Archive for the ‘சுப.உதயகுமார்’ Category

“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [3]

மார்ச் 24, 2019

நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [3]

22-03-2018 - Press club- Nadar book meeting

சனாதனத்தால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட நாடார்கள் (08-03-2019): உதயகுமார் பேசியது, “இக்கூட்டத்திற்கு போகாதே என்று சில நண்பர்கள் வலியுருத்தினார்கள். ஏனெனில், அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் எல்லோருமே நாடார்கள். அமீரும் முஸ்லிம் நாடார். கரு.நாகராஜன் போல, கரு.பழனியப்பன் பச்சை நாடார். சிலர் காவிக்குள் கருப்பு மற்றும் கருப்பில் காவி இருக்கு. என்னைப் பொறுத்த வரையில் கருப்பும் இல்லை, காவியும் இல்லை என்பது தான். ஏனெனில், இதெல்லாம் பச்சை துரோகம். பல வரிகள் 18 கீழ்ஜாதியினரின் மீது திருவாகூர் அரசு விதித்தது. விவேகானந்தர் இந்த அரசை “பைத்தியக்காரகளின் புகலிடம்” என்று விமர்சித்தார். தோள்சீலை போராட்டம் மூலம் முலைகளை மறைக்கும் உரிமை பெற்றார்கள். இன்றும் ஜாதி மேன்மை-தாழ்மை செயல்பட்டு வருகிறது. ஜீன்ஸ் போடக் கூடாது என்றுள்ளது….ஜெயமோகன் என்னை விமர்சிப்பது, எதிர்த்து நிற்கவேண்டும் என்பது தெரிகிறது,” ஆர்.எஸ்.எஸ் (தாழ்த்தப் பட்டவர் கோவிலுக்குள் அனுமதிக்கப் போது, வெளியேறியது), இந்து மகாசபா (சமூக சீர்திருத்தம்) முதலியவற்றைப் பற்றியும் திரிபு விளக்கம் கொடுத்தது, இவரது போக்கைக் காட்டுகிறது.

22-03-2018 - Press club- Nadar book sold

08-03-2019 பேச்சுகள் 23-03-2019ல் தொடர்ந்தது: சென்னை கூட்டத்திற்கு வினவு விளம்பரம் கொடுத்து வருகிறது[1]. இந்நிகழ்ச்சி பற்றியும் கொடுத்தது[2]. இவர்கள் பேசிய பேச்சுகளை யூ-டியூப் மூலமும் பரப்பி வருகின்றனர். 23-03-2019 அன்று சென்னையில் நடந்த கூட்டத்திலும் அதையேத் தான் பேசியுள்ளனர். வந்திருந்த கூட்டத்தில் பெரும்பாலோர், கம்யூனிஸ, திக-நாத்திக, கிருத்து-துலுக்க கும்பலாகத் தான் இருந்தது. புத்தகத்திலும், ஒன்றும் புதியதாக இல்லை. அரைத்த மாவையே, திரும்ப அரைத்து, நிறைய படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம் போல, மோடி-எதிர்ப்பு போர்வையில், உணர்ச்சிப் பூர்வமான, திராவிடத்திற்கே உரித்தான மேடைப் பேச்சு போல, பொரிந்து தள்ளினார்கள்.

22-03-2019 - my comments

வந்திருந்த சுமார் 100 பேர் ஏற்கெனவே அந்த சித்தாந்த்தில் ஊறியவர்கள் என்பதால், அவர்களுக்கும் புதியதாக எந்த விசயமோ, தகவலோ கிடைக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஒருவர் “மன்னிக்கவும்” என்றெல்லாம் சொன்னார். பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். முதலில் பேசியவர் நாடார்கள் பாஜக பக்கம் போகிறார்கள், ஆர்.எஸ்.எஸ் தான் புத்தகத்தை எதிர்த்து வழக்கு போட்டது என்றேல்லாம் பேசினார். வழக்கறிஞர் வஞ்சிநாதன் [மய்யம் கட்சி] என்பவரு அதே தோரணையில் பேசினார். நீதிபதி வி.ஆர்.விஸ்வநாதன், ஒரு பிராமணர், இருப்பினும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தார். பிறகு பார்ப்பனர் என்ற ஓலம் ஏன் என்று தெரியவில்லை.

22-03-2018 - Press club- Nadar book -thiruma speaking

திருமாவளவன் நேரங்கடந்து வந்தார், “மன்னிகவும்…நான் புத்தகத்தை படிக்கவில்லை. இருப்பினும் நாடார்களின் நிறம் கருப்புதான்…..”, என்று முடித்தார். ஏழு மணிக்கு முக்கியமானவரை சந்திக்க வேண்டும் என்று 6.35ற்கே புறப்பட்டு விட்டார். அவருடன் 20 பேர் சென்று விட்டனர். ஊடகக்காரர்களும் நழிவி விட்டனர்.

22-03-2019 program on Nadar book.Ari Paranthaman

ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேசியது: ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமனும், வீமர்சித்து பேசினார். தன்னிலையுணார்ந்து ஜாக்கிரதையாக பேசினார் எனலாம். இருப்பினும் அவர் சொல்ல வேண்டிய கருத்துகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டார். முன்னுரையில் நீதிபதி கடைசியில் குறிப்பிட்டதை, லஜபதி ராய் குறிப்பிட்டதை, அரிபரந்தாமன் எடுத்துக் காட்டினார். அதற்கு நீதிபதிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். கமுதி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு நாடார்கள் சென்ற பாதையை சுவர் எழுப்பி மறைத்தனர். வரத ராவ் என்பவர் அந்த தீர்ப்பையும் கொடுத்தார்.

22-03-2019 program on Nadar book.Vellaiyan speaks

வெள்ளையன் பேசியது: நாடார் என்றால், நான் வர மாட்டேன் என்று சொன்னேன். ஆனால், லஜபதி ராய் சொன்னதால் வந்தேன். நான் வணிக சங்கத்தின் தலைவராக இருப்பதினால், வருவதில்லை. பொதுநல எண்ணம் இருக்க வேண்டும். நான் விபூதியை வைத்திருக்கிறேன் என்பதை கவனித்தீர்களா? எங்களது குலதெய்வத்தின் நினைவாக வைத்திருக்கிறேன். இப்புத்தகத்தை நான் படிக்கவில்லை. ஆனால், பிறகு படிப்பேன். திருச்செந்தூர் கோவிலில் நாடார்களை அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், காமராஜர் நிலையில் மாறியது. மற்றவர்களை மதிக்க வேண்டும். கருத்துகளைத் திணிக்கக் கூடாது. வெளிநாட்டுப் பொருட்களை வாங்கக் கூடாது என்ற நோக்கில், மே 5 2019 அன்று, சுவதேசி பிரகடன மாநாடு என்று என்று நடத்தப் போகிறோம்.

22-03-2019 program on Nadar book.milton

லஜபதி ராய் பேசினது: பிறகு லஜபதி ராய் ஏற்புரையில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக சமூகம் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரு ஜாதி சமூகம் ஆகும். திரைப்படங்களில் “சண்டாளன், சண்டாளப் பாவி” வார்த்தை பிரயோகம் சாதாரணமாக இருக்கிறது. “பக்கி” என்றால் மலத்தை சுமக்கும் ஜாதி என்று தெரிய வருகிறது. 5000 வருடங்களுக்கு முன்னர் நாம் எல்லோருமே ஒரே ஜாதி தான். முன்பு நான் வெளியிட்ட புத்தகங்கள் விற்கவில்லை. ஆனால், இப்புத்தகம் ஆயிரக் கணக்கில் விற்று விட்டது. ஒருவேளை, “காவி” என்ற வார்த்தையினால் ஆர்.எஸ்.எஸ்-ஆல் பிரபலம் அடைந்தது போலும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மக்களுக்கு தெரிய வைக்க வேண்டும் என்று நீதிபதி வேணுகோபால் கமிஷனில் தெரிவித்தார். அதைத்தான் நான் செய்கிறேன். கன்னியாகுமரியில், எம்பெருமாள் நாயுடு கோவில் நுழைப்பு போராட்டம் நடத்தினார். 1936ல் ஆலய பிரவேச சட்டம் கொண்டு வரப்பது. மதம் மாறப் போகிறோம் என்று கேரள இழவர்கள் அறிவித்ததால், அச்சட்டம் வந்தது. இந்தியாவில் எந்த இனமும் கிடையாது. கலப்பினம் தான் உள்ளது. நாஞ்சில் நாடன் கூட ஆரியன், திராவிடன் இனங்கள் எல்லாம் பொய் என்றிருக்கிறார். SCs, STs, முஸ்லிம், கிருத்துவர் எல்லோரும் சேர்ந்து செயல்படவேண்டும்,” என்று முடித்தார்.

22-03-2018 - Press club- Nadar book meeting-audience

கூட்டத்தின் சுருக்கமான விவரங்கள்: இக்கூட்டத்தின் பேச்சாளர்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு:

  1. “நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?”  புத்தக அறிமுக விழா 03.2019 அன்று மாலை 5 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கத்தில் நடைபெற்றது.
  2. சுமார் 100 பேர் அதில் கலந்து கொண்டனர், பெரும்பாலும் கருப்புகள் இருந்தன, காவிகளை காணவில்லை! சில நாடார்கள் இருந்தனர்.
  3. நிகழ்ச்சி ஆரம்பம் ஐந்து என்றாலும், 6.50 வரை வர வேண்டியவர்கள் வரவில்லை போலும்! ஒருவர் மன்னிக்கவும் என்று சமாளித்துக் கொண்டிருந்தார்.
  4. வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், மாவட்ட செயலாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், நிகழ்ச்சி தொகுப்பாளராக மோடியை வசைப் பட்டிக் கொண்டிருந்தார்.
  5. வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா. மையம் நாடார்கள் பிஜேபி பக்கம் போய் விட்டார்கள், பாசிஸம் வள்ர்கிறது என்றார்.
  6. தமிழிசையும், பொன்னாரும் எப்போவுமே சுப்ரமணிய சுவாமியா ஆக முடியாது, அதே தான் தமிழிசையும் நிர்மலா சீதாராமனா ஆக முடியாது.
  7. பார்ப்பனன், பார்ப்பனீயம், பாசிஸம் என்றேல்லாம் ஊளையிட்டு, அனுமதி கொடுத்தது நீதிபதி ஒரு பிராமணர் என்று பெரிய தமாஷா ஆகிவிட்டது.
  8. லேட்டாக வந்த திருமாவளவன் லேட்டஸ்டாக சொன்னது, நான் இப்புத்தகத்தைப் படிக்கவில்லை, இருப்பினும் நாட்டார்கள் நிறம் கருப்புதான்.
  9. திருமா வந்தவுடன், ஆர்வ கோளாறினால், புத்தக வெளியீடு இப்பொழுது தொடங்கும் என்றார் வழக்கறிஞ்சர், பிறகு சமாளித்துக் கொண்டார்.
  10. புத்தகம் நன்றாக விற்பதற்கு, ஆர்.எஸ்.எஸ்.க்கு நன்றி தெரிவிக்கப் பட்டது! 2000 போட்டார்களாம் விற்றுவிட்டதாம், 3000 போடப் போகிறார்களாம்.
  11. வெள்ளையன், தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை லேட்டாக வந்த மர்மத்தை கூடிய நியாயவான்கள், தர்மவான்கள் தான் விளக்க வேண்டும்.
  12. ஓய்வு நீதிபதி அரிபரந்தாமன், தன்னை கம்யூனிஸவாதி என்று வெளிப் படுத்திக் கொண்டதால், எச்சரிக்கையோடு விமர்சனம் செய்தார்.
  13. விழாவிற்கு வந்தவர்களுக்கு டீ கொடுத்தது படு தமாஷாக இருந்தது, சாராயமோ, கள்ளோ, பதநீரோ கொடுத்திருந்தால் மோடியை மறந்திருக்கலாம்.
  14. ஆக இந்து-சித்தாந்த எதிரிகள் தயாராக இருக்கிறார்கள், இந்துத்துவ / அரசியல் வாதிகள் தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்! [14]

22-03-2019 - my comments-2

சிந்தாந்த நீதிபதிகள், அரசியல்வாதி நியமன நீதிபதிகள் நடுநிலையாக தீர்ப்பளிக்க முடியுமா?: இப்படி ஒரு கேள்வி எழுபப் பட்டது. சரியான கேள்வி, நிச்சயமாக அவர்களின் மனங்கள் சித்தாந்தங்களில் ஊறியிருப்பதால், அவர்களின் தீர்ப்புகள் சார்புடையதாகவே இருக்கும், இருக்கின்றன. மேலும் அவர்களது “நீதிபதி” வேலையே, அரசியல் ஆதரவு, பரிந்துரை, தேர்வு என்ற முறையில் தான் நடக்கிறது. இதில் கட்சி-ஆதரவு, ஜாதி, மதம் என்ற ரீதியில் தான், நீதிபதி பதவிகள் ஒதுக்கப் படுகின்றன. பிறகு, அவர்கள் தமது எஜமானர்களுக்கு விசுவாசமாகத் தானே இருக்க வேண்டும். திமுக ஆரம்பித்த அம்முறை அதிமுகவினாலும் தொடரப் பட்டது. அந்தந்த கட்சிகளின் பெயர்களிலேயே வழக்கறிஞர்கள் சங்கங்கள் எல்லாம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. பிறகு என்ன நீதிபதிகளின் சமத்துவம், சமநீதி, சமநோக்கு எல்லாம்? 1% நீதிபதிகள் வேண்டுமானால் அவ்வாறு இருக்கலாம், 99% அரசியல் ஏஜென்டுகள் தாம். அதனால் தான், சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெருக்களுக்கு வந்து, ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு, சேற்றை வாரி இறைத்துக் கொண்டனர். ஆக, நீதித்துறையும் வியாபாரட்திற்கு, பேரத்திற்கு, அரசியலுக்கு உட்படுத்தப் படும் போது, தீர்ப்புகளும் சார்பினால் சாய்கின்றன, சித்தாந்தத்தினால் சீரழிகின்றன. யார் தான் காப்பாற்றப் போகிறார்களோ?

வேதபிரகாஷ்

23-03-2019

22-03-2019 - my comments-3

[1] வினவு, நாடார் வரலாறு கறுப்பா… ? காவியா… ? | சென்னையில் நூல் அறிமுக விழா !, By மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – March 20, 2019

[2] https://www.vinavu.com/2019/03/20/nadar-varalaru-book-release-in-chennai/

“நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [2]

மார்ச் 24, 2019

நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா? [2]

The News Minute story 8-3-2019

நாடார்களின் மேன்மைக்கு, வெற்றிக்கு யார் காரணம்? (08-03-2019)[1]: ஆயிரக்கணக்கான நாடார்கள் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் தழுவினர். தங்களது வழக்கு உயர் நீதிமன்றத்தில் 18.09.1902 இல் தோல்வி அடைந்தாலும் நாடார்கள் மனந்தளராமல் மன்னர் மன்றம் வரை (privy council) 42,000 ரூபாய் செலவிட்டு அங்கும் நாடார்களின் கோவில் நுழைவு கேலிக்குள்ளாகி அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சுசீந்தரம் கோவில் தெரு நுழைவு போராட்டம் தந்தை பெரியார் வழிகாட்டுதல்படி எம் இ நாயுடு என்ற இந்து கவரா பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவரின் தலைமையில் நடந்தது. வெற்றியும் பெற்றது. கேரளா வைக்கத்திலும் தீட்டுப்படுத்தும் சாதிகளை அனுமதி மறுக்கும் வைக்கத்து அப்பனை குப்புற போட்டு வேட்டி துவைக்கும் கல்லாக பயன்படுத்துவோம் என்ற பெரியாரின் போராட்டமே வெற்றி பெற்றது. கேரள ஆலய பிரவேச சட்டத்தின் நிறைவேறக் காரணம் மதம் மாறுவோம் என கேரளத்தின் 12 சதவிகித மக்கள் தொகையை கொண்ட ஈழவர் மற்றும் தீயர் சமூக மாநாடு அறிவித்ததே என டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.

08-03-2019 punkoothai

நாடார்கள் விளிம்பு நிலையிலிருந்து இன்று சிறிது மையம் நோக்கி நகர்ந்ததற்கு திருமாவளவன் அவர்கள் கூறுவது போல அடங்க மறுத்து அத்து மீறிய நாடார்களின் போராட்டங்களே காரணம். நாடார்களின் கடந்த இரு நூற்றாண்டுகள் நடந்த சமூக விடுதலைப் போராட்டம் சனாதன இந்து மதத்திற்கு எதிரானது. நாடார்களின் வரலாறு கறுப்பே! காவியல்ல என்பதை டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நிச்சயம் கருத்தில் கொள்வார்[2]. இங்கு கிருஷ்ணசாமியை எதிர்ப்பது போல உள்ளது. ஏனெனில், அவர், தமது ஜாதி பட்டியல் இனத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதனால், மதம் மாறிவர்களின் சலுகை போய் விடும். மேலும் “இந்து” என்று சான்றிதழ் வைத்துக் கொண்டு சௌகைகள் பெறும் போலிகளும் அவர்களின் முகமூடி கிழிந்து பாதிப்படைவர்.

08-03-2019 - karu.palaniappan

கரு. பழனியப்பனின் விசமத் தனமான பேச்சு (08-03-2019): அடுத்ததாக பேசிய இயக்குனர் கரு. பழனியப்பன் தனக்கான சீற்றம் பொருந்திய பேச்சினை கொண்டு மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுத்தார் அவர் ”காவிகள் தொடர்பாக எப்போதெல்லாம் எங்கெல்லாம் சான்ஸ் கிடைக்கிதோ அப்போதெல்லாம் நான் மறக்காம பதிவு செஞ்சிடுவேன்,” என்று தொடக்கத்திலேயே தனது காவி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்[3]. நடந்து முடிந்த இஷா யோகா மையத்தின் சிவ ராத்திரி குறித்து “எங்களை போன்ற சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களின் விழாக்களுக்கு அனுமதி கேட்டால் மறுக்கப்படும் நிலையில், பல ஹெக்டேர் யானை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவா ராத்திரி நிகழ்ச்சிக்கு நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி வருகை தருகிறார்மேலும்இயற்கை பேரிடரை பார்வையிட வராத மோடி தேர்தல் நெருங்கும் வேலையில் மாசத்திற்கு இரண்டு முறை வருவதுஏற்றுகொள்ள முடியாது என்றார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி குறித்து பேசிய அவர்இந்து மத பிரதிநிதி என்று கூறும் அனைவரும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் தான். இப்போவே திவாலான மேலும் திவலாகக்கூடிய கம்பெனியில தெரிஞ்சே சீட்டு கட்டுவோமா. அதே தான் திரும்பவும் பி.ஜே.பிக்கு வோட்டு போடாதிங்க, பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன். அப்போது பாஜகவிடமிருந்து தான் இந்தியாவை நாம் காப்பாற்ற வேண்டும். நாம் தான் இண்டியன் பாஜகவினர் தான் ஆண்டி இண்டியன் என்று குறிப்பிட்டார்.

08-03-2019 - Lajpatroy business

 

மேலும் அவர் கூறியதாவது, “லாரியை ஓட்டும் ட்ரைவர் எதைச் சொன்னாலும் க்ளீனர் கேட்டுக் கொண்டே இருப்பார். க்ளீனருக்கு ஒன்னுமே தெரியாது ஆனாலும் ஸ்டியரிங்கை பாத்துக் கொண்டே இருப்பாரு. அண்ணன் எப்போவது ஒரு வாய்ப்பு கிடைச்சு, அண்ணன் தூக்கம் வருதுன்னு சொன்னா நாம ஓட்டிடமாட்டோமான்னு எதிர்பார்ப்பு இருக்கும். ட்ரைவருக்கு கூட கவனம் பிசகும். ஆனால் க்ளீனருக்கு மட்டும் கவனம் பிசகவே பிசகாது. அந்த மாதிரி பல வருடங்களுக்கு முன்னால் நடந்த ரதயாத்திரை படத்தைப் பாருங்க அத்வானி பக்கத்தில் இருக்கிற மோடி ஸ்ட்ரைட்டா அவரையே பாத்துக் கொண்டு இருப்பார். ஒருத்தர் நின்று கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருப்பார். காணக் கிடைக்காத காட்சி. அவர் வேறு யாருமல்ல மோடி தான.என்றார் அழுத்தமாக.

08-03-2019 - Amir

அப்போது பாஜகவிடமிருந்து தான் இந்தியாவை நாம் காப்பாற்ற வேண்டும். நாம் தான் இண்டியன் பாஜகவினர் தான் ஆண்டி இண்டியன் என்று குறிப்பிட்டார்.நமகெல்லாம் ஸ்லீப்பர் செல்ஸ் பி.ஜே.பிலையும் இருக்காங்க, தமிழிசையும், பொன்னாரும். எப்போவுமே பொன்னார் சுப்ரமணிய சுவாமியா ஆக முடியாது, அதே தான் தமிழிசையும் நிர்மலா சீதாராமனா ஆகா முடியாது. ஒரு நாள் இந்த பிரச்சன கிளம்பும் அப்போ அவங்க தான் நம்ம ஸ்லீப்பர் செல்ஸ்,” என்று தனது உரையை சாதிய எதிர்ப்புடன் முடித்துக்கொண்டார்[4]. ஆக ஜாதி ரீதியில் மக்களைத் தூண்டி விடவும், நாடார்களில் பிளவை ஏற்படுத்தவும், நாடார் பெயரில் மற்ற ஜாதிகளையும் இழுத்து, அவற்றுடன் பிரச்சினை ஏற்படுத்தவும், விசமத் தனமாக, இத்தகைய பேச்சுகள் உள்ளன என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம். ஒரு நாள் இந்த பிரச்சன கிளம்பும் அப்போ அவங்க தான் நம்ம ஸ்லீப்பர் செல்ஸ்,” என்று சொல்லும் போது, அவர்களது உள்நோக்கமும் வெளிப்படுகிறது.

08-03-2019 - A. Marx

காந்தியை கொன்ற கோட்சேவை நினைவில் கூறவாவது அனைவரும் காந்தியின் நினைவு நாளை கொண்டாட வேண்டும் (08-03-2019): தொடர்ந்து பேசிய பேராசிரியர் மார்க்ஸ் மற்றும் இயக்குனர் அமீர் “ மத வெறுப்பையும், மத வெறியையும் தூண்டும் இயக்கமே ஆர்.எஸ்.எஸ் அதனுடைய அஜெண்டாவிற்கு நம்மை அறியாமலேயே தள்ளப்படுகிறோம், மீண்டும் ஒரு இந்து ராஜ்யத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்- இன் நோக்கம். அவர்கள் இந்து மதத்தில் உள்ள சாதியையோ, வர்ணத்தையோ எதிர்கவில்லை” என்றார்[5].

மார்க்ஸ் தற்போதைய தி.மூ.க-வின் நிலை குறித்து கூறிய இயக்குனர் அமீர் “சமூக நீதியை வெளிக்கொண்டு வந்ததில் பெரும் பங்கு தி.மூ.க-விற்கு உள்ளது. சாதி இல்லை என்று பேசிய பெரியாரிசத்தின் கிளையான தி.மூ.க தொகுதிக்கான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் போது வேறு வழியின்றி சாதிவாரியான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளபட்டிருப்பது வருத்தமளிக்கிறது, வெளி நாடுகளில் இந்தியா காந்தியின் நாடு என்று தான் அறியப்படுகிறது.

எதிர்மறையான வக்கிர வாதங்கள், உண்மை மறைத்து ஜாதியத்தை ஆதரிக்கும் போக்கு, அதே நேரத்தில் ஜாதிகளை மோத விட வேண்டும் என்ற போக்கு, முதலியவற்றை அவர்களின் சிந்தனை தீவிரவாதத்தினைக் காட்டுகிறது.

“கோட்சே” பற்று போன்றவை முன்னுக்கு முரண் என்பது போல இல்லை, எதிரிக்கு எதிரி நண்பன் போன்ற தத்துவமும் இல்லை, எல்லாமே வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் தான்!

அனால் இங்கோ பட்டேல் இன மக்களின் வாக்குகளை பெறுவதற்கு 3000 கோடிக்கு சிலை வைக்கும் அவல நிலையில் இந்திய உள்ளது” என்றார் ஆதங்கத்துடன். மேலும் “காந்தியை கொன்ற கோட்சேவை நினைவில் கூறவாவது அனைவரும் காந்தியின் நினைவு நாளை கொண்டாட வேண்டும்” என்றார் அமீர். இறுதியாக நூலாசிரியர் தி. லஜபதி ராய் அவர்கள் தனது நூலை பற்றி பேசிவிட்டு “காவி வரலாறு அடிமைப்படுத்தும். அதனால் நம்முடைய வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்” என்று சுருக்கமாக முடித்து கொன்டார். நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் தமிழ் சாரலோடு நிறைவுற்றது நிகழ்ச்சி- அஹமத் என்ற பெயரில் பிரசுரிக்கப் பாட்டது கொடுக்கப் பட்டுள்ளது[6]. சம்பத் ஶ்ரீனிவாசன், டாக்டர் ஏ. ரங்கராஜன், கே. பிரபுராஜதுரை முதலியோரும் பேசினர்.

வேதபிரகாஷ்

23-03-2019.

08-03-2019 - Lajpatroy business-madurai meeting

K. Prabhu Rajadurai, Dr A. Rangarajan, Sampath Srinivasan

[1] தீக்கதிர், நாடார்களின் வரலாறு கறுப்பா ? காவியா ??, [Lajapathy Roy, Kalai Arasu முகநூல் பதிவிலிருந்து.. ] kannan, POSTED ON MAY 14, 2018, 3:03 PM.

[2]https://theekkathir.in/2018/05/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/

[3] நக்கீரன், “பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்”- மாஸ் காட்டிய இயக்குனர், கரு. பழனியப்பன், Published on 09/03/2019 (10:33) | Edited on 09/03/2019 (11:08).

[4]https://www.nakkheeran.in/24-by-7-news/politics/bjp-andy-indian-we-all-indian-mass-indicated-director-palaniappan

 

[5] நக்கீரன், “பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்”- மாஸ் காட்டிய இயக்குனர், கரு. பழனியப்பன், Published on 09/03/2019 (10:33) | Edited on 09/03/2019 (11:08).

[6]https://www.nakkheeran.in/24-by-7-news/politics/bjp-andy-indian-we-all-indian-mass-indicated-director-palaniappan