Posts Tagged ‘ஆன்மா’

மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதி – பெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா, அரசியலா? (2)

ஜனவரி 19, 2024

மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதிபெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா, அரசியலா? (2)

ஆன்மீகம், அரசியல், திமுக, நாத்திகம், அரசியல் ஆக்குவது: ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[1]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது[2]. ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை[3]. எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் என்றார்[4]. “கால் வலி இருப்பதால் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து யோசிக்கிறேன்” என இபிஎஸ் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு[5], இருக்கலாம், “அவர் தவழ்ந்து தவழ்ந்து நிறைய போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வரலாம்” என்று கூறிச் சென்றார்[6]. இப்பொழுது, “ஆன்மீகம்” என்று சொல்லிக் கொண்டு திமுக புதிய வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயல்கிறது. ஆன்மாவை நம்பாத இந்த நாத்திகர்கள் ஏன் ஆன்மிகத்தைப் பற்றிப் பேச வேண்டும்?, பெரியாரிஸ பொய்மை, நாத்திக வெறுப்பு, இந்துவிரோத போக்கு என்ற கலவை ஆன்மீகமாக இருக்கமுடியாது.

உதயநிதி கூறியிருக்கும் ஒவ்வொரு வாக்கியமும், திமுகவின் முகமூடியைக் கிழித்து, சுயமுகத்தைக் காட்டுகிறது: இப்படியான வசனத்தை யாராவடு எழுதி கொடுத்துப் பேசினரா அல்லது விவரங்களைப் புரிந்து பதில் அளித்தாரா, அரிவிஜீவிகளான, ஊடக வல்லுனர்கள் எப்படி ஏற்றுக் கொண்டனர் என்று கவனிக்க வேண்டும்:

  • ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல
  • திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது
  • ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[7]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது
  • ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை
  • எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்

ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல: கடந்த 70 ஆண்டு திராவிடத்துவ, பெரியாரிஸ சித்தாந்த பேச்சுகள், எழுத்துகள் மற்றும் அரசியலை வைத்து கவனித்தால், இவர்கள் மாறப்போவதில்லை, இதுவரை பெற்றுள்ள அந்த பிம்பத்தையும் வேறு விதமாக சித்தரிக்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். ஆகவே மறுபடியும் தேர்தலுக்காக இவ்வாறு பேச்சை மாற்றி மாற்றி பேசுவது என்பது இவர்களுக்கு உரிய கலை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் முன்னரே இவருடைய தாத்தா ராமரைப்பற்றி எப்படி எல்லாம் பேசி இருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும், அதைல்லாம் மறுபடியும் எங்கே எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆக இதுவரையில் இந்து விரோதத் தன்மையுடன் தான் இருந்து கொண்டுள்ளதால், மக்கள் இவர்களெல்லாம் ராமர் கோவில் திறப்பிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் அல்லது மத நம்பிக்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றெல்லாம் யாரும் நம்ப போவதில்லை. இங்கு கூட “மத நம்பிக்கை” என்று சொல்லும் போது, இந்து மதம் எல்லாம் என்றும் ஒன்னும் சொல்லவில்லை. ஆகவே இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான்.

திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது: இதுவும் வழக்கமாக சொல்கின்ற சாக்குதான். திமுக நிச்சயமாக எந்த மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது, அதாவது இந்து மதத்தை தவிர என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பெரியாரிஸம், பகுத்தறிவு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இந்து மதத்தை தான் அவர்கள் எதிர்த்து வருகிறார்களே தவிர, நிச்சியமாக மற்ற மதங்களை விமர்சித்தது கிடையாது. அந்த மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் எதிராக இருந்ததும் கிடையாது. ஆகவே, மறுபடியும் மறுபடியும், திரும்பத் திரும்ப, இத்தகைய வசனங்களை பேசி மக்களை ஏமாற்றுவது என்பது நிச்சயமாக எடுபடாது. இப்பொழுது உள்ள நிலையில் நிச்சயமாக இவர்கள் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால், அந்த முரண்பாடு இக்கால இளைஞர்களின் மனதில் நன்றாகவே பதில் ஆரம்பித்துள்ளது. ஆகவே நிச்சயமாக அவர்கள் அதற்கான ஜனநாயக ரீதியிலான முடிவையும் காண்பார்கள். அதாவது தேர்தல் எனும் பொழுது, தேர்தல் வைத்து தான் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அதில் அவர்களுக்கு உண்டான பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டிய காலம் நிச்சயமாக அருகில் உள்ளது எனலாம்.

ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[8]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது: பிரச்சனை இல்லை என்றால் பிறகு எதற்கு இத்தகைய வசனங்கள் எல்லாம் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது? இது இவர்கள் தீர்மானத்தில் நடக்கும் விஷயம் அல்ல, ஒட்டுமொத்தமான பல கோடி இந்துக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் தான் இது நடந்து கொண்டிருக்கிறது. ஏன் உச்ச நீதிமன்றமும் இதற்கு தீர்ப்பை கொடுத்து விட்டது. ஆக, அந்த வழக்கில் இருப்பவர்கள் ஒப்புக்கொண்டு தான் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. அந்த கும்பாபிஷேகம் போன்ற மற்ற சடங்குகளை இப்பொழுது செய்ய தீர்மானித்துள்ளனர். ஆகவே தான் அவர்கள் அந்த கோவில் திறப்பு விழாவை இவர்கள் ஒன்று எதிர்ப்பது, ஆதரிப்பது என்பதால் மட்டும் ஒன்று ஆகி விடப்போவதில்லை. இவ்வாறு பாட்டு பாடிக் கொண்டிருப்பதால் என்ன முக்கியத்துவம் ஏற்பட போகிறது என்பதும் ஒன்றும் இல்லை.

ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை: இங்கு இங்கு தான் உதயநிதியின் மனதில் உள்ள அந்த அப்பட்டமான இந்து விரோதம் வெளிப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம் அங்கிருந்து மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பது மிகவும் அபத்தமான பேச்சு. இது எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது என்பதும், இவர் என்னவோ பெரிய இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளை விட பெரிய புத்திசாலி மாதிரியும், அதிக பிரசங்கத்தனமாக பேசுவது, எல்லாம் முடிந்து கோவிலும் கட்டி விழா கொண்டாட வேண்டிய தருணத்தில், இத்தகைய அபத்தமான பேச்சு பேசுவது மிகவும் கேவலமாக இருக்கிறது. அ[ப்படி பேசுவது என்பதும், இந்த திராவிட தூதர்களுக்கு சரித்திரம் என்பது எந்த அளவுக்கு சூன்யமாக இருக்கிறது என்பது புரிந்து கொள்ளலாம். பாபருடைய தளபதி அங்கிருந்த கோவிலை இடித்து மசூதி கட்டினான் என்று தீர்மானம் ஆகி, உச்சநீதிமன்றத்தில் பதிவாகி, பிறகு அந்த வழக்கில் இருந்த சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒப்புக்கொண்ட பிறகுதான் இவையெல்லாம் நடைபெறுகின்றன. ஆகவே இந்நேரத்தில் உதயநிதி, திமுக அல்லது இந்த பெரியாரிஸவாதிகள், இந்துவிரோதிகள் இந்த இல்லை என்பது சொல்வதால் மட்டும் என்னென்ன வழி விட போகிறது?

எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்: ஆன்மாவை மறுத்தது பெரியாரிஸம். ஆத்மாவை மறுத்தது நாத்திக-இந்துவிரோதம். திராவிட சித்தாந்தம் ஆன்மா இல்லை, ஆத்மா இல்லை என்று உளறி வந்து கொண்டிருக்கின்ற நிலையில், ஆன்மீகம் என்று பேச ஆரம்பித்துள்ளனர். இந்த பகுத்தறிவுவாதிகள் இப்பொழுது ஆன்மீகத்தை பற்றி அதிகமாக பேசி வருகின்றது தமாஷாக இருக்கிறது. ஆன்மீகத்தை நாங்கள் எதிர்ப்பதில்லை, ஆன்மீகம் எங்களுக்கு உடன்பாடு தான் – இப்படியெல்லாம் பேசுவதும் வேடிக்கையாக இருக்கிறது. ஆகையால் இவ்வாறு தொடர்ந்து முரண்பட்ட வாதங்களை வைப்பது, மக்களை ஏமாற்றுவது தான். நிச்சயமாக சீக்கிரமாக அவர்களது முகமுடிகள் கிழிந்து, மற்ற எல்லா மக்களுக்கும் தெரியப்போகிறது. இப்பொழுதே தெரிய ஆரம்பித்து விட்டது. ஆகவே, இதேபோல ஒரு பக்கம் நான் கிறிஸ்துவன் தான், நான் முஸ்லிம்களை ஆதரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டும், அல்லேலூயா என்று கத்திக் கொண்டும், இன்னொரு பக்கம் இந்துக்களை விமர்சித்துக் கொண்டோம் இப்படியே 70 ஆண்டுகள் ஓட்டிவிட்டாகியது. இனியும் இதே போன்ற பாரபட்சமான போக்கை கட்டுப்பட்டு வந்தார் நிச்சயமாக மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

19-10-2024


[1] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/minister-udhayanidhi-stalin-about-dmk-views-on-ayodya-ram-temple

[3] தமிழ்.சமயம், மசூதியை இடித்து கோயில் கட்டியதை ஏத்துக்க முடியாதுஅயோத்தி ராமர் கோவில் குறித்து உதயநிதி பரபரப்பு!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 18 Jan 2024, 2:43 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-udayanidhi-stalin-said-they-did-not-agree-with-the-demolition-of-the-mosque-and-construction-of-the-temple/articleshow/106954516.cms

[5] தமிழ்.டைம்ஸ்.நௌ, மசூதியை இடித்து கோயில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடடு இல்லை” – உதயநிதி ஸ்டாலின் , செய்திப்பிரிவு, Published : 18 Jan 2024 5.00 AM.

[6] https://tamil.timesnownews.com/tamil-nadu/ayodhya-ram-temple-udhayanidhi-stalin-says-about-dmk-stand-article-106947144

[7] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

[8] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

ஆரிய ஆதிக்கத்துக்குத் தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல என்ற பேச்சிலிருந்து அறியப் படுவது என்ன – ஆத்மா கொண்ட ஆன்மீகமா அல்லது இல்லாத ஆன்மீகமா – விளக்க முடியுமா? (2)

ஒக்ரோபர் 23, 2023

ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல என்ற பேச்சிலிருந்து அறியப் படுவது என்ன – ஆத்மா கொண்ட ஆன்மீகமா அல்லது இல்லாத ஆன்மீகமா – விளக்க முடியுமா? (2)

 

கோவில்கள் இடிக்கப் படுவது, நாசமாவது உண்மை தானே?: ஸ்டாலின் தொடர்கிறார், “இந்த கோயில இடிச்சிட்டாங்க அந்தக் கோயில இடிச்சிட்டாங்க”- என வாட்ஸ்அப்பில் பூகம்பப் படங்களைப் போட்டு வதந்தி பரப்புகிறார்கள்…….கோயிலை இடித்து விட்டோம் என பொய் பரப்புகிறார்கள். ஆனால், 10 ஆயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். கோயில் நிலங்களை மீட்டு மீண்டும் கோயிலுக்கே சேர்த்ததும் தான் திராவிட மாடல் அரசு. கோயிலை பராமரிப்பது அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்குப் பிடிக்காது. எனவே மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்ல வேண்டும். நமது கருத்துகள் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும். ….. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் கோவில்கள் இடிக்கப் படுவது, நாசமாவது தொடர்ந்து கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு நன்றாக தெரிந்த உண்மைதான். இதை யாரும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. மேலும் அந்தந்த கிராமங்களில் வாழும் மக்களுக்கே இவ்விவகாரங்கள் நன்றாகவே தெரியும்.

 

தொடர்ந்து கோவில்களுக்கு  என்று வரும் பக்தர்களுக்கு என்ன மாற்றங்கள் நடந்து வருகின்றன என்பதை நன்றாகவே அறிவர்: கலந்த 40, 50, 60 ஆண்டு காலங்களாக தொடர்ந்து தமிழகத்தில் கோயில்களுக்கு சென்று வருபவர்களுக்கு நிச்சயமாக அந்த கோவில்கள் எவ்வாறு 5, 10, 20 அல்லது 50 ஆண்டுகள் காலங்களில் இவ்வாறெல்லாம் மாறி வருகின்றன என்பது நன்றாகவே கண்டு அறிந்து வருகிறார்கள். குறிப்பாக சொல்வதானால் மதில் சுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து மறைந்து வருவதும், முன்பு கோவிலைச் சுற்றியுள்ள பெரிய இடங்கள் அங்கு குளங்கள் மற்ற சன்னதிகள் என்று இருந்த கட்டிடங்கள் எல்லாமே மறைந்து வருகின்றன. இதிலிருந்து மிகவும் எளிதாக கோவில் நிலங்கள் மற்றவர்களை ஆக்கிரமிக்கப்பட்ட வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கோவில் உள்ளேயும் சிலைகள், விக்கிரங்கள் காணாமல் இருப்ப்பதை கவனிக்கிறார்கள். பல கோவில்கள் சிதிலமடைந்து, கவனிப்பார் இல்லாமல் கிடப்பதையும் கவனிக்கலாம். கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான கோவில்கள் இவ்வாருத் தான் இருக்கின்றன. இப்பொழுது மாறிவரும் நிலை என்னவென்றால் திடீரென்று சில கோவில்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக புகழ் பெற ஆரம்பித்து விடுகின்றன. அதற்கேற்றபடி பிரச்சாரம், விளம்பரம் முதலியனவும் அதிரடியாக ஏற்படுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் தெரிய வருகின்றன.

 

வியாபாரம்-வணிகம் செய்பவர்களின் யுக்திகள், திட்டங்களும் கோவில்-இந்துவிரோதமாகவே இருக்கின்றன:

 

1.       குறிப்பாக ரியல் எஸ்டேட் வியாபாரம் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு அதனுடைய முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதனால் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு விலை அதிகமாகும் இதனால் பணமிருக்கிரவர்கள் அந்த நிலத்தை வாங்குவார்கள் ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருகும் என்ற நோக்கத்திலும் பலர் குறிப்பாக கடவுளைப் பற்றி அல்லது கோவிலை பற்றியோ சம்பந்தமே இல்லாதவர்கள் அதில் ஈடுபட்டு வருகின்றன.

2.        அடுத்தது மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி புதிதாக கடைகளை வைப்பது கடவுள் கோவில் அல்லது அந்த இடத்துக்கு சம்பந்தமான ஏதோ ஒரு பொருளை முக்கியத்துவம் என்பது போல உண்டாக்கி அவற்றை விற்க ஆரம்பிப்பது இதனால் பயன்படுவது பயன் பெறுவது போன்ற யுக்திகளையும் கையா/லுகிறார்கள்

3.       இன்னும் சொல்லப் போனால்ஐந்து அறநிலையத் துறையில் இருக்கும் சிலர் கோவில்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தால் தங்களுடைய லஞ்ச-லாவண்யமும் பெருகும் என்ற நொக்கில், குறிப்பிட்ட கோவில்களுக்கு அத்தகைய பிரபலம் ஏற்படுத்துவது போல செய்வாகள். அக்கோவிலைச் சுற்றி அவ்ர்களது நிலம் இருக்கும், இல்லை வாங்கிப் போட்டு அத்தகைய பிரச்சாரத்தை ஆரம்பித்து வைப்பார்கள்..

4.       எல்லோருக்கும் மேலாக அரசியல் வாதிகள் – மேலே குறிப்பிட்ட கும்பல்கள், யுக்திகள் எல்லாமே, இவர்களுடைய ஆதரவுடன், ஒப்புதல்கள் இல்லாமல் நடக்காது, நட்த்த முடியாது, எனவே அவர்களும் இத்திட்டங்களில் மகிழ்ச்சியோடு பங்கு கொள்வார்கள்.

 

இந்துக்கள் குறிப்பாகக் கவனிக்க வேண்டியவை:

  • இந்த 2023லும், “ஆரிய-திராவிட” இனவாதங்களை நம்புகின்ற முதலமைச்சரை தமிழகத்தில் தான் பார்க்க முடியும், அத்தகைய பேச்சைக் கேட்க முடியும்!
  • இனம் ஒரு கட்டுக்கதை என்பதால், இனம், இனவெறி, இனவெறித்துவம் எல்லாம் உலக அளவில் எதிர்க்கப் படுகின்றன.
  • தவறுதலாக “திராவிட” என்ற அடைமொழி வைத்துக் கொண்டதால், இன்னும் ஆரிய-திராவிட இனவாதங்களைப் பேசிக் கொண்டிருப்பது விந்தைதான்!
  • வேண்டுமென்றால், சரித்திராசிரியர்களிடம் பேசி, சந்தேகம் தெளிந்து, இனிமேல் மேடைகளில் மாண்புமிகு முதலமைச்சர் பேசலாம்.
  • சமூகவளைத் தளம் பற்றிய கூட்டம் என்பதால், இத்தகைய பேச்சு, உலகம் முழுவதும் பரவும், அப்பொழுது உண்மை விளங்கும்!
  • ஆட்சிக்கு வந்தால் செக்யூலரிஸமாக இருப்பதில்லை, இருக்கவில்லை என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
  • பெரியாரிஸ-நாத்திக-பகுத்தறிவு இந்துவிரோதமாகத்தான் இருக்கிறது, இன்னும் அந்த 1930-40-50 கதைகளை வைத்து தான் பிழைப்பு நடக்கிறது.
  • மற்றபடி, திராவிடக் கட்டுக்கதைகளை அவர்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும், ஏனெனில், சங்க இலக்கியத்திலேயே திராவிடர் இல்லை!
  • அல்லேலுயா என்றும் கூவும் இந்து அறநிலையத் துறை மற்று சனாதனத்தை ஒழிப்பேன் என்கிற அமைச்சர்கள் இங்குதான் இருக்கிறார்கள்!
  1. குடும்ப அரசியல் வேண்டாம் என்ற நிலையில், குடும்பத்தையே வைத்து அரசியல் செய்வது இந்துக்களை பாதித்து வருகிறது!
  • கோவிலுக்குச் செல்வது, சனாதனம் ஒழிப்பேன் என்பது, திருமண மந்திரங்களைக் கொச்சைப் படுத்துவது, இந்து திருடன் என்பது எல்லாமே அடங்கும்.
  • ஆமாம், தந்தை, மனைவி, தான், மகன் என்று ஆன்மீக விளையாட்டுகளையும், பேச்சுகளையும் கண்டு-கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

திராவிட ஆன்மீகம் எப்படி, எவ்வாறு, உருவாகும்?: இப்பொழுது ஆன்மீகம் என்று சொல்லிவிட்டதனால் மட்டும் இவர்கள் நம்பிக்கையாளர்களாக மாறிவிட்டார்கள் என்று கருத முடியுமா? நம்பிக்கையாளர்கள் என்றால் எந்த மதத்தினுடைய நம்பிக்கையாளர்கள் என்ற கேள்வியும் எழுகிறது. நிச்சயமாக இவர்கள் என்றுமே இந்து மதத்தை எதிர்த்து தான் பேசி இருக்கிறார்கள், பிள்ளையார் சிலைகள் உடைத்து இருக்கிறார்கள், ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டு இருக்கிறார்கள், ஊர்வலமும் நடத்தியிருக்கிறார்கள். அந்நிலையில் இவர்களது ஆன்மீகம் எந்த வகையில் இந்து மதத்திற்கு ஆதரவாக இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை. மறுபடியும் இவர்கள் திராவிட ஸ்டாக். திராவிட மாடல் என்று இப்பொழுது திராவிட ஆன்மீகம் என்று கூட அவர்கள் பேசலாம், விளக்கம் அளிக்கலாம். ஆனால் நிச்சயமாக இவர்கள் மக்களுக்கு எந்த வகையில் நம்பிக்கையுடன் அந்த ஆன்மீகம் அல்லது தங்களுடைய ஆன்மீகம் என்று சொல்லப்படுகின்ற சித்தாந்தத்தை வெளிப்படுத்துவார்கள், உறுதிப்படுத்துவார்கள் தெரியப்படுத்துவார்கள் என்பது இனிமேல் தான் தெரிய வரும். கடந்த அதை 70 கால ஆட்சி நேரங்களிலும் அல்லது முன்பு தீவிர திராவிடம் கடைப்பிடித்த நிலையிலும் என்றைக்குமே அவர்கள் இதை பற்றி பேசியது இல்லை. அதனால், ஸ்டாலின் பேசுவதால் யாரும் நம்பிவிடப் போவதில்லை.

© வேதபிரகாஷ்

22-10-2023

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

ஒக்ரோபர் 23, 2023

 

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

 

“மக்கள் சேவையே மகேசன் சேவை” திராவிட ஆட்சியில் எப்படி நடக்கிறது என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள்: எப்படி அரசியல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்துவிரோதிகள், எந்த பிரச்சினையையும் அவ்வாறே மாற்றியமைத்து, பலன் பெற முயற்ச்சிக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். தேர்தல் சமயத்தில் இந்துவிரோத அரசியல்வாதிகள் “ஒழுங்குப் பிள்ளை” போல பட்டை-கொட்டைகளுடன் கோவில்களுக்கு வருவது, கும்பிடுவது அறிந்ததே. ஏனெனில், இந்துக்களின் ஓட்டு தேவை. அதே போல, ஒரு பக்கம் பிள்ளையார் சிலை உடைத்து, “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று கூவி ஆட்சிக்கு வந்ததும் தெரிந்த விசயமே. அப்படி, “இந்து திருடன்” என்று அவமதித்து, வனவாசம் சென்று ஜோதிடரைப் பார்த்து, பரிகார யாகம் செய்து, மறுபடியும் ஆட்சிக்கு வந்த கதையும் தெரிந்த விசயமாகி விட்டது. இப்பொழுது அவரின் மகன், மறுமகள், பேரன் என்று அதே ஆன்மீகம்-துன்மார்க்கம் என்ற விளையாட்டுகளில் இறங்கியிருப்பது “ஆன்மீக ஆதரவு” பேச்சில் வெளிப்படுகிறது.

ஆன்மீகம் என்றால் என்ன ஆன்மீகம். பெரியார் ஆத்மாவே இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு, எங்கிருந்து ஆன்மீகம் வரும்?: ஆன்மீகம் என்ற சொல் ஆத்மா என்ற சொல்லின் மீது தான் ஆதாரமாக உருவானது. அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆத்மா உண்டு, அதன் மூலமாக அறியப்படுவது என்னவென்றால் மனிதனுக்கு இறப்பு உண்டு இறந்த பிறகும் வாழ்க்கை ஒன்று போன்ற நம்பிக்கைகளை அடக்கியது ஆத்மா, ஆத்மவியல், ஆன்மீகம் முதலியவை. அவ்வாறு இருக்கும் பொழுது, பெரியாரிஸம், நாத்திகம் அதிலும் குறிப்பாக இந்து விரோதத் தன்மையுடன் கூறும் இந்த சித்தாந்தனத்தில் எவ்வாறு ஆன்மீகம் உள்ளே வந்துப் புகும் அல்லது ஸ்டாலின் சொல்வது போல எவ்வாறு அது தங்களது திராவிடத்துவ கொள்கைக்கு உடன்பட்டு இயைந்து ஒத்துப் போய் எதிர் தன்மையை இல்லாத நிலையில் இருக்கும் என்பது அவர்கள் தான் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. எனவே இது தேர்தல் காலத்தில் மக்களை குறிப்பாக இந்துக்களை ஏமாற்ற பேசும் பேச்சாகவே வெளிப்படையாகப் புலப்படுகிறது. ஏனெனில் வருகிறது கடந்த கால பேச்சுகள், நடத்தைகள், நடவடிக்கைகள், எழுதிப் பேசி அச்சில் வந்திருக்கின்ற புத்தகங்கள், நோட்டீஸ்கள், எல்லாமே இவர்களுக்கு இவர்களின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தி வந்து, ஏற்கவே ஆவணங்களாக அமைந்துள்ளன.

அரசியல் பேச்சுகள் இந்துக்களுக்கு உதவுவது இல்லை, பாதகமாகத்தான் இருந்து வருகின்றன: நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற செய்தி எல்லா மின்-அச்சு ஊடகங்களிலும் வந்துளளது. கலைஞர் செய்தி, முரசொலி முழுவதுமாக வெளியிட்டுள்ளன், மற்றவை சுருக்கமாக, ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளன. சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் விங் 2.0 / Wing2Point0 ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக அரசியல் செய்ய எல்லா யுக்திகளும் கையாளப் படுகின்றன எனூ தெரிகிறது. அதில் வியாபார ரீதியில் எல்லோருமே இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.பணம் கொடுத்தால் வேலைக்கு வருவார்கள்.

திராவிடத்துவ-பாஜக மோதல்களில் இந்துமதம் தாக்கப் படுவது: முதல்வர் பேசுகையில், “ தி.மு..,வை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கங்களை அழிப்போம் எனக்கூறியவர்கள் இங்கு தான் வந்து அடைக்கலம் ஆனார்கள்[1]. இது வரலாறு……….. என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள்.….சமூக வலைதங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டுபோய் சேர்க்கும்[2]ஒருவர் பலநாள் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்துவிடும்[3]. என்னை பொறுத்தவரை எதிர்மறை பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட நேர்மறையான பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியானது[4]. அரசியவாதிகளை தாண்டி ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடமும் அத்துமீறல், மிரட்டல், அடக்குமுறையை ஏவுகிறது பாஜக[5]. இப்படிப்பட்ட சமூக வைரஸாதான் நாம் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறோம். பாஜகவின் சாதி தன்மை தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிரானது அல்ல. இந்தியாவிற்கே எதிரானது[6]. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. சாதி மதத்தின் பெயரால் பிளவுப்படுசத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கக் கூடி ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக்கொண்டிருக்கிறோம்[7]. …. பாசிசத்திற்கு எதிராக நேரடியாக மோதி கொண்டுள்ளோம்[8]. கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது தான் .தி.மு.., .தி.மு..,வும் பா..,வும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்[9]. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்பதால், பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.மிசா, தடா, பொடா என அனைத்தையும் பார்த்துவிட்டோம். மிரட்டல் எல்லாம் கடந்து வந்துவிட்டோம்[10]…… அவர்களின் தற்போதைய முக்கிய வேலை,…….
பாஜக சொல்வதனால் மட்டும் அவை அறியப் படுவதில்லை, ஊடகங்களே நன்றாக விளம்பரம் கொடுத்து வருகின்றன: ஸ்டாலின் தொடர்கிறார், “பாஜகவின் இப்போதைய ஒரே வேலை என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார் என்பதை பார்ப்பதுதான்[11]. துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, ”பாத்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார்”- எனப் பரப்புகிறார்கள்[12]. தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோயிலுக்கும்தான் துர்கா செல்கிறார்…….என்னை மனைவி கோயிலுக்கு செல்வது அவரது விருப்பம்[13]. நான் அதை தடுக்க விரும்பவில்லை[14]. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல[15]……., கோயிலும் – பக்தியும் அவரவர் உரிமை – விருப்பம்! ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெகு மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான்[16]. தலைவர் கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில்: ”கோயில் கூடாது என்றல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது!…. கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மீகத்தையும் – அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். ”

© வேதபிரகாஷ்

23-10-2023


[1] கலைஞர் செய்தி, “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல” : முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேச்சு!, Lenin, Updated on : 21 October 2023, 05:00 PM.

[2] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/10/21/we-are-not-enemies-of-spirituality-said-cm-mk-stalin

[3] நக்கீரன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல” – முதல்வர் மு..ஸ்டாலின், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 21/10/2023 (11:40) | Edited on 21/10/2023 (12:01).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-are-enemy-aryan-domination-and-not-spirituality-says-cm-mk-stalin

[5] தினமணி, நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, By DIN  |   Published On : 21st October 2023 12:51 PM  |   Last Updated : 21st October 2023 12:51 PM.

[6] https://www.dinamani.com/tamilnadu/2023/oct/21/we-are-not-enemies-of-spirituality-cm-stalins-speech-4093802.html

[7] தினமலர், நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் ஸ்டாலின் பேச்சு, மாற்றம் செய்த நாள்: அக் 21,2023 17:11

[8] https://m.dinamalar.com/detail.php?id=3463060

[9] தினத்தந்தி, ஆரியத்துக்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல: முதல் அமைச்சர் மு. ஸ்டாலின், தினத்தந்தி அக்டோபர் 21, 12:46 pm

[10] https://www.dailythanthi.com/News/State/we-are-the-enemy-of-aryam-not-spirituality-prime-minister-mk-stalin-1077268

[11] தமிழ்.நியூஸ்.18, ஆன்மீகத்திற்கு அல்ல.. ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிமுதலமைச்சர் மு..ஸ்டாலின் திட்டவட்டம், LAST UPDATED : OCTOBER 21, 2023, 3:20 PM IST.

[12] https://tamil.news18.com/chennai/dmk-govt-not-against-for-spirituals-its-against-only-for-religious-suppression-1202874.html

[13] விகடன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல!” – முதல்வர் ஸ்டாலின், VM மன்சூர் கைரி, Published: 22-10-2023 at 2 PM; Updated:Yesterday 22-10-2023 at 2 PM

[14] https://www.vikatan.com/government-and-politics/politics/cm-stalin-speech-in-dmk-it-wing-meetin-at-chennai

[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நான் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல! என் மனைவி எந்த கோயிலுக்கு போறாங்க என்பதை பார்ப்பதே பாஜக வேலை!முதல்வர் ஸ்டாலின், vinoth kumar; First Published Oct 21, 2023, 1:00 PM IST; Last Updated Oct 21, 2023, 1:09 PM IST.

[16] https://tamil.asianetnews.com/politics/i-am-not-an-enemy-of-spirituality-cm-stalin-speech-tvk-s2vbid