Archive for the ‘சகிப்புத்தன்மை’ Category

83-வயதான புகழ் பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

செப்ரெம்பர் 16, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

13-09-2023 அன்று விசிக கொடுத்த புகாரும், ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய தீர்மானித்த போலீஸாரும்: இந்த நிலையில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் மணியன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று ஊடகங்க்ள் குறிப்பிடுகின்றன. அதன் பேரில் மாம்பலம் போலீசார் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 153, 153(A), 505(1)(B), 505 (2), பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, ஆர்பிவிஎஸ் மணியன் என்பவரை கைது செய்யவும் போலீஸார் தீர்மானித்தனர். விடியற்காலையிலேயே அவர்கள் ஆர்பிவிஎஸ் மணியனின் வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தனர். அதன்படியே, அவரது வீட்டிற்குச் சென்றனர்.

14-09-2023 விடியற்காலையில் கைது செய்யப் பட்டது: தியாகராயநகர் உதவி கமிஷனர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார், தியாகராயநகர் ராஜம்மாள் தெருவில் உள்ள மணியன் வீட்டுக்குச் சென்றனர். 14-09-2023 வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை திநகர் போலீசார் ஆர்பிவிஎஸ் மணியனை அவரது இல்லத்தில் கைது செய்தனர்[1]. கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினமலர் கூஊகிறது. இவரை அப்படி “ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த”,  என்ன பெரிய விசயம் இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லா விவரங்களும் வெளிப்படையாக உள்ளநிலையில், அதிலும் 3-4 காலையில் கைது செய்யப் பட்டபோது, யாருக்குத் தெரியப் போகிறது, என்ன பிர்ச்சினை வரப் போகிறது என்று தெரியவில்லை. அந்நிலையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்து முன்னணியின் ஆதரவும், எதிர்ப்பும்:  “83 வயது முதியவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும், அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது,” என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்[3]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “தமிழக அரசின் எண்ணப்படி தொடர்ந்து தமிழக காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை நீதிமன்றமோ, ஊடகமோ கண்டுகொள்ளவில்லை. இது ஜனநாயக படுகொலைக்கு சமம். ஆர்.பி.வி.எஸ். மணியன் தேசியவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர். இன்று குமரியில் நாம் காண்கின்ற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பணிக்காக தான் பார்த்துவந்த அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். விவேகானந்தர் நினைவு மண்டபம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குவதற்கும், குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாய் விளங்குவதற்கும் அந்தக் காலத்தில் ஏக்நாத் ரானடே உடன் தோளோடு தோள் நின்று அடிப்படை அஸ்திவாரமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தை காக்க வாழ்ந்தவர்.

ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் போக்கு: இந்நிலையில், ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி சிலர் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தில் பெரும்பாலானவை பார்ப்பனர் எதிர்ப்பாக, கடுமையாக தூஷணங்களுடன் இருக்கின்றன. வீடியோக்களும் போட ஆரம்பித்து விட்டனர். இந்தப் போக்கை கடந்த சில வருடங்களாகவே பார்க்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைக்கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவை பரப்பப்படுகின்றன. அவர் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும் அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்துக்களின் நம்பிக்கைளை கொச்சைபடுத்திய பல யூடியூப் சேனல்கள், சனாதனத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர்கள், இந்து மதத்தை இழிவு படுத்தியவர்கள், பிரதமர், ஆளுநர் ஆகியோரை‌த் தாக்கிப் பேசியவர்கள் என பலர் மீது பல இடங்களில் புகார் கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழக காவல் துறைக்கும் நீதிமன்றத்துக்கும் குற்றத்தின் தன்மையைவிட குற்றம்சாட்டப்படுபவர் பின்புலம் என்ன என்பதை வைத்துதான் நடவடிக்கை என்பதாக அமைந்துள்ளது. இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆவார். இவரது கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியன்: சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியனை 14 நாள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். வயது மூப்பு கருதி அவரை மருத்துவமனையில் தங்க அனுமதிக்க வேண்டும் என அவர் சார்பில் வக்கீல்கள் வலியுறுத்தினர். பரிசீலிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணியன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சுதாகர், மணியன் மீதான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார். அதற்கு நீதிபதி (மணியனை பார்த்து), உங்கள் மீதான புகார் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என கூறினார்[5]. அதற்கு மணியன், ‘நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்[6]. மணியன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ், ‘மணியனுக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி, மணியனை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இங்கும் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன:

  1. பார்ப்பானை பிரம்ம முஹூர்த்தத்தில் வைத்து கைது செய்தால், யாருக்கு பலன் கிடைக்கும்? நேரத்தைக் குறித்தது கடவுளா, திராவிட அதிகாரியா?
  2. அமாவாசைக்கு முன்னால் பார்ப்பானை கைது செய்தால் அவனது கிரியைகள் கெடுமா, அல்லது பெரியாரிஸ ஆவிகள் துடிக்குமா?
  3. 83 வயதான “கெழப்பய” என்ன ஓடியா போய் விடுவார்? காஷ்மீரில் வீட்டு காவல் வைக்கும் பொழுது, இவரை வைக்க முடியாதா?
  4. இல்லை எங்களுக்கு இணை வைக்காதே, இன்டியா கூட்டணியில் இதை சேர்காதே என்று அவர்கள் மிரட்டினரா, ஆணையிட்டனரா?
  5. அதெப்படி உடனடியாக, எந்த வழக்கறிஞரும் வரவில்லை, பெயில் கோரவில்லை, ஆனால், 14 நாட்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்?
  6. அதாவது ஒரு பக்ஷத்திற்கு சிறை, அடுத்த பக்ஷத்தில் பெயிலில் வெளியே விடலாம், இப்பொழுது மருதுத்துவ மனை வசதி கூட நிராகரிக்கப் பட்டுள்ளது.
  7. அண்ணன் அவன் பிறந்த நாள் அமாவாசையில் வந்து விட்டதால் தம்பிகள் நல்ல நாளை முன்னமே குறித்து விட்டனரோ?
  8. சரி யாரப்பா அந்த திராவிட புரோகிதர்? திராவிட மாடலில், திராவிட ஸ்டாக் ஆட்களில் தயாராகி விட்டார்கள் போலும்!
  9. நல்ல ஆடு கிடைத்து விட்டது, பலிகடா ஆடு, பார்ப்பன பலிக்கடா ஆடு, அதிலும் 83-வயது நிறைந்த பார்ப்பன பலிக்கடா ஆடு – கொண்டாட்டம் தான்!
  10. இனி பார்ப்பன துவேஷம் பீரிடும், மீம்ஸ்கள் யூ-டியூப்புகள் அதிகமாகும், ஆனால், எதிர்வினைகளுக்கு எந்த சட்டமும் வேலை செய்யாது.

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமணி, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By DIN  |   Published On : 14th September 2023 08:44 AM  |   Last Updated : 14th September 2023 08:44 AM

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/sep/14/spiritual-speaker-rpvs-manian-arrested-4072554.html

[3] தமிழ்.இந்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைதுதமிழகத்தில் கருத்து சுதந்திர நிலையைக் காட்டுகிறது!இந்து முன்னணி, செய்திப்பிரிவு, Published : 14 Sep 2023 03:08 PM; Last Updated : 14 Sep 2023 03:08 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1123301-rbvs-maniyan-arrest-hindu-munnani-condemns.html

[5] தினத்தந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு: ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது, செப்டம்பர் 15, 5:57 am

[6] https://www.dailythanthi.com/News/State/tiruvalluvar-defamation-of-ambedkar-spiritual-speaker-maniyan-arrested-1052962

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ்மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

செப்ரெம்பர் 15, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

சனாத எதிர்ப்பு பேச்ச்களால் மக்களை பாதித்த நிலை: சனாதனத்தைப் பற்றிய பேச்சுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தேவையில்லாமல், அமைச்சர்கள் அளவில், செக்யூலரிஸத்தை மறந்து, அவர்கள் பேசியதும், தொடர்ந்து மற்ற தலைவர்கள், எம்.பிக்கள் முதலியோர் ஆதரித்து விளக்கம் கொடுப்பதும், இந்தியா முழுவதும், இது அறியப் பட்டு பிரச்சினையாகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு இது அரசியலாக உள்ளது. ஆனால், இவர்களது பேச்சுகள் இந்துக்களை வெகுவாக பாதித்து வருகின்றன. இவர்கள் அரசியல் போர்வையில், தினம்-தினம் எதையதையோ சம்பந்தம் இல்லாமல் பேசி, பொது மக்களின் மனங்களில் சலனங்களை உண்டாக்கி வருகின்றனர். அரசியல் சார்புள்ள நிலையில் தமிழகத்தில் மடாதிபதிகள் அமைதியாக மௌனம் காக்கின்றனர். இதனால், நம்பிக்கையாளர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமக்குள் தம்முடைய பிரச்சினைகளை பேசிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதும், தனிப்பட்ட முறையில், உள்ளரங்களில் குறிப்பிட்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப் படும் நிகழ்ச்சிகளில் பேசுவதும் ஒன்றாகுமா என்பதெல்லாம் சட்ட வல்லுனர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

11-09-2023 அன்று பாரதிய வித்யாபவனில்பாரதியும், விவேகானந்தரும்என்ற தலைப்பில் நடந்த சொற்பொழிவு: அந்நிலையில் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் சென்னையில் 14-09-2023 அன்று கைது செய்யப்பட்டார்[1], என்று செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் சென்னையில் தியாகராயநகரில் உள்ள பாரதிய வித்யாபவனில் ‘பாரதியும், விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் கடந்த 11-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது[2]. நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருவள்ளூவர் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது[3]. சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் குறித்துப் பேசினார்[4]. திருவள்ளுவர் என்ற பெயரை யார் வைத்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்டார்[5]. திருவள்ளுவர் என்பவர் உண்மையில் இருந்ததே இல்லை என்றும் அவர் பேசினார்[6]. உண்மையில் அவர் பேசிய வீடியோ இணைதளங்களில் சுற்றுக்கு வந்தது. அவர் முழுவதும் என்ன பேசினார், என்ற விவரங்கள் தெரியவில்லை.

திருவள்ளுவர், அவரது பெற்றோர் விவரங்கள் தெரியாது: பிபிசி தமிழ் தளத்தில் உள்ளதிலிருந்து காணப்படும் விவ்ரங்கள்: “திருவள்ளுவர் இருந்தார் எனச் சொல்வது கற்பனை. அவர்தான் திருக்குறளை எழுதினார் எனச் சொல்வது அதைவிடக் கற்பனை,” என்று அவர் நிகழ்வில் பேசினார். ‘திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நூலே’ என்ற நூலை எழுதியுள்ள மணியன், ராமர் பிறந்த நட்சத்திரம் தெரியும், ஆனால் வள்ளுவர் என்று பிறந்தார், அவரது பெற்றோர்கள் யார் எனத் தெரியுமா என்றார். விவேகானந்தரின் கருத்துகளைப் பரப்புவதில் தீவிர பங்காற்றியுள்ள மணியன், கிறிஸ்தவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என விவேகானந்தர் தெரிவித்ததாகப் பேசினார். “கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதே எனக் கூறியுள்ளேன். விவேகானந்தரும் சொன்னார். பாரதியாரும் சொன்னார்,” நமது பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என அவர் பேசினார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள் எனக் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் பேசியதாக கொடுக்கப் படும் விவரங்கள்: “ராமனை ஏற்றுக்கொண்டால் ஒழிய ஒரு கிறிஸ்தவன் இந்த நாட்டில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். அந்த முஸ்லிமும் அருகதை இல்லாதவன்,” என்று அவர் அந்த நிகழ்வில் பேசினார். இதே அளவுகோலை வைத்து அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சாடினார். ராகுல் காந்தி கிறிஸ்தவர் ஐரோப்பியர் என்றும், அவருக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரையும் தாக்கிப் பேசினார். அரசியல் சாசன சட்டத்தை எழுதியது அம்பேத்கரே இல்லை என்று பேசினார். “அம்பேத்கர், தன்னுடைய மூளையில் இருந்து எழுதியதாக எழுதவே கிடையாது. எல்லாம் பேசிடுவாங்க.. அது எல்லாத்தையும் ஒரு ஸ்டெனோகிராஃபர் எழுதுவான். தட்டச்சு செய்வார், ஸ்டெனோ கிராஃபர் கரெக்டா அடிச்சிருக்காரா அடிக்கலையா என்று சரிபார்ப்பார். அந்த வேலைதான் அம்பேத்கருக்கு,” என்றார்.

அரசியல் நிர்ணய சட்டம் வரையரைக் குழுவிற்கு அம்பேத்கர் தலைவர், ஆனால், பலர் வேலை செய்தனர்: அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும்[7]. அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர்[8]. அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக.

அம்பேத்கர், பட்டியல் இன உட்பிரிவு பிரச்சினைகள்: அவரது பேச்சின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தாக்கிப் பேசியிருந்தார். திருமாவளவன் பறையர் என்றும் அம்பேத்கர் சக்கிலியர் என்றும் கூறிய மணியன், சக்கிலியரும் பறையரும் திருமணம் செய்துகொள்வார்களா, பறையரும் பள்ளர்களும் திருமணம் செய்துகொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினார்[9]. மணியன் தன்னுடைய பேச்சு முழுவதிலும், திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை ஒருமையில் பேசி கடுமையாகச் சாடினார்[10]. இவரது பேச்சு சமூகவலை தளத்தில் பரவியது.  பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது[11]. அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தை தெரிவித்திருந்தனர்[12]

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமலர், ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது; 14 நாள் நீதிமன்ற காவல், மாற்றம் செய்த நாள்: செப் 14,2023 12:28.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3431645

[3] அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு: ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By Maalaimalar .14 செப்டம்பர் 2023 11:41 AM (Updated: 14 செப்டம்பர் 2023 4:00 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/chennai-police-arrested-rbvs-manian-arrested-662383

[5] விகடன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது : அம்பேத்கர், திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் பேச்சுவிரிவான தகவல்கள், சி. அர்ச்சுணன், Published: Yesterday 14-09-2023, at 10 AM; Updated: Yesterday at 11 AM

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/rpvs-maniyan-arrested-over-allegations-against-him-about-his-speech-insults-ambedkar

[7]  தமிழ்.ஒன்.இந்தியா, திருவள்ளுவர், அம்பேத்கர், தலித்துகளை இழிவாக பேசிய பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது– 14 நாள் ஜெயில்!, By Mathivanan Maran, Updated: Thursday, September 14, 2023, 13:34 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/hindutva-leader-rbvs-manian-arrested-by-chennai-police-538479.html

[9] பிபிசி தமிழ், ஆர்.பி.வி.எஸ் மணியன்: அம்பேத்கர், திருவள்ளுவரை அவதூறாகப் பேசியதாக கைதான இவர் யார்?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், 14 செப்டெம்பர் 2023

[10] https://www.bbc.com/tamil/articles/cd13pmkyxero

[11] தமிழ்.நியூஸ்.18, அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: VHP முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, LAST UPDATED : SEPTEMBER 14, 2023, 15:14 IST,

[12] https://tamil.news18.com/chennai/chn-rbvs-manian-arrest-for-ambedkar-controversial-speech-1154345.html – gsc.tab=0

‘சனாதன ஒழிப்பு மாநாடு’ பெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது? உதயநிதி மீது போலீஸில் புகார்! (2)

செப்ரெம்பர் 3, 2023

சனாதன ஒழிப்பு மாநாடுபெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது? உதயநிதி மீது போலீஸில் புகார்! (2)

02-09-2023 இந்துவிரோத பேச்சிற்கு, 03-09-2023 அன்று போலீஸில் புகார்: தமிழகத்தில் 1950களிலிருந்து வாழும், திராவிடத்துவ அரசியல்வாதிகளின் பேச்சு, நடவடிக்கை முதலியவற்றைக் கவனித்து வருபவர்களுக்கு, நிச்சயமாக, இப்பொழுது உடனடியாக உதயநிதியின் மீது, போலீசில் புகார் அளித்திருப்பது திகைப்பாகவும், ஆச்சரியமாகவும், ஏன் சந்தோசமாகக் கூட இருக்கலாம். அதாவது இத்தனை ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கப் பட்டு, மிரட்டப் பட்டு வரும் இந்துக்கள் அவ்வாறு மகிழ்ச்சியடையலாம். தமிழ்நாட்டில், சென்னையில் ஏன் புகாரைக் கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம். ஆனால், இங்கு அவ்வாறு யாராவது புகார் கொடுக்க தைரியமாக வருவார்களா? அப்படியே புகார் கொடுத்தாலும், போலீசார் ஏற்றுக் கொள்வார்களா, பதிவு செய்வார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. டில்லியில் ஒரு வழக்கறிஞர் கொடுத்திருக்கிறார், அதனால், ஏற்றுக் கொள்ளப்பட்டது போலும். டில்லியில் ஜி-20 மாநாடு நடக்கும் நேரத்தில், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், திமுகவினர் தங்களது, இந்திய் அளவில் விளம்பரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடையலாம்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்: சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் 03-09-2023 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது[1]. சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[2]. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[3]. அவர் தனது புகாரில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களை தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது[4]. இந்து மதத்தை கொசு, டெங்கு, கரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒரு இந்து என்ற வகையில் எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தின் மீதான அவரது வெறுப்பையே வெளிப்படுத்தி இருக்கிறது.

ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு: சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் அவர், தான் எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார். சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும், அதை தூண்டுவதாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது[5]. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்[6].

மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்உதயநிதி சவால்: மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்[7]. பொய்யான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” எனத் தெரிவித்திருந்தார்[8]. இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனத்தை வெளிப்படுத்தத் தொடங்கின. இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் கருத்து அவரது குறுகிய மனப்பான்மையையும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளின் புனிதமற்ற கூட்டணியையும் காட்டுகிறது,” என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுடன் இந்தியா கூட்டணி சண்டையிடவில்லை, அவர்கள் சனாதன தர்மத்துடன் போராடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிஜேபிஉதயநிதி டுவிட்டர் சண்டை: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா, “சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்” என குற்றம்சாட்டினார்[9]. அதற்குப் பதலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்[10]. மறுபுறம், Legal Rights Observatory- LRO (சட்ட உரிமை கண்காணிப்பகம்) என்ற பெயரிலான ஒரு என்.ஜி.ஓ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பதிவைப் பகிர்ந்து, அதன்பேரில் புகார் ஒன்று அளிக்கப்படுமென கூறியது. இதை ரீ-ட்வீட் செய்த அமைச்சர் உதயநிதி, “கொண்டு வாருங்கள், நான் எந்தச் சட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளேன். இதுபோன்ற சனாதன மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியைப் பின்தொடர்பவர்கள். இதனை இன்றும், நாளையும் என்றும் சொல்வேன்[11]. திராவிட மண்ணில் சனாதனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் பின்வாங்க மாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்[12].

அண்ணாமலை முதல் மற்ற மதத்தலைவர்கள் கண்டனம்: உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, ராமஜென்ம பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் உள்ளிட சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்[13]. ஏற்கெனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்[14]. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை, “மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே உறுதி. உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. நீங்கள், உங்கள் தந்தை ஆகியோர் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து வாங்கிய ஐடியாவைக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மிஷனரிகளின் எண்ணம், அவர்களின் தீய சித்தாந்தத்தை வளர்க்க உங்களைப் போன்ற மந்தமானவர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான். தமிழகம் ஆன்மிக பூமி. இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான் உங்களால் செய்ய முடிந்த ஒரேவிஷயம்,” என பதிவிட்டிருந்தார்.

சனாதன பேச்சுஅமித் ஷா கண்டனம்: தொடர்ந்து புதுக்கோட்டையில் இதுதொடர்பாக பேசிய அண்ணாமலை, “சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி யார்? சனாதனம் ஒழிக்கப்பட்டுவிட்டால், கோயில்கள் மற்றும் மதச்சடங்குகள் அனைத்தும் அழிந்துவிடும்“ என தெரிவித்தார். காங்கிரஸைச் சாடிய அமித்ஷா! – இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[15]. இன்று ராஜஸ்தானில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில்தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். மதத்தை விமர்சித்ததற்காக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் கலாசாரம், சனாதன தர்மத்தை INDIA கூட்டணி அவமதித்து வருகிறது; வாக்குவங்கி அரசியலுக்காக INDIA கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம்,” எனத் தெரிவித்துள்ளார்[16].

© வேதபிரகாஷ்

03-09-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‘சனாதன தர்மம் ஒழிப்புஉதயநிதி பேச்சால் மத உணர்வுகள் புண்பட்டுவிட்டதாம். டெல்லி போலிசில் புகார்!, By Mathivanan Maran Published: Sunday, September 3, 2023, 11:48 [IST].

[2] https://tamil.oneindia.com/news/delhi/a-lawyer-files-complaint-in-delhi-police-againt-minister-udhayanidhi-stalin-535409.html

[3] தமிழ்.முரசு, சனாதனம் குறித்த பேச்சு, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார், 3 Sep 2023 18:56.

[4] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20230903-136279

[5] தமிழ்.இந்து,  சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புடெல்லி காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார், செய்திப்பிரிவு, Published : 03 Sep 2023 12:29 PM; Last Updated : 03 Sep 2023 12:29 PM

[6] https://www.hindutamil.in/news/india/1117228-objection-to-udayanidhi-stalin-s-speech-on-sanatana-dharma-a-lawyer-s-complaint-to-delhi-police.html

[7] பிபிசி.தமிழ், சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் பேச்சு எதிர்க்கட்சி கூட்டணியை வலுவிழக்கச் செய்யுமா?, 03-09-2023

[8] https://www.bbc.com/tamil/articles/c90j1k5eqy2o

[9] புதியதலைமுறை, சனாதனம் பற்றிய விமர்சனம்: அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வலுக்கும் புகார்கள்!, Published on: 03 Sep 2023, 5:03 pm

[10] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/political-leaders-reaction-on-udhayanidhi-stalin-sanatanam-speech

[11] விகடன்,  சனாதனம் குறித்த பேச்சு; டெல்லி போலீஸில் புகார்; `காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்‘- உதயநிதி, Published: 03-09-2023  at 4 PM; Updated: 03-09-2023 at 4 PM.

[12] https://www.vikatan.com/government-and-politics/politics/sanatana-dharma-is-against-the-idea-of-social-justice-and-must-be-eradicated-says-udhayanidhi-stalin

[13] தினமலர், சனாதனத்தை ஒழிக்க வேண்டுமாம்; அமைச்சர் உதயநிதி திடீர் ஆவேசம், மாற்றம் செய்த நாள்: செப் 03,2023 16:37; https://m.dinamalar.com/detail.php?id=3421837

[14] https://m.dinamalar.com/detail.php?id=3421837

[15] நியூஸ்.7.தமிழ், சனாதனம் குறித்த பேச்சுஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார், by Web Editor, September 3, 2023

[16] https://news7tamil.live/talk-on-sanathanam-complaint-against-minister-udayanidhi-stalin-in-delhi-police-station.html

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் இடிக்கப் படுவதேன் – இந்துக்களின் நிலைமை என்ன?

ஜூலை 18, 2023

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் இடிக்கப் படுவதேன் – இந்துக்களின் நிலைமை என்ன?

அண்டை நாடுகளில் இந்துக்கள் நிலை: பாகிஸ்தானில் இந்துக்களின் நிலைமையைப் பற்றி பிஜேபியே கவலைப் படுவதில்லை என்றால் மிகையாகாது. ஆனால், இந்தியாவில், “மைனாரிடி” என்று சொல்லிக் கொண்டு முஸ்லீம்கள் கலாட்டா செய்து வருகின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், மியன்மார் போன்ற நாடுகளில் இந்துக்களின் நிலை என்ன என்று யாரும் கவலைப் படுவதில்லை. சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப் படாமல் விரட்டியடிக்கப் பட்டனர். 1947ல் இருந்த இந்துக்களில் ஜனத்தொகையும் குறைந்து விட்டது. அந்நிலையில் இந்துக்களின் சொத்துக்கள், கோவில்கள் முதலியன ஆக்கிரமிக்கப் பட்டு, இடிக்கப் பட்டன. இவ்வாறாக, இருந்த பல கோவில்கள் மறைந்து விட்டன. அந்நிலையில், இப்பொழுது, இரண்டு கோவில்கள் இடிக்கப் பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இதை முதலில், பாகிஸ்தான் நாளிதழ் “டான்” தான் வெளியிட்டது. பிறகு, இந்திய ஆங்கில நாளிதழ்கள் வெளியிட, மற்ற மாநில மொழிகளில் அச்செய்திகள் வெளியாகின.

14-07-2023 வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோவில் இடிக்கப் பட்டது: பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்து இருந்தது[1]. இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர்[2]. மதராசி மாதா அதாவது தமிழ் பேசும் மக்களின் கோவில் என்றாக, அந்த மாரியம்மன் கோவில் இருந்தது. மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளி கிழமை 14-07-2023 இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு உள்ளது[3]. அடுத்த நாள் 15-07-2023 காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்[4]. இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோவிலை இடித்து தள்ளி விட்டு சென்றனர். கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது[5]. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர்[6]. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்[7]. இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவிக்கின்றது[8].

புனரமைப்பு நடத்தப்  பட வேண்டும் என்று திட்டமிட்ட நேரத்தில் கோவில் இடிக்கப் பட்டது: அந்த கோயில் மிகவும் சிதிலமடைந்துவிட்டதால் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகக் கூறி அகற்றப்பட்டுள்ள போதிலும், இந்த நடவடிக்கை அங்குள்ள ஹிந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோயில் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாக காரணம் கூறியுள்ளனா். ஆனால், அதனை சீரமைக்க கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளனா். அந்த இடத்தில் நிலத்தின் மதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் பெரிய கட்டுமான நிறுவனத்தினருடன் இணைந்து இந்த செயலை உள்ளூா் நிர்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா் என்று தெரிகிறது[9]. அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அச்சுறுத்தல் வந்துள்ளது[10]. ஆக, கோடிகளாக நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்ட நிலையில், அதனை அபகரிக்க இத்தகைய வேலையை செய்திருக்கிறர்கள் என்றாகிறது.

23 கோடிகள் மதிப்புக் கொண்ட நிலம்: அந்த பகுதியில் உள்ள பழமையான மற்றொரு கோவிலான ஸ்ரீபஞ்சமுக அனுமன் கோவிலை சேர்ந்த ஸ்ரீராம் நாத் மிஷ்ரா மகராஜ் இதுபற்றி கூறும்போது, இது மிக பழமையான கோவில். 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இந்த பகுதியில், மிக பழமையான பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் நாங்கள் கேள்விப்பட்டு உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி இந்து சமூக உறுப்பினர் ஒருவர் கூறும்போது, எங்களை கட்டாயப்படுத்தி இரண்டு பேர் வெளியேற்றினர். இந்த கோவிலை மற்றொரு நபருக்கு பாகிஸ்தான் கரன்சி மதிப்பின்படி ரூ.23 கோடிக்கு விற்க 2 பேர் ஆலோசித்து வந்தனர். அதனை வாங்க விரும்புபவர்கள் அந்த இடத்தில் வர்த்தக கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்து உள்ளனர் என கூறியுள்ளனர். ஆக, நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்ட நிலையில், அதனை அபகரிக்க இத்தகைய வேலையை செய்திருக்கிறர்கள் என்றாகிறது. இது தொடா்பாக பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில், சிந்து மாகாண முதல்வா் சையது முராத் அலி ஷா உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

16-07-2023 அன்று சிந்து மாகாணத்தில் ஒரு கோவில் இடிக்கப் பட்டது: ஞாயிற்றுக்கிழமை 16-07-2023 அன்று சிந்து மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், காஷ்மோர் பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் ராக்கெட் லாஞ்சர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது[11]. கோயில் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள இந்துக்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[12]. காஷ்மோர்-கந்த்கோட் எஸ்எஸ்பி இர்பான் சம்மோ தலைமையிலான போலீஸ் பிரிவு சம்பவ இடத்திற்குச் சென்றபோது, மர்ம கும்பல் கோயில் மற்றும் வீடுகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். தாக்குதலின் போது மூடப்பட்ட வழிபாட்டு தலத்தின் மீது ராக்கெட் லாஞ்சர் ஏவப்பட்டதாவும் கூறியுள்ளனர். இந்தக் கோயில் பக்ரி சமூகத்தால் நடத்தப்படுவது ஆகும். இந்தத் தாக்குதலில் எட்டு முதல் ஒன்பது துப்பாக்கி ஏந்தியவர்கள் இருந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய அவர்களைத் தேடிவருவதாகவும் அந்நாட்டுக் காவல்துறை சொல்கிறது. ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்கவில்லை என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லைவும் கூறுகின்றனர்.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் என்ன செய்யப் போகிறது?: இதற்கிடையில், பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் இந்தத் தாக்குதல்களைக் கவனித்து கருத்து தெரிவித்துள்ளது. “சிந்துவில் உள்ள காஷ்மோர் மற்றும் கோட்கி மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 30 இந்து சமூகத்தினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் செய்திகள் அச்சமூட்டுவதாக இருக்கிறது” என ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது[13]. இந்த விவகாரம் குறித்து தாமதமின்றி விசாரிக்கவும் சிந்து மாகாண அரசுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது[14].

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினத்தந்தி, பாகிஸ்தானில் இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல், ஜூலை 17, 12:51 am.

[2] https://www.dailythanthi.com/News/World/dacoits-attack-hindu-temple-with-rocket-launchers-in-pakistan-1009541

[3] தினத்தந்தி, பாகிஸ்தானில் 150 ஆண்டு கால இந்து கோவில் இரவோடு, இரவாக இடித்து தரைமட்டம், ஜூலை 16, 9:29 pm

[4] https://www.dailythanthi.com/News/World/a-150-year-old-hindu-temple-in-pakistan-was-demolished-overnight-1009236

[5] தினகரன், பாகிஸ்தானில் மதராசி இந்து சமூகம் நிர்வகித்தது 150 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் இடிப்பு, July 17, 2023, 1:50 am

[6] https://www.dinakaran.com/demolition-150yearold-mariammantemple-madrasihinducommunity-pakistan/

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாகிஸ்தான்: தமிழர்களின் 150 ஆண்டுகள் பழமையானமாரி மாதாகோவில் மர்ம நபர்களால் இடித்து ஆக்கிரமிப்பு!, By Mathivanan Maran Updated: Monday, July 17, 2023, 6:45 [IST]

[8] https://tamil.oneindia.com/news/international/pakistan-tamils-150-year-old-mari-mata-temple-demolished-in-karachi-521409.html

[9] தினமணி, பாகிஸ்தானில் பழைமையான ஹிந்து கோயில் இடிப்பு, By DIN  |   Published On : 17th July 2023 06:11 AM  |   Last Updated : 17th July 2023 06:11 AM  |

[10]https://www.dinamani.com/world/2023/jul/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4039263.html

[11] தமிழ்.நியூஸ்.18, பாகிஸ்தானில் இந்து கோயில் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்மனித உரிமை மீறல் என புகார்..!, Published By :Salanraj R, First published: July 17, 2023, 09:57 IST, LAST UPDATED : JULY 17, 2023, 09:57 IST

[12] https://tamil.news18.com/international/hindu-temple-attack-with-rocket-launchers-in-pakistan-1065711.html

[13] தமிழ்.ஏசியேநெட்.நியூஸ்,பாகிஸ்தானில் ஒரே நாளில் இரண்டு இந்து கோயில்கள் இடிப்பு! ராக்கெட் வீசப்பட்டதால் உச்சகட்ட பரபரப்பு!, SG Balan, First Published Jul 16, 2023, 11:39 PM IST,Last Updated Jul 17, 2023, 12:21 AM IST

[14] https://tamil.asianetnews.com/world/one-hindu-temple-demolished-another-attacked-with-rockets-in-pakistan-s-sindh-province-rxwigd

சிவன் – பார்வதி கு.க., செய்தனரா? தி.மு.க., – எம்.பி., சர்ச்சை பேச்சு – உதாரணத்திற்கு இந்து மதம் தான் கிடைத்ததா?

ஜூலை 12, 2023

சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சுஉதாரணத்திற்கு இந்துமதம் தான் கிடைத்ததா?

தர்மபுரி தி.மு.., – எம்.பி., செந்தில்குமாரின் தொடர்ச்சியான இந்து தூஷண பேச்சுகள்: ‘வடமாநிலத்தில் விநாயகருக்கு பின், சிவன் – பார்வதி கு.க., செய்தார்களா?’ என, தர்மபுரி, தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், தனியார் ‘டிவி’க்கு அளித்த போட்டியில் நக்கலாக பேசியது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி கடந்தாண்டு 2022, ஜூலையில் துவங்கிய போது, ஹிந்து மத முறைப்படி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு, தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பூமி பூஜைக்கு வைத்த செங்கல்லையும் காலால் தள்ளினார். இதேபோன்று, நல்லம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியிலும், தி.மு.க.,வினரை கண்டித்தார். செக்யூலரிஸ ரீதியில் இந்துக்களை எதிர்ப்பது என்பது பெரியாரிஸ ஆத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்கு கைவந்த கலையாக மாறிவிட்டது. அண்ணாதுரை-கருணாநிதி இந்துதுவேச பாணி ஸ்டாலின் மூலமும் தொடர்கிறது. விவாக மந்திரங்களை கேவலமாக பேசியதை வீடியோ மூலம் அறிந்து கொள்ளலாம். பிறகு, தலைவன் எப்படியோ, தொண்டன் அப்படித்தானே இருப்பான்?

சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சு: இதனால் அவர் ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுவதாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது[1]. இந்நிலையில், அவர் பொது சிவில் சட்டம் குறித்து சமீபத்தில் தனியார் ‘டிவி’க்கு பேட்டியளித்தார்[2]. இதில், ‘வட மாநிலத்தில் சிவன் – பார்வதிக்கு, விநாயகருடன் முடிந்து விட்டது[3]. முருகர் என்பவர் இருப்பது தென்மாநிலத்துக்கு வந்தால் மட்டும் தான் தெரியும். அங்கு, சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என, குறிப்பிட்டது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது[4]. தேர்தல் நேரத்தின் போது மட்டும், தி.மு.க.,வினர் தாங்கள் ஹிந்துகளுக்கு எதிரி இல்லை என, இரட்டை வேடம் போடுவதாக, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[5]. செந்தில்குமாரிடம் கேட்டபோது, ”பொது சிவில் சட்டம் குறித்து, தனியார் டிவி.,யில் என்னிடம் கேள்வி கேட்ட போது, பொது சிவில் சட்டத்தில், பா.ஜ., முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும்[6]. வட மாநிலத்தில், சிவன் – பார்வதியின் மகன் விநாயகர் என்பதை மட்டும் உறுதி செய்து, தென்மாநிலத்தில் மட்டும் அவர்களின் மகனாக அறியப்பட்ட முருகனையே வழிபட முடியாத நிலையை ஏற்படுத்துவர் என்பதை சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறினேன்[7]. எந்த கடவுளையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை,” என்றார்[8].

தர்மபுரி மாவட்ட பா.ஜ., தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கூறியதாவது[9]: “தர்மபுரி தி.மு.., – எம்.பி., செந்தில்குமார், தேர்தல் நேரத்தின் போது, தான் ஹிந்து என்றும், வன்னியர் என்றும் மக்களிடம் ஓட்டு கேட்டு வெற்றி பெற்றார். அதன் பின், ஹிந்து மத வழிபாட்டுக்கு எதிராகவும், ஹிந்து கடவுளுக்கு எதிராகவும் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து, தன் அறியாமையால், சிவன்பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா என, ஹிந்து மக்கள் மனம் வேதனைப்படும் படி பேசியுள்ளார். இதேபோன்று, முஸ்லிம், கிறிஸ்தவ கடவுள்கள், குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா என, அவரால் பேச முடியுமா? தன்னை தேர்ந்தெடுத்த மாவட்ட மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல், மத்திய பா.., அரசு செய்யும் நலத்திட்டங்களுக்கு, தன் பெயரை விளம்பரப்படுத்தும் அவர், ஹிந்து கடவுள்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்கு மட்டுமின்றி, தி.மு.., அரசுக்கும், ஹிந்துக்கள் வரும் லோக்சபா தேர்தலில் தக்க பதிலடி தருவர்,” இவ்வாறு, அவர் கூறினார்[10].

தமிழகத்தில் பகுத்தறிவு போர்வையில் இந்து தூஷணம் வளர்த்த விதம்: 1940 களிலிருந்து, ஈவேரா பகுத்தறிவு போர்வையில் இந்துவிரோத கருத்துக்களை ஆபாசமாக பேசி, எழுதி வந்துள்ளது முறையாகக் கண்டிக்கப் படவில்லை. அத்தகைய தூஷணங்களை தமிழ்-தமிழ் என்ற பெயரில், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் மேடைகளில் தொடர்ந்தனர். அவர்கள் ஆட்சியிலும் பெரியாரின் வசைப்பாடல்கள் தொடர்ந்தன. திக-திமுக மேடை பேச்சாளர்கள் இத்தகைய தூஷணங்களைத் தொடர்ந்து செய்தனர். அண்ணாதுரை, கருணாநிதி முதலமைச்சர் ஆனதால், 1970களிலிருந்து அவை இன்னும் மோசமாகி வளர்ந்தன. இப்படி பேசுவதையே திராவிடத்துவவாதிகள் பிழைப்பாகக் கொண்டு வளர்ந்தனர், கஞ்சி குடித்து-கேக் தின்று வளர்க்கப் பட்டனர்.ஊடகங்கள் வளர்ந்து பரவிய நிலையில் 1980களில் அவர்கள் தங்களது பேச்சுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில், அத்தகைய ஆபாச, அறுவருப்பான, மோசமான, கேவலமான பேச்சுகளை பொது மக்கள் ஏற்கவில்லை, குறிப்பாக பெண்கள் எதிர்க்கவும் செய்தனர் என்பது தெரியவந்ததால், குறைத்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் ஒரளவுக்குக் கட்டுப் படுத்தப் பட்டாலும், திராவிடக்கழகப் பிரிவுகள் பூணூல் அறுப்புப் போர்வையில், வேறு விதமாக இந்துவிரோத தூஷணங்களை செய்தனர். பாப்பாத்தி-ஜெயலலிதாவை, ஆரிய அம்மையாரை எதிர்க்கிறேன் என்று கருணாநிதியே பலவிதங்களில் இந்து-துவேசத்தைக் கக்கியுள்ளது பதிவாகியுள்ளது.

2021ல் திமுக பதவிக்கு வந்த பிறகு: இப்பொழுது ஸ்டாலின் முதலமைச்சராகியப் பிறகு, மறுபடியும் எல்லா இந்துவிரோத கும்பல்களும், இந்துதுவேச கூட்டங்களும், இந்துவசைப்பாடும் துரோகிகளும் பலவித உருவங்களில், சித்தாந்தங்களுடன் செயல்பட்டு வருகிறார்கள். 1990களிலிருந்து ஊடகங்களில் அதிகமாகவே ஊடுருவியுள்ளார்கள். பிறகு, சினிமாக்களிலும் அவை – பாடல்கள், வசனங்கள், சித்தரிப்பு முதலியவை மூலம் – வெளிப்பட ஆரம்பித்தன. இந்நிலையில் செந்தில்குமார் அங்கு வடக்கில், சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என்றதில் என்ன வியப்பு? ஏ இந்துவே, இதை நீ இந்துவாக, ஹிந்துவாக, சைவனாக, அசைவனாக, வைஷ்ணவனாக, காலமுகனாக, எப்படி எதிர்ப்பாய்?

இந்தியாவில் கருத்து சுதந்திரம் இந்துக்களுக்கு மட்டும் வித்தியாசமாக கட்டுப்படுத்துவது ஏன்?: இப்பொழுது, யாராவது இந்துதூஷணமாக பேசிவிட்டால், முதலில் பொதுவாகக் கண்டுக் கொள்வதில்லை. பிறகு, எந்த இந்துவாவது, இதே போல மற்ற கடவுளரை வைத்து பேசுவாயா, விமர்சனம் செய்வாயா என்று சாதாரணமாகக் கேட்டப் போதும் கவலைப் படவில்லை. ஆனால், இந்துக் கடவுளுக்கு பதிலாக, மற்ற கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்ட பொழுது, அந்த மற்ற மதத்தினர் விழித்துக் கொண்டனர். இதனால் பயந்த இந்துவிரோதி பேச்சாளர்கள் மறுபடியும் தம்மை கட்டுப் ப்டுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். இன்றைக்கு ஊடகங்கள் வாயிலாக, உலக நடப்புகள், நிகழ்வுகள் எல்லாம் ஒரளவுக்கு தெரிய வருகிறது. அப்பொழுது, மற்ற நாடுகளை விட இந்தியா பல்மடங்கு சிறந்து விளங்குகிறது என்ற உண்மையும் விளங்குகிறது. பாலஸ்தீனம், சிரியா, லெபனான், ஆப்கானிஸ்தான், மற்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளுக்குச் சென்று வாழ்ந்தால், நிலைமை என்னாகும் என்பது புரிந்து விட்டது.

ஸ்டாலின் – சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்[11]: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-07-2023 அன்றுதான், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான உயர்அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில், சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்[12]. இந்த நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. இந்து கடவுகள் குறித்து தவறான விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் பேசி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில், தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.  இந்துமதம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.  இது சர்ச்சையான நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார். இவர் இந்து மதங்களையும், இந்து மத சடங்குகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், இவர்மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், மற்ற மதங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே, உடனே சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

செந்தில்குமாரும், கனல் கண்ணனும்: சமீபத்தில் நடிகர் கனல்கண்ணன், சமூக வலைதளங்களில் வெளியான ஒரு மதம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டதால், கைது செய்யப்பட்டார். இது சர்ச்சையானது. முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கைது செய்யப்படுவாரா ? மதம் குறித்து அவதூறு கருத்தை கூறிய செந்தில் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவார் என உறுதியாக நம்புகிறேன் என பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பொதுமக்களும், தமிழக முதல்வர் கூறுவது உண்மை என்றால், உடனே செந்தில்குமார் எம்.பி. கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

12-07-2023


[1] தினமலர், சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சு, Added : ஜூலை 11, 2023  23:47; https://www.dinamalar.com/news_detail.asp?id=3373130

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3373130

[3] மீடியான், வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்களா? தி.மு.க. எம்.பி. திமிர் பேச்சு!, Karthikeyan Mediyaan News, ஜூலை 12, 2023.

[4] https://mediyaan.com/dharmapuri-dmk-mp-senthilkumar-insult-hindu-gods-shiva-parvathi/

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணாங்களா? திமுக எம்.பி. சர்ச்சை பேச்சு!, Manikanda Prabu, First Published Jul 12, 2023, 10:14 AM IST;  Last Updated Jul 12, 2023, 10:17 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-mp-senthilkumar-controversy-speech-on-lord-shiva-and-parvathy-rxo2ih

[7] தமிழ்.வெப்துனியா, சிவன்பார்வதி பற்றி தர்மபுரி எம்பியின் சர்ச்சை கருத்து..!, Written By Mahendran, Last Updated : புதன், 12 ஜூலை 2023 (11:41 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/senthil-kumar-mp-says-about-sivan-and-parvathi-123071200034_1.html

[9] தினமலர், சிவன்பார்வதி கு.., செய்தார்களா? தி.மு.., – எம்.பி., பேச்சால் புது சர்ச்சை, மாற்றம் செய்த நாள்: ஜூலை 12,2023 07:13;

https://m.dinamalar.com/detail.php?id=3373766

[10] https://m.dinamalar.com/detail.php?id=3373766

[11] பத்திரிக்கை.காம், இந்து தெய்வங்கள் குறித்து திமுக எம்பியின் சர்ச்சை கருத்து..! நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு, JUL 12, 2023

[12] .https://patrikai.com/dmk-mps-controversial-comment-on-hindu-deities-will-the-tamilnadu-government-take-action/

ஐயப்பன் அவதூறு வழக்கில் கம்யூனிஸவாதி சுந்தவல்லிக்கு ரூ 3500 அபராதம்! மேல்முறையீடு செய்வோம் என்று தோழர்கள் தோரணை! (1)

நவம்பர் 26, 2022

ஐயப்பன் அவதூறு வழக்கில் கம்யூனிஸவாதி சுந்தவல்லிக்கு ரூ 3500 அபராதம்! மேல் முறையீடு செய்வோம் என்று தோழர்கள் தோரணை! (1)

தமிழக திராவிடத்துவ சித்தாந்தங்களின் கலவை ஏன் இந்துவிரோதமாக இருக்கிறது?: கம்யூனிஸம், பெரியாரிஸம், பகுத்தறிவு, நாத்திகம் போர்வையில், பெரும்பாலோர் முடிவில் இந்துவிரோத பேச்சுகளில் எழுத்துகளில் தான் சென்று முடிகிறார்கள், சிறக்கிறார்கள்.

  1. “செக்யூலரிஸம்” என்று கூட கொள்கை இல்லை, எல்லா மதங்களையும் ஒரே மாதிரி நடத்த வெண்டும், அதாவது விமர்சிக்க வேண்டும் என்ற நெறிமுறையும் இல்லை.

2. யாரும் தட்டிக் கேட்பதில்லை, கேட்டாலும் அது ஒன்றும் பெரிய அழுத்தம் கொடுத்துவிடவில்லை, கொடுத்தாலும், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்;

3. கண்டுகொண்டாலும், புகார் கொடுக்க மாட்டார்கள்; புகார் கொடுத்தாலும், கிடப்பில் போட்டு விடுவார்கள், எந்த நடவக்கையும் எடுக்கப் பட மாட்டாது;

4. எடுத்தாலும் சட்டப் படி ஒன்றும் நடக்காது, காலையில் கைது-மாலையில் விடுதலை, அல்லது பெயிலில் வெளிவந்து விடுதல்;

5. ஆளும் கட்சிகள் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுவதால், கடந்த 70 ஆண்டுகளில் அத்தகைய சித்தாந்திகள் ஆட்சி, அதிகாரம், அந்தஸ்த்து மற்றும் நடவடிக்கை எடுக்கும் இடங்களில் இருப்பதால், மிருதுவாக இருப்பார்கள், தாக்கத்தை உண்டாக்கலாம், ஆழுத்தம் மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனோபாவம், மனப்பாங்கு இருக்கத்தான் செய்கிறது.

6. திராவிட ஸ்டாக், திராவிட மாடல், டிவி வாத-விவாதங்களும் அவ்வாறே சென்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், ஒரு குறிப்பிட்ட ரீதியாகத்தான் விவகாரங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிய மா.கம்யூ., பேச்சாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்[1]. கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்வர்[2]. கோயிலுக்கு இளம் பெண்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து முகநூலில் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிய மா.கம்யூ., பேச்சாளருக்கு எழும்பூர் நீதி  இதற்கு எதிராக பேராசிரியர் சுந்தரவல்லி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது[3] என்று தினமலரில் மட்டும் தான் செய்தி வெளிவந்துள்ளது. புதிய தொலைக்காட்சியில் ஒருவரி செய்தியாக இணைதளத்தில் காணப் படுகிறது. மா.கம்யூ., பேச்சாளர் சுந்தரவள்ளி, 48. இவர் 2018ல் நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசினார்[4]. இதற்கான ‘வீடியோ’ பரவியது. இவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்[5]. மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்[6]. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுந்தரவள்ளிக்கு, 3500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கிரிஜாராணி 25-11-2022 அன்று உத்தரவிட்டார். இப்பொழுது இவ்வளவு தான் விவரங்கள், சாதாரண வாசகருக்குக் கிடைக்கிறது. வழக்கம் போல, இணைதள ஊடகங்கள், பி.டி.ஐ பாணியில், தலைப்பை மாற்றி, அப்படியே வெளியிட்டுள்ளன. என்ன விசயம், விவகாரம், தீர்ப்பு என்ன சொல்கிறது போன்றவற்றைப் பற்றி கூட கவலைப் படுவதில்லை[7]. “ஈ அடிச்சான் காப்பி” தான், இன்றைய “கட் அன்ட் பேஸ்ட்” தான், எந்த விவஸ்தையும், அவஸ்தையும் இல்லை[8].

பொய் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் – சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம்: “உண்மையை கண்டு காவி கும்பல் அஞ்சுகின்றது. தோழர் சுந்தரவள்ளிக்கு எதிராக சங்பரிவார் பாசிஸ்ட்கள் கொடுத்த பொய் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்,” என்று சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இது என்ன கூட்டமைப்பு, என்று பார்த்தால், “ஞாயிற்றுக்கிழமை 05.06.22 காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் முன்னெடுக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத அறப்போராட்டம்,” என்றெல்லாம் நடத்தியதாகத் தெரிகிறது. அதிலும், இந்த அம்மணி கலந்து கொண்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது[9]. டுவிட்டரில் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக, 18 பேருடைய புகைப் படங்கள் வெளியிடப் பட்டுள்ளன. பிறகு, அவர்கள் இத்தகைய பேச்சை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. வெவ்வேறான சித்தாந்தங்கள், அரசியல் சார்பு, என்றிருக்கும் இவர்கள் எவ்வாறு ஒன்றாக வர முடிகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

முற்போக்கு என்ற போர்வையில் இந்துத்துவ வாதிகள் முடங்கி விட்டார்களா?: சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்[10], தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், இப்படியெல்லாம் இருக்கும் சங்கங்களில் இந்துத்துவ எழுத்தாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. இருந்தால், இத்தகைய விவரங்களை அவர்கள் ஏன் வெளியிடாமல் இருக்கின்றனர் என்றும் புரியவில்லை. பிஜேபி தயவில், பற்பல வாரியங்கள், போர்டுகள் என்று அரசு நிறுவனங்களில் “போஸ்டிங்” வாங்கிக் கொண்டு அனுபவித்து வருகிறார்கள். ஆனால், “இந்துத்துவ” கொள்கையை துறந்து விடுவதைப் போலத் தான் உள்ளது. அதற்குப் பிறகு, அடங்கி விடுகிறார்கள். செக்யூலரிஸத்தைப் பின்பற்றி. “முற்போக்கு” நண்பவர்களுடன், உறவுகளை வைத்துக் கொண்டு சிறக்கிறார்கள் போலும்… என்ன சொன்னாலும், அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை “இந்துத்துவ வாதிகளிடம்” இல்லை. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டுதான், அவர்களும் ஆட்டிப் படைக்கிறார்கள். சாதாரண, அப்பாவி இந்துக்கள் ஏமாற்றப் படுகிறார்கள், பலிகடா ஆக்கப் படுகிறார்கள் தொடர்ந்து தூற்றப் படுகிறார்கள், தாக்கப் படுகிறார்கள்,……………………………

யோசிக்க வேண்டிய அம்சங்கள்:

  1. காலையில் நல்ல செய்தி! ஐயப்பனைப் பற்றி அவதூறு பேச்சு – கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு அபராதம்! இதே நெறிமுறை தொடரவேண்டும்!

2. சுந்தரவள்ளி, 2018ல் நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிதற்கு, நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்தது..

3. “உண்மையை கண்டு காவி கும்பல் அஞ்சுகின்றது….அது பொய் வழக்கு ….என்று சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் வெளியிட்டுள்ளது.

4. தோழர் சுந்தரவள்ளிக்கு எதிராக சங்பரிவார் பாசிஸ்ட்கள் கொடுத்த பொய் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்,

5. சம்பந்தரையும் தேவாரத்தையும் அவதூறாக பேசியதற்கு திருக்கோவில் ஓதுவாமூர்த்திகள் மற்றும் சிவனடியார்கள் புகாரும் நிலுவையில் உள்ளது.

6. சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தியாகத் தெரிகிறது.

7. அதில் இந்த அம்மணி மற்றும் 17 பேர் கலந்து கொண்டதாக புகைப் படம் போடப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் அடையாளம் காணவேண்டும்.

8. ஆனால், இந்துத்துவ வாதிகளை தமது எதிரிகளை கண்டுகொள்வதில்லை, மாறாக, அட்பும், உறவும் வைத்துக் கொள்கிறார்கள்!

9. இப்பொழுது கூட வழக்குப் போட்டவர்கள் பேட்டி கொடுத்து, விவரங்களை தெரிவிக்கவில்லை, தாமும் முறையீடு செய்வோம் என்றும் என்று சொல்லவில்லை.

10. ஆக இந்துக்கள், சாதாரணமான இந்துக்கள், அப்பாவி இந்துக்கள், மெதுவான இலக்கு- இந்துக்கள்,அப்படியே தான் இருக்க வேண்டும்………………………

  © வேதபிரகாஷ்

26-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிர்ஸ், சபரிமலை கோயில் பற்றி விமர்சனம்: பேராசிரியை சுந்தரவள்ளிக்கு நீதிமன்றத்தில் அபராதம், Written by WebDesk, November 26, 2022 9:10:35 am

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/egmore-court-impose-fine-to-professor-sundaravalli-548246/

[3] தினமலர், சபரிமலை ஐயப்பன் பற்றி அவதூறு: கம்யூ., பேச்சாளருக்கு அபராதம், Added : நவ 26, 2022  06:43.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3179966

[5] நியூஸ்.டி.எம், அய்யப்பன் குறித்து அவதூறு.. சுந்தரவள்ளிக்கு அபராதம்..! , ByNewstm Desk|26 Nov 2022 11:40 AM; https://newstm.in/tamilnadu/–516410?infinitescroll=1

[6] https://newstm.in/tamilnadu/–516410?infinitescroll=1

[7] தமிழ்.வெப்.இந்தியா, பேராசிரியர் சுந்தரவல்லிக்கு 3500 ரூபாய் அபராதம்: எதற்கு தெரியுமா?, சனி, 26 நவம்பர் 2022 (12:11 IST)

[8] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/ayyappan-temple-controversy-status-rs-3500-penalty-to-sundharavalli-122112600027_1.html

[9] https://mobile.twitter.com/ghouse2017/status/1532192971805716481/photo/1

[10] https://www.tnpwaa.com/

கபாலீஸ்வரர் கோவிலில் சட்டவிரோதமாக கும்பலில் உறுப்பினராக இருத்தல், ஆட்களை சேர்த்தல், இடத்தை அனுமதியின்றி உபயோகப் படுத்தல் என்று 75 இந்துக்கள் மீது வழக்குப் பதிவு, போலீஸ் விசாரணை முதலியன!

செப்ரெம்பர் 20, 2022

கபாலீஸ்வரர் கோவிலில் சட்டவிரோதமாக கும்பலில் உறுப்பினராக இருத்தல், ஆட்களை சேர்த்தல், இடத்தை அனுமதியின்றி உபயோகப்படுத்தல் என்று 75 இந்துக்கள் மீது வழக்குப் பதிவு, போலீஸ் விசாரணை முதலியன!

திராவிடத்துவாதிகளும் கோவில்களும்: மயிலாப்பூர், சென்னை, மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. திராவிடத்துவ கட்சிகள் ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம், இக்கோவில் பற்றி மற்றும் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்து கொண்டே இருக்கும். கருணாநிதி இருந்த பொழுது, அவர் பெயரில் அர்ச்சனை நடந்ததாக செய்தி வந்தது. அண்ணா இறந்த நாள் / திவச நாளன்று போஜனம் / சாப்பாடு போட்டதாகவும் செய்திகள் உண்டு[1]. சமீபத்தில் சிலைகள் திருட்டு பற்றி வழக்குகள் நடந்து கொண்டே இருக்கின்றன. கொரோனா காலத்தில் இலவச சாப்பாடும் போடப் பட்டது.  கபாலீஸ்வரர் கோவில் பெயரில் கல்லூரியும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.  திமுக அமைச்சர் முதல் மற்ற திமுகவினர் வந்தும் சென்றும் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான், இப்பொழுது இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள நிலை: ‘ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் நிர்வாகம் சரியில்லை’ என, ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர்[2]. கோவிலுக்கு செல்பவர்களுக்கும் இடையூறாக புது-புது நிபந்தனைகள் விதிக்கப் படுகின்றன. முன்பெல்லாம் பக்தர்கள் சாதாரணமாக சென்று வழிபட்டு திரும்பி விடலாம். ஆனால், இப்பொழுது கரைவேட்டிகள் மற்றும் அவர்களின் பரிந்துரையில் அரசியல் கட்சி விஐபிக்கள் தொடர்ந்து, நேரே உள்ளே சென்று வழிபடுகின்றனர். இதனால், வரிசையில் பக்தர்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. சிறப்பு தரிசனம் என்றும் வசூல் செய்கிறார்கள். ஆனால், விஐபிக்கள் வந்தால் காத்து நிற்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி, ‘ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து, கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என உயர்நீதிமன்ற / உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேஷ், பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்த், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ரவி ஆகியோர்  கபாலீஸ்வரர் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

31-08-2022 அன்று நடைபெற்ற கூட்டம்: பின்னர் கோயில் நான்காவது வாயிலின் கதவை மூடி திடீரென நவராத்திரி மண்டபத்தில் அனைவரும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர், என்று ஊடகம் குறிப்பிடுகின்றது.  மேற்குறிப்பிட்டவர்களின் தலைமையில் 75 பேர், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்[3]. அப்போது, கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, உறுதி மொழி எடுத்தனர்.  இத்தகைய கோரிக்கை பல்லாண்டுகளாக இருந்து வருகின்றது. கோவில்களில் கூட்டங்கள் நடப்பதும் புதியதல்ல. அதற்கென மண்பங்கள், மேடைகள் என்றெல்லாம் உண்டு, இருக்கின்றன. பொதுவாக கோயில் வளாகத்தில் கோவில் விபரங்களை தவிர மற்ற விஷயங்கள் தொடர்பாக எந்த வித கூட்டமும் நடத்த கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இந்த விதிகளை மீறி கூட்டம் நடந்தாகத் தெரிகிறது. ஆனால், இக்கூட்டம் எப்படி, “கோவில் விபரங்கள்” அல்லாதவை என்று தீர்மானிக்கப் பட்டது என்று தெரியவில்லை.

கோயில் ஊழியர் ரவிக்குமார் / இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் காவேரி கொடுத்த புகார்: இந்த கூட்டம் கோயில் மைய மண்டபத்தில் முன் அனுமதி இன்றி நடந்ததால் சம்பவம் குறித்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஊழியர் ரவிக்குமார் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் சட்டவிரோதமாக கோவிலுக்குள் கூட்டம் நடத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் காவேரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், என்று மாலை முரசு குறிப்பிடுகிறது[4]. இப்படி வழக்கம் போல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த புகாரின் படி போலீசார் கோயில் வளாகத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து கோயில் வளாகத்தை கூட்டம் நடத்த பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப் பட்டது. கோவிலைப் பற்றி, அக்கரைக் கொண்டவர்கள் தான் பேசியிருக்கின்றனர். பின்னர், அதிலும் சட்டமீறல் கண்டு வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

பல சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு: கோவிலுக்குள் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் காவேரி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, வழக்கறிஞர் வெங்கடேஷ், உமா ஆனந்த், இந்து தமிழர் கட்சி தலைவர் ரவி உட்பட கூட்டத்தில் பங்கேற்ற சிலர் மீது[5], கோவிலுக்குள் அனுமதியின்றி நுழைந்து ஒன்று கூடுதல், அச்சுறுத்தல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் / 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்[6]. இப்படி மூன்று / நான்கு பிரிவுகள் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன[7].

  1. ஐபிசி 143 (சட்டவிரோதமாக கும்பலில் உறுப்பினராக இருத்தல்),
  2. 150 (சட்டவிரோதமாக ஆட்களை சேர்த்தல்),
  3. மாநகர காவல் சட்டம் பிரிவு 41(6),(எ)ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்[8]

“சட்டவிரோதமாக கும்பலில் உறுப்பினராக இருத்தல்” என குறிப்பிட்டுள்ளது தெரிய-புரியவில்லை. இதே போல மற்ற கோவில்களிலும் ஒன்று கூட வாய்ப்புள்ளதால் அனைத்து கோவில்களிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த சென்னை காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது[9]. இதுவும் விசித்திரமாக இருக்கிறது. கோவில் உண்டியல் கொள்ளை, சொத்து ஆக்கிரமிப்பு, போன்றவற்றிற்கு இத்தகைய நடவடிக்கை எடுப்பதில்லை. ஆயிரக் கணக்கில் புராதன கோவில்களிலும் கொள்ளை நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், விசாரணைக்காக போலீசார் சார்பில் அவர்களுக்கு முறைப்படி, ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. 18-09-2022 அன்று காலை, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் உட்பட இருவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்துக்கள் தாங்கள் பாரபட்சமாக நடத்தப் படுகின்றனர்: இனி வருகின்ற காலத்தில், கோவிலில் நுழைய, நடக்க, சேவை செய்ய, சாமி கும்பிட, சடங்கு செய்ய…என எல்லாவற்றிற்கும் கூட அனுமதி கேட்க வேண்டும் போலிருக்கிறது. கோவிலுக்குள் வருபவர்களை, பக்தர்களை இவ்வாறு சட்டங்கள் ஏன் கட்டுப் படுத்துகின்றன என்று தெரியவில்லை. நிச்சயமாக மசூதிகளில் சர்ச்சுகளில் இத்தகைய கூட்டங்கள் நடப்பது, நடந்து கொண்டிருப்பது, தெரிந்த விசயமே. தேர்தல் மற்ற குறிப்பிட்ட நேரங்களில், பிரதி வெள்ளிகிழமை / ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அவற்றை கேள்வி கேட்பதாகவோ, கட்டுப் படுத்துவதாகவோ, இவ்வாறு வேகமாக வழக்குகள் போடுவதாகவோ தெரியவில்லை. ஆனால், இங்கு மட்டும் இத்தனை வேகத்தில் வேலை நடக்கிறது. இதனால் தான், இந்துக்கள் தாங்கள் பாரபட்சமாக நடத்தப் படுவதை உணர்கிறார்கள், அத்தகைய உணர்வுகள் எழுச்சியடைகின்றன. ஆனால், நாத்திக, இந்துவிரோத, பெரியரிஸ, திராவிடத்துவ ஆட்சியாளர்கள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிக் கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

20-09-2022


[1]  இந்து முன்னணி ராமகோபாலன், இது பற்றி ஒரு குறும்புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, நாத்திகர் பெயரில் கோவில்களில் சோறு போட வேண்டிய அவசியல் இல்லை என்ற விதத்தில் விளக்குகிறது.

[2] தினமலர், கோவிலில் அனுமதியின்றிகூட்டம் நடத்தியோர் மீது வழக்கு, Added : செப் 19, 2022  23:52. https://www.dinamalar.com/news_detail.asp?id=3126624

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=3126624

[4] மாலைமுரசு, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்கு பதிவு!!!, webteam Sep 18, 2022 – 20:08

https://www.malaimurasu.com/posts/tamilnadu/Chennai-Complaint-Against-BJP

[5] பாலிமர் செய்தி, கபாலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர் உட்பட  75 பேர் வழக்கு பதிவு,  September 19 2022 01:00:04 PM.

[6]https://www.polimernews.com/dnews/187794/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-75-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81!

[7] பத்திரிக்கை.காம், கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர்மீது வழக்கு பதிவு, By A.T.S Pandian, September 19, 2022

[8] தினகரன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதி இன்றி கூட்டம்; பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேர் மீது வழக்கு பதிவு: நேரில் ஆஜராகி விளக்கம் அறிக்க போலீஸ் சம்மன், 2022-09-19@ 16:54:08; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=800354

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=800354

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (1)

ஜூன் 13, 2022

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (1)

முருகன், விசாகம், தமிழ் என்று இருந்த இந்துக்கள்: 12-06-2022 சுபகிருது, வைகாசி , விசாகம் பிறகு அனுஷம், சுக்ல பக்ஷ திரயோதசி  பிறகு சுக்ல பக்ஷ சதுர்தசி அன்று முருக பக்தியில் ஆழ்ந்து, உலகை மறந்து, நிம்மதியாக இருந்தவர்கள் பக்தர்கள். அதே நேரத்தில், இதையெல்லாம் சொல்லிக் கொண்டு, தமிழ் என்ற நிலையிலும் இருந்த நிலையில், மதுரை ஆதீனத்தை மிரட்டி வசை பாடியுள்ளது, முரசொலி! ஒரு ஆதீனத்தை, மடாதிபதியை அவர்கள் அந்த வஞ்சனையைப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. பிரிக்கும் சூழ்ச்சியாளர்களுக்கு இதெல்லாம் சுலபமானது……ஏனெனில், திமுகவை எதிர்க்கும் இந்துக்கள் அப்படித்தான் இருக்கின்றனர்…….100, 200 ஜால்றா அடித்துக் கொண்டு குறுகிய கால பலன்களை அனுபவித்து சென்று விடுவர்……..ஆனால், தொடரும் பழி, வினைகள், முதலியவை அப்பாவி இந்துக்களைத் தான் பாதிக்கும், தொடரும்…….. மேலும், இவ்வாறு ஊடகங்களில் விமர்சிக்க, பழிக்க, மிரட்ட எப்படி அவர்களுக்கு உரிமை வருகிறது? இதே போன்ற விமர்சனத்தை மற்ற மத-மடாதிபடிகளின் மீது வைப்பார்களா?

திமுகஇந்துக்கள், இந்துத்துவ இந்துக்கள்: திமுகவில் 80% இந்துக்கள் இருக்கிறார்கள், ஆமாம், ஒட்டு மொத்தமாக திமுகவிற்கு ஓட்டுப் போடுகிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள்… ஆனால், இந்துத்துவப் போர்வையில் 99% இந்துக்கள் இருந்தாலும் அவர்கள் ‘இந்துக்கள்’ ஆக இல்லை…..இதைத் தான், இந்துவிரோதிகள் அறிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்………. மதுரை ஆதீனத்தை ஒருவன் வசைப் பாடுகிறான், மிரட்டுகிறான் என்றால், ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்….. முதலியார், பிள்ளை, செட்டி, தேவர், ரெட்டி, நாயக்கர், வேளாளர், நாயுடு, என்றுதான் இருக்கின்றனர்……………ஆட்சி, அதிகாரம், அந்தஸ்து, பணம், சுகம்……………எல்லாம் அனுபவித்து வருகின்றனர்……………வேலை செய்கிறவன் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறான்……………வேலைகாரன் எஜமானன் ஆனால், அவனுக்கு ஒரு வேலைகாரன் வருகிறான்…………………எந்த கட்சி இதனை மாற்றியது? ஆனால், ஆதீனங்களை, மடங்களை, மிரட்ட ஒன்றாக வந்து விடுகின்றனர்……………..முரசொலியின் எச்சரிக்கையை, கலைஞர்.செய்திகள் விசுவாசத்துடன் வெளியிடுகிறது.

12-06-2022 – முரசொலி எச்சரிக்கையை வெளியிட்ட கலைஞர்.செய்திகள்: தமிழக முதல்வர் குறித்து பி.ஜே.பி.யின் எச்.ராஜா கூறியதையும் மதுரை ஆதினத்துக்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறோம்[1]. “Stalin is more Dangerous than Karunanithi” எச்.ராஜாவின் இந்தப் பதிவில் பல பொருள்கள் பொதிந்துள்ளன[2]. இதனையும் அரிஹர தேசிகர் உணரவேண்டும் என முரசொலி நாளிதழ் ‘சிலந்தி’ கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை, சமீப காலங்களாக பெருமை மிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர். மதுரை பாஷையில் சொல்வதென்றால், தாங்கள் ஆதினம் என்பதை மறந்து ஏதாவது ‘குண்டக்க, மண்டக்க’ என பேச்சிலும் செயலிலும் ஈடுபடுகின்றனர்! தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற நிலைக்குள்ளாக்கியுள்ளனர்![உபயொகப் படுத்தப் பட்டுள்ள வார்த்தைகளை கவனிக்கவும்]

நித்தியானந்தா பெயர் சொல்லி தோஷிப்பது: முன்பு ஆதினமாக இருந்து மறைந்த அருணகிரி ஆதினம் காலத்தில், அவரது செயல்களால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாடறியும்! அவரது பல செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளாகி, ஆதினத்தையே தலைகுனிய வைத்தது! அவர் ஆன்மிகத்தில் அரசியலை நுழைத்து – ஆன்மிகவாதியாகவோ – அரசியல் வாதியாகவோ இல்லாமல் இரண்டும் கெட்டானாக நடத்திய ‘கோமாளி’ கூத்துக்களால் திருநாவுக்கரசர் தோற்றுவித்த சீர்மிகு அந்த ஆதினம் பல தலைக்குனிவுகளை சந்தித்தது! நித்யானந்தா எனப் பெயர் சூட்டிக்கொண்டு, நித்தம் ஆனந்தம் அனுபவித்துவிட்டு, அதனால் பல வழக்குகளில் சிக்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடி, இன்று தேடப்படும் குற்றவாளியாக உள்ள ஒரு கிரிமினலை அன்று மதுரை ஆதினத்தின் பீடாதிபதியாக நியமித்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார் அன்றைய பீடாதிபதி அருணகிரி! [ஆட்சி-அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் மனிதர்களின் சரித்திரத்தையும் மற்றவர்கள் அறிய சொவார்களா? அல்லது அதை மற்றவர்கள் வெளியிட்டால் சும்மா இருப்பார்களா?]

நித்யானந்தாவை நியமிக்க பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது என்று குறிப்பிட்டது: நித்யானந்தாவை வாரிசாகவும் அடுத்த பீடாதிபதியாகவும் நியமித்த அன்றைய மதுரை ஆதினத்தின் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளானது மட்டுமல்ல; அந்த நியமிப்பின் மூலம் பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது. அருணகிரி பணம் பெற்றுக்கொண்டு பீடாதிபதி பதவியை நித்யானந்தாவுக்கு வழங்கியதாக விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காஞ்சி மடமும், திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட சைவமதங்கள் பலவும் மடாதிபதி அருணகிரியின் செயலுக்கு கண்டனக்குரல் எழுப்பின! அப்போது நெல்லை கண்ணன் தலைமையில் ஆதின மீட்புக்குழுவே அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எல்லா சைவ மடங்களும் மதுரை மடத்தின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவித்தன. [அந்த நெல்லை கண்ணன் நிலை எப்படி என்று அறிந்ததே. கொள்கையற்றவர்கள், பணம், விருது, அந்தஸ்து என்று எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.]

ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்ற ஆரூடம் பொய்த்தது: ஆதினம் அருணகிரி, அதைவிட அத்துமீறி அ.தி.மு.க.வை ஆதரித்து நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு நடத்தியது கேலிக்கூத்துக்களாகும்! நாகர்கோவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அருணகிரி பேசியது இன்றும் வலைதளங்களில் உள்ளது. நாகர்கோவில், வடிவீஸ்வரம் தேரடி வீதியில் அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசிய நகைச்சுவைகளை கீழே தருகிறோம்; நீங்களும் ரசியுங்கள். “தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, கோயில்களில் இதுவரை எழுந்தருளியவன் அம்மா பிரதமராகிட இன்று குமரி மக்களிடம் வாக்குசேகரிக்க உங்கள் முன் எழுந்தருளியுள்ளேன். இந்த வரத்தை கொடுத்தது இறைவன். அம்மா இந்தியாவின் பிரதமராகி நம்மை எல்லாம் காப்பாத்தப் போறாங்க, அதுவும் இறைவன் கொடுத்த வரம். அதை நிறைவேற்ற இந்த சன்னிதானத்தை இறைவன் அனுப்பியுள்ளார். அம்மா பிரதமர் ஆவார் என அவர் ஜாதகம் சொல்லுகிறது,” ஜெயலலிதா பிரதமராவார் என்பது ஆண்டவன் கட்டளை – ஜாதகம் சொல்லுகிறது என்றெல்லாம் பேசி ஜாதகத்தைப் பொய்யாக்கி, ஆண்டவனுக்கும் அவப்பெயர் உருவாக்கிவிட்டு திருமிகு மதுரை ஆதினத்தின் திருவை சீரழித்துச் சென்றார்! [பிரதமர் ஆக வேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் உள்ளது, ஆகவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாராவது, ஆரூடம், ஜோசியம் என்று யாதாவது சொல்லிவிடப் போகிறார்கள்…..]

அறநிலையத் துறை அமைச்சரை எதிர்த்துப் பேசிய ஆதினம்: இப்போது மதுரை ஆதினமாகியுள்ள அரிகர தேசிகர் ஞான சம்பந்தமோ முன்னாள் பீடாதிபதி ‘அருணாகிரியை’ விட தான் குறைந்தவறில்லை என்பது போல அபத்தங்களைப் பேசி வருகிறார். கழக அமைச்சரவையில் அடக்கத்துக்கும் பொறுமைக்கும் பக்திக்கும் பணிவுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவையே கோபம் கொள்ளச் செய்யும் அளவு ஆதினம் அரிகரதேசிகரின் பேச்சும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. மத நம்பிக்கைகள் அது எந்த மதத்தினருடையதாக இருந்தாலும் அதில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு செயல்படுகிறது, கழக ஆட்சி! [அடேங்கப்பா, ‘‘கோபம் கொள்ளச் செய்யும் அளவு” என்று இனி சட்டத்தில் விவரிக்கப் பட வேண்டும், பிரிவையும் சேர்க்க வேண்டும், பிறகு அத்தகைய சட்டப் பிரிவை மீறுபவர்களை கைது செய்து விடலாம்.]

சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது: இந்தியாவிலேயே மத நல்லிணக்கம் தமிழகத்திலேதான் சீராக, சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் தருமபுர ஆதின குரு பூஜையை ஒட்டி நடைபெற இருந்த பட்டினபிரவேச நிகழ்ச்சியில் ஆதினகர்த்தரை பல்லக்கில் சுமந்து மனிதர்கள் வருவதற்கு சில கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்ததை ஒட்டி, அதனால் எந்த சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற போக்கில் அந்த நிகழ்வுக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்த நிலையில் – அதனை ஒட்டி விவாதம் உருவானபோது, இதனால் தமிழகம் கட்டிக்காக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஊறு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலும், இதனை வைத்து குளிர் காய நினைத்த சில மதவெறிக் கூட்டத்தின் செயலுக்கு இடம்தராத வகையிலும், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உடனடியாக தலையிட்டு ஆதினகர்த்தர்களுடன் அவரும் பேசி, அவர்களை முதலமைச்சரையும் சந்திக்க வைத்து – ஒரு சுமூக நிலையை உருவாக்கினார்! [ஆக, ‘‘சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது,” இதையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்படியாவது உள்ளே தள்ளவேண்டும் என்றால், இப்படியெல்லாம் யோசித்து எழுதுவார்கள் போலும்.]

© வேதபிரகாஷ்

13-06-2022


[1] கலைஞர்.செய்திகள், குறுக்கு சால் ஓட்டி, களங்கம் விளைவிக்கும் மதுரை ஆதீனம் கவனத்திற்கு.. முரசொலியில்சிலந்திஎச்சரிக்கை!, Prem Kumar, Updated on : 12 June 2022, 09:32 AM.

[2] https://www.kalaignarseithigal.com/politics/2022/06/12/silandhi-article-in-murasoli-newspaper-warning-madurai-aadheenam

[3]  முரசொலி, அத்து மீறும் ஆதீனம் அறிவதற்கு, சிலந்தி, 2-06-2022, பக்கம்.3.

இந்து நம்பிக்கை இல்லாத நாத்திக-பெரியாரிஸ ஸ்டாலின், மடாதிபதிகளுடன் சந்தித்து பேச்சு மற்றும் ஆதீனங்கள் மெச்சுதல்! கருணாநிதியின் “தெய்வீகப் பேரவை” ஸ்டாலின் மூலம் தொடருமா?(2)

ஏப்ரல் 28, 2022

இந்து நம்பிக்கை இல்லாத நாத்திக-பெரியாரிஸ ஸ்டாலின், மடாதிபதிகளுடன் சந்தித்து பேச்சு மற்றும் ஆதீனங்கள் மெச்சுதல்! கருணாநிதியின் “தெய்வீகப் பேரவை” ஸ்டாலின் மூலம் தொடருமா?(2)

இந்து சமய அறநிலைத்துறை ஜனநாயகமாக செயல்படுகிறது சட்ட வரையறைக்கு உட்பட்டு செயல்படுகிறார்கள்: ஆதீனம், “மொத்தத்தில் இந்து சமய அறநிலைத்துறை ஜனநாயகமாக செயல்படுகிறது சட்ட வரையறைக்கு உட்பட்டு செயல்படுகிறார்கள்,” எனக் கூறினார்[1]. நிச்சயமாக இவ்வாறு கூறியது அபத்தமானது என்பது, பல சட்டமீறல்கள், நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் மூலம் அறிய வருகின்றன. தொடர்ந்து பாஜகவை சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலைத்துறை கலைக்கப்பட வேண்டும் என்றும், அவசியமில்லாமல் கோவில் விவகாரங்களில் அறநிலைத்துறை தலையிடுகிறது அறநிலை துறை மூலம் இந்து மதத்தை கட்டுப்படுத்த சதி நடக்கிறது என்றெல்லாம் விமர்சித்து வரும் நிலையில், இந்து சமய அறநிலைத்துறை ஜனநாயகப் பூர்வமாக செயல்படுகிறது என்றும்[2], இந்த அரசு ஆன்மீக அரசுதான் என்றும் ஆதீனங்கள் கூறியிருப்பது அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது[3]முதல்வர் மு..ஸ்டாலின் அரசு ஆன்மிக அரசு..” : தி.மு. அரசை பாராட்டி புகழாரம் சூட்டிய ஆதீனங்கள்,”  என்றுதான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து ஒலி-ஒளி பரப்பியதைக் கவனிக்கலாம்[4]. நாத்திக-திமுகவுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை[5]. நாத்திக-ஆன்மீகம், ஆத்திக-ஆன்மீகம் என்றெல்லாம் இருப்பது ஆராய வேண்டிடியுள்ளது.

19-04-2022 மற்றும் 27-04-2022 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியது: 19-04-2022 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி வந்திருந்தார். தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றவர், ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் ஆளுநர் பங்கேற்றுப் பேசினார்கள். அந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி, ‘புராதன நாடான இந்தியா பல்வேறு பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தரும் குரு போன்ற இடத்தில் தமிழகம் உள்ளது’ என்றார்[6].  அப்பொழுது பேசிய தருமபுரம் ஆதீனம், தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர்களும் உதய சூரியன் என்ற சின்னத்தைக் கொண்டவர்கள். ஆளுநரும் சூரியன். ரவி என்றால் சூரியன் என்ற பொருள் உள்ளது. இரண்டு சூரியனும் ஒன்றாகவே தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இதெல்லாம் தெய்வச் செயல்,” என்றார்[7].

சர்ச்சைகளில் சிக்கிய மடாதிபதிகள்: தமிழ்நாடு அரசின் சார்பில், இந்து அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அலுவல்சாரா உறுப்பினராக திருப்பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பிப்ரவரி 2022ல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை விமர்சிக்கும் வகையில், ஃபேஸ்புக்கில் ராஜநாக முனிவர் என்ற பெயரில் தரக்குறைவான வார்த்தைகளுடன் சில கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் சில பத்தாண்டுகளாக இக்கருத்து பலரால் பல்வேறு சூழலில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சைவ சித்தாந்த பெருமன்றம், மதுரை ஆதினம் போன்ற சைவ சமய நிறுவனங்கள் இதனை முன்னெடுத்துள்ளது. மு.தெய்வநாயகம் என்ற கிருத்துவர் நடத்திய மாநாட்டிலும், இந்த 11 பேரில், சிலர் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் “சைவ மாநாடு” போர்வையில், “சைவர் இந்துக்கள் அல்லர்” என்றும் பேசியிருக்கின்றனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்து நலன்களுக்கு எதிராக உள்ளவர்கள் சேர்ந்துள்ளார்கள் அல்லது சேர்க்கப் பட்டுள்ளார்கள் என்று தோன்றுகிறது.

2019 ஜூலையில் சைவர் இந்து அல்ல என்று தீர்மானம் போட்டு, ஆகஸ்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாநாடு நடத்தியது: சென்னை பல்கலைக் கழக மாநாட்டிற்கு முன்பாக, இதே குழு, பழனியில் மாநாடு நடத்தியதாலும், அது இம்மாநாட்டின்  மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், அதைப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளடு. ஜூலையில் பழநியில் சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 114 ஆண்டு மாநாடு துவங்கியது. பழநி தெற்கு கிரிவீதியில் சாது சாமி மடத்தில் மூன்று நாட்கள் – 19 முதல் 20 வரை [வெள்ளி, சனி, ஞாயிறு] மாநாடு நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாதுக்கள் ஆன்மிகப் பெரியோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பெருமன்ற தலைவர் நல்லூர் சரவணன் கூறுகையில், நாங்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று மாநாடு நடத்துவோம், இவ்வருடம் இங்கு நடத்துகிறோம்[8]. சைவம் இந்து அல்ல; சைவர்களும் இந்து அல்ல, அது தமிழர் அருள்நெறி மரபு என அறிவிக்கவும் மாநாட்டின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளோம், தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது என்றார்[9]. முன்பு “லிங்காயத்துகள்” விவகாரத்தை வைத்து, பிபிசிக்கும் அத்தகைய கருத்தை சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது[10]. அது அரசியல் என்பதும், இப்பொழுது அடங்கி விட்டது என்பதும் தெரிந்த விசயம்[11]. ஆகஸ்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த மாநாட்டின் பின்புலமாக, இதனை அறிய வேண்டிய தேவையாகிறது. மேலும், இதில் கலந்து கொண்டவர்கள், அங்கு, சென்னையிலும் கலந்து கொண்டுள்ளனர்.

சூரியன், ரவி என்று ஒப்புமை படுத்தினால் மட்டும் போறாது: சூரியன், உதய சூரியன், ஆதவன், கதிரவன், பாஸ்கரன், என்று எப்படி சொன்னாலும், இப்பொழுது கோடைகாலத்தில் மக்களை வாட்டி வதைக்கிறான். ஆன்மீகம் தான் ஏசி என்றாலும், யாரும் நம்ப மாட்டார்கள். போதாகுறைக்கு மின்வெட்டு வேறு. இதனால், படும் அவதை சொல்லி மாளாது. வசதியாக இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது, புரியாது, ஆனால், அவதிபடுபவர்களுக்குத் தான் அது தெரியும், புரியும். அதே போலத்தான், இறை-உணர்வு, தெய்வ-பக்தி, கடவுள்-நம்பிக்கை, முதலியன, தனிநபர் மனத்தைப் பொறுத்தது. அதனை மற்றவர்கள் பாதிப்பது, இம்சிப்பது மற்றும் நோகப்படுத்துவது கூடாது. நம்பிக்கையாளர்களின் மனங்களை ஆதீனங்களும் இவ்வாறு நாத்திகனைப் போற்றினால் கவலைப் படத்தான் செய்வார்கள். கருணாநிதி ஒன்றும் இந்து ஆதரவாளாரோ, கொஞ்சமாவது இந்துக்களை புண்புருத்தக் கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டவரோ இல்லை, இருந்தது இல்லை. ஆகவே, கடந்த 60 ஆண்டுகளில் தமிழக இந்துக்கள் பலவழிகளில், முறைகளில், வன்முறைகளில், தாக்குதல்களில் கஷ்டப் பட்டிருக்கின்றனர், நொந்து போயிருக்கின்றனர், மனரீதியில் அடக்கப் பட்டிருக்கின்றனர்..

கோவில் இடிப்புகள் இன்றும் தொடர்கின்றன: இப்பொழுதும் கோவில்கள் இடிக்கப் படுகின்றன. அவ்வாறு இடிக்கப் படும் செய்திகளும் வெளியிடப் படுவதில்லை. ஆனால், அவ்விடங்களில் உள்ள மக்கள் மனம் நொந்து அழுகிறார்கள், கோவிலை, விக்கிரங்களை காக்கத் துடிக்கிறாற்கள். தடுக்க முயல்கிறார்கள். ஆனால், போலீஸார் தடுக்கின்றனர், வலுக்கட்டாமாக அப்புறப் படுத்துகின்றனர். இவையெல்லாம் இடைக்காலங்களில் துலுக்கர் கையாண்ட கோவில் இடிப்புகள், கொள்ளைகள் மற்றும் நாசகார வேலைகள் போன்றே உள்ளன. இந்நிலையில் ஆயிரங்களில் உள்ள மடாதிபதிகளுள் 11 பேரை வைத்து, அரசியல் செய்வது கபடத் தனம் ஆகும். இதை வைத்து, தமிழக இந்துக்கள் அனைவரையும் ஏமாற்ற முடியாது. பேச்சிற்கும், செயல்களுக்கும், எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளன என்பதனை மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள்.

© வேதபிரகாஷ்

28-04-2022


[1] https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-lead-dmk-government-is-spiritual-government-dharmapura-adinam-mur-736787.html

[2] ஜீ.நியூஸ், திமுக அரசு ஆன்மீக அரசாக செயல்படுகிறதுதருமபுரம் ஆதீனம், Written by – க. விக்ரம் | Last Updated : Apr 27, 2022, 05:28 PM IST.

[3] https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-dmk-government-functions-as-a-spiritual-government-dharmapuram-aadeenam-390886

[4] கலைஞர் செய்திகள், முதல்வர் மு..ஸ்டாலின் அரசு ஆன்மிக அரசு..” : தி.மு. அரசை பாராட்டி புகழாரம் சூட்டிய ஆதீனங்கள் !, Prem Kumar, Updated on : 28 April 2022, 08:43 AM.

[5] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2022/04/28/adheenam-hailed-the-chief-minister-mk-stalin-government-of-as-a-spiritual-state

[6] நக்கீரன், தமிழகத்திற்கு இரண்டு சூரியன்கள் கிடைத்துள்ளது; இதெல்லாம் தெய்வச்செயல்”-தருமபுரம் ஆதீனம் பேச்சு!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/04/2022 (16:31) | Edited on 19/04/2022 (16:46).

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamil-nadu-has-got-two-suns-all-divine-act-dharmapuram-aadeenam-talk

[8]  தினமலர், பழநியில் சைவ சித்தாந்த மாநாடு,  ஜூலை 19,2019 00:00 IST.

[9]  https://www.dinamalar.com/video_main.asp?news_id=169759&cat=32

[10]பிபிசி தமிழ், நாங்கள் ஏன் இந்துக்கள் இல்லைலிங்காயத்துகள் அடுக்கும் காரணங்கள், பிரமிளா கிருஷ்ணன், 22 மார்ச் 2018

[11] https://www.bbc.com/tamil/india-43489113. காங்கிரஸ் தேர்த நேரத்தில் அதனை பிரச்சினையாக்கியது. ஆனால், விளைவை அறிந்த பின்னர் அடங்கி விட்டது.

1960களில் திராவிடத்துவ பக்தர்கள் சுவரொட்டிகளுக்கு மாலைகள் அணிவித்தனர், பூசொரிந்தனர், இப்பொழுதும் முடிந்த அளவில் கிடைத்ததைக் கொண்டு பூஜிக்கின்றனர்! இதில் என்ன பிரச்சினை?

ஜூலை 31, 2020

1960களில் திராவிடத்துவ பக்தர்கள் சுவரொட்டிகளுக்கு மாலைகள் அணிவித்தனர், பூசொரிந்தனர், இப்பொழுதும் முடிந்த அளவில் கிடைத்ததைக் கொண்டு பூஜிக்கின்றனர்! இதில் என்ன பிரச்சினை?

How Anna statue garlanded, decorated 30-07-2020

1960களிலிருந்து தலைவர்களைப் போற்றும் திராவிடத்துவ பக்தர்களின் நிலை: 1960களிலிருந்து, சுவரொட்டிகளுக்கே மாலை போடுவது, பூசூடுவது, துணி/துண்டு அணிவிப்பது, அலங்காரம் செய்வது போன்றவை சாதாரணமான விசயங்களாக இருந்தது. குடித்து கலாட்டா செய்பவர்கள் அவ்வாறு செய்வர். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தமாஷாகப் பார்ப்பர், ரசிப்பர், சென்றுவிடுவர். பூ விற்பவர்கள், விற்காமல் மீந்து போன, வாடிப்போன, கட்டியப் பூக்களை, வால்போஸ்டர்களுக்கு அணிவித்து செல்வர். பெரும் பாலும் ரிக்சாகாரர்களும் அவ்வாறு செய்வது உண்டு. அப்பொழுதெல்லாம், படங்களுக்கு மாலை போடுவது, பூசூடுவது, சொரிவது என்றால், இறந்தவர்களுக்குத் தான் செய்வது வழக்கம். ஆனால், அவர்களுக்கு ஈவேரா, அண்ணா என்றால் கடவுள் போன்றது தான். அந்த அளவுக்கு பக்தி, கும்பிடவும் செய்தார்கள். கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்ததும் உண்டு. அதனால், உயிரோடு இருப்பவர்களுக்கு செய்யாதே என்று கூட சொல்வது உண்டு. ஆனால் குடிகாரர்கள், ரிக்சாகாரர்களிடம் அந்த அறிவுரை செல்லாது. “டேய், சோமாறி, என் தலவனுக்கு போடுறேன், கஸ்மாலம், நீ யாரு என்ன கேட்க……..”, என்று, அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்! இப்பொழுது, 2020களில் சிலைக்களுக்கு அவ்வாறு மரியாதை செய்வதில், திராவிடத்துவ ரீதியில், எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை,

Saffron flag on Anna stature, OPS condemns, Media News, 31-07-2020

29-07-2020 – அண்ணாசிலைக்கு அவமதிப்பு செய்தது: “கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த சிலை உள்ள பீடத்தின் மீது நள்ளிரவில் யாரோ காவித் துணியைப் போட்டுச் சென்றுள்ளனர்[1]. மேலும், அருகே குப்பைகளும் கொட்டப்பட்டிருந்தன[2]. மர்ம நபர்கள் சிலர் காவி கொடி கட்டிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்”, என்று எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்து விட்டன. ஆனால், யாரும் காரணம் என்ன என்று அலசிப் பார்க்கவில்லை. காவி என்றதும் குதிக்கின்றனர் என்பது தான் தெரிகிறது. அதாவது, இவர்களே, அந்நிறத்தைக் கண்டு திகைக்கின்றனர் அல்லது முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று தெரிகிறது. இதுவரை பார்த்ததில், குடித்தவன், மனநிலை சரியில்லாதவன் போன்றோர் தான் அவ்வாறு செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் திமுகக்காரனே செய்துள்ளான். இப்பொழுது கூட, பிரச்சினை செய்ய, வேண்டுமென்றே, அத்தகைய ஆட்களைத் தூண்டி விட்டு செய்திருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கலாம்.  ஏனெனில், உண்மையான இந்து, இந்துத்துவவாதி அவ்வாறு எல்லாம் செய்து இழிவு படுத்த மாட்டான்.

Saffron flag on Anna stature, Stalin for arresting him, 31-07-2020

சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது[4];-“…… சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[5].……மேலும் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை எடுக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்[6]. இப்படி அறிக்கை விடுவதற்கு என்றே தயாராக இருப்பது போல, அரசியல் தலைவர்கள் அதிரடியாக அறிக்கைகள் விட்டுள்ளனர்[7]. “சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” எனும்போது[8], அந்த அளவுக்கு என்னவாகி விட்டது என்று தெரியவில்லை. இந்துக்களை, இந்து கடவுளர்களை தினம்-தினம் திகவினர், திராவிடத்துவப் போர்வையில் பலர் சமூக ஊடகங்களில் செய்து வருவது தெரிந்த விசயமாகி விட்டது. வீரமணி, “விடுதலையில்” செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் மீது, கடந்த 70 ஆண்டுகளாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான், அத்த்கைய குற்றங்கள், சட்டமீறல்கள் மறுமடி-மறுபடி நடந்து கொண்டிருக்கின்றன.

Saffron flag on Anna stature, unstablized person did, Tamil one India, 31-07-2020

திமுக போராட்டம், போலீஸார் சமரசம்: தி.மு.க.வினர் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, அண்ணா சிலையை அவமதித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது[9]. உடனே போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வினர் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன்.ஆசைதம்பி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையே போலீசார், காவி கொடி, பல்பு மாலையை அகற்றினர்[10]. சிசிடிவி மூலம் அவ்வாறு செய்தவர் யார் என்று கண்டறிந்தனர், விசாரித்ததில், அவர் ஒரு மனநோயாளி என்று தெரிய வந்தது[11]. கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி என்றும் எந்த உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றும் மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்[12].

Saffron flower garland to EVR stature by girls-1

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: இப்பொழுது, மனநிலை சரியில்லாதவர்கள், கிருக்குகள், பைத்தியங்கள் முதலிவர்களின் மீது என்ன கடும் நடவடிக்கை எடுக்க முடியும்? குண்டர்கள், தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்து, சிறைகளில் அடைப்பார்களா?  செக்யூலரிஸத் தனமாக, ஒரு சித்தாந்தவாதியைக் கைது செய்ய வேண்டும் என்றால், மாற்று சித்தாந்தவாதி ஒருவனை கைது செய்யவேண்டும் என்ற ரீதியில் தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. “அடுத்தவர்களின் மனம் புண்படுவது,” என்றால், திராவிடத்துவவாதிகளுக்கு, பெரியாரிஸ்டுகளுக்கு, நாத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்குத் தெரியாதா என்ன? பிறகு எதற்கு எந்த ஆர்பாட்டம் எல்லாம்? திராவிட நாத்திகம், திராவிடத்துவ இந்துவிரோதத் தனம், செக்யூலரிஸ இந்து தூஷணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு இந்துக்களை ஏமாற்ற முடியாது.

Saffron flower garland to EVR stature by girls-4

கருப்பா, சிவப்பா, காவியா, என்ற அலர்ஜி ஏன் வந்தது?: இதுவரை 60-40 ஆண்டுகளாப் பார்க்கும் பொழுது, ஈவேரா-அண்ணா சிலைகளுக்கு அமோகமாக மாலைகள் போட்டு, மலர் தூவி, படங்களை அலங்கரித்து, பூஜை நடத்துவது போன்றே பெரிய-அரசியல்வாதிகள், பகுத்தறிவு பகலவர்கள், நத்திக சிரோமணிகள், திராவிடத்துவ வித்தகர்கள் செய்து வந்துள்ளனர். அம்மாலைகளில் லபலவித நிறங்கள் இருந்துள்ளன, இருக்கின்றன. அங்கு, “கருப்பு தான் எனக்குப் பிடித்த கலர்”, என்றெல்லாம் சொல்லவில்லை. ஆரஞ்சு / காவி நிற சாமந்தி பூமாலைகள் எல்லாம் போட்டு பூஜித்துள்ளனர்.  மக்களும் நேரிலும், டிவியிலும், இப்பொழுது மொபைல் போனிலும் நன்றாகவே பார்த்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ அடிபொடிகள், பெரியாரிஸ பக்தர்கள், அவரவர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப, என்ன கிடைக்கிறதோ, அவற்றை வைத்துக் கொண்டு, பக்தியுடன், சிரத்தையுடன், மாலையாகக் கட்டி, மாலை போடுகிறார்கள் போலும். இதில், இப்பொழுதுள்ள நான்காம்-ஐந்தாம் சந்ததியினர் கோபித்துக் கொளவது வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

29-07-2020

Is it OK for Anna, MGR, EVR - saffron garland-Namakkal March 2018

[1] தமிழ்.இந்து, அண்ணா சிலை மீது காவித்துணி: தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்; தலைவர்கள் கண்டனம் , Published : 30 Jul 2020 02:50 PM, Last Updated : 30 Jul 2020 02:51 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/567261-leaders-condemns-on-anna-staute-issue-5.html

[3] தினத்தந்தி, அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டிய சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் கண்டனம், பதிவு: ஜூலை 30, 2020 15:03 PM.

[4] https://www.dailythanthi.com/News/State/2020/07/30150349/Deputy-Chief-Minister-O-Panneerselvam-condemned-the.vpf

[5] மாலை மலர், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை.பன்னீர்செல்வம், பதிவு: ஜூலை 30, 2020 15:18 IST

[6] https://www.maalaimalar.com/news/topnews/2020/07/30151837/1747152/OPS-condemned-tying-of-saffron-flag-to-Anna-statue.vpf

[7] தினமணி, கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி: ஓபிஎஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம், By DIN | Published on : 30th July 2020 04:38 PM |

[8] https://www.dinamani.com/tamilnadu/2020/jul/30/saffron-flag-on-anna-statue-in-kanyakumari-3443381.html

[9] தினத்தந்தி, உடைந்த பல்புகளை மாலையாக அணிவித்து அவமதிப்பு; அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு: தி.மு..வினர் போராட்டம், பதிவு: ஜூலை 31, 2020 01:48 AM

[10] https://www.dailythanthi.com/News/State/2020/07/31014814/Insult-by-wearing-broken-bulbs-Saffron-flag-hoisted.vpf

[11] தமிழ்.ஒன்.இந்தியா, கன்னியாகுமரி அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளிகாவல்துறை, By Mathivanan Maran | Updated: Thursday, July 30, 2020, 16:50 [IST].

[12] https://tamil.oneindia.com/news/kanyakumari/anna-statue-dishonoured-with-saffron-flag-in-kanyakumari-392841.html