Archive for the ‘செயின்ட் ஜோஸஃப் கதீட்ரல்’ Category

இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் : திருவிதாங்கூர் மன்னர் விருப்பம்

மே 25, 2010

இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் : திருவிதாங்கூர் மன்னர் விருப்பம்

தினமலர், 25-05-2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=5667

சமதர்ம மும்மத ஸ்தலம்: பாலயம் சமதர்ம ஸ்தலம்மக இருக்க வேண்டும் என்று பாரதீய விசார கேந்திரத்தின் இயக்குனர் பி. பரமேஸ்வரன் கூறினார். அதாவது, எப்படி செயின்ட் ஜோஸஃப் கதீட்ரல் மற்றும் ஜுமா மஸ்ஜித் உள்ளதோ, அதே போல அங்குள்ள 200 வருட பழமையான மாஹா கணபதி கோவில் புதுப்பிக்கப்படவேண்டும். அப்படி செய்தால், பாலயம், ஒரு சமதர்ம மும்மத ஸ்தலமாக இருக்கும், என்றார்.

திருவிதாங்கூர் ராஜவம்சத்தை சேர்ந்த, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா: திருவனந்தபுரம் : “இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதுகுறித்து பேசினாலோ, படித்தாலோ, எழுதினாலோ போதாது. ஒற்றுமையுடன் செயலில் இறங்க வேண்டும்’ என, திருவிதாங்கூர் ராஜவம்சத்தை சேர்ந்த, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கேட்டு கொண்டார்.

Maharaja of Travancore, Padmanabha Uthradom Tirunal Marthanda Varma in New Delhi on Oct. 04, 2009. Photo: S. Subramanium

The Hindu Maharaja of Travancore, Padmanabha Uthradom Tirunal Marthanda Varma in New Delhi on Oct. 04, 2009. Photo: S. Subramanium [With courtesy to “The Hindu”]

முதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு: திருவனந்தபுரத்தில், முதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாட்டை உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா துவக்கி வைத்து பேசியதாவது: “இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். இந்துக்கள் ஐக்கியத்திற்கு படிப்பதால், எழுதுவதால், பேசுவதால் மட்டும் போதாது. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஐந்து விரல்களும் இணைந்திருப்பதை போல், இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குருதேவன், சட்டம்பி சுவாமி, வைகுந்தசுவாமி, அய்யங்காளி ஆகியோர் வலியுறுத்திய நெறிமுறைகளை, நாம் இன்னமும் பின்பற்றவில்லை. இதே நிலை நீடித்தால் கேரள மாநிலம் சிதறி விடும்“,  இவ்வாறு மன்னர் கூறினார்.

முந்தைய மந்திய அமைச்சர் ஓ. ராஜகோபால் தலைமை வகித்தார்.