Archive for the ‘ரியாஸ்’ Category

தமிழ் பேசி 40 ஆண்டுகளாக கோடிகள் கொடுக்கும் விக்கிரக திருட்டு வியாபாரம் செய்கிறான் காஷ்மீரத் துலுக்கன், இங்குள்ள தமிழனோ “இந்தி தெரியாது போடா” என்கிறான்!

ஜனவரி 13, 2022

தமிழ் பேசி 40 ஆண்டுகளாக கோடிகள் கொடுக்கும் விக்கிரக திருட்டு வியாபாரம் செய்கிறான் காஷ்மீரத் துலுக்கன், இங்குள்ள தமிழனோ “இந்தி தெரியாது போடா” என்கிறான்!

ஐந்து நட்சத்திர சொகுசு ரிசார்ட்டில் கோடிகள் கொடுக்கும் விக்கிரக திருட்டு வியாபாரம்: சென்னை அருகே மாமல்லபுரம் பகுதியில் “ஐடியல் பீச் ரெசார்ட்” / ஐடியல் கடற்கரை விருந்தினர் மாளிகை (Ideal Beach Resort Mahabalipuram[1]) உள்ளது[2]. இங்கு விலை மதிப்புள்ள பார்வதி சிலை ஒன்று வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் டிசம்பர் 2021ல் கிடைத்தது[3]. கோடிகளில் வியாபாரம் செய்யும் விக்கிரக-சிலை திருடர்களுக்கு ஐந்து நட்சத்திர ரிசார்ட் வாசம் புதியதல்ல. உடனே குறிப்பிட்ட விருந்தினர் மாளிகைக்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்[4].  சோதனையில் அந்தத் தொன்மையான பார்வதி சிலைக்கு பதிலாக, தனி அறை ஒன்றில் பெட்டிகளுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த 11 பழமையான உலோகச் சிலைகளை கண்டுபிடித்தனர்[5]. அதாவது சொகுசு ரிசார்ட்டில், ஆடம்பர அறைக்குள் அறை இருக்கும் முறையில், ரூம் எடுத்துத் தங்கியுள்ளான் அந்த சிலைத்திருடன். 11 சிலைகளையும் மீட்ட அதிகாரிகள், சட்டவிரோதமாக சிலைகளை பதுக்கி வைத்திருந்த காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஜாவித்ஷா என்பவரைப் பிடித்து விசாரித்தனர்[6]. மீட்கப்பட்ட சிலைகளை இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டதில், அதில் 8 சிலைகள் மிகவும் பழமையானவை எனத் தெரியவந்தது[7].

கிடைத்த 11-சிலைவிக்கிரங்களின் விவரம்: எனினும் வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த பார்வதி சிலை கிடைக்காததால், போலீஸார் ஜாவித்ஷாவிடம், ‘தாங்கள் தேடி வந்தது பார்வதி சிலையை மட்டும்தான். அதை ஒப்படைத்தால் பிடிபட்ட மற்ற சிலைகளை திருப்பிக் கொடுத்து விடுவதாககதை சொல்லி வலைவிரித்தனர்.

  1. மிகவும் தொன்மை வாய்ந்த பார்வதி சிலை,
  2. கிருஷ்ணர் – வேணுகோபாலன்.
  3. அம்மன் – இரண்டு கைகள் – ஒன்று மேல், இன்னொன்று கீழ் (ஆயுதம்)
  4. அம்மன் – இரண்டு கைகள்– ஒன்று மேல், இன்னொன்று கீழ்
  5. அம்மன் – வேறு.
  6. அம்மன் – இன்னொன்று
  7. நடராஜர்
  8. நர்த்தன விநாயகர் சிலை,
  9. சிவன் சிலை,
  10. சிவன் சிலை – நான்கு கைகளுடன்
  11. சிவன் சிலை காலைத்தூக்கியபடி உள்ளது.
  12. பத்து தலை ராவணன் சிலை

இவையெல்லாமே புராதன, உலோக சிலைகள் ஆகும்.

40 ஆண்டுகளாக மஹாபலிபுரத்தில் சிலை வியாபாரம் செய்யும் ஜாவித் ஷா: அந்த சிலைகளை போலீசார் கைப்பற்றினார்கள்[8]. அவற்றை அங்கு பதுக்கி வைத்திருந்த ‘ஐடியல் பீச் ரிசார்ட்’ என்ற பண்ணை வீட்டில், ‘இந்தியன் காட்டேஜ் இண்டஸ்ட்ரீயஸ்’ என்ற நிறுவனம் சார்பில், கண்காட்சி கூடம் நடத்தி வந்த, காஷ்மீரை சேர்ந்த, ஜாவித்ஷா என்பவரை போலீசார் பிடித்தனர்[9]. அவரிடம் போலீசார் நைசாக பேச்சு கொடுத்தனர். ஜாவித் ஷா, தஞ்சாவூரில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில், கலை பொருட்கள் கண்காட்சி நடத்தி உள்ளார். நாங்கள் தேடிவந்த தொன்மையான பார்வதி சிலை எங்கே என்றும், அந்த சிலையை கொடுத்தால், தற்போது கைப்பற்றிய 11 சிலைகளையும் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம், என்றும் போலீசார் தெரிவித்தனர். “ஹிந்தி தெரியாது போடாஎன்று எங்கு கலாட்டா செய்கிறான் தமிழன். ஆனால், இவனோ தமிழ் பேசி விக்கிரங்களைத் திருடி விற்றுள்ளான்!

பார்வதி சிலை தோண்டி எடுப்பு: 11 சிலைகளும் திருப்பி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பார்வதி சிலையை தோண்டி எடுத்து ஜாவித்ஷா போலீசாரிடம் ஒப்படைத்தார். மிகவும் பழமையான அந்த பார்வதி சிலை உள்பட போலீசார் கைப்பற்றிய இதர 11 சிலைகளையும் வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல ஜாவித்ஷா திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது[10]. பார்வதி சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஜாவித்ஷா காஷ்மீரை சேர்ந்தவர்[11]. அவரது சகோதரர் ரியாஸ் தொன்மையான சிலைகளை தமிழகத்தில் இருந்து கடத்திச்சென்று வெளிநாடுகளில் விற்பனை செய்யும் தொழில் செய்பவர். அடேங்கப்பா, தொழில் என்று வேறு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. சகோதரர் காட்டிய வழியில் ஜாவித்ஷாவும் சிலை கடத்தல் தொழிலை வெற்றிகரமாக செய்து வந்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் சிலைகளை விற்பனை செய்யும் கடை ஒன்றை ஜாவித்ஷா நடத்தி வந்துள்ளார். கொரோனா காலத்தில் அந்த கடையை நடத்த முடியாமல் மூடிவிட்டார். ஜாவித்ஷா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது சகோதரர் ரியாசை தேடி வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

11-ம் நூற்றாண்டு சிலைகள்: சிலைகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-“கைப்பற்றப்பட்ட 12 சிலைகளில் 8 சிலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தவை என்று தொல்லியல் துறை மூலம் தெரிய வந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.30 முதல் ரூ.40 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 11-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். மீட்கப்பட்டுள்ள இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பது பற்றி விசாரித்து வருகிறோம்”. சோழர்காலத்து சரித்திர சின்னங்கள், ஆதாரங்கள் கொள்ளை போகின்றன என்று எந்த தமிழனுக்கும் சூடு, சொரணை……..இருப்பதாகத் தெரியவில்லை. தமிழன்களின் உதவி இல்லாமல், அத்துலுக்கனும் 40 ஆண்டுகளாக, இந்த வியாபாரம் செய்ய முடியாது. பிறகு திராவிடத்துவ கோவில்-விரோத ஆட்சியில், விக்கிரங்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்?

ராவணன் சிலை: இத்தனை சிலைகளில் அத்தனைபேரின் கவனத்தையும் ஈர்த்தது பத்து தலை ராவணன் சிலைதான்[12]. இதுவரை பல்வேறு வடிவிலான பழங்கால சிலைகளை மீட்டெடுத்திருக்கும் அதிகாரிகள், பத்து தலை ராவணன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்கின்றனர்[13]. ராவணன் சிலை தொன்மை வாய்ந்தது மட்டுமல்ல, இதன் வடிவமைப்பும் அதி சிறப்புமிக்கது என்கிறார்கள் தொல்லியல் துறை நிபுணர்கள்.அப்படி என்ன அந்த சிலைக்கு சிறப்பு எனத் தோன்றலாம். ராவணனின் பத்து தலைகள் கொண்ட உருவம் செதுக்கப்பட்டிருக்க, அதற்கு பின்னால், சீதை துயில் கொண்டிருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. “இந்த சிலைகளில் மிகவும் அரிதானது ராவணன் சிலை ஆகும். இந்தியாவில் மராட்டிய மாநிலம் உள்பட 5 மாநிலங்களில்தான் ராவணனுக்கு கோவில் உள்ளது. அந்த கோவில்களில் ஏதாவது ஒன்றில் இந்த ராவணன் சிலை திருடப்பட்டதா, அல்லது இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டதா, என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். கைப்பற்றப்பட்ட இந்த சிலைகள் கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதாவது, ராவணன் சிலைப் பற்றிய ஆராய்ச்சி முக்கியமாகி விட்டது. விக்கிரத் திருட்டு பற்றி கவலைப் பட்டார்களா என்று தெரியவில்லை.

ஹிந்தி தெரியாது போடா என்கின்ற தமிழக தமிழனும், தமிழில் பேசி 40 ஆண்டுகளாக வியாபாரம் செய்த துலுக்கனும்:

  • தமிழுக்கு மூச்சை விடுவேன்……….
  • தமிழுக்கு உயிரை விடுவேன்……………………
  • தமிழுக்கு இதை விடுவேன்……………………
  • தமிழுக்கு அதை விடுவேன்……………………
  • தமிழுக்கு எல்லாம் ……..விடுவேன்……………………
  • ராஜராஜ சோழனைத் திட்டுவேன்……………
  • ராஜேந்திர சோழனை தூஷிப்பேன்………….
  • ஹிந்தி தெரியாது போடா என்பேன்…..

ஆனால், காஷ்மீரத்திலிருந்து ஒரு துலுக்கன் மஹாபலிபுரத்தில் கடை வைக்கிறான்.

சோழர் கால விக்கிரங்களைத் திருடுகிறான்….. விற்பதற்கு தயாராக இருக்கிறான்……வைத்திருக்கிறான்….. எத்தனை தமிழர்கள் எதை விட்டார்களோ? தெரியவில்லை!

© வேதபிரகாஷ்

13-01-2022.


[1]  ஒரு நாளைக்கு பல்லாயிரங்கள் கொடுத்துத் தங்கக் கூடிய எல்லா வசதிகளும் கொண்ட, உல்லாச-சொகுசு ரிராட் – https://www.idealresort.com/mahabalipuram

[2] தினத்தந்தி, மாமல்லபுரம் பகுதியில் அதிரடி சோதனை ரூ.40 கோடி பழங்கால சிலைகள் பறிமுதல் , பதிவு: ஜனவரி 12,  2022 05:54 AM.

[3] https://www.dailythanthi.com/News/State/2022/01/12055429/Rs-40-crore-antiquities-seized-in-Mamallapuram.vpf

[4] பாலிமர் நியூஸ், தனியார் சொகுசு ரிசார்ட்டில் இருந்து அரியவகை இராவணன் சிலை உட்பட ரூ.40 கோடி மதிப்பிலான்ன சிலைகள் மீட்பு, ஜனவரி 11, 2022 09:37:13 PM. https://www.polimernews.com/dnews/166698

[5] https://www.polimernews.com/dnews/166698

[6] காமதேனு, ரூ.40 கோடி மதிப்புள்ள தொன்மையான 12 சிலைகள் மீட்பு, ரஜினி, Updated on : 11 Jan, 2022, 5:50 pm.

[7] https://kamadenu.hindutamil.in/crime-corner/recovery-of-12-ancient-idols-worth-rs-40-crore

[8] தினமலர், பண்ணை வீட்டில் பஞ்சலோக சிலைகள் : பதுக்கிய காஷ்மீர் மாநில ஆசாமி கைது,  Added : ஜன 12, 2022  01:37.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2935482

[10] நக்கீரன், ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்ட சிலைகள் கண்டுபிடிப்பு!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 11/01/2022 (20:05) | Edited on 11/01/2022 (20:09).

[11] https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/discover-hidden-idols-secret-room

[12] தமிழ்.நியூஸ்.18, மகாபலிபுரத்தில் மீட்கப்பட்ட பத்து தலை ராவணன் சிலைக்கு பின் இருக்கும் ஆச்சரியம், NEWS18 TAMIL, LAST UPDATED : JANUARY 12, 2022, 12:21 IST.

[13] https://tamil.news18.com/news/tamil-nadu/10-head-ravana-statue-recovered-in-mahabalipuram-vjr-663775.html