Archive for the ‘துறவியர்கள்’ Category

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? மத்திய அரசு எதிர்ப்பு இதில் சேர்க்கப் பட்டு தீவிரப் படுத்தப் படுகிறதா? (3)

ஜூன் 13, 2022

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? மத்திய அரசு எதிர்ப்பு இதில் சேர்க்கப் பட்டு தீவிரப் படுத்தப் படுகிறதா? (3)

வாரியாருக்கு ஏற்பட்ட நிகழ்வு தான் உமக்கும் ஏற்படும்என்று சொல்வது, வேதனையின் உச்சம்: நேரிடையாக இல்லாமலிருந்தாலும் மறைமுகமாக (apologetic) திமுகவை கண்டித்துள்ளார் வாரியாரின் மருமகனும், இறைபணியில் இருப்பவருமான சக்திவேல் முருகனார்[1]. அவர் அவ்வாறு கூறியதாவது: “கிருபானந்த வாரியார் இறையருள் பெற்றவர்; மகானாக வாழ்ந்தவர். அவரது இறை சொற்பொழிவு சாகா வரம் பெற்றவை. அப்படிப்பட்ட மகானை, அன்றைக்கு தி.மு..,வினர், நெய்வேலியில் வைத்து தாக்கியது நடக்கக் கூடாதது. அவர் வழி வாழும் ஒவ்வொருவரும், அந்நிகழ்வை மறக்க முயன்று கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட மகானை போற்றாவிட்டாலும் பரவாயில்லை; யாரும் சிறுமைப்படுத்த கூடாது. ஒரு கட்சி தலைவரை மிரட்ட வேண்டும் என்பதற்காக, ‘வாரியாருக்கு ஏற்பட்ட நிகழ்வு தான் உமக்கும் ஏற்படும்என்று சொல்வது, வேதனையின் உச்சம். ஆர்.எஸ்.பாரதி இப்படி பேசினார் என்பதை கேட்டதும், வாரியார் வழி வாழும் லட்சோபலட்சம் பற்றாளர்களும் கொதித்து போயினர். உறவுக்காரர்கள் சொல்ல முடியாத வேதனையில் ஆழ்ந்தனர். இப்படியொரு சர்ச்சை உருவானதும், உணர்வுள்ள பற்றாளர்கள் ஒன்று கூடி, ‘இனி இது தொடரக் கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும்என்று முடிவெடுத்தோம்,’” என்றார்[2].

இனிமேலாவது வாரியாரை இழுத்து, தேவையில்லாத அரசியல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்: சக்திவேல் முருகனார் கூறியது, ‘‘அதற்காக, என்னை போன்றவர்கள், தங்களின் மன வேதனையை இறைவன் முன் வைத்தோம். அரசில் இருப்போருக்கும் எடுத்து சென்றோம். இறைவன் உருவில் வாழும் வாரியாருக்கும், எங்கள் வேதனையும், வேண்டுதலும் சென்றிருக்க வேண்டும். என்ன நடந்தது என தெரியாது. யாரை சிறுமைப்படுத்துவது போல பாரதி பேசினாரோ, அவரே இன்றைக்கு, அதே வாரியாரை தன் துாரத்து உறவினர் என கூறியுள்ளார். இப்படியொரு நெருக்கடி அவருக்கு ஏற்பட காரணம் இறைவனும், இறைவனாக வாழும் கிருபானந்த வாரியாரும் தான் என்பதில், எள்ளளவும் மாற்று கருத்தில்லை. பிரச்னையில் இருந்து விடுபட, அவர் அப்படி சொல்லி இருப்பதாகவே தெரிகிறது. வாரியார் குடும்ப நிகழ்ச்சியில், அவரை யாரும் பார்த்ததில்லை. ஜாதிக்காரராக இருந்தால், எப்படியோ ஒரு வழியில் உறவு வந்து விடும் என்ற எண்ணத்தில் சொல்லியிருக்கலாம். இனிமேலாவது வாரியாரை இழுத்து, தேவையில்லாத அரசியல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்,” இவ்வாறு சக்திவேல் முருகனார் கூறினார்.

முதலியாருக்கு கோபம் வந்துள்ளது, அமையாக எச்சரிக்கையும் சேர்ந்துள்ளது: சக்திவேல் முருகனார் இங்கு முதலியார் என்ற ரீதியில் கொதித்துப் போனதை ஒப்புக் கொண்டுள்ளதை கவனிக்கலாம். ஆனால், அது ஏனோதானோ என்றுதான் உள்ளது. “‘இனிமேலாவது வாரியாரை இழுத்து, தேவையில்லாத அரசியல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்,” என்று பணிவோடு வேண்டிக் கொண்டது தெரிகிறது. வடுகர் என்று மற்றவர்களை தூஷிக்கும் போக்கு இல்லை, தெலுங்கன் என்ற சொற்பிரயோகம் இல்லை வந்தேறி என்ற வசைபாடலும் இல்லை. இப்பொழுது தான் நாயுடு கருணாநிதி சிலையைத் திறந்து வைத்துச் சென்றுள்ளார். ஜனாதிபதிக்கு நின்றால் திமுக ஆதரவு என்ற நிலையும் வெளிப்பட்டுள்ளது. ஆக சக்திவேல் முருகனார் சமஸ்கிருதத்தைப் பழிப்பார், பிராமணர்களை தூஷிப்பார். ஆனால், வடுகர்களை சீண்ட மாட்டார். அது இவாளுக்கு உள்ள அன்டெர்ஸ்டேன்டிங் எனலாம். இந்துத்துவவாதிகள் இந்துக்களைப் பிரிக்கும் திட்டங்களுக்கு ஒத்துப் போகும் போக்கைக் காணலாம். முக்கியமான பிரச்சினை / பிரச்சினைகளை இவ்வாறு, எதையாவது வைத்துக் கொண்டு திசைத் திருப்புவர். மறக்க வைப்பர். தொடரும் பிரச்சினை / பிரச்சினைகளை கையாள வேண்டும் என்ற எண்ணம், செயல்முறை, முற்போக்கு திட்டம் இல்லை.

மயிலாடுதுறை விவகாரங்கள்: தமிழகத்தின் தருமபுரம் மடத்தில் ‘பட்டின பிரவேசம்’ சடங்குக்கு 27-04-2022 அன்று தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் சில ஆதினங்களுடன் ‘தெய்வீகப் பேரவை’ ஆரபிக்க கூட்டம் நடத்தினார். ‘பட்டின பிரவேசம்’ தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், மதுரை ஆதீனம், தடை உத்தரவை எதிர்த்துப் பேசியதற்காக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது பற்றி பிரதமரைச் சந்தித்துச் பேசப் போவதாகவும் குற்றம் சாட்டினார். 19-04-2022 அன்று ஆளுனர் மயிலாடுதுரை வந்தது, திக வகையறாக்கள் தாக்க முயன்றது முதலியனவும் இதில் அடங்கும். இதே காலகட்டத்தில் இப்பகுதிகளில் என்.ஐ.ஏ.வும் சோதனை நடத்தி, சிலரை கைது செய்தது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை 08-06-2022 அன்று மேற்கொண்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், கிளியனூர், உத்திரங்குடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொண்ட குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் நேற்று காலை மயிலாடுதுறை சென்றனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிந்து நீடூர், எலந்தங்குடி, அரிவேளூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 11 மணி வரை தொடர்ச்சியாக 5 மணி நேரம் நடந்தது. பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது சோதனையை முடித்துவிட்டு மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பினர். ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்தன.

மதுரை ஆதீனம் மிரட்டுகிறார்கள் என்று புகார்: 04-05-2022 புதன்கிழமை தஞ்சாவூர் அருகே களிமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் சொத்துக்களை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வருகின்றனர் என்று கூறினார். மேலும், “நான் அவர்களிடம் அதிக கேள்விகளை கேட்பதால், எனக்கு அச்சுறுத்தல் வருகிறது. கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் வீடுகள் கட்டியுள்ள அவர்கள், வாடகை கொடுக்க மறுக்கின்றனர். கோவில் நிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள், ஊருக்குள் நுழைந்து கடவுளுக்கு திருப்பணி செய்ய முடியாது என என்னை மிரட்டுகிறார்கள்,” என்றும் ஆதீனம் கூறினார். பின்னர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தெரிவிக்க உள்ளதாகவும் ஆதீனம் கூறினார். மதுரை ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் ஆதீனத்துக்கும், ஆதீன மடத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, மாநகரக் காவல் ஆணையரிடம் 05-05-2022 வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவினர் தினம்தினம் பிரச்சினைகளைக் கிளப்புவது: பட்டின பிரவேசம் தடை பற்றி பெருமளவில் எதிர்ப்பு கிளம்பியதால், அரசு ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. 22-05-2022 பட்டின பிரவேசம் நிகழ்ச்சி அமோகமாக நடந்தது.  அப்பொழுது, மதுரை ஆதீனம், உலகம் முழுவதும், எல்லோருக்கும் அறியச் செய்ததால், திகவினருக்கு நன்றியும் தெரிவித்தார். 26-05-2022 மோடியை சந்தித்தார். இதனால், திமுகவினர் கலங்கித் தான் போயினர். மேலும் அன்று மோடிக்கு முன்பே திராவிடியன் மாடல் என்றெல்லாம் ஸ்டாலின் பேசியதும் கேள்விக்குறியானது. திமுகவினர் மெச்சிக் கொண்டாலும், அது எதிர்வினையாகுமா என்று யோசிக்க ஆரம்பித்தனர். மத விசயங்களில் தலையிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு, தினம்-தினம் கோவிலுக்குச் செல்வது, பிரச்சினையைக் கிளப்புவது, செய்தியாக்குவது, அறிக்கை விடுவது என்பது வழக்கமாகி விட்டது. ஆகையால், திராவிடத்துவ-பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத ஆட்சி இவ்வாறான பிரச்சினைகளை தினம்-தினம் எழுப்ப, திட்டமிட்டே செயல்படுவதாகத் தெரிகிறது.

ஜூன் 2022ல் வெளிப்படும் மோதல் போக்கு: ஜூன் 2022லும் ஆரம்பம் முதலே திமுகவினர் தீவிரமாகவே செயல்பட ஆரம்பித்தனர். கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் 03-06-2022 வைத்துக் கொண்டு, ஊடகங்களில், வெற்ப்புப் பேச்சை ஆரம்பித்தனர். ராஜிவ் காந்தி என்ற திமுக ஊடக தொடர்பாளர், பிராமணர்களைக் கொல்வதை, பெரியார் பேச்சு வைத்து நியாயப் படுத்தினார். இ.கே.எஸ். இளங்கோவன், இந்தி எதிர்ப்பு சாக்கில், சூத்திரர் என்றெல்லாம் பேசினார். ஸ்டாலின் காயதே மில்லத் சமாதிக்குச் சென்று மரியாதை செல்லுத்துகிறார். கவர்னர் எதிப்பு பிரச்சாரமும் தீவிரமாக தொடர்கிறது. ஆனால், ஆதினங்கள் பற்றி எதிர்மறை செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.   ஆனால், ஆங்கில டிவிக்களில் இதைப் பற்றிய விவாதங்கள் நடந்தன. இதனால், திமுகவின் போக்கு நாடெங்கும் அறியப் படுகிறது. அந்நிலையில் தான், எல்லாவற்றையும் மறைக்க, திசைத் திருப்ப, ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்துள்ளனர் போலும்…..

© வேதபிரகாஷ்

13-06-2022


[1] தினமலர், சொந்தம் கொண்டாடுகிறார் ஆர்.எஸ்.பாரதி; இது தான் மகிமை என்கிறார் வாரியார் மருமகன்,  Added : ஜூன் 12, 2022  00:33.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3051187

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (1)

ஜூன் 13, 2022

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (1)

முருகன், விசாகம், தமிழ் என்று இருந்த இந்துக்கள்: 12-06-2022 சுபகிருது, வைகாசி , விசாகம் பிறகு அனுஷம், சுக்ல பக்ஷ திரயோதசி  பிறகு சுக்ல பக்ஷ சதுர்தசி அன்று முருக பக்தியில் ஆழ்ந்து, உலகை மறந்து, நிம்மதியாக இருந்தவர்கள் பக்தர்கள். அதே நேரத்தில், இதையெல்லாம் சொல்லிக் கொண்டு, தமிழ் என்ற நிலையிலும் இருந்த நிலையில், மதுரை ஆதீனத்தை மிரட்டி வசை பாடியுள்ளது, முரசொலி! ஒரு ஆதீனத்தை, மடாதிபதியை அவர்கள் அந்த வஞ்சனையைப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. பிரிக்கும் சூழ்ச்சியாளர்களுக்கு இதெல்லாம் சுலபமானது……ஏனெனில், திமுகவை எதிர்க்கும் இந்துக்கள் அப்படித்தான் இருக்கின்றனர்…….100, 200 ஜால்றா அடித்துக் கொண்டு குறுகிய கால பலன்களை அனுபவித்து சென்று விடுவர்……..ஆனால், தொடரும் பழி, வினைகள், முதலியவை அப்பாவி இந்துக்களைத் தான் பாதிக்கும், தொடரும்…….. மேலும், இவ்வாறு ஊடகங்களில் விமர்சிக்க, பழிக்க, மிரட்ட எப்படி அவர்களுக்கு உரிமை வருகிறது? இதே போன்ற விமர்சனத்தை மற்ற மத-மடாதிபடிகளின் மீது வைப்பார்களா?

திமுகஇந்துக்கள், இந்துத்துவ இந்துக்கள்: திமுகவில் 80% இந்துக்கள் இருக்கிறார்கள், ஆமாம், ஒட்டு மொத்தமாக திமுகவிற்கு ஓட்டுப் போடுகிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள்… ஆனால், இந்துத்துவப் போர்வையில் 99% இந்துக்கள் இருந்தாலும் அவர்கள் ‘இந்துக்கள்’ ஆக இல்லை…..இதைத் தான், இந்துவிரோதிகள் அறிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்………. மதுரை ஆதீனத்தை ஒருவன் வசைப் பாடுகிறான், மிரட்டுகிறான் என்றால், ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்….. முதலியார், பிள்ளை, செட்டி, தேவர், ரெட்டி, நாயக்கர், வேளாளர், நாயுடு, என்றுதான் இருக்கின்றனர்……………ஆட்சி, அதிகாரம், அந்தஸ்து, பணம், சுகம்……………எல்லாம் அனுபவித்து வருகின்றனர்……………வேலை செய்கிறவன் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறான்……………வேலைகாரன் எஜமானன் ஆனால், அவனுக்கு ஒரு வேலைகாரன் வருகிறான்…………………எந்த கட்சி இதனை மாற்றியது? ஆனால், ஆதீனங்களை, மடங்களை, மிரட்ட ஒன்றாக வந்து விடுகின்றனர்……………..முரசொலியின் எச்சரிக்கையை, கலைஞர்.செய்திகள் விசுவாசத்துடன் வெளியிடுகிறது.

12-06-2022 – முரசொலி எச்சரிக்கையை வெளியிட்ட கலைஞர்.செய்திகள்: தமிழக முதல்வர் குறித்து பி.ஜே.பி.யின் எச்.ராஜா கூறியதையும் மதுரை ஆதினத்துக்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறோம்[1]. “Stalin is more Dangerous than Karunanithi” எச்.ராஜாவின் இந்தப் பதிவில் பல பொருள்கள் பொதிந்துள்ளன[2]. இதனையும் அரிஹர தேசிகர் உணரவேண்டும் என முரசொலி நாளிதழ் ‘சிலந்தி’ கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை, சமீப காலங்களாக பெருமை மிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர். மதுரை பாஷையில் சொல்வதென்றால், தாங்கள் ஆதினம் என்பதை மறந்து ஏதாவது ‘குண்டக்க, மண்டக்க’ என பேச்சிலும் செயலிலும் ஈடுபடுகின்றனர்! தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற நிலைக்குள்ளாக்கியுள்ளனர்![உபயொகப் படுத்தப் பட்டுள்ள வார்த்தைகளை கவனிக்கவும்]

நித்தியானந்தா பெயர் சொல்லி தோஷிப்பது: முன்பு ஆதினமாக இருந்து மறைந்த அருணகிரி ஆதினம் காலத்தில், அவரது செயல்களால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாடறியும்! அவரது பல செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளாகி, ஆதினத்தையே தலைகுனிய வைத்தது! அவர் ஆன்மிகத்தில் அரசியலை நுழைத்து – ஆன்மிகவாதியாகவோ – அரசியல் வாதியாகவோ இல்லாமல் இரண்டும் கெட்டானாக நடத்திய ‘கோமாளி’ கூத்துக்களால் திருநாவுக்கரசர் தோற்றுவித்த சீர்மிகு அந்த ஆதினம் பல தலைக்குனிவுகளை சந்தித்தது! நித்யானந்தா எனப் பெயர் சூட்டிக்கொண்டு, நித்தம் ஆனந்தம் அனுபவித்துவிட்டு, அதனால் பல வழக்குகளில் சிக்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடி, இன்று தேடப்படும் குற்றவாளியாக உள்ள ஒரு கிரிமினலை அன்று மதுரை ஆதினத்தின் பீடாதிபதியாக நியமித்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார் அன்றைய பீடாதிபதி அருணகிரி! [ஆட்சி-அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் மனிதர்களின் சரித்திரத்தையும் மற்றவர்கள் அறிய சொவார்களா? அல்லது அதை மற்றவர்கள் வெளியிட்டால் சும்மா இருப்பார்களா?]

நித்யானந்தாவை நியமிக்க பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது என்று குறிப்பிட்டது: நித்யானந்தாவை வாரிசாகவும் அடுத்த பீடாதிபதியாகவும் நியமித்த அன்றைய மதுரை ஆதினத்தின் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளானது மட்டுமல்ல; அந்த நியமிப்பின் மூலம் பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது. அருணகிரி பணம் பெற்றுக்கொண்டு பீடாதிபதி பதவியை நித்யானந்தாவுக்கு வழங்கியதாக விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காஞ்சி மடமும், திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட சைவமதங்கள் பலவும் மடாதிபதி அருணகிரியின் செயலுக்கு கண்டனக்குரல் எழுப்பின! அப்போது நெல்லை கண்ணன் தலைமையில் ஆதின மீட்புக்குழுவே அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எல்லா சைவ மடங்களும் மதுரை மடத்தின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவித்தன. [அந்த நெல்லை கண்ணன் நிலை எப்படி என்று அறிந்ததே. கொள்கையற்றவர்கள், பணம், விருது, அந்தஸ்து என்று எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.]

ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்ற ஆரூடம் பொய்த்தது: ஆதினம் அருணகிரி, அதைவிட அத்துமீறி அ.தி.மு.க.வை ஆதரித்து நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு நடத்தியது கேலிக்கூத்துக்களாகும்! நாகர்கோவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அருணகிரி பேசியது இன்றும் வலைதளங்களில் உள்ளது. நாகர்கோவில், வடிவீஸ்வரம் தேரடி வீதியில் அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசிய நகைச்சுவைகளை கீழே தருகிறோம்; நீங்களும் ரசியுங்கள். “தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, கோயில்களில் இதுவரை எழுந்தருளியவன் அம்மா பிரதமராகிட இன்று குமரி மக்களிடம் வாக்குசேகரிக்க உங்கள் முன் எழுந்தருளியுள்ளேன். இந்த வரத்தை கொடுத்தது இறைவன். அம்மா இந்தியாவின் பிரதமராகி நம்மை எல்லாம் காப்பாத்தப் போறாங்க, அதுவும் இறைவன் கொடுத்த வரம். அதை நிறைவேற்ற இந்த சன்னிதானத்தை இறைவன் அனுப்பியுள்ளார். அம்மா பிரதமர் ஆவார் என அவர் ஜாதகம் சொல்லுகிறது,” ஜெயலலிதா பிரதமராவார் என்பது ஆண்டவன் கட்டளை – ஜாதகம் சொல்லுகிறது என்றெல்லாம் பேசி ஜாதகத்தைப் பொய்யாக்கி, ஆண்டவனுக்கும் அவப்பெயர் உருவாக்கிவிட்டு திருமிகு மதுரை ஆதினத்தின் திருவை சீரழித்துச் சென்றார்! [பிரதமர் ஆக வேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் உள்ளது, ஆகவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாராவது, ஆரூடம், ஜோசியம் என்று யாதாவது சொல்லிவிடப் போகிறார்கள்…..]

அறநிலையத் துறை அமைச்சரை எதிர்த்துப் பேசிய ஆதினம்: இப்போது மதுரை ஆதினமாகியுள்ள அரிகர தேசிகர் ஞான சம்பந்தமோ முன்னாள் பீடாதிபதி ‘அருணாகிரியை’ விட தான் குறைந்தவறில்லை என்பது போல அபத்தங்களைப் பேசி வருகிறார். கழக அமைச்சரவையில் அடக்கத்துக்கும் பொறுமைக்கும் பக்திக்கும் பணிவுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவையே கோபம் கொள்ளச் செய்யும் அளவு ஆதினம் அரிகரதேசிகரின் பேச்சும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. மத நம்பிக்கைகள் அது எந்த மதத்தினருடையதாக இருந்தாலும் அதில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு செயல்படுகிறது, கழக ஆட்சி! [அடேங்கப்பா, ‘‘கோபம் கொள்ளச் செய்யும் அளவு” என்று இனி சட்டத்தில் விவரிக்கப் பட வேண்டும், பிரிவையும் சேர்க்க வேண்டும், பிறகு அத்தகைய சட்டப் பிரிவை மீறுபவர்களை கைது செய்து விடலாம்.]

சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது: இந்தியாவிலேயே மத நல்லிணக்கம் தமிழகத்திலேதான் சீராக, சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் தருமபுர ஆதின குரு பூஜையை ஒட்டி நடைபெற இருந்த பட்டினபிரவேச நிகழ்ச்சியில் ஆதினகர்த்தரை பல்லக்கில் சுமந்து மனிதர்கள் வருவதற்கு சில கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்ததை ஒட்டி, அதனால் எந்த சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற போக்கில் அந்த நிகழ்வுக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்த நிலையில் – அதனை ஒட்டி விவாதம் உருவானபோது, இதனால் தமிழகம் கட்டிக்காக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஊறு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலும், இதனை வைத்து குளிர் காய நினைத்த சில மதவெறிக் கூட்டத்தின் செயலுக்கு இடம்தராத வகையிலும், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உடனடியாக தலையிட்டு ஆதினகர்த்தர்களுடன் அவரும் பேசி, அவர்களை முதலமைச்சரையும் சந்திக்க வைத்து – ஒரு சுமூக நிலையை உருவாக்கினார்! [ஆக, ‘‘சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது,” இதையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்படியாவது உள்ளே தள்ளவேண்டும் என்றால், இப்படியெல்லாம் யோசித்து எழுதுவார்கள் போலும்.]

© வேதபிரகாஷ்

13-06-2022


[1] கலைஞர்.செய்திகள், குறுக்கு சால் ஓட்டி, களங்கம் விளைவிக்கும் மதுரை ஆதீனம் கவனத்திற்கு.. முரசொலியில்சிலந்திஎச்சரிக்கை!, Prem Kumar, Updated on : 12 June 2022, 09:32 AM.

[2] https://www.kalaignarseithigal.com/politics/2022/06/12/silandhi-article-in-murasoli-newspaper-warning-madurai-aadheenam

[3]  முரசொலி, அத்து மீறும் ஆதீனம் அறிவதற்கு, சிலந்தி, 2-06-2022, பக்கம்.3.

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்தது – மடாதிபதிகள் பேசியது – ஆன்மீக திமுக அலட்சியப் படுத்தியது (3)

ஜூன் 6, 2022

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்ததுமடாதிபதிகள் பேசியதுஆன்மீக திமுக அலட்சியப் படுத்தியது (3)

05-06-2022 அன்று நாத்திக காயிதே மில்லத் சமாதியில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்: மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காயிதே மில்லத் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்[1]. மேலும், இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்” இந்தித் திணிப்பு எதிர்ப்பு – தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி – மத நல்லிணக்கம் – சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி எனத் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியச் சிறுபான்மையினருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் பிறந்தநாளில் அவர்தம் தொண்டை நினைவுகூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்[2].

பேரூர் அதீனம் பேட்டி: பேரூர் ஆதினத்தின் பேட்டி எதிர்மறையானது[3], ‘கபாலீஸ்வரர் கோவிலை இடித்துத்தான் சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டதாக கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது பற்றி தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். திருக்குறள், திருஞானசம்பந்தர், ஆண்டாள் போன்றவர்களின் கருத்துக்கள் இயேசு பேசிய கருத்துக்களாக பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சமயக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து அறநிலையத் துறை கோவில்களிலும் அதனை நடைமுறை செய்ய வேண்டும். நதி யாத்திரை நடத்தி நீர் நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது அதனை தத்தெடுத்து கோவில்களில் உள்ள கோ மடங்களில் பாதுகாக்க வேண்டும். கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,’ என்றார்[4]. இவரது பேட்டி, கிருத்துவர்களுக்கு சாதகமாக இருப்பது தெரிகிறது. அகில இந்திய துறவிகள் மாநாடு வரும் (ஜூன்) 11,12இல் நடைபெற உள்ளது.

முன்னர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொது செயலர் மிலிந்த்பரண்டே ஏட்டி அளித்தது; விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொது செயலர் குரோம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்[5]. அப்போது அவர் கூறியதாவது[6]: ‘விஷ்வ இந்து பரிஷத்தின் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு, ஜூன் 24முதல் ஜூன் 26 வரை, காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. ஜூன் 4, 5தேதிகளில், மதுரையில் அகிலபாரத இந்து துறவிகள், இந்து யோகிகள் மாநாடும் நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்து சமுதாயத்துக்கு பல சவால்கள் உள்ளன. இதுகுறித்து விவாதிக்க நாடு முழுவதிலும் இருந்து பலர் தமிழகத்துக்குவர வேண்டும். எத்தனையோ கோயில்கள் தமிழகத்தில் இடிக்கப்பட்டாலும், தேவாலயங்கள், மசூதிகள் இடிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் பராமரிப்பை இந்து அமைப்புகளிடம் அரசு வழங்க வேண்டும். நம் நாட்டில் ஆறு மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் சரியான சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மதம் மாறிய எந்த பழங்குடி சமூகமும் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறக் கூடாது என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், பழங்குடியினர் பலர்மதமாற்றம் செய்த பின்பும் இடஒதுக்கீட்டு பலனைப் பெற்று வருகின்றனர். வெளிநாட்டு விரோத சக்திகளின் ஆதரவுடன் நடைபெறும் மதமாற்ற தொழில் இந்துக்கள் மற்றும் நம் நாட்டுக்கு எதிரானது. பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் மதமாற்ற முயற்சிகளுக்காக தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். இத்தகைய மதமாற்றங்களைத் தடுக்க மதமாற்ற தடைச் சட்டத்தால் மட்டுமே முடியும். அதுவே நம் தேசத்தின் கலாச்சாரத்தையும், நம் பாரம்பரியம் மற்றும் மக்களையும் பாதுகாக்க உதவும். கோயில்களுக்கு தானமாக அளிக்கப்படும் தங்கங்களுக்கு கடவுள்தான் உரிமையாளர். அரசு உரிமையாளர் கிடையாது”.

ஆன்மீகம், நாத்திக ஆன்மீகம், திமுக ஆன்மீகம் முதலிய வகைப் படுத்தி அறிய வேண்டியுள்ளது: இந்து துறவியர், காவி துறவியர், ஆன்மீக துறவியர், கருப்பு ஆன்மீகம், காவி ஆன்மீக்கம், பெரியார் ஆன்மீகம், ஆன்மீக அரசியல், திராவிட ஆன்மீக அரசியல், பெரியாரிஸ ஆன்மிகம் என்றெல்லாம் பேசி வரும் நிலையில், பல விசயங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. முடிவாக கவனித்தல் அரசினால் எந்த பிரயோஜனும் இல்லை என்று அறிந்து கொள்ளளாம். இந்துக்களின் நலன் எவ்வாறு காக்கப் படும், காக்கப் படவேண்டும் என்பது தான் பிரச்சினை, விசயம் மற்றும் முக்கியத்துவமே தவிர அரசியல், ஆட்சி முதலியன எந்த பிரயோஜனமும் இல்லை. தினம்-தினம் ஒவ்வொரு இந்துவும் தெரிந்தோ-தெரியாமலோ தனது கடமைகளை செய்து வருகிறான். புண்ணிய ஸ்தலங்களில் இருக்கும் நல்லவர்கள் மூலம் தான் அவை தொடர்ந்து இயங்குகின்றன. அதுவரை, இந்நிலை தொடர்ந்து நிலைக்கும். நாத்திகர், இந்துவிரோதிகள், கோவில் இடிப்போர், கொள்ளையடிப்போர், வருவர்-செல்வர், ஆனால், பக்தியுடன் கோவில்கள் நிலைத்து நிற்கும், நிற்கின்றன.

  1. 04-06-2022, சனிக்கிழமை அன்று மதுரையில் இந்து துறவிகள் மாநாடு ஆரம்பித்தது, மடாதிபதிகள் கலந்து கொண்டனர்!
  • 04-06-2022, சனிக்கிழமை அன்று திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து அறநிலையைத் துறை அமைச்சர்! பூரண கும்ப மரியாதை!
  • 05-06-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை, அன்று மதுரையில் இந்து துறவிகள் மாநாடு தொடர்ந்தது, முடிந்தது, தீர்மானங்கள் போடப் பட்டன!
  • 05-06-2022 அன்று நாத்திக பகுத்தறிவு முதலமைச்சர் காயிதே மில்லத் சமாதியில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
  • மேலும், ட்விட்டரில்,– ‘மத நல்லிணக்கம், சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி என கலங்கரை விளக்கமாகத் திகழும் ..தொண்டை நினைவுகூர்கிறேன்’ என பதிவு..
  • ஆனால், இந்து துறவிகள் மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்தார்களா, பகுத்தறிவு-ஆன்மீகம், செக்யூலரிஸ நாத்திகத்தைப் பின்பற்றினார்களா?
  • இங்கு குங்குமம்-விபூதி அழித்தது, கீழே கொட்டியது போல எதையாவது புரட்சிகரமாக செய்தார்களா? ஷிர்க் மறக்கப் பட்டதா? ஷிர்க்-ஷிர்க்குடன் கலந்து மறைந்ததா?
  • அட, ஆர்.எஸ். எஸ், பிஜேபி தலைவர்களே, ‘பெரியார் கருத்துகளும் எங்களுக்கு உடன்பாடே’ என்று சொல்லி விட்டார்களே- என்பார்களா?
  • அட, செக்யூலரிஸத்தில், ஆன்மீக அரசியலில், திராவிடத்துவ கூட்டணியில், வெங்காயத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றும் சொல்வார்களோ?
  1. ஒரே குட்டையில் ஊறிய மட்டையோ, கட்டுமரமோ, வெங்காயமோ, வெள்ளைப் பூண்டோ வாங்கப்பா திராவிட மாயை-மயக்கத்துடன் உறிக்கலாம் என்பார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

06-06-2022


[1] தமிழ்.இந்து, காயிதே மில்லத் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை, செய்திப்பிரிவு, Published : 05 Jun 2022 12:17 PM; Last Updated : 05 Jun 2022 12:17 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/810062-quaide-milleth-birthday.html

[3] இ.டிவி.பாரத், இந்து அறநிலையத் துறை வசமுள்ள கோவில்களை ஆதீனங்களிடம் ஒப்படைக்க கோரிக்கை!, 06-06-2022

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/all-9th-grade-students-pass-in-tamil-nadu/tamil-nadu20220606114541695695482

[5] தமிழ்.இந்து, கோயில் பராமரிப்பை இந்து அமைப்புகளிடம் வழங்க வேண்டும்: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல், செய்திப்பிரிவு Published : 01 Apr 2022 10:06 AM; Last Updated : 01 Apr 2022 10:06 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/783701-temple-maintenance.html

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்தது – மடாதிபதிகள் பேசியது (2)

ஜூன் 6, 2022

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்ததுமடாதிபதிகள் பேசியது (2)

பிரதமருடன் சந்திப்புமடாதிபதி முன்னர் மிரட்டப் பட்டது: மதுரை ஆதினம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி தலைமை வகித்து பேசியதாவது ‘வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு குத்தகை, வாடகையை சம்பந்தப்பட்டோர் முறையாக செலுத்தினர். பின் காங்.,-தி.மு.., – .தி.மு.., ஆட்சிகளில் குத்தகை, வாடகையை முறையாக செலுத்தத் தவறிவிட்டனர்[1]. இதனால் கோயில்களில் திருப்பணியை மேற்கொள்ள முடியாத நிலை. திருத்துறைப் பூண்டியில் ஒரு கோயிலுக்கு சொந்தமான சொத்தை அனுபவிக்கும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் ரூ. 21 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். அக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப்போவதாக மிரட்டினார். இதைப் பற்றி பேசினால் தடாலடியாக எதிர்ப்பதாக கூறுகின்றனர். எதிர்ப்பை சமாளிக்கும் நிலையில் உள்ளோம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டேன்’. சமீபத்தில் வந்தபோது, அவர் சந்திக்கவும் செய்தார். ஆனால், என்ன பேசினார் என்ற விவரங்கள் எல்லாம் தெரியாது.

மடங்கள் செயல்பட வேண்டும்அரசியல்வாதிகளால் மிரட்டப்படக் கூடாதுஜால்ரா அடிக்க முடியாது[2]: மதுரை ஆதினம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி தலைமை வகித்து பேசியதாவது, ‘இதை கேள்வி கேட்காமல் பதுங்கி கிடக்க வேண்டுமா, என்னால் ஜால்ரா அடிக்க முடியாது[3]. ஹிந்துக்களிடம் ஒற்றுமை, நம்பிக்கை, துணிவு இல்லை. இவற்றை ஏற்படுத்த வேண்டும். இதற்காகவும், கோயில்களை பாதுகாக்கவும் கிராமங்கள் தோறும் செல்ல வேண்டும்,; என்றார். இன்று (ஜூன் 5) மாலை 5:00 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. வி.எச்.பி., அகில உலக பொதுச் செயலாளர் மிலிந்த் ப்ராண்டே பங்கேற்கிறார். தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவையின் சார்பில் மாநிலம் தழுவிய துறவியர் மாநாடு மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. துறவியர் மாநாட்டில் இந்து சமயத்தை வளர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரையில் 2 நாட்கள் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் இந்து சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கோவில்கள் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் செயல்படவேண்டும்: தமிழகத்தில் பிற மதத்தவரின் வழிபாட்டு தலங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன[4]. எனவே இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்[5]. மதமாற்றத்தடை சட்டம் நாடு விடுதலையடைந்தபோது இந்தியாவில் 93 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது இந்துக்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக குறைந்துள்ளது[6]. இதற்கு மதமாற்றம்தான் காரணம். எனவே இந்தியாவில் 7 மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது போல தமிழகத்திலும் மதமாற்றத்தடை சட்டம் கொண்டு வர வேண்டும்[7]. நதி யாத்திரை தமிழகத்தில் சமயக்கல்விக்கு முன்னுரிமை கொடுத்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் சமயக்கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள நதிகள் நீர்நிலைகளை மீட்டு நதி யாத்திரை நடத்த வேண்டும். இந்து மயானங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பசுக்களை இறைச்சிக்காக வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். நிதி ஆதாரமுள்ள கோவில்களில் கோசாலைகள் அமைத்து பசுக்களை பாதுகாக்க வேண்டும். கோவில் இடங்களை மீட்டு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

05-06-2022 பொதுகூட்டம் நடந்தது: பேட்டியின்போது விசுவ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் ஸ்ரீமிலிந்த் ப்ராண்டே, அகில உலக இணைப்பொதுச் செயலாளர் ஸ்ரீகோ.ஸ்தாணு மாலயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொதுக்கூட்டம் இதனைத் தொடர்ந்து மாலையில் பழங்காநத்தம் பகுதியில் பொதுக் கூட்டம் நடந்தது[8]. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை தாங்கி தீர்மானங்களை வாசித்தார்[9]. விசுவ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் ஸ்ரீமிலிந்த் ப்ராண்டே பேசுகையில், இந்துக்கள் அனைவரும் இந்து மதத்தை காக்க ஒன்றுசேர வேண்டும் அதுமட்டுமின்றி இந்துக்களை காப்போம் என சபதம் ஏற்க வேண்டும் என்றார். அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்ரீகோ. ஸ்தாணு மாலயன் பேசுகையில், மக்கள் விழித்தெழ வேண்டும். இந்துக்களை தவறாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசுகையில், ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள்[10]. அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? அவர்களுக்கு கோவில்களில் எந்த சம்பந்தமும் இல்லை.[11] இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்[12]. அரசியல்வாதிக்கள் வெளியேற வேண்டும்[13]. அறநிலையத்துறையை நீக்கிவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

© வேதபிரகாஷ்

06-06-2022


[1] திராவிடக் கட்சியினர் வேண்டுமென்றே அவ்வாறு செய்தனர். நிலகங்களை அபகரித்தனர். அரசு பத்திரப் பதிவு மற்றத் துறையினர் கூட்டுடன், வெவ்வேறு பெயர்களில் மாற்றி விற்கவும் செய்தனர். நீதிமன்ற தீர்ப்புகளே அவற்றை எடுத்துக் காட்டுகின்றன..

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பதுங்க முடியாது, ஜால்ரா அடிக்க முடியாது.. அதனாலதான் பிரதமரை பார்தேன்.. திமிறி எழும் மதுரை ஆதீனம்., Ezhilarasan Babu, Chennai, First Published Jun 4, 2022, 3:33 PM IST; Last Updated Jun 4, 2022, 3:33 PM IST

[3] https://tamil.asianetnews.com/politics/cant-sneak-in-jalra-can-t-hit-that-s-why-i-saw-the-prime-minister-madurai-aadeenam-who-rises-in-arrogance–rcy6ll

[4] தினமணி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க வேண்டும்: பேரூா் ஆதீனம், By DIN  |   Published On : 05th June 2022 10:59 PM  |   Last Updated : 06th June 2022 02:49 AM.

[5] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jun/05/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3856747.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, பெரும் அச்சுறுத்தலா இருக்கு! கட்டாய மதமாற்றத்தை தடுங்க! துறவிகள் மாநாட்டில் பேரூர் ஆதீனம் பரபரப்பு ,By Nantha Kumar R Updated: Sunday, June 5, 2022, 15:54 [IST]

[7] https://tamil.oneindia.com/news/madurai/action-should-be-taken-against-religious-convertion-says-perur-adheenam-in-madurai-conference-461010.html

[8] தினத்தந்தி, இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்,  Jun 6, 022 1:57 am

[9] https://www.dailythanthi.com/News/State/hindu-temples-should-be-freed-from-the-control-of-the-treasury-716082

[10] தினமணி, ஆதீனங்கள் அரசியல் பேசாமல் வேறு யார் பேசுவது? மதுரை ஆதீனம், By DIN  |   Published On : 05th June 2022 10:57 PM  |   Last Updated : 05th June 2022 10:57 PM.

[11] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jun/05/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3856741.html

[12] தினத்தந்தி, இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும், Jun 6, 1:57 am.

[13] https://www.dailythanthi.com/News/State/hindu-temples-should-be-freed-from-the-control-of-the-treasury-716082

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்தது (1)

ஜூன் 6, 2022

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்தது (1)

தமிழக மடாதிபதிகள் இந்து என்ற நிலையில் செயல்பட வேண்டும்: துறவியர் மாநாட்டில், ‘சைவர் இந்துக்கள் அல்லர்” என்று பிரகடனப் படுத்திக் கொண்டவர்களும் கலந்து கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது[1]. விசுவ ஹிந்து  பரிஷத் என்ற பேனரின் அமைப்பின் / கீழ் அவர்கள் குழுமியுள்ளனர், மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் அரசியல் நிர்ணய சானம் மற்றும் இருக்கின்ற சட்டங்களின் படியுள்ள வரையறைகள், நெறிமுறைகள் மீறி அறிக்கைகள் வெளியிடுதல், செயல்படுதல் மறுபடியும் அத்தகைய நிலையை மாற்றிக் கொள்ளுதல் முதலியன அவர்களின் முரண்பாட்டை காட்டுகிறது என்பதில்லாமல், உள்நோக்கம் என்ன, திட்டம் என்ன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆட்சி மாறியதும், அத்தகைய போக்கு காண்பிக்கப் படுகிறதா அல்லது இப்பொழுதைய அரசின் ஒற்றர்களாக வேலை செய்யும் நிலையில் உள்ளார்களா என்றும் நோக்க வேண்டியுள்ளது[2]. துறவியர் என்று சொல்லிக் கொள்வதனால், மடாதிபதிகளாக இருப்பதனால், காவி அணிந்து கொள்வதனால், அவர்கள் துறவியர் என்பதை விட நடந்து கொள்வதில் தான் அவர்களது துறவறம் மற்றும்  துறவியர் குணாதிசயங்கள் தீர்மானிக்கப் படும்.

திராவிடத்து அரசியல் மாறாது (1970-2022): இந்து அறநிலையைத் துறை அமைச்சரும் தினம்-தினம் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.  ஒருவருடத்தில் என்ன நடந்தது, அவர்களின் போக்கு என்ன என்பதனை அறிந்தாகி விட்டது. இவேரா-அண்ணா-கருணாநிதி அழி வந்தவர்கள், அவர்கள் வழியில் தான் ஆட்சி செய்வோன் என்ற பின், அவர்களிடம் , இந்துக்களுக்கு சாதகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக சேகர்பாபு, குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு கோவில்-கோவிலாக சுற்றி வருவார். துர்கா ஸ்டாலினும் தனது பாணியில் செய்து வருவார். யூ-டியூப்புகள், செய்திகள், புகைப் படங்கள் வந்து கொண்டே இருக்கும். கோவில் கொள்ளை, கோவில் நிலம் அபகரிப்பு, கிருத்துவர்-முஸ்லிம் ஆக்கிரமிப்பு-அபகரிப்பு எல்லாம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீதிமன்றங்களுக்கு சென்று முடக்கப் படும். முக்கால்வாசி விவகாரங்கள் கோவிலுள் உள்ளவர்களுக்கேத் தெரியாமல் இருக்கும், அதனால், பொது மக்கள் பற்றி கவலைப் பட வேண்டாம்.

04-06-2022 அன்று திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் அமைச்சர்: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு 04-06-2022 அன்று சென்றிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற அமைச்சர், ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து ஆதீன மடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அமைச்சர் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானம் திறந்து வைத்தனர். பின்னர் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஒரு பகுதியாக ஆதீன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அமைச்சர், அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். அங்கு ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆக, இத்தகைய மரியாதைகள் தொடரும், தொடர்ந்து கொண்டிருக்கும்….. கணக்கில் அமைச்சருக்கு மரியாதை கொடுத்த செலவு என்று எழுதுவார்களா, தணிக்கையாளர்களும் அதைப் பற்றி கேட்பார்களா?

ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்: தொடர்ந்து செய்தியாளர்களை ஆதீன மடாதிபதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சந்தித்தனர்[3]. அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது[4],  “சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும். அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை..”.

இந்து அறநிலையைத் துறை அமைச்சர் தொடர்ந்து பேசியது: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கடையூர் கோயில் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. இதுபோன்ற கோயில்களில் இந்து சமய அறநிலையத்தறை தலையிடவே தலையிடாது. பொது கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்,” என்று தெரிவித்தார். அதாவது, அத்தகைய போர்வைகளின் நுழைவுகள், தொந்தரவுகள், இடையூறுகள், இருந்து கொண்டே இருக்கும். இந்து அறநிலையச் சட்டம் இருக்கும் வரையில், அது தொடரத்தான் செய்யும். விபூதி-குங்குமம் கொடுக்கலாம்-பூசலாம், அவர்கள் கீழே கொட்டி விடுவார்கள் அல்லது அழித்து விடுவார்கள்.

04-06-2022ல் மதுரையில் துறவியர் மாநாடு துவங்கியது: விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,), அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் 2 நாட்கள் துறவியர் மாநாடு மதுரை பரவை ஆகாஷ் பேமிலி கிளப்பில் நேற்று துவங்கியது. விசேஷ ேஹாமங்கள், பூர்ணாஹூதி, கோபூஜை, கொடியேற்றம், துறவிகளுக்கு பாத பூஜை நடந்தது.சிறப்பு விருந்தினர்களை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் அறிமுகம் செய்தார். வரவேற்புக்குழு செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். ”வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுஉள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன். இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்,” என மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் மதுரை ஆதினம் பேசினார். வி.எச்.பி., அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன் பேசியதாவது: “பாரத தேசத்தில் புராண காலத்திலிருந்து தவத்தால் சமூகத்தை நல்வழிப்படுத்துபவர்கள் ரிஷிகள். தெய்வீக தமிழகமாக இருந்தது இன்று திசை மாறுகிறது. தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க உள்ளோம். அதற்கான வேலையைச் செய்ய வேண்டும். அப்பணியை சிவபெருமான் பாதம் பட்ட மண், பிட்டுக்கு மண் சுமந்த இடம், திருஞான சம்பந்தர் மதமாற்றத்தில் ஈடுபட்ட மதுரையிலிருந்து துவக்குகிறோம்,” என்றார்.

விபூதி அழிப்புபற்றி எடுத்துக் காட்டியது: மதுரை ஆதினம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி தலைமை வகித்து பேசியதாவது[5]: மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மசூதிகள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் கோயில்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இவற்றை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதியை பூச மாட்டோம் என்கின்றனர். கோவையில்  நடந்த செம்மொழி மாநாட்டில் ஒரு அமைச்சருக்கு விபூதி பூசப்பட்டது. அதை அவர் பின் அழித்துவிட்டார். இதைக் கேட்டால் என்னை சங்கி, மங்கி என்கின்றனர். நான் சங்கியும் இல்லை; மங்கியும் இல்லை. சமயத்திற்காக பாடுபடுகிறேன்[6]. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன்[7]. இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார்[8]. நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்.ஹிந்து கடவுள்களை சிலர் விமர்சிக்கின்றனர். மாற்று சமயம் பற்றி சினிமாவில் ஒரு காட்சி வந்தால் அதற்கு எதிராக உடனே எதிர்வினையாற்றுகின்றனர்.

© வேதபிரகாஷ்

06-06-2022


[1]  விவரங்களை . சைவ மாநாடுகள் நடந்தது, தீர்மானங்கள் போட்டது, சரவணனின் பேச்சுகள் முதலியன – என்னுடைய பிளாக்குகளில் பார்க்கலாம்.

[2]  விவரங்களை திராவிடத்து அரசியல்வாதிகள், திராவிடத்துவ வாதிகளுக்கு தெரிவிக்கப் படுவது………மிகச் சுலபம்…..

[3] புதிய.தலைமுறை, ஆதீன பாரம்பரியங்களில் இந்து அறநிலையத் துறை தலையிடாது’- அமைச்சர் தகவல், தமிழ்நாடு,    Jnivetha Published :05, Jun 2022 07:40 AM.

[4] https://www.puthiyathalaimurai.com/newsview/140664/Chidambaram-Natarajar-temple-is-not-planned-to-be-taken-over-by-the-charitable-department

[5] தினமலர், மதுரை ஆதினம் பாடிய தேவாரம் கேட்டு கண்ணீர்விட்ட பிரதமர் : மதுரை துறவியர் மாநாட்டில் தகவல், Added : ஜூன் 05, 2022  08:05

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3046149

[7] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரை ஆதீனம் பாடிய தேவாரம்.. மெய் மறந்து கேட்ட பிரதமர் மோடி.. கண்ணீர் விட்ட நெகிழ்ச்சி சம்பவம், By Vishnupriya R Published: Sunday, June 5, 2022, 10:48 [IST]

[8] https://tamil.oneindia.com/news/madurai/pm-narendra-modi-shed-tears-after-madurai-aathinam-sang-devaram-460979.html