Archive for the ‘தூஷணம்’ Category

மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதி – பெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா, அரசியலா? (2)

ஜனவரி 19, 2024

மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதிபெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா, அரசியலா? (2)

ஆன்மீகம், அரசியல், திமுக, நாத்திகம், அரசியல் ஆக்குவது: ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[1]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது[2]. ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை[3]. எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் என்றார்[4]. “கால் வலி இருப்பதால் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து யோசிக்கிறேன்” என இபிஎஸ் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு[5], இருக்கலாம், “அவர் தவழ்ந்து தவழ்ந்து நிறைய போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வரலாம்” என்று கூறிச் சென்றார்[6]. இப்பொழுது, “ஆன்மீகம்” என்று சொல்லிக் கொண்டு திமுக புதிய வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயல்கிறது. ஆன்மாவை நம்பாத இந்த நாத்திகர்கள் ஏன் ஆன்மிகத்தைப் பற்றிப் பேச வேண்டும்?, பெரியாரிஸ பொய்மை, நாத்திக வெறுப்பு, இந்துவிரோத போக்கு என்ற கலவை ஆன்மீகமாக இருக்கமுடியாது.

உதயநிதி கூறியிருக்கும் ஒவ்வொரு வாக்கியமும், திமுகவின் முகமூடியைக் கிழித்து, சுயமுகத்தைக் காட்டுகிறது: இப்படியான வசனத்தை யாராவடு எழுதி கொடுத்துப் பேசினரா அல்லது விவரங்களைப் புரிந்து பதில் அளித்தாரா, அரிவிஜீவிகளான, ஊடக வல்லுனர்கள் எப்படி ஏற்றுக் கொண்டனர் என்று கவனிக்க வேண்டும்:

  • ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல
  • திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது
  • ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[7]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது
  • ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை
  • எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்

ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல: கடந்த 70 ஆண்டு திராவிடத்துவ, பெரியாரிஸ சித்தாந்த பேச்சுகள், எழுத்துகள் மற்றும் அரசியலை வைத்து கவனித்தால், இவர்கள் மாறப்போவதில்லை, இதுவரை பெற்றுள்ள அந்த பிம்பத்தையும் வேறு விதமாக சித்தரிக்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். ஆகவே மறுபடியும் தேர்தலுக்காக இவ்வாறு பேச்சை மாற்றி மாற்றி பேசுவது என்பது இவர்களுக்கு உரிய கலை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் முன்னரே இவருடைய தாத்தா ராமரைப்பற்றி எப்படி எல்லாம் பேசி இருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும், அதைல்லாம் மறுபடியும் எங்கே எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆக இதுவரையில் இந்து விரோதத் தன்மையுடன் தான் இருந்து கொண்டுள்ளதால், மக்கள் இவர்களெல்லாம் ராமர் கோவில் திறப்பிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் அல்லது மத நம்பிக்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றெல்லாம் யாரும் நம்ப போவதில்லை. இங்கு கூட “மத நம்பிக்கை” என்று சொல்லும் போது, இந்து மதம் எல்லாம் என்றும் ஒன்னும் சொல்லவில்லை. ஆகவே இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான்.

திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது: இதுவும் வழக்கமாக சொல்கின்ற சாக்குதான். திமுக நிச்சயமாக எந்த மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது, அதாவது இந்து மதத்தை தவிர என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பெரியாரிஸம், பகுத்தறிவு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இந்து மதத்தை தான் அவர்கள் எதிர்த்து வருகிறார்களே தவிர, நிச்சியமாக மற்ற மதங்களை விமர்சித்தது கிடையாது. அந்த மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் எதிராக இருந்ததும் கிடையாது. ஆகவே, மறுபடியும் மறுபடியும், திரும்பத் திரும்ப, இத்தகைய வசனங்களை பேசி மக்களை ஏமாற்றுவது என்பது நிச்சயமாக எடுபடாது. இப்பொழுது உள்ள நிலையில் நிச்சயமாக இவர்கள் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால், அந்த முரண்பாடு இக்கால இளைஞர்களின் மனதில் நன்றாகவே பதில் ஆரம்பித்துள்ளது. ஆகவே நிச்சயமாக அவர்கள் அதற்கான ஜனநாயக ரீதியிலான முடிவையும் காண்பார்கள். அதாவது தேர்தல் எனும் பொழுது, தேர்தல் வைத்து தான் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அதில் அவர்களுக்கு உண்டான பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டிய காலம் நிச்சயமாக அருகில் உள்ளது எனலாம்.

ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[8]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது: பிரச்சனை இல்லை என்றால் பிறகு எதற்கு இத்தகைய வசனங்கள் எல்லாம் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது? இது இவர்கள் தீர்மானத்தில் நடக்கும் விஷயம் அல்ல, ஒட்டுமொத்தமான பல கோடி இந்துக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் தான் இது நடந்து கொண்டிருக்கிறது. ஏன் உச்ச நீதிமன்றமும் இதற்கு தீர்ப்பை கொடுத்து விட்டது. ஆக, அந்த வழக்கில் இருப்பவர்கள் ஒப்புக்கொண்டு தான் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. அந்த கும்பாபிஷேகம் போன்ற மற்ற சடங்குகளை இப்பொழுது செய்ய தீர்மானித்துள்ளனர். ஆகவே தான் அவர்கள் அந்த கோவில் திறப்பு விழாவை இவர்கள் ஒன்று எதிர்ப்பது, ஆதரிப்பது என்பதால் மட்டும் ஒன்று ஆகி விடப்போவதில்லை. இவ்வாறு பாட்டு பாடிக் கொண்டிருப்பதால் என்ன முக்கியத்துவம் ஏற்பட போகிறது என்பதும் ஒன்றும் இல்லை.

ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை: இங்கு இங்கு தான் உதயநிதியின் மனதில் உள்ள அந்த அப்பட்டமான இந்து விரோதம் வெளிப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம் அங்கிருந்து மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பது மிகவும் அபத்தமான பேச்சு. இது எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது என்பதும், இவர் என்னவோ பெரிய இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளை விட பெரிய புத்திசாலி மாதிரியும், அதிக பிரசங்கத்தனமாக பேசுவது, எல்லாம் முடிந்து கோவிலும் கட்டி விழா கொண்டாட வேண்டிய தருணத்தில், இத்தகைய அபத்தமான பேச்சு பேசுவது மிகவும் கேவலமாக இருக்கிறது. அ[ப்படி பேசுவது என்பதும், இந்த திராவிட தூதர்களுக்கு சரித்திரம் என்பது எந்த அளவுக்கு சூன்யமாக இருக்கிறது என்பது புரிந்து கொள்ளலாம். பாபருடைய தளபதி அங்கிருந்த கோவிலை இடித்து மசூதி கட்டினான் என்று தீர்மானம் ஆகி, உச்சநீதிமன்றத்தில் பதிவாகி, பிறகு அந்த வழக்கில் இருந்த சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒப்புக்கொண்ட பிறகுதான் இவையெல்லாம் நடைபெறுகின்றன. ஆகவே இந்நேரத்தில் உதயநிதி, திமுக அல்லது இந்த பெரியாரிஸவாதிகள், இந்துவிரோதிகள் இந்த இல்லை என்பது சொல்வதால் மட்டும் என்னென்ன வழி விட போகிறது?

எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்: ஆன்மாவை மறுத்தது பெரியாரிஸம். ஆத்மாவை மறுத்தது நாத்திக-இந்துவிரோதம். திராவிட சித்தாந்தம் ஆன்மா இல்லை, ஆத்மா இல்லை என்று உளறி வந்து கொண்டிருக்கின்ற நிலையில், ஆன்மீகம் என்று பேச ஆரம்பித்துள்ளனர். இந்த பகுத்தறிவுவாதிகள் இப்பொழுது ஆன்மீகத்தை பற்றி அதிகமாக பேசி வருகின்றது தமாஷாக இருக்கிறது. ஆன்மீகத்தை நாங்கள் எதிர்ப்பதில்லை, ஆன்மீகம் எங்களுக்கு உடன்பாடு தான் – இப்படியெல்லாம் பேசுவதும் வேடிக்கையாக இருக்கிறது. ஆகையால் இவ்வாறு தொடர்ந்து முரண்பட்ட வாதங்களை வைப்பது, மக்களை ஏமாற்றுவது தான். நிச்சயமாக சீக்கிரமாக அவர்களது முகமுடிகள் கிழிந்து, மற்ற எல்லா மக்களுக்கும் தெரியப்போகிறது. இப்பொழுதே தெரிய ஆரம்பித்து விட்டது. ஆகவே, இதேபோல ஒரு பக்கம் நான் கிறிஸ்துவன் தான், நான் முஸ்லிம்களை ஆதரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டும், அல்லேலூயா என்று கத்திக் கொண்டும், இன்னொரு பக்கம் இந்துக்களை விமர்சித்துக் கொண்டோம் இப்படியே 70 ஆண்டுகள் ஓட்டிவிட்டாகியது. இனியும் இதே போன்ற பாரபட்சமான போக்கை கட்டுப்பட்டு வந்தார் நிச்சயமாக மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

19-10-2024


[1] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/minister-udhayanidhi-stalin-about-dmk-views-on-ayodya-ram-temple

[3] தமிழ்.சமயம், மசூதியை இடித்து கோயில் கட்டியதை ஏத்துக்க முடியாதுஅயோத்தி ராமர் கோவில் குறித்து உதயநிதி பரபரப்பு!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 18 Jan 2024, 2:43 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-udayanidhi-stalin-said-they-did-not-agree-with-the-demolition-of-the-mosque-and-construction-of-the-temple/articleshow/106954516.cms

[5] தமிழ்.டைம்ஸ்.நௌ, மசூதியை இடித்து கோயில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடடு இல்லை” – உதயநிதி ஸ்டாலின் , செய்திப்பிரிவு, Published : 18 Jan 2024 5.00 AM.

[6] https://tamil.timesnownews.com/tamil-nadu/ayodhya-ram-temple-udhayanidhi-stalin-says-about-dmk-stand-article-106947144

[7] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

[8] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டல், வெள்ள நிவாரண நிதி – எல்லாம் அரசியலா, தேர்தல் கூட்டணியா, மக்களுக்கு உதவுவதற்காகவா? (3)

திசெம்பர் 12, 2023

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டல், வெள்ள நிவாரண நிதிஎல்லாம் அரசியலா, தேர்தல் கூட்டணியா, மக்களுக்கு உதவுவதற்காகவா? (3)

தி.மு.., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்: தி.மு.க., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்[1] [இந்த விசயத்தை ஒழுங்காக சொல்லியிருக்கிறார் எனலாம்]. அவர்கள் ஹிந்து மதத்தை துறந்துவிட்டனரா? கிறிஸ்தவ மதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டால், பிறகு எப்படி ஹிந்து மதத்தை விமர்சிக்கின்றனர்?[2] ஹிந்து மதத்தை பிடிக்காதவர்கள், வேறு மதத்திற்கு சென்றுவிடுவதுடன்[3], விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்[4]. இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு கண்டிப்பான சட்டத்தை இயற்ற வேண்டும் அல்லது ஹிந்து மதத்தின் கண்ணியம் அழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்[5]. சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற நிலைக்கு பேசியுள்ளதை கவனிக்க வேண்டும். உபியைப் பொறுத்த வரையில் இந்துவிரோதம் வைத்து தேர்தலில் நிற்க முடியாது.

செந்தில்குமார் மீது முதல்வர் மு..ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்: இந்த விவகாரத்தில் திமுக எம்.பி. செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என மக்களவையில் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்[6]. “ஏற்கெனவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தற்போது செந்தில்குமார் பேசியிருப்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. இது பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுக்கும் முன்பே சரிசெய்துவிட வேண்டும் என நினைத்த தி.மு. தலைமை, உடனடியாக செந்தில்குமாரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி உத்தரவிட்டது. அதனால்தான் அவர் மன்னிப்புக் கேட்டார்,” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்[7]. “செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்,” என்றால், என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

வைகோவின் வக்கலத்தும், ஆதரவும்: ம.தி.மு.க., தலைவர் வைகோவிடம் செய்தியாளர்கள் பதில் கேட்டபோது, ​​செந்தில்குமாரின் கருத்துக்கு வைகோ உடன்பட்டது சர்ச்சையை அதிகப்படுத்தியது[8]. கருத்துகள் குறித்த தனது நிலைப்பாட்டை அழுத்தியபோது, ​​“அவருடன் நான் உடன்படுகிறேன்,” என்று எம்பி வைகோ உறுதிப்படுத்தினார்[9]. செந்தில்குமாரின் இழிவான கருத்துக்கு அவர் ஒப்புதல் அளிக்கிறீர்களா என்று குறிப்பாகக் கேட்டபோது, ​​“ஆம், ஆம், அவர் சொல்வது சரிதான்” என்று வைகோ மீண்டும் கூறினார்[10]. ஸ்டாலின் எதிர்த்த போது, இவர் ஆதரிப்பது விசித்திரமாக இருக்கிறது[11]. இதில் வைகோவின்மனப்பாங்கைக் கவனிக்க வேண்டும், வயதான முதிர்ந்த நிலையிலும், இத்தகைய இழிவான கருத்துக்குஒப்புதல் அளிக்கிறேன் என்றது, திகைப்பாக இருக்கிறது. இவர் கிருத்துவர் என்பதால், அத்தகைய வெறுப்பைக் கக்குகிறாரா என்று தெரியவில்லை. உதயநிதி தான் கிருத்துவர் என்று ஒப்புக் கொண்டு, பிறகு சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதையும் கவனிக்கலாம்.

தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள்: இந்த நிலையில், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.ப. செந்தில்குமார் பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்[12]. சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், “திமுக எம்.பி. கூறிய வார்த்தைகள், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்விலிருந்து வந்தது. அது அவர்களின் தவறான சித்தாந்தத்தின் ஆழமான உணர்விலிருந்து வந்தது.” என தெரிவித்துள்ளார்[13]. பிஜேபி தவிர மற்ற கட்சிகள், சித்தாந்தவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களா, வெஊப்புப் பேச்சைக் கண்டித்தார்களா என்று தெரியவில்லை.

வன்னியர் என்று ஜாதிய ரீதியில் ஆதரிக்கும் போக்கு: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.பி.க்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் துணை நிற்போம் என மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்[14]. செந்தில்குமார் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அவரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்[15]. ஆனால், அதே நேரத்தில் சனாதனம் பற்றி இழிவாக பேசியபோது, இந்த பெண்மணி எதிர்புத் தெரிவித்தாரா, கண்டித்தாரா என்பது தெரியவில்லை. முதலில், இதில் ஜாதியை ஏன் நுழைக்க வேண்டும் என்பது புரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திக-திமுக இந்துவிரோதமாக இருந்து வந்து பல அக்கிரமங்களை செய்து வருவது தெரிந்த விசயமே. பிறகு, இத்தகைய குறுகிய, நோக்கில் ஆதாவு தெரிவித்து வியாக்கியானம் கொடுப்பது திகைப்பாக உள்ளது.

வடக்குதெற்கு விவாதம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே வடக்கு vs தெற்கு என்ற விவாதம் தீயாகப் பரவி வருகிறது. பாஜகவின் சித்தாந்தம் வட இந்தியாவில் மட்டும் ஒர்க்அவுட் ஆவதாகவும் தென்னிந்தியா அதை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் பாஜகவை விமர்சிப்போர் கூறுகின்றனர். அதேநேரம் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இப்படி ‘வடக்கு vs தெற்கு’ என்ற விவாதத்தைக் கிளப்பி நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகவும் தேர்தல் தோல்வியை ஏற்க முடியாதவர்களே இப்படிக் கூறி வருவதாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்[16]. மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “அவர்கள் தங்கள் ஆணவம், பொய்கள், அவநம்பிக்கைகள் மற்றும் அறியாமை ஆகியவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஆனால்… அவர்களின் பிரிவினைத் திட்டத்தில் இருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 70 ஆண்டுக்கால பழைய பழக்கம் அவ்வளவு எளிதில் போய்விடாது.. மக்களின் தேர்வு இதுதான். இனி பல முடிவுகள் இப்படிதான் இருக்கும் தயாராகுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்[17].

வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது: “வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது,” என்று அண்ணாதுரை சொன்னது எல்லாம் நினைவுக்கு இருக்கலாம். கருணாநிதி “மாநில சுயயாட்சி” என்றெல்லாம் பேசியதும் அதே தொணியில் தான். இன்றும், இந்தி-தமிழ், தமிழ்-தெலுங்கு, குலுடி-வடுகன் என்றெல்லாம் பேசுவதும்-எழுதுவதும் அதே பிரிவினை நோக்கில் தான் தொடர்ந்து வருகிறது. இந்து-எதிர்ப்பு, “சைவம்” போர்வையிலும் நடக்க ஆரம்பித்து விட்டது. “மைனாரிட்டி” என்று ஆரம்பித்து, “நாங்கள் இந்துக்கள் அல்ல,” என்ற கோஷத்தில் வந்து முடிந்துள்ளது.  ஆகவே, பிரிவினைவாதம், இந்து-விரோதம், இந்திய-விரோதம், தேச-விரோதம் எல்லாம் எந்த உருவிலும், பேனரிலும், சொல்லாடல்களிலும், சித்தாந்தங்களிலும் வெளிப் படும்.

© வேதபிரகாஷ்

08-12-2023


[1] https://kamadenu.hindutamil.in/politics/samajwadi-condemns-dmk-to-stop-denigrating-hinduism

[2] நியூஸ்7.தமிழ், மக்களவையில் இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு | வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்!, by Web EditorDecember 6, 2023.

[3] https://news7tamil.live/controversy-about-hindi-speaking-states-in-lok-sabha-dmk-mp-senthilkumar-expressed-regret.html

[4] ஐபிசி.தமிழ்நாடு, மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி; முதல்வர் கண்டனம்திமுக எம்.பி. மன்னிப்பு!,  By Sumathi, 06-12-2023

[5] https://ibctamilnadu.com/article/gaumutra-dmk-mp-senthilkumar-contro-speech-1701837946

[6] விகடன், கழுகார் அப்டேட்ஸ்: எம்.பியை மன்னிப்புக்கேட்க வைத்த திமுக|வெள்ளம், அதிகாரியை கப்சிப் ஆக்கிய அமைச்சர், கழுகார், Published: 07-12-2023 at 1 PM; Updated: 07-12-2023 at 5 PM.

[7] https://www.vikatan.com/government-and-politics/kazhugar-updates-on-senthil-kumar-mp-issue-and-other-political-happenings

[8] தினமலர், திமுக எம்.பி.,யின் சர்ச்சை பேச்சு: ஸ்டாலின் எதிர்ப்பு: வைகோ ஆதரவு, பதிவு செய்த நாள்: டிச 06,2023 14:39.

[9] https://m.dinamalar.com/detail.php?id=3497549

[10] கதிர்.நியூஸ், வட மாநிலங்கள் தொடர்பான தி.மு. எம்.பி யின்பசு கோமியம்மாநிலங்கள் சர்ச்சை பேச்சுக்கு உடன்பட்ட வைகோ!, By : Karthiga |  8 Dec 2023 12:15 PM.

[11] https://kathir.news/news/vaiko-agreed-to-the-dmk-mps-cow-komiam-state-dispute-talk-regarding-northern-states-1508302

[12] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் உணர்வு: செந்தில்குமார் எம்.பி.யை விளாசிய அண்ணாமலை!, Manikanda Prabu, First Published Dec 6, 2023, 4:50 PM IST.

[13] https://tamil.asianetnews.com/tamilnadu/word-uttered-by-the-dmk-mp-came-from-a-deep-sense-of-seeing-india-the-wrong-way-alleges-annamalai-smp-s58stk

[14] தமிழ்.ஒன்.இந்தியா, செந்தில்குமார் எம்.பி. வன்னியர் என்பதால் அவர் மீது வன்மத்தை கக்குவதா? காடுவெட்டி குரு மகள் ஆதங்கம்!, By Arsath Kan, Published: Thursday, December 7, 2023, 13:32 [IST].

[15] https://tamil.oneindia.com/news/chennai/kaduvetti-guru-daughter-virudhambigai-support-dharmapuri-member-of-parliament-senthilkumar-563839.html

[16] தமிழ்.ஒன்.இந்தியா, “வடக்கு vs தெற்கு..” பற்றி எரியும் விவாதம்! வசமாக வந்து சிக்கிய திமுக! கொந்தளித்த மோடி! என்ன நடந்தது By Vigneshkumar Updated: Wednesday, December 6, 2023, 16:57 [IST]

[17] https://tamil.oneindia.com/news/delhi/what-is-north-vs-south-debate-that-is-now-becoming-national-level-debate-563633.html?story=2

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டதால் இந்துவிரோதம் மறைந்து விடுமா, திராவிடத்துவம் மாறி விடுமா? (2)

திசெம்பர் 12, 2023

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டதால் இந்துவிரோதம் மறைந்து விடுமா, திராவிடத்துவம் மாறி விடுமா? (2)

வடக்கு– தெற்கு எனப் பேசி நீங்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறீர்கள்: இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட பின்னர் செந்தில்குமார் அன்றைய தினமே மன்னிப்பு கேட்டுக்கொண்டார்[1]. ஆனால், இந்த விவகாரம் மக்களவையில் புதன்கிழமை எதிரொலித்தது[2]. கேள்வி நேரத்தின்போது டி.ஆர்.பாலு கேள்வி கேட்க எழுந்தபோது, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் “முதலில், நேற்று அவருடைய கட்சி (திமுக) உறுப்பினர் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றனர். அதற்கு டி.ஆர்.பாலு, “இது கேள்வி நேரம், கேள்வி கேட்க அனுமதியுங்கள்’ என்றார். தொடர்ந்து இருதரப்பிலும் குறுக்கீடுகள் எழுந்தன. அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “வடக்கு- தெற்கு எனப் பேசி நீங்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறீர்கள்” என்றார். தொடர்ந்து அமைச்சர் பியூஷ் கோயல், “நீங்கள் (திமுக) மன்னிப்பு கோர வேண்டும்’ எனக் கூற அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர், சுமார் 11.40 மணியளவில் அவை ஒத்திவைக்கப்பட்டது.

திமுக எம்.பி. கூறிய கருத்தை டி.ஆர்.பாலுவும், ராகுல் காந்தியும் ஏற்றுக் கொள்கிறீர்களா?‘:  அவை பகல் 12 மணியளவில் மீண்டும் கூடியபோதும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பான விவாதத்தில் தமிழக புயல் நிவாரணம் தொடர்பாக டி.ஆர்.பாலு பேச எழுந்தார்[3]. அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பி, “திமுக எம்.பி. கூறிய கருத்தை டி.ஆர்.பாலுவும், ராகுல் காந்தியும் ஏற்றுக் கொள்கிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினர்[4]. பின்னர், டி.ஆர். பாலு விளக்கம் அளித்தார்[5]. அவர் கூறுகையில், “திமுக உறுப்பினர் செந்தில்குமார் கூறிய கருத்துகள் ஏற்புடையது அல்ல. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இதை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு உறுப்பினர் செந்தில்குமாரை எச்சரித்துள்ளார்[6]. செந்தில்குமார் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்[7]. அவையிலும் மன்னிப்புக் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னிப்பு கோருவார்’ என்றார்[8].

மு..ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்: இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில்[9], “தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த கழகத் தலைவர் மு..ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றையும் செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார்,” என்று சுட்டிக்காட்டியுள்ளார்[10]. தொடர்ந்து அவையில் செந்தில்குமார் பேசுகையில், ” நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்[11]. எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை[12]. நான் கவனக்குறைவாகப் பேசியது அவை உறுப்பினர்கள், சில தரப்பினரின் உணர்வுகளைப் புண்படுத்திருந்தால் நான் கூறியவற்றை திரும்பப் பெறுகிறேன்[13]. இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்றார்[14].

இயற்கைப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்: முன்னதாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து டி.ஆர்.பாலு பேசினார். அப்போது, தமிழகம் முழுவதும், 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட வெள்ளம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குள் 07-12-2023 அன்று ராஜநாத் சிங், சென்னைக்கு வந்து புயல் நிலவரம், நிவாரணம் பற்றி ஸ்டாலினை சந்தித்துப் பேசியாகி விட்டது. இரண்டாவது தவணையாக 540 கோடிகளும் பெற்றாகி விட்டது. ஆகவே, இந்த நிதியுதவிக்காக, பாதுகாப்பு அமைச்சர் வந்த நேரத்தில் அமுக்கி வாசித்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது. கொஞ்சம் நாட்கள் ஆன பிறகு, “திராவிட மாடல்” வேலை செய்யஆரம்பித்து விடும். பொறுமையாக கவனித்துப் பார்க்க வேண்டும். இனி காங்கிரஸ், சமஜ்வாடி கட்சியினர் ஏநெப்படி-எவ்வாறு எதிர்த்தனர் என்பதை கவனிக்கலாம்.

ஹிந்து மதத்தை பிடிக்காதவர்கள், வேறு மதத்திற்கு சென்றுவிடலாம்: இந்நிலையில் ‛இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான சமாஜ்வாதி முதல் முறையாக ஹிந்து மதம் குறித்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது[15]. இது தொடர்பாக சமாஜ்வாதி மூத்த தலைவரும், அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவருமான ஐ.பி.சிங் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[16]: யாராவது இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாக பேசினால், முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துகின்றனர்[17]. அதற்காக உயிரைத் தியாகம் செய்யவும் அவா்கள் துணிகின்றனா்[18]. [ஆனால், உயிரை எடுப்பதைப் பற்றி பேசவில்லை.] ஆனால், சில ஹிந்துக்கள், தங்களது கடவுள், வேதங்கள், புராணங்கள், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து தினமும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்[19][பிறகு உபியில் பெரியார் சிலையை ஏன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை].

© வேதபிரகாஷ்

08-12-2023


[1] மீடியான், பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார்!, அருள்குமர், 08-12-2023.

[2] https://mediyaan.com/dharmapuri-dmk-mp-apologized-publicly-senthil-kumar/

[3] இ.டிவி.பாரத், வெளிப்படையாக மன்னிப்பு கோருகிறேன்” – தர்மபுரி எம்.பி செந்தில்குமார், ETV Bharat Tamil Nadu Desk; Published: Dec 5, 2023, 9:15 PM

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/dmk-mp-senthil-kumar-apologize-gaumutra-controversial-speech-in-parliament/tamil-nadu20231205211459689689986

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோ மூத்ராசர்ச்சை : மக்களவையில் வருத்தம் தெரிவித்த திமுக எம்.பி, WebDesk, Dec 06, 2023 15:13 IST.

[6]  https://tamil.indianexpress.com/tamilnadu/senthilkumar-mp-says-sorry-in-parliament-for-controversy-word-1779771

[7] சமயம், டெல்லியில் வெடித்த சர்ச்சை : திமுக எம்.பியை கண்டித்த முதல்வர் ஸ்டாலின் : பாஜக வெற்றியை அப்படி விமர்சிக்கலாமா?, Authored By, எழிலரசன்.டி | Samayam Tamil | Updated: 6 Dec 2023, 12:29 pm

[8]https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-condemn-dmk-mp-senthil-kumar-controversial-remark-gaumutra-over-bjp-win-election/articleshow/105770060.cms

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Senthil kumar regret : ”மன்னிப்பு கேள்என்ற T.R.பாலுவருத்தம் தெரிவித்த திமுக எம்.பி! | gaumutra, By : ABP NADU , ABP NADU | Updated : 07 Dec 2023 05:07 PM (IST)

[10] https://tamil.abplive.com/videos/news/politics-senthil-kumar-apologies-for-speech-in-parliment-latest-news-watch-video-154594

[11] தினத்தந்தி, வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்திமுக எம்.பி. செந்தில்குமார், டிசம்பர் 6, 1:27 am (Updated: டிசம்பர் 8, 10:28 am).

[12] https://www.dailythanthi.com/string-pearls/i-sincerely-apologize-dmk-mp-senthil-kumar-1085008

[13] தமிழ்.நியூஸ்.18, விஸ்வரூபம் எடுத்த கோமியப் பிரச்னைமன்னிப்பு கோரிய திமுக எம்.பி.! என்ன நடந்தது?, FIRST PUBLISHED : DECEMBER 6, 2023, 9:21 AM IST; LAST UPDATED : DECEMBER 6, 2023, 9:21 AM IST.

[14]  https://tamil.news18.com/tamil-nadu/dmp-mp-apologies-for-his-controversial-speech-in-parliament-1259244.html

[15] தினமலர், ஹிந்துக்களை இழிவுப்படுத்துவதை நிறுத்துங்கள்: முதல்முறையாக திமுக.,வுக்கு சமாஜ்வாடி கண்டனம், பதிவு செய்த நாள்: டிச 07,2023 17:52

[16] https://m.dinamalar.com/detail.php?id=3498300

[17] தினமணி, ஹிந்து மதம் மீதான விமா்சனத்தை திமுக நிறுத்த வேண்டும்: சமாஜவாதி கட்சி, By DIN  |   Published On : 08th December 2023 12:46 AM  |   Last Updated : 08th December 2023 12:46 AM  |

[18] https://www.dinamani.com/india/2023/dec/08/dmk-should-stop-criticizing-hinduism-samajwadi-party-4118855.html

[19] காமதேனு, இந்துக்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்திமுகவை சாடும் சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ், Updated on : 08 Dec 2023, 8:48 am

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கோரல், பிஜேபி அல்லாத கட்சிகள் எதிர்ப்பு – நிதர்சனமா, தேர்தல் யுக்தியா? (1)

திசெம்பர் 12, 2023

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கோரல், பிஜேபி அல்லாத கட்சிகள் எதிர்ப்புநிதர்சனமா, தேர்தல் யுக்தியா? (1)

04-12-2023 முதல் 22-12-2023 வரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டம்: திமுக, திமுக ஆதரவு எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் ஏதாவது ஒரு விதத்தில் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்ள எதையாவது பேசுவது என்பதனை கொள்கையாகக் கொண்டுள்ளனர் என்பதை அறியலாம். இதற்கு, ஏ. ராஜா, திருமாவளவன், வெங்கடேசன் முதலியோரை உதாரணமாக சொல்லலாம். தமிழில் பேசுவது என்பது மட்டுமல்லாது, திராவிடம்-ஆரியம், வடக்கு-தெற்கு, இந்தி-தமிழ், பெரியாரிஸம்-நாத்திகம் என்று பேசி பிரிவினை நோக்கில் கருத்துத் தெரிவிப்பர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா பற்றிய விவாதத்தில் மறுபடியும் அத்தகையப் பிரச்சினை உண்டாகியது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது[1]. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது[2]. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

திமுக செந்தில்குமாரின் அநாகரிகமான இந்துவிரோத பேச்சு: இதனையடுத்து, நேற்று (05-12-23) இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.  ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா விவாதத்தில், மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. செந்தில் குமார், “இந்தி  பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் தான் பா.. பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவான கெளமூத்ரா என்று தான் சொல்வோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா...வால் ஆட்சியை கைப்பற்ற முடியாது,” என்று பேசினார். திமுக எம்.பி. செந்தில் குமார், பா.ஜ.க வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசிய போது பயன்படுத்திய வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பியது. தேசிய ஒற்றுமை, இந்திய மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மூலம் அமைதி மேலோங்க வேண்டும் என்றெல்லாம் நல்லமுறையில் விவாதிப்பதை விடுத்து, இத்தகைய கேவலமான சொல்லாடலை உபயோகித்ததை, பெரும்பாலான எம்.பிக்களை கோபமூட்டுவதாக இருந்தது.

காங்கிரஸ், சமஜ்வாதி கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தது: செந்தில் குமார் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் செந்தில் குமார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், செந்தில் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.கவினர் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில், செந்தில் குமார் அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருகிறது என்பதால் நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.  வழக்கம் போல மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், அவரின் நிலை, சித்தாந்தம், இந்துவிரோத சிந்தனை எல்லாம் மாறிவிட்டதா என்று கவனிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எல்லோரும் கேட்டு விட்டார்கள், அவரது விரோத-சிந்தனை கோடிக் கணக்கான இந்தியர்களுக்குத் தெரிந்து விட்டது, இதனால், அரசியல் நஷ்டம் உண்டாகும் என்ற பயத்தில், மன்னிப்புக் கேட்டுள்ளது தெரிகிறது. ஏனெனில், விகடன், அந்த ஆள் அப்படியில்லையே என்ற தொணியில் செய்தி வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம்.

கோமூத்திரம் / பசுவின் சிறுநீர் பேச்சு: ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா விவாதத்தில் டிசம்பர் 5ம் தேதி பங்கேற்று பேசிய தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் செந்தில்குமார், ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவது குறித்து குறிப்பிட்டபோது[3], “வடக்கே இந்துத்துவாவை ஆதரிக்கும் மாநிலங்கள் அல்லது நாங்கள்மாட்டு மூத்திர மாநிலங்கள்என்று அழைக்கும் மாநிலங்களில்தான் பா.. வெற்றிபெற முடியும். தென்னிந்தியாவுக்குள் பா..வால் வரவே முடியாது,” கௌ மூத்ரா (கோ மூத்ரா) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்[4]. அந்த வார்த்தை பின்னர் அவைக் குறிப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு நீக்கப்பட்டது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் கூறிய கருத்துக்கு மக்களவையில் பாஜக உறுப்பினர்களும் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.பி. செந்தில்குமார் பேசியது தொடர்பாகப் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘கோ மூத்திர மாநிலங்கள்தொடர்பாக, மக்களவையில் அவர் பேசியதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது சொந்த கருத்து. ஆனால், கௌமுத்ராவை நாங்கள் மதிக்கிறோம்,” எனப் பதில் தந்துள்ளார்[5].

காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கௌமதாவையும் நம்புகிறது: மற்றொரு காங்கிரஸ் எம்.பியான ராஜீவ் சுக்லா[6], “திமுகவின் அரசியல் வேறு. காங்கிரஸின் அரசியல் வேறு. இந்த விஷயத்தில் காங்கிரஸ் உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கௌமதாவையும் நம்புகிறது. நாங்களும் நம்புகிறோம். அனைத்து மதத்தினரையும் இணைத்து முன்னேறுவோம்,” எனத் தெரிவித்துள்ளார்[7]. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிரிஷ்ணம் கூறுகையில், “திமுக தலைவர்கள் தொடர்ந்து இதோபோன்று சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருந்தால், பாஜக “கோ மூத்திர மாநிலங்கள்” மட்டுமல்ல அனைத்து மாநிலங்களில் ஆட்சி அமைக்கும்,” என்று கூறினார்[8]. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்.பி, கார்தி சிதம்பரம்[9], “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் தாம் பேசிய கருத்துகளை திரும்ப பெற வேண்டும்” என கூறி இருந்தார்[10]. இவர் சனாதன தர்மம் விவகாரத்திலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது[11]. இதனால் ஏற்பட்ட அமளியால் கேள்வி நேரம் 06-12-2023 புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது[12].

மன்னிப்புப் போர்வையில் அமுக்கி வசிக்கும் திமுக: ஆக காங்கிரஸ், சமஜ்வடி கட்சிகளுக்கு தங்களுக்கு இருக்கும் இந்து ஓட்டுகளும் போய் விடுமோ என்ற பயம் வந்து விட்டது. இனியும் இந்த இந்துவிரோத திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தால், நிச்சயமாக, வடமாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்பது அக்கட்சிகளுக்குத் தெரிந்து விட்டது. முஸ்லிம் ஓட்டு இருக்கிறது, அதனால், இந்து ஓட்டும் கிடைக்கும் என்று மம்தா உறுதியுடன் இருப்பதால், திமுக-கூட்டுப் பற்றி கவலைப் படுவது இல்லை. ஆம்-ஆத்மி மட்டும் சீக்கியர் ஆதரவு முதலியன இருப்பதால், இதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. எனவே, கடைசியில் பாதிப்பு திமுகவிற்குத் தான். ஆகவே தான், “மன்னிப்பு” போர்வையில், அமுக்கி வாசிக்க தீர்மானித்துள்ளது. போதா குறைக்கு வெள்ளம்-நிவாரணம் போன்ற பிரச்சினைகள் இருப்பதால், மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால் பணமும் கிடைக்காது என்பதும் தெரியும்.

© வேதபிரகாஷ்

08-12-2023


[1] நக்கீரன், நாடாளுமன்றத்தில் சர்ச்சை பேச்சு; “மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – செந்தில் குமார் எம்.பி,  நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 06/12/2023 | Edited on 06/12/2023

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/india/controversial-speech-parliament-and-senthil-kumar-mp-says-i-beg-your-pardon

[3] தினமணி, திமுக எம்.பி. செந்தில்குமார் கருத்தால் மக்களவையில் அமளி, By நமது சிறப்பு நிருபர்  |   Published On : 07th December 2023 03:09 AM  |   Last Updated : 07th December 2023 03:09 AM.

[4] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2023/dec/07/lok-sabha-by-dmk-mp-senthilkumar-4118398.html

[5] புதியதலைமுறை, PT National : “வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்“- திமுக எம்பி செந்தில்குமார்! பிரதமர் மோடி ட்வீட்!, PT Web, 06 December 2023, 10:44 pm.

[6] https://www.puthiyathalaimurai.com/india/today-pt-national-news

[7] புதியதலைமுறை, வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்“- திமுக எம்பி செந்தில்குமார்!, PT Web, 06 December 2023, 10:44 pm.

[8] https://www.puthiyathalaimurai.com/india/dmk-mp-senthilkumar-stokes-controvers-on-bjp-won?utm_source=website&utm_medium=related-stories

[9] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Gomutra: திமுக எம்.பியின் சர்ச்சை பேச்சு! வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டார், Kathiravan V HT Tamil, Dec 06, 2023 11:44 AM IST

[10] https://tamil.hindustantimes.com/tamilnadu/dmk-mp-senthil-kumars-gomutra-states-controversy-zoho-ceo-sridhar-vembu-apologizes-to-north-indians-131701842415756.html

[11] மாலைமலர், கோமூத்ரா மாநிலங்கள்என்று சர்ச்சை பேச்சுசெந்தில்குமார் மன்னிப்பு கேட்டார், By Maalaimalar .6 டிசம்பர் 2023 12:36 PM (Updated: 6 டிசம்பர் 2023 1:22 PM).

[12] https://www.maalaimalar.com/news/national/tamil-news-dmks-controversial-talk-of-gaumutra-states-691922

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக் கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலை – செக்யூலரிஸஅரசா, பெரியாரிஸ-நாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (2 )

நவம்பர் 17, 2023

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக்கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலைசெக்யூலரிஸ அரசா, பெரியாரிஸநாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (2 )

விதவிதமான வழக்குப் பதிவு: போலீஸாரின் அறிக்கையின் படி, கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி காலை வரை-

  1.  உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும்,
  2. தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும்,
  3. அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் என மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  4. விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டட்ம 118வது சட்டப்பிரிவின் படி 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்.
  5. மேலும், நேர கட்டுப்பாட்டை மீறியும், தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-ன் படி வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது[1].
  6. பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், குடிசை பகுதிகள் போன்ற பட்டாசு தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது[2].

சரி, இத்தனை ஆண்டுகளாக, அத்தகைய வெடிகள் வெடிக்கப் படவில்லையா? அப்பொழுது ஒன்றும் நடக்கவில்லையா?

ஆயிரக்கணக்கில் பொது மக்களை வெடிவெடித்தார்கள் என்று கைது செய்வதால் என்ன பெருமை கொண்டார்கள்?: இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது[3]. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவ.12 மற்றும் நவ.13 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்காக குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலான நேரத்தை தவிர்த்து[4], மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது[5]. அதில் 2,095 பேர் கைது செய்யப்பட்டனர்[6]. இதில் அதிகபட்சமாக சென்னையில் 558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2005 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது[8]. இப்படியெல்லாம் சொல்லிக் கொள்ள பெருமையாகவா இருக்கிறது?

சென்னையில் பதிவு செய்யப் பட்ட வழக்குகள்: மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது[9]. தொடர்ந்து இந்த தனிப்படை போலீஸார், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது[10].சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மாசு அளவு 100 ஐ தாண்டி இருந்தது. சென்னை, பெருங்குடி- 178, அரும்பாக்கம் – 159, ராயபுரம் – 115, வேளச்சேரி – 117 என அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100-ஐ தாண்டியது அதேபோல வேலூர், கடலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் காற்று மாசு மோசமடைந்து உள்ளது[11]. தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது[12].

பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?[13]: திருவள்ளூர்- திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்ததாகவும் சுமார் 111 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[14].

மதுரை- மதுரை மாநகர் பகுதிகளில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாநகர காவல்துறையினர் 141 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்- தஞ்சாவூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது‌. அதில் 40 பேர் கைது செய்யப்பட்டு சொந்த பினையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை- விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 27 வழக்குகளும் நெல்லை மாநகரப் பகுதியில் 20 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம்- வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி- தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு குறிப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 16 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி- புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 56 பேர் மீது புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பாரபட்சம் மிக்க நடவடிக்கைகள் இந்துவிரோதமாக இருப்பது ஏன்?: தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதால் மட்டும் தான் மாசு உண்டாகி, சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பது போன்ற பிரமையை உண்டாகி வைக்கப் பட்டுள்ளது. மற்ற வழிகளில் எவ்வாறெல்லாம் மாசு தினம்-தினம் உண்டாகி-உண்டாக்கி சுற்றுச்சூழலை பதித்து வரப் படுகிறது என்று எடுத்துக் காட்டப் படுவதில்லை. அதே போல, மற்ற பண்டிகைகளின் மீது, கோடிக்கணக்கில் உயிர்கள் கொலை செய்யப் படுகின்றன. அப்பொழுது, யாரும் உயிர்கொலை செய்யாதே என்று அறிவுருத்துவது இல்லை, உயர்நீதி-உச்சநீதி மன்றங்களுக்குச் செல்வதில்லை. திக-திமுகக்கரர்கள் வசை பாடுவதில்லை, தூஷிப்பதில்லை.  இதே பெரியாரிஸ-நாத்திக கோஷ்டிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மாறாக வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். பிறகு, இத்தகைய முரண்பாடுகளை செக்யூலரிஸ நாட்டில் எவ்வாறு புரிந்து கொள்வது?

© வேதபிரகாஷ்

16-11-2023


[1] தமிழ்.இந்து,தமிழகம் முழுவதும் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு @ தீபாவளி , செய்திப்பிரிவு, Published : 13 Nov 2023 10:14 PM; Last Updated : 13 Nov 2023 10:14 PM.

[2]   https://www.hindutamil.in/news/tamilnadu/1152686-2206-cases-of-breaking-firecrackers-across-tamil-nadu-registered-at-diwali-~XPageIDX~.html

[3] தினமணி, கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 11 போ் கைது, By DIN  |   Published On : 15th November 2023 03:15 AM  |   Last Updated : 15th November 2023 03:15 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2023/nov/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4106087.html

[5] நக்கீரன், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு; ‘தமிழகம் முழுவதும் 2,206 வழக்குகள் பதிவு’ – காவல்துறை தகவல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 13/11/2023 (23:29) | Edited on 13/11/2023 (23:44)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/2206-cases-registered-across-tamil-nadu-police/

[7] மாலைமுரசு, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு மீறல்தமிழ்நாடு முழுவதும் அதிக வழக்குகள் பதிவு!, Webteam, Nov 13, 2023 – 17:39.

[8] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Violation-of-timing-in-bursting-of-firecrackers

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Diwali 2023: பட்டாசு நேரம்.. விதிமீறியதால் 2095 வழக்குகள்.. தமிழ்நாடு காவல்துறை அதிரடி!, By: உமா பார்கவி,Published at : 12 Nov 2023 07:20 PM (IST)  | Updated at : 13 Nov 2023 03:10 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/chennai/chennai-regitered-case-118-members-for-bursting-fire-crackers-in-violation-rules-150096

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Diwali 2023: அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 118 மீது வழக்குப்பதிவுபோலீஸார் அதிரடி!, Karthikeyan S HT Tamil, Nov 12, 2023 02:03 PM IST.

[12] https://tamil.hindustantimes.com/tamilnadu/118-cases-filed-for-violating-sc-order-on-bursting-firecrackers-in-chennai-131699777684917.html

[13] தமிழ்.நியூஸ்.18, விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?, FIRST PUBLISHED : NOVEMBER 13, 2023, 9:34 AM IST; LAST UPDATED : NOVEMBER 13, 2023, 12:40 PM IST;

[14] https://tamil.news18.com/tamil-nadu/chennai-police-registerd-555-cases-of-bursting-firecrackers-beyond-the-permitted-time-1230516.html

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக் கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலை – செக்யூலரிஸ அரசா, பெரியாரிஸ-நாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (1)

நவம்பர் 17, 2023

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக்கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலைசெக்யூலரிஸ அரசா, பெரியாரிஸநாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (1)

60-70-80 வயதானவர்கள் தீபாவளி அன்று தமது 1960-70 ஆண்டுகளின் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றி நினைவு: 60-70-80 வயதானவர்கள் தீபாவளி அன்று தமது 1960-70 ஆண்டுகளின் தீபாவளி கொண்டாட்டங்களை நினைத்துப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ஆளுக்கு ஆள் 25 பைசா, 50 பைசா,  ஒரு ரூபா என்று டீம் போட்டு வசூல் செய்து அல்லது சேமித்து, டவுனுக்கு கும்பலாகச் சென்று வெடி வாங்கி வருவது வழக்கம். டவுனில் பட்டாசு விலைகுறைவாக இருக்கும். இரவு கடந்து, விடியற்காலையில் வந்து சேரும் பொழுது, அப்பொழுதே பட்டாசு வெடிப்பது வழக்கமாக இருந்தது. காலை நான்கு மணிக்கு வெடிவெடித்து, தெருவில் உள்ள எல்லோரையும் எழுப்பி விடுவது வழக்கமாக இருந்தது. ஒன்றாகத் தான் சேர்ந்து பட்டாசு வெடிப்பது பழக்கமாக இருந்தது. இதனால், பட்டாசு வாங்காத நண்பர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து வெடி வெடிப்பர்.அப்பொழுதெல்லாம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல், சந்தோசமாக சிறுவர் முதல் பெரியவர் வரை வெடி வெடித்து வந்தனர்.

அந்தகால பட்டாசு நினைவுகள்: தீபாவளிக்கு முன்பே பட்டாசு வங்கி, வெயிலில் காய வைப்பதும் உண்டு. அதற்கு, நண்பர்கள் மாறி-மாறி மொட்டைமாடிகளில் காவல் காப்பர்.ஆப்பொழுதெல்லாம் தீபாவளிக்கு நல்ல மழையும் வந்ததுண்டு. மழை வந்தால், கிரிக்கெட் போல “வாஸ்ட் அவுட்” தான்! சாயங்காலத்தில் பத்திரமாக டப்பாக்களில் போட்டு கீழே கொண்டு வருவர். 25 குருவிக்கட்டு ரூ.5/- தான். இதே போல, சிவாஜி, லக்ஷ்மி, கிருஷ்ணா வெடிகள் பிரபலம். சிவாஜி நடுத்தர மக்களின் வெடி, லக்ஷ்மி, கிருஷ்ணா பணக்காரர்களின் வெடி என்றெல்லாம் சொல்வதுண்டு. 1000, 5000, 10,000-வாலா சரவெடிகள் எல்லாமே பணக்காரர்களின் வெடி தான். அவை வெடித்தால், அங்கு சென்று வேடிக்கைப் பார்ப்பது வழக்கம். யார் வீட்டின் முன்பாக அதிகமாக வெடிவெடித்த குப்பை இருக்குமோ, அந்த வீட்டு பசங்க, “எங்க வீட்டில் இத்தனை பட்டாசு வெடிச்சோம்,” என்று பெருமையாகக் கூறிக் கொள்வார்கள்.  இப்பொழுது நிலைமை மாறி விட்டது. 60-70-80 வயதானவர்கள் காலை 3-4 மணிக்கு எழுந்தால், ஒளியையும் காணோம், ஒலியையும் காணோம்!

தீபாவளி உலக வியாபாரம் ஆன நிலை: இப்பொழுது 2023ல் நிலைமை நிறையவே மாறி விட்டது. விலை அதிகமாகி விட்டது. தீபாவளிக்கு எதிரான பிரச்சாரங்களும் அதிகமாகி விட்டன. ஆனால், தீபாவளி வைத்து செய்யும் வியாபாரங்கள் அதிகமாகியுள்ளன. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் பொருளாதார சந்தையில், சீனாவிலிருந்து தான் பெரும்பாலான தீபாவளி கொண்டாட்டப் பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுடன், இந்திய வியாபாரிகளின் கூட்டு அதிகமாகவே இருக்கின்றன. ஒரு வருடம், ஒரு வேளை இந்தியர் தீபாவளி கொண்டாடா விட்டால், சீனா தான் அதிக அளவில் பாதிக்கப் படும் எனலாம். இந்தியர்களின் பங்களிப்பு உலகம் முழுவதும் இருப்பதினால், இந்திய வம்சாவளினர் அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகளில் பெரிய பதவிகளில் வந்து கொண்டிருப்பதால், அகில்-உலகில் தீபாவளி முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆனால், இந்தியாவில் கடந்த ஆண்டுகளாக வெடி வெடிக்கத் தடை என்று கெடுபிடி ஆரம்பித்துள்ளது. இந்தியாவுக்கு விமானத்தில் வரும் டிக்கெட் விலையும் உயர்த்தப் பட்டது.

திராவிடபெரியாரிஸ்ட்நாத்திகர்களின் தீபாவளி விரோதம்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், திக-திமுக தீபாவளியை அதிகமாகவே எதிர்த்து வந்துள்ளது-வருகின்றன. இப்பொழுது, திமுக ஆட்சிக்கு வந்த்திலிருந்து, தீபாவளி எதிர்ப்பு அதிகமாகி விட்டது. சனாதனத்தை ஒழிப்போம் என்று ஆரம்பித்து, போலீஸ் கைது, ஜாமீனில் விடுதலை என்ற நிலைக்கும் சென்று விட்டது. இனி, சாதாரண மக்கள், கிழவர்கள், சிறுவர்கள் எல்லாம் கூட போலீஸார் கைது செய்யப் பட்டனர், ஜாமீனில் வெளிவந்தனர் என்று சொல்லக் கூடிய நிலை வந்துவிட்டது எனலாம். வடக்கில் இதெல்லாம் ஏற்கெனவே நடந்தேறி விட்டன. இருப்பினும், இதனால், அவர்கள் எந்த அளவுக்கு மனம் பாதிக்கப் படுவர் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏதோ செய்யக் கூடாத குற்றத்தை செய்து விட்டது போலவும், போலீஸார் வீடுகளுக்கு முன்னர் வந்து மிரட்டுவதும், வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்வதும், முதலிய காரியங்கள் அடாவடித் தனமாகத்தான் இருக்கிறது. பண்டிகை நேரத்தில், ஆண்டாண்டுகளாக, சம்பிரதாயங்களுடன் செய்து வரும் சடங்குகளை, அதிலும் மகிழ்ச்சியுடன் குழந்தைகள் முதல் முதியோர் வரை குடும்பம்-நண்பர் என்று சகிதமாக, ஊரே, நகரமே, நாடே கொண்டாடி வரும் விழாவில், எப்படி இத்தகைய கைதுகள் எல்லாம் நிறைவேற முடியும்?

இப்பொழுதைய ஆட்சியாளர் எதனை ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்?: இதுபோன்று மற்ற பண்டிகைகளின் போதும் போலீசார் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கிறார்களா, சிறப்பு படை அமைத்து கவனிக்கிறார்களா அல்லது ஏதோ பெரிய குற்றம் நடந்து விடப்போவது போன்று வேவு பார்க்கிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் மற்ற பண்டிகைகளில் கோடிக்கணக்கான விலங்குகள் பலி இடப்படுகின்றன, கொடூரமான வகையில் அத்தகைய செயல்களும் – உயிர்வதை – நடந்து வருகின்றன. கொல்லாமை- ஜீவகாருண்யம் என்றெல்லாம் பேசி அதை வைத்தும் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள் அந்த நேரங்களில் கண்டுகொள்ளாமல் தான் இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால், ஜீவகாருண்யம் பேசிக் கொண்டு விலங்குகளின் மாமிசம் முதலியவற்றை உட்கொண்டு வருகிறார்கள். இத்தகைய குரூர செயல்களையும் மீறி, மனப்பாங்கு கொண்டவர்கள் தான் என்று இத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள் என்பதனை கவனிக்கலாம். ஆக இவர்கள் எதனை ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்? 

தீபாவளி நேரத்தில் நேரம் கடந்து வெடித்தவர்களின் மீது வழக்கு: இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (12.11.2023) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது[1]. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது[2]. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அறிவுறுத்தியிருந்தது[3]. இதில் விசித்திரம் என்னவென்றால், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டதா-இல்லையா போன்ற விவரங்கள் தெரியவில்லை. குறிப்பாக அரசாங்கம் எப்படி அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடமுடியும், நிர்ணயிக்க முடியும், கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காவல் துறை சார்பில் தனிப்படையையும் அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன[4]. அந்த அளவுக்கு பட்டாசு வெடிப்பது என்ன பெரிய குற்றமா என்று தெரியவில்லை.

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206  / 2246 வழக்குகள் பதிவு: தமிழகம் முழுவதும் நவ.12 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவ.13 (திங்கட்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நேராக கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 2246 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறது தினகரன். சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்[5]. அதன்படி, இவ்வாறெல்லாம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, கைதுகளும் செய்யப் பட்டது[6].

© வேதபிரகாஷ்

16-11-2023.


[1] தினமலர், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 2,095 பேர் கைது, பதிவு செய்த நாள்: நவ 14,2023 02:02.

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3480764

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தீபாவளி பண்டிகை.. விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இத்தனை பேர் கைதா? தமிழக காவல்துறை விளக்கம், By Velmurugan P Published: Monday, November 13, 2023, 23:10 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/diwali-festival-2095-people-arrested-for-bursting-firecrackers-in-violation-of-norms-556657.html

[5] தினகரன், நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 2246 வழக்குகள் பதிவு, November 14, 2023, 2:09 am,

[6] https://www.dinakaran.com/timerestriction-crackersburst-2246cases-registered-tamilnadu/

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – சென்னை உயர்நீதி மன்றம்! (1)

நவம்பர் 7, 2023

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்சென்னை உயர்நீதிமன்றம்! (1)

சனாதன விவாதம் தொடர்கிறதா?: உதயநிதி மீது ஏற்கெனவே இந்தியாவில் பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து நிலுவையில் உள்ள நிலையில், அவர் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காதது பற்றி சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழர் சமுதாய கூட்டமைப்பு ஆகஸ்ட் மாதம் 2023 உள்ளரங்கு கூட்டம் தெரிவித்தது. திராவிட கருத்தியலுக்கு எதிராக “திராவிட ஒழிப்பு மாநாடு” என்ற பெயரில் நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பூந்தமல்லி காவல் துறையினர் நிரகரித்தனர். இதனால், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தனர். அதை விசாரித்து உத்தரவிட்ட போது, இக்கருத்தைநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அமைச்சர்களளை, போலீஸார் அவ்வாறு கைது செய்ய முடியுமா, அல்லது ஏன் செய்யவில்லை போன்ற கேள்விகளுக்கு யார் பதிலளிப்பர் என்று பார்க்க வேண்டும்.

விண்ணப்பத்தை பூந்தமல்லி காவல் துறையினர் நிராகரித்தது: தமிழ்-திராவிடம் மோதல்களும் வெளிப்பட்டுள்ளது, உண்மையான சித்தாந்த மோதலா அல்லது திமுகவைக் காப்பாற்ற செய்யப் படும் நாடகமா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே “தமிழ் தேசியக் குழுக்கள்” தங்களது பிரிவினைவாத நோக்கத்தில், “திராவிடத்தை” எதிர்த்து வருகின்றன. இதனால், இப்பொழுதும், அவை அத்தகைய வாதத்தை முன் வைக்கின்றன. “திராவிட” என்ற அடைமொழியை வைத்து அரசியல் செய்வதால், அத்தகையைக் கட்சிகளுக்கு அது தேவையாகிறது. ஆனால், தமிழ்-திராவிடம் வாத-விவாதங்கள் உதவாது. ஏனெனில், இவற்றால், யாருக்கும் எந்தவித பலனும் இல்லை. “சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது” என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது[1]. திராவிட கருத்தியலுக்கு எதிராக “திராவிட ஒழிப்பு மாநாடு” என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2023 உள்ளரங்கு கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி கோரிய தமிழர் சமுதாய கூட்டமைப்பின் விண்ணப்பத்தை பூந்தமல்லி காவல் துறையினர் நிரகரித்தனர்[2]. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[3].

திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு: இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்துக்காக மட்டும் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது எனக்கூறி, மனுதாரர் அளிக்கும் புதிய விண்ணப்பத்தின் மீது அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது[4]. மேலும், யாரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தது[5]. இந்த உத்தரவின் அடிப்படையிலும், சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டதன் அடிப்படையிலும், திராவிட கொள்கைகளுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் மாதவரம் காவல் நிலையத்தில் மனு அளித்தார்[6]. இந்த மனுவை காவல்துறை பரிசிலீக்கவில்லை எனக்கூறி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உள்ளரங்குகளில் நடக்கும் கூட்டங்களுக்குக் கூட ஏன் போலீஸாரிடம் அனுமதி கேட்கப் படவேண்டும் என்று தெரியவில்லை. சமீப காலத்தில், அவ்வாறு உள்ளரங்கங்களில் பேசிய பேச்சுகள் சர்ர்சைகளுக்கு உள்ளாவதால், அத்தகைய கட்டுப் பாடு வந்துள்ளதா என்று தெரியவில்லை. வயதான ஆர்.பி.வி.எஸ். மணியன் கூட உள்ளரங்கத்தில் பேசிய பேச்சிற்காகத் தான் கைது செய்யப் பட்டு, பிறகு, பிணையில் வெளியில் விடப்பட்டுள்ளார்.

நீதிபதி ஜெயசந்திரன் முன்பு திங்கள்கிழமை 6-11-2023 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு திங்கள்கிழமை 6-11-2023 அன்று விசாரணைக்கு வந்தது[7]. சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது[8]. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்[9]. குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது, போதைப்பொருட்கள், ஊழல், தீண்டாமை, சமூக தீமை ஆகியவற்றை ஒழிப்பது குறித்து பேசுவதில் கவனம் செலுத்தலாம்[10]. சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது[11]. சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்[12].

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அவர்கள் பேசியது சட்டவிரோதமானது மக்களை பிளவுபடுத்துவது அல்லது இந்துக்களை தாக்குவது என்ற நிலை இருக்கும் பற்றத்தில் ஏற்கனவே போலீசார் அவர் மீது அத்தகைய நட எடுத்து இருக்கலாம். ஆனால் எடுக்கவில்லை, இப்பொழுது நீதிமன்றம் வெளிப்படையாக அத்தகைய நிலையை எடுத்து காட்டி இருப்பதனால் இப்பொழுது அவர்களை போலீசார் கைது செய்வார்களா அல்லது ஏதாவது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. சட்டத்திற்கு முன்பாக எல்லோரும் சமம் என்ற பொழுது இத்தகைய வெறுப்பு பேச்சுகள் பேசும் நிலையில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள், சிலர் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள், மேன்மேலும் சிலர் தொடந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இது காலங்காலமாக அதாவது 70 மற்றும் நூறு ஆண்டுகளாகவே இத்தகைய வெறுப்பு பேச்சுகள், வன்முறை வாய்ப்பேச்சுகள், ஏற்றுக் கொள்ள முடியாத காழ்ப்பு வாத-வாதங்கள் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே ஒரு செக்யூலர் அரசு, சமதர்மமான அரசு, அதிலும் பெரியார், பகுத்தறிவு நாத்திகம் என்று எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த திராவிடத்துவ அரசு இந்து விரோதமாக செயல்படுவது தான் விசித்திரமாக இருக்கிறது.

நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது: அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாப்பதற்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்கள், அவர்கள் உறுதிமொழியை மீறி செயல்படுவதால், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் சில குழுக்கள் மீது பொதுமக்களின் அதிருப்தி இருக்கும். இந்நிலையில், இந்த கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது பொதுமக்களிடையே நிலவும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, கூட்டத்துக்கு அனுமதி அளிப்பதன் மூலம் நீதிமன்றமும் தவறிழைக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், நடந்து விட்ட கூட்டம், பேசிய பேச்சாளர்கள், அவர்கள் அமைச்சர்களாக இருக்கும் நிலை முதலியவற்றையும் மீறி, இப்பொழுது, போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

© வேதபிரகாஷ்

07-11-2023.


[1] தமிழ்.இந்து, சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிருப்தி, ஆர்.பாலசரவணக்குமார், Published : 06 Nov 2023 12:38 PM, Last Updated : 06 Nov 2023 12:38 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1149695-police-should-have-taken-action-against-ministers-who-spoke-about-abolition-of-sanatana-dharma-hc-1.html

[3] தினமலர், சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் மது, ஊழலை ஒழிக்க கவனம் செலுத்தலாம்: உதயநிதிக்கு ஐகோர்ட் அறிவுரை, மாற்றம் செய்த நாள்: நவ 06,2023 18:23.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3475350

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சனாதன சர்ச்சை! திமுக அமைச்சர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்! சென்னை ஐகோர்ட் கருத்து, By Vigneshkumar Updated: Monday, November 6, 2023, 17:24 [IST].

[6] https://tamil.oneindia.com/news/madras-high-court-says-no-one-can-spread-hatred-in-udhayanidhi-sanatan-dharma-row-554599.html?story=1

[7] விகடன், சனாதான ஒழிப்பு மாநாடு: “அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்!” – உயர் நீதிமன்றம், ராணி கார்த்திக், VM மன்சூர் கைரி, Published: 06-11-2023, at 11 AM; Updated: 06-11-2023 at 11 AM

[8] https://www.vikatan.com/news/action-should-have-been-taken-against-the-ministers-participated-in-the-sanatana-abolition-meeting-high-court

[9] ஜீ.நியூஸ்.இந்தியா, சனாதன விவகாரம்கடமை தவறிய காவல்துறைதமிழக அமைச்சர்களுக்கு நீதிபதி அறிவரை!, Mon, 06 Nov 2023-10:53 am,

[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-disappointed-with-police-department-on-udhayanidhu-stalin-sanatan-dharma-issue-471343/amp

[11] தினத்தந்தி, “காவல்துறை கடமை தவறிவிட்டது..” சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி, நவம்பர் 6, 11:13 am (Updated: நவம்பர் 6, 11:52 am).

[12] https://www.dailythanthi.com/News/State/police-failed-in-their-duty-dissatisfaction-of-chennai-high-court-1081823

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

ஒக்ரோபர் 23, 2023

 

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

 

“மக்கள் சேவையே மகேசன் சேவை” திராவிட ஆட்சியில் எப்படி நடக்கிறது என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள்: எப்படி அரசியல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்துவிரோதிகள், எந்த பிரச்சினையையும் அவ்வாறே மாற்றியமைத்து, பலன் பெற முயற்ச்சிக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். தேர்தல் சமயத்தில் இந்துவிரோத அரசியல்வாதிகள் “ஒழுங்குப் பிள்ளை” போல பட்டை-கொட்டைகளுடன் கோவில்களுக்கு வருவது, கும்பிடுவது அறிந்ததே. ஏனெனில், இந்துக்களின் ஓட்டு தேவை. அதே போல, ஒரு பக்கம் பிள்ளையார் சிலை உடைத்து, “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று கூவி ஆட்சிக்கு வந்ததும் தெரிந்த விசயமே. அப்படி, “இந்து திருடன்” என்று அவமதித்து, வனவாசம் சென்று ஜோதிடரைப் பார்த்து, பரிகார யாகம் செய்து, மறுபடியும் ஆட்சிக்கு வந்த கதையும் தெரிந்த விசயமாகி விட்டது. இப்பொழுது அவரின் மகன், மறுமகள், பேரன் என்று அதே ஆன்மீகம்-துன்மார்க்கம் என்ற விளையாட்டுகளில் இறங்கியிருப்பது “ஆன்மீக ஆதரவு” பேச்சில் வெளிப்படுகிறது.

ஆன்மீகம் என்றால் என்ன ஆன்மீகம். பெரியார் ஆத்மாவே இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு, எங்கிருந்து ஆன்மீகம் வரும்?: ஆன்மீகம் என்ற சொல் ஆத்மா என்ற சொல்லின் மீது தான் ஆதாரமாக உருவானது. அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆத்மா உண்டு, அதன் மூலமாக அறியப்படுவது என்னவென்றால் மனிதனுக்கு இறப்பு உண்டு இறந்த பிறகும் வாழ்க்கை ஒன்று போன்ற நம்பிக்கைகளை அடக்கியது ஆத்மா, ஆத்மவியல், ஆன்மீகம் முதலியவை. அவ்வாறு இருக்கும் பொழுது, பெரியாரிஸம், நாத்திகம் அதிலும் குறிப்பாக இந்து விரோதத் தன்மையுடன் கூறும் இந்த சித்தாந்தனத்தில் எவ்வாறு ஆன்மீகம் உள்ளே வந்துப் புகும் அல்லது ஸ்டாலின் சொல்வது போல எவ்வாறு அது தங்களது திராவிடத்துவ கொள்கைக்கு உடன்பட்டு இயைந்து ஒத்துப் போய் எதிர் தன்மையை இல்லாத நிலையில் இருக்கும் என்பது அவர்கள் தான் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. எனவே இது தேர்தல் காலத்தில் மக்களை குறிப்பாக இந்துக்களை ஏமாற்ற பேசும் பேச்சாகவே வெளிப்படையாகப் புலப்படுகிறது. ஏனெனில் வருகிறது கடந்த கால பேச்சுகள், நடத்தைகள், நடவடிக்கைகள், எழுதிப் பேசி அச்சில் வந்திருக்கின்ற புத்தகங்கள், நோட்டீஸ்கள், எல்லாமே இவர்களுக்கு இவர்களின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தி வந்து, ஏற்கவே ஆவணங்களாக அமைந்துள்ளன.

அரசியல் பேச்சுகள் இந்துக்களுக்கு உதவுவது இல்லை, பாதகமாகத்தான் இருந்து வருகின்றன: நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற செய்தி எல்லா மின்-அச்சு ஊடகங்களிலும் வந்துளளது. கலைஞர் செய்தி, முரசொலி முழுவதுமாக வெளியிட்டுள்ளன், மற்றவை சுருக்கமாக, ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளன. சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் விங் 2.0 / Wing2Point0 ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக அரசியல் செய்ய எல்லா யுக்திகளும் கையாளப் படுகின்றன எனூ தெரிகிறது. அதில் வியாபார ரீதியில் எல்லோருமே இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.பணம் கொடுத்தால் வேலைக்கு வருவார்கள்.

திராவிடத்துவ-பாஜக மோதல்களில் இந்துமதம் தாக்கப் படுவது: முதல்வர் பேசுகையில், “ தி.மு..,வை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கங்களை அழிப்போம் எனக்கூறியவர்கள் இங்கு தான் வந்து அடைக்கலம் ஆனார்கள்[1]. இது வரலாறு……….. என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள்.….சமூக வலைதங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டுபோய் சேர்க்கும்[2]ஒருவர் பலநாள் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்துவிடும்[3]. என்னை பொறுத்தவரை எதிர்மறை பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட நேர்மறையான பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியானது[4]. அரசியவாதிகளை தாண்டி ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடமும் அத்துமீறல், மிரட்டல், அடக்குமுறையை ஏவுகிறது பாஜக[5]. இப்படிப்பட்ட சமூக வைரஸாதான் நாம் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறோம். பாஜகவின் சாதி தன்மை தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிரானது அல்ல. இந்தியாவிற்கே எதிரானது[6]. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. சாதி மதத்தின் பெயரால் பிளவுப்படுசத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கக் கூடி ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக்கொண்டிருக்கிறோம்[7]. …. பாசிசத்திற்கு எதிராக நேரடியாக மோதி கொண்டுள்ளோம்[8]. கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது தான் .தி.மு.., .தி.மு..,வும் பா..,வும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்[9]. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்பதால், பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.மிசா, தடா, பொடா என அனைத்தையும் பார்த்துவிட்டோம். மிரட்டல் எல்லாம் கடந்து வந்துவிட்டோம்[10]…… அவர்களின் தற்போதைய முக்கிய வேலை,…….
பாஜக சொல்வதனால் மட்டும் அவை அறியப் படுவதில்லை, ஊடகங்களே நன்றாக விளம்பரம் கொடுத்து வருகின்றன: ஸ்டாலின் தொடர்கிறார், “பாஜகவின் இப்போதைய ஒரே வேலை என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார் என்பதை பார்ப்பதுதான்[11]. துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, ”பாத்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார்”- எனப் பரப்புகிறார்கள்[12]. தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோயிலுக்கும்தான் துர்கா செல்கிறார்…….என்னை மனைவி கோயிலுக்கு செல்வது அவரது விருப்பம்[13]. நான் அதை தடுக்க விரும்பவில்லை[14]. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல[15]……., கோயிலும் – பக்தியும் அவரவர் உரிமை – விருப்பம்! ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெகு மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான்[16]. தலைவர் கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில்: ”கோயில் கூடாது என்றல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது!…. கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மீகத்தையும் – அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். ”

© வேதபிரகாஷ்

23-10-2023


[1] கலைஞர் செய்தி, “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல” : முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேச்சு!, Lenin, Updated on : 21 October 2023, 05:00 PM.

[2] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/10/21/we-are-not-enemies-of-spirituality-said-cm-mk-stalin

[3] நக்கீரன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல” – முதல்வர் மு..ஸ்டாலின், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 21/10/2023 (11:40) | Edited on 21/10/2023 (12:01).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-are-enemy-aryan-domination-and-not-spirituality-says-cm-mk-stalin

[5] தினமணி, நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, By DIN  |   Published On : 21st October 2023 12:51 PM  |   Last Updated : 21st October 2023 12:51 PM.

[6] https://www.dinamani.com/tamilnadu/2023/oct/21/we-are-not-enemies-of-spirituality-cm-stalins-speech-4093802.html

[7] தினமலர், நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் ஸ்டாலின் பேச்சு, மாற்றம் செய்த நாள்: அக் 21,2023 17:11

[8] https://m.dinamalar.com/detail.php?id=3463060

[9] தினத்தந்தி, ஆரியத்துக்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல: முதல் அமைச்சர் மு. ஸ்டாலின், தினத்தந்தி அக்டோபர் 21, 12:46 pm

[10] https://www.dailythanthi.com/News/State/we-are-the-enemy-of-aryam-not-spirituality-prime-minister-mk-stalin-1077268

[11] தமிழ்.நியூஸ்.18, ஆன்மீகத்திற்கு அல்ல.. ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிமுதலமைச்சர் மு..ஸ்டாலின் திட்டவட்டம், LAST UPDATED : OCTOBER 21, 2023, 3:20 PM IST.

[12] https://tamil.news18.com/chennai/dmk-govt-not-against-for-spirituals-its-against-only-for-religious-suppression-1202874.html

[13] விகடன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல!” – முதல்வர் ஸ்டாலின், VM மன்சூர் கைரி, Published: 22-10-2023 at 2 PM; Updated:Yesterday 22-10-2023 at 2 PM

[14] https://www.vikatan.com/government-and-politics/politics/cm-stalin-speech-in-dmk-it-wing-meetin-at-chennai

[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நான் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல! என் மனைவி எந்த கோயிலுக்கு போறாங்க என்பதை பார்ப்பதே பாஜக வேலை!முதல்வர் ஸ்டாலின், vinoth kumar; First Published Oct 21, 2023, 1:00 PM IST; Last Updated Oct 21, 2023, 1:09 PM IST.

[16] https://tamil.asianetnews.com/politics/i-am-not-an-enemy-of-spirituality-cm-stalin-speech-tvk-s2vbid

‘சனாதன ஒழிப்பு மாநாடு’ பெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது?

செப்ரெம்பர் 3, 2023

சனாதன ஒழிப்பு மாநாடுபெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது?

இந்துவிரோதி அமைப்புகள் சேர்ந்து மைடைக்கு வந்திருப்பது: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 02-09-2023 அன்று ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, தி.க. தலைவர் கி.வீரமணி, முன்னணி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் மக்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். கலந்து கொண்டவர்களின் பேச்சைக் கேட்டப் பிறகு, இது ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் போன்றிருந்ததைக் கவனித்திருக்கலாம். சனாதனத்தை எதிர்ப்போம், அழிப்போம் என்று இந்துமதத்தைத் தான் தூஷித்துப் பேசினர். இதற்கு நாத்திகம், கம்யூனிஸம், மார்க்சிஸம், லெனினிஸம், கிறிஸ்துவம், இஸ்லாம், வைகுண்ட என்றெல்லாம் இந்துவிரோதிகள் சேர்ந்து வந்ததையும் பொது மக்கள் கவனித்திருப்பார்கள். எனவே, அவர்களுக்கு, இந்துமத எதிரொப்பு, பழிப்பு, தூஷிப்பு என்றதைவிட வேறு பொருள் கிடைக்காது. வழக்கம் போல, திராவிடத்துவம், திராவிடத் தலைவர்கள் போற்றி நடந்தேறியது.

வீரமணி இந்துவிரோத சித்தாந்திகளை வெளிப்படுத்திக் காட்டியது: இந்த நிகழ்சியில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசியபோது[1],”இன்று இந்தியாவில் தமிழகத்தின் வரலாற்று பொன்நாள். மனிதத்திற்கு விரோதமானது சனாதனம். எனவேதான் இந்த மாநாடு உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய மாநாடு என்று கூறுகிறேன்[2]. ரோகிணி போன்ற முற்போக்கு கருத்தாளர்கள் இருப்பது அபூர்வமானது. அமைச்சர் சேகர்பாபு செல்போனில் ரோகிணி பெயரை பதிவு செய்தபோது சிபிஎம் என வந்தது[3]. சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு, காவி வேட்டியில் வந்துள்ளார்[4]. எங்களுக்கு எந்த நிறத்தின் மீதோ தனிநபர் மீதோ வெறுப்பு கிடையாது. இந்த மாநாடு சனாதன எதிர்ப்பு மாநாடாக இல்லாமல் சனாதன ஒழிப்பு மாநாடாக நடைபெறுவது சிறப்பானது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல், ஒரே குடும்ப அட்டை என நிறுவுபவர்கள் ஏன் ஒரே மதம், ஒரே சாதி என்று கூற மனம் வராமல் இருக்கிறார்கள். ஏனென்றால் உங்களுடைய இனம் குறுக்கே நிற்கிறது. உங்களை இயக்குவது சனாதனம் என்கிற இந்துத்துவம். இப்போது பல தேர்தல் நடைபெறுவதால் செலவு அதிகரிப்பதாக கூறுகின்றனர். பின்வரும் காலங்களில் தேர்தலே வேண்டாம் செலவு உள்ளதாக கூறுவார்கள். அவ்வாறு சனாதனத்தை நிறுவ முயற்சிக்கின்றனர். சனாதனம் என்பது உழைக்கும் மக்களுக்காகவா?

திராவிட கழக வீரமணியின் நக்கல் பேச்சு: ஆளுநராக உள்ளவர் அரசியல் சட்டத்தை, உறுதிமொழியை பற்றி கவலைப்படாமல் சனாதனத்தை பெருக்க வேண்டும் என கூறுகிறார். நாங்கள் ஆதாரத்துடன் பேசுபவர்கள். அவர்களைப் போல் கயிறு திரிப்பவர்கள் அல்ல. சனாதானத்திற்கு மூலாதாரம் வேதங்களை கொண்டது. இதற்கு ஆரிய மதம் என்று பெயர். சனாதனம் நம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை. ஆரியத்திற்கு மேன்மை பொருந்தியது என பொருள். இந்து மதமும் சனாதனமும் வெவ்வேறு அல்ல. சனாதனத்திற்கு எதிராக பேசிய வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என ஆளுநர் கூறுகிறார். மக்கள் அனைவரும் சமம். அனைவருக்கும் வாய்ப்பு சமமாக அமைய வேண்டும். ரிஷிகளுக்கு ராக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா? பகுத்தறிவு மூலமே ஒலிப்பெருக்கிகள், ராக்கெட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சனாதனம் என்றால் மாறாதது எனக் கூறுபவர்கள் ரஃபேலுக்கு பதிலாக ராமரின் ஆயுதத்தை பயன்படுத்தாலமே. சிக்கனமாக இருக்கும் பிரதமர் ஏன் விமானத்தில் பயணிக்க வேண்டும்?

சனாதனத்தை ஒழிப்போம் என்று உதயநிதிபேசியது: இதில் கலந்து கொண்டு பேசிய  உதயநிதி ஸ்டாலின்,  “மாநாட்டுக்கு  சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயர் வைத்த நிர்வாகக் குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார்[5].  சனாதனத்தை எதிர்ப்பதை விட,   ஒழிப்பதே சிறந்தது என தெரிவித்தார்[6]. டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்க்க போராட மாட்டோம்[7]. ஒழித்து கட்ட தான் முயற்சிப்போம். அதுபோல தான் சனாதனம் என்றும் தெரிவித்தார்[8]. மேலும், சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாக தெரிவித்த அவர்,  நிலையானதாகவும்,  மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம் என்றும் கூறினார்.  எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று தெரிவித்தார். 

சனாதனம் ஒழியட்டும்! திராவிடம் ஒழியட்டும்: கலைஞருக்கு  இது நூற்றாண்டு. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின்  200-வது ஆண்டு. பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டத்திற்கும் இது நூற்றாண்டு. அதேபோல் தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்கத் தோன்றிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இது பவள விழா ஆண்டு. இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற ஆண்டாக இந்த ஆண்டாக இருக்கிறதாக தெரிவித்தார். மக்களை சாதிகளாகப் பிரித்து தனித்தனியாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம்[9]. ஆனால், கலைஞர்  அனைத்து  சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி அமர்த்தி அந்த இடத்திற்கு, `சமத்துவபுரம்’ என்று பெயர் வைத்து சனாதனத்திற்குச் சம்மட்டி அடி கொடுத்தார்[10]. நீட் தேர்வு குறித்து பேசிய அவர், நம்முடைய  குழந்தைங்களைப் படிக்க வைப்பதற்காக, பல்வேறு யோசனைகளை செய்து திட்டங்களைக் கொண்டு வருகின்றோம். ஆனால், பாசிச அதிகார வர்க்கத்தினர், நம்முடைய குழந்தைங்களைப் படிக்கவிடாமல் செய்வதற்கான வழிகளை தேடி வருகின்றனர். அடித்தட்டு மக்கள்  படித்து விடக் கூடாதுங்கிறதுதான் சனாதன கொள்கை என்றும் சாடினார்.  கடந்த அதிமுக ஆட்சி சனாதனத்தின் அடிமையாக இருந்ததாக விமர்சித்தார். சனாதனம் ஒழியட்டும்! திராவிடம் ஒழியட்டும் என்று கூறி தனது உரையினை முடித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக எதிர்க்கட்சியாக இருந்த நேரத்திலும் எதிர்ப்பு தெரிவித்தோம் தற்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்[11]. அதிமுக அண்ணா பெயரில் இல்லை என்றும், அமித் ஷாவின் பெயரில் இருப்பதாக விமர்சித்தார்[12].

பேனர்கள், வர்ணங்கள் மாறினாலும், இந்துவிரோதம் மாறவில்லை: வைகுண்டர், பாலபிரஜாபதி என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொண்டுள்ல ஒரு இயக்கம், இந்துமதம் பெயரில், தொடர்ந்து, இந்துவிரோதிகளுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆகவே, இதன் பின்னணி முதலியனவும் சந்தேகதிற்குரியதாக இருக்கிறது. திராவிட மாடல் அரசு, தொடர்ந்து ஒரே பொய்யை சொல்லி, சொல்லி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. அதற்குதான் இந்த சனாதன ஒழிப்பு மாநாடு[13]. ஹிந்து சமய எதிர்ப்பு பிரசார மாநாட்டிற்கு, தமிழக அரசு துணை போவதாக, இ.ம.க., குற்றம்சாட்டியுள்ளது.இவ்வாறு, அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்[14]. இந்துவிரோதம் வெளிப்படையாகி விட்ட நிலையில், இவர்கள் எப்படி தொடர்ந்து இத்தகைய பிரச்சாரத்தில் ஈடுபட முடியும். சட்டப் படி, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா? ஏன் மற்ற இந்து அமைப்புகள் அமைதியாக இருக்கின்றன. நாளைக்கு தேர்தல் கூட்டணியில், இதே கட்சிகளும் சேர்ந்தால், அவர்களும் மேடைகளில் பேசும்பொழுது, இந்துக்களுக்குத் தான் கோபம் வருமே தவிர, அரசியல்வாதிகளுக்கு எந்த சுரணையும் வராது.

© வேதபிரகாஷ்

03-09-2023


[1] கலைஞர்.டிவி, “சனாதனம் நம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை..” : சனாதன ஒழிப்பு மாநாட்டில் கி.வீரமணி பேச்சு !, KL Reshma, Updated on : 2 September 2023, 12:20 PM,

[2] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/09/02/sanathanam-does-not-respect-us-as-human-beings-k-veeramanis-speech-at-sanatana-abolition-conference

[3] விடுதலை, சனாதன எதிர்ப்பு என்பது, சனாதன ஒழிப்பு என்று மாறியுள்ளது பாராட்டத்தக்கது!,  Viduthalai  September 02, 2023

[4] https://www.viduthalai.page/2023/09/blog-post_41.html

[5] தமிழ்.நியூஸ்.18, சனாதனத்தை எதிர்ப்பதைவிட அதனை ஒழிப்பதே நமது நோக்கம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், First published: September 02, 2023, 21:28 IST; LAST UPDATED : SEPTEMBER 02, 2023, 21:31 IST;

[6] https://tamil.news18.com/tamil-nadu/sanatana-dharma-must-be-eradicated-and-not-merely-opposed-says-udhayanidhi-stalin-1139044.html – gsc.tab=0

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், டெங்கு, மலேரியா, கொரோனா மாதிரி சனாதனத்தையும் ஒழிக்கணும்! உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு, SG Balan; First Published Sep 2, 2023, 7:08 PM IST; Last Updated Sep 2, 2023, 7:58 PM IST.

[8] https://tamil.asianetnews.com/tamilnadu/sanatanam-is-like-mosquito-dengue-flu-malaria-that-needs-to-be-eradicated-udhayanidhi-stalin-sgb-s0d1vd

[9] தினகரன், அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, September 3, 2023, 12:25 am

[10] https://www.dinakaran.com/m-k-stalin_indiaalliance_ministerudayanidhistalin/

[11] புதியதலைமுறை, “அண்ணா பெயரில் உள்ள கட்சி இல்லை அதிமுக; அமித்ஷா பெயர் தாங்கிய கட்சி” – உதயநிதி விமர்சனம், webteam, Published on: 02 Sep 2023, 9:12 pm

[12] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/udhayanidhi-stalin-criticized-admk-on-one-nation-one-election

[13] தினமலர், ஹிந்து சமய எதிர்ப்பு பிரசாரத்திற்கு அரசு துணை போகிறது: அர்ஜுன் சம்பத், பதிவு செய்த நாள்: செப் 03,2023 00:27

[14] https://m.dinamalar.com/detail-amp.php?id=3421447

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் இடிக்கப் படுவதேன் – இந்துக்களின் நிலைமை என்ன?

ஜூலை 18, 2023

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் இடிக்கப் படுவதேன் – இந்துக்களின் நிலைமை என்ன?

அண்டை நாடுகளில் இந்துக்கள் நிலை: பாகிஸ்தானில் இந்துக்களின் நிலைமையைப் பற்றி பிஜேபியே கவலைப் படுவதில்லை என்றால் மிகையாகாது. ஆனால், இந்தியாவில், “மைனாரிடி” என்று சொல்லிக் கொண்டு முஸ்லீம்கள் கலாட்டா செய்து வருகின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், மியன்மார் போன்ற நாடுகளில் இந்துக்களின் நிலை என்ன என்று யாரும் கவலைப் படுவதில்லை. சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப் படாமல் விரட்டியடிக்கப் பட்டனர். 1947ல் இருந்த இந்துக்களில் ஜனத்தொகையும் குறைந்து விட்டது. அந்நிலையில் இந்துக்களின் சொத்துக்கள், கோவில்கள் முதலியன ஆக்கிரமிக்கப் பட்டு, இடிக்கப் பட்டன. இவ்வாறாக, இருந்த பல கோவில்கள் மறைந்து விட்டன. அந்நிலையில், இப்பொழுது, இரண்டு கோவில்கள் இடிக்கப் பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இதை முதலில், பாகிஸ்தான் நாளிதழ் “டான்” தான் வெளியிட்டது. பிறகு, இந்திய ஆங்கில நாளிதழ்கள் வெளியிட, மற்ற மாநில மொழிகளில் அச்செய்திகள் வெளியாகின.

14-07-2023 வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோவில் இடிக்கப் பட்டது: பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்து இருந்தது[1]. இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர்[2]. மதராசி மாதா அதாவது தமிழ் பேசும் மக்களின் கோவில் என்றாக, அந்த மாரியம்மன் கோவில் இருந்தது. மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளி கிழமை 14-07-2023 இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு உள்ளது[3]. அடுத்த நாள் 15-07-2023 காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்[4]. இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோவிலை இடித்து தள்ளி விட்டு சென்றனர். கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது[5]. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர்[6]. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்[7]. இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவிக்கின்றது[8].

புனரமைப்பு நடத்தப்  பட வேண்டும் என்று திட்டமிட்ட நேரத்தில் கோவில் இடிக்கப் பட்டது: அந்த கோயில் மிகவும் சிதிலமடைந்துவிட்டதால் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகக் கூறி அகற்றப்பட்டுள்ள போதிலும், இந்த நடவடிக்கை அங்குள்ள ஹிந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோயில் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாக காரணம் கூறியுள்ளனா். ஆனால், அதனை சீரமைக்க கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளனா். அந்த இடத்தில் நிலத்தின் மதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் பெரிய கட்டுமான நிறுவனத்தினருடன் இணைந்து இந்த செயலை உள்ளூா் நிர்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா் என்று தெரிகிறது[9]. அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அச்சுறுத்தல் வந்துள்ளது[10]. ஆக, கோடிகளாக நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்ட நிலையில், அதனை அபகரிக்க இத்தகைய வேலையை செய்திருக்கிறர்கள் என்றாகிறது.

23 கோடிகள் மதிப்புக் கொண்ட நிலம்: அந்த பகுதியில் உள்ள பழமையான மற்றொரு கோவிலான ஸ்ரீபஞ்சமுக அனுமன் கோவிலை சேர்ந்த ஸ்ரீராம் நாத் மிஷ்ரா மகராஜ் இதுபற்றி கூறும்போது, இது மிக பழமையான கோவில். 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இந்த பகுதியில், மிக பழமையான பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் நாங்கள் கேள்விப்பட்டு உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி இந்து சமூக உறுப்பினர் ஒருவர் கூறும்போது, எங்களை கட்டாயப்படுத்தி இரண்டு பேர் வெளியேற்றினர். இந்த கோவிலை மற்றொரு நபருக்கு பாகிஸ்தான் கரன்சி மதிப்பின்படி ரூ.23 கோடிக்கு விற்க 2 பேர் ஆலோசித்து வந்தனர். அதனை வாங்க விரும்புபவர்கள் அந்த இடத்தில் வர்த்தக கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்து உள்ளனர் என கூறியுள்ளனர். ஆக, நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்ட நிலையில், அதனை அபகரிக்க இத்தகைய வேலையை செய்திருக்கிறர்கள் என்றாகிறது. இது தொடா்பாக பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில், சிந்து மாகாண முதல்வா் சையது முராத் அலி ஷா உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

16-07-2023 அன்று சிந்து மாகாணத்தில் ஒரு கோவில் இடிக்கப் பட்டது: ஞாயிற்றுக்கிழமை 16-07-2023 அன்று சிந்து மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், காஷ்மோர் பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் ராக்கெட் லாஞ்சர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது[11]. கோயில் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள இந்துக்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[12]. காஷ்மோர்-கந்த்கோட் எஸ்எஸ்பி இர்பான் சம்மோ தலைமையிலான போலீஸ் பிரிவு சம்பவ இடத்திற்குச் சென்றபோது, மர்ம கும்பல் கோயில் மற்றும் வீடுகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். தாக்குதலின் போது மூடப்பட்ட வழிபாட்டு தலத்தின் மீது ராக்கெட் லாஞ்சர் ஏவப்பட்டதாவும் கூறியுள்ளனர். இந்தக் கோயில் பக்ரி சமூகத்தால் நடத்தப்படுவது ஆகும். இந்தத் தாக்குதலில் எட்டு முதல் ஒன்பது துப்பாக்கி ஏந்தியவர்கள் இருந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய அவர்களைத் தேடிவருவதாகவும் அந்நாட்டுக் காவல்துறை சொல்கிறது. ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்கவில்லை என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லைவும் கூறுகின்றனர்.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் என்ன செய்யப் போகிறது?: இதற்கிடையில், பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் இந்தத் தாக்குதல்களைக் கவனித்து கருத்து தெரிவித்துள்ளது. “சிந்துவில் உள்ள காஷ்மோர் மற்றும் கோட்கி மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 30 இந்து சமூகத்தினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் செய்திகள் அச்சமூட்டுவதாக இருக்கிறது” என ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது[13]. இந்த விவகாரம் குறித்து தாமதமின்றி விசாரிக்கவும் சிந்து மாகாண அரசுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது[14].

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினத்தந்தி, பாகிஸ்தானில் இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல், ஜூலை 17, 12:51 am.

[2] https://www.dailythanthi.com/News/World/dacoits-attack-hindu-temple-with-rocket-launchers-in-pakistan-1009541

[3] தினத்தந்தி, பாகிஸ்தானில் 150 ஆண்டு கால இந்து கோவில் இரவோடு, இரவாக இடித்து தரைமட்டம், ஜூலை 16, 9:29 pm

[4] https://www.dailythanthi.com/News/World/a-150-year-old-hindu-temple-in-pakistan-was-demolished-overnight-1009236

[5] தினகரன், பாகிஸ்தானில் மதராசி இந்து சமூகம் நிர்வகித்தது 150 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் இடிப்பு, July 17, 2023, 1:50 am

[6] https://www.dinakaran.com/demolition-150yearold-mariammantemple-madrasihinducommunity-pakistan/

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாகிஸ்தான்: தமிழர்களின் 150 ஆண்டுகள் பழமையானமாரி மாதாகோவில் மர்ம நபர்களால் இடித்து ஆக்கிரமிப்பு!, By Mathivanan Maran Updated: Monday, July 17, 2023, 6:45 [IST]

[8] https://tamil.oneindia.com/news/international/pakistan-tamils-150-year-old-mari-mata-temple-demolished-in-karachi-521409.html

[9] தினமணி, பாகிஸ்தானில் பழைமையான ஹிந்து கோயில் இடிப்பு, By DIN  |   Published On : 17th July 2023 06:11 AM  |   Last Updated : 17th July 2023 06:11 AM  |

[10]https://www.dinamani.com/world/2023/jul/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4039263.html

[11] தமிழ்.நியூஸ்.18, பாகிஸ்தானில் இந்து கோயில் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்மனித உரிமை மீறல் என புகார்..!, Published By :Salanraj R, First published: July 17, 2023, 09:57 IST, LAST UPDATED : JULY 17, 2023, 09:57 IST

[12] https://tamil.news18.com/international/hindu-temple-attack-with-rocket-launchers-in-pakistan-1065711.html

[13] தமிழ்.ஏசியேநெட்.நியூஸ்,பாகிஸ்தானில் ஒரே நாளில் இரண்டு இந்து கோயில்கள் இடிப்பு! ராக்கெட் வீசப்பட்டதால் உச்சகட்ட பரபரப்பு!, SG Balan, First Published Jul 16, 2023, 11:39 PM IST,Last Updated Jul 17, 2023, 12:21 AM IST

[14] https://tamil.asianetnews.com/world/one-hindu-temple-demolished-another-attacked-with-rockets-in-pakistan-s-sindh-province-rxwigd