Archive for the ‘பெயில்’ Category

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக் கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலை – செக்யூலரிஸஅரசா, பெரியாரிஸ-நாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (2 )

நவம்பர் 17, 2023

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக்கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலைசெக்யூலரிஸ அரசா, பெரியாரிஸநாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (2 )

விதவிதமான வழக்குப் பதிவு: போலீஸாரின் அறிக்கையின் படி, கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி காலை வரை-

  1.  உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும்,
  2. தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும்,
  3. அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் என மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  4. விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டட்ம 118வது சட்டப்பிரிவின் படி 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்.
  5. மேலும், நேர கட்டுப்பாட்டை மீறியும், தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-ன் படி வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது[1].
  6. பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், குடிசை பகுதிகள் போன்ற பட்டாசு தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது[2].

சரி, இத்தனை ஆண்டுகளாக, அத்தகைய வெடிகள் வெடிக்கப் படவில்லையா? அப்பொழுது ஒன்றும் நடக்கவில்லையா?

ஆயிரக்கணக்கில் பொது மக்களை வெடிவெடித்தார்கள் என்று கைது செய்வதால் என்ன பெருமை கொண்டார்கள்?: இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது[3]. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவ.12 மற்றும் நவ.13 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்காக குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலான நேரத்தை தவிர்த்து[4], மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது[5]. அதில் 2,095 பேர் கைது செய்யப்பட்டனர்[6]. இதில் அதிகபட்சமாக சென்னையில் 558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2005 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது[8]. இப்படியெல்லாம் சொல்லிக் கொள்ள பெருமையாகவா இருக்கிறது?

சென்னையில் பதிவு செய்யப் பட்ட வழக்குகள்: மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது[9]. தொடர்ந்து இந்த தனிப்படை போலீஸார், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது[10].சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மாசு அளவு 100 ஐ தாண்டி இருந்தது. சென்னை, பெருங்குடி- 178, அரும்பாக்கம் – 159, ராயபுரம் – 115, வேளச்சேரி – 117 என அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100-ஐ தாண்டியது அதேபோல வேலூர், கடலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் காற்று மாசு மோசமடைந்து உள்ளது[11]. தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது[12].

பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?[13]: திருவள்ளூர்- திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்ததாகவும் சுமார் 111 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[14].

மதுரை- மதுரை மாநகர் பகுதிகளில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாநகர காவல்துறையினர் 141 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்- தஞ்சாவூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது‌. அதில் 40 பேர் கைது செய்யப்பட்டு சொந்த பினையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை- விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 27 வழக்குகளும் நெல்லை மாநகரப் பகுதியில் 20 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம்- வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி- தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு குறிப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 16 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி- புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 56 பேர் மீது புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பாரபட்சம் மிக்க நடவடிக்கைகள் இந்துவிரோதமாக இருப்பது ஏன்?: தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதால் மட்டும் தான் மாசு உண்டாகி, சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பது போன்ற பிரமையை உண்டாகி வைக்கப் பட்டுள்ளது. மற்ற வழிகளில் எவ்வாறெல்லாம் மாசு தினம்-தினம் உண்டாகி-உண்டாக்கி சுற்றுச்சூழலை பதித்து வரப் படுகிறது என்று எடுத்துக் காட்டப் படுவதில்லை. அதே போல, மற்ற பண்டிகைகளின் மீது, கோடிக்கணக்கில் உயிர்கள் கொலை செய்யப் படுகின்றன. அப்பொழுது, யாரும் உயிர்கொலை செய்யாதே என்று அறிவுருத்துவது இல்லை, உயர்நீதி-உச்சநீதி மன்றங்களுக்குச் செல்வதில்லை. திக-திமுகக்கரர்கள் வசை பாடுவதில்லை, தூஷிப்பதில்லை.  இதே பெரியாரிஸ-நாத்திக கோஷ்டிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மாறாக வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். பிறகு, இத்தகைய முரண்பாடுகளை செக்யூலரிஸ நாட்டில் எவ்வாறு புரிந்து கொள்வது?

© வேதபிரகாஷ்

16-11-2023


[1] தமிழ்.இந்து,தமிழகம் முழுவதும் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு @ தீபாவளி , செய்திப்பிரிவு, Published : 13 Nov 2023 10:14 PM; Last Updated : 13 Nov 2023 10:14 PM.

[2]   https://www.hindutamil.in/news/tamilnadu/1152686-2206-cases-of-breaking-firecrackers-across-tamil-nadu-registered-at-diwali-~XPageIDX~.html

[3] தினமணி, கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 11 போ் கைது, By DIN  |   Published On : 15th November 2023 03:15 AM  |   Last Updated : 15th November 2023 03:15 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2023/nov/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4106087.html

[5] நக்கீரன், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு; ‘தமிழகம் முழுவதும் 2,206 வழக்குகள் பதிவு’ – காவல்துறை தகவல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 13/11/2023 (23:29) | Edited on 13/11/2023 (23:44)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/2206-cases-registered-across-tamil-nadu-police/

[7] மாலைமுரசு, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு மீறல்தமிழ்நாடு முழுவதும் அதிக வழக்குகள் பதிவு!, Webteam, Nov 13, 2023 – 17:39.

[8] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Violation-of-timing-in-bursting-of-firecrackers

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Diwali 2023: பட்டாசு நேரம்.. விதிமீறியதால் 2095 வழக்குகள்.. தமிழ்நாடு காவல்துறை அதிரடி!, By: உமா பார்கவி,Published at : 12 Nov 2023 07:20 PM (IST)  | Updated at : 13 Nov 2023 03:10 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/chennai/chennai-regitered-case-118-members-for-bursting-fire-crackers-in-violation-rules-150096

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Diwali 2023: அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 118 மீது வழக்குப்பதிவுபோலீஸார் அதிரடி!, Karthikeyan S HT Tamil, Nov 12, 2023 02:03 PM IST.

[12] https://tamil.hindustantimes.com/tamilnadu/118-cases-filed-for-violating-sc-order-on-bursting-firecrackers-in-chennai-131699777684917.html

[13] தமிழ்.நியூஸ்.18, விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?, FIRST PUBLISHED : NOVEMBER 13, 2023, 9:34 AM IST; LAST UPDATED : NOVEMBER 13, 2023, 12:40 PM IST;

[14] https://tamil.news18.com/tamil-nadu/chennai-police-registerd-555-cases-of-bursting-firecrackers-beyond-the-permitted-time-1230516.html

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு – கவனிக்க வேண்டியது- பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்! (2)

மே 4, 2022

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு கவனிக்க வேண்டியதுபட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்! (2)

பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்!” – மதுரை ஆதீனம்:தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை முதல்வர் நேரில் வந்து பார்க்க வேண்டும்[1]. சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறார். பட்டின பிரவேசத்தை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் செல்வேன்[2]. அரசியல் வேறு ஆன்மிகம் வேறு. நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்[3]. உயிரே போனாலும் பரவாயில்லை[4]. பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும்[5]. சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பர்ய நிகழ்வை எப்படி தடை செய்யலாம்[6]. மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை[7], இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்கிறோம்[8]. திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது,” என்றார். ஆனால், 03-05-2022, விடுதலையில், “திராவிடக்கழக முயற்ச்சிக்கு வெற்றி,” என்று பெருமையாக செய்தி வெளியிட்டது. முதல்வர் வருவாரா என்பதெல்லாம் சந்தேகம் தான்.

திராவிடக் கட்சிகள் சேர்ந்து திட்டம் போட்டு வேலை செய்தது: வலுக்கட்டாயமாக வேலை செய்ய வற்புருத்துவது, கொத்தடிமை போன்று வேலை வாங்குவதை, பல்லக்குத் தூக்குவதுடன் ஒப்பிட முடியாது. இது வேண்டுமென்றே திரிபு விளக்கம் கொடுத்து, திகவினர் புகார் கொடுத்து, அதனை போலீஸார் முடிவெடுத்து “சட்டம் ஒழுங்கு பிரச்சினை” நிலை உண்டாகும் என்று தீர்மானித்தது, பிறகு கோட்டாட்சியர் ஆணையிட்டது எல்லாமே சாதாரண நிகழ்வுகள் அல்ல. நிச்சயமாக அரசு ஆதரவுடன், வேறெந்த உள்நோக்கத்துடன், செயல்பட்டு, இப்பிரச்சினை மூலம் பலன் தேட அல்லது அரசியல் அதயம் தேட முயலும் திட்டம் என்றே தெரிகிறது. தொடர்ந்து திராவிடர் கழக உதிரிகள், வகையறாக்கள், கம்யூனிஸ்டுகள், இந்துவிரோதிகள் தான், இந்த ஆர்பாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். கருப்புக் கொடி போராட்டம் போர்வையில் கழிகள், கொம்புகள், கட்டைகள், பேனர்கள் எல்லாம் எடுத்து வந்து, கூட்டமாக வருகின்றனர். அவர்களைச் சுற்றி தான் பொலீஸார் நிற்கின்றனர். அவர்களை அனுமதித்து, பிறகு அவர்கள் சட்டமீறல்களில் ஈடுபடும் போது, தடுக்கின்றனர், கைது செய்கின்றனர். ஆனால், ஏற்கெனவே அவர்களது பின்புலங்கள் அறிந்த நிலையில், முன்னரே கைது செய்யப் பட்டால், ஒன்றுமே நடக்காது. கவர்னர் விசயத்தில்கூட ஒன்றும் நடந்திருக்காது. 04-05-2022ல் முரசொலியில், 03-05-2022ல் விடுதலையில் வந்ததை அப்படியே போட்டிருக்கிறது. அதாவது, இந்த நாடகத்திற்கான, கதை, வசனம் எல்லாம் முன்னமே தயாரிக்கப் பட்டு விட்டது. பிறகு, அரசியல், அதிகாரம் என்ற ரீதியில் அமூல் படுத்தப் பட்டுள்ளது.

டோலி, மலையேறும் வசதி தமிழகத்திலேயே உள்ளது: டோலி (doli) என்பது பல்லக்கைப் போன்ற மனிதர்களின் துணையோடு பயணிக்கும் ஓர் இருக்கை அமைப்பு ஆகும். சாலைப் போக்குவரத்து வசதியற்ற மலைப்பாங்கான பகுதிகளில் நடக்க இயலாதவர்களும், வயதானவர்களும் பயணிக்க இதைப் பயன்படுத்துகின்றனர். இந்த டோலியானது இரு மூங்கில் கழிகளை முதன்மையாக கொண்டு குறைந்த எடையில் அமைக்கப்படுகிறது. இதில் பயணிப்பவர் அமர இதில் இருக்கைவசதி இருக்கும். என்றாலும் இதில் சிவிகை போன்று மேற்கூரையோடு வசதியாக இருக்காது. இதில் பயணிப்பவர் மேட்டில் செல்லும்போது முன்புறம் சாய்த்தும், இறக்கத்தில் இறங்கும்போது பின்பக்கம் சாய்ந்தும் சுமப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பர். இதை நான்குபேர் சுமந்து செல்வர். இந்த டோலி பயணமானது சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல பலர் பயன்படுத்துகின்றனர். இப்பொழுது, சதுரகிரி கோவிலுக்குச் செல்லவும் இவ்வசதி செய்யப் பட்டுள்ளது.

04-05-2022 அன்று சட்டசபையில் தடையை நீக்குமாறு எதிர்கட்சித் தலைவர் பேசியது: சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரமில்லா நேரத்தில் பேசியபோது கூறியதாவது[9]: “அரசின் தடையை அறிந்த, ஆண்டாண்டு காலமாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தில் வசித்து வரும் பல்லக்கு தூக்கும் 72 பேரும் நாங்கள் எங்கள் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குகிறோம். எனவே பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களை ரசிகர்களும், தேர்தல்களில் வெற்றிபெற்ற வெற்றி வேட்பாளர்களை தொண்டர்களும், என்று வெற்றி பெற்றவர்களை தொண்டர்களும், ரசிகர்களும் தோளில் தூக்கி கொண்டாடுவதை அனைவரும் பார்க்கிறோம். எனவே இதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. ஏன் கடந்தாண்டுகளில் காவல்துறை தலைவர் பணி ஓய்வு பெறும் நாளன்று, அவர்களின் பிரிவு உபசார நாளன்று அவரது காரை இந்திய காவல்பணி அதிகாரிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கயிற்றால் சிறிது தூரம் இழுத்து செல்வதை அனைத்து ஊடகங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி யாகத்தான் கருதுகிறோம்……..இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26ன் படி, வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மேலும் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவக்கப்படும் என்று அறிவித்தவுடன், புதிய மாவட்ட நிர்வாகத்திற்கு தேவைப்படும் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்ட இடம் வேண்டும் என்றவுடன், 60 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்கியது இந்த தருமபுரம் ஆதீனம் என்பதை இங்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன். எனவே பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்று பக்தர்களும், அப்பகுதி மக்களும் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” இவ்வாறு அவர் பேசினார்[10].

© வேதபிரகாஷ்

04-05-2022


[1] தினமலர், உயிரே போனாலும் தருமபுர ஆதீனம் பல்லக்கை நான் சுமப்பேன்: மதுரை ஆதீனம் ஆவேசம்,  Updated : மே 03, 2022  13:15 |  Added : மே 03, 2022  12:12.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3021459

[3] தினத்தந்தி, உயிரைக் கொடுத்தாவது, பிரவேசத்தை நடத்துவோம்” – மதுரை ஆதீனம் பேட்டி, பதிவு: மே 03,  2022 12:02 PM.

[4] https://www.dailythanthi.com/News/State/2022/05/03120252/Giving-life-we-will-hold-the-entrance–Madurai-Aadeenam.vpf

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!, Raghupati R, Tamilnadu, First Published May 3, 2022, 4:28 PM IST; Last Updated May 3, 2022, 4:28 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/madurai-adheenam-has-warning-to-tamilnadu-cm-mk-stalin-in-mayiladuthurai-dharmapuram-festival-ban-rbaztc

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், உயிரே போனாலும் பிரவேசத்தை நடத்துவோம்தடைக்கு ஆளுனரே காரணம்மதுரை ஆதீனம், Written by WebDesk, May 3, 2022 1:59:39 pm.

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/dharmapuram-aadheenam-issue-madurai-aadheenam-press-meet-449283/

[9] மாலைமலர், தருமபுரம் ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல், பதிவு: மே 04, 2022 14:05 IST.

https://www.maalaimalar.com/news/district/2022/05/04140525/3739578/Tamil-News-Dharmapuram-adheenam-Pattina-Pravesam-issue.vpf

[10] https://www.maalaimalar.com/news/district/2022/05/04140525/3739578/Tamil-News-Dharmapuram-adheenam-Pattina-Pravesam-issue.vpf

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா? [4]

திசெம்பர் 27, 2018

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாடமா அல்லது கிருத்துவ ஆதிக்கமா? [4]

Melmaruvattur - Christmas celebration

அரசியல் சார்பு, ஆதரவு மற்றும் பங்கு / விருப்பமுள்ள நிறுவனங்கள் புறம்போக்கு நிலங்கள் பெறுவது முதலியன: தமிழகத்தில் கோவில் நிலங்களை அடுத்து, ஆக்கிரமிக்கப் படுவது, புறம்போக்கு நிலங்கள் தாம். ஓடை, ஏரி உள்வை மற்றும் குளம் [“water course poramboke i.e. Odai, Eri Ulvai and Kulam”] முதலிய இடங்களில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விடலாம் போன்ற விதிமுறைகள் உருவாக்கியுள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு, அரசியல்வாதிகளின் சார்பு, ஆதரவு மற்றும் பங்கு / விருப்பமுள்ள நிறுவனங்கள், அத்தகைய நிலங்களைப் பெற்று வருகின்றன[1]:

 

எண் கல்லூரி / டிரஸ்ட் அரசாங்க ஆணை நில அளவு
(a) Vellore Engineering College, Vellore District, presently VIT at Katpadi by G.O.Ms.No.112 (Revenue), dated 09.03.2001 98.80 Acres
(b) Nagarathinam Angalammal Educational Trust, Valayakulam Village, Madurai District by G.O.Ms.No.77, Revenue, dated 20.02. 2001 10.10 Hectares
(c) Melmaruvathur Adhiparasakthi Educational Institutions, Kesavarayan Pettai Village, Kancheepuram District by G.O.Ms.No.643 Revenue, dated 08.12.1999 34.65.5 Hectares
(d) Periyar Mariyammai Educational & Charitable Trust, Vallam, Thanjavur District by G.O.Ms.No.142, Revenue, dated 26.03.2003 65.26 Acres
(e) Thangachiammal Charitable Trust for constructing College buildings at Kengalathur Village, Sivagangai District, by G.O.Ms.No.286, Revenue, dated 28.08.2001 25 Acres
(f) Management of Annai Mathammal Sheela Engineering College, Erumapatti Village, Namakkal District by G.O.No.285, Revenue, dated 28.08.2001 11.98 Acres

இதில் ஆதிபராசக்தி கல்வி நிறுவங்களும் அடக்கம்[2]. இதற்கும் பக்தகளுக்கும் சம்பந்தம் இல்லை. ஆகையால், கோவில் எனும் போது, புனிதம் காக்கப்பட வேண்டும்.

Amma compared with Christ

இணைதளத்தில் பங்காரு அடிகளை கிருத்துவராக்கும் முறை: கோபால நாயக்கருக்கும், மீனாம்பாளுக்கும் மேரிக்கு கிருஸ்து பிறந்தது போல பங்காரு 03-03-1941ல் பிறந்ததாம்! “இப்பூமியில் கோடிக்கணக்கான பெண்கள் இருக்கும் போது கிருஸ்துவை பெற்றெடுக்க, ஏன் மேரி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? அதே  போல சாதாரண கிராமத்தில் வாழும் மீனாம்பாளுக்கு ஏன் பங்காரு குழந்தை பிறக்க வேண்டும்,” என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு, பைபிள் வார்த்தைகளை உபயோகப் படுத்தி அதற்கு விளக்கமும் கொடுக்கப்படுகிறது[3]. “அவதாரம்” என்பதனை விளக்க ஏசுகிருஸ்து உதாரணமும் கொடுக்கப் படுகிறது[4]. 2000 வருடங்களுக்கு முன்னர் கடவுள் ஏசு கிருஸ்து இப்பூமியில் கட்டவுளின் மைந்தனாக அவதரித்தார். ஆனால், மக்கள் அவரை அவ்வாறு நம்பவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சிலுவையில் அறையப் பட்டு கொடூரமாக இறக்க வேண்டியதாயிற்று, என்ற விளக்கம் எல்லாம் கொடுக்கப் பட்டது. ஆக, பங்காரு நாயக்கர் அம்மாவா, அப்பாவா, தேவகுமாரனா என்ற குழப்பத்தை உண்டாக்கியது!

Melmaruvattur - Christmas with pastors

குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், பிணங்கள் உயிரோடு எழும்புகின்றன ரீதியில் அம்மா!: இனி அம்மா புகழ் பாடும் வீடியோக்கள் இணைதளங்களில் உலா வருகின்றன. அதில், குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், என்றுதான் பிரச்சாரம் செய்யப் படுகிறது. அங்கு வந்தால் எல்லா நோய்களும் தீர்ந்து, பிரச்சினைகளும் விடும், தீர்வுகள் கிடைக்கும் என்ற ரீதியில் அதிரடி பிரச்சாரம் செய்யப் படுகிறது. பிறகு, ஆதிபராசக்தி பெயரில் எதற்கு மருத்துவ கல்லூரி, அதில் ஊழல், சிபிஐ ரெயிட், கைது, என்றெல்லாம் எப்படி என்று தெரியவில்லை. அம்மா அவற்றையெல்லாம் “குறி” பார்த்து முதலிலேயே சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லவில்லை. ஏசுவின் அவதாரப் பிள்ளை என்ற ரீதியில், மேரியோ-கர்த்தரோ அறிவித்திருக்கலாமே, ஏன் அறிவிக்கவில்லை? எல்லாமே ஆன்மீகமாக, செக்ட்ய்ய்லரிஸமாக மாறிவிட்டதா? குறிமேடை இவருக்கு மட்டும் பொய்த்து விட்டதா?

Melmaruvattur - Christmas celebration-2

ஆண் பெண்ணாகி, அம்மாவாகி, ஆதிபராசக்தியாகி, மேரியான அதிசயம், இங்கு தான் பார்க்க முடியும்:  பங்காரு நாயக்கர் அம்மாவாகி, ஆதிபராசக்தியாகி, அவதாரமாகி, ஏசுகிருஸ்துவாகி வரும் நிலையில்,  ஆதிபராசக்தி விக்கிரகமே மேரியாகி வரும் அதிசயம், கடந்த ஆண்டுகளில் நடந்து வருகிறது. அப்பொழுதெல்லாம், கோவிலுக்கு செல்பவர்களுக்குத் தான், இத்தகைய விவகாரங்கள் தெரியும். இப்பொழுது, டிசம்பர் 2018ல் ஊடகங்களில் வெளி வருவதால், இந்து அமைப்பினர் எதிர்த்துள்ளனர். சர்ச்சுகளில் உள்ள  மேரிக்கு, ஆதிபராசக்தி போல அலங்காரம் செய்வார்களா என்றால், செய்வார்கள், அதனால் தான் முட்டாள் இந்துக்கள் வேளாங்கன்னி, பூண்டு மாதா போன்ற இடங்களுக்குச் சென்று வருகின்றனர். இனி அச்சரபாக்கம் திரிபுரங்களை எரித்த சிவன் கோவில் மறக்கப்படும், இந்த சர்ச் மற்றும் மேல்மருவத்தூர் புராணங்களை மக்கள் நம்ப ஆரம்பித்து விடுவர். இந்தியாவில், இதுபோலத்தான், சரித்திரம் மறைக்கப் பட்டு, அழிக்கப் படுகிறது. அதற்கு முட்டாள் இந்துக்கள் துணை போகின்றனர்.

Melmaruvattur - Christmas celebration-3

ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம் என்ற போர்வையில், இந்துதெய்வத்திற்கு வேடம் போட்டு, பங்கு போட முடியாது!:  இதுவரை செக்யூலரிஸம் பேசி 40 வருடங்களாக இந்துக்களை ஏமாற்றி வந்தனர். திராவிட, நாத்திக, இந்துவிரோத கருணாநிதி, திக கோஷ்டியினர் சமத்துவம் போர்வையில் வேலை செய்ய ஆரம்பித்தனர்.இப்பொழுது “ஆன்மீகம்” என்று ஆரம்பித்துள்ளனர். சிலை திருட்டு, சிலை எதிர்ப்பு களவாணிகள் எல்லோரும், சிலை வைத்து பூஜை செய்து, கும்பிட ஆரம்பித்து விட்டனர். ஆனால், இந்து தெய்வங்களை இவ்வாறு மாற்ற முயல்வது எப்படி? ஜனநாயக மதம் என்ற ரீதியில், அதனை கடைபிடிக்கிறார்களா? இவ்வாறு ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம், நாத்திகம் என்று எல்லாமே எப்படி இந்துக்களுக்கு எதிராக செயல் பட முடியும்? ஆகவே, இதில் ஒரு திட்டம் உள்ளது தான் தெரிகிறது, அது ஜனநாயகத்திற்கே ஒவ்வாதது, மக்கள் புரிந்து கொண்டால், அவர்களுக்கு ஆபத்து தான், இதனை இந்த ஏமாற்றுவாத சித்தாதிகள் கவனிக்க வேண்டும்.

Why jump over converting Mari into Mary 25-12-2018.small

இந்துக்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்: ஆதிபராசக்தி ஒயக்கம், நிறுவனம், டிரஸ்டுகளுக்கு வேறுவித பிரச்சினைகள் இருக்கலாம். அவை கோவிலைப் பற்றியதல்ல. இப்பொழுது பண்ருட்டி சமாசாரம் முடிந்து விட்டது. ஆனால், மேல்மருவத்தூரில் ஒன்றும் செய்யவில்லை:

  1. மேல்மருவத்தூரில் பல ஆண்டுகளாக இந்த கூத்து நடைபெறுகிறது, அப்பொழுது எடுத்துக் காட்டியபோது “அம்மா பக்தர்கள்” என்னை வசை பாடினர்.
  2. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக டிரஸ்ட் கீழ், கிருஸ்துமஸ் கூத்து நடைபெறுகிறது! கேட்பதற்கு இந்துத்துவ வாதிகளுக்கும் திராணியில்லை.
  3. மேல்மருவத்தூர் கல்லூரி சேர்க்கைக்கு பணம் பிரச்சினையால் சிபிஐ ரெயிட் எல்லாம் நடந்தது, ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை.
  4. அடிகளாரிடம் விசாரணை, அவரது மகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை, அவரது வீட்டிலும் சோதனை என்றெல்லாம் செய்தி.
  5. அம்மா தான் அல்லா, அல்லா தான் அம்மா என்று அம்மா ஆணையிட்டதால், இந்த அம்மா வியாழக்கிழமை தோரும் குரானை படிக்க ஆணையிட்டாராம்.
  6. குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள், பிணங்கள் உயிரோடு எழும்புகின்றன ரீதியில் அம்மா.
  7. ஆண் பெண்ணாகி, அம்மாவாகி, ஆதி-பரா-சக்தியாகி, மேரியான அதிசயம், இங்கு தான் பார்க்க முடியும்!இனி மைனாரிடி ஆனாலும் ஆச்சரியம் இல்லை.
  8. இன்னொருத்தர் தன்னை முருகனின் அவதாரம் என்கிறார், இவர் தன்னை அம்மா, மேரி, ஏசு என்கிறார், பிறகு உலகத்தில் என்ன பிரச்சினை.
  9. ஜனநாயகம், செக்யூலரிஸம், சமத்துவம், ஆன்மீகம் என்ற போர்வையில், இந்துதெய்வத்திற்கு வேடம் போட்டு, பங்கு போட முடியாது! [10]

© வேதபிரகாஷ்

 

27-12-2018

Action sought against Bangaru - newscutting

[1] Madras High Court – Tmt.Kannammal Educational Trust vs The State Of Tamil Nadu on 27 February, 2017; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED:  27.02.2017 – CORAM:The Honourable Mr. Justice B.RAJENDRAN; Writ Petition No.2279 of 2017.

[2] https://indiankanoon.org/doc/113172194/

[3] March 3rd 1941, is a golden day in the history of the world. Yes, it was on this wonderful day, that at the simple home of Gopala Naicker family at Melmaruvathur, his wife Mrs. Meenaambaal gave birth to a boy baby. Among the millions of women on this earth, why was Mother Mary chosen to give birth to Christ? Why was Mrs. Meenaambaal, a simple lady from the small hamlet of Melmaruvathur chosen to beget this Son of Her, Shri Bangaaru Adigalaar? http://www.sakthiolhi.org/adigalar.html

[4] Incarnation:  Common people fail to recognize incarnation. Therefore, like a fish being caught by baiting it with another fish or worm, so also, to impress and make the people realize incarnations, they are given the earthly benefits that they ask for, their incurable diseases are cured and their problems are solved. All the scientific and technological advancements have only increased the sophistication and standard of human living. The human nature remains the same with regard to spirituality and God consciousness. 2000 years back when Lord Jesus Christ came upon this earth as the Son of God, people never believed and finally He was crucified and set to a horrible and painful death.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா? [3]

திசெம்பர் 27, 2018

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மேரியானது ஏன்? கோவில் மற்றும் பங்காரு அடிகளார் பிரச்சினைகளினால் கிருஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டாரா? [3]

Ananthakumar visited March 2015

2009ல் திராவிட அமைச்சர் போற்றியது: திராவிட இயக்கத்தின் மறுபதிப்புதான் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்[1].  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணித் திட்டங்கள் அர்ப்பணிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் அமைச்சர் க.பொன்முடி பேசியது[2]:  “மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்புபெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார்மனித நேயத்தை வளர்ப்பதில் மேல்மருவத்தூர் இயக்கம் முக்கிய பங்கை வகிக்கிறதுபெண்களுக்கு இக் கோயிலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்கள் கூட பூஜை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்”. அப்பொழுது, நான் எழுப்பிய முக்கியமான அம்சங்கள்[3]:

  1. கருப்புப் பரிவார் கூட்டங்களின் பொய்கள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன.
  2. ராமசாமி நாயக்கரின் இந்து-விரோத நாத்திகத்தில் ஆன்மீகம் எங்கே வந்தது வெங்காயம்?
  3. “ஆதிபராசக்தி பக்தர்கள்” ஏமாளிகளாக இருந்தால், அத்தகைய “வெங்காயங்களை” நம்பலாம்.
  4. ராமசாமி நாயக்கர் உயிரோடு இருந்திருந்தால், ஒருவேளை இந்த இயக்கத்தையும் எதிர்த்திருப்பார்.
  5. பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் பெரியாரும், கருணாநிதியும் கருதினர்“! இப்படியெல்லாம் சொன்னால் எப்படி? பெரியார் மணியம்மையை இரண்டாம் தாரமாக மணந்ததால்தான் “கண்ணீர் துளிகள்” தோன்றின. பிறகு கருணாநிதியோ அவரையும் மிஞ்சும் வகையில் மூன்று பெண்களை மணம் புரிந்து கொண்டுள்ளார். பிறகெப்படி பெண்களின் “சம உரிமை” வருகிறது, அளிக்கப் படுகிறது?
  6. மேல்மருவத்தூர் இயக்கத்தை பொறுத்தவரை அது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு‘ என்று அவர்கள் சொல்லவேண்டும். பிறகு அதை நிரூபிக்கவேண்டுமானால், பெரியார்-அவர் மனைவியர், கருணாநிதி-அவர் மனைவியர் என்று வரிசையாக சன்னதிகள் திறந்து வைத்து “திராவிட ஆன்மீகத்தில்” ஐக்கியம் ஆகலாம்.
  7. பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணிகள் மூலம் செய்து வருகிறார்“. பொன்முடி, மிகவும் கில்லாடி. ஏற்கெனவே, கலைஞரை “கடவுள்” ஆக்கிவிட்டதால், பெரியாரை பங்காருக்கு இணையாக வைக்கிறார்![ஞாபகம் இருக்கிறதா, பெரியார் படம் பலமுறை மாற்றி எடுக்கப்பட்டது]
  8. அனைவரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேல் மருவத்தூரில் அது நடத்திக் காட்டப்பட்டு வருகிறது“. இதென்ன அங்கு “அர்ச்சனையா” நடக்கிறது? தெரியவில்லையே? பிறகு ஏன் ஆண்களில் பங்காரு மட்டும் அந்த உரிமையை வைத்துக் கொண்டுள்ளார்?
  9. அதுசரி. இந்த கோவில் “இந்து அறநிலை துறையில்” வருகிறதா இல்லையா?
  10. நெடுஞ்செழியன் மனைவி இங்கு வந்து சாமி கும்பிட்டார். ஏன் வீரமணியின் மனைவி மோஹனா, கருணாநிதி மனைவியர் முதலியோர் அங்கு வந்து சாமி கும்பிடுவதில்லை? இல்லை, அவர்களே வந்து அத்தகைய “மறுபதிப்பான ஆன்மீகத்தில்” ஏன் திளைக்கவில்லை?[4]

Christmas celebrated by Bangaru-his sons

டிவிபத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்டது (ஜூலை 2010): இதையறிந்து பங்காரு அடிகளாரின் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமினர். அப்போது அடிகளாரின் பாதுகாப்பு ஊழியர்கள் திடீரென பத்திரிகையாளர்களைத் தாக்கத் தொடங்கினர். செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்[5]. இச்சம்பவத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமிராமேன், நிருபர்கள் தாக்கப்பட்டதுடன் செய்தியாளர்கள் சிலரின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர்[6]. பிறகு நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மதுராந்தகம் டி.எஸ்.பி.தணிகைவேலிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் மதுராந்தகம் தாலூகா அலுவலகம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது[7]. ஆனால், பிறகு மௌனிகளானது மர்மம் தான்!

Iftar party celebrated by Anbalagan

சிபிஐ வழக்குப் பதிவுவருமான வரித்துறை சோதனை (ஜூலை 2010): மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது. லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து. இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.

Iftar party celebrated by Bangaru-his sons

2012-2017 தொரர்ந்த வழக்குகள் முதலியன: 2012ல் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரியில் போலிப் பேராசிரியர்களாக பணியாற்றிய 25 மருத்துவர்களை 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை மருத்துவர்களாக பணியாற்றக் கூடாது என்று  தடை விதித்துள்ளது. பிப்ரவரி 2013ல் ஆதிபராசக்தி பல்-மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தி ரூ.25 லட்சம் 07-01-2013 அன்று கைப்பற்றப்பட்டது[8]. எஸ். முருகேசன் [DCI member Dr S Murukesan] கைது செய்யப்ப் பட்டார்[9]. சிபிஐ கொடுத்த சம்மனை வாங்காமல், அன்பழகன் உயர்நீதி மன்றத்தில் பெயில்பெற்றார். மார்ச்.17, 2017ல் பல்-மருத்துவ கல்லூரி மாணவர் மிரட்டப் பட்ட வழக்கிலும் செந்தில்குமார் வந்தது. திருநெல்வேலி மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த விஜய், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது கல்லூரி குறித்து Facebook-ல் விமர்சனம் செய்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர் விஜயை தாக்கியதாகக் கூறப்பட்டது[10]. படுகாயமடைந்த மாணவர் விஜய், சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனை அடுத்து, மாணவரைத் தாக்கிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மாணவரின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்[11]. உண்மையில் ஆன்மீகத்தில் திளைத்திருந்தால், நிச்சயமாக இவைரெல்லாம் நடந்திருக்காது.

© வேதபிரகாஷ்

27-12-2018

Melmaruvattur - AMMA sentiment with non-Hindus

[1] தினமணி, திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம்: அமைச்சர் பொன்முடி, First Published : 03 Nov 2009 01:53:17 AM IST

[2]http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=148853&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

[3] வேதபிரகாஷ், திராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம், எனும்போது, அங்கு தீடீரென்று சோதனை ஏன்?, ஜூலை.10, 2010.

[4]https://dravidianatheism.wordpress.com/2010/07/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு, சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11 [IST].

[6] http://thatstamil.oneindia.in/news/2010/07/03/cbi-files-case-against-melmaruvathur-college.html

[7]http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81……………

[8] The Business Standard, DCI scam case: CBI opposes Bangaru’s wife, sons AB plea, Press Trust of India | Chennai, Last Updated at February 21, 2013 19:55 IST

[9] https://www.business-standard.com/article/pti-stories/dci-scam-case-cbi-opposes-bangaru-s-wife-sons-ab-plea-113022100701_1.html

[10] Deccan Chronicle, Chennai: Godman’s son booked for criminal intimidation, Published Mar 18, 2017, 1:41 am ISTUpdated Mar 18, 2017, 1:43 am IST

[11] https://www.deccanchronicle.com/nation/in-other-news/180317/chennai-godmans-son-booked-for-criminal-intimidation.html

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன? [2]

ஓகஸ்ட் 11, 2018

இந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, பரஸ்பர குற்றச்சாட்டுகள், துறைகள் மோதும் பின்னணி என்ன? [2]

Idols stolen from temples

பொதுமக்களிடம் தங்கம் வாங்கிய விவகாரம்: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, “சிலைகள் செய்யப்பட்டதற்காக பொதுமக்களிடம் தங்கம் வாங்கியதாக யூகத்தின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து தங்கம் வழங்கியதாக இதுவரை ஒரு புகார்கூட வரவில்லை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காதர்பாட்சா கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்பனை செய்து கைதானபோது சிலைத் திருட்டில் நேரடியாக ஈடுபட்ட அவரது ஜாமீன் மனுவில் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் சிலை கடத்தலுக்கு தொடர்பில்லாத அறநிலையத்துறை அதிகாரிகளை உள்நோக்கத்துடன் கைது செய்து மனு விசாரணையின்போது சர்வதேசக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபிக்கின்றனர்”.

Idols stolen from temples- unsafe

ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன: ஶ்ரீதரன் தொடர்ந்து கூறியது, இந்து சமய அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன. இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, 18 சிலைகள் மட்டும் கோயில்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன[1]. கோயில்களில் நடைபெற்ற திருட்டுகளில் 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக பொய்யாக புனையப்பட்ட விவகாரம் மூலம் கைது செய்வது நடக்கிறது. பழனி, காஞ்சிபுரம் கோயில் வழக்குகளில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை. துறை அலுவலர்களை தேவையற்ற முறையில் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டுவதால் தங்களை வேறு துறைக்கு மாற்றுங்கள் அல்லது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என மாநிலம் முழுவதுமிருந்து கடிதம் வருகிறது[2]. விசாரணை குறித்து எவ்விதமான அச்சமும் துறை அலுவலர்களுக்கு இல்லை. நியாயமான பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். மேற்கண்ட வழக்குகளில் காவல்துறை தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துறை அலுவலர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது[3]. குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது, அதே நேரம் தவறேதும் செய்யாத நிரபராதிகள் கைதுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாகும்.” இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீதரன் பதிலளித்தார்.

 Vijakamuar senteced 3 yaers. Dinakaran

கேள்விபதில்கள் ழுப்பும் பல கேள்விகள்: கேள்விகளுக்கு பதில் அளித்ததாக இவ்வாறு இருந்தாலும், அவற்றில் உள்ள சட்டமீறல்கள் அறியப் படுகின்றன.

பொன் மாணிக்கவேல் மீது என்ன தவறு உள்ளது?

அவர் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். சிலை கடத்தல் மாஃபியா சுபாஷ் கபூர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. தீனதயாளன் வீட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் கைப்பற்றப்பட்டாலும் எப்.ஐ.ஆர் மட்டுமே போட்டுள்ளனர். சார்ஜ் ஷீட் போடவில்லை. ஜாமீனில் விடுவதிலும் ஆட்சேபிக்கவில்லை.

அறநிலையத்துறை அக்கறை இல்லாமல் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

செக்‌ஷன் 29 –ன்படி சொத்துப்பதிவேடு பராமரிக்கவேண்டும். தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. ஆனால் 400 அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் எங்கள் நிலை.

இணையதள முன்பதிவில் பலகோடி முறைகேடு என்கிறார்களே?

இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான செய்தி. இன்று பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் நடக்கிறது. இதில் ஒரு ரூபாய்கூட இழப்பு கிடையாது.

இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு கவிதா கைது என்றவுடன் செய்தியாளர்களைச் சந்திப்பது ஏன்?

கைது நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளோம், ஒரு கட்டத்தில் நாங்கள் அமைதியாக இருந்தால் மக்களுக்கு அறநிலையத்துறை மீதே தவறான நம்பிக்கை ஏற்பட்டு விடும் என்பதால் தற்சமயம் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் எங்கள் நிலையை விளக்கி சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

சிபிஐ வசம் வழக்கு மாற்றப்படுவதை வரவேற்கிறீர்களா?

சிபிஐ வசம் வழக்கு மாற்றப்பட்டால் நேர்மையான முறையில் விசாரணை நடக்கும் என்று நம்புகிறோம்.

ஏன் அறநிலையத்துறை மீது இவ்வளவு பிரச்சனைகள்?

இந்தத் துறை அரசின் கைகளிலிருந்து சில தனியார் அமைப்புகளின் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் மூலம் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Dispute over Pazhani idol

பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்ததில் ஐந்து பேர் கைது, பிணையில் வெளியே: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் உற்சவர் முருகன் சிலை வடிவமைத்ததில் முறைகேடு நடந்தது.  சேதமடைந்த நவபாஷாண சிலை, கடந்த 2004ம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்தபதி முத்தையா என்பவரால் புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதில் பழுது ஏற்பட்டு இருந்ததால், சில மாதங்களிலேயே அந்த சிலை அகற்றப்பட்டது. மேலும், இந்தச் சிலையை வடிவமைத்ததில் 42 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டிருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது[4]. இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் ஒரு கோடியே 31 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது[5]. ஜுலை 2018ல் இதுதொடர்பாக,

  1. கோயிலின் முன்னாள் இணை ஆணையர் ராஜா (66),
  2. கோயிலின் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி (60),
  3. சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா (77),
  4. நகைகள் சரிபார்ப்பு முன்னாள் அலுவலர் தேவேந்திரன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது நான்கு பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்[6]. இதைதொடர்ந்து, வழக்கின் மூன்றாவது குற்றவாளியான அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை போலீசார் தேடி வந்தனர். 06-07-2018 அன்று கும்பக்கோணம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப் பட்டு ஆஜர் ஆனார். பிணையில் வெளியே வந்தார்[7]. அவர் சிரித்துக் கொண்டே, பந்தாவாக வெளியே வந்தது, திகைப்பாக இருந்தது.  இப்படி பெரிய அதிகாரிகள், ஸ்தபதி முதலியோர் குற்றங்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாதது. கோவில்களில், தெவத்தின் பெயரில் நடக்கும் காரியங்களில் இத்தகையோர், துரோகம், மோசடி, கொள்ளை முதலியவற்றில் ஈடுபடுவது மிகக்கேவலமான குணத்தை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே, ஏதோ சாதித்தது போலவும், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், இருப்பதும், நிச்சயமாக, கடவுள் ஒன்றும் செய்யாது, என்னை யாரும் ஒன்றுன் செய்து விடமுடியாது என்ற ஆணவம், அகம்பாவம் முதலியவைத் தான் வெளிப்படுகின்றன.  அதாவது, நாத்திகம், திராவிட நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் முதலியவை நன்றாகவே மெய்யாகிறது.

வேதபிரகாஷ்

08-08-2018

Dhanapal coming out after bail 06-07-2018.Dinakaran cutting

[1] விகடன், பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.!” – அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டு, இ.லோகேஷ்வரி, கே.ஜெரோம்,  Posted Date : 21:39 (06/08/2018); Last updated : 21:50 (06/08/2018).

DT.Next, HR and CE officials claim religious outfits backing IG Pon Manickavel, Published: Aug 07,201804:54 AM.

https://www.dtnext.in/News/TamilNadu/2018/08/07045432/1083250/HR-and-CE-officials-claim-religious-outfits-backing-.vpf

The Hindu, We are being targeted, allege HR&CE staff, STAFF REPORTER, CHENNAI, AUGUST 07, 2018 01:50 IST; UPDATED: AUGUST 07, 2018 01:50 IST

https://www.thehindu.com/news/national/tamil-nadu/we-are-being-targeted-allege-hrce-staff/article24618548.ece

[2] தமிழ்.ஒன்.இந்தியா, பொன் மாணிக்கவேல் மீது புகார் கூறும் அறநிலைய துறை, ஊழியர்கள்- வீடியோ, ஆகஸ்ட் 6. 2018.

[3] https://tamil.oneindia.com/news/tamilnadu/ig-ponmanikkavel-not-identify-the-black-sheep-the-department-endowment-employees/articlecontent-pf318885-326698.html

[4] ஈநாடு.தமிழ், நவபாஷாண சிலை முறைக்கேடு: முன்னாள் ஆணையரிடம் விசாரணை, Published 31-Jul-2018 19:20 IST.

[5] http://tamil.eenaduindia.com/State/Central/Trichy/TrichyCity/2018/07/31192203/Murugan-temple-statue-Navapashan-issue-Investigation.vpf

[6] தினகரன், சிலைமுறைக்கேடு வழக்கு: குடந்தை கோர்ட்டில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆஜர், ஜூலை 07-07-2018, 01.52.57.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=418088