Archive for the ‘கோரி முகமது’ Category

மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதி – பெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா? (1)

ஜனவரி 19, 2024

மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதிபெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா? (1)

அயோத்தியா கோவில் வைத்து அரசியல் செய்வது யார்?: உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில், பா.ஜ.க ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது[1] என்று தமிழ் ஊடகங்கள் பீடிகையுடன் ஆரம்பிக்கின்றன. ஆனால், அகழாய்வு அறிக்கை முன்னர் இருந்த கோவிலை இடித்து மசூதி கட்டப் பட்டது போன்றவற்ரைப் பற்றி மூச்சுக் கூட விடாததைக் கவனிக்கலாம். இப்படித்தான், தமிழக ஊடகங்களின் செக்யூலரிஸம் வேலை செய்து கொண்டிருக்கிறது. அதிலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சமீப காலமாக, மிக்க சார்புடையதாக வேலை செய்து வருகின்றன. ராமர் கோயில் முழுமையாகக் கட்டிமுடிக்க இன்னும் சில காலம் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், அவசர அவசரமாக லோக் சபா தேர்தலுக்கு முன்பாக ஜனவரி 22-ம் தேதி கோயில் திறக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன[2] என்றெல்லாம் குறிப்பிட்டதையும் கவனிக்கலாம், அதாவது, எதிர்மறையாக, என்னவெல்லாம் “சாக்கு-போக்கு” சொல்லலாம், லாஜிக்கே இல்லாமல் வாதம் புரியலாம் என்ற போக்கு தான் வெளிப் படுகிறது.

கூட்டணி அரசியல் இப்பிரச்சினையில் இரட்டை நிலை?: பிரதமர் மோடி முதல் பா.ஜ.க தலைவர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் அதேவேளையில், `தேர்தல் ஆதாயத்துக்காக மதத்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது’ என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி போன்ற எதிர்க்கட்சிகள் இதனைப் புறக்கணித்துவிட்டன, என்று கூட சேர்த்து செய்தி போடுகின்றன. ஆப் தலைவர் குடும்பத்துடன் கலந்து கொள்வேன் என்கிறார். ஆனால், இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்துவும் பெருமைப் படுகிறான். இந்நிகழ்வை பெரிய அளவில் போற்றுகிறான். பல்லாண்டுகளாக அடக்கி வைத்த இந்து உணர்வுகள் நிச்சயமாக வெளிவருகின்ற அல்லது மனங்களில் நினைத்துப் பூரிப்பு அடைகின்றனர். உண்மையில், பிஜேபிக்கு சாதகமாகி விடுமே என்ற அச்சத்தில், மறுபடியும், மோடியை தூஷிக்கிறாம், பிஜேபியை எதிர்க்கிறோம் என்று இந்துவிரோத பிரச்சாரத்தில் இறங்கி விட்டதையும் கவனிக்கலாம். திமுகவைப் பொறுத்த வரையில், யாரும் ஒன்றும் கண்டுகொள்ளப் போவதில்லை.

தி.மு.. இளைஞரணி மாநாட்டு விழாவும், செய்தியாளர் சந்திப்பும்: தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்[3]. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது[4] என்று வெளியிடப் பட்டுள்ள செய்திகள், “பி.டி.ஐ” பாணியில் தான் இருக்கின்றன. ஊடகக் காரர்கள், உதயநிதி சொன்னதை அப்படியே செய்திகளாகப் போட்டிருக்கிறார்களே தவிர, அவர்கள் பதிலுக்குக் கேள்வி கேட்டதாக எதுவும் குறிப்பிடப் படவில்லை. முன்னர் தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் ராமாயணத்தை, ராமரைப் பற்றியெல்லாம் பேசியதை, எழுதியதைப் பற்றியும் கேட்கவில்லை. இப்பொழுது, அம்மா அயோத்தியா போவதைப் பற்றியும் கேட்கவில்லை.

 அயோத்தியா, ராமர் கோவில் என்ன அதிமுகதிமுக பிரச்சினையா?: ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியலாக்கக்கூடாது என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்[5], ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[6]. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார்[7]. இதையெல்லாம் யாரும் நம்பக் கூடிய நிலையில் யாருமில்லை, என்ற முறையில் உதயநிதி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்[8]. அப்போது அவரிடம், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம் அதை அரசியலாக பார்க்கக்கூடாது” என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது[9]. அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்[10], ‘அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம்[11]. திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது என்று கலைஞர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்[12].

முரண்பட்ட, இரட்டைவேட திராவிடத்துவ நாத்திகம்: ராமசாமி நாயக்கர் என்ற பெரியார், ராமாயணத்தை பற்றி கேவலமாக எழுதியிருக்கிறார்; அண்ணாவும் கம்பரசரம் போதையுடன் தள்ளாடியிருக்கிறார்; கருணாநிதி பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; ராமர் பிறந்த இடத்தை பற்றி கேவலமாக பேசியதுடன், ராமர் எந்த இஞ்னியரிங் கல்லூரியில் படித்தார், இந்துக்கள் எல்லாம் திருடர்கள் என்று பலவிதமாக பேசியிருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் அதேபோல, ஸ்டாலின் திருமண மந்திரங்களைப் பற்றி கேவலமாக பேசியதும் தெரிந்த விசயமே. இவையெல்லாம் ஒரு உதாரணம் தான். இதை விவரித்து சொல்லலாம். இப்பொழுது தனயன்சனாதனத்தை வேரறுப்போம், அது ஏதோ பெரிய கிருமி போன்றது என்றெல்லாம் பேசியதும், அது பற்றிய வழக்கங்கள் எல்லாம் நிலுவையில் இருக்கும் பொழுது, இந்த விதமாக எல்லாம் பேச ஆரம்பித்திருப்பதும் கவனிக்கத்தக்கது அதே நேரத்தில் இவருடைய தாயார், தனது மாமனார் இறந்ததற்கு காசிக்கு சென்று பிண்டம் வைத்ததும். கோவில்களுக்கு எல்லாம் சேர்ந்து நேர்த்திக்கடன் செய்ததும், இப்பொழுது கூட அயோத்தி நிகழ்ச்சிக்கு செல்வேன் என்று அறிவித்துள்ளதும் உன்னிப்பாக நோக்கலாம். ஆகவே இவ்வாறு இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது என்பது, இவர்கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த குடும்பம் தான் செய்து கொண்டிருக்கிறது என்று வெளிப்படையாக தெரிகிறது. என் குடும்பத்தில் என்னுடைய தாயார், மனைவி, சகோதரி, மகள் சாமி கும்பிடுவார்கள் அது அவர்கள் உரிமை என்றால், அதே உரிமை தான் தமிழக மக்களுக்கும் இருக்கின்றது. அதில் நான் அதில் தலையிட மாட்டேன் என்றெல்லாம் பேசும்பொழுது, அதே போல தான் மற்ற நம்பிக்கை உள்ளவர்ககுளும் உள்ள உரிமை.

© வேதபிரகாஷ்

19-01-2024


[1] விகடன், “மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை!” – அமைச்சர் உதயநிதி, சி. அர்ச்சுணன்,Published: 18-01-2024 at 11 AM; Updated: 18-01-2024  at 1 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/ayodhya-ramar-temple-temple-built-by-demolition-of-babri-masjid-says-dmk-minister-udhayanidhi

[3] மாலைமலர், மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால் திமுகவிற்கு உடன்பாடு இல்லைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின், By மாலை மலர்18 ஜனவரி 2024 10:16 AM.

[4] https://www.maalaimalar.com/news/state/tamil-news-minister-udhayanidhi-stalin-says-dmk-did-not-agree-because-mosque-was-demolished-and-temple-was-built-698817

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ராமர் கோயில் திறப்பு மத நம்பிக்கைக்கு திமுக எதிரியல்ல! ஆனா மசூதியை இடிச்சது தப்புஉதயநிதி ஸ்டாலின், By Halley Karthik, Updated: Thursday, January 18, 2024, 11:52 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalin-said-that-dmk-is-not-an-enemy-of-ram-temple-opening-or-religious-faith-575201.html

[7] தமிழ்.இந்து, மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” – உதயநிதி ஸ்டாலின் கருத்து , செய்திப்பிரிவு, Published : 18 Jan 2024 12:19 PM; Last Updated : 18 Jan 2024 12:19 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1184998-we-are-not-for-building-a-temple-over-destroyed-mosque.html

[9] ABP.Live, ‘Won’t Support Building Temple Where Mosque Was Demolished’: DMK’s Udhayanidhi, By: ABP News Bureau | Updated at : 18 Jan 2024 03:10 PM (IST)

[10] https://news.abplive.com/states/ayodhya-ram-mandir-won-t-support-building-temple-where-mosque-was-demolished-dmk-s-udhayanidhi-1657480

[11] நியூஸ்.தமிழ்.7.லைவ், அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, by Web EditorJanuary 18, 2024

[12] https://news7tamil.live/dmk-does-not-approve-of-building-a-temple-after-demolishing-a-mosque-in-ayodhya-minister-udayanidhi-stalins-speech.html

கிறிஸ்தவ பெண்கள் பைபிள்களுடன் மதுரை மீனாக்ஷி கோவிலில் நுழைந்தது, வரக்கூடாதா என்று கேள்வி கேட்டது!

ஜனவரி 11, 2024

கிறிஸ்தவ பெண்கள் பைபிள்களுடன் மதுரை மீனாக்ஷி கோவிலில் நுழைந்தது, வரக்கூடாதா என்று கேள்வி கேட்டது!

09-01-2024 கிறிஸ்தவ பெண்கள் பைபிள்களுடன் கோவிலில் நுழைந்தது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலீஸ் சோதனையை மீறி அம்மன் சன்னதி வரை ஜெப புத்தகத்துடன் வந்த கிறிஸ்தவர்களால் சர்ச்சை எழுந்துள்ளது[1]. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன[2]. மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி, மாற்று மதம் தொடர்பான பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது[3]. நேற்று முன்தினம் [09-01-2024] காலை அம்மன் சன்னதி அருகே வரிசையில் நின்றிருந்த பெண்கள் சிலர், கையடக்க புத்தகத்தை வைத்துக்கொண்டு முனங்கிக் கொண்டிருந்தனர்[4]. அங்கிருந்த ஊழியர் சந்தேகப்பட்டு விசாரித்தபோது கிறிஸ்தவர்கள் எனத்தெரிந்தது[5]. அவர்களை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்[6]. சர்ச், பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் வரும்போது, கோயிலுக்கு மாற்று மதத்தினர் வரக்கூடாதா,’ என கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், இது காலம் காலமாக பின்பற்றும் நடைமுறை. அறநிலையத்துறை விதிப்படி அதை பின்பற்றிதான் ஆக வேண்டும்,’ என்றனர். இதைதொடர்ந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

சர்ச், பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் வரும்போது, கோயிலுக்கு மாற்று மதத்தினர் வரக்கூடாதா: இதிலிருந்து அந்த கிறிஸ்துவ பெண்கள் திட்டமிட்டுத் தான் உள்ளே நுழைந்திருப்பது தெரிகிறது. படிக்கத் தெரிந்தவர்களுக்கு, “இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை,” என்ற போர்டையும் நிச்சயம் அறிந்திருப்பார்கள், படித்திருப்பார்கள். மேலும், பெண்களை அனுப்பினால், வாக்குவாதம்-அடிதடி என்றெல்லாம் நடக்காது என்றும் அவ்வாறு திட்டமிட்டு அனுப்பப் பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், கோவில்களில் பிரச்சினை உண்டாக்க வேண்டும் என்று பல கும்பல்கள் உறுதியாக செயல்பட ஆரம்பித்துள்ளது தெரிகிறது.  ஶ்ரீரங்கத்தில் கருவறை போராட்டம் என்றெல்லாம் கலாட்டா செய்துள்ளார்கள். அதுபோல, இனி மற்ற பிரபலமான கோவில்களில் புதுபுதுவிதமாக, பிரச்சினைகளை ஆரம்பிப்பார்கள் போலும்.

சோதனைக்குப் பிறகு வெளியே அனுப்பப் பட்டது: போலீஸ் சோதனையை மீறி அவர்கள் எப்படி ஜெப புத்தகத்துடன் கோயிலுக்கு வந்தனர் என ஹிந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. சரியான்ன கேளி தான். ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி கூறுகையில், ”பக்தர்கள் கொண்டு வரும் திரி உள்ளிட்ட பொருட்களைக்கூட உள்ளே கொண்டு செல்லக்கூடாது என கெடுபிடி காட்டும் போலீசார் மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். கோயில் நிர்வாகமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் போராட்டம் நடத்துவோம் என கோயில் நிர்வாகத்திடம் எச்சரித்துள்ளோம்,” என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது?: ஜூன் 2018ல், திருப்பரங்குன்றன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, சர்ச் கட்டியதாக வழக்குத் தொடரப் பட்டது. ஆனால், அச்செய்தி அப்படியே அமைதியானது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீது திராவிட கட்சிகளின் தாக்குதல்கள் 1950-60களிலேயே அதிகமாக தான் இருந்து வந்துள்ளது. நாத்திகம் என்ற போர்வையில் “மதுரை மீனாட்சி மூக்குத்தி கழட்டடி” என்று போன்ற வக்கிரமான வார்த்தைகள் எல்லாம் பயோகப் படுத்தி, பக்தர்களை பாதிக்கத்தான் செய்துள்ளனர். சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் “அல்லேலூயா அல்லேலூயா” என்று கத்தியதை காண முடிந்தது. ஒரு பாதிரியார் மோடியை பற்றி மிக கேவலமாக பேசி, வழக்கு தொடர்ந்து, கைதாக பிறகு மன்னிப்பு கேட்டு ஜாமீனில் வெளியே உள்ளார் அவர் மதுரை சேர்ந்தவர் தான். தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி தேவையில்லாமல் அதிகமாக சர்ச்சுகள் புதிது புதிதாக கட்டப்பட்டு வந்து, பெருகுவதும் கண்கூடாக பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கலையைக் காக்க வேண்டியவர்கள் ஏன் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள்: ஆகவே இத்தகைய திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நடத்தப்பட்ட வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒரு முக்கியமான கோவில் என்பதால், வருடம் முழுவதும் லட்சக்கணக்கான, என் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சொல்கிறார்கள் இதனால் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது, வியாபாரம் நடக்கிறது. கோவிலில் மண்டபத்தில் வைத்திருந்த கடைகள் மூலமாக, மின்கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்ட பொழுது, கோவில் தூண்களும், சிற்பங்களும் பாதிக்கப் பட்டன.  அப்பொழுது, எந்த சரித்திராசிரியர், ஆழாய்வு நிபுணர் என்று எவரும் கவலைப்படவில்லை, கண்டிக்கவில்லை. ஆனால், அவ்வப்பொழுது, கலைகளைக் காப்போம் என்று மாந் ஆடுகள் நடத்துவார்கள், புத்தகம் போடுவார்கள்.

மதுரை மீனாக்ஷி கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது: சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் மதுரை ஆனது ஆதீனத்திற்கு சொந்தமாக இருக்கிறது அந்த மதுரை ஆதீனம் அதனால் தான் திராவிட கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதனால், சுமூகமாக இருந்து கொண்டு கோவில் நிலங்கள் சொத்துக்கள் முதலீட்டு எல்லாம் மற்றவர்கள் அனுபவிக்கும் அளவுக்கு கடந்த ஏழு ஆண்டு காலமாக குத்தகை வாடகை என்றெல்லாம் விடப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தான் அதிகமாக அபகரித்துக் கொண்டு அனுபவித்து வருகிறார்கள். ஆண்டுகளாகிய பிறகு தமக்கு சொந்தமாகி கொள்ள வேண்டும் என்ற திட்டத்திலும் குத்தகை மற்றும் வாடகை பணம் கொடுக்காமல் வழக்குகள் போட்டு அவற்றை கிடப்பில் வைத்திருக்கிறார்கள் இதற்கு அரசுஅதிகாரிகள், அரசு அலுவலகங்கள், திராவிடக் கட்சியினர் என்று எல்லோருமே உடந்தையாக இருக்கின்றனர்.

அதிமுகமதுரையில் SDPI நடத்தியது இந்துக்களை மிரட்டவா, முஸ்லிம் ஓட்டு வாங்கவா?: சமீபத்தில் நடந்து வரும் நிகழ்ச்சிகளையும்  கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு அதிமுக SDPIவுடன் சேர்ந்து மாநாடு நடத்தியுள்ளது. அது முஸ்லிம்களின் ஓட்டு வாங்க வேண்டும் என்ற ரீதியில் தான் உள்ளது. திராவிட கட்சிகள் பெரியாரிஸம், நாத்திகம் என்றெல்லாம் பேசினாலும் அது இந்து விரோதமாக தான் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்து விட்ட நிலையில் உள்ளது. சாதாரணமாக மதுரைக்கு வந்து செல்கின்ற பக்தர்கள் அவர்கள் இந்துக்கள் தான். ஆனால், அவர்கள் கோவிலுக்கு வந்து செல்லும் நேரங்களில் தான் இத்தகைய மாநாடுகள் நடக்கின்றன எனும் பொழுது அவர்களுக்கு என்ன சமிஞை, சந்தேசம் செய்தி, அல்லது மற்ற விஷயங்கள் அவருக்கு அனுப்பப்படுகின்றன, தெரியப்படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆக இந்து ஓட்டு வங்கி உருவாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்லப் படுகிறார்கள் போலும்:  சரி நாங்கள் முஸ்லிம்களுக்காக இருக்கிறோம் என்று இந்த இத்தகைய விழா காலங்களில் மாநாடு போட்டு அதே விதமாக சமிஞை அனுப்புகிறார்கள் என்றால் இந்துக்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைத்து விடுமா என்றும் தெரியவில்லை. கடந்து 70 ஆண்டுகளில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போடுவது, பிள்ளையார் சிலை உடைப்பது ஐயப்பனை பற்றி கேவலமாக பேசுவது அதன்படியே குறும்பு புத்தகங்கள் எல்லாம் போடுவது இதையெல்லாம் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்துக்களுக்கும் அவர்களுடைய பக்திக்கும் அல்லது அவர்களுடைய அரசியல் விருப்பங்களுக்கும் தொடர்பு இல்லை என்று தான் தெரிகிறது. ஏனெனில், அத்தகைய இந்துவிரோதிகளுக்கு அவர்கள் ஓட்டுப் போட்டுக் கொன்டுதான் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அவ்வாறு இருக்கிறது அதனால் அவர்கள் ஓட்டு போடுகிறார்கள் இவன் அவர் அவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களது ஓட்டு வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலயுள்ளது விசித்திரமானது. அது ஜனநாயகமும் அல்ல.

© வேதபிரகாஷ்

11-10-2024


[1] தினமலர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜெப புத்தகத்துடன் கிறிஸ்தவர்கள் போலீஸ் மீது குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள்: ஜன 11,2024 04:48.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3524742

[3] தினமலர், மீனாட்சி அம்மன் கோவிலில் கிறிஸ்துவர்களிடம் விசாரணை,  Added : ஜன 10, 2024  23:38.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3524247

[5] செய்திசோலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…. பைபிளுடன் வந்த கிறிஸ்தவர்கள்…. வெளியேற்றிய அதிகாரிகள்….!!,மதுரை , மாவட்ட செய்திகள் January 11, 2024.

[6] https://www.seithisolai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-7/

ஆவியாக வந்து திராவிட மாடலில் அவிநாசி கோவிலில் கொள்ளையடித்த மனித உருவில் வந்தவன் யார்?

மே 26, 2023

ஆவியாக வந்து திராவிட மாடலில் அவிநாசி கோவிலில் கொள்ளையடித்த மனித உருவில் வந்தவன் யார்?

தமிழகத்தில் கோவில் கொள்ளை, திருட்டு, கடத்தல் என்பதெல்லாம் சகஜமப்பாவா?: தமிழகத்தில் கோவில் கொள்ளை, திருட்டு, கடத்தல் என்பதெல்லாம் அலுத்துப் போன செய்திகளாகத் தான் வெளியிடப் படுகின்றன. திரும்ப-திரும்ப நடக்கின்றனவே என்று எந்த நிருபரும், ஊடகக் காரரும், புலன் விசாரணை வீர-சூரப் பத்திரிக்கையாளனும் எதையும் கண்டுபிடிக்க உற்சாகம் பெறவில்லை. இந்து அறநுலைய அமைச்சரை நிற்கவைத்து கேள்விகளைக் கேட்கவில்லை. பி.டி.ஐ பாணியில்,ஒரு வரி கூட மாறாமல் அப்படியே வெளியிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது[1].  ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவிலாகும். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாகவும், முதலை விழுங்கிய பாலகனை காப்பற்றுவதற்காக சுந்தரர் பதிகம் பாடி அதன் பின் அந்த சிறுவனை மீட்டதாகவும் வரலாறு கொண்ட தலமாக இது விளங்குகிறது, என்று புராண விசயங்களைக் குரிப்பிட்டாலும், குற்றவியல் ரீதியில் ஒன்றையும் கவனிக்கவில்லை.

22-05-2023 அன்று கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையன் செய்த காரியகள்: வழக்கம்போல் 23-05-2023 அன்று அதிகாலை கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்தபோது,

  • உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததையும்,
  • கோயிலுக்குள் இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும்,
  • தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்ததையும்,
  • சிலைகள் மீது அணிவித்திருந்த ஆடைகள், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த பொருட்கள் உள்ளிட்டவை களைந்து கிடந்ததையும்

கண்டு அதிர்ச்சியடைந்தனர்[2]. இதையெல்லாம் சாதாரணமாக செய்ய முடியாது. மேலும், விவரம் அறிந்தவன் தான் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். அதாவது, 22-05-2023 அன்று யாரோ அத்தகைய வேலைகளை செய்திருக்க வேண்டும். அதிர்ச்சி அடைந்த அர்சகர்கள் உடனே கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்[3]

போலீஸார் வருவது, விசாரிப்பது, கைது செய்து கொண்டு செல்வது: இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீஸார் சென்று விசாரித்தனர்[4]. இதில் முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்த வேல், சேவல் கொடியுள்ள 2 வேல்கள் மற்றும் உபகாரப் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது[5]. அப்படியென்றால் திருடப் பட்டது என்றாகிறது. கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் சத்தம் கேட்டதால் சென்று பார்த்துள்ளனர்[6]. அப்போது, அங்கு பதுங்கி இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்[7](இப்படி மிக்க மரியாதையுடன் ஊடகத்தால் வெளியிட்டுள்ளனர்). இதில், பிடிபட்ட நபர் அவிநாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடையை சேர்ந்த சரவணபாரதி (32) என்பது தெரியவந்தது[8]. மேலும், இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும், 22-05-2023 அன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது[9]. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிசிடிவி பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடப் படவில்லை.

வாக்குமூலத்தில் தான் பைத்தியம் என்பது போல சொல்வது: இதற்கிடையே, சரவணபாரதி அளித்த வாக்குமூலத்தில், “தன்னை சிலர் தாக்கிவிட்டதாகவும், தான் முன்பே இறந்துவிட்டேன். தற்போது ஆவியாக உள்ளே வந்தேன்,” என்றார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், “அவர் ஏற்கெனவே மனநல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதால், தற்போது அவர் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாரா அல்லது பிடிபட்டவுடன் நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்” என்றனர்.  “அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று சொல்லி விட்டு, அந்த ஆள் பைத்தியம் என்பது போல குறிப்பிடுவதும், ஊடகங்கள், அப்படியே செய்திகள் வெளியிடுவதும் தமாஷாக இருக்கிறது.

இந்து அமைப்புகள் போராட்டம்: முன்னதாக, தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பினர், கோயில் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால், கோயிலில் நேற்று கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை[11]. பக்தர்களும் அனுமதிக்கப்படாததால் வேதனையடைந்தனர்[12]. மேலும், கோயிலில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து, கோவை – அவிநாசி நெடுஞ்சாலையில் இந்து அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[13]. அப்போது, அங்கிருந்த கடைகளை மூடக் கூறியும், சாலையோரம் இருந்தவர்களை மறியலில் ஈடுபட வலியுறுத்தியும் பேசினர்[14]. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது[15]. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால், 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்[16]. இங்கு மட்டும் போலீஸார் சரியாக வேலை செய்து விடுவர்.

பரிகார பூஜைகள் நடந்த பிறகு கோவில் திறக்கப் பட்டது: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், வரதாசல அடிகளார், காமாட்சி தாச சுவாமிகள், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று பார்வையிட்டனர். அவிநாசி எம்எல்ஏ ப.தனபால் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு கோவில் கருவறை மற்றும் சன்னதிகளில், அந்நபர் புகுந்தால், பிராயச்சித்த ஹோமம் செய்யப்பட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் செந்திலாண்டவர் சன்னதிகளில் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன[17]. அதன்பின், 12 மணியளவில், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டடனர்[18]. ஆனால், இவ்வளவு நடந்தும், இந்து அறநிலையத் துறை அமைச்சரோ அல்லது பொறுப்பான மற்ற எந்த அதிகாரியோ எதையும் சொல்லவில்லை, பேசவில்லை, கண்டுகொள்லாமல் இருந்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

26-05-2023


[1] தமிழ்.இந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி; சிலைகள் சேதம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்தவர் பிடிபட்டார், செய்திப்பிரிவு, Published : 24 May 2023 06:19 AM, Last Updated : 24 May 2023 06:19 AM

[2] https://www.hindutamil.in/news/crime/995254-avinashilingeswarar-temple-robbery-attempt-damage-to-idols.html

[3] தினமணி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி, By DIN |  Published On : 23rd May 2023 09:30 AM  |   Last Updated : 23rd May 2023 11:07 AM

[4] https://www.dinamani.com/tamilnadu/2023/may/23/robbery-attempt-at-avinasi-lingeswarar-temple-4010345.html

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Avinashi Lingam Temple: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி; ஒருவர் கைது, Pandeeswari Gurusamy, 23 May 2023, 13:35 IST

[6] https://tamil.hindustantimes.com/astrology/avinashilingeswarar-temple-robbery-attempt-one-arrested-131684828784555.html

[7] சமயம்.காம், பிரபல அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு முயற்சி; கோவிலுக்குள் மறைந்திருந்த நபர் கைது!, Ramya Subburaj | Samayam Tamil | Updated: 23 May 2023, 11:14 am.

[8] https://tamil.samayam.com/latest-news/tiruppur/burglary-attempt-at-avinashi-lingeswarar-temple/articleshow/100437682.cms

[9] தமிழ்.18.நியூஸ், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சிலைகள் சேதம்.. கோபுரத்தில் பதுங்கி இருந்த நபர் கைது, Reported By :BALAJI BHASKAR, Published By :Raj Kumar, LAST UPDATED : MAY 23, 2023, 17:57 IST, First published: May 23, 2023, 17:40 IST

[10] https://tamil.news18.com/tiruppur/thief-caught-while-trying-to-steal-in-avinasi-lingeswarar-temple-988834.html

[11] இ.டிவி.பாரத், பிரசித்திபெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட முயற்சிகுற்றவாளி கைது!, Published: May 23, 2023, 1:33 PM.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/a-robbery-attempt-is-underway-at-the-famous-avinashi-lingeswarar-temple-in-coimbatore-district/tamil-nadu20230523133242190190881

[13] மாலை மலர், அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிலைகள்கலசங்கள் உடைப்பு, ஆபரணங்கள் திருட்டுமர்மநபர்கள் கைவரிசை, By மாலை மலர், 23 மே 2023 3:16 PM; https://www.maalaimalar.com/news/district/will-security-be-strengthened-612957

[14] https://www.maalaimalar.com/news/district/will-security-be-strengthened-612957

[15] தினகரன், அவிநாசி கோயிலுக்குள் புகுந்து சிலைகள், கலசங்கள் உடைப்பு: வாலிபர் கைது, MAY 24, 2023; https://m.dinakaran.com/article//1133402/amp

[16] https://m.dinakaran.com/article//1133402/amp

[17] தினமலர், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கோபுர சிலைகள் திருட முயற்சி, மாற்றம் செய்த நாள்: மே 23,2023 19:12

[18] https://m.dinamalar.com/detail.php?id=3328403

இந்து ஒற்றுமை தான் தேவை, சைவ-வைணவ வாத-விவாதங்கள் தேவை இல்லை!

ஜூலை 14, 2022

இந்து ஒற்றுமை தான் தேவை, சைவ-வைணவ வாத-விவாதங்கள் தேவை இல்லை!

712லிருந்து கஜினி-கோரி போன்றோர் இந்தியாவை வெல்ல போராடி வந்தது: 712க்குப் பிறகு, துலுக்கருக்கு, பாரதம் – குறிப்பாக தில்லி, தில்லியைத் தாண்டி உள்ளே நுழைய வேண்டும், அங்குள்ள விக்கிரங்களை அழிக்க வேண்டும், கோவில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் தன்மை ஏற்பட்டது. “தாருல்-ஹராப்” மற்றும் “தாருல் இஸ்லாம்” என்று பிரித்துக் கொண்டு, காபிர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று, “ஜிஹாத்” என்ற  “புனிதப் போர்” சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்டனர் எப்படி “சிகந்தர்” என்ற பெயரை சூட்டிக்கொள்ள ஆசைப் பட்டனரோ, அதே போல, இந்திரபிரஸ்தத்தைக் கைப்பற்றி, “தில்லீஸ்வரர்” என்ற பெயர் பெற வேண்டும் என்ற கனவு இருந்தது.

முகமதியத்தின் மூலங்கள் இந்தியாவில் இருந்ததால், இந்தியாவின் மீது தொடர்ந்து படையெடுத்தது: முகமதியம், இஸ்லாம், பற்றி ஆராய்ச்சிகள் நடக்க-நடக்க, அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா பரந்த இந்தியாவில் இருந்தன என்று தெரிய வந்தது. அவைதான், “அல்லாவின் குழந்தைகள்” என கருதப் பட்டன. அரேபியா புனித இடமாக, தேசமாகக் கொண்டாலும், அவர்களுக்கான மூலங்கள் பாரதத்தில் இருப்பதை அறிந்து கொண்டனர். எப்படி, கிருத்துவர்கள், ஈடன் – சொர்க்கம் காஷ்மீரத்தில் உள்ளது என்று நம்பினரோ, அதுபோல, அவர்களும் இதையெல்லாம் நம்பினர். ஆனால், ஆசார-அடிப்படைவாத-தீவிரவாத முகமதியம் வளர-வளர பழைய ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்தார்கள். எப்படி முகமது 360 சிலைகளையும் உடைத்து, மெக்காவில் நுழைந்தாரோ, அதே போல, விக்கிரங்களை உடைத்து, பாரதத்தில் – ஹிந்துஸ்தானத்தில் நுழைய வேண்டும் என்று திட்டம் போட்டனர்.

அரேபியா போலல்லாது, இந்திய மக்கள் ஒன்றாக சுபீக்ஷமாக வாழ்ந்தது: ஆனால், அரேபியாவில் வாழ்வது போல, மக்கள் தனித்தனியாக,  வெவ்வேறு இடங்களில் வசிக்காமல், கிராமங்களில், நகரங்களில், ஆயிரக் கணக்கில் இந்தியர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதனால், அவர்களை வெற்றிக் கொள்வது கடினமாக இருந்தது. போதாகுறைக்கு, பாரத மன்னர்கள் யானைப் படைகளை வைத்திருந்தனர். அதனால், குதிரைகள் மற்ற படையினர் பயந்து ஓட ஆரம்பித்தனர். அலெக்சாந்தரே அவ்வாறு தான் தோல்வியடைந்தான். ஆரம்பத்தில், துலுக்கர் கூட படுதோல்வியடைந்து வந்தனர். இதனால், திடீரென்று குதிரைப் படையுடன் வந்து தாக்கி, ஓடிவிடும் அதிரடி தாக்குதல் திட்டத்தை ஆரம்பித்தனர். இதனால், இந்தியர்கள் பீதியடைய ஆரம்பித்தனர். மேலும், பசுக்கள்-கால்நடைகளை பிடித்துச் செல்வது, பெண்களைத் தூக்கிச் செல்வது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டனர். இவையெல்லாம், இந்தியர்களிடையே மேன்மேலும் பீதி, பயங்கரம் முதலியவற்றை ஏற்படுத்தின. 

இந்துகுஷ் நிலை ஏற்படுமென்று எச்சரிப்பது: 712லிருந்து 11ம் நூற்றாண்டு வரை, சுமார் 300 ஆண்டுகள் வடமேற்கு பகுதிகளில், அத்தகைய தீவிரவாத தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர். இந்து குஷ் (Hindu Kush) என்பது வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும். இந்துகுஷ் மலைத்தொடரில் இருந்து பாயும் ஆறுகளில், ஹெல்மண்ட் ஆறு, ஹரி ஆறு, காபூல் ஆறு, மற்றும் சிஸ்டன் ஆற்றுப்படுகை போன்றனை முக்கியமானவை. வரலாற்றில் பல முறை முஸ்லிம்கள் இந்துக்களை கொன்று குவித்ததால் தான் அந்த மலைத் தொடருக்கு ‘இந்துகுஷ்’ என்ற பெயரே வந்தது. எப்போதெல்லாம் இந்துக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தார்களோ அப்போதெல்லாம் அவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதை வைத்து தான், இன்றும் இந்தியர்களை மிரட்டி வருகிறார்கள். கஜினி, கோரி, பாமியன், காபூல் போன்ற இடங்களிலிருந்து தீவிரவாதச் செயல்களை மேற்கொண்டு வந்தனர்.

கஜினிகோரி தோற்றுவென்ற பாடத்தை இந்துக்கள் அறியாமல் இருப்பது: முன்பு கஜினி மொஹம்மதுவும் 16 முறைத் தோற்று, 17வது முறையாக இந்து ஒற்றுமை இல்லாதலால் வென்று, கொள்ளையெடித்துச் சென்றான்! கோரி மொஹம்மது ராஜபுத்திரர்களிடம் பலமுறைத் தோற்றவன், ஆனால், இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததைப் பயன்படுத்தி வென்றான். கோரி முகமதுவும் பிறகு தனது தாக்குதல்களை ஆரம்பித்தான்.  கஜினி-கோரி இந்துக்களிடம் தோற்ற வரலாற்றை, இந்திய பாடப்புத்தகங்களில் குறிப்பிடப் படுவதில்லை. இதனால், இந்துக்கள் ஏதோ, இவர்களிடம் தோற்றது போலவே சித்தரிக்கப் பட்டு வருகிறது. 1191ல் முதல் தரையின் போரில், கோரி பிரித்விராஜ் சௌஹானிடம் தோல்வியடைகிறான். தோல்வியடைந்து, சிறை பிடிக்கப் பட்டாலும், விடுவிக்கப் படுகிறான்.

மாமனார்மறுமகன் சண்டைகளில் இந்துக்கள் பாதிக்கப் படுவது: ஜெயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யோகிதா / சம்யுக்தாவுடன் பிரித்திவிராஜ் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டான். ஆனால், மாமனார் ஜெயச்சந்திரனே, மறுமகன் பிருத்விராஜ் சௌஹானுக்கு துரோகமிழைத்து, விரோதியும் ஆனான்! துருக்ஷா வெல்ல உதவினான்! அதனால், முதலாம் தரையின் போரில் வெற்றி பெற்றாலும், இரண்டாம் தரையின் போரில் 1192ல் தோல்வியடைந்து, பிறகு வஞ்சத்தினால்-வஞ்சகத்தால் கொல்லப் பட்டான். மாமனார்-மறுமகன் வரலாறு இவ்வாறு இருந்தது. அதே போல, சிவன் விஷ்ணு சம்பந்திகள் என்றாலும், அடியார்கள் சண்டைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இது இந்து ஒற்றுமைக்கு ஒவ்வாததாகும்.

பாண்டியன் துலுக்கருடன் உறவு வைத்ததால், துரோகம் செய்து மாலிகாபூர் கொள்ளை அடித்தது: மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இறந்த பிறகு, அவரது மகன்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோர் அரியணைக்காக அடுத்தடுத்து போரில் ஈடுபட்டனர். பிற்கால வரலாற்றாசிரியர்கள் கூற்றின்படி சுந்தரபாண்டியன் மாலிகாபூரின் உதவியை நாடினான், இது தில்லி படைகள் பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க வழிவகுத்தது. ஆனால், பாண்டிய நாட்டை ஆராய தில்லி இராணுவம் ஒரு உளவுப் பிரிவை நம்பியிருந்தது என்று இசாமி கூறுகிறான். இந்த பிரிவில் பஹ்ரம் காரா, கட்லா நிஹாங், மஹ்மூத் சர்திஹா மற்றும் அபாச்சி போன்ற முன்னணி தளபதிகள் இருந்தனர். ஒவ்வொரு நாளும், இந்த தளபதிகளில் ஒருவன், பாண்டிய நாட்டின் ஒரு பகுதியைப் உளவு பிரிவுடன் ரகசியமாக கண்காணித்து வந்தான். வேவு பார்க்க உள்ளூர் மொழியை அறிந்த ஒரு சிலரின் ஆதரவையும் பெற்றுச் சென்றனர். இவ்வாறு மாலிகாபூர் துரோகத்துடன் செயல்பட்டு, ராணுவ தர்மத்தை விடுத்து, பாண்டியர்களைத் தாக்கி, கொள்ளையடித்தான்.

மாமனார்-மறுமகன் சண்டை எனில் அதோகதி நிலை தான் ஏற்பட்டது: இதேபோல பாண்டியர்களில் ஒற்றுமை இல்லாதலால், சுந்தர பாண்டியன் வரவழைத்ததால் மாலிகாபூர் தென்னிந்தியாவில் நுழைந்தான். அந்த, ஒரு மாலிகாபூருக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு மாலிகாபூருக்கு தாக்குப் பிடிக்க முடியாதலால், மதுரையில் துருக்ஷர் ஆட்சி 1333 முதல் 1378 வரை 45 ஆண்டுகள் நடந்தன, இதனால், மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பல கோவில்கள் இடிக்கப் பட்டன! விஷ்ணு, சிவன் விக்கிரங்கள் நிலை அறிந்ததே, அது ஶ்ரீரங்கம், சிதம்பரம் என்றெல்லாம் இருக்கலாம். மாமனார்-மறுமகன் சண்டை எனில் அதோகதி தான், அதாவது, சிவனின் மகன் முருகன், விஷ்ணுவின் மகளைத் திருமணம் செய்து கொண்டான், இதனால், சம்பந்திகள் ஆகி விட்டார்கள். அதனால், அவர்களின் பக்தர்களும் உறவினர் ஆகிவிட்டார்கள், சண்டைப் போட்டுக் கொள்ளத் தேவையில்லை, என்றாலும், இன்று வரை சிலர் வெறியுடன் சண்டைப் போட்டுக் கொள்வது வியப்பாக இருக்கிறது.

1000 ஆண்டு படிப்பினையை அறியாதது-புரியாதது: ஆயிரம் ஆண்டுகளில் உடைக்கப் பட்ட விக்கிரங்கள், சிலைகள், பிரதிமைகள் ஏராளம். தடுக்க எந்த இந்துவுக்கும் வக்கில்லை, ஆனால், இப்பொழுதும் அதற்கும் சண்டை உள்ளது, இது அவருடையதா-இவருடையதா போன்ற வாத-விவாதகள்.  விஜயநகர பேரரசு ஆட்சியாளர்கள் எல்லா கோவில்களையும் புதுப்பித்து, புனர்நிர்மாணம் செய்து, புனருத்தாரணமும் செய்வித்து சிறப்பித்தனர். அதாவது, ஆரம்பத்தில், அவர்கள் சைவர்களாக இருந்தாலும், பிறகு, ஒற்றுமை காக்க, அவ்வாறு சேவை செய்தனர். துலுக்கரை தடுக்க, மக்களைக் காக்க வேலை செய்தனர். இருப்பினும், துலுக்கர்களின் துரோகத்தினால், 1565ல் தலைகோட்டைப் போரில் 91 வயது ராமராயர் கொல்லப் பட்டு, விஜயநகரப்பேரரசு முடிவுக்கு வந்தது. ஹம்பி முற்றிலும் இடித்து, அழிக்கப் பட்டது. இப்பொழுதோ இடிபாடுகளுடன் இருக்கும் கோவில்கள் மறைந்து விடும் நிலைகளில் உள்ளன.

அப்பர் போல உழவாரப் பணியும் செய்வதில்லை, சம்பந்தர் போல துணுங்கரை அடையாளமும் காண்பதில்லை: தமிழ்கத்திலும் அதே நிலைதான். சோழர்காலத்து சிவன் கோவில்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அருகிலேயே, ரியல் எஸ்டேட்-காரன்கள் [பெரும்பாலோர் துலுக்கர், இந்துவிரோதிகள்] தயாராக இருக்கிறார்கள். முதலில் விக்கிரங்கள் மறைந்தன, பிறகு சிலைகள் மாயமாகின, நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டன, அடியார்களும் மாறி-மாற்றப்பட்டு விட்டனர். அப்பர் போல உழவாரப் பணியும் செய்வதில்லை, சம்பந்தர் போல துணுங்கரை, குண்டரை, ஊத்தைவாயினரை  அடையாளமும் காண்பதில்லை, வஞ்சகர், கொடியர், புறங்கூறுவர், மொட்டையர், தேரர், பிண்டியர், கொடியர், உடை போர்ப்பர், பிடகர், போதியர் போல மாறுதல் தகுமோ? ஒருவேளை இவர்களைப் போல இருந்து, “நாங்கள் சைவர், இந்துக்கள் அல்லர்’ என்றால், அறிவித்துக் கொண்டால், சம்பந்தர் வாக்கு மெய்யே. கோவில்கள் உச்சத்தில் சென்றாலும், மண்ணோடு மண்ணாலும், சுற்றியிருந்து அனுபவித்து லாபங்களைப் பெறுவது இந்து விரோதிகள்தான்.

சமணரும்-சாக்கியரும் இப்பொழுது திராவிடத்துவ வாதிகளாக-இந்துவிரோதிகளாக மாறியுள்ளனர்: சமணரும் புத்தரும் புறங்கூறுஞ் செயலினர். அலர் தூற்றுங் குணத்தர், நல்லது அறியார். வேதம், அங்கம், வேள்வி இவைகளை நிந்தனை செய்தனர். வைதிக வழி அறியார். ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலார். அவர் உரைகள் நஞ்சினுங் கொடிய. அவர் கொண்ட நெறி பழமையதாயினும் துளங்கும் நெறி. அவர் கூறி வைத்த குறி பிழையது. அவர் நயமுக உரையினர். வேடிக்கைக் கதைகள் உண்டுபண்ணித் திரிவர். நீதிகள் பல சொல்லுவர். ஆனால் அந்நீதிகளைத் தம் நினைவிற் கொள்ளும் ஆற்றல் இலாதவர். அமணராயினோர் சைவர் தம் மேலுற்ற காற்றுக் கொள்ளவும் நில்லார். ஊன் நன்று என்பர் ஒரு சாரார்; தீது என்பர் ஒரு சாரார்; வேளை தவறாது உண்பார்; மூடிய சீவரத்தர் முன் கூறுண்டேற, சமணர் பின் கூறுண்டு காடி தொடுவர். புத்தர் பிக்ஷுக்கள் உச்சிப்போதின் முன்பே உண்ணுவர். ‘உலகிற் பெரியோர்கள் உரைத்த மொழிகளைத் திருடி நீதிநூல் செய்பவர். எங்கு மில்லாததொரு தெய்வம் உளதென்று உளறிச் சமயங்கள் கண்டவர். பல் தருமங்களைச் சனங்களுக்குக் காட்டி அவர் மனத்தைக் கவர்பவர். போதியார், பிண்டியார் இருவர் நூலும் பொய்ந்நூல். இவர்கள் ஒதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார், நல்வினை நீக்கிய வல்வினை யாளர்., என்றெல்லாம் திருமறை எச்சரிக்கிறது.

2022ல் சைவ-வைணவர்கள் சண்டை தேவையில்லை: சைவ-வைணவர்கள் சண்டைப் போட்டுக் கொண்டு, போட வைத்து, சைவர் இந்து அல்ல என்றும், நாத்திகர்களுடன் கூட்டும் வைப்பார்கள்! துவரூட்டிய உடையினர்; தீய கருமம் சொல்லுபவர்; கையில் மண்டை கொண்டு உழல்பவர். சமண் குண்டர் பொல்லா மனத்தினர்; இவர் யாரோ? விருது பகர்பவர்; வெஞ்சொலாளர்; ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலார், வேடிக்கைக் கதைகள் உண்டுபண்ணித் திரிவர் இவர் யாரோ? மாமனார்-மறுமகன் உறவுமுறையை இறையியல் மூலமும் மதிக்க, சரித்திரரீதியில் கடைபிடிக்க முடியவில்லை! துரோகம் தானே? இன்று நாத்திகர், திராவிடத்துவவாதிகள், பெரியாரிஸ்டுகள், செக்யூலரிஸவாதிகள், மனிதநேயப் போராளிகள் என்ற பலமுகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களைத் தாக்கி வருவது தெரிந்த விசயமே. அதை அறிந்தும், இத்தகைய வாத-விவாதங்களைப் புரிந்து, விரோதிகளுக்கு தீனி போடும் வேலையை இந்துக்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

07-07-2022