Archive for the ‘நிரியாணம்’ Category

ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]

செப்ரெம்பர் 7, 2018

ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]

Imitating Krishna-child by Buddha and Mahavira

நிர்வாணமும் நாத்திக மதங்களும், இந்துவிரோத நாத்திகமும்: ஜைனமும்-பௌத்தமும் தம்மை நாத்திக மதங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஜைனம் நிர்வாணத்தைப் பின்பற்றியது. இன்றும் திகம்பர சைன சந்நியசிகள் நிர்வாணமாகவே உலா வருகிறார்கள். ஆயிரம்-லட்சக்கணக்கான மக்கள் முன்பாக வந்து, அமர்ந்து, சொற்பொழிவாற்றுகின்றனர். பகுத்தறிவுவாதிகள், இந்துவிரோதிகள் இதனையும் எடுத்துக் காட்டி விம்ர்சனம் செய்து வருகின்றனர். புத்தர் “நிர்வாணம்” அடைந்தார் என்கின்றனர், ஆனால், அப்படி என்ன “நிர்வாணத்தை”  அடைந்தார் என்பதை சொல்வதில்லை. எல்லாவற்றையும் துறந்தார் என்றால், ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தார், நன்றாக சாப்பிட்டார், பன்றுகறி சாப்பிட்டு 81 வயதில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் என்று பௌத்தர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே, “நிர்வாணம்” என்பது இவ்விரு மதங்களில் இவ்வாறாக உள்ளது. வளைகுடா நாடுகளில் ஜைன நிர்வாணம், கிரேக்க மத நமொஇக்கையாளர்களிடம் இருந்தது. துலுக்க மதத்தில் கூட இருந்ததை, “ஹஜ்” உதாரணத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

Imitating Krishna by Buddha and Mahavira

நிர்வாணமும், நிரியாணமும்: உண்மையில் “நிரியாணம்” என்றால் முடிவு, இறப்பு என்று பொருள். “நிரியாணம் அடைந்தார்” என்றால், இறந்தார் என்று பொருள். ஆனால், அதை சிறப்பிக்க, “நிர்வாணம்” அடைந்தார் என்று சொல்கின்றனர். ஆனால், திராவிட நாத்திகத்தில் அவ்வாறில்லை. ஈவேரா “நிர்வாண கிளப்பில்” உறுப்பினர் ஆனால், நிர்வாண போட்டோ எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், அத்தகைய போட்டோவை வெளியிட தைரியமில்லை. அத்தகைய நிர்வாணத்தைப் பின்பற்ற அடிப்பொடிகளுக்கும், தடிகளுக்கும், பிஞ்சுசுகளுக்கும், குஞ்சுகளுக்கும், வெங்காயங்களுக்கும் வீரமில்லை. நாத்திக-பெரியரிஸ பெண்கள் தாலியறுக்கவும், தீச்சட்டி தூகுவதற்கும் “போஸ்” கொடுத்தார்கள். அதேபோல, தைரியமாக, இனமான திராவிடப் பெரியரைப் பின்பற்றி, நிர்வாணபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, புரட்சி செய்யவில்லை. நிரியாணம் அடைந்த திராவிட வீரர்கள், தலைவர்கள் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், ஐந்து வயது குழந்தையின் அம்மணம் இன்றும் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.

Imitating Krishna-Jeyamohan way of responding

சித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் பிரச்சினைகள்: “அதிகமாகப் படித்த” அம்பேத்கர் போன்றோரும் அரைகுறையாக படித்து, கிருஷ்ணர் நிர்வாண கதையைக் கொச்சைப் படுத்தினார். ஏனெனில், நிர்வாணம் எனும்போது, அவருக்கு அத்தகைய சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ராமர்-கிருஷ்ணர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது, அவரது வக்கிரத்தைக் காட்டுகிறது. அதை வைத்தும், இந்து விரோதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்[1]. ஒரு ரசிகர் கேட்டதால், “கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா?”, ஜெயமோகன் போன்றோர் அதிகமாக விவரித்தாலும், நேரிடையான பதிலை மறைத்து, நடுநிலைக்காரர் போன்று காட்டிக் கொள்வர்[2]. அத்தன்மையினை இவ்விசயத்திலும் காணலாம்[3]. இவர்களிடம் பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கு சரித்திரம், காலம், முதலியவை தெரியாது, தேவையில்லை என்றும் வாதிடுவார்கள். அதனால், குறிப்பாக விசயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துக் கொண்டிருப்பர்.

Viduthalais blashphemous article against Krishna -13-08-2017

முடிவுரை: ஶ்ரீகிருஷ்ண எதிர்ப்பு பலகாலங்களில் எழுந்துள்ளன. சிசுபாலன் செய்த அவதூறை இங்கு விவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரகன் / பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கிருஷ்ணர் போலவே வேடமிட்டு எதிர்த்து வந்தான் என்று சில புராணங்களில் காணப்படுகின்றன. அவன் நான்தான் உண்மையான கிருஷ்ணர் என்று சொல்லிக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணருக்கு செய்தி அனுப்பினானாம். போரில், ஶ்ரீகிருஷ்ணர், இந்த போலி பௌண்ட்ரக வாசுதேவனைக் கொன்றார் என்றுள்ளது.

  1. ஶ்ரீகிருஷ்ணர் அந்த அளவுக்கு பிரபலமான அரசராக இருந்தார் என்று தெரிகிறது. ஜைனர்-பௌத்தர்கள் தங்களது பிரச்சாரங்களில், இதனால் ஶ்ரீகிருஷ்ணரை எதிர்க்க வேண்டியதாயிற்று.
  2. ஶ்ரீகிருஷ்ணர், இந்துக்களை போராட சொல்கிறார். தனது வாழ்நாட்களிலும், அயோக்கியர்களை, சமூகவிரோதிகளை எதிர்த்துக் கொல்கிறார். ஆனால், ஶ்ரீகிருஷ்ணர், ஒரு மாடு மேய்க்கும், குலத்தைச் சேர்ந்தவர், கருப்பு-நீலநிறத்தவர், பிராமணர் அல்லாதவர்.
  3. அதனால் தான், துலுக்கரும் அவரது இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, கோவில்களை இடித்தனர். ஆனால், பக்தி வளர்த்தவர்கள், ராதாராணி, ராதா சக்தி, குழந்தை தெய்வம் போன்ற தத்துவங்களை உண்டாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.
  4. ஐரோப்பிய அறிஞர்களோ, ஶ்ரீகிருஷ்ணர் விவரங்கள், சரித்திர ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்டு திகைத்து விட்டனர்.
  5. இதனால், பலபுராணங்களை வைத்துக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணர் ஒரு கட்டுக்கதை, உருவாக்கப் பட்ட பாத்திரம், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர்.
  6. சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்.
  7. “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று ஐரோப்பியரே எழுதினர்.
  8. புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர்.
  9. அதாவது, ஜைன-பௌத்த இடைசெருகல்கள் இதன் மூலமாகவும் அறியப்படுகிறது. ஏனெனில், இதையெல்லாம் படித்து, எதிர்த்தது ஶ்ரீகிருஷ்ணரைத் தான்!
  10. கிருத்துவ மிஷினர்களும் எதிர்த்தது தெரிந்த விசயம், பலமுறை எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, நாத்திகர், இந்துவிரோத நாத்திகர், துலுக்கர், கிருத்துவர், பெரியாரிஸ அறிவுஜீவிகள், செக்யூலரிஸ இந்துத்துவவாதிகள், முதலியோரும் எதிர்க்கின்றனர். இதிலிருந்து, அவர்களது முகமூடி கிழிந்துள்ளது. இந்துக்கள் அவர்களை தாராளமாக அடையாளம்ம் கண்டுகொள்ளலாம்.

வேதபிரகாஷ்

08-09-2018

Radha krishna Malwa c.1620

[1] அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4 https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/

[2] ஜெயமோகன், கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா?, ஆகஸ்ட்.29, 2016.

[3] https://www.jeyamohan.in/90241 – .W48_MiQzZdg

ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]

செப்ரெம்பர் 7, 2018

ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]

Bhagawatam, Devi Bhagawatam

ஶ்ரீமத் பாகவதத்தில் இருப்பதும், இல்லாததும்: ஶ்ரீமத் பாகவதத்தில் “வஸ்த்ர ஹரன” பற்றிய விவரங்களை ஆய்வோம்.

  1. திருமணம் ஆகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் வேண்டி, ஹேமந்த ருதுவின் முதல் மாதத்தில் [கார்த்திகை], காத்தியாயனி தேவியை வணங்கி விரதம் மேற்கொள்வர் [ஶ்ரீமத் பாகவதம்.ஸ்கந்தம்.10, அத்தியாயம்.22-1].
  2. யமுனைநதிக் கரைக்கு, அதிகாலையில் சென்று, மண்ணால் தேவியின் உருவத்தை செய்து, சகல பூஜைகளையும் செய்து வணங்குவர் [2-4].
  3. ஒரு காலத்தில், கன்னிகள் நிர்வாணமாக வழிபாடு செய்தனர் போலும். அதனால், அத்தகைய முறையும் இருந்தது போலும். கிருஷ்ணர் அதனைத் தடுக்க முயற்சிக்கிறார். தொடர்ந்து வரும் வழிபாட்டு முறையை தடுப்பது பிரச்சினையை உண்டாக்கும், அதனால், கிருஷ்ணர் தந்திரமாக அதனைத் தடுக்க திட்டமிட்டார். ஆகவே, அவர்கள் சிரத்தையாக நிர்வாணமாக காத்தியாயனி பூஜை செய்து கொண்டிருந்த போது, ஆடைகளை கொண்டுவந்து, மரத்தின் மீது உட்கார்ந்து விட்டார் [8-9].
  4. நீராடி, கரைக்கு உடையணிய பார்த்த போது, உடைகள் இல்லை என்பதனை அறிந்தனர். அப்பொழுது தான், கிருஷ்ணர் எடுத்துச் சென்று விட்டார் என்று தெரிந்தது [14]. அப்பொழுது, கிருஷ்ணர் அவர்களுக்கு, அவரவர் உடைகளைக் கொடுத்து [21], இத்தகைய முறைகள் விடுத்து, சிரத்தையாக காத்தியாயனி விரதத்தைப் பின்பற்றுமாறு அறிவுருத்தினார் [27].
  5. தன்னை அர்ச்சனை செய்ததால் அவர்களது சங்கல்பத்தை அறிந்து கொண்டதாக கூறினார் [24-25].

மேலும் குறிப்பிட்ட சுலோகங்கள் எல்லா சுவடிகளிலும் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. மேலும், ஹோனியைப் பற்றிய விவரங்கள் சக்தி மற்றும் தந்த்ர வழிபாட்டைக் காட்டுகிறது. இது ஜைன-பௌத்த இடைச்செருகல்களைக் காட்டுகிறது.

Mystery in the disappearance of Chaitanya

ஶ்ரீசைத்தன்யரின் முடிவு பற்றிய மர்மம்: ஶ்ரீசைதன்யர் [1486-1534] இடைகாலத்தில் இத்தத்துவத்தை தனது கவித்துவத்தில் வெளிப்படுத்தினார். பக்தி மார்க்கத்தில் நுழைத்ததால், பாடல்கல் மூலம் துரிதமாக மக்களிடம் பரவியது. மேலும், கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து பாடுவது, ஆடுவது, தெரு-தெருக்களாக, ஊர்-ஊர்களாக செல்வது, மக்களின் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, வளர்த்தது. துலுக்கர் தமது அடவடித் தனங்களை எல்லோர் முன்னால், அதாவது கூட்டத்தின் முன்னால் செய்ய முடியாமல் போயிற்று. இதனால், ஶ்ரீசைத்தன்யரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த துலுக்க அரசாங்க திட்டமிட்டது. அவரை மடக்க, துலுக்கர் பக்தர்கள் போலவே, ஆடிப்பாடி அவரைச் சுற்றி வளைத்தனர் – அவரது முடிவு மர்மமாகத் தான் இருக்கிறது. ஶ்ரீ கிருஷ்ணருடன் ஐக்கியம் ஆனாரா, ஜீவசமாதியானரா, பக்தி-கடல் சமாதியில் மூழ்கினாரா…தெரியவில்லை!

Thirtankara painted as Krishna

சக்தி, கிருஷ்ணர், தீர்த்தங்கரர், புத்தர்யார் பெரியவர், கடவுள்: ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் என்ற இரண்டு நூல்களில், எது உண்மை-பொய், தொன்மையானது-தொன்மையற்றது, சாக்தமா-வைணவமா என்ற சண்டை-பிரச்சினை பக்தகளிடம் உள்ளது. இது சாக்த-விஷ்ணு பக்தர்களின் சண்டையைக் காட்டுகிறது. மேலும், பாகவத புராணத்தில் ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் மற்றும் தாக்கமும் இருக்கின்றன. ஐந்தாவது ஸ்கந்தத்தில் தீர்த்தங்கர்கள் பற்றிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன[2]. அதே போல புத்தரைப் புகழ்ந்ந்து போற்றுவதுடன், விஷ்ணுவின் அவதாரமாகவும் குறிப்பிடுகின்றது. இந்து புராணங்களில் இத்தகைய விவரங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் தனியாக இருக்கும் பட்சத்தில், ஜைன புராணம், பௌத்த புராணம் எனு கூட தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்து புராணங்களில் காணப்படுவதால், இடைச்செருகல் என்று தாராளமாகவே புலப்படுகிறது.

Imitating Krishna, Buddha and Mahavira

புராணங்களில் எப்படி அதிகமான ஆபாசங்கள் புகுந்தன?[3]: இந்துப்புராணங்கள் திருத்தப்பட்ட நிலையில், கிருஷ்ணர் மட்டுமல்ல, மற்ற இந்துக்கடவுளர்களும் தூஷிக்கப்பட்டனர். அதாவது, சிவா, விஷ்ணு மற்ற புராணங்களிலும் அக்காலத்தில் இடைசெருகல்கள் செய்யப்பட்டன. 18 புராணங்கள் தவிர மற்ற புராணங்கள் உருவாக்கப்பட்டது, ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. ஷட்மத ஒற்றுமை பேணப்பட்டு, ஒழுங்குப்படுத்தும் நிலை தாண்டிய பிறகு, ஜைனம்-பௌத்தம் தேய்ந்து, முகமதியம் வந்த பிறகு இத்தகைய பிறழ்சிகள் தோன்றின என்பது கவனிக்கத் தக்கது. முகமதியம் வளர்க்கப்பட்ட போது, இடைக்காலத்தில் தான் மறுபடியும் பௌத்த-ஜைனர்களால் புது திரிபுகள், பிறழ்சிகள், ஓவ்வாமைகள் உருவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டன[4]. அக்பர் அவர்களுடன் உரையாடல் நடத்தினார் என்பதும் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. அதனால் தான், புராணங்களைப் படிக்கும் போது, சம்பந்தமே இல்லாத அத்தகைய கொக்கோக, ஆபசமான விவரங்கள் அங்கங்கு காணப்படுகின்றன. அதை வைத்துக் கொண்டுதான், இந்து-எதிரிகள், குறிப்பாக அடிப்படைவாத கிருத்துவர்கள், முஸ்லிம்கள், போலி நாத்திகர்கள், இக்கால செக்யூலரிஸ்டுகள் முதலியோர் அத்தகைய இடைசெருகல் விவரங்களை வைத்துக் கொண்டு கேலி செய்து வருகின்றனர். ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் செய்ததை, முகமதியர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் இடைச்செருகல்கள் செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், சரித்திரத்தன்மை மற்றும் காலத்தொன்மையினை குறைத்தல் என்ற திட்டத்தில் செயல்பட்டதால், அவர்களும் தங்களுடைய பாணியில் செயல்பட்டனர்.

Atheists exploiting Krishna etc

எதிர்மறைத்துவம், வில்லன்வில்லித்துவம், பொது மக்களால் விரும்பப் படுவதில்லை: இன்று கூட நாத்திகர், இந்துவிரோதிகள் தாம், இந்துகடவுளர்கள் போன்று சித்தரிக்கப் பட்டு “கட்-அவுட் / பேனர்” வைத்துக் கொள்கின்றனர். இந்துக்கள் யாரும் தமது நம்பிக்கை-எதிர்ப்பாளர்களுடன் சம்பந்தப் படுத்தி பார்க்கவோ, விரும்புவதோ இல்லை. இந்து நம்பிக்கையாளர்கள் யாரும், தாங்கள் ராவணன், கும்பகர்ணன், சகுனி, துரியோதனன், துச்சாதனன், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, மனோதத்துவ ரீதியில் கவனித்தால் கூட அத்தகைய எதிர்மறை குணாதிசய பாத்திரங்களை பொது மக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. அதே போல பெண்களும் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, போன்ற பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, சமூகத்தில் “நல்லது-கெட்டது” எது என்பது தெரிந்தே இருக்கிறது. இல்லையென்றால், சமூகத்தில் எந்த ஒழுக்கமோ, கட்டுப்பாடோ இருக்காது. இன்றைக்கு சட்டங்கள், நெறிமுறை அமூல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் அவற்றை நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.

Kopika vastra harana - Raja Ravi Varma- wrong interpretation-3

ஜைன-பௌத்த அரசாதிக்கம் இருந்த காலத்தில், இடைச்செருகல்கள், போலி புராணங்கள் உருவாகின: ஆகவே, ஜைன-பௌத்தர் சாக்த வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு, சமரசம் செய்து கொண்டதால், இக்குழுக்கள் கிருஷ்ணரை எதிர்ப்பது சுலபமாகி விட்டது. அவர்கள் [ஜைன-பௌத்தர்கள்] ஆட்சியாளர்கள் ஆதிக்கத்தில் இருந்தபோது, பாடசாலைகளும் அவர்கள் கைகளில் இருந்ததால், ஓலைச்சுவடிகளில் மாற்றங்களை செய்தனர். ராமாயணத்தை மாற்றி புது ராமாயணங்கள் உருவாக்கப் பட்டன. ஜைன-பௌத்த புராணங்கள் உருவாகின. இதனால், சுலோகங்களின் எண்ணிக்கை அதிகமானதுடன், இத்தகைய குழப்பங்களும் ஏற்பட்டன. பாகவத புராணத்தின் காலம் 4-6ம் நூற்றாண்டுகள் என்று குறிக்கப் படுகின்றன. ஆகவே, ஜைன-பௌத்தர் ஒரு பக்கம், சாக்தர் இன்னொரு பக்கம், கிருஷ்ண வழிபாட்டை எதிர்த்துள்ளனர், பிரச்சாரம் செய்துள்ளனர் என்று தெருகிறது. இப்பொழுது கூட, ஶ்ரீமத் பாகவதம், ஒரு போலிநூல் என்று வாதிடும் ஆட்களும் உள்ளனர். போலி நூல் என்றால், நாத்திக-இந்துவிரோதிகளுக்கு பிரச்சினையே இல்லாமல் போய்விடும். இருப்பினும், அத்தகையய அவதூறு வாதங்கள் தொடர்கின்றன.

© வேதபிரகாஷ்

08-09-2018

Viduthalais blashphemus article-13-08-2017

[1] ஶ்ரீதரர் போன்ற சமஸ்கிருத பண்டிதர்கள் அவ்வாறு எடுத்துக் காட்டுகின்றனர். மேலும் 19வது சுலோகத்திற்குப் பிறகும், 19-38 சுலோகங்கள் மற்ற ஓலைச்சுவடி கட்டுகளில் காணப்படவில்லை என்று எடுத்துக் காட்டுகின்றனர்.

  1. M. Sanyal, The Srimad Bhagavatam of Krishna-Dwaipayana Vyasa, Munshiram Manohrlal Publishers, New Delhi, Vol.II, Chapt.XXII, pp. 90-94

[2]  Ravi Gupta and Kenneth Valpey (2013), The Bhagavata Purana, Columbia University Press, , pp. 151-155.

[3] வேதபிரகாஷ், குடும்ப உறவுகள் ஆண்பெண் உறவு, பாசபந்தங்களை பேணுதல்அவற்றிற்கேற்றபடி நூல்கள் வெளிப்படுத்துகின்றனவா, இல்லையா?, [அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (14)].

[4] https://indianhistoriography.wordpress.com/2015/06/29/hindu-society-depicted-by-the-religious-books-and-hindus-cannot-contradict/

“கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு  , சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும் தூஷணங்கள் [1]

செப்ரெம்பர் 7, 2018

கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கிஎன்ற அளவுக்கு  , சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணைஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும் தூஷணங்கள் [1]

Kopika vastra harana - Raja Ravi Varma- wrong interpretation

கோபிகைகளின் உடைகளை அபகரித்த ஓவியத்தை வைத்துக் கொண்டு இந்துதூஷணம் செய்வது: ராஜா ரவி வர்மா [1848-1906] வரைந்த “கோபிகா வஸ்திர ஹரன” [கோபிகைகளின் உடைகளைக் கவர்ந்தது] ஓவியத்தை வைத்துக் கொண்டு, இந்து-விரோதிகள், நாத்திகர்கள் தூஷணத்தை செய்து வருகிறார்கள். “கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்கள்[1]. அத்தகைய ஓவியத்தை வரைவதற்கு ரவி வர்மா ஒன்றும் முட்டாள் அல்ல. கிருஷ்ணருக்கு அப்பொழுது வயது ஐந்து மற்றும் ஒன்பது என்பதால் அவ்வாறே வரைந்தார். அதாவது, “கோபிகா வஸ்த்ர ஹரனம்” ஐந்து வயதில் மற்றும் “ராஸலீலா” [கோபிகைகளுடன் கிருஷ்ணர் நதியில் நீராடியது] ஒன்பதாவது வயதில் நடந்தது என்பதை அறிந்தே, அதனால் அவர் அவ்வாறு சித்தரித்தார். ஆனால், இந்துவிரோதிகள், நாத்திகர்கள், வலதுசாரி-மார்சிஸ்ட் எழுத்தாளர்கள் முதலியோர், இதனை ஆபாசமாக விமர்சிப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Disparaging MEME on Krishna

துலுக்கநாச்சியும், இந்துநாச்சியும்செக்யூலரிஸத்திலும் வேகாத பருப்புகளும் ஒப்பீடுகளும்: கலையை கலையாகப் பார்த்து ரசித்து பாராட்ட வேண்டும் என்று விளக்கம் கொடுக்கும் சகிப்புத் தன்மை தொட்டாச் சிணுங்கிகள் தாம், இந்த குரூர விமர்சனம் செய்வது என்பதனை கவனிக்க வேண்டும். நாயக-நாயகி பாவம் என்ற ரீதியில், துலுக்க பாடகர்கள், “ராதா-கிருஷ்ண” பாவத்தை ரசித்து எழுதியுள்ளனர் என்றும் ஒரு பக்கம் எழுதுவார்கள், பாராட்டுவார்கள். ஆனால், அவர்கள் கடவுளை அவ்வாறு எந்த பெண்ணும் அணுக முடியாது. துலுக்கநாச்சியாரைப் போற்றுவார்கள், ஆனால், எந்த இந்து-நாச்சியும் அல்லாவையே கணவனாக அடைவேன் என்று சொன்னால், அவ்வளவு தான், நடப்பதே வேறு. அதே போலத்தான், கிருத்து மேரியுடன், நாயக-நாயகி பாவம் என்று எந்த பகுத்தறிவு கவியரசும் பாட்டெழுத / ஆராய்ச்சி செய்ய[2] முடியாது. “அல்லா / மொஹம்மது / கதீஜா / பாத்திமா / ஆயிஷா பிள்ளைத் தமிழ்” இப்பொழுது, எந்த வைரமுத்துக் கூட எழுத முடியாது[3]. இருப்பினும் சகிப்புத் தன்மை, எண்ணவுரிமை, மறுப்புத் தெரிவிக்கும் உரிமை என்றெல்லாம் விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கும்.

Krishna depicted semi nude by Akram Hussain

இந்துத்துவவாதி என்று சொல்லிக் கொண்டு, செக்யூலரிஸ போதையில் ஆதரிக்கும் கூட்டம் (ஏப்ரல் 2015): கடந்த ஆண்டுகளில், ஒரு பெரிய இந்துத்துவவாதியே, இதெல்லாம் சரிதான், ரசிக்கனும் என்று சொன்னது ஞாபகத்தில் உள்ளதா என்று தெரியவில்லை, தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், சமூக மற்றும் தனிப்பட்ட முறைகளிலும் அத்தகைய புரிதல்கள், சமரசங்கள், பரஸ்பர லாப-பங்கீடுகளை வைத்து, இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். அந்நிலையில், இந்து-விரோதிகளை என்னென்பது, ஏனென்பது. இன்றும் அவரை ஆதரிக்க கூட்டம் உள்ளது. அக்ரம் ஹுஸைன் [Akram Hussain, a Guwahati-based artist] என்பவன், ஶ்ரீகிருஷ்ணர் பாரில் [மது குடிக்கும் இடத்தில்], ஜட்டி-பாடி அணிந்த பெண்களுடன் இருப்பது போன்ற சித்திரம், கௌஹாத்தி அருங்காட்சியகத்தில் இருப்பது எடுத்துக் காட்டப்பட்டது[4]. அப்பொழுது அரவிந்தன் நீலகண்டன் போன்றோர், ஆக்ரம் ஹுஸைனை ஆதரித்தனர். அங்கோ, இந்து அமைப்பினர், போலீஸாரிடம் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்தனர்[5]. வழக்கம் போல, பிறகு எல்லோரும் மறந்து விட்டனர். ஆனால், இந்துத்துவவாதிகள், ஏன் இதனை ஆதைக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும். ஒருநிலையை அடைந்து விட்டோம், அதனால், இனி “செக்யூலரிஸப் பழம்” என்று காட்டிக் கொண்டால் தான், அந்நிலை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்று சரசம் செய்து கொள்கிறார்கள் என்று தெரிகிறது. சாகித்ய அகடெமி மற்ற பரிசுகள் வேண்டும் என்றால், “மோடி வாழ்க,” கிடைக்காது என்றால், “பாசிச மோடி ஒழிக” என்பதும் கடைபிடிக்கப் படுகிறது[6].

Kopika vastra harana - Raja Ravi Varma- wrong interpretation-2

குழந்தைத் தன்மையினை எப்படி அறிவது, உணர்வது, புரிவது: குழந்தை பெற்று அதன் குறும்புகளை அனுபவிக்காதாவன், ஶ்ரீகிருஷ்ணரின் லீலைகளை அறிந்து-புரிந்து-ரசித்து-அனுபவிக்க முடியாது. ஆக அவனுக்கும் அத்தகைய உணர்வுகளை உண்டாக்கத்தான் “குழந்தை தெய்வம்” கிருஷ்ணர் உண்டாக்கப் பட்டார். அதாவது, குழந்தை இல்லாதவகள் கூட, ஒரு குழந்தை இருந்திருந்தால் முதல் னாதம் இருந்து, ஒவ்வொரு மாதமும் வளர்ந்து, ஒன்று-இரண்டு-மூன்று வயதுகளில் என்னவெல்லாம், மழலையாக பேசியிருக்கும், குறும்புகளை செய்திருக்கும் என்பதை தத்ரூபமாக கிருஷ்ணர் மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. உலகத்தில் இத்தகைய சித்தரிப்பு, ஓவியங்கள், இலக்கியம் எங்கும் இருக்க முடியாது. இடைக்காலத்தில் துலுக்கர்களின் குரூரங்கள் முதலியவற்றால், அது தீவிரமாக்கப் பட்டது. குறிப்பாக அக்கலகட்டத்தில், வளைகுடா நாடுகளில் ஜைனர் மற்றும் பௌத்தர்கள் அதிகம் பாதிக்கப் பட்டதால், அவர்கள் பாரதத்தில் வந்து அடைக்கலமான போது, அவர்களுக்குள் சச்சரவு ஏற்பட்டது. 12ம் நூற்றாண்டில் இதைத்தான், கோரி-கஜினி மொஹம்மது கொள்ளைக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டனர். 16ம் நூற்றாண்டில் பாபர் பயன்படுத்திக் கொண்டான்.

Rasaleela,child 5-year playing with Gopikas-vedaprakash

பறிப்பு, கவர்தல் முதலியவற்றில் பலவகை உண்டு: “வஸ்த்ர ஹரன்” இதிகாஸ-புராணங்களில் பலவுள்ளன[7], பீஷ்மர் போன்றவர்களின் முன்னே, துச்சாதனன் திரௌபதியின் ஆடையைப் பறித்தான். கௌரவர்கள் விராடனின் மகள், உத்தரையைக் கூட விட்டு வைக்கவில்லை, அவளுடைய ஆடையையும் பரித்தனர். “ப்ராண ஹரன்,” அதாவது, உயிரை கவர்வது, மனம் அல்லது ஆன்மாவை கவர்வது, போன்றவையும் கிருஷ்ணரின் ராஸலீலைகளில் உண்டு. “சித்த ஹரன்,” மனத்தைத் திருடுவது – விரஜபூமியில் நடந்ததை, கோபியர் மட்டுமே காண-உணர முடியும், மற்றவரால் முடியாது. புல்லாங்குழல் இசையில் கோபியர் [கோகுலத்தில் வாழ்ந்த பெண்கள்] தமது கடமைகளை மறந்து யமுனைக்கு வந்தது “சித்த ஹரண்” ஆகும். துலுக்கரின் “ஸ்திரி ஹரன்” குரூரங்களை கட்டுப்படுத்தவே, புஸ்டி மார்க்கத்திலும், இந்த தத்துவம் அறிமுகப்படுத்தப் பட்டது.  இடைகாலத்தில் துலுக்கரின் அட்டகாசம் அதிகமாக இருந்தது, பெண்கள் மற்றும் குழந்தைகளை அபகரித்துச் செல்வது அதிகமாக இருந்தனர். ஒரு பக்கம் காமக்குரூர வெறியர்கள், இன்னொரு பக்கம் ஓரின புணர்ச்சி வக்கிர அரக்கர்கள். இந்நிலையில் தான், பெண் தெய்வம், குழந்தை தெய்வம், தாய்-சேய் தெய்வம் போன்றவற்றிற்கு புனிதம் ஏற்றி, மதிக்க, ஆராதிக்க மற்றும்ன் போற்ற இம்முறை கையாளப்பட்டது. பொதுவாக, மக்களிடையே படும் பஜனைகளில் கூட இவ்விசயங்கள் சேர்க்கப்பட்டன. தவறான அர்த்தம் / விரசம் இருந்திருந்தால், அவ்வாறு செய்யமுடியாது. பெரியவர், மடாதிபதிகள் அப்பொழுதே எதிர்த்திருப்பர். ஆனால், அந்த பஜனைகள் இன்றும் பாடப்படுகின்றன. மக்கள் பக்தியுடன் சிரத்தையுடன் கேட்டு, ரசித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

08-09-2018

Akram Hussain depiction of Krishna - guwahati museum

[1] செப்டம்பர் 2015லும், சமூக ஊடகங்களில் அத்தகைய, சித்தரிப்புகள், தூஷண எழுத்துகள் காணப்படுகின்றன.

[2] பிரான்சிஸ் சேவியர் குளூனி என்ற ஹார்வார்ட் புரொபசரின் மேரி-ஶ்ரீ ஆராய்ச்சி பற்றி விவைத்துள்ளேன். அங்கு இப்பிரச்சினை விவரிக்கப் பட்டுள்ளது.

[3] நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் நூல்களை எல்லாம் அழித்து விட்டதாகத் தெரிகிறது. ஏனெனில், மொஹம்மது அவ்வாறெல்லாம் விவரிக்கக் கூட்டாதாம். அது அவர்களது கொள்கைகளுக்கு எதிரானதாம்! இதில் வேடிக்கை என்னவென்றால், இவையெல்லாமே 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. வஹாபியிஸம் தலைதூக்கியதும், அந்த தமிழ்-புலமை எல்லாம் மறைந்து விட்டது.

[4] The Telegraph, FIR on artist for Krishna depiction – Plea for tolerance and artistic freedom follows protess in Assam, by, Nilotpal Bhattacharjee, Sunday , April 12 , 2015.

[5] https://www.telegraphindia.com/1150412/jsp/northeast/story_14095.jsp

[6] தமிழ்புலவர்கள் எப்படி அரசர்களை, குருநில மன்னர்களை, மற்றவர்களை பாராட்டி பரிசு, பொருள் பெற்று வாழ்க்கை நடத்தினரோ, அதே முறையில் தான், இக்கால எழுத்தாளர்கள், புலவர்கள் போன்றோர் இருக்கின்றனர். காசு, பரிசு, பதவி, பாராட்டு கிடைத்தால் “வாழ்த்துகள்,” கிடைக்காவிட்டால் தூஷணங்கள்!

[7] தமிழ் இலக்கியங்களில் “ஆநிரைக் கவர்தல்” ஒரு வீரனுக்கும் அரசனுக்கு, புலவனுக்கு, முக்கியமான விசயமாக இருந்தது. தமிழ் இலக்கியத்தில் மாடு = செல்வம் என்பதால், அத்தகைய கோ-ஹரனம், முக்கியமாக விவைக்கப் பட்டது. இன்றைக்கும் மாடு திருடுதல், கவர்தல், கடத்துதல் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.