Archive for the ‘சந்திரசேகர ராவ்’ Category

ரேணுகா சௌத்ரியை வெளியேறச் சொன்ன தெலிங்கானா அமைப்பினர் – சோனியா வாக்குறுதியால் ஆந்திராவில் பிரச்சினை!

செப்ரெம்பர் 16, 2013

ரேணுகா சௌத்ரியை வெளியேறச் சொன்ன தெலிங்கானா அமைப்பினர் – சோனியா வாக்குறுதியால் ஆந்திராவில் பிரச்சினை!

தெலிங்கானா-சீமாந்திரா போராட்டங்களில் சிக்கிய ஆந்திர மக்கள்: தேர்தல் மற்றும் ஆந்திராவில் இருந்த காங்கிரசின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில் “தனித் தெலிங்கானா” மாநிலம் உருவாக்க சோனியா அரசு ஒப்புக் கொண்டது. இதனால், சீமாந்திரா என்ற பெயரில், ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களது போராட்டம், பந்த் முதலியன திருப்பதியை மையமாக வைத்துச் செய்யப் படுவதால், மற்ற மாநிலத்தவர் மீது அதன் பாதிப்பு அறியப்படுகின்றது. 15-09-2013 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற்ற தெலிங்கானா காங்கிரஸ் கூட்டத்தில், முந்தைய மத்திய அமைச்சர் மற்றும் இப்பொழுதைய எம்.பி ரேணுகா சௌத்ரி கலந்து கொண்டபோது, “தெலிங்கானாவிற்கு எதிரான” அவரது போக்கிற்காக, சில தெலிங்கானா தலைவர்கள், அவரை வெளியேறுமாறு கூறினர். நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள், முகம் சிவந்து, வெறுப்படைந்த ரேணுகா சௌத்ரி வெளியேற வேண்டியதாயிற்று[1].

ரேணுகா சௌத்ரி சோனியாவிடம் நெருக்கமாக இருக்கும் பெண்மணி ஆவர்: ரேணுகா சௌத்ரி மிகவும் கர்வம் பிடித்த பெண்மணி என்பது, அவர் கண்கள், உடல், கை-கால்கள் முதலியன பேசுவதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். உண்மையில் பேசும் போது, தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்பது போல, துச்சாமாசடுத்தவரை எடுத்தெறிந்து பேசும் மனோபாவமும் வெளிப்படும். டிவி-செனல்களில் அவர் கலந்து கொண்டு பேசும் போது, உரையாடும் போது, விவாதிக்கும் போது, அந்த குணாதிசயங்களை தாராளமாகக் கண்டு களிக்கலாம். சோனியாவோடு மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. சோனியாவோடு சேர்ந்து ஆடிய பெருமை இவருக்கு மட்டும் தான் உண்டு என்று தெரிகிறது. இதனால், இவரை மத்தியஸ்தம் செய்ய அனுப்பலாம் என்ற நோக்கில், அனுப்பியிருக்கலாம்.

தெலிங்கானா விசயத்தில் மற்ற மாநிலத்தவர் பாதிக்கப்படுவது: சோனியா “தெலிங்கானா” பிரச்சினை மூலம், ஆந்திரர்களை, தெலுங்கு பேசும் மக்களை இரண்டாக உடைத்துள்ளார். இதனால், தெலுங்கு மக்கள் மீது மற்ற மாநிலத்தில் வெறுப்புக் கொள்ளும் வகையில் காரியங்கள் நடக்கவும் சோனியா காரணமாகிறார். குறிப்பாக திருப்பதி—திருமலை செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த பிரச்சினையால் முழுவதுமாக பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த வாரத்தில், மின்சாரத் துறையினர் வேலைநிறுத்தம் செய்ததால், அதிகமாகவே பாதிக்கப்பட்டனர். தெலிங்கானா பிரச்சினை, நிச்சயமாக ஆந்திர மக்கள் மட்டுமல்லாத, மற்ற இந்திய மக்களையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது. முன்னர் சோனியா, திருப்பதி-திருமலை பகுதியை மையமாக வைத்துக் கொண்டு ஆரம்பித்த நாடகத்தால், அவர்களும் அதே பகுதியில் பந்தை செய்கின்றனர்.

ரேணுகா சௌத்ரி முன்னர் தெலிங்கானா இயக்கத்தினரை விமர்சனம் செய்தது: போதாகுறைக்கு ஜகன்மோஹன் ரெட்டி சோனியாவிற்கு எதிராகத் திரும்பிவிட்டதாலும், “சீமந்திரா” என்று ஆந்திரபிரதேசத்தைப் பிரிக்கக் கூடாது என்று போராட ஆரம்பித்தவர்களின் தாக்கம் அதிகமாவதாலும், சோனியா உடனே இப்பிரச்சினையை சமாளிப்பதற்காக ரேணுகா சௌத்ரியை அனுப்பியிருப்பது தெரிகிறது. ஆனால், முன்னர் இவர் “தெலிங்கானா” போராளிகளை “குண்டர்கள்” என்பது மாதிரி பேசியிருக்கிறார். இதற்கு மன்னிப்புக் கோரக் கூறியபோது, அவர் ஒப்புக்கொள்ளவில்லை[2]. அதுமட்டுமல்லாது, தெலிங்கானாவில் ஆயிரக்கணக்கானவர் இறந்தபோது, அவர்கள் எல்லோரும் கேன்சரால் இறந்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்[3]. இத்தகைய நடத்தையால், சில தெலிங்கானா தலைவர்கள், அவரை வெளியேறுமாறு கத்தினர். “இவரை யாரும் அழைக்கவில்லையே. அப்படியிருக்கும் போது, ஏன் அவர் இந்த கூட்டத்திற்கு வரவேண்டும்?”, ஏன்று கோபத்துடன் கரீம்நகர் எம்.பி பூனம் ரெட்டி கேட்டார்[4]. இதனால், அவமானத்துடன், ரேணுகா சௌத்ரி வெளியேற நேர்ந்தது.

குழப்பமான   ஹைதராபாத்  நிலை: ஹைதராபாத் பொது தலைநகராக இருக்க வேண்டுமா, கூட்டுத் தலைநகராக இருக்க வேண்டுமா, யூனியன் டெரிடரி ஏன்ற நிலையில் இருக்கவேண்டுமா ஏன்ற விவாதம் ஏற்கெனவே நடந்துள்ளது[5].  இதற்கு தெலிங்கானா போராட்டக்காரர்கள் விரும்பவில்லை, எதிர்க்கிறார்கள் என்றும் தெரிந்த விசயம் தான்[6]. காங்கிரஸ் காலந்தாழ்த்துகிறது, சீமந்திரா தலைவர்களுடன் சேர்ந்து பேசுகிறது, ஹைதரபாத் விசயத்தில் அவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதால், சோனியாவை சந்தித்து பேச தயாராக உள்ளார்கள்.

ஆகஸ்டிலிருந்து  திருப்பதியி ல் தொடரும்  சீமாந்திரா  போராட்டம்: சோனியா தெலிங்கானா மாநிலம் அமைய அறிவித்ததிலிருந்து, தெலுங்கானாவுக்கு எதிராக சீமாந்திராவில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அது நீடித்து வரும் நிலையில் திருப்பதியிலும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துவிட்டதால், கோயில் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. தெலுங்கானாவுக்கு எதிராக கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகியவற்றை உள்ளடக்கிய சீமாந்திராவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதிக்கான எல்லையை மூடும் போராட்டத்தை ஒருங்கிணைந்த ஆந்திராவை கோரும் கூட்டுக் குழு அறிவித்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக திருப்பதிக்கான எல்லை மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது[7]. மேலும் திருப்பதியில் இருந்து மேலே திருமலைக்கு வாகனங்களை இயக்கவும் திருப்பதியில் கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களைத் திறக்கவும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் போராட்டக் குழு அறிவித்தது. வெளிமாநில வாகனங்கள் திருப்பதிக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படாது, ரயில்கள் மட்டும் ஓடும் என்றும் போராட்டக் குழுவினர் அறிவித்தனர். இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.

செப்டம்பரில் மின்-துறை அலுவலகர்கள் போராட்டம்-பந்த்: ஆந்திர மாநிலம், ராயலசீமா பகுதியைச் சேர்ந்த மின் ஊழியர்கள், 13-09-2013 நள்ளிரவு முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கி, “தனித் தெலுங்கானா அறிவிப்பை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும்’ என, ராயலசீமா பகுதி, மின் ஊழியர்கள் தெரிவித்தனர். ராயலசீமா பகுதியில், கடப்பா, சித்தூர், பிரகாசம், அனந்தபுரம், கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. வேலை நிறுத்தத்தில், ராயலசீமாவின், 30 ஆயிரம் மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இப்பகுதியில், தேவையான 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பதிலாக, தினசரி, 6,000 மெகா வாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பாக்கியுள்ள மின்சாரத்தை, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வாங்கி, பற்றாக்குறையை சமாளித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், ஒட்டு மொத்த மின் ஊழியர்களும், போராட்டத்தில் குதிப்பதால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அதை எப்படி சமாளிப்பது என்பது புரியாமல், ஆந்திர மாநில அரசு, திகைத்து போய் உள்ளது. மின் ஊழியர்களின் போராட்டத்தால், அனைத்து மாவட்டங்களிலும், மின் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் என்பதால், மின் வினியோகம் தடைபடுவதால், மின்சார ரயில்கள் இயங்காது என்றும், மின் ஊழியர் சங்கங்கள் தெரிவித்து உள்ளன. மின் ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட “சிம் கார்டு’களை 12-09-2013 மாலை, 5:00 மணியளவில், அரசிடம் ஒப்படைத்தனர்.

தேவஸ்தானம் சமாதான முயற்சி தோல்வி: “திருமலைக்கு செல்லும் எந்த வாகனத்தையும், 13ம் தேதி நள்ளிரவு முதல், 15ம் தேதி நள்ளிரவு வரை அனுமதிக்க முடியாது’ என, தெலுங்கானா எதிர்ப்புக் குழுவினர், அறிவித்ததையடுத்து, திருமலை – திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, செயல் இணை அதிகாரி மற்றும் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி ஆகியோர், திருப்பதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் மகேஸ்வர ராவை சந்தித்துப் பேசினர். அப்போது, “திருமலைக்கு வரும் பக்தர்களை தடுக்க வேண்டாம்’ என, கோரிக்கை விடுத்தாலும், “தனித் தெலுங்கானா மாநிலம் அமைவதை எதிர்த்து நடைபெறும், உச்சக்கட்ட போராட்டம் என்பதால், கோரிக்கையை ஏற்க முடியாது’ என, அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் மறுத்து விட்டார். மேலும், “மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், முக்கிய அரசு அலுவலகங்களை இயக்க உதவ வேண்டும்’ என்ற ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் வேண்டுகோளையும், போராட்டக் குழுவினர் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், கடந்த 08-09-2013 முதல், திருப்பதி வழியாக செல்லும், நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதிக்கு வராமல், ரேணிகுண்டாவில் நேரடியாகச் சென்று விடுகிறது. ரயில்வேயின் இந்த முடிவால், இந்த ரயிலில் பயணிக்கும் பக்தர்கள், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது[8]. ஆனால், அதிகாரிகளைப் பொறுத்த வரைக்கும் இப்பொழுதைய சூழ்நிலையில் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்கின்றனர்.

சோனியா அரசியல் சூதாட்டத்தில் சிக்கிய திருப்பதி  (2011-2013): திருப்பதியை மையமாக வைத்து, அரசியல் செய்யலாம் என்ற சோனியாவின் திட்டம், சாமுவேல் ராஜசேகர ரெட்டி காலத்திலேயே வெளிப்பட்டது. திருப்பதிக்கு செல்லும் வழிகளில் அதிகமாக சர்ச்சுகள் கட்டப்பட்டன. திருமலையிலேயே, கிருத்துவர்கள் பிரசாரம் மேற்கொண்டார்கள் என்ற புகாரும் எழுந்தது. கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளைக் கொடுத்தவர்கள் கைதும் செய்யப் பட்டனர். பொதாகுறைக்கு, திருமலை கோவிலுக்கு எதிராக இருந்த, இடைக்காலத்திய 1000-கால் மண்டபம் இடிக்கப்பட்டது[9]. சிரஞ்சீவியை காங்கிரசில் வளைத்துப் போட்டனர். அவருக்கு அமைச்சர் பகுதியும் கொடுக்கப்பட்டது. ஆனால், மக்கள் வேறுவிதமாக நினைக்க ஆரம்பித்து விட்டனர். இதன் பின்னணியை அறிய 15 ஆண்டுகள் முன்பிலிருந்து நடந்து வரும் நிகழ்சிகளை ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது. ஏனெனில், அதிசயமாக சோனியா திருமலைக்கே விஜயம் செய்தார்!

சோனியா மெய்னோவின் திருமலை விஜங்கள்[10] (1997-2006): சோனியா மெய்னோ 1997ல் திருமைக்கு வந்தபோதே, மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர் அனுமதிக்கப் பட்டார். இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்றபோதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[11]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக் கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது.நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[12]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக

TTD to build ‘Maha Mandapam’ at Tirumala[2]Staff Reporter,Thursday, Nov 25, 2010 TIRUMALA: The TTD management is considering construction of ‘Maha Mandapam’ at the sprawling space available in front of the Tirumala temple complex. The massive structure, which shall come up in a area of about 20,000 square feet will be built with a whopping cost of Rs. 10 crore. The contractor of the project Mr. Rama rao who carried out the ‘soil’ test on Wednesday (24-11-2010) said that the work will be completed in a period of two years. Even though the management had resolved to construct the mandapam in the aftermath of the demolition of the 1,000 pillar mandapam the proposal was however pushed into cold storage for quite some obvious reasons.

பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[13], என்று வர்ணித்தன. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த காரணங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[14]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது. ஆக சாமுவேல் எப்படி கோவிலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதனைப் பார்த்து சந்தோஷிக்கவே வந்தார் போலும்.

© வேதபிரகாஷ்

16-09-2013


[1]Telangana Congress meeting on Sunday turned raucous when former Union minister and Rajya Sabha MP Renuka Chowdhury was asked to leave by a few leaders for her alleged anti-Telangana stand. Attempts by senior leaders to salvage the situation failed and a vexed Chowdhury left in high dudgeon.

http://timesofindia.indiatimes.com/india/Telangana-leaders-snubs-Renuka-she-leaves-in-a-huff/articleshow/22611846.cms

[2] Choudhury was left red-faced when some members reminded her how she had once called Telangana activists “goonda elements” and demanded an apology.

http://timesofindia.indiatimes.com/india/Telangana-leaders-snubs-Renuka-she-leaves-in-a-huff/articleshow/22611846.cms

[3] “Renuka Chowdhury’s anti-Telangana stand is well-known. I don’t know why she came for the meeting when no one invited her. When thousands had committed suicide for the cause of Telangana, she had said the deaths were due to cancer,” said an angry Karimnagar MPPonnam Prabhakar.

[4] “Renuka Chowdhury’s anti-Telangana stand is well-known. I don’t know why she came for the meeting when no one invited her. When thousands had committed suicide for the cause of Telangana, she had said the deaths were due to cancer,” said an angry Karimnagar MPPonnam Prabhakar.

[11] The Hindu, Sonia to offer prayer at Tirumala today, Saturday, Nov 25, 2006,http://www.hindu.com/2006/11/25/stories/2006112501390200.htm

[13] The Hindu, Thursday, Nov 23, 2006, Tight security for Sonia’s Tirumala visit, Staff Reporter