Archive for the ‘ராமகோபாலன்’ Category

தமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது? (3)

ஜூன் 22, 2014

தமிழகத்தில்  தொடர்ந்து  இந்து  அமைப்புகளைச்  சேர்ந்தவர்கள்  படுகொலை  செய்யப்பட்டு  வருவது  எதைக் காட்டுகிறது? (3)

padi suresh kumar murdered

HM functionary Suresh kumar murdered on 18-06-2014

கொலை நடந்தது எப்பொழுது, எப்படி?: சென்னை, அம்பத்தூர் அடுத்த, மண்ணூர்பேட்டை, மலையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 48. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே,  காவல் உதவி மையம் பின்புறம் “ஐயப்பா டெலிகாம்”என்ற பெயரில், டெலிபோன் பூத் நடத்தி வந்தார்.  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் பொறுப்பிலும் இருந்தார். அவருக்கு புவனேஸ்வரி, 31  என்ற மனைவியும் கிருஷ்ணவேணி, 10, கிரண்மயி, 8. என, இரு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம், இரவு 10:30 மணிக்கு, கடையை மூடினார். அப்போது அவரது கடைக்கு, இரு சக்கரவாகனத்தில் வந்த மூவர், அவரை சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற நண்பர் ரவிக்கும் வெட்டு விழுந்தது.  வந்தவர்கள் டூவீலரில் தப்பினர்.  தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், உயிருக்கு போராடிய சுரேஷ்குமாரை,  அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு, 11:00 மணிக்கு இறந்தார்.  “புதன்கிழமை 18-06-2014 சுமார் 9.55 இரவு நேரத்தில் இணை கமிஷனர் அலுவலகம் (மேற்கு),  அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகில் நகலகம் / டெலிபோன் பூத் நடத்திவரும் சுரேஷ்குமார்,  கடையைப் பூட்டும் வேலையில் அரிவாள்களால் வெட்டப் பட்டார்” என்று “திஹிந்து” கூறுகின்றது[1].

HM murder wife and others cry

HM murder wife and others cry – courtesy NIE

கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவற்றின் பதிவுகள் பற்றி முரண்பட்ட கருத்துகள்:  காவல் உதவிமையம் எதிரே, போக்குவரத்து சிக்னல், கம்பத்தில் நான்கு திசைகளையும் கண்காணிக்கும் வகையில்,  கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவில் சம்பவம் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளது என்றும்,  பதிவாகவில்லை என்றும் குழப்பமான தகவலை போலீசார் தெரிவித்தனர்[2] என்று தினமலர் கூறுகிறது. போக்குவரத்து சிக்னல் மற்றும் அருகிலுள்ள பெட்ரோல் பங் இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட CCTV பதிவுகள் உபயோகமாக இல்லை என்கின்றனர். ஏனெனில்,  அவை இரவு நேரத்தில் பதிவு செய்யக்கூடிய அமைப்பு அக்கேமராக்களில் இல்லை என்கின்றனர்[3]. அதாவது பதிவுகள் இருக்கின்றன, ஆனால்,  தெளிவாக இல்லை என்றாகிறது. மேலும்,  போலீஸ் தரப்பில் வைக்கப் பட்டுள்ள கேமராக்கள் இரவில் பதிவு செய்யும் முறையில் இல்லை என்றால் வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், இரவில் சட்டமீறல்கள் இருக்காதா,  அல்லது இதிலும் வேறு விவகாரம் உள்ளதா?

HM murder protest on the road

HM murder protest on the road – photo courtesy NIE

பிப்ரவரி 2014ல் தீவிரவாத இயக்கத்தின் மிரட்டல் கடிதம், போலீஸாரிடம் புகார்: பிப்ரவரி 22, 2014 அன்றே சென்னை போலீஸ் கமிஷனரிடத்தில் சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதலால், புகார் கொடுத்தனர். அந்த மிரட்டல் கடிதம்,  தலைவர்களைக் கடத்திச் சென்று கொல்வோம் என்று அறிவித்திருந்தது[4].  அப்புகார் ஏற்றுக் கொண்ட போதிலும்,  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்து முன்னணி சார்பில் குற்றஞ்சாட்டப் படுகிறது[5]. இந்த சம்பவத்தில் கண்ணால் பார்த்த சாட்சிகளிடமிருந்து சில விவரங்கள் கிடைத்திருந்தாலும்,  போலீஸார் அவற்றை வெளியே சொல்ல மறுக்கின்றனர்[6].  ஊர்வலம் சென்ற போது வன்முறை செயல்களில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[7]. சுரேஷ்குமார் உடலை கொண்டு சென்றபோது,  பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால், மசூதிகள், தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.  இதுதவிர, இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஒரு ஆண்டில், இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு நேர்ந்த இந்த கொடுமை,  அவர்களுக்கு பாதுகாப்பில்லையோ என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது[8].  இக்கொலையை இந்து இயக்கங்கள் மட்டும் கண்டனம் செய்துள்ளன[9].ஒரு ஆண்டில் நான்கு பேர், வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவங்களால்,  இந்து அமைப்புகளின் பிரமுகர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது[10].

HM murder protest on the road during night time

HM murder protest on the road during night time – photo courtesy NIE

தொடர்ந்து இந்து இயக்கத்தினர் தாக்கப்படவது, கொலை செய்யப் படுவது:

  1. 26-06-2013 (சுரேஷ்குமார், மதுரை): மதுரைமாநகர், நேதாஜிசாலையில், கடந்தாண்டு 2013, ஜூன்மாதம், 26ம் தேதி, இந்து முன்னணி பிரமுகரான, பால் வியாபாரி சுரேஷ்குமார்,  நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், ஈடுபட்டவர்கள் குறித்து,  அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள், தகவல் அளித்தாலும்,  சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க முடியவில்லை[11].

  1. 01-07-2013 (வெள்ளையப்பன், வேலூர்): இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன், ஜூலை மாதம்,  முதல் தேதி, வேலூரில், இந்து முன்னணி பிரமுகரான, வெள்ளையப்பன் அதே முறையில்,  வெட்டிக் கொல்லப்பட்டார். இரண்டு சம்பவங்களும் ஒரே முறையில் அரங்கேற்றப் பட்டிருக்க,  போலீசார் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க, தனிப்படைகளைஅமைத்து இன்னும் தேடிக் கொண்டிருந்தனர்.

  1. 19-07-2013 (ஆடிட்டர் ரமேஷ், சேலம்): இதற்கிடையில், ஜூலை, 19ம் தேதி, இரவு சேலத்தில், பா.ஜ.,  மாநில செயலர், ஆடிட்டர் ரமேஷ், தன் அலுவலகத்தில் இருந்து இறங்கி வரும்போது,  மூவர் கும்பல் அவரை வெட்டிச் சாய்த்தது. இந்த சம்பவமும், முந்தைய சம்பவங்களை போல் இருக்க, போலீசார் உஷாராகினர்.

இதற்கிடையில், இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க,  சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைத்து முதல்வர் உத்தரவிட்டார். சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் முதல் கட்ட விசாரணையில், தீவிரவாதிகளான, போலீஸ்பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோரின் கைவரிசை என்பது தெரிய வந்தது.

HM murder protest NIE

HM murder protest NIE

போலீஸ் பக்ருதீனின் கூட்டாளிகளின் ‘ஹிட்லிஸ்ட்’டில் மேலும் பலர் இருப்பது: இவர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு பரிசையும் அறிவித்த நிலையில், சென்னையில், இந்து தலைவரை சாய்க்க குறி வைத்த,  ‘போலீஸ்’ பக்ருதீன் பிடிபட்டான். அவன் அளித்த தகவலின்பேரில், ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கியிருந்த,  பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை துப்பாக்கி முனையில் பிடித்தனர். அவர்கள் தற்போது,  வேலூர் சிறையில் உள்ளனர். போலீஸ் பக்ருதீனிடம் நடத்தப் பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள்,  ‘ஹிட்லிஸ்ட்’டில் மேலும் பலர் இருப்பதாக தெரிவித்திருந்தான்.  இதுவரை, போலீசிடம் சிக்காமல் இருக்கும்,  அபுபக்கர் சித்திக்கை, தற்போது, போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இடையில்,  சென்னை கவுகாத்தி ரயிலில் நடந்த குண்டுவெடிப்பிற்கும், சித்திக்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசுக்கு உள்ளது.

Hindu-Munnani- NIE photo

Hindu-Munnani- NIE photo

போடப் பட்ட போலீஸ் பாதுகாப்பு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது: முன்னதாக,  இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் கொல்லப் பட்டபோது,  மற்ற இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது. பின், படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில்தான், நேற்று முன் தினம்  18-06-2014 அன்று, இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரை,  மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது. இந்த சம்பவம், தமிழகத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டவர்கள் சிறையில் உள்ள நிலையில், இந்த சம்பவத்தை நிகழ்த்தியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.  போலீசிடம் சிக்காமல் இருக்கும்,  அபுபக்கர் சித்திக்கின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் போலீசார் மத்தியில் உள்ளது.  இந்நிலையில், கொலையாளிகளை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.  மாநில எல்லைப் பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப் பட்டு வருகின்றன.

Police at Mannurpet after murder - NIE photo

Police at Mannurpet after murder – NIE photo

சந்தேகம் கிளப்புகிறார் வானதி[12]: ‘ஆடிட்டர்’ ரமேஷ் உள்ளிட்டோரை கொலை செய்த கும்பல் தான்,  சுரேஷ் குமாரை கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக, வானதி சீனிவாசன் தெரிவித்தார்.  அம்பத்தூரில் படுகொலை செய்யப்பட்ட,  இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் குமாரின் பிரேத பரிசோதனை நடந்த கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு, நேற்று, பா.ஜ., மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன் வந்தார்.  அப்போது அவர் அளித்த பேட்டி: சுரேஷ் குமார் கொல்லப் பட்டவிதம், கடந்த ஆண்டு நடந்த ஆடிட்டர் ரமேஷ்,  வேலூர் வெள்ளையப்பன் உள்ளிட்டோரை கொலை செய்து இருப்பது போல் இருக்கிறது. பயங்கரவாத.  கும்பல் தான் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளனர் என, சந்தேகிக்கிறோம்.  இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் விரைந்து கைது செய்ய வேண்டும்.

Why this anti-Hindu attitude in TN

தமிழகத்தில் இந்து இயக்கத்தினர் கொலை: மதுரையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10  ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பா.ஜனதா மாவட்ட தலைவர் வக்கீல் ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டார்.  தொடர்ந்து சென்னை சேத்துப் பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது.  மேலும் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள இந்துமுன்னணி அலுவலகத்திலும் குண்டு வெடித்தது. இந்நிலையில் கடந்த 1–ந் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில தலைவர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப் பட்டார்.  மேலும் நாகர் கோவிலில் பா.ஜனதா முன்னாள் பொருளாளர் எம்.ஆர். காந்தியையும் கொல்ல முயற்சி நடந்தது.  பிறகு, பா.ஜனதா மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.  இந்த வழக்குகளில் இதுவரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்க வில்லை.  இந்த கொலைகளில் யார் ஈடுபட்டார்கள் என்று தெரியவில்லை.கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன.  அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன.  இது ஆபத்தான நிலைக்கு செல்லும் பாதையாகும்.

Muslims demonstrate against Modi Chennai

சந்தேகிக்கப் படும் மூன்று கும்பல் அல்லது நபர்கள்[13]: ஆனால் இந்த அனைத்து தலைவர்கள் கொலையிலும் 3 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. ஆனாலும் அவர்களை பிடிக்கவில்லை. மேலும் 3 பேரும் தீவிரவாத கும்பலின் பின்னணியில் இருந்து செயல் படுவதாக கூறப்படுகிறது.  இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் அவர்கள் மிகப் பெரிய அளவில் சதிதிட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது.  மேலும் அவர்கள் பல தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்தது.  எனவே இந்ததலைவர்கள் கொலையின் பின்னணியில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  மேலும் தற்போது கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேசுக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் லைன் மேட்டில் ஒருகட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார்.  மேலும் தற்போது அவர் வசித்து வந்த பகுதியில் இரவில் நடந்து வரும் கட்டிட பணியை எதிர்த்தார். எனவே இந்த பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா?  என்றும் விசாரணை நடந்து வருகிறது[14].

Murder of Hindu leaders - functionaries4

அரசியலைத்  தாண்டி  கொலைகளைச் செய்யத்தூண்டும்  காரணிகள் யாவை?: தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப் பட்டுவருவது, ஒரு குறிப்பிட்ட மாதிரி, உதாரணம்,  போக்கைக் காட்டுவதைப் போலிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை திக் விஜயசிங்,  சுசில் குமார் ஷிண்டே, ஷகில் அஹமது போன்றோர் வார்த்தைகளால் காவி தீவிரவாதம் என்றெல்லாம் பேசிவரும் வேலையில், தமிழகத்தில் கொலைகள் நடந்து வருவது அம்மாதிரியான முறையைக் காட்டுவதாக தோன்றுகிறது. இப்பொழுது யார் காரணம் என்று கவனிக்க வேண்டும்.  இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், “தமிழகத்தில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கில்லை”,  என்று கூறியுள்ள[15] சில நாட்களில் இக்கொலை நடந்துள்ளது. ஸ்டாலின் ராமகோபாலன் கூறியதைச் சுட்டிக்காட்டி, சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை என்று ஜெயலலிதாவை சாடியுள்ளார்[16].  இதனை ஒரு ஆங்கில ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது[17]. அரசியலாக இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம், ஜெயிக்கலாம், தோற்கலாம். வியாபரமாக இருந்தாலும், அவரவர் சாமர்த்தியற்த்திற்கு ஏற்றப்படி லாபம்-நஷ்டம் பெறலாம். ஆனால்,  இவற்றை விடுத்து வேறொரு முறையில் கணக்குப் பார்த்துக் கொள்கின்றனர், கொலை செய்கின்றனர் என்றால்,  பின்னணியை ஆராய வேண்டியுள்ளது. அதாவது, இவ்விவகாரங்கள் அரசியல்,  வியாபாரம் முதலிய காரணிகளையும் தாண்டி, வேறொதையோச் சுட்டிக் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

20-06-2014

[1] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hindu-munnani-functionary-hacked-to-death/article6128424.ece

[2]தினமலர், பாதுகாப்பில்லைஇந்துஅமைப்புபிரமுகர்களுக்கு…..சென்னையில்இந்துமுன்னணிபிரமுகர்கொலை, சென்னைபதிப்பு, முதல்பக்கம்.

[3] Sources in the investigation team also said that the CCTV footage obtained from a camera at a traffic signal and a fuel station near the crime spot was of no use as it was not equipped with night vision.

[4] The Hindu Munnani functionaries have criticised the police for not taking action on their complaint to the Chennai Police Commissioner on February 22, 2014, that there were imminent threats to their key leaders in Chennai, Tambaram, Kancheepuram and Tiruvallur. The complaint cited a threat letter which stated that certain extremist groups were planning to kidnap and murder nine leaders of the Hindu Munnani.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/no-clues-yet-on-identity-of-hindu-munnani-leaders-killers/article6134434.ece

[5] The complaint was acknowledged by the police through a CSR, but no further action was initiated, a leader charged.

[6] The investigators are relying heavily on the key eyewitness who reportedly tried to protect the victim. The eyewitness, whose identity the police preferred not to divulge, runs a shop in the vicinity. “He rushed to Kumar’s aid as the latter was being hacked with sickles by two youths. The man suffered cuts on his hand and stepped away from the spot after the incident,” said an investigating officer. The witness who is undergoing treatment at a hospital is yet to recover from shock to provide police with crucial evidence.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/no-clues-yet-on-identity-of-hindu-munnani-leaders-killers/article6134434.ece

[7] http://www.thehindu.com/news/cities/chennai/rampage-on-ph-road-29-held/article6130925.ece

[8]தினமலர், பாதுகாப்பில்லைஇந்துஅமைப்புபிரமுகர்களுக்கு…..சென்னையில்இந்துமுன்னணிபிரமுகர்கொலை, சென்னைபதிப்பு, முதல்பக்கம்.

[9] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hindu-munnani-leaders-murder-condemned/article6132331.ece

[10]தினமலர், , பதிவுசெய்தநாள் : ஜூன் 19,2014,23:40 IST

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1002585

[12]தினமலர், பாதுகாப்பில்லைஇந்துஅமைப்புபிரமுகர்களுக்கு…..சென்னையில்இந்துமுன்னணிபிரமுகர்கொலை, சென்னைபதிப்பு, முதல்பக்கம்.

[13] http://www.maalaimalar.com/2013/07/20104330/Ramesh-Auditor-murder-involved.html

[14]மாலைமலர், ஆடிட்டர்ரமேஷ்கொலையில்தீவிரவாதிகளுக்குதொடர்பு?:போலீசார்விசாரணை, மாற்றம்செய்தநாள் : சனிக்கிழமை, ஜூலை 20, 10:45 AM IST; பதிவுசெய்தநாள் : சனிக்கிழமை, ஜூலை 20, 10:43 AM IST

[15] http://m.vikatan.com/tiny/index.php?module=news&aid=14226

[16]இன்றைக்கு, தமிழகம்எந்தநிலையில்இருக்கிறதுஎன்பதை, இந்துமுன்னணிஅமைப்பாளர்ராமகோபாலன்வெளியிட்டஒருசெய்தியில்காணலாம். தமிழகத்தில்சட்டம்இருக்கிறது… ஆனால், ஒழுங்குஇல்லைஎனக்கூறியுள்ளார். அந்தஅளவுக்குதான், தமிழகத்தில்ஆட்சிநிர்வாகம்உள்ளது.  http://www.dinamalar.com/news_detail.asp?id=1001753

[17] The murder of Suresh Kumar comes days after Hindu Munnani founder leader Ramagopalan’s lament that “there is law in Tamil Nadu but there is no order.” DMK leader M K Stalin had quoted the Munnani leader flaying the law and order situation in Tamil Nadu. BJP Tamil Nadu unit president and Union Minister Pon Radhakrishnan condemned the murder of Kumar and urged the state government to bring to book the culprits.

http://www.outlookindia.com/news/article/Protests-Across-TN-Condemning-Killing-of-Hindu-Outfit-Leader/845488