Archive for the ‘குழந்தை’ Category

இரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது!

ஏப்ரல் 23, 2020

இரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது!

Two sanyasis lynched, Tail BBC, 23-04-2020

திருடர்கள், குழந்தை திருடர்கள், கிட்னி திருடர்கள் என்றெல்லாம் வதந்தி கிளப்பியவர்கள் யார்?: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பல கிராமங்களில் மக்கள் தாங்களாக முன்வந்த தங்கள் கிராமங்களுக்குள் வெளி ஆட்கள் நுழையக்கூடாது என தடுப்புகளை அமைத்தும் வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இரண்டு இந்து மத சாமியார்கள் உள்பட 3 பேரை திருடர்கள் என நினைத்து ஒரு கும்பல் அடித்தேகொன்றிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு துறவிகள் 16-04-2020, கடந்த வியாழக்கிழமை ஒரு துக்க நிகழ்ச்சியில் / இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி வந்தது. குழந்தை கடத்தல்காரா்கள் என எண்ணி, அவா்கள் மீது தாக்குதல் நடத்தினா் என்கிறது தினமணி. கிட்னி திருட வந்த சாதுக்கள் என்று சமயம் கூறுகின்றது[1]. சாதுக்கள் கிட்னி திருடுகிறார்கள் என்று அந்த நிருபருக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை[2]. இப்படியெல்லாம் வதந்திகள் கிளப்பினர் என்று அரசு தரப்பில் விளக்கமும் கொடுக்கப் பட்டது.

Palghar lynching IE 21-04-2020

போலீஸ் முன்பே, மூவர் அடித்துக் கொலை செய்யப் பட்டது [16-04-2020]: இந்த வதந்தி அப்பகுதியில் உள்ள் சில கிராமங்களிலும் பரவியவது. இதையத்து அந்த பகுதி கிராமத்தினர் சிலர் கும்பலாக சேர்ந்து கிராமத்தை சுற்றிலும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வந்தனர். இப்படியான நிலையில், இரண்டு சாமியார்களும் சென்ற கார் அந்த பகுதியை கடந்த போது அதை மறித்த அந்த கும்பல் அவர்களை திருடர்கள் என நினைத்து தாக்க முற்பட்டனர். உடனே போலீஸூக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பயம் காரணமாக வீட்டில் பதுங்கி இருந்த கார் ஓட்டுநர் உட்பட 3 பேரை மீட்டு வெளியே கொண்டு வர முற்பட்டனர். ஆனால், அந்த கும்பல் தொடர்ந்து தாக்கியதில், 3 பேரும் பலியானார்கள். இந்த சம்பவமானது 16-04-2020, வியாழக்கிழமை நடந்தது[3]. இறந்த மூவரில் 70 மற்றும் 35 வயதான இரண்டு துறவிகள் மற்றும் 30 வயதில் இருந்த அவர்களின் ஓட்டுநர் ஆகியோர் அடக்கம்[4]. அவர்கள் –

  1. சந்நியாசி சிக்னே மகாராஜ் (70),
  2. சந்நியாசி சுஷில்கிரி மகாராஜ் (35).
  3. கார் ஓட்டுநா் நிலேஷ் டெல்கேட் (30)

Maharastra lynching, Tamil , 23-04-2020-

முக்கிய குற்றவாளிகள் உள்பட 110-க்கும் மேற்பட்டோர் கைது: இந்த நிகழ்வுக்கு சிலா் மதச்சாயம் பூசுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டினார். இதுதொடா்பாக அவா் பேசி வெளியிடப்பட்ட காணொலியில், ‘குழந்தை கடத்தல்காரா்கள் என நினைத்து 3 போ் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தொடா்பாக பால்கா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் உள்பட 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனா். வன்முறைச் சம்பவத்தை தடுக்க தவறிய பால்கா் மாவட்ட போலீஸார் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 20-04-2020 திங்கள்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினார். அப்போது “பால்கரில் 3 பேர் கொல்லப்பட்டது வெட்ககேடான செயல். இந்த கொடூரத்தை செய்தவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்தச் சம்பவத்துக்கு மதச்சாயம் பூசும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும் வலியுறுத்தினேன். குற்றவாளிகள் மீது எனது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் அவரிடம் கூறியுள்ளேன்,”என்று தெரிவித்தார்[5].. 3 போ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு மாநில அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[6].

CID register case on three Mumbai Mirror- 22-04-2020,

மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியது: இதேபோல இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறும்போது, “பால்கரில் தாக்கப்பட்டவர்களும், தாக்கியவர்களும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். பால்கர் சம்பவத்தை வைத்து இருசமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் யாராவது கருத்து பதிவிட்டால் நடவடிக்கை எடுக்க மாநில போலீசார், சைபர் குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்[7]. முன்பு இதே கிராமத்தில், ஒரு டாக்டர்  மீதும் கல்லெறியப் பட்டுத் தாக்கப் பட்டார். இப்பொழுது, இவர்கள் போலீஸார் முன்பே அடித்துக் கொல்லப் பட்ட நிகழ்ச்சி வீடியோவாகயிருப்பதால் அது இணைதளத்தில் பலர் பார்த்துள்ளனர். மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு சிலர் மதசாயம் பூசி சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்[8].

Kidney thieves -Two sanyasis lynched, Tamil Samayam, , 23-04-2020

அடித்துக் கொல்லப் பட்டது வீடியோவில் பதிவானது: இந்த சம்பவம் தொடர்பான காணொளியின் பல சிறிய பகுதிகள் வைரலாகிவிட்டன[9]. இதில் சாதுக்கள் கூட்டத்தின் முன் கைக்கூப்பி இறைஞ்சி அழுகிறார்கள், ஆனால் கைகளில் தடிகளை ஏந்திய கும்பல் அவர்களைத் தாக்குகிறது. இந்த வீடியோக்களில் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போலீசார் திணறுவதையும் காணமுடிகிறது[10]. இப்படி தமிழ்.பிபிசி சப்பைக் கட்டுகிறது. இந்த சம்பவத்தின் 45 விநாடி வீடியோ பகிரப்பட்டு வைரலாகிறது. “மார் ஷோயிப் மார்” என்று கத்திக் கொண்டு வெறித்தனமான கூட்டம் கொலைவெறி தாக்குதல் நடத்துவதாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்படும் இந்த வீடியோவுடன் எழுதப்பட்டுள்ளது. வீடியோவில் ‘ஷோயிப்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சுதர்சன் நியூஸ் எடிட்டரும் திரைப்பட தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் போன்ற பலர் கூறுகின்றனர்.

No muslim involved, DM , 23-04-2020

.மார் ஷோயிப் மார்இல்லை போதும், போதும்” – பிபிசி கண்டுபிடிப்பு: இது உண்மையா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, இந்த வீடியோவை நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். இந்த வீடியோவின் 43 வது வினாடியில், சாதுக்களைக் கொன்ற கூட்டத்தினரிடம் “ஓ போதும், போதும்” என்று ஒருவர் கூச்சலிடுவதை கேட்க முடிகிறது. ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் இந்த சம்பவத்திற்கு ’அடி, ஷோயிப் அடி” என்று கூறி பிரிவினை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிடிஞ்சலே கிராமத்தில் 248 குடும்பங்கள் வசித்து வருகின்றன, மொத்த மக்கள் தொகை 1208. 56 சதவிகித மக்கள் கோக்னா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 34 சதவிகிதத்தினர் வோர்லி சமூகம், 6 சதவிகிதத்தினர் கத்காரி சமூகம் மற்றும் 4 சதவிகிதத்தினர் மல்ஹார் எனப்படும் மலை சாதியினர். தரவுகளின்படி, இந்த கிராமத்தில் சிறுபான்மை மக்கள் இல்லை என்பது தரவுகளிலிருந்து தெளிவாகிறது. இந்நிலையில், பால்கர் சம்பவம் தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலையும் அம்மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

©  வேதபிரகாஷ்

22-04-2020

No communal angle, palgarh lynching, The Hindu, 21-04-2020

[1] தமிழ்.சமயம், கிட்னி திருட வந்ததாக சாதுக்கள் இருவர் உள்பட மூவர் அடித்துக் கொலை!!, Edited By Dhanalakshmi G | Samayam Tamil; Updated: 20 Apr 2020, 11:11:00 AM

[2] https://tamil.samayam.com/latest-news/india-news/3-lynched-by-villagers-in-maharashtras-palghar/articleshow/75243404.cms

[3] பிபிசி.தமிழ், பால்கர் சாதுக்கள் கொலை: கொள்ளைக்காரர்கள் என நினைத்து அடித்து கொல்லப்பட்ட துறவிகள்மகாராஷ்டிரா சோகம், 20 ஏப்ரல் 2020.

[4] https://www.bbc.com/tamil/india-52349996

[5] தினமணி, பால்கா் வன்முறைச் சம்பவம்:மதச்சாயம் பூசுவதாகஉத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு, By DIN | Published on : 21st April 2020 04:40 AM

[6] https://www.dinamani.com/india/2020/apr/21/bal-thackeray-uthav-thackeray-alleges-religious-paint-3404505.html

[7] தினதந்தி, 3 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம்: மதசாயம் பூசுபவர்கள் மீது கடும் நடவடிக்கைஉத்தவ் தாக்கரே எச்சரிக்கை, பதிவு: ஏப்ரல் 21, 2020 05:16 AM

[8] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/04/21051606/The-incident-that-killed-3-people-On-religious-dyeers.vpf

[9] பிபிசி.தமிழ், பால்கர் சாதுக்கள் கொலை: ‘அடி, ஷோயிப் அடி’ – வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?, கீர்த்தி துபே, பிபிசி செய்தியாளர், 22 ஏப்ரல் 2020.

[10] https://www.bbc.com/tamil/india-52381673

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – இது போன்ற கூட்டுக்கொலை, இந்தியாவின் பண்பாடு அன்று, மற்ற நாடுகளின் மதநம்பிக்கையில் உருவானது (1)

ஜூலை 27, 2018

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – இது போன்ற கூட்டுக்கொலை, இந்தியாவின் பண்பாடு அன்று, மற்ற நாடுகளின் மதநம்பிக்கையில் உருவானது (1)

Miinesota lynching

இந்தியாவில்தரும அடிகொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது முதலியவை தெரிந்த விசயங்கள்: சமீபகாலத்தில் லிஞ்சிங் (Lynching), மாப்-லிஞ்சிங் (mob lynching) போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஊடகங்களில், விவாதங்களில் காணப்படுகின்றன[1]. மக்கள் சேர்ந்து கொண்டு ஒருவரை அடித்துக் கொல்வது,  குறிப்பாக தூக்கில் போடுவது சட்டப்படியான விசாரணை இன்றி குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவரைக் கொல்வதையே “லிஞ்சிங்”  என்று சில ஆங்கில அகராதிகள் விளக்கம் கொடுக்கின்றன என்று ஆகார் படேல் எழுதுகிறார்.[2]இருப்பினும், இச்சொற்பிரயோக மூலம் உறுதியாக அறியப்படவில்லை[3]. 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் இருவரின் பெயர்கள் அவ்வாறு இருந்தது அதனால் உண்டானது என்று விக்கிபிடியா கூறுகிறது[4]. அமெரிக்காவில், துலுத் என்ற இடத்தில் வெள்ளையர் மூன்று கருப்பரைக் கொன்றதால், “துலுத் லிஞ்சிங்” அமெரிக்காவில் பெருத்தத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது இந்தியாவில் நடப்பது, தானாக நடக்கும் “பொது தாக்குதல்” வன்முறையாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப் படுகிறது[5]. முன்பெல்லாம் “பிள்ளைப் பிடிப்பவர்களை” அடிப்பது, அடித்துக் கொல்வது இந்தியாவில் தெரிந்த விசயமாக இருந்து வந்தது. ஆனால், அப்பொழுதெல்லாம், ஊடகங்களில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. “தரும அடி” கொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது எல்லாம் நடந்து வந்தன. ஆனால், உயிர் போகும் வரை அடிக்க மாட்டார்கள். முதலில், இதன் பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.

Child lifting cases in Tamilnadu

பிள்ளைப் பிடிப்பவர்கள் யார்?: பொதுவாக 1930-50களில் பிள்ளைகளை / குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவர்கள் துலுக்கர் மற்றும் வெள்ளையர் என்பது தெரிந்த விசயமாக இருந்தது. குழந்தைகளுக்கு சோறூட்டும் போது, குறும்பு செய்யும் போது, “புள்ளப் புடுக்கிறவங்க கிட்டே புடுச்சிக் கொடுத்துடுவேன்,” என்று மிரட்டுவது வழக்கமாக இருந்தது. “பூச்சாண்டி” காட்டுவது, பூச்சாண்டி பிள்ளைப் பிடிப்பது போன்ற பிரயோகங்கள் சாதாரணமாக வழங்கப் பட்டன. அதாவது, சாதாரண பெண்களுக்கும் அவ்வுண்மை தெரிந்திருந்தது. துலுக்கர் குழந்தைகளை, பிள்ளைகளை, பெண்களை தூக்கிக் கொண்டு போனது விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் இடைக்காக சரித்திரம் அதனை விவரங்களுடன் பதிவு செய்துள்ளது. அதேப்போல, ஐரோப்பிய வர்த்தகர், மிஷினரிகள், மற்றவர் அடிமை வியாபாரத்திற்காக, பிடித்துக் கொண்டு சென்று விற்றனர், பண்ணைகளில் வேலை செய்ய வைத்தனர். டாக்ட்ரைன் ஆப் லாப்ஸ் [Doctrine of Lapse] கொள்கை மூலம் ஆண் வாரிசு இல்லாத ராஜ்யங்களையும் கவர்ந்து கொண்டனர். பிள்ளைகளையும் கவர்ந்து சென்றனர். அத்தகைய பாரம்பரியங்களில் வந்தவர்கள் தாம், இன்று இந்தியர்களை, குழந்தை கடத்தல்காரர்களை, கூட்டுக் கொலை செய்கின்றனர் என்று எழுதுகிறார்கள். அதனை லிஞ்சிக் கூட சேர்த்து, காட்டு மிராண்டி இந்தியர்கள், இந்துத்துவ வெறியகள், தினம்-தினம் மக்களைக் கொன்று வருகின்றனர் [குறிப்பாக முஸ்லிம்களை] என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Duluth lynching- 1920

யூதகிருத்துவதுலுக்க நாகரிகங்களில் கூட்டுக்கொலை பலவிதங்களில் அமூல்படுத்தப்பட்டு வந்தது: உண்மையில், இப்பழக்கம் இந்தியாவில் இல்லை, இருந்ததில்லை. வளைகுடா நாகரிகங்களில் குற்றம் புரிந்தவர்களை, குறிப்பாக, தங்களது நம்பிக்கைக்கு விரோதமாக காரியங்களில் ஈடுபட்டவர்களை சேர்ந்து அடித்துக் கொல்லும் மற்றும் கற்களால் எரிந்து கொல்லும் பழக்கம் இருந்து வந்தது. ஹஜ்ஜில் சாத்தான் மீது கல்லெறிதல் என்ற சடங்கு இன்றளவிலும் வருடாவருடம் செய்து வருகின்றனர். இங்கிருக்கும் ராவணப் பிரியர்கள் போல, அங்கு சாத்தான் பிரியர்கள் யாரும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. உயிரோடு கட்டிவைத்து, பொது இடங்களில் எரித்துக் கொல்லும் [burning at stake]  பழக்கமும் 19ம் நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவில் இருந்து வந்தது. இது கிருத்துவர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த தண்டனை முறையாகும். மந்திரகாரிகள், சூன்னியகாரிகளைத் தேடி பிடித்து [witch hunting] கொல்லும் முறைக்கும் இது பயன்படுத்தப்பட்டது. “விட்ச்-ஹன்டிங்” என்ற வார்த்தை பிரயோகம் உண்டானது. இது பெண்களைக் கொல்ல, பிரத்யேகமாக பயன்படுத்தப் பட்ட முறை. தவிர பைபிளுக்கு விரோதமான கருத்துகளை வெளியிட்டனர் என்று விஞ்ஞானிகளும் அவ்வாறே கொல்லப்பட்டனர்.   யூத-கிருத்துவ-துலுக்க நாகரிகங்களில் இவை பரவலாக இருந்தன. இன்றும் தாலிபான், ஐசிஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள், குரூர ஜிஹாதிகள் இத்தகைய குரூர கொலைகளை செய்து வருகிறார்கள். அவர்களே, புகைப்படங்கள், வீடியோ எடுத்து பெருமையாக போட்டு, காட்டி வருகிறார்கள்.

Inquisition, torture, mass killing

அந்நிய கொலைவெறி முறைகளை மறந்து, மறைத்து, ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது: இந்தியாவில் கும்பல் கொலை, கூட்டுக் கொலை, தாக்கிக் கொலை என்று தினம்-தினம் ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், முன்னமே குறிப்பிட்ட படி, இவையெல்லாம் பலவிதங்களில், ரகங்களில், முறைகளில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்-அல்லாத மற்ற நாகரிகங்கள் தாம். யூத, கிருத்துவ மற்றும் முகமதிய மதங்கள் இத்தகைய மத-தண்டனைகள் – Witch-hunting, burning at stake, inquisition, crucifying[6], hacking, என்று பல வழிகளில் கோடிக்ககணக்கான மக்களைக் கொன்றுக் குவித்தன. பெண்கள் தான் அழிவிற்குக் காரணம் என்ற நம்பிக்கையில் தேடி-தேடி பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து எரித்துக் கொன்ற முறை விட்ச்-ஹன்டிங். சூனியகாரிகளை, பெண் மந்திரவாதி கொலை என்றதனை குரூரக் கிருத்துவர்கள் 19ம் நூற்றாண்டு வரை செய்து வந்தனர். ஜோன் ஆப் ஆர்க் [Joan of Arc] என்ற பெண்ணின் குரூர கொலை எல்லோரையும் பாதித்தது பிரபலமானது. பைபிளுக்கு ஒத்துவராத கருத்துகளை வெளியிடும் யாராக இருந்தாலும், எரித்துக் கொலை செய்யும் முறை பார்ன்ங்-அட்-ஸ்டேக் [burning at the stake] முறையாகும். இதில் பெரிய விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். உதாரணத்திற்கு[7], ஜியோட்ரானோ புரோனோ [Giordano Bruno c. 1548-1600] என்ற விஞ்ஞானி, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றதால் எரித்துக் கொல்லப்பட்டார்.  அன்டோய்னே லவாஸ்சியர் [Antoine Lavoisier 1743-1794], ஆக்ஸிஜன் தான் மனிதன் உயிர் வாழமுடிகிறது என்றதால் கொல்லப்பட்டார். அதேபோல, மைக்கேல் சர்விடஸ் [Michael Servetus 1511-1553] ரத்த சுழற்சிக்கு இருதயம் தான் காரணம் என்று எடுத்துக் காட்டியதற்காக கொல்லப்பட்டார்.

Burning at stake-1

மதத் தண்டனைகள் [Inquistion உட்பட]: இன்குஸிஷன் என்பது, பைபிளுக்கு ஒத்துவராத மற்றும் கிருத்துவ மதம் அல்லாதவர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறை. மதவிரோதிகளை, தூஷணவாதிகளை, குற்றம் புரிந்தவர்களை சிலுவையில் அறைந்து கொல்லும் முறை குரூஸிபிக்ஷன் எனப்படும். லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கிருத்துவ மதவெறியர்களால் அஸ்டெக் (Aztec), மாயா (Maya), இன்கா (Inca) போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவில், கோவாவில் கிருத்துவர்கள் இத்தகைய முறியில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றிருக்கின்றனர்[8]. மதவிரோதிகளை, தூஷணவாதிகளை, யாதாவது ஒரு ஆயுதத்தால், வெறியுடன் பலமுறை அடித்து, வெட்டிக் கொல்வது ஹாக்கிங். கல்லால் அடித்து / கல்லடித்துக் கொலை செய்வது புனிதமான கொலையாகக் கருதப்பட்டு வந்தது, வருகிறது, இன்றும் நடக்கிறது. காஷ்மீரத்தில் கல்லடி ஜிஹாத் / கலாட்டா நடந்து வருகிறது. Massacre, slaughter, mass murder, mass execution, extermination, carnage, முதலியவையெல்லாம் மக்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறைகள். இவ்விதமான கொலைகள் தான் திட்டமிட்டு செய்வது, குரூரமானது, குறிப்பிட்ட நம்பிக்கையாளர்களுக்கே உரித்தானது. முகமதிய / இஸ்லாத்தில் “ஜிஹாத்” என்ற முறையில் காபிர்களை பலமுறைகளில் கொன்று வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

27-07-2018

Duluth lynching- 1920, interpreting in India

[1] Asian Age, The story of India and its lynch mobs, Aakar Patel, Published : Jul 1, 2018, 5:37 am IST; Updated : Jul 1, 2018, 5:36 am IST

Aakar Patel is Executive Director of Amnesty International India. A former editor, Patel is a senior columnist and a translator of Urdu and Gujarati works.

http://www.asianage.com/opinion/oped/010718/the-story-of-india-and-its-lynch-mobs.html

[2]  Lynching – (of a group of people) kill (someone) for an alleged offence without a legal trial, especially by hanging.

Wikipedia- Lynching is a premeditated extrajudicial killing by a group. It is most often used to characterize informal public executions by a mob in order to punish an alleged transgressor, or to intimidate a group.

[3] The origins of the word “lynch” are obscure, but it likely originated during the American revolution. The verb comes from the phrase “Lynch Law”, a term for a punishment without trial. Two Americans during this era are generally credited for coining the phrase: Charles Lynch and William Lynch, who both lived in Virginia in the 1780s. Charles Lynch has the better claim, as he was known to have used the term in 1782, while William Lynch is not known to have used the term until much later. There is no evidence that death was imposed as a punishment by either of the two men. In 1782, Charles Lynch wrote that his assistant had administered “Lynch’s law” to Tories “for Dealing with Negroes, &c.”

[4] In the United States, lynchings of African Americans, typically by hanging, became frequent in the South during the period after the Reconstruction era and especially during the decades on either side of the turn of the 20th century. https://en.wikipedia.org/wiki/Lynching

[5] http://www.asianage.com/opinion/oped/010718/the-story-of-india-and-its-lynch-mobs.html

[6] The act of putting to death by nailing or binding to a cross. Among the modes of Capital Punishment known to the Jewish penal law, crucifixion is not found; the “hanging” of criminals “on a tree,” mentioned in Deut. xxi. 22, was resorted to in New Testament times only after lapidation (Sanh. vi. 4; Sifre, ii. 221, ed. Friedmann, Vienna, 1864). Crucifixion by Kaufnann Kohker and Emil G. Hirsh, for more details see at: http://www.jewishencyclopedia.com/articles/4782-crucifixion

[7] ஏனெனில், குறிப்பாக தலைசிறந்த விஞ்ஞானிகள் இவ்வாறு கொல்லப்பட்டனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அஸ்டெக், மாயா, இன்கா போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்ற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

[8] Inquisition in Goa, Goa Inquisition போன்ற புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)?

நவம்பர் 8, 2015

தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும்இந்தியஇந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (1)?

No crackers campaign for Deepavali

No crackers campaign for Deepavali

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[1]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[2]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[3]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.

From left -hasin, Sankaranarayanan and Bhandari at Bhasins flat in Delhi- fathers of toddlers- Photo- Priyanka Parashar-Mint

From left -hasin, Sankaranarayanan and Bhandari at Bhasins flat in Delhi- fathers of toddlers- Photo- Priyanka Parashar-Mint

குழந்தைகளை வைத்து தீபாவளி தடை மனு போட்டது: சுற்றுப்புறச் சூழ்நிலை, குழந்தைகளை வேலைக்கு வைத்தல் போன்ற காரணங்களைக் காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் வேடிக்கை என்னவென்றால், மூன்று குழந்தைகள் – அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஜோயா ராவ் [Arjun Gopal, Aarav Bhandari and Zoya Rao] தீபாவளிக்கு வெடிகள் வெடிக்க வேண்டாம், ஏனெனில், அது தில்லியின் காற்றின் நச்சுத்தன்மையினை அதிகமாக்குகிறது என்று வழக்குப் போட்டனர் என்பதுதான். இதில் அர்ஜுன் கோபால் மற்றும் ஆரவ் எட்டு மாத குழந்தைகள், பண்டாரி ஜோயா ராவ் 16 மாதங்கள் – ஒன்றரை வயது குழந்தை[4]. அக்குழந்தைகள் தமது வழக்கறிஞர்கள் தந்தைகள் மூலம் இவ்வாறு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[5]. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். உண்மையிலேயே இப்படி கைக்குழந்தைகள் எல்லாம் வழக்குப் போடலாம் என்றால், குப்பைத்தொட்டிகளில் வீசிய குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று தெரியவில்லை? கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை? இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும்! இல்லை அப்பெற்றோர்கள், இப்பெற்றோர்கள் போல விழிப்புணர்வுடன், சாதுர்யத்துடன், குழந்தைகள் நலன் பேணும் அளவுக்கு இல்லை போலும்!

தீபாவளி எதிப்பு - பட்டாசுகள் வேண்டாம்

தீபாவளி எதிப்பு – பட்டாசுகள் வேண்டாம்

ஸ்ரீ அய்யப்ப சங்கம், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் எல்லாம் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது: சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தனது வாதத்தை, “பட்டாசுகள் தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிருஸ்துமஸ், தேர்தல் வெற்றி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு வெற்றி, திருமணங்கள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடிக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. மேலும் இத்தொழில் மூன்று லட்சம் மக்களுக்கு நேரிடையாகவும், 10 லட்ச மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். பட்டாசுகளின் மேலான தடை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். …..இந்து இந்துமத பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகளையும் பாதிக்கும்”, என்று வைத்தது[6].  உள்ள உரிமைகளை இப்படித்தான் வந்து சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

Diwali-ad- No crackers

Diwali-ad- No crackers

வழக்கு பின்னணி[7]உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை: தீபாவளி பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல்[8]: முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்[9].

© வேதபிரகாஷ்

08-11-2015

[1] http://scroll.in/article/764796/would-banning-diwali-crackers-really-infringe-religious-rights-as-the-supreme-court-has-ruled

[2] http://articles.economictimes.indiatimes.com/2011-10-23/news/30310755_1_firecracker-sivakasi-child-labour

[3] http://www.livechennai.com/detailnews.asp?catid=&newsid=22160

[4] http://www.thehindu.com/news/national/three-toddlers-move-sc-against-delhis-peaking-pollution-graph/article7703036.ece

[5] In late October, the Supreme Court deferred to February the request by two eight-month-olds, Arjun Gopal and Aarav Bhandari, and 16-month-old Zoya Rao Bhasin, to ban firecrackers during Diwali. In September, “the toddlers”, as they are referred to, had filed a writ petition in the Supreme Court (SC) through their advocate fathers, seeking measures to control air pollution in the Capital and exercise their right to clean air, guaranteed under Article 21 of the Constitution.

 http://www.livemint.com/Leisure/fwznyZ9bJVLnMwUFpL3KSO/Clean-air-for-our-children.html

[6] In its petition, the fringe group from Tamil Nadu’s Sivakasi said fireworks are a means of celebrations across the world. “Crackers are burnt during Diwali, Independence Day, New Year, Christmas, victories in games and elections, marriages etc. These celebrations cannot be thwarted by unfair restrictions,” it said. Pointing to the Rs. 1,000 crore turnover of the industry, the Cracker Manufacturers’ Association said it provides direct employment to over 3 lakh people and indirect employment to 10 lakh.”Any adverse direction against the use of crackers during Diwali will have a disastrous effect on the entire fireworks industry and on the livelihood of lakhs of people,” the petition read.

http://www.ndtv.com/india-news/cracker-ban-on-diwali-will-hurt-religious-sentiments-supreme-court-told-1237106

A fringe group and a cracker manufacturers’ association has moved the Supreme Court, opposing the ban on crackers during Diwali, contending that it would affect the Hindu tradition and hurt religious sentiments.

http://www.ndtv.com/india-news/cracker-ban-on-diwali-will-hurt-religious-sentiments-supreme-court-told-1237106

[7] தமிழ்.இந்து, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம், Published: October 28, 2015 14:11 ISTUpdated: October 28, 2015 14:45 IST.

[8] http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article7710559.ece

[9]http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article7813725.ece