Posts Tagged ‘பார்வதி’

சிவன் – பார்வதி கு.க., செய்தனரா? தி.மு.க., – எம்.பி., சர்ச்சை பேச்சு – உதாரணத்திற்கு இந்து மதம் தான் கிடைத்ததா?

ஜூலை 12, 2023

சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சுஉதாரணத்திற்கு இந்துமதம் தான் கிடைத்ததா?

தர்மபுரி தி.மு.., – எம்.பி., செந்தில்குமாரின் தொடர்ச்சியான இந்து தூஷண பேச்சுகள்: ‘வடமாநிலத்தில் விநாயகருக்கு பின், சிவன் – பார்வதி கு.க., செய்தார்களா?’ என, தர்மபுரி, தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், தனியார் ‘டிவி’க்கு அளித்த போட்டியில் நக்கலாக பேசியது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி கடந்தாண்டு 2022, ஜூலையில் துவங்கிய போது, ஹிந்து மத முறைப்படி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு, தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பூமி பூஜைக்கு வைத்த செங்கல்லையும் காலால் தள்ளினார். இதேபோன்று, நல்லம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியிலும், தி.மு.க.,வினரை கண்டித்தார். செக்யூலரிஸ ரீதியில் இந்துக்களை எதிர்ப்பது என்பது பெரியாரிஸ ஆத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்கு கைவந்த கலையாக மாறிவிட்டது. அண்ணாதுரை-கருணாநிதி இந்துதுவேச பாணி ஸ்டாலின் மூலமும் தொடர்கிறது. விவாக மந்திரங்களை கேவலமாக பேசியதை வீடியோ மூலம் அறிந்து கொள்ளலாம். பிறகு, தலைவன் எப்படியோ, தொண்டன் அப்படித்தானே இருப்பான்?

சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சு: இதனால் அவர் ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுவதாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது[1]. இந்நிலையில், அவர் பொது சிவில் சட்டம் குறித்து சமீபத்தில் தனியார் ‘டிவி’க்கு பேட்டியளித்தார்[2]. இதில், ‘வட மாநிலத்தில் சிவன் – பார்வதிக்கு, விநாயகருடன் முடிந்து விட்டது[3]. முருகர் என்பவர் இருப்பது தென்மாநிலத்துக்கு வந்தால் மட்டும் தான் தெரியும். அங்கு, சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என, குறிப்பிட்டது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது[4]. தேர்தல் நேரத்தின் போது மட்டும், தி.மு.க.,வினர் தாங்கள் ஹிந்துகளுக்கு எதிரி இல்லை என, இரட்டை வேடம் போடுவதாக, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[5]. செந்தில்குமாரிடம் கேட்டபோது, ”பொது சிவில் சட்டம் குறித்து, தனியார் டிவி.,யில் என்னிடம் கேள்வி கேட்ட போது, பொது சிவில் சட்டத்தில், பா.ஜ., முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும்[6]. வட மாநிலத்தில், சிவன் – பார்வதியின் மகன் விநாயகர் என்பதை மட்டும் உறுதி செய்து, தென்மாநிலத்தில் மட்டும் அவர்களின் மகனாக அறியப்பட்ட முருகனையே வழிபட முடியாத நிலையை ஏற்படுத்துவர் என்பதை சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறினேன்[7]. எந்த கடவுளையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை,” என்றார்[8].

தர்மபுரி மாவட்ட பா.ஜ., தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கூறியதாவது[9]: “தர்மபுரி தி.மு.., – எம்.பி., செந்தில்குமார், தேர்தல் நேரத்தின் போது, தான் ஹிந்து என்றும், வன்னியர் என்றும் மக்களிடம் ஓட்டு கேட்டு வெற்றி பெற்றார். அதன் பின், ஹிந்து மத வழிபாட்டுக்கு எதிராகவும், ஹிந்து கடவுளுக்கு எதிராகவும் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து, தன் அறியாமையால், சிவன்பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா என, ஹிந்து மக்கள் மனம் வேதனைப்படும் படி பேசியுள்ளார். இதேபோன்று, முஸ்லிம், கிறிஸ்தவ கடவுள்கள், குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா என, அவரால் பேச முடியுமா? தன்னை தேர்ந்தெடுத்த மாவட்ட மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல், மத்திய பா.., அரசு செய்யும் நலத்திட்டங்களுக்கு, தன் பெயரை விளம்பரப்படுத்தும் அவர், ஹிந்து கடவுள்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்கு மட்டுமின்றி, தி.மு.., அரசுக்கும், ஹிந்துக்கள் வரும் லோக்சபா தேர்தலில் தக்க பதிலடி தருவர்,” இவ்வாறு, அவர் கூறினார்[10].

தமிழகத்தில் பகுத்தறிவு போர்வையில் இந்து தூஷணம் வளர்த்த விதம்: 1940 களிலிருந்து, ஈவேரா பகுத்தறிவு போர்வையில் இந்துவிரோத கருத்துக்களை ஆபாசமாக பேசி, எழுதி வந்துள்ளது முறையாகக் கண்டிக்கப் படவில்லை. அத்தகைய தூஷணங்களை தமிழ்-தமிழ் என்ற பெயரில், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் மேடைகளில் தொடர்ந்தனர். அவர்கள் ஆட்சியிலும் பெரியாரின் வசைப்பாடல்கள் தொடர்ந்தன. திக-திமுக மேடை பேச்சாளர்கள் இத்தகைய தூஷணங்களைத் தொடர்ந்து செய்தனர். அண்ணாதுரை, கருணாநிதி முதலமைச்சர் ஆனதால், 1970களிலிருந்து அவை இன்னும் மோசமாகி வளர்ந்தன. இப்படி பேசுவதையே திராவிடத்துவவாதிகள் பிழைப்பாகக் கொண்டு வளர்ந்தனர், கஞ்சி குடித்து-கேக் தின்று வளர்க்கப் பட்டனர்.ஊடகங்கள் வளர்ந்து பரவிய நிலையில் 1980களில் அவர்கள் தங்களது பேச்சுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில், அத்தகைய ஆபாச, அறுவருப்பான, மோசமான, கேவலமான பேச்சுகளை பொது மக்கள் ஏற்கவில்லை, குறிப்பாக பெண்கள் எதிர்க்கவும் செய்தனர் என்பது தெரியவந்ததால், குறைத்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் ஒரளவுக்குக் கட்டுப் படுத்தப் பட்டாலும், திராவிடக்கழகப் பிரிவுகள் பூணூல் அறுப்புப் போர்வையில், வேறு விதமாக இந்துவிரோத தூஷணங்களை செய்தனர். பாப்பாத்தி-ஜெயலலிதாவை, ஆரிய அம்மையாரை எதிர்க்கிறேன் என்று கருணாநிதியே பலவிதங்களில் இந்து-துவேசத்தைக் கக்கியுள்ளது பதிவாகியுள்ளது.

2021ல் திமுக பதவிக்கு வந்த பிறகு: இப்பொழுது ஸ்டாலின் முதலமைச்சராகியப் பிறகு, மறுபடியும் எல்லா இந்துவிரோத கும்பல்களும், இந்துதுவேச கூட்டங்களும், இந்துவசைப்பாடும் துரோகிகளும் பலவித உருவங்களில், சித்தாந்தங்களுடன் செயல்பட்டு வருகிறார்கள். 1990களிலிருந்து ஊடகங்களில் அதிகமாகவே ஊடுருவியுள்ளார்கள். பிறகு, சினிமாக்களிலும் அவை – பாடல்கள், வசனங்கள், சித்தரிப்பு முதலியவை மூலம் – வெளிப்பட ஆரம்பித்தன. இந்நிலையில் செந்தில்குமார் அங்கு வடக்கில், சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என்றதில் என்ன வியப்பு? ஏ இந்துவே, இதை நீ இந்துவாக, ஹிந்துவாக, சைவனாக, அசைவனாக, வைஷ்ணவனாக, காலமுகனாக, எப்படி எதிர்ப்பாய்?

இந்தியாவில் கருத்து சுதந்திரம் இந்துக்களுக்கு மட்டும் வித்தியாசமாக கட்டுப்படுத்துவது ஏன்?: இப்பொழுது, யாராவது இந்துதூஷணமாக பேசிவிட்டால், முதலில் பொதுவாகக் கண்டுக் கொள்வதில்லை. பிறகு, எந்த இந்துவாவது, இதே போல மற்ற கடவுளரை வைத்து பேசுவாயா, விமர்சனம் செய்வாயா என்று சாதாரணமாகக் கேட்டப் போதும் கவலைப் படவில்லை. ஆனால், இந்துக் கடவுளுக்கு பதிலாக, மற்ற கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்ட பொழுது, அந்த மற்ற மதத்தினர் விழித்துக் கொண்டனர். இதனால் பயந்த இந்துவிரோதி பேச்சாளர்கள் மறுபடியும் தம்மை கட்டுப் ப்டுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். இன்றைக்கு ஊடகங்கள் வாயிலாக, உலக நடப்புகள், நிகழ்வுகள் எல்லாம் ஒரளவுக்கு தெரிய வருகிறது. அப்பொழுது, மற்ற நாடுகளை விட இந்தியா பல்மடங்கு சிறந்து விளங்குகிறது என்ற உண்மையும் விளங்குகிறது. பாலஸ்தீனம், சிரியா, லெபனான், ஆப்கானிஸ்தான், மற்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளுக்குச் சென்று வாழ்ந்தால், நிலைமை என்னாகும் என்பது புரிந்து விட்டது.

ஸ்டாலின் – சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்[11]: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-07-2023 அன்றுதான், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான உயர்அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில், சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்[12]. இந்த நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. இந்து கடவுகள் குறித்து தவறான விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் பேசி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில், தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.  இந்துமதம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.  இது சர்ச்சையான நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார். இவர் இந்து மதங்களையும், இந்து மத சடங்குகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், இவர்மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், மற்ற மதங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே, உடனே சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

செந்தில்குமாரும், கனல் கண்ணனும்: சமீபத்தில் நடிகர் கனல்கண்ணன், சமூக வலைதளங்களில் வெளியான ஒரு மதம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டதால், கைது செய்யப்பட்டார். இது சர்ச்சையானது. முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கைது செய்யப்படுவாரா ? மதம் குறித்து அவதூறு கருத்தை கூறிய செந்தில் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவார் என உறுதியாக நம்புகிறேன் என பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பொதுமக்களும், தமிழக முதல்வர் கூறுவது உண்மை என்றால், உடனே செந்தில்குமார் எம்.பி. கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

12-07-2023


[1] தினமலர், சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சு, Added : ஜூலை 11, 2023  23:47; https://www.dinamalar.com/news_detail.asp?id=3373130

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3373130

[3] மீடியான், வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்களா? தி.மு.க. எம்.பி. திமிர் பேச்சு!, Karthikeyan Mediyaan News, ஜூலை 12, 2023.

[4] https://mediyaan.com/dharmapuri-dmk-mp-senthilkumar-insult-hindu-gods-shiva-parvathi/

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணாங்களா? திமுக எம்.பி. சர்ச்சை பேச்சு!, Manikanda Prabu, First Published Jul 12, 2023, 10:14 AM IST;  Last Updated Jul 12, 2023, 10:17 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-mp-senthilkumar-controversy-speech-on-lord-shiva-and-parvathy-rxo2ih

[7] தமிழ்.வெப்துனியா, சிவன்பார்வதி பற்றி தர்மபுரி எம்பியின் சர்ச்சை கருத்து..!, Written By Mahendran, Last Updated : புதன், 12 ஜூலை 2023 (11:41 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/senthil-kumar-mp-says-about-sivan-and-parvathi-123071200034_1.html

[9] தினமலர், சிவன்பார்வதி கு.., செய்தார்களா? தி.மு.., – எம்.பி., பேச்சால் புது சர்ச்சை, மாற்றம் செய்த நாள்: ஜூலை 12,2023 07:13;

https://m.dinamalar.com/detail.php?id=3373766

[10] https://m.dinamalar.com/detail.php?id=3373766

[11] பத்திரிக்கை.காம், இந்து தெய்வங்கள் குறித்து திமுக எம்பியின் சர்ச்சை கருத்து..! நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு, JUL 12, 2023

[12] .https://patrikai.com/dmk-mps-controversial-comment-on-hindu-deities-will-the-tamilnadu-government-take-action/