Archive for the ‘கோப்பை’ Category

தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (3)?

நவம்பர் 8, 2015

தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும்இந்தியஇந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (3)?

தீபாவளி எதிர்ப்பு - அதியமான் - ஆ.த.பே

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: இதைப்பற்றி முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. இனி தமிழகத்து கோணத்தில் பார்ப்போம். தமிழகத்தைப் பொருத்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்து, தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்கல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள்[1]. வீரமணி கோஷ்டிகள் விளாசித் தள்ளி விடுவார்கள். இம்முறை, அது “விடுதலையில்” ஆதித்தமிழர் பேரவை உருவத்தில் ஆரம்பித்துள்ளது.

போத்தீஸ், கமல், தீபாவளி

போத்தீஸ், கமல், தீபாவளி

மது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு: தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க ஆதித் தமிழர் பேரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனத் தலைவர் அதியமான் திருச்சியில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி[2]: “மது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளியன்று மட்டும் டாஸ்மாக்கில் ரூ.350 முதல் 400 கோடி வரை விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுவால் ஏற்படும் பிரச்னைகளால் தலித் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதை முறியடிக்கும் வகையில் அன்றைய தினம் நாங்கள் வீடுவீடாகச் சென்றும், டாஸ்மாக் கடைகள் முன்பாக நின்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரசாரம் செய்வோம். நாட்டில், கருத்து சொல்வது கூட தவறு என்பது போல், சங்பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன[3]. சிறுபான்மை மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யாமல், இந்த அரசு செயல்பட்டு வருகிறது[4]. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போக்கு அதிகரித்துள்ளது”, என்றார்.  அப்போது பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்டச் செயலாளர் குயிலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்[5]. இப்படி தினகரன், தினமலர், நக்கீரன் முதலியவை சுருக்கமாகக் கொடுத்துள்ளது. மற்ற குறிப்பிட்ட இணைதளங்கள் அதியமானின் அறிக்கை என்று கீழ்கண்டவாறு முழுவதுமாக வெளியிட்டுள்ளன.

தீபாவளி எதிர்ப்பு - அதியமான் - ஆ.த.பே- அறிக்கை. கீற்று.காம்

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை. கீற்று.காம்

மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமைதானே, பிறகு ஏன் அதை எதிர்க்கிறார்கள்?: தெரிந்தோ, தெரியாமலோ, நன்னத்தை, ஒழுக்கம், பண்பு, கட்டுப்பாடு, தூய்மை என்றெல்லாம் பேசும் போது, பலவித நற்குணங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் பதிஎன்கீழ்கணக்கில், “நீதி நூல்கள்” அதிகமாகவே உள்ளன. 19-20ம் நூற்றாண்டுகள் வரை தமிழச்சிகள், தமிழச்சன்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள, இங்கிலீஷ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே” என்றேல்லாம் பாடல்கள் எழுதப்பட்டு, பட்டி-தொட்டில்களில் எல்லாம் ஒலித்தன. ஆனால், இன்றோ, நிலைமை வேறுமாதிரி இருக்கிறது:

  1. பப்புக்கு போவது என்னுடைய உரிமை!
  2. குடித்து ஆடுவது என்னுடைய உரிமை!!
  3. குடித்து மற்ற ஆணோடு அல்லது பெண்ணோடு சேர்ந்து ஆடுவது என்னுடைய உரிமை!!
  4. திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், சேர்ந்து வாழ்வது என்னுடைய உரிமை.
  5. தாலி கட்டினாலும், கழட்டிப் போடுவது, வெட்டுவது முதலியனவும் என்னுடைய உரிமை.
  6. நான் ஆணாக இருந்தாலும், ஆணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை!!
  7. நான் பெண்ணாக இருந்தாலும், பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை!!
  8. என்னுடைய உரிமையில் யாரும் தலையிட முடியாது!!
  9. என்னை இதை சாப்பிடு, அதை சாப்பிடு அல்லது சாப்பிடாதே என்று சொல்லமுடியாது!!!
  10. அதேபோலத்தான் இவையெல்லாம்!!!!!!!!!

பிறகு குடிப்பதைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும். சங்கத்தமிழ் சமூகத்தில் குடியும், கூத்தியும் விலக்கப்பட்டதல்ல[6]. ஆகவே, அவற்றை சமூகத்தில் இருக்கக்கூடாது என்று ஏன் விலக்க வேண்டும். மேலும் இதற்கெல்லாம், வெறெதையோ ஏன் குற்றஞ்சாட்ட வேண்டும்?

தீபாவளி எதிர்ப்பு - அதியமான் - ஆ.த.பே- அறிக்கை.இந்நேரம்.காம்

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை.இந்நேரம்.காம்

பாரதீய ஜனதாவின் மோடி இந்துத்துவ அரசுதான்[7]: அதியமான் சொல்கிறார், “அரசு இந்தியா என்பது பலதரப்பட்ட மொழியை பேசக்கூடியவர்களும், பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் வாழக்கூடிய, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதச்சார்பற்ற மாபெரும் ஜனநாயக நாடு. இங்கு வாழுகின்ற மக்கள் அனை வரும் இனத்தாலும் மொழியாலும் கலாச்சார பண்பாட்டாலும் மாறுபாடு கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே! இந்திய அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள நீதி. அந்த நீதியின் அடிப்படையில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள சட்ட நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தரத்து மக்களையும் பாகுபாடின்றி, அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட ஆட்சிபுரிய வேண்டும் என்பதே! அதனுடைய விதி[8]. ஆனால்! அந்த விதிகள் எவற்றையும் பின்பற்றாமல் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாவின் மோடி அரசு. இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட பழங் குடியின மக்களுக்கும் உரிய பாது காப்பை உறுதி செய்யாமல் இந்துமத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் துணைபோவது என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை மறைமுகமாக தூண்டி விட்டு தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதைப் பார்க்கின்ற போது, இது ஓர் இந்துத்துவ அரசுதான்! என்பதை வெளிப் படையாகவே உறுதிசெய்கிறது”.

தீபாவளி எதிர்ப்பு - அதியமான் - ஆ.த.பே- காரணங்கள்

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- காரணங்கள்

மத்தியமாநில அரசுகளை எதிர்க்க தீபாவளியை எதிர்ப்போம்[9]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “பகவத்கீதையை தேசிய நூல் என்பது, சமஸ்கிருதத்தை உலக மொழி தகுதிக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள், கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவங்கள், மாட்டுக்கறி உண்டதற்காக நடத்திக்காட்டிய கோரப்படுகொலைகள் என நீளும் இந்த அராஜகங்களின் விளைவாக மதுவெறி, மதவெறி, ஜாதி வெறிகளைத் தூண்டி நாட்டை அமைதியிழக்கச் செய்யும் மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க. தமிழகஜெஅரசோ! பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்கின்ற வகையில் மத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கி வருகிறது. மக்களை மரணக்குழிக்கு அனுப்பும் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்தாமல், மக்கள் விரோத போக்கையே கடைபிடித்து வருகிறது[10]. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாமல்  செயலற்ற மக்கள் விரோத அரசாக இருந்து வருவது மேலும் வேதனை அளிக்கின்றது. இப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற இந்தியாவை மதுவெறி, மதவெறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு நாட்டை துண்டாடும் மதவாத, ஜாதியவாத சக்திகளின் செயல்களுக்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி, “தீபாவளியை புறக்கணிப்பதுஎன்று ஆதித்தமிழர் பேரவை முடிவு செய்து, மக்களை விழிப்பூட்டி ஒன்றுபடுத்தும் வேலையில் ஈடுபடுகின்றது”.

© வேதபிரகாஷ்

08-11-2015

[1] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/111650-2015-11-08-09-47-13.html

[2] தினகரன், தீபாவளியை புறக்கணிக்க ஆதி தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நேரம்:2015-11-02 13:03:45.

[3]  தினமலர், தீபாவளி புறக்கணிப்பு போராட்டம்: ஆதி தமிழர் பேரவை அறிவிப்பு, நவம்பர்.2, 2015.06.50.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1378107

[5] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=504517&cat=504

[6]  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் படித்துப் பார்க்கவும். இன்றைய தமிழர்கள் அவற்றையெல்லாம் படிப்பார்களா என்று தெரியவில்லை.

[7] அதியமான், மதுவெறி, மதவெறி ஜாதி வெறியை எதிர்த்து  தீபாவளியைப் புறக்கணிப்போம்!, விடுதலை, நவம்பர்.7, 2015, பக்கம்.3.

[8] நக்கீரன், மதவெறி, சாதிவெறியை எதிர்த்து தீபாவளி புறக்கணிப்பு: ஆதித்தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நாள் : 1, நவம்பர் 2015 (0:54 IST) ; மாற்றம் செய்த நாள் :2, நவம்பர் 2015 (8:39 IST).

[9]  http://www.viduthalai.in/page3/111562.html

[10] மது உற்பத்தி, விநியோகம், விற்பனை, அவற்றிலிருந்து வரும் லாபக்கொள்ளை, இவற்றில் மிதப்பவர்கள் யார் என்று இப்போராளிகள் எடுத்துக் காட்டுவார்களா?