Archive for the ‘காஜூ கட்லீ’ Category

திராவிட ஸ்டாக்குகள் செய்யும் தீபாவளி தூஷணமும், திடாவிட மாடல் தீபாவளி இனிப்பு வியாபாரமும்!

ஒக்ரோபர் 8, 2023

திராவிட ஸ்டாக்குகள் செய்யும் தீபாவளி தூஷணமும், திடாவிட மாடல் தீபாவளி இனிப்பு வியாபாரமும்!

திராவிடத்துவ வாதிகளின் முரண்பட்ட நிலை: பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலை மற்றும் சிறந்த தரத்தோடு வழங்கிவரும் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் தனது பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தரமான முறையில் உற்பத்தி செய்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. கடந்த இரு வருடங்களாக “தீபாவளி இனிப்பு” என்று அறிவிப்பு விளம்பரம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம், தீபாவளிக்கு எதிராக மிக மோசமான விமர்சனம், திராவிட ஸ்டாக்குகளின் வெறுப்புப் பிரச்சாரம், திராவிடத்துவ தூஷணம் என்றெல்லாம் தொடர்ந்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் இத்தகைய ஆவினின் வியாபாரத்தை ஊக்குவிக்கிறார்கள்.

இந்தி பெயர்களில் திராவிடத்துவ விற்பனை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் சிறந்த தரத்துடன் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது[1]. 500 கிராம் எடை கொண்ட காஜூ கட்லீ, நட்ஸ் அல்வா, மோத்தி பாக், காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா  அடங்கிய சிறப்பு இனிப்பு தொகுப்பு ரூ. 500-க்கு விற்பனை செய்யப்படுகிறது[2]. இப்படி எல்லாமே இந்தி பெயர்களை வைத்து வியாபாரம் செய்வதும், முரணாக உள்ளது. இந்தி எதிர்ப்பு, இந்து பேசும்மக்களின் மீது வெறுப்பு, வடவிந்தியரை கேவலமாக மதிக்கும் போக்கு என்றெல்லாம் வளர்த்து வெறுப்பு அரசியல் நடத்தி வரும் நிலையில் இத்தகைய விளம்பரமே வேடிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்[3], “பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலை மற்றும் சிறந்த தரத்தோடு வழங்கிவரும் ஆவின் நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது[4]. ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தரமாக தயார் செய்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது[5].

2022 ஆம் ஆண்டு  தீபாவளி ஆவின் இனிப்பு வகைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது: இப்படி குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பொழுது, 2022ல் தான் தீபாவளி ஞாபகம் வந்ததா? இதிலிருந்தே, நாத்திக, பெரியாரிஸ இந்துவிரோத திராவிட ஸ்டாக்குகள் ஏதோ திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது., ஆவின் குறிப்பு தொடர்கிறது,இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட ஆவின் இனிப்பு வகைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து[6], தீபாவளி 2023 பண்டிகைக்கும் கீழ்க்கண்ட தரமான சிறப்பு இனிப்பு வகைகள் எவ்வித விலை மாற்றமும் இன்றி பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது[7].

1) காஜூ கட்லீ  (250 கி)                 –ரூ.260.00

2) நட்ஸ் அல்வா (250 கி)               –ரூ.190.00

3) மோத்தி பாக் (250 கி)              –ரூ.180.00

4) காஜு பிஸ்தா ரோல்(250 கி)   –ரூ.320.00

5) நெய் பாதுஷா (250 கி)               –ரூ.190.00

மேற்கண்ட 5 வகையான  இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (Combo Box) 500 கிராம்ரூ.450.00 விலையில் ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்[8].

இனிப்புகள் முழுவதும் நெய்யினால் தயாரிக்கப் பட்டது என்பது உண்மையா?:ஆவின் இனிப்பு வகைகள் அனைத்தும் அக்மார்க் தரம் பெற்ற ஆவின் நெய்யினால், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இனிப்புகளாகும்[9]. [முழுவதும் நெய்யினால் தயாரிக்கப் பட்டது என்பது உண்மையா என்று கவனிக்க வேண்டும்] மேற்படி இனிப்பு வகைகள் அனைத்தும் வருகின்ற 10.10.2023 முதல் அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக கிடைக்கப்பெறும்[10]. பொதுமக்களுக்கு தேவைப்படும் இனிப்பு வகைகள் ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பெற்று பயன்பெறலாம். மேலும் சிறு குறு நிறுவனங்கள், தனியார் பெரு நிறுவனங்கள், அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகள் கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்குதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், 6வது தளம், விற்பனைப் பிரிவு, கூட்டாண்மை அலுவலகம், நந்தனம், சென்னை – 35, தொலைபேசி எண்.   9444915453/ 7358018394 / 7358018392 / 7358018390”.

தீபாவளி என்பது ஆயிரக்கணக்கான கோடிகள் புழலும் மிகப்பெரிய வியாபாரம் ஆகும்: நவராத்திரி-தீபாவளி முன்னர் தான், ”அமேசான்” போன்றவை தள்ளுபடி, சலுகை என்றெல்லாம் அதிரடி விளம்பரங்கள் கொடுக்கின்றன. 1980களிலிருந்தே தீபாவளிக்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பித்தாலும், அது வியாபார ரீதியிலானது என்று பலர் புரிந்து கொண்டதில்லை, கொள்வதில்லை. இந்துமதப் பண்டிகை என்ற ரீதியில், அது சம்பிரதாயப் படி, முறையாக, சடங்குகளுடன் நடைப் பெற்று வருகிறது. இப்பொழுது ஆவின் தீபாவளி இனிப்பு விற்பனை என்று ஆரம்பித்துள்ளது.  ஒரு கிலோ இனிப்பு ரூ 800/- முதல் ரூ 1,200/- வரை இருப்பதாகத் தெரிகிறது. இங்கும், வீட்டில் தயாரிக்கும் இனிப்புகள் யாரோ இவ்வாறு தயாரித்து, விற்பனையில் ஈடுபடுவதும்,லட்சங்களில் கோடிகளில் லாபங்களை ஈட்டுவதையும் கவனிக்கலாம்..ஆனால், அவை விற்கப் படும் பெட்டிகளில் “தீபாவளி” என்று குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. அதாவது, தீபாவளி என்று செய்தி வெளியிட்டு, இந்துக்களை ஏமாற்றி விற்கப் பார்க்கிறது. வெறும் “பண்டிகை” என்று தான் உள்ளது.  தீபாவளிக்கு எதிரான பிரச்சாரம் சித்தாந்த ரீதியிலும் நடந்து வருகிறது. திராவிடத்துவ, பெரியாரிஸ, நாத்திக, இந்துவிரோத சக்திகள், தீபாவளி ஆரியர் / வடநாட்டவர் பண்டிகை, தமிழருக்கு / திராவிட்ர்களுக்கு சம்பந்தம் இல்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மாசு ஏற்படுகின்றது என்ற ரீதியில் வழக்குகள் போட்டு, இப்பொழுது பட்டாசு வெடிப்பது கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. இருப்பினும் வியாபாரம் கோடிகளில் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

கவனிக்க வேண்டிய விசயங்கள்:

  1. இந்துக்கள் / இந்து குடும்பங்கள் ஒழுங்காக இருந்தால், தீபாவளிக்கு பக்ஷணங்கள்  இனிப்புகள் வெளியில் வாங்க வேண்டிய  அவசியம் வருமா?
  • கோடிக்கணக்கில் நடக்கும் தீபாவளி பண்டிகை வியாபாரங்களில், இந்துவிரோதிகளுக்கு எதற்கு லாபங்கள் செல்ல வேண்டும்?
  • வீட்டில் தயாரித்தால் ஒரு கிலோ காரம் / ஸ்வீட் ரூ 300/- முதல் 500/- ஆகிறது, பிறகு அதை ரூ 800/- முதல் ரூ 1,200/- வரை கொடுத்து வாங்குவானேன்?
  • ஒரு பக்கம் பெரியாரிஸ-நாத்திக தீபாவளி தூஷணம், இன்னொரு பக்கம் திராவிட ஸ்டாக்- தீராவிடமாடல் தீபாவளி பக்ஷண வியாபாரம், தேவையா?
  • அத்தகைய ஸ்வீட்டுகளை வாங்கிக் கொடுப்பதும், தின்பதும் நல்லதா? நல்ல மனம்-எண்ணம்-இல்லாத கைகளில் இனிப்பு முறையாக வருமா?
  • காஜூ கட்லீ, நட்ஸ் அல்வா, மோத்தி பாக், காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா  இதெல்லாம் சங்கத் தமிழா, வெங்காயத் தமிழா, அண்ணன் – தம்பி இரவில் பேசும் பாடையா?
  • ஆவின் இனிப்பு வகைகள் அனைத்தும் அக்மார்க் தரம் பெற்ற ஆவின் நெய்யினால், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இனிப்புகளாகும்!
  • குறிப்பிட்ட இனிப்புகள் உண்மையிலேயே அவ்வாறு நெய்யினால் தயாரிப்பார்களா? 50 வருடங்களாக கவனிக்கும் எனக்குத் தெரியவில்லை?
  • இதே முறைதான் கோவில்கள் நிர்வாகத்திலும் ஊடுருவியுள்ளது; இந்துக்கள் இதை/அதைச் செய்யக்கூடாது போன்ற ஆணைகள்!
  1. ஆக, விற்பனையில் ஈடுபடுகிறவர்கள் எல்லோருமே திராவிட ஸ்டாக்குகள், திராவிட மாடல், பெரியாரிஸ தூஷணவாதிகள் என்றிருப்பார்கள் போலிருக்கிறது!

© வேதபிரகாஷ்

08-19-2023


[1] தினமணி, தீபாவளி: ஆவினில் ரூ. 450-க்கு சிறப்பு இனிப்புத் தொகுப்பு விற்பனை, By DIN  |   Published On : 06th October 2023 06:16 PM  |   Last Updated : 06th October 2023 06:16 PM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/oct/06/diwali-special-sweets-sale-by-aavin-4084556.html

[3] சமயம், ஆவின் தீபாவளி சிறப்பு விற்பனை.. கம்மி விலையில் சுவை மிகுந்த இனிப்புகள்!, Authored By செந்தில் குமார் | Samayam Tamil | Updated: 6 Oct 2023, 4:37 pm

[4] https://tamil.samayam.com/business/business-news/on-the-occasion-of-diwali-festival-aavin-sells-special-sweets-with-low-price/articleshow/104214989.cms

[5] தமிழ்.வெப்.துனியா, ரூ.450-க்கு சிறப்பு இனிப்பு தொகுப்பு: தீபாவளியை முன்னிட்டு ஆவின் அறிவிப்பு, Written By Mahendran Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (18:20 IST).

[6] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/aavin-announcement-of-diwali-special-sweets-123100600069_1.html

[7] தமிழ்.இந்து,  தீபாவளியை முன்னிட்டு ரூ.450-க்கு சிறப்பு இனிப்பு தொகுப்பு: ஆவின் அறிவிப்பு, செய்திப்பிரிவு, Published : 06 Oct 2023 04:44 PM; Last Updated : 06 Oct 2023 04:44 PM

[8] https://www.hindutamil.in/news/business/1134478-special-sweets-package-for-rs-450-on-the-occasion-of-diwali-aavin.html

[9] ஈ.டிவி.பாரத், ரூ.450-க்கு 5 வகையான இனிப்புகள்.. ஆவின் கொடுக்கும் தீபாவளி கிப்ட் பேக்!, Published: Oct 6, 2023, 6:10 PM.

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/aavin-announces-sale-of-sweets-for-ayudha-puja-and-diwali/tamil-nadu20231006181019648648696