Archive for the ‘பாபர் மசூதி’ Category

மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதி – பெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா, அரசியலா? (2)

ஜனவரி 19, 2024

மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதிபெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா, அரசியலா? (2)

ஆன்மீகம், அரசியல், திமுக, நாத்திகம், அரசியல் ஆக்குவது: ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[1]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது[2]. ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை[3]. எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் என்றார்[4]. “கால் வலி இருப்பதால் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து யோசிக்கிறேன்” என இபிஎஸ் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு[5], இருக்கலாம், “அவர் தவழ்ந்து தவழ்ந்து நிறைய போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வரலாம்” என்று கூறிச் சென்றார்[6]. இப்பொழுது, “ஆன்மீகம்” என்று சொல்லிக் கொண்டு திமுக புதிய வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயல்கிறது. ஆன்மாவை நம்பாத இந்த நாத்திகர்கள் ஏன் ஆன்மிகத்தைப் பற்றிப் பேச வேண்டும்?, பெரியாரிஸ பொய்மை, நாத்திக வெறுப்பு, இந்துவிரோத போக்கு என்ற கலவை ஆன்மீகமாக இருக்கமுடியாது.

உதயநிதி கூறியிருக்கும் ஒவ்வொரு வாக்கியமும், திமுகவின் முகமூடியைக் கிழித்து, சுயமுகத்தைக் காட்டுகிறது: இப்படியான வசனத்தை யாராவடு எழுதி கொடுத்துப் பேசினரா அல்லது விவரங்களைப் புரிந்து பதில் அளித்தாரா, அரிவிஜீவிகளான, ஊடக வல்லுனர்கள் எப்படி ஏற்றுக் கொண்டனர் என்று கவனிக்க வேண்டும்:

  • ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல
  • திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது
  • ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[7]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது
  • ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை
  • எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்

ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல: கடந்த 70 ஆண்டு திராவிடத்துவ, பெரியாரிஸ சித்தாந்த பேச்சுகள், எழுத்துகள் மற்றும் அரசியலை வைத்து கவனித்தால், இவர்கள் மாறப்போவதில்லை, இதுவரை பெற்றுள்ள அந்த பிம்பத்தையும் வேறு விதமாக சித்தரிக்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். ஆகவே மறுபடியும் தேர்தலுக்காக இவ்வாறு பேச்சை மாற்றி மாற்றி பேசுவது என்பது இவர்களுக்கு உரிய கலை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் முன்னரே இவருடைய தாத்தா ராமரைப்பற்றி எப்படி எல்லாம் பேசி இருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும், அதைல்லாம் மறுபடியும் எங்கே எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆக இதுவரையில் இந்து விரோதத் தன்மையுடன் தான் இருந்து கொண்டுள்ளதால், மக்கள் இவர்களெல்லாம் ராமர் கோவில் திறப்பிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் அல்லது மத நம்பிக்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றெல்லாம் யாரும் நம்ப போவதில்லை. இங்கு கூட “மத நம்பிக்கை” என்று சொல்லும் போது, இந்து மதம் எல்லாம் என்றும் ஒன்னும் சொல்லவில்லை. ஆகவே இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான்.

திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது: இதுவும் வழக்கமாக சொல்கின்ற சாக்குதான். திமுக நிச்சயமாக எந்த மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது, அதாவது இந்து மதத்தை தவிர என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பெரியாரிஸம், பகுத்தறிவு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இந்து மதத்தை தான் அவர்கள் எதிர்த்து வருகிறார்களே தவிர, நிச்சியமாக மற்ற மதங்களை விமர்சித்தது கிடையாது. அந்த மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் எதிராக இருந்ததும் கிடையாது. ஆகவே, மறுபடியும் மறுபடியும், திரும்பத் திரும்ப, இத்தகைய வசனங்களை பேசி மக்களை ஏமாற்றுவது என்பது நிச்சயமாக எடுபடாது. இப்பொழுது உள்ள நிலையில் நிச்சயமாக இவர்கள் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால், அந்த முரண்பாடு இக்கால இளைஞர்களின் மனதில் நன்றாகவே பதில் ஆரம்பித்துள்ளது. ஆகவே நிச்சயமாக அவர்கள் அதற்கான ஜனநாயக ரீதியிலான முடிவையும் காண்பார்கள். அதாவது தேர்தல் எனும் பொழுது, தேர்தல் வைத்து தான் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அதில் அவர்களுக்கு உண்டான பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டிய காலம் நிச்சயமாக அருகில் உள்ளது எனலாம்.

ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[8]. அங்கே கோயில் வருவது எங்களுக்குப் பிரச்சினை கிடையாது: பிரச்சனை இல்லை என்றால் பிறகு எதற்கு இத்தகைய வசனங்கள் எல்லாம் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது? இது இவர்கள் தீர்மானத்தில் நடக்கும் விஷயம் அல்ல, ஒட்டுமொத்தமான பல கோடி இந்துக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் தான் இது நடந்து கொண்டிருக்கிறது. ஏன் உச்ச நீதிமன்றமும் இதற்கு தீர்ப்பை கொடுத்து விட்டது. ஆக, அந்த வழக்கில் இருப்பவர்கள் ஒப்புக்கொண்டு தான் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. அந்த கும்பாபிஷேகம் போன்ற மற்ற சடங்குகளை இப்பொழுது செய்ய தீர்மானித்துள்ளனர். ஆகவே தான் அவர்கள் அந்த கோவில் திறப்பு விழாவை இவர்கள் ஒன்று எதிர்ப்பது, ஆதரிப்பது என்பதால் மட்டும் ஒன்று ஆகி விடப்போவதில்லை. இவ்வாறு பாட்டு பாடிக் கொண்டிருப்பதால் என்ன முக்கியத்துவம் ஏற்பட போகிறது என்பதும் ஒன்றும் இல்லை.

ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை: இங்கு இங்கு தான் உதயநிதியின் மனதில் உள்ள அந்த அப்பட்டமான இந்து விரோதம் வெளிப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம் அங்கிருந்து மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பது மிகவும் அபத்தமான பேச்சு. இது எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது என்பதும், இவர் என்னவோ பெரிய இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளை விட பெரிய புத்திசாலி மாதிரியும், அதிக பிரசங்கத்தனமாக பேசுவது, எல்லாம் முடிந்து கோவிலும் கட்டி விழா கொண்டாட வேண்டிய தருணத்தில், இத்தகைய அபத்தமான பேச்சு பேசுவது மிகவும் கேவலமாக இருக்கிறது. அ[ப்படி பேசுவது என்பதும், இந்த திராவிட தூதர்களுக்கு சரித்திரம் என்பது எந்த அளவுக்கு சூன்யமாக இருக்கிறது என்பது புரிந்து கொள்ளலாம். பாபருடைய தளபதி அங்கிருந்த கோவிலை இடித்து மசூதி கட்டினான் என்று தீர்மானம் ஆகி, உச்சநீதிமன்றத்தில் பதிவாகி, பிறகு அந்த வழக்கில் இருந்த சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒப்புக்கொண்ட பிறகுதான் இவையெல்லாம் நடைபெறுகின்றன. ஆகவே இந்நேரத்தில் உதயநிதி, திமுக அல்லது இந்த பெரியாரிஸவாதிகள், இந்துவிரோதிகள் இந்த இல்லை என்பது சொல்வதால் மட்டும் என்னென்ன வழி விட போகிறது?

எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இதுதொடர்பாக, “ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்: ஆன்மாவை மறுத்தது பெரியாரிஸம். ஆத்மாவை மறுத்தது நாத்திக-இந்துவிரோதம். திராவிட சித்தாந்தம் ஆன்மா இல்லை, ஆத்மா இல்லை என்று உளறி வந்து கொண்டிருக்கின்ற நிலையில், ஆன்மீகம் என்று பேச ஆரம்பித்துள்ளனர். இந்த பகுத்தறிவுவாதிகள் இப்பொழுது ஆன்மீகத்தை பற்றி அதிகமாக பேசி வருகின்றது தமாஷாக இருக்கிறது. ஆன்மீகத்தை நாங்கள் எதிர்ப்பதில்லை, ஆன்மீகம் எங்களுக்கு உடன்பாடு தான் – இப்படியெல்லாம் பேசுவதும் வேடிக்கையாக இருக்கிறது. ஆகையால் இவ்வாறு தொடர்ந்து முரண்பட்ட வாதங்களை வைப்பது, மக்களை ஏமாற்றுவது தான். நிச்சயமாக சீக்கிரமாக அவர்களது முகமுடிகள் கிழிந்து, மற்ற எல்லா மக்களுக்கும் தெரியப்போகிறது. இப்பொழுதே தெரிய ஆரம்பித்து விட்டது. ஆகவே, இதேபோல ஒரு பக்கம் நான் கிறிஸ்துவன் தான், நான் முஸ்லிம்களை ஆதரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டும், அல்லேலூயா என்று கத்திக் கொண்டும், இன்னொரு பக்கம் இந்துக்களை விமர்சித்துக் கொண்டோம் இப்படியே 70 ஆண்டுகள் ஓட்டிவிட்டாகியது. இனியும் இதே போன்ற பாரபட்சமான போக்கை கட்டுப்பட்டு வந்தார் நிச்சயமாக மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

© வேதபிரகாஷ்

19-10-2024


[1] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/minister-udhayanidhi-stalin-about-dmk-views-on-ayodya-ram-temple

[3] தமிழ்.சமயம், மசூதியை இடித்து கோயில் கட்டியதை ஏத்துக்க முடியாதுஅயோத்தி ராமர் கோவில் குறித்து உதயநிதி பரபரப்பு!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 18 Jan 2024, 2:43 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-udayanidhi-stalin-said-they-did-not-agree-with-the-demolition-of-the-mosque-and-construction-of-the-temple/articleshow/106954516.cms

[5] தமிழ்.டைம்ஸ்.நௌ, மசூதியை இடித்து கோயில் கட்டியதில் திமுகவுக்கு உடன்பாடடு இல்லை” – உதயநிதி ஸ்டாலின் , செய்திப்பிரிவு, Published : 18 Jan 2024 5.00 AM.

[6] https://tamil.timesnownews.com/tamil-nadu/ayodhya-ram-temple-udhayanidhi-stalin-says-about-dmk-stand-article-106947144

[7] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

[8] புதியதலைமுறை, மசூதியை இடித்துவிட்டு கட்டியதால்தான் திமுகக்கு உடன்பாடு இல்லை” – அயோத்தி குறித்து அமைச்சர் உதயநிதி,  PT WEB, Published on: 18 Jan 2024, 9:37 am.

மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதி – பெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா? (1)

ஜனவரி 19, 2024

மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதிபெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா? (1)

அயோத்தியா கோவில் வைத்து அரசியல் செய்வது யார்?: உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில், பா.ஜ.க ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது[1] என்று தமிழ் ஊடகங்கள் பீடிகையுடன் ஆரம்பிக்கின்றன. ஆனால், அகழாய்வு அறிக்கை முன்னர் இருந்த கோவிலை இடித்து மசூதி கட்டப் பட்டது போன்றவற்ரைப் பற்றி மூச்சுக் கூட விடாததைக் கவனிக்கலாம். இப்படித்தான், தமிழக ஊடகங்களின் செக்யூலரிஸம் வேலை செய்து கொண்டிருக்கிறது. அதிலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சமீப காலமாக, மிக்க சார்புடையதாக வேலை செய்து வருகின்றன. ராமர் கோயில் முழுமையாகக் கட்டிமுடிக்க இன்னும் சில காலம் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், அவசர அவசரமாக லோக் சபா தேர்தலுக்கு முன்பாக ஜனவரி 22-ம் தேதி கோயில் திறக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன[2] என்றெல்லாம் குறிப்பிட்டதையும் கவனிக்கலாம், அதாவது, எதிர்மறையாக, என்னவெல்லாம் “சாக்கு-போக்கு” சொல்லலாம், லாஜிக்கே இல்லாமல் வாதம் புரியலாம் என்ற போக்கு தான் வெளிப் படுகிறது.

கூட்டணி அரசியல் இப்பிரச்சினையில் இரட்டை நிலை?: பிரதமர் மோடி முதல் பா.ஜ.க தலைவர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் அதேவேளையில், `தேர்தல் ஆதாயத்துக்காக மதத்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது’ என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி போன்ற எதிர்க்கட்சிகள் இதனைப் புறக்கணித்துவிட்டன, என்று கூட சேர்த்து செய்தி போடுகின்றன. ஆப் தலைவர் குடும்பத்துடன் கலந்து கொள்வேன் என்கிறார். ஆனால், இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்துவும் பெருமைப் படுகிறான். இந்நிகழ்வை பெரிய அளவில் போற்றுகிறான். பல்லாண்டுகளாக அடக்கி வைத்த இந்து உணர்வுகள் நிச்சயமாக வெளிவருகின்ற அல்லது மனங்களில் நினைத்துப் பூரிப்பு அடைகின்றனர். உண்மையில், பிஜேபிக்கு சாதகமாகி விடுமே என்ற அச்சத்தில், மறுபடியும், மோடியை தூஷிக்கிறாம், பிஜேபியை எதிர்க்கிறோம் என்று இந்துவிரோத பிரச்சாரத்தில் இறங்கி விட்டதையும் கவனிக்கலாம். திமுகவைப் பொறுத்த வரையில், யாரும் ஒன்றும் கண்டுகொள்ளப் போவதில்லை.

தி.மு.. இளைஞரணி மாநாட்டு விழாவும், செய்தியாளர் சந்திப்பும்: தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்[3]. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது[4] என்று வெளியிடப் பட்டுள்ள செய்திகள், “பி.டி.ஐ” பாணியில் தான் இருக்கின்றன. ஊடகக் காரர்கள், உதயநிதி சொன்னதை அப்படியே செய்திகளாகப் போட்டிருக்கிறார்களே தவிர, அவர்கள் பதிலுக்குக் கேள்வி கேட்டதாக எதுவும் குறிப்பிடப் படவில்லை. முன்னர் தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் ராமாயணத்தை, ராமரைப் பற்றியெல்லாம் பேசியதை, எழுதியதைப் பற்றியும் கேட்கவில்லை. இப்பொழுது, அம்மா அயோத்தியா போவதைப் பற்றியும் கேட்கவில்லை.

 அயோத்தியா, ராமர் கோவில் என்ன அதிமுகதிமுக பிரச்சினையா?: ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியலாக்கக்கூடாது என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்[5], ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[6]. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார்[7]. இதையெல்லாம் யாரும் நம்பக் கூடிய நிலையில் யாருமில்லை, என்ற முறையில் உதயநிதி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்[8]. அப்போது அவரிடம், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம் அதை அரசியலாக பார்க்கக்கூடாது” என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது[9]. அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்[10], ‘அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம்[11]. திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது என்று கலைஞர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்[12].

முரண்பட்ட, இரட்டைவேட திராவிடத்துவ நாத்திகம்: ராமசாமி நாயக்கர் என்ற பெரியார், ராமாயணத்தை பற்றி கேவலமாக எழுதியிருக்கிறார்; அண்ணாவும் கம்பரசரம் போதையுடன் தள்ளாடியிருக்கிறார்; கருணாநிதி பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; ராமர் பிறந்த இடத்தை பற்றி கேவலமாக பேசியதுடன், ராமர் எந்த இஞ்னியரிங் கல்லூரியில் படித்தார், இந்துக்கள் எல்லாம் திருடர்கள் என்று பலவிதமாக பேசியிருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் அதேபோல, ஸ்டாலின் திருமண மந்திரங்களைப் பற்றி கேவலமாக பேசியதும் தெரிந்த விசயமே. இவையெல்லாம் ஒரு உதாரணம் தான். இதை விவரித்து சொல்லலாம். இப்பொழுது தனயன்சனாதனத்தை வேரறுப்போம், அது ஏதோ பெரிய கிருமி போன்றது என்றெல்லாம் பேசியதும், அது பற்றிய வழக்கங்கள் எல்லாம் நிலுவையில் இருக்கும் பொழுது, இந்த விதமாக எல்லாம் பேச ஆரம்பித்திருப்பதும் கவனிக்கத்தக்கது அதே நேரத்தில் இவருடைய தாயார், தனது மாமனார் இறந்ததற்கு காசிக்கு சென்று பிண்டம் வைத்ததும். கோவில்களுக்கு எல்லாம் சேர்ந்து நேர்த்திக்கடன் செய்ததும், இப்பொழுது கூட அயோத்தி நிகழ்ச்சிக்கு செல்வேன் என்று அறிவித்துள்ளதும் உன்னிப்பாக நோக்கலாம். ஆகவே இவ்வாறு இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது என்பது, இவர்கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த குடும்பம் தான் செய்து கொண்டிருக்கிறது என்று வெளிப்படையாக தெரிகிறது. என் குடும்பத்தில் என்னுடைய தாயார், மனைவி, சகோதரி, மகள் சாமி கும்பிடுவார்கள் அது அவர்கள் உரிமை என்றால், அதே உரிமை தான் தமிழக மக்களுக்கும் இருக்கின்றது. அதில் நான் அதில் தலையிட மாட்டேன் என்றெல்லாம் பேசும்பொழுது, அதே போல தான் மற்ற நம்பிக்கை உள்ளவர்ககுளும் உள்ள உரிமை.

© வேதபிரகாஷ்

19-01-2024


[1] விகடன், “மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை!” – அமைச்சர் உதயநிதி, சி. அர்ச்சுணன்,Published: 18-01-2024 at 11 AM; Updated: 18-01-2024  at 1 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/ayodhya-ramar-temple-temple-built-by-demolition-of-babri-masjid-says-dmk-minister-udhayanidhi

[3] மாலைமலர், மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால் திமுகவிற்கு உடன்பாடு இல்லைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின், By மாலை மலர்18 ஜனவரி 2024 10:16 AM.

[4] https://www.maalaimalar.com/news/state/tamil-news-minister-udhayanidhi-stalin-says-dmk-did-not-agree-because-mosque-was-demolished-and-temple-was-built-698817

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ராமர் கோயில் திறப்பு மத நம்பிக்கைக்கு திமுக எதிரியல்ல! ஆனா மசூதியை இடிச்சது தப்புஉதயநிதி ஸ்டாலின், By Halley Karthik, Updated: Thursday, January 18, 2024, 11:52 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalin-said-that-dmk-is-not-an-enemy-of-ram-temple-opening-or-religious-faith-575201.html

[7] தமிழ்.இந்து, மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” – உதயநிதி ஸ்டாலின் கருத்து , செய்திப்பிரிவு, Published : 18 Jan 2024 12:19 PM; Last Updated : 18 Jan 2024 12:19 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1184998-we-are-not-for-building-a-temple-over-destroyed-mosque.html

[9] ABP.Live, ‘Won’t Support Building Temple Where Mosque Was Demolished’: DMK’s Udhayanidhi, By: ABP News Bureau | Updated at : 18 Jan 2024 03:10 PM (IST)

[10] https://news.abplive.com/states/ayodhya-ram-mandir-won-t-support-building-temple-where-mosque-was-demolished-dmk-s-udhayanidhi-1657480

[11] நியூஸ்.தமிழ்.7.லைவ், அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, by Web EditorJanuary 18, 2024

[12] https://news7tamil.live/dmk-does-not-approve-of-building-a-temple-after-demolishing-a-mosque-in-ayodhya-minister-udayanidhi-stalins-speech.html