Archive for the ‘சுடாலின்’ Category

மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதி – பெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா? (1)

ஜனவரி 19, 2024

மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதிபெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா? (1)

அயோத்தியா கோவில் வைத்து அரசியல் செய்வது யார்?: உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில், பா.ஜ.க ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது[1] என்று தமிழ் ஊடகங்கள் பீடிகையுடன் ஆரம்பிக்கின்றன. ஆனால், அகழாய்வு அறிக்கை முன்னர் இருந்த கோவிலை இடித்து மசூதி கட்டப் பட்டது போன்றவற்ரைப் பற்றி மூச்சுக் கூட விடாததைக் கவனிக்கலாம். இப்படித்தான், தமிழக ஊடகங்களின் செக்யூலரிஸம் வேலை செய்து கொண்டிருக்கிறது. அதிலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சமீப காலமாக, மிக்க சார்புடையதாக வேலை செய்து வருகின்றன. ராமர் கோயில் முழுமையாகக் கட்டிமுடிக்க இன்னும் சில காலம் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், அவசர அவசரமாக லோக் சபா தேர்தலுக்கு முன்பாக ஜனவரி 22-ம் தேதி கோயில் திறக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன[2] என்றெல்லாம் குறிப்பிட்டதையும் கவனிக்கலாம், அதாவது, எதிர்மறையாக, என்னவெல்லாம் “சாக்கு-போக்கு” சொல்லலாம், லாஜிக்கே இல்லாமல் வாதம் புரியலாம் என்ற போக்கு தான் வெளிப் படுகிறது.

கூட்டணி அரசியல் இப்பிரச்சினையில் இரட்டை நிலை?: பிரதமர் மோடி முதல் பா.ஜ.க தலைவர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் அதேவேளையில், `தேர்தல் ஆதாயத்துக்காக மதத்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது’ என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி போன்ற எதிர்க்கட்சிகள் இதனைப் புறக்கணித்துவிட்டன, என்று கூட சேர்த்து செய்தி போடுகின்றன. ஆப் தலைவர் குடும்பத்துடன் கலந்து கொள்வேன் என்கிறார். ஆனால், இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்துவும் பெருமைப் படுகிறான். இந்நிகழ்வை பெரிய அளவில் போற்றுகிறான். பல்லாண்டுகளாக அடக்கி வைத்த இந்து உணர்வுகள் நிச்சயமாக வெளிவருகின்ற அல்லது மனங்களில் நினைத்துப் பூரிப்பு அடைகின்றனர். உண்மையில், பிஜேபிக்கு சாதகமாகி விடுமே என்ற அச்சத்தில், மறுபடியும், மோடியை தூஷிக்கிறாம், பிஜேபியை எதிர்க்கிறோம் என்று இந்துவிரோத பிரச்சாரத்தில் இறங்கி விட்டதையும் கவனிக்கலாம். திமுகவைப் பொறுத்த வரையில், யாரும் ஒன்றும் கண்டுகொள்ளப் போவதில்லை.

தி.மு.. இளைஞரணி மாநாட்டு விழாவும், செய்தியாளர் சந்திப்பும்: தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்[3]. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது[4] என்று வெளியிடப் பட்டுள்ள செய்திகள், “பி.டி.ஐ” பாணியில் தான் இருக்கின்றன. ஊடகக் காரர்கள், உதயநிதி சொன்னதை அப்படியே செய்திகளாகப் போட்டிருக்கிறார்களே தவிர, அவர்கள் பதிலுக்குக் கேள்வி கேட்டதாக எதுவும் குறிப்பிடப் படவில்லை. முன்னர் தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் ராமாயணத்தை, ராமரைப் பற்றியெல்லாம் பேசியதை, எழுதியதைப் பற்றியும் கேட்கவில்லை. இப்பொழுது, அம்மா அயோத்தியா போவதைப் பற்றியும் கேட்கவில்லை.

 அயோத்தியா, ராமர் கோவில் என்ன அதிமுகதிமுக பிரச்சினையா?: ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியலாக்கக்கூடாது என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்[5], ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[6]. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார்[7]. இதையெல்லாம் யாரும் நம்பக் கூடிய நிலையில் யாருமில்லை, என்ற முறையில் உதயநிதி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்[8]. அப்போது அவரிடம், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம் அதை அரசியலாக பார்க்கக்கூடாது” என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது[9]. அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்[10], ‘அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம்[11]. திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது என்று கலைஞர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்[12].

முரண்பட்ட, இரட்டைவேட திராவிடத்துவ நாத்திகம்: ராமசாமி நாயக்கர் என்ற பெரியார், ராமாயணத்தை பற்றி கேவலமாக எழுதியிருக்கிறார்; அண்ணாவும் கம்பரசரம் போதையுடன் தள்ளாடியிருக்கிறார்; கருணாநிதி பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; ராமர் பிறந்த இடத்தை பற்றி கேவலமாக பேசியதுடன், ராமர் எந்த இஞ்னியரிங் கல்லூரியில் படித்தார், இந்துக்கள் எல்லாம் திருடர்கள் என்று பலவிதமாக பேசியிருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் அதேபோல, ஸ்டாலின் திருமண மந்திரங்களைப் பற்றி கேவலமாக பேசியதும் தெரிந்த விசயமே. இவையெல்லாம் ஒரு உதாரணம் தான். இதை விவரித்து சொல்லலாம். இப்பொழுது தனயன்சனாதனத்தை வேரறுப்போம், அது ஏதோ பெரிய கிருமி போன்றது என்றெல்லாம் பேசியதும், அது பற்றிய வழக்கங்கள் எல்லாம் நிலுவையில் இருக்கும் பொழுது, இந்த விதமாக எல்லாம் பேச ஆரம்பித்திருப்பதும் கவனிக்கத்தக்கது அதே நேரத்தில் இவருடைய தாயார், தனது மாமனார் இறந்ததற்கு காசிக்கு சென்று பிண்டம் வைத்ததும். கோவில்களுக்கு எல்லாம் சேர்ந்து நேர்த்திக்கடன் செய்ததும், இப்பொழுது கூட அயோத்தி நிகழ்ச்சிக்கு செல்வேன் என்று அறிவித்துள்ளதும் உன்னிப்பாக நோக்கலாம். ஆகவே இவ்வாறு இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது என்பது, இவர்கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த குடும்பம் தான் செய்து கொண்டிருக்கிறது என்று வெளிப்படையாக தெரிகிறது. என் குடும்பத்தில் என்னுடைய தாயார், மனைவி, சகோதரி, மகள் சாமி கும்பிடுவார்கள் அது அவர்கள் உரிமை என்றால், அதே உரிமை தான் தமிழக மக்களுக்கும் இருக்கின்றது. அதில் நான் அதில் தலையிட மாட்டேன் என்றெல்லாம் பேசும்பொழுது, அதே போல தான் மற்ற நம்பிக்கை உள்ளவர்ககுளும் உள்ள உரிமை.

© வேதபிரகாஷ்

19-01-2024


[1] விகடன், “மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை!” – அமைச்சர் உதயநிதி, சி. அர்ச்சுணன்,Published: 18-01-2024 at 11 AM; Updated: 18-01-2024  at 1 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/ayodhya-ramar-temple-temple-built-by-demolition-of-babri-masjid-says-dmk-minister-udhayanidhi

[3] மாலைமலர், மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால் திமுகவிற்கு உடன்பாடு இல்லைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின், By மாலை மலர்18 ஜனவரி 2024 10:16 AM.

[4] https://www.maalaimalar.com/news/state/tamil-news-minister-udhayanidhi-stalin-says-dmk-did-not-agree-because-mosque-was-demolished-and-temple-was-built-698817

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ராமர் கோயில் திறப்பு மத நம்பிக்கைக்கு திமுக எதிரியல்ல! ஆனா மசூதியை இடிச்சது தப்புஉதயநிதி ஸ்டாலின், By Halley Karthik, Updated: Thursday, January 18, 2024, 11:52 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalin-said-that-dmk-is-not-an-enemy-of-ram-temple-opening-or-religious-faith-575201.html

[7] தமிழ்.இந்து, மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” – உதயநிதி ஸ்டாலின் கருத்து , செய்திப்பிரிவு, Published : 18 Jan 2024 12:19 PM; Last Updated : 18 Jan 2024 12:19 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1184998-we-are-not-for-building-a-temple-over-destroyed-mosque.html

[9] ABP.Live, ‘Won’t Support Building Temple Where Mosque Was Demolished’: DMK’s Udhayanidhi, By: ABP News Bureau | Updated at : 18 Jan 2024 03:10 PM (IST)

[10] https://news.abplive.com/states/ayodhya-ram-mandir-won-t-support-building-temple-where-mosque-was-demolished-dmk-s-udhayanidhi-1657480

[11] நியூஸ்.தமிழ்.7.லைவ், அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, by Web EditorJanuary 18, 2024

[12] https://news7tamil.live/dmk-does-not-approve-of-building-a-temple-after-demolishing-a-mosque-in-ayodhya-minister-udayanidhi-stalins-speech.html

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டதால் இந்துவிரோதம் மறைந்து விடுமா, திராவிடத்துவம் மாறி விடுமா? (2)

திசெம்பர் 12, 2023

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டதால் இந்துவிரோதம் மறைந்து விடுமா, திராவிடத்துவம் மாறி விடுமா? (2)

வடக்கு– தெற்கு எனப் பேசி நீங்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறீர்கள்: இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட பின்னர் செந்தில்குமார் அன்றைய தினமே மன்னிப்பு கேட்டுக்கொண்டார்[1]. ஆனால், இந்த விவகாரம் மக்களவையில் புதன்கிழமை எதிரொலித்தது[2]. கேள்வி நேரத்தின்போது டி.ஆர்.பாலு கேள்வி கேட்க எழுந்தபோது, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் “முதலில், நேற்று அவருடைய கட்சி (திமுக) உறுப்பினர் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றனர். அதற்கு டி.ஆர்.பாலு, “இது கேள்வி நேரம், கேள்வி கேட்க அனுமதியுங்கள்’ என்றார். தொடர்ந்து இருதரப்பிலும் குறுக்கீடுகள் எழுந்தன. அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “வடக்கு- தெற்கு எனப் பேசி நீங்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறீர்கள்” என்றார். தொடர்ந்து அமைச்சர் பியூஷ் கோயல், “நீங்கள் (திமுக) மன்னிப்பு கோர வேண்டும்’ எனக் கூற அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர், சுமார் 11.40 மணியளவில் அவை ஒத்திவைக்கப்பட்டது.

திமுக எம்.பி. கூறிய கருத்தை டி.ஆர்.பாலுவும், ராகுல் காந்தியும் ஏற்றுக் கொள்கிறீர்களா?‘:  அவை பகல் 12 மணியளவில் மீண்டும் கூடியபோதும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பான விவாதத்தில் தமிழக புயல் நிவாரணம் தொடர்பாக டி.ஆர்.பாலு பேச எழுந்தார்[3]. அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பி, “திமுக எம்.பி. கூறிய கருத்தை டி.ஆர்.பாலுவும், ராகுல் காந்தியும் ஏற்றுக் கொள்கிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினர்[4]. பின்னர், டி.ஆர். பாலு விளக்கம் அளித்தார்[5]. அவர் கூறுகையில், “திமுக உறுப்பினர் செந்தில்குமார் கூறிய கருத்துகள் ஏற்புடையது அல்ல. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இதை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டு உறுப்பினர் செந்தில்குமாரை எச்சரித்துள்ளார்[6]. செந்தில்குமார் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்[7]. அவையிலும் மன்னிப்புக் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னிப்பு கோருவார்’ என்றார்[8].

மு..ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்: இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில்[9], “தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த கழகத் தலைவர் மு..ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றையும் செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார்,” என்று சுட்டிக்காட்டியுள்ளார்[10]. தொடர்ந்து அவையில் செந்தில்குமார் பேசுகையில், ” நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்[11]. எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை[12]. நான் கவனக்குறைவாகப் பேசியது அவை உறுப்பினர்கள், சில தரப்பினரின் உணர்வுகளைப் புண்படுத்திருந்தால் நான் கூறியவற்றை திரும்பப் பெறுகிறேன்[13]. இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்றார்[14].

இயற்கைப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்: முன்னதாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து டி.ஆர்.பாலு பேசினார். அப்போது, தமிழகம் முழுவதும், 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட வெள்ளம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குள் 07-12-2023 அன்று ராஜநாத் சிங், சென்னைக்கு வந்து புயல் நிலவரம், நிவாரணம் பற்றி ஸ்டாலினை சந்தித்துப் பேசியாகி விட்டது. இரண்டாவது தவணையாக 540 கோடிகளும் பெற்றாகி விட்டது. ஆகவே, இந்த நிதியுதவிக்காக, பாதுகாப்பு அமைச்சர் வந்த நேரத்தில் அமுக்கி வாசித்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது. கொஞ்சம் நாட்கள் ஆன பிறகு, “திராவிட மாடல்” வேலை செய்யஆரம்பித்து விடும். பொறுமையாக கவனித்துப் பார்க்க வேண்டும். இனி காங்கிரஸ், சமஜ்வாடி கட்சியினர் ஏநெப்படி-எவ்வாறு எதிர்த்தனர் என்பதை கவனிக்கலாம்.

ஹிந்து மதத்தை பிடிக்காதவர்கள், வேறு மதத்திற்கு சென்றுவிடலாம்: இந்நிலையில் ‛இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான சமாஜ்வாதி முதல் முறையாக ஹிந்து மதம் குறித்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது[15]. இது தொடர்பாக சமாஜ்வாதி மூத்த தலைவரும், அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவருமான ஐ.பி.சிங் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது[16]: யாராவது இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாக பேசினால், முஸ்லிம்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துகின்றனர்[17]. அதற்காக உயிரைத் தியாகம் செய்யவும் அவா்கள் துணிகின்றனா்[18]. [ஆனால், உயிரை எடுப்பதைப் பற்றி பேசவில்லை.] ஆனால், சில ஹிந்துக்கள், தங்களது கடவுள், வேதங்கள், புராணங்கள், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து தினமும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்[19][பிறகு உபியில் பெரியார் சிலையை ஏன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை].

© வேதபிரகாஷ்

08-12-2023


[1] மீடியான், பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார்!, அருள்குமர், 08-12-2023.

[2] https://mediyaan.com/dharmapuri-dmk-mp-apologized-publicly-senthil-kumar/

[3] இ.டிவி.பாரத், வெளிப்படையாக மன்னிப்பு கோருகிறேன்” – தர்மபுரி எம்.பி செந்தில்குமார், ETV Bharat Tamil Nadu Desk; Published: Dec 5, 2023, 9:15 PM

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/dmk-mp-senthil-kumar-apologize-gaumutra-controversial-speech-in-parliament/tamil-nadu20231205211459689689986

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோ மூத்ராசர்ச்சை : மக்களவையில் வருத்தம் தெரிவித்த திமுக எம்.பி, WebDesk, Dec 06, 2023 15:13 IST.

[6]  https://tamil.indianexpress.com/tamilnadu/senthilkumar-mp-says-sorry-in-parliament-for-controversy-word-1779771

[7] சமயம், டெல்லியில் வெடித்த சர்ச்சை : திமுக எம்.பியை கண்டித்த முதல்வர் ஸ்டாலின் : பாஜக வெற்றியை அப்படி விமர்சிக்கலாமா?, Authored By, எழிலரசன்.டி | Samayam Tamil | Updated: 6 Dec 2023, 12:29 pm

[8]https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-condemn-dmk-mp-senthil-kumar-controversial-remark-gaumutra-over-bjp-win-election/articleshow/105770060.cms

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Senthil kumar regret : ”மன்னிப்பு கேள்என்ற T.R.பாலுவருத்தம் தெரிவித்த திமுக எம்.பி! | gaumutra, By : ABP NADU , ABP NADU | Updated : 07 Dec 2023 05:07 PM (IST)

[10] https://tamil.abplive.com/videos/news/politics-senthil-kumar-apologies-for-speech-in-parliment-latest-news-watch-video-154594

[11] தினத்தந்தி, வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்திமுக எம்.பி. செந்தில்குமார், டிசம்பர் 6, 1:27 am (Updated: டிசம்பர் 8, 10:28 am).

[12] https://www.dailythanthi.com/string-pearls/i-sincerely-apologize-dmk-mp-senthil-kumar-1085008

[13] தமிழ்.நியூஸ்.18, விஸ்வரூபம் எடுத்த கோமியப் பிரச்னைமன்னிப்பு கோரிய திமுக எம்.பி.! என்ன நடந்தது?, FIRST PUBLISHED : DECEMBER 6, 2023, 9:21 AM IST; LAST UPDATED : DECEMBER 6, 2023, 9:21 AM IST.

[14]  https://tamil.news18.com/tamil-nadu/dmp-mp-apologies-for-his-controversial-speech-in-parliament-1259244.html

[15] தினமலர், ஹிந்துக்களை இழிவுப்படுத்துவதை நிறுத்துங்கள்: முதல்முறையாக திமுக.,வுக்கு சமாஜ்வாடி கண்டனம், பதிவு செய்த நாள்: டிச 07,2023 17:52

[16] https://m.dinamalar.com/detail.php?id=3498300

[17] தினமணி, ஹிந்து மதம் மீதான விமா்சனத்தை திமுக நிறுத்த வேண்டும்: சமாஜவாதி கட்சி, By DIN  |   Published On : 08th December 2023 12:46 AM  |   Last Updated : 08th December 2023 12:46 AM  |

[18] https://www.dinamani.com/india/2023/dec/08/dmk-should-stop-criticizing-hinduism-samajwadi-party-4118855.html

[19] காமதேனு, இந்துக்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்திமுகவை சாடும் சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ், Updated on : 08 Dec 2023, 8:48 am

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

ஒக்ரோபர் 23, 2023

 

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

 

“மக்கள் சேவையே மகேசன் சேவை” திராவிட ஆட்சியில் எப்படி நடக்கிறது என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள்: எப்படி அரசியல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்துவிரோதிகள், எந்த பிரச்சினையையும் அவ்வாறே மாற்றியமைத்து, பலன் பெற முயற்ச்சிக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். தேர்தல் சமயத்தில் இந்துவிரோத அரசியல்வாதிகள் “ஒழுங்குப் பிள்ளை” போல பட்டை-கொட்டைகளுடன் கோவில்களுக்கு வருவது, கும்பிடுவது அறிந்ததே. ஏனெனில், இந்துக்களின் ஓட்டு தேவை. அதே போல, ஒரு பக்கம் பிள்ளையார் சிலை உடைத்து, “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று கூவி ஆட்சிக்கு வந்ததும் தெரிந்த விசயமே. அப்படி, “இந்து திருடன்” என்று அவமதித்து, வனவாசம் சென்று ஜோதிடரைப் பார்த்து, பரிகார யாகம் செய்து, மறுபடியும் ஆட்சிக்கு வந்த கதையும் தெரிந்த விசயமாகி விட்டது. இப்பொழுது அவரின் மகன், மறுமகள், பேரன் என்று அதே ஆன்மீகம்-துன்மார்க்கம் என்ற விளையாட்டுகளில் இறங்கியிருப்பது “ஆன்மீக ஆதரவு” பேச்சில் வெளிப்படுகிறது.

ஆன்மீகம் என்றால் என்ன ஆன்மீகம். பெரியார் ஆத்மாவே இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு, எங்கிருந்து ஆன்மீகம் வரும்?: ஆன்மீகம் என்ற சொல் ஆத்மா என்ற சொல்லின் மீது தான் ஆதாரமாக உருவானது. அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆத்மா உண்டு, அதன் மூலமாக அறியப்படுவது என்னவென்றால் மனிதனுக்கு இறப்பு உண்டு இறந்த பிறகும் வாழ்க்கை ஒன்று போன்ற நம்பிக்கைகளை அடக்கியது ஆத்மா, ஆத்மவியல், ஆன்மீகம் முதலியவை. அவ்வாறு இருக்கும் பொழுது, பெரியாரிஸம், நாத்திகம் அதிலும் குறிப்பாக இந்து விரோதத் தன்மையுடன் கூறும் இந்த சித்தாந்தனத்தில் எவ்வாறு ஆன்மீகம் உள்ளே வந்துப் புகும் அல்லது ஸ்டாலின் சொல்வது போல எவ்வாறு அது தங்களது திராவிடத்துவ கொள்கைக்கு உடன்பட்டு இயைந்து ஒத்துப் போய் எதிர் தன்மையை இல்லாத நிலையில் இருக்கும் என்பது அவர்கள் தான் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. எனவே இது தேர்தல் காலத்தில் மக்களை குறிப்பாக இந்துக்களை ஏமாற்ற பேசும் பேச்சாகவே வெளிப்படையாகப் புலப்படுகிறது. ஏனெனில் வருகிறது கடந்த கால பேச்சுகள், நடத்தைகள், நடவடிக்கைகள், எழுதிப் பேசி அச்சில் வந்திருக்கின்ற புத்தகங்கள், நோட்டீஸ்கள், எல்லாமே இவர்களுக்கு இவர்களின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தி வந்து, ஏற்கவே ஆவணங்களாக அமைந்துள்ளன.

அரசியல் பேச்சுகள் இந்துக்களுக்கு உதவுவது இல்லை, பாதகமாகத்தான் இருந்து வருகின்றன: நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற செய்தி எல்லா மின்-அச்சு ஊடகங்களிலும் வந்துளளது. கலைஞர் செய்தி, முரசொலி முழுவதுமாக வெளியிட்டுள்ளன், மற்றவை சுருக்கமாக, ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளன. சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் விங் 2.0 / Wing2Point0 ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக அரசியல் செய்ய எல்லா யுக்திகளும் கையாளப் படுகின்றன எனூ தெரிகிறது. அதில் வியாபார ரீதியில் எல்லோருமே இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.பணம் கொடுத்தால் வேலைக்கு வருவார்கள்.

திராவிடத்துவ-பாஜக மோதல்களில் இந்துமதம் தாக்கப் படுவது: முதல்வர் பேசுகையில், “ தி.மு..,வை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கங்களை அழிப்போம் எனக்கூறியவர்கள் இங்கு தான் வந்து அடைக்கலம் ஆனார்கள்[1]. இது வரலாறு……….. என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள்.….சமூக வலைதங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டுபோய் சேர்க்கும்[2]ஒருவர் பலநாள் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்துவிடும்[3]. என்னை பொறுத்தவரை எதிர்மறை பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட நேர்மறையான பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியானது[4]. அரசியவாதிகளை தாண்டி ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடமும் அத்துமீறல், மிரட்டல், அடக்குமுறையை ஏவுகிறது பாஜக[5]. இப்படிப்பட்ட சமூக வைரஸாதான் நாம் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறோம். பாஜகவின் சாதி தன்மை தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிரானது அல்ல. இந்தியாவிற்கே எதிரானது[6]. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. சாதி மதத்தின் பெயரால் பிளவுப்படுசத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கக் கூடி ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக்கொண்டிருக்கிறோம்[7]. …. பாசிசத்திற்கு எதிராக நேரடியாக மோதி கொண்டுள்ளோம்[8]. கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது தான் .தி.மு.., .தி.மு..,வும் பா..,வும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்[9]. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்பதால், பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.மிசா, தடா, பொடா என அனைத்தையும் பார்த்துவிட்டோம். மிரட்டல் எல்லாம் கடந்து வந்துவிட்டோம்[10]…… அவர்களின் தற்போதைய முக்கிய வேலை,…….
பாஜக சொல்வதனால் மட்டும் அவை அறியப் படுவதில்லை, ஊடகங்களே நன்றாக விளம்பரம் கொடுத்து வருகின்றன: ஸ்டாலின் தொடர்கிறார், “பாஜகவின் இப்போதைய ஒரே வேலை என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார் என்பதை பார்ப்பதுதான்[11]. துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, ”பாத்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார்”- எனப் பரப்புகிறார்கள்[12]. தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோயிலுக்கும்தான் துர்கா செல்கிறார்…….என்னை மனைவி கோயிலுக்கு செல்வது அவரது விருப்பம்[13]. நான் அதை தடுக்க விரும்பவில்லை[14]. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல[15]……., கோயிலும் – பக்தியும் அவரவர் உரிமை – விருப்பம்! ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெகு மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான்[16]. தலைவர் கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில்: ”கோயில் கூடாது என்றல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது!…. கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மீகத்தையும் – அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். ”

© வேதபிரகாஷ்

23-10-2023


[1] கலைஞர் செய்தி, “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல” : முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேச்சு!, Lenin, Updated on : 21 October 2023, 05:00 PM.

[2] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/10/21/we-are-not-enemies-of-spirituality-said-cm-mk-stalin

[3] நக்கீரன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல” – முதல்வர் மு..ஸ்டாலின், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 21/10/2023 (11:40) | Edited on 21/10/2023 (12:01).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-are-enemy-aryan-domination-and-not-spirituality-says-cm-mk-stalin

[5] தினமணி, நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, By DIN  |   Published On : 21st October 2023 12:51 PM  |   Last Updated : 21st October 2023 12:51 PM.

[6] https://www.dinamani.com/tamilnadu/2023/oct/21/we-are-not-enemies-of-spirituality-cm-stalins-speech-4093802.html

[7] தினமலர், நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் ஸ்டாலின் பேச்சு, மாற்றம் செய்த நாள்: அக் 21,2023 17:11

[8] https://m.dinamalar.com/detail.php?id=3463060

[9] தினத்தந்தி, ஆரியத்துக்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல: முதல் அமைச்சர் மு. ஸ்டாலின், தினத்தந்தி அக்டோபர் 21, 12:46 pm

[10] https://www.dailythanthi.com/News/State/we-are-the-enemy-of-aryam-not-spirituality-prime-minister-mk-stalin-1077268

[11] தமிழ்.நியூஸ்.18, ஆன்மீகத்திற்கு அல்ல.. ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிமுதலமைச்சர் மு..ஸ்டாலின் திட்டவட்டம், LAST UPDATED : OCTOBER 21, 2023, 3:20 PM IST.

[12] https://tamil.news18.com/chennai/dmk-govt-not-against-for-spirituals-its-against-only-for-religious-suppression-1202874.html

[13] விகடன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல!” – முதல்வர் ஸ்டாலின், VM மன்சூர் கைரி, Published: 22-10-2023 at 2 PM; Updated:Yesterday 22-10-2023 at 2 PM

[14] https://www.vikatan.com/government-and-politics/politics/cm-stalin-speech-in-dmk-it-wing-meetin-at-chennai

[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நான் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல! என் மனைவி எந்த கோயிலுக்கு போறாங்க என்பதை பார்ப்பதே பாஜக வேலை!முதல்வர் ஸ்டாலின், vinoth kumar; First Published Oct 21, 2023, 1:00 PM IST; Last Updated Oct 21, 2023, 1:09 PM IST.

[16] https://tamil.asianetnews.com/politics/i-am-not-an-enemy-of-spirituality-cm-stalin-speech-tvk-s2vbid

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு – கவனிக்க வேண்டியது (1)

மே 4, 2022

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு கவனிக்க வேண்டியது (1)

மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு: மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் திராவிட ஆட்சி நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், முதன் முதலாக, சைவ மடாதிபதியிடமிருந்து, மிக்க ஆழமான, செருமை மிக்க, ஆன்மீகத் தன்மை, மதப் பொறுப்பு, சமய உணர்வு என்றெல்லம் கொண்டு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவரது பேச்சில், ஒவ்வொரு வாத்தையில், வரியில், இப்பொழுதுள்ள அரசின் போக்கை எடுத்துக் காட்டி, கண்டித்துள்ளார். மடாதிபதிகள் முதலமைச்சருடன் பேசிய சில நாட்களில் இத்தகைய தடை அறிவித்திருப்பது, எத்தகைய மடமை என்பதனையும் எடுத்துக் காட்டியுள்ளார். இந்த இந்துவிரோத அரசைத் தட்டிக் கேட்டுள்ள தொணியும் மறைமுகமாக வெளிப்படுகிறது. ஒரு மடாதிபதியே, இந்த அளவுக்கு எடுத்துக் காட்டியுள்ளது, பெரியாரிஸம் பேசிக் கொண்டு, ஆன்மீகப் போர்வையில், திராவிடியன் ஸ்டாக், மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இந்துக்களை பாதித்து வருவதும் தெளிவாக வெளிப்படுகிறது.

தமிழக இந்துக்களின் பாதிக்கப் படும் நிலைகள்: உண்மையில், தமிழகத்தில், இந்துக்கள், “இந்துக்களாக” இருந்து கொண்டு, அமைதி, சத்தியம் மற்றும் அஹிம்சை போன்ற கொள்கைகளைப் பேணி வருகிறார்கள் என்றும் தெரிகிறது. ஒவ்வொரு நாள், வார, மாத, பருவ மற்றும் ஆண்டு விரதம், பண்டிகை, சடங்கு, கிரியை முதலியவற்றை பெருமான்மையான மக்கள் விடாமல் எய்து வருவதால் தான் சமூகம் நிலைத்து நிற்கின்றது. மேலே-மேலே மக்களின் மீது கெட்டது, தீயது, ஒவ்வாதது, எதிர்மறையானது என்று பல மக்களின் மீது கடந்த 60 ஆண்டுகளாகத் திணிக்கப் பட்டு வருவதால், இன்றைய 2022 சமூகம், பெருமளவில் சமூக சீரழிவுகள், குடும்பப் பிரச்சினைகள், தனிமனித ஒழுங்கீனம் முதலியவை அதிகமாகி, குற்றங்கள், வன்மம், வன்முறை முதலியவை தினம்-தினம் நடக்கும் செயல்களாக மாறி விட்டன. இவற்றை முதலமைச்சர் மறந்து, விளம்பர அரசியல் மூலம் தட்டிக் கழிக்க முடியாது. திட்டங்கள் அறிவிப்பு, கல்வெட்டுகள் வைத்து ஆரம்ப / திறப்பு விழாக்கள் என்றெல்லாம் நடத்துவது 60 ஆண்டுகளாக மக்கள் பார்த்து வருகின்றனர். அவற்றில் பாதிக்கு மேல் கல்வெட்டுகளாகவே இருந்து மறைந்து விடுகின்றன. மற்ற திட்டங்கள் மாறி-மாறி ஆட்சிக்கு எற்றமுறை உருமாறி வருகின்றன.

மத்திய அரசு மோதல் கவனர் மோதல் முதலியவை அரசியலாக்கப் பட்டு இணைக்கப் படுகிறதா?: இனி இப்பிரச்சினை எப்படி எழுந்ததது என்பதனை பார்ப்போம். திராவிடர் கழகம் சார்பில் இந்த “பல்லக்கு ஊர்வலம்” நடத்தப் படக் கூடாது என்று புகார் கொடுத்தது. உடனே, அதைப் பற்றி நடவடிக்கை எடுக்கப் பட்டு, போலீஸார் மற்றும் கோட்டாட்சி அதிகாரிகள் வேலை செய்ய ஆரம்பித்தனர்.

  • வாராந்திர கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், கோட்டாட்சியர் முதலியோர் இப்பிரச்சினைப் பற்றி பேசி 06-4-2022 அன்று துணை கண்காணிப்பாளர் அறிக்கைக் கொடுத்துள்ளார் (The Report of Mayilathurai Sub-Inspector – C.No.222/SDO-M/V/2022 dated 06-04-2022).
  • இதன் ஆதாரமகக் கொண்டு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் “பட்டின பிரவேசம்” நிக்ழ்வை தடை செய்து, ஆணை பிறப்பித்தார்.
  • 27-04-2022 அன்று ஸ்டாலின் மடாதிபதிகளை சென்னையில் சந்திக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆன்மிக அரசு என ஆதீனங்கள் புகழாரம் சூட்டினர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.
  • மயிலாடுதுறை கோட்டாட்சியரின் ஆணை தேதி 27-04-2022 என்றுள்ளது (Mayilathurai Administrative and Revenue Division order ந.க.1210/2022/ஆ.1 நாள்: 27-04-2022).
  • ஆனால், இந்த அறிக்கை ஆதீன மடத்திற்கு 02-05-2022 அன்று தெரிவித்தார் / அனுப்பப் பட்டது என்றுள்ளது (The Order communicated to the Adheenam by J. Balaji on 02-05-2022).
  • 27-04-2022 அன்று ஆதீனங்கள்-ஸ்டாலின் சந்திப்பு மற்றும் போலீஸாரின் பல்லாக்கு-தடை தீர்மானம், நடந்துள்ளதை கவனிக்கலாம்.
  • இதற்குள் கவர்னர் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை நகரங்களுக்கு வந்து விழாக்களில் கலந்து கொண்டுள்ளார்: இதற்கே, திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கவர்னர் கூட்டம் – TN Governor at the Annamalai University –Review – 17-04-2022
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு – TN Governor at the Annamalai University convocation – 18-04-2022. இவற்றையெல்லாம் யாரும் தடுக்க முடியாது.
  • கவர்னர் மயிலாடுதுறைக்கு வருகிறார், கருப்புக் கொடிகள் காட்டப் பட்டு, கொம்புகள் வீசப் படுகின்றன – TN Governor’s visit to Mayiladthurai 19-04-2022
  • கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதுகிறார் – Governor’s security officer letter dated 19-04-2022 to the IG Police, TN.
  • கவர்னர் துணைவேந்தர்கள் கருத்தரங்கத்தில் ஊட்டியில் கலந்து கொள்கிறார் – TN Governor at Ooty – two day Education seminar – 23-04-2022

இவ்விவரங்கள், ராஜ்பவன் அறிக்கைகளில் காணக்கிடைக்கிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது யார்?: இவையெல்லாம் தற்செயலாக நடந்த செயல்களாகத் தெரியவில்லை. கவர்னர் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்றால், ஸ்டாலின் அரசு அதற்கு மேல் கில்லாடியாக விசயங்களை அறிந்து வேலை செய்துள்ளது. அதாவது, திமுக விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளார்கள் என்று தெரிகிறது. சன் – குழுமம் மற்றும் கட்டுக்குள் உள்ள மீடியாக்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 2022ல் ஒரு திட்டத்துடன் கவர்னரை எதிர்ப்பது, பிரச்சினை உண்டாக்குவது என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வந்தது அப்பட்டமாகவே தெரிந்தது. இங்கு, மயிலாடுதுறைக்கு கவர்னர் வருவது தெரிந்து, திராவிட கட்சியினர், சார்புடைய அரசு அதிகாரிகள் செயல்பட்டது போல தோன்றுகிறது. அரசியல் ரீதியில் கட்சிகள் மற்ற லாபங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம், ஆனால், அரசியல் நிர்ணய சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். பல்கலைக் கழகங்கள், மடங்கள், கோவில்கள் முதலியவற்றில் தலையிட்டு, அரசியலாக்கக் கூடாது. மேலும், கடந்த 60 ஆண்டுகளில் இவற்றில் அரசியல் தலையீடுகளால், ஊழல் தான் மலிந்து அதிகமாகியுள்ளது. ஆனால், ஊழலை எதிர்த்து இக்கும்பல்கள், கட்சிகள் ஆர்பாட்டங்கள் நடத்துவதில்லை.

திராவிடர் கழகத்தின் புகார் பெயரில், போலீஸார் ஆணையின் படி, கோட்டாட்சியர் 27-04-2022 அன்று தடை விதித்தது: இந்த ஆண்டு இந்த மாதம் (மே) 22-ந் தேதி பட்டின பிரவேசம் விழா நடைபெற உள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு அந்தப் பகுதியின் கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மனிதனை மனிதன் சுமக்க கூடாது என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையின்பேரில், பல்லக்கு தூக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் புகார் அளித்தால், எவ்வாறு மடத்தின் சம்பிரதாய நிகழ்வுகளை தடுப்பது முதலியன செய்ய முடியும் என்று தெரியவில்லை. இந்த நிலையில், இது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி அளித்தார்.

03-05-2022 அன்று மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியது: அப்போது அவர், “நான் தருமபுர ஆதீனத்தில்தான் படித்தேன். தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். பட்டினப் பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பர்யம். 500 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பர்யத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. முதல்வர் ரகசிய காப்பு எடுப்பதை கூடாது என சொல்வது போல தான் பட்டினபிரவேச நிகழ்ச்சியை கூடாது என சொல்வது. வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர் காலத்தில்கூட இந்த நிகழ்வு நடந்தது. இதற்கு ஏன் தற்போது தடை விதிக்க வேண்டும். தருமபுர ஆதீன மடத்துக்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணமாகும். பாரம்பர்ய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்[1]. முதல்வர் இந்த நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை விடுக்கிறேன்[2].

© வேதபிரகாஷ்

04-05-2022


[1] விகடன், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்!” – மதுரை ஆதீனம், சாலினி சுப்ரமணியம், Published:Today at 2 PM; Updated:Today at 3 PM.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/madurai-adheenam-press-meet-about-dharmapuram-aadeenam-issue

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோத-துவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

திசெம்பர் 22, 2021

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோததுவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும்எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு ஆவினத்தைத் தூஷித்தது: ஜாகிர் உசேனின் கபடத் தனம், ஈவேராவை ஆதரிப்பதலிருந்தே அறிந்து கொள்ளலாம். கோபுரத்திற்கு முன்னால், இருக்கும் இந்துவிரோதியின் சிலையை அகற்ற இந்த வைஷ்ணவ-துலுக்கன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.  உண்மையான வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும். கங்காதேவியைப் போன்று எவ்வாறு துலுக்கர் ஶ்ரீரங்கம் கோவிலை இடித்தார்கள், கொள்ளையிட்டார்கள், படைகளுடன் அங்கேயே தங்கினார்கள் என்றெல்லாம் விவரித்து, நாட்டிய நாடகம் ஆடியிருக்கலாம். ஆனால், மேடைகளில் வேடமிட்டு ஆடி பணம்-புகழ் சேர்த்து, இந்துக்களுக்கு பெரிய நாமத்தைத் தான் இந்த ஆள் போட்டிருக்கிறான். இந்து நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை புண்படும் விதங்களில் பேஸ்புக்கில் பதிவுகள் போட்டு, தூஷித்து இருக்கிறான். ஶ்ரீ ரெங்கநாதர் ஶ்ரீ கிருஷ்ணர் என்றால், பசுவை அவனால், அந்ந்த அளவுக்கு தூஷித்து இருக்க முடியாது. ஆனால், செய்துள்ளான். பாண்டே கேட்ட போது, அவன் முகமே சுருங்கி, ஆபாசமாகி விட்டது, குற்ற-வஞ்சக உணர்வு முகத்தை காட்டி விட்டது. ஆண்டாள் பக்தன் என்றாலும், அவனது குரூரம் வெளிப்படுகிறது. துலுக்கனாக, பெரியாரிஸ்டாக, திமுக உறுப்பினராக இருந்து கொண்டு புலால் உண்கிறானா-இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், பசுக்கொலையை எதிர்ப்பதற்கு பதிலாக, ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளான்.

1311, 1318 மற்றும் 1327 ஆண்டுகளில் ஶ்ரீரங்கம் தாக்கப் பட்டது: 1311ல் மாலிகாபூருக்கு பயந்து, வீரபாண்டியன் அரச கருவூல செல்வங்களை எடுத்துகொண்டு ராமேஸ்வரம் அருகில் உள்ள தீவுக்கு தப்பி சென்றான். மலிக்காபூர் பாண்டிய அரசின் மதுரை மீனாட்சிகோவில்,சிதம்பரம் நடராஜர் கோவில் , ஶ்ரீரங்கம் கோவில் போன்ற அனைத்து கோவில்களின் செல்வதையும் பல நூறு யானை, ஒட்டகம் ஆகியவற்றில் டெல்லி கொண்டு சென்றான். அவை அந்த நாட்களில் டெல்லி சுல்தான்கள் அது வரையிலும் பெறாத செல்வமாக இருந்தது என சம கால வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

  • 1318 ஆம் ஆண்டு டெல்லி சுல்தான் குஸ்ருகான் தமிழகத்தை தாக்கி ஶ்ரீரங்கம் கோவிலை கொள்ளை அடித்து சென்றான். 
  • இஸ்லாமியப் படைகள் தொண்டைமண்டலத்தின் அத்தனை பகுதிகளிலும் அழிவுகளை நிகழ்த்தியதாக ஸ்ரீரங்க வரலாறான “கோவிலொழுகு” விளக்குகிறது. இதன்மூலம் ஸ்ரீரங்க ஆலயத்தை இஸ்லாமியப்படைகள் 1327-ஆம் வருடம் தாக்கியது உறுதியாகிறது.
  • ஆலயத்தைத் தாக்கிய இஸ்லாமியப்படைகள் ரங்கநாதரின் சிலையைக் காணாது கோபமுற்று அங்கிருந்த பல பூசாரிகளின் மற்றும் பக்தர்களின் தலையைக் கொய்ததாக கோவொலொழுகு மேலும் கூறுகிறது.
  • ஆல்யத்திலிருந்த நாட்டியப் பெண்மணி ஒருத்தியின் முயற்சியின் காரணமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெரும் அழிவிலிருந்து தப்பியதாகத் தெரிகிறது. மேற்கூறியபடி 1327-ஆம் வருடம் ஸ்ரீரங்க ஆலயத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டன.
  • ஸ்ரீரங்கம் மற்றும் ஜம்புகேசுவரரர் ஆலயங்களில் இஸ்லாமியப் படைகள் நிகழ்த்திய அழிவுகளைக் குறித்து கங்காதேவி தனது மதுரா விஜயத்தில் விளக்கியிருக்கிறார்.

ஸ்டாலின் நெற்றியில் வைத்ததை அழித்த போது, பட்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்படவில்லை, ஆஸ்பத்திரிக்குச் சென்று படுத்துக் கொள்ளவில்லை: பரதநாட்டிய கலையில் மூலம் அறியப்பட்ட ஜாகிர் உசேன் 05-01-2021 செவ்வாயன்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். ஆக, இவர் மூலம், அரசியல் ஆக்க திமுக, ஸ்டாலின் நினைத்திருக்கலாம்….முன்னரே ஸ்டாலின் ஶ்ரீரங்கத்திற்கு வந்தபோது, பட்டர்கள் மரியாதை கொடுத்து, நெற்றியில் சந்தனம்-குங்குமம் வைத்த போது, அழித்து அவமரியாதை செய்தது தெரிந்த விசயமே……..அப்பொழுது எத்தனை இந்துக்களுக்கு மன உலைச்சல் ஏற்பட்டிருக்கும் என்று ஸ்டாலின் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்…… அப்பொழுது பட்டர்கள் எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்துக் கொண்டு, போட்டோ வெளியிடவில்லை! உசேனும் கவலைப்படவில்லை. ஆக, இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதனை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது, இதைப் பற்றி எந்த மனிதனும் நினைத்துப் பார்த்தால் வெட்கப் படவேண்டும். ஆனால், எல்லா உண்மைகளையும் மறைத்து, உசேன், ஸ்டாலின் மற்ற இந்துவிரோதிகள் நாடகம் ஆடுகின்றனர், அறிக்கை விடுகின்றனர்.

பிரபலங்களைப் பிடித்து அரசு உதவி பெற்று வளர்ந்தது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். பரதநாட்டியம் மீதான ஆர்வத்தால் சென்னைக்கு 90-களில் வந்தார். நான்கு ஆண்டுகள் சித்ரா விஷ்வேஸ்வரன் என்ற கலைஞரிடம் பரதநாட்டியம் பயின்றார். அதன் பிறகு மார்கத்திலிருந்து விலகி நாட்டிய நாடகங்களை அரங்கேற்ற தொடங்கினார். அது பற்றி ஆராய்ச்சிகளும் செய்துள்ளார். இவருக்கு நடிகர் ரஜினி, சத்யராஜ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் ஆதரவளித்தனர். இவரது திறமையை அறிந்து 1992-ல் இந்திய ஜனாதிபதி 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கினார். பிறப்பால் ஒரு முஸ்லீம் என்றாலும், வேதங்கள், ஆகமங்கள் குறிப்பாக வைணவ பாரம்பரியம் பற்றிய ஆழமான புரிதலும், அறிவும் அவருக்கு உண்டு என்றெல்லாம் ஊடகங்கள் அளந்து விடுகின்றன. வைஷ்ணவ ஆகமங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக மத்திய அரசு இவருக்கு விருது வழங்கியிருக்கிறது. மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களைப் பற்றிய அவரது பரந்த அறிவு, பாஞ்சாலி சபாதம் மற்றும் சீதாயணம் போன்ற நடன நாடகங்களை கருத்தாக்க அவருக்கு உதவியது.

திமுகவில் சேர்ந்தது, பெரியாரிஸ்ட் என்று பிரகடனப் படுத்திக் கொண்டது: இவர் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார்.   முகநூலில் மிகவும் மோசமான பதிவுகளை செய்துள்ளார். பிரதம மந்திரி என்ற மரியாதைக் கூட இல்லாமல், ஒருமையில் விமர்சித்து, கேவலப் படுத்தியுள்ளான்.பிறகு இந்த ஆளை எப்படி கலைஞனாக மதிக்க முடியும்? நிச்சயமாக, இந்த மனிதன், குணாதிசயங்களால் அரக்கனாகத்தான் இருக்க வேண்டும்…. உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக கடூரமாக இருக்கிறதே? அந்த ஆள் மூஞ்சிக்கும், மனதுக்கும், காரியத்திற்கும் சம்பந்தமே இல்லை…….உள்ளே காரிருள், குரூரம், வஞ்சம்……….என்று தான் உள்ளன!பிஜேபியை, ஆர்.எஸ்.எஸ்.ஐ தூஷிக்கும் இந்த இந்துவிரோதி மீது ஏன் நடவடிக்கை இல்லை? உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக இருக்கிறதே? அடியேன் கருணாநிதி தொண்டன்,  ஸ்டாலின் தாசன், ………………………. திமுகவின் விசுவாசமான தொண்டன்,  திராவிடியன் ஸ்டாக் என்று கூறி  பெருமைப் பட்டுக் கொள்ளும்  நாட்டியக்காரன்,  நாடகத்திலும் கெட்டிக்காரனாகத் தான்  இருப்பது ஆச்சரியமில்லை!

© வேதபிரகாஷ்

22-12-2021

செப்டம்பர்-அக்டோபர் பண்டிகைகாலத்தைக் குறிவைத்து திராவிடத்துவ இந்துவிரோதிகள் தூஷணத்தில், தாக்குதல்களில் இறங்கியுள்ளனரா? (1)

ஒக்ரோபர் 28, 2021

செப்டம்பர்அக்டோபர் பண்டிகைகாலத்தைக் குறிவைத்து திராவிடத்துவ இந்துவிரோதிகள் தூஷணத்தில், தாக்குதல்களில் இறங்கியுள்ளனரா? (1)

நாத்திக ஆட்சியாளர்கள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களைக் குறிவைப்பதேன்?: செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அதிகம் இந்து பண்டிகைகள் வரும், அவற்றைத் திசைத் திருப்ப வேண்டும் என்ற திட்டத்துடன், பெரியார், வள்ளலார், அயோத்திதாசர் என்றெல்லாம் கொண்டு வந்து, திராவிடத்துவவாதிகள் கிளம்பியுள்ளனர். ரூ 100 கோடிகளில் பெரியாருக்கு சிலை வைப்போம், நூலகம் வைப்போம் என்றும் திட்டங்களை அறிவித்து விட்டனர். உலக புகழ்பெற்ற திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஒரு பகுதி அக்.25, 2021 அன்று பெய்த கனமழையின் காரணமாக சரிந்து விழுந்தது. இந்நிலையில் சரிவு ஏற்பட்ட இடத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 26-10-2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்[1]. சேகர் பாபு, “கமலாலய குளத்திற்கு என்று நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கருணாநிதி விளையாடிய இடம் இது. சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்[2]. பதவிக்கு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அந்த மகத்துவம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம் தான். இப்பொழுது, கருணாநிதி ஆவி வந்து சொன்னது போலும். ஆக, இனி கருணாநிதி புராணமும் எழுதப் படும். ஆஸ்தான வித்வான்கள் லியோனி, சுபவீ, வைரமுத்து முதலியோர் தயாராக இருக்கிறார்கள். “இராவண காவியம்,” புனைந்த, இந்த திராவிட குஞ்சுகளுக்கு, குழந்தைகளுக்கு, குட்டிகளுக்கு இதெல்லாம் சொல்லியாத் தெரிய வேண்டும்.

மேலே தினமலர், கீழே தினத்தந்தி – செய்தி வெளியீட்டு முறையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ் மாதமா, இந்து பாரம்பரிய மாதமா?: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டாடி மகிழும் பொங்கல் திருநாளையொட்டி, கனடா அரசு ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக அறிவித்தது[3]. கனடாவில் ஈழம், எல்.டி.டி.இ, தனித்தமிழ்நாடு என்றெல்லாம் ஊக்குவிக்கும், செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்கள் அங்கிருக்கின்றன என்பது தெரிந்த விசயம். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா ஆளுநர் ராய் கூப்பர், அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஃபுளோரிடா, ஜார்ஜியா, நியூஜெர்சி, மாசாசூசெட்ஸ், டெக்சாஸ் உள்பட அமெரிக்காவில் 20 மாகாணங்கள், 28 நகரங்கள் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அங்கீகரித்துள்ளன[4]. இந்தியா உள்பட உலகெங்கும் வாழும் இந்து மக்கள் அக்டோபர் மாதத்தில்தான் நவராத்திரி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்க மாகாணங்கள் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதத்தை இந்துக்கள் பாரம்பரிய மாதமாக அறிவித்து சிறப்பு சேர்த்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்து அமைப்புகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அக்டோபா் மாதத்தில் நவராத்திரி, தசரா, துா்கா பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதால், இந்து பாரம்பரிய மாதமாக அக்டோபரை கொண்டாட மிகவும் பொருத்தமாக இருக்கும். யோகாசனம், உணவு, நாட்டியம், இசை, அஹிம்சை, கொண்டாட்டம், கொடை என பல அம்சங்களை அமெரிக்கர்களின் வாழ்வியலில் இந்து மதம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. அக்டோபா் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதை எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனா்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திராவிடத்துவவாதிகளின் திரிபுகள், கோஷங்கள்: அமெரிக்க மாகாண ஆளுனர்கள் அறிவித்ததை, தினத்தந்தி, “அமெரிக்க இந்துக்கள் அறிவிப்பு,” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5]. “இதற்கான அறிவிக்கையை 20 மாகாணங்கள் வெளியிட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று கடைசி வரியில் குறிப்பிட்டது[6]. ஒருவேளை தமிழர்களுக்கு தீபாவளி கொண்டாட விருப்பம் இல்லை அல்லது அவர்கள் இந்து இல்லை என்றால் தாராளமாக அறிவித்துக் கொள்ளலாமே? தமிழ் பிரிவினைவாதிகள், ஒருவேளை கனடாவிலிருந்து ஆரம்பித்து, ஃபேட்னா மூலம் அமெரிக்காவில் நுழைத்து குழப்ப திட்டம் போட்டுள்ளார்கள் போலும். கீழடி போர்வையில் கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன், அவ்வப்பொழுது கலாட்டா செய்து வருவதும் தெரிந்த விசயமே. சமஸ்கிருதம்-இந்தி என்று சொல்லிக் கொண்டு அறிக்கைகள் விடுவதே அவருக்கு வேலையாக இருக்கிறது. இப்பொழுதும், சொமேட்டோ விசத்தில் இந்தி விசயத்தை ஊதி பெரிதாகி அடங்கி விட்டதையும் கவனிக்கலாம்.

05-10-2021 தனிப்பெருங்கருணை நாள்: அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் ‘தனிப்பெருங்கருணை நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்[7]. பதவிக்கு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அந்த மகத்துவம் எல்லாம் இவருக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம் தான். இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 05) வெளியிட்ட அறிவிப்பு[8]: “அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார்[9].

அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது[10].

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும்தனிப்பெருங்கருணை நாள்எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது,” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] இ.டிவி.பாரத், காணாமல் போக ஓடை என்ன மளிகைப் பொருளா? – அமைச்சர் சேகர் பாபு, Published on: 21 hours ago

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thiruvarur/minister-sekar-babu-questions-is-rill-converted-to-grocery-item-to-disappear/tamil-nadu20211027094140303

[3] Asianet Tamil, இந்து மக்களின் பாரம்பரிய மாதம் அக்டோபர்.. அமெரிக்காவில் பெருகும் ஆதரவு.. அணிவகுக்கும் மாகாணங்கள்.!, , America, First Published Oct 27, 2021, 9:53 AM IST.

[4] https://tamil.asianetnews.com/world/october-is-the-traditional-month-of-the-hindu-people-growing-support-in-the-united-states–r1mc6f

[5] தினத்தந்தி, இந்து பாரம்பரிய மாதம் அக்டோபா்; அமெரிக்க இந்துக்கள் அறிவிப்பு, பதிவு: அக்டோபர் 27,  2021 05:55 AM.

[6] https://www.dailythanthi.com/News/World/2021/10/27055521/October-is-the-Hindu-traditional-month-Announcement.vpf

[7] தமிழ்.இந்து, அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் இனிதனிப்பெருங்கருணை நாள்‘: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, செய்திப்பிரிவு, Published : 05 Oct 2021 12:17 PM; Last Updated : 05 Oct 2021 12:18 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/723156-mk-stalin-announcement-on-vallalar-birthday.html

[9] மாலைமலர், வள்ளலார் பிறந்தநாள்: தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்மு..ஸ்டாலின், பதிவு: அக்டோபர் 05, 2021 14:01 ISTமாற்றம்: அக்டோபர் 05, 2021 15:08 IST

[10] https://www.maalaimalar.com/news/district/2021/10/05140107/3079945/Tamil-news-MK-Stalin-Announcement-for-vallalar-birthday.vpf

துர்கா ஸ்டாலின் பூஜை அறை – குலதெய்வம் கோவில் புனரமைத்தது – சக்தி வழிபாட்டில் ஈடுபட்டது – வாராஹி கொடுத்த வெற்றியா? (2)

ஜூன் 26, 2021

துர்கா ஸ்டாலின் பூஜை அறைகுலதெய்வம் கோவில் புனரமைத்தது – சக்தி வழிபாட்டில் ஈடுபட்டது – வாராஹி கொடுத்த வெற்றியா? (2)

02-05-2021 நள்ளிரவில் பூஜையறையில் சான்றிதழ் வைத்த துர்கா ஸ்டாலின்: வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மே 2ஆம் தேதி காலையில் எட்டு மணிக்கு பூஜை அறையில் உட்கார்ந்து பிரார்த்திக்க தொடங்கிய துர்கா ஸ்டாலின் மதியம் ஆகியும் வெளியே வரவில்லையாம். அந்த நாளில் என்ன நடந்தது என்பது குறித்து அவரே தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்[1]. தான் சென்று வந்த கோயில்களின் தெய்வங்கள், துர்கை, குல தெய்வம் என எந்தக் கடவுளையும் விடாமல் தொடர்ந்து பிரார்த்தித்து வந்துள்ளார். மதியத்துக்கு மேல் அவரது மருமகள் கிருத்திகா அவரை வலுக்கட்டாயமாக அழைத்து பின்னர்தான் வெளியே வந்துள்ளார். “திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப் போகிறது இனி என்ன வேண்டும், சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க,” என்று கிருத்திகா கூறியுள்ளார். ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவரிடம் சான்றிதழ் வழங்கப்பட்டு அவர் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்து நள்ளிரவில்தான் வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் கணவரை எதிர்பார்த்து காத்து நின்றிருக்கிறார் துர்கா ஸ்டாலின். வந்தவரை நேராக பூஜை அறைக்கு அழைத்துச் சென்றுதான் சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளார். அப்போதே அவரது கண்கள் கண்ணீரில் நனைந்துள்ளது. தான் வணங்கிய தெய்வம் எல்லாம் கண்முன்னே வந்து சென்றதாக துர்கா இது குறித்து கூறியுள்ளார்[2]. “நான் இன்னும் சி.எம் ஆகல அதுக்குள்ள ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுறே” என ஸ்டாலின் அந்த நள்ளிரவில் மனைவியை தேற்றியுள்ளார்.

ஜனவரி 2021ல் தில்லிய நடத்த முடியாத பூஜையை ஜுனில் நடத்தியது: தேர்தலுக்கு முன்பே அவர் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன[3]. ஆனால் கொரோனா முதல் அலை காரணமாக அவர் செல்லவில்லை. ஆகையால் இந்த முறை லண்டன் செல்ல ஏற்பாடாகியது. டெல்லி ராமகிருஷ்ண புரம் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். மலை மந்திரில் உள்ள உத்தரசுவாமி கோயில் பிகவும் பிரபலமானது. அரசியல் பிரமுகர்கள் பலரும் இங்கு தரிசனம் செய்வது வாடிக்கை. திமுக எம்.பி., ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி டெல்லி மலைமந்திர் முருகன் கோயிலுக்கு அடிக்கடி சென்று வணங்குவார். தீவிர கடவுள் பக்தரான துர்காதேவி ஸ்டாலினும் அடிக்கடி கோயில்களுக்கு சென்றுவருவார். இந்த முறை பிரதமரை சந்திக்க மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது அவருடன் துர்கா ஸ்டாலினும் சென்றார். மு.க.ஸ்டாலினின் உடல்நலன் கருதி டெல்லியில் உள்ள கனிமொழி இல்லத்தில் இருந்து சமையல்களை எடுத்துச் சென்று ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. சமையலை தானே செய்து கொடுத்துள்ளார் துர்கா. அப்போது ஆர்.கே.புரத்தில் உள்ள மலைமந்திர் முருகன் கோயிலுக்கும் சென்றுள்ளார் துர்கா ஸ்டாலின். அங்கு மலை மந்திர் அர்ச்சகரை சந்தித்து சிறப்பு பூஜைகளையும் நடத்தியுள்ளார் துர்கா[4]. மு.க.ஸ்டாலினின் உடல்நலம், அரசு நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என இந்த பூஜைகளை துர்கா ஸ்டாலின் செய்துள்ளார்[5].

ஆர்.கே.புரத்தில் உள்ள மலைமந்திர் முருகன் கோயிலில் ஜூன் 2021ல் நடத்திய பூஜை: இந்த மலைக்கோயிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தென்னிந்திய கோயில் கட்டுமான பாணியில் கோயில் அமையப் பெற்றுள்ளது. அதேபோல் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் செல்லவுள்ளதாகவும் கூறுகிறார்கள். லண்டன் பயணத்துக்காக அனுமதி கோரப்பட்ட நிலையில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இதற்கு முன்பாக ஸ்டாலின் சிகிச்சைக்காகவும், ஓய்வுக்காகவும் லண்டனுக்கு பலமுறை தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். தேர்தலுக்கு முன்பே அவர் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கொரோனா முதல் அலை காரணமாக அவர் செல்லவில்லை. ஆகையால் இந்த முறை லண்டன் செல்ல ஏற்பாடாகி வருகிறது.

நாத்திகனுக்கு வெற்றி கிடைத்த ரகசியம்: அஜாமிளனுக்கு கடைசி காலத்தில் “நாராயணா” என்று தன் மகனைக் கூப்பிட்டதால், கடவுளின் பெயரைச் சொல்கிறான் என்று, யமதூதர்கள், அவனை விட்டுச் சென்றனராம்[6]. துரியோதனன் முதலியோர், பாண்டவர்களுக்கு முன்னரே சொர்க்கத்தில் இருந்தனர்[7]. ஆனால், தருமர் கஷ்டப் பட்டு, மனைவி தம்பியர் இறக்க, தான் மட்டும் தனியாக சொர்க்கத்திற்கு வந்த போது, திகைக்கிறான். அதாவது, துரியோதனன் முதலியோர், ஶ்ரீகிருஷ்ணரை வெறுத்தாலம், சதாசரகாலம் அவரையே நினைத்து தூஷித்துக் கொண்டிருந்தனர். அதேபோல, நாத்திகர், “கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை,” எனு அடிக்கடி சொல்லும் போதெல்லாம், “கடவுள், கடவுள்” என்கிறான், நினைத்துக் கொள்கிறான். இங்கும், மனைவி, கணவனுக்காக தியானித்து, உச்சாடனம் செய்து, பூஜித்து, பாராயயணம் செய்து, வெற்றியைத் தேடித் தந்துள்ளாள்!

கணவன்மனைவி, நாத்திகம்ஆத்திகம், பொதுமக்கள்ஆட்சி: மனைவி இவ்வாறு நம்பிக்கையுடன், இந்து போல, இந்துவாக, பூஜை-புனர்ஸ்காரங்கள் செய்து கொண்டிருந்த போது, கணவன், கிருத்துவ-துலுக்கக் கூட்டங்களில், இந்து மதத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருந்தார்[8].

  1. பஞ்சகன்யா (पञ्चकन्या) = ஐந்து கன்னிகையர் என்றதில் அஹல்யா, திரௌபதி, குந்தி, தாரா, மண்டோதரி அடங்குவர். இதில் மண்டோதரி ராவணனின் மனைவி.
  2. இவர்களின் பெயர்களை உச்சரித்தால் சகல பாவங்களும் போகும் என்ற வழக்கும் உள்ளது. இதில் தாராவை குரங்கு, மண்டோதரியை அரக்கி என்று சொல்வதில்லை.
  • கௌசிகன் என்பவன் தொழுநோயாளியாக இருந்தாலும், அவனுடைய மனைவி கௌசிகி தொட்டு பணிவிடை செய்ததால், பதிவிரதை ஆனாள்.
  • தன் கணவன் பொழுது புலந்தால் இறப்பான் என்று சாபமிட்டபோது, பொழுதே புலராமல், சூரியனை உதிக்காமல் செய்தாள் அந்த பதிவிரதை!
  • இன்றோ, நான்கு திசைகளில் சூரியனை உதிக்க வைத்தாளோ, இந்த பதிர்விதை. அதனால், கமலமே நான்காக சுருங்கிவிட்டது போலும்!
  • அரக்கர் – ஹிரண்ய கசிபு, ஹிரண்யாக்ஷன் மனைவியர் தங்களது கணவர்களுக்காக மோட்சத்தை வேண்டிப்பெற்ற பதிவிரதைகள்!
  • தேவர்களும் அசுரர்களும் சகோதரர்கள் தாம், குணாதிசயங்களை வைத்து, அசுரர்கள் வித்தியாசமாகச் சித்திரக்கப் படுகின்றனர்.
  • எப்பொழுதுமே, அரக்கர்களின் மனைவியர் தங்களது கணவர்களுக்காக அவர்கள் எதிர்க்கும் கடவுளர்களையே வேண்டி, பூஜை செய்து, போற்றியுள்ளனர்.
  • கணவன் செத்த பாடை என்றாலும், அவை தீயது என்று ஆபாசமாக பேசினாலும், மனைவி அதே செத்தபாடை மந்திரங்கள் சொல்வது கலிகாலமா?
  1. சக்தி-உபாசனை, சக்கரம், மந்திர-யந்திர-தந்திர பிரயோகங்கள் சிலருக்கு உடனடி பலனைக் கொடுக்கலாம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-06-2021


[1] தமிழ்.சமயம், நள்ளிரவில் பூஜை அறையில் துர்கா: ஸ்டாலின் வெற்றிக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?, Mariathangaraj Jeyapal | Samayam TamilUpdated: 14 May 2021, 02:42:51 PM

[2] https://tamil.samayam.com/latest-news/state-news/durga-stalin-interview-about-mk-stalin-hard-work-and-her-prayers/articleshow/82624923.cms?story=3

[3] தமிழ்.ஏசியாடிக்.நியூஸ், துர்கா ஸ்டாலின் நடத்திய சிறப்பு பூஜைலண்டனுக்கு புறப்படும் மு..ஸ்டாலின்..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Jun 19, 2021, 11:57 AM IST.

[4] பிஜேபி வேல்யாத்திரையும், திமுகவிற்கு சாதகமாக போனதை கவனித்திருக்கலாம்.

[5] https://tamil.asianetnews.com/politics/special-pooja-conducted-by-durga-stalin-mk-stalin-leaving-for-london-quxrae

[6] இதைப்போல, புராணங்களிலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம்.

[7] ஶ்ரீகிருஷ்னரிடம் போருக்கு/ தேர்தலுக்கு உதவி கேட்டு சென்றபோது, துரியோதனன் தலைப் பக்கமும், அருஜுனன் கால் பக்கமும் உட்கார்ந்த நிலையினையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

[8] ஆனால், பிஜேபிகாரர்களின் மனைவிகள், தங்களது கணவன்மார்களின் வெற்றிக்கு இவ்வாறு பூஜை செய்தார்களா என்று தெரியவில்லை.

துர்கா ஸ்டாலின் பூஜை அறை – ஷண்மத தெய்வங்களை வழிபடுவது – வராஹி முதல் காயத்ரி, அன்னபூரணி, அங்காளம்மன் வரை! (1)

ஜூன் 26, 2021

துர்கா ஸ்டாலின் பூஜை அறைஷண்மத தெய்வங்களை வழிபடுவதுவராஹி முதல் காயத்ரி, அன்னபூரணி, அங்காளம்மன் வரை! (1)

துர்கா ஸ்டாலின் பூஜை அறை (Durga Stalin Pooja Room Visit Viral Video Tamil): நாயகி டிவி என்ற யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் லோகநாயகி திருமதி.துர்கா ஸ்டாலினின் பூஜை அறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என பல்வேறு விதமான விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் பூஜை அறை டூர் வைரலாகப் பரவி வருகிறது[1]. பத்திரிகையாளரான லோகநாயகி, நாயகி எனும் யூடியூப் சேனலை சொந்தமாக நடத்தி வருகிறார்[2]. இதில், சமீபத்தில் துர்கா ஸ்டாலினை சந்தித்து அவருடைய பூஜை அறையைச் சுற்றிக்காட்டி வீடியோ ஒன்றைப்பதிவு செய்திருந்தார். இது, தற்போது வைராலகப் பகிரப்பட்டு வருகிறது. அப்படி என்ன இருக்கிறது துர்கா ஸ்டாலின் பூஜை அறையில்? திடீரென்று இந்த வீடியோ சுற்றில் ஏன் விட வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. நிச்சயமாக, கணவன் – மனைவி அனுமதியுடன் தான், இந்த வீடியோ வந்திருக்க வேண்டும்.

தினம்தினம் பூஜை செய்யும் மனைவி: தினமும் காலையில் குளித்து முடித்து, 9 முதல் 9.30 மணி போல் பூஜை அறைக்கு வந்துவிடுவார் துர்கா ஸ்டாலின். பிறகு பால், பழங்கள் வைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்வது வழக்கம். பெரும்பாலும் வெள்ளி விளக்குகள் நிறைந்துள்ள அந்த பூஜை அறையில் அணையா விளக்கு என்ற ஒன்றை வைத்திருக்கிறார். எண்ணெய் தீரத்தீர, மீண்டும் எண்ணெய் ஊற்றி எந்நேரமும் அணையவிடாமல் அந்த விளக்கை மட்டும் எரிய வைத்துக்கொண்டே இருப்பாராம். இரவிலும் எண்ணை ஊற்றி விட்டு செல்வார். செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கான சஷ்டி பாடல், திங்களுக்கு சிவபுராணம் என நாள்களுக்கு ஏற்றப் பாடல்களை ஒலிக்கச் செய்வது துர்காவின் வழக்கம். அந்தந்த பாடல்களை விவரமாக சேர்த்து வைத்திருகிறார். மேலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பக்தி புத்தகங்களைப் பூஜை அறையில் அமர்ந்து படிப்பதும் அவருடைய வழக்கங்களில் ஒன்று. தன்னுடைய பழைய வீட்டில் சிறிய பூஜை அறை என்பதால், ஒரே புகைப்படத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கும் பெரிய புகைப்படம் வைத்திருந்திருக்கிறார். ஆனால், இந்த புதிய வீட்டில், தனித்தனி புகைப்படங்களாக அடுக்கியுள்ளார்.

ஸ்டாலின் துர்கா வைத்துள்ள சுலோக புத்தங்கள்: அவருக்கு பல விக்கிரங்கள், படங்கள், எந்திரங்கள், பூஜைப் பொருட்கள் கொடுக்கப் படுவது உண்டு. பலர் அன்பளிப்பாகவும் கொடுத்து விடுகிறார்கள். சிலவற்றை, இவரே விருப்பப் பட்டு வாங்கி வைத்துள்ளார். அதே போல, இவருக்கு பல ஸ்தோத்திர புத்தகங்கள் கொடுப்பது. இவரும் வாங்கிக் கொள்வதுண்டு. அன்றைக்கு, வீடியோ எடுக்கப் பட்ட போது, தெளிவாக தென்பட்டது, அவரே இருப்பதாக ஒப்புக் கொண்டது, கீழ்கண்ட புத்தங்கள் ஆகும்:

  1. ஸ்யாமளா தண்டகம்
  2. ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம்
  3. ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்

மிகவும் சரளமாக, ஒவ்வொரு தேவதை-கடவுளுக்கு உண்டான மந்திரத்தை சமஸ்கிருதத்தில் தெளிவாகச் சொல்கிறார்.

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ

தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!

ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |

உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்

சாய்பாபா மந்திரம் ஆரம்பித்து, காயத்ரி, ஆஞ்சநேயர், மிருத்யஞமந்திரம் என்று சொல்லிக் காட்டினார்! இதிலிருந்து, பல்லாண்டுகளாக பாராயாணம் செய்து வருகிறார் என்று தெரிகிறது.

மந்திரதந்திரயந்திர மற்றும் சக்தி உபாசனைகளில் ஈடுபட்டது: வராஹி, மேல்மலையனூர் அம்மன், காயத்ரி என்று வைத்திருப்பது சக்தி வழிபாட்டினையும் எடுத்துக் காட்டுகிறது. இவருக்கும், ஸ்டாலினுக்கும் அங்காளம்மன் தான் குலதெய்வமாக இருக்கிறார்.

  1. கவிகாளிதாஸர் ஷ்யாமளா தண்டகத்தில் பாடிப் பாடி பரவசப்பட்ட அன்னை. ஆதிபராசக்தியின் மந்திரிணியாக இருந்து அற்புதமான ஆலோசனைகள் சொல்பவர்.
  2. `ராஜ ஷ்யாமளா’ என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் இவளைக் கொண்டாடுகிறது.
  3. சாக்த வழிபாட்டில் சப்த மாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்யாக்களில் ஒன்பதாவது தேவியாகவும் ராஜ மாதங்கி இருந்துவருகிறாள்.
  4. இதனால் அரச பதவி வேண்டுவோர் முக்கிய தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினர்.
  5. அரச போகத்தினை அளிக்கும் இந்த தேவியின் அங்க தேவதைகளாக –
    1. ஹசந்தி ஷ்யாமளா,
    1. சுக ஷ்யாமளா,
    1. சாரிகா ஷ்யாமளா,
    1. வீணா ஷ்யாமளா,
    1. வேணு ஷ்யாமளா,
    1. லகுஷ்யாமளா என ஆறு தேவியர் தோன்றி கலைகளின் அதிபதியாகினர்.
  6. ஆக, கலைகளின் தேவதையாகவும், அரச போக வாழ்வை அளிப்பவளாகவும் இவளே விளங்குகிறாள். க
  7. லைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு பெற, வாக்கு வளம் பெற இவளை வணங்கலாம். 
  8. வடநாட்டில் ஷ்யாமளா வழிபாடு மிகப் பிரபலமானது.
  9. சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹ்ருதயம், ராஜமாதங்கி மந்த்ரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் போன்ற பல துதிகள் இந்த அன்னையின் புகழைப் போற்றுகின்றன.
  10. ஆக இந்த நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு, அதவாது, யாரோ மிக்க விவரங்கள் தெரிந்தவர்கள் இவருக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். உதவியும் செய்துள்ளனர்.

ஷண்மத தெய்வங்களை வழிபடும் துர்கா ஸ்டாலின்: ஒவ்வொரு புகைப்படங்கள் மற்றும் சிலைகளுக்கும் பெரும்பாலும் தன் வீட்டில் பூத்த மலர்களையே சாட்டுகிறார். வெவ்வேறு நிறங்களில் செம்பருத்தி, செண்பகம், மனோரஞ்சிதம் என அத்தனையும் வீட்டிலேயே மலர்ந்த மலர்கள். மனித வடிவ தெய்வங்கள் என போற்றப்படும் ஷீரடி சாயிபாபா, புட்டபர்த்தி சாய் பாபா உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் துர்கா ஸ்டாலின் பூஜை அறையில் உள்ளன. இவர் அறையில் இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் சிலைகளில் பல அன்பளிப்பாக வந்தவை. அதில், அம்பானி தன் மகள் திருமண பத்திரிக்கை வைக்க வந்தபோது, அவர்கள் கொடுத்த ஆறு முகம் கொண்ட காயத்ரி சிலை, உண்மையான ஆஞ்சநேயர் படம், காசியிலிருந்து வாங்கிய அன்னபூரணி சிலை உள்ளிட்டவை அடங்கும். தங்களுடைய குலதெய்வ அங்காளபரமேஸ்வரி புகைப்படம், மறைந்த கருணாநிதி மற்றும் அவருடைய தாய் தந்தை புகைப்படம், துர்காவின் தாய், தந்தை மற்றும் பாட்டியின் புகைப்படம் ஆகியவையும் இவருடைய பூஜை அறையின் ஓர் அங்கமாக இருக்கிறது. துர்கா, சில மந்திரங்களைப் படிப்பதோடு இந்த பார்ட்- 1 காணொளி நிறைவு பெறுகிறது. அடுத்த பகுதி எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பை மேலும் அதிகமாகியிருக்கிறது இந்த வீடியோ.

வராஹி முதல் காயத்ரி, அன்னபூரணி, அங்காளம்மன் வரை: மன்னர்கள் போருக்கு கிளம்பும் முன்பு வராகியை வழிபட்டு செல்வார்கள் என்பதை அறிந்து, தேர்தலுக்கு முன்பாக வராகி வழிபாட்டையும் அவர் துவக்கியுள்ளார்[3]. வடக்கத்திய கடவுள் என்று அவர்கள் விமர்சிக்கும் ‘நம் பிள்ளையார்’ பளிங்கு கல்லாகவும், தஞ்சாவூர் சிற்பமாகவும், முதல்வர் ஸ்டாலின் வீட்டு பூஜையறையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். சிவபெருமானின் திருமண கோலமும், சீதாராமரின் சிற்பமும் அங்கு இடம்பெற்றுள்ளது. குலதெய்வம் அங்காளம்மன், வெங்கடேசபெருமாள், முருகன் படங்கள் மலர் மாலைகளுடன் அருள்பாலிக்கின்றன. முகேஸ் அம்பானி அளித்த காயத்திரி தேவி சிலை, சீரடி சாய்பாபா சிலை, காசியிலிருந்து வாங்கி வந்த அன்னபூரணி சிலை, கன்றுக்கு பால் கொடுக்கும் கோமாதா சிலை ஆகியவை துர்கா ஸ்டாலினின் தினசரி பூஜைக்குரியவையாக உள்ளன[4].

குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்தது: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதற்காக நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் தனது குல தெய்வமான அங்காளம்மன் கோயிலை புதுப்பித்து மிகப்பெரிய அளவில் கட்டி வருகிறார்[5]. இந்தக் கோயிலின் பரிவார மூர்த்திகளை புனரமைத்து பிரகார மண்டபங்கள் கட்டும் பணிகளை சமீபத்தில் நேரில் சென்று துர்கா பார்வையிட்டார்[6]. கோயில் புனரமைக்கப்பட்டு வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பே கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளார்[7]. கோயில் கட்டுமான பணிகளை பார்வையிட வந்த துர்காவின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படியே குல தெய்வம் கோயிலை புனரமைக்கும் பணிகளை துர்கா துவக்கி உள்ளதாக கூறுகின்றனர். முன்பு, ரங்கராஜபுரம் அ.கணேசன் இருந்தார். இப்பொழுது யார் என்று தெரியவில்லை. அதனை தொடர்ந்து பழநி, திருச்செந்துார் முருகன் கோயில்களில் பவுர்ணமி தினத்தில் வழிபாடு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

© வேதபிரகாஷ்

26-06-2021


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், அணையா விளக்கு, 6 முகம் காயத்ரி தேவி சிலைதுர்கா ஸ்டாலின் பூஜை அறையில் என்ன இருக்கிறது?, Written By WebDesk, Updated: June 25, 2021 7:29:35 pm.

[2] https://tamil.indianexpress.com/lifestyle/durga-stalin-pooja-room-visit-viral-video-tamil-317217/

[3] துர்கா ஸ்டாலினை போற்றுவோம்!!, By ரா.செந்தில்முருகன் -ஜூன் 24, 2021

[4]https://newsguru.news/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B/

[5] தமிழ்.ஆசியாநெட்.நியூஸ், மு..ஸ்டாலின் முதல்வராக கோயில் கட்டும் துர்காமுருகனிடம் தஞ்சம் கேட்கவும் ஏற்பாடு..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 2, Sep 2020, 12:01 PM.

https://tamil.asianetnews.com/politics/durga-to-build-temple-as-mk-stalins-chief-arrange-to-seek-refuge-with-murugan–qg0q4h

[6] தமிழ்.ஒன்.இந்தியா, கோயிலை” கையில் எடுத்த துர்கா.. புதுப்பித்து கட்டுகிறார்.. ஸ்டாலினுக்கு “முதல்வர்” பதவி வந்து சேருமா, By Hemavandhana, | Updated: Tuesday, September 1, 2020, 11:47 [IST].

[7]  https://tamil.oneindia.com/news/chennai/durga-stalin-visits-her-kuladeivam-temple-in-mayiladuthurai-district-396286.html

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

ஏப்ரல் 16, 2019

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

Kanimozhi effigies burnt in Rayalaseema AP

திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா? இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.

Kani, Vairamuthu, Veeramani- the trio
இந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா?[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்? இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு..,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு..வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது? தி.மு.., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி

Kani, Tirupati case filed

திராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.

Kani going spree-temples

கருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே? இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர்.  இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.

75 years old man killed canvassing for Modi 13-04-2019.vedaprakash

திராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன.  இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு? முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.

Veeramani condemned, Charu Nivedita-2

தாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.

வேதபிரகாஷ்

14-04-2019

Stalin witdrawing Vinayaka caturti greetings

[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[4] speech that attacks, threatens, or insults a person or group on the basis of national origin, ethnicity, color, religion, gender, gender identity, sexual orientation, or disability

[5] https://www.youtube.com/watch?v=Declz2hIXIA

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

ஏப்ரல் 16, 2019

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

Stalin on marriage mantras-3 Kasturi

விவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:

சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது?’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].

Meaning of Vivaha mantras

ரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன?: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].

எண் சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் வயது ரிக் வேத மந்திரத்தின் பொருள் Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D
1 குழந்தை 0 முதல் 4 வரை சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

 

In charge of Pubarche, appearance of pubic hair
2 பேதை.

 

5      முதல் 8 வயது
3 பெதும்பை 9 முதல் 10 வயது வரை விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.

 

In charge of Thelarche, appearance  breasts.
4 மங்கை.

 

11 முதல் 14 வயது வரை
5 மடந்தை 15 முதல் 18 வயது வரை அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.

 

In charge of Menarche, 1st periods
6 அரிவை 19 முதல் 24 வயது வரை

Stalin on marriage mantras-2

இதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.

Stalin 60th marriage
ஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு..,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.

Stalin 60th marriage-2

இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறுவாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறுஎன்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”

Anti-Hindu, Stalin acts in a different way-3

ஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

வேதபிரகாஷ்

14-04-2019

Anti-Hindu, Stalin acts in a different way-2

[1] http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36758-2019-03-07-04-12-33

[2] HYMN LXXXV. Sūrya’s Bridal. Rig Veda, tr. by Ralph T.H. Griffith, [1896], at sacred-texts.com; http://www.sacred-texts.com/hin/rigveda/rv10085.htm

[3] Dr Veeraswamy Krishnaraj, M.D,Woman and Four Husbands, https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm

[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579