Archive for the ‘தாவூத் இப்ராஹிம்’ Category

ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும், 26/11 குண்டுவெடிப்பும், தொடர்ந்த இந்து-விரோத பிரச்சாரமும் (3)

ஜூலை 18, 2017

ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும், 26/11 குண்டுவெடிப்பும், தொடர்ந்த இந்துவிரோத பிரச்சாரமும் (3)

2 - K4agziE

சிதம்பரத்தின் குசும்புத் தனமும், காங்கிரஸின் இரட்டை வேடமும் (செப்டம்பர் 2010): “காவி பயங்கரவாதம்”, “காவி தீவிரவாதம்” பற்றிய சர்ச்சை பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. அப்போது ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பேட்டி அளித்த பா.ஜனதா எம்.பி. பல்வீர்பஞ்ச், ப.சிதம்பரம் பதவி விலக முன்வரவேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “தியாகத்தின் அடையாளமாக கருதப்படும் காவி நிறத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது இந்து மதத்துக்கு அவமதிப்பாகும். இதற்காக .சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரியின் இந்த பேச்சு ஓட்டுவங்கி அரசியலுக்கான மிக மோசமான உதாரணமாக அமைந்துவிட்டதாக,” குற்றம் சாட்டினார். குஜராத்தில் ஒரு நீதிமன்றம் அவ்விசயத்தில் விசாரணையும் ஆணையிட்டது[1]. ஜனார்த்தன் திரிவேதி என்ற காங்கிரஸ் தலைவரே அதனை கடுமையாக விமர்சித்தார். காவி என்பது நமது பாரம்பரியம் மற்றும் விடுதலை போராட்டதுடன் இணைந்துள்ளது என்று சுட்டிக் காட்டினார்[2]. இருப்பினும் 26-11-2008 மும்பை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, காங்கிரஸ் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக இருப்பதை விடுத்து, மென்மையாக இருப்பது போலக் காட்டிக் கொண்டது. உள்துறை அமைச்சரான சிதம்பரமும், பல விசயங்களில் அத்தகையைப் போக்கைக் கடைப்பிடித்தார்.

Ban RSS, India's no 1 terror organisation- Former Maharashtra cop ...

காங்கிரஸ் 26/11 ஜிஹாதி குண்டு வெடிப்பிற்குப் பிறகு மதரீதியிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது (2008): டேவிட் முல்ஃபோர்ட் என்ற முந்தைய அமெரிக்க தூதுவர் இவ்வாறு தனது கருத்தைக் கூறியுள்ளதாக “விக்கி லீக்” வெளியிட்டுள்ளது[3]. அதில் அந்துலே, சிதம்பரம், மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் முன்னுக்கு முரணாக, தாருமாறாக பேசியுள்ளனர் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்[4]. அந்துலே என்ற முஸ்லீம் அமைச்சர், கர்கரே கொல்லப்பட்டதை மலேகாவ் இந்து தீவிரவாத செயலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று பேசியதை, முதலில் சிதம்பரம் மறுத்தாலும், பிறகு அவரும் மற்ற காங்கிரஸ்காரர்களும் – மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதிகமாகவே மதரீதியில், முஸ்லீம்களுக்கு ஆதரவாக, இந்துக்களைக் குற்றஞ்சாட்டும் ரீதியில் பேசியுள்ளதை எடுத்துக் காட்டுகிறார். அந்நேரத்தில், சிதம்பரம் ஜிஹாதை மறுத்து, ஆனால், ஆரஞ்சு / காவி தீவிரவாதம் என்பதைப் பற்றி அதிகமகவே பேசியதை நினைவு கூறவேண்டும். மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதே பாட்டை எல்லா இடங்களிலும் பாடியுள்ளனர்[5]. ஆனால், இவற்றையெல்லாம் “விக்கி லீக்” வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஏனெனில், இவையெல்லாமே இந்திய ஊடகங்களில் வெளிவந்த செய்திகளாகத்தான் இருக்கின்றன. ஒன்றும் ரகசியமான விசயங்களாக இல்லை. “விக்கி லீக்” வெளியிட்டுத்தான் அறியப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Congress conspiracy involved RSS - A R Antulay speech 2008-picture

மும்பை குண்டுவெடிப்பிற்கு பின்னர் காங்கிரஸ் ஜெயித்து ஆட்சியைப் பிடித்தது [2008-2009]: ஏ.ஆர். அந்துலே [காங்கிரஸ் சிற்றுபான்மையினர் அமைச்சர்[6]] பாராளுமன்றத்தில் டிசம்பர் 2008ல் மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய விவாதத்தில், அதற்கு இந்துத்துவ சக்திகளுக்கும் தொடர்புள்ளது என்று பேசினார். இவரும் பல சர்ச்சைகளில் சிக்கியவர் தாம். ஊழல் வழக்குகளில் சிக்கியவர், மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் மும்பை உயர்நீதி மன்றத்தால் தண்டனையும் பெற்றார்[7]. பாகிஸ்தானின் பங்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த நிலையில், உலகம் முழுவதும் அறிந்து கொண்ட நிலையில் இந்நாட்டு அமைச்சர்கள், தலைவர்களே, இவ்வாறு முன்னுக்கு முரணாக பேசுவது, வாதிப்பது முதலியன மற்றவர்களை திடுக்கிட வைத்தது. பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் பேசியது, பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து, திசைத் திருப்பின[8]. உண்மையில் அந்துலே பேசிய விதம் பாகிஸ்தானுக்கு உதவிய முறையில் தான் இருந்தது[9]. முஸ்லிம்கள், இவ்வளவு கொலைகள், சாவுகள் ஜிஹாதிகளால் நடத்தப் பட்டப் பிறகும், அவற்றைக் கண்டிக்காமல், திசைத் திருப்பி பேசுவது அதிர்ச்சியடையச் செய்தது. வழக்கம் போல முஸ்லிம்கள் ஆதரித்தனர். இதனால், அதற்கு பாராளுமன்றம் மற்றும் தேசிய அளவில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸே அதனை மறுத்தது. அந்துலேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது[10]. இதனால், காங்கிரஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது[11]. அதற்குள் அவரே ராஜினாமா செய்தார் என்ற செய்தியும் வந்தது[12]. இதுவும் நாடகமா-யுக்தியா என்று விவாதிக்கப் பட்டது. இருப்பினும் 2009ல் பொது தேர்தல் வருகின்றது என்ற நிலையில், முஸ்லிம் ஓட்டுகள் தேவை என்று மறைமுகமாக ஊக்குவித்தது என்றும் பேசப்பட்டது. காங்கிரஸுக்கு இது கைவந்த கலை என்பது ராஜிவ் காந்தி காலத்திலிருந்து தெரிந்த விசயமாக இருந்து வருகிறது.

A R Antulay speech 2008- Abhishek Singhi, Manish tiwari refuted

2009ல் காங்கிரஸ் வெற்றிப் பெற்றப் பிறகும், காங்கிரஸ் இந்து-விரோதக் கொள்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டது: திக்விஜய் சிங்கின் நடவடிக்கைகள் அதனை ஆதரிப்பது போலத்தான் இருந்தன.  06-12-2009ல் தில்லியில், “26/11: ஆர்.எஸ்.எஸ் சதி” என்ற நூலை மராத்தியில் வெளியிட்டார்[13]. “டிசம்பர் 6” என்று வைத்துக் கொண்டு தான், முஸ்லிம்கள் வெறியுடன் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர், குண்டுவெடிப்புகள் நடத்துகின்றன என்ற நிலையில் அதே தேடியில் நிகழ்ச்சி நடத்தி, அந்நாளில் இத்தகைய புத்தகம் வெளியிடுவதன் நோக்கத்தையும் கவனிக்கலாம். பிறகு அடுத்த ஆண்டில், 28-12-2010ல் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை மும்பையில் வெளிட்டார்[14]. ஆனால், சோனியா கண்டுகொள்ளவில்லை. பொதுவாக, எல்லா விசயங்களிலும், இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிட்ருப்பவராக இருக்கிறார். மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருக்கும் பொழுது, ஆர்.எஸ்.எஸ்.சுடன், நட்புடன் இருந்ததாலும், சில காங்கிரஸ்காரர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்ததாலும், இவர் விசயங்களைப் பெற்றார் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

16-07-2017

Congress conspiracy involved RSS - A R Antulay speech 2008-Chidambaram refuted

[1] “Court orders probe into PC’s saffron terror remarks”Hindustan Times. 6 September 2010. Retrieved 8 September 2010

[2] TNN (28 August 2010). “Congress ticks off Chidambaram over ‘saffron terror’ remark”The Times of India. Retrieved 10 October 2010.

Making plain the party’s disapproval of Chidambaram’s controversial formulation, Dwivedi said terrorism could not be associated with any colour, “be it saffron, green, white or red”. He further said, “Terrorism is terrorism and should be opposed in whatever form it comes.” Significantly, he also stressed that “saffron colour has been part of our ancient tradition and is associated with our freedom strggle”.

http://timesofindia.indiatimes.com/india/Congress-ticks-off-Chidambaram-over-saffron-terror-remark/articleshow/6448566.cms?referral=PM

[3] http://www.ndtv.com/article/wikileaks%20india%20cables/wikileaks-congress-party-stung-playing-religious-politics-71958

[4] http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/184566

[5] https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

[6] Antulay was the first and only Muslim Chief Minister of Maharashtra during the years 1980 to 1982. However he had to resign from his post following allegations of corruption. He was convicted in an extrotion case by the Bombay High Court. Later, he worked as party MLA and MP, representing the Congress in Raigad district. He fought his last election in 2009, which he lost to the Shiv Sena, after which he was out of the active politics. After the terror attacks on Mumbai in 2008, Mr. Antulay had raised a controversy by alleging the hand of Hindu fundamentalist groups in the attacks. Recently controversy surrounded him after he staged a rebellion against the Congress in the 2014 Lok Sabha election and extended support to the candidate of the Peasants and Workers Party (PWP).

The Hindu, A. R. Antulay passes away, Alok Deshpande, MUMBAI,DECEMBER 02, 2014 11:12 IST; Updated: APRIL 07, 2016 02:25 IST.

[7] http://www.thehindu.com/news/national/former-maharashtra-chief-minister-ar-antulay-passes-away/article6654510.ece

[8] India Today, Mr Antulay, why are you helping Pak? Remarks casting doubts on circumstances of Karkare’s death fuel Pak propaganda while opportunist Congress eyes votes., Sachin KalbagandA. M. Jigeesh, New Delhi, December 19, 2008 | UPDATED 10:16 IST.

[9] http://indiatoday.intoday.in/story/Mr+Antulay+why+are+you+helping+Pak/1/23046.html

[10] TIMESOFINDIA.COM, Congress may take action against A R Antulay, Dec 18, 2008, 11.06 AM IST.

[11] http://timesofindia.indiatimes.com/india/Congress-may-take-action-against-A-R-Antulay/articleshow/3855703.cms

[12] LiveMint, Antulay resigns over Mumbai attacks debate: sources, PTI, FRI, DEC 19 2008. 12 00 PM IST

http://www.livemint.com/Politics/4JyBF8LRLGkzvdPlAHy6wJ/Antulay-resigns-over-Mumbai-attacks-debate-sources.html

[13] Undeterred by the storm of criticism triggered by his comments linking the killing of Maharashtra ATS chief Hemant Karkare during the 26/11 terror attacks to the alleged threats Karkare had received from Hindu extremists, Congress general secretary Digvijaya Singh today [28-10-2010] released the book 26/11 RSS Ki Saazish? (26/11, An RSS Conspiracy?) in Mumbai, using the platform to launch a fresh attack on radical Hindu groups for what he called “majority terrorism”. Singh had released the same book, authored by Aziz Burney, Editor-in-Chief of Urdu Sahara newspaper, in Delhi on December 6, 2009. At that launch event, he had said that Karkare had called him two hours before the 26/11 attack in Mumbai to say that his life “was blighted by constant threats” from those opposed to the ATS probe into the 2008 Malegaon blast in which Hindu extremists were accused.

Indian Express, RSS & 26/11: Digvijaya flags it off again, this time in Mumbai, Express News Service , Express News Service : Mumbai, Tue Dec 28 2010, 02:34 hrs.UPDATED: APRIL 07, 2016 02:25 IST

[14] http://archive.indianexpress.com/news/rss—2611-digvijaya-flags-it-off-again-this-time-in-mumbai/730077

தாவூத் இப்ராஹிம் கூட்டாளி திருமலை கோவிலுக்குள் நுழைந்துள்ளான் – இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம்!

ஜனவரி 20, 2014

தாவூத் இப்ராஹிம் கூட்டாளி திருமலை கோவிலுக்குள் நுழைந்துள்ளான் – இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம்!

 

Devotees protested the entry of Dawood aide inside Tirumala Temple 2014

Devotees protested the entry of Dawood aide inside Tirumala Temple 2014

தீவிரவாதிசோட்டாஷகீல்கூட்டாளிதிருமலைக்குவந்துஏழுமலையானைரகசியமாகதரிசனம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. பக்தர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் திருமலை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த நிலையில் மும்பை தொடர்குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிமுக்கு வலது கரமாக செயல்பட்ட தீவிரவாதி சோட்டா ஷகீல் கூட்டாளி திருமலைக்கு வந்து ஏழுமலையானை ரகசியமாக தரிசனம் செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது[1]. அவரது பெயர் அஜய் நவீந்தர் (Ajay Navandar )[2]. மும்பையைச் சேர்ந்த இவர் சோட்டா ஷகீல் உதவியாளர். திருப்பதி கோவிலில் கடந்த 11–ந்தேதி ஏகாதசி விழாவும், 12–ந்தேதி துவாதசி விழாவும் கொண்டாடப்பட்டது. 2 நாட்கள் விழாவிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஐ.பி. பாஸ்கள் விநியோகிக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது சோட்டா ஷகீல் கூட்டாளி அஜய்நவீந்தர் வி.ஐ.பி. மரியாதையுடன் 2 முறை தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3].

 

I am not Dawood aide - Ajay Navindar

I am not Dawood aide – Ajay Navindar

அஜய்நவீந்தர்மராட்டியமாநிலவி..பி.க்களானமந்திரிசச்சின்அகீர், சிவசேனாதலைவர்உத்தவ்தாக்ரேஆகியோருடன்தரிசனம்: அஜய்நவீந்தர் மராட்டிய மாநில வி.ஐ.பி.க்களான மந்திரி சச்சின் அகீர், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோருடன் தரிசனம் செய்து உள்ளார். மராட்டிய மந்திரி சச்சீன் அகீர் தரிசனம் செய்ததை உறுதிப்படுத்திய அறங்காவலர் குழு தலைவர் கனிமுரி பாபிராஜூ அவருடன் வந்த அஜய்நவீந்திரன் பின்னணி பற்றியும் அவர் சோட்டா ஷகீல் கூட்டாளி என்பதும் எனக்கு தெரியாது என்றார். அவர் கூறும் போது: “மராட்டிய மாநில முதல்மந்திரி கடிதத்துடன் அஜய் என்பவர் வந்தார். அவருடன் மராட்டிய மாநில மந்திரி ஒருவரும் வந்தார். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து தங்கினர். மராட்டிய மாநில முதல்மந்திரி கொடுத்த சிபாரிசு கடிதத்தால்தான் அவர்களுக்கு வி..பி. தரிசனம் தரப்பட்டது. அவர் தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு உள்ளவர்கள் என்பது எனக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் அறிய வேண்டும் என்றால் மராட்டிய மாநில முதல்மந்திரியைத்தான் கேட்க வேண்டும்”, என்றார். இது சிவசேனாவின் தாதாக்களின் தொடர்பை காட்டுவது போல உள்ளது.

 

Devotees protested against the entry of Dawood aide inside Tirumala Temple 2014

Devotees protested against the entry of Dawood aide inside Tirumala Temple 2014

‘‘நான்தாவூத்இப்ராகிமுடன்இல்லை. பெங்களூரில்இருந்துதரிசனத்துக்குவந்தேன். 2 முறைஏழுமலையானைதரிசித்தேன். வைகுண்டஏகாதசியன்றுஅதிகாலை 4 மணிக்குமகாராஷ்டிராமந்திரியுடன்தரிசனம்செய்தேன்: அஜய்நவீந்தர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி. அவர் வி.ஐ.பி. மரியாதையுடன் திருமலையில் 3 நாள் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு குறைப்பாடுக்கு தேவஸ்தானத்தின் அலட்சியமே காரணம். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தெலுங்கு தேச எம்.எல்.ஏ. கலி முட்டு கிருஷ்ணம்ம நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆனால் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை அஜய் நவீந்தர் மறுத்து உள்ளார். அவர் கூறும் போது, ‘‘நான் தாவூத் இப்ராகிமுடன் இல்லை. பெங்களூரில் இருந்து தரிசனத்துக்கு வந்தேன். 2 முறை ஏழுமலையானை தரிசித்தேன். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா மந்திரியுடன் தரிசனம் செய்தேன். 2–வது முறையாக 2 நாட்களுக்கு பிறகு உத்தவ் தாக்கரேவுடன் சென்றேன். எனக்காக எந்த சிறப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை’’ என்றார். ‘‘என்றாலும் இதனை எளிதாக விட்டுவிட மாட்டோம்’’ என்றும் இது குறித்து வழக்கு தொடருவேன் என்றும் தெலுங்குதேச எம்.எல்.ஏ. கலி முட்டு கிருஷ்ணம்ம நாயுடு கூறினார்[4].வைகுண்ட ஏகாதசி நாளில், மும்பை நிழலுலக தாதா, தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு, திருமலையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாக, தெலுங்கு தேச கட்சி, எம்.எல்.ஏ., முத்து கிருஷ்ணம நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

முத்துகிருஷ்ணமநாயுடுஇதுகுறித்துகூறியதாவது: “மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள், 20 பேர், வைகுண்ட ஏகாதசி அன்று, ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்துள்ளனர். திருமலையில் உள்ள, ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில், அவர்கள் தங்கியுள்ளனர். சாதாரண பக்தர்கள் அடையாள அட்டை கொண்டு வர மறந்தால், அவர்களுக்கு அனுமதி மறுக்கும் தேவஸ்தானம், வி.ஐ.பி.,களுடன் வந்தவர்களை, அடையாள அட்டை இல்லாமல் அனுமதித்தது ஏன்? வந்தவர்கள், திருமலையின் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் அறிந்து சென்றிருந்தால், திருமலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பது யார்? “, இவ்வாறு, அவர் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த, தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால், “”மகாராஷ்டிர முக்கிய அரசியல் பிரமுகரான, அஜய் தவேதார்வுடன், 20 பேர் திருமலைக்கு வந்தனர். அவர்கள், யார் என, விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்றார்[5].

 

300 ரூபாய்தரிசனடிக்கெட்திடீரெனநிறுத்தப்பட்டது, போராடிய பக்தர்கள் மீது வழக்கு: இந்நிலையில், 300 ரூபாய் தரிசன டிக்கெட் திடீரென நிறுத்தப்பட்டதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் மீது, தேவஸ்தானம் தொடர்ந்த வழக்கு, நேற்று திரும்ப பெறப்பட்டது.  திருமலையில், வைகுண்ட ஏகாதசி அன்று, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர், பாபி ராஜு அலுவலகம் மற்றும் செயல் அதிகாரி அலுவலகம் முன், “தர்ணா’ செய்த பக்தர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய, தேவஸ்தான செயல் அதிகாரி, எம்.ஜி.கோபால், போலீசாருக்கு பரிந்துரை செய்தார். அவர்களும், “வீடியோ’ பதிவை ஆதாரமாக கொண்டு, பிரிவு, 341ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு ஆதரவு வலுத்ததால், தேவஸ்தான செயல் அதிகாரி, வழக்கை திரும்ப பெற்றதாக, கோவில் இணை அதிகாரி தெரிவித்தார்[6].

 

இந்துக்கள் அல்லாதவர்கள் திருமலை கோவிலுக்குள் செல்வது சாதாரணமாக உள்ளது: கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நிறைய பேர், இந்து நண்பர்களுடன் திருமலை கோவிலுக்குள் சென்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, அமைதியாக, எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமலும் அவர்கள் திருமலை கோவிலுக்குள் சென்று வருகிறார்கள். 08-01-2014 அன்று 36 பேர், “அனைத்துலக மாஹாபாரதம் மாநாடு” நடந்தப்பொது, திருமலை கோவிலுக்கு ரூ.300/- டிக்கெட் மூலம் அழைத்துச் செல்லப் பட்டனர். அதில் இரண்டு பெண்கள் முஸ்லிம்கள் மற்றும் TTD ஊழியர்கள். ஶ்ரீ வெங்கடேஸ்வரா மற்றும் மத்மாவதி பல்கலைக்கழகங்களில் வேலை செய்து வருகிறார்கள். கேட்டதற்கு தங்களுக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது என்று சொன்னார்கள். அதுமட்டுமல்லாது, ஏற்கெனவே பலதடவை அவ்வாறு சென்றுள்ளதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். சோனியாவின் விஜயம் கூட நடந்துள்ளது[7]. தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் அமைச்சர்கள் சென்று வந்துள்ளது பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு நம்பிக்கையுடன் சென்று வந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அவர்கள் தாங்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று செயல்பட ஆரம்பித்தால் கோவில் பற்றிய விவரங்களை துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தலாம்.

 

திருமலை கோவில் மாற்று மதத்தினரின் தாக்குதல்-இலக்கில் இருந்து வந்துள்ளது: பௌத்தர்கள் இக்கோவிலை ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், முடியவில்லை. இக்காலத்தில் சிலர் விசமத்தனமாக, திருமலைக் கோவில் ஒரு பௌத்த விஹாரம் என்றெல்லாம் கதைகளை உருவாக்கியுள்ளனர். மாலிக்காபூர் முதல் ஔரங்கசீப் வரை முகபதிய / முஸ்லிம் மன்னர்களும் தாக்க திட்டம் போட்டுள்ளனர், ஆனால், முடியவில்லை. அதாவது, எப்பொழுதுமே திருமலையில் மக்கள் கூட்டம் இருந்து வந்ததினால், அத்தகைய தாக்குதலை நடத்த முடியவில்லை. போர்ச்சுகீசியர்கள்[8] கூட கோவிலைத் தாக்கிக் கொள்ளை அடிக்கலாம் என்று சதிதிட்டம் போட்டனர், ஆனால், முடியவில்லை[9]. இப்பொழுதோ, இந்துக்களின் தலையாய புனிதத்தலம் என்ற நோக்கில், இஸ்லாமிய தீவிரவாதிகள் இக்கோவிலை தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர். எனவே, மாற்று மதத்தினர் எவ்வாறு உள்ளே நுழைந்தாலும், ஒருவேளை அவரவர் மதக்கட்டளைக்குப் படி நடக்க உத்தரவிடும் போது, முஸ்லிம் முஸ்லிமாகத்தான் செயல்படுவான், கிறிஸ்தவனும் அவ்வாறே செயல்படுவான். ஆகையால், இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

 

வேதபிரகாஷ்

© 20-01-2014


[1] மாலைமலர், திருப்பதி கோவிலில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி 2 நாள் ரகசிய தரிசனம் , பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 11:04 AM IST

[5] தினமலர், 17-01-2014,

[8]  வேதபிரகாஷ், இந்தியாவில்செயின்ட்தாமஸ்கட்டுக்கதை,  மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், 57, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவயல், சென்னை – 602102, 1989, ப.38-39.