Archive for the ‘நபி’ Category

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது, பாடகர்கள் எதிர்ப்பு, அரசியல்வாதிகள் ஆதரவு, அரசியலாக்கப் பட்டுள்ள நிலை (1)

மார்ச் 25, 2024

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது, பாடகர்கள் எதிர்ப்பு, அரசியல்வாதிகள் ஆதரவு, அரசியலாக்கப் பட்டுள்ள நிலை (1)

கர்நாடக பாடகர்களுக்கு ஆண்டுதோறும் விருது: திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பாடகர்களின் போட்டி போல, கர்நாடக பாடகர்களிடம் இப்பொழுது, ஒரு விவகாரம் எழுந்துள்ளது. கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் யாருக்குக் கொடுக்கப் பட்டது, ஏன் கொடுக்கப் பட்டது, என்று யாரும் கவலைப் படவில்லை. ஊடகங்களும் செய்திகள் வெளியிடவில்லை. சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில் வழங்கப்படும் இந்த விருந்தானது கடந்த ஆண்டு 2023 பாம்பே ஜெய் ஸ்ரீ-க்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான 2024 – விருது பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு சிலர் தற்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

2024ம் ஆண்டு விருது சர்ச்சைக்குண்டானது: குறிப்பாக கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் இந்த விவகாரத்தில் தங்களது எதிர்ப்பை முன்வைத்துள்ளனர். காரணம் டி.எம்.கிருஷ்ணா ஆன்மீகத்துக்கு எதிராகவும், பெரியார் குறித்து ஆதரவாகவும் பேசியதாக தெரிவித்துள்ளனர். மேலும் பெரியாரை புகழ்ந்து பேசியவருக்கு இந்த விருது வழங்கப்படக்கூடாது என்றும், வழங்கப்பட்டால் தாங்கள் இசைக்கச்சேரிகளை புறக்கணிப்பதாகவும் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாக மாறியுள்ளது. தொடர்ந்து இவருக்கு சிலர் எதிர்ப்புகள் தெரிவித்து வந்தாலும், பலரும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் இசைக்கு மொழி எப்படி கிடையாதோ, அது போல் திறமை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவரது சொந்த கருத்துகளை ஒரு கலை விருது அறிவிப்புக்குள் திணித்து அவருக்கு எதிர்ப்புகள் தெரிவிக்க கூடாது என்று பலரும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக பாடகிகள் ரஞ்சனிகாயத்ரி கடிதமும், என்.முரளியின் பதிலும்: கர்நாடக பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை மியூசிக் அகாதெமி தலைவர் என். முரளிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர்[1]. அந்த கடிதத்தை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருந்தனர்[2]. சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கான ஒரே அளவுகோல், ஒருவர் தனது வாழ்நாள் முழுக்க இசைக்கான பணியில் நீடித்து ஈடுபடுவதும், அவரது இசைத் திறனும்தான் என்று பாடகிகள் ரஞ்சனி-காயத்ரிக்கு மியூசிக் அகாதமி தலைவர் சற்று காட்டமாகவே பதிலளித்துள்ளார். தனக்கு எழுதிய கடிதத்தை சமூக தளத்தில் பதிவு செய்திருந்தது நாகரீகமான செயல் அல்ல என்றும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தைகள் மற்றும் அர்த்தங்கள் மிக மோசமானதாக அமைந்திருந்ததால் அதிருப்தி அடைந்ததாகவும் குறிப்பிட்ட என். முரளி, அவர்களது கடிதத்துக்கு காட்டமாக ஒரு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் முரளி கூறியிருப்பதாவது, பாடகிகள் ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள், மியூசிக் அகாதெமிக்கு அனுப்பியிருக்கும் கடிதம் தேவையற்ற மற்றும் அவதூறான கூற்றுக்கள் மற்றும் அவதூறுகளை தூண்டும் வகையில், மரியாதைக்குரிய மூத்த சக-இசைக்கலைஞருக்கு எதிரான கடுஞ்சொற்கள் நிரம்பியதாக இருக்கிறது.

செயற்குழுவால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது: டி.எம். கிருஷ்ணா, சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, மார்கழி மாதத்தில் நடைபெறும் இசைக் கச்சேரியில் கலந்துகொள்ள மாட்டோம் என்று பாடகிகள் எடுத்திருக்கும் முடிவானது, இசைக் கலைஞர்களுக்கு ஏற்புடையது அல்ல என்றும் மிக மோசமான செயல் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவரது இசைத் திறனை அடிப்படையாக வைத்தே விருது வழங்கப்படுவதாகவும், இந்த ஆண்டு டி.எம். கிருஷ்ணாவுக்கு, அவரது வெளிப்படையான, ரசிகர்களிடையே இருக்கும் செல்வாக்கு, விதிவிலக்கான இசை வாழ்க்கைக்காகவே செயற்குழுவால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது[3]. இவர்களுக்கு எல்லாம் மேலாக, சித்ரவீணை ரவிக்கிரண் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மியூசிக் அகாதெமி தனக்கு வழங்கிய சங்கீத கலாநிதி விருதை திருப்பித் தர முடிவு செய்திருக்கிறேன் என்றும், எதையும் விட கொள்கை முக்கியம் என்பதை பரிசீலித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்[4].

விருதுகள் பரிந்துரைக்கும் பொழுது, அரசியல் கலக்கும் நிலையுள்ளது: இங்கு பெரியாரைக் குறிப்பிட்டது, விமர்சனமாகக் கொண்டு, திமுகவினர் – கனிமொழி, ஸ்டாலின் மற்றும் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்[5]. அது மோசமான விமர்சனம், என்றால், அதற்கு அவர்கள் எவ்வாறு விளக்கம் கொடுக்கப் போகிறார்கள்[6]. சொல்லப் பட்ட விசயம் அவ்வாறில்லை என்று சொல்லாமல், மறுபடியும், பிராமண விமர்சனம் என்று தான் திசைமாறியுள்ளது. அகடமி தரப்பிலும்கண்டனம் தெரிவிக்கப் பட்டது[7]. தலைவர் முதலியோரும் கண்டித்துள்ளனர்[8]. இது சிறிய உள்-விவகாரம் என்றால், இந்த அளவுக்கு, இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விசயம், அவசரம், அவசியம் இல்லை. ஆக, அரசியல் ரீதியில் ஏதோ உள்-நோக்கத்துடன் வ்வகாரம் இருக்கிறது என்று தெரிகிறது. பொதுவாக, விருதுகள் எல்லாம் பரிந்துரைக்கப் படுகின்றன. அவ்வகையில், திறமை, அனுபவம் எல்லாம் இருந்தாலும் கூட, பரிந்துரை தேவைப் படுகிறது. அந்நிலையில், ஒவ்வொரு வகைக்கும் விருது கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம்வரும்பொழுது, செக்யூலரிஸத்தனமாக, இம்முடிவை எடுத்திருக்கலாம்.

TM கிருஷ்ணா விவகாரம் : பெரியார் குறித்த பேச்சு – “இசையில் அரசியலை கலக்க வேண்டாம்” – முதலமைச்சர் கருத்து![9]: இந்த நிலையில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டன கருத்தையும், டி.எம்.கிருஷ்ணாவுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்[10]. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் மியூசிக் அகாடமியின்சங்கீத கலாநிதிவிருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்[11]. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது[12]. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல[13]. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்[14]. கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்[15]. டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது[16]. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்![17] விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!,” என்று குறிப்பிட்டுள்ளார்[18].

© வேதபிரகாஷ்

23-03-2024


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Ranjani – Gayathri Issue: பெரியாரை போற்றிய டி.எம்.கிருஷ்ணா.. சங்கீத அகாடமி மாநாட்டை புறக்கணிக்கும் ரஞ்சனிகாயத்ரி..,By : ஆர்த்திPUBLISHED AT : 21 MAR 2024 09:18 AM (IST),  | Updated at : 21 Mar 2024 09:24 AM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/popular-carnatic-singers-ranjani-and-gayathri-has-announced-withdrawn-from-98th-music-academy-conference-as-it-is-persuaded-by-t-m-krishna-173947

[3] தினமணி, இசைத் திறனுக்குத்தான் விருது: டி.எம். கிருஷ்ணா விவகாரத்தில் மியூசிக் அகாதெமி விளக்கம், இணையதள செய்திப்பிரிவு, Published on:  22 மார்ச் 2024, 12:05 pm; Updated on:  22 மார்ச் 2024, 12:05 pm

[4] https://www.dinamani.com/tamilnadu/2024/Mar/22/music-academy-slams-vocalists

[5] புதியதலைமுறை, பெரியார், டிஎம் கிருஷ்ணா குறித்த மோசமான விமர்சனம்பாடகர்கள் ரஞ்சனி காயத்ரிக்கு வலுக்கும் எதிர்ப்பு, ரஞ்சனி காயத்ரிடிஎம் கிருஷ்ணா, pt web, Published on: 21 Mar 2024, 11:23 am.

[6] https://www.puthiyathalaimurai.com/india/ranjani-gayatri-contreversial-comment-on-sangeetha-kalanidhi-award-to-tm-krishna

[7] இ.டிவி.பாரத், டி.எம்.கிருஷ்ணா விருது விவகாரம்; பாடகர்கள் ரஞ்சனி, காயத்ரிக்கு மியூசிக் அகாடமி கண்டனம்! – TM Krishna Award Issue,By ANI, Published : Mar 21, 2024, 7:41 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!bharat/tm-krishna-award-issue-music-academy-condemns-singers-ranjani-gayathri-tns24032105556

[9] கலைஞர்.செய்திகள், TM கிருஷ்ணா விவகாரம் : பெரியார் குறித்த பேச்சு – “இசையில் அரசியலை கலக்க வேண்டாம்” – முதலமைச்சர் கருத்து!, KL Reshma, Updated on : 23 March 2024, 11:24 AM.

[10] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2024/03/23/tm-krishna-issue-speech-on-periyar-dont-mix-politics-with-music-cm-mk-stalin-condmens

[11] தமிழ்.இந்து, இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்” – டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து, செய்திப்பிரிவு, Published : 23 Mar 2024 10:47 AM; Last Updated : 23 Mar 2024 10:47 AM

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/1220076-don-t-mix-politics-in-music-chief-minister-stalin-s-comment-on-tm-krishna-issue.html

[13] விகடன், டி.எம்.கிருஷ்ணா விவகாரம்: `அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல இசையிலும்..!”- முதல்வர் ஸ்டாலின், VM மன்சூர் கைரி, Published: 2303-2024 at 11 AM; Updated: 23-03-2024 at 11 AM

[14] https://www.vikatan.com/government-and-politics/cm-stalin-wish-to-musician-tm-krishna-for-sangeetha-kalanithi-award

[15] பிபிசி தமிழ், ‘பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ – இசையுலகில் எதிர்ப்பு ஏன்?,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, 22 மார்ச் 2024

[16] https://www.bbc.com/tamil/articles/c2v98z8xgx1o

[17] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், TM Krishna: ’இசையிலும் அரசியலா! பெரியார் மீது அவதூறா!’ பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் மு..ஸ்டாலின் ஆதரவு, Kathiravan V HT Tamil, Mar 23, 2024 11:27 AM IST

[18] https://tamil.hindustantimes.com/tamilnadu/cm-krishnas-support-to-carnatic-music-singer-tm-krishna-131711169992654.html

கருணாநிதி சிவனாகும் போது, சோனியா துர்க்கையாக முடியாதா?

ஜூலை 18, 2010

கருணாநிதி சிவனாகும் போது, சோனியா துர்க்கையாக முடியாதா?

Karu-as-nataraja

Karu-as-nataraja

2007ல் போடப்பட்ட வழக்கை திடீரென்று எடுத்துக் கொண்டு விசாரணை நடத்துவது: முசாபர்பூர் (பீகார்): கடந்த 2007ம் ஆண்டு துர்க்கை வடிவில் சோனியா காந்தி இருப்பது போன்ற போஸ்டர்கள் உ.பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டன. இதையடுத்து முசாபர்பூர் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் சோனியா காந்தியை இந்துக் கடவுளாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியதன் மூலம் இந்து மதத்தை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.

Sonia-as-Durga

Sonia-as-Durga

துர்க்கை வடிவில் போஸ்டர்-சோனியா காந்தி, ரீட்டா பகுகுணாவுக்கு பீகார் கோர்ட் சம்மன்: சோனியா காந்தியை துர்க்கை அம்மன் வடிவில் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பான வழக்கில் சோனியா காந்திக்கும், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணாவுக்கும் பீகார் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஜூலை 29ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளது[1]. இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.ஸ்ரீவத்சவா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக நேரிலோ அல்லது தனது வழக்கறிஞர் மூலமாகவோ சோனியா காந்தியும், ரீட்டா பகுகுணாவும் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்[2].

இந்தியாவில் செக்யூலரிஸம் பேசுபவர்கள், அதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்கள், அதில் ஊறித்திளைத்த மேதாவிகள், தினமும் நாக்கில் நக்கிக் கொண்டு நவிலும் அறிவுஜீவி நாயகர்கள், எழுதி வர்ய்ம் நாயகங்கள் முதலியோர் இப்படியெல்லாம் நடக்கும் போது காணாமல் போய்விடுவார்கள் அல்லது ஒன்றுமே நடக்காத மாதிரி இருந்து விடுவர்.

கருத்து சுதந்திரம் என்பார்கள், ஆனால் அப்படி எல்லொருமே தங்களது கருத்துகளை வெளியிடலாமா என்றால் கூடாது, முடியாது என்பார்கள். ஆனால், இந்த ஒட்டு மொத்த உரிமையாளர்கள் மட்டும் ஹிட்லரைப்போல எதேச்சாதிகாரமாக பேசலாம் எழுதலாம், வரையலாம், …………………………………..!


[1] http://timesofindia.indiatimes.com/city/patna/Court-summons-Sonia-in-Durga-poster-case/articleshow/6182563.cms

[2] துர்க்கை வடிவில் போஸ்டர்-சோனியா காந்தி, ரீட்டா பகுகுணாவுக்கு பீகார் கோர்ட் சம்மன், சனிக்கிழமை, ஜூலை 17, 2010