Archive for the ‘கௌமூத்ர மாநிலங்கள்’ Category

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டல், வெள்ள நிவாரண நிதி – எல்லாம் அரசியலா, தேர்தல் கூட்டணியா, மக்களுக்கு உதவுவதற்காகவா? (3)

திசெம்பர் 12, 2023

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டல், வெள்ள நிவாரண நிதிஎல்லாம் அரசியலா, தேர்தல் கூட்டணியா, மக்களுக்கு உதவுவதற்காகவா? (3)

தி.மு.., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்: தி.மு.க., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்[1] [இந்த விசயத்தை ஒழுங்காக சொல்லியிருக்கிறார் எனலாம்]. அவர்கள் ஹிந்து மதத்தை துறந்துவிட்டனரா? கிறிஸ்தவ மதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டால், பிறகு எப்படி ஹிந்து மதத்தை விமர்சிக்கின்றனர்?[2] ஹிந்து மதத்தை பிடிக்காதவர்கள், வேறு மதத்திற்கு சென்றுவிடுவதுடன்[3], விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்[4]. இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு கண்டிப்பான சட்டத்தை இயற்ற வேண்டும் அல்லது ஹிந்து மதத்தின் கண்ணியம் அழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்[5]. சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற நிலைக்கு பேசியுள்ளதை கவனிக்க வேண்டும். உபியைப் பொறுத்த வரையில் இந்துவிரோதம் வைத்து தேர்தலில் நிற்க முடியாது.

செந்தில்குமார் மீது முதல்வர் மு..ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்: இந்த விவகாரத்தில் திமுக எம்.பி. செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என மக்களவையில் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்[6]. “ஏற்கெனவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தற்போது செந்தில்குமார் பேசியிருப்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. இது பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுக்கும் முன்பே சரிசெய்துவிட வேண்டும் என நினைத்த தி.மு. தலைமை, உடனடியாக செந்தில்குமாரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி உத்தரவிட்டது. அதனால்தான் அவர் மன்னிப்புக் கேட்டார்,” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்[7]. “செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்,” என்றால், என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

வைகோவின் வக்கலத்தும், ஆதரவும்: ம.தி.மு.க., தலைவர் வைகோவிடம் செய்தியாளர்கள் பதில் கேட்டபோது, ​​செந்தில்குமாரின் கருத்துக்கு வைகோ உடன்பட்டது சர்ச்சையை அதிகப்படுத்தியது[8]. கருத்துகள் குறித்த தனது நிலைப்பாட்டை அழுத்தியபோது, ​​“அவருடன் நான் உடன்படுகிறேன்,” என்று எம்பி வைகோ உறுதிப்படுத்தினார்[9]. செந்தில்குமாரின் இழிவான கருத்துக்கு அவர் ஒப்புதல் அளிக்கிறீர்களா என்று குறிப்பாகக் கேட்டபோது, ​​“ஆம், ஆம், அவர் சொல்வது சரிதான்” என்று வைகோ மீண்டும் கூறினார்[10]. ஸ்டாலின் எதிர்த்த போது, இவர் ஆதரிப்பது விசித்திரமாக இருக்கிறது[11]. இதில் வைகோவின்மனப்பாங்கைக் கவனிக்க வேண்டும், வயதான முதிர்ந்த நிலையிலும், இத்தகைய இழிவான கருத்துக்குஒப்புதல் அளிக்கிறேன் என்றது, திகைப்பாக இருக்கிறது. இவர் கிருத்துவர் என்பதால், அத்தகைய வெறுப்பைக் கக்குகிறாரா என்று தெரியவில்லை. உதயநிதி தான் கிருத்துவர் என்று ஒப்புக் கொண்டு, பிறகு சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதையும் கவனிக்கலாம்.

தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள்: இந்த நிலையில், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.ப. செந்தில்குமார் பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்[12]. சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், “திமுக எம்.பி. கூறிய வார்த்தைகள், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்விலிருந்து வந்தது. அது அவர்களின் தவறான சித்தாந்தத்தின் ஆழமான உணர்விலிருந்து வந்தது.” என தெரிவித்துள்ளார்[13]. பிஜேபி தவிர மற்ற கட்சிகள், சித்தாந்தவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களா, வெஊப்புப் பேச்சைக் கண்டித்தார்களா என்று தெரியவில்லை.

வன்னியர் என்று ஜாதிய ரீதியில் ஆதரிக்கும் போக்கு: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.பி.க்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் துணை நிற்போம் என மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்[14]. செந்தில்குமார் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அவரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்[15]. ஆனால், அதே நேரத்தில் சனாதனம் பற்றி இழிவாக பேசியபோது, இந்த பெண்மணி எதிர்புத் தெரிவித்தாரா, கண்டித்தாரா என்பது தெரியவில்லை. முதலில், இதில் ஜாதியை ஏன் நுழைக்க வேண்டும் என்பது புரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திக-திமுக இந்துவிரோதமாக இருந்து வந்து பல அக்கிரமங்களை செய்து வருவது தெரிந்த விசயமே. பிறகு, இத்தகைய குறுகிய, நோக்கில் ஆதாவு தெரிவித்து வியாக்கியானம் கொடுப்பது திகைப்பாக உள்ளது.

வடக்குதெற்கு விவாதம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே வடக்கு vs தெற்கு என்ற விவாதம் தீயாகப் பரவி வருகிறது. பாஜகவின் சித்தாந்தம் வட இந்தியாவில் மட்டும் ஒர்க்அவுட் ஆவதாகவும் தென்னிந்தியா அதை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் பாஜகவை விமர்சிப்போர் கூறுகின்றனர். அதேநேரம் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இப்படி ‘வடக்கு vs தெற்கு’ என்ற விவாதத்தைக் கிளப்பி நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகவும் தேர்தல் தோல்வியை ஏற்க முடியாதவர்களே இப்படிக் கூறி வருவதாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்[16]. மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “அவர்கள் தங்கள் ஆணவம், பொய்கள், அவநம்பிக்கைகள் மற்றும் அறியாமை ஆகியவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஆனால்… அவர்களின் பிரிவினைத் திட்டத்தில் இருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 70 ஆண்டுக்கால பழைய பழக்கம் அவ்வளவு எளிதில் போய்விடாது.. மக்களின் தேர்வு இதுதான். இனி பல முடிவுகள் இப்படிதான் இருக்கும் தயாராகுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்[17].

வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது: “வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது,” என்று அண்ணாதுரை சொன்னது எல்லாம் நினைவுக்கு இருக்கலாம். கருணாநிதி “மாநில சுயயாட்சி” என்றெல்லாம் பேசியதும் அதே தொணியில் தான். இன்றும், இந்தி-தமிழ், தமிழ்-தெலுங்கு, குலுடி-வடுகன் என்றெல்லாம் பேசுவதும்-எழுதுவதும் அதே பிரிவினை நோக்கில் தான் தொடர்ந்து வருகிறது. இந்து-எதிர்ப்பு, “சைவம்” போர்வையிலும் நடக்க ஆரம்பித்து விட்டது. “மைனாரிட்டி” என்று ஆரம்பித்து, “நாங்கள் இந்துக்கள் அல்ல,” என்ற கோஷத்தில் வந்து முடிந்துள்ளது.  ஆகவே, பிரிவினைவாதம், இந்து-விரோதம், இந்திய-விரோதம், தேச-விரோதம் எல்லாம் எந்த உருவிலும், பேனரிலும், சொல்லாடல்களிலும், சித்தாந்தங்களிலும் வெளிப் படும்.

© வேதபிரகாஷ்

08-12-2023


[1] https://kamadenu.hindutamil.in/politics/samajwadi-condemns-dmk-to-stop-denigrating-hinduism

[2] நியூஸ்7.தமிழ், மக்களவையில் இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு | வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்!, by Web EditorDecember 6, 2023.

[3] https://news7tamil.live/controversy-about-hindi-speaking-states-in-lok-sabha-dmk-mp-senthilkumar-expressed-regret.html

[4] ஐபிசி.தமிழ்நாடு, மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி; முதல்வர் கண்டனம்திமுக எம்.பி. மன்னிப்பு!,  By Sumathi, 06-12-2023

[5] https://ibctamilnadu.com/article/gaumutra-dmk-mp-senthilkumar-contro-speech-1701837946

[6] விகடன், கழுகார் அப்டேட்ஸ்: எம்.பியை மன்னிப்புக்கேட்க வைத்த திமுக|வெள்ளம், அதிகாரியை கப்சிப் ஆக்கிய அமைச்சர், கழுகார், Published: 07-12-2023 at 1 PM; Updated: 07-12-2023 at 5 PM.

[7] https://www.vikatan.com/government-and-politics/kazhugar-updates-on-senthil-kumar-mp-issue-and-other-political-happenings

[8] தினமலர், திமுக எம்.பி.,யின் சர்ச்சை பேச்சு: ஸ்டாலின் எதிர்ப்பு: வைகோ ஆதரவு, பதிவு செய்த நாள்: டிச 06,2023 14:39.

[9] https://m.dinamalar.com/detail.php?id=3497549

[10] கதிர்.நியூஸ், வட மாநிலங்கள் தொடர்பான தி.மு. எம்.பி யின்பசு கோமியம்மாநிலங்கள் சர்ச்சை பேச்சுக்கு உடன்பட்ட வைகோ!, By : Karthiga |  8 Dec 2023 12:15 PM.

[11] https://kathir.news/news/vaiko-agreed-to-the-dmk-mps-cow-komiam-state-dispute-talk-regarding-northern-states-1508302

[12] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் உணர்வு: செந்தில்குமார் எம்.பி.யை விளாசிய அண்ணாமலை!, Manikanda Prabu, First Published Dec 6, 2023, 4:50 PM IST.

[13] https://tamil.asianetnews.com/tamilnadu/word-uttered-by-the-dmk-mp-came-from-a-deep-sense-of-seeing-india-the-wrong-way-alleges-annamalai-smp-s58stk

[14] தமிழ்.ஒன்.இந்தியா, செந்தில்குமார் எம்.பி. வன்னியர் என்பதால் அவர் மீது வன்மத்தை கக்குவதா? காடுவெட்டி குரு மகள் ஆதங்கம்!, By Arsath Kan, Published: Thursday, December 7, 2023, 13:32 [IST].

[15] https://tamil.oneindia.com/news/chennai/kaduvetti-guru-daughter-virudhambigai-support-dharmapuri-member-of-parliament-senthilkumar-563839.html

[16] தமிழ்.ஒன்.இந்தியா, “வடக்கு vs தெற்கு..” பற்றி எரியும் விவாதம்! வசமாக வந்து சிக்கிய திமுக! கொந்தளித்த மோடி! என்ன நடந்தது By Vigneshkumar Updated: Wednesday, December 6, 2023, 16:57 [IST]

[17] https://tamil.oneindia.com/news/delhi/what-is-north-vs-south-debate-that-is-now-becoming-national-level-debate-563633.html?story=2

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கோரல், பிஜேபி அல்லாத கட்சிகள் எதிர்ப்பு – நிதர்சனமா, தேர்தல் யுக்தியா? (1)

திசெம்பர் 12, 2023

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கோரல், பிஜேபி அல்லாத கட்சிகள் எதிர்ப்புநிதர்சனமா, தேர்தல் யுக்தியா? (1)

04-12-2023 முதல் 22-12-2023 வரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டம்: திமுக, திமுக ஆதரவு எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் ஏதாவது ஒரு விதத்தில் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்ள எதையாவது பேசுவது என்பதனை கொள்கையாகக் கொண்டுள்ளனர் என்பதை அறியலாம். இதற்கு, ஏ. ராஜா, திருமாவளவன், வெங்கடேசன் முதலியோரை உதாரணமாக சொல்லலாம். தமிழில் பேசுவது என்பது மட்டுமல்லாது, திராவிடம்-ஆரியம், வடக்கு-தெற்கு, இந்தி-தமிழ், பெரியாரிஸம்-நாத்திகம் என்று பேசி பிரிவினை நோக்கில் கருத்துத் தெரிவிப்பர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா பற்றிய விவாதத்தில் மறுபடியும் அத்தகையப் பிரச்சினை உண்டாகியது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது[1]. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது[2]. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

திமுக செந்தில்குமாரின் அநாகரிகமான இந்துவிரோத பேச்சு: இதனையடுத்து, நேற்று (05-12-23) இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.  ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா விவாதத்தில், மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. செந்தில் குமார், “இந்தி  பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் தான் பா.. பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவான கெளமூத்ரா என்று தான் சொல்வோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா...வால் ஆட்சியை கைப்பற்ற முடியாது,” என்று பேசினார். திமுக எம்.பி. செந்தில் குமார், பா.ஜ.க வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசிய போது பயன்படுத்திய வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பியது. தேசிய ஒற்றுமை, இந்திய மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மூலம் அமைதி மேலோங்க வேண்டும் என்றெல்லாம் நல்லமுறையில் விவாதிப்பதை விடுத்து, இத்தகைய கேவலமான சொல்லாடலை உபயோகித்ததை, பெரும்பாலான எம்.பிக்களை கோபமூட்டுவதாக இருந்தது.

காங்கிரஸ், சமஜ்வாதி கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தது: செந்தில் குமார் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் செந்தில் குமார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், செந்தில் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.கவினர் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில், செந்தில் குமார் அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருகிறது என்பதால் நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.  வழக்கம் போல மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், அவரின் நிலை, சித்தாந்தம், இந்துவிரோத சிந்தனை எல்லாம் மாறிவிட்டதா என்று கவனிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எல்லோரும் கேட்டு விட்டார்கள், அவரது விரோத-சிந்தனை கோடிக் கணக்கான இந்தியர்களுக்குத் தெரிந்து விட்டது, இதனால், அரசியல் நஷ்டம் உண்டாகும் என்ற பயத்தில், மன்னிப்புக் கேட்டுள்ளது தெரிகிறது. ஏனெனில், விகடன், அந்த ஆள் அப்படியில்லையே என்ற தொணியில் செய்தி வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம்.

கோமூத்திரம் / பசுவின் சிறுநீர் பேச்சு: ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா விவாதத்தில் டிசம்பர் 5ம் தேதி பங்கேற்று பேசிய தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் செந்தில்குமார், ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவது குறித்து குறிப்பிட்டபோது[3], “வடக்கே இந்துத்துவாவை ஆதரிக்கும் மாநிலங்கள் அல்லது நாங்கள்மாட்டு மூத்திர மாநிலங்கள்என்று அழைக்கும் மாநிலங்களில்தான் பா.. வெற்றிபெற முடியும். தென்னிந்தியாவுக்குள் பா..வால் வரவே முடியாது,” கௌ மூத்ரா (கோ மூத்ரா) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்[4]. அந்த வார்த்தை பின்னர் அவைக் குறிப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு நீக்கப்பட்டது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் கூறிய கருத்துக்கு மக்களவையில் பாஜக உறுப்பினர்களும் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.பி. செந்தில்குமார் பேசியது தொடர்பாகப் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘கோ மூத்திர மாநிலங்கள்தொடர்பாக, மக்களவையில் அவர் பேசியதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது சொந்த கருத்து. ஆனால், கௌமுத்ராவை நாங்கள் மதிக்கிறோம்,” எனப் பதில் தந்துள்ளார்[5].

காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கௌமதாவையும் நம்புகிறது: மற்றொரு காங்கிரஸ் எம்.பியான ராஜீவ் சுக்லா[6], “திமுகவின் அரசியல் வேறு. காங்கிரஸின் அரசியல் வேறு. இந்த விஷயத்தில் காங்கிரஸ் உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கௌமதாவையும் நம்புகிறது. நாங்களும் நம்புகிறோம். அனைத்து மதத்தினரையும் இணைத்து முன்னேறுவோம்,” எனத் தெரிவித்துள்ளார்[7]. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிரிஷ்ணம் கூறுகையில், “திமுக தலைவர்கள் தொடர்ந்து இதோபோன்று சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருந்தால், பாஜக “கோ மூத்திர மாநிலங்கள்” மட்டுமல்ல அனைத்து மாநிலங்களில் ஆட்சி அமைக்கும்,” என்று கூறினார்[8]. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்.பி, கார்தி சிதம்பரம்[9], “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் தாம் பேசிய கருத்துகளை திரும்ப பெற வேண்டும்” என கூறி இருந்தார்[10]. இவர் சனாதன தர்மம் விவகாரத்திலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது[11]. இதனால் ஏற்பட்ட அமளியால் கேள்வி நேரம் 06-12-2023 புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது[12].

மன்னிப்புப் போர்வையில் அமுக்கி வசிக்கும் திமுக: ஆக காங்கிரஸ், சமஜ்வடி கட்சிகளுக்கு தங்களுக்கு இருக்கும் இந்து ஓட்டுகளும் போய் விடுமோ என்ற பயம் வந்து விட்டது. இனியும் இந்த இந்துவிரோத திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தால், நிச்சயமாக, வடமாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்பது அக்கட்சிகளுக்குத் தெரிந்து விட்டது. முஸ்லிம் ஓட்டு இருக்கிறது, அதனால், இந்து ஓட்டும் கிடைக்கும் என்று மம்தா உறுதியுடன் இருப்பதால், திமுக-கூட்டுப் பற்றி கவலைப் படுவது இல்லை. ஆம்-ஆத்மி மட்டும் சீக்கியர் ஆதரவு முதலியன இருப்பதால், இதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. எனவே, கடைசியில் பாதிப்பு திமுகவிற்குத் தான். ஆகவே தான், “மன்னிப்பு” போர்வையில், அமுக்கி வாசிக்க தீர்மானித்துள்ளது. போதா குறைக்கு வெள்ளம்-நிவாரணம் போன்ற பிரச்சினைகள் இருப்பதால், மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால் பணமும் கிடைக்காது என்பதும் தெரியும்.

© வேதபிரகாஷ்

08-12-2023


[1] நக்கீரன், நாடாளுமன்றத்தில் சர்ச்சை பேச்சு; “மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – செந்தில் குமார் எம்.பி,  நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 06/12/2023 | Edited on 06/12/2023

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/india/controversial-speech-parliament-and-senthil-kumar-mp-says-i-beg-your-pardon

[3] தினமணி, திமுக எம்.பி. செந்தில்குமார் கருத்தால் மக்களவையில் அமளி, By நமது சிறப்பு நிருபர்  |   Published On : 07th December 2023 03:09 AM  |   Last Updated : 07th December 2023 03:09 AM.

[4] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2023/dec/07/lok-sabha-by-dmk-mp-senthilkumar-4118398.html

[5] புதியதலைமுறை, PT National : “வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்“- திமுக எம்பி செந்தில்குமார்! பிரதமர் மோடி ட்வீட்!, PT Web, 06 December 2023, 10:44 pm.

[6] https://www.puthiyathalaimurai.com/india/today-pt-national-news

[7] புதியதலைமுறை, வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்“- திமுக எம்பி செந்தில்குமார்!, PT Web, 06 December 2023, 10:44 pm.

[8] https://www.puthiyathalaimurai.com/india/dmk-mp-senthilkumar-stokes-controvers-on-bjp-won?utm_source=website&utm_medium=related-stories

[9] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Gomutra: திமுக எம்.பியின் சர்ச்சை பேச்சு! வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டார், Kathiravan V HT Tamil, Dec 06, 2023 11:44 AM IST

[10] https://tamil.hindustantimes.com/tamilnadu/dmk-mp-senthil-kumars-gomutra-states-controversy-zoho-ceo-sridhar-vembu-apologizes-to-north-indians-131701842415756.html

[11] மாலைமலர், கோமூத்ரா மாநிலங்கள்என்று சர்ச்சை பேச்சுசெந்தில்குமார் மன்னிப்பு கேட்டார், By Maalaimalar .6 டிசம்பர் 2023 12:36 PM (Updated: 6 டிசம்பர் 2023 1:22 PM).

[12] https://www.maalaimalar.com/news/national/tamil-news-dmks-controversial-talk-of-gaumutra-states-691922