Archive for the ‘அஸ்வ பூஜை’ Category

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகம் நடத்தப் பட்டது – PTI-பாணியில் செய்தி வெளியீடு – விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை–சென்சார் செய்யப் பட்டது போலும்! (2)

மார்ச் 19, 2023

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகம் நடத்தப் பட்டது PTI-பாணியில் செய்தி வெளியீடு விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை சென்சார் செய்யப்பட்டது போலும்! (2)

ஹோமங்கள் நடந்தன, தானங்கள் கொடுக்கப் பட்டன: மகா சண்டிஹோம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நிறைவுற்று பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர், மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார்கள், புனிதநீர் கலசங்களை தலைகளில் தாங்கி, கோயிலை வலம் வந்து “கோயில் கருவூலத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு அபிசேக ஆராதனை செய்தனர்[1]. இந்த ஹோமத்தில் கலந்துகொண்ட உள்ளூர் பெண்களுக்கு, திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் உணவு பரிமாறி, புடவை, மாங்கல்ய பொருட்களை வழங்கினார்[2]. அதாவது முறைப்படி சுமங்கலிகளுக்கு தானம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர். வழங்கறிஞர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்பு கணவன் எந்த மந்திரங்களை பழித்துரைத்தானோ, அதே மந்திரங்கள் ஓதப் பட்டு சடங்குகள் நடந்தது-நடத்தப் பட்டது தான் ஸ்டாலின் விதியா, கடவுள் நிர்ணயித்ததா, காக்கா உட்கார பனம் பழம் விழுந்ததா என்பதையெல்லாம் கே. வீரமணி தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவர் ஆரம்பித்திருக்கும் திராவிட ஆராய்ச்சி மையமும் ஆராய்ச்சி செய்யலாம், மாநாடு-கருத்தரங்கம் நடத்தலாம்.

பீமரத சாந்தி என்றால் என்ன?: பீமரத சாந்தி, ஒருவருக்கு அதிபௌதீகம் (இயற்கை), அதிதைவீகம் (தெய்வங்கள்), அத்யாத்மீகம் (தன் செயல்கள்) ஆகியவைகளால் தனக்கு ஏற்படும் தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ளவும், 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் எனும் ருத்தரனை அமைதிப் படுத்தும் நோக்கில் பீமரத சாந்தி எனும் சடங்கு செய்யப்படுகிறது. “ஜனனாத்பரம் ப்ரதிவர்ஷே ஜன்ம மாஸே ஜன்மநக்ஷத்ரே ஆயுஷ்ய ஹுவனம் குர்யாத்” என்கிற வாக்கிற்கிணங்க, ஜன்ம நட்சத்திரம் வரும் ஒவ்வொரு வருஷமும் ஆயுள் விருத்திக்காகவும், மற்ற நற்பலன்களைப் பெறவும் ஆயுஷ்ஹோமம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவைகளை ஒவ்வொரு ஆண்டும் செய்ய இயலாவிடினும் மனிதன் தனக்கு “ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம்” என்னும் இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ கார்ய பலன் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் கண்டிப்பாக அவனது 59, 60, 61 மற்றும் 70 வது வயது துவக்கம், 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 வது ஆண்டு நிறைவு ஆகிய கால கட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு 60, 61 ஆம் ஆண்டு வரை ஆட்படுகிறான். அப்பொழுது ஈசனின் அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி உக்ர ரத சாந்தி என்கிற சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா எனப்படும்.

70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டுபீமரத சாந்திஎனும் சடங்கு செய்தல் வேண்டும்: 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டு ” பீமரத சாந்தி ” எனும் சடங்கு செய்தல் வேண்டும்.78 ஆம் ஆண்டின் துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு “விஜயரத சாந்தி” எனும் சடங்கு செய்ய வேண்டும். இதைச் செய்தாலே பூரண ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாத்திர கருத்து. அதன்பிறகு 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று “சகஸ்ர சந்திர தர்சன” சாந்தி செய்தல். அன்றே சிலர் சதாபிஷேகம் எனும் 108 ருத்ர காலபிஷேகம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது. எனினும் 100 வது ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் அன்று செய்யப்படும் சாந்தியே “சதாபிஷேக கனகாபிஷேகம்” என்று பெயர் பெற்ற சடங்காகும். இது “அஷ்டோத்ர சதருத்ர கலாபிஷேகம்” எனப்படும்.

01-03-2023- ஸ்டாலின் அரசியல் ரீதியில் பிறந்த நாள் விழா கொண்டாடியது: முன்னதாக அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கண்டார்[3]. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உள்ளிட்டோர் ஆங்காங்கு கேக் வெட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடினர்[4]. குறிப்பாக, இந்த பிறந்த நாள் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையில், மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலின் தனது கணவருக்கு 70 வயது பூர்த்தியடைந்த நிலையில், அவருக்காக யாகம் செய்து வழிபாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நாத்திகஆத்திக நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் சடங்குகள் ஏன்?:

  1. பீமரத சாந்தி என்றால் என்ன, அதன் அர்த்தம் என்ன, அது பெரியாரிஸ, அண்ணாயிஸ, திராவிட, திராவிடத்துவ மாடல்களில் வருமா?
  • 08-03-2023 அன்று திருக்கடையூரில் ஸ்டாலினுக்கு பீமரத சந்தி நடக்க, 06-03-2023 அன்று நாகர்கோவிலில் சனாதனத்தை எதிர்த்து ஸ்டாலினே பேசுகிறார்!
  • ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம் எனும் பாவ கார்ய தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ள நடத்தப் படும் யாகம் பலன் தருமா?
  • 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்ற ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்த, பீமரத சாந்தி  சடங்கு நடத்தப் படுகிறது!
  • சிவபெருமான் எமனிடமிருந்து மார்க்கண்டேயனை மீட்டு, அவனை சிரஞ்சீவியாக மாற்றினார் என்று புராணம் கூறுகிறது!
  • முன்னர் விவாக மந்திரங்களை தூஷித்துப் பேசியுள்ளார். செத்த பாடையை என்றும் மதித்ததில்லை. பிறகு அது பலன் கொடுக்குமோ?
  • விசுவாசத்துடன் பெண் / பதிவிரதை மாமனாருக்கு காசியில் பிண்டப் பிரதானம், பதிக்கு பீமரத சாந்தி என்றெல்லாம் செய்கிறார்!
  • வீட்டில் பூஜை அறையில் விக்கிரங்களை வைத்துக் கொண்டு, அதே செத்த பாடையில் சுலோகங்கள் சொல்லி பூஜைகளும் நடக்கின்றன!
  • இத்தகைய இந்துவிரோத-இந்து ஆதரவு, இந்துதுவேஷ-ஆஷா, பதி-சதி அல்லது சதி-பதி முரண்பாடுகளும் திராவிட மாடலா, ஸ்டாக்கில் வந்ததா?
  1. திக-திமுகவா, திமுக-அதிமுக இரட்டைக்குழலா, மனைவி-துணைவி சம்பிரதாயமா, பதி-சதி அல்லது சதி-பதி முரண்பாடா, போராட்டமா?
  1. இந்த திரைச்சீலை விலகட்டும், முகமூடி கிழியட்டும், போலித் தனங்கள் மறையட்டும், நாடக வேடங்கள் களையட்டும்!

© வேதபிரகாஷ்

09-03-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Durga Stalin Pooja: நீண்ட ஆயுள் வேண்டும்முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவருக்காக பீமரத சாந்தி யாகம்,By: எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை | Published at : 07 Mar 2023 03:42 PM (IST); Updated at : 07 Mar 2023 03:42 PM (IST);

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/durga-stalin-special-pooja-for-cm-mk-stalin-thirukadaiyur-amirthakadeswarar-temple-tnn-105329

[3] இடிவிபாரத், பீமரத சாந்தி யாகம்செய்த துர்கா ஸ்டாலின்!.. எதற்கு தெரியுமா?, Published on: Mar 7, 2023, 3:19 PM IST.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/worship-of-durga-stal-by-bhimaratha-shanti-yaga-at-thirukadaiyur-abirami-amman-temple-for-mk-stalin/tamil-nadu20230307151911597597558

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகத்தினை மனைவி குடும்பம் சகிதம் வந்திருந்து நடத்தினார் – PTI- பாணியில் செய்தி வெளியீடு – விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை–சென்சார் செய்யப் பட்டது போலும்! (1)

மார்ச் 19, 2023

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகத்தினை மனைவி குடும்பம் சகிதம் வந்திருந்து நடத்தினார் PTI-பாணியில் செய்தி வெளியீடு விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை சென்சார் செய்யப்பட்டது போலும்! (1)

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி செய்தி வெளியீடு: திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 08-03-2023 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது கணவர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை குடும்பம் சகிதம் வந்திருந்து நடத்தினார் என்ற செய்தி, “பிடிஐ” பாணியில் எல்லா நாளிதழ்களும், இணைத்தளங்களும் அப்படியே ஒரு எழுத்து, வார்த்தை, வரி மாறாமல், மாற்றாமல் சிரத்தையாக, விசுவாசத்துடன், பக்தியுடன் வெளியிட்டனர் என்பது அத்தகைய படிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு, அந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, ஜாக்கிரதையாக எடிடிங் செய்யப் பட்டு, கொடுத்த விவரத்தை மட்டும் தான் செய்தியாக போடப் படவேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானம் போடப் பட்டது என்று நன்றாகவே தெரிகிறது. கணவன்-மனைவி சகிதம் தான் பீமரத சாந்தி யாகத்தினை நடத்த வேண்டுமா, கணவன் இல்லாமல் மனைவி, அல்லது மனைவி இல்லாமல் கணவன்- பீமரத சாந்தி யாகத்தினை நடத்தலாமா, கூடாதா; சாத்திரம் என்ன சொல்கிறது என்ற விசயங்கள் எல்லாம் தெரியவில்லை. இதைக் கூட தமிழில் அல்லது செத்த பாடையில் நடத்தலாமா என்பதும் புரியவில்லை. சரி, இனி செய்தியைப் பார்ப்போம்.

பீமரத சாந்தி சடங்கு ஏன்?: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது[1]. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அந்த கோயிலில் தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம், ஆதலால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது[2]. அதாவது, சிவபெருமான் எமனிடமிருந்து மார்க்கண்டேயனை மீட்டு, அவனை சிரஞ்சீவியாக மாற்றினார். இதனால் இங்கு 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும்[3] என்ற  நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு. சமீபகாலத்தில், ஜாதி, மதம் கட்ந்து பலர், இக்கோவிலுக்கு வந்து அத்தகைய யாகங்களை செய்து வருகின்றனர். இதற்காக பல புரோகிதர்கள், பல்வேறு மொழி-மாநிலம்-ஜாதி-சமயம் என்று கிரியைகளை செய்ய நிறுவன ரீதியில் எயல்படுகின்றவர்களும் இருக்கிறார்கள். இதனால் இங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம்[4]. அதற்காக, தங்கும் இடம், ஹோட்டல்கள், மண்டபங்கள் என்று ஏராளமாக வளர்ந்து விட்டன. கடந்த 70 ஆண்டுகளில் தொடர்ந்து வருபவர்கள், இந்த ஊரே எவ்வாறு மாறி விட்டது என்பதனை தெரிந்து கொள்ளலாம்.

கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜைகள், ஹோமங்கள் நடத்திய துர்கா: இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு 08-03-2023 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார்[5]. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முன்னமே செய்யப் பட்டன. பின்னர் கோவில் சார்பில் தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சிவாச்சாரியார்கள் மாலை மரியாதை செய்து வரவேற்றனர்[6]. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜைகளை செய்தார்[7]. பின்னர் அவர் நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை துர்கா ஸ்டாலின் நடத்தினார்[8]. ஹோமம் நடைபெற்ற நூற்றுக்கால் மண்டப வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்[10]. சிறப்பு ஹோமம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டார்[11]. முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் வருகையை ஒட்டி திருக்கடையூர் கோவில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்[12].

ஸ்டாலினுக்கு மகா சண்டிஹோமம் ஆயுள் ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடத்தப் பட்டது: முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழ பெரும்பள்ளம் கிராமத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் வழிபாடு செய்தார்[13].  இங்கு மாசி மகத்தையொட்டி வரும் பெளர்ணமியான இன்று வேதவிற்பன்னர்களை கொண்டு அங்காளபரமேஸ்வரிக்கு சிறப்பு மகா சண்டிஹோமம் ஆயுள் ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலின் உட்பட அவரது உறவினர்களும் கலந்துகொண்டனர். பெரியாரிஸ இந்துவிரோத ஸ்டாலின் ஒப்புக் கொண்டாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது-தெரியவில்லை, இருப்பினும், இந்திரஜித்திற்காக, இரண்ய கசிபு, இரண்யாக்ஷன் போன்ற அசுரர்களுக்காக எப்படி அவர்களது மனைவியர் நம்பிக்கையுடன் யாகங்கள் செய்தனரோ, அதே பாணியில் துர்கா செய்து வருகிறார், பலன் பெற்று வருகிறார். இதனால், ஸ்டாலினும் அவற்றை தடுப்பதில்லை, மறுப்பதில்லை. கடவுளும் பாரபட்சம் இல்லாமல் அனுகிரகம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

நாத்திகனுக்கு வெற்றி கிடைத்த ரகசியம்: அஜாமிளனுக்கு கடைசி காலத்தில் “நாராயணா” என்று தன் மகனைக் கூப்பிட்டதால், கடவுளின் பெயரைச் சொல்கிறான் என்று, யமதூதர்கள், அவனை விட்டுச் சென்றனராம். இதைப்போல, புராணங்களிலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். துரியோதனன் முதலியோர், பாண்டவர்களுக்கு முன்னரே சொர்க்கத்தில் இருந்தனர். ஶ்ரீகிருஷ்ணரிடம் போருக்கு/ தேர்தலுக்கு உதவி கேட்டு சென்றபோது, துரியோதனன் தலைப் பக்கமும், அருஜுனன் கால் பக்கமும் உட்கார்ந்த நிலையினையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால், தருமர் கஷ்டப் பட்டு, மனைவி தம்பியர் இறக்க, தான் மட்டும் தனியாக சொர்க்கத்திற்கு வந்த போது, திகைக்கிறான். அதாவது, துரியோதனன் முதலியோர், ஶ்ரீகிருஷ்ணரை வெறுத்தாலம், சதாசர்வகாலம் அவரையே நினைத்து தூஷித்துக் கொண்டிருந்தனர். அதேபோல, நாத்திகர், “கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை,” எனு அடிக்கடி சொல்லும் போதெல்லாம், “கடவுள், கடவுள்” என்கிறான், நினைத்துக் கொள்கிறான். இங்கும், மனைவி, கணவனுக்காக தியானித்து, உச்சாடனம் செய்து, பூஜித்து, பாராயயணம் செய்து, வெற்றியைத் தேடித் தந்துள்ளாள்!

© வேதபிரகாஷ்

09-03-2023


[1] விகடன், திருக்கடையூர்: முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்திபீமரதசாந்தி செய்து துர்கா ஸ்டாலின் வழிபாடு!, Prasanna Venkatesh B, Published: 08-03-2023 at 7 PM; Updated: 08-03-2023 Yesterday at 7 PM.

[2] https://www.vikatan.com/spiritual/gods/durga-stalin-performs-special-homam-at-thirukkadaiyur-for-stalin

[3] தமிழ்.நியூஸ்.18, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா..! திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை..!, செய்தியாளர் : கிருஷ்ண குமார், NEWS18 TAMIL, First published: March 07, 2023, 19:00 IST, ; LAST UPDATED : MARCH 07, 2023, 19:00 IST.

[4] https://tamil.news18.com/news/mayiladuthurai/special-prayer-behalf-of-mk-stalin-by-his-wife-durga-stalin-in-mayiladuthurai-905537.html

[5] காமதேனு, முதல்வர் ஸ்டாலின் பெயரில் திருக்கடையூர் கோயிலில் துர்கா ஸ்டாலின் நடத்திய யாகம், Updated on : 7 Mar, 2023, 7:22 pm

[6] https://kamadenu.hindutamil.in/politics/special-worship-of-durga-stalin-at-thirukkadaiyur-amirthakadeswarar-temple-on-the-occasion-of-chief-minister-stalins-birthday

[7] தினத்தந்தி, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு, மார்ச் 8, 12:15 am (Updated: மார்ச் 8, 12:16 am)

[8] https://www.dailythanthi.com/News/State/worship-of-durga-sthal-in-thirukkadaiyur-amrithakateswarar-temple-914177

[9] தினமலர், முதல்வர் நீடூழி வாழ பீமரத சாந்தி யாகம்: துர்கா நடத்தினார், Updated : மார் 07, 2023  12:52 |  Added : மார் 07, 2023.

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3259865

[11] தமிழ்.சமயம்.காம், திருக்கடையூர் கோயிலில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடுமுதல்வர் ஸ்டாலின் பெயரில் பீமரத சாந்தி யாகம், Curated by Mohammed Ghowse | Samayam Tamil | Updated: 7 Mar 2023, 6:49 pm

[12] https://tamil.samayam.com/latest-news/mayiladuthurai/tamilnadu-cm-stalin-wife-durga-stalin-performed-the-bhimaratha-shanti-yagam-in-tirukkadaiyur-temple/articleshow/98480358.cms

[13] https://www.kumudam.com/news/tamilnadu/53752