Archive for the ‘விஸ்வ ஹிந்து பரிஸத்’ Category

83-வயதான புகழ் பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

செப்ரெம்பர் 16, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

13-09-2023 அன்று விசிக கொடுத்த புகாரும், ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய தீர்மானித்த போலீஸாரும்: இந்த நிலையில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் மணியன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று ஊடகங்க்ள் குறிப்பிடுகின்றன. அதன் பேரில் மாம்பலம் போலீசார் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 153, 153(A), 505(1)(B), 505 (2), பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, ஆர்பிவிஎஸ் மணியன் என்பவரை கைது செய்யவும் போலீஸார் தீர்மானித்தனர். விடியற்காலையிலேயே அவர்கள் ஆர்பிவிஎஸ் மணியனின் வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தனர். அதன்படியே, அவரது வீட்டிற்குச் சென்றனர்.

14-09-2023 விடியற்காலையில் கைது செய்யப் பட்டது: தியாகராயநகர் உதவி கமிஷனர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார், தியாகராயநகர் ராஜம்மாள் தெருவில் உள்ள மணியன் வீட்டுக்குச் சென்றனர். 14-09-2023 வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை திநகர் போலீசார் ஆர்பிவிஎஸ் மணியனை அவரது இல்லத்தில் கைது செய்தனர்[1]. கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினமலர் கூஊகிறது. இவரை அப்படி “ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த”,  என்ன பெரிய விசயம் இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லா விவரங்களும் வெளிப்படையாக உள்ளநிலையில், அதிலும் 3-4 காலையில் கைது செய்யப் பட்டபோது, யாருக்குத் தெரியப் போகிறது, என்ன பிர்ச்சினை வரப் போகிறது என்று தெரியவில்லை. அந்நிலையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்து முன்னணியின் ஆதரவும், எதிர்ப்பும்:  “83 வயது முதியவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும், அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது,” என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்[3]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “தமிழக அரசின் எண்ணப்படி தொடர்ந்து தமிழக காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை நீதிமன்றமோ, ஊடகமோ கண்டுகொள்ளவில்லை. இது ஜனநாயக படுகொலைக்கு சமம். ஆர்.பி.வி.எஸ். மணியன் தேசியவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர். இன்று குமரியில் நாம் காண்கின்ற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பணிக்காக தான் பார்த்துவந்த அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். விவேகானந்தர் நினைவு மண்டபம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குவதற்கும், குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாய் விளங்குவதற்கும் அந்தக் காலத்தில் ஏக்நாத் ரானடே உடன் தோளோடு தோள் நின்று அடிப்படை அஸ்திவாரமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தை காக்க வாழ்ந்தவர்.

ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் போக்கு: இந்நிலையில், ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி சிலர் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தில் பெரும்பாலானவை பார்ப்பனர் எதிர்ப்பாக, கடுமையாக தூஷணங்களுடன் இருக்கின்றன. வீடியோக்களும் போட ஆரம்பித்து விட்டனர். இந்தப் போக்கை கடந்த சில வருடங்களாகவே பார்க்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைக்கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவை பரப்பப்படுகின்றன. அவர் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும் அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்துக்களின் நம்பிக்கைளை கொச்சைபடுத்திய பல யூடியூப் சேனல்கள், சனாதனத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர்கள், இந்து மதத்தை இழிவு படுத்தியவர்கள், பிரதமர், ஆளுநர் ஆகியோரை‌த் தாக்கிப் பேசியவர்கள் என பலர் மீது பல இடங்களில் புகார் கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழக காவல் துறைக்கும் நீதிமன்றத்துக்கும் குற்றத்தின் தன்மையைவிட குற்றம்சாட்டப்படுபவர் பின்புலம் என்ன என்பதை வைத்துதான் நடவடிக்கை என்பதாக அமைந்துள்ளது. இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆவார். இவரது கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியன்: சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியனை 14 நாள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். வயது மூப்பு கருதி அவரை மருத்துவமனையில் தங்க அனுமதிக்க வேண்டும் என அவர் சார்பில் வக்கீல்கள் வலியுறுத்தினர். பரிசீலிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணியன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சுதாகர், மணியன் மீதான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார். அதற்கு நீதிபதி (மணியனை பார்த்து), உங்கள் மீதான புகார் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என கூறினார்[5]. அதற்கு மணியன், ‘நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்[6]. மணியன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ், ‘மணியனுக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி, மணியனை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இங்கும் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன:

  1. பார்ப்பானை பிரம்ம முஹூர்த்தத்தில் வைத்து கைது செய்தால், யாருக்கு பலன் கிடைக்கும்? நேரத்தைக் குறித்தது கடவுளா, திராவிட அதிகாரியா?
  2. அமாவாசைக்கு முன்னால் பார்ப்பானை கைது செய்தால் அவனது கிரியைகள் கெடுமா, அல்லது பெரியாரிஸ ஆவிகள் துடிக்குமா?
  3. 83 வயதான “கெழப்பய” என்ன ஓடியா போய் விடுவார்? காஷ்மீரில் வீட்டு காவல் வைக்கும் பொழுது, இவரை வைக்க முடியாதா?
  4. இல்லை எங்களுக்கு இணை வைக்காதே, இன்டியா கூட்டணியில் இதை சேர்காதே என்று அவர்கள் மிரட்டினரா, ஆணையிட்டனரா?
  5. அதெப்படி உடனடியாக, எந்த வழக்கறிஞரும் வரவில்லை, பெயில் கோரவில்லை, ஆனால், 14 நாட்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்?
  6. அதாவது ஒரு பக்ஷத்திற்கு சிறை, அடுத்த பக்ஷத்தில் பெயிலில் வெளியே விடலாம், இப்பொழுது மருதுத்துவ மனை வசதி கூட நிராகரிக்கப் பட்டுள்ளது.
  7. அண்ணன் அவன் பிறந்த நாள் அமாவாசையில் வந்து விட்டதால் தம்பிகள் நல்ல நாளை முன்னமே குறித்து விட்டனரோ?
  8. சரி யாரப்பா அந்த திராவிட புரோகிதர்? திராவிட மாடலில், திராவிட ஸ்டாக் ஆட்களில் தயாராகி விட்டார்கள் போலும்!
  9. நல்ல ஆடு கிடைத்து விட்டது, பலிகடா ஆடு, பார்ப்பன பலிக்கடா ஆடு, அதிலும் 83-வயது நிறைந்த பார்ப்பன பலிக்கடா ஆடு – கொண்டாட்டம் தான்!
  10. இனி பார்ப்பன துவேஷம் பீரிடும், மீம்ஸ்கள் யூ-டியூப்புகள் அதிகமாகும், ஆனால், எதிர்வினைகளுக்கு எந்த சட்டமும் வேலை செய்யாது.

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமணி, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By DIN  |   Published On : 14th September 2023 08:44 AM  |   Last Updated : 14th September 2023 08:44 AM

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/sep/14/spiritual-speaker-rpvs-manian-arrested-4072554.html

[3] தமிழ்.இந்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைதுதமிழகத்தில் கருத்து சுதந்திர நிலையைக் காட்டுகிறது!இந்து முன்னணி, செய்திப்பிரிவு, Published : 14 Sep 2023 03:08 PM; Last Updated : 14 Sep 2023 03:08 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1123301-rbvs-maniyan-arrest-hindu-munnani-condemns.html

[5] தினத்தந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு: ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது, செப்டம்பர் 15, 5:57 am

[6] https://www.dailythanthi.com/News/State/tiruvalluvar-defamation-of-ambedkar-spiritual-speaker-maniyan-arrested-1052962

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ்மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

செப்ரெம்பர் 15, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

சனாத எதிர்ப்பு பேச்ச்களால் மக்களை பாதித்த நிலை: சனாதனத்தைப் பற்றிய பேச்சுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தேவையில்லாமல், அமைச்சர்கள் அளவில், செக்யூலரிஸத்தை மறந்து, அவர்கள் பேசியதும், தொடர்ந்து மற்ற தலைவர்கள், எம்.பிக்கள் முதலியோர் ஆதரித்து விளக்கம் கொடுப்பதும், இந்தியா முழுவதும், இது அறியப் பட்டு பிரச்சினையாகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு இது அரசியலாக உள்ளது. ஆனால், இவர்களது பேச்சுகள் இந்துக்களை வெகுவாக பாதித்து வருகின்றன. இவர்கள் அரசியல் போர்வையில், தினம்-தினம் எதையதையோ சம்பந்தம் இல்லாமல் பேசி, பொது மக்களின் மனங்களில் சலனங்களை உண்டாக்கி வருகின்றனர். அரசியல் சார்புள்ள நிலையில் தமிழகத்தில் மடாதிபதிகள் அமைதியாக மௌனம் காக்கின்றனர். இதனால், நம்பிக்கையாளர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமக்குள் தம்முடைய பிரச்சினைகளை பேசிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதும், தனிப்பட்ட முறையில், உள்ளரங்களில் குறிப்பிட்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப் படும் நிகழ்ச்சிகளில் பேசுவதும் ஒன்றாகுமா என்பதெல்லாம் சட்ட வல்லுனர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

11-09-2023 அன்று பாரதிய வித்யாபவனில்பாரதியும், விவேகானந்தரும்என்ற தலைப்பில் நடந்த சொற்பொழிவு: அந்நிலையில் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் சென்னையில் 14-09-2023 அன்று கைது செய்யப்பட்டார்[1], என்று செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் சென்னையில் தியாகராயநகரில் உள்ள பாரதிய வித்யாபவனில் ‘பாரதியும், விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் கடந்த 11-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது[2]. நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருவள்ளூவர் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது[3]. சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் குறித்துப் பேசினார்[4]. திருவள்ளுவர் என்ற பெயரை யார் வைத்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்டார்[5]. திருவள்ளுவர் என்பவர் உண்மையில் இருந்ததே இல்லை என்றும் அவர் பேசினார்[6]. உண்மையில் அவர் பேசிய வீடியோ இணைதளங்களில் சுற்றுக்கு வந்தது. அவர் முழுவதும் என்ன பேசினார், என்ற விவரங்கள் தெரியவில்லை.

திருவள்ளுவர், அவரது பெற்றோர் விவரங்கள் தெரியாது: பிபிசி தமிழ் தளத்தில் உள்ளதிலிருந்து காணப்படும் விவ்ரங்கள்: “திருவள்ளுவர் இருந்தார் எனச் சொல்வது கற்பனை. அவர்தான் திருக்குறளை எழுதினார் எனச் சொல்வது அதைவிடக் கற்பனை,” என்று அவர் நிகழ்வில் பேசினார். ‘திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நூலே’ என்ற நூலை எழுதியுள்ள மணியன், ராமர் பிறந்த நட்சத்திரம் தெரியும், ஆனால் வள்ளுவர் என்று பிறந்தார், அவரது பெற்றோர்கள் யார் எனத் தெரியுமா என்றார். விவேகானந்தரின் கருத்துகளைப் பரப்புவதில் தீவிர பங்காற்றியுள்ள மணியன், கிறிஸ்தவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என விவேகானந்தர் தெரிவித்ததாகப் பேசினார். “கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதே எனக் கூறியுள்ளேன். விவேகானந்தரும் சொன்னார். பாரதியாரும் சொன்னார்,” நமது பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என அவர் பேசினார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள் எனக் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் பேசியதாக கொடுக்கப் படும் விவரங்கள்: “ராமனை ஏற்றுக்கொண்டால் ஒழிய ஒரு கிறிஸ்தவன் இந்த நாட்டில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். அந்த முஸ்லிமும் அருகதை இல்லாதவன்,” என்று அவர் அந்த நிகழ்வில் பேசினார். இதே அளவுகோலை வைத்து அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சாடினார். ராகுல் காந்தி கிறிஸ்தவர் ஐரோப்பியர் என்றும், அவருக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரையும் தாக்கிப் பேசினார். அரசியல் சாசன சட்டத்தை எழுதியது அம்பேத்கரே இல்லை என்று பேசினார். “அம்பேத்கர், தன்னுடைய மூளையில் இருந்து எழுதியதாக எழுதவே கிடையாது. எல்லாம் பேசிடுவாங்க.. அது எல்லாத்தையும் ஒரு ஸ்டெனோகிராஃபர் எழுதுவான். தட்டச்சு செய்வார், ஸ்டெனோ கிராஃபர் கரெக்டா அடிச்சிருக்காரா அடிக்கலையா என்று சரிபார்ப்பார். அந்த வேலைதான் அம்பேத்கருக்கு,” என்றார்.

அரசியல் நிர்ணய சட்டம் வரையரைக் குழுவிற்கு அம்பேத்கர் தலைவர், ஆனால், பலர் வேலை செய்தனர்: அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும்[7]. அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர்[8]. அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக.

அம்பேத்கர், பட்டியல் இன உட்பிரிவு பிரச்சினைகள்: அவரது பேச்சின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தாக்கிப் பேசியிருந்தார். திருமாவளவன் பறையர் என்றும் அம்பேத்கர் சக்கிலியர் என்றும் கூறிய மணியன், சக்கிலியரும் பறையரும் திருமணம் செய்துகொள்வார்களா, பறையரும் பள்ளர்களும் திருமணம் செய்துகொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினார்[9]. மணியன் தன்னுடைய பேச்சு முழுவதிலும், திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை ஒருமையில் பேசி கடுமையாகச் சாடினார்[10]. இவரது பேச்சு சமூகவலை தளத்தில் பரவியது.  பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது[11]. அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தை தெரிவித்திருந்தனர்[12]

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமலர், ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது; 14 நாள் நீதிமன்ற காவல், மாற்றம் செய்த நாள்: செப் 14,2023 12:28.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3431645

[3] அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு: ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By Maalaimalar .14 செப்டம்பர் 2023 11:41 AM (Updated: 14 செப்டம்பர் 2023 4:00 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/chennai-police-arrested-rbvs-manian-arrested-662383

[5] விகடன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது : அம்பேத்கர், திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் பேச்சுவிரிவான தகவல்கள், சி. அர்ச்சுணன், Published: Yesterday 14-09-2023, at 10 AM; Updated: Yesterday at 11 AM

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/rpvs-maniyan-arrested-over-allegations-against-him-about-his-speech-insults-ambedkar

[7]  தமிழ்.ஒன்.இந்தியா, திருவள்ளுவர், அம்பேத்கர், தலித்துகளை இழிவாக பேசிய பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது– 14 நாள் ஜெயில்!, By Mathivanan Maran, Updated: Thursday, September 14, 2023, 13:34 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/hindutva-leader-rbvs-manian-arrested-by-chennai-police-538479.html

[9] பிபிசி தமிழ், ஆர்.பி.வி.எஸ் மணியன்: அம்பேத்கர், திருவள்ளுவரை அவதூறாகப் பேசியதாக கைதான இவர் யார்?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், 14 செப்டெம்பர் 2023

[10] https://www.bbc.com/tamil/articles/cd13pmkyxero

[11] தமிழ்.நியூஸ்.18, அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: VHP முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, LAST UPDATED : SEPTEMBER 14, 2023, 15:14 IST,

[12] https://tamil.news18.com/chennai/chn-rbvs-manian-arrest-for-ambedkar-controversial-speech-1154345.html – gsc.tab=0