Archive for the ‘சங்கி’ Category

ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர் தாக்கப் பட்டது முறையற்றது – இனிமேலும் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது (2)

திசெம்பர் 13, 2023

ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர் தாக்கப் பட்டது முறையற்றதுஇனிமேலும் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது (2)

சம்பவம் தொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்[1]: நேற்று [12-12-2023] காலை 7:00 மணி அளவில், பக்தர்கள் வரிசையில் நின்ற ஆந்திராவைச் சேர்ந்த 34 பேர், காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்துள்ளனர்[2]; உண்டியலையும் பிடித்து இழுத்து ஆட்டி உள்ளனர். இதை தட்டிக்கேட்ட கோவில் பணியாளர் தலை முடியை பிடித்து, அதே உண்டியலில் மோதச் செய்தனர்[3]. தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தட்டிக் கேட்ட போலீஸ்காரரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்[4]. மற்ற பக்தர்களையும் தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கம் அளித்தனர். காயமடைந்த தற்காலிக பணியாளர்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. இதில் பக்தர்களின் நிலை பற்றி ஒன்றும் குறிப்பிடாமல், அந்த “தற்காலிக ஊழியர்களுக்கு” ஆதரவாக / வக்காலத்து வாங்கியது போலத்தான் உள்ளது.

இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டது: இதற்கிடையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் பக்தர்கள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியதால், ரெங்கா ரெங்கா கோபுரம் முன், ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ., கட்சியினர், அறநிலையத்துறையினரை கண்டித்தும், பக்தர்களை தாக்கியவர்கள் மீது நடநவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ராஜகோபுரம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி கோட்ட செயலர் போஜராஜன், விஸ்வ ஹிந்து பரிஷத் தென் மாநில அமைப்பாளர் சேதுராமன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், 200 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஹிந்து முன்னணி கோட்ட செயலர் போஜராஜன் கூறியதாவது: “ஸ்ரீரங்கம் கோவில், ரெங்கநாதர் சன்னிதி முன், ரத்த அபிஷேகம் செய்தது போல நடந்துள்ளது. சம்பவம் குறித்து கேட்க சென்ற போது, அதிகாரிகள் பேசக்கூட தயாராக இல்லை. அய்யப்ப பக்தர்களை அடித்து, ரத்தம் சிந்த வைத்துள்ளனர். பக்தர்கள் தவறு செய்திருந்தால், ‘சிசிடிவிகேமரா பதிவுகளை காட்டி நிரூபித்திருக்க வேண்டும். அய்யப்ப பக்தர்கள் தவறு செய்ததாக கூறும் அறநிலையத் துறை அதிகாரிகள், சம்பவம் குறித்த உண்மையை சொல்லாவிட்டால், போராட்டம் தொடரும்,” இவ்வாறு அவர் கூறினார். இருதரப்பு வர்ணனை மற்றும் நிலவரம் வைத்துப் பார்க்கும் பொழுது, பக்தரை எவ்வாறு ரத்தம் சொட்ட அடித்தனர் என்ற கேள்வி தான் எழுகின்றது. “கோவிந்தா, கோவிந்தா,” என்று கூவக் கூடாது என்று எப்படி கட்டுப்பாடு விதிக்கலாம் என்று தெரியவில்லை.

தற்காலிக பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்: ஸ்ரீரங்கம் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டது குறித்து, பா.ஜ., சமூக ஊடக பிரிவு மாநில செயலர் புகழ் மச்சேந்திரன் கூறியதாவது[5]: ஸ்ரீரங்கம் மூலஸ்தானத்தில் இன்று ரத்தம் சிந்தியுள்ளது. சிந்தியவர்கள் அய்யப்ப பக்தர்கள். அவர்களை தாக்கியவர்கள் தற்காலிக பணியில் சேர்க்கப்பட்ட 11 காவலர்கள். ஏற்கனவே கோவில் காவல் பணிக்கு, 40 பேர் உள்ளனர்[6]. அவர்களை விடுத்து, தற்காலிக பணிக்கு ஆட்களை நியமித்தது ஏன்? ஓராண்டுக்கு முன் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்ட சிலர் கோவிலுக்குள் சென்று, நிர்வாகத்துக்கு எதிராக கேள்வி எழுப்பினர்; இது சர்ச்சையானது. மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கவே, தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களிடம் தலா, 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கியதாக புகாரும் உள்ளது. கடந்த வாரம் கோவிலுக்குள் வந்த பெண் பக்தர் ஒருவரை, சுவாமி கும்பிடும் இடத்தில் ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில், தொடக்கூடாத இடங்களில் தொட்டு இம்சித்ததாக புகார் எழுந்தது. அந்த பெண் கூச்சலிட, அவரை கோவில் நிர்வாகிகள் சமாதனப்படுத்தி அனுப்பி உள்ளனர். கோவில் பாதுகாப்புக்கு என்று கூறி, ரவுடிகள் போல செயல்படும் நபர்கள் எதற்கு? ஸ்ரீரங்கத்தை விட திருப்பதி கோவிலில் பக்தர் கூட்டம் அதிகம். ஆனால், அங்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் எழுவதில்லை. தற்காலிக பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை கண்டனம்: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்[7]. அவரது அறிக்கை: ஹிந்து சமய அறநிலைய துறையின் ஆணவம், கோவில் நிர்வாகத்தில் இருந்து அறநிலைய துறை வெளியேற வேண்டும் என, தமிழக பா.ஜ., கூறுவதற்கான காரணங்களில் ஒன்று. ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், அறநிலைய துறையை கண்டித்தும், திருச்சி மாவட்ட பா.ஜ.,வினர், கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்துவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[8].

பா.., ஆட்சிக்கு வந்தால் அறநிலைய துறை இருக்காது: மத்திய இணை அமைச்சர் முருகனின் அறிக்கை: ஆந்திராவை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், இன்று காலை, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள், நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில், வேண்டிய சிலரை மட்டும் ஊழியர்கள் அனுப்பியபடி இருந்துள்ளனர். இதை கேட்ட பக்தர்கள் மீது, ஊழியர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக, சென்னா ராவ் என்பவரை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில், மூக்கில் காயம் ஏற்பட்ட ராவ், ரத்தம் சொட்ட சொட்ட கோவில் கருவறைக்கு முன் உள்ள காயத்ரி மண்டபத்தில் அமர்ந்துள்ளார். இதை கண்ட சக பக்தர்கள் கோபம் அடைந்து, தகறாறு செய்துள்ளனர். இதனால், ஸ்ரீரங்கம் கோவிலில், அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் ரத்தம் சிந்தியது, மக்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து கோவில்களை நிர்வகிக்க, அறநிலைய துறையே தேவையில்லை என்ற பா.ஜ.,வின் கோரிக்கையை, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன. தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி பொறுப்பில் அமரும்போது, அறநிலைய துறை இருக்காது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

விஐபி தரிசனத்தால் தகராறு? – 12-12-2023 அன்று காலை பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தபோது அவர்களை நிறுத்தி விட்டு[9], சில விஐபிக்களை கோயில் ஊழியர்கள் தரிசனத்துக்காக அழைத்துச் சென்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஆந்திர மாநிலஐயப்ப பக்தர்கள் கோஷமிட்டதால், அவர்களை கோயில் பாதுகாவலர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால்,  இதை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது[10]. ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் 12-12-2023 அன்று மாலை ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி கோட்டத் தலைவர் போஜராஜன் தலைமை வகித்தார். விஹெச்பி மாநில அமைப்பாளர் சேதுராமன், பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், `பக்தர்களைத் தாக்கிய கோயில் பாதுகாவலர்களை கைது செய்ய வேண்டும். கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும்’ என்று முழக்கமிட்டனர். ஶ்ரீரங்கம் கோயில் `ரங்கா ரங்கா’ கோபுரம், ராஜகோபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர், பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்[11]. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீஸார் கைது செய்தனர்[12].

© வேதபிரகாஷ்

13-12-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலா? இந்து சமய அறநிலையத்துறை விளக்கம், By Jeyalakshmi C, Updated: Tuesday, December 12, 2023, 18:12 [IST].

[2] https://tamil.oneindia.com/spirtuality/hrce-explain-what-happened-at-srirangam-ranganatha-swamy-temple-565245.html

[3] தினகரன், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதல்: கோயில் நடை அடைப்பு, December 12, 2023, 10:12 am.

[4] https://www.dinakaran.com/trichy-srirangam-temple-andhra-devotee-attack-walk-block/

[5] தினமலர், அய்யப்ப பக்தர்கள்கோவில் ஊழியர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் அடிதடியால் பரபரப்பு, Updated : டிச 13, 2023  06:17 |  Added : டிச 12, 2023  21:56.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3502190 – :~:text=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%3A%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81,%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.

[7] ஐ.பி.சி.தமிழ்நாடு, ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்அண்ணாமலை கடும் கண்டனம்!, 12-12-2023.

[8] https://ibctamilnadu.com/article/devotees-were-attacked-bjp-annamalai-condemned-1702378916

[9] தமிழ்.இந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர் மீது பாதுகாவலர் தாக்குதல்: 3 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 13 Dec 2023 07:00 AM;  Last Updated : 13 Dec 2023 07:00 AM.

[10] https://www.hindutamil.in/news/crime/1167331-security-guard-attack-on-andhra-ayyappa-devotee.html

[11] தமிழ்.இந்து,  ஐயப்ப பக்தர் மீது தாக்குதல்: இந்து அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம், செய்திப்பிரிவு, Published : 13 Dec 2023 05:31 AM; Last Updated : 13 Dec 2023 05:31 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/1167327-hindu-organizations-protest.html

83-வயதான புகழ் பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

செப்ரெம்பர் 16, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

13-09-2023 அன்று விசிக கொடுத்த புகாரும், ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய தீர்மானித்த போலீஸாரும்: இந்த நிலையில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் மணியன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று ஊடகங்க்ள் குறிப்பிடுகின்றன. அதன் பேரில் மாம்பலம் போலீசார் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 153, 153(A), 505(1)(B), 505 (2), பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, ஆர்பிவிஎஸ் மணியன் என்பவரை கைது செய்யவும் போலீஸார் தீர்மானித்தனர். விடியற்காலையிலேயே அவர்கள் ஆர்பிவிஎஸ் மணியனின் வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தனர். அதன்படியே, அவரது வீட்டிற்குச் சென்றனர்.

14-09-2023 விடியற்காலையில் கைது செய்யப் பட்டது: தியாகராயநகர் உதவி கமிஷனர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார், தியாகராயநகர் ராஜம்மாள் தெருவில் உள்ள மணியன் வீட்டுக்குச் சென்றனர். 14-09-2023 வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை திநகர் போலீசார் ஆர்பிவிஎஸ் மணியனை அவரது இல்லத்தில் கைது செய்தனர்[1]. கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினமலர் கூஊகிறது. இவரை அப்படி “ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த”,  என்ன பெரிய விசயம் இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லா விவரங்களும் வெளிப்படையாக உள்ளநிலையில், அதிலும் 3-4 காலையில் கைது செய்யப் பட்டபோது, யாருக்குத் தெரியப் போகிறது, என்ன பிர்ச்சினை வரப் போகிறது என்று தெரியவில்லை. அந்நிலையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்து முன்னணியின் ஆதரவும், எதிர்ப்பும்:  “83 வயது முதியவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும், அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது,” என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்[3]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “தமிழக அரசின் எண்ணப்படி தொடர்ந்து தமிழக காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை நீதிமன்றமோ, ஊடகமோ கண்டுகொள்ளவில்லை. இது ஜனநாயக படுகொலைக்கு சமம். ஆர்.பி.வி.எஸ். மணியன் தேசியவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர். இன்று குமரியில் நாம் காண்கின்ற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பணிக்காக தான் பார்த்துவந்த அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். விவேகானந்தர் நினைவு மண்டபம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குவதற்கும், குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாய் விளங்குவதற்கும் அந்தக் காலத்தில் ஏக்நாத் ரானடே உடன் தோளோடு தோள் நின்று அடிப்படை அஸ்திவாரமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தை காக்க வாழ்ந்தவர்.

ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் போக்கு: இந்நிலையில், ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி சிலர் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தில் பெரும்பாலானவை பார்ப்பனர் எதிர்ப்பாக, கடுமையாக தூஷணங்களுடன் இருக்கின்றன. வீடியோக்களும் போட ஆரம்பித்து விட்டனர். இந்தப் போக்கை கடந்த சில வருடங்களாகவே பார்க்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைக்கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவை பரப்பப்படுகின்றன. அவர் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும் அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்துக்களின் நம்பிக்கைளை கொச்சைபடுத்திய பல யூடியூப் சேனல்கள், சனாதனத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர்கள், இந்து மதத்தை இழிவு படுத்தியவர்கள், பிரதமர், ஆளுநர் ஆகியோரை‌த் தாக்கிப் பேசியவர்கள் என பலர் மீது பல இடங்களில் புகார் கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழக காவல் துறைக்கும் நீதிமன்றத்துக்கும் குற்றத்தின் தன்மையைவிட குற்றம்சாட்டப்படுபவர் பின்புலம் என்ன என்பதை வைத்துதான் நடவடிக்கை என்பதாக அமைந்துள்ளது. இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆவார். இவரது கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியன்: சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியனை 14 நாள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். வயது மூப்பு கருதி அவரை மருத்துவமனையில் தங்க அனுமதிக்க வேண்டும் என அவர் சார்பில் வக்கீல்கள் வலியுறுத்தினர். பரிசீலிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணியன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சுதாகர், மணியன் மீதான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார். அதற்கு நீதிபதி (மணியனை பார்த்து), உங்கள் மீதான புகார் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என கூறினார்[5]. அதற்கு மணியன், ‘நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்[6]. மணியன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ், ‘மணியனுக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி, மணியனை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இங்கும் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன:

  1. பார்ப்பானை பிரம்ம முஹூர்த்தத்தில் வைத்து கைது செய்தால், யாருக்கு பலன் கிடைக்கும்? நேரத்தைக் குறித்தது கடவுளா, திராவிட அதிகாரியா?
  2. அமாவாசைக்கு முன்னால் பார்ப்பானை கைது செய்தால் அவனது கிரியைகள் கெடுமா, அல்லது பெரியாரிஸ ஆவிகள் துடிக்குமா?
  3. 83 வயதான “கெழப்பய” என்ன ஓடியா போய் விடுவார்? காஷ்மீரில் வீட்டு காவல் வைக்கும் பொழுது, இவரை வைக்க முடியாதா?
  4. இல்லை எங்களுக்கு இணை வைக்காதே, இன்டியா கூட்டணியில் இதை சேர்காதே என்று அவர்கள் மிரட்டினரா, ஆணையிட்டனரா?
  5. அதெப்படி உடனடியாக, எந்த வழக்கறிஞரும் வரவில்லை, பெயில் கோரவில்லை, ஆனால், 14 நாட்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்?
  6. அதாவது ஒரு பக்ஷத்திற்கு சிறை, அடுத்த பக்ஷத்தில் பெயிலில் வெளியே விடலாம், இப்பொழுது மருதுத்துவ மனை வசதி கூட நிராகரிக்கப் பட்டுள்ளது.
  7. அண்ணன் அவன் பிறந்த நாள் அமாவாசையில் வந்து விட்டதால் தம்பிகள் நல்ல நாளை முன்னமே குறித்து விட்டனரோ?
  8. சரி யாரப்பா அந்த திராவிட புரோகிதர்? திராவிட மாடலில், திராவிட ஸ்டாக் ஆட்களில் தயாராகி விட்டார்கள் போலும்!
  9. நல்ல ஆடு கிடைத்து விட்டது, பலிகடா ஆடு, பார்ப்பன பலிக்கடா ஆடு, அதிலும் 83-வயது நிறைந்த பார்ப்பன பலிக்கடா ஆடு – கொண்டாட்டம் தான்!
  10. இனி பார்ப்பன துவேஷம் பீரிடும், மீம்ஸ்கள் யூ-டியூப்புகள் அதிகமாகும், ஆனால், எதிர்வினைகளுக்கு எந்த சட்டமும் வேலை செய்யாது.

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமணி, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By DIN  |   Published On : 14th September 2023 08:44 AM  |   Last Updated : 14th September 2023 08:44 AM

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/sep/14/spiritual-speaker-rpvs-manian-arrested-4072554.html

[3] தமிழ்.இந்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைதுதமிழகத்தில் கருத்து சுதந்திர நிலையைக் காட்டுகிறது!இந்து முன்னணி, செய்திப்பிரிவு, Published : 14 Sep 2023 03:08 PM; Last Updated : 14 Sep 2023 03:08 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1123301-rbvs-maniyan-arrest-hindu-munnani-condemns.html

[5] தினத்தந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு: ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது, செப்டம்பர் 15, 5:57 am

[6] https://www.dailythanthi.com/News/State/tiruvalluvar-defamation-of-ambedkar-spiritual-speaker-maniyan-arrested-1052962

குரு, குருபூர்ணிமா, வியாஸ பூர்ணிமா: இந்துக்களின் ஆசிரியர் நாள் – கொண்டாட வேண்டி யதினம்!

ஜூலை 4, 2023

குரு, குரு பூர்ணிமா, வியாஸ பூர்ணிமா: இந்துக்களின் ஆசிரியர் நாள் கொண்டாட வேண்டிய தினம்!

குரு பூர்ணிமா, வியாஸ பூர்ணிமா: குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (ஜூன்-சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். பொதுவாக எல்லா புராணங்களையும் வியாசர் எழுதினார், தொகுத்தார் என்றதால், அவரை குருவாக பாவிக்கப் படுகிறது. இது இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா என்ற நாடுகளில் கொண்டாடப் படுகிறது. அதாவது, பழங்கால இந்தியா – பாரதம் என்ற போகூள பரப்பில் இந்து மதம் / சனாதனம் பரவியிருந்த நிலையில் இருந்த பாரம்பரியத்தைக் காட்டுகிறது. இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு. மடங்களிலும் தத்தமது முதல் மடாதிபதியை முதல் குருவாகக் கொண்டு, அந்நாளில் போற்றி ஆராதனை செய்வர்.

ஜைனபௌத்தர்களுடனும் தொடர்ந்த குரு பூர்ணிமா: குரு மாறலாம், குருவை மாற்றலாம், ஆனால், அந்த அந்தஸ்து-போற்றுதல் மாறாது. சித்தாந்த மரபிலும் ஜைனர், பௌத்தர், மற்ற பிரிவுகள் தத்தம் மதத்தலைவர்களை குருவாக பாவித்து கொண்டாடி வருகின்றனர். வேதங்களை மறுத்து, ஆனால் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு வளர்ந்தவர்களும் இந்த பாரம்பரியத்தைப் போற்றி வளர்த்தனர். ஏனெனில், அது மக்களுடன் இருந்தது, தொடர்ந்தது. சைவ சித்தாந்த பிரிவுகளிலும்,, தோற்றுவித்த குரு, மடாதிபதி இவர்களை நினைவு கொண்டு, குரு பூர்ணிமா அன்று போற்றுவர். மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

வடவிந்தியாதென்னிந்தியா சைவம் சித்தாந்தம், காலநிலை வேறுபாடு: சைவசித்தாந்தம் வடவிந்தியாவிலிருந்து, தன்னிந்தியாவிற்குப் பரவியதால் இடைக்காலத்திளல்  மற்றும் பிறகு, குருபரம்பரை வித்தியாசப் பட்டது. காஷ்மீர சைவம் கர்நாடகா வழியாக தமிழகத்தில் நுழைந்ததாகத் தெரிகிறது. வீரசைவம் பசவேசஸ்வரரின் தோற்றம், ஜைனர்களுக்கு எதிராக அவர் செய்ய வேண்டியநிலையில் ஏற்படுத்திய சமுதாய சீர்திருத்தம் முதலியன கருத்திற்கொள்ளவேண்டும்.  மடங்கள் பெருகியபோது,  மடத்திற்கு மடம் சித்தாந்தம், சம்பிரதாயங்கள்  சிறிது மாறியது. தனித்தன்மை காட்டிக் கொள்ளவும் அவ்வாறான வேற்றுமைகளை சிறப்பாக்க / சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டன.

மடங்கள், குருக்கள் சம்பிரதாயங்கள் மாற்றம்-வளர்ச்சி: மடங்கள் பெருகிடபோது, மடங்களின் குரு, குரு பரம்பரை, சம்பிரதாயங்கள் முதலியனவு மாறின. பாகேஷர், புஜங்கேசர், அர்த்தநாரீஸ்வரர், அனந்தேசர், திரிமூர்திசர், ஸ்வேதர், மஹாகாலீஸ்வரர், லோஹிதீஸ்வரர், ஆஜேசர், சோமேஸ்வர், சம்வர்த்தகேச்வரர், மஹாசேனர், குரோதேசர், சுக்ஷ்மேஸ்வரர், பாரபூதேஸ்வரர், ஸ்டானேஸ்வரர், பௌதிகீஸ்வரர், சத்யோஜடேஸ்வரர், அனுகிரஹேஸ்வரர், சகலண்டேஷ்வரர் என பல குருமார்கள், மடாதிபதிகள் பெயர்கள் விளங்குகின்றன. இவர்களின் சீடர்கள் என்று இருந்து, மடங்களில் அவர்களை குருவாக பாவித்து, குரு பூர்ணிமா கொண்டாடுகின்றனர். அவரவர் குரு போதனைகளுக்கு ஏற்ப, அவர்களது சீடர்கள், பின்பற்றுபவர்கள், நம்பிக்கையாளர்கள் அவ்வாறே பின்பற்றினர்.

சைவத்தில், சைவ சித்தாந்தத்தில் வளர்ந்த மடங்கள், குருக்கள் சம்பிரதாயங்கள் மாற்றம்வளர்ச்சி: பொதுவாக, சைவசித்தாந்த மரபு இவ்வாறு பல மூலங்களிலிருந்து, பலவிதமான குருபரம்பரைகள் சொல்லப் பட்டு வளர்ந்தன.

சிவன் >நந்தி

சிவன்>ஸ்கந்தன்>கோரக்ஷநாதன்>நீலகண்ட நாயனார்

சிவன்>ஃப்ரேணுகா சிவாச்சாரியார்>காலாமுக ருத்ரமுனி ஆச்சாரியார்>

சிவனனபிநவ குப்தன்>சங்கீதார்ய டுபர்

சிவன்>பசவேஸ்வரர்>வேதாந்த சைவ சித்தாருடு

>>>>>>>>>>>>>>இவ்வாறு பல பாரம்பரியங்களுடன் பல மடங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றனர்.

19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட குழப்பங்கள், புதிய நூல்கள் உருவாக்கம்: ஆங்கிலேயர் மாநிலங்களில் அங்கங்குள்ள பண்டிதர்களை, எழுத்தளர்களை, துபாஷிகளை வைத்து கைஃபீயத்து, வரலாறு, சரித்திரம் என எழுத ஆரம்பித்தனர். அவ்வாறு பல நூல்கள் / புத்தகங்கள் உருவாக்கப் பட்டன. ஓலைச் சுவடிகள் உருவத்திலும் எழுதப் பட்டன. அவ்வாறு மத நூல்களும் உண்டாக்கப் பட்டன:

  • 19ம் நூற்றாண்டில் பல சைவ மடாதிபதிகள், தாங்கள் மற்றவர்களை விட வேறு பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள பரம்பரையை பலவாறு மாற்றிக் கொண்டனர்.
  • 20ம் நூற்றாண்டில் தனிதமிழ் இயக்கம், திராவிட சித்தாந்தம், பிராமணர் அல்லாத மற்றும் எதிர்ப்பு கொள்கை போன்றவற்றால், மேலும் திரிபுவாதங்களுடன் புத்தகங்கள் எழுத பட்டன.
  • 21ம் நூற்றாண்டில், சைவர் சிறுபான்மையினர் என்று ஆரம்பித்து, இந்துக்கள் அல்லர் என்ற கூப்பாடு வரை நிலைமை மோசமாகி அடைந்து நின்றுள்ளது.

நால்வர் என்ற சம்பிரதாயம் வளர்ந்தது: மெய்கண்டார், அருள்நந்தி சிவன், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகிய நால்வர், “சனாதன நால்வர்” என்றழைக்கப் படுகிறார்கள். ஆனால், இப்பொழுது, இதைப் பற்றி பேசாமல் இருக்கிறார்கள். இதனால், குருவை மறக்க, மறுக்க, மறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டு, வியாசரை நிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் அதே 19ம்-20ம் நூற்றாண்டு திரிபுவாத புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.

மெய்கண்டார், அருள்நந்தி சிவன், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகிய நால்வர், “சனாதன நால்வர்” என்றால்,  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும்  மாணிக்கவாசகர் சந்தான நால்வர் ஆகின்றனர். திருநந்திதேவர், சனத்குமாரர், சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதிமுனிகள் சமய குரவர் ஆகிறார்கள். திருக்கைலாய பரம்பரையிலிருந்து தொடங்கும் திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். திருகைலாய பரம்பரை என்பது நந்திதேவரே குருவாக கொண்டு ஆரம்பித்தது.

 சனாதன நால்வர்சந்தான நால்வர்அகச்சந்தான நால்வர்
1மெய்கண்டார்,திருஞான சம்பந்தர்,திருநந்திதேவர்,
2அருள்நந்தி சிவன்,திருநாவுக்கரசர்,சனற்குமாரர்,
3மறைஞான சம்பந்தர்சுந்தரர்சத்தியஞான தரிசினிகள்,
4உமாபதி சிவம்மாணிக்கவாசகர்பரஞ்சோதியார்

இவர்கள் எல்லோருமே குருக்கள் ஆக, ஆசிரியர்களாகக் கருதப் படுகின்றனர். பிறகு இம்முறை எப்படி வந்தது?

இப்பொழுது இந்து ஒற்றுமை தான் முக்கியமானது: ஆக 2023ல் குரு, குரு பூர்ணிமா, வியாஸர் என்று வைத்துக் கொண்டு, பிரிவினை உண்டாக்க வேண்டாம்:

  1. சங்க இலக்கியத்தில் சிவ / சிவன் இல்லாதலால், தேடி அலைந்து “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்றனரோ?
  2. பிறகு சிவகுரு தேடும் படலத்தில் சிவனை / சிவத்தையும் தேடி, குருவையும் தேடி, தக்ஷிணாமூர்த்தி, சிவன்-குரு, சிவகுரு ஆனாரோ?
  3. 3000-2000 BCE வேத சிவ (அடைச்சொல்) சங்ககாலம் பிறகு சிவனாக, அத்தனை ஆண்டு கால தேவையா, ருத்ரன் சிவன் ஆக வேண்டுமா?
  4. சிவன்-குரு, சிவகுரு முதல் குரு என்றால், காளியின் கீழ் வீழ்வானேன்? அது மந்திரமா, தந்திரமா, எந்திரமா? ஓம் குருவே நமஹ!
  5. गुरू ब्रह्मा गुरू विष्णु, गुरु देवो महेश्वरा

गुरु साक्षात परब्रह्म, तस्मै श्री गुरुवे नम:

  • குரு ப்ரஹ்ம குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர குரு ஸாக்ஷாத் பரப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குருவே நம:
  • அதாவது குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே சிவன். குருவே உண்மையான பரபிரம்மம். அத்தகைய ஆசிரியருக்கு நான் தலைவணங்குகிறேன்.
  • 19-20 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதும் குருவை  வீயாசரை வைத்து சண்டைத் தேவையா? இது சிவத்திற்கு உகந்ததா?
  • வியாசர் இல்லையென்றால் புராணங்கள் இல்லை, புராணங்கள் இல்லையென்றால், சிவமும் / சிவனும் இல்லை…..
  • குருவைப் போற்றுவோம், இந்துக்களைத் தாக்க நிறைய கூட்டங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, அந்நிலைகளில் இந்த தர்க்கம் வேண்டாம்!

© வேதபிரகாஷ்

03-07-2023

ஜடாமுடி சாமியார் திருடிய ஹனுமார் சிலை பூஜை செய்யவா, குறிசொல்லவா, வெளிநாட்டிற்கு கடத்தவா? சிலை மீட்பு- இரண்டு பேர் கைது! (2)

திசெம்பர் 25, 2022

ஜடாமுடி சாமியார் திருடிய ஹனுமார் சிலை பூஜை செய்யவா, குறி சொல்லவா, வெளிநாட்டிற்கு கடத்தவா? சிலை மீட்பு- இரண்டு பேர் கைது! (2)

வெளிநாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முயன்றது தெரியவந்தது: விசாரணையில், அவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவருடன் சேர்ந்து அந்த சிலையை திருடி வெளிநாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நீலகண்டன் வீட்டை தனிப்படை பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான சோழர் கால நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்ட அனுமன் சிலையை கைப்பற்றினர். பிடிபட்ட நீலகண்டன் மடாதிபதியாக வேண்டும் என்ற ஆசையில் திருத்தணி அருகே சிறிதாக மடம் ஒன்று நிறுவினார்[1]. திருடிய ஆஞ்சநேயர் சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறிசொல்லி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது[2]. காமதேனு [தி இந்து குழுமம்] இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. பிறகு, எப்படி, “வெளிநாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முயன்றது தெரியவந்தது,” என்பது புரியவில்லை.

சிலை மீட்டு, கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு: இதையடுத்து நீலகண்டன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்[3]. இருவரையும் கைது செய்த தனிப்படையினரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. டாக்டர் ஜெயந்த் முரளி பாராட்டினார்[4]. இதுகுறித்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் நிருபர்களிடம் கூறும்போது, இதுவரை பழங்கால ஓவியங்கள், கற்சிலைகள், மர சிற்பங்கள், உலோகத்தினால் செய்யப்பட்ட சிலைகள் என 248 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகமாக சிலைகள் மீட்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அனுமன் சிலையின் உயரம் 29 செ.மீட்டர், அகலம் 23 செ.மீட்டர், 10 கிலோ எடை கொண்டதாகும். இந்த சிலை கடத்தல் தொடர்பாக கோவில் ஊழியர்களுக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். கற்சிலை என்ற பிறகு, இந்த விவரங்கள் ஏன் என்று தெரியவில்லை.

நிபுணர் சொன்னது – 300 வருட கால சிலை 1000 வருட கோவிலில் வைக்கப் பட்டது: பஞ்சலோகம் போன்றவற்றிற்குத் தான் அத்தகைய விவரங்கள் தேவை. கைப்பற்றப்பட்ட அனுமன் சிலையை நிபுணர் ஒருவரிடம் காட்டி, சிலையை பரிசோதித்து, 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு தேனுபுரீஸ்வரர் கோவிலில் நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்ட முந்நூறு ஆண்டுகள் பழமையான சிலை என கருத்து தெரிவித்துள்ளார்[5]. இதற்கு c-14, TL சோதனை எல்லாம் செய்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு கீழடி வல்லுனர்களிடம் கேட்டிருப்பார்கள் போலும். கற்சிலை என்பதால் ஒப்பீட்டு முறையில், மற்ற சிலைகளின் அமைப்பு, விவரங்களை வைத்து, சரிபார்த்து சொல்லியிருப்பார்கள். மேலும் இது கல்லில் / கல்லின் மீது செய்துக்கப் பட்டுள்ளது போலிருக்கிறது, முழுவதும் கல்லில் செதுக்கப் பட்ட சிலை இல்லை.

ஸ்டாலின் ஆட்சி எல்லோருக்குமா?: செக்யூலரிஸ ஆட்சி, சமதார்ம ஆட்சி, சமத்துவ ஆட்சி, முதலமைச்சர் ஆட்சி, ஸ்டாலின் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, திமுக ஆட்சி, வெங்காய ஆட்சி – இவற்றில் எந்த ஆட்சி நடக்கிறது?

  1. திமுக ஆட்சியில், ஶ்ரீ ஹனுமத் ஜெயந்தி 23-12-2022 அன்று கொண்டாடப் பட்டது.
  2. கோவில்களில் மட்டும் அல்லாது, ஊடகங்களிலும் சாதாரண அரசியல் மற்ற செய்திகளை விட, ஒரு வேளை இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது தெரிந்தது. அதாவது, இது மக்களின் கொண்டாடமாக மாறி விட்டது.
  3. தமிழகம் எங்கும் அனுமார் கோவில்களில் வடைமாலை சாத்தி விழா கொண்டாடப் பட்டது அறியப் பட்டது.
  4. அதே நேரத்தில், தினம்-தினம் அரசு, திமுக மற்றும் கிருத்துவர்களால் கோடி-லட்சங்களில் செலவிழித்து, “கிறிஸ்துமஸ் விழா” கொண்டாடப் பட்டு வருவதும், தெரிந்த விசயமே.
  5. ஆனால், இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நன்றாக, மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும், நாத்திக-பெரியாரிஸ இந்துவிரோதிகளுக்கும் தெரியத்தான் செய்தது.
  6. அந்நிலையில் தான், “அனுமன் சிலை மீட்பு” மற்றும் “பூஜாரி/ ஜடாமுடி சாமியார் கைது” செய்தி, அடுத்த நாளிலேயே 24-12-2022 அன்றிலிருந்து வந்து கொண்டிருக்கிறது, போலும்.
  7. ஆக, செக்யூலரிஸ அரசு, கம்யூனலாக வேலை செய்கிறதா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.
  8. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப் படுகிறதா?

முடிவுரை: யோசிக்க வேண்டிய விசயங்கள்:

1. 23-12-2022 ஶ்ரீ ஹனுமான் ஜெயந்தி, 24-12-2022 ஆஞ்சனேயர் சிலை திருட்டு ஜடாமுடி சாமியார் கைது, 25-12-2022 ஊடகங்களில் செய்தி! என்பனவேல்லாம் தற்செலாக நடந்தனவா அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப் படுத்தப் பட்டனவா என்பது காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்.

2. நீலகண்டன் சிலையை வீட்டில் மறைத்து வைத்தாரா, மடாதிபதியாக ஆசைப்பட்டு திருடினாரா, குறி சொன்னாரா, எது உண்மை? என்பதும் அலசிப் பர்ர்க்க வேண்டும்.

3. நீலகண்டனின் வீட்டை சோதனை செய்த போலீசார், அவரது வீட்டில் மறைந்து வைத்திருந்த 300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலையை மீட்டனர்

4. பிடிபட்ட நீலகண்டன் மடாதிபதியாக வேண்டும் என்ற ஆசையில் கும்பகோணத்தில் திருடி, திருத்தணி அருகே சிறிதாக மடம் ஒன்று நிறுவினார்

5. திருடிய ஆஞ்சநேயர் சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறிசொல்லி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையெல்லாம் மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறாரா?

6. அவர் வேலூரைச் சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து சிலையை திருடி வெளிநாட்டில் கோடிகளில் விற்க முயன்றது தெரியவந்தது.

7. ஶ்ரீ ஹனுமத் ஜெயந்தி 23-12-2022 அன்று கொண்டாடப் பட்டது கோவில்களில் மட்டும் அல்லாது, ஊடகங்கள் மூலமும் அறியப் பட்டது! அரசியல் மற்ற செய்திகளை விட, இந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது தெரிந்தது, மக்களின் கொண்டாடமாக மாறி விட்டது.

8. இவவ்வருடத்தில் 1,00,008 வடைமாலை போடப் பட்டதாம். என்னடா இது, வடை அதிகமாகி வருகிறது, கேக் குறைந்து விட்டது, என்று எரிய ஆரம்பித்து விட்டது போலும்! சங்கி இங்கும் உள்ளதே?

9.  துளஸிதாஸர் இயற்றிய, “ஹனுமான் சாலிஸா” என்ற நாற்பது சுலோகத்தில், ”சங்கி’” வருகிறது:

महाबीर बिक्रम बजरंगी |

कुमति निवार सुमति के संगी ||

மாபெரும் வெற்றிகளை பெறும் நீங்கள் நித்திய வல்லமை படைத்தவர். தீய எண்ணத்தை நீக்கி, உன்னதமானவர்களின் துணையை வழங்குபவன்

10. அரசு, திமுக மற்றும் கிருத்துவர்களால் கோடி-லட்சங்களில் செலவிழித்து, “கிறிஸ்துமஸ் விழா” கொண்டாடப் படுகிறது! ஶ்ரீ ஹனுமார் ஜெயந்தியோ மக்களால் கொண்டாடப் படுகிறது, இது தான் வித்தியாசம். இது சனாதன மாடல்! என்றும் நிலைக்கிறது! ஆக, பொறுத்துப் பார்ப்போம். என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று.

© வேதபிரகாஷ்

25-12-2022


[1] காமதேனு, மடாதிபதியாக ஆசைப்பட்டு கோயில் சிலை திருட்டு: 3 ஆண்டுகளுக்குப் பின் கூட்டாளியுடன் கைதான சாமியார், Updated on : 24 Dec, 2022, 2:16 pm

[2].https://kamadenu.hindutamil.in/national/aspiring-to-become-abbot-and-theft-of-temple-idol-3-years-later-preacher-arrested-with-accomplice

[3] மாலைமலர், 1000 ஆண்டு பழமையான சோழர் காலத்து அனுமன் கற்சிலை மீட்பு– 2 பேர் கைது, By Maalaimalar, 24 டிசம்பர் 2022 1:49 PM

[4] https://www.maalaimalar.com/news/state/two-arrested-for-recovery-1000-year-old-hanuman-statue-552594

[5] The seized idol of Hanuman was shown to an expert who examined the idol and opined that it was a three-hundred-year-old idol installed by the Nayaka kings in the 1000-year-old Arulmiku Denupuriswarar temple.

DTNext, TN Idol wing recovers 300-year-old Anjaneyar idol, stolen 3 yrs ago, Dt Next Bureau, Published on :  24 Dec, 2022, 12:13 pm.

https://www.dtnext.in/tamilnadu/2022/12/24/tn-idol-wing-recovers-30-year-old-anjaneyar-idol-stolen-3-years-ago

தீபாவளி ஆதரவு-எதிர்ப்பு விடுதலைக்கு முன்பும், பின்பும் – திக முதல் திமுக வரை, 1940 முதல் 2022 வரை! (3)

ஒக்ரோபர் 16, 2022

தீபாவளி ஆதரவுஎதிர்ப்பு விடுதலைக்கு முன்பும், பின்பும்திக முதல் திமுக வரை, 1940 முதல் 2022 வரை! (3)

தீபாவளி வியாபாரமும் வேண்டும்தடைகட்டுப்பாடும் வேண்டும் என்ற முரண்பட்ட நிலைப்பாடு: இந்திய வம்சாவளியினர் உலக நாடுகளில் முக்கியமான பதவிகளில் வர ஆரம்பித்து விட்டனர். இதனால், அவர்களது பங்கு கனிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின.  அடந்த ஆண்டுகளில் அமெரிக்க தலைவர்களும் தீபாவளி நிகழ்வுகள் தொடர்பான தகவல்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர். இந்த முறை 2020-2021 வருடங்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரை தீபாவளிக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். 2022லும் நிச்சயம் தொடரும். இங்கிலாந்து பிரதம மந்திரி பதவிக்கும் ஒரு இந்திய வம்சாவளி நபர் வரவிருந்தது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அதனால், எல்லாவற்றையும் மறந்து, திக-திமுகவினர் இந்துவிரோதத்துடன் வெறுப்பைக் கக்கிக் கொண்டிருக்கலாம், அது அவர்களின் மோசமான மனப்பாக்கு, துவேச நிலைகளைத் தான் தொடர்ந்து வெளிக்காட்டி வருகின்றன. மற்றவர்களும் கவனித்துக் கொண்டு தான் வருகின்றனர். அது நிச்சயமாக அவர்களுக்கு பலனைக் கொடுக்காது.

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள் (2011-2022): கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[1]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[2]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[3]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: இதைப்பற்றி முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. இனி தமிழகத்து கோணத்தில் பார்ப்போம். தமிழகத்தைப் பொருத்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்து, தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்கல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள். வீரமணி கோஷ்டிகள் விளாசித் தள்ளி விடுவார்கள். இம்முறை, அது “விடுதலையில்” ஆதித்தமிழர் பேரவை உருவத்தில் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இந்துக்கள் யோசிக்க வேண்டியது: இந்துக்கள் திக-திமுகவினரின் இந்துவிரோதத்தை அமைதியாக, சத்தியாகிரகம் போன்ற முறைகளில் தான் வெல்ல முடியும்:

  1. தீபாவளிக்கு சாதகமாக ஊடகங்களில் செய்திகள் இல்லை, பட்டாசுகள், கொண்டாட்டம் பற்றிய அறிக்கைகளும் அவ்வாறே இருக்கின்றன.
  • இப்பொழுதைய ஆட்சி, அதிகாரம், சித்தாந்தம், பண்டிகை பற்றிய அணுகுமுறை முதலிய நிலைகளில் இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது.
  • ஆவின் இனிப்புகளின் வியாபாரத்தைப் பெருக்குவேன், போனால் போகட்டும் என்று அதில் தீபாவளி வாழ்த்து போடுவேன் என்ற நிலை தான் உள்ளது.
  • ஆடி சேல்ஸ், அக்ஷய திருதியை என்றால் அமோகமான விளம்பரம், வியாபாரம், ஆனால், தீபாவளிக்கு குறைந்துள்ளதை கவனிக்கவும்.
  • ஆக, இந்த தீபாவளிக்கு வெடிகள், பட்டாசுகள் வாங்காமல், தீபம் ஏற்றி, தீபாவளி கொண்டாடினால், பாதிக்கப் படுவது யார் என்று தெரிந்து விடும்.
  • போலீஸ், சட்டம்-ஒழுங்குமுறை என்று யாருக்கும் ஒன்றும் இருக்காது, தெருக்கள் வெறிச்சென்று இருக்கும். அமையாக இருக்கும்.
  • இந்துக்கள் இம்முறை இவ்வாறு அமைதியாக தீபாவளி கொண்டாடலாம். கடைகளில் இனிப்பை வாங்காமல், வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள்லாம்.
  • சிறுவர்களுக்கு துணிமணிகள் வாங்கிக் கொடுத்து, தீபாவளி மேன்மை குறித்துப் பேசி, ஒரு நாளைக் கழித்து விடலாம், சினிமாவுக்குக் கூட போகலாம்!
  • எல்லாமே மக்களிடம் தான் இருக்கிறது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை, அஹிம்சை எல்லாம் இதில் இருக்கின்றன.
  1. அனைத்தும் ஸ்தம்பித்து விட்டால், இந்துக்களின் பலம் என்ன என்பதனைப் புரிந்து கொள்வார்கள், அப்பொழுது, நேரம் குறிக்க மாட்டார்கள்

© வேதபிரகாஷ்

16-10-2022


[1]  The Scroll.com,Would banning Diwali crackers really infringe religious rights?, Aarefa Johari, Oct 28, 2015 · 08:00 pm.

 http://scroll.in/article/764796/would-banning-diwali-crackers-really-infringe-religious-rights-as-the-supreme-court-has-ruled

[2] http://articles.economictimes.indiatimes.com/2011-10-23/news/30310755_1_firecracker-sivakasi-child-labour

[3] Live Chennai, Online cracker business crosses Rs 100 Crores, Posted on : 22/Oct/2015 2:41:00 PM.

http://www.livechennai.com/detailnews.asp?catid=&newsid=22160

சங்கரர் எதிர்ப்பு, சங்கரமட துவேசம், இக்கால சங்கராச்சாரியார்கள் தூஷணம் ஏன்?: இதற்கு சைவம்,  பிராமண எதிர்ப்பு, இந்து விரோதம் முதலியவை தேவையா? (1)

ஜூலை 27, 2022

சங்கரர் எதிர்ப்பு, சங்கரமட துவேசம், இக்கால சங்கராச்சாரியார்கள் தூஷணம் ஏன்?: இதற்கு சைவம்பிராமண எதிர்ப்பு, இந்து விரோதம் முதலியவை தேவையா? (1)

திமுக ஆட்சியும், ஜாதி அரசியல் ஆரம்பமும், முதலியார் ஆதிக்கமும்: திராவிடத்துவ, இந்துவிரோத ஆட்சி, அதிகாரம், ஆக்கிரமிப்பு முதலியவற்றை மறந்து, மறைத்து சைவம் போர்வையில் நடக்கும் திட்டம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது. அண்ணாதுரை முதலமைச்சர் ஆனதும், முதலியார்கள் அரசு-ஆட்சி-அதிகாரம் என்று பல பதவிகளில் அமர்ந்தார்கள், தொடர்ந்தார்கள், பெரிய ஆட்கள் ஆனார்கள்[1]. ஆனால், சைவத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஈவேரா இந்துவிரோத காரியங்களில் இடுபட்டபோது, அடக்கி வாசித்தனர். கருணாநிதி முதலமைச்சரானதுடன், ஜாதி அரசியலை வளர்த்து, அதிகாரங்களை உடைக்க மற்ற ஜாதியினருக்கு இடம் கொடுத்தார்கள். இதனால், பிள்ளை, போன்றவர்கள் தெற்கில் ஆதிக்கம் பெற்றார்கள்.  சைவ வேளாளர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர். இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர். மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதகளில் முக்குலத்தோர் ஆதிக்கம் பெற்றனர். இதனால், வன்னியர் போன்றோர் ஜாதி ரீதியில் போராட்டங்களில் இறங்கினர்[2]. இவர்களது பிரச்சினைகளுக்கு, பார்ப்பன்னீயம், பார்ப்பன- எதிர்ப்பு போன்றவை வழக்கம் போல உதவின. நெடுஞ்செழியன், அன்பழகன் அடக்கி வாசித்தாலும், மற்ற வகையறாக்கள் அதிகமாகவே பிரச்சினைகளை உண்டாக்கின.

அறநிலையத் துறை ஊடுருவல், தில்லுமுல்லுகள், மோசடிகள்: மதுரை ஆதீனத்தை அடக்கி, திமுக-காரர்கள் கோவில்-சொத்துக்களை அனுபவித்து வந்தார்கள். ஒரு தலைமுறை போய், இரண்டாம் தலைமுறையும் வந்தது. வாடகை-குத்தகை-ஆக்கிரமிப்பு வழக்குகள் நீதிமன்றங்களுக்கு செல்ல-செல்ல, மற்றவர்களும் அதில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதனால், எதிர்கட்சிகளுக்கும் பங்கு கொடுப்பது போன்ற சமரசங்களும் ஏற்பட்டன. இந்து அறநிலையத் துறையில் தங்கள் ஜாதியினர் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டனர். மற்றவர் நுழைவதையும் தடுக்க முறைகள் மேற்கொண்டனர். நடக்கும் ஊழல்களும் பெரிதளவில், ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொண்டனர். எல்லோருக்கும் ஷேர், மாமூல், அன்பளிப்பு என்ற கலாச்சாரம் நன்றாக வேலை செய்தது. கோவில் சம்பந்தப் பட்டவர்கள் வீட்டில் சமைக்கவே வேண்டாம் என்ற நிலை தொடர்ந்தது. பிறகு, வந்த வரும்படிகள் எல்லாம் முதலீடுகள் ஆக, கொழுக்க ஆரம்பித்தார்கள். “பட்டை-கொட்டை” எல்லாம் ஊருக்குத் தான். கூட்டுக்கொள்ளை அடிப்பது தான் முக்கியமாக இருந்தது. “மக்கள் சேவை மகேசன் சேவை” ஆகியது, நன்றாகவே வேலை செய்து கொண்டிருக்கிறது.

மடாதிபதிகளின் பிணக்குகள் ஜாதிகளை அடங்கியது: மடங்களின் கோடிக் கணக்கான சொத்துக்கள் முதலியவை தெரியவர, மடாதிபதியாக அல்லது அவருக்குக் கீழுள்ள பதவிகளைப் பெற பல திட்டங்கள் வகுக்கப் பட்டது. சைவ வேளாளர் இல்லாத யாரும் மடாதிபதியாக முடியாது. சைவர்கள் எல்லோரும் மடாதிபதிகள் ஆக முடியாது. குருக்கள், தேசிகர், ஓதுவார் ஆகிய பட்டங்கள் சைவ சமய பணிகளில் சிறந்து விளங்கிய சைவ வேளாளர்க்குரியன. இருந்தாலும், அவர்கள், வேறு ஜாதியினர் எனில், மடாதிபதி மற்ற உயர்பொறுப்புகளுக்கு பாத்தியதை ஆக முடியாது. இதை எந்த அரசியல்வாதியும் கேட்க மாட்டான்[3]. அந்நிலையில், சிதம்பரம் கோவிலில் நுழைய முற்பட்ட போது தான், தீக்ஷிதர்கள் போராட்டத்தைத் துவக்கினர். உச்சநீதி மன்றம் வரை சென்று வெற்றி பெற்று, தங்களது உரிமைகளை மீட்டனர். அதனால், தில்லை தீக்ஷிதர்கள் எப்பொழுதும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். சைவ-வேளாளர்களே இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்[4].

அரசுவரிவருமானம்மக்கள் குழுமங்கள்: ஆளும் அரசு, இப்பொழுதைய இந்திய பாராளுமன்ற, முந்ஹைய ஆங்கிலேய அந்நிய, முகலாய, துலுக்க முதலிய ஆட்சிகாலங்களில், மக்களிடமிருந்து எதையாவது வரியாகப் பெறவேண்டும் என்றுதான் குறியாக வேலை செய்தனர். கோவில்-கோவில் சொத்து, கோவில் விழா, பூஜை, கிரியைகள், அதற்கு வேண்டிய பொருட்கள்-ஆட்கள், நடக்கும் முறை, கோவில்களினால் மக்களுக்குக் கிடைக்கும் ஆதாயம் மற்றும் கோவில்களினால் மக்களுக்குக் கிடைக்கும் ஆதாயம், இவற்றைத் தாண்டி அரசு-ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கும் ஆதாயம், என்று தான் எல்லாமே பின்னப் பட்டு வேலை செய்து கொண்டிருந்தன. கோவில்கள், விவசாயம் முக்கியமான தொழில்கள், அவற்றை செய்வோர், நீர்-நிலை அவற்றின் அமைப்பு, பாதுகாப்பு முதலியன இவற்றை செய்து வரும் குழுமத்தினர், தத்தம் கடமைகளை செய்து வந்தனர். அவை ஜாதிகளாக இருந்தாலு, தொழில்-செய்யும்-குழுமங்களாக இருந்தாலும், கடமையினை செவ்வன செய்து வந்தன.

கோவில்கோவில் சார்ந்த தொழில்கள்இந்துக்கள், இந்துக்கள்அல்லாதவர்: இந்துக்கள் கைகளில் இருக்கும் வரை அவை ஒழுங்காக நடந்து வந்தன. ஆனால், துலுக்கர் வந்த பிறகு, விக்கிரங்கள் உடைக்கப் பட்டன; கோவில்கள் இடிக்கப் பட்டன; விலையுயர்ந்தவை கொள்ளையடிக்கப் பட்டன; இதனால் கோவில்-கோவில் சம்பந்தப் பட்ட காரியங்கள்-வேலகள் பாதிக்கப் பட்டன. வருமானம் குறைந்தது. விவசாயம் பாதித்தது, விளைச்சல் குறைந்தது. மக்களின் வேலைகளும் பாதிக்கப் பட்டன. தத்தம் தொழில் என்றிருந்த நிலை மாறி, வெவ்வேறு வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  துலுக்கர்களது ஆதிக்கம் அதிகமாக, மதம் மாற்றப் பட்டவர் பிரிக்கப் பட்டனர்.  இதனால், அத்தொழில்-வியாபாரமும் பிரிந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சு, கட்டிடத் தொலை போன்றவை முக்கியமாக பாதிக்கப் பட்டன. தோல் தொழிகளுக்கு முக்கியத்துவம், லாபம் முதலியவை அதிகமானதால் அவற்றில் துலுக்கர் அதிகம் ஈடுபட்டனர். ஆடு-மாடுகள் கொல்லப் படுதல், மாமிசம் உண்ணப் படுதல், தோல் மற்றவை – பிசின், காலணி, இடுப்பு பட்டை மற்ற பொருட்கள் உற்பத்தி செய்ய உபயோகப் படுத்தப் பட்டன. குதிரைப் படை அதிகரிப்பு, ராணுவம் அதிகரிப்பு முதலியவையும் இத்தொழில் ஊக்கம் அதிகமானது.கோவில்கள் இடிக்கப் பட்டு மசூதிகள் கட்டப் படும் நிலைகளில், அத்தொழிலாளிகளும் மாறினர்-மாற்றப் பட்டனர். இவ்வாறாகத்தான் வரி கிடைப்பது மாற்றப் பட்டது. வரிவசூலும் கடுமையானது, கொடுமையானது..

2000களில் கொலை அளவுக்கு சென்ற மடங்களின் துறவிகள்: நித்யானந்தாவின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு[5] தெரிவித்த தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, சங்கர மடங்களின் மடாதிபதிகளும் மதுரை ஆதீன‌ மீட்புக் குழுவினரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அரசின் இந்த வழக்கு பற்றியும் நித்யானந்தாவின் நீக்கம் பற்றியும் இதுவரை கருத்து ஏதும் சொல்லவில்லை என்று சிலர் எடுத்துக் காட்டுகின்றனர். திருவாவ‌டுதுறை பெரிய ஆதீன‌த்தை இளைய ஆதீன‌ம் கொல்ல முயற்சி [2002], சங்கரராமன் கொலை [2004], தாம்பரம் சேலையூர் அகோபில மடத்தில் ஒரு கொலை [2010], இவை சமீபகாலத்து சம்பவங்கள். மடங்கள், கோவில்கள், பிடதி, சாய்பாபா ஆசிரமங்கள் வரை வரலாற்றில் கொலைகள், சூழ்ச்சிக் கவிழ்ப்புகள், ஊழல்கள், முறைகேடுகள், என்று செய்திகள் வந்தன. பகதர்கள் வருத்தப் படுவதை விட, அச்சப்பட்டார்கள். கடவுள் காப்பாற்றவில்லையா என்று திகவினர் மாதிரி நக்கலும் அடிக்க முடியாது[6].

© வேதபிரகாஷ்

26-07-2022


[1]  2021 தேர்தலின் போது, முதலியார்களின் வாக்கு, ஆதரவு பற்றி விவாதிக்கப் பட்டது கவனிக்கத் தக்கது. அரசு பதவி, அதிகாரம், வியாபாரம், என்றெல்லம் ஸ்திரப்படுத்திக் கொண்டப் பிறகு, அரசியலில் ஓரங்கட்டப் பட்டாலும், தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

[2]  கருணாநிதி, வன்னியர்களை, வன்னியர்களைக் கொண்டே ஓட்டுவங்கியைப் பிரித்தார். கட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

[3]  திக-திமுகவினர், விசிகவினர், பாமகவினர் மற்ற கம்யூனிஸ, முற்போக்கு வகையறாக்கள் இதைப் பற்றி கேட்கமாட்டார்கள், பிட்-நோட்டீஸ், குறும்புத்தகங்கள், வீடியோ போட மாட்டார்கள்.

[4]  இந்த சட்ட யுத்தங்கள், நீதிமன்ற போர்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பழைய கோவில்கள் சிதிலமடைந்து மறைந்து கொண்டிருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்து, சண்டைப் போட்டுக் கொள்வதில், சைப்ப் பிரிவினர் ஊக்குவிக்கப் பட்டு வருகிறார்கள்.

[5]  நித்யானந்தா முதலியார் என்று கண்டுபிடிக்கப் பட்டதும், அமுக்கி வாச்க்கப் பட்டது. முதலியார்களின் விசுவசம் போலிருக்கிறது. “நித்தி” என்று தான் கிண்டல் செய்வார்களே தவிய “முதலி” என்று குறிப்பிட்டு பேச்சு-எழுத்து இருக்காது. ஜாதிய செக்யூலரிஸம் அல்லது திராவிட ஜாதியத்துவம் அல்லது ஒட்டு மொத்த பார்ப்பன எதிர்ப்பு என்று விளக்கம் கொடுப்பார்கள் போலும்.

[6]  இதில் ஜெயேந்திர சரஸ்வதி தூஷணம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும், மற்ற விசயங்கள் மறைக்கப் படும். இது பிராமண எதிர்ப்பா, இந்து எதிர்ப்பா என்பதனை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் போல, தடா ரஹீமுக்கும் சங்கர மடத்திற்கும், பூணூலுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை!

பிப்ரவரி 26, 2022

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் போல, தடா ரஹீமுக்கும் சங்கர மடத்திற்கும், பூணூலுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை!

தமிழகத்தில் முஸ்லீக் பிரிவுகள் ஏன்?: இந்தியாவைத் துண்டாடிய முஸ்லிம் லீக், இப்பொழுது பல பேனர்களில் செயல் பட்டு வருகிறது. திராவிட கட்சிகளுடன் உறவுகள் வைத்துக் கொண்டு, ஆசு, அதிகாரம் என்ரு பயன் படுத்திக் கொண்டு, தங்களது வியாபாரம் மற்ற விவகாரங்களை சாதித்துக் கொள்ள அவ்வாறான பிரிவுகளை வைத்துக் கொண்டு சாதித்து வருகின்றது. முஸ்லீம் லீக் என்று ஒன்று இருந்தால், ஒன்று முதல் மூன்று வரை தான் சீட்டுகள் கிடைக்கும். ஆனால், இவ்வாறு பல பிரிவுகளை வைத்துக் கொள்வதன் மூலம் பத்து வரை சீட்டுகள் கிடைக்கின்றன. தங்களது தாக்கத்தைப் பெருக்கிக் கொள்கிறது. இதனை சமீபத்தை தேர்தல்களும் மெய்ப்பித்துக் கட்டியுள்ளன. மொத்தத்தில் முஸ்லிம் மந்திரி, எம்.எல்,ஏ எம்.எல்.சி அதிகமாகியுள்ளன. சென்னையில் மண்ணடியில் ஒரு குட்டி பாகிஸ்தானை உருவாக்கியுள்ளனர். போலீஸாரே அங்கு சென்று வழக்கு பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. முன்னர் கஸ்டம்ஸ் / சுங்க அதிகாரிகள் சென்று விசாரணை செய்ய முடியாத அளவுக்கும் நிலைலையை உருவாக்கினர். அந்நிலையில், சம்பந்தம் இல்லாமல் மற்ற விவகாரங்களில் தலையிட்டுப் பிரச்சினைகளை உருவாக்கவும் திட்டமிட்டது போலிருக்கிறது.

அப்துல் ரஹீமின் அடாவடித் தனமும், பிராமணரை தாக்கும் போக்கும்: இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல்ரகீம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர்[1]. இவர் மத கலவரத்தை தூண்டும் வகையில் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக தென் பாரத இந்து மகாசபை தலைவர் வீர்.வசந்தகுமார் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருந்தார்[2]. பிராமண சங்கமும் புகார் கொடுத்திருந்தது[3], முதல்வருக்கு பாதுகாப்பு கேட்டு கடிதமும் எழுதியது. முதலில் ஏனோ-தானோ என்று இருந்த சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டும் அதிகாரிகள் திடீரென்று உஷராகி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. முன்னர், காஞ்சி புரத்தில், சங்க்ர மடத்திற்கு 24 7 போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வீராசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்[4]. தமிழகத்தில் பூணூல் அறுக்கும் போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீமை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்[5]. கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.  கர்நாடகாவில் நடக்கும் பிரச்சினைக்கும் தமிநாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சங்கர மடத்தை துலுக்கர் தேவையில்லாமல் இழுத்தது: இந்நிலையில், ஹிஜாப்புக்கு தடை விதிப்பதை கண்டித்து ‘ஹிஜாப் பிரச்னையுடன் தொடர்புபடுத்தி, காஞ்சி சங்கர மடத்தில் இருந்து, பூணூல் அறுப்பு போராட்டத்தை தொடர்வோம்’ என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம் அறிவிப்பு வெளியிட்டார்[6]. இதற்கு இஸ்லாம் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். ஒருவேளை பிரச்சினை பெரிதானால், தேசிய அளவில் கவனம் ஈர்க்கப் படும் என்பது அவர்கள் புரிந்து கொண்டிருப்பர். இந்நிலையில், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், இரு பிரிவினர் இடையே வெறுப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ்  தடா ரஹீம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.  அவர் மீது ஐபிசி பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டுதல்) மற்றும் 505 (1) (சி) (வகுப்புச் சமரசத்தை ஏற்படுத்துதல்?) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன[7]. மேலும், அவரை மார்ச் 10-ம் தேதி வரை 15 நாள் விசாரணைக்காக காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது[8].

இந்து முன்னணி முதலியவற்றின் புகார்கள்: இந்நிலையில், இந்து முன்னணி சென்னை மாநகர பொதுச் செயலாளர் பி.மேகநாதன் கடந்த 21-ம் தேதிமாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘இஸ்லாமிய சமூக மக்களின் மனதில் வன்மத்தை விதைத்து மத ரீதியிலான கலவரத்தை உருவாக்கும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு தீங்கிழைக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் தடா ரஹீம் செயல்படுகிறார். எனவே, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரது இந்திய தேசிய லீக் கட்சியை தடை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்[9]. இந்த வழக்கில் அவர் 25-02-2022 அன்று கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்[10].. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆனால், எதை விசாரித்தனர், பிராமணரை குறி வைக்கும் அவர்களது திட்டம் என்ன என்பது புரியவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தீவிரவாதத்தை வளர்க்கிறதா, திராவிடத்துவம் ஆதரிக்கிறதா?: பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் இவரது பதிவுகள் கொச்சையாக, ஆபாசமாக, இரட்டை அர்த்தம் தொணிக்க உள்ளன. மாற்று மத பெண்கள் பற்றிய இவரது விமர்சனங்கள் அசிங்கமாகவே இருக்கின்றன. பெண்கள், பெண்மையினை இஸ்லாம் மதிக்கிறது என்றெக்லாம் பீழ்த்திக் கொள்வார்கள். ஆனால், இவரது பதிவுகளைப் படித்தால், எந்த அளவுக்கு அவையெல்லாம் பாராட்ட/போற்றப் படுகின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம். அரசியல், அதிகாரம் போன்று சமூகப் பிரச்சினைகளிலும், இவ்வாறான வன்மங்களை வித்திட்டு தீவிரவாதத்திற்கு வழிவகுப்பது போலிருக்கிறது. இவர்களது மிரட்டல், உருட்டல், திட்டுவது, அடிப்பது, போன்ற வன்முறை செயல்கள் தீவிரவதத்தை வளர்க்கிறது எனலாம். ஏற்கெனவே, சிறையில் இருக்கும் தீவிரவாதிகள், குண்டு வைத்தவர்கள் முதலியவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு, அதற்கு திராவிடத்துவவாதிகள் ஆதரவாக இருப்பதையும் நோக்கத் தக்கது.

பார்ப்பன எதிர்ப்பு, பார்பனர் மீதான வன்முறை முதலியன: முன்பு ஈவேரா முதல் கருணாநிதி வரை பிராமணரைக் கொல்வோம், என்றெல்லாம் பேசித் தப்பித்துக் கொண்டது போல, இக்காலத்திலும், தமது வன்மத்தை, பேச்சுத் தீவிரவாதத்தைக் காட்டி, வன்முறையைக் கட்டவிழ்த்து விடலாம், அதற்கு திக-திமுகவினர் மற்றும் கருப்புப் பரிவார், சிவப்பு பரிவார், பச்சைப் பரிவார் வகையறாக்கள் துணையாக இருப்பார்கள் என்றும் திட்டம் போட்டு, ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம். காஷ்மீரத்தில் துலுக்கத் தீவிரவாதம், இப்படி ஆரம்பித்து, உச்சத்திற்குச் சென்றுதான், இந்துக்கள் பெரும்பாலோனோர் விரட்டியடிக்கப் பட்டனர், கொல்லப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப் பட்டனர்……சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனார்கள். அதே போல, திமுகவின் யதேச்சதிகாரம், திராவிடத்துவ வன்முறை, இந்த கோஷ்டிகளுக்கு துணை போனால், தமிழக இந்துக்களுக்கும் அதே நிலை ஏற்படும். ஏற்கெனவே, தமிழகம் இன்னொரு காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பலமுறை பேசியிருக்கிறார்கள்..ஆகவே எளிய இலக்கு-தாக்குதல்களில் சிக்கக் கூடிய பிராமணர்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-02-2022


[1] தினத்தந்தி, சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து பரப்பிய இந்திய தேசிய லீக் கட்சி பிரமுகர் கைது, பதிவு: பிப்ரவரி 26,  2022 16:02 PM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/02/26160220/Tada-Abdul-Rahim-booked-under-2-Sections-for-the-protest.vpf

[3] மாலைமலர், இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல் ரகீம் கைது, பதிவு: பிப்ரவரி 25, 2022 14:05 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2022/02/25140559/3515539/Tamil-News-INL-leader-Tada-Abdul-Rahim-arrested.vpf

[5] தமிழ்.இந்து, பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கைது, செய்திப்பிரிவு, Published : 26 Feb 2022 08:26 AM; Last Updated : 26 Feb 2022 08:26 AM

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/771713-poonol-slaughter-struggle.html

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஹிஜாப் பிரச்னை: பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தடா ரஹீம் கைது, Written by WebDesk, Updated: February 25, 2022 10:46:07 am

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-tamil-news-tada-abdul-rahim-booked-under-2-sections-for-the-protest-of-snatching-the-sacred-thread-416789/

[9] தினமலர், பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தடா ரஹீம் கைது, தமிழ்நாடு, Added : பிப் 26, 2022  06:18

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=2970502

வைஷ்ணவர்களின் உதவியுடன் வளர்ந்து, வளர்த்த கடாவை முட்டியது போல, முட்டியுள்ள ஜாகிர் உசேன்! (4)

திசெம்பர் 22, 2021

வைஷ்ணவர்களின் உதவியுடன் வளர்ந்து, வளர்த்த கடாவை முட்டியது போல, முட்டியுள்ள ஜாகிர் உசேன்! (4)

வைணவர்களின் உதவியுடன் கோவில்களில் நுழைந்தது: ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில்களுக்குள் நுழைந்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளான். பெருமையாக சமூக ஊடகங்களில் போட்டுக் கொண்டுள்ளான். இந்த மாதிரி போட்டோ எடுத்துக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது? சாதாரண பக்தன் எடுக்க ஆசைப் பட்டால், எடுக்கக் கூடாது என்கிறார்கள்! பிறகு இந்த பெரியாரிஸ்ட், நாத்திக-வேடதாரி, நாமதாரி எப்படி?????????????ஶ்ரீரங்கநாதனுக்கு நாத்திக / பெரியாரிஸ்ட் குண்டு வைக்காமல் இருந்தால் சரி என்று தோன்றுகிறது! நல்ல வேளை அண்ணா அறிவலத்திற்குள் சென்ற போது, அங்கு விரட்டி விட யாரும் இல்லை போலிருக்கிறது! இவன் / ஜாகிர் உஸைன் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார். பிறகு பற்று அங்குதானே இருக்கும்! ஶ்ரீரங்கநாதனின் மீது எப்படி இருக்கும்?? ஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்ற கட்சியில் சேர்ந்தது, எந்த பற்றினைக் காட்டுகிறது? இந்துவிரோதிகள் தெளிவாக வேலை செய்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்! ஆனால், அறிவற்ற இந்துக்கள் (முட்டாள் இந்துக்கள் என்றால் கோபம் வருகிறதாம், புகார் வேறு செய்கிறார்கள்) உண்மை அறியாமல், தனித்தையாக கும்பல் சேர்ந்து கொண்டு, குழிபறித்துக் கொண்டிருக்கின்றன… யாரை கண்டிப்பது, எதை எதிர்ப்பது, என்று கூடத் தெரியாமல் அல்லது வேண்டுமென்றே எதிரிகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு அரசியலாக்கிய ஜாகிர் உசேன்:

  • உண்மையில் மத நல்லிணக்கம் தேவையென்றால், அதனை நல்லவிதமாக, நேரிடையாக, செய்யலாம்!
  • அறிக்கைகள் விடுவது, ஆஸ்பத்திரியில் படுத்துக் கொள்வது, போட்டோ எடுத்துக் கொள்வது, ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பது ………எல்லாம் பக்தி இல்லை……….
  • அரசியல்வாதி போல, அரசியலாக்கி, விளம்பரம் தேடும் வேலை தேவையில்லை!
  • கலை தெய்வீகம் ஆகும் போது, அது மதிக்கப் படுகிறது, ஆனால், அகம்பாவத்துடன் செயல்படும் பொழுது, பாண்டித்யம் கேள்விக்குறியாகிறது, கேள்விக்கு உட்படுகிறது!
  • ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாமா? இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப் படுவரா? அல்லது, ஶ்ரீரங்கநாதனை / ஶ்ரீவிஷ்ணுவை நம்புகிறவர்கள் செல்லலாமா?
  • முன்பு ஃபிரான்சிஸ் சேவியர் குளூனி விசயத்தில் உண்டான விவகாரம், இப்பொழுது வேறொரு உருவில் எழுதுள்ளது…..
  • “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை……..”, எனும்பொழுது, முன்னரே பலமுறை சென்றுள்ளது தெரிகிறது…..
  • பிறகு, அமைதியாக சென்று வந்திருக்கலாம்…..படோபடத்துடன் விளம்பரம் செய்யும் நோக்கம் தேவையில்லை!  
  • “……எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்,”. இவ்வாறு அவர் கூறினார், என்பது பக்தர் போல சொல்லவில்லை, ஏதோ அரசியல்வாதி தோரணைதான் வெளிப்படுகிறது…………….
பேஸ்புக்கில் உள்ள பதிவுகள் அப்பட்டமாக மோசமான பதிவுகளாக இருக்கின்றன.
மோடியைப் பற்றி மிகவும் அநாகரிகமன பதிவுகள் உள்ளன. ஒருமையில் மோசமான தாக்குதல் வார்த்தைப் பிரயோகங்களுடன் காணப்படுகின்றன.

மக்களே !கொரோனாவ விட கொடுமையானத பாத்திருக்கீங்களா ???பாருங்க !! என்னத்த சொல்ல. யப்பா சாமி , உன் ரீலு அந்து போய் ரொம்ப நாளாச்சுடா !!பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கணும் …மோடி அரசு போன்ற கேவலமான , கொள்ளைக் கூட்டம் உலகில் வேறெங்கும் இல்லை ; மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா – நின் திருவடியும் திமுகவும்
தமிழ்நாட்டின் காப்பு; India wasted two “Bharat Rathna” on unethical and ruthless personalities #Sachin & #Latha

ஏன் நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், இந்துக்கள்அல்லாதவர்கள் தடுக்கப் படவேண்டும்?: சட்டரீதியாக இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில்களுக்குள் செல்லக் கூடாது.

  1.  எஸ்.கே. கிருஷ்னசாமி ஐயங்கார் என்பவரின், “தென்னிந்தியாவும் அதன் மொஹம்மதியர் படையெடுப்பாளர்களும்” (S.K.Krishnasway Iyengar South India and its Mohammedan Invaders) என்ற புத்தகத்தில், சரித்திர ஆதாரங்களுடன், ஶ்ரீரங்கம் கோவில் எவ்வாறு முகமதியர்களால் கொள்ளையடிக்கப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்பது விளக்கப் பட்டுள்ளது.
  2. ஏனெனில், இடைக் காலத்திலிருந்து, துலுக்கர் இக்கோவில் மீது படையெடுத்து, கொள்ளையடித்து, இடித்து நாசமாக்கியுள்ளனர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஐரோப்பியர்களால், பல கொள்ளைகள் நடந்துள்ளன.
  3. ஒரு பிரெஞ்சு ராணுவ வீரன் ஶ்ரீ ரங்கநாதரின் கண்களை (வைரங்களை) களவாட திட்டம் போட்டான்! ஶ்ரீவைஷ்ணவன் போலவே நாமம்-வேடமிட்டான்! பட்டர்களின் நட்பு நம்பிக்கை பெற்று, வந்து சென்றான், 1747ல் அவன் கர்பகிருகத்தில் நுழைந்து வைரங்களைத் திருடிக் கொண்டான்! ஶ்ரீரங்கநாதரின் ஒரு கண் / வைரம் தான் Orlov / Orloff என்று மிஞ்சியுள்ளது, இரண்டாவது கண் எங்கே போனது தெரியவில்லை! . ஶ்ரீரங்கத்தை ஶ்ரீ ரங்கநாதர் தான் காக்க வேண்டும்! உண்மையான பக்தர்கள் படும் தொந்தரவுகள், அவதிகள், துன்பங்கள்……..
  4. 1950-70களில் ஶ்ரீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்றெல்லாம் ஔரங்கசீப் வெறித்தனத்துடன், திராவிடத் தலைவர்கள் பேசியிருக்கின்றனர். அவ்வாறே கொள்ளையடித்துள்ளனர்.
  5. பெரும்பாலான பக்தர்கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வருகிறார்கள்! பெரிய மதத்தலைவர்கள்-துறவிகள்-ஞானிகளும் வந்திருக்கிறார்கள்!
  6. ஶ்ரீமத் சங்கரதேவர், சைத்தன்யர், வல்லபாச்சாரியார், குருநானக் என்று பல வந்து ஶ்ரீ ரங்கநாதரை தரிசித்துள்ளனர்!
  7. எல்லோரும் சிரத்தையுடன் காதலாக கசிந்து கண்ணீர் மல்கி, பக்தியுடன் தம்மையே அர்பணித்துக் கொண்டனர், மக்களுக்கு சேவை செய்தனர்!
  8. 20-12-2021 அன்று ஒருவர் நான் 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன் என்று அடாவடியாக, கும்பலுடன் கோவிலுக்குள் நுழைந்து கலாட்டா செய்துள்ளார்!
  9. ஆனால் ரூ 250/- வாங்கிக் கொண்டு பக்தர்களை விரட்டுகிறார்கள், தள்ளுகிறார்கள், ஒருமையில் பேசுகிறார்கள், கதவை சாத்தி அடைக்கிறார்கள்!
  10. அந்த வைஷ்ணவ துலுக்க கபட வேடதாரி, நாமதாரி, கூத்தாடியும் நான் தங்கம்-வெள்ளி கொடுத்துள்ளேன் என்று பறையடித்து உள்ளே நுழைகிறான்! பிறகு பொய் சொல்லி புகார் கொடுக்கிறான், அதற்கெல்லாம் விளம்பரம் கொடுக்கப் படுகிறது.
  11. ஆனால், உண்மையான பக்தர்கள் 3 முத 5 மணி வரை வரிசையில் நின்று அவதிபடுவதைப் பற்றி யாரும் கவலைக் கூடப் படுவதாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-12-2021

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோத-துவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

திசெம்பர் 22, 2021

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோததுவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும்எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு ஆவினத்தைத் தூஷித்தது: ஜாகிர் உசேனின் கபடத் தனம், ஈவேராவை ஆதரிப்பதலிருந்தே அறிந்து கொள்ளலாம். கோபுரத்திற்கு முன்னால், இருக்கும் இந்துவிரோதியின் சிலையை அகற்ற இந்த வைஷ்ணவ-துலுக்கன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.  உண்மையான வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும். கங்காதேவியைப் போன்று எவ்வாறு துலுக்கர் ஶ்ரீரங்கம் கோவிலை இடித்தார்கள், கொள்ளையிட்டார்கள், படைகளுடன் அங்கேயே தங்கினார்கள் என்றெல்லாம் விவரித்து, நாட்டிய நாடகம் ஆடியிருக்கலாம். ஆனால், மேடைகளில் வேடமிட்டு ஆடி பணம்-புகழ் சேர்த்து, இந்துக்களுக்கு பெரிய நாமத்தைத் தான் இந்த ஆள் போட்டிருக்கிறான். இந்து நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை புண்படும் விதங்களில் பேஸ்புக்கில் பதிவுகள் போட்டு, தூஷித்து இருக்கிறான். ஶ்ரீ ரெங்கநாதர் ஶ்ரீ கிருஷ்ணர் என்றால், பசுவை அவனால், அந்ந்த அளவுக்கு தூஷித்து இருக்க முடியாது. ஆனால், செய்துள்ளான். பாண்டே கேட்ட போது, அவன் முகமே சுருங்கி, ஆபாசமாகி விட்டது, குற்ற-வஞ்சக உணர்வு முகத்தை காட்டி விட்டது. ஆண்டாள் பக்தன் என்றாலும், அவனது குரூரம் வெளிப்படுகிறது. துலுக்கனாக, பெரியாரிஸ்டாக, திமுக உறுப்பினராக இருந்து கொண்டு புலால் உண்கிறானா-இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், பசுக்கொலையை எதிர்ப்பதற்கு பதிலாக, ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளான்.

1311, 1318 மற்றும் 1327 ஆண்டுகளில் ஶ்ரீரங்கம் தாக்கப் பட்டது: 1311ல் மாலிகாபூருக்கு பயந்து, வீரபாண்டியன் அரச கருவூல செல்வங்களை எடுத்துகொண்டு ராமேஸ்வரம் அருகில் உள்ள தீவுக்கு தப்பி சென்றான். மலிக்காபூர் பாண்டிய அரசின் மதுரை மீனாட்சிகோவில்,சிதம்பரம் நடராஜர் கோவில் , ஶ்ரீரங்கம் கோவில் போன்ற அனைத்து கோவில்களின் செல்வதையும் பல நூறு யானை, ஒட்டகம் ஆகியவற்றில் டெல்லி கொண்டு சென்றான். அவை அந்த நாட்களில் டெல்லி சுல்தான்கள் அது வரையிலும் பெறாத செல்வமாக இருந்தது என சம கால வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

  • 1318 ஆம் ஆண்டு டெல்லி சுல்தான் குஸ்ருகான் தமிழகத்தை தாக்கி ஶ்ரீரங்கம் கோவிலை கொள்ளை அடித்து சென்றான். 
  • இஸ்லாமியப் படைகள் தொண்டைமண்டலத்தின் அத்தனை பகுதிகளிலும் அழிவுகளை நிகழ்த்தியதாக ஸ்ரீரங்க வரலாறான “கோவிலொழுகு” விளக்குகிறது. இதன்மூலம் ஸ்ரீரங்க ஆலயத்தை இஸ்லாமியப்படைகள் 1327-ஆம் வருடம் தாக்கியது உறுதியாகிறது.
  • ஆலயத்தைத் தாக்கிய இஸ்லாமியப்படைகள் ரங்கநாதரின் சிலையைக் காணாது கோபமுற்று அங்கிருந்த பல பூசாரிகளின் மற்றும் பக்தர்களின் தலையைக் கொய்ததாக கோவொலொழுகு மேலும் கூறுகிறது.
  • ஆல்யத்திலிருந்த நாட்டியப் பெண்மணி ஒருத்தியின் முயற்சியின் காரணமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெரும் அழிவிலிருந்து தப்பியதாகத் தெரிகிறது. மேற்கூறியபடி 1327-ஆம் வருடம் ஸ்ரீரங்க ஆலயத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டன.
  • ஸ்ரீரங்கம் மற்றும் ஜம்புகேசுவரரர் ஆலயங்களில் இஸ்லாமியப் படைகள் நிகழ்த்திய அழிவுகளைக் குறித்து கங்காதேவி தனது மதுரா விஜயத்தில் விளக்கியிருக்கிறார்.

ஸ்டாலின் நெற்றியில் வைத்ததை அழித்த போது, பட்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்படவில்லை, ஆஸ்பத்திரிக்குச் சென்று படுத்துக் கொள்ளவில்லை: பரதநாட்டிய கலையில் மூலம் அறியப்பட்ட ஜாகிர் உசேன் 05-01-2021 செவ்வாயன்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். ஆக, இவர் மூலம், அரசியல் ஆக்க திமுக, ஸ்டாலின் நினைத்திருக்கலாம்….முன்னரே ஸ்டாலின் ஶ்ரீரங்கத்திற்கு வந்தபோது, பட்டர்கள் மரியாதை கொடுத்து, நெற்றியில் சந்தனம்-குங்குமம் வைத்த போது, அழித்து அவமரியாதை செய்தது தெரிந்த விசயமே……..அப்பொழுது எத்தனை இந்துக்களுக்கு மன உலைச்சல் ஏற்பட்டிருக்கும் என்று ஸ்டாலின் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்…… அப்பொழுது பட்டர்கள் எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்துக் கொண்டு, போட்டோ வெளியிடவில்லை! உசேனும் கவலைப்படவில்லை. ஆக, இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதனை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது, இதைப் பற்றி எந்த மனிதனும் நினைத்துப் பார்த்தால் வெட்கப் படவேண்டும். ஆனால், எல்லா உண்மைகளையும் மறைத்து, உசேன், ஸ்டாலின் மற்ற இந்துவிரோதிகள் நாடகம் ஆடுகின்றனர், அறிக்கை விடுகின்றனர்.

பிரபலங்களைப் பிடித்து அரசு உதவி பெற்று வளர்ந்தது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். பரதநாட்டியம் மீதான ஆர்வத்தால் சென்னைக்கு 90-களில் வந்தார். நான்கு ஆண்டுகள் சித்ரா விஷ்வேஸ்வரன் என்ற கலைஞரிடம் பரதநாட்டியம் பயின்றார். அதன் பிறகு மார்கத்திலிருந்து விலகி நாட்டிய நாடகங்களை அரங்கேற்ற தொடங்கினார். அது பற்றி ஆராய்ச்சிகளும் செய்துள்ளார். இவருக்கு நடிகர் ரஜினி, சத்யராஜ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் ஆதரவளித்தனர். இவரது திறமையை அறிந்து 1992-ல் இந்திய ஜனாதிபதி 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கினார். பிறப்பால் ஒரு முஸ்லீம் என்றாலும், வேதங்கள், ஆகமங்கள் குறிப்பாக வைணவ பாரம்பரியம் பற்றிய ஆழமான புரிதலும், அறிவும் அவருக்கு உண்டு என்றெல்லாம் ஊடகங்கள் அளந்து விடுகின்றன. வைஷ்ணவ ஆகமங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக மத்திய அரசு இவருக்கு விருது வழங்கியிருக்கிறது. மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களைப் பற்றிய அவரது பரந்த அறிவு, பாஞ்சாலி சபாதம் மற்றும் சீதாயணம் போன்ற நடன நாடகங்களை கருத்தாக்க அவருக்கு உதவியது.

திமுகவில் சேர்ந்தது, பெரியாரிஸ்ட் என்று பிரகடனப் படுத்திக் கொண்டது: இவர் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார்.   முகநூலில் மிகவும் மோசமான பதிவுகளை செய்துள்ளார். பிரதம மந்திரி என்ற மரியாதைக் கூட இல்லாமல், ஒருமையில் விமர்சித்து, கேவலப் படுத்தியுள்ளான்.பிறகு இந்த ஆளை எப்படி கலைஞனாக மதிக்க முடியும்? நிச்சயமாக, இந்த மனிதன், குணாதிசயங்களால் அரக்கனாகத்தான் இருக்க வேண்டும்…. உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக கடூரமாக இருக்கிறதே? அந்த ஆள் மூஞ்சிக்கும், மனதுக்கும், காரியத்திற்கும் சம்பந்தமே இல்லை…….உள்ளே காரிருள், குரூரம், வஞ்சம்……….என்று தான் உள்ளன!பிஜேபியை, ஆர்.எஸ்.எஸ்.ஐ தூஷிக்கும் இந்த இந்துவிரோதி மீது ஏன் நடவடிக்கை இல்லை? உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக இருக்கிறதே? அடியேன் கருணாநிதி தொண்டன்,  ஸ்டாலின் தாசன், ………………………. திமுகவின் விசுவாசமான தொண்டன்,  திராவிடியன் ஸ்டாக் என்று கூறி  பெருமைப் பட்டுக் கொள்ளும்  நாட்டியக்காரன்,  நாடகத்திலும் கெட்டிக்காரனாகத் தான்  இருப்பது ஆச்சரியமில்லை!

© வேதபிரகாஷ்

22-12-2021

குஷ்பு ஒரு வழியாக பிஜேபியில் சேர்ந்தே விட்டார்: முருகன் திட்டம் வெற்றியில் முடிந்துள்ளது – பிஜேபிக்கு லாபம் உண்டா, ஆர்.எஸ்.எஸ் சுயபரிசோதனை செய்யுமா? (3)

ஒக்ரோபர் 14, 2020

குஷ்பு ஒரு வழியாக பிஜேபியில் சேர்ந்தே விட்டார்: முருகன் திட்டம் வெற்றியில் முடிந்துள்ளது – பிஜேபிக்கு லாபம் உண்டா, ஆர்.எஸ்.எஸ் சுயபரிசோதனை செய்யுமா? (3)

ஹத்ராஸ் விசயத்தில் காங்கிரஸ் தலைவர்களைப் போற்றி, மோடி-யோகி முதலியோரை நக்கலடித்து பேசிய குஷ்பு, எப்படி மாறினார்?: 05-10-2020 அன்று, குஷ்பு[1], “அமித் ஷா நலம்பெற ட்விட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது[2]. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது[3]. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்,’’ என்று தெரிவித்தார்[4]. இந்த வீடியோவும் இன்னும் சுற்றில் உள்ளது. ஆனால், 12-10-2020 அன்று பிஜேபியில் சேர்ந்த செய்தி வருகின்றது, அப்படி ஒரு வாரத்தில் என்ன நடந்தது? குஷ்பு எப்படி தலைகீழாக பல்டி அடிக்க முடிந்தது? தில்லியில் பிஜேபி தலைவர்களை சந்திப்பது ஒரே நாளில் அரங்கேற்றம் நடத்த முடியுமா? இக்கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் யோசிக்க வேண்டிய விசயம் ஆகிறது: சினி.ரிப்போர்டர்ஸ்.காம்[5], “ட்விட்டரில் பக்தாஸை விரட்டி, விரட்டி அடிச்சீங்களே. நீங்கள் போய் இப்படி பாஜகவில் சேரலாமா?. இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. என்னமா இப்படி பண்றீங்களேமா என்று தெரிவித்துள்ளனர். குஷ்பு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்க காத்திருப்பதாக கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டார்.  அதை பார்த்தவர்கள், முதலில் குஷ்பு பாஜகவுக்கு சென்றிருக்கிறார். அடுத்து நீங்களா?. உங்களை கூட பாஜகவில் சேர வருமாறு அழைத்ததாக அண்மையில் கூறினீர்களே. அக்கா, நீங்களும் அந்த பக்கம் போய்விடுவீர்களா? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினர் ஏன் நடிகைகளை தங்கள் கட்சியில் சேர வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சங்கிகள் எல்லாம் மங்கிகள் மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்று சொன்ன குஷ்பு பாஜகவுக்கு சென்றுவிட்டாரே கஸ்தூரி அக்கா. இது பற்றி உங்கள் கருத்து என்ன?. பாஜகவில் குஷ்பு என்கிற தலைப்பில் தயவு செய்து உங்கள் யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிடுங்கள். உங்கள் கருத்துகளை கேட்க ஆவலாக இருக்கிறோம் கஸ்தூரி அக்கா என்று தெரிவித்துள்ளனர்,” இப்படி தமாஷாக போட்டாலும், அதில் உள்ள விவகாரங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்[6]. இத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தன்னுடைய ஒழுக்கமுள்ள இயக்கம், தூய பிம்பம் கறை படாமல் காத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.

குஷ்புவின் தனிப்பட்ட பிரச்சினையை பிஜேபி எப்படி தீர்க்க முடியும்?: மார்ச் 2020லேயே தான் காங்கிரஸிலிருந்து விலக தீர்மானித்ததாகவும், கொரோனா விவகாரத்தினால், நேரியையாக மேலிடத்தை சந்திக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார். அழகிரி முடிந்த வரை சமாதனம் செய்தும் ஒப்புக்கொள்ளவில்லை. தனது ராஜினாமா கடிதத்தில்[7], “……..பணத்துக்காகவோ, புகழுக்காகவே நான் கட்சியில் இணையவில்லை. களத்திலிருக்கும் மக்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத, மக்கள் அங்கீகாரம் இல்லாத சிலர் கட்சியின் உயர் பதவியில் அமர்ந்துகொண்டு கட்டளை பிறப்பிக்கிறார்கள்[8]. கட்சியின் நலனுக்காக உண்மையில் உழைக்கும் என்னைப் போன்றவர்களை அவர்கள் புறந்தள்ளுவதோடு, ஒடுக்கவும் செய்கிறார்கள். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கட்சியிலிருந்து விலகுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்[9]. இந்தச் சமயத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்,’’ என்று குஷ்பு குறிப்பிட்டிருக்கிறார்[10]. அந்நிலையில், பிஜேபியில் இணைந்தால், வெல்லக்கூடிய எம்.எல்.ஏ சீட், அல்லது ராஜ்ய சபா எம்பி அளிக்கப் படும் என்றதால்[11], கவர்ச்சிகர ஸ்டார் பிரச்சாரகர் என்ற முறையில் இணைக்கப் பட்டுள்ளதாக, ஒரு பிஜேபி தலைவர் கூறினார்[12]. இருப்பினும், அவருடைய தனிப்பட்ட பிரச்சினைகளை பிஜேபி எப்படி தீர்க்க முடியும்?

பெண்களை வைத்து பிஜேபி செய்து வரும் பரிசோதனை: பிஜேபி ஏற்கெனவே நடிகைகள், பெண்-பேச்சாளர்கள் முதலியோரை வைத்து செய்த பரிசோதனைகள் நிறையவே உள்ளன. லக்ஷ்மி, கௌதமி, ஜெயலக்‌ஷ்மி, காயத்ரி, ஜெமிலா, பர்வீன் சுல்தானா, நமிதா….. என்றுள்ளனர். தமாஷாக “அம்மாடியோவ்! பயங்கர ஜொல்லு பார்ட்டி (BJP) தான்!,” என்று கிண்டலடிப்பதும் உண்டு, ஜெயபிரதா, ஹேமாமாலினி, கிரண் கேர்,, வைஜயந்தி மாலா, தீபிகா, ரூபா கங்குலி, சௌந்தர்யா, ஸ்ருதி… போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா, என்று தொடர்ந்தது. மதுவந்தி, குட்டி பத்மினி, ஜெயலட்சுமி, சுபத்ரா முகர்ஜி, காஞ்சனா, ரூபாஞ்சனா, ரிம்ஜிம்,… ….அடடா ஜில்ஜில் தான்! இன்னும் யாரல்லாம் .. வரப் போகிறார்களோ? மாதவி லதா, ஆஷா பர்தோலாய், அங்கூர் லதா டேகா, பிரியங்கா காலிதா, ரித்திகா அஸாரிகா, பிரதிமா தேவி, ஜெயஶ்ரீ கோஸ்வாமி..என்று தொடரும். வடகிழக்கு மாநிலங்கள் (வங்காளம் உட்பட) லாக்கட் சட்டர்ஜி, மௌமிதா குப்தா, மௌசுமி சட்டர்ஜி, ரூபா பட்டாச்சார்யா, அஞ்சு கோஸ், அஞ்சனா பாசு, ஈஷா கோபிக்கர், ஷைனா……….என்றுள்ளனர். ஏக் துஜே கே லியே போல ஒரு பாட்டே எழுதலாம் போலிருக்கிறது! லாக்கட், ரிம்ஜிம், மௌமிதா, மௌசுமி, அஞ்சு, அஞ்சனா, நமிதா…………ஆனால், குஷ்பு நிறையவே திட்டியிருக்கிறார். ஶ்ரீகிருஷ்ணர் சிசுபாலனை 100 திட்டுக்கள் திட்ட அனுமதித்து, பிறகு கொல்லத்தான் செய்தார். கூட்டு சேர்த்துக் கொள்ளவில்லை! அம்மாவின் வேண்டுகோளை மதித்தார்! காங்கிரஸ் மற்ற திராவிடக் கட்சிகளைப் பொன்ற பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை! கொள்கையுடன் இருப்பவன் மாறமாட்டான்! இதில் ஏற்கெனவே பல பெண்கள் விலகிவிட்டார்கள்.

பிஜேபியை, மோடியை, ராமஜன்ம பூமி என்று எல்லாவற்றையும் விமர்சித்த குஷ்புவை எப்படி அணுகப் போகிறார்கள்?: குஷ்புவின் டுவீட்டுகள் அசாதாரணமானவை. அவற்றை எல்லாம் தமிழில் போட்டால், இந்துத்துவ வாதிகளால் தாங்க முடியாது.

  1. மோடியை, ராமஜன்ம பூமி விவகாரத்தை, ராமரை விட மோடி பெரிய ஆள் ஆகி விட்டார், என்று “ராமரை மோடி கோவிலுக்கு அழைத்துச் செல்லும் படம்” போட்டு கிண்டலடித்தார். எப்பொழுடு வெடிக்கும் என்று சொல்ல முடியாது, என்றது.
  2. “மன் கி பாத்-ல் பேசுகின்ற விசயங்கள் வெடிகுண்டுகளாக டிக்-டிக் என்று ஒலித்துக் கொண்டிருக்கின்றன”,
  3. மற்ற விவகாரங்களை, “அச்சே தின்” என்று வாக்களித்தது இது தானா, என்று பல நிகழ்வுகளைக் குறிப்பிட்டது.
  4.  मोदी है तो मुमकिन है (மோடி இருந்தால் அது சாத்தியமாகும்) என்று சாலையில் பள்ளம் உண்டான போட்டோவைப் போட்டு என்று கிண்டல் அடித்தது,
  5. இவற்றையெல்லாம் பிஜேபி-காரர்கள், மோடி-பக்தர்கள், காவி போராளிகள் மறந்து விடுவார்களா?

இவையெல்லாம் இம்மாதம் வரை தொடர்ந்துள்ளது. அப்படியென்றால், காங்கிரஸா-பிஜேபியா என்ற நிலையில், ஜாக்கிரதையாக கடைசிவரை செயல்பட்டுள்ளார். எங்கு சாதகம், பாதுகாப்பு, பலன் என்று ஆராய்ந்து, பேரம் பேசித்தான், தீர்மானத்துடன், பிஜேபியில் சேர்ந்தார் என்று தெரிகிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றும் நியாயப் படுத்தப் பார்க்கிறார்கள். குஷ்பாவ் தாகரே (15 August 1922 – 28 December 2003) என்று பிஜேபி தலைவர் மற்றும் எம்.பி இருந்தார். அவரை எத்தனை தமிழக பிஜேபி-காரர்களுக்குத் தெரியும்? அவரையே மறந்து விடும் அளவிற்கு, இன்னொரு குஷ்பு / வாசனை வந்திருக்கிறது! போகின்ற வேகத்தைப் பார்த்தால், “பாரத் மாதாகி ஜே” என்பதற்கு பதிலாக,  “குஷ்பு மாதா கி ஜே,” என்று கோஷம் போடுவார்கள் போல!

© வேதபிரகாஷ்

13-10-2020


[1] ஏசியாநெட்.நியூஸ், அமித் ஷாவுக்காக ட்விட் போட்டால் நான் பா...,காரியா..? கொந்தளிக்கும் குஷ்பு..! , Thiraviaraj RM, Tamil Nadu, First Published 5, Oct 2020, 6:41 PM…

[2] https://tamil.asianetnews.com/politics/if-i-tweet-for-amit-shah-will-i-join-bjp-kariya-turbulent-khushbu-qhqcnd

[3] மாலை மலர், பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரப்புகிறார்கள்குஷ்பு, பதிவு: அக்டோபர் 05, 2020 18:32 IST

[4] https://www.maalaimalar.com/news/district/2020/10/05183244/1942351/Kushboo-says-He-is-rumored-to-be-joining-the-BJP.vpf

[5] சினி.ரிப்போர்டர்ஸ்.காம், மரம் விட்டு மரம் தாவும் குஷ்புஎன்ன ஆச்சு.. டிரெண்டிங்கில் முதலிடம்!, By Cinebazaar Web Mon, 12 Oct 2020.

[6] https://cinereporters.com/latest-news/kushboo-joints-bjp-in-tomorrow/cid1501215.htm

[7] புதிய தலைமுறை, சிலர் என்னை ஒடுக்கினர்’ – காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகல், Web Team, Published :12,Oct 2020 10:02 AM

[8] http://www.puthiyathalaimurai.com/newsview/83536/kushboo-resigned-from-congress

[9] விகடன், மதிப்பு அப்படியே இருக்கும்!’- சோனியாவுக்குக் கடிதம்; காங்கிரஸிலிருந்து விலகிய குஷ்பு, தினேஷ் ராமையா,  Published:12 Oct 2020 9 AM, Updated:12 Oct 2020 9 AM.

[10] https://www.vikatan.com/news/politics/kushboo-quits-congress-and-from-all-responsibilities

[11] Indian Express, Explained: After battling BJP for long, why has Khushbu Sundar joined BJP?, Written by Arun Janardhanan, Edited by Explained Desk | Chennai | Updated: October 13, 2020 10:38:16 am

[12] A senior BJP leader from Tamil Nadu who was not aware about Khushbu’s decision until Sunday night said she is going to be the star campaigner of BJP in Tamil Nadu. “A winnable MLA seat can make her an MLA or even a Rajya Sabha MP post when the time comes,” he said.

https://indianexpress.com/article/explained/khushbu-sundar-bjp-congress-6722127/