Posts Tagged ‘திராவிட நாடு’

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக் கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலை – செக்யூலரிஸஅரசா, பெரியாரிஸ-நாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (2 )

நவம்பர் 17, 2023

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக்கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலைசெக்யூலரிஸ அரசா, பெரியாரிஸநாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (2 )

விதவிதமான வழக்குப் பதிவு: போலீஸாரின் அறிக்கையின் படி, கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி காலை வரை-

  1.  உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தது தொடர்பாக 554 வழக்குகளும்,
  2. தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 8 வழக்குகளும்,
  3. அளவுக்கு அதிகமான சத்தத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 19 வழக்குகளும் என மொத்தம் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  4. விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டட்ம 118வது சட்டப்பிரிவின் படி 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்.
  5. மேலும், நேர கட்டுப்பாட்டை மீறியும், தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-ன் படி வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது[1].
  6. பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், குடிசை பகுதிகள் போன்ற பட்டாசு தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது[2].

சரி, இத்தனை ஆண்டுகளாக, அத்தகைய வெடிகள் வெடிக்கப் படவில்லையா? அப்பொழுது ஒன்றும் நடக்கவில்லையா?

ஆயிரக்கணக்கில் பொது மக்களை வெடிவெடித்தார்கள் என்று கைது செய்வதால் என்ன பெருமை கொண்டார்கள்?: இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது[3]. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நவ.12 மற்றும் நவ.13 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்காக குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலான நேரத்தை தவிர்த்து[4], மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது[5]. அதில் 2,095 பேர் கைது செய்யப்பட்டனர்[6]. இதில் அதிகபட்சமாக சென்னையில் 558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2005 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது[8]. இப்படியெல்லாம் சொல்லிக் கொள்ள பெருமையாகவா இருக்கிறது?

சென்னையில் பதிவு செய்யப் பட்ட வழக்குகள்: மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது[9]. தொடர்ந்து இந்த தனிப்படை போலீஸார், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது[10].சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மாசு அளவு 100 ஐ தாண்டி இருந்தது. சென்னை, பெருங்குடி- 178, அரும்பாக்கம் – 159, ராயபுரம் – 115, வேளச்சேரி – 117 என அனைத்து இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு 100-ஐ தாண்டியது அதேபோல வேலூர், கடலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் காற்று மாசு மோசமடைந்து உள்ளது[11]. தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது[12].

பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?[13]: திருவள்ளூர்- திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்ததாகவும் சுமார் 111 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[14].

மதுரை- மதுரை மாநகர் பகுதிகளில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாநகர காவல்துறையினர் 141 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்- தஞ்சாவூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது‌. அதில் 40 பேர் கைது செய்யப்பட்டு சொந்த பினையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை- விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தில் 27 வழக்குகளும் நெல்லை மாநகரப் பகுதியில் 20 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம்- வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி- தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு குறிப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 16 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி- புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 56 பேர் மீது புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பாரபட்சம் மிக்க நடவடிக்கைகள் இந்துவிரோதமாக இருப்பது ஏன்?: தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதால் மட்டும் தான் மாசு உண்டாகி, சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பது போன்ற பிரமையை உண்டாகி வைக்கப் பட்டுள்ளது. மற்ற வழிகளில் எவ்வாறெல்லாம் மாசு தினம்-தினம் உண்டாகி-உண்டாக்கி சுற்றுச்சூழலை பதித்து வரப் படுகிறது என்று எடுத்துக் காட்டப் படுவதில்லை. அதே போல, மற்ற பண்டிகைகளின் மீது, கோடிக்கணக்கில் உயிர்கள் கொலை செய்யப் படுகின்றன. அப்பொழுது, யாரும் உயிர்கொலை செய்யாதே என்று அறிவுருத்துவது இல்லை, உயர்நீதி-உச்சநீதி மன்றங்களுக்குச் செல்வதில்லை. திக-திமுகக்கரர்கள் வசை பாடுவதில்லை, தூஷிப்பதில்லை.  இதே பெரியாரிஸ-நாத்திக கோஷ்டிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மாறாக வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். பிறகு, இத்தகைய முரண்பாடுகளை செக்யூலரிஸ நாட்டில் எவ்வாறு புரிந்து கொள்வது?

© வேதபிரகாஷ்

16-11-2023


[1] தமிழ்.இந்து,தமிழகம் முழுவதும் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு @ தீபாவளி , செய்திப்பிரிவு, Published : 13 Nov 2023 10:14 PM; Last Updated : 13 Nov 2023 10:14 PM.

[2]   https://www.hindutamil.in/news/tamilnadu/1152686-2206-cases-of-breaking-firecrackers-across-tamil-nadu-registered-at-diwali-~XPageIDX~.html

[3] தினமணி, கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 11 போ் கைது, By DIN  |   Published On : 15th November 2023 03:15 AM  |   Last Updated : 15th November 2023 03:15 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2023/nov/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4106087.html

[5] நக்கீரன், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு; ‘தமிழகம் முழுவதும் 2,206 வழக்குகள் பதிவு’ – காவல்துறை தகவல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 13/11/2023 (23:29) | Edited on 13/11/2023 (23:44)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/2206-cases-registered-across-tamil-nadu-police/

[7] மாலைமுரசு, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு மீறல்தமிழ்நாடு முழுவதும் அதிக வழக்குகள் பதிவு!, Webteam, Nov 13, 2023 – 17:39.

[8] https://www.malaimurasu.com/posts/tamilnadu/Violation-of-timing-in-bursting-of-firecrackers

[9] தமிழ்.ஏபிபி.லைவ், Diwali 2023: பட்டாசு நேரம்.. விதிமீறியதால் 2095 வழக்குகள்.. தமிழ்நாடு காவல்துறை அதிரடி!, By: உமா பார்கவி,Published at : 12 Nov 2023 07:20 PM (IST)  | Updated at : 13 Nov 2023 03:10 PM (IST)

[10] https://tamil.abplive.com/news/chennai/chennai-regitered-case-118-members-for-bursting-fire-crackers-in-violation-rules-150096

[11] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Diwali 2023: அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 118 மீது வழக்குப்பதிவுபோலீஸார் அதிரடி!, Karthikeyan S HT Tamil, Nov 12, 2023 02:03 PM IST.

[12] https://tamil.hindustantimes.com/tamilnadu/118-cases-filed-for-violating-sc-order-on-bursting-firecrackers-in-chennai-131699777684917.html

[13] தமிழ்.நியூஸ்.18, விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?, FIRST PUBLISHED : NOVEMBER 13, 2023, 9:34 AM IST; LAST UPDATED : NOVEMBER 13, 2023, 12:40 PM IST;

[14] https://tamil.news18.com/tamil-nadu/chennai-police-registerd-555-cases-of-bursting-firecrackers-beyond-the-permitted-time-1230516.html

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக் கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலை – செக்யூலரிஸ அரசா, பெரியாரிஸ-நாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (1)

நவம்பர் 17, 2023

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக ஆயிரக்கணக்கானோர் கைது, பெயிலில் விடுதலைசெக்யூலரிஸ அரசா, பெரியாரிஸநாத்திகமா, இந்துவிரோத துவேஷமா? (1)

60-70-80 வயதானவர்கள் தீபாவளி அன்று தமது 1960-70 ஆண்டுகளின் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றி நினைவு: 60-70-80 வயதானவர்கள் தீபாவளி அன்று தமது 1960-70 ஆண்டுகளின் தீபாவளி கொண்டாட்டங்களை நினைத்துப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ஆளுக்கு ஆள் 25 பைசா, 50 பைசா,  ஒரு ரூபா என்று டீம் போட்டு வசூல் செய்து அல்லது சேமித்து, டவுனுக்கு கும்பலாகச் சென்று வெடி வாங்கி வருவது வழக்கம். டவுனில் பட்டாசு விலைகுறைவாக இருக்கும். இரவு கடந்து, விடியற்காலையில் வந்து சேரும் பொழுது, அப்பொழுதே பட்டாசு வெடிப்பது வழக்கமாக இருந்தது. காலை நான்கு மணிக்கு வெடிவெடித்து, தெருவில் உள்ள எல்லோரையும் எழுப்பி விடுவது வழக்கமாக இருந்தது. ஒன்றாகத் தான் சேர்ந்து பட்டாசு வெடிப்பது பழக்கமாக இருந்தது. இதனால், பட்டாசு வாங்காத நண்பர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து வெடி வெடிப்பர்.அப்பொழுதெல்லாம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல், சந்தோசமாக சிறுவர் முதல் பெரியவர் வரை வெடி வெடித்து வந்தனர்.

அந்தகால பட்டாசு நினைவுகள்: தீபாவளிக்கு முன்பே பட்டாசு வங்கி, வெயிலில் காய வைப்பதும் உண்டு. அதற்கு, நண்பர்கள் மாறி-மாறி மொட்டைமாடிகளில் காவல் காப்பர்.ஆப்பொழுதெல்லாம் தீபாவளிக்கு நல்ல மழையும் வந்ததுண்டு. மழை வந்தால், கிரிக்கெட் போல “வாஸ்ட் அவுட்” தான்! சாயங்காலத்தில் பத்திரமாக டப்பாக்களில் போட்டு கீழே கொண்டு வருவர். 25 குருவிக்கட்டு ரூ.5/- தான். இதே போல, சிவாஜி, லக்ஷ்மி, கிருஷ்ணா வெடிகள் பிரபலம். சிவாஜி நடுத்தர மக்களின் வெடி, லக்ஷ்மி, கிருஷ்ணா பணக்காரர்களின் வெடி என்றெல்லாம் சொல்வதுண்டு. 1000, 5000, 10,000-வாலா சரவெடிகள் எல்லாமே பணக்காரர்களின் வெடி தான். அவை வெடித்தால், அங்கு சென்று வேடிக்கைப் பார்ப்பது வழக்கம். யார் வீட்டின் முன்பாக அதிகமாக வெடிவெடித்த குப்பை இருக்குமோ, அந்த வீட்டு பசங்க, “எங்க வீட்டில் இத்தனை பட்டாசு வெடிச்சோம்,” என்று பெருமையாகக் கூறிக் கொள்வார்கள்.  இப்பொழுது நிலைமை மாறி விட்டது. 60-70-80 வயதானவர்கள் காலை 3-4 மணிக்கு எழுந்தால், ஒளியையும் காணோம், ஒலியையும் காணோம்!

தீபாவளி உலக வியாபாரம் ஆன நிலை: இப்பொழுது 2023ல் நிலைமை நிறையவே மாறி விட்டது. விலை அதிகமாகி விட்டது. தீபாவளிக்கு எதிரான பிரச்சாரங்களும் அதிகமாகி விட்டன. ஆனால், தீபாவளி வைத்து செய்யும் வியாபாரங்கள் அதிகமாகியுள்ளன. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் பொருளாதார சந்தையில், சீனாவிலிருந்து தான் பெரும்பாலான தீபாவளி கொண்டாட்டப் பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுடன், இந்திய வியாபாரிகளின் கூட்டு அதிகமாகவே இருக்கின்றன. ஒரு வருடம், ஒரு வேளை இந்தியர் தீபாவளி கொண்டாடா விட்டால், சீனா தான் அதிக அளவில் பாதிக்கப் படும் எனலாம். இந்தியர்களின் பங்களிப்பு உலகம் முழுவதும் இருப்பதினால், இந்திய வம்சாவளினர் அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகளில் பெரிய பதவிகளில் வந்து கொண்டிருப்பதால், அகில்-உலகில் தீபாவளி முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆனால், இந்தியாவில் கடந்த ஆண்டுகளாக வெடி வெடிக்கத் தடை என்று கெடுபிடி ஆரம்பித்துள்ளது. இந்தியாவுக்கு விமானத்தில் வரும் டிக்கெட் விலையும் உயர்த்தப் பட்டது.

திராவிடபெரியாரிஸ்ட்நாத்திகர்களின் தீபாவளி விரோதம்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், திக-திமுக தீபாவளியை அதிகமாகவே எதிர்த்து வந்துள்ளது-வருகின்றன. இப்பொழுது, திமுக ஆட்சிக்கு வந்த்திலிருந்து, தீபாவளி எதிர்ப்பு அதிகமாகி விட்டது. சனாதனத்தை ஒழிப்போம் என்று ஆரம்பித்து, போலீஸ் கைது, ஜாமீனில் விடுதலை என்ற நிலைக்கும் சென்று விட்டது. இனி, சாதாரண மக்கள், கிழவர்கள், சிறுவர்கள் எல்லாம் கூட போலீஸார் கைது செய்யப் பட்டனர், ஜாமீனில் வெளிவந்தனர் என்று சொல்லக் கூடிய நிலை வந்துவிட்டது எனலாம். வடக்கில் இதெல்லாம் ஏற்கெனவே நடந்தேறி விட்டன. இருப்பினும், இதனால், அவர்கள் எந்த அளவுக்கு மனம் பாதிக்கப் படுவர் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏதோ செய்யக் கூடாத குற்றத்தை செய்து விட்டது போலவும், போலீஸார் வீடுகளுக்கு முன்னர் வந்து மிரட்டுவதும், வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்வதும், முதலிய காரியங்கள் அடாவடித் தனமாகத்தான் இருக்கிறது. பண்டிகை நேரத்தில், ஆண்டாண்டுகளாக, சம்பிரதாயங்களுடன் செய்து வரும் சடங்குகளை, அதிலும் மகிழ்ச்சியுடன் குழந்தைகள் முதல் முதியோர் வரை குடும்பம்-நண்பர் என்று சகிதமாக, ஊரே, நகரமே, நாடே கொண்டாடி வரும் விழாவில், எப்படி இத்தகைய கைதுகள் எல்லாம் நிறைவேற முடியும்?

இப்பொழுதைய ஆட்சியாளர் எதனை ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்?: இதுபோன்று மற்ற பண்டிகைகளின் போதும் போலீசார் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கிறார்களா, சிறப்பு படை அமைத்து கவனிக்கிறார்களா அல்லது ஏதோ பெரிய குற்றம் நடந்து விடப்போவது போன்று வேவு பார்க்கிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் மற்ற பண்டிகைகளில் கோடிக்கணக்கான விலங்குகள் பலி இடப்படுகின்றன, கொடூரமான வகையில் அத்தகைய செயல்களும் – உயிர்வதை – நடந்து வருகின்றன. கொல்லாமை- ஜீவகாருண்யம் என்றெல்லாம் பேசி அதை வைத்தும் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள் அந்த நேரங்களில் கண்டுகொள்ளாமல் தான் இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால், ஜீவகாருண்யம் பேசிக் கொண்டு விலங்குகளின் மாமிசம் முதலியவற்றை உட்கொண்டு வருகிறார்கள். இத்தகைய குரூர செயல்களையும் மீறி, மனப்பாங்கு கொண்டவர்கள் தான் என்று இத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள் என்பதனை கவனிக்கலாம். ஆக இவர்கள் எதனை ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்? 

தீபாவளி நேரத்தில் நேரம் கடந்து வெடித்தவர்களின் மீது வழக்கு: இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (12.11.2023) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது[1]. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது[2]. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அறிவுறுத்தியிருந்தது[3]. இதில் விசித்திரம் என்னவென்றால், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டதா-இல்லையா போன்ற விவரங்கள் தெரியவில்லை. குறிப்பாக அரசாங்கம் எப்படி அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடமுடியும், நிர்ணயிக்க முடியும், கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காவல் துறை சார்பில் தனிப்படையையும் அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன[4]. அந்த அளவுக்கு பட்டாசு வெடிப்பது என்ன பெரிய குற்றமா என்று தெரியவில்லை.

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206  / 2246 வழக்குகள் பதிவு: தமிழகம் முழுவதும் நவ.12 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவ.13 (திங்கட்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நேராக கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 2246 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறது தினகரன். சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்[5]. அதன்படி, இவ்வாறெல்லாம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, கைதுகளும் செய்யப் பட்டது[6].

© வேதபிரகாஷ்

16-11-2023.


[1] தினமலர், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 2,095 பேர் கைது, பதிவு செய்த நாள்: நவ 14,2023 02:02.

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3480764

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தீபாவளி பண்டிகை.. விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இத்தனை பேர் கைதா? தமிழக காவல்துறை விளக்கம், By Velmurugan P Published: Monday, November 13, 2023, 23:10 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/diwali-festival-2095-people-arrested-for-bursting-firecrackers-in-violation-of-norms-556657.html

[5] தினகரன், நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 2246 வழக்குகள் பதிவு, November 14, 2023, 2:09 am,

[6] https://www.dinakaran.com/timerestriction-crackersburst-2246cases-registered-tamilnadu/

வெடி வெடித்தால் போலீஸ் பிடித்துச் சென்று விடும் – இப்படி மிரட்டி தீபாவளி கொண்டாடுவது நன்றாக இருக்கிறதா, இது நாத்திக-திராவிட அல்லது இந்துவிரோத மாடலா? (2)

நவம்பர் 12, 2023

வெடிவெடித்தால் போலீஸ் பிடித்துச் சென்று விடும்இப்படி மிரட்டி தீபாவளி கொண்டாடுவது நன்றாக இருக்கிறதா, இது நாத்திக-திராவிட அல்லது இந்துவிரோத மாடலா? (2)

போலீஸார் மிரட்டுவதற்கா இருக்கிறார்கள்?: எனவே, சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீஸார் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன[1]. இந்த குழுக்கள், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் வலம் வந்து கண்காணிக்கும்[2]. பொதுமக்கள் யாராவது குறித்த நேரத்துக்குப் பிறகு பட்டாசுகளை வெடித்து இடையூறு ஏற்படுத்துவதாக காவல் துறைக்கு புகார் வந்தால், அந்த குழு சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுக்கும். ஏதோ குற்றம் செய்வது போலவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது போலவும் இவ்வாறு அறிக்கை-செய்திகள் வெளியிடுவதே மிரட்டுவது, பயமுருத்துவது போலத் தான் இருக்கிறது. பிறகு, எதற்கு வம்பு-பிரச்சினை என்று அமைதியாகத் தான் இருப்பர். மேலும், தீபாவளி-விரோத அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதும் இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும். “மூன்று நாட்கள் தான் விடுமுறை, அடுத்த நாள் வராவிட்டால்….,” என்று கம்பெனி வேரு மிரட்டுகிறது. பிறகு அவர்கள் என்ன செய்வார்கள். இதெல்லாமே, திகைப்பாக, ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருக்கிறது.

வயதானவர்கள் அதிகாலையில் வெடி வெடித்தது: இன்றைக்கு 12-11-2023 அன்று அதிகாலையில் வெடி வெடித்தவர்கள் எல்லோருமே வயதானவர்களாக – தாத்தா-பாட்டிகளாக (60 வயதிற்கு மேர்பட்டவர்களக) இருந்தனர். விசாரித்த போது, இப்பொழுதெல்லாம் இளைஞர்கள், சிறுவர்கள், குழந்தைகள் எல்லோரும் இரவெல்லாம் சினிமா, கிரிக்கெட் என்று பார்த்து தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அதனால், காலையிலேயே அவர்கள் எழுந்து கொள்வதில்லை. இன்றைக்கும் அதே நிலைமை தான். அதனால், சம்பிரதாயம், கலாச்சாரம் முதலியவை விட்டுக் கொடுக்கக் கூடாது, மறக்கலாது என்று நாங்களே சாஸ்த்திரத்திற்காக வெடிக்கிறோம் என்றார்கள். அவர்களது மகன், மகள், மறுமகன், மறுமகள், பேரன், பேத்தி என்று யாரும் வெடிக்காதது அவர்களுக்கு வருத்தமாக இருந்தது தெரிகிறது.

கல்கத்தாவில் நடந்தது, மற்ற இடங்களிலும் நடக்குமா?

தீயணைப்புகாயம் முதலியவற்றைப் பற்றிய எச்சரிக்கை: பட்டாசு வெடிக்கும் போது யாருக்காவது தீவிபத்து காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் தயாராக இருக்கவும், பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது[3]. தீபாவளியன்று மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[4]. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தியை பயன்படுத்த வேண்டும்[5]. பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் வெடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியா்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்[6].

கல்கத்தாவில் நடந்தது, மற்ற இடங்களிலும் நடக்குமா? தடை செய்யப் பட்ட பட்டாசுகள் எவை?

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது. இன்று 2023 நவம்பரில் கூட டிவி-அரசியல் வாத-விவாதங்களில் தேவையில்லாமல் தீபாவளியை வைத்து பேசுகிறார்கள். ஏதோ ரூ.1000/-த்தைக் கொடுத்தோம் என்று இணைத்துப் பேசுகிறார்கள். உண்மையில், தீபாவளி தூஷிக்கும் பேர்வழிகளால் எவ்வாறு மங்களகரமான காரியங்கள் நடக்கும். வாய் தூஷிக்கும், கை காசு கொடுக்கோம் என்றால் யார் நம்புவார்கள்? மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன.

கல்கத்தாவில் நடந்தது, மற்ற இடங்களிலும் நடக்குமா? பட்டாசுகள் தடை வருமா?

தீபாவளி தூற்றும் நடிகர்களை வைத்து தீபாவளி விளம்பரம் செய்வது?: சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.

தீபாவளி பட்டாசு வெடிப்பு, சுற்றுச் சூழல், உச்சநீதி மன்ற தீர்ப்பு முதலியன: தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதால், புகை கிளம்புகிறது, மாசு உண்டாகிறது, இதனால், மக்களின் மூச்சு-சுவாசம் பாதிக்கப் படுகின்றது, நோய்கள் உண்டாகின்றன என்று சில அறிவிஜீவிகள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, “இரண்டு மணி நேரம்” தான் பட்டாசு வெடிக்க வேண்டும், மீறினால் போலீஸ் நடவடிக்கை, தண்டம், கைது, சிறை என்றெல்லாம் மிரட்டி வருவது, கடந்து ஆண்டுகளில் நடந்து வருகின்றன. தீபாவளி பண்டிகை காலை முதலே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவதால் அதிக ஒலியும், காற்று அதிக அளவில் மாசுபடுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டிலும் பட்டாசு வெடிப்பதற்கு நேரத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தீபாவளி-ஒழுங்குமுறையை மீறியதால் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றும் செய்திகள் வந்துள்ளன – வருகின்றன. ஆனால், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள், எடுக்கிறார்கள், எடுப்பார்கள் என்று தெரியவில்லை.

தீபாவளி பட்டாசு உற்பத்தி, விநியோகம் விற்பனைஅரசியல்: சிவகாசி பட்டாசு உற்பத்தியில், இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. அதில் பெரும்பாலோர் நாடார்கள் என்று இருந்தாலும், பிறகு திராவிட ஆட்சி காலங்களில் மற்ற ஜாதியினரும் நுழைந்து விட்டார்கள். விநியோகஸ்தர்கள் நிலையில் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தார்கள். பட்டாசு கடை வைக்க லைசென்ஸ் / அனுமதி என்ற ரீதியில் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். “தீபாவளி” மாமூல் மற்றும் இனாம் முதலியவையும் சேர்ந்து கொண்டன. துணிமணி வியாபாரம், சினிமா போன்றவையும் இணைக்கப் பட்டன. டிவி கலாச்சாரம் சேர்ந்த பிறகு, தீபாவளி-சினிமா-வியாபாரம் முக்கியமானது. இவையெல்லாமே கோடிக் கணக்கில் நடக்கும் வியாபாரங்கள் ஆகும். ஆகவே, எந்த திக-திமுக அரசியல்வாதி, அமைச்சர் சித்தாந்தவாதி எதிர்த்தாலும், பன்றி கடை சொன்னாலும், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன் என்று ஆர்பரித்தாலும், எந்த பன்றியும் கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்கள் தான் குளைத்து, ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-11-2023.


[1] நக்கீரன், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி‘ – சென்னை காவல்துறை எச்சரிக்கை, நக்கீரன் செய்திப்பிரிவு,Published on 07/11/2023 (10:28) | Edited on 07/11/2023 (10:40)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fireworks-allowed-two-hours-only-chennai-police-warning

[3] தமிழ்.ஏபிபி.லைவ், Diwali 2023: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்தமிழக அரசின் டைம் இதுதான்!, By: அப்ரின் |Published at : 01 Nov 2023 11:14 AM (IST) ; Updated at : 01 Nov 2023 11:14 AM (IST);

[4] https://tamil.abplive.com/news/tamil-nadu/diwali-2023-bursting-of-crackers-guidelines-issued-by-tamilnadu-government-148020

[5] நியூஸ்.17.தமிழ், பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!, by Web EditorNovember 8, 2023.

[6] https://news7tamil.live/19-restrictions-on-bursting-diwali-crackers.html


வெடி வெடித்தால் போலீஸ் பிடித்துச் சென்று விடும் – இப்படி மிரட்டி தீபாவளி கொண்டாடுவது நன்றாக இருக்கிறதா? (1)

நவம்பர் 12, 2023

வெடிவெடித்தால் போலீஸ் பிடித்துச் சென்று விடும்இப்படி மிரட்டி தீபாவளி கொண்டாடுவது நன்றாக இருக்கிறதா? (1)

100 கோடி மக்கள் கொண்டாடும் இப்பண்டிகையை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வெடி வெடிக்க சொல்வது சாத்தியமாகுமா?: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது[1]. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது[2]. இத்தகைய நேரங்கள் மாநிலங்களுக்கு மாநிலம், அந்தந்த இடநிலவரம் முதலியவற்றிற்கு ஏற்றப்படி மாறுகிறது, மாற்றியமைக்கப் படுகிறது. 100 கோடி மக்கள் கொண்டாடும் இப்பண்டிகையை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வெடி வெடிக்க அனுமதிப்பது, கட்டுப் படுத்துவது, தண்டனை என்றெல்லாம் அறிவித்து பயமுருத்துவது என்பது  எல்லாம் தமாஷாக இருக்கிறது எனலாம். பொதுவாக விடியற்காலையில் சுமார் 3-4 மணிக்கே எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து கொண்டாடுவது பழக்கமாக இருந்து வருகிறது. அந்நிலையில் குறிப்பிட்ட இரண்டு மணி நேரங்களில் எல்லோரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று வற்புருத்துவது இயலாத காரியம் ஆகும்.

பிரச்சார ரீதியில் தாக்கத்தை உண்டாக்கியிருத்தல்: பலவிதமான குண்டுகள் தமிழகத்தில் வெடித்துள்ளன, வெடித்து வருகின்றன. தீபாவளிக்கு முன்னால், 10-11-2023 அன்று கோவில் கர்ப்பகிருகத்திலேயே பெட்ரோல் குண்டு வெடித்து விட்டது. மற்றபடி குக்கர் குண்டு முதல் மற்ற குண்டுகளும் வெடித்துள்ளன. அவையெல்லாம் பற்றி ஏகப்பட்ட விளக்கங்கள், மறுப்புகள், வாத-விவாதங்கள் எல்லாம் நடந்தன, நடந்து வருகின்றன. ஆனால், அவற்றிற்கு எல்லாம் கொடுக்கப் படும் முக்கியவத்துவத்தை விட, இதற்கு இத்தனை வேகம் காட்டுவது, ஊடகங்களில் பேட்டிகள், அறிக்கைகள் விடுவது, எச்சரிப்பது எல்லாம் திகைப்பாகவே இருக்கின்றன. உண்மையில், “வெடிவெடித்தால் போலீஸ் பிடித்துச் சென்று விடும்,” என்று சிறுவர்-சிறுமிகளை, இளைஞர்களை மிரட்டுவது போலத்தான் இருக்கிறது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்-ஆசிரியைகள் மூலமும் இந்த எச்சரிக்கை சொல்லப் பட்டுள்ளது. அதனால், அப்பாவி குழந்தைகள் “வெடி வெடிக்கக் கூடாது,” என்று “மிஸ் சொன்னாங்க,” எனும்போது, அதன் தாக்கத்தை நன்றாகவே உணர்ந்து கொள்ளலாம்.  

தீபாவளியை வைத்து அரசியல் செய்யும் போக்கு: ஊடகங்களைக் கவனித்தால், எவ்வாறு தீபாவளியை வைத்து கோடிக்கணக்கான வியாபாரம் நடக்கிறது என்பதைக் கவனிக்கலாம்.ஆவ்வாறிருக்க அரசு, அரசியல்வாதிகள் ஏதோ தாங்கள் உத்தமர்கள் போல, ஒரு பக்கம் தீபாவளி பண்டிகையை தூஷித்து, இன்னொரு பக்கம் இவ்வாறு அதிகாரத்தை வைத்து மிரட்டுகின்றனர். ஒருவேளை தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை என்றால், யாருக்கு லாபம்-நஷ்டம் என்றும் பார்க்கலாம். தீபாவளிக்கு கிடைத்த பணம், சம்பாதித்தவர்களுக்கு சேமிப்பாக மாறிவிடும். ஒருவேளை நாளைக்கு அவர்களுக்கு உபயோகப் படும். ஆனால், பட்டாசு, ஸ்வீட், துணி கடையாளர்கள் என்ன செய்வார்கள்? நிச்சயமாக நஷ்டம் ஏற்படும். ஆகவே, நிச்சயமாக, நுகர்வோர்கள் ஒருதடவை இவர்களுக்கு தக்க பாடத்தைப் புகட்டியாக வேண்டும். தீபாவளி கொண்டாடுவோரை, இவ்வாறு துச்சமாக மதிக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு என்று சொல்லி மக்களை மிரட்ட முடியுமா?: தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடந்த 2018, ஆண்டே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது[3]. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி வரும் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் இப்பொழுதில் இருந்தே பட்டாசு விற்பனை தீவிரமடைந்து வருகிறது[4]. குறிப்பிட்ட நேரங்களில் தான் பட்டாசு விற்கவேண்டும், இந்த விலைக்குத் தான் விற்கவேண்டும் என்று எந்த அரசும் சொல்வதில்லை. தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு வெடிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும், கட்டுப்பாடுக விதிக்கப் பட்டுள்ளன[5].  அதன்படி தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது[6]. அது பட்டாசு பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது[7]. தீபாவளியன்று பச்சை பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது[8].

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதிகள் தோல் வியாபாரங்களில் கண்களை மூடிக் கொள்கின்றனவே?: கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் பட்டாசுத் தலைநகராகக் கருதப்படும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள், பேரியம் குளோரைடைத் தவிர்த்து, உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஃபார்முலாவைக் கடைப்பிடித்து பச்சைப் பட்டாசுகளுக்கு மாறியுள்ளனர்[9]. இருப்பினும், அமைப்பு சாரா துறையை ஒழுங்குபடுத்துவது சவாலாக உள்ளது. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்-படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ. பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது[10]. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது[11], பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வைக்க கூடாது இருசக்கரம் 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது[12].

சுத்தமா, சுகாதாரமா, சுற்றுப்புற சூழலா எது வேண்டும்?: “சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு” தான் முக்கியம் என்றால், ரசாயன தொழிற்சாலைகள் எல்லாமே மூட வேண்டியிருக்கும், ஆனால், அவையெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. “ரசாயன தொழிற்சாலைகள்” என்றால் அவற்றில் மருந்து, சாயம், தோல், பதனிடும்-படப்படுத்தும் என்ற எல்லாமே அடங்கும். அவ்வாறு பார்த்தால் 70% தொழிற்சாலைகளை மூடவேண்டியிருக்கும். ஆனால், எல்லாமே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கு பட்டாசு வெடிப்பதனால் மாசு உண்டாவதில்லை. நகரமயமாக்கல் என்ற நிலையில், வானம் பார்க்கும் திறந்த பச்சைவெளி பூமி இல்லாமல் இருப்பது தான் பிரச்சினை. அவ்வாறு செய்வதே அரசாங்கம் தான். நகரமயமாக்கம் என்ற போர்வையில், அடுக்குமாடி கட்டிடங்கள் ஊக்குவிக்கப் பட்டு, அவை நகரங்களையும் தாண்டி வளர்ந்து, நகர்ந்து வருகின்றன. இதனால், நிலத்தடி நீர் குறைவது, மாசு படுவது என்றெல்லாம் புதுப் பிரச்சினைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வருகின்றன. ஆனால், அவற்றயெல்லாம் மறைத்து, இதில் இறங்கியுள்ளது வெடிக்கையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

12-11-2023.


[1] தினமலர், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி, பதிவு செய்த நாள்: நவ 11,2023 05:51.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3479111

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Diwali: ’இன்று தீபாவளி! பட்டாசு வெடிக்க இதுதான் நேரம்! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?’, Kathiravan V HT Tamil, Nov 12, 2023 06:47 AM IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/restrictions-on-bursting-firecrackers-during-diwali-festival-in-tamil-nadu-131699751612347.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, இன்று தீபாவளி.. தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் இதுதான்? மீறினால் பாயும் நடவடிக்கை.. உஷார், By Nantha Kumar R Updated: Sunday, November 12, 2023, 0:39 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-timing-for-burst-fire-crackers-in-diwali-2023-in-tamil-nadu-556385.html

[7] மாலைமலர், பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரமே அனுமதி: தமிழக அரசு, By மாலை மலர், 1 நவம்பர் 2023 11:04 AM.

[8] https://www.maalaimalar.com/news/state/diwali-festival-tn-govt-two-hours-permission-to-fire-crackers-680415

[9] தமிழ்.இந்து, தீபாவளிப் பண்டிகை | பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க 19 அறிவுரைகளை வெளியிட்டது சென்னை காவல்துறை, செய்திப்பிரிவு, Published : 07 Nov 2023 10:34 AM; Last Updated : 07 Nov 2023 10:34 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/1150165-chennai-police-commissioner-releases-guidelines-to-burst-crackers-for-diwali.html

[11] ஜீ.நியூஸ்,பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுங்க! ஆனா இந்த நேரத்தில் வெடியுங்க! நேரக்கட்டுப்பாடு, Written by – Malathi Tamilselvan | Last Updated : Nov 11, 2023, 01:46 PM IST.

[12] https://zeenews.india.com/tamil/india/what-is-the-time-frame-to-firecrackers-busting-time-in-tamil-nadu-according-to-sc-guidelines-472172

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – சென்னை உயர்நீதி மன்றம்! ஆனால் எடுக்கவில்லை, ஏன்? (2)

நவம்பர் 7, 2023

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்சென்னை உயர்நீதிமன்றம்! ஆனால் எடுக்கவில்லை, ஏன்? (2)

பாஜ தலைவர் கேள்வி எழுப்பியுள்ளது: தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் தமது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக எழுதி உள்ளதாவது[1]: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது[2]. என்ன செய்வார் முதல்வர் ஸ்டாலின்?: சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதித்து நடந்து கொள்வாரா? தி மு க அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? அமைச்சர் பதவி போனாலும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உயர்நீதி மன்றத்தின் கருத்துகளை மதித்து மன்னிப்பு கேட்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா? இனி சனாதன தர்மம் அதாவது ஹிந்து மதம் குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிடுவாரா? இப்போதாவது நீதிமன்றத்தின் கருத்துப்படி அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? இவ்வாறு பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

06-11-2023 அதே நாளில் உதயநிதி பிடிவாதமாக பேசியிருப்பது: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 06-11-2023 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்[3]. அப்போது சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்[4]. அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, ‘ நான் பேசியது எதுவும் தவறு கிடையாது. எதையும் சட்டப்படி சந்திப்போம். நான் சொன்ன வார்த்தையில் இருந்து மாற்றிக்கொள்ளமாட்டேன். எனது கொள்கையைத் தான் நான் பேசியுள்ளேன்[5]. அம்பேத்கர் பேசியதைவிட நான் ஒன்றும் பெரிதாகப் பேசவில்லை. நான் தந்தை பெரியார் பேசியதை விட நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை[6]. எழுச்சித் தமிழர் திருமாவளவன் அண்ணன் பேசியதை விட நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. நான் பேசியது சரி தான். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். அமைச்சர் பதவி இன்று வரும். நாளைக்குப் போகும். இளைஞரணி பதவி இன்று வரும் நாளை போகும். நான் மனிதனாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பேன். முதலில் இந்த நீட் தேர்வை ரத்து செய்வோம். நூறாண்டுகால சனாதனப் பிரச்னையை எதிர்ப்போம்’என்றார்.

சனாதன ஒழிப்பு கோஷம் ஒட்டு மொத்த இந்துக்களை கோபமடையச் செய்துள்ளது: தான் அமைச்சராக இருப்பதினால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற தைரியத்தில் பேசுகிறாரா அல்லது தனது தந்தையே போலீஸ் துறைக்கு அமைச்சர் என்பதால், அதையும் மீறி, எந்த போலீஸும் ஒன்றும் செய்து விடமுடியாது என்ற நிலையில் அவ்வாறு மமதையுடன் பேசுகிறாரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே கவர்னர்-தமிழக அரசு மோதல் சட்டரீதியில் சென்று கொண்டிருக்கிறது. அதையும் சனாதனத்துடன் இணைத்து, திராவிட சித்தாந்திகள் குழப்பி இருக்கிறார்கள். கவர்னரை எதிர்க்கிறோம் என்று மிகவும் ஆபத்தான விலையாட்டிலும் இறங்கி விட்டார்கள். அந்நிலையில், உதயநிதியை வைத்துக் கொண்டு, இந்த நாடகத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. அரசியலைத் தாண்டி, இந்துக்களை நேரிடையாகத் தாக்கி விட்டதால், இனி இப்பிரச்சினையிலிருந்து திக-திமுக விடுபட முடியாது என்றே தெரிகிறது.

பெரியார், அம்பேத்கர் உயிருடன் இல்லாததால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, அதையும் மனதில் வைத்துக் கொண்டு அவ்வாறு பேசியிருக்கலாம். ஈவேராவைப் பொறுத்த வரையில் உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தவர் தான். அம்பேத்கர் சட்ட அமைச்சராகி தப்பித்துக் கொண்டார் எனலாம். திக-திமுகவினரின் இந்து விரோதம் தான் நாளுக்கு நாள் அதிகமாக வெளிப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. மாறி-மாறி என்ன விளக்கம் கொடுத்தாலும் அவர்களது இந்துவிரோதம் வெளிப்படையாகி விட்டது. இப்பொழுது, “சனாதனத்தை ஒழிப்போம்” என்றதால், இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு இவர்களைப் பற்றிய உண்மை அறியப்படுத்தப் பட்டு விட்டது. இதுவரை, ஈவேரா-பெரியார், அண்ணாதுரை-கருணாநிதி முதலியோர்களது ஆபாசக்கதைகள், அருவருக்கத் தகுந்த எழுத்துகள், பேச்சுகள் முதலியவறை முழுவதுமாக அறியப் படாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இனியும் இவர்களது பொய் பிரச்சாரம் முதலியவற்றை யாரும் நம்ப மாட்டார்கள்.

திராவிடத்துவவாதிகளின் போக்கு: திராவிட திராவிடத்துவ சித்தாந்திகள் அரசியல்வாதிகளாகவும் இருக்கலாம் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் என்றும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் அவர்களது கடந்த 70 மற்றும் 100 ஆண்டுகளாக அவர்கள் பேசி நடந்து கொண்டு வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எப்பொழுதும் இந்து விரோத போக்கில் தான் இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் என்னதான் மாற்றி மாற்றி பேசினாலும், விளக்கம் கொடுத்தாலும், நிச்சயமாக அவர்கள் நம்ப போவதில்லை. இருப்பினும் ஆட்சி,  அதிகாரம் பண பலம் முதலியவை அவர்களது கைகளில் இருப்பதினால் ஆரம்பகால நிலையிலிருந்து மிரட்டியும், பயமுறுத்தியும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்டும் குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கியும் தங்களது வன்முறை போக்கையும் கையாண்டு வருகிறார்கள்.

வெறுப்புப் பேச்சு வன்முறைகளையும் கையாளுவது: அதாவது உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் பிராமணர்களை தாக்குதல், பூணூலை அறுத்தல், அவர்களைப் பற்றி கேவலமாக பேசுவது-எழுதுதல் சினிமா-நாடகம் சஞ்சிகைகள்-ஊடகங்கள் இவற்றில் எல்லாவற்றிலுமே நகைச்சுவை-கேலி என்ற ரீதியில் முதலியவை எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன இதனால் மற்ற சமூகத்தில் இருக்கும் அவர்களுக்கு ஒரு விதமான அச்சுறுத்தல் விடுபட்டு உள்ளது. அதாவது இந்த பிராமணர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை, ஆக எங்களால் என்ன செய்ய முடியும் என்று அமைதியாக இருந்து விடலாம். மேலும் ஓட்டு வங்கி அரசியல், அதிகாரம் என்ற நிலையில் வரும் பொழுது மற்ற சமூகத்தினரும் அதில் பங்கு கொள்ள விரும்புகிறார்கள். நிச்சயமாக பிராமணர்களுக்கு யாரும் அரசு துறையில் நடந்த அதாவது தமிழக அரசு ரீதியில் எந்த பதிவியையும் கொடுக்கப்போவதில்லை இந்த உடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதனால் நாங்களும் தங்களுடைய நிலையை விட்டுக் கொடுக்காமல் சந்தோசமாக பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கலாம் என்ற நுணுக்கத்துடன் இருந்து விடலாம்.

© வேதபிரகாஷ்

07-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, உதயநிதி ராஜினாமா செய்வாரா? மன்னிப்பு கேட்பாரா? போலீஸ் பாயுமா? கொளுத்தி போடும் பாஜகசனாதன சர்ச்சை!, By Mathivanan Maran Updated: Monday, November 6, 2023, 14:16 [IST.

[2] https://tamil.oneindia.com/news/chennai/sanatan-dharma-row-tn-bjp-urges-to-take-action-against-minister-udhayanidhi-stalin-554685.html

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், அம்பேத்கர், பெரியார், திருமா பேசியதை விட நான் பெரிதாக எதுவும் பேசிவிடவில்லை: சனாதன சர்ச்சைக்கு உதயநிதி பதில், Web Desk, Nov 06, 2023 14:57 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-said-that-i-did-not-speak-much-more-than-periyar-spoke-about-sanatanam-1686671

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Sanatana: சனாதனம் குறித்த கருத்தில் இருந்து ஒருபோதும்  பின்வாங்க மாட்டேன்அமைச்சர் உதயநிதி, Marimuthu M HT Tamil, Nov 06, 2023 02:35 PM IST.

[6] https://tamil.hindustantimes.com/tamilnadu/i-will-never-back-down-from-my-opinion-on-sanathanam-says-minister-udayanidhi-131699259914495.html

ஆரிய ஆதிக்கத்துக்குத் தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல என்ற பேச்சிலிருந்து அறியப் படுவது என்ன – ஆத்மா கொண்ட ஆன்மீகமா அல்லது இல்லாத ஆன்மீகமா – விளக்க முடியுமா? (2)

ஒக்ரோபர் 23, 2023

ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல என்ற பேச்சிலிருந்து அறியப் படுவது என்ன – ஆத்மா கொண்ட ஆன்மீகமா அல்லது இல்லாத ஆன்மீகமா – விளக்க முடியுமா? (2)

 

கோவில்கள் இடிக்கப் படுவது, நாசமாவது உண்மை தானே?: ஸ்டாலின் தொடர்கிறார், “இந்த கோயில இடிச்சிட்டாங்க அந்தக் கோயில இடிச்சிட்டாங்க”- என வாட்ஸ்அப்பில் பூகம்பப் படங்களைப் போட்டு வதந்தி பரப்புகிறார்கள்…….கோயிலை இடித்து விட்டோம் என பொய் பரப்புகிறார்கள். ஆனால், 10 ஆயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். கோயில் நிலங்களை மீட்டு மீண்டும் கோயிலுக்கே சேர்த்ததும் தான் திராவிட மாடல் அரசு. கோயிலை பராமரிப்பது அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்குப் பிடிக்காது. எனவே மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்ல வேண்டும். நமது கருத்துகள் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும். ….. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் கோவில்கள் இடிக்கப் படுவது, நாசமாவது தொடர்ந்து கோவில்களுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு நன்றாக தெரிந்த உண்மைதான். இதை யாரும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. மேலும் அந்தந்த கிராமங்களில் வாழும் மக்களுக்கே இவ்விவகாரங்கள் நன்றாகவே தெரியும்.

 

தொடர்ந்து கோவில்களுக்கு  என்று வரும் பக்தர்களுக்கு என்ன மாற்றங்கள் நடந்து வருகின்றன என்பதை நன்றாகவே அறிவர்: கலந்த 40, 50, 60 ஆண்டு காலங்களாக தொடர்ந்து தமிழகத்தில் கோயில்களுக்கு சென்று வருபவர்களுக்கு நிச்சயமாக அந்த கோவில்கள் எவ்வாறு 5, 10, 20 அல்லது 50 ஆண்டுகள் காலங்களில் இவ்வாறெல்லாம் மாறி வருகின்றன என்பது நன்றாகவே கண்டு அறிந்து வருகிறார்கள். குறிப்பாக சொல்வதானால் மதில் சுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து மறைந்து வருவதும், முன்பு கோவிலைச் சுற்றியுள்ள பெரிய இடங்கள் அங்கு குளங்கள் மற்ற சன்னதிகள் என்று இருந்த கட்டிடங்கள் எல்லாமே மறைந்து வருகின்றன. இதிலிருந்து மிகவும் எளிதாக கோவில் நிலங்கள் மற்றவர்களை ஆக்கிரமிக்கப்பட்ட வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கோவில் உள்ளேயும் சிலைகள், விக்கிரங்கள் காணாமல் இருப்ப்பதை கவனிக்கிறார்கள். பல கோவில்கள் சிதிலமடைந்து, கவனிப்பார் இல்லாமல் கிடப்பதையும் கவனிக்கலாம். கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான கோவில்கள் இவ்வாருத் தான் இருக்கின்றன. இப்பொழுது மாறிவரும் நிலை என்னவென்றால் திடீரென்று சில கோவில்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக புகழ் பெற ஆரம்பித்து விடுகின்றன. அதற்கேற்றபடி பிரச்சாரம், விளம்பரம் முதலியனவும் அதிரடியாக ஏற்படுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் தெரிய வருகின்றன.

 

வியாபாரம்-வணிகம் செய்பவர்களின் யுக்திகள், திட்டங்களும் கோவில்-இந்துவிரோதமாகவே இருக்கின்றன:

 

1.       குறிப்பாக ரியல் எஸ்டேட் வியாபாரம் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு அதனுடைய முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதனால் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு விலை அதிகமாகும் இதனால் பணமிருக்கிரவர்கள் அந்த நிலத்தை வாங்குவார்கள் ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருகும் என்ற நோக்கத்திலும் பலர் குறிப்பாக கடவுளைப் பற்றி அல்லது கோவிலை பற்றியோ சம்பந்தமே இல்லாதவர்கள் அதில் ஈடுபட்டு வருகின்றன.

2.        அடுத்தது மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி புதிதாக கடைகளை வைப்பது கடவுள் கோவில் அல்லது அந்த இடத்துக்கு சம்பந்தமான ஏதோ ஒரு பொருளை முக்கியத்துவம் என்பது போல உண்டாக்கி அவற்றை விற்க ஆரம்பிப்பது இதனால் பயன்படுவது பயன் பெறுவது போன்ற யுக்திகளையும் கையா/லுகிறார்கள்

3.       இன்னும் சொல்லப் போனால்ஐந்து அறநிலையத் துறையில் இருக்கும் சிலர் கோவில்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தால் தங்களுடைய லஞ்ச-லாவண்யமும் பெருகும் என்ற நொக்கில், குறிப்பிட்ட கோவில்களுக்கு அத்தகைய பிரபலம் ஏற்படுத்துவது போல செய்வாகள். அக்கோவிலைச் சுற்றி அவ்ர்களது நிலம் இருக்கும், இல்லை வாங்கிப் போட்டு அத்தகைய பிரச்சாரத்தை ஆரம்பித்து வைப்பார்கள்..

4.       எல்லோருக்கும் மேலாக அரசியல் வாதிகள் – மேலே குறிப்பிட்ட கும்பல்கள், யுக்திகள் எல்லாமே, இவர்களுடைய ஆதரவுடன், ஒப்புதல்கள் இல்லாமல் நடக்காது, நட்த்த முடியாது, எனவே அவர்களும் இத்திட்டங்களில் மகிழ்ச்சியோடு பங்கு கொள்வார்கள்.

 

இந்துக்கள் குறிப்பாகக் கவனிக்க வேண்டியவை:

  • இந்த 2023லும், “ஆரிய-திராவிட” இனவாதங்களை நம்புகின்ற முதலமைச்சரை தமிழகத்தில் தான் பார்க்க முடியும், அத்தகைய பேச்சைக் கேட்க முடியும்!
  • இனம் ஒரு கட்டுக்கதை என்பதால், இனம், இனவெறி, இனவெறித்துவம் எல்லாம் உலக அளவில் எதிர்க்கப் படுகின்றன.
  • தவறுதலாக “திராவிட” என்ற அடைமொழி வைத்துக் கொண்டதால், இன்னும் ஆரிய-திராவிட இனவாதங்களைப் பேசிக் கொண்டிருப்பது விந்தைதான்!
  • வேண்டுமென்றால், சரித்திராசிரியர்களிடம் பேசி, சந்தேகம் தெளிந்து, இனிமேல் மேடைகளில் மாண்புமிகு முதலமைச்சர் பேசலாம்.
  • சமூகவளைத் தளம் பற்றிய கூட்டம் என்பதால், இத்தகைய பேச்சு, உலகம் முழுவதும் பரவும், அப்பொழுது உண்மை விளங்கும்!
  • ஆட்சிக்கு வந்தால் செக்யூலரிஸமாக இருப்பதில்லை, இருக்கவில்லை என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
  • பெரியாரிஸ-நாத்திக-பகுத்தறிவு இந்துவிரோதமாகத்தான் இருக்கிறது, இன்னும் அந்த 1930-40-50 கதைகளை வைத்து தான் பிழைப்பு நடக்கிறது.
  • மற்றபடி, திராவிடக் கட்டுக்கதைகளை அவர்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும், ஏனெனில், சங்க இலக்கியத்திலேயே திராவிடர் இல்லை!
  • அல்லேலுயா என்றும் கூவும் இந்து அறநிலையத் துறை மற்று சனாதனத்தை ஒழிப்பேன் என்கிற அமைச்சர்கள் இங்குதான் இருக்கிறார்கள்!
  1. குடும்ப அரசியல் வேண்டாம் என்ற நிலையில், குடும்பத்தையே வைத்து அரசியல் செய்வது இந்துக்களை பாதித்து வருகிறது!
  • கோவிலுக்குச் செல்வது, சனாதனம் ஒழிப்பேன் என்பது, திருமண மந்திரங்களைக் கொச்சைப் படுத்துவது, இந்து திருடன் என்பது எல்லாமே அடங்கும்.
  • ஆமாம், தந்தை, மனைவி, தான், மகன் என்று ஆன்மீக விளையாட்டுகளையும், பேச்சுகளையும் கண்டு-கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

திராவிட ஆன்மீகம் எப்படி, எவ்வாறு, உருவாகும்?: இப்பொழுது ஆன்மீகம் என்று சொல்லிவிட்டதனால் மட்டும் இவர்கள் நம்பிக்கையாளர்களாக மாறிவிட்டார்கள் என்று கருத முடியுமா? நம்பிக்கையாளர்கள் என்றால் எந்த மதத்தினுடைய நம்பிக்கையாளர்கள் என்ற கேள்வியும் எழுகிறது. நிச்சயமாக இவர்கள் என்றுமே இந்து மதத்தை எதிர்த்து தான் பேசி இருக்கிறார்கள், பிள்ளையார் சிலைகள் உடைத்து இருக்கிறார்கள், ராமர் படங்களுக்கு செருப்பு மாலை போட்டு இருக்கிறார்கள், ஊர்வலமும் நடத்தியிருக்கிறார்கள். அந்நிலையில் இவர்களது ஆன்மீகம் எந்த வகையில் இந்து மதத்திற்கு ஆதரவாக இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை. மறுபடியும் இவர்கள் திராவிட ஸ்டாக். திராவிட மாடல் என்று இப்பொழுது திராவிட ஆன்மீகம் என்று கூட அவர்கள் பேசலாம், விளக்கம் அளிக்கலாம். ஆனால் நிச்சயமாக இவர்கள் மக்களுக்கு எந்த வகையில் நம்பிக்கையுடன் அந்த ஆன்மீகம் அல்லது தங்களுடைய ஆன்மீகம் என்று சொல்லப்படுகின்ற சித்தாந்தத்தை வெளிப்படுத்துவார்கள், உறுதிப்படுத்துவார்கள் தெரியப்படுத்துவார்கள் என்பது இனிமேல் தான் தெரிய வரும். கடந்த அதை 70 கால ஆட்சி நேரங்களிலும் அல்லது முன்பு தீவிர திராவிடம் கடைப்பிடித்த நிலையிலும் என்றைக்குமே அவர்கள் இதை பற்றி பேசியது இல்லை. அதனால், ஸ்டாலின் பேசுவதால் யாரும் நம்பிவிடப் போவதில்லை.

© வேதபிரகாஷ்

22-10-2023

83-வயதான புகழ் பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

செப்ரெம்பர் 16, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

13-09-2023 அன்று விசிக கொடுத்த புகாரும், ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய தீர்மானித்த போலீஸாரும்: இந்த நிலையில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் மணியன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று ஊடகங்க்ள் குறிப்பிடுகின்றன. அதன் பேரில் மாம்பலம் போலீசார் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 153, 153(A), 505(1)(B), 505 (2), பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, ஆர்பிவிஎஸ் மணியன் என்பவரை கைது செய்யவும் போலீஸார் தீர்மானித்தனர். விடியற்காலையிலேயே அவர்கள் ஆர்பிவிஎஸ் மணியனின் வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தனர். அதன்படியே, அவரது வீட்டிற்குச் சென்றனர்.

14-09-2023 விடியற்காலையில் கைது செய்யப் பட்டது: தியாகராயநகர் உதவி கமிஷனர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார், தியாகராயநகர் ராஜம்மாள் தெருவில் உள்ள மணியன் வீட்டுக்குச் சென்றனர். 14-09-2023 வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை திநகர் போலீசார் ஆர்பிவிஎஸ் மணியனை அவரது இல்லத்தில் கைது செய்தனர்[1]. கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினமலர் கூஊகிறது. இவரை அப்படி “ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த”,  என்ன பெரிய விசயம் இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லா விவரங்களும் வெளிப்படையாக உள்ளநிலையில், அதிலும் 3-4 காலையில் கைது செய்யப் பட்டபோது, யாருக்குத் தெரியப் போகிறது, என்ன பிர்ச்சினை வரப் போகிறது என்று தெரியவில்லை. அந்நிலையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்து முன்னணியின் ஆதரவும், எதிர்ப்பும்:  “83 வயது முதியவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும், அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது,” என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்[3]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “தமிழக அரசின் எண்ணப்படி தொடர்ந்து தமிழக காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை நீதிமன்றமோ, ஊடகமோ கண்டுகொள்ளவில்லை. இது ஜனநாயக படுகொலைக்கு சமம். ஆர்.பி.வி.எஸ். மணியன் தேசியவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர். இன்று குமரியில் நாம் காண்கின்ற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பணிக்காக தான் பார்த்துவந்த அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். விவேகானந்தர் நினைவு மண்டபம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குவதற்கும், குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாய் விளங்குவதற்கும் அந்தக் காலத்தில் ஏக்நாத் ரானடே உடன் தோளோடு தோள் நின்று அடிப்படை அஸ்திவாரமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தை காக்க வாழ்ந்தவர்.

ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் போக்கு: இந்நிலையில், ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி சிலர் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தில் பெரும்பாலானவை பார்ப்பனர் எதிர்ப்பாக, கடுமையாக தூஷணங்களுடன் இருக்கின்றன. வீடியோக்களும் போட ஆரம்பித்து விட்டனர். இந்தப் போக்கை கடந்த சில வருடங்களாகவே பார்க்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைக்கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவை பரப்பப்படுகின்றன. அவர் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும் அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்துக்களின் நம்பிக்கைளை கொச்சைபடுத்திய பல யூடியூப் சேனல்கள், சனாதனத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர்கள், இந்து மதத்தை இழிவு படுத்தியவர்கள், பிரதமர், ஆளுநர் ஆகியோரை‌த் தாக்கிப் பேசியவர்கள் என பலர் மீது பல இடங்களில் புகார் கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழக காவல் துறைக்கும் நீதிமன்றத்துக்கும் குற்றத்தின் தன்மையைவிட குற்றம்சாட்டப்படுபவர் பின்புலம் என்ன என்பதை வைத்துதான் நடவடிக்கை என்பதாக அமைந்துள்ளது. இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆவார். இவரது கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியன்: சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியனை 14 நாள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். வயது மூப்பு கருதி அவரை மருத்துவமனையில் தங்க அனுமதிக்க வேண்டும் என அவர் சார்பில் வக்கீல்கள் வலியுறுத்தினர். பரிசீலிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணியன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சுதாகர், மணியன் மீதான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார். அதற்கு நீதிபதி (மணியனை பார்த்து), உங்கள் மீதான புகார் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என கூறினார்[5]. அதற்கு மணியன், ‘நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்[6]. மணியன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ், ‘மணியனுக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி, மணியனை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இங்கும் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன:

  1. பார்ப்பானை பிரம்ம முஹூர்த்தத்தில் வைத்து கைது செய்தால், யாருக்கு பலன் கிடைக்கும்? நேரத்தைக் குறித்தது கடவுளா, திராவிட அதிகாரியா?
  2. அமாவாசைக்கு முன்னால் பார்ப்பானை கைது செய்தால் அவனது கிரியைகள் கெடுமா, அல்லது பெரியாரிஸ ஆவிகள் துடிக்குமா?
  3. 83 வயதான “கெழப்பய” என்ன ஓடியா போய் விடுவார்? காஷ்மீரில் வீட்டு காவல் வைக்கும் பொழுது, இவரை வைக்க முடியாதா?
  4. இல்லை எங்களுக்கு இணை வைக்காதே, இன்டியா கூட்டணியில் இதை சேர்காதே என்று அவர்கள் மிரட்டினரா, ஆணையிட்டனரா?
  5. அதெப்படி உடனடியாக, எந்த வழக்கறிஞரும் வரவில்லை, பெயில் கோரவில்லை, ஆனால், 14 நாட்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்?
  6. அதாவது ஒரு பக்ஷத்திற்கு சிறை, அடுத்த பக்ஷத்தில் பெயிலில் வெளியே விடலாம், இப்பொழுது மருதுத்துவ மனை வசதி கூட நிராகரிக்கப் பட்டுள்ளது.
  7. அண்ணன் அவன் பிறந்த நாள் அமாவாசையில் வந்து விட்டதால் தம்பிகள் நல்ல நாளை முன்னமே குறித்து விட்டனரோ?
  8. சரி யாரப்பா அந்த திராவிட புரோகிதர்? திராவிட மாடலில், திராவிட ஸ்டாக் ஆட்களில் தயாராகி விட்டார்கள் போலும்!
  9. நல்ல ஆடு கிடைத்து விட்டது, பலிகடா ஆடு, பார்ப்பன பலிக்கடா ஆடு, அதிலும் 83-வயது நிறைந்த பார்ப்பன பலிக்கடா ஆடு – கொண்டாட்டம் தான்!
  10. இனி பார்ப்பன துவேஷம் பீரிடும், மீம்ஸ்கள் யூ-டியூப்புகள் அதிகமாகும், ஆனால், எதிர்வினைகளுக்கு எந்த சட்டமும் வேலை செய்யாது.

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமணி, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By DIN  |   Published On : 14th September 2023 08:44 AM  |   Last Updated : 14th September 2023 08:44 AM

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/sep/14/spiritual-speaker-rpvs-manian-arrested-4072554.html

[3] தமிழ்.இந்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைதுதமிழகத்தில் கருத்து சுதந்திர நிலையைக் காட்டுகிறது!இந்து முன்னணி, செய்திப்பிரிவு, Published : 14 Sep 2023 03:08 PM; Last Updated : 14 Sep 2023 03:08 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1123301-rbvs-maniyan-arrest-hindu-munnani-condemns.html

[5] தினத்தந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு: ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது, செப்டம்பர் 15, 5:57 am

[6] https://www.dailythanthi.com/News/State/tiruvalluvar-defamation-of-ambedkar-spiritual-speaker-maniyan-arrested-1052962

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ்மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

செப்ரெம்பர் 15, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

சனாத எதிர்ப்பு பேச்ச்களால் மக்களை பாதித்த நிலை: சனாதனத்தைப் பற்றிய பேச்சுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தேவையில்லாமல், அமைச்சர்கள் அளவில், செக்யூலரிஸத்தை மறந்து, அவர்கள் பேசியதும், தொடர்ந்து மற்ற தலைவர்கள், எம்.பிக்கள் முதலியோர் ஆதரித்து விளக்கம் கொடுப்பதும், இந்தியா முழுவதும், இது அறியப் பட்டு பிரச்சினையாகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு இது அரசியலாக உள்ளது. ஆனால், இவர்களது பேச்சுகள் இந்துக்களை வெகுவாக பாதித்து வருகின்றன. இவர்கள் அரசியல் போர்வையில், தினம்-தினம் எதையதையோ சம்பந்தம் இல்லாமல் பேசி, பொது மக்களின் மனங்களில் சலனங்களை உண்டாக்கி வருகின்றனர். அரசியல் சார்புள்ள நிலையில் தமிழகத்தில் மடாதிபதிகள் அமைதியாக மௌனம் காக்கின்றனர். இதனால், நம்பிக்கையாளர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமக்குள் தம்முடைய பிரச்சினைகளை பேசிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதும், தனிப்பட்ட முறையில், உள்ளரங்களில் குறிப்பிட்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப் படும் நிகழ்ச்சிகளில் பேசுவதும் ஒன்றாகுமா என்பதெல்லாம் சட்ட வல்லுனர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

11-09-2023 அன்று பாரதிய வித்யாபவனில்பாரதியும், விவேகானந்தரும்என்ற தலைப்பில் நடந்த சொற்பொழிவு: அந்நிலையில் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் சென்னையில் 14-09-2023 அன்று கைது செய்யப்பட்டார்[1], என்று செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் சென்னையில் தியாகராயநகரில் உள்ள பாரதிய வித்யாபவனில் ‘பாரதியும், விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் கடந்த 11-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது[2]. நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருவள்ளூவர் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது[3]. சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் குறித்துப் பேசினார்[4]. திருவள்ளுவர் என்ற பெயரை யார் வைத்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்டார்[5]. திருவள்ளுவர் என்பவர் உண்மையில் இருந்ததே இல்லை என்றும் அவர் பேசினார்[6]. உண்மையில் அவர் பேசிய வீடியோ இணைதளங்களில் சுற்றுக்கு வந்தது. அவர் முழுவதும் என்ன பேசினார், என்ற விவரங்கள் தெரியவில்லை.

திருவள்ளுவர், அவரது பெற்றோர் விவரங்கள் தெரியாது: பிபிசி தமிழ் தளத்தில் உள்ளதிலிருந்து காணப்படும் விவ்ரங்கள்: “திருவள்ளுவர் இருந்தார் எனச் சொல்வது கற்பனை. அவர்தான் திருக்குறளை எழுதினார் எனச் சொல்வது அதைவிடக் கற்பனை,” என்று அவர் நிகழ்வில் பேசினார். ‘திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நூலே’ என்ற நூலை எழுதியுள்ள மணியன், ராமர் பிறந்த நட்சத்திரம் தெரியும், ஆனால் வள்ளுவர் என்று பிறந்தார், அவரது பெற்றோர்கள் யார் எனத் தெரியுமா என்றார். விவேகானந்தரின் கருத்துகளைப் பரப்புவதில் தீவிர பங்காற்றியுள்ள மணியன், கிறிஸ்தவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என விவேகானந்தர் தெரிவித்ததாகப் பேசினார். “கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதே எனக் கூறியுள்ளேன். விவேகானந்தரும் சொன்னார். பாரதியாரும் சொன்னார்,” நமது பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என அவர் பேசினார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள் எனக் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் பேசியதாக கொடுக்கப் படும் விவரங்கள்: “ராமனை ஏற்றுக்கொண்டால் ஒழிய ஒரு கிறிஸ்தவன் இந்த நாட்டில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். அந்த முஸ்லிமும் அருகதை இல்லாதவன்,” என்று அவர் அந்த நிகழ்வில் பேசினார். இதே அளவுகோலை வைத்து அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சாடினார். ராகுல் காந்தி கிறிஸ்தவர் ஐரோப்பியர் என்றும், அவருக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரையும் தாக்கிப் பேசினார். அரசியல் சாசன சட்டத்தை எழுதியது அம்பேத்கரே இல்லை என்று பேசினார். “அம்பேத்கர், தன்னுடைய மூளையில் இருந்து எழுதியதாக எழுதவே கிடையாது. எல்லாம் பேசிடுவாங்க.. அது எல்லாத்தையும் ஒரு ஸ்டெனோகிராஃபர் எழுதுவான். தட்டச்சு செய்வார், ஸ்டெனோ கிராஃபர் கரெக்டா அடிச்சிருக்காரா அடிக்கலையா என்று சரிபார்ப்பார். அந்த வேலைதான் அம்பேத்கருக்கு,” என்றார்.

அரசியல் நிர்ணய சட்டம் வரையரைக் குழுவிற்கு அம்பேத்கர் தலைவர், ஆனால், பலர் வேலை செய்தனர்: அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும்[7]. அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர்[8]. அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக.

அம்பேத்கர், பட்டியல் இன உட்பிரிவு பிரச்சினைகள்: அவரது பேச்சின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தாக்கிப் பேசியிருந்தார். திருமாவளவன் பறையர் என்றும் அம்பேத்கர் சக்கிலியர் என்றும் கூறிய மணியன், சக்கிலியரும் பறையரும் திருமணம் செய்துகொள்வார்களா, பறையரும் பள்ளர்களும் திருமணம் செய்துகொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினார்[9]. மணியன் தன்னுடைய பேச்சு முழுவதிலும், திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை ஒருமையில் பேசி கடுமையாகச் சாடினார்[10]. இவரது பேச்சு சமூகவலை தளத்தில் பரவியது.  பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது[11]. அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தை தெரிவித்திருந்தனர்[12]

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமலர், ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது; 14 நாள் நீதிமன்ற காவல், மாற்றம் செய்த நாள்: செப் 14,2023 12:28.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3431645

[3] அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு: ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By Maalaimalar .14 செப்டம்பர் 2023 11:41 AM (Updated: 14 செப்டம்பர் 2023 4:00 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/chennai-police-arrested-rbvs-manian-arrested-662383

[5] விகடன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது : அம்பேத்கர், திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் பேச்சுவிரிவான தகவல்கள், சி. அர்ச்சுணன், Published: Yesterday 14-09-2023, at 10 AM; Updated: Yesterday at 11 AM

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/rpvs-maniyan-arrested-over-allegations-against-him-about-his-speech-insults-ambedkar

[7]  தமிழ்.ஒன்.இந்தியா, திருவள்ளுவர், அம்பேத்கர், தலித்துகளை இழிவாக பேசிய பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது– 14 நாள் ஜெயில்!, By Mathivanan Maran, Updated: Thursday, September 14, 2023, 13:34 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/hindutva-leader-rbvs-manian-arrested-by-chennai-police-538479.html

[9] பிபிசி தமிழ், ஆர்.பி.வி.எஸ் மணியன்: அம்பேத்கர், திருவள்ளுவரை அவதூறாகப் பேசியதாக கைதான இவர் யார்?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், 14 செப்டெம்பர் 2023

[10] https://www.bbc.com/tamil/articles/cd13pmkyxero

[11] தமிழ்.நியூஸ்.18, அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: VHP முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, LAST UPDATED : SEPTEMBER 14, 2023, 15:14 IST,

[12] https://tamil.news18.com/chennai/chn-rbvs-manian-arrest-for-ambedkar-controversial-speech-1154345.html – gsc.tab=0

‘சனாதன ஒழிப்பு மாநாடு’ பெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது? உதயநிதி மீது போலீஸில் புகார்! (2)

செப்ரெம்பர் 3, 2023

சனாதன ஒழிப்பு மாநாடுபெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது? உதயநிதி மீது போலீஸில் புகார்! (2)

02-09-2023 இந்துவிரோத பேச்சிற்கு, 03-09-2023 அன்று போலீஸில் புகார்: தமிழகத்தில் 1950களிலிருந்து வாழும், திராவிடத்துவ அரசியல்வாதிகளின் பேச்சு, நடவடிக்கை முதலியவற்றைக் கவனித்து வருபவர்களுக்கு, நிச்சயமாக, இப்பொழுது உடனடியாக உதயநிதியின் மீது, போலீசில் புகார் அளித்திருப்பது திகைப்பாகவும், ஆச்சரியமாகவும், ஏன் சந்தோசமாகக் கூட இருக்கலாம். அதாவது இத்தனை ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கப் பட்டு, மிரட்டப் பட்டு வரும் இந்துக்கள் அவ்வாறு மகிழ்ச்சியடையலாம். தமிழ்நாட்டில், சென்னையில் ஏன் புகாரைக் கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம். ஆனால், இங்கு அவ்வாறு யாராவது புகார் கொடுக்க தைரியமாக வருவார்களா? அப்படியே புகார் கொடுத்தாலும், போலீசார் ஏற்றுக் கொள்வார்களா, பதிவு செய்வார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. டில்லியில் ஒரு வழக்கறிஞர் கொடுத்திருக்கிறார், அதனால், ஏற்றுக் கொள்ளப்பட்டது போலும். டில்லியில் ஜி-20 மாநாடு நடக்கும் நேரத்தில், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், திமுகவினர் தங்களது, இந்திய் அளவில் விளம்பரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடையலாம்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்: சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் 03-09-2023 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது[1]. சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[2]. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[3]. அவர் தனது புகாரில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களை தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது[4]. இந்து மதத்தை கொசு, டெங்கு, கரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒரு இந்து என்ற வகையில் எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தின் மீதான அவரது வெறுப்பையே வெளிப்படுத்தி இருக்கிறது.

ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு: சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் அவர், தான் எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார். சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும், அதை தூண்டுவதாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது[5]. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்[6].

மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்உதயநிதி சவால்: மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்[7]. பொய்யான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” எனத் தெரிவித்திருந்தார்[8]. இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனத்தை வெளிப்படுத்தத் தொடங்கின. இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் கருத்து அவரது குறுகிய மனப்பான்மையையும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளின் புனிதமற்ற கூட்டணியையும் காட்டுகிறது,” என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுடன் இந்தியா கூட்டணி சண்டையிடவில்லை, அவர்கள் சனாதன தர்மத்துடன் போராடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிஜேபிஉதயநிதி டுவிட்டர் சண்டை: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா, “சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்” என குற்றம்சாட்டினார்[9]. அதற்குப் பதலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்[10]. மறுபுறம், Legal Rights Observatory- LRO (சட்ட உரிமை கண்காணிப்பகம்) என்ற பெயரிலான ஒரு என்.ஜி.ஓ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பதிவைப் பகிர்ந்து, அதன்பேரில் புகார் ஒன்று அளிக்கப்படுமென கூறியது. இதை ரீ-ட்வீட் செய்த அமைச்சர் உதயநிதி, “கொண்டு வாருங்கள், நான் எந்தச் சட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளேன். இதுபோன்ற சனாதன மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியைப் பின்தொடர்பவர்கள். இதனை இன்றும், நாளையும் என்றும் சொல்வேன்[11]. திராவிட மண்ணில் சனாதனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் பின்வாங்க மாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்[12].

அண்ணாமலை முதல் மற்ற மதத்தலைவர்கள் கண்டனம்: உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, ராமஜென்ம பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் உள்ளிட சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்[13]. ஏற்கெனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்[14]. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை, “மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே உறுதி. உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. நீங்கள், உங்கள் தந்தை ஆகியோர் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து வாங்கிய ஐடியாவைக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மிஷனரிகளின் எண்ணம், அவர்களின் தீய சித்தாந்தத்தை வளர்க்க உங்களைப் போன்ற மந்தமானவர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான். தமிழகம் ஆன்மிக பூமி. இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான் உங்களால் செய்ய முடிந்த ஒரேவிஷயம்,” என பதிவிட்டிருந்தார்.

சனாதன பேச்சுஅமித் ஷா கண்டனம்: தொடர்ந்து புதுக்கோட்டையில் இதுதொடர்பாக பேசிய அண்ணாமலை, “சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி யார்? சனாதனம் ஒழிக்கப்பட்டுவிட்டால், கோயில்கள் மற்றும் மதச்சடங்குகள் அனைத்தும் அழிந்துவிடும்“ என தெரிவித்தார். காங்கிரஸைச் சாடிய அமித்ஷா! – இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[15]. இன்று ராஜஸ்தானில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில்தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். மதத்தை விமர்சித்ததற்காக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் கலாசாரம், சனாதன தர்மத்தை INDIA கூட்டணி அவமதித்து வருகிறது; வாக்குவங்கி அரசியலுக்காக INDIA கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம்,” எனத் தெரிவித்துள்ளார்[16].

© வேதபிரகாஷ்

03-09-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‘சனாதன தர்மம் ஒழிப்புஉதயநிதி பேச்சால் மத உணர்வுகள் புண்பட்டுவிட்டதாம். டெல்லி போலிசில் புகார்!, By Mathivanan Maran Published: Sunday, September 3, 2023, 11:48 [IST].

[2] https://tamil.oneindia.com/news/delhi/a-lawyer-files-complaint-in-delhi-police-againt-minister-udhayanidhi-stalin-535409.html

[3] தமிழ்.முரசு, சனாதனம் குறித்த பேச்சு, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார், 3 Sep 2023 18:56.

[4] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20230903-136279

[5] தமிழ்.இந்து,  சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புடெல்லி காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார், செய்திப்பிரிவு, Published : 03 Sep 2023 12:29 PM; Last Updated : 03 Sep 2023 12:29 PM

[6] https://www.hindutamil.in/news/india/1117228-objection-to-udayanidhi-stalin-s-speech-on-sanatana-dharma-a-lawyer-s-complaint-to-delhi-police.html

[7] பிபிசி.தமிழ், சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் பேச்சு எதிர்க்கட்சி கூட்டணியை வலுவிழக்கச் செய்யுமா?, 03-09-2023

[8] https://www.bbc.com/tamil/articles/c90j1k5eqy2o

[9] புதியதலைமுறை, சனாதனம் பற்றிய விமர்சனம்: அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வலுக்கும் புகார்கள்!, Published on: 03 Sep 2023, 5:03 pm

[10] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/political-leaders-reaction-on-udhayanidhi-stalin-sanatanam-speech

[11] விகடன்,  சனாதனம் குறித்த பேச்சு; டெல்லி போலீஸில் புகார்; `காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்‘- உதயநிதி, Published: 03-09-2023  at 4 PM; Updated: 03-09-2023 at 4 PM.

[12] https://www.vikatan.com/government-and-politics/politics/sanatana-dharma-is-against-the-idea-of-social-justice-and-must-be-eradicated-says-udhayanidhi-stalin

[13] தினமலர், சனாதனத்தை ஒழிக்க வேண்டுமாம்; அமைச்சர் உதயநிதி திடீர் ஆவேசம், மாற்றம் செய்த நாள்: செப் 03,2023 16:37; https://m.dinamalar.com/detail.php?id=3421837

[14] https://m.dinamalar.com/detail.php?id=3421837

[15] நியூஸ்.7.தமிழ், சனாதனம் குறித்த பேச்சுஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார், by Web Editor, September 3, 2023

[16] https://news7tamil.live/talk-on-sanathanam-complaint-against-minister-udayanidhi-stalin-in-delhi-police-station.html

ஆவியாக வந்து திராவிட மாடலில் அவிநாசி கோவிலில் கொள்ளையடித்த மனித உருவில் வந்தவன் யார்?

மே 26, 2023

ஆவியாக வந்து திராவிட மாடலில் அவிநாசி கோவிலில் கொள்ளையடித்த மனித உருவில் வந்தவன் யார்?

தமிழகத்தில் கோவில் கொள்ளை, திருட்டு, கடத்தல் என்பதெல்லாம் சகஜமப்பாவா?: தமிழகத்தில் கோவில் கொள்ளை, திருட்டு, கடத்தல் என்பதெல்லாம் அலுத்துப் போன செய்திகளாகத் தான் வெளியிடப் படுகின்றன. திரும்ப-திரும்ப நடக்கின்றனவே என்று எந்த நிருபரும், ஊடகக் காரரும், புலன் விசாரணை வீர-சூரப் பத்திரிக்கையாளனும் எதையும் கண்டுபிடிக்க உற்சாகம் பெறவில்லை. இந்து அறநுலைய அமைச்சரை நிற்கவைத்து கேள்விகளைக் கேட்கவில்லை. பி.டி.ஐ பாணியில்,ஒரு வரி கூட மாறாமல் அப்படியே வெளியிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது[1].  ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவிலாகும். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாகவும், முதலை விழுங்கிய பாலகனை காப்பற்றுவதற்காக சுந்தரர் பதிகம் பாடி அதன் பின் அந்த சிறுவனை மீட்டதாகவும் வரலாறு கொண்ட தலமாக இது விளங்குகிறது, என்று புராண விசயங்களைக் குரிப்பிட்டாலும், குற்றவியல் ரீதியில் ஒன்றையும் கவனிக்கவில்லை.

22-05-2023 அன்று கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையன் செய்த காரியகள்: வழக்கம்போல் 23-05-2023 அன்று அதிகாலை கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்தபோது,

  • உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததையும்,
  • கோயிலுக்குள் இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும்,
  • தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்ததையும்,
  • சிலைகள் மீது அணிவித்திருந்த ஆடைகள், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த பொருட்கள் உள்ளிட்டவை களைந்து கிடந்ததையும்

கண்டு அதிர்ச்சியடைந்தனர்[2]. இதையெல்லாம் சாதாரணமாக செய்ய முடியாது. மேலும், விவரம் அறிந்தவன் தான் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். அதாவது, 22-05-2023 அன்று யாரோ அத்தகைய வேலைகளை செய்திருக்க வேண்டும். அதிர்ச்சி அடைந்த அர்சகர்கள் உடனே கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்[3]

போலீஸார் வருவது, விசாரிப்பது, கைது செய்து கொண்டு செல்வது: இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீஸார் சென்று விசாரித்தனர்[4]. இதில் முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்த வேல், சேவல் கொடியுள்ள 2 வேல்கள் மற்றும் உபகாரப் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது[5]. அப்படியென்றால் திருடப் பட்டது என்றாகிறது. கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் சத்தம் கேட்டதால் சென்று பார்த்துள்ளனர்[6]. அப்போது, அங்கு பதுங்கி இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்[7](இப்படி மிக்க மரியாதையுடன் ஊடகத்தால் வெளியிட்டுள்ளனர்). இதில், பிடிபட்ட நபர் அவிநாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடையை சேர்ந்த சரவணபாரதி (32) என்பது தெரியவந்தது[8]. மேலும், இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும், 22-05-2023 அன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது[9]. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிசிடிவி பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடப் படவில்லை.

வாக்குமூலத்தில் தான் பைத்தியம் என்பது போல சொல்வது: இதற்கிடையே, சரவணபாரதி அளித்த வாக்குமூலத்தில், “தன்னை சிலர் தாக்கிவிட்டதாகவும், தான் முன்பே இறந்துவிட்டேன். தற்போது ஆவியாக உள்ளே வந்தேன்,” என்றார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், “அவர் ஏற்கெனவே மனநல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதால், தற்போது அவர் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாரா அல்லது பிடிபட்டவுடன் நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்” என்றனர்.  “அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று சொல்லி விட்டு, அந்த ஆள் பைத்தியம் என்பது போல குறிப்பிடுவதும், ஊடகங்கள், அப்படியே செய்திகள் வெளியிடுவதும் தமாஷாக இருக்கிறது.

இந்து அமைப்புகள் போராட்டம்: முன்னதாக, தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பினர், கோயில் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால், கோயிலில் நேற்று கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை[11]. பக்தர்களும் அனுமதிக்கப்படாததால் வேதனையடைந்தனர்[12]. மேலும், கோயிலில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து, கோவை – அவிநாசி நெடுஞ்சாலையில் இந்து அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[13]. அப்போது, அங்கிருந்த கடைகளை மூடக் கூறியும், சாலையோரம் இருந்தவர்களை மறியலில் ஈடுபட வலியுறுத்தியும் பேசினர்[14]. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது[15]. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால், 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்[16]. இங்கு மட்டும் போலீஸார் சரியாக வேலை செய்து விடுவர்.

பரிகார பூஜைகள் நடந்த பிறகு கோவில் திறக்கப் பட்டது: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், வரதாசல அடிகளார், காமாட்சி தாச சுவாமிகள், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று பார்வையிட்டனர். அவிநாசி எம்எல்ஏ ப.தனபால் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு கோவில் கருவறை மற்றும் சன்னதிகளில், அந்நபர் புகுந்தால், பிராயச்சித்த ஹோமம் செய்யப்பட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் செந்திலாண்டவர் சன்னதிகளில் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன[17]. அதன்பின், 12 மணியளவில், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டடனர்[18]. ஆனால், இவ்வளவு நடந்தும், இந்து அறநிலையத் துறை அமைச்சரோ அல்லது பொறுப்பான மற்ற எந்த அதிகாரியோ எதையும் சொல்லவில்லை, பேசவில்லை, கண்டுகொள்லாமல் இருந்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

26-05-2023


[1] தமிழ்.இந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி; சிலைகள் சேதம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்தவர் பிடிபட்டார், செய்திப்பிரிவு, Published : 24 May 2023 06:19 AM, Last Updated : 24 May 2023 06:19 AM

[2] https://www.hindutamil.in/news/crime/995254-avinashilingeswarar-temple-robbery-attempt-damage-to-idols.html

[3] தினமணி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி, By DIN |  Published On : 23rd May 2023 09:30 AM  |   Last Updated : 23rd May 2023 11:07 AM

[4] https://www.dinamani.com/tamilnadu/2023/may/23/robbery-attempt-at-avinasi-lingeswarar-temple-4010345.html

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Avinashi Lingam Temple: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி; ஒருவர் கைது, Pandeeswari Gurusamy, 23 May 2023, 13:35 IST

[6] https://tamil.hindustantimes.com/astrology/avinashilingeswarar-temple-robbery-attempt-one-arrested-131684828784555.html

[7] சமயம்.காம், பிரபல அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு முயற்சி; கோவிலுக்குள் மறைந்திருந்த நபர் கைது!, Ramya Subburaj | Samayam Tamil | Updated: 23 May 2023, 11:14 am.

[8] https://tamil.samayam.com/latest-news/tiruppur/burglary-attempt-at-avinashi-lingeswarar-temple/articleshow/100437682.cms

[9] தமிழ்.18.நியூஸ், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சிலைகள் சேதம்.. கோபுரத்தில் பதுங்கி இருந்த நபர் கைது, Reported By :BALAJI BHASKAR, Published By :Raj Kumar, LAST UPDATED : MAY 23, 2023, 17:57 IST, First published: May 23, 2023, 17:40 IST

[10] https://tamil.news18.com/tiruppur/thief-caught-while-trying-to-steal-in-avinasi-lingeswarar-temple-988834.html

[11] இ.டிவி.பாரத், பிரசித்திபெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட முயற்சிகுற்றவாளி கைது!, Published: May 23, 2023, 1:33 PM.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/a-robbery-attempt-is-underway-at-the-famous-avinashi-lingeswarar-temple-in-coimbatore-district/tamil-nadu20230523133242190190881

[13] மாலை மலர், அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிலைகள்கலசங்கள் உடைப்பு, ஆபரணங்கள் திருட்டுமர்மநபர்கள் கைவரிசை, By மாலை மலர், 23 மே 2023 3:16 PM; https://www.maalaimalar.com/news/district/will-security-be-strengthened-612957

[14] https://www.maalaimalar.com/news/district/will-security-be-strengthened-612957

[15] தினகரன், அவிநாசி கோயிலுக்குள் புகுந்து சிலைகள், கலசங்கள் உடைப்பு: வாலிபர் கைது, MAY 24, 2023; https://m.dinakaran.com/article//1133402/amp

[16] https://m.dinakaran.com/article//1133402/amp

[17] தினமலர், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கோபுர சிலைகள் திருட முயற்சி, மாற்றம் செய்த நாள்: மே 23,2023 19:12

[18] https://m.dinamalar.com/detail.php?id=3328403