின்றனர். வேதங்களை மறுத்து, ஆனால் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு வளர்ந்தவர்களும் இந்த பாரம்பரியத்தைப் போற்றி வளர்த்தனர். ஏனெனில், அது மக்களுடன் இருந்தது, தொடர்ந்தது. சைவ சித்தாந்த பிரிவுகளிலும்,, தோற்றுவித்த குரு, மடாதிபதி இவர்களை நினைவு கொண்டு, குரு பூர்ணிமா அன்று போற்றுவர். மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

வடவிந்தியாதென்னிந்தியா சைவம் சித்தாந்தம், காலநிலை வேறுபாடு: சைவசித்தாந்தம் வடவிந்தியாவிலிருந்து, தன்னிந்தியாவிற்குப் பரவியதால் இடைக்காலத்திளல்  மற்றும் பிறகு, குருபரம்பரை வித்தியாசப் பட்டது. காஷ்மீர சைவம் கர்நாடகா வழியாக தமிழகத்தில் நுழைந்ததாகத் தெரிகிறது. வீரசைவம் பசவேசஸ்வரரின் தோற்றம், ஜைனர்களுக்கு எதிராக அவர் செய்ய வேண்டியநிலையில் ஏற்படுத்திய சமுதாய சீர்திருத்தம் முதலியன கருத்திற்கொள்ளவேண்டும்.  மடங்கள் பெருகியபோது,  மடத்திற்கு மடம் சித்தாந்தம், சம்பிரதாயங்கள்  சிறிது மாறியது. தனித்தன்மை காட்டிக் கொள்ளவும் அவ்வாறான வேற்றுமைகளை சிறப்பாக்க / சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டன.

மடங்கள், குருக்கள் சம்பிரதாயங்கள் மாற்றம்-வளர்ச்சி: மடங்கள் பெருகிடபோது, மடங்களின் குரு, குரு பரம்பரை, சம்பிரதாயங்கள் முதலியனவு மாறின. பாகேஷர், புஜங்கேசர், அர்த்தநாரீஸ்வரர், அனந்தேசர், திரிமூர்திசர், ஸ்வேதர், மஹாகாலீஸ்வரர், லோஹிதீஸ்வரர், ஆஜேசர், சோமேஸ்வர், சம்வர்த்தகேச்வரர், மஹாசேனர், குரோதேசர், சுக்ஷ்மேஸ்வரர், பாரபூதேஸ்வரர், ஸ்டானேஸ்வரர், பௌதிகீஸ்வரர், சத்யோஜடேஸ்வரர், அனுகிரஹேஸ்வரர், சகலண்டேஷ்வரர் என பல குருமார்கள், மடாதிபதிகள் பெயர்கள் விளங்குகின்றன. இவர்களின் சீடர்கள் என்று இருந்து, மடங்களில் அவர்களை குருவாக பாவித்து, குரு பூர்ணிமா கொண்டாடுகின்றனர். அவரவர் குரு போதனைகளுக்கு ஏற்ப, அவர்களது சீடர்கள், பின்பற்றுபவர்கள், நம்பிக்கையாளர்கள் அவ்வாறே பின்பற்றினர்.

சைவத்தில், சைவ சித்தாந்தத்தில் வளர்ந்த மடங்கள், குருக்கள் சம்பிரதாயங்கள் மாற்றம்வளர்ச்சி: பொதுவாக, சைவசித்தாந்த மரபு இவ்வாறு பல மூலங்களிலிருந்து, பலவிதமான குருபரம்பரைகள் சொல்லப் பட்டு வளர்ந்தன.

சிவன் >நந்தி

சிவன்>ஸ்கந்தன்>கோரக்ஷநாதன்>நீலகண்ட நாயனார்

சிவன்>ஃப்ரேணுகா சிவாச்சாரியார்>காலாமுக ருத்ரமுனி ஆச்சாரியார்>

சிவனனபிநவ குப்தன்>சங்கீதார்ய டுபர்

சிவன்>பசவேஸ்வரர்>வேதாந்த சைவ சித்தாருடு

>>>>>>>>>>>>>>இவ்வாறு பல பாரம்பரியங்களுடன் பல மடங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றனர்.

19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட குழப்பங்கள், புதிய நூல்கள் உருவாக்கம்: ஆங்கிலேயர் மாநிலங்களில் அங்கங்குள்ள பண்டிதர்களை, எழுத்தளர்களை, துபாஷிகளை வைத்து கைஃபீயத்து, வரலாறு, சரித்திரம் என எழுத ஆரம்பித்தனர். அவ்வாறு பல நூல்கள் / புத்தகங்கள் உருவாக்கப் பட்டன. ஓலைச் சுவடிகள் உருவத்திலும் எழுதப் பட்டன. அவ்வாறு மத நூல்களும் உண்டாக்கப் பட்டன:

  • 19ம் நூற்றாண்டில் பல சைவ மடாதிபதிகள், தாங்கள் மற்றவர்களை விட வேறு பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள பரம்பரையை பலவாறு மாற்றிக் கொண்டனர்.
  • 20ம் நூற்றாண்டில் தனிதமிழ் இயக்கம், திராவிட சித்தாந்தம், பிராமணர் அல்லாத மற்றும் எதிர்ப்பு கொள்கை போன்றவற்றால், மேலும் திரிபுவாதங்களுடன் புத்தகங்கள் எழுத பட்டன.
  • 21ம் நூற்றாண்டில், சைவர் சிறுபான்மையினர் என்று ஆரம்பித்து, இந்துக்கள் அல்லர் என்ற கூப்பாடு வரை நிலைமை மோசமாகி அடைந்து நின்றுள்ளது.

நால்வர் என்ற சம்பிரதாயம் வளர்ந்தது: மெய்கண்டார், அருள்நந்தி சிவன், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகிய நால்வர், “சனாதன நால்வர்” என்றழைக்கப் படுகிறார்கள். ஆனால், இப்பொழுது, இதைப் பற்றி பேசாமல் இருக்கிறார்கள். இதனால், குருவை மறக்க, மறுக்க, மறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டு, வியாசரை நிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் அதே 19ம்-20ம் நூற்றாண்டு திரிபுவாத புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.

மெய்கண்டார், அருள்நந்தி சிவன், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகிய நால்வர், “சனாதன நால்வர்” என்றால்,  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும்  மாணிக்கவாசகர் சந்தான நால்வர் ஆகின்றனர். திருநந்திதேவர், சனத்குமாரர், சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதிமுனிகள் சமய குரவர் ஆகிறார்கள். திருக்கைலாய பரம்பரையிலிருந்து தொடங்கும் திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். திருகைலாய பரம்பரை என்பது நந்திதேவரே குருவாக கொண்டு ஆரம்பித்தது.

 சனாதன நால்வர்சந்தான நால்வர்அகச்சந்தான நால்வர்
1மெய்கண்டார்,திருஞான சம்பந்தர்,திருநந்திதேவர்,
2அருள்நந்தி சிவன்,திருநாவுக்கரசர்,சனற்குமாரர்,
3மறைஞான சம்பந்தர்சுந்தரர்சத்தியஞான தரிசினிகள்,
4உமாபதி சிவம்மாணிக்கவாசகர்பரஞ்சோதியார்

இவர்கள் எல்லோருமே குருக்கள் ஆக, ஆசிரியர்களாகக் கருதப் படுகின்றனர். பிறகு இம்முறை எப்படி வந்தது?

இப்பொழுது இந்து ஒற்றுமை தான் முக்கியமானது: ஆக 2023ல் குரு, குரு பூர்ணிமா, வியாஸர் என்று வைத்துக் கொண்டு, பிரிவினை உண்டாக்க வேண்டாம்:

  1. சங்க இலக்கியத்தில் சிவ / சிவன் இல்லாதலால், தேடி அலைந்து “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்றனரோ?
  2. பிறகு சிவகுரு தேடும் படலத்தில் சிவனை / சிவத்தையும் தேடி, குருவையும் தேடி, தக்ஷிணாமூர்த்தி, சிவன்-குரு, சிவகுரு ஆனாரோ?
  3. 3000-2000 BCE வேத சிவ (அடைச்சொல்) சங்ககாலம் பிறகு சிவனாக, அத்தனை ஆண்டு கால தேவையா, ருத்ரன் சிவன் ஆக வேண்டுமா?
  4. சிவன்-குரு, சிவகுரு முதல் குரு என்றால், காளியின் கீழ் வீழ்வானேன்? அது மந்திரமா, தந்திரமா, எந்திரமா? ஓம் குருவே நமஹ!
  5. गुरू ब्रह्मा गुरू विष्णु, गुरु देवो महेश्वरा

गुरु साक्षात परब्रह्म, तस्मै श्री गुरुवे नम:

  • குரு ப்ரஹ்ம குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர குரு ஸாக்ஷாத் பரப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குருவே நம:
  • அதாவது குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே சிவன். குருவே உண்மையான பரபிரம்மம். அத்தகைய ஆசிரியருக்கு நான் தலைவணங்குகிறேன்.
  • 19-20 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதும் குருவை  வீயாசரை வைத்து சண்டைத் தேவையா? இது சிவத்திற்கு உகந்ததா?
  • வியாசர் இல்லையென்றால் புராணங்கள் இல்லை, புராணங்கள் இல்லையென்றால், சிவமும் / சிவனும் இல்லை…..
  • குருவைப் போற்றுவோம், இந்துக்களைத் தாக்க நிறைய கூட்டங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, அந்நிலைகளில் இந்த தர்க்கம் வேண்டாம்!

© வேதபிரகாஷ்

03-07-2023

இந்து ஒற்றுமை தான் தேவை, சைவ-வைணவ வாத-விவாதங்கள் தேவை இல்லை!

ஜூலை 14, 2022

இந்து ஒற்றுமை தான் தேவை, சைவ-வைணவ வாத-விவாதங்கள் தேவை இல்லை!

712லிருந்து கஜினி-கோரி போன்றோர் இந்தியாவை வெல்ல போராடி வந்தது: 712க்குப் பிறகு, துலுக்கருக்கு, பாரதம் – குறிப்பாக தில்லி, தில்லியைத் தாண்டி உள்ளே நுழைய வேண்டும், அங்குள்ள விக்கிரங்களை அழிக்க வேண்டும், கோவில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் தன்மை ஏற்பட்டது. “தாருல்-ஹராப்” மற்றும் “தாருல் இஸ்லாம்” என்று பிரித்துக் கொண்டு, காபிர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று, “ஜிஹாத்” என்ற  “புனிதப் போர்” சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்டனர் எப்படி “சிகந்தர்” என்ற பெயரை சூட்டிக்கொள்ள ஆசைப் பட்டனரோ, அதே போல, இந்திரபிரஸ்தத்தைக் கைப்பற்றி, “தில்லீஸ்வரர்” என்ற பெயர் பெற வேண்டும் என்ற கனவு இருந்தது.

முகமதியத்தின் மூலங்கள் இந்தியாவில் இருந்ததால், இந்தியாவின் மீது தொடர்ந்து படையெடுத்தது: முகமதியம், இஸ்லாம், பற்றி ஆராய்ச்சிகள் நடக்க-நடக்க, அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா பரந்த இந்தியாவில் இருந்தன என்று தெரிய வந்தது. அவைதான், “அல்லாவின் குழந்தைகள்” என கருதப் பட்டன. அரேபியா புனித இடமாக, தேசமாகக் கொண்டாலும், அவர்களுக்கான மூலங்கள் பாரதத்தில் இருப்பதை அறிந்து கொண்டனர். எப்படி, கிருத்துவர்கள், ஈடன் – சொர்க்கம் காஷ்மீரத்தில் உள்ளது என்று நம்பினரோ, அதுபோல, அவர்களும் இதையெல்லாம் நம்பினர். ஆனால், ஆசார-அடிப்படைவாத-தீவிரவாத முகமதியம் வளர-வளர பழைய ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்தார்கள். எப்படி முகமது 360 சிலைகளையும் உடைத்து, மெக்காவில் நுழைந்தாரோ, அதே போல, விக்கிரங்களை உடைத்து, பாரதத்தில் – ஹிந்துஸ்தானத்தில் நுழைய வேண்டும் என்று திட்டம் போட்டனர்.

அரேபியா போலல்லாது, இந்திய மக்கள் ஒன்றாக சுபீக்ஷமாக வாழ்ந்தது: ஆனால், அரேபியாவில் வாழ்வது போல, மக்கள் தனித்தனியாக,  வெவ்வேறு இடங்களில் வசிக்காமல், கிராமங்களில், நகரங்களில், ஆயிரக் கணக்கில் இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதனால், அவர்களை வெற்றிக் கொள்வது கடினமாக இருந்தது. போதாகுறைக்கு, பாரத மன்னர்கள் யானைப் படைகளை வைத்திருந்தனர். அதனால், குதிரைகள் மற்ற படையினர் பயந்து ஓட ஆரம்பித்தனர். அலெக்சாந்தரே அவ்வாறு தான் தோல்வியடைந்தான். ஆரம்பத்தில், துலுக்கர் கூட படுதோல்வியடைந்து வந்தனர். இதனால், திடீரென்று குதிரைப் படையுடன் வந்து தாக்கி, ஓடிவிடும் அதிரடி தாக்குதல் திட்டத்தை ஆரம்பித்தனர். இதனால், இந்தியர்கள் பீதியடைய ஆரம்பித்தனர். மேலும், பசுக்கள்-கால்நடைகளை பிடித்துச் செல்வது, பெண்களைத் தூக்கிச் செல்வது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டனர். இவையெல்லாம், இந்தியர்களிடையே மேன்மேலும் பீதி, பயங்கரம் முதலியவற்றை ஏற்படுத்தின. 

இந்துகுஷ் நிலை ஏற்படுமென்று எச்சரிப்பது: 712லிருந்து 11ம் நூற்றாண்டு வரை, சுமார் 300 ஆண்டுகள் வடமேற்கு பகுதிகளில், அத்தகைய தீவிரவாத தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர். இந்து குஷ் (Hindu Kush) என்பது வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும். இந்துகுஷ் மலைத்தொடரில் இருந்து பாயும் ஆறுகளில், ஹெல்மண்ட் ஆறு, ஹரி ஆறு, காபூல் ஆறு, மற்றும் சிஸ்டன் ஆற்றுப்படுகை போன்றனை முக்கியமானவை. வரலாற்றில் பல முறை முஸ்லிம்கள் இந்துக்களை கொன்று குவித்ததால் தான் அந்த மலைத் தொடருக்கு ‘இந்துகுஷ்’ என்ற பெயரே வந்தது. எப்போதெல்லாம் இந்துக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தார்களோ அப்போதெல்லாம் அவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதை வைத்து தான், இன்றும் இந்தியர்களை மிரட்டி வருகிறார்கள். கஜினி, கோரி, பாமியன், காபூல் போன்ற இடங்களிலிருந்து தீவிரவாதச் செயல்களை மேற்கொண்டு வந்தனர்.

கஜினிகோரி தோற்றுவென்ற பாடத்தை இந்துக்கள் அறியாமல் இருப்பது: முன்பு கஜினி மொஹம்மதுவும் 16 முறைத் தோற்று, 17வது முறையாக இந்து ஒற்றுமை இல்லாதலால் வென்று, கொள்ளையெடித்துச் சென்றான்! கோரி மொஹம்மது ராஜபுத்திரர்களிடம் பலமுறைத் தோற்றவன், ஆனால், இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததைப் பயன்படுத்தி வென்றான். கோரி முகமதுவும் பிறகு தனது தாக்குதல்களை ஆரம்பித்தான்.  கஜினி-கோரி இந்துக்களிடம் தோற்ற வரலாற்றை, இந்திய பாடப்புத்தகங்களில் குறிப்பிடப் படுவதில்லை. இதனால், இந்துக்கள் ஏதோ, இவர்களிடம் தோற்றது போலவே சித்தரிக்கப் பட்டு வருகிறது. 1191ல் முதல் தரையின் போரில், கோரி பிரித்விராஜ் சௌஹானிடம் தோல்வியடைகிறான். தோல்வியடைந்து, சிறை பிடிக்கப் பட்டாலும், விடுவிக்கப் படுகிறான்.

மாமனார்மறுமகன் சண்டைகளில் இந்துக்கள் பாதிக்கப் படுவது: ஜெயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யோகிதா / சம்யுக்தாவுடன் பிரித்திவிராஜ் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டான். ஆனால், மாமனார் ஜெயச்சந்திரனே, மறுமகன் பிருத்விராஜ் சௌஹானுக்கு துரோகமிழைத்து, விரோதியும் ஆனான்! துருக்ஷா வெல்ல உதவினான்! அதனால், முதலாம் தரையின் போரில் வெற்றி பெற்றாலும், இரண்டாம் தரையின் போரில் 1192ல் தோல்வியடைந்து, பிறகு வஞ்சத்தினால்-வஞ்சகத்தால் கொல்லப் பட்டான். மாமனார்-மறுமகன் வரலாறு இவ்வாறு இருந்தது. அதே போல, சிவன் விஷ்ணு சம்பந்திகள் என்றாலும், அடியார்கள் சண்டைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இது இந்து ஒற்றுமைக்கு ஒவ்வாததாகும்.

பாண்டியன் துலுக்கருடன் உறவு வைத்ததால், துரோகம் செய்து மாலிகாபூர் கொள்ளை அடித்தது: மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்த பிறகு, அவரது மகன்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோர் அரியணைக்காக அடுத்தடுத்து போரில் ஈடுபட்டனர். பிற்கால வரலாற்றாசிரியர்கள் கூற்றின்படி சுந்தரபாண்டியன் மாலிகாபூரின் உதவியை நாடினான், இது தில்லி படைகள் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க வழிவகுத்தது. ஆனால், பாண்டிய நாட்டை ஆராய தில்லி இராணுவம் ஒரு உளவுப் பிரிவை நம்பியிருந்தது என்று இசாமி கூறுகிறான். இந்த பிரிவில் பஹ்ரம் காரா, கட்லா நிஹாங், மஹ்மூத் சர்திஹா மற்றும் அபாச்சி போன்ற முன்னணி தளபதிகள் இருந்தனர். ஒவ்வொரு நாளும், இந்த தளபதிகளில் ஒருவன், பாண்டிய நாட்டின் ஒரு பகுதியைப் உளவு பிரிவுடன் ரகசியமாக கண்காணித்து வந்தான். வேவு பார்க்க உள்ளூர் மொழியை அறிந்த ஒரு சிலரின் ஆதரவையும் பெற்றுச் சென்றனர். இவ்வாறு மாலிகாபூர் துரோகத்துடன் செயல்பட்டு, ராணுவ தர்மத்தை விடுத்து, பாண்டியர்களைத் தாக்கி, கொள்ளையடித்தான்.

மாமனார்-மறுமகன் சண்டை எனில் அதோகதி நிலை தான் ஏற்பட்டது: இதேபோல பாண்டியர்களில் ஒற்றுமை இல்லாதலால், சுந்தர பாண்டியன் வரவழைத்ததால் மாலிகாபூர் தென்னிந்தியாவில் நுழைந்தான். அந்த, ஒரு மாலிகாபூருக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு மாலிகாபூருக்கு தாக்குப் பிடிக்க முடியாதலால், மதுரையில் துருக்ஷர் ஆட்சி 1333 முதல் 1378 வரை 45 ஆண்டுகள் நடந்தன, இதனால், மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பல கோவில்கள் இடிக்கப் பட்டன! விஷ்ணு, சிவன் விக்கிரங்கள் நிலை அறிந்ததே, அது ஶ்ரீரங்கம், சிதம்பரம் என்றெல்லாம் இருக்கலாம். மாமனார்-மறுமகன் சண்டை எனில் அதோகதி தான், அதாவது, சிவனின் மகன் முருகன், விஷ்ணுவின் மகளைத் திருமணம் செய்து கொண்டான், இதனால், சம்பந்திகள் ஆகி விட்டார்கள். அதனால், அவர்களின் பக்தர்களும் உறவினர் ஆகிவிட்டார்கள், சண்டைப் போட்டுக் கொள்ளத் தேவையில்லை, என்றாலும், இன்று வரை சிலர் வெறியுடன் சண்டைப் போட்டுக் கொள்வது வியப்பாக இருக்கிறது.

1000 ஆண்டு படிப்பினையை அறியாதது-புரியாதது: ஆயிரம் ஆண்டுகளில் உடைக்கப் பட்ட விக்கிரங்கள், சிலைகள், பிரதிமைகள் ஏராளம். தடுக்க எந்த இந்துவுக்கும் வக்கில்லை, ஆனால், இப்பொழுதும் அதற்கும் சண்டை உள்ளது, இது அவருடையதா-இவருடையதா போன்ற வாத-விவாதகள்.  விஜயநகர பேரரசு ஆட்சியாளர்கள் எல்லா கோவில்களையும் புதுப்பித்து, புனர்நிர்மாணம் செய்து, புனருத்தாரணமும் செய்வித்து சிறப்பித்தனர். அதாவது, ஆரம்பத்தில், அவர்கள் சைவர்களாக இருந்தாலும், பிறகு, ஒற்றுமை காக்க, அவ்வாறு சேவை செய்தனர். துலுக்கரை தடுக்க, மக்களைக் காக்க வேலை செய்தனர். இருப்பினும், துலுக்கர்களின் துரோகத்தினால், 1565ல் தலைகோட்டைப் போரில் 91 வயது ராமராயர் கொல்லப் பட்டு, விஜயநகரப்பேரரசு முடிவுக்கு வந்தது. ஹம்பி முற்றிலும் இடித்து, அழிக்கப் பட்டது. இப்பொழுதோ இடிபாடுகளுடன் இருக்கும் கோவில்கள் மறைந்து விடும் நிலைகளில் உள்ளன.

அப்பர் போல உழவாரப் பணியும் செய்வதில்லை, சம்பந்தர் போல துணுங்கரை அடையாளமும் காண்பதில்லை: தமிழ்கத்திலும் அதே நிலைதான். சோழர்காலத்து சிவன் கோவில்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அருகிலேயே, ரியல் எஸ்டேட்-காரன்கள் [பெரும்பாலோர் துலுக்கர், இந்துவிரோதிகள்] தயாராக இருக்கிறார்கள். முதலில் விக்கிரங்கள் மறைந்தன, பிறகு சிலைகள் மாயமாகின, நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டன, அடியார்களும் மாறி-மாற்றப்பட்டு விட்டனர். அப்பர் போல உழவாரப் பணியும் செய்வதில்லை, சம்பந்தர் போல துணுங்கரை, குண்டரை, ஊத்தைவாயினரை  அடையாளமும் காண்பதில்லை, வஞ்சகர், கொடியர், புறங்கூறுவர், மொட்டையர், தேரர், பிண்டியர், கொடியர், உடை போர்ப்பர், பிடகர், போதியர் போல மாறுதல் தகுமோ? ஒருவேளை இவர்களைப் போல இருந்து, “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்’ என்றால், அறிவித்துக் கொண்டால், சம்பந்தர் வாக்கு மெய்யே. கோவில்கள் உச்சத்தில் சென்றாலும், மண்ணோடு மண்ணாலும், சுற்றியிருந்து அனுபவித்து லாபங்களைப் பெறுவது இந்து விரோதிகள்தான்.

சமணரும்-சாக்கியரும் இப்பொழுது திராவிடத்துவ வாதிகளாக-இந்துவிரோதிகளாக மாறியுள்ளனர்: சமணரும் புத்தரும் புறங்கூறுஞ் செயலினர். அலர் தூற்றுங் குணத்தர், நல்லது அறியார். வேதம், அங்கம், வேள்வி இவைகளை நிந்தனை செய்தனர். வைதிக வழி அறியார். ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலார். அவர் உரைகள் நஞ்சினுங் கொடிய. அவர் கொண்ட நெறி பழமையதாயினும் துளங்கும் நெறி. அவர் கூறி வைத்த குறி பிழையது. அவர் நயமுக உரையினர். வேடிக்கைக் கதைகள் உண்டுபண்ணித் திரிவர். நீதிகள் பல சொல்லுவர். ஆனால் அந்நீதிகளைத் தம் நினைவிற் கொள்ளும் ஆற்றல் இலாதவர். அமணராயினோர் சைவர் தம் மேலுற்ற காற்றுக் கொள்ளவும் நில்லார். ஊன் நன்று என்பர் ஒரு சாரார்; தீது என்பர் ஒரு சாரார்; வேளை தவறாது உண்பார்; மூடிய சீவரத்தர் முன் கூறுண்டேற, சமணர் பின் கூறுண்டு காடி தொடுவர். புத்தர் பிக்ஷுக்கள் உச்சிப்போதின் முன்பே உண்ணுவர். ‘உலகிற் பெரியோர்கள் உரைத்த மொழிகளைத் திருடி நீதிநூல் செய்பவர். எங்கு மில்லாததொரு தெய்வம் உளதென்று உளறிச் சமயங்கள் கண்டவர். பல் தருமங்களைச் சனங்களுக்குக் காட்டி அவர் மனத்தைக் கவர்பவர். போதியார், பிண்டியார் இருவர் நூலும் பொய்ந்நூல். இவர்கள் ஒதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார், நல்வினை நீக்கிய வல்வினை யாளர்., என்றெல்லாம் திருமறை எச்சரிக்கிறது.

2022ல் சைவ-வைணவர்கள் சண்டை தேவையில்லை: சைவ-வைணவர்கள் சண்டைப் போட்டுக் கொண்டு, போட வைத்து, சைவர் இந்து அல்ல என்றும், நாத்திகர்களுடன் கூட்டும் வைப்பார்கள்! துவரூட்டிய உடையினர்; தீய கருமம் சொல்லுபவர்; கையில் மண்டை கொண்டு உழல்பவர். சமண் குண்டர் பொல்லா மனத்தினர்; இவர் யாரோ? விருது பகர்பவர்; வெஞ்சொலாளர்; ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலார், வேடிக்கைக் கதைகள் உண்டுபண்ணித் திரிவர் இவர் யாரோ? மாமனார்-மறுமகன் உறவுமுறையை இறையியல் மூலமும் மதிக்க, சரித்திரரீதியில் கடைபிடிக்க முடியவில்லை! துரோகம் தானே? இன்று நாத்திகர், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள், செக்யூலரிஸவாதிகள், மனிதநேயப் போராளிகள் என்ற பலமுகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களைத் தாக்கி வருவது தெரிந்த விசயமே. அதை அறிந்தும், இத்தகைய வாத-விவாதங்களைப் புரிந்து, விரோதிகளுக்கு தீனி போடும் வேலையை இந்துக்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

07-07-2022

பல்லக்கில் செல்வது, பல்லாக்குத் தூக்குவது, சாமி பல்லக்குத் தூக்குவது, பட்டின பிரவேசம் செய்வது – முதலியவற்றில் உள்ள திரிபுவாதங்களும், இந்துவிரோத போக்கும் – 2022 தொடரும் அவலம்!

மே 3, 2022

பல்லக்கில் செல்வது, பல்லாக்குத் தூக்குவது, சாமி பல்லக்குத் தூக்குவது, பட்டின பிரவேசம் செய்வது முதலியவற்றில் உள்ள திரிபுவாதங்களும், இந்துவிரோத போக்கும் 2022 தொடரும் அவலம்!

பல்லாண்டுகளாக நடந்து வரும் பாரம்பரியத்தை எதிர்ப்பது: மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது[1]. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்[2]. 500 ஆண்டுகளாக நடந்து வருவதாக ஆதீனங்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் காலம்-காலமாக நடந்து வரும் நிலையில் கடவுள் நம்பிக்கை இல்லாத, இந்துவிரோதிகளாக இருக்கும் திராவிடக் கழக வகையறாக்கள் எதிர்த்து வருவது தமாஷாக இருக்கிறது. மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது[3], என்று செய்திகள் வெளியிடப் படுகின்றன. அதாவது, ஏதோ அடிமைகள் எஜமானனை, ஜமீந்தாரை, தலைவரைத் தூக்கிச் செல்வது போல குறிப்பிடுகிறார்கள் போலும். திராவிட அரசியலில் யார், யாரைத் தூக்கி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான்.

மனிதனை மனிதன் தூக்குகிறான்: மனிதனை மனிதன் தூக்குகிறான் என்பதே விசித்திரமான எதிப்பு தான், ஏனெனில், இது ஒரு சாதாரணமான நிகழ்வு. எல்லா இடங்களிலும் நடைபெற்று வரும் விசயம். “டோலி” உபயோகம் மலைக் கோவில்களில் உள்ளது. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், பெண்கள், சிறுவர்கள் போன்றோர் அதை உபயோகித்துச் செல்கின்றனர். இதில் என்ன தவறு அல்லது புதிர் இருக்கிறது என்று தெரியவில்லை. தேர்தலில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றால், வெற்றி பெற்றவனை, தலைவனை, கேப்டனைத் தூக்கிச் செல்வது பாராட்டுவது என்பதெலாம் சகஜமான சமாச்சாரங்கள். திரைப்படங்களில் காதலியை காதலன் தூக்குகிறான். மலைப்பிரதேசங்களில் குறிப்பாக படிகட்டுகள் மூலம் ஏற முடியாதவர்கள் நாற்காலிகளை பல்லக்குப் போன்று அமைத்துத் தூக்கிச் செல்கிறார்கள். அதற்கு பணமும் வசூலிக்கப் படுகிறது. அந்நிலையில், பல்லக்கில் மடாதிபதியை வைத்து, பக்தர்கள் தூக்குவது எப்படி வித்தியாசமாக பார்க்கப் படுகிறது என்று தெரியவில்லை.

2021ல் பட்டின பிரவேசம் நடந்தது: கடந்த ஆண்டு 2021 திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது[4]. ஆனால், எந்த பிரச்சினையும் நடகவில்லை, நடந்ததாக செய்தி இல்லை. அதாவது, வெறும் மிரட்டலில் ஈடுபட்டு, விளம்பரம் தேடியுள்ளனர் என்றாகிறது. தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் 22-05-2022 அன்று நடைபெறவுள்ளது[5]. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து[6] மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருக்கிறார்[7]. “ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும், பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது,” எனக் கோட்டாட்சியர் பாலாஜி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்[8].

சட்டம் ஒழுங்குப் பிரச்னையை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:  “சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால்,” எனும்போழுது, யாரால் ஏற்படும் என்பதனை அறிந்து கொள்ளலாம். 500 ஆண்டுகளில் நடக்காதது, அண்ணா-கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயலலிதா-ஓபிஎஸ்-இபிஎஸ் ஆட்சிகளில் நடக்காதது, இப்பொழுது ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும் என்றால், பிரச்சினை பக்தர்களிடம் இல்லை. அதை எதிர்க்கும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், முதலிய வகையறாக்களில் தான் உள்ளது. அத்தகைய தைரியம், போக்கு எங்கிருந்து வந்தது என்பதனை கவனிக்க வேண்டும். கவர்னருக்கு கருப்புக் கொடி காட்டி, கொம்புகளை எரிந்தது போல, இங்கும் தாக்குதல் நடத்தினால், அதனை இந்த நாத்திகர்கள் தான் செய்வார்க்கள். அப்படியென்றால், முதலில் அவர்களை கைது செய்து, “சட்டம் ஒழுங்குப் பிரச்னை..,” யை சரிசெய்து, நிலை நிறுத்த வேண்டும். அதை விடுத்து, சம்பந்தமே இல்லாமல், ரிவர்ஸ் கியரில் சென்று பக்தர்களை இம்சிக்கக் கூடாது. பாரம்ப்ரிய சம்பிரதாயங்களைத் தடுக்கக் கூடாது. அதுவே சட்டமீறல் ஆகும்.

திராவிட பாரம்பரையத்தின் பல்லக்குத் தூக்கல்: பல்லாக்கு, பல்லாக்குத் தூக்கி, பல்லாக்கு புராணங்கள் திராவிடத்தில் அதிகமாகவே உள்ளன…….மேடைப் பேச்சுகள், திரைப்பட வசனங்களில் அவை அதிகமாகவே இருந்தன. இப்பொழுதும், ஆதரவு கொடுப்பது போன்ற ரீதியில், “பல்லக்குத் தூக்குதல்” சொல்லாடல் உள்ளது. அண்ணாதுரை பல்லக்கில் சென்றது எல்லாம் இருக்கிறது. இப்பொழுது புகைப்படங்கள், விவரங்கள் மறைக்கப் படுகின்றன. பிறகு, சாரட்டு வண்டிகளில் தொண்டர்கள் சூழ கருணாநிதி, வீரமணி போன்றோர் உலா, ராஜ பவனி வந்துள்ளனர். அதுவும் அரசியல் என்று வந்து விட்டால் கேட்க வேண்டாம்…..இன்றைக்கு அமைச்சராக இருக்கும் பொய்யாமொழி, கூட 2020ல் சாமி பல்லக்குத் தூக்கி இருக்கிறார்! அப்பொழுது பகுத்தறிவுகள் யாரும் விமர்சிக்கவில்லை………பெரியார் பிஞ்சுகள், பெரியாரிஸ குஞ்சுகள் துடிக்கவில்லை…….சாமி பல்லாக்குத் தூக்குவது ஒரு பாக்கியமாகக் கருதப் பட்டு வருகிற்து. அப்படி பல அரசியல்வாதிகள் செய்திருக்கிறார்கள். ஆக, இப்பொழுது, இப்பிரச்சினையைக் கிளப்புவது, அரசியல் ரீதீல் தான், மற்றும் தடை விதிப்பது போன்றதும்,  உள்நோக்கம் கொண்டது தான்.

திராவிட அரசியலில், பல்லக்கு வார்த்தை பிரயோகம் சாதாரணமானது!

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் (1894-1994)  பல்லக்கில் சென்றது முதலியன: பழைய காஞ்சி சங்கராச்சாரியாரை நடக்க வைத்தோம் என்று திராவிடக் கட்சிகள், ஆதரவாளர்கள், சித்தாந்திகள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அது மிகவும் தவறு. அவருக்கு 1914, 1924, 1934, 1954, 1964, ஆண்டுகளில் முறையே 20, 30, 40, 50, 60 வயதுகளில் இருந்த போது, துடிப்பாக, வேக-வேகமாக நடப்பார். இன்னும் சொல்லப் போனால், கூட வருபவர்கள் ஓடி வரவேண்டும் அந்த அளவுக்கு வேகமாக நடப்பார். வயதாகியபோது, பல்லக்கு நான்கு சக்கர சைக்கிள் வண்டியாகியது. பிறகு தான் கார் ஆகியது. அப்பொழுது அவர் நடந்து சென்றதை எல்லாம் அறிந்தவர்கள் உண்டு. காரில் சென்றால் சரி, பல்லக்கில் சென்றால் தவறு என்பது காலம் மாறி வரும் நிலையைக் காட்டுகிறது. 1964ல் 70 மற்றும் 1974ல் 80 வயதில் இருந்தார். ஆகவே உண்மை அறியாமல், ஏதோ ஒருவர் ஆதாரம் இல்லாமல் எழுதுவது, அதனை இன்னொருவர் எழுதுவது என்று பரப்புவது பொய்யாகும். ஏனெனில், இந்த தேதிகளே எடுத்து காட்டுகின்றன. இப்பொழுது, கார் / வேன் இருப்பதால் அதன் மூலம் மடாதிபதிகள் சென்று வருகின்றனர். எனவே சங்கராச்சாரியாரே செய்யாததை, இந்த சைவ மடாதிபதிகள் செய்கிறார்களே போன்ற பேச்சுகள் தேவையில்லை. வேண்டுமென்றால், திராவிடத் தலைவர்களை நடந்து போக சொல்லலாம்.

© வேதபிரகாஷ்

03-05-2022


[1] புதியதலைமுறை, தருமபுரம் ஆதீனம்: பல்லக்கு தூக்கி செல்ல அனுமதி மறுத்து கோட்டாட்சியர் உத்தரவு, தமிழ்நாடு,    Veeramani Published :02,May 2022 03:12 PM

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/136508/RDO-order-denying-permission-to-lift-the-pallakku-festival-in-Dharmapuram-Aadeenam

[3] தமிழ்.இந்து, தருமபுரம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமக்க தடை: மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு, செய்திப்பிரிவு, Published : 03 May 2022 07:08 AM; Last Updated : 03 May 2022 07:08 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/795014-devotees-are-not-allowed-to-carry-pallakku-1.html

[5] தந்தி.டிவி, தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை, பதிவு : மே 02, 2022, 02:09 PM.

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2022/05/02140958/3319374/Dharmapuram-Adinath-Brkg.vpf

[7] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதால்..! – தருமபுர ஆதீன நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க கோட்டாட்சியர் தடை, மு.இராகவன், Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/govt-banned-palanquin-in-dharumapuram-aadheenam-function

மதுரை ஆதீனம் விநாயக சதுர்த்தி பற்றி கருத்துத் தெரிவித்தது – விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றது – ஸ்டாலினின் நூறு நாட்கள் ஆட்சி பற்றி கருத்து கேட்டபோது, சொல்ல மறுத்தது (2)

செப்ரெம்பர் 7, 2021

மதுரை ஆதீனம் விநாயக சதுர்த்தி பற்றி கருத்துத் தெரிவித்தது – விநாயகர்சதுர்த்திவிழாவைஅரசுஏற்றுநடத்தவேண்டும் என்றது – ஸ்டாலினின்நூறுநாட்கள்ஆட்சிபற்றிகருத்துகேட்டபோது,  சொல்லமறுத்தது (2)

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தொடர்ந்து ஆதீனம் பேசியது, “படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ  இல்லையோ டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள்[1].  ஆக மது ஒழியப் பட வேண்டும்[2]. பெண்கள் ரோடில் நடமாட முடியவில்லை. நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது[3]. அதை வைத்துத் தான் அரசாங்க நடத்துகிறீர்களே,.. அது தேவையில்லை. இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்றால் அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும்[4]. மது எதிர்ப்பு போராட்டம் காந்தியடிகள் காலத்திலிருந்தே நடைபெற்றது…  தற்போது நாட்டில் அனைவருக்கும் தேசப்பற்று குறைந்து விட்டது. தெய்வபக்தி பணத்தில் தான் உள்ளது. வஉ.சிதம்பரனாரை போல் தேசப்பற்று இன்றைய இளைஞர்களிடம் இல்லை. இளைஞர்கள் எதையோ இழந்ததைப் போல் அலைகிறார்கள்….சினிமா, அரசியல் இவைத்தான் மாணவர்களை அழிக்கின்றன…..அவர்களை காக்க வேண்டும்…”. இப்படி, ரஜினி ஸ்டைலில் பேசியது, ஊடகக் காரர்களை திகைக்க வைத்தது. ஏனெனில், ஆதினம், மிகத் தெளிவாக, ஒவ்வொரு பிரச்சினைப் பற்றியும் அழகாக எடுத்து, விளக்கினார்.

ஜவர்ஹர்லால் காலத்தில் உண்டான பிரச்சினைகள் நரேந்திர மோடி காலத்தில் தீர்த்து வைக்கப் பட்டன: தொடர்ந்து ஆதீனம் பேசியது, “ஜவர்ஹர்லால் காலத்தில் சைனா போய் விட்டது..காஷ்மீர் பிரச்சினை நிற்கிறதுசைனா அடிக்கடி வாலாட்டிக் கொண்டிருக்கிறான்லடாக்கில் ஊடுருவி ஆக்கிரமித்துக் கொண்டான்….நரேந்திர மோடி வந்து தான் கட்டுப் பாட்டில் வந்ததுசிவபெருமான் இருந்த கைலாசமே கைவிட்டு போய்விட்டது..முன்பெல்லாம் நாம் யாரிடத்திலும் அனுமதி பெற வேண்டாம், சென்று வரலாம். இப்பொழுது அந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் நரேந்திர மோடிதான்….மத்திய அரசு நாட்டை பாதுகாத்து வருகிறது. மோடியின் செயலால் இந்திய எல்லைப் பகுதி பாதுகாக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் லடாக் பகுதிபடாக்ஆகியிருக்கும். இப்படி மோடியை ஆதரித்துப் பேசியிருப்பது, திமுக, காங்கிரஸ் போன்ற காட்சியினருக்கு திகைப்பையும், கோபத்தையும் உண்டாக்கி இருக்கிறது. இருப்பினும், மௌனமாக இருப்பது கவனிக்கத் தக்கது.

நித்யானந்தாகை லாஸ்ஆனதால் கைலாசம் சென்றுவிட்டார். நித்யானந்தாவால் எங்கள் குருமகா சன்னிதானத்தை ஒன்றும் செய்ய முடியாது: தொடர்ந்து ஆதீனம் பேசியது,நித்யானந்தாகை லாஸ்ஆனதால் கைலாசம் சென்றுவிட்டார். நித்யானந்தாவால் எங்கள் குருமகா சன்னிதானத்தை ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கும், எங்கள் குருமகா சன்னிதானத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெள்ளாளா் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். அதற்கு தோ்தல் நேரத்தில் வரும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கைகளை வைத்து அதை வென்றெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த சமுதாயத்துக்கு அடையாளம் கிடைக்கும். அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு சரியானது அல்ல,” என்றார். இப்படி “பஞ்ச் டையலாக்” பாணியில் பேசியது, ஊடகக் காரர்களை அதிர வைத்தது. இவ்விழாவில் திமுக அதிமுக மற்றும்  அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்கள்.

ஸ்டாலினின் நூறு நாட்கள் ஆட்சி பற்றி கருத்து கேட்டபோது, ஆதீனம் சொல்ல மறுத்தது:  ஸ்டாலினின் நூறு நாட்கள் ஆட்சி பற்றி கருத்து கேட்டபோது, ஆதீனம் சொல்ல மறுத்தது குறிப்பிடத் தக்கது[5]. எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பது சரியில்லை என்று கூறினார். குறிப்பிட்ட பாரம்பரியங்கள், பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டியிருக்கும் போது, ஆட்சியாளர்கள் அவற்றை மாற்றுவது அல்லது தலையிடுவது கூடாது, என்றார்[6]. அதாவது ஆகம சாஸ்த்திரங்களின் படியும் அவை இல்லாமலும், லட்சக் கணக்கான கோவில்கள் இயங்கி வருகின்றன. அக்கோவில் அர்ச்சகர்கள், குருக்கள், பூஜாரிகள் ஒரே ஜாதியினர் அல்லர், பிராமணர்களும் இல்லை, ஏனெனில், அந்தந்த கடவுள்-தேவதை-ஆகமம் முறைப்படி அவை ஆராதிக்கப் பட்டு வருகின்றன. ஆகவே, அவற்றை அறியாத அரசியல்வாதிகள், குறிப்பாக  நாத்திகர்கள், திராவிடத்துவ வாதிகள், அத்தகைய அரசியல்வாதிகள் இவற்றில் தலையிட்டு மாற்றுவது சீர்குலைப்பதற்கு சமமாகும். அதைத் தான் ஆதீனம் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.

ஒரு பிராமணர் அல்லாத மடாதிபதி கருத்துக்களை வெளியிட்டுள்ளது: இது வரை தமிழகத்தில், எந்த மாடாதிபதியும் இந்த அளவுக்கு வெளிப்படையாக கருத்துகளைத் தெரிவித்தது இல்லை எனலாம். அவ்வப்பொழுது சிலர் சில கருத்துக்களை சொல்லியிருந்தாலும், அவை பெரிதாக யாராலும் கவனிக்கப் படவில்லை, எடுத்துக் கொள்ளப் படவில்லை. குன்றக்குடி அடிகள் ஆரம்பித்திலிருந்து திக-திகமுக கட்சிகளுகு ஆதரவாகத்தான் இருந்தார். காஞ்சி மடத்து சங்கராச்சாரியார்கள் கருத்துத் தெரிவித்திருந்தாலும், அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை. அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று இருந்து விட்டார்கள். ஆனால், இப்பொழுது, இக்கருத்துகள், ஒரு பிராமணர் அல்லாத மடாதிபதியிடமிருந்து வெளிப்பட்டுள்ளன. மேலும், அவை, சாதாரண தமிழில், இக்காலத்து இளைஞர்களுக்கு ஏற்ப, அவர்களை ஈர்த்து அடையும் முறையில், “பஞ்ச்-டையலாக்கில்” சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். பொதுவாக ஊடகக் காரர்கள் 90% திராவிடத்துவ, கம்யூனிஸ்ட், கிருத்துவ, முகமதிய ஆதரவு கோஷ்டிகள் என்பது நன்றாகத் தெரிந்த விசயமே.

05-09-2021 அன்று பல ஊடகக் காரர்கள் பதிவு செய்தாலும் செய்திகளாக வெளியிடாமல் மறைக்கும் முயற்சிகள்: 05-09-2021 அன்று பேசியதை, பல ஊடகக் காரர்கள் பதிவு செய்தாலும், கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். சன் – குழுமம் ஒட்டு மொத்தமாக, இதனை அமுக்கி விட்டது. எனவே, தமிழகத்தின் திராவிடத்துவ அரசியலில், போலி செக்யூலரிஸ-இந்து விரோதத்துவ நிர்வாகத்தில், கோவில்-மடங்களை சுரண்டி கொள்ளையடித்து வரும் ஊழல் ஆட்சியில், இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். நிச்சயமாக இதன் தாக்கம் சமூகத்தின் மீது, அரசியல்வாதிகளின் மீது, குறிப்பாக திராவிடத்துவ-நாத்திக சித்தாந்திகளுக்கு, சவாலாக அமையும். இதே போல, மற்ற மடாதிபதிகளும் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டால், அது ஒரு இயக்கமாகவே ஆகி விடும். இருப்பினும், முந்தைய ஆட்சிகாலங்களில், பலவித முறைகளில் மடாதிபதிகள் கட்டுப் படுத்தப் பட்டுள்ளார்கள். அதே முறையில், இவரும் கட்டுப் படுத்தப் படலாம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-09-2021


[1] நக்கீரன், ”பாஸ் மார்க் எடுக்கிறார்களோ இல்லையோ டாஸ்மாக்கிற்குதான் போகிறார்கள்”- மதுரை ஆதீனம் வேதனை!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 05/09/2021 (22:28) | Edited on 05/09/2021 (22:36).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-whether-they-take-pass-mark-or-not-they-are-going-tasmak-madurai

[3] பாலிமர் செய்தி, நமது பண்பாடு, கலாச்சாரம், அனைத்தையும் மது சீரழிக்கிறதுமதுரை ஆதீனம், செப்டம்பர் 05, 2021. 07:36:43 PM.

[4] https://www.polimernews.com/dnews/154959

[5] The Hindu, Close down TASMAC outlets: Madurai Adheenam, SPECIAL CORRESPONDENTPARAMAKUDI, SEPTEMBER 05, 2021 21:07 IST; UPDATED: SEPTEMBER 05, 2021 21:11 IST.

[6] He refused t0 comment on the 100-day performance of the DMK government, when asked about his views. The new pontiff felt that it might not be correct to appoint priests from all castes in temples. Certain traditions, which were in vogue from time immemorial, should not be changed or disturbed by the governments, he said.

https://www.thehindu.com/news/cities/Madurai/close-down-tasmac-outlets-madurai-adheenam/article36307904.ece

மதுரை ஆதீனம் விநாயக சதுர்த்தி பற்றி கருத்துத் தெரிவித்தது – விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றது (1)

செப்ரெம்பர் 7, 2021

மதுரை ஆதீனம் விநாயக சதுர்த்தி பற்றி கருத்துத் தெரிவித்தது – விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றது (1)

ஐம்பெரும் விழாக்களில் கலந்து கொண்டு மதுரை ஆதீனம் பேட்டிக் கொடுத்தது: மதுரை ஆதினம் 293வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் ஊடகக் காரர்களுக்கு பேட்டிக் கொடுத்த போது பேசியது, நிச்சயமாக, தமிழகத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். ஏனெனில், ஒரு மடாதிபதி, வெளிப்படையாக இந்துமதத்திற்கு எதிராக நடந்து வரும் செயல்களை எடுத்துக் காட்டிப் பேசியுள்ளார். ஊடகங்கள் முழுவதுமாக அவர் பேசியதை வெளியிடா விட்டாலும், அந்த வீடியோவை வைத்து, அவரது பேச்சினை கேட்க முடிகிறது.[1]. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வ.உ.சியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா, 150 பானைகளுடன் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருவள்ளுவர் வழியில் வ.உ.சி புத்தக வெளியீட்டு விழா, ஆசிரியர் தின விழா என  ஐம்பெரும் விழாவாக  நடைபெற்றது[2]. மதுரை ஆதினம் 293வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்[3]. தீபத்திற்கு தீக்குச்சியால் தானே ஒளியேற்றியது, பொங்கல் பானைக்கும் அவ்வாறே செய்தது சிறப்பாக இருந்தது. பொதுவாக, இப்பொழுதெல்லாம், மெழுகு வர்த்தியை ஏற்றிக் கொடுத்து, அதை வைத்து, தீபத்தை ஏற்றும் முறைத்தான் நாம் பார்த்து வந்துள்ளோம்.

அனைவரும் அர்ச்சகர்தமிழில் அர்ச்சனைபோன்றவற்றிற்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்: மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நவீன ராமானுஜர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு புகழாரம் சூட்டி இருப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் திருமண் போடுவாரா? என கூறினார்[4]. “அனைவரும் அர்ச்சராகலாம், ஆனால், மற்ற பிரிவினரும் உள்ளார்கள்,” என்றார்கள். அதாவது, பல கோவில்களில் பல பாரம்பரியங்கள் இருக்கும் போது, அவை போற்றப் படவேண்டும், பாதுகாக்கப் படவேண்டும் என்று எடுத்துக் காட்டினார். தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்பதிலும் உள்ள முரண்பாட்டை எடுத்துக் காட்டினார். அதாவது மசூதிகளில் (அரேபியம்) மற்றும் சர்ச்சுகளில் ஆங்கிலம் முதலியவற்றை செய்து வருகிறார்கள். அங்கும் தமிழில் செய்வார்களா என்று கேட்டார். மசூதிகளிலிலும், சர்ச்சுகளிலும் அவ்வாறே செய்ய வேண்டும், செய்வார்களா என்று கேட்டார். அவர்களிலும், வேறுபாடு உள்ளது (அதாவது எல்லோரும் காஜி, இமாம் அல்லது பிஷப், கார்டினல், போப் என்று ஆகி விட முடியாது). செக்யூலார் அரசு என்றால், அவ்வாறு செய்ய வேண்டும். செய்வார்களா, என்று கேட்டார்கள்.

விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்துள்ளார்: நாடு முழுவதும் வருகிற செப்டம்பர். 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா என்பது, இன்றல்ல நேற்றல்ல, அன்னியர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு அரசு தடை விதித்திருப்பது சரியல்ல[5]. விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்துள்ளார்[6]. ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடை பெற்றுவரும் விழாவை தடுப்பது கூடாது[7], அது சமூக விழா, மத விழா இல்லை என்று விளக்கிப் பேசியுள்ளார்[8]. விநாயகா் சதுா்த்திக்கு அரசு தடை விதிப்பது சரியல்ல என்று மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்[9].

..சி. பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்: அனைத்து வேளாளா் மகாசபை சார்பில் ஞாயிற்றுக்கிழமை (05-09-2021) நடைபெற்ற வ.உ. சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு, அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்[10]. பிறகு, மதுரை ஆதீனம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: “..சி. பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். It is too late – அரசு இப்பொழுது அறிவித்துள்ளது மிகவும் காலதாமதம் ஆன விசயமாக இருக்கிறது…..விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட தடை விதிப்பது சரியல்ல. வசுசியே திலகர் மேற்கோள் காட்டி வந்தவர்…..[11] விநாயக சதுர்த்தி நேற்றைக்குஇன்றைக்கு என்று வந்தது அன்றுவெள்ளையன் காலத்தில் ஒருவரையொருவர் கூடக் கூடாது என்று தடை விதித்திருந்தார்கள். திலகர் தான் விநாயகா் சதுா்த்தி விழாவை தொடக்கி வைத்தார்இது ஒரு சமயத்திற்கான விழாவன்று. இது ஒரு சமுதாய விழா. தேசபக்தியை ஏற்படுத்தத் தான் இவ்விழாவிநாயகா் சதுா்த்தி விழாவை அரசே அறிவித்து. ஏற்று நடத்த வேண்டும். நம் சமுதாயத்திடம் ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதியிடம் ஒற்றுமையாக இருந்து நம் கோரிக்கையை ஒருமித்த கருத்தாக குரல் எழுப்ப வேண்டும். இது போன்ற வெளிப்படையாக யாரும் பெசியதில்லை எனலாம். இவ்வாறு, ஒவ்வொரு மடாதிபதியும், உண்மகளை இப்படி எடுத்துச் சொன்னால், சொல்ல ஆரம்பித்தால், அரசியல் வாதிகளின் பொய்மை தெரிந்து விடும்.  

கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது:தொடர்ந்து ஆதீனம் பேசியது, வெள்ளாளா் சமுதாயத்திற்கு அடையாளமாக கிராமகா்ணம்பதவி இருந்தது. பிள்ளைவாள் என்று….கர்ணம் என்றால் மரியாதை இருந்தது….. வீரப்பாண்டியன் காலத்தில்தனாத….பிள்ளை என்று ஒருவர் இருந்தார். அது மறைந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருக்கிறது….ஆனால் தற்போது அது பறிபோய் விட்டது. அதை மீண்டும் பெறுவதற்கு வெள்ளாளா் சமுதாயத்தினா் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து போராடி பெற வேண்டும்.  போராட்டம் என்றால், அமைதியாக நடத்த வேண்டும். அனைவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது, என்று, வெள்ளாளர் மகாசபையினருக்குக் கூறினார். சுதந்திரம் அடைந்த இவ்வளவு நாளுக்கு அப்புறம் அரசு சிதம்பரனாருக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இது, மிகவும் தாமதம் ஆகும்…வவுசி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். தாமதமாகவே அதை மீண்டும் இந்த சமுதாயத்திற்கு வழங்க சமுதாயத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து போராடி பெற வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-09-2021


[1] பாலிமர் தொலைக்காட்சி, https://www.polimernews.com/dnews/154959

[2] NEWS18 TAMIL, படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள்: மதுரை ஆதீனம், செய்தியாளர் – கு.தமிழ்ச்செல்வன் LAST UPDATED : SEPTEMBER 05, 2021, 18:28 IST

[3] https://tamil.news18.com/news/tamil-nadu/ramanathapuram-district-tasmac-should-be-closed-if-the-younger-generation-is-to-be-protected-madurai-aadheenam-ekr-553143.html

[4] ஶ்ரீரங்கத்தில் அவருக்கு நெற்றியில் சந்தனம் இட்டபோது, உடனடியாக துடைத்து, அழித்தது ஞாபகம் இருக்கலாம். ஆகவே, அத்தன்மை கொண்ட முதல்வர் எவ்வாறு ராமானுஜருடன் ஒப்பிட முடியும், என்பதும் கவனிக்கத் தக்கது.

[5] ஜீ.டிவி.நியூஸ், விநாயகர் சதுர்த்தி விழா மீதான தடை சரியல்ல: மதுரை ஆதீனம், Written by – ZEE Bureau | Edited by – Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2021, 10:36 AM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-not-right-to-ban-ganesha-chaturthi-celebrations-says-madurai-aadeenam-369943

[7] தினமலர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்திருப்பது சரியல்ல‘ : மதுரை ஆதீனம், Updated : செப் 06, 2021  06:43 |  Added : செப் 06, 2021  06:42.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2838621

[9] தினமணி, விநாயகா் சதுா்த்திக்கு தடை விதிப்பது சரியல்ல: மதுரை ஆதீனம், By DIN  |   Published on : 07th September 2021 05:00 AM

[10] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2021/sep/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3694517.html

[11] திலகரால் ஈர்க்கப் பட்டு, சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். திலகரைத் தொடர்ந்து ஆதரித்து வந்தவர். அவர் வழியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது, அவருக்கு மரியாதை செய்வது போலாகும் என்று எடுத்துக் காட்டப் படுகிறது.

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? (1)

ஜூலை 25, 2020

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? (1)

Four Sankaracharyas-Black and white-cropped

ஆகஸ்ட் 5, 2020 அயோத்தியாவில் கோவில் அடிக்கல் நாட்டு பூமி பூஜை விழா: ஆகஸ்ட் 5, 2020 அயோத்தியாவில், ஶ்ரீராமர் கோவில் கட்டுவதற்கு, பூமி பூஜை செய்வதற்கான “முஹூர்த்தம்” நல்ல நேரம் குறிக்கப் பட்டது[1]. ஆனால், அது இந்து நாட்காட்டியின் படி, “உத்தம காலம்” இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.  இதனால், பிஜேபி-ஆர்எஸ்எஸ்-காரர்கள் அவரை தூஷிக்க ஆரம்பித்துள்ளனர்[2]. ஆகஸ்ட் 5, தக்ஷிணாயன, பாத்ரபத மாதம், கிருஷ்ண பக்ஷத்தில் வருகிறது. பாத்ரமாத மாதத்தில், வீடு / கோவிலைக் கட்டும் வேலையை ஆரம்பிப்பது இல்லை என்றார். தவிர சென்ற வருடம் 2019 பிப்ரவரி 21ம் தேதியே, கோவிலுக்கு அடிக்கல் நடும் பூஜையை, இவர் வாரணாசியில், தன்னுடைய ஆசிரமத்தில் செய்தார்[3]. ஒரு யாத்திரைக்குக் கூட ஏற்பாடு செய்தார், ஆனால், இவரது, உடல் அசௌகிரயத்தினால் கைவிடப் பட்டது[4]. மற்றவர்களும் கண்டுகொள்ளவில்லை. தேவையில்லாமல், ஒரு பழைய புகைப்படத்தைப் போட்டு, ,பிஜேபி-ஆர்எஸ்எஸ்-காரர்கள் அவரை சமூக ஊடகங்களில் தாக்க ஆரம்பித்துள்ளனர். ஆகவே, இதன் பின்னணியை எடுத்துக் காட்ட வேண்டியதுள்ளது.

Sankaracharaya, Mutts, graphics, TOI

காங்கிரஸ்பிஜேபிகாரர்கள் அரசியல் செய்து வந்தது: காங்கிரஸ் மற்றும் பிஜேபி சங்காரச்சாரியார்களை, ராமஜென்மபூமி விசயத்தில், வைத்து, அரசியல் செய்து வருகின்றன. ராஜிவ் காந்தி, வி,பி.சிங் காலம் தொடர்ந்து, ராமஜென்பமபூமி கோவில் விவகாரத்திற்கு இடைஞ்சலாக, ஷாபானு, மண்டல் கமிஷன் போன்ற பிரச்சினைகளைக் கொண்டு வந்து காலங்கடத்தினர். 1992க்குப் பிறகும், “கோவில் கட்டுவோம்” என்று சொல்லிக் கொண்டு காங்கிரஸ்-பிஜேபிகாரர்கள் அரசியல் செய்து வந்தனர். இப்படியாக தேர்தல் நேரத்தில் “ராமர் கோவில்” என்றும் மற்ற நேரங்களில், கோர்ட் சொன்னதை கேட்போம் என்றும் கூறிக் கொண்டு காலத்தைக் கழித்தனர். இந்தியாவில், செக்யூலரிஸம் என்ற கொள்கை வந்த பிறகு, இந்து மடாதிபதிகளின் முக்கியத்துவம் குறைந்து விட்டது போன்ற தோற்றத்தை உண்டாக்கின. ஏனெனில், தேவையில்லாமல், கோவில் வழிபாடு, மடங்கள், மடங்களின் நிர்வாகம், சொத்து, முதலியவைப் பற்றிய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் நுழைந்து, மடாதிபதிகள் நீதிமன்றங்களிக்கு செல்லுமாறு செய்து, மறைமுகமாக, அதிக அளவிற்கு அவற்றை அரசியல் கட்டுப் பாட்டில் வைக்க முயன்றன.

K.A.Paul with Swaroopananda Sankaracharya-2

சாதுக்கள், சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் ஒற்றுமையை சீர்குலைக்க செய்த வேலைகள்: ஆனால், ராமஜென்ம பூமி விசயத்தில், ஆரம்பத்தில் அரசியல் கலப்பில்லாமல், அவ்வியக்கம் சென்று கொண்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வந்தது. அகில இந்திய மடாதிபதிகளின் சபை கூட்டம், சாது-சந்நியாசிகள் கூட்டம் போன்றவற்றை நடத்தி, விஎச்பி சாதுக்கள், சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் என்று வரவழைத்து, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. பெரிய கூட்டங்கள், ஊர்வலங்கள் முதலியன நடத்தப் பட்டன. பக்தர்கள், பின்பற்றுபவர்கள் முதலியோரும் கலந்து கொண்டனர். முதன் முதலாக, இவ்வாறு சாது-சந்நியாசிகள் கூட்டம் ஒரே இடத்தில் வருவது, பெரிய விசயமாகியது. உலக அளவில், ஊடகங்களில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. மேலை நாடுகள், இந்தியாவில். இத்தனை, சாது-சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப் பட்டனர். அரசியல் கட்சிகள் கதி கலங்கன. தமக்குப் போட்டியாக வந்து விடுவார்களோ என்று கூட அஞ்சினர். முலாயம் சிங் யாதவ், முதலியோர் திகைத்தனர்.  அந்நிலையில் தான் அவர்களது ஒற்றுமையை சீர்குலைக்க, அரசியல் கட்சிகள் திட்டமிட்டன. மாநில அளவில், மடாதிபதிகளுக்கு பிரச்சினைகளை உண்டாக்கினர். மடாதிபதிகளே, ஒருவர் மீது, ஒருவர் வழக்குகள் போட்டார்கள். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்காரர்கள், எதிர்கட்சிகள் ஒருபக்கம், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் போன்றவை இன்னொரு பக்கம் என்று நின்று மோத ஆரம்பித்தன.  1992 நிகழ்வுக்குப் பின்னர், அரசியல் கட்சி மோதல்கள் அதிகமாகின.

K.A.Paul with Swaroopananda Sankaracharya-1

தொடர்ந்து சங்கர மடங்கள் தாக்கப் படுவது (1987 முதல் இன்று வரை): சங்கரமடங்களைத் தாக்குவது என்று தொடர்ந்து நடந்து வருகிறது. ஊடகக் காரர்கள், சங்கராச்சாரியார்களிடம், அரைகுறையாக எதையாவது கேட்டுக் கொண்டு, அவற்றை ஊடகங்களில் செய்திகளாகப் போட்டு, பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளனர். 1987ல் காஞ்சி சங்கராச்சாரியார், மடத்தை விட்டுச் சென்ற போது, அத்தகைய வேலையை செய்தனர். 1990களில் பூரி சங்கராச்சாரியார்களின் கருத்துகளைத் திரித்து, சதி, பசு-கொல்லாமை, பெண்கள்வேதங்கள் படிப்பது போன்றவற்றைப் பிரச்சினை ஆக்கினர். 2004லிருந்து, மறுபடொயும், காஞ்சி சங்கராச்சாரியாரை பிரச்சினைக்குட்படுத்தப் பட்டது. இந்த தடவை கொலைக்குற்றம். 2013ல் விடுவிக்கப் பட்டாலும், 2004லிருந்து, காஞ்சி மடம் மட்டுமல்லாது, மற்ற மடங்களின் மீதும், அவதூறாக, அசிங்கமாக பேசுவது, எழுதுவது புத்தகங்கள் போடுவது என்று தொடர்ந்தன.  2018ல் ஜெயேந்திரர் காலமாகி, சமாதியானார். ஆனால், துவாரகா சங்கராச்சாரியாரின் மீதான தக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

K.A.Paul - Sampurnananda refutal letter

மடத்தின் தரப்பில் கொடுக்கப் பட்ட விளக்கம்…

K.A.Paul with Modi, Amit Sha

K.A.Paul with Modi, Amit Sha

கொலைக் குற்றம் சாட்டப் பட்ட பாதிரியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் போட்டுத் தாக்குவது: கே.ஏ.பால் என்ற பாதிரியுடன் இருப்பது போன்ற புகைப்படம் போட்டு, இப்பொழுது தூஷணத்தை மறுபடியும் ஆரம்பித்துள்ளனர். 2005லேயே, மடம் தரப்பில், மறுப்பு தெரிவிக்கப் பட்டு, கண்டனம் தெரிவிக்கப் பட்டது. ஒரு சாதாரண பக்தனோ அல்லது ரொம்ப வேண்டப் பட்ட பக்தனோ, எந்த சங்கராச்சாரியாரையும் தொட முடியாது. இங்கோ, இந்த பாதிரி, தோளின் மீது கை போட்டது மாதிரியும், தலைமீது கை வைப்பது போலவும் புகைப்படங்களில் தெரிகிறது. ஆகவே, இது நிச்சயமாக நம்புகிறபடி இல்லை. மேலும், மேனாட்டுப் பத்திரிக்கைகளே, இப்பாதிரியைப் பற்றி தமாஷாக எழுதியுள்ளன. அந்நிலையில், அவனது சகோதரனையே கொன்றுவிட்டார் என்ற செய்திகள் வருகின்றன[5]. இவனை கைது செய்து, சிறையில் அடைக்கப் படுகிறான்[6]. ஆனால், பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப் படுகிறான்[7]. அப்பொழுது, ராஜசேகர ரெட்டியின் பேரில் தான், கைது செய்யப் பட்டதாக, பேட்டி எல்லாம் கொடுத்து இருக்கிறான்[8]. போதா குறைக்கு, பிறகு, ஒரு கட்சி ஆரம்பித்து, ரெட்டியை எதிர்க்கிறேன் என்று ஓட்டைப் பிரித்து, அவரையே ஆட்சிக்கு வரும்படி ஆகி விட்டது. இதெல்லாம், கிருத்துவர்கள் சேர்ந்து நடத்திய நாடகமா என்றெல்லாம், நாயுடு தான் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். ஏனெனில் தோல்வியடைதது சந்திரபாபு நாயுடு தான். ஆனால், அந்த பாலை வைத்து, சங்கரச்சாரியாரைத் தாக்குவதில் தான், விசமம் வெளிப்படுகிறது.

P.A.Paul arrested for murdering his brother, India Today-1

K.A.Paul involved in financial irregularites, phedophile issues- Washington post 10-10-2006

K.A.Paul murder case on him dropped

இந்துக்கள் மாற்று மதத்தினர் போல, சங்கராச்சாரியர்களை வசைப்பாடி தூஷிப்பது ஏன்?: ஒரு போட்டோவில் தோளின் மீது கை வைப்பது போலவும், இன்னொரு புகைப்படத்தில், தலையின் மீது கைவைப்பது போல உள்ளது. இவ்வாறு ஒரு போப்பின் மீது, ஒரு பூஜாரி இவ்வாறு கை வைக்க முடியுமா? முதலில், இவ்வாறு அருகில் விடுவார்களா? ஆகவே, இந்த ஆள் எதற்காக, அவ்வாறு செய்தான் என்று ஆராய வேண்டியுள்ளது. கிருத்துவர்கள் தான் இவ்வாறு சங்கரமடத்தை, சங்கராச்சாரியாரைத் தாக்குகிறர்கள் என்றால், அதே படங்களை வைத்துக் கொண்டு இந்துத்துவ வாதிகள் தாக்குவது திகைப்பாக இருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்து, வாத-விவாதங்களில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களை கூர்ந்து கவனித்தால், ஒட்டு மொத்தமாக, சங்கர மடங்களை ஒழித்டு விட வேண்டும் என்ற போக்கில் உள்ளது போலிருக்கிறது.இந்துக்களே, சங்கராச்சாரிகளை வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு, இவர்களே, அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதமும் பெறுவார்கள். ஏதாவது பலனைக் கேட்டும் அனுபவிப்பார்கள். இந்த அசிங்கத்தை எல்லாம் தொகுத்து வைத்துக் கொண்ட இந்துஎதிரிகள் நாளைக்கு புத்தகங்களில் குறிப்பிடுவர், இல்லை, சங்கரமடத்து ரகசியங்கள் என்று புத்தகங்களே எழுதுவர்.

Swarupananda attacked by FB-1

 

Swarupananda attacked by FB-3

முடிவுரையாக சில குறிப்புகள்: மேலேயுள்ள விவரங்களைத் தவிர, பல உள்ளன, ஆனால், அவற்றையெல்லாம், இங்கு விவாதிக்க முடியாது. இந்துத்துவ வாதிகளே, பலவற்றை தமது மனங்களில் வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்களில் கொட்டி வருகின்றன. அவையெல்லாம் நல்லதற்கு அல்ல.

  1. சங்கர மடங்கள், 2500ற்கும் மேலான ஆண்டுகளாக, பாரதத்தில், ஆன்மீக, சமய, இறையியல் ரீதிகளில் இந்தியர்களை வழிநடத்தி வருகின்றன!
  2. அவற்றின் பீடாதிபதிகளான சங்கராச்சாரியார்களும், அவ்வாறே மதிக்கப் பட்டு, பாரதம் முழுவதும் சென்று வந்து மக்களுக்கு ஆசிவழங்கியுள்ளனர்.
  3. ஆங்கிலேயர் காலங்களில், சங்காராச்சாரியார்கள், மடங்கள், மடங்களின் இறையியல் நூல்கள் இவற்றைக் கண்டு அதிசயித்தனர்.
  4. அத்தகைய தத்துவார்த்த, கிரியை, சம்பிரதாயங்கள், சடங்குகள் முதலியவற்றிற்கு வழிகாட்டியாக இருந்தவர்களை வேறெங்கும் காணமுடியவில்லை.
  5. இந்தியாவில் மதரீதியில் ஒருத்துவ அதிகாரம் கொண்ட மதத்தலைவர், தத்துவ குரு, இறையியல் பீடம் இல்லை என்றே அவர்கள் கருதினர்.
  6. நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி, மக்கள் குழுமம், இனம், வர்க்கம் போன்ற காரணிகளில் மற்ற மதங்கள் பிரிந்து கிடந்தன, மோதின.
  7. ஆனால், பாரதத்தில் அத்தகைய காரணிகள் இருந்தாலும், ஒன்றாக இருந்தனர்; நான்கு திசைகளில் உள்ள புண்ணியக்ஷேத்திரங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்றுவந்தனர்.
  8. அந்நிலையில் தான், மடங்களுக்குள் வேறுபாடுகளை உண்டாக்க விரும்பினர், புதிய மடங்கள், மடாதிபதிகள் உருவாக ஊக்குவித்தனர்.
  9. ஆதிசங்கரருடைய நூல்கள் திரிபு விளக்கங்களுக்கு உட்படுத்தப் பட்டு, ஜாதிய, மாநில, திசை போன்ற திரிபுகளுக்குத் திருப்பினர்.
  10. ஆதிசங்கரரின் தேதியைக் குறைக்க, சங்கர மடங்கள் ஐந்தல்ல, நான்கு தான், அத்வைதம் துலுக்கர்களின் ஒருத்துவத்திலிருந்து பெறப்பட்டது போன்ற கருதுகோள்களை உண்டக்கினர்.
  11. சங்கர-சிருங்கேரி நீதிமன்ற வழக்குகளை ஊக்குவித்தனர், அவை இன்றும் தொடர்கின்றன, இந்துவிரோதிகளுக்குத் தீனி போடுகின்றன.
  12. எனவே, அந்நிலையில், சங்கரமடங்களை, சங்கராச்சாரியார்களை வைத்து, அரசியல் செய்ய வேண்டாம், இந்து-ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம்.

© வேதபிரகாஷ்

24-07-2020

[1] Daijiworld, Shankaracharya objects to ‘Bhoomi Pujan Mahurat’, Thu, Jul 23 2020 01:22:59 PM

[2] http://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=733362

[3] Times of India, Varanasi: Swami Swaroopanand Saraswati symbolically lays down foundation stone of Ayodhya’s Ram Mandir, Feb 22, 2019, 07:00AM ISTSource: TNN

[4] https://timesofindia.indiatimes.com/videos/city/lucknow/varanasi-swami-swaroopanand-saraswati-symbolically-lays-down-foundation-stone-of-ayodhyas-ram-mandir/videoshow/68098454.cms

[5] Times of India, Evangelist K A Paul arrested in murder conspiracy case, PTI | Updated: May 21, 2012, 16:43 IST.

[6] https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Evangelist-K-A-Paul-arrested-in-murder-conspiracy-case/articleshow/13355388.cms

[7] Economic Times, Evangelist KA Paul arrested for murder conspiracy by Andhra Pradesh police, By CR Sukumar, Last Updated: May 22, 2012, 02:36 AM IST

[8] https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/evangelist-ka-paul-arrested-for-murder-conspiracy-by-andhra-pradesh-police/articleshow/13367273.cms

 

K.A.Paul with Modi, Mukherjee, Gowda

ஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது!

பிப்ரவரி 21, 2020

ஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது!

Muslim mutt head annointed, Karnataka-2

லிங்காயத்து மடத்திற்கு, ஒரு துலுக்கன் மடாதிபதி ஆகிறான்[1]: செக்யூலரிஸம் என்று சொல்லிக் கொண்டு, இந்துக்களை கடந்த 70 ஆண்டுகளாக ஏமாற்றி வந்த அரசியல்வாதிகள், ஊடகவாதிகள் மற்ற அடிப்படைவாதிகள், இப்பொழுது, வேறுவிதமான யுக்திகளைக் கையாள்கிறார்கள் போலிருக்கிறது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பசவண்ணரின் கொள்கைகள் மற்றும் உபதேசங்களைத் தன் சிறு வயது முதல் கேட்டு, அதன்படி வாழ்ந்து வரும் திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா (33) என்ற முஸ்லிம் இளைஞர், வரும் புதன்கிழமை லிங்காயத்து மடத்தின் மடாதிபதியாக மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார், என்று செய்திகள் அதிரடியாக சிவராத்திரிக்கு முன்பாக ஊடகங்களில் வெளி வருகின்றன. கலாபுராகியில் உள்ள கஜ்ஜுரி கிராமத்தில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த் கோரனேஷ்வர சாந்திதம மடத்துடன் இணைந்துள்ள அசுதி கிராமத்தில் இயங்கி வரும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சாந்திதமா மடத்தின் மடாதிபதியாக நியமிக்கப்படுகிறார் முஸ்லிம் இளைஞர் ஷரீஃப்[2]. கோவில் கொள்ளை அடுத்து, செக்யூலரிஸம், சமூகநீதி பெயரில் இந்து மடங்களை துலுக்கன் / கிருத்துவர்கள் அபரிக்கும் திட்டம் செயல்படுகிறதா?

Muslim mutt head annointed, Karnataka-3

கஜ்ஜுரி மடத்தின் மடாதிபதியாக இருக்கும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சிவயோகி கூறும் விளக்கம்: “கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகப்பெரிய மடமாக இந்த லிங்காயத்து மடம் விளங்குகிறது[3]. பசவண்ணரின் தத்துவங்கள் உலகளவில் புகழ்பெற்றவை. எங்கள் லிங்காயத்  சமூகத்தில் எந்த ஜாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களும் இணையலாம். 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானி பசவண்ணர், சமூக நீதி மற்றும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபட்டார். ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் போதனைகளைக் கற்பித்தார். அவரது போதனைகளைப் பின்பற்றியே இந்த மடம் திறக்கப்பட்டது. இங்கு எந்த மதத்தினரும் வரலாம். அனைவருக்காகவும் கதவுகள் திறந்தே இருக்கும்,” என்று கஜ்ஜுரி மடத்தின் மடாதிபதியாக இருக்கும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சிவயோகி கூறுகிறார்[4]. எனது மிகச் சிறிய சேவையை அங்கீகரித்து மடாதிபதி முருகராஜேந்திர சுவாமிஜி, என்னைத் தனது குடையின் கீழ் ஏற்றுக் கொண்டார். நானும் பசவண்ணர் மற்றும் எனது குருக்களின் வழியைப் பின்பற்றி நடப்பேன் என்று கூறுகிறார் ஷரீஃப்[5].

Muslim mutt head annointed, Karnataka

அசுதி மடத்திற்கு தந்தை நிலத்தை வழங்கினாராம், தனயன் மடாதிபதி ஆனானாம்!: சிவயோகியின் உபதேசங்களின்பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப்பின் தந்தை மறைந்த ரஹிமான்சாப் முல்லா, அசுதி மடத்துக்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கினார். பசவண்ணாவின் தத்துவங்கள் பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப், லிங்க தீட்சையும் பெற்று, அதனைப் பின்பற்றியே வாழ்ந்து வருகிறார். அவரது தந்தையும் லிங்காயத்து வழிமுறைகளைபின்பற்றி வந்தனர். மேனாசகி கிராமத்தில் மாவு மில் நடத்தி வந்த ஷரீஃப், கிடைக்கும் நேரத்தில் எல்லாம், பசவண்ணர் மற்றும் 12ம் நூற்றாண்டில் உருவான மகான்களின் உபதேசங்களைப் படித்தும், பிறருக்குக் கற்பித்தும் வந்தார். சரி, துலுக்கனாகவே இருந்து கொண்டு அவ்வாறு செய்தனர் என்பது முரண்பாடாக உள்ளது. ஏனெனில், மற்றா துலுக்கன்கள் அவ்வாறு அனுமதிக்க மாட்டார்கள். தீக்ஷை கொடுக்கப் பட்டு, இவ்வாறு செய்யப் பட்டது என்றால், இவன் துலுக்கனாக இருக்க முடியாது, துலுக்கன் என்றால் எல்லாமே பொய்யாகிறது!

Muslim mutt head, Karnataka

இந்துக்கள் இல்லை என்று கூறிக்கொள்ளும் கூட்டங்களை கவனிக்க வேண்டும்: தாங்கள் இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய கர்நாடகாவின் லிங்காயத் மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க இருப்பது மதநல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாக போற்றப்படுகிறது[6] இப்படி, ஒரு பகுத்தறிவு விளக்கம் அளிக்கிறது. கர்நாடகாவில் லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைக்கக் கூடாது; வீரசைவர்கள் என்ற தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்[7]. இதனை கர்நாடகாவில் ஆண்ட காங்கிரஸ் அரசும் அங்கீகரித்தது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. பிறகு, என்ன இதைப் பற்றி கூறுவது? கர்நாடகாவின் லிங்காயத்துகளைப் பின்பற்றி தமிழகத்திலும் ஐயா வைகுண்டரை பின்பற்றுவோரும் தங்களை தனி மதமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அண்மையில் கூட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கன்னியாகுமரியில் நாங்கள் இந்துக்கள் அல்லர்; சைவர்கள் என பிரகடனப்படுத்தும் மாநாட்டை நடத்துவோம் என கூறியிருந்தார். சரவணன் என்ற சைவசித்தாந்த புரொபவசர் நடத்திய அனைத்துலக மாநாட்டிலும், “நாங்கள் இந்துக்கள் அல்ல,” என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஒன்று துலுக்க அல்லது கிருத்துவ ஆதரவு இருப்பது தெரிகிறது.

Basava reformer

துலுக்கர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்து வரும் நிலையில், சிவராத்திரி அன்று, செக்யூலரிஸ நாட்டில், இவ்விவிவகாரம், செய்தியாக வெளிவருகிறது: இதனிடையே வடகர்நாடகாவில் லிங்காயத்துகளுக்குரிய மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா என்ற 33 வயது முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க உள்ளார்[8]. லிங்காயத்து கோட்பாடுகளை உருவாக்கிய பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி வருவதால் முஸ்லிம் இளைஞராக இருந்த போது மடாதிபதியாக அவருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது[9]. 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோரனேஷ்வர சாந்திதம மடத்தின் கீழ் வரும் அசுதி கிராமத்தின் முருகராஜேந்திர கோரனேஷ்வர மடத்துக்குத்தான் ஷரீஃப் மடாதிபதியாகிறார்[10]. ஷரீப்பின் தந்தை ரஹிமான்சாப் முல்லா இதே அசுதி மடத்துக்காக 2 ஏக்கர் நிலத்தை வழங்கியவர். மேலும் லிங்காயத் கோட்பாடுகளை மீறி திருமணமாகி குழந்தைகள் பெற்றவரான ஷரீப் மடாதிபதியாக்கப்படுகிறார் என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது[11].  நாடெங்கிலும், துலுக்கர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்து வரும் நிலையில், சிவராத்திரி அன்று, செக்யூலரிஸ நாட்டில், இவ்விவிவகாரம், செய்தியாக வெளிவருகிறது[12]. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளிலிருந்து விரட்டப் படும் இந்துக்களுக்காகா ஆதரவாக உள்ளது எனேய் துலுக்கன்கள் எதிர்த்து வருகின்றனர்[13]. பிறகு, துலுக்கன் மடாதிபாதி ஆனால், இந்துக்களுக்கு என்ன நலன், பலன் கிடைக்கும்? ஆகவே, இது விளம்பரத்திற்காக சொருகப் பட்ட செய்தியா அல்லது அத்தகைய நியமனம் சட்டப் படி செல்லுமா என்று பார்க்கவேண்டும்.

Muslim become Hindu mutt head, Basava reformer

இந்துவிரோத மடங்களின் செயல்பாடுகள்: பழனி ஆதீனம், பொம்மபுரம் மடம், சைவசித்தாந்த பெருமன்றம் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று தீர்மானம் போட்டுள்ளன! இப்படியே ஷிருடி மற்றும் புட்டபர்தி சாய்பாபா குழுக்கள் மற்ற மடங்கள் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தால், இந்துக்கள் என்று எத்தனை பேர் இருப்பர்? காங்கிரஸ், கர்நாடகாவில், சைவ மடங்களைத் தூண்டி விட்டு, “மைனாரிடி” அந்தஸ்து கோரி போராடும் படி தூண்டின. பிறகு, அத்தகைய அந்தஸ்த்தை கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தது. பீஜேபியும் கூட ஒப்புக் கொண்டது. ஆனால், நிலைமையை உணர்ந்ததும் திர்க்க ஆரம்பித்துள்ளது. இதெல்லாம், கிருத்துவர்களாக மதம் மாறிய எஸ்.சிக்களுக்கு, தொடர்ந்து அந்த அந்தஸ்து, இடவொதிக்கீடு, சலுகைகள் தோடர வேண்டும் என்ற சதிதிட்டத்துடன் போராடுவதற்கு சாதகமாக இருக்கவே, அவ்வாறு செய்து வருகின்றன. 1985ல் சூசை வழக்கில் தோற்று, மேல் முறையீடு செய்யாமல், இப்பொழுது மறுபடியும், அப்பிரச்சினையை உச்சநீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்[14]. The Constitution (Scheduled Castes) Order 1950, மூன்றாவது பிரிவை நீக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்[15]. இந்துக்களுக்கு தான் என்றிருக்கும் போது, கிருத்துவர்கள் அதில் தலையிடுவதும் வேடிக்கைதான். கிடைக்காது என்று தெரிந்தும், அவ்வாறு வழக்குத் தொடுப்பது, அதனை, நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது முதலியன, சதிதிட்டத்தை வெளிப்படுத்துகிறது.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim become Hindu mutt head, Basava reformer-2

[1]  கடவுளையே அவன் – இவன் என்று ஏகாரத்தோடு விளித்து, எழுதி, பேசி வருவது தமிழரின் பண்பாடு.

[2] Deccan Chronicle, In a first, Muslim to head Lingayat mutt in Karnataka: ReportHe is also the first family man to be given the position, DH Web Desk, FEB 20 2020, 15:14 PM IST UPDATED: FEB 20 2020, 15:44PM IST

[3] https://www.deccanherald.com/state/karnataka-politics/in-a-first-muslim-to-head-lingayat-mutt-in-karnataka-report-806441.html

[4] தினமணி, லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதி 33 வயது முஸ்லிம் இளைஞர், 05:27 pm Feb 20, 2020 |

[5] https://m.dinamani.com/article/india/the-next-head-of-the-lingayat-is-a-33-year-old-muslim-youth/A2020-3362723

[6] தமிழ்.ஒன்.இந்தியா, இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய லிங்காயத்துகளின் மடாதிபதிகளில் ஒருவராகிறார் முஸ்லிம் இளைஞர், By Mathivanan Maran | Published: Thursday, February 20, 2020, 15:18 [IST]

[7] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-lingayat-mutt-set-to-announce-muslim-pontiff-377644.html

[8] Bangalore Mirror, Muslim youth Rahimansab Mulla set to head Lingayat mutt in Karnataka, By Sangamesh Menasinakai, TNN | Updated: Feb 20, 2020, 13:44 IST.

[9] https://bangaloremirror.indiatimes.com/others/muslim-youth-rahimansab-mulla-set-to-head-lingayat-mutt-in-karnataka/articleshow/74222995.cms

[10] Siasat, Karnataka: Muslim to become head of Lingayat Mutt, POSTED BY SAMEER, PUBLISHED: FEBRUARY 20, 2020, 12:49 PM IST

[11] https://www.siasat.com/karnataka-muslim-become-head-lingayat-mutt-1831681/

[12] The appointment comes in the backdrop of huge protests against the citizenship law, which for the first time, makes religion a factor in citizenship. The new law facilitates citizenship for non-Muslim refugees from Pakistan, Bangladesh and Afghanistan, who flees because of religious persecution. https://www.ndtv.com/india-news/muslim-man-chosen-to-head-gadags-lingayat-math-in-karnataka-2183110

[13] NDTV, Muslim Man Chosen To Head New Lingayat Mutt In Karnataka, All IndiaWritten by Maya SharmaUpdated: February 20, 2020 05:19 pm IST

[14] India Legal Bureau, Supreme Court issues notice on Dalit Christians’ demand for reservation, January 8, 2020, 4:32 pm.

[15] The Supreme Court on Wednesday issued notice to the Centre on the plea of National Council of Dalit Christians seeking reservation for the converts among them as Scheduled Caste members. The court was informed that despite their conversion to Christianity, there was no change in their backward social condition – they still faced exclusion as caste hierarchy prevailed within Christianity too – and therefore they deserve reservation. The petitioner further seeks the removal of paragraph 3 of the Constitution (Scheduled Castes) Order 1950 that denies SC status and rights to Dalit Christians. A state resolution related to this was passed in Andhra Pradesh in which it appealed to the central government that Dalit Christians should also get the benefit of reservation like the Scheduled Castes. This proposal was presented by the then Chief Minister Chandrababu Naidu. The Court was asked to consider referring this question of extending reservation to Dalit Christians to a bench larger than the present three-judge bench comprising CJI Bobde, and Justices B R Gavai and Surya Kant. The Court tagged the matter with similar writ petitions pending since 2004, and is expected to list it for hearing soon.

https://www.indialegallive.com/constitutional-law-news/supreme-court-news/supreme-court-issues-notice-on-dalit-christians-demand-for-reservation-81702

நாசிக் கும்பமேளா தொடர்பாக பொய்யான திரிபு செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் (1)!

ஜூலை 20, 2015

நாசிக் கும்பமேளா தொடர்பாக பொய்யான திரிபு செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் (1)!

Shri Trikal Bhavanta Maharaj

Shri Trikal Bhavanta Maharaj

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நாசிக்கில், கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தில் அடந்தது. பொதுவாக, கும்பமேளா நன்றாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், ஒரு பெண்-துறவியினால் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், சில ஊடகங்கள் சர்ச்சையை உண்டாக்க முயன்றுள்ளன. இதே நேரத்தில்  ஆந்திரபிரதேசத்தில் புஷ்கர விழா நடந்த போது, நெரிசலில் சிக்கி பேர் இறந்துள்ளனர்[1]. இதனால், மஹாராஷ்ட்ர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் ஊடகங்கள் குளிக்கும் இடம் சுத்தமாக இல்லை, நதி நீர் அசுத்தமாக உள்ளது, போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று செய்திகளை வெளியிட்டன.

Sadhvi.1

Sadhvi.1

மிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு: நாசிக் கும்பமேளாவில், புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் அந்த மாநில சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது[2]: “நாசிக்கில் தொடங்கியுள்ள கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பக்தர்களுக்கும், மடாதிபதிகளுக்கும் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கும்பமேளாவின் புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. சட்டம்ஒழுங்கு பிரச்னைகள் குறித்த எந்த அச்சமுமின்றி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மடாதிபதிகள் தங்குவதற்காக தனியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன, என்றார் கிரீஷ் மகாஜன்.

Sadhvi.2

Sadhvi.2

புஷ்கரம் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததன் எதிரொலி: கும்பமேளாவில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 13, 18, 25 ஆகிய நாள்களில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த 14-ஆம் தேதி நாசிக் கும்பமேளா, கொடியேற்றத்துடன் தொடக்கி வைக்கப்பட்டது. அதே நாளில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியின் கோதாவரி நதியில் நடைபெற்ற புஷ்கரம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். அதைக் கருத்தில்கொண்டே, நாசிக் கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது[3]. மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிசிடம், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேசி, கும்பமேளாவில், வி.ஐ.பி.,கள் கலந்து கொண்டால், நெரிசல் ஏற்பட்டு, சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, வி.ஐ.பி.,களை அனுமதிக்க வேண்டாம் என, கேட்டுக் கொண்டதை அடுத்துஇந்த முடிவுக்கு, மகாராஷ்டிர அரசு வந்துள்ளது[4].

Sadhvi.3 registration

Sadhvi.3 registration

போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று திகம்பர ஜெயின் அகாடாவைச் சேர்ந்த தசரத தாஸ் குறை; மகாராஷ்டிர மாநிலம், நாசிக் கும்ப மேளா விழாவில், போதிய குடிநீர், மின்சார வசதிகள் செய்து தரப்படவில்லை என விழாவுக்கு வந்திருந்த ஆன்மிகத் தலைவர்கள் கூறினர்.  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கும்ப மேளா, மகாராஷ்டிரத்தின் நாசிக், திரையம்பகேஷ்வர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சாதுக்கள், துறவிகள் உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்கள் நாசிக்கிலும், திரையம்பகேஷ்வரிலும் குவிந்துள்ளனர். இந்நிலையில், தங்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் குறை கூறினர். இதுகுறித்து திகம்பர ஜெயின் அகாடாவைச் சேர்ந்த தசரத தாஸ், புதன்கிழமை கூறியதாவது:  “இங்கு பல இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க வேண்டும். போதிய அளவுக்கு மின்சாரம், குடிநீர் ஆகியவை விநியோகிக்கப்படவில்லை. அவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், கண்ணம்வார் பாலத்தில் இருந்து லக்ஷ்மிநாராயண் கணவாய் வரை, 1.5 கி.மீ தொலைவுக்கு பாதைத் திறக்கப்படவில்லை.  சாதுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிராமங்களில் முள்மரங்கள் நிறைந்திருப்பதால், அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்”, என்று தசரத தாஸ் கூறினார்[5]. இந்நிலையில், கும்ப மேளாவுக்கான சிறப்பு அதிகாரியும், சாதுக்களின் கிராமப் பொறுப்பாளருமான யோகேஷ் பகாரே கூறியதாவது: சாதுக்களுக்கு குடில்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி நிறைவடைந்தவுடன், குடிநீர், மின்சார விநியோகப் பிரச்னைகள் சரி செய்யப்பட்டுவிடும். விழாவின் முக்கிய நிகழ்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என்றார் யோகேஷ் பகாரே[6]. ஆனால், விடுதலையில் மட்டும் வித்தியாசமான செய்தி வந்துள்ளது.

நாசிக் விடுதலை பொய்யான செய்தி

நாசிக் விடுதலை பொய்யான செய்தி

கும்பமேளாவின் யோக்கியதையைப் பாரீர்! பெண்களிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த துறவிகள்![7]: இப்படி தலைப்பிட்டு, முதல் பக்கத்தில் விடுதலை வெளிடயிட்டுள்ளது. நாசிக், ஜூலை 18_   நாசிக் நகரில் நடந்துவரும் கும்பமேளாவில் பெண் துறவித்தலைவரான திரிகால் பவந்தாவிற்கும் அவரது பெண் சீடர்களுக்கும் ஆண் துறவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்தத்துறவிகள் மீது விழாக்குழுவினர் நட வடிக்கை எடுக்க மறுப்ப தாகவும் திரிகால் பவந்தா செய்தியாளர்களிடம் கூறினார்.  நாசிக் நகரில் ஜூலை 14-முதல் கும்பமேளா என்னும் கூட்டுக் குளியல் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் அம்மணச் சாமியார்கள் தான் முதன் முதலாக முழுக்குப் போடுவார்களாம் அவர்கள் குளித்த பிறகுதான் மற்ற வர்கள் குளிக்க வேண்டும் என்ற விதியுள்ளது. இந்த நிலையில் பெண் துறவிகளுக்கு முதலில் குளிக்கவும் அல்லது அவர்களுக்கு என்று தனியான ஒரு இடம் ஒதுக்கித்தரவும் பெண் துறவித் தலைவர் திரிகால் பவந்தா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் திரிகால் பவந்தா செய்தியாளர்களிடம் பேசும் போது  அயோத்தியில் உள்ள சாமியார் மடத் தலைவன் சாமியார் ஞான தாஸ் மீது புகார் கூறியுள்ளார். புதனன்று காலை அவர் நாசிக்கில் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் நான் இந்தியாவில் முதன் முதலாக பெண் துறவிகளுக்கான அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறேன். எனது அமைப்பு இந்துமத விதிகளின் படியும் சாஸ்திர சம்பிரதாயங்களின் படியும் இயங்கி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதலே என்னையும் எனது பெண் சீடர் களையும், சாமியார்களின் தலைமை அமைப்பின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் ஞானதாஸ்  கேலியும் கிண்டலும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு நான் நாசிக் கும்பமேளாவில் பெண் துறவிகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்திருந்தேன். இதற்காக கடந்த நவம்பர் முதல் அனைத்துப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் பாத யாத்திரை சென்று பரப்புரை செய்து வந்திருக்கிறோம். நானும் எனது பெண் சீடர்களும் செல்லும் இடமெல்லாம் சாமியார்கள் பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எங்களின் உடல் அங்கங்களைத் தொட்டு தொந்தரவு கொடுப்பது அசிங்கமான செய்கைகள் செய்வது வாடிக்கையாக கொண்டு எங்களை துன்புறுத்தி வந்தனர்[8].

Nasik falsified news - Viduthalai

Nasik falsified news – Viduthalai

பெண்கள் கூடாரத்துக்குள் நுழைந்த தடியர்கள்![9]: இந்த நிலையில் நாங்கள் கடந்த 10 ஆம் தேதி நாசிக் வந்து எங்களுக்கு என்று தனிக்கூடாரம் அமைத்து புண்ணியக்குளியலுக்காக தயாராகி வந்துள்ளோம். நான் நகர நிர்வாகத்திடம் பெண் துறவிகளுக்கு ஆண் சாமியார்களால் தொந் தரவு வர வாய்ப்புள்ளது ஆகையால் எங்களுக்கு தனியாக குளிக்க இடம் வேண்டும் என்றும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும் கூறியிருந் தோம் இந்த நிலையில் சில சாமியார்கள் கும்பமேளா விற்கு முதல்நாள் பெண்கள் தங்கியிருந்த கூடாரத்திற்குள் நுழைந்துள்ளனர்.  நான் பாதுகாப்பு காரணங்களுகாக சிலரைச் சந்திக்க சென்று இருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.   இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் நான் நாசிக் கும்பமேளா விழாக் கமிட்டியிடம் புகார் அளிக்கச் சென்றேன். அப்போது வழிமறித்த சாமியார் மடத்தலைவன் ஞானதாஸ் என்பவன் என்னையும் எனது பெண் சீடர்களையும் வழிமறித்து தவறாக நடக்க முயன்றான். இந்தச் சம்பவத்தின் போது சாமியார்கள் அனைவரும் பெருங் கூட்டமாக எங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். மேலும் நான் மக்களிடையே இந்த கொடுமையைக் கூற ஒலி வாங்கியை எடுத்த போது தேவையற்ற இடங்களில் சாமியார் ஞானதாஸூம் அவரது சீடரும் தொட் டுத் துன்புறுத்தினர். இந்தச் சம்பவம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.  ஒரு மதரீதியான விழா நடந்து கொண்டு இருக்கும் போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே இந்தச் சாமி யார்கள் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இவ்வளவு நடந்தும் விழா நிர்வாகம் சாமியார்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொலைக் காட்சி செய்தியாளர்களிடம் கூறினார். பெண் சாமியார் திரிகால் பவாந்தா 2008-ஆம் ஆண்டு பெண் துறவி களுக்கான அமைப்பு (அகாடா) ஒன்றை உருவாக்கினார். இவர் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இவரது அமைப்பின்மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. (குறிப்பு: கடந்த ஆண்டு உண்மை இதழிலும் கட்டு ரையாக வெளி வந்திருந்தது).

© வேதபிரகாஷ்

20-07-2015

[1] http://www.hindustantimes.com/india-news/stampede-at-godavari-pushkaram-in-andhra-pradesh-s-rajahmundry/article1-1368999.aspx

[2] http://www.dinamani.com/india/2015/07/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article2926175.ece

[3] தினமணி, நாசிக் கும்பமேளாவில் முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு, First Published : 18 July 2015 01:01 AM IST.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1298424

[5] http://www.dinamani.com/india/2015/07/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5/article2923058.ece

[6]  தினமணி, நாசிக் கும்ப மேளா அடிப்படை வசதி குறைபாடு: ஆன்மிகத் தலைவர்கள் அதிருப்தி, First Published : 16 July 2015 03:56 AM IST

[7] http://www.viduthalai.in/e-paper/105346.html

[8] விடுதலை, கும்பமேளாவின் யோக்கியதையைப் பாரீர்!, சனி, 18 ஜூலை 2015 15:35

[9] http://www.viduthalai.in/e-paper/105346.html

திருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி!

மே 5, 2012

திருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி!

மதவெறி போர்ச்சுகீசியருக்கு திருமலையின் மீது எப்பொழுதும் கண்: போர்ச்சுகீசியர் இந்தியாவில் அடித்த கொள்ளையைப் பற்றி சரித்திராசிரியர்கள் சரியாக கணக்கிடவில்லை. ஆங்கிலேயர் அடித்த கொள்ளையைப் பற்றி தாதாபாய் நௌரோஜி கணக்கிட்டு ஒரு புத்தகமே எழுதியுள்ளார்[1]. கஜினி, கோரி, மாலிகாபூர் முதலியோரது கொள்ளையைவிட போர்ச்சுகீசியரது கொள்ளை அதிகமாக இருக்கக் கூடும். ஏனெனில் உண்மையிலேயே அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களாக இருந்தனர். அரேபிய கடற்கொள்ளைக்காரர்களையும் மிஞ்சும் வகையில் இருந்தனர். கொச்சின், கோவா முதலிய முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டு அதிகாரத்தையும் செல்லுத்தினர். திருப்பதி-திருமலையைத் தாக்கவேண்டும் என்று 1543 செப்டம்பர் திங்களில் 45 கப்பல்களில் கோவாவிலிருந்து புறப்பட்டனர். அப்படி மேற்குப் பகுதியிலிருந்து, கேரளா வழியாக, தமிழக கடற்பகுதியில் நுழைய, தாமஸின் சின்னங்களை கன்னியாகுமரியில் உள்ள கிருத்துவர்களுக்குக் காட்டப் போகிறோம் என்று சாக்கு சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால், விஜயநகரத் தளபதி ராமராய விட்டலன் ஒரு படையுடன் சென்று, போர்ச்சுகீசியரை வென்று விரட்டியடித்தான். அதனால் அவர்களது சதி-திட்டம் தோல்வியடைந்தது[2]. ஆனால், அந்த கத்தோலிக்கக் கிருத்துவர்களின் வெறி அடங்கவில்லை. சோனியா மூலம் அவ்வப்போது வெளிப்படுகிறது. பிறகு சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) என்று சொல்லிக் கொள்ளும் சாமுவேல் மற்றும் அவரது மகன் மூலம் வெளிப்படுகிறது.

 ரெட்டியை உசுப்பிய நாயுடு – திருமலை மீது அக்கரையுள்ள தெலுங்கு தேசங்கள்[3]: ராமாராவை நீக்கி ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடுக்கு சொல்லியாத் தரவேண்டும்? இப்பொழுது ராவைவிட்டு, ரெட்டியைப் பிடுத்து விட்டார் நாயுடு! ஆந்திராவில் இடைதேர்தல் வந்தால், காங்கிரஸ்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். கோடிகளில் பணம் கிடைக்கும், அதை செலவழிப்பதில் தணிக்கை ஒன்றும் இல்லை. ஆக இந்த விஷயத்தில் காங்கிரஸும், தெலுங்குதேசமும் சேர்ந்து கொண்டது வியப்பொன்றும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் திருப்பதியில் பிரச்சாரம் செய்த சந்திரபாபு நாயுடுதான் ஜெகனை திருப்பதிக்கு வருமளவுக்கு உசுப்பிவிட்டுப் பேசினார். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஜெகன் ஒருநாத்திகர் … டெல்லியில் இருந்து சோனியாவெல்லாம் வந்து சாமி கும்பிடுகிறார்.. ஆனால் ஜெகன் மட்டும் வந்து சாமிகும்பிடமாட்டார். இப்படிப்பட்டவர்களிடமாக ஆட்சியை ஒப்படைக்கப் போகிறீர்கள் என்று சந்திரபாபு நாயுடு பேசியதுதான் தாமதம்.

கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மகன் திருமலை விஜயம்: ஆந்திராவில் திருப்பதி உள்பட 18 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திருப்பதியில் தேர்தல் பிரசாரம் செய்த ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்[4].  இவர் கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மைந்தர். ஜெகன்மோகன் ரெட்டியுடன் கட்சி வேட்பாளர் பூமண் கருணாகர ரெட்டி உள்பட 65 பேர் சென்றனர். ஆந்தராவில் திருப்பதி கோவிலுக்கு வருகை தரும் பிறதமதத்ததை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் கையெழுத்து பெறப்படுவது வழக்கம். ஏழுமலையான் கோயிலில் வேற்று மதத்தினர் தரிசனம் செய்வதாக இருந்தால், “நான் வேறு மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் எனக்கு திருப்பதி வெங்கடாசலபதி மீது பரிபூரண நம்பிக்கை உள்ளது. அவரை முழுமையாக நம்புகிறேன்”, என்று பதிவேட்டில் எழுதி கையெழுத்திட வேண்டும். அதன் பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்[5]. ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்நத ஜெகனிடம் இந்த நடைமுறையை பி்ன்பற்றவி்ல்லை என கூறப்படுகிறது[6]. .

பரிந்து கொண்டு வரும் அடிவருட்கள்: இது பற்றி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம் கூறுகையில்[7], ‘‘ஏழுமலையானை தரிசிக்க வந்த ஜெகன் மோகனிடம் கையெழுத்து வாங்க பதிவேடு கொண்டு செல்லப்பட்டது. 2009ம் ஆண்டும் பதிவேட்டில் கையெழுத்திட்டு ஏழுமலையானை தரிசித்தேன். எனவே, மீண்டும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்’’ என்றார்[8]. ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால் கோவில் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட முயற்சி நடந்ததாகவும் கையெழுத்திட ஜெகன் மோகன் ரெட்டி மறுத்து விட்டதாகவும் தெலுங்கு தேசம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர்.  மேலும் கோவிலுக்குள் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் ஜெய் ஜெகன் என்று கோஷமிட்டதாகவும் கூறப்பட்டது. கோவிலுக்குள் பிரசாரம் செய்வது தேர்தல் விதி மீறல் என்று தேர்தல் கமிஷனிடம் தெலுங்கு தேசம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் அதிகாரி பன்வர்லால் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி கோவிலுக்குள் ஜெகன்மோகன் சென்றதில் வழிமுறைமீறல் இல்லை: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விளக்கம்: ஆனால் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்து உள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாஸ்கர் ரெட்டி கூறியதாவது:- திருப்பதி கோவிலில் ஜெகன்மோகன் தந்தை ராஜசேகர ரெட்டி 23 முறை தரிசனம் செய்து உள்ளார். இதில் 5 முறை முதல்-அமைச்சர் என்கிற முறையில் அரசு சார்பில் சென்று உள்ளார். அவர் கொண்டு சென்ற பட்டுவஸ்திரம் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. அப்படியிருக்கும் போது இப்போது ஜெகன்மோகன் ரெட்டி மீது மட்டும் குறை சொல்வது ஏன்?  ஜெகன்மோகன் ரெட்டியை தேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.  ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடைசியாகத்தான் அனுமதிக்கப்பட்டார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தான் ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்து ஆர்வ மிகுதியால் “ஜெய் ஜெகன்” என கோஷமிட்டனர். அதற்கு எப்படி ஜெகன்மோகன் பொறுப்பாவார்? எங்களுக்கும் தேர்தல் விதிகள் தெரியும், கோவில் விதிமுறைகளும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்[9]. சரி, சோனியா வந்துள்ளார் என்கிறார்களே, அப்படியென்ன அந்த அம்மையாருக்கு ஏழுமலையான் மீது பக்தி?

சோனியா மெய்னோவின் திருமலை விஜங்கள்[10]: சோனியா மெய்னோ 1997ல் திருமைக்கு வந்தபோதே, மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர் அனுமதிக்கப் பட்டார். இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்றபோதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[11]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக் கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது.நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[12]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக

TTD to build ‘Maha Mandapam’ at Tirumala[2]Staff Reporter,Thursday, Nov 25, 2010 TIRUMALA: The TTD management is considering construction of ‘Maha Mandapam’ at the sprawling space available in front of the Tirumala temple complex. The massive structure, which shall come up in a area of about 20,000 square feet will be built with a whopping cost of Rs. 10 crore. The contractor of the project Mr. Rama rao who carried out the ‘soil’ test on Wednesday (24-11-2010) said that the work will be completed in a period of two years. Even though the management had resolved to construct the mandapam in the aftermath of the demolition of the 1,000 pillar mandapam the proposal was however pushed into cold storage for quite some obvious reasons.

பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[13], என்று வர்ணித்தன. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த காரணங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[14]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது. ஆக சாமுவேல் எப்படி கோவிலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதனைப் பார்த்து சந்தோஷிக்கவே வந்தார் போலும்.

திருப்பதிக்குவந்தாலும்பிரசாதம்கிடைக்கும்: அதே போல சோனியா ஏதோ காரணத்திற்காக 17-07-2008 அன்று திருப்பதிக்கு வந்தால் கூடி இந்த அடிமைகள் விடுவதில்லை. போட்டிப் போட்டுக் கொண்டு திருப்பதி ஏர்போர்ட்டுக்கு வந்து லட்டு பிரசாதம், பட்டுப்புடவை இத்யாதி கொடுத்துவிட்டு செல்கின்றன[15]. சாமுவேலைப் பற்றி கேட்வேண்டுமா, இல்லை கருணாகர ரெட்டிதான் விடுவாரா? பாவம், பார்ப்பனர்கள். சத்தியர்கள் ஆணையிடுவதால், வந்து மிலேச்சப் பெண்ணிடம் பிரசாதம் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால், சாதாரண, ஏழை பக்தன் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அதுவுன், இத்தகைய “ராஜ மரியாதை” அவன் கனவிலும் நினைத்ட்குப் பார்க்க முடியாது. ஆனால், இப்பொழுதும், மண்டபத்தை இடித்தற்கு மூச்சுக்கூட விடவில்லை.

மெய்னோதிருப்பதி / திருமலைவந்த / வரும்மர்மம்என்ன?: மறுபடியும் பிப்ரவரி 2011ல் விஜயம் செய்தபோது, ஆந்திரமக்களே சந்தேகப் பட்டனர்[16]. ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டபோது கூட,பக்தர்களின் கொந்தளிப்பை, ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. ஜீயர் சாமி உச்சநீதி மன்றத்திற்குச் சென்றாலும், பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது.

ஆக திருமலைக் கோவிலை இந்திய தொல்துறை கீழ் கொண்டு வந்து விட்டால், அரசுக்கு கீழ் வந்துவிடும், பிறகு கோடிக்கணக்கில் கொள்ளையெடிக்கலாம் என்ற திட்டம் போலும் என்றும் நினைத்தனர். “கண் பட்டுவிடும்” என்றுகூட வெளிப்படையாக பேசினர், எழுதினர்[17].

Seer opposes helipad at Tirumala
2003-11-28Published by Sify.comGathered by Internet Desk – Hindunet TIRUPATI, NOVEMBER 28, 2003: Sri Tridandi Srimannarayana Ramanuja Chinna seer of the Sriman Narayanana Mutt in Andhra Pradesh expressed reservations over the much-publicised idea of constructing a helipad at Tirumala, the abode of Lord Venkateswara. Talking to reporters at Tirumala, the seer took exception to the reported remarks of the Prakash Singh Commission of inquiry, probing security lapses that led to the naxal ambush on Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu on the ghat road recently, that the no-fly zone over the hills was a “farce” and that VVIPs should be allowed to fly by helicopters and land on the sacred hills instead of taking the roads. The seer of the mutt, based in Vijayawada which has a large number of followers, also expressed his dismay over certain practices observed during the performance of rituals in the temple. He urged the temple authorities to immediately stop the use of steam cooking of rice for being offered to the God and instead use firewood. He said the recently demolished centuries-old 1000-pillar mandap infront of the hill temple should be rebuilt at the same place and opposed any move to relocate it. The seer came out against the Government move to construct about 7,300 tiny shrines (Gita Mandirams) in all 294 assembly constituencies by using the Tirumala temple funds.

ஆனால், கடவுளின் தண்டனையிலிருந்து சாமுவேல் ரெட்டி தப்பமுடியவில்லை. கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் புதன்கிழமை, 2 செப்டம்பர் 2009, காலை 9:35 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். ஆனால், திரிதண்டி ஜீயர் என்ற மடாதிபதி, மண்டபத்தை இடித்ததையும் எதிர்த்தார், திருமலையில் ஹெலிபேட் அமைத்ததற்கும் எதிர்த்தார். ஆனால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பாவம், மெய்னோவிற்கு எலிபேட் அமைத்த சாமுவேல், ஹெலிகாப்டர் விபத்திலேயே இறக்க நேரிட்டது. ஏற்கெனவே இந்திய கலாச்சாரத்திற்கு ஆதாரமான சிற்பங்கள் முதலியவற்றை சோனியாவின் ஆதரவுடன் “டிப்ளமேடிக் பேக்” என்ற போர்வையில், இத்தாலியில் அவரது சகோதரி வைத்துள்ள கடைக்குச் செல்வதாக வழக்குகள் போடப்பட்டன. சுபரமணிய சுவாமி போட்ட வழக்குக் கூட நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டது, பல மடங்கள் இடிக்கப்பட்டு ஏதோ விளையாட்டு அரங்கம் போல பெரிய அரங்கம் கட்டப்பட்டது முதலியன பல கேள்விகளை எழுப்புகின்றன. அதுமட்டுமல்லாது, சென்ற ஐந்தாறு வருடங்களில், சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழிகளில் தேவையில்லாமல், அளவிற்கு அதிகமாக முளைத்துள்ள சர்ச்சுகள் சாதாரண மக்கள் மனங்களில் சந்தேகத்தை எழுப்புகின்றனர். மேலும் கிருத்துவர்கள் தங்களது மதப்பிரச்சார-பிரசங்க நோட்டிஸுகள் பக்தர்களிடம் விநியோகிப்பது, வேண்டா வெறுப்பையும், தொந்தரவுள்ளாக்கும் போக்கையும் உண்டாக்கி வருகிறது.

வேதபிரகாஷ்

05-05-2012


[1] Dadabhai Naoroji, Essays, Speeches, Addresses and Writings, Caxton Printing Works,Bombay, 1887, pp.131-136. Also see:

…………………….., The Poverty and Unbritish Rule of India, Publications Division,New Delhi, 2005.

[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை,  மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், 57, பூந்தமல்லி நெடுஞ்சாலைமதுரவயல், சென்னை – 602102, 1989, ப.38-39..

[11] The Hindu, Sonia to offer prayer at Tirumala today, Saturday, Nov 25, 2006,http://www.hindu.com/2006/11/25/stories/2006112501390200.htm

[13] The Hindu, Thursday, Nov 23, 2006, Tight security for Sonia’s Tirumala visit, Staff Reporter

[17] Sonia Gandhi’s ‘Evil Eye’ On Tirumala?, Published Date : 07-Feb-2011 22:00:00 GMT; http://greatandhra.com/viewnews.php?id=26839&cat=15&scat=16

கற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை?

மே 5, 2012

கற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை?


அமர்-அக்பர்-அந்தனி பாணியில் கோர்ட்டில் வக்கீல்கள் வாத-பிரதிவாதங்கள்: இந்தியில் அமர்-அக்பர்-அந்தனி பாணியில் அல்லது தமிழில் சங்கர்-சலீம்-சைமன் பாணியில் சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகி வாத-பிரதிவாதங்கள் புரிந்தது, செக்யூலரிஸ புற்களின் அரிப்பு தாங்கமுடியாமல் போய்விட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[1], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”, என்றெல்லாம் சொன்னபோது, வேடிக்கையாக இருந்தது. அதற்கு என்ன ஆதாரங்கள் என்ரு அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. ஏதோ குற்றஞ்சாட்டவேண்டும் என்ற போக்கில் வாரியிறைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆயிரங்காலமாக இருந்துவரும் ஒரு சைவ மடத்தின் மீது உண்மையிலேயே அக்கரையுள்ளவர்கள் அல்லது படித்துத் தெரிந்து கொண்டவர்கள் இத்தகைய விதத்தில் மனுக்களில் குறிப்பிடமாட்டார்கள், வாதங்களும் செய்திருக்க மாட்டார்கள். இதிலிருந்தே அவர்களுக்கு உண்மையில் இந்து மதத்தில் எந்த அக்கறையும் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.

இந்துமதத்தில் அக்கரையுள்ளவர்கள் வழக்குகள் போடுகிறார்களா? மடாதிபதி, பீடாதிபதி, மதத்தலைவர் என்றாவதற்கு நிச்சயமாக மற்ற மதங்களிலும்[2] போட்டிகள், பொறாமைகள் முதலிய இருந்து வருகின்றன. கற்பழிப்பு, சொத்து மோசடி[3], நில-அபகரிப்பு[4], பணம் கையாடல்[5], சர்ர்சுகளில் சண்டை[6] போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியவிவகாரங்கள் கிருத்துவமதத்திலும், அதே போன்ற பிரச்சினைகள் மற்ற மதங்களிலும் உள்ளன. மற்ற மதத்தினரோ தமது செல்வாக்கினால், அதிகாரத்தினால், பணபலத்தினால் ஏன் மிரட்டல்களினால் மறைத்துவிடுகின்றனர். ஆனால், அவற்றைப் பற்றி செக்யூலர்வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள், அல்லது “இந்து மக்கள் கட்சி” போன்றவர்கள் கண்டு கொள்வதில்லை. அத்தகையப் பிரச்சினைகள் அடிக்கடி வருகின்றன. அவற்றில் குறைந்த அளவிலேயே ஊடகங்களில் வருகின்றன. இருப்பினும் அவர்களை கோர்ட்டில் ஆஜராக இவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை. இந்து மதத்தில் பிரச்சினை என்றால், ஏதோ இந்துக்களுக்கு உதவுவது போல வந்து விடுகிறார்கள்.உண்மையில், இவர்கள் இந்து மத நலன்களுக்கு எதிராகச் செயல் படுகின்றனர் என்பது தான் உண்மை.

மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி தருமபுரம் ஆதீனம் வழக்கு வியாழக்கிழமை, மே 3, 2012, 8:41 [IST]

மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் சதி நடந்துள்ளதாகவும், தற்போதைய ஆதீனத்தை மீட்கவும், நிர்வாகத்தை, அரசே ஏற்க உத்தரவிடக் கோரியும், தாக்கலான வழக்கின் மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. இந்து மக்கள் கட்சித் தலைவர், சோலைகண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: நித்யானந்தா, சைவ சிந்தாந்தத்தை பின்பற்றுபவர் இல்லை. அவரது நியமனத்தில் சதி உள்ளது. ஆதீன சொத்துக்களைப் பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து விசாரிக்கவும், அரசே ஆதீன நிர்வாகத்தை ஏற்கவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனுக்கள் நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், டி.ஹரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகினர்

மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[7], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”. அவர்களிடமிருந்து மதுரை ஆதீனத்தை மீட்டு அவரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், தருமபுரம் ஆதீனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[8].
மதுரை ஆதீனம் சம்பந்தமாக புகார் வந்தால் அரசு தலையிடும்: அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் முகமது மைதீன் வாதிடுகையில், ”ஆதீனம் பிரச்னைக்கு இந்து அறநிலைய துறை சட்டம் 59வது பிரிவின் கீழ் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். மேலும், இந்து அறநிலைய துறைக்கு ஆதீன நிர்வாகம் தொடர்பாக புகார் வரும்பட்சத்தில், சட்டப்பிரிவு 60ன் கீழ் அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி ஆதீன நிர்வாகத்தை தற்காலிகமாக அரசு எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்தப் புகாரும் அறநிலையத் துறைக்கு வரவில்லை’ என்றார்[10].

இதுதொடர்பாக தருமபுரம் ஆதீன மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி அவர் கூறியதை செயல்படுத்தி உள்ளார்.

தற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எடுத்த முடிவு அல்ல. அந்த முடிவினை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர். ஒரு இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தினை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார். அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது[11]. எனவே மதுரை ஆதீனத்தை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தப் புதிய வழக்கால் மதுரை ஆதீனத்திற்கும்,  நித்யானந்தாவுக்கும் சிக்கல் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

நான்யார்கட்டுப்பாட்டிலும்இல்லை: மதுரைஆதீனம்ஐகோர்ட்டில்பதில்[12]: மதுரை ஆதீனம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம்: நான், நித்யானந்தா உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும், சட்டவிரோத காவலிலும் இல்லை[13]. தினமும் பக்தர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். மடத்தை நிர்வகிக்க, சரியான அடுத்த ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. நான் வெளிநாடு செல்ல திட்டமிடவில்லை. மனுதாரர் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் பிறர் தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையான குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்துள்ளார். சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.

பிறர்தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையானகுற்றச்சாட்டுகளுடன், சுயவிளம்பரத்திற்காகஏன் மனுதாக்கல் செய்யப்படவேண்டும்? “இந்து மக்கள் கட்சி” நாத்திக ஆட்சிக்காரர்களின் ஆதரவில், “இந்து முன்னணி”க்கு எதிராக உருவாக்கப் பட்டக் கட்சியாகும். ஒருசில செயல்களைத் தவிர மற்ற செயல்பாடுகள், ஆர்பாட்டங்கள், முதலியவற்றை கவனித்துவரும் போது, அவர்கள் நிச்சயமாக இந்துக்களின் நலன்களுக்கு எதிராக, ஏன் சமயங்களில் மற்ற மதங்களுக்கு ஆதரவாக அரசு தீர்மானங்களை எடுக்க உதவும் முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். எனெவே இப்பொழுதும் அதே போக்கில் அவர்கள் நடந்து கொள்வதை காணமுடிகிறது. இவர்கள் ஏதோ சைவைத்தையே கரைத்துக் குடித்து வந்தவர்கள் போல பேசுகிறார்கள். மனுவில் குறிப்பிடுகிறார்கள். இதைப் படிக்கும்போதே, அவர்களது அஞ்ஞானம் இல்லை, உள்மனது எதிராக செயல்படும் போக்கை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டியுள்ளது.

வேதபிரகாஷ்

04-05-2012


[4] வேதபிரகாஷ்,கிருத்துவர்களின்நிலம்அபகரிப்பு தொடர்கிறது!,

http://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/

வேதபிரகாஷ், நிலமோசடி,ஆக்கிரமிப்புசெய்வதில்ஒன்றும்தவறில்லை சொல்வதுஎஸ்ராசற்குணம்! ,http://christianityindia.wordpress.com/2010/09/27/nothing-illegal-in-encroaching-land-for-church/

வேதபிரகாஷ்,நிலமோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!,

http://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/

[9] தினகரன், 05-05-2012