Archive for the ‘லத்தீன்’ Category

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)!

நவம்பர் 9, 2015

தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (5)!

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம்

கமல், தீபாவளி, போத்தீஸ் விளம்பரம் – இப்பொழுது பணம் கொடுக்கவில்லை, இதெல்லாம் பொய் என்கிறார்கள்!

பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர், அப்படியென்றால், அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா?: எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்[1]. நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது. இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.

மன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம்

மன்மத அம்பு, கருணாநிதி, இந்துவிரோதம் – முன்பு பாட்டெழுதி ஏமாற்றினார்.

கமல் ரூ 16 கோடி கொடுத்தது பொய், ரூ 6 கோடி சேர்த்து கொடுத்தார் என்பதும் பொய்: இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விளக்கம்: “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்[2]. இவர்கள் வாங்கவில்லை என்றால், கமல் கொடுக்கவில்லை என்றாகிறது!

ஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன்

ஶ்ரீரவிசங்கர், கமல் ஹஸன் – “ஆன்மீகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” – பிறகு நிஜ வாழ்க்கையில் எதற்கு இந்த நாடகம், டநடிப்பு எல்லாம்?

சேவைவரியை எதிர்க்கும் நடிகர்கள், ஒருவேளை இவ்வாறு வரியேஉப்பு செய்கிறாற்களா?: எனக்கும் சந்தேகம் இருந்ததினால், “போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளத் தொகை ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்[3]. இது சேவை வரியை தவிர்க்கவா அல்லது ஏய்க்கவா என்பதனை அத்துறை வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும். இதே லாஜிக்கை, இவர் நடித்த விளம்பரம், போத்தீஸ் கடையின் துணிமணிகள் முதலியவற்றிற்கு பொருந்துமா என்று பார்க்கவேண்டும்,” என்று குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும். வருமானவரியோ, சேவை வரியோ, குறிப்பிட்ட துறையினர் இதனை விடமாட்டார்கள் என்பது திண்ணம். போத்தீஸ் கமலுக்கு பணத்தைக் கொடுத்தபோது, “டி.டி.எஸ்” பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, அவ்விவரங்களை, சேவை வரித்துறைப் பெற்று, கமல் சேவை வரி கட்டி இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்துப் பார்ப்பர். இத்தகைய விவகாரங்களில் வரியேப்பு இருக்குமோ என்றா சந்தேகமும் எழுகின்றது. பிறகு, இவர்கள் எப்படி நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றாஇப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

கனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா

கனிமொழி, வீரமணி, தீச்ச்சட்டி ஏந்திi கலாட்டா – இனி வீரமணி, ஒரு சட்டியை கமல் ஹஸனுக்குக் கொடுத்து ஏந்த சொல்லலாம்!

தீபாவளி, கமல் ஹஸன், விடுதலை: “மயிலாடன்” பெயரில் “விடுதலை”யில் வந்துள்ள, கமல் ஹஸனின் நாத்திகப்புராணம்: “தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட் டினார்[4].

ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?

கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில் லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்?

என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான்சுவைத்திருப்பான். இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு. என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது. ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்பு கிறேன். என்னையே கேள்வி கேட்டு, என் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன். எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார். ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது? நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக் கிறார். ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் – 7-20-2009) என்றாரே. எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமல ஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்”.

சகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்

சகிப்புத்தன்மை இந்த நாட்டில் என்பதற்கு உதாரணம் பாகிஸ்தான்

கடவுள், ஆன்மீகம், பார்ப்பது-பார்க்காதது, நல்லது-கெட்டது முதலியன:

ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?

கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்?

  1. முதலில் கேட்கப்பட்ட கேள்வியே சரியில்லை மற்றும் உள்நோக்கம் கொண்டது.
  2. எதிர்மறை மற்றும் விரோத மனப்பாங்குடன் கேட்ட கேள்வியாகும்.
  3. நான் கடவுளையே பார்க்கவில்லையே” எனும்போதே, அந்த உண்மையினை அறிந்தத் தன்மை வெளிப்படுகிறது.
  4. அதேபோல, அத்தகைய குதர்க்கமான கேள்வி கேட்டவனும் “பார்த்ததில்லை” என்றாகியது.
  5. ஏனேனில், அவன் பார்த்திருந்தால், “நான் பார்த்திருக்கிறேனே”, என்று கேட்டிருப்பான். அவன் கேட்கவில்லை என்றாதால், அவன் கேள்வி உண்நோக்கம் கொண்டது.
  6. நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஶ்ரீரவிசங்கரைப் பார்த்துப் பேசுவது, முதலியன போலித்தனமானது.
  7. ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது” என்றால், இங்கு, நாத்திகம் தான் இவரை அவ்வாறு செய்திருக்கிறது.
  8. . தேடுதலைக் குறைத்து விடுகிறது”, குறைத்து விட்டதோ, இல்லையோ, இவர் ஒரு எண்ணத்தில் ஸ்திரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், அவ்வாறில்லை என்பது, முரண்பாடுகளில் வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

09-11-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, அது பொய்யான லெட்டர் பேடுங்க…!- கமல் டொனேஷன் பற்றி ஒரு விளக்கம்!, Posted by: Shankar, Published: Saturday, October 3, 2015, 10:15 [IST].

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/has-kamal-donated-rs-16-cr-or-not-236952.html

[3] http://tamil.filmibeat.com/news/kamal-hassan-donates-rs-16-cr-hiv-affected-children-036992.html

[4] http://www.viduthalai.periyar.org.in/20101107/news01.html