Archive for the ‘ஆராய்ச்சியாளர்கள்’ Category

மனித நேய மக்கள் கட்சி வைத்த பதாகை, எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி, வருத்தம் தெரிவித்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா!

ஜூலை 30, 2023

மனித நேய மக்கள் கட்சி வைத்த பதாகை, எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி, வருத்தம் தெரிவித்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா!

மணிப்பூர் பிரச்சினை தமிழகத்தில் அரசியலாக்கப் படுவது: மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வைத்துள்ள பேனர் சர்ச்சையை ஏஎற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதைப் பற்றி தினமும் இணைதளங்களில் விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்த பிரச்சினை சம்பந்தப் பட்டு, கருத்துத் தெரிவித்த பத்ரி சேஷாத்ரி என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். அந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி இவ்வாறு அரசியல் மற்றும் மதரீதியில் பதாகை வைத்துள்ளது திகைப்பாக இருக்கிறது.

தமிழக முஸ்லிம் கட்சிக்கு மணிப்பூர் பழங்குடி பிரச்சினை இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்தது ஏன், எப்படி?: இங்கு பழங்குடியினர், பட்டியல், பழங்குடியினர் பட்டியல், கிறிஸ்தவர் எதிர்ப்பு முதலிய விசயங்களைப் பற்றி விவாதிக்காமல் இருக்கின்றார்கள். பர்மா / மியாம்பாரிலிருந்து இந்தியாவில் அந்நாட்டினர் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். ரோஹிங்யா முஸ்லிம்கள் நுழைவது தெரிந்த விசயமாகி விட்டது. அதை வைத்து தான் மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களில் முஸ்லிம் அரசியல் நடத்தப் படுகிறது. இங்கு, கிறிஸ்தவர்களாக பழங்குடியினர் இருக்கின்றனர். அதே நேரத்தில் கிறிஸ்தவர் அல்லாத இந்துக்களும் பழங்குடிகளாக இருக்கின்றனர். இதனால், அவர்களுக்கும் எஸ்.டி அந்தஸ்து கொடுக்கவேண்டும் எனும்பொழுது, அதில் தான் இப்பிரச்சினை வந்துள்ளது. அதை ஏன் இன்னொரு பழங்குடி எதிர்க்க வேண்டும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை மதமா, மொழியா, கலாச்சாரமா அல்லது எது. ஆனால், இதைப் பற்றி விவாதிக்காமல் குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய எதிர்கட்சியினர் தீர்மானித்து, அதை இங்கு தமிழகத்தில் ஒரு முஸ்லிம் கட்சி கையாள்வது திகைப்பாக இருக்கிறது.

குழப்பமான, சிக்கலான, ஜாக்கிரதையாக அணுக வேண்டியுள்ள மணிப்பூர் பிரச்சினை: மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர். இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். அம்மாநில பிரச்சினைகள் பலவிதங்களில் விவரிக்கப் பட்டு வருகின்றன. பலவிசயங்களில் வெளிப்படையாக விவாதிக்கப் படும் நிலையிலுமில்லை எனத்தெரிகிறது.

ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைக்கைப் பட்டது:  கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்கும் விதமாக, நிர்வாணமாக வேதனையுடன் நிற்கும் பெண்ணின் அங்கங்களை தேசியக் கொடிக் கொண்டும் மறைத்து, அவளின் அருகில் ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைத்துள்ளனர். மனித நேய மக்கள் கட்சி ஒரு முஸ்லிம் கட்சி, அதற்கும் இதற்கும் இப்பொழுது என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இருப்பினும், ஆளும் திமுகவுடன் கூட்டு சேர்ந்து, “திராவிடத்துவ” சித்தாந்தத்தை ஆதரிப்பது போலக் காட்டிக் கொள்வதால், அது இவ்வாறு அரசியல் மற்றும் மதம் என்று இரண்டையும் சேர்த்து, இத்தகைய பதாகை வைப்பது கேள்விக்குரியாகியுள்ளது.

பிஜேபி எதிர்ப்புத் தெரிவித்தது, போலீஸார் பதாகையை அப்புறப்படுத்தியது: திண்டுக்கல் வத்தலக்குண்டுவை சேர்ந்த பா.ஜ.க.வினர் 29-07-2023 அன்று வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டுவில், காளியம்மன் கோவில் பகுதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பேனர் வைத்துள்ளது. அந்த பேனரில் ராமர், சீதா, லட்சுமணன் போன்று சித்தரித்து இருப்பதாகவும், தேசியக்கொடியை அவமதித்து இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காளியம்மன் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றினர்[1]. அதன்பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[2]. இங்கும் போலீஸார் தான் அதனை அப்புறப் படுத்தியுள்ளார்கள் என்று தெரிகிறது. மனித நேய மக்கள் கட்சியினர் அப்புறப் படுத்தவில்லை என்றாகிறது.

பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மனித நேய மக்கள் கட்சி தடை செய்யப் பட வேண்டும் என்று அறிக்கை விடுத்தது: இந்த நிலையில், மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3]. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, நமது நாட்டையும், இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என அந்த பேனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[4]. இந்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இதனைச் செய்த மனிதநேய மக்கள் கட்சியைத் தமிழகத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் ட்விட்டரில் பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, மனித நேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்[5]. முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை செய்யும் காவல் துறை, இந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும் பதர்களைக் கைது செய்யாதது ஏன்? மதக் கலவரத்திற்கு வித்திடும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளை, தலைவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்?,” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[6].

மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா அருத்தம் தெரிவித்தது: முன்னதாக, இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து இரு அவைகளிலும் விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது[7]. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்[8], “திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மணிப்பூர் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஒரு விரும்பதகாத விளம்பர தட்டி ஒன்று கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் வைக்கப்பட்டிருந்தது[9]. இப்படியான ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததும் மேல் நிலை நிர்வாகிகள் இத்தட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள்[10]. தட்டி வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில்.  போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த விரும்பதகாத தட்டி அப்புறப்படுத்தப்பட்டது[11]. மனிதநேய மக்கள் கட்சி எந்த மதத்தினரின் உள்ளங்களையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் கட்சியல்ல[12]. இந்த விரும்பத்தகாத தட்டி வைப்பதற்கு காரணமானவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட்டார்கள்[13]. அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்,” என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்[14].  

பிஜேபி எதிர்ப்பு அரசியல்-இந்துஎதிர்ப்பு: அமித் ஷா வந்துள்ள நிலையில், இத்தகைய நிகழ்ச்சி நடந்துள்ளது. நிச்சயமாக, தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மணிப்பூர் பிரச்சினை முழுவதுமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது, எதிர்க்கட்சியினர் இதனை வைத்து அர்சியல் செய்யும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கற்பனை அவ்வாறு வேலை செய்து, அரசியல் மற்றும் மதரீதியில் தாக்க அத்தகைய சித்தரிப்பைச் செய்துள்ளனர். முன்பு பெரியார், திகவினர் தயாரித்த ஆபாச சித்திரங்கள் போலத்தான் இதுவும் உள்ளது. அதனால், தலைவரும் இரச்சினை பெரிதாகும் முன்பே, ஜவாஹிருல்லா எம்எல்ஏ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இனிமேல் அரசியல்வாதிகள் தங்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்வதானால், இந்து மத சின்னங்களை தவறாகப் பயன் படுத்தக் கூடாது என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டிய விசயங்கள்: ஒரு சாதாரண இந்து என்ற முறையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

  1. வத்தலகுண்டுவில் வைக்கப் பட்ட சர்ச்சைக்குரிய பதாகையை அப்புறப் படுத்தியது மனிதநேய மக்கள் கட்சி மேல் நிலை நிர்வாகிகளா, போலீஸாரா?
  2. இருவரும் அப்புறப் படுத்தினர் என்றால் பல பதாகைகள் வைக்கப் பட்டது போலும். அத்தகைய சித்திரிப்பு எவ்வாறு வந்தது?
  3. முன்பு பெரியார், திகவினரின் சித்தரிப்பு போன்றுள்ள இது அத்தகையதா? அரசியலுடன் ஏன் மதத்தை சம்பந்தடுத்தப் படுத்துகின்றனர்?
  4. அப்படியென்றால் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா பிரச்சினை பெரிதாகும் முன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்!
  5. ஆக இனி தமிழக அரசியல் கட்சிகள் பிஜேபி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பர்!
  6. மலேசிய இந்துக்கள் மற்றும் வத்தலகுண்டு இந்துக்கள், இந்து துவேச-எதிர்ப்பாளர்களுக்கு பாடம் போதித்துள்ளனர்.
  7. எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் இருந்தாலும், இனி இந்துவிரோத பேச்சு, செயல், விமர்சனம் என்றெல்லாம் வரும் போது யோசிப்பர் எனலாம்!
  8. பெரியாரிஸம், நாத்திகம், செக்யூலரிஸம் போன்ற போர்வைகளில் தொடர்ந்து இந்துமதத்தைத் தாக்கினால் இந்துக்கள் தட்டிக் கேட்கவேண்டும்.
  9. ஜவாஹிருல்லா இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்!
  10. இது போல இனி திருமா அல்லது வீரமணி போன்றோரும் தங்கள் இஷ்டத்திற்கு பேசினால், எழுதினால் புகார் அளிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

30-07-2023


[1]  தினத்தந்தி, போலீஸ் நிலையத்தை பா...வினர் முற்றுகை, தினத்தந்தி ஜூலை 29, 1:30 am (Updated: ஜூலை 29, 1:30 am)

[2] https://www.dailythanthi.com/News/State/bjp-lay-siege-to-the-police-station-1018247

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், மணிப்பூர் பெண்கள் விவகாரம்: மனித நேய மக்கள் கட்சி பேனருக்கு எதிர்ப்பு!, Manikanda Prabu, First Published Jul 30, 2023, 12:54 PM IST; Last Updated Jul 30, 2023, 12:54 PM IST,

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/condemns-over-manithaneya-makkal-katchi-poster-opposes-manipur-women-issue-ryllwn

[5] காமதேனு, சர்ச்சை பேனர்மனிதநேய மக்கள் கட்சியைத் தடை செய்ய கோரும் பாஜக!, Updated on : 29 Jul 2023, 9:15 pm

[6] https://kamadenu.hindutamil.in/politics/tnbjp-said-manitha-neya-makkal-party-should-be-banned

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ராமர், லட்சுமணனாக மோடி, அமித்ஷா.. வருத்தம் தெரிவித்தார் ஜவாஹிருல்லா! அப்படி என்ன பேனர் அது?, By Noorul Ahamed Jahaber Ali Published: Sunday, July 30, 2023, 9:07 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/mmk-leader-jawahirullah-said-regret-for-controversial-banner-in-dindugal-525279.html

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ராமர், லட்சுமணன், மோடி, அமித்ஷா படத்துடன் போஸ்டர்: எதிர்த்த பா..; வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா, Written by WebDesk

July 30, 2023 14:10 IST.

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/narayanan-thirupathy-condems-manithaneya-makkal-katchi-jawahirullah-asks-sorry-poster-731529/

[11] தமிழ்.வெ.துனியா, சர்ச்சைக்குரிய விளம்பர பதாகை: மனிதநேய மக்கள் கட்சி விளக்கம்..!, Written By Siva Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2023 (14:31 IST).

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/manitha-neya-makkal-katchi-explain-about-controversy-banner-123073000035_1.html

[13] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் மமக! கொதிக்கும் பாஜக! வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா! நடந்தது என்ன?, vinoth kumar, First Published Jul 30, 2023, 8:42 AM IST; Last Updated Jul 30, 2023, 8:49 AM IST.

[14] https://tamil.asianetnews.com/politics/controversy-banner-jawahirullah-expressed-regret-ryla8i

பெரியாரிஸ வக்கிரமும் திராவிடத்துவ இந்துவிரோதமும், இந்துவிரோத தூஷணங்களும்: ஈவேரா முதல் ஸ்டாலின்வரை (1)

ஒக்ரோபர் 4, 2022

பெரியாரிஸ வக்கிரமும் திராவிடத்துவ இந்துவிரோதமும், இந்துவிரோத தூஷணங்களும்: ஈவேரா முதல் ஸ்டாலின் வரை (1)

இந்துஎதிர்ப்பில் முடியும் பிஜேபிஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு: தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் அரைவேக்காட்டுத் தனமாக, முழுவிவரங்கள் தெரியாமல், திமுகவை ஆதரிக்க வேண்டும் அல்லது அரசை போற்றவேண்டும், அப்பொழுது தான் பிரச்சினை இல்லாமல் வியாபாரம் நடக்கும், தொழில் நடக்கும் என்று பலரும் பேசி-எழுதி வருவது தெரிந்த விசயமாக இருக்கிறது. குறிப்பாக, சினிமா, ஊடகம், விளம்பரம் சம்பந்தப் பட்ட துறைகள், வணிகங்கள் முதலியவற்றில் திமுகவைப் பகைத்துக் கொண்டு, யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான், பிஜேபியே பலநேரங்களில் அமுக்கி வாசிக்கிறது. இந்துத்துவ வாதிகள் கூட சும்மா கொஞ்ச நேரம் கத்திவிட்டு அமைதியாகி விடுவர். மத்திய அரசு உதவி, ஆதரவு முதலியவை தேவை என்பதால் சினிமாக்காரர்கள் “காரட்-அன்ட்-ஸ்டிக்” பாலிசியைக் கடைபிடித்து சாதித்துக் கொள்கிறார்கள். இந்துவிரோதம் என்பதனை பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பில் ஆரம்பித்து முடிப்பார்கள். இதனை, பலமுறை நான் எடுத்துக் காட்டியுள்ளேன்.

போன்ற திராவிட, திராவிடத்துவ பெரியாரிஸ பாசிஸம் செயல்படுகிறதா?: இந்த இந்துவிரோத கூப்பாடிகள், கூத்தாடிகள், சித்தாந்த கூலிகள், திராவிடத்துவ அடிமைகள், தொடர்ந்து அந்த வெறுப்பை, காழ்ப்பை, தூஷணத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  ஆனால், இவர்கள் எல்லோருமே அம்பேத்கர் தொகுத்த அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, இந்துக்கள் தாம். அம்பேத்கர் எயரைச் சொல்லி அரசியல் நடத்தும் இவர்கள் இதனையே மறைத்துத் தான் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இல்லையென்று தாராளமாக அறிவித்து, தங்களது சான்றிதழ்களை அரசிடம் ஒப்புவித்து, கொடுத்து விட்டு, இந்துக்கள்-அல்லாதவராகி விடலாம். ஆனால், முட்டாள்தனமாக, அறிவற்ற முறையில், சட்டவிரோதமாக, இத்தகைய பேச்சுகளைப் பேசி, திராவிட நாடகம் ஆடி தமிழர்களை ஏமாற்ற வேண்டாம். திராவிடத்துவ வாதிகள் என்றால் என்னவேண்டுமானாலும், சரித்திரம் அறியாமல், ஆதாரமில்லாமல் பேசலாம், ஈவேரா, அண்ணா, கருணாநிதி என்று சொல்லி குழப்பலாம். உலகமே ஏற்றுக் கொள்ளாத இனம், இனவெறி, இனவெறுத்துவம் ரீதியில் இன்றும் பேசி-எழுதிக் கொண்டிருக்கலாம். இதனால் தான், உலக, அனைத்துலக, தேசிய அறிவுசார்ந்த மேடைகளில் இவர்களது இனத்துவ ரீதியிலான கருத்துகள் எடுபடுவதில்லை. இவர்கள், இவர்களைச் சுற்றியுள்ள கூட்டம், மற்ற ஜால்றா அடிக்கும் அடிமைகள் போன்ற கும்பல்கள் கிடைக்கும் ஆதாயங்களுக்காக விசுவாசத்துடன் பாடி, ஆடி, கால்களைப் பிடித்து சேவை செய்து கொடுப்பதை வாங்கிச் செல்கின்றனர்.

சரித்திர ஆதாரம் இல்லாத இனம், இனவெறி, இனவெறித்துவம் மூர்க்கத்தனமான சித்தாங்களுடன் செயல்படுவது ஏன்?: பாசிஸம் என்று சொல்லி இவர்கள் மற்றவர்களை விமர்சிக்கிறார்கள், ஆனால், இவர்கள் தான் உண்மையில் பாசிஸ்டுகளாக அதிலும் மூர்க்கத் தனமான பாசிஸ்டுகளாக இருக்கிறார்கள். தாங்கள் ஒல்வது, பேசுவது, எழுதுவது தான் உண்மை மற்றதெல்லாம் பொய் என்ற ரீதியில் பிடிவாதமாக இருக்கிறார்கள், செயல்பட்டு வருகிறார்கள். எடுத்துக் காட்டினால், தீவிரவாதம் வாய்ப்பேச்சு, வசவுகள் என்று ஆரம்பித்து அடிப்பதில் முடிகிறது. பாசிஸத்தையும் மீறிய தீவிரமான தீவிரவாதக் கொள்கைகளுடன், அரசு, அதிகாரம் என்று வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளலாம் என்ற முறையில் தான், இத்தனையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முரட்டுத் தனமான போக்கை அறிந்து தான், மற்ற மாநிலத்தவரும் இதை ஒரு விதமான மனரீதியிலான பாங்கு என்று கொண்டு விட்டுவிடுகிறார்கள், பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  இதனை திராவிட, திராவிடத்துவ பெரியாரிஸ பாசிஸம் என்றே குறிப்பிடலாம். ஏனெனில், மற்ற மாநிலங்களுக்கு வரும் போது, அவர்கள் அடங்கி விடுகிறார்கள். இந்த மனோதத்துவத்தை அறிந்தவர்களாக இருபதால் தான், இவர்களை, “அரவக்காரர்கள்,” “மதராஸி” என்றெல்லாம் குறிப்பிட்டதைக் கவனிக்கலாம்.

திருமாவளவன் செய்யும் இந்துவிரோத அரசியல், பிரச்சாரம்: திருமாவளவன் தொடர்ந்து இந்துமத தூஷண, இந்துவிரோத காழ்ப்பு, இந்துமக்கள் தாக்குதல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரிந்த விசயம் தான். புகார்கள் கொடுத்தாலும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எம்.பியாக இருப்பதால், அதற்கான பாதுகாப்பு உள்ளது போலும். ஒவ்வொரு மேடையையும், விழாவையும் அதற்கு பயன்படுத்திக் கொள்வதும் தெரிந்தது தான். அதுபோல, தமிழ் ஸ்டுடியோ அமைப்பு ஒருங்கிணைத்த விசிக தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும், தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியின் தலைவருமான ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலை விழாவில் பங்கேற்ற ஆவண மற்றும் குறும்படங்களின் இயக்குனர்களுக்கு சான்றிதழை வழங்கினார்[1].  சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது[2].

இனிமா இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசியது: இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, ”அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன்[3]. இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன்[4]. வெற்றிமாறன் அதற்கு அவர், “தனிமனிதனால் சமூகத்திற்கு தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். அதே தவறு தான் நிகழ்கிறது. அமைப்பால் திரள வழிசெய்யுங்கள்” என்றார்[5]. மேலும், “கலை என்பது ஒரு அரசியல். நாம் தெரிந்தோ, தெரியாமலோ அரசியலுக்குள் தான் இருக்கிறோம்,” என திருமாவளவன் சொல்லியிருந்தார்[6]. இலக்கியம், சினிமா எப்படி அவர்கள் கையில் இருந்தது[7]. அந்த தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது[8]. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் சினிமா பெற்றுள்ளது என நினைக்கிறேன்[9]. சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம்[10]. வெற்றிமாறன் சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம்[11]. சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள்[12].

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாகக் காட்டுவது: மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது. வெற்றிமாறன் சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்,” என்றார்.

© வேதபிரகாஷ்

04-10-2022


[1] நக்கீரன், வள்ளுவருக்கு காவி உடை, ராஜராஜ சோழனுக்கு இந்து பட்டம்” – வெற்றிமாறன் விமர்சனம், நக்கீரன் செய்திப்பிரிவு,Published on 03/10/2022 (15:50) | Edited on 03/10/2022 (16:13).

[2] https://www.nakkheeran.in/cinema/cinema-news/vetrimaaran-talk-about-rajaraja-cholan-and-vallurvar

[3] மாலை மலர், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது தொடர்ந்து நடக்கிறதுஇயக்குனர் வெற்றிமாறன் , By மாலை மலர், 3 அக்டோபர் 2022 9:54 AM.

[4] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-director-vetrimaran-speaks-about-raja-raja-chozhan-519805

[5] NEWS18 TAMIL,. வள்ளுவருக்கு காவி உடை, ராஜராஜன் இந்து மன்னன் என அடையாளங்கள் பறிக்கப்படுவதாக இயக்குனர் வெற்றி மாறன் பேச்சு…,  TAMIL NADU, INDIA, LAST UPDATED : OCTOBER 03, 2022, 13:40 IST.

[6] https://tamil.news18.com/news/entertainment/cinema-we-losing-our-identity-like-as-saffron-on-thiruvalluvar-rajarajan-hindu-king-said-812330.html

[7] பாலிமர்.நியூஸ், ராஜராஜ சோழனை இந்து அரசனாக காட்டுவத? வெற்றிமாறன் என்ன சொல்ல வருகிறார் , October 03, 202 06: 35:42 AM.

[8] https://www.polimernews.com/dnews/188787

[9] தமிழ்.ஒன்.இந்தியா, ராஜராஜ சோழனைஇந்துஅரசனா மாத்திட்டாங்கஇயக்குநர் வெற்றிமாறன்.. ஆர்எஸ்எஸ் பேரணிக்கும் எதிர்ப்பு , By Noorul Ahamed Jahaber Ali Published: Sunday, October 2, 2022, 11:54 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/they-changed-raja-raja-cholan-as-hindu-king-director-vetrimaaran-reveals-478653.html

[11] ஐ.பி.சி.தமிழ்நாடு, ராஜராஜ சோழன் இந்து அரசனா? : இயக்குநர் வெற்றிமாறன் எதிர்ப்பு, Published on 03/10/2022

[12] https://ibctamilnadu.com/article/changed-raja-raja-cholan-as-hindu-vetrimaaran-1664709999

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது – அயல்நாட்டவர் கண்காணிக்கப் படவேண்டும்! [2]

ஓகஸ்ட் 25, 2020

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது – அயல்நாட்டவர் கண்காணிக்கப் படவேண்டும்! [2]

ஆசைப் பட்ட மணிக்கண்டன் வசமாக மாட்டிக் கொண்டது: விசாரணையில், அந்த சாமியார் நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரனின் மகன் மணிகண்டன் (41) எனத் தெரிய வந்தது[1]. சாமியார் மணிகண்டன், அமெரிக்க பெண்ணை அடிக்கடி பார்த்துள்ளார்[2]. அதாவது அப்பெண் அனுமதித்துள்ளாள் என்று தெரிகிறது. அவர், அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார்[3]. அந்தப் பெண்ணுக்கு தற்காப்பு கலைகள் தெரிந்துள்ளதால், இருவருக்கும் நடந்த தகராறில் மணிகண்டனுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், எனப் போலீசார் தெரிவித்தனர்[4]. இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலையில் 2018-ம் ஆண்டு ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அந்தச் சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இங்கு அந்நிய நாட்டு பெண்கள், இந்தியர்களுடன் ஏன் தொடர்புகள் வைத்துக் கொள்கிறார்கள், நோக்கம் என்ன, பின்னணி என்ன என்பதையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். அவர்கள் தனியாகவே வந்து தங்குகிறார்களா அல்லது உடன் மற்றவர்கள் வந்துள்ளார்களா என்று கவனிக்க வேண்டும். இந்தியர்கள் யாரும், அயல்நாடுகளில் உள்ள மற்ற மத புண்ணிய க்ஷேத்திரங்களில் இவ்வாறு தங்கி ஆராய்ச்சி செய்ய முடியுமா என்று தெரியவில்லை!

தமிழக ஊடகங்களின் வக்கிரம், திமிர் பிடித்து தலைப்பிடும் தூஷணம்: வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் தங்களது பாணியில், அரைத்த மாவையே அரைத்துள்ளன. பெண் அமெரிக்கரா, ரஷ்யரா என்று கூட சரிபார்த்து செய்தி போடத் தெரியவில்லை. மற்ற செய்திகள் பெண் அமெரிக்கர் என்றால், “சமயம்” ரஷ்யர் என்கிறது[5]. “அத்துமீறிய சாமியார், கராத்தே கலையால் கதறவிட்ட ரஷ்யப் பெண்!” என்று தலைப்பிட்டு, ஜனரஞ்சகமாக செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தாலியுடன் சென்ற சாமியார்… நைய புடைத்த அமெரிக்க பெண்… திருவண்ணாமலை வீட்டில் நடந்த அதிர்ச்சி,” இப்படி இன்னொரு தளம்[7]. இவ்வாறு விசயம் தெரியாமல் செய்தி போடுகிறார்களா, இல்லை, நாங்கள் போடுவது தான் செய்தி, நீங்கள் படியுங்கள், உங்கள் விதி அதுதான் என்பது போல நடந்து கொள்கிறார்கள். ஆக திருவண்ணாமலை, இவர்களுக்கு கிள்ளுக்கீரையாக, கிண்டலடிக்கும் தளமாக ஆகிவிட்டது[8]. நேராகச் சென்று செய்திகளை சேகரிப்பது என்பதெல்லாம் இல்லை, மாலையில் வந்த செய்திகளைத் திரட்டி காலையில் செய்தியாக வெளியிட்டு காலம் தள்ளும் செய்தியார்கள், நிருபர்கள் உள்ளனர். எப்படி, இணைதளங்ளில் உள்ள விசயங்களை எல்லாம் திரட்டி, காபியடித்து, புத்தகங்களை எழுதுகிறாற்களோ, அதை விட மோசமாக, நாளிதழ் நிருபர்கள் இருக்கிறார்கள். காப்பியடிப்பது, கட்-அன்ட்-பேஸ்ட் செய்வது, விசயங்களைத் திருடுவது, என்பதெல்லாம் அல்வா சாப்பிடுவது போலத்தான் அத்தகைய திருட்டு எழுத்தாளர்களுக்கு இருக்கிறது.

வெளிநாட்டவரின் நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்துவது எப்படி? நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிப்பது எப்படி?:

  1. சுமார் 10,000 வெளிநாட்டவர் சுற்றூலா என்று வருகிறார்கள். 2018ல் 9,502 வெளிநாட்டவர் வந்துள்ளனர். இவர்கள் எல்லோருமே “ஆன்மீகத்திற்கு” வந்தார்கள் என்பது தவறாகும். டெரிக்கிங் (Trekking) போர்வையில் சுற்றி வந்த 12 அயல்நாட்டவரை போலீஸார் பிடித்துள்ளனர்.
  2. திருவண்ணாமலை ஆன்மீகம் அல்லது அந்த போர்வையில் ஆராய்ச்சி செய்யும் இடமலல்ல. ஆன்மீகம் என்பது, “மந்திர-தந்திர-யந்திர” முறையில் திசைத் திரும்புகிறது.
  3. வெளிநாட்டுக் காரர்கள் அத்தகைய நோக்கங்களுடன் வந்தால், அவர்களை அனுமதிக்கக் கூடாது, அல்லது ஒரு வாரம், பத்து நாட்களில் அனுப்பி வைக்க வேண்டும்.
  4. முதலில் விசா அளிப்பவர்கள், “சுற்றுலா” என்று வந்தவர்கள், மற்ற காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். இப்பொழுது தான் தப்லீக் பெயரில், நூற்றுக்கணக்கான அயல்நாட்டவர் வந்து பெரிய பிரச்சினையாகி, கொஞ்சம் அடங்கியுள்ளது. ஆகவே, இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்டவேண்டும்.
  5. தங்களது நிலை, பணம் போன்றவற்றை வைத்துக் கொண்டு, உள்ளூர் ஆட்களை தங்களது இச்சைக்கேற்றப் படி உட்படுத்தி, பரிசோதனைகள் செய்வதை அனுமதிக்கக் கூடாது.
  6. சில இடங்களில் சர்ச்சுகள் கட்டுவது, மதம் மாற்றம் போன்ற பிரச்சினைகள், விவகாரங்கள் வெளிப்பட்டுள்ளன, படுகின்றன.
  7. இவர்களால், உண்மையில் ஆன்மீகத்தைத் தேடி வந்து, ஶ்ரீரமணர், ஶ்ரீராம்சூரத் குமார் போன்றவர்களின் சீடர்களாக, பக்தர்களாக இருந்து வருபவர்களையும் பாதிக்கும்.
  8. சிலர் திருவண்ணாமலை கிரிவலம் பகுதிகளில் இடத்தை வாங்கி, தங்குவதற்கு வீடுகளையும் கட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் வருடத்திற்கு ஒருமுறை வருகிறார்கள், வராமல் இருக்கிறார்கள். அதனால், உள்ளூர்வாசிக்கு, “பார்த்துக் கொள்,” என்று சொல்லி சென்று விடுகின்றனர். அவர்கள் வராத நிலையில், வரமாட்டார்கள் என்று அறிந்த நிலையில், உள்ளூர் ஆட்கள் அந்த சொத்தை அபகரித்துக் கொள்கிறார்கள்.
  9. ஆனால், அயல்நாட்டினரும் விசயம் தெரிந்தவர்கள் தான், எனவே, சட்டப் படி, நடவடிக்கை எடுக்கும்போது பிரச்சினைகள் வருகின்றன.
  10. அயல்நாட்டு பயணிகள், இப்படி திருவண்ணாமலை பகுதியில், கூட்டம் கூடி, பிரச்சினைகளை உண்டாக்கினால், அமைதி குலையும், திருவண்ணாமலையின் புனிதமும் கெடும் என்பது திண்ணம்.

சுருக்கமாக, விவரங்களை முடிவுரையாகக் கொடுக்கப் படுகிறது. இந்தியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அயல்நாட்டவர் வருவது என்பது, “ஒந்வே-டிராபிக்” போன்ற நிலையாக உள்ளது. இந்தியரும், பதிலுக்கு, இதே போல, அயல்நாட்டவரின் சமூகம், மதம், நம்பிக்கைகள் முதலியன ஆராயப் படவேண்டும்.

  1. திருவண்ணாமலை அக்னி க்ஷேத்திரத்தில் அயல்நாட்டுப் பெண்கள் எப்படி வந்து தங்குகிறார்கள், ஆன்மீகத்தில் ஆராய்ச்சி செய்கிறார்கள்?
  2. இதே மாதிரி இந்திய பெண்கள் அவர்களது நாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் ஆன்மீக ஆராய்ச்சி மேற்கொள்ள முடியுமா? அனுமதிக்கப் படுவார்களா?
  3. திருவண்ணா மலையில் காவி கட்டியவன் எல்லாம் சந்நியாசி, சாது, சாமியார், சித்தர் ஆகி விட முடியுமா? இப்பொழுது கருப்பு, பச்சை, நீலம் .போன்ற நிறங்களும் சேர்ந்துள்ளன.
  4. முன்பு ஶ்ரீரமணர், ஶ்ரீராம்சூரத் குமார் போன்றவர்களை தரிசிக்க வந்தவர்களின் நிலை வேறு, இப்பொழுது “ஆன்மீக சுற்றுலா” என்று வருகிறவர்களின் நிலை வேறு.
  5. பௌர்ணமி கிரிவல கூட்டம் அதிகமாக-அதிகமாக, வியாபார மயமாக்கமும் அதிகரித்துள்ளது. அறை, உணவு விலை அதிகரித்து வருகின்றது!
  6. அயல் நாட்டவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் இந்தியர்களுக்கு வருகிறது! ஆன்மீகதத்தில் உயர்ந்தவன் என்ற உணர்வு வேண்டாமோ?
  7. சினிமா பாணியில் வெள்ளைக்காரியைக் கட்டிக் கொண்டால், வாழ்க்கை உயர்ந்து விடுமா? டைவர்ஸ் செய்தால் என்னாகும்?
  8. ஆக மணிகண்டனின் கத்தி-தாலி பார்முலா, கராத்தே அமெரிக்கப் பெண்ணிடம் பலிக்க வில்லை. மான், மயில் தப்பித்து, புலி மாட்டிக் கொண்டது!
  9. திருவண்ணா மலையில், மொரீசியஸ் ஸ்டைலில் ஐந்து நட்சத்திர ஓட்டல், ரிசார்ட், ஸ்பா வசதி, குடி…..முதலியவை ஏன் அதிகரித்துள்ளன?
  10. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கத்தினால், பெண்களுக்குப் புரியுமா? இறைவா ரக்ஷிப்பாயாக!?

இக்கேள்விகளுக்கு எல்லோரும் பதில் சொல்லியாக வேண்டும். இந்தியரும் பதிலுக்கு ஆராய வேண்டும். ஏனெனில், இன்றைக்கு, உரையாடல், மதங்களுக்கு இடையே உரையாடல், உள்-கலாச்சாரமயமாக்கல், என்றெல்லாம் பேசி வருகிறார்கள். அந்நிலையில், நாம் இவ்விசயங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-08-2020

இதெல்லாம் திருவண்ணாமலை ரிசார்ட் தான், மொரீசியஸ், மாலத்தீவுகள் இல்லை!


[1] விகடன், திருவண்ணாமலை: `அமெரிக்கப் பெண்ணிடம் அத்துமீறல்!’ – சாமியாரை புரட்டி எடுத்த பொதுமக்கள், ஜெ.முருகன், Published:Yesterday at 3 PM; Updated:Yesterday at 3 PM.

[2] https://www.vikatan.com/news/crime/sexual-assault-on-an-american-woman-public-attacked-the-preacher

[3] தினமலர், அமெரிக்க பெண்ணிடம் பலாத்கார முயற்சி: தி.மலையில் சாமியாருக்கு தர்ம அடி, பதிவு செய்த நாள்: ஆக 24,2020 08:25;

[4] https://m.dinamalar.com/detail.php?id=2600782

[5] சமயம், அத்துமீறிய சாமியார், கராத்தே கலையால் கதறவிட்ட ரஷ்யப் பெண்!, Akash G | Samayam Tamil, Updated: 23 Aug 2020, 03:21:00 PM.

[6] https://tamil.samayam.com/latest-news/crime/tiruvannamalai-russian-woman-attacked-a-saint-using-karate-technic-who-tried-to-rape-her/articleshow/77702641.cms

[7] டாப்.தமிழ்.நியூஸ், தாலியுடன் சென்ற சாமியார்நைய புடைத்த அமெரிக்க பெண்திருவண்ணாமலை வீட்டில் நடந்த அதிர்ச்சி, By Mathew, 24/08/2020 10:56:19 AM.

[8] https://www.toptamilnews.com/preacher-arrested-for-trying-to-sexually-assault-american-woman/

கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மைரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (2)

செப்ரெம்பர் 2, 2015

கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (2)

dhabolkar-pansare-kalburgi

dhabolkar-pansare-kalburgi

பசவேஸ்வரைப் பற்றி அவதூறாக எழுதிய கல்பர்கி: பவவேஸ்வரைப் பற்றியும் அவதூறாக எழுதியதால், அந்த சமூகத்தினர் இவர் மீது கோபம் கொண்டனர். பசவேஸ்வரர் அவரது சகோதரிக்கும், ஒரு செக்கிலியனுக்கும் பிறந்தவர் என்று எழுதினார். இன்னொருஇடத்தில், பசவேஸ்வரர் மற்றும் அவருடைய மனைவி இருவரிடையே இருந்த உறவுமுறையப் பற்றி கேள்விகளை எழுப்பினார்[1]. இதனால் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய வரிகளை தனது புத்தகத்திலிருந்து நீக்கியதோடு, இனிமேல் லிங்காயத் கலச்சாரத்தை பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் எழுதமாட்டேன் என்று தீர்மானித்துக் கொண்டார். 2014ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா கொண்டுவரவது பற்றிய விவாதத்தின் போது, கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வது சரிதான், ஏனெனில், அதற்கு எந்த தண்டனையும் கிடைக்காது. யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதியதைக் குறிப்பிட்டு, அவர் சிறுவயதில் தான் அவ்வாறு கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டதை எடுத்துக் காட்டினார்[2]. இதனால் அவ்விருவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டது (The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers). அவ்வாறு அவர் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசினார்[3]. கல்புர்கியின் கொலை தொடர்பாக அவரது மகள் ரூபா தர்ஷி குற்றம் சாட்டுகிறாரே, தனது தந்தை இவ்வாறெல்லாம் எழுதுவது, பேசுவது நாகரிகமாக இருந்ததா, இல்லையா என்று யோசித்துப் பார்க்கவில்லையா?

Basava - honoured and defamed

Basava – honoured and defamed

அவதூறாக எழுதியதால் முன்னர் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே மற்றும் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டது: பிப்ரவரி மாதம் 2015ல் சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே என்பவர், “சிவாஜி கோன் ஹோதா” என்ற தலைப்பில், மஹாராஷ்ட்ர வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் அவதூறாக எழுதியதால், அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்[4]. ஆகஸ்ட்.2013ல் மஹாராஷ்ட்ராவின் “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்ற மூடநம்பிக்கை அழிப்பு சமிதி என்ற இயக்கத்தைத் துவக்கியவரான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார்[5].  சி.பி.ஐ. தலைவர் கோவிந்த் பன்சரே மற்றும் நரேந்திர தபோல்கர் முதலியோரும், அவதூறான விசயங்களை பேசியதற்காகவும், எழுதியதற்ற்காகவும் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் கூறின. ஆனால், அவர்கள் ஏன் செக்யூலரிஸ ரீதியில் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் வியப்பாக உள்ளது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு, ஆனால், ஒருவரது கருத்து சுதந்திரம், இன்னொருவரது கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடாது என்றும் உள்ளது. ஆனால், நாத்திகம், பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பழமைவாத-எதிர்ப்பு, முதலியவற்றையெல்லாம் எதிர்க்கிறேன் என்று கருத்து சுதந்திர சித்தாந்தவாதிகள் ஏன் செக்யூலரிஸத்தை தமது அறிவிவெளிப்படலுக்கு, ஞானப்பீறிடலுக்கு, அந்தரந்தங்களுக்கு உபயோகிக்கவில்லை?

Pansare defaming Sivaji with ideology

Pansare defaming Sivaji with ideology

யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி விக்கிரங்களின் மீது, படங்களின் மீது மூத்திரம் பெய்தால், பெய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா?:  யு.ஆர்.அனந்தமூர்த்தி கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்டபோது, இந்துக்கள் அல்லாதவர்கள் கோபப்படவில்லை. அவரது கிறிஸ்தவ மனைவி எஸ்தரும் கண்டுகொள்ளவில்லை. கிருத்துவத்திலும் விக்கிரகங்கள் உள்ளனவே, அவர்கள் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள் என்று எச்சரிக்கவில்லை, கண்டிக்கவில்லை. கல்பர்கி அதனை திரும்பச் சொன்ன போது, அவரது மனைவி மற்றும் மகளுக்கு செக்யூலரிஸ ரீதியில் பேசுங்களேன் என்று சொல்லவில்லை. ஒருவேளை யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி விக்கிரங்களின் மீது, படங்களின் மீது மூத்திரம் பெய்தால், பெய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை. அதாவது, இதெல்லாம் இந்துமத நம்பிக்கைக்களுக்கு எதிரானது, என்று செக்யூலரிஸ பழங்கள் அமைதியாக மூடிக்கொண்டிருந்தன என்றாகிறது. அப்படியென்றால், சர்ச்சுகளில் விக்கிரங்கள் உடைக்கப் பட்டன என்று ஊளையிட்டனவே ஏன்? அப்பொழுது, அந்த விக்கிரங்களும் எந்த தண்டனையும் கொடுக்கவில்லையே? ஏசு, சோசப், மேரி என்று எல்லா கடவுளர்களும் காப்பாற்றுவார்கள் என்றால், ஏன் ஊளையிட்டு வழக்கு தொடர்ந்தார்கள்? உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா என்று யாரும் அலசிப்பார்க்கவில்லை? அப்படி நடுநிலையோடு, உண்மையான அறிவிஜீவித்தனத்துடன் சீர்தூக்கிப் பார்த்திருந்தால், கொலைகளில் முடிந்துள்ள நிலைகள் உருவாகிருக்காது, உயிர்களும் எடுக்கப்பட்டிருக்க மாட்டாது.

End of reason - Kalburgi, Dabholkar and Pansare

End of reason – Kalburgi, Dabholkar and Pansare

மரணதண்டனை கூடாது என்று வாதிடுபவர்கள், மரணத்தை ஏற்படுத்தவர்களால் மரணித்தவர்களப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதாவது உயிர் எடுப்பவர்களைப் பற்றி ஆதரித்து பேசுவர்கள், அவர்களால் உயிர் எடுக்கப்பட்டவர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. இங்கும், கருத்தைச் சொல்லியவர்களுக்கு எதிராக கருத்தைச் சொல்லலாமே என்று கூட யாடும் வாதத்தை வைக்கவில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தால், அது தனிமனிதர்களின் மீது துவேசத்தை வெளிக்காட்டிய நிலையாக, அவதூறு பேசிய-உண்டாக்கிய நிலையாகத்தான் மாறியிருக்கும். பிள்ளையார் சிலைகளை உடைத்த பெரியாரின் சிலையை உடைக்கிறேன் என்றால், அது பெரியப் பிரச்சினையாகிறது. இதில் என்ன தத்துவ கோளாறு, சித்தாந்த வேற்றுமை, தர்க்க-முரண்பாடு உள்ளது என்று தெரியவில்லை. அதுபோலவே, விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதால், அவைகளால் எந்த தண்டனையும் கொடுக்க முடியாது என்று ஆர்பரித்தவர்கள், தங்களைக் காத்துக் கொள்ள போலீஸாரைத்தான் தேடியுள்ளனர். அவதூறாக பேசியதைக் கண்டித்தவர்களும் போலீஸாரிடம் தான் சென்ருள்ளனர். புகார் கொடுத்தனர். பிறகு போலீஸார் தான் எல்லோரையும் விட பெரியவர்களா? இந்த நாத்திகர்களை, பகுத்தறிவாளிகளை, மூடநம்பிக்கை எதிர்ப்பாளிகளை ஏம் அவர்களாளேயோ அல்லது அவர்களது சித்தாந்த நாயகர்களாலேயோ காப்பாற்ற முடியவில்லை?

© வேதபிரகாஷ்

02-09-2015

[1] According to The Indian Express, “(h)is exploration of the life and relationships of patron saint of the Lingayat community Basavanna had attracted the ire of radicals in the community”.

The report goes on to quote senior journalist Subash Hugar who highlighted that “(in)one of the articles, he wrote that Channabasava, who is also a Lingayat seer, was born from a relationship between Basavanna’s sister and a cobbler. In another, he raised questions over Basavanna’s relationship with his wife”.

http://indianexpress.com/article/india/india-others/ex-vc-m-m-kalaburgi-who-had-run-ins-with-hardliners-shot/

[2] More recently, in 2014, Dr Kalburgi walked into a controversy while speaking on a proposed anti-superstition bill in Bengaluru where he claimed that it is alright to urinate on the idols of gods and that there would be no retribution. He referred to a piece of work by Kannada Jnanpith award-winning writer U R Ananthamurthy, who claimed to have urinated on idols of gods as a child. The police filed cases under sections 295A and 298 of the Indian Penal Code against both writers.

http://indianexpress.com/article/india/india-others/ex-vc-m-m-kalaburgi-who-had-run-ins-with-hardliners-shot/

[3] http://www.firstpost.com/india/heres-what-we-know-about-slain-rationalist-mm-kalburgi-2414654.html

[4] In February this year, CPI leader Govind Pansare — whose biography of Shivaji titled Shivaji Kon Hota riled a handful of groups in Maharashtra — was killed after two unknown assailants fired at him and his wife in front of their house in Kolhapur district.

http://www.firstpost.com/india/heres-what-we-know-about-slain-rationalist-mm-kalburgi-2414654.html

[5] Narendra Dabholkar, the founder-president of Maharashtra-based Andhashraddha Nirmoolan Samiti — an organisation set up to eradicate superstition, was killed in August 2013, but his killers remain at large.

http://www.firstpost.com/india/heres-what-we-know-about-slain-rationalist-mm-kalburgi-2414654.html

கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மைரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (1)

செப்ரெம்பர் 2, 2015

கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (1)

M M Kalburgi, rationalist writer

M M Kalburgi, rationalist writer

நாத்திக, மூடநம்பிக்கை எதிர்ப்பு எழுத்தாளர் கொலை (30-08-2015): சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட மூத்த எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி (M. M. Kalburgi, 77) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1] என்று விகடன் செய்தி கூறியள்ளது. கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் உள்ள கல்பர்கியின் வீட்டுக்கு 30-08-2015 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் ஒரு மர்ம நபர் வந்துள்ளார். கதவு தட்டும் சத்தம் கேட்டு கல்பர்கியின் மனைவி திறந்துள்ளார். கல்பர்கி எங்கே என்று அவரிடம் அந்த நபர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கல்பர்கி வெளியே வந்துள்ளார். அப்போது கல்பர்கி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் அந்த நபர் தப்பியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கல்பர்கி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கல்பர்கி உயிரிழந்தார்[2].  அவரது மனைவி, மகள் ரூபா தர்ஷி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர், என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.  கொலை குற்ற்அம் தான், உயிரையெடுப்பது குற்றம்தான், மரணத்தை ஏற்படுத்துவது குற்றம்தான்.

U R Ananthamurthy speaking against Hindu practices and Modi

U R Ananthamurthy speaking against Hindu practices and Modi

மூடநம்பிக்கைக்கு எதிராகவும், இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசியதால், ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது: கல்புர்கியின் கொலை தொடர்பாக அவரது மகள் ரூபா தர்ஷி கூறியபோது, “எனது தந்தைக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் யாரும் இல்லை. மூடநம்பிக்கைக்கு எதிராகவும், இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசியதால், ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. மூட நம்பிக்கைக்கு எதிராக பேசியதால் எனது தந்தை கொடூரமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார் என சந்தேகப்படுகிறேன்,” என தெரிவித்தார். கொலை மிரட்டல்கள் வரும் அளவிற்கு அவர் அப்படி என்ன தொடர்ந்து பேசி வந்தார், என்று சொல்லப்படவில்லை. அதனால் மட்டும் கொலை மிரட்டல்கள் விட்டு, கொலை செய்வார்களா என்று தெரியவில்லை. தமிழகத்தில் கடந்த 60-100 ஆண்டுகளாக நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்ற போர்வைகளில், எவ்வளவோ பேசப்பட்டுள்ளது, எழுஹப்பட்டுள்ளது, மாறாக நம்பிக்கை கொண்டவர்கள் தாம் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். வழக்கு தொடர்ந்தாலும், தாக்கியவர்கள் தண்டனை பெற்றார்களா இல்லையா என்ற விவரங்கள் தெரிவதில்லை.

U R Ananathmurthy and his christian wife Esther

U R Ananathmurthy and his christian wife Esther

பற்பல விருதுகளைப் பெற்ற நாத்திக எழுத்தாளர்: தமிழ்.இந்து அவரைப்பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளது: அப்போதைய பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த யரகல் கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தவர் கல்பர்கி.  கன்னடத்தில் முதுகலை படிப்பை முடித்த இவர், 1966-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். வசன இலக்கியத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய அவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு இவர் எழுதிய ‘மார்கா – 4′ (வழி – 4) என்ற ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பயணித்து பல அரிய கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு செய்தார். இதன் மூலம் கர்நாடக வரலாறு, க‌ன்னட இலக்கியத்தின் தொன்மை, பண்பாடு குறித்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்தார். கல்புர்கியின் சாதனைகளை பாராட்டி ‘பம்பா, ராணா, நிருப துங்கா’ உள்ளிட்ட உயரிய‌ விருது கள் வழங்கப்பட்டன. இறுதியாக, ஹம்பியில் உள்ள கன்னட பல் கலைக்கழகத்தில் துணைவேந்த ராக பணியாற்றி ஓய்வு பெற்றார்[3] என்று தமிழ்.இந்து வர்ணித்தது. தற்போது இந்த ஊர் கர்நாடக மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹம்பி பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியவர் கல்பர்கி. அவரது வீட்டிற்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், கல்பர்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. வலது சாரி இந்துத்தவா அமைப்புகளால் இவரது உயிருக்கு ஆபத்து இருந்து வந்தது. இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாக பேசி, எழுதி வந்தவர் கல்பர்கி.

U R Ananthamurthy - I will leave the country if Modi becomes PM

U R Ananthamurthy – I will leave the country if Modi becomes PM

அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்தார் (2014): கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறைந்த எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி ஆகியோர் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி ஒரு இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் புகார் கூறியிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பஜ்ரங் தளம், வி.எச்.பி. மற்றும் ஸ்ரீராம் சேனே ஆகிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதுதொடர்பாக பஜ்ரங் தளத்தினர் போராட்டம் நடத்தியபோது கல்பர்கி வீட்டையும் தாக்கினர். தற்போது நடந்துள்ள கொலைக்கும் இந்துத்துவா அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. கல்பர்கி கொலை தொடர்பாக இந்துத்துவா அடிப்படைவாதி களிடம்  விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், கொலையாளியை தேடி வருகின்றனர்[4] என்று தமிழ்.இந்து செய்தி வெளியிட்டாலும், அந்த மெத்த படித்த மேதைகள், அறிவுஜீவிகள் அப்படி என்னதான் சொன்னார்கள் என்று குறிப்பிடவில்லை. அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்திருந்தார் என்று மொட்டையாகக் குறிப்பிட்டு தனது கருத்து வெளியிடலை மூடிக்கொண்டது. இதுதான் அதன் கருத்து வெளியிடல், சுதந்தரம் போன்ற நாணயமான பத்திரிகா தர்மம் போலும்.

Narendra Dabholkar and Govind Pansare

Narendra Dabholkar and Govind Pansare

தி.மு.., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை[5]: ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவரும், மிகச்சிறந்த கன்னட எழுத்தாளருமான, எம்.எம்.கலபுர்கி, 77, மர்ம நபர்களால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து, மிகவும் வருந்துகிறேன்[6]. மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தன் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வந்த அவர் கொல்லப்பட்டதற்கு, என் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்[7]. அவரை சுட்டுக் கொன்றவர்கள் மீது, கர்நாடக அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறேன்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[8].  சரி, பசவேஸ்வரர் அவரது சகோதரிக்கும், ஒரு செக்கிலியனுக்கும் பிறந்தவர் என்று எழுதியதற்கு, பசவேஸ்வரர் மற்றும் அவருடைய மனைவி இருவரிடையே இருந்த உறவுமுறையப் பற்றி கேள்விகளை எழுப்பியதற்கு, இவர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? யு.ஆர்.அனந்தமூர்த்தி தான் கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்ட பொதும், கல்பர்கி அதனை திரும்பச் சொல்லி ஆமோதித்த போதும், இந்த கலைஞர் ஏன் அதெல்லாம் அநாகரிகமானது என்று கூறி கண்டிக்கவில்லை?

© வேதபிரகாஷ்

02-09-2015

[1] விகடன், பிரபல எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை: கர்நாடகாவில் பரபரப்பு!, Posted Date : 16:05 (30/08/2015); Last updated : 16:05 (30/08/2015).

[2] http://www.vikatan.com/news/article.php?aid=51695

[3]  தமிழ் இந்து, மூடநம்பிக்கைக்கு எதிராக பேசியதால் பயங்கரம்: மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொலைஇந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணை, Published: August 30, 2015 18:01 ISTUpdated: August 31, 2015 09:09 IST

[4]http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article7596592.ece

[5]தினமலர், கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம், செப்டம்பர்.1, 2015, 03:00.

[6] தினமணி, கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம், By சென்னை, First Published : 01 September 2015 12:26 AM IST.

[7]http://www.dinamani.com/tamilnadu/2015/09/01/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE/article3003589.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1331551

இந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்!

ஓகஸ்ட் 12, 2012

இந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியாமிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்!

கோவில்குளம் என்று யாத்திரிக்கைக்கு வந்த இந்துக்களைப் பிடித்து வைத்து விசாரணை: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய 250 இந்துக்கள் வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 7 மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர்[1]. அவர்களை பிடித்து வைத்திருந்தனர்[2].  அவர்கள் எடுத்து வந்த பைகள், பெட்டி, படுக்கைகள் எல்லாம் கடுமையாக சோதனையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது, எதற்கு இத்தனை சாமான்கள் எடுத்து வருகிறீர்கள் என்று கேட்டு தொந்தரவு படுத்தினர்[3]. அவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானின் உரிமைகள் இயக்கத்தினர்[4] அவ்வாறான புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர். வந்துள்ளவர்கள் தாங்கள் புனித இடங்களைப் பார்த்துச் செல்ல்வே வந்திருக்கிறோம் என்றனர். அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இதனையடுத்து சரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்ப்புத் தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

மிரட்டி இந்துக்களுக்கு பாகிஸ்தான் கொடுத்தனுப்பியது: பாகிஸ்தானில் இந்துக்கள் இரண்டாம் தர மக்களாகத்தான் நடத்தப் படுகிறார்கள். அவர்களைப் பற்ரி யாருமே கவலைப்படுவதில்லை எனலாம். இந்தியாவில் முஸ்லீம்கள் இத்தனை அட்டகாசம், கலவரம், கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு என்று காரியங்களை செய்து வருகின்றனர். அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ இந்துக்கள் அடிமைப் போல நடத்தப் படுகிறர்கள். “பாகிஸ்தானுக்குஎதிராகபேசமாட்டோம். பாகிஸ்தானின்பெருமையைகுலைக்கும்வகையில்செயல்படமாட்டோம்என்றுஉறுதியளித்ததன்பேரில்அவர்கள்இந்தியாவுக்குள்செல்லஅனுமதிக்கப்பட்டதாகபாகிஸ்தான்அதிகாரிதெரிவித்தார்”, என்று தினகரன் பெருமையாக செய்தி வெளியிட்டுள்ளது! இதன் பின்னர் அவர்களை இந்தியாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது: பாகிஸ்தானிற்கு பஸ் விடுகிறோம், ரயில் விடுகிறோம் என்றெல்லாம் சொல்லி, ஆயிரக்கணக்காக வரும் முஸ்லீம்களை ராஜோபசாரம் செய்து வரப்வேற்கின்றனர். மாறாக, புனித யாத்திரைக்கு வரும் இந்துக்கள் இவ்வாறு நடத்தப் படுகின்றனர். இந்தியாவுக்குள் செல்லும் பக்தர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் 33 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் உத்தரவையடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது என்று தெரிகிறது. முன்னதாக அவர்கள் அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அதிகாரி ஒருவர் கூறினார். அதாவது, செய்திகளைக் கூட நம்புவார்கள், அதன்படி, இந்துக்கள் கொடுமைப்படுத்தி சீண்டப்படுவார்கள். இதனிடையே, இந்தியா வந்துள்ள பக்தர்கள் ஒரு சிலர், இந்தியாவை விட்டு செல்லப்போவதில்லை என கூறியுள்ளனர்.

கடந்த வாரத்தில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நடந்துள்ள கொடுமைகள்: கடந்த வாரத்தில் ஒரு இந்து பெண் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டாள். பிணைப்பணம் கேட்டு மிரட்டியதில் பயந்து 11 இந்துக்கள் தலைமறைவாகியுள்ளனர்[5]. இந்துக்கள் இதுபோல வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு போவது, பிணைப்பணம் கேட்பது, கொடுக்காவிட்டால், கை-கால்களை உடைத்து அனுப்புவது, கொலைசெய்வது, பெண்களை அபகரித்து செல்வது, கற்பழிப்பது, மத, மாற்றுவது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர் பாகிஸ்தானிய முஸ்லீம்கள். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்த பட்சம் 25 இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள்[6]. பாகிஸ்தான் இந்து கவுன்சில் என்று ஒன்று பெயருக்கு நடத்தப்படுகிறது[7]. இந்துக்களின் மக்கட்தொகை கீழ்கண்டவாறு பாகிஸ்தானில் உள்ளது[8].

DISTRICT

PROVINCE

Hindu Pop

Pop

H%

PAKISTAN PAKISTAN

2,443,614

132,352,000 1.846%
CHITRAL Khyber-Pakhtunkhwa

2

318,689 0.001%
UPPER DIR Khyber-Pakhtunkhwa

22

575,858 0.004%
LOWER DIR Khyber-Pakhtunkhwa

24

717,649 0.003%
SWAT Khyber-Pakhtunkhwa

158

1,257,602 0.013%
SHANGLA Khyber-Pakhtunkhwa

14

434,563 0.003%
BUNER Khyber-Pakhtunkhwa

389

506,048 0.077%
MALAKAND Khyber-Pakhtunkhwa

142

452,291 0.031%
KOHISTAN Khyber-Pakhtunkhwa

6

472,570 0.001%
MANSHERA Khyber-Pakhtunkhwa

72

1,152,839 0.006%
BATGRAM Khyber-Pakhtunkhwa

117

307,278 0.038%
ABBOTABAD Khyber-Pakhtunkhwa

40

880,666 0.005%
HARIPUR Khyber-Pakhtunkhwa

36

692,228 0.005%
MARDAN Khyber-Pakhtunkhwa

283

1,460,100 0.019%
SWABI Khyber-Pakhtunkhwa

106

1,026,804 0.010%
CHARSADDA Khyber-Pakhtunkhwa

104

1,022,364 0.010%
PESHAWAR Khyber-Pakhtunkhwa

1,224

2,019,118 0.061%
NOWSHERA Khyber-Pakhtunkhwa

666

874,373 0.076%
KOHAT Khyber-Pakhtunkhwa

798

562,644 0.142%
HANGU Khyber-Pakhtunkhwa

156

314,529 0.050%
KARAK Khyber-Pakhtunkhwa

10

430,796 0.002%
BANNU Khyber-Pakhtunkhwa

220

675,667 0.033%
LAKKI MARWAT Khyber-Pakhtunkhwa

8

490,025 0.002%
D.I.KHAN Khyber-Pakhtunkhwa

471

852,995 0.055%
TANK Khyber-Pakhtunkhwa

22

238,216 0.009%
FATA AREA Khyber-Pakhtunkhwa

1,921

3,176,331 0.060%
ATTOCK PUNJ

190

1,274,935 0.015%
RAWALPINDI PUNJ

430

3,363,911 0.013%
JHELUM PUNJ

205

936,957 0.022%
CHAKWAL PUNJ

164

1,083,725 0.015%
SARGODHA PUNJ

142

2,665,979 0.005%
BHAKKAR PUNJ

33

1,051,456 0.003%
KHUSHAB PUNJ

167

905,711 0.018%
MIANWALI PUNJ

121

1,056,620 0.011%
FAISALABAD PUNJ

903

5,429,547 0.017%
JHANG PUNJ

115

2,834,545 0.004%
TOBA TEK SINGH PUNJ

198

1,621,593 0.012%
GUJRANWALA PUNJ

110

3,400,940 0.003%
HAFIZABAD PUNJ

126

832,980 0.015%
GUJRAT PUNJ

238

2,048,008 0.012%
MANDI BAHAUDDIN PUNJ

302

1,160,552 0.026%
SIALKOT PUNJ

3,577

2,723,481 0.131%
NAROWAL PUNJ

1,118

1,265,097 0.088%
LAHORE PUNJ

1,607

6,318,745 0.025%
KASUR PUNJ

2,115

2,375,875 0.089%
OKARA PUNJ

670

2,232,992 0.030%
SHEIKHUPURA PUNJ

1,185

3,321,029 0.036%
VIHARI PUNJ

343

2,090,416 0.016%
SAHIWAL PUNJ

261

1,843,194 0.014%
PAK PATTAN PUNJ

77

1,286,680 0.006%
MULTAN PUNJ

1,208

3,116,851 0.039%
LODHRAN PUNJ

50

1,171,800 0.004%
KHANEWAL PUNJ

249

2,068,490 0.012%
D.G.KHAN PUNJ

340

1,643,118 0.021%
RAJANPUR PUNJ

526

1,103,618 0.048%
LAYYAH PUNJ

810

1,120,951 0.072%
MUZAFFARGARH PUNJ

1,115

2,635,903 0.042%
BAHAWALPUR PUNJ

22,606

2,433,091 0.929%
BAHAWALNAGAR PUNJ

1,603

2,061,447 0.078%
RAHIM YAR KHAN PUNJ

73,506

3,141,053 2.340%
JACOBABAD SINDH

50,693

1,425,572 3.556%
SHIKARPUR SINDH

15,855

880,438 1.801%
LARKANA SINDH

27,321

1,927,066 1.418%
SUKKUR SINDH

29,800

908,373 3.281%
GHOTKI SINDH

64,817

970,549 6.678%
KHAIRPUR SINDH

45,452

1,546,587 2.939%
NAUSHERO FEROZ SINDH

14,458

1,087,571 1.329%
NAWABSHAH SINDH

30,824

1,071,533 2.877%
DADU SINDH

34,490

1,688,811 2.042%
HYDERABAD SINDH

349,167

2,891,488 12.076%
BADIN SINDH

226,423

1,136,044 19.931%
THATTA SINDH

32,139

1,113,194 2.887%
SANGHAR SINDH

292,687

1,453,028 20.143%
MIRPURKHAS SINDH

296,555

906,065 32.730%
UMERKOT SINDH

315,395

662,965 47.573%
THARPARKAR SINDH

369,998

914,291 40.468%
KARACHI SINDH

77,131

9,856,318 0.783%
ISLAMABAD NCT

195

805,235 0.024%
NORTHERN AREAS NORTHERN AREAS

0

970,347 0.000%
AZAD KASHMIR AZAD KASHMIR

0

2,972,501 0.000%
QUETTA BALOCHESTAN

4,175

744,802 0.561%
PISHIN BALOCHESTAN

47

367,183 0.013%
QILLA ABDULLAH BALOCHESTAN

171

370,269 0.046%
CHAGAI BALOCHESTAN

1,941

202,564 0.958%
LORALAI BALOCHESTAN

466

295,555 0.158%
BARKHAN BALOCHESTAN

117

103,545 0.113%
QILLA SAIFULLAH BALOCHESTAN

3

193,553 0.002%
ZHOB BALOCHESTAN

101

275,142 0.037%
SIBI BALOCHESTAN

2,876

180,398 1.594%
ZIARAT BALOCHESTAN

0

33,340 0.000%
KOHLU BALOCHESTAN

171

99,846 0.171%
DERA BUGTI BALOCHESTAN

1,399

181,310 0.772%
JAFFARABAD BALOCHESTAN

6,529

432,817 1.508%
NASIRABAD BALOCHESTAN

1,875

245,894 0.763%
BOLAN BALOCHESTAN

4,463

288,056 1.549%
JHAL MAGSI BALOCHESTAN

1,198

109,941 1.090%
KALAT BALOCHESTAN

1,657

237,834 0.697%
MASTUNG BALOCHESTAN

1,228

179,784 0.683%
KHUZDAR BALOCHESTAN

2,962

417,466 0.710%
AWARAN BALOCHESTAN

295

118,173 0.250%
KHARAN BALOCHESTAN

780

206,909 0.377%
LASBELA BALOCHESTAN

4,504

312,695 1.440%
KECH BALOCHESTAN

979

413,204 0.237%
GWADAR BALOCHESTAN

721

185,498 0.389%
PANJGUR BALOCHESTAN

457

234,051 0.195%

லட்சக்கணக்கில் கோவில்கள் இருந்தன. ஆனால், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் குறைந்தன, இப்பொழுதோ இருக்கும் 428 கோவில்களில் 26 தான், கோவில்களாக இயங்க அரசு அனுமதியளித்துள்ளத். மற்றவை முஸ்லீம்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினரைப் பற்றி குறைவாகவே பள்ளிகளில், பாடப்புத்தகங்களில்[9] போதிக்கப் படுவதால்[10], சிறுவயதிலிருந்தே முஸ்லீம்கள் வெறுப்புணர்வுடன் வளர்கிறார்கள்[11], இந்துக்களை வெறுக்கிறார்கள். மதரஸாக்களை விட இத்தகைய பாடப்புத்தகங்களே தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று பாகிஸ்தானிய நாளிதழே எடுத்துக் கட்டியுள்ளது[12]. இதனால் இருக்கும் குறைந்த இந்துக்கள் பலவித கொடுமைகளுக்குட்படுத்தப் படுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

12-08-2012


[4] Pakistani rights activists say dozens of Pakistani Hindu families have moved to India to escape killings, abductions and forced conversions in recent years.

http://www.bbc.co.uk/news/world-asia-india-19211843

[5] Last week, a teenage Hindu girl was abducted in the city of Jacobabad, while about 11 Hindu traders remain missing after they were kidnapped for ransom. There have also been several high-profile cases of alleged forced conversion to Islam.

http://www.bbc.co.uk/news/world-asia-india-19211843

இந்து மத உணர்வுகளை புண்படுத்த ஒரு முகாமா?

மே 18, 2010
இந்து மத உணர்வுகளை புண்படுத்த ஒரு முகாமா?
மே 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7564

Front page news and headlines today

சென்னை : கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கில் நேற்று துவங்கிய, மூன்று நாட்கள் கோடை கால அறிவியல் முகாமில், இந்து மத உணர்வுகளையும், இந்து மத தலைவர்களையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் இம்முயற்சிக்கு, பெற்றோரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில், பள்ளி மாணவர்களுக்கான மூன்று நாட்கள் அறிவியல் முகாமை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கோடை கால முகாமில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்கால தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.மேலும் மத ரீதியான அதிசயங்கள் உண்மையில்லை என்றும், அவற்றைப் பகுத்தறிய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தனர்.

ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத்தொகுப்பை திரையிட்டு காட்டினர். பின், செய்முறை செய்து காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.ப்இந்த முகாமின் போதே, இதில் கலந்து கொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், மதத் தலைவர்களை பழிக்கும் விதமாகவும் பேசினர். மத ரீதியான உணர்வுகளை புண்படுத்திப் பேசியது, அங்கிருந்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயிற்சி முடித்து வீடு திரும்பியவர்கள், இது போன்று பேச, வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்து மதத்தில் உள்ள சில நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை பாழ்படுத்தும் வகையில், இந்த பயிற்சி முகாம் மாறியதை கண்டு, பெற்றோர் தரப்பில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

அறிவியல் முடிவுகளே தினம் தினம், புதிய கண்டுபிடிப்புகளால் மாறும்போது, காலம் காலமாக நிலைத்த சில உணர்வுக்கு எதிராக வேண்டும் என்றே செயல்பட தைரியம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோட்டூர்பரம் பிர்லா கோளரங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கில் இவ்வாறு நடந்ததன் பிண்ணனி என்ன? இதன் பிண்ணனியில் யார் உள்ளனர்? இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கே. வீரமணி, விடுதலையில் இதற்கு குறிப்பாக பதில் அளித்துள்ளார்.

அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டியா? மதவெறியாளர் மீது நடவடிக்கை தேவை

http://viduthalai.periyar.org.in/20100519/news01.html

அறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டி காட்டி மிரட்டுவதா? இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள் மீது சட்டம் பாயவேண்டும். நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் அறிவியல் துறை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பெரியார் அறிவியல் மய்யத்தில் அறிவியல் சிந்தனை-களை மாணவர்களிடையே பரப்பிட ஒரு முகாம் (3 நாள்களுக்கு) தமிழக அரசின் அறிவியல் துறை நடத்திடும் நிலையில், நேற்று பார்ப்பன நாளேடு ‘தினமலரில்’ ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்த ஒரு முகாமா?’ என்று தலைப்பிட்டு, விஷமத்தனமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்து மத ரீதியான அதிசயங்களாம்! “அதில் உள்ள செய்தியின் ஒரு பகுதியில் இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்-கால தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்-கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்’’ என்று போடப்-பட்டிருக்கிறது.

அந்த ‘பிரகஸ்பதி’மீது நடவடிக்கை: இது சரியான தகவலாக இருந்தால், முகாம் நடத்-துவதுபற்றி கூறிய அந்தப் ‘பிரகஸ்பதி’மீது சட்டப்படி, பள்ளிக் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தாக-வேண்டும்.

இந்து மத பெருமைக்காகவா முகாம்? மத சார்பற்ற அரசில் அதுவும் பெரியார் அறிவியல் மய்யத்தில், இந்து மதப் பெருமைக்காகவா முகாம் ஏற்பாடு செய்திருப்பார்கள்? இது எப்படி சரியாகும்?

அதே செய்தியில், கீழே, “மேலும், மத ரீதியான அதிசயங்கள் உண்மை-யில்லை என்றும், பகுத்தறிவைக் கற்றுக்கொள்ள-வேண்டும் என்றும் மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தார்.’’

திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பு: ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திரு-விழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பை திரையிட்டுக் காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.

பார்ப்பனர்கள் கொலை மிரட்டல்: இந்த முகாமின்போதே, இதில் கலந்துகொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், இந்து மதத் தலைவர்களையும் பழிக்கும் விதமாகப் பேசினர். மத ரீதியான உணர்வு-களைப் புண்படுத்திப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தி-யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!’’ என்று எழுதிய-தோடு, இதை நடத்திட வந்த பேராசிரியர் நரேந்திர நாயக் (கருநாடக அறிவியல் அறிஞர்) அவர்களுக்கு சில பார்ப்பன மதவெறியர்கள் தொலைபேசிமூலம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கேள்விப்-படுகிறோம்!

இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதென்ன? இந்திய அரசியல் சட்டத்தின் 51_ஏ பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை கடமைகள் (Fundamental Duties) பற்றி கூறுகையில், ‘‘It shall be the duty of every citizen of India to develop scientific temper, spirit of inquiry, humanism and reform’’ என்று கூறப்பட்டுள்ளதே! அடிப்படை உரிமை போன்றதே அடிப்படை கடமைகளும்கூட! அறிவியல் மனப்பான்மை முக்கியம். இதன் அறிவியல் மனப்பான்மையை, கேள்வி கேட்டுத் துளைக்கும் பண்பை, மனித நேயத்தை, சீர்-திருத்தத்தைப் பரப்பி வளர்க்கச் செய்வதே அடிப்படைக் கடமையாகும்.

என்ன மிரட்டலா? பூச்சாண்டி காட்டுவதா? இதனை அரசு, அதுவும் மதச் சார்பற்ற செக்யூலர் அரசு, அதன் அறிவியல் மய்யத்தில் தக்காரைக் கொண்டு நடத்தினால், அது மத உணர்வை _ இந்து மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி மிரட்டல் விடுவதா? பூச்சாண்டி காட்டுவதா? அறிவியல் உண்மைகளைப் பரப்பி, மத, மூட நம்-பிக்கைகளை ஊசிகொண்டு, ஊதப்பட்ட பலூன்களைக் குத்தச் செய்வதுபோல் அவசியமாகச் செய்யவேண்டிய பணி அல்லவா இது?

சைபர் க்ரைம் குற்றப்பிரிவு: இந்த மிரட்டல் விட்டவர்மீது ‘செல்போனில்’ சைபர் க்ரைம் குற்றப் பிரிவினர் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க முன்வரவேண்டும்! உலகம் தட்டை என்று கருதப்பட்ட மூட நம்பிக்கை அதனை அடிப்படையாக, இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்ற கதை, கற்பனை என்று விளக்கம் சொன்னால் தவறு என்ன?

குடும்பக் கட்டுப்பாடு மதத்திற்கு விரோதம்தான்!

அரசின் குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடைகூட மதக் கருத்துக்கு விரோதம்தான். அத்திட்டம் மதவாதிகள் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி, அரசைக் கைவிடச் சொல்ல முடியுமா?

கிரகணம் _ ராகு, கேது, பாம்பு விழுங்கும் கதையை அறிவியல், வானவியல் ஏற்குமா? இதை அம்பலப்-படுத்தி மூடநம்பிக்கையை மாணவரிடையே போக்க முயற்சித்தால், அது ‘மனம் புண்படும்’ என்றால், அவ்-வளவு மோசமான மனம் படைத்தோருக்கு சமூகத்தில், நாட்டில் எங்கே இடம் இருக்கவேண்டும்?

இன்னமும் கதை விடுவதா?

மனிதன், நிலா உலகிற்குச் சென்று வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.

இன்னமும் ‘‘தாரை, குருபத்தினி’’, நிலா ஏன் தேய்-கிறது _ சாபம் _ நிலாவுக்கு _ சந்திரனுக்கு 27 மனைவி-கள் கதை கூறிட முடியுமா?

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் போக்கத்தானே அறிவியல்!

தி.க., ப.க. உடனே உரிய நடவடிக்கையில் இறங்கும்!

அம்மை குத்திக் கொள்வது ஆத்தாளுக்கு
விரோதம் என்று நம்பும் வடிகட்டிய மூடர்கள் மனம் முக்கியமா? நாற்றங்கால் பயிர்களாக உள்ள மாணவர்-களை அறிவியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவது முக்கியமா?

பகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் வேடிக்கை பார்க்காது. உடனே உரிய நடவடிக்கைகளில் இறங்கும்!


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை,
19.5.2010

நரேந்திர நாயக், வீரமணி, திமுக கூட்டு: கடந்த டிசம்பரில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு பெரியார் திடலில் நடந்தபோது, நரேந்திர நாயக் முதலியோர் கலந்து கொண்டனர். அதனுடைய தொடர்ச்சிதான் இது என்று நன்றாகத் தெரிகிறது. வீரமணியுடன், கருணாநிதியையும் நாயக் சந்தித்துள்ளார். அதன்படியே, இந்த நிகழ்ச்சிற்கு நாயக் வரவழைக்கப் பட்டு தன்னுடைய “விஞ்ஞான பூர்வமான” விளக்கங்களை அளித்துள்ளார்.

இந்து-விரோத பகுத்தறிவு, நாத்திகம் முதலியன உண்மையான அறிவடைவதற்கு உதவாது, அது இந்து விரோதிகளைத்தான் உருவாக்கும். அதுவும் சமூகத் தீவிரவாதச் செயலே ஆகும்.

அருமறையின் உட்பொருளே அண்ணாமலை

திசெம்பர் 19, 2009
அருமறையின் உட்பொருளே அண்ணாமலை
மரு​த​வா​ணன்
First Published : 27 Nov 2009 12:28:00 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Vellimani&artid=160482&SectionID=147&MainSectionID=147&SEO=&Title=

நம்மு ​டைய சநா​தன தர்​மத்​துக்கு வேதங்​களே அடிப்​படை. இன்று,​ “நவீன’ பண்​டி​தர்​க​ளா​கத் தங்​க​ளைக் கருதி கொள்​ளும் சிலர்,​ “மறை​களே தேவை​யில்லை’ என்று கூறிக் கொண்டு,​ ஆனால் வேதத்​தில் விதிக்​கப்​பட்​டுள்ள சில கிரி​யை​களை சைவத் திரு​மு​றை​க​ளின் மூலம் ஆற்றி அதன் மூலம் வாழ்ந்து வரு​கின்​ற​னர். இது சைவ சம​யக் குர​வர்​கள் நால்​வ​ரும்,​ ஏனைய சைவப் பெரி​யோர்​க​ளும் காட்​டி​ய​ரு​ளா​த​தால் துன்​மார்க்​கம்!​”

வட​மொழி ஒன்றே துதிப்​ப​தற்​கான மொழி’ என்று இக்க​லி​யில் கூறி​விட முடி​யாது. ஏனெ​னில் இந்த யுகத்​தில் தர்​மம் ​ குன்​றும் ;​ மக்​க​ளின் திறன் குறை​யும்;​ உல​கா​ய​தம் தலை​வி​ரித்​தா​டும்;​ நாத்​திக வாதம் தலை தூக்​கும்!​ எனவே இந்த யுகத்​தின் தன்​மைக்​கேற்ப,​ அந்​தந்த மாநி​லங்​க​ளில்,​ “பிர​தேச பாஷை’களில் வேதத்​தின் சாரத்​தைப் பாடும் அரு​ளா​ளர்​களை இறை​வனே படைத்​த​ரு​ளி​னார். இதன் கார​ணம்,​ “தன்​னைத் துதிப்​ப​தற்கு மொழி ஒரு தடை​யாக இருக்​கக்​கூ​டாது’ என்ற கரு​ணை​யுள்​ளமே!

வேதத்​தின் மெய்ப்​பொ​ருள்: இறைவ ​னால் படை க்​கப்​பட்ட இந்த அரு​ளா​ளர்​கள் அனை​வ​ருமே வேதத்​தின் சாரத்​தையே பிர​தேச பாஷை​க​ளில் பாடி​னர். “வேத அனந்த போலிலா’​ என்ற ஸ்ரீது​கா​ராம் சுவா​மி​கள்,​ “”நான்கு வேதங்​க​ளும் நிறைய உண்​மை​க​ளைக் கூறி​யுள்​ளன!​ புரா​ணங்​க​ளும் அவற்றை வழி மொழிந்​துள்​ளன. அவற்​றின் உட்​க​ருத்து ஒன்​றே​யொன்​று​தான்!​ இறை​வ​னின் திரு​வ​டி​களை தியா​னித்​த​படி,​ அன்​றா​டம் அவ​னு​டைய திருப்​பெ​யர்​களை ஓதிக் கொண்​டி​ருப்​பதே முக்​திக்​கான வழி” என்று மராட்​டிய மொழி​யில் பல்​லா​யி​ரம் கீதங்​களை இயற்றி,​ இக்​க​ருத்​தினை வலி​யு​றுத்​தி​யுள்​ளார். அந்த மண்​ணில் தோன்​றிய எல்லா அரு​ளா​ளர்​க​ளுமே இதே கருத்​தினை,​ பல்​வேறு விதங்​க​ளில் பாடி வைத்​துள்​ள​னர்.

இதே​போல கர்​நா​ட​கத்​தி​லும்,​ ஆந்​தி​ரத்​தி​லும் தோன்​றிய “தாஸர்​கள்’ ​(இறை​ய​டி​யார்​கள்)​ அந்​தந்த மொழி​க​ளில் வேதத்​தின் சாரத்தை,​ தாங்​கள் இயற்​றிய பாடல்​க​ளில் பொழிந்​துள்​ள​னர்.

இப்​படி எல்லா மாநி​லங்​க​ளி​லுமே அடி​யார் பெரு​மக்​கள் அவ​த​ரித்து,​ மறை​யின் உட்​பொ​ரு​ளைப் பாடல்​க​ளின் வடி​வில் எளி​தில் விளக்​கி​யுள்​ள​னர். இவை அனைத்​துமே இறை​வனை “அனை​வ​ரும்’ தொழ வேண்​டும் என்ற எண்​ணத்​தில்,​ கட​வு​ளின் அரு​ளா​ணை​யின் வண்​ணம் இயற்​றப்​பட்​டவை.

பெருமை மிகு நமது தமி​ழ​கத்​தி​லும் சைவ சம​யக் குர​வர்​க​ளும்,​ நாயன்​மார்​க​ளும்,​ ஆசா​ரி​யப் பெரு​மக்​க​ளும் தோன்றி,​ “வேதத்​தின் சாரத்தை’ தமிழ்ப் பாடல்​க​ளாக அளித்​துள்​ள​னர். வை​ணவப் பெரி​யோர்​க​ளும் வேத வழி நின்றே பிர​பந்​தங்​களை அரு​ளி​னர். ​ இவர்​க​ளில் எவ​ருமே,​ “வேதம் வேண்​டாம்’ என்று கூற​வில்லை என்​பது மட்​டு​மின்றி,​ “வேத நெறி​யினை’ தமி​ழில் உரைப்​ப​தா​கவே அகச்​சான்​று​க​ளு​டன் தெரி​விக்​கின்​ற​னர். “வேதம் நான்​கி​னும் மெய்ப்​பொ​ரு​ளா​வது நாதன் நாமம் நமச்​சி​வா​யவே’​ என்று சம்​பந்​தர் பாடி​யது கட​லுக்​கோர் அலை என்​ப​து​போல் தெளி​வான சாட்​சி​யா​கும்.

சிலர் வேத நெறி​களை இகழ்​வ​தற்கு “தேவை​யற்ற’ பொறாமை மட்​டுமே கார​ண​மாக இருக்க வேண்​டும். ஒரு வேளை அத்​தன்மை,​ அவர்​க​ளது ஊழ்​வி​னைப் பய​னா​க​வும் இருத்​தல் கூடும்.​

சைவமே சிறந்த நெறி: சநாதன தர்​மத்​தின் சில கிளை​கள் சேர்ந்து,​ இந்​தத் தர்​மத்​தின் வேராக விளங்​கும் சைவத்தை மட்​டம் தட்ட பற்​பல நூற்​றாண்​டு​க​ளா​கவே முயன்று வரு​கின்​றன. இவர்​களை நினைத்து வருந்​திய ஸ்ரீஅப்​பைய தீட்​சி​தர் என்ற ஒப்​பற்ற சைவக் குர​வர்,​ “”சிவ​பெ​ரு​மானே!​ பாசத் தன்​மை​யற்ற நீயே அனைத்​துத் தேவர்​க​ளுக்​கும் மேம்​பட்​ட​வன்!​ மற்ற தேவர்​க​ளா​லும் தொழப்​ப​டு​கின்​ற​வன்!​ இத​னைப் பல்​வே​றி​டங்​க​ளில் வேதங்​கள் உறு​தி​ப​டக் கூறு​கின்​றன. ஆயின் இந்த உண்​மையை அறி​யாத கீழோர்,​ இக்​க​ருத்​தினை எதிர்க்​கின்​ற​னர். இது பொறா​மை​யின் விளைவு!​ இத​னால் இவர்​க​ளது வாழ்வே பய​னற்​றுப் போய்​வி​டும். இப்​ப​டிப்​பட்ட தீய​வர்​க​ளின் சொற்​களை நம்​பு​வோர்க்கு மர​ணமே தண்​ட​னை​யாக அமை​யும்” என்று தனது “சிக​ரணி மாலா’ என்​னும் நூலில் தெரி​விக்​கின்​றார்.

இங்கே நுட்​ப​மா​கக் கவ​னிக்க வேண்​டிய விஷ​யம்,​ “சிவனே உயர்ந்​த​வர்’ என்​ப​தற்கு வேதங்​க​ளைத்​தான் ஸ்ரீ தீக்ஷி​தர் சான்று காட்​டு​கி​றார். சைவ சம​யக் குர​வர்​க​ளும் நான்மறை​க​ளின் அடிப்​ப​டை​யில்​தான் சிவத்​தின் பெரு​மையை நிலை​நாட்​டி​யுள்​ள​னர். அந்த வேதத்​தையே மறுப்​பது,​ சிவத்​தையே இகழ்​வ​தற்​குச் சமம்!​ ஒரு குழந்​தை​யின் தலை​யில் புடைத்​து​விட்டு,​ வாயில் உண​வி​டு​தல் போன்ற மடமை!

வேதம் என ஒன்​றில்​லை​யெ​னில் எல்​லாச் சம​ய​வா​தி​க​ளும்,​ தத்​தம் மர​பைப் பேணிய ஆசா​ரி​யர்​க​ளின் பாடல்​க​ளைச் சான்​றா​கக் காட்டி,​ ஏனைய தெய்​வங்​க​ளுக்​கும் உயர்வு கற்​பிக்க முயற்​சிப்​பார்​கள்!​ இப்​ப​டிப்​பட்​ட​வர்​கள்,​ புரா​ணங்​க​ளில் உள்ளே புனைந்​து​ரைத்து திணிக்​கப்​பட்ட இடைச் செரு​கல் பொய்க் கதை​க​ளை​யும் தங்​கள் வாதத்​துக்கு ஆதா​ர​மா​கக் காட்​டு​வர். “சைவத்​தின் மேற் சம​யம் வேறில்லை’​ என்று பதில் கூறி​டி​னும்,​ “உங்​கள் குரு​மார்​கள் அப்​ப​டித்​தானே பாடு​வார்​கள்?​ அது இயல்​பான விஷ​ய​மே​யன்றி,​ உறு​தி​யான சான்​றா​காது’ என்று அடித்​துச் சொல்​லி​வி​டு​வர். இப்​ப​டிப்​பட்ட வாதங்​களை எதிர் கொள்​வ​தற்​கா​க​வா​வது வேதங்​க​ளைப் பாது​காத்​தி​டல் வேண்​டும் என்​பதை “நவீன பண்​டி​தர்​கள்’ உணர வேண்​டும்.

வேதத்​தின் இரு கண்​க​ளாக உள்ள சைவம்,​ வைண​வம் என்ற இரு தரப்​பி​ன​ருக்​குமே மறை​களை ரட்​சிப்​பது கட​மை​யா​கும். ஒரே பர​மாத்மா சிவ​னா​க​வும்,​ திரு​மா​லா​க​வும் உள்​ள​தென்​பதே உண்மை எனி​னும்,​ பக்​திக்​காக ஒரே தெய்​வத்​தைப் பற்​றி​யி​ருத்​தல் என்​னும் மரபு உள்​ள​தன்றோ!​ அதற்​காக அறு​வ​கைச் சம​யி​க​ளும் வேதங்​களை மதித்​தி​டல் வேண்​டும்.

நமக் ​குப் பொருள் புரி​யா​விட்​டா​லும் பர​வா​யில்லை!​ “நமது குரு​நா​தர்​கள் வேதத்​தைப் புகழ்ந்து,​ அதன் பிர​மா​ணங்​களை வைத்தே சிவத்​தின் பெரு​மையை நிலை நாட்​டி​யுள்​ள​னர். எனவே மறை​களை மதிக்​கா​தி​ருத்​தல் குரு துரோ​க​மா​கும்’ என்ற சிந்​தனை,​ அனை​வர்க்​கும் ஏற்​பட வேண்​டும்.​

சம​ய நீதி “வேதம் ஓதி,​ வெண்​ணூல் பூண்டு’​ என்ற ரீதி​யில் பல்​வே​றி​டங்​க​ளில் திரு​முறை ஆசி​ரி​யர்​கள் குறிப்​பிட்​டுள்​ள​னர். அவர்​கள் சொற்​க​ளுக்கு எதி​ராக நடந்து கொண்டு,​ ஆனால் அவர்​களே நமது வழி​காட்​டி​கள் என்று நாட​க​மா​டு​ப​வர்​க​ளும்,​ ஒரு வகை​யில் ஸ்ரீ அப்​பைய தீட்​சி​தர் கூறி​ய​து​போல் பய​னற்ற வாழ்வு வாழ்ந்து,​ மர​ணத்​தைத் தண்​ட​னை​யாக அடை​வார்​கள் போலும்!

“எல்​லோ​ருக்​கும்​தானே மர​ணம் வரு​கி​றது? அதனை எப்​ப​டித் தண்​டனை என்று கூற​லாம்?​’ என்று சிலர் மன​தில் கேள்வி எழ​லாம். ஆனால் மெய்​யான சிவ​ன​டி​யார்​கள் உடலை உகுப்​பது,​ மறு​படி பிறப்​ப​தற்​காக அல்ல;​ சிவா​னந்​தப் பெரு வாழ்வு பெறு​வ​தற்​காக!​ ஆனால் சம்​பந்​தப் பெரு​மான் கூறிய வண்​ணம்,​ “ஆரி​யத்​தொடு செந்​த​மிழ்ப் பய​ன​றியா மந்​தி​கள்!​ அந்​த​கர்​கள்’​ ஆகி​யோர் பிறப்​ப​தற்​கென்றே இறக்​கின்​ற​னர். மறை​நெ​றியை மறுத்து வயிறு வளர்த்​த​வர்​களை,​ மறு​ப​டி​யும் இதே நெறி​யில் இறை​ய​ருள் செலுத்​துமா என்​ப​தும் ஐயமே!​ ஒரு கால் அவர்​கள் ஆற​றிவு படைத்த மனி​தர்​க​ளா​கப் பிறக்க நேரி​டி​னும் வேத நெறி​யா​கிய சைவ நெறி​யைச் சாரா​த​வர்​க​ளா​க​வும்,​ திரு​வா​ச​கம் கூறு​வ​து​போல் புல்,​ புழு,​ மரம்,​ மிரு​கம்,​ பறவை,​ பாம்பு போன்ற ஏதோ ஒன்​றா​க​வும் பிறக்​க​வும் வாய்ப்​பு​கள் அதி​கம்!​ அதற்கு முன்​னர் அத்​தீ​யோர் நர​கத்​தில் அள​வி​டற்​க​ரிய துன்​பங்​களை அனு​ப​வித்​தா​லும் வியப்​ப​தற்​கில்லை!​ ஏனெ​னில்,​ வினை விதைத்​த​வர் வினை அறுப்​ப​து​தானே சமய நீதி!​​ ​ ​ ​

விசு​வா​தி​கன்! இவையொரு புற​மி​ருக்க,​ “திரு​வண்​ணா​மலை’ என்​னும் தெய்​வீ​கப் பெருந்​த​லம்,​ வேதம் கூறும் உண்​மை​களை விளக்​கும் “மலை​ய​ளவு’ சான்​றா​கும். இதை நிரூ​பிக்க கணக்​கற்ற சான்​று​களை நான்​ம​றை​களி​லி​ருந்​தும் காட்ட இய​லும். விரி​வஞ்சி,​ சில​வற்றை மட்​டும் இங்கே வழங்​கு​கின்​றோம்.

வேதாந் த​மா​கிய சுவே​தாச்​வ​ரம் என்​னும் உப​நி​ட​தம்,​ சிவ​பெ​ரு​மானை “விசு​வா​தி​கன்’ என்று போற்​று​கின்​றது. ஈரேழு பதி​னாலு உல​கங்​க​ளி​லும்,​ அழி​யக்​கூ​டிய சில இதர தெய்வ உல​கங்​க​ளை​யும் தாண்டி-​பேரூ​ழிக் காலத்​தி​லும் அழி​யாத ஒரே முக்தி ஸ்தா​ன​மா​கிய “சிவ​லோ​கம்’ என்ற மோட்​சத்​துக்கு ஏக நாய​க​ராக விளங்​கு​வ​த​னால்​தான் ​ சிவனை,​ “விசு​வா​தி​கன்’ என்று வேதம் புகழ்​கின்​றது.

பஸ்ம ஜாபால உப​நி​ட​தத்​தில் காசி​யின் பெரு​மை​யைக் கூறும் சிவ​ப​ரம்​பொ​ரு​ளா​கிய விசு​வ​நா​தர்,​ “இம்​மா​ந​க​ரில் கிழக்​கில்,​ கூப்​பிய கரங்​க​ளோடு அல்​லும் பக​லும் பிரம்மா என்​னைத் தியா​னிக்​கின்​றார்!​ மேற்​கில் இந்​தி​ரன் என்னை வழி​பட்​டுக் கொண்​டி​ருக்​கி​றார்!​ தெற்​கில்,​ தலை​யின் மீது தனது கரங்​க​ளைக் கூப்​பிய வண்​ணம் திரு​மால் என்​னைத் தியா​னம் செய்து கொண்​டி​ருக்​கி​றார்!​’ என்று விளக்​கி​ய​ரு​ளி​யுள்​ளார்.

சரப உப​நி​ட​தம்,​ “பிற​விப் பெருங்​க​ட​லைக் கடக்க விரும்​பு​கி​ற​வர்​கள் இதர தெய்​வங்​களை வழி​ப​டு​வ​தைத் தவிர்த்​து​விட்டு,​ தியா​னத்​துக்கு ஏற்ற ஒரே கட​வு​ளாக உள்ள சிவ​பெ​ரு​மானை உபா​சிக்க வேண்​டும்’ என்று எடுத்​து​ரைக்​கின்​றது.​

நரேந்​தி​ர​ரின் வாழ்​வில்… இங்கே சுவாமி விவே​கா​னந்​த​ரின் இள​மைப் பரு​வச் சம்​ப​வம் ஒன்று நினை​வுக்கு வரு​கின்​றது. தனது அறை​யில் சீதை​யு​டன் நிற்​கும் ராம பிரா​னின் திரு​வு​ரு​வச் சிலை​யொன்றை வைத்து வணங்​கிக் கொண்​டி​ருந்​தார் நரேந்​தி​ரர். ​(துற​வ​றம் ஏற்ற பிறகே இவ​ரது திருப்​பெ​யர் “விவே​கா​னந்​தர்’ என்​றா​னது.) ஒரு​நாள் வண்​டி​யோட்டி ஒரு​வன்,​ திரு​மண வாழ்​வி​லுள்ள அவ​தி​களை எடுத்​துக் கூறி​னான்.

அவற்​றை​ யெல்​லாம் கேட்ட நரேந்​தி​ர​ரின் மன​தில்,​ “சீதா ராம​னின்’ மீதி​ருந்த பிடிப்பு அகன்​றது. “இவ​ரும் சம்​சா​ரத்​தில் சிக்​கிய சாதா​ர​ணர்​தானே?​’ என்று தோன்​றி​விட்​டது. தன் தாயி​டம் தனது உள்​ளக் குமு​றலை வெளிப்​ப​டுத்​தி​னார் நரேந்​தி​ரர். அதற்கு அவ​ரது தாயா​ரான புவ​னே​சு​வரி,​ “பார்​வ​தியை மணம் புரிந்து கொண்​டி​ருந்​தா​லும் காமனை எரித்த கட​வுள் சிவ​பெ​ரு​மான்.

அவர் தியாக மூர்த்தி’ என்று பதி​ல​ளித்​தார். இத​னால் தெளிவு பெற்ற நரேந்​தி​ரர்,​ தனது அறையி​லி​ருந்த சீதா ராமர் பொம்​மையை வீசி எறிந்​தார்!​ சிவ​பெ​ரு​மான் வடி​வொன்றை வாங்கி வந்து வைத்து,​ அந்​தப் புதுப் பொம்​மை​யி​டம் எல்​லை​யற்ற அன்பை வெளிப்​ப​டுத்​தி​னார்.

பின்​னா​ளில் “அத்​வை​தம்’ என்ற தத்​துவ உணர்வை குரு​வ​ரு​ளால் பெற்​ற​தும்,​ அவர் இதர தெய்​வங்​களை வெறுக்​க​வில்லை என்​பது வேறு விஷ​யம்.​

கவி காள​மே​கம் மீண்டும் நான்மறை​க​ளுக்கு வரு​வோம். அதர்​வண வேத ப்ரு​ஹத் ஜாபால உப​நி​ட​தம்,​ “”சிவ​பெ​ரு​மானே!​ உங்​கள ஸர​ண​ம​டைந்​தேன்!​ உமது திரு​வ​டி​யி​ணை​க​ளில் என் அன்பு எப்​போ​தும் நிலைத்​தி​ருக்​கட்​டும்” என்று விஷ்ணு பிரார்த்​தித்​துக் கொண்​ட​தா​கக் கூறு​கின்​றது.

இந்த வேதக் கருத்தை அடி​யொட்​டியே,​ கண்​ண​னை​யன்றி வேறு தெய்​வம் அறி​யாத ஸ்ரீநா​ரா​யண தீர்த்​தர் என்ற மகா​னும்,​ “சிவ சிவ பவ பவ ஸர​ணம்!​ மம பவது ஸதா தவ ஸ்ம​ர​ணம்’​ என்று பாடி வைத்​தார். “சிவ​பெ​ரு​மா​னின் நினைவே தனது உள்​ளத்​தில் எப்​போ​தும் நிலைத்​தி​ருக்​கட்​டும்’ என்று கோரும் ஞானத்தை இந்த அடி​யார் பெற்​றி​ருந்​தார்.

பிறப்​பால் வைண​வர்​க​ளான வாலி​ய​மு​த​னார்,​ புரு​ஷோத்​தம நம்பி ஆகி​யோ​ரும்,​ “சைவ நெறியே வேத நெறி’ என உணர்ந்து பதி​கங்​கள் பாடி​யுள்​ள​னர். இப்​பா​டல்​கள்,​ பதி​னொன்​றாம் திரு​மு​றை​யில் இடம் பெற்​றுள்​ளன. ஸ்ரீரங்​கத்து ஸ்ரீவைஷ்​ண​வ​ரான ஒரு​வர்,​ வைண​வத்​தால் கவ​ரப்​ப​டா​மல் “திரு​வா​னைக்கா’ சிவா​ல​யத்​தில் தொண்டு செய்து கொண்​டி​ருந்​தார். அங்​குள்ள அகி​லாண்​டேஸ்​வ​ரி​யின் அரு​ளால் கவி பாடும் திறமை பெற்று புக​ழோடு வாழ்ந்​தார். இவரே,​ “கவி காள​மே​கம்’ எனப்​ப​டு​கி​றார். இப்​படி எத்​த​னையோ உதா​ரண புரு​ஷர்​கள்!

ரிக் வேதம்,​   “”ஏனைய தெய்​வங்​கள்  அனைத்​துமே  சிவ​லிங்க    வழி​பாட்​டி​னால்​தான் பிற​ரால் தொழப்​ப​டும் அந்​தஸ்​தைப் பெற்​றார்​கள்” என்​கி​றது.​

பிர​பஞ்​சமே லிங்க வடி​வம் யஜூர் வேதமோ,​ “ஸ்ரீ ருத்​ரம்’ என்ற பகு​தி​யில்,​ “இந்​தப் பிர​பஞ்​சமே சிவ​லிங்க வடி​வம்​தான்’ என்று கூறு​கின்​றது. இந்த வேதத்​தின் இத​யப் பகு​தி​யில்​தான் “திரு​வைந்​தெ​ழுத்து’ வீற்​றி​ருக்​கின்​றது. மராட்​டிய மாநி​லத்து திரு​மா​ல​டி​யார்​க​ளான ஞானேஸ்​வ​ரர்,​ துகா​ராம்,​ நாம​தே​வர் போன்ற உத்​த​மர்​க​ளும் இந்த யஜூர் வேதத்​துக் கருத்தை உள்​வாங்கி,​ சிவ​பெ​ரு​மா​னைப் போற்​றிப் பல “அபங்​கங்​கள்’ பாடி​யுள்​ள​னர். “சிவமே பர​மாத்மா’ என்​கி​றார் விஷ்ணு தாஸ​ரான ஏக​நா​தர்.​ ​ ​ ஆக இப்​ப​டிப்​பட்ட ஏரா​ள​மான நான்மறைச் சான்​று​க​ளின் ஆதா​ரத்​தி​லேயே,​ எவ​ரா​லும் அசைக்க முடி​யாத மலை​யாக “அரு​ணா​ச​லம்’ திகழ்​கின்​றது. இங்கே ஆதி​யும்,​ அந்​த​மும் இல்லா ஜோதி​யாக சிவ​பெ​ரு​மான் நிற்​கின்​றார். இவ​ரது திரு​வ​டி​களை பன்றி வடி​வெய்தி மால​வ​னும் கண்​டி​லன்!​ அன்​னப்​ப​றவை வடி​வெ​டுத்து நான்​மு​க​னும் திரு​முடி காண மாட்​டாது திகைக்​கின்​ற​னன்.

“நான்மறை​யின் உட்​பொ​ருள் நானே’ என்று அய​னுக்​கும்,​ மால​வ​னுக்​கும் சிவ​ப​ரம்​பொ​ருள் உணர்த்​திய நன்​னாளே திருக்​கார்த்​திகை!​ அதனை விளக்​கவே கார்த்​திகை நாளில்,​ அண்​ணா​மலை மீது “அகண்ட தீபம்’ ஏற்​றப்​ப​டு​கி​றது. இல்​லங்​க​ளி​லும் தீபங்​கள் ஏற்றி,​ ஜோதி வடி​வான சிவ பரம்​பொ​ரு​ளைத் துதிக்​கின்​றோம்.

வேதங்​க​ளும்,​ கீதங்​க​ளும் அறி​யா​த​வர்​கள்​கூட “ஆண​வம்’ இன்றி வந்து வழி​பட்​டால் சிவம் அவர்​க​ளுக்கு அருள்​பா​லிக்​கும் என்​ப​தனை “திரு​வண்​ணா​மலை’ தெளி​வு​ப​டுத்​திக் கொண்​டி​ருக்​கி​றது. எனவே இவ்​வூ​ரின் “தல புரா​ணம்’ என்​பது கற்​ப​னைக் கதை​யல்ல!​ அப்​ப​டிக் கூறு​வது பொறா​மைக்​கா​ரர்​க​ளின் புலம்​பல்!​ உண்​மை​யில் அரு​ணா​ச​லமே வேதங்​கள் விளம்​பு​கின்ற பேருண்மை!