Archive for the ‘ஆதீனத்திற்கு கொலை மிரட்டல்’ Category

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? மத்திய அரசு எதிர்ப்பு இதில் சேர்க்கப் பட்டு தீவிரப் படுத்தப் படுகிறதா? (3)

ஜூன் 13, 2022

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? மத்திய அரசு எதிர்ப்பு இதில் சேர்க்கப் பட்டு தீவிரப் படுத்தப் படுகிறதா? (3)

வாரியாருக்கு ஏற்பட்ட நிகழ்வு தான் உமக்கும் ஏற்படும்என்று சொல்வது, வேதனையின் உச்சம்: நேரிடையாக இல்லாமலிருந்தாலும் மறைமுகமாக (apologetic) திமுகவை கண்டித்துள்ளார் வாரியாரின் மருமகனும், இறைபணியில் இருப்பவருமான சக்திவேல் முருகனார்[1]. அவர் அவ்வாறு கூறியதாவது: “கிருபானந்த வாரியார் இறையருள் பெற்றவர்; மகானாக வாழ்ந்தவர். அவரது இறை சொற்பொழிவு சாகா வரம் பெற்றவை. அப்படிப்பட்ட மகானை, அன்றைக்கு தி.மு..,வினர், நெய்வேலியில் வைத்து தாக்கியது நடக்கக் கூடாதது. அவர் வழி வாழும் ஒவ்வொருவரும், அந்நிகழ்வை மறக்க முயன்று கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட மகானை போற்றாவிட்டாலும் பரவாயில்லை; யாரும் சிறுமைப்படுத்த கூடாது. ஒரு கட்சி தலைவரை மிரட்ட வேண்டும் என்பதற்காக, ‘வாரியாருக்கு ஏற்பட்ட நிகழ்வு தான் உமக்கும் ஏற்படும்என்று சொல்வது, வேதனையின் உச்சம். ஆர்.எஸ்.பாரதி இப்படி பேசினார் என்பதை கேட்டதும், வாரியார் வழி வாழும் லட்சோபலட்சம் பற்றாளர்களும் கொதித்து போயினர். உறவுக்காரர்கள் சொல்ல முடியாத வேதனையில் ஆழ்ந்தனர். இப்படியொரு சர்ச்சை உருவானதும், உணர்வுள்ள பற்றாளர்கள் ஒன்று கூடி, ‘இனி இது தொடரக் கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும்என்று முடிவெடுத்தோம்,’” என்றார்[2].

இனிமேலாவது வாரியாரை இழுத்து, தேவையில்லாத அரசியல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்: சக்திவேல் முருகனார் கூறியது, ‘‘அதற்காக, என்னை போன்றவர்கள், தங்களின் மன வேதனையை இறைவன் முன் வைத்தோம். அரசில் இருப்போருக்கும் எடுத்து சென்றோம். இறைவன் உருவில் வாழும் வாரியாருக்கும், எங்கள் வேதனையும், வேண்டுதலும் சென்றிருக்க வேண்டும். என்ன நடந்தது என தெரியாது. யாரை சிறுமைப்படுத்துவது போல பாரதி பேசினாரோ, அவரே இன்றைக்கு, அதே வாரியாரை தன் துாரத்து உறவினர் என கூறியுள்ளார். இப்படியொரு நெருக்கடி அவருக்கு ஏற்பட காரணம் இறைவனும், இறைவனாக வாழும் கிருபானந்த வாரியாரும் தான் என்பதில், எள்ளளவும் மாற்று கருத்தில்லை. பிரச்னையில் இருந்து விடுபட, அவர் அப்படி சொல்லி இருப்பதாகவே தெரிகிறது. வாரியார் குடும்ப நிகழ்ச்சியில், அவரை யாரும் பார்த்ததில்லை. ஜாதிக்காரராக இருந்தால், எப்படியோ ஒரு வழியில் உறவு வந்து விடும் என்ற எண்ணத்தில் சொல்லியிருக்கலாம். இனிமேலாவது வாரியாரை இழுத்து, தேவையில்லாத அரசியல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்,” இவ்வாறு சக்திவேல் முருகனார் கூறினார்.

முதலியாருக்கு கோபம் வந்துள்ளது, அமையாக எச்சரிக்கையும் சேர்ந்துள்ளது: சக்திவேல் முருகனார் இங்கு முதலியார் என்ற ரீதியில் கொதித்துப் போனதை ஒப்புக் கொண்டுள்ளதை கவனிக்கலாம். ஆனால், அது ஏனோதானோ என்றுதான் உள்ளது. “‘இனிமேலாவது வாரியாரை இழுத்து, தேவையில்லாத அரசியல் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்,” என்று பணிவோடு வேண்டிக் கொண்டது தெரிகிறது. வடுகர் என்று மற்றவர்களை தூஷிக்கும் போக்கு இல்லை, தெலுங்கன் என்ற சொற்பிரயோகம் இல்லை வந்தேறி என்ற வசைபாடலும் இல்லை. இப்பொழுது தான் நாயுடு கருணாநிதி சிலையைத் திறந்து வைத்துச் சென்றுள்ளார். ஜனாதிபதிக்கு நின்றால் திமுக ஆதரவு என்ற நிலையும் வெளிப்பட்டுள்ளது. ஆக சக்திவேல் முருகனார் சமஸ்கிருதத்தைப் பழிப்பார், பிராமணர்களை தூஷிப்பார். ஆனால், வடுகர்களை சீண்ட மாட்டார். அது இவாளுக்கு உள்ள அன்டெர்ஸ்டேன்டிங் எனலாம். இந்துத்துவவாதிகள் இந்துக்களைப் பிரிக்கும் திட்டங்களுக்கு ஒத்துப் போகும் போக்கைக் காணலாம். முக்கியமான பிரச்சினை / பிரச்சினைகளை இவ்வாறு, எதையாவது வைத்துக் கொண்டு திசைத் திருப்புவர். மறக்க வைப்பர். தொடரும் பிரச்சினை / பிரச்சினைகளை கையாள வேண்டும் என்ற எண்ணம், செயல்முறை, முற்போக்கு திட்டம் இல்லை.

மயிலாடுதுறை விவகாரங்கள்: தமிழகத்தின் தருமபுரம் மடத்தில் ‘பட்டின பிரவேசம்’ சடங்குக்கு 27-04-2022 அன்று தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் சில ஆதினங்களுடன் ‘தெய்வீகப் பேரவை’ ஆரபிக்க கூட்டம் நடத்தினார். ‘பட்டின பிரவேசம்’ தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், மதுரை ஆதீனம், தடை உத்தரவை எதிர்த்துப் பேசியதற்காக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது பற்றி பிரதமரைச் சந்தித்துச் பேசப் போவதாகவும் குற்றம் சாட்டினார். 19-04-2022 அன்று ஆளுனர் மயிலாடுதுரை வந்தது, திக வகையறாக்கள் தாக்க முயன்றது முதலியனவும் இதில் அடங்கும். இதே காலகட்டத்தில் இப்பகுதிகளில் என்.ஐ.ஏ.வும் சோதனை நடத்தி, சிலரை கைது செய்தது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை 08-06-2022 அன்று மேற்கொண்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், கிளியனூர், உத்திரங்குடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொண்ட குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் நேற்று காலை மயிலாடுதுறை சென்றனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிந்து நீடூர், எலந்தங்குடி, அரிவேளூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 11 மணி வரை தொடர்ச்சியாக 5 மணி நேரம் நடந்தது. பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது சோதனையை முடித்துவிட்டு மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பினர். ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்தன.

மதுரை ஆதீனம் மிரட்டுகிறார்கள் என்று புகார்: 04-05-2022 புதன்கிழமை தஞ்சாவூர் அருகே களிமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் சொத்துக்களை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வருகின்றனர் என்று கூறினார். மேலும், “நான் அவர்களிடம் அதிக கேள்விகளை கேட்பதால், எனக்கு அச்சுறுத்தல் வருகிறது. கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் வீடுகள் கட்டியுள்ள அவர்கள், வாடகை கொடுக்க மறுக்கின்றனர். கோவில் நிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள், ஊருக்குள் நுழைந்து கடவுளுக்கு திருப்பணி செய்ய முடியாது என என்னை மிரட்டுகிறார்கள்,” என்றும் ஆதீனம் கூறினார். பின்னர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தெரிவிக்க உள்ளதாகவும் ஆதீனம் கூறினார். மதுரை ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் ஆதீனத்துக்கும், ஆதீன மடத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, மாநகரக் காவல் ஆணையரிடம் 05-05-2022 வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவினர் தினம்தினம் பிரச்சினைகளைக் கிளப்புவது: பட்டின பிரவேசம் தடை பற்றி பெருமளவில் எதிர்ப்பு கிளம்பியதால், அரசு ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. 22-05-2022 பட்டின பிரவேசம் நிகழ்ச்சி அமோகமாக நடந்தது.  அப்பொழுது, மதுரை ஆதீனம், உலகம் முழுவதும், எல்லோருக்கும் அறியச் செய்ததால், திகவினருக்கு நன்றியும் தெரிவித்தார். 26-05-2022 மோடியை சந்தித்தார். இதனால், திமுகவினர் கலங்கித் தான் போயினர். மேலும் அன்று மோடிக்கு முன்பே திராவிடியன் மாடல் என்றெல்லாம் ஸ்டாலின் பேசியதும் கேள்விக்குறியானது. திமுகவினர் மெச்சிக் கொண்டாலும், அது எதிர்வினையாகுமா என்று யோசிக்க ஆரம்பித்தனர். மத விசயங்களில் தலையிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு, தினம்-தினம் கோவிலுக்குச் செல்வது, பிரச்சினையைக் கிளப்புவது, செய்தியாக்குவது, அறிக்கை விடுவது என்பது வழக்கமாகி விட்டது. ஆகையால், திராவிடத்துவ-பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத ஆட்சி இவ்வாறான பிரச்சினைகளை தினம்-தினம் எழுப்ப, திட்டமிட்டே செயல்படுவதாகத் தெரிகிறது.

ஜூன் 2022ல் வெளிப்படும் மோதல் போக்கு: ஜூன் 2022லும் ஆரம்பம் முதலே திமுகவினர் தீவிரமாகவே செயல்பட ஆரம்பித்தனர். கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் 03-06-2022 வைத்துக் கொண்டு, ஊடகங்களில், வெற்ப்புப் பேச்சை ஆரம்பித்தனர். ராஜிவ் காந்தி என்ற திமுக ஊடக தொடர்பாளர், பிராமணர்களைக் கொல்வதை, பெரியார் பேச்சு வைத்து நியாயப் படுத்தினார். இ.கே.எஸ். இளங்கோவன், இந்தி எதிர்ப்பு சாக்கில், சூத்திரர் என்றெல்லாம் பேசினார். ஸ்டாலின் காயதே மில்லத் சமாதிக்குச் சென்று மரியாதை செல்லுத்துகிறார். கவர்னர் எதிப்பு பிரச்சாரமும் தீவிரமாக தொடர்கிறது. ஆனால், ஆதினங்கள் பற்றி எதிர்மறை செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.   ஆனால், ஆங்கில டிவிக்களில் இதைப் பற்றிய விவாதங்கள் நடந்தன. இதனால், திமுகவின் போக்கு நாடெங்கும் அறியப் படுகிறது. அந்நிலையில் தான், எல்லாவற்றையும் மறைக்க, திசைத் திருப்ப, ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்துள்ளனர் போலும்…..

© வேதபிரகாஷ்

13-06-2022


[1] தினமலர், சொந்தம் கொண்டாடுகிறார் ஆர்.எஸ்.பாரதி; இது தான் மகிமை என்கிறார் வாரியார் மருமகன்,  Added : ஜூன் 12, 2022  00:33.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3051187

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நித்தியானந்தா-சங்கராச்சாரியார் என்று சொல்லி  நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (2)

ஜூன் 13, 2022

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நித்தியானந்தா-சங்கராச்சாரியார் என்று சொல்லி  நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (2)

மதுரை ஆதினம் மட்டும் குறுக்கு சால் ஓட்டிஅந்தப் புகழ்மிகு ஆதினத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்: சம்பந்தப்பட்ட தருமபுர ஆதினகர்த்தரும் அதற்கு நன்றி தெரிவித்தார். மற்ற மற்ற ஆதினங்களும் இந்த சுமூக முடிவை வரவேற்றனர்! ஆனால் மதுரை ஆதினம் மட்டும் குறுக்கு சால் ஓட்டி – அந்தப் புகழ்மிகு ஆதினத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்! தமிழக அரசும், முதலமைச்சரும், துறை சார்ந்த அமைச்சரும் – தமிழகம் அமைதிப் பூங்காவாக – அனைத்து மதத்தினரும் அண்ணன் – தம்பிகளாக ஒன்று இணைந்து வாழவேண்டும் என்ற நோக்கில் எடுக்கும் முடிவுகள் பலராலும் பாராட்டப்படும் நிலையில், மதுரை ஆதினகர்த்தர் மட்டும் வெறுப்பு உருவாகும் நிலையில் தொடர்ந்து கிறுக்குத் தனமாகப் பேசிவருகிறார்! “அமைச்சர்கள் வெளியேநடமாட முடியாது” என்கிறார். அரசியல்வாதிகளுக்கு ஆதினத்தில் என்ன வேலை என்று மிரட்டுகிறார்”அமித்ஷாவையும் மோடியையும் காட்டி பயமுறுத்த நினைக்கிறார். [ஆதினமே, புகழ்மிகு ஆதினத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், அடேங்கப்பா, ஆதினங்கள் மீது தான் இந்த நாத்திகர்களூக்கு, விக்கிரங்கள் உடைப்பவர்களுக்கு, இந்துவிரோதிகளுக்கு எவ்வளவு அக்கரை, கரிசனம்??]

மதுரை ஆதினம் எல்லை மீறுகிறார்! அவருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்!: மதுரை ஆதினம் இருப்பது தமிழ்நாடு! இந்த மண்ணில் பல சைவ ஆதினங்கள் உள்ளன! அவை அனைத்தும் தங்கள் பணிகளை எந்தவித சலசலப்புமின்றி செய்து வருகின்றன! அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்! [இனி இவர்கள் தான் சான்றிதழ் கொடுப்பார்கள் போலும்] ஆனால் மதுரை ஆதினம் எல்லை மீறுகிறார்! பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் உணர வேண்டும். அவருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்! காஞ்சி மடத்தில் – அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது என்ன என்பதை அவர் அறிந்திருப்பார் என்று எண்ணுகிறோம். இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் முதல் மாநில, மத்திய அமைச்சர்கள் பலரும் அந்த காஞ்சி பீடத்துக்கு விஜயம் செய்துள்ளனர். அவர் பெயரை உச்சரிக்கக் கூடமாட்டார்கள் – பெரியவாள், “சின்னவாள்” என்று பயபக்தியுடன்தான் அழைப்பார்கள்! அந்த சங்கராச்சாரியார் தரிசனம் கிடைப்பதே பெரும் பாக்யம் என்று நாட்டிலே பலர் மணிக்கணக்கில், நாட்கணக்கில் காத்துக் கிடப்பர்!

ஜெயேந்திரருக்கு என்ன கதி ஏற்பட்டது? கைது செய்து சிறைக்கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சின்னவாள், ஜெயேந்திரருக்கு என்ன கதி ஏற்பட்டது? அந்த மகாகுருவையே சிறைக்கம்பிகளை எண்ண வைத்த நிகழ்வுகள் மதுரையின் இன்றைய பீடாதிபதிக்கு நினைவிருக்கும் எனக் கருதுகிறோம்! கைது செய்து சிறைக்கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை; அதனைத் தொடர்ந்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எத்தனை நிகழ்வுகள் நடந்தன என்பதை மதுரை ஆதினம் உணர்ந்திருப்பார் என்று எண்ணுகிறோம்! இவை எல்லாம் மதுரை ஆதினத்தை மிரட்ட தரும் தகவல்கள் என அவர் கருதிவிடக் கூடாது; “பிரதமர் மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன்” – என்று பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதினத்தின் புரிதலுக்காக இதனை நினைவூட்டுகிறோம்! இவர் பிரதமரைத் தேடிச் செல்லும் நிலையில் உள்ளார்; ஆனால் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களைப் பிரதமர், குடியரசுத்தலைவர் போன்றவர்கள் எல்லாம் காத்திருந்து, தேதி வாங்கி பேட்டி கண்டு சென்றவர்கள்! அப்படிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஏற்பட்ட நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து பேச்சில் மதுரை ஆதினம் சிறிது நிதானம் காட்ட வேண்டும்! [ஆக, தீர்மானமாக, கைது செய்து சிறையில் அடைப்போம் என்று மிரட்டியுள்ளது தெரிகிறது]

அரிஹர தேசிக ஞான சம்பந்தர்இவருக்கு அரசியல் பலம், பத்திரிகை பலம், பக்தர்கள் பலம் இல்லை: எந்த காஞ்சி சங்கராச்சாரியாருக்கு இருந்த அரசியல் பலம், பத்திரிகை பலம், பக்தர்கள் பலம் இவற்றோடு ஒப்பிட்டால் அரிஹர தேசிக ஞான சம்பந்தர் ஒரு ‘ஜீரோ’! மதத்தலைவர் என்ற போர்வையினால் பாதுகாப்பு கிடைக்கும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று கருத வேண்டாம். தன்னை சிவபெருமானின் மறு அவதாரம் என்று கூறித் திரிந்து கொண்டிருக்கும் நித்யானந்தாவை கருநாடகப் போலிஸ் கைது செய்தது. ஒரு தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவுக்குள்ளே நுழைய முடியாத அளவு ஓடி ஒளிந்து திரிகிறார் அவர்! அவர்கூட மதுரை ஆதினத்தின் ஆதின கர்த்தராக முடிசூட்டப்பட்டவர். [அதே போல இவரும் கைது செய்து சிறையில் அடைப்போம் என்கிறார்கள் போலும்]

பொது அமைதிக்கு ஊறுதேடுபவர்கள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களைஅவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கைப் பார்க்கஇயலாது: பொது அமைதிக்கு ஊறுதேடுபவர்கள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களை – அவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கைப் பார்க்கஇயலாது; சட்டம் தனது கடமையை செய்திடும் என்பதை மதுரை ஆதினம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மேலே கண்ட நிகழ்வுகளை நினைவுபடுத்தினோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், மத வெறிப் பேச்சுக்கள் பேசுவதை மதுரை ஆதினம் உடனடியாக நிறுத்த வேண்டும்! தமிழக முதல்வர் குறித்து பி.ஜே.பி.யின் எச்.ராஜா கூறியதையும் மதுரை ஆதினத்துக்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறோம். “Stalin is more Dangerous than Karunanithi” எச்.ராஜாவின் இந்தப் பதிவில் பல பொருள்கள் பொதிந்துள்ளன. இதனையும் அரிஹர தேசிகர் உணரவேண்டும்.

மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு: மதுரை ஆதீனமாக, ஹரிகர தேசிக ஞானசம்பந்தர் பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது; அரசியல்வாதிகள் தலையீடு இருக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு அரசு தடைவிதித்த போது, முதல் ஆளாக குரல் கொடுத்தார். தொடர்ந்து, அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் அமைச்சர் சேகர்பாபு பேசினார். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.இந்நிலையில், தி.மு.க., நாளிதழான முரசொலியில் ‘ஆதீனம் கைது செய்யப்படுவார்’ என எச்சரிக்கும் வகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுரை ஆதீனம் இருப்பது தமிழகம். இம்மண்ணில் பல சைவ ஆதீனங்கள் உள்ளன. அவை அனைத்தும் தங்கள் பணிகளை எவ்வித சலசலப்புமின்றி செய்து வருகின்றன.

12-06-2022 ஆதீனத்தை மிரட்டும் முரசொலி: ஆனால் மதுரை ஆதீனம் எல்லை மீறுகிறார். பொறுமைக்கும் எல்லை உண்டு. ஜெயலலிதா ஆட்சியில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது செய்யப்பட்டதை மதுரை ஆதீனம் உணர வேண்டும்[1]. ‘பிரதமர் மோடியிடம் சொல்வேன்; அமித் ஷாவிடம் செல்வேன்’ என பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதீனத்தை அரசியல் பலம், பத்திரிகை பலம், பக்தர்கள் பலத்துடன் ஒப்பிட்டால் அவர் ஒரு ‘ஜீரோ!’ ‘மதத்தலைவர்’ என்ற போர்வையில், பாதுகாப்பு கிடைக்கும் என்று எதை வேண்டுமானாலும் பேசலாம் என கருத வேண்டாம்[2]. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலையில் மதவெறி பேச்சுகள் பேசுவதை ஆதீனம் உடனடியாக நிறுத்த வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் குறித்து, பா.ஜ.,வின் எச்.ராஜா கூறியதை ஆதீனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்… ‘கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர்’ என ராஜா கூறியதில் பல பொருள் பொதிந்துள்ளது. இதை மதுரை ஆதீனம் உணர வேண்டும்.இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வின் பகிரங்க கைது எச்சரிக்கைக்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன[3]. பிஜேயும் எச்சரித்துள்ளது[4].

© வேதபிரகாஷ்

13-06-2022


[1] தினமலர், மதுரை ஆதீனத்திற்கு தி.மு.., கைது எச்சரிக்கை:  Updated : ஜூன் 13, 2022  00:31 |  Added : ஜூன் 13, 2022  00:30.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3051825

[3] தமிழ்.ஒன்.இந்தியா, “சங்கராச்சாரியார்கம்பி எண்ணி.. சீறிய முரசொலி.. “சாது கொதித்தெழுந்தால் அரசு தாங்காதுபாஜக வார்னிங் , By Hemavandhana Updated: Sunday, June 12, 2022, 17:23 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/tirupati-narayanan-slams-murasoli-and-dmk-government-and-tweeted-about-it-461945.html

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (1)

ஜூன் 13, 2022

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (1)

முருகன், விசாகம், தமிழ் என்று இருந்த இந்துக்கள்: 12-06-2022 சுபகிருது, வைகாசி , விசாகம் பிறகு அனுஷம், சுக்ல பக்ஷ திரயோதசி  பிறகு சுக்ல பக்ஷ சதுர்தசி அன்று முருக பக்தியில் ஆழ்ந்து, உலகை மறந்து, நிம்மதியாக இருந்தவர்கள் பக்தர்கள். அதே நேரத்தில், இதையெல்லாம் சொல்லிக் கொண்டு, தமிழ் என்ற நிலையிலும் இருந்த நிலையில், மதுரை ஆதீனத்தை மிரட்டி வசை பாடியுள்ளது, முரசொலி! ஒரு ஆதீனத்தை, மடாதிபதியை அவர்கள் அந்த வஞ்சனையைப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. பிரிக்கும் சூழ்ச்சியாளர்களுக்கு இதெல்லாம் சுலபமானது……ஏனெனில், திமுகவை எதிர்க்கும் இந்துக்கள் அப்படித்தான் இருக்கின்றனர்…….100, 200 ஜால்றா அடித்துக் கொண்டு குறுகிய கால பலன்களை அனுபவித்து சென்று விடுவர்……..ஆனால், தொடரும் பழி, வினைகள், முதலியவை அப்பாவி இந்துக்களைத் தான் பாதிக்கும், தொடரும்…….. மேலும், இவ்வாறு ஊடகங்களில் விமர்சிக்க, பழிக்க, மிரட்ட எப்படி அவர்களுக்கு உரிமை வருகிறது? இதே போன்ற விமர்சனத்தை மற்ற மத-மடாதிபடிகளின் மீது வைப்பார்களா?

திமுகஇந்துக்கள், இந்துத்துவ இந்துக்கள்: திமுகவில் 80% இந்துக்கள் இருக்கிறார்கள், ஆமாம், ஒட்டு மொத்தமாக திமுகவிற்கு ஓட்டுப் போடுகிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள்… ஆனால், இந்துத்துவப் போர்வையில் 99% இந்துக்கள் இருந்தாலும் அவர்கள் ‘இந்துக்கள்’ ஆக இல்லை…..இதைத் தான், இந்துவிரோதிகள் அறிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்………. மதுரை ஆதீனத்தை ஒருவன் வசைப் பாடுகிறான், மிரட்டுகிறான் என்றால், ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்….. முதலியார், பிள்ளை, செட்டி, தேவர், ரெட்டி, நாயக்கர், வேளாளர், நாயுடு, என்றுதான் இருக்கின்றனர்……………ஆட்சி, அதிகாரம், அந்தஸ்து, பணம், சுகம்……………எல்லாம் அனுபவித்து வருகின்றனர்……………வேலை செய்கிறவன் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறான்……………வேலைகாரன் எஜமானன் ஆனால், அவனுக்கு ஒரு வேலைகாரன் வருகிறான்…………………எந்த கட்சி இதனை மாற்றியது? ஆனால், ஆதீனங்களை, மடங்களை, மிரட்ட ஒன்றாக வந்து விடுகின்றனர்……………..முரசொலியின் எச்சரிக்கையை, கலைஞர்.செய்திகள் விசுவாசத்துடன் வெளியிடுகிறது.

12-06-2022 – முரசொலி எச்சரிக்கையை வெளியிட்ட கலைஞர்.செய்திகள்: தமிழக முதல்வர் குறித்து பி.ஜே.பி.யின் எச்.ராஜா கூறியதையும் மதுரை ஆதினத்துக்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறோம்[1]. “Stalin is more Dangerous than Karunanithi” எச்.ராஜாவின் இந்தப் பதிவில் பல பொருள்கள் பொதிந்துள்ளன[2]. இதனையும் அரிஹர தேசிகர் உணரவேண்டும் என முரசொலி நாளிதழ் ‘சிலந்தி’ கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை, சமீப காலங்களாக பெருமை மிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர். மதுரை பாஷையில் சொல்வதென்றால், தாங்கள் ஆதினம் என்பதை மறந்து ஏதாவது ‘குண்டக்க, மண்டக்க’ என பேச்சிலும் செயலிலும் ஈடுபடுகின்றனர்! தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற நிலைக்குள்ளாக்கியுள்ளனர்![உபயொகப் படுத்தப் பட்டுள்ள வார்த்தைகளை கவனிக்கவும்]

நித்தியானந்தா பெயர் சொல்லி தோஷிப்பது: முன்பு ஆதினமாக இருந்து மறைந்த அருணகிரி ஆதினம் காலத்தில், அவரது செயல்களால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாடறியும்! அவரது பல செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளாகி, ஆதினத்தையே தலைகுனிய வைத்தது! அவர் ஆன்மிகத்தில் அரசியலை நுழைத்து – ஆன்மிகவாதியாகவோ – அரசியல் வாதியாகவோ இல்லாமல் இரண்டும் கெட்டானாக நடத்திய ‘கோமாளி’ கூத்துக்களால் திருநாவுக்கரசர் தோற்றுவித்த சீர்மிகு அந்த ஆதினம் பல தலைக்குனிவுகளை சந்தித்தது! நித்யானந்தா எனப் பெயர் சூட்டிக்கொண்டு, நித்தம் ஆனந்தம் அனுபவித்துவிட்டு, அதனால் பல வழக்குகளில் சிக்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடி, இன்று தேடப்படும் குற்றவாளியாக உள்ள ஒரு கிரிமினலை அன்று மதுரை ஆதினத்தின் பீடாதிபதியாக நியமித்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார் அன்றைய பீடாதிபதி அருணகிரி! [ஆட்சி-அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் மனிதர்களின் சரித்திரத்தையும் மற்றவர்கள் அறிய சொவார்களா? அல்லது அதை மற்றவர்கள் வெளியிட்டால் சும்மா இருப்பார்களா?]

நித்யானந்தாவை நியமிக்க பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது என்று குறிப்பிட்டது: நித்யானந்தாவை வாரிசாகவும் அடுத்த பீடாதிபதியாகவும் நியமித்த அன்றைய மதுரை ஆதினத்தின் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளானது மட்டுமல்ல; அந்த நியமிப்பின் மூலம் பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது. அருணகிரி பணம் பெற்றுக்கொண்டு பீடாதிபதி பதவியை நித்யானந்தாவுக்கு வழங்கியதாக விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காஞ்சி மடமும், திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட சைவமதங்கள் பலவும் மடாதிபதி அருணகிரியின் செயலுக்கு கண்டனக்குரல் எழுப்பின! அப்போது நெல்லை கண்ணன் தலைமையில் ஆதின மீட்புக்குழுவே அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எல்லா சைவ மடங்களும் மதுரை மடத்தின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவித்தன. [அந்த நெல்லை கண்ணன் நிலை எப்படி என்று அறிந்ததே. கொள்கையற்றவர்கள், பணம், விருது, அந்தஸ்து என்று எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.]

ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்ற ஆரூடம் பொய்த்தது: ஆதினம் அருணகிரி, அதைவிட அத்துமீறி அ.தி.மு.க.வை ஆதரித்து நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு நடத்தியது கேலிக்கூத்துக்களாகும்! நாகர்கோவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அருணகிரி பேசியது இன்றும் வலைதளங்களில் உள்ளது. நாகர்கோவில், வடிவீஸ்வரம் தேரடி வீதியில் அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசிய நகைச்சுவைகளை கீழே தருகிறோம்; நீங்களும் ரசியுங்கள். “தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, கோயில்களில் இதுவரை எழுந்தருளியவன் அம்மா பிரதமராகிட இன்று குமரி மக்களிடம் வாக்குசேகரிக்க உங்கள் முன் எழுந்தருளியுள்ளேன். இந்த வரத்தை கொடுத்தது இறைவன். அம்மா இந்தியாவின் பிரதமராகி நம்மை எல்லாம் காப்பாத்தப் போறாங்க, அதுவும் இறைவன் கொடுத்த வரம். அதை நிறைவேற்ற இந்த சன்னிதானத்தை இறைவன் அனுப்பியுள்ளார். அம்மா பிரதமர் ஆவார் என அவர் ஜாதகம் சொல்லுகிறது,” ஜெயலலிதா பிரதமராவார் என்பது ஆண்டவன் கட்டளை – ஜாதகம் சொல்லுகிறது என்றெல்லாம் பேசி ஜாதகத்தைப் பொய்யாக்கி, ஆண்டவனுக்கும் அவப்பெயர் உருவாக்கிவிட்டு திருமிகு மதுரை ஆதினத்தின் திருவை சீரழித்துச் சென்றார்! [பிரதமர் ஆக வேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் உள்ளது, ஆகவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாராவது, ஆரூடம், ஜோசியம் என்று யாதாவது சொல்லிவிடப் போகிறார்கள்…..]

அறநிலையத் துறை அமைச்சரை எதிர்த்துப் பேசிய ஆதினம்: இப்போது மதுரை ஆதினமாகியுள்ள அரிகர தேசிகர் ஞான சம்பந்தமோ முன்னாள் பீடாதிபதி ‘அருணாகிரியை’ விட தான் குறைந்தவறில்லை என்பது போல அபத்தங்களைப் பேசி வருகிறார். கழக அமைச்சரவையில் அடக்கத்துக்கும் பொறுமைக்கும் பக்திக்கும் பணிவுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவையே கோபம் கொள்ளச் செய்யும் அளவு ஆதினம் அரிகரதேசிகரின் பேச்சும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. மத நம்பிக்கைகள் அது எந்த மதத்தினருடையதாக இருந்தாலும் அதில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு செயல்படுகிறது, கழக ஆட்சி! [அடேங்கப்பா, ‘‘கோபம் கொள்ளச் செய்யும் அளவு” என்று இனி சட்டத்தில் விவரிக்கப் பட வேண்டும், பிரிவையும் சேர்க்க வேண்டும், பிறகு அத்தகைய சட்டப் பிரிவை மீறுபவர்களை கைது செய்து விடலாம்.]

சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது: இந்தியாவிலேயே மத நல்லிணக்கம் தமிழகத்திலேதான் சீராக, சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் தருமபுர ஆதின குரு பூஜையை ஒட்டி நடைபெற இருந்த பட்டினபிரவேச நிகழ்ச்சியில் ஆதினகர்த்தரை பல்லக்கில் சுமந்து மனிதர்கள் வருவதற்கு சில கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்ததை ஒட்டி, அதனால் எந்த சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற போக்கில் அந்த நிகழ்வுக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்த நிலையில் – அதனை ஒட்டி விவாதம் உருவானபோது, இதனால் தமிழகம் கட்டிக்காக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஊறு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலும், இதனை வைத்து குளிர் காய நினைத்த சில மதவெறிக் கூட்டத்தின் செயலுக்கு இடம்தராத வகையிலும், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உடனடியாக தலையிட்டு ஆதினகர்த்தர்களுடன் அவரும் பேசி, அவர்களை முதலமைச்சரையும் சந்திக்க வைத்து – ஒரு சுமூக நிலையை உருவாக்கினார்! [ஆக, ‘‘சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது,” இதையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்படியாவது உள்ளே தள்ளவேண்டும் என்றால், இப்படியெல்லாம் யோசித்து எழுதுவார்கள் போலும்.]

© வேதபிரகாஷ்

13-06-2022


[1] கலைஞர்.செய்திகள், குறுக்கு சால் ஓட்டி, களங்கம் விளைவிக்கும் மதுரை ஆதீனம் கவனத்திற்கு.. முரசொலியில்சிலந்திஎச்சரிக்கை!, Prem Kumar, Updated on : 12 June 2022, 09:32 AM.

[2] https://www.kalaignarseithigal.com/politics/2022/06/12/silandhi-article-in-murasoli-newspaper-warning-madurai-aadheenam

[3]  முரசொலி, அத்து மீறும் ஆதீனம் அறிவதற்கு, சிலந்தி, 2-06-2022, பக்கம்.3.