Archive for the ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ Category

ஓரியூரில் இந்துக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏன் பிரச்சினையில் முடிகிறது – மாணிக்கவாசகருக்குத் தெரிந்தது, இப்பொழுதுள்ளவர்களுக்கு ஏன் தெரியவில்லை?

மே 30, 2016

ஓரியூரில் இந்துக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏன் பிரச்சினையில் முடிகிறதுமாணிக்கவாசகருக்குத் தெரிந்தது, இப்பொழுதுள்ளவர்களுக்கு ஏன் தெரியவில்லை?

ஓரியூர் விக்கிரங்கள் கைப்பற்றல் - 30_05_2016_மாற்றிய படம்கோயில் கட்டப் போவதாகத் தெரிவித்ததும், சிலைகள் கைப்பற்றலும்:  திருவாடானை தாலுகா, ஓரியூரில் இரு தரப்பினருக்கு பிரச்னைக்குரிய இடத்தில் ஒரு தரப்பினர் கோயில் கட்ட முற்பட்டதால், போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி சுவாமி சிலைகளை பறிமுதல் செய்தனர் என்று தினமணி கூறுகிறது.   ஓரியூரில் ஒரு தரப்பினர் கோயில் கட்ட முற்பட்டபோது, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தங்களுக்குச் சொந்தமான இடம் எனக் கூறி தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.   இந்நிலையில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், இடம் யாருக்குச் சொந்தம் என விசாரணை முடியும் வரை அந்த இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது[1]. அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்[2]. இதனிடையே, 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு தரப்பினர் அந்த இடத்தில் விநாயகர், லிங்கம், நந்தி, பீடம், அம்மன் உள்ளிட்ட சிலைகளுடன் கோயில் கட்டப் போவதாகத் தெரிவித்தனர்[3]. தகவலறிந்த திருவாடானை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையிலான போலீஸார், அவர்களிடமிருந்து சுவாமி சிலைகளைக் கைப்பற்றினர். பின்னர் அவற்றை, திருவாடானை துணை வட்டாட்சியர் முத்துக்குமார் வசம் ஒப்படைத்தனர்.  மேலும், இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[4].

Clooney, Oriyur, Church, Manicka vasakarபிரான்சிஸ் சேவிய குளூனி ஓரியூர் மீது கொண்ட முக்கியத்துவம்: அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் பிரான்சிஸ் சேவிய குளூனி என்ற கத்தோலிக்க பாதிரி தமிழகத்திற்கு அடிக்கடி வந்து போகிறார். முன்னர் ராபர்டோ டி நொபொலி விட்ட புருடாக்களை நம்பிக் கொண்டு, இந்த குளூனி, மதுரை காமாட்சியம்மன் கோவில், மைலாப்பூர், ஓரியூர், முதலியன முன்பு சர்ச்சுகளாக இருந்தன, ஆனால், இந்துக்கள்தாம் அவற்றைக் கோவில்களாக மாற்றிவிட்டனர் என்று எழுதிவைத்ததை நம்பி, இவரும் தமது ஆராய்ச்சியை தொடர்கிறார்! அந்த இடங்களையெல்லாம் மீட்க வேண்டும் என்றும் பலரையும் சந்தித்துத்து அதற்கான வேலைகளை செய்வதாக விஷயம் வெளிவந்தது. சென்னைக்கு, இந்த பாதிரி குளூனி வந்தபோது, இந்துக்கள் சந்தித்து, அவரது நிலையப் பற்றி விசாரித்தனர். குளூனியும் தனது நிலையை விட்டுக் கொடுக்காமல், அழுத்தமாகவே அவர்களுடன் பேசியுள்ளார். எது எப்படியாகிலும், கிருத்துவர்கள் இப்படி, பல நிலைகளில் இந்துக்களைத் தாக்கி வருகிறார்கள் என்பதனைக் கவனிக்க வேண்டும்.

Oriyur, seized idols by the policeவழக்கம் போல போலீஸார் விசாரணை: ஓரியூரில் கோவில் கட்ட ஊருணிக்கரையில் வைக்கப்பட்ட சாமி சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர் என்றும் திருவாடானை தாலுகா ஓரியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஊருணியின் தென்கரையில் சாமி சிலைகள் கிடப்பதாக எஸ்.பி.பட்டினம் போலீசாருக்கு அந்த ஊரைச்சேர்ந்த சிலர் தகவல் கொடுத்துள்ளனர் என்றும் இருவிதமாக செய்திகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் திருவாடானை தாசில்தார் சுகுமாறன், போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) அசோகன், சப்–இன்ஸ்பெக்டர் செய்யது முஸ்தபா உசேன், வருவாய் ஆய்வாளர் அழகப்பன், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஓரியூர் - பன்னிரு_திருமுறை_வரலாறு-8_முதல்_12_வரை

இடம் பிரச்சினையில் உள்ளது: அப்போது கோவில் கட்டுவதற்காக சாமி சிலைகளை அங்கு கொண்டுவந்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ஆனால் அந்த இடம் அரசுக்கு சொந்தமான மயான புறம்போக்கு மற்றும் வரத்துக்கால் புறம்போக்கு என்பதாலும் அந்த இடம் ஏற்கனவே பிரச்சினைக்குரிய இடமாக இருப்பதாலும் அந்த இடத்திற்குள் யாரும் நுழையக்கூடாது என்று ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டு இருந்தார். மேலும் அங்கு இருந்த சிவலிங்கம், அம்மன் சிலை, விநாயகர், சுப்பிரமணியர். நந்தி தேவர், சண்டிகேஸ்வரர் கற்சிலைகளையும் மற்றும் கல் பீடங்களையும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்[5]. அதன்பின்னர் அந்த சாமி சிலைகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆவண காப்பகத்தில் வைக்கப்பட்டுஉள்ளன. இதனால் ஓரியூரில் பதற்றம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதிக அளவில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

spt-rp-oriyur-sivagangaiபழமை வாய்ந்த சிவாலயம்[6]: இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் சிவ மகாலிங்கம் கூறியதாவது: “ஓரியூரில் பழமை வாய்ந்த சிவாலயம் இருந்துள்ளது. அந்த கோவில் கால ஓட்டத்தில் சிதைந்து மண்ணோடு மண்ணாகி விட்டது. திருஞானசம்பந்தர் பாடல் பாடிய ஸ்தலமாகவும், திருவாசக பாடல் பெற்றதும் 23–வது திருவிளையாடல் நடைபெற்ற இடமாகவும் ஓரியூர் திகழ்ந்து வருகிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஓரியூர் சிவகங்கை ஊருணி கரையில் கோவில் கட்ட சாமி சிலைகளை கொண்டுவந்து வைத்து இருந்தோம். ஆனால் காவல் துறையினர் அதனை எடுத்து சென்றுவிட்டனர்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணிக்கவாசகர் ஆதாரம்ஓரியூர் மாணிக்கவாசகர் பாடிய ஸ்தலமாக இருக்கிறது: மாணிக்கவாசகர் ஓரியூரில் சிவபெருமான் இருக்கிறார் என்று பாடியதால், அவர் காலத்தில் அங்கு ஒரு சிவன் கோவில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.

“வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னிற் கரந்த கள்ளமும்
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும்……………………………………………”

ஒரியூரில் உகந்து இனிது அருளி பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்” … கரைந்து உருகும் மாணிக்கவாசகர், அதாவது, “ஓரியூரில், இனிதாக எழுந்தருளி, பூமியில் பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய தன்மையும்,………………………….ஓரி யூரின் உவந்தினி தருளிப் – பாரிரும் பாலக னாகிய பரிசும் (தி.8 கீர்த்தி – 68-69) என்றுள்ளதால், அவ்வுண்மை உறுதியாகிறது. மாணிக்கவாசகர் கோகழி, கல்லாடம், வேலம்புத்துார். சாந்தம்புத்து உத்தரகோசமங்கை, பூவலம், பட்டமங்கை அரிகேசரி, ஓரியூர், பாண்டுர், கவைத்தலே, குவைப்பதி என்று குறிபிடுகின்றார். அவ்வாறு திருவாசகத்திற் குறிக்கப்படும் ஊர்களும் சில தல புராண வரலாறுகளும் தேவாரத் திருமுறைகளிற் காணப்படவில்லை. அதாவது காலப்போக்கில் மறந்திருக்கலாம், மறைந்திருக்கலாம்.

ஓரியூர் விக்கிரங்கள் கைப்பற்றல் - மாணிக்கவாசகர்2013ல் டந்த முயற்சி: இத்தகைய முயற்சிகளை முன்பும் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆகஸ்ட் 2013ல் திருவாடானை அருகே ஓரியூர் புறம்போக்கு இடத்தில் சிலர் விநாயகர் சிலையை வைத்து வணங்கினர்[7]. வி.ஏ.ஓ. கணேசன் புகாரின்படி எஸ்.பி.பட்டினம் போலீசார் விநாயகர் சிலையை கைபற்றி, சிலையை வைத்தவர்களை தேடிவருகின்றனர்[8]. அதாவது, அப்பொழுதும் யாரோ முயற்சி செய்துள்ளனர், ஆனால், விடப்பட்டது. மாணிக்கவாசகரின் ஆதாரம் இருக்கும் போது, முறைப்படி, இடத்தை வாங்கி, ஏன் கோவில் கட்டக் கூடாது என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

30-05-2016

[1]  தினகரன், பிரச்னைக்குரிய இடத்தில் கோயில் சிலைகளை கைப்பற்றிய போலீசார், பதிவு செய்த நேரம்:2016-05-30 10:48:45.

[2] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=577957&cat=504

[3] தினமணி, ஓரியூரில் பிரச்னைக்குரிய இடத்தில் கோயில் கட்ட முயற்சி: சிலைகள் பறிமுதல், By திருவாடானை, First Published : 30 May 2016 01:02 AM IST.

[4]http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2016/05/30/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87/article3457123.ece

[5] தினத்தந்தி, கோவில் கட்ட ஊருணிக்கரையில் வைக்கப்பட்ட சாமி சிலைகள் அதிகாரிகள் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , மே 30,2016, 4:30 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, மே 29,2016, 11:31 PM IST

[6] http://www.dailythanthi.com/News/Districts/Ramanathapuram/2016/05/29233132/Build-a-temple-in-urunikkaraiPlaced-idols–Authorities.vpf

[7] தினமலர், விநாயகர் சிலை பறிமுதல், ஆகஸ்ட்.5.2013.00.49

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=773803&Print=1