Posts Tagged ‘அன்னதானம்’

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் மற்றும் பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்த கட்டிடம் இடிப்பு – தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவில்லை!

மார்ச் 19, 2023

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் மற்றும் பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்த கட்டிடம் இடிப்பு – தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவில்லை!

அம்மணி அம்மன் மடம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம்(அம்மணி அம்மன்) பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி அந்த கோபுரத்தினைக் கட்டி முடித்தவர் பெண் சித்தரான அம்மணி அம்மாள். 17ம் நூற்றாண்டு இறுதியில் அவர் ஜீவ சமாதி அடைந்தார். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணி அம்மாள் கட்டியதால் அம்மணி அம்மன் கோபுரம் என அழைக்கப்பட்டு வரும் வடக்கு கோபுரம் எதிரில் அவர் வாழ்ந்த மடம் உள்ளது. இதில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் எதிரில் இக்கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடம் உள்ளது. 17ம் நூற்றாண்டிற்குப் பிறகு, அவ்விடத்தை பலர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. திருவண்ணாமலை கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் பல இவ்வாறுதான் ஆக்கிரமிப்புகளில் உள்ளன, இந்த இடம் ஆக்கிரமிப்பில் சென்றதால், 1978ல் முதன்முதலாக விஸ்வ ஹிந்து பரிஷத் கோர்ட்டுல் வழக்கு தொடர்ந்தது. 2015ல் கே. ஆர். குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த 37 வருடங்களில் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பொதுவாக, இங்கு முன்பு பிச்சாண்டி, இப்பொழுது ஏ.வ. வேலு அவர்களின் ஆதிக்கம் தான் உள்ளது. சுற்றியுள்ள படங்கள் ஒவ்வொன்றாக கடை வளாகம், லாட்ஜ் என்று மாறிக் கொண்டிருக்கின்றன.

பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்துக் கொண்டது: இந்த அம்மணி அம்மன் மடத்தை திருவண்ணாமலையை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் / ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடு கட்டியும், மடத்தின் முன்பு கார் நிறுத்தும் ஷெட்டும் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது[1]. அப்படியென்றால், பிஜேபி கட்சிக்குள் முரண்பாடு உள்ளது தெரிகிறது. அதிகாரம், அந்தஸ்து, பணம் என்று வந்துவிட்டால், அரசியல்வாதி இப்படித்தான் இருப்பான் போலிருக்கிறது. இதன் மதிப்பு சுமார். ரூ.50 கோடி இருக்கும் என்று தெரிகிறது. ரூ.30 கோடி என்று தினகரன் குறிப்பிடுகிறது. கோவிலுக்கு சொந்தமான அந்த மடத்தை அவரிடம் இருந்து மீட்க அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் 2015ல் வழக்கு தொடரப்பட்டது[2]. வழக்கினை விசாரித்த திருவண்ணாமலை சார்பு நீதிமன்றம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இப்பொழுது திமுக அரசு இருப்பதனால், அவர்களுக்கு லட்டு தின்கின்ற கதை தான். அதனால், உடனடியாக இடிக்க கிளம்பிவிட்டதில் எந்த வியப்பும் இல்லை.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: இதையடுத்து நேற்று 18-03-2023 காலை வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். அவர்கள் அங்சு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றதால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நேற்று 18-03-2023 காலை முதல் மதியம் வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அம்மணி அம்மன் கோபுரத் தெருவிற்குள் யாரும் செல்லாதவாறு போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் கோவில் பணியாளர்கள் அம்மணி அம்மன் மடத்தில் இருந்த அறைகளை காலி செய்து மூடி ‘சீல்’ வைத்தனர்[3]. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கோயிலுக்கு அருகில் உள்ள  மடத்துக்குள் 25க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்கள் இருந்ததால், அவற்றை போலீசார் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றினர்[4]. இவற்றையெல்லாம் யார் வைத்திருந்தனர் என்று தெரிவிக்கப் பட்வில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், கோயில் இணை ஆணையர் குமரேசன், ஆர்டிஓ மந்தாகினி மற்றும் நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அம்மணி அம்மன் மடம் இடிப்பு: தொடர்ந்து மாலை 4 மணியளவில் திடீரென கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அம்மணி அம்மன் மடமும் இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது[5]. இது ஆணையில் இல்லை என்றாலும், அவ்வாறு செய்யப் பட்டது[6], ஏதோ உள்நோக்கத்தைக் காட்டுகிறது. இதையடுத்து அந்த முகப்பு பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது[7]. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆன்மிகவாதிகள் இந்து அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்[8]. அதனை தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது மடம் பாதி இடிக்கப்பட்டு காணப்பட்டு உள்ளது[9]. இதையடுத்து அவர்கள் இடிக்கப்பட்ட மடத்தின் அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் நிர்வாக அலுவலர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது[10]. சேகர்பாபுவைப் பொறுத்த வரையில், இதை பெரிய பிரச்சினையாகக் காட்டி, 30 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்டேன் என்று பிரகடனப் படுத்திக் கொள்வார்.

பொக்லைன் எந்திரங்கள் அகற்றம்: தொடர்ந்து அந்த இடத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கிருந்து பொக்லைன் எந்திரங்கள் அகற்றப்பட்டது. இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், ”கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் பழமையான மடத்தை அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இடித்து உள்ளனர். இதனை இடிப்பதற்கான என்ன. காரணம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனை கண்டித்து அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும் என்றனர். இன்று என்ன நடந்தது என்பதை இனி மேல் தான் கவனிக்க வேண்டும். பழங்கால கட்டிடங்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்று இந்திய தொல்துறை சட்டங்களே கூறுகின்றன, ஆனால், அத்துறை இதில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் வியப்பாகத் தான் இருக்கிறது. தொல்லியல் படித்த, படிக்கும், இவ்விவரங்கள் அறிந்த அம்ர்நாத் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், மற்ற வல்லுனர்களும் இதனைக் கண்டிக்கவில்லை. இதையும் திராவிட மாடல் எனலாம் போலும்!

© வேதபிரகாஷ்

19-03-2023


[1] தினத்தந்தி, அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் மடமும் இடிக்கப்பட்டதால் இந்து அமைப்பினர் போராட்டம், PreviousNext, தினத்தந்தி, மார்ச் 18, 4:55 pm (Updated: மார்ச் 18, 10:24 pm).

[2] https://www.dailythanthi.com/News/State/ammani-amman-mutt-removal-of-encroaching-buildings-caused-by-police-presence-922383

[3] தினகரன், அண்ணாமலையார் கோயில் இடத்தில் பாஜ மாநில நிர்வாகி ஆக்கிரமித்து கட்டிய அடுக்குமாடி கட்டிடம் இடிப்பு: ரூ.30 கோடி மதிப்பு நிலம் மீட்பு, 2023-03-19@ 00:26:09; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=848946

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=848946

[5] சமயம்.காம், கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகர்திருவண்ணாமலையில் சுமார் 23800 சதுர அடி நிலம் மீட்பு, Curated by Mohammed Ghowse | Samayam Tamil | Updated: 18 Mar 2023, 12:25 pm

[6] https://tamil.samayam.com/latest-news/vellore/thiruvannamalai-annamalaiyar-occupied-temple-land-retrieval-from-bjp-member/articleshow/98750432.cms

[7] இ.டிவி.பாரத், அண்ணாமலையார் நிலத்தை சுருட்டிய பாஜக பிரமுகர்.. 23,800 சதுர அடி ஆக்கிரமிப்பு அகற்றம்., Published on: 18-03-2023, 13 hours ago / 8.00 pm

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/encroachment-removal-in-thiruvannamalai-ammani-amman-madam/tamil-nadu20230318192915328328069

[9] அக்னி முரசு, அம்மணி அம்மாள் வாழ்ந்த மடம் இடிப்பு, March 18, 2023.

[10] https://www.agnimurasu.com/2023/03/demolition-of-the-monastery-where-ammani-ammal-lived.html?amp=1

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (1)

மே 8, 2015

ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை –  “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (1)

நெரூர் - 2015 - சாப்படு தயார் 28-04-2015

நெரூர் – 2015 – சாப்படு தயார் 28-04-2015

கரூர் அருகே நெரூர் கிராமத்தில் நடந்த பிரம்மேந்திராள் கோவில் ஆராதனை விழாவில் பக்தர்கள், எச்சில் இலைகள் மீது படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பக்தர்களுடன், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா முதலிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் வில்வமரத்தின் கீழே அமைந்துள்ளது ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் ஜீவசமாதி[1]. சதாசிவ பிரம்மேந்திராள் சபா சார்பில் ஆண்டுதோறும் சதாசிவரின் ஆராதனை விழா நடத்தப்படுகிறது, என்று செய்திகளை வழக்கம் போல தமிழ் நாளிதழ்கள் வெளியிட்டன.

நெரூர் - 2015 - சதுர் வேத சம்ஹிதா ஹோமம்

நெரூர் – 2015 – சதுர் வேத சம்ஹிதா ஹோமம்

ஆராதனைக்கு முன்பாக நான்கு வேத சம்ஹிதா ஹோமங்கள் நடந்து முடிந்தது: நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், ஆராதனைக்கு முன்பாக உலக நன்மைக்காக, சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது[2]. கரூர் மாவட்டம், நெரூரில் புகழ்பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இங்கு, உலக நன்மைக்காக, மார்ச், 25ம் தேதி முதல் சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.

  • மார்ச், 25ம் தேதி முதல், 31ம் தேதி வரை ரிக் வேத ஸம்ஹிதா ஹோமம்,
  • ஏப்ரல், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை யஜுர் வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.
  • ஏப்ரல், 20ம் தேதி வரை ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம்,
  • ஏப்ரல், 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.

ஹோமம் குறித்து வெங்கடேஸ்வரன், கூறியதாவது: “ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் அறியப்படுகின்றன. நான்கு வேதங்களும் வைத்து ஒரு இடத்தில் ஹோமம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வேதத்திலும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் ஹோமம் நடத்தப்படுகிறது. சைதன்யாகாலே தலைமையில், ரிக் வேத ஸம்மிதா ஹோமம், சுனில் லிம்யா, தலைமையில், யஜுர் வேதம் ஸம்ஹிதா ஹோமம், ராமகிருஷ்ணா பட், தலைமையில் ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம், ரெகுநாத காலே, தலைமையில், அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடத்தப்படுகிறது. 28ம் தேதி நடைபெறும் ஆராதனை விழாவில், கலசத்தில் உள்ள புனித நீரால், ஸ்வாமிக்கு பூஜை செய்யப்படும்”, என்று கூறினார்[3].

நெரூர் - 2015 - சதுர் வேத சம்ஹிதா ஹோமம். விளக்கம்

நெரூர் – 2015 – சதுர் வேத சம்ஹிதா ஹோமம். விளக்கம்

நடிகர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் வந்து வணங்கிய அதிஸ்டானம்: “கன்னட இசை சித்தர்களில் புகழ்பெற்றவரான இவர் சித்தர் ஆவார்” என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், “இவர் ஜீவசமாதி அடைந்த இடம்தான் இந்த ஆலயமாகும். இங்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்”, என்று கூறியிருப்பது, அதைவிட விசித்திரமானது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வந்துபோனதை அவை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இக்கோயிலின் ஆராதனை விழா வருடா, வருடம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆராதனையின்போது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து சதாசிவ பிரமேந்திராள் அருள் பெறுவது வழக்கம். கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்ற இலையில் ஏதாவது ஒன்றில், சதாசிவ பிரம்மேந்திரரே வந்து சாப்பிட்டு சென்றுள்ளார் எனவும், அனைத்து இலைகளில் மீதும் உருளும் போது, நினைத்த காரியங்கள் அனைத்தும் சித்தியாகும் என்ற நம்பிக்கை கடந்த பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.

நெரூர் - 2015 - சாப்படு தயார், இலைகள் பாடப்பட்டு விட்டன - 28-04-2015.

நெரூர் – 2015 – சாப்படு தயார், இலைகள் பாடப்பட்டு விட்டன – 28-04-2015.

28-04-2015 அன்று 101 வது நடைபெற்ற ஆராதனை விழா: இந்த நிலையில், 28-04-2015 அன்று 101 வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டிக் கொண்டு சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விழா கடந்த 23ம்தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி மதியம் 1.30 மணியளவில் நடைபெற்றது. இதற்காக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கொண்டு விரதம் இருந்து கோயிலுக்கு வந்திருந்தனர். இம்முறை வழக்கத்திற்கு மாறாக, அங்கப்பிரதட்சணம் செய்பவர்கள் ஒரு விருப்ப-விண்னப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ரூ.20/- செல்லுத்தி, கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டனர். அந்த படிவத்தில் கீழுள்ளவை இருந்தன:

நெரூர் - 2015 - சாப்படு தயார், மூன்று வரிசை பந்தி - கூட்டம் அதிகம் - 28-04-2015.

நெரூர் – 2015 – சாப்படு தயார், மூன்று வரிசை பந்தி – கூட்டம் அதிகம் – 28-04-2015.

நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா

19, அக்ரஹாரம், நெரூர் – 639 004.

ஆராதனை அங்கபிரதட்சிணம் செய்வதற்கான ஒப்புதல்

இன்று 28-04-2015 நடை பெறும் நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திராள் 101வது ஆராதனை விழாவில் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டும், கட்டுப்பட்டும் நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்:

1.       நான் எனது சுய விருப்பத்தின் பேரில் எந்தவிதமானதும், எவருடைய கட்டாயமும், யாருடைய வற்புறுத்துதலும் இன்றி எனது சொந்த நம்பிக்கையின் பேரிலேயே இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.

2.       நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் மீது நான் கொண்டுள்ள பக்தியினால், நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே வேண்டுதல் செய்து கொண்டு, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்ய சம்மதிக்கிறேன்.

3.       எனது இந்த வேண்டுகோள் நிறைவேற்றிக் கொள்வதற்காக நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா அவர்கள் நல்லமுறையில் சிறப்பான வசதிகளையும், பாதுகாப்பும் அளித்திருக்கிறார்கள்.

4.       மேற்படி அங்கபிரதட்சிணம் செய்து முடிந்தவுடன் எனக்கு குளிக்கவும், உடை மாற்றிக் கொள்ள செய்யப்பட்டுள்ள வசதிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

5.       ஜாதி, சமயம், இனம், மொழி, இவைகளைக் கடந்து, எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவே, நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே, எனது சொந்த நம்பிக்கை பேரிலேயே மேற்படி கட்டணம் செலுத்தி இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.

இப்படிக்கு,

நெரூர் - 2015 - அங்கப்பிரதட்சிணம்- விண்ணப்பம்

நெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- விண்ணப்பம்

சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம்: அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சதாசிவ பிரமேந்திராள் அருள் பெற்றனர். பின்னர், மதியம் 1.30 மணியளவில் நெரூர் அக்ரஹாரம் தெருவில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தில் பங்கு கொண்ட அனைவரும் சாப்பிட்ட இலையை எடுக்காமல் சென்று விட்டார்கள். பின்னர், நேர்த்திக் கடனுக்காக வேண்டிக் கொண்ட பக்தர்கள் அனைவரும்[4], அருகில் உள்ள காவிரி ஆற்று வாய்க்காலில் குளித்து விட்டு, அன்னதானம் துவங்கிய பகுதியில் இருந்து முடிவடையும் பகுதி வரை அங்கபிரதட்சணம் செய்து பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்[5]. இந்த வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற்றதையடுத்து நெரூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை காண நெரூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்[6].

நெரூர் - 2015 - அங்கப்பிரதட்சிணம்- ரசீது ரூ.20

நெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- ரசீது ரூ.20

© வேதபிரகாஷ்

08-05-2015

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=91227

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1233348

[3] தினமலர், நெரூர் சதாசிவ பிரமேந்திரர்சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம், ஏப்ரல்.9, 2015:01:30.

[4] எல்லோரும் கலந்து கொள்ளவில்லை, விருப்பத்துடன் விண்ணப்பம் கொடுத்தவர்கள் தாம், கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பொலீசார் இருந்தது பற்றி ஊடகங்கள் குறிப்பிடவில்லை.

[5] http://inneram.com/news/tamilnadu/2170-devotees.html

[6] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/thousands-devotees-throng-nerur-temple-225667.html#slide154671