Archive for the ‘கழகம்’ Category

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

ஒக்ரோபர் 23, 2023

 

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு – இதிலிருந்து அறியப் ப்டுவது என்ன? (1)

 

“மக்கள் சேவையே மகேசன் சேவை” திராவிட ஆட்சியில் எப்படி நடக்கிறது என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள்: எப்படி அரசியல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்துவிரோதிகள், எந்த பிரச்சினையையும் அவ்வாறே மாற்றியமைத்து, பலன் பெற முயற்ச்சிக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம். தேர்தல் சமயத்தில் இந்துவிரோத அரசியல்வாதிகள் “ஒழுங்குப் பிள்ளை” போல பட்டை-கொட்டைகளுடன் கோவில்களுக்கு வருவது, கும்பிடுவது அறிந்ததே. ஏனெனில், இந்துக்களின் ஓட்டு தேவை. அதே போல, ஒரு பக்கம் பிள்ளையார் சிலை உடைத்து, “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று கூவி ஆட்சிக்கு வந்ததும் தெரிந்த விசயமே. அப்படி, “இந்து திருடன்” என்று அவமதித்து, வனவாசம் சென்று ஜோதிடரைப் பார்த்து, பரிகார யாகம் செய்து, மறுபடியும் ஆட்சிக்கு வந்த கதையும் தெரிந்த விசயமாகி விட்டது. இப்பொழுது அவரின் மகன், மறுமகள், பேரன் என்று அதே ஆன்மீகம்-துன்மார்க்கம் என்ற விளையாட்டுகளில் இறங்கியிருப்பது “ஆன்மீக ஆதரவு” பேச்சில் வெளிப்படுகிறது.

ஆன்மீகம் என்றால் என்ன ஆன்மீகம். பெரியார் ஆத்மாவே இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு, எங்கிருந்து ஆன்மீகம் வரும்?: ஆன்மீகம் என்ற சொல் ஆத்மா என்ற சொல்லின் மீது தான் ஆதாரமாக உருவானது. அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆத்மா உண்டு, அதன் மூலமாக அறியப்படுவது என்னவென்றால் மனிதனுக்கு இறப்பு உண்டு இறந்த பிறகும் வாழ்க்கை ஒன்று போன்ற நம்பிக்கைகளை அடக்கியது ஆத்மா, ஆத்மவியல், ஆன்மீகம் முதலியவை. அவ்வாறு இருக்கும் பொழுது, பெரியாரிஸம், நாத்திகம் அதிலும் குறிப்பாக இந்து விரோதத் தன்மையுடன் கூறும் இந்த சித்தாந்தனத்தில் எவ்வாறு ஆன்மீகம் உள்ளே வந்துப் புகும் அல்லது ஸ்டாலின் சொல்வது போல எவ்வாறு அது தங்களது திராவிடத்துவ கொள்கைக்கு உடன்பட்டு இயைந்து ஒத்துப் போய் எதிர் தன்மையை இல்லாத நிலையில் இருக்கும் என்பது அவர்கள் தான் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. எனவே இது தேர்தல் காலத்தில் மக்களை குறிப்பாக இந்துக்களை ஏமாற்ற பேசும் பேச்சாகவே வெளிப்படையாகப் புலப்படுகிறது. ஏனெனில் வருகிறது கடந்த கால பேச்சுகள், நடத்தைகள், நடவடிக்கைகள், எழுதிப் பேசி அச்சில் வந்திருக்கின்ற புத்தகங்கள், நோட்டீஸ்கள், எல்லாமே இவர்களுக்கு இவர்களின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தி வந்து, ஏற்கவே ஆவணங்களாக அமைந்துள்ளன.

அரசியல் பேச்சுகள் இந்துக்களுக்கு உதவுவது இல்லை, பாதகமாகத்தான் இருந்து வருகின்றன: நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற செய்தி எல்லா மின்-அச்சு ஊடகங்களிலும் வந்துளளது. கலைஞர் செய்தி, முரசொலி முழுவதுமாக வெளியிட்டுள்ளன், மற்றவை சுருக்கமாக, ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளன. சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் விங் 2.0 / Wing2Point0 ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட சமூக வலைதள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக அரசியல் செய்ய எல்லா யுக்திகளும் கையாளப் படுகின்றன எனூ தெரிகிறது. அதில் வியாபார ரீதியில் எல்லோருமே இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.பணம் கொடுத்தால் வேலைக்கு வருவார்கள்.

திராவிடத்துவ-பாஜக மோதல்களில் இந்துமதம் தாக்கப் படுவது: முதல்வர் பேசுகையில், “ தி.மு..,வை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கங்களை அழிப்போம் எனக்கூறியவர்கள் இங்கு தான் வந்து அடைக்கலம் ஆனார்கள்[1]. இது வரலாறு……….. என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள்.….சமூக வலைதங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டுபோய் சேர்க்கும்[2]ஒருவர் பலநாள் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்துவிடும்[3]. என்னை பொறுத்தவரை எதிர்மறை பிரசாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட நேர்மறையான பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியானது[4]. அரசியவாதிகளை தாண்டி ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடமும் அத்துமீறல், மிரட்டல், அடக்குமுறையை ஏவுகிறது பாஜக[5]. இப்படிப்பட்ட சமூக வைரஸாதான் நாம் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறோம். பாஜகவின் சாதி தன்மை தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிரானது அல்ல. இந்தியாவிற்கே எதிரானது[6]. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. சாதி மதத்தின் பெயரால் பிளவுப்படுசத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கக் கூடி ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக்கொண்டிருக்கிறோம்[7]. …. பாசிசத்திற்கு எதிராக நேரடியாக மோதி கொண்டுள்ளோம்[8]. கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது தான் .தி.மு.., .தி.மு..,வும் பா..,வும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்[9]. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்பதால், பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.மிசா, தடா, பொடா என அனைத்தையும் பார்த்துவிட்டோம். மிரட்டல் எல்லாம் கடந்து வந்துவிட்டோம்[10]…… அவர்களின் தற்போதைய முக்கிய வேலை,…….
பாஜக சொல்வதனால் மட்டும் அவை அறியப் படுவதில்லை, ஊடகங்களே நன்றாக விளம்பரம் கொடுத்து வருகின்றன: ஸ்டாலின் தொடர்கிறார், “பாஜகவின் இப்போதைய ஒரே வேலை என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார் என்பதை பார்ப்பதுதான்[11]. துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, ”பாத்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார்”- எனப் பரப்புகிறார்கள்[12]. தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோயிலுக்கும்தான் துர்கா செல்கிறார்…….என்னை மனைவி கோயிலுக்கு செல்வது அவரது விருப்பம்[13]. நான் அதை தடுக்க விரும்பவில்லை[14]. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல[15]……., கோயிலும் – பக்தியும் அவரவர் உரிமை – விருப்பம்! ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெகு மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான்[16]. தலைவர் கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில்: ”கோயில் கூடாது என்றல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது!…. கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மீகத்தையும் – அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். ”

© வேதபிரகாஷ்

23-10-2023


[1] கலைஞர் செய்தி, “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல” : முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேச்சு!, Lenin, Updated on : 21 October 2023, 05:00 PM.

[2] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/10/21/we-are-not-enemies-of-spirituality-said-cm-mk-stalin

[3] நக்கீரன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல” – முதல்வர் மு..ஸ்டாலின், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 21/10/2023 (11:40) | Edited on 21/10/2023 (12:01).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-are-enemy-aryan-domination-and-not-spirituality-says-cm-mk-stalin

[5] தினமணி, நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் மு..ஸ்டாலின் பேச்சு, By DIN  |   Published On : 21st October 2023 12:51 PM  |   Last Updated : 21st October 2023 12:51 PM.

[6] https://www.dinamani.com/tamilnadu/2023/oct/21/we-are-not-enemies-of-spirituality-cm-stalins-speech-4093802.html

[7] தினமலர், நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல: முதல்வர் ஸ்டாலின் பேச்சு, மாற்றம் செய்த நாள்: அக் 21,2023 17:11

[8] https://m.dinamalar.com/detail.php?id=3463060

[9] தினத்தந்தி, ஆரியத்துக்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல: முதல் அமைச்சர் மு. ஸ்டாலின், தினத்தந்தி அக்டோபர் 21, 12:46 pm

[10] https://www.dailythanthi.com/News/State/we-are-the-enemy-of-aryam-not-spirituality-prime-minister-mk-stalin-1077268

[11] தமிழ்.நியூஸ்.18, ஆன்மீகத்திற்கு அல்ல.. ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிமுதலமைச்சர் மு..ஸ்டாலின் திட்டவட்டம், LAST UPDATED : OCTOBER 21, 2023, 3:20 PM IST.

[12] https://tamil.news18.com/chennai/dmk-govt-not-against-for-spirituals-its-against-only-for-religious-suppression-1202874.html

[13] விகடன், “நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல!” – முதல்வர் ஸ்டாலின், VM மன்சூர் கைரி, Published: 22-10-2023 at 2 PM; Updated:Yesterday 22-10-2023 at 2 PM

[14] https://www.vikatan.com/government-and-politics/politics/cm-stalin-speech-in-dmk-it-wing-meetin-at-chennai

[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நான் ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல! என் மனைவி எந்த கோயிலுக்கு போறாங்க என்பதை பார்ப்பதே பாஜக வேலை!முதல்வர் ஸ்டாலின், vinoth kumar; First Published Oct 21, 2023, 1:00 PM IST; Last Updated Oct 21, 2023, 1:09 PM IST.

[16] https://tamil.asianetnews.com/politics/i-am-not-an-enemy-of-spirituality-cm-stalin-speech-tvk-s2vbid

ஸ்டாலின், உதயநிதி வழியில், அப்பாவு பேசிய இந்துவிரோத வியாக்கியானம்! திராவிடத்துவ வாதிகள் தொடர்ந்து அவதூறாக, இந்துவிரோதமாக பேசிக் கொண்டிருப்பது எப்படி?:

செப்ரெம்பர் 22, 2023

ஸ்டாலின், உதயநிதி வழியில், அப்பாவு பேசிய இந்துவிரோத வியாக்கியானம்! திராவிடத்துவ வாதிகள் தொடர்ந்து அவதூறாக, இந்துவிரோதமாக பேசிக் கொண்டிருப்பது எப்படி?:

அப்பாவு பேச்சு ஏன் இப்படி?

கிறிஸ்தவ லயோலா கல்லூரியில் திமுக கருணாநிதி மற்றிய மாநாடு: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கருணாநிதியை பற்றி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பில் ”சட்டமன்ற நாயகர் – கலைஞர்” என்ற தலைப்பில் கருத்தரங்கம், பேச்சு, கட்டுரை உள்பட போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது[1]. இதன் தொடக்க நிகழ்வாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் சட்டமன்ற நாயகர்-கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் 21-09-2023 அன்று நடந்தது[2]. அப்படியென்றால், இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும் போலிருக்கிறது. இவ்வாறு கட்சிக்கு ஆதரவான கூட்டங்கள் எப்படி கல்லூரிகளில் அனுமதிக்கப் படுகின்றன என்று தெரியவில்லை. இதே போல, லயோல கல்லூரி மற்ற கட்சி, கட்சித் தலைவர் பற்றிய கூட்டங்களை ஏற்பாடு செய்யுமா, அனுமதிக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், “சிறுபான்மையினர்” அந்தஸ்தை வைத்துக் கொண்டு, செக்யூலரிஸ போர்வையில், நாத்திகர்களை வைத்து இவ்வாறு கூட்டங்களை நடத்தினால், பெரியாரிஸ பகுத்தறிவு சேர்ம் பொழுது, அது இந்து விரோதமாகிறது. இப்பொழுதும் அது தான் நடந்திருக்கிறது.

மாணவர்களை வைத்து சித்தாந்த விளையாட்டு??

நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்: நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் கல்லூரி முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் சாதனைகளை போற்றும் வகையில் மாணவர்கள் அவரது சாதனைகள் குறித்து விளக்கினர். அப்போது மேடையில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, “தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய சாதனைகள் இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் செய்திருக்க முடியாது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் தான். சமூகத்திற்காக கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றும் மறையாது” என்றார்[3]. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “சாதி, மத ஆதிக்கத்திற்கு எதிரானது கலைஞர் ஆட்சி. தலைவர் கலைஞர் காலத்தில் மேற்படிப்புக்கு நுழைவுத்தேர்வு வேண்டும் என ஒன்றிய அரசு அப்போது கூறிய போது, அதனை முதல் ஆளாக வேண்டாம் என்றவர் கலைஞர். அவரின் தொலைநோக்கு பார்வையை ஒன்றிய அரசு இன்று பிறப்பித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வுக்கு பூஜ்ஜியம் மார்க் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அப்போதே இதனை வேண்டாம் என்றார் கலைஞர்” என்றார்[4].

மாணவர்களும்தயாரா?

இந்தியாவில் 96 சதவீதம் ஹிந்துக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தது கிறிஸ்த பாதிரிகள் தாம்: பகுத்தறிவு அப்பாவு பேசியது, ”இந்தியாவில் 96 சதவீதம் ஹிந்துக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர் மற்றும் அருட்சகோதர சகோதரிகள்தான்,” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்[5]. சென்னை லயோலா கல்லுாரி வளாகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை ஒட்டி ‘சட்டசபை நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது[6]: “தமிழகம் சுதந்திரத்துக்கு முன்பு இவ்வாறு இருக்கவில்லை; திராவிட இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பு இவ்வாறு இருக்கவில்லை. 119 ஆண்டுகளுக்கு முன்பு, மதராஸ் மாகாணத்தில், 100 பட்டதாரிகள் இருந்தால் அவர்களில் 94 சதவீதம் பேர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்[7]; மீதி, ஆறு சதவீதம் மற்ற சமூகத்தினர். அந்த நிலையில் இருந்து எப்படி இந்த நிலைக்கு வந்தோம் என பார்க்க வேண்டும்[8]. நீதிக் கட்சி முதன்முதலாக பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை கொண்டு வந்தது. கருணாநிதி ஆற்றிய பணிகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் படிக்க சட்டம் கொண்டு வந்தார்; பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்தார். திருமண உதவித் தொகை திட்டத்தை கொண்டு வந்து பெண்கள் படிக்க உதவினார்.

ஹிந்துக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தது கிறிஸ்த பாதிரிகள் தாம்[9]: பகுத்தறிவு அப்பாவு பேசியது, இந்தியாவில் பட்டம் படித்த பெண்களின் சராசரி 26 சதவீதம் என்றால் தமிழகத்தில் சராசரி, 78 சதவீதம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி; கருணாநிதி செய்த சாதனை[10]. இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் இருந்தன[11]. ஆனால் படிக்க நான்கு சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி; மீதி 96 சதவீதம் ஹிந்துக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர், அருட்சகோதரிகள், சகோதரர்கள் தான்[12]. கிறிஸ்தவ மத போதகர்கள் பள்ளிகளை ஆரம்பித்துஜாதி, மதம் இல்லை. அனைவரும் கல்வி கற்க வாருங்கள்என்றனர். அதன் அடிப்படையில் தமிழகம் இந்த வளர்ச்சி அடைந்துள்ளது. அதை முதல் புள்ளியாக எடுத்து திராவிட இயக்கங்கள் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளன,” இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா செழியன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பரந்தாமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், சட்டசபை முன்னாள் பேரவை செயலாளர் செல்வராஜ், கல்லூரிக்கல்வி துணை இயக்குனர் ராவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் அல்லது மற்ற எந்த கிருத்துவ பாதிரியும், இவ்வாறு இந்துக்களுக்கு எதிரான பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்ட்க் கொண்டதாகத் தெரியவில்லை. ஆக, அவர்களும் சந்தோசமாகக் கேட்டுக் கொண்டு ரசித்தார்கள் போலும்.

திராவிடத்துவ வாதிகள் தொடர்ந்து அவதூறாக, இந்துவிரோதமாக பேசிக் கொண்டிருப்பது எப்படி?: திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளிலேயே தொடர்ந்து, அக்கட்சித் தலைவர்கள் கிறிஸ்தவ மத நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் என்று தொடர்ந்து கலந்து கொண்டு, ஸ்டாலின் முதல் உதயநிதி வரை அபத்தமாக பேசுவது, உதயநிதி தான் கிறிஸ்துவன் என்பது, சேகர் பாபு, அல்லேலுயா என்று கத்துவது, இப்பொழுது அப்பாவு இப்படி பேசுவது எல்லாமே செக்யூலரிஸத்தை மீறும் செயல்கள் தான். ஆனால், நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருப்பதும், பேசுவதும், அப்படியே கடந்து செல்வதும் என்றுகடந்த 50-100 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால், அவர்களும் மேன்மேலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதானால், அவர்களுக்கு நாம் எதை வேண்டுமானாலும் பேசலாம், எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற அகம்பாவம் உண்டாகி, அது நாளடைவில் இறுகி, அவ்வாறே தூஷித்துக் கொண்டிருக்கலாம் என்ற மனபாங்கும் உண்டாகியிருக்கிறது. இதனால் தான், இவ்வாறு பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

22-09-2023


[1]  தினத்தந்தி, சமச்சீர் கல்வி தந்து சாமானியனையும் கல்வி கற்க வைத்தவர் கருணாநிதிசபாநாயகர் அப்பாவு பேச்சு, செப்டம்பர் 22, 12:10 am

[2] https://www.dailythanthi.com/News/State/karunanidhi-was-the-one-who-gave-balanced-education-and-made-the-common-man-to-get-educated-speakers-fathers-speech-1057569

[3] கலைஞர்.செய்திகள், உலகமே வியப்படையும் சாதனை.. இதற்கான பாதையை அன்றே வகுத்தவர் கலைஞர்..” – சபாநாயகர் அப்பாவு புகழாரம் !, , KL Reshma, Updated on : 21 September 2023, 05:48 PM

[4] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/09/21/a-feat-that-will-amaze-the-world-kalaignar-paved-the-way-for-this-on-that-day-speaker-appavu

[5] தினமலர், 96 சதவீத ஹிந்துக்கள் படிக்க அருட்தந்தையர் தான் காரணம், பதிவு செய்த நாள்: செப் 22,2023 06:28; https://m.dinamalar.com/detail.php?id=3437785

[6] https://m.dinamalar.com/detail.php?id=3437785

[7] மாலைமுரசு, கலைஞர் கருணாநிதி பற்றி மாநில அளவிலான பேச்சு போட்டி தொடக்கம்!, webteam,Sep 21, 2023 – 16:17

[8] https://www.malaimurasu.com/posts/education-employement/State-Level-Elocution-Competition-on-Artist-Karunanidhi-Begins

[9] தினகரன், பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கு: லயோலா கல்லூரியில் இன்று நடக்கிறது, September 21, 2023, 12:20 am

[10] https://www.dinakaran.com/councilpresidentappavu_artistcentennial_seminar_loyolacollege/

[11] தமிழ்.ஒன்.இந்தியா, நாட்டில் 96 சதவீத இந்துக்கள் படிக்க அருட்தந்தையர்கள் தான் காரணம்: சபாநாயகர் அப்பாவு பேச்சு, By Mani Singh S Published: Friday, September 22, 2023, 11:50 [IST].

[12] https://tamil.oneindia.com/news/chennai/reverend-s-are-reason-for-96-percent-of-hindus-in-the-country-able-to-study-assembly-speaker-appavu-541223.html

இந்து நம்பிக்கை இல்லாத நாத்திக-பெரியாரிஸ ஸ்டாலின், மடாதிபதிகளுடன் சந்தித்து பேச்சு மற்றும் ஆதீனங்கள் மெச்சுதல்! கருணாநிதியின் “தெய்வீகப் பேரவை” ஸ்டாலின் மூலம் தொடருமா?(2)

ஏப்ரல் 28, 2022

இந்து நம்பிக்கை இல்லாத நாத்திக-பெரியாரிஸ ஸ்டாலின், மடாதிபதிகளுடன் சந்தித்து பேச்சு மற்றும் ஆதீனங்கள் மெச்சுதல்! கருணாநிதியின் “தெய்வீகப் பேரவை” ஸ்டாலின் மூலம் தொடருமா?(2)

இந்து சமய அறநிலைத்துறை ஜனநாயகமாக செயல்படுகிறது சட்ட வரையறைக்கு உட்பட்டு செயல்படுகிறார்கள்: ஆதீனம், “மொத்தத்தில் இந்து சமய அறநிலைத்துறை ஜனநாயகமாக செயல்படுகிறது சட்ட வரையறைக்கு உட்பட்டு செயல்படுகிறார்கள்,” எனக் கூறினார்[1]. நிச்சயமாக இவ்வாறு கூறியது அபத்தமானது என்பது, பல சட்டமீறல்கள், நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் மூலம் அறிய வருகின்றன. தொடர்ந்து பாஜகவை சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலைத்துறை கலைக்கப்பட வேண்டும் என்றும், அவசியமில்லாமல் கோவில் விவகாரங்களில் அறநிலைத்துறை தலையிடுகிறது அறநிலை துறை மூலம் இந்து மதத்தை கட்டுப்படுத்த சதி நடக்கிறது என்றெல்லாம் விமர்சித்து வரும் நிலையில், இந்து சமய அறநிலைத்துறை ஜனநாயகப் பூர்வமாக செயல்படுகிறது என்றும்[2], இந்த அரசு ஆன்மீக அரசுதான் என்றும் ஆதீனங்கள் கூறியிருப்பது அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது[3]முதல்வர் மு..ஸ்டாலின் அரசு ஆன்மிக அரசு..” : தி.மு. அரசை பாராட்டி புகழாரம் சூட்டிய ஆதீனங்கள்,”  என்றுதான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து ஒலி-ஒளி பரப்பியதைக் கவனிக்கலாம்[4]. நாத்திக-திமுகவுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை[5]. நாத்திக-ஆன்மீகம், ஆத்திக-ஆன்மீகம் என்றெல்லாம் இருப்பது ஆராய வேண்டிடியுள்ளது.

19-04-2022 மற்றும் 27-04-2022 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியது: 19-04-2022 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி வந்திருந்தார். தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றவர், ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் ஆளுநர் பங்கேற்றுப் பேசினார்கள். அந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி, ‘புராதன நாடான இந்தியா பல்வேறு பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தரும் குரு போன்ற இடத்தில் தமிழகம் உள்ளது’ என்றார்[6].  அப்பொழுது பேசிய தருமபுரம் ஆதீனம், தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர்களும் உதய சூரியன் என்ற சின்னத்தைக் கொண்டவர்கள். ஆளுநரும் சூரியன். ரவி என்றால் சூரியன் என்ற பொருள் உள்ளது. இரண்டு சூரியனும் ஒன்றாகவே தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இதெல்லாம் தெய்வச் செயல்,” என்றார்[7].

சர்ச்சைகளில் சிக்கிய மடாதிபதிகள்: தமிழ்நாடு அரசின் சார்பில், இந்து அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அலுவல்சாரா உறுப்பினராக திருப்பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பிப்ரவரி 2022ல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை விமர்சிக்கும் வகையில், ஃபேஸ்புக்கில் ராஜநாக முனிவர் என்ற பெயரில் தரக்குறைவான வார்த்தைகளுடன் சில கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் சில பத்தாண்டுகளாக இக்கருத்து பலரால் பல்வேறு சூழலில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சைவ சித்தாந்த பெருமன்றம், மதுரை ஆதினம் போன்ற சைவ சமய நிறுவனங்கள் இதனை முன்னெடுத்துள்ளது. மு.தெய்வநாயகம் என்ற கிருத்துவர் நடத்திய மாநாட்டிலும், இந்த 11 பேரில், சிலர் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் “சைவ மாநாடு” போர்வையில், “சைவர் இந்துக்கள் அல்லர்” என்றும் பேசியிருக்கின்றனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்து நலன்களுக்கு எதிராக உள்ளவர்கள் சேர்ந்துள்ளார்கள் அல்லது சேர்க்கப் பட்டுள்ளார்கள் என்று தோன்றுகிறது.

2019 ஜூலையில் சைவர் இந்து அல்ல என்று தீர்மானம் போட்டு, ஆகஸ்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாநாடு நடத்தியது: சென்னை பல்கலைக் கழக மாநாட்டிற்கு முன்பாக, இதே குழு, பழனியில் மாநாடு நடத்தியதாலும், அது இம்மாநாட்டின்  மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், அதைப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளடு. ஜூலையில் பழநியில் சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 114 ஆண்டு மாநாடு துவங்கியது. பழநி தெற்கு கிரிவீதியில் சாது சாமி மடத்தில் மூன்று நாட்கள் – 19 முதல் 20 வரை [வெள்ளி, சனி, ஞாயிறு] மாநாடு நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாதுக்கள் ஆன்மிகப் பெரியோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பெருமன்ற தலைவர் நல்லூர் சரவணன் கூறுகையில், நாங்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று மாநாடு நடத்துவோம், இவ்வருடம் இங்கு நடத்துகிறோம்[8]. சைவம் இந்து அல்ல; சைவர்களும் இந்து அல்ல, அது தமிழர் அருள்நெறி மரபு என அறிவிக்கவும் மாநாட்டின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளோம், தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது என்றார்[9]. முன்பு “லிங்காயத்துகள்” விவகாரத்தை வைத்து, பிபிசிக்கும் அத்தகைய கருத்தை சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது[10]. அது அரசியல் என்பதும், இப்பொழுது அடங்கி விட்டது என்பதும் தெரிந்த விசயம்[11]. ஆகஸ்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த மாநாட்டின் பின்புலமாக, இதனை அறிய வேண்டிய தேவையாகிறது. மேலும், இதில் கலந்து கொண்டவர்கள், அங்கு, சென்னையிலும் கலந்து கொண்டுள்ளனர்.

சூரியன், ரவி என்று ஒப்புமை படுத்தினால் மட்டும் போறாது: சூரியன், உதய சூரியன், ஆதவன், கதிரவன், பாஸ்கரன், என்று எப்படி சொன்னாலும், இப்பொழுது கோடைகாலத்தில் மக்களை வாட்டி வதைக்கிறான். ஆன்மீகம் தான் ஏசி என்றாலும், யாரும் நம்ப மாட்டார்கள். போதாகுறைக்கு மின்வெட்டு வேறு. இதனால், படும் அவதை சொல்லி மாளாது. வசதியாக இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது, புரியாது, ஆனால், அவதிபடுபவர்களுக்குத் தான் அது தெரியும், புரியும். அதே போலத்தான், இறை-உணர்வு, தெய்வ-பக்தி, கடவுள்-நம்பிக்கை, முதலியன, தனிநபர் மனத்தைப் பொறுத்தது. அதனை மற்றவர்கள் பாதிப்பது, இம்சிப்பது மற்றும் நோகப்படுத்துவது கூடாது. நம்பிக்கையாளர்களின் மனங்களை ஆதீனங்களும் இவ்வாறு நாத்திகனைப் போற்றினால் கவலைப் படத்தான் செய்வார்கள். கருணாநிதி ஒன்றும் இந்து ஆதரவாளாரோ, கொஞ்சமாவது இந்துக்களை புண்புருத்தக் கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டவரோ இல்லை, இருந்தது இல்லை. ஆகவே, கடந்த 60 ஆண்டுகளில் தமிழக இந்துக்கள் பலவழிகளில், முறைகளில், வன்முறைகளில், தாக்குதல்களில் கஷ்டப் பட்டிருக்கின்றனர், நொந்து போயிருக்கின்றனர், மனரீதியில் அடக்கப் பட்டிருக்கின்றனர்..

கோவில் இடிப்புகள் இன்றும் தொடர்கின்றன: இப்பொழுதும் கோவில்கள் இடிக்கப் படுகின்றன. அவ்வாறு இடிக்கப் படும் செய்திகளும் வெளியிடப் படுவதில்லை. ஆனால், அவ்விடங்களில் உள்ள மக்கள் மனம் நொந்து அழுகிறார்கள், கோவிலை, விக்கிரங்களை காக்கத் துடிக்கிறாற்கள். தடுக்க முயல்கிறார்கள். ஆனால், போலீஸார் தடுக்கின்றனர், வலுக்கட்டாமாக அப்புறப் படுத்துகின்றனர். இவையெல்லாம் இடைக்காலங்களில் துலுக்கர் கையாண்ட கோவில் இடிப்புகள், கொள்ளைகள் மற்றும் நாசகார வேலைகள் போன்றே உள்ளன. இந்நிலையில் ஆயிரங்களில் உள்ள மடாதிபதிகளுள் 11 பேரை வைத்து, அரசியல் செய்வது கபடத் தனம் ஆகும். இதை வைத்து, தமிழக இந்துக்கள் அனைவரையும் ஏமாற்ற முடியாது. பேச்சிற்கும், செயல்களுக்கும், எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளன என்பதனை மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள்.

© வேதபிரகாஷ்

28-04-2022


[1] https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-lead-dmk-government-is-spiritual-government-dharmapura-adinam-mur-736787.html

[2] ஜீ.நியூஸ், திமுக அரசு ஆன்மீக அரசாக செயல்படுகிறதுதருமபுரம் ஆதீனம், Written by – க. விக்ரம் | Last Updated : Apr 27, 2022, 05:28 PM IST.

[3] https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-dmk-government-functions-as-a-spiritual-government-dharmapuram-aadeenam-390886

[4] கலைஞர் செய்திகள், முதல்வர் மு..ஸ்டாலின் அரசு ஆன்மிக அரசு..” : தி.மு. அரசை பாராட்டி புகழாரம் சூட்டிய ஆதீனங்கள் !, Prem Kumar, Updated on : 28 April 2022, 08:43 AM.

[5] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2022/04/28/adheenam-hailed-the-chief-minister-mk-stalin-government-of-as-a-spiritual-state

[6] நக்கீரன், தமிழகத்திற்கு இரண்டு சூரியன்கள் கிடைத்துள்ளது; இதெல்லாம் தெய்வச்செயல்”-தருமபுரம் ஆதீனம் பேச்சு!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/04/2022 (16:31) | Edited on 19/04/2022 (16:46).

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamil-nadu-has-got-two-suns-all-divine-act-dharmapuram-aadeenam-talk

[8]  தினமலர், பழநியில் சைவ சித்தாந்த மாநாடு,  ஜூலை 19,2019 00:00 IST.

[9]  https://www.dinamalar.com/video_main.asp?news_id=169759&cat=32

[10]பிபிசி தமிழ், நாங்கள் ஏன் இந்துக்கள் இல்லைலிங்காயத்துகள் அடுக்கும் காரணங்கள், பிரமிளா கிருஷ்ணன், 22 மார்ச் 2018

[11] https://www.bbc.com/tamil/india-43489113. காங்கிரஸ் தேர்த நேரத்தில் அதனை பிரச்சினையாக்கியது. ஆனால், விளைவை அறிந்த பின்னர் அடங்கி விட்டது.

வைஷ்ணவர்களின் உதவியுடன் வளர்ந்து, வளர்த்த கடாவை முட்டியது போல, முட்டியுள்ள ஜாகிர் உசேன்! (4)

திசெம்பர் 22, 2021

வைஷ்ணவர்களின் உதவியுடன் வளர்ந்து, வளர்த்த கடாவை முட்டியது போல, முட்டியுள்ள ஜாகிர் உசேன்! (4)

வைணவர்களின் உதவியுடன் கோவில்களில் நுழைந்தது: ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில்களுக்குள் நுழைந்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளான். பெருமையாக சமூக ஊடகங்களில் போட்டுக் கொண்டுள்ளான். இந்த மாதிரி போட்டோ எடுத்துக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது? சாதாரண பக்தன் எடுக்க ஆசைப் பட்டால், எடுக்கக் கூடாது என்கிறார்கள்! பிறகு இந்த பெரியாரிஸ்ட், நாத்திக-வேடதாரி, நாமதாரி எப்படி?????????????ஶ்ரீரங்கநாதனுக்கு நாத்திக / பெரியாரிஸ்ட் குண்டு வைக்காமல் இருந்தால் சரி என்று தோன்றுகிறது! நல்ல வேளை அண்ணா அறிவலத்திற்குள் சென்ற போது, அங்கு விரட்டி விட யாரும் இல்லை போலிருக்கிறது! இவன் / ஜாகிர் உஸைன் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார். பிறகு பற்று அங்குதானே இருக்கும்! ஶ்ரீரங்கநாதனின் மீது எப்படி இருக்கும்?? ஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்ற கட்சியில் சேர்ந்தது, எந்த பற்றினைக் காட்டுகிறது? இந்துவிரோதிகள் தெளிவாக வேலை செய்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்! ஆனால், அறிவற்ற இந்துக்கள் (முட்டாள் இந்துக்கள் என்றால் கோபம் வருகிறதாம், புகார் வேறு செய்கிறார்கள்) உண்மை அறியாமல், தனித்தையாக கும்பல் சேர்ந்து கொண்டு, குழிபறித்துக் கொண்டிருக்கின்றன… யாரை கண்டிப்பது, எதை எதிர்ப்பது, என்று கூடத் தெரியாமல் அல்லது வேண்டுமென்றே எதிரிகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு அரசியலாக்கிய ஜாகிர் உசேன்:

  • உண்மையில் மத நல்லிணக்கம் தேவையென்றால், அதனை நல்லவிதமாக, நேரிடையாக, செய்யலாம்!
  • அறிக்கைகள் விடுவது, ஆஸ்பத்திரியில் படுத்துக் கொள்வது, போட்டோ எடுத்துக் கொள்வது, ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பது ………எல்லாம் பக்தி இல்லை……….
  • அரசியல்வாதி போல, அரசியலாக்கி, விளம்பரம் தேடும் வேலை தேவையில்லை!
  • கலை தெய்வீகம் ஆகும் போது, அது மதிக்கப் படுகிறது, ஆனால், அகம்பாவத்துடன் செயல்படும் பொழுது, பாண்டித்யம் கேள்விக்குறியாகிறது, கேள்விக்கு உட்படுகிறது!
  • ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாமா? இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப் படுவரா? அல்லது, ஶ்ரீரங்கநாதனை / ஶ்ரீவிஷ்ணுவை நம்புகிறவர்கள் செல்லலாமா?
  • முன்பு ஃபிரான்சிஸ் சேவியர் குளூனி விசயத்தில் உண்டான விவகாரம், இப்பொழுது வேறொரு உருவில் எழுதுள்ளது…..
  • “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை……..”, எனும்பொழுது, முன்னரே பலமுறை சென்றுள்ளது தெரிகிறது…..
  • பிறகு, அமைதியாக சென்று வந்திருக்கலாம்…..படோபடத்துடன் விளம்பரம் செய்யும் நோக்கம் தேவையில்லை!  
  • “……எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்,”. இவ்வாறு அவர் கூறினார், என்பது பக்தர் போல சொல்லவில்லை, ஏதோ அரசியல்வாதி தோரணைதான் வெளிப்படுகிறது…………….
பேஸ்புக்கில் உள்ள பதிவுகள் அப்பட்டமாக மோசமான பதிவுகளாக இருக்கின்றன.
மோடியைப் பற்றி மிகவும் அநாகரிகமன பதிவுகள் உள்ளன. ஒருமையில் மோசமான தாக்குதல் வார்த்தைப் பிரயோகங்களுடன் காணப்படுகின்றன.

மக்களே !கொரோனாவ விட கொடுமையானத பாத்திருக்கீங்களா ???பாருங்க !! என்னத்த சொல்ல. யப்பா சாமி , உன் ரீலு அந்து போய் ரொம்ப நாளாச்சுடா !!பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கணும் …மோடி அரசு போன்ற கேவலமான , கொள்ளைக் கூட்டம் உலகில் வேறெங்கும் இல்லை ; மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா – நின் திருவடியும் திமுகவும்
தமிழ்நாட்டின் காப்பு; India wasted two “Bharat Rathna” on unethical and ruthless personalities #Sachin & #Latha

ஏன் நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், இந்துக்கள்அல்லாதவர்கள் தடுக்கப் படவேண்டும்?: சட்டரீதியாக இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில்களுக்குள் செல்லக் கூடாது.

  1.  எஸ்.கே. கிருஷ்னசாமி ஐயங்கார் என்பவரின், “தென்னிந்தியாவும் அதன் மொஹம்மதியர் படையெடுப்பாளர்களும்” (S.K.Krishnasway Iyengar South India and its Mohammedan Invaders) என்ற புத்தகத்தில், சரித்திர ஆதாரங்களுடன், ஶ்ரீரங்கம் கோவில் எவ்வாறு முகமதியர்களால் கொள்ளையடிக்கப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்பது விளக்கப் பட்டுள்ளது.
  2. ஏனெனில், இடைக் காலத்திலிருந்து, துலுக்கர் இக்கோவில் மீது படையெடுத்து, கொள்ளையடித்து, இடித்து நாசமாக்கியுள்ளனர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஐரோப்பியர்களால், பல கொள்ளைகள் நடந்துள்ளன.
  3. ஒரு பிரெஞ்சு ராணுவ வீரன் ஶ்ரீ ரங்கநாதரின் கண்களை (வைரங்களை) களவாட திட்டம் போட்டான்! ஶ்ரீவைஷ்ணவன் போலவே நாமம்-வேடமிட்டான்! பட்டர்களின் நட்பு நம்பிக்கை பெற்று, வந்து சென்றான், 1747ல் அவன் கர்பகிருகத்தில் நுழைந்து வைரங்களைத் திருடிக் கொண்டான்! ஶ்ரீரங்கநாதரின் ஒரு கண் / வைரம் தான் Orlov / Orloff என்று மிஞ்சியுள்ளது, இரண்டாவது கண் எங்கே போனது தெரியவில்லை! . ஶ்ரீரங்கத்தை ஶ்ரீ ரங்கநாதர் தான் காக்க வேண்டும்! உண்மையான பக்தர்கள் படும் தொந்தரவுகள், அவதிகள், துன்பங்கள்……..
  4. 1950-70களில் ஶ்ரீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்றெல்லாம் ஔரங்கசீப் வெறித்தனத்துடன், திராவிடத் தலைவர்கள் பேசியிருக்கின்றனர். அவ்வாறே கொள்ளையடித்துள்ளனர்.
  5. பெரும்பாலான பக்தர்கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வருகிறார்கள்! பெரிய மதத்தலைவர்கள்-துறவிகள்-ஞானிகளும் வந்திருக்கிறார்கள்!
  6. ஶ்ரீமத் சங்கரதேவர், சைத்தன்யர், வல்லபாச்சாரியார், குருநானக் என்று பல வந்து ஶ்ரீ ரங்கநாதரை தரிசித்துள்ளனர்!
  7. எல்லோரும் சிரத்தையுடன் காதலாக கசிந்து கண்ணீர் மல்கி, பக்தியுடன் தம்மையே அர்பணித்துக் கொண்டனர், மக்களுக்கு சேவை செய்தனர்!
  8. 20-12-2021 அன்று ஒருவர் நான் 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன் என்று அடாவடியாக, கும்பலுடன் கோவிலுக்குள் நுழைந்து கலாட்டா செய்துள்ளார்!
  9. ஆனால் ரூ 250/- வாங்கிக் கொண்டு பக்தர்களை விரட்டுகிறார்கள், தள்ளுகிறார்கள், ஒருமையில் பேசுகிறார்கள், கதவை சாத்தி அடைக்கிறார்கள்!
  10. அந்த வைஷ்ணவ துலுக்க கபட வேடதாரி, நாமதாரி, கூத்தாடியும் நான் தங்கம்-வெள்ளி கொடுத்துள்ளேன் என்று பறையடித்து உள்ளே நுழைகிறான்! பிறகு பொய் சொல்லி புகார் கொடுக்கிறான், அதற்கெல்லாம் விளம்பரம் கொடுக்கப் படுகிறது.
  11. ஆனால், உண்மையான பக்தர்கள் 3 முத 5 மணி வரை வரிசையில் நின்று அவதிபடுவதைப் பற்றி யாரும் கவலைக் கூடப் படுவதாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-12-2021

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோத-துவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

திசெம்பர் 22, 2021

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோததுவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும்எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு ஆவினத்தைத் தூஷித்தது: ஜாகிர் உசேனின் கபடத் தனம், ஈவேராவை ஆதரிப்பதலிருந்தே அறிந்து கொள்ளலாம். கோபுரத்திற்கு முன்னால், இருக்கும் இந்துவிரோதியின் சிலையை அகற்ற இந்த வைஷ்ணவ-துலுக்கன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.  உண்மையான வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும். கங்காதேவியைப் போன்று எவ்வாறு துலுக்கர் ஶ்ரீரங்கம் கோவிலை இடித்தார்கள், கொள்ளையிட்டார்கள், படைகளுடன் அங்கேயே தங்கினார்கள் என்றெல்லாம் விவரித்து, நாட்டிய நாடகம் ஆடியிருக்கலாம். ஆனால், மேடைகளில் வேடமிட்டு ஆடி பணம்-புகழ் சேர்த்து, இந்துக்களுக்கு பெரிய நாமத்தைத் தான் இந்த ஆள் போட்டிருக்கிறான். இந்து நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை புண்படும் விதங்களில் பேஸ்புக்கில் பதிவுகள் போட்டு, தூஷித்து இருக்கிறான். ஶ்ரீ ரெங்கநாதர் ஶ்ரீ கிருஷ்ணர் என்றால், பசுவை அவனால், அந்ந்த அளவுக்கு தூஷித்து இருக்க முடியாது. ஆனால், செய்துள்ளான். பாண்டே கேட்ட போது, அவன் முகமே சுருங்கி, ஆபாசமாகி விட்டது, குற்ற-வஞ்சக உணர்வு முகத்தை காட்டி விட்டது. ஆண்டாள் பக்தன் என்றாலும், அவனது குரூரம் வெளிப்படுகிறது. துலுக்கனாக, பெரியாரிஸ்டாக, திமுக உறுப்பினராக இருந்து கொண்டு புலால் உண்கிறானா-இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், பசுக்கொலையை எதிர்ப்பதற்கு பதிலாக, ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளான்.

1311, 1318 மற்றும் 1327 ஆண்டுகளில் ஶ்ரீரங்கம் தாக்கப் பட்டது: 1311ல் மாலிகாபூருக்கு பயந்து, வீரபாண்டியன் அரச கருவூல செல்வங்களை எடுத்துகொண்டு ராமேஸ்வரம் அருகில் உள்ள தீவுக்கு தப்பி சென்றான். மலிக்காபூர் பாண்டிய அரசின் மதுரை மீனாட்சிகோவில்,சிதம்பரம் நடராஜர் கோவில் , ஶ்ரீரங்கம் கோவில் போன்ற அனைத்து கோவில்களின் செல்வதையும் பல நூறு யானை, ஒட்டகம் ஆகியவற்றில் டெல்லி கொண்டு சென்றான். அவை அந்த நாட்களில் டெல்லி சுல்தான்கள் அது வரையிலும் பெறாத செல்வமாக இருந்தது என சம கால வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

  • 1318 ஆம் ஆண்டு டெல்லி சுல்தான் குஸ்ருகான் தமிழகத்தை தாக்கி ஶ்ரீரங்கம் கோவிலை கொள்ளை அடித்து சென்றான். 
  • இஸ்லாமியப் படைகள் தொண்டைமண்டலத்தின் அத்தனை பகுதிகளிலும் அழிவுகளை நிகழ்த்தியதாக ஸ்ரீரங்க வரலாறான “கோவிலொழுகு” விளக்குகிறது. இதன்மூலம் ஸ்ரீரங்க ஆலயத்தை இஸ்லாமியப்படைகள் 1327-ஆம் வருடம் தாக்கியது உறுதியாகிறது.
  • ஆலயத்தைத் தாக்கிய இஸ்லாமியப்படைகள் ரங்கநாதரின் சிலையைக் காணாது கோபமுற்று அங்கிருந்த பல பூசாரிகளின் மற்றும் பக்தர்களின் தலையைக் கொய்ததாக கோவொலொழுகு மேலும் கூறுகிறது.
  • ஆல்யத்திலிருந்த நாட்டியப் பெண்மணி ஒருத்தியின் முயற்சியின் காரணமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெரும் அழிவிலிருந்து தப்பியதாகத் தெரிகிறது. மேற்கூறியபடி 1327-ஆம் வருடம் ஸ்ரீரங்க ஆலயத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டன.
  • ஸ்ரீரங்கம் மற்றும் ஜம்புகேசுவரரர் ஆலயங்களில் இஸ்லாமியப் படைகள் நிகழ்த்திய அழிவுகளைக் குறித்து கங்காதேவி தனது மதுரா விஜயத்தில் விளக்கியிருக்கிறார்.

ஸ்டாலின் நெற்றியில் வைத்ததை அழித்த போது, பட்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்படவில்லை, ஆஸ்பத்திரிக்குச் சென்று படுத்துக் கொள்ளவில்லை: பரதநாட்டிய கலையில் மூலம் அறியப்பட்ட ஜாகிர் உசேன் 05-01-2021 செவ்வாயன்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். ஆக, இவர் மூலம், அரசியல் ஆக்க திமுக, ஸ்டாலின் நினைத்திருக்கலாம்….முன்னரே ஸ்டாலின் ஶ்ரீரங்கத்திற்கு வந்தபோது, பட்டர்கள் மரியாதை கொடுத்து, நெற்றியில் சந்தனம்-குங்குமம் வைத்த போது, அழித்து அவமரியாதை செய்தது தெரிந்த விசயமே……..அப்பொழுது எத்தனை இந்துக்களுக்கு மன உலைச்சல் ஏற்பட்டிருக்கும் என்று ஸ்டாலின் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்…… அப்பொழுது பட்டர்கள் எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்துக் கொண்டு, போட்டோ வெளியிடவில்லை! உசேனும் கவலைப்படவில்லை. ஆக, இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதனை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது, இதைப் பற்றி எந்த மனிதனும் நினைத்துப் பார்த்தால் வெட்கப் படவேண்டும். ஆனால், எல்லா உண்மைகளையும் மறைத்து, உசேன், ஸ்டாலின் மற்ற இந்துவிரோதிகள் நாடகம் ஆடுகின்றனர், அறிக்கை விடுகின்றனர்.

பிரபலங்களைப் பிடித்து அரசு உதவி பெற்று வளர்ந்தது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். பரதநாட்டியம் மீதான ஆர்வத்தால் சென்னைக்கு 90-களில் வந்தார். நான்கு ஆண்டுகள் சித்ரா விஷ்வேஸ்வரன் என்ற கலைஞரிடம் பரதநாட்டியம் பயின்றார். அதன் பிறகு மார்கத்திலிருந்து விலகி நாட்டிய நாடகங்களை அரங்கேற்ற தொடங்கினார். அது பற்றி ஆராய்ச்சிகளும் செய்துள்ளார். இவருக்கு நடிகர் ரஜினி, சத்யராஜ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் ஆதரவளித்தனர். இவரது திறமையை அறிந்து 1992-ல் இந்திய ஜனாதிபதி 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கினார். பிறப்பால் ஒரு முஸ்லீம் என்றாலும், வேதங்கள், ஆகமங்கள் குறிப்பாக வைணவ பாரம்பரியம் பற்றிய ஆழமான புரிதலும், அறிவும் அவருக்கு உண்டு என்றெல்லாம் ஊடகங்கள் அளந்து விடுகின்றன. வைஷ்ணவ ஆகமங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக மத்திய அரசு இவருக்கு விருது வழங்கியிருக்கிறது. மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களைப் பற்றிய அவரது பரந்த அறிவு, பாஞ்சாலி சபாதம் மற்றும் சீதாயணம் போன்ற நடன நாடகங்களை கருத்தாக்க அவருக்கு உதவியது.

திமுகவில் சேர்ந்தது, பெரியாரிஸ்ட் என்று பிரகடனப் படுத்திக் கொண்டது: இவர் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார்.   முகநூலில் மிகவும் மோசமான பதிவுகளை செய்துள்ளார். பிரதம மந்திரி என்ற மரியாதைக் கூட இல்லாமல், ஒருமையில் விமர்சித்து, கேவலப் படுத்தியுள்ளான்.பிறகு இந்த ஆளை எப்படி கலைஞனாக மதிக்க முடியும்? நிச்சயமாக, இந்த மனிதன், குணாதிசயங்களால் அரக்கனாகத்தான் இருக்க வேண்டும்…. உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக கடூரமாக இருக்கிறதே? அந்த ஆள் மூஞ்சிக்கும், மனதுக்கும், காரியத்திற்கும் சம்பந்தமே இல்லை…….உள்ளே காரிருள், குரூரம், வஞ்சம்……….என்று தான் உள்ளன!பிஜேபியை, ஆர்.எஸ்.எஸ்.ஐ தூஷிக்கும் இந்த இந்துவிரோதி மீது ஏன் நடவடிக்கை இல்லை? உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக இருக்கிறதே? அடியேன் கருணாநிதி தொண்டன்,  ஸ்டாலின் தாசன், ………………………. திமுகவின் விசுவாசமான தொண்டன்,  திராவிடியன் ஸ்டாக் என்று கூறி  பெருமைப் பட்டுக் கொள்ளும்  நாட்டியக்காரன்,  நாடகத்திலும் கெட்டிக்காரனாகத் தான்  இருப்பது ஆச்சரியமில்லை!

© வேதபிரகாஷ்

22-12-2021

பிஜேபி 2021ல் தோற்றதற்கு சுயபரிசீலினை செய்ய வேண்டும் – 2023ல் தமிழகத்தில் 20 இடங்களில் ஜெயிக்க வேண்டும்!

ஜூன் 23, 2021

பிஜேபி 2021ல் தோற்றதற்கு சுயபரிசீலினை செய்ய வேண்டும் 2023ல் தமிழகத்தில் 20 இடங்களில் ஜெயிக்க வேண்டும்!

படிக்காதப் பையன், 80% எடுத்ததும், நன்றாகப் படித்தவன் 40% எடுத்ததும்: படிக்காதப் பையன், பாஸாகி விட்டால் ஆச்சரியப் பட மாட்டார்கள், ஆனால், 60-80% எடுத்தால் நிச்சயம் சந்தேகப் படுவர். அதே போல, நன்றாகப் படிக்கும் பையன் 60-70 எடுத்தால், அடடா 90%க்கு மேலே எடுத்திருக்க வேண்டும், ஏதோ ஆகிவிட்டது போலும் என்பர். ஆனால், அவன் 40-50% எடுத்து பாஸானால், நிச்சயம் சந்தேகப் படுவர். அது தான், பிஜேபிக்கு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அதை பிஜேபிகாரர்கள் உணராமல் இருக்கலாம், ஆனால், பிஜேபி வெல்ல வேண்டும் என்றிருக்கும் அபிமானிகள், நிச்சயமாக வருத்தப் பட்டனர். செய்திகள் படிப்பவர்கள், தொலைகாட்சி பார்ப்பவர்களுக்கு, அந்த கட்சியின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி சொல்லியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

  1. மிகச்சரியாக நிதர்சனத்தை எடுத்துக் காட்டியுள்ளார்.
  2. பிஜேபி எப்படி மற்ற கட்சிகளையும் விட வித்தியாசமானது,
  3. நேர்மையான அரசியல் நடத்த பாடுபடுகிறது,
  4. ஜனநாயக முறையில் செயல்படுகிறது,
  5. வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது,
  6. கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறது

என்பதையெல்லாம் மெய்ப்பித்துக் காட்டியுள்ளது

20 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் தோற்றதற்கு சுயபரிசீலினை செய்ய வேண்டும்: நடந்து முடிந்த சட்டசபை தேர்த லில், பா.ஜ., 20 இடங்களில் போட்டியிட்டும், வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பற்றி பேச, அந்த கட்சியின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி தலைமையில், கடந்த, 19ம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில பா.ஜ., மாநில தலைவர், அமைப்பு செயலர், கோர் கமிட்டி உறுப்பினர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் என, 25 பேர் பங்கேற்றனர்[1]. இது, ஆய்வு கூட்டம் என்பதை விட, சி.டி.ரவியிடம் நாங்கள் திட்டு வாங்குவதற்கு என்றே ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாக இருந்தது என, அந்த கூட்டத்தில் பங்கேற்ற சிலர் நொந்து கொண்டனர்[2].

பெண்கள் விவகாரம்: தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகளில் பலர் மீது பாலியல் புகார்கள் வந்திருப்பதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் தமிழக பா.ஜ நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. வழக்கமாக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கூட்டம் நடக்கும். ஆனால், பேசும் விஷயம் வெளியே கசிய கூடாது என்பதால், ஊருக்கு வெளியே நடத்தினர். ஆனாலும், பங்கேற்ற 25 பேரில் சிலர் அங்கு நடந்ததை கவலையுடன் சீனியர் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலிட பிரதிநிதி சி.டி.ரவி கடும் கோபத்தில் பேசியதாக கூறினர். பெண் விவகாரத்தில் பல நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக நுாற்றுக்கணக்கில் புகார் வந்துள்ளதால், மேலிட தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக ரவி சொல்லி இருக்கிறார். ஒரு தலைவர் மீது மட்டும் 134 புகார்கள் வந்துள்ளன என்றாராம். இனிமேல் தமிழக பா.ஜ தலைவர்கள் யாரும் நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து தங்கக்கூடாது. அங்கு பெண்களை வரவழைத்து கும்மாளம் அடிக்கக்கூடாது என தடை விதித்த ரவி, யாராவது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பிஜேபி தலைவர்களுக்கு கட்டுப்பாடு, ஒழுக்கம் வேண்டும்அவர்கள் கூறியதாவது: சி.டி.ரவி எப்போதும் இல்லாத அளவுக்கு, கடும் கோபத்தில் இருந்தார். முருகன், கேசவ விநாயகம் என, யாரையும் விட்டு வைக்கவில்லை; எல்லாரையும் வசை பாடினார்.கட்சியின் தோல்வியை விட, பெண் விவகாரங்களால் எழுந்துள்ள புகார்கள் தான், அவருடைய கோபத்துக்கு முக்கிய காரணமாக இருந்தன. இப்படிப்பட்ட புகார்கள் நுாற்றுக்கணக்கில் மேலிடத்துக்கு வந்திருக்கிறதாம். ‘இங்கு யாரையும் விசாரிக்க வரவில்லை. அந்த புகார்களின் நம்பக தன்மையை விசாரித்து விட்டு தான் வந்திருக்கிறேன். விசாரணையில் தெரியவந்துள்ள விஷயமெல்லாம், அருவெறுப்பின் உச்ச கட்டம்’ என்று சி.டி.ரவி கொந்தளித்தார். ஒரு தலைவர் மீது மட்டும், 134 புகார்கள் வந்துள்ளனவாம். அந்த தலைவர் மீது, அளவுக்கு மீறிய கோபத்தில் இருந்தார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும்: இது போன்ற சம்பவங்களை தடுக்க, ‘தமிழக பா.ஜ., தலைவர்கள் யாரும் நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்லக் கூடாது. அங்கே ரூம் எடுத்து தங்கக்கூடாது. ‘கட்சி ரீதியிலான பணிக்கு சென்று, நட்சத்திர ஓட்டலில் தங்கியதாக தகவல் வந்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஏன் குறிப்பாக சொல்கிறேன் என்றால், நட்சத்திர ஓட்டலுக்கு சென்று, அங்கு பெண்களை வரவழைத்து கும்மாளம் அடிக்கின்றனர். இதை இல்லை என்று மறுத்தால், அதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். ‘கட்சி பணி தொடர்பாக, பா.ஜ., தலைவர்களும், பெண் நிர்வாகிகளும் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், எக்காரணம் கொண்டும், ஒரே விடுதியில் தங்கக் கூடாது. மீறி தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அருகருகே ரூம் எடுத்து தங்கக்கூடாது. அப்படி தங்கி, அதில் ஏதும் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவு போட்டுள்ளார்.

விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்: ‘ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். ‘இப்படியே போனால், கமலாலயத்துக்குள் கட்டாயம் விசாகா கமிட்டி ஒன்று அமைத்தாக வேண்டும் தான்’ என்று, சம்பந்தப்பட்ட தலைவர்களையும் அருகில் வைத்துக் கொண்டே, வார்த்தைகளால் வறுத்தெடுத்தார் சி.டி.ரவி.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொகுதிகளில் வெற்றிற்காக வேலை செய்யவில்லை: தொடர்ந்து, தேர்தல் தில்லுமுல்லு தொடர்பாக, சி.டி.ரவி பேசியதாக அவர்கள் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்கு முன் என்ன சொன்னீர்கள்? 20 தொகுதிகள் நமக்கு குறைவு. 60- முதல், 70 தொகுதிகளில் நாம் வெல்வோம்; கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்றுத்தர வேண்டும் என்றீர்கள். அதையெல்லாம் வைத்து தானே, 20 தொகுதிகளை கேட்டு வாங்கினோம். அப்போது கூட, அ.தி.மு.க., தரப்பில் என்ன சொன்னார்கள் தெரியுமா? அ.தி.மு.க., ஓட்டுகள் சரியாக டிரான்ஸ்பர் ஆனால், ஐந்து தொகுதிகளில் பா.ஜ., வெல்லும். தேவையானால், 10 தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். அவர்கள் மீது அன்று கோபப்பட்டோம். இன்று என்ன ஆனது? அது தானே நடந்திருக்கிறது?

எதிர் அணியினரோடு கைகோர்த்து விட்டனர்: எல்லா பூத் கமிட்டிக்கும், ஆட்களை நியமித்து விட்டோம் என்று சொன்னீர்கள். பல கமிட்டிகளுக்கு ஆட்களே நியமிக்கவில்லை. நியமிக்கப்பட்ட ஆட்களும், எதிர் அணியினரோடு கைகோர்த்து விட்டனர். கேட்டால், இல்லை என்று சொல்வீர்கள். எல்லா விபரங்களும், என் கையில் ஆதாரத்துடன் உள்ளன. வெற்றி பெற்ற நான்கு தொகுதிகளிலும் கூட, பல இடங்களில் பூத் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட ஆட்கள் விலை போயிருக்கின்றனர். அப்படி இருந்த போதும், நாம் அங்கே வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால், வெற்றி கிடைத்தது கூட்டணி கட்சியினரால் தான்; நம்மால் அல்ல.

தேர்தலுக்கு சரியாக வேலை செய்யவில்லை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள் பலர், 20 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே, தொகுதியில் தேர்தல் நேரத்தில் நடந்த தில்லுமுல்லு அனைத்தையும், ஆதாரத்தோடு தலைமைக்கு வழங்கி இருக்கின்றனர். அதனால், யாரும் எதையும் இல்லை என்று மறுக்க முடியாது. நான்கு தொகுதிகளின் நிலை இப்படி இருக்கும் போது, வெற்றி பெற்ற தொகுதிகளில் இருக்கும் மாவட்ட தலைவர்களுக்கு, இன்னோவா கார் சிறப்பு பரிசாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். அங்கே இருக்கும் மாவட்ட தலைவர்கள் யாரும், சரியாக வேலை செய்யவில்லை என்பது தான், எனக்கு கிடைத்திருக்கும் தகவல்.

தில்லுமுல்லு: தேர்தலை சந்திக்க பல கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அந்த பணமெல்லாம், தேர்தலுக்காக செலவழிக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களுடையதாக்கி கொண்டு விட்டனர். அது தொடர்பாகவும், முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதனால், இப்போதைக்கு யாருக்கும் கார் பரிசு எல்லாம் கொடுக்க வேண்டாம். அப்படியே கிடப்பில் போடுங்கள். விசாரணை முடிவுகள் எல்லாம் வந்த பின், நான் சொன்னதும் கார் கொடுப்பதை எல்லாம் வைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

2023ல் தமிழகத்தில் 20 தொகுதிகள் இலக்கு: தொடர்ந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில், லோக்சபா தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அதற்கு வேகமாக தயாராக வேண்டியிருக்கிறது. தமிழகத்தில், 20 தொகுதிகளில் குறைந்தபட்சம் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே, உடனே வெற்றிக்கு வாய்ப்புள்ள, 20 தொகுதிகளை கண்டறியுங்கள். அத்துடன், 20 தொகுதிகளுக்கான வெற்றி வேட்பாளர்கள் யார் என்பதையும் கண்டறியுங்கள். இதையெல்லாம், ஒரு மாதத்துக்குள், தலைமைக்கு புள்ளி விபரங்களோடு தெரிவிக்க வேண்டும். அதை வைத்து, பா.ஜ., மேலிடம் நிறைய கணக்குகளை போட்டு, தொகுதிகளை நோக்கி மூன்று மாதங்களில் பிரசாரத்தை துவக்கி விடும். வெற்றிக்காக எந்த உதவியையும் செய்ய, மத்திய பா.ஜ., தயாராக இருக்கிறது. இதில் கவனம் செலுத்தாத நிர்வாகிகள் மீது, மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறது.ஒருவர் ஒரு பொறுப்பில் நியமிக்கப்பட்டு விட்டார் என்பதாலேயே, அவரை மூன்று ஆண்டுகளுக்கும் பொறுப்பில் வைத்திருக்க வேண்டியதில்லை. சரியாக செயல்படாத யாரையும், உடனடியாக பொறுப்பில் இருந்து எடுத்து விட்டு, வேறொருவரை நியமித்து விடுவோம். இவ்வாறு சி.டி.ரவி பேசியதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை விடுத்த மேலிட பார்வையாளர்: இப்படி வெளிப்படையாக கண்டித்து எச்சரிக்கை விடுத்த சி.டி.ரவி, சில தலைவர்களிடம் தனித்தனியாக பேசி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதனால், ஒட்டுமொத்த பா.ஜ., தலைவர்களும் ஆடிப்போய் உள்ளனர். இதற்கிடையில், இந்த கூட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், கட்சியின் இன்னொரு மேலிட பொறுப்பாளர் சந்தோஷ் ஜி, தமிழக தலைவர்கள் சிலரை டில்லிக்கு வரவழைத்து, இதே மாதிரியான கருத்து களை சொல்லி அனுப்பியுள்ளார். – தினமலர் இதோடு முடித்துக் கொண்டது.

பிஜேபி சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது: வேறெந்த கட்சியின் தலைவரும் இதுபோல சுய-விமர்சனம் செய்து, கண்டித்திருக்க மாட்டார். அப்படியே செய்தாலும், நாளிதழில், இவ்வளவு பெரிதாக செய்தியாக வெளி வந்திருக்காது. வந்தாலும், மற்ற கட்சியின போல கலாட்டா-ஆர்பாட்டம் செய்யவில்லை. சுயபரிசோதனை செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளனர் எனலாம். அரசியலில் வெற்றி-தோல்வி சகஜம் தான், ஆனால், தமிழக 2021 தேர்தலில், திமுக வெற்றி பெற்றது, ஒரு “ஃபுளூக்” யதேச்சையான செயல், எதிர்பாராத அதிசயம், விதியின் ஒரு திருப்பம் எனலாம். பார்ப்பனராகிய பிரஷாந்த் கிஷோர் சொல்லிக் கொடுத்த மென்மையான இந்துத்துவத்தைப் பின்பற்றி, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி, சன்-குழுமம் தொலைகாட்சி செனல்கள் மூலம் அதிரடி விளம்பரங்கள், கோடிகளில் செலவழித்து, ஊடகங்களில் விளம்பரம் என்றெல்லாம் செய்து வெற்றி பெற்று விட்டனர். போதா குறைக்கு, சசிகலா, கமல் ஹஸன், சீமான் போன்றவர்களும், ஓட்டுக்களைப் பிரித்து, வெற்றி பெற செய்து விட்டனர். அந்நிலையில், பிஜேபி சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது.

© வேதபிரகாஷ்

23-06-2021


[1] தினமலர், கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம்‘: தமிழக பா.., தலைவர்களை வறுத்தெடுத்த சி.டி.ரவி!, Added : ஜூன் 23, 2021  08:24.

[2]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2789924

திராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

பிப்ரவரி 15, 2020

திராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

DK prevented Dharpura adhinam riht-Vikatan Feb.2020

இதுகுறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்ட அறிக்கை[1]: நாத்திக கும்பலின் அறிக்கை, “மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது. அவ்வாறு ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பனந்தாளில் திராவிடர் கழகத்தினர் திரண்டு மறியல் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த தருமபுரம் ஆதீனகர்த்தர், “பல்லக்கில் செல்லவில்லை, நடந்தே செல்கிறேன்என காவல்துறையினர் மூலம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே, காவல் துறைக்கும், ஒத்துழைத்த தருமபுரம் ஆதீனகர்த்தருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சைதிராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம்!, என்றே செய்தி வெளியிட்டுள்ளது[3]. நாத்திக-இந்ட்உவிரோத கும்பல்களுக்கு பயந்து, அடிபணிவது[4], அதாவது,நிச்சயமாக, இது மடத்திற்கு இழுக்கு தான்.,

EVK sampath carrying Anna

கோவில்மடம் அபகரிப்பு தான் திட்டம், இதெல்லாம் விளம்பரம்: நக்கீரன் ஓரளவிற்கு இந்துவிரோதிகளின் திட்டத்தை செய்தியில் சேத்திருக்கிறது. பட்டின பிரவேசம் என்பது மனிதனை மனிதன் தொழில் சுமக்கும் ஒரு மோசமான செயல்,”என போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். “நவீன காலத்திலும் பாசிசத்திற்கு எதிராக சமூக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கின்ற போது, ஒரு மனிதனை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்கள் செல்ல வேண்டும் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த செயலை எந்த சமூகம் செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டியது எங்களின் கடமை[5]. மடம் என்பது நிலவுடமையை கையில் வைத்துக்கொண்டு இங்கே வசிக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நிலத்தின் மீது உரிமை அற்றவர்களாக்கி, ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட பல லட்ச ரூபாய் மடத்தின் நிர்வாகத்திற்கு படியளந்த பின்புதான் வீடு கட்ட முடியும் என்ற நிலை இருக்கிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உழைக்கிற விவசாயிக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்று விவசாயிகள் மீது மடம் என்னும் நிறுவனம் எதேச்சதிகாரம் செய்கிறது. ஆகவே உழைக்கிற ஒடுக்கப்பட்ட  மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மடாதிபதியை சுமக்கும் இந்த செயலை எதிர்த்தாக வேண்டியது எங்களின் கடமையாகும். எனவே பட்டின பிரவேசத்தை தடை செய்யக்கோரி திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது,” என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். இந்தநிலையில் மடத்திற்கு நெருக்கமானவர்கள், தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட மடங்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், கடைகளை குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் அனைவரையும், பட்டினபிரவேசத்திற்கு ஆதரவாக வரவேண்டும் என அழைத்துள்ளது மடத்தின் நிர்வாகம், அதோடு திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகனுக்கும் போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து கைதுசெய்ய உத்தரவிட சொல்லியிருக்கின்றனர்[6]. அதன்படியே பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா, திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவித்துள்ளனர். மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சா முறையை கலைஞர் ஒழித்தார், அதைவிட கொடுமையான இந்த நிகழ்வை பலரும் கண்டித்துவருகின்றனர்.

Viduthalau 13-02-2020 about Tirupanathal

நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிர்மறையாக செயல்படுவது என்றால், பல்லக்கின் முன்பு உருண்டு எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்: சிறு வயதில் ஈவேரா, அண்ணா, கரு…இவர்களை தூக்கியது,……..மேடைகளில், வண்டிகளில் ஏற்றும் போது மற்ற இடங்களில் ………முதலியவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். கைரிக்ஷாக்களில் சென்றதையும் பார்த்திருக்கிறோம். அண்ணவை ரிக்ஷாவில் வைத்து, ஈவேகி சம்பத் இழுக்கும் புகைப்படம் உள்ளது. பெரியாருக்கு எல்லா வேலைகளையும் செய்யத் தான் மணியம்மை வேலைக்கு வைக்கப் பட்டது; பிறகு அந்நியோன்னியமாகி விட்டதால், திருமணமும் நடந்து; அப்பொழுது அண்ணா கண்டபடி வசைப் பாடியது முதலியவை தெரிந்த விசயங்களே. திக-இந்துவிரோத கும்பல்கள் –

  • கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை;
  • உண்ணா விரதம் என்றால் உண்ணும் விரதம், துலுக்க-கிருத்துவ கூட்டங்களுக்குச் சென்று கஞ்சி குடித்தது, கேக் நக்கியது…..
  • சூரியகிரகணம் என்றால் வாழை இலையில் சாப்பிட்டது..,
  • தாலி கட்டினால், தாலியை வெட்டுவது, தாலி அறுப்பு விழா நடத்தியது…….
  • குங்குமம், விபூதி, சந்தனம் வைத்தால் அழிப்பது,
  • பூணூல் போட்டால், பூணூலை அறுப்பது, [குல்லா, சிலுவை அறுக்கவில்லை…]
  • பன்றிக்கு பூணூல் போடுவது

என்றெல்லாம் செய்த போது, அவற்றில் “உல்டா லாஜிக்கை” கவனிக்கலாம்.  பிறகு, பல்லக்கு-தேர் பவனி எனும் போது, எதிர்மறையாகத் தானே செய்யவேண்டும்? தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு! அவ்வாறு செய்யாமல், மடத்திற்குள் சென்று மடாதிபதியை மிரட்டுவது என்ன அறிவு?

A rare picture of MGR riding a cycle rikshaw with M Krishnan Nair and R M Veera

ஈவேரா முதல் கருணாநிதி வரை தூக்கப் பட்டவர்கள் தான், தூக்க பல ஆட்கள் இருந்தனர்: ஈவேரா முதல் கருணாநிதி வரை தம்மை தூக்க வைத்து தாராளமாகவே வாழ்க்கையை அனுபவித்தனர். தூக்குவதற்கு பல ஆட்கள் இருந்தனர். ஈவேரா மணியம்மை உதவி பெற்றார் என்றால், கருணாநிதிக்கு உதவ வீட்டிலும், வெளியிலும், ஆஸ்பத்திரியிலும் பல பேர் இருந்தனர். இப்பொழுது வரை விவரங்கள்-விவகாரங்கள் தெரிந்ததது தான், ஆனால், ஒரு புகைப்படம் வெளிவரவில்லை. “என்னை கொல்றாங்க, என்னை கொல்றாங்க,” வீடியோ மட்டும் இன்றும் உலா வருகின்றது. “உள்ளே-வெளியே” என்று வாழ்ந்தபோது, புகைப் படங்கள், வீடியோக்கள் எடுத்திருக்கலாம், ஆனால், ஒன்று கூட இல்லை என்ற நிலை. அப்பொழுதெல்லாம் கேமரா என்பது, பணக்காரர் விசயமாக இருந்தது. அதனால், எல்லாவற்றையும், எல்லோரும் புகைப் படம் எடுப்பதில்லை. எடுத்தாலும் நகல் பெறுவது அவ்வளவு கடினம்! பணம் இருந்ததால், எல்லாம் வேலைகளை செய்விக்க ஆட்கள வைத்துக் கொண்டனர். எப்படி ஈவேரா-பெரியார் புத்தகங்கள் பல உண்மைகள் மறைக்கப் பட்டுள்ளனவோ, அதே போல, அண்ணா, கருணாநிதி, புத்தகங்களிலும் மற்றும் எதிர்வினையாக, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிய புத்தகங்களிலிலும் உண்மைகள் மறைக்கலாம். ஆனால், திராவிடத்துவ வாதிகள் போலிகள் தாம் என்பதனை, வருங்கால சந்த்சதியர் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறந்து தான், இப்பொழுது வீரமணி போன்ற அரைகுறைகள், போலிகள் ஒரு சைவ மடாதிபதியை எதிர்த்து, சம்பிராதாயத்தை, பாரம்பரியத்தைத் தடுத்துள்ளன. கோர்ட்டுக்குச் சென்றால், நிச்சயமாக, இத்தகைய போலிகளை தோலுரிக்கலாம்!

© வேதபிரகாஷ்

15-02-2020.

DK Veeramani riding chariot, umbrella-blessing

[1] தி.இந்து, திராவிடர் கழகத்தினர் போராட்ட திட்டம்: திருப்பனந்தாளில் பல்லக்கில் செல்வதை கைவிட்டார் தருமபுரம் ஆதீனகர்த்தர், Published : 13 Feb 2020 07:55 AM; Last Updated : 13 Feb 2020 07:56 AM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/539287-dravidar-kazhagam-protest-2.html

[3] தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சைதிராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம்!, பிப்ரவரி 10, 2020.

[4] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/d-k-protest-in-tirupananthal-succeed-120021300013_1.html

[5] நக்கீரன், மனிதனை மனிதன் சுமக்கும் தருமை புதிய ஆதீன பட்டினபிரவேசத்திற்கு எதிராக போராட்டம்!, செல்வகுமார், Published on 12/02/2020 (14:39) | Edited on 12/02/2020 (14:52)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dharumapuram-aadhinam

பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

பிப்ரவரி 15, 2020

பல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!

The palanquin row - DK Veeramani letter, feb.2020

பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்தார், தருமபுர ஆதீனம்: “மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று விகடன் தன் கருத்தை வாசகர் மீது திணித்துள்ளது[1]. “நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரைபட்டினப்பிரவேசம்எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர்,” என்று செய்தியாக போட்ட போது, ஏன், எதற்கு என்று விவரங்களைப் போட்டிருக்க வேண்டும்[2]. ஆனால், போடாமல், “இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்என அறிவித்திருந்தார்,” என்று போட்டு, முன்னமே தெரிந்தது போல செய்தியைத் தொடர்ந்தது. அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.

DK gave petition directly to Adhinam, dinamani, Feb.2020

12-02-2020 பட்டின பிரவேசம் பற்றி வீரமணிக்கு முன்னரே தெரிந்தது எவ்வாறு? 06-02-2020 அன்று வீரமணியின் கடிதம்[3]: வீரமணிக்கு “பட்டின பிரவேசம்” பற்றி முன்னரே தெரிந்திருந்ததால், 06-02-2020 அன்றே, விடுதலையில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆகிறது. “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர்நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட[4]மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்றுஅதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                       தலைவர், திராவிடர் கழகம், சென்னை, 6.2.2020.” ஆக, 12-02-2020 அன்று “பட்டின பிரவேசம்” இருப்பது இந்துவிரோதிக்ளுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால், இந்து அமைப்புகளுக்குத் தெரியவில்லை.

DK Veeramani riding chariot

மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, 09-02-2020 அன்று மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகம் மனு[5]: தினமணி, “மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை 09-02-2020, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது[6]. பக்தர்களை காண நேரம் எடுத்துக் கொள்வது, காக்க வைப்பது, மறுப்பது என்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, உள்ளே விட்டு, மனு பெற்று, போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் எனும் போது, இவர் மீது தான் சந்தேகம் எழுகின்றது. வந்தவர்களிடம், ஆதீனம் தனது மரபு, பாரம்பரியம் முதலியவற்றை கூறி இருக்க வேண்டும். பல்லக்கில் போவது என்பது, அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல, பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. ஏன் மலைக் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை “டோலி” மூலம் தூக்கிச் செல்வது தொழிலாகவே நடந்து வருகிறது.

EVR riding chariot

 பட்டினப்பிரவேசம்பாரம்பரியம் என்றால் ஆதீனம் தடுப்பவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்: விகடன் தொடர்கிறது, “இந்நிலையில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்படியென்றால், ஆதீனம் தம்மை மிரட்டியது மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது, திராவிடர் கழகத்தின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். அப்படி என்றால், ஆதீனம் மீதே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முதலில் அவர் தனது மற்றும் மடம் இவற்றி உரிமைகள் என்ன என்பதனை சட்டப் படி தெரிந்திருக்கவில்லை மற்றும் திராவிட அரசியலுக்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது. இதனால் தான், ஆதீன நிலங்களை இதே நாத்திக மற்றும் இந்துவிரோத ஏன் இந்துக்கள் அல்லாதவர்களும் அபகரித்துக் கொண்டு, வாடகை-குத்தகை பாக்கி வைத்து, சொந்தம் கொண்டாடி, நீதிமன்றகளிலும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

Karu riding chariot

ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லைஎன்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்: இதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதாவது போலீஸார் சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல், தடுப்பவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என்றாகிறது, அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். அதாவது, எந்த பொறுப்பையும் ஏற்க முடியாத ஆதினத்திற்கு, ஒரு நாத்திகனிடமிருந்து, இந்துவிரோத கும்பலிடமிருந்து சான்றிதழ் வேண்டும் என்று எதிர்பார்த்து மகிழ்வது, திகைப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

15-02-2020.

DK Veeramani riding chariot, umbrella-blessing

[1] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதா?!’ –பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம், மு.இராகவன், பா.பிரசன்ன வெங்கடேஷ், Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PM

[2] https://www.vikatan.com/spiritual/gods/dharmapuram-adheenam-avoided-pallak-event-after-dk-opposition

[3] விடுதலை, தருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் மறியல், வியாழன், 06 பிப்ரவரி 2020 14:38

 https://www.viduthalai.in/headline/195202-2020-02-06-09-13-41.html

[4]  இது அப்பட்டமான பொய்யாகும். இவர்கள் செய்யும் கலாட்டாவினால் தான் பயந்து பக்தர்கள் செய்வதும், தடுப்பதுமான நிலை ஏற்பட்டுள்ளது. ஶ்ரீரங்கத்திலு,இப்பிரச்சினை உள்ளது. The Board of Trustees of Arulmighu Sree Ranganathar temple, at Srirrangam, Trichy, had passed a resolution No.107, on 27.09.2010, giving up the practice of carrying person in a Palanquin, in the temple premises. The said resolution has not been challenged, till date. Further, it is also noted that the Tamil Nadu Association of Temple Employees had also passed a resolution, on 23.10.2010, stating that they would not take part in the practice of carrying persons in Palanquins in the temple premises. ஶ்ரீரங்கம் கோவில் டிரஸ்டிகள் மற்றும் கோவில் ஊழியர் சங்கம் தீர்மானங்களை வைத்து நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததே தவிர உண்மையில், அந்த பாரம்பரிய முறை மற்றும் உரிமை பற்றி அலசவில்லை. Madras High Court – Vedavyasa R.Lakshmi Narasimha vs The Commissioner on 19 October, 2010; BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT – DATED: 19/10/2010 – https://indiankanoon.org/doc/1594161/ பிறகு, மறுபரிசீலினை மனுவும் நிராகரிக்கப் பட்டுள்ளது – https://indiankanoon.org/doc/14854463/ – இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டதா என்றும் தெரியவில்லை. 2015ல் நடந்துள்ளது.

[5] தினமணி, பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள், By DIN | Published on : 10th February 2020 01:53 AM |

[6] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3353733.html

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

ஏப்ரல் 16, 2019

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

Kanimozhi effigies burnt in Rayalaseema AP

திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா? இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.

Kani, Vairamuthu, Veeramani- the trio
இந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா?[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்? இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு..,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு..வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது? தி.மு.., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி

Kani, Tirupati case filed

திராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.

Kani going spree-temples

கருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே? இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர்.  இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.

75 years old man killed canvassing for Modi 13-04-2019.vedaprakash

திராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன.  இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு? முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.

Veeramani condemned, Charu Nivedita-2

தாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.

வேதபிரகாஷ்

14-04-2019

Stalin witdrawing Vinayaka caturti greetings

[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[4] speech that attacks, threatens, or insults a person or group on the basis of national origin, ethnicity, color, religion, gender, gender identity, sexual orientation, or disability

[5] https://www.youtube.com/watch?v=Declz2hIXIA

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

ஏப்ரல் 16, 2019

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

Stalin on marriage mantras-3 Kasturi

விவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:

சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது?’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].

Meaning of Vivaha mantras

ரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன?: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].

எண் சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் வயது ரிக் வேத மந்திரத்தின் பொருள் Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D
1 குழந்தை 0 முதல் 4 வரை சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

 

In charge of Pubarche, appearance of pubic hair
2 பேதை.

 

5      முதல் 8 வயது
3 பெதும்பை 9 முதல் 10 வயது வரை விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.

 

In charge of Thelarche, appearance  breasts.
4 மங்கை.

 

11 முதல் 14 வயது வரை
5 மடந்தை 15 முதல் 18 வயது வரை அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.

 

In charge of Menarche, 1st periods
6 அரிவை 19 முதல் 24 வயது வரை

Stalin on marriage mantras-2

இதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.

Stalin 60th marriage
ஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு..,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.

Stalin 60th marriage-2

இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறுவாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறுஎன்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”

Anti-Hindu, Stalin acts in a different way-3

ஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

வேதபிரகாஷ்

14-04-2019

Anti-Hindu, Stalin acts in a different way-2

[1] http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36758-2019-03-07-04-12-33

[2] HYMN LXXXV. Sūrya’s Bridal. Rig Veda, tr. by Ralph T.H. Griffith, [1896], at sacred-texts.com; http://www.sacred-texts.com/hin/rigveda/rv10085.htm

[3] Dr Veeraswamy Krishnaraj, M.D,Woman and Four Husbands, https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm

[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579