Posts Tagged ‘வயது’

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகம் நடத்தப் பட்டது – PTI-பாணியில் செய்தி வெளியீடு – விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை–சென்சார் செய்யப் பட்டது போலும்! (2)

மார்ச் 19, 2023

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகம் நடத்தப் பட்டது PTI-பாணியில் செய்தி வெளியீடு விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை சென்சார் செய்யப்பட்டது போலும்! (2)

ஹோமங்கள் நடந்தன, தானங்கள் கொடுக்கப் பட்டன: மகா சண்டிஹோம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நிறைவுற்று பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர், மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார்கள், புனிதநீர் கலசங்களை தலைகளில் தாங்கி, கோயிலை வலம் வந்து “கோயில் கருவூலத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு அபிசேக ஆராதனை செய்தனர்[1]. இந்த ஹோமத்தில் கலந்துகொண்ட உள்ளூர் பெண்களுக்கு, திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் உணவு பரிமாறி, புடவை, மாங்கல்ய பொருட்களை வழங்கினார்[2]. அதாவது முறைப்படி சுமங்கலிகளுக்கு தானம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர். வழங்கறிஞர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்பு கணவன் எந்த மந்திரங்களை பழித்துரைத்தானோ, அதே மந்திரங்கள் ஓதப் பட்டு சடங்குகள் நடந்தது-நடத்தப் பட்டது தான் ஸ்டாலின் விதியா, கடவுள் நிர்ணயித்ததா, காக்கா உட்கார பனம் பழம் விழுந்ததா என்பதையெல்லாம் கே. வீரமணி தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவர் ஆரம்பித்திருக்கும் திராவிட ஆராய்ச்சி மையமும் ஆராய்ச்சி செய்யலாம், மாநாடு-கருத்தரங்கம் நடத்தலாம்.

பீமரத சாந்தி என்றால் என்ன?: பீமரத சாந்தி, ஒருவருக்கு அதிபௌதீகம் (இயற்கை), அதிதைவீகம் (தெய்வங்கள்), அத்யாத்மீகம் (தன் செயல்கள்) ஆகியவைகளால் தனக்கு ஏற்படும் தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ளவும், 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் எனும் ருத்தரனை அமைதிப் படுத்தும் நோக்கில் பீமரத சாந்தி எனும் சடங்கு செய்யப்படுகிறது. “ஜனனாத்பரம் ப்ரதிவர்ஷே ஜன்ம மாஸே ஜன்மநக்ஷத்ரே ஆயுஷ்ய ஹுவனம் குர்யாத்” என்கிற வாக்கிற்கிணங்க, ஜன்ம நட்சத்திரம் வரும் ஒவ்வொரு வருஷமும் ஆயுள் விருத்திக்காகவும், மற்ற நற்பலன்களைப் பெறவும் ஆயுஷ்ஹோமம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவைகளை ஒவ்வொரு ஆண்டும் செய்ய இயலாவிடினும் மனிதன் தனக்கு “ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம்” என்னும் இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ கார்ய பலன் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் கண்டிப்பாக அவனது 59, 60, 61 மற்றும் 70 வது வயது துவக்கம், 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 வது ஆண்டு நிறைவு ஆகிய கால கட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு 60, 61 ஆம் ஆண்டு வரை ஆட்படுகிறான். அப்பொழுது ஈசனின் அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி உக்ர ரத சாந்தி என்கிற சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா எனப்படும்.

70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டுபீமரத சாந்திஎனும் சடங்கு செய்தல் வேண்டும்: 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டு ” பீமரத சாந்தி ” எனும் சடங்கு செய்தல் வேண்டும்.78 ஆம் ஆண்டின் துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு “விஜயரத சாந்தி” எனும் சடங்கு செய்ய வேண்டும். இதைச் செய்தாலே பூரண ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாத்திர கருத்து. அதன்பிறகு 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று “சகஸ்ர சந்திர தர்சன” சாந்தி செய்தல். அன்றே சிலர் சதாபிஷேகம் எனும் 108 ருத்ர காலபிஷேகம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது. எனினும் 100 வது ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் அன்று செய்யப்படும் சாந்தியே “சதாபிஷேக கனகாபிஷேகம்” என்று பெயர் பெற்ற சடங்காகும். இது “அஷ்டோத்ர சதருத்ர கலாபிஷேகம்” எனப்படும்.

01-03-2023- ஸ்டாலின் அரசியல் ரீதியில் பிறந்த நாள் விழா கொண்டாடியது: முன்னதாக அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கண்டார்[3]. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உள்ளிட்டோர் ஆங்காங்கு கேக் வெட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடினர்[4]. குறிப்பாக, இந்த பிறந்த நாள் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையில், மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலின் தனது கணவருக்கு 70 வயது பூர்த்தியடைந்த நிலையில், அவருக்காக யாகம் செய்து வழிபாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நாத்திகஆத்திக நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் சடங்குகள் ஏன்?:

  1. பீமரத சாந்தி என்றால் என்ன, அதன் அர்த்தம் என்ன, அது பெரியாரிஸ, அண்ணாயிஸ, திராவிட, திராவிடத்துவ மாடல்களில் வருமா?
  • 08-03-2023 அன்று திருக்கடையூரில் ஸ்டாலினுக்கு பீமரத சந்தி நடக்க, 06-03-2023 அன்று நாகர்கோவிலில் சனாதனத்தை எதிர்த்து ஸ்டாலினே பேசுகிறார்!
  • ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம் எனும் பாவ கார்ய தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ள நடத்தப் படும் யாகம் பலன் தருமா?
  • 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்ற ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்த, பீமரத சாந்தி  சடங்கு நடத்தப் படுகிறது!
  • சிவபெருமான் எமனிடமிருந்து மார்க்கண்டேயனை மீட்டு, அவனை சிரஞ்சீவியாக மாற்றினார் என்று புராணம் கூறுகிறது!
  • முன்னர் விவாக மந்திரங்களை தூஷித்துப் பேசியுள்ளார். செத்த பாடையை என்றும் மதித்ததில்லை. பிறகு அது பலன் கொடுக்குமோ?
  • விசுவாசத்துடன் பெண் / பதிவிரதை மாமனாருக்கு காசியில் பிண்டப் பிரதானம், பதிக்கு பீமரத சாந்தி என்றெல்லாம் செய்கிறார்!
  • வீட்டில் பூஜை அறையில் விக்கிரங்களை வைத்துக் கொண்டு, அதே செத்த பாடையில் சுலோகங்கள் சொல்லி பூஜைகளும் நடக்கின்றன!
  • இத்தகைய இந்துவிரோத-இந்து ஆதரவு, இந்துதுவேஷ-ஆஷா, பதி-சதி அல்லது சதி-பதி முரண்பாடுகளும் திராவிட மாடலா, ஸ்டாக்கில் வந்ததா?
  1. திக-திமுகவா, திமுக-அதிமுக இரட்டைக்குழலா, மனைவி-துணைவி சம்பிரதாயமா, பதி-சதி அல்லது சதி-பதி முரண்பாடா, போராட்டமா?
  1. இந்த திரைச்சீலை விலகட்டும், முகமூடி கிழியட்டும், போலித் தனங்கள் மறையட்டும், நாடக வேடங்கள் களையட்டும்!

© வேதபிரகாஷ்

09-03-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Durga Stalin Pooja: நீண்ட ஆயுள் வேண்டும்முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவருக்காக பீமரத சாந்தி யாகம்,By: எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை | Published at : 07 Mar 2023 03:42 PM (IST); Updated at : 07 Mar 2023 03:42 PM (IST);

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/durga-stalin-special-pooja-for-cm-mk-stalin-thirukadaiyur-amirthakadeswarar-temple-tnn-105329

[3] இடிவிபாரத், பீமரத சாந்தி யாகம்செய்த துர்கா ஸ்டாலின்!.. எதற்கு தெரியுமா?, Published on: Mar 7, 2023, 3:19 PM IST.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/worship-of-durga-stal-by-bhimaratha-shanti-yaga-at-thirukadaiyur-abirami-amman-temple-for-mk-stalin/tamil-nadu20230307151911597597558