Archive for the ‘தமிழர் பேரவை’ Category

பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்?

ஜனவரி 24, 2017

பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியனசுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்?

samy-twitter-comments-on-jallikattu-rioters

பாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’  இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.

Kamal pretending as a Hindu - frustrated on all accounts

Kamal pretending as a Hindu – frustrated on all accounts

சுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்?: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.

ant-sami-tamil-media-news7

ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன்? சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.

kamal-hassans-double-game-in-the-case-of-jallikattu

உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
how-jallikattu-legalized-dinamalar

தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9].  ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்!

© வேதபிரகாஷ்

24-01-2017

girl-who-abused-modi-etc-at-marina

[1] http://tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/threatening-violence-on-twitter-nia-inspection-says-subramanian-swamy-272037.html

[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை?.. வி.சி. கேள்வி , By: Sutha, Published: Sunday, January 22, 2017, 18:08 [IST]

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/vck-questions-hiphop-tamizha-aadhi-s-sudden-poser-272383.html

[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017

https://www.youtube.com/watch?v=UweVv9u7YHE

[5] https://www.youtube.com/watch?v=UweVv9u7YHE

[6] செய்தி.காம், ஆமா நான் பொறுக்கிதான்ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.

[7]http://www.seithy.com/breifNews.php?newsID=174645&category=EntertainmentNews&language=tamil

[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி!, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1662531

 

இரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி

நவம்பர் 26, 2016

இரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி

adal-padal-dance-court-denied-permission-26_11_2016_007_014

நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவு: நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்தனர்[1]. ஆபாச நடனங்கள் நடைபெறுவதாலும், அதற்கு தடை இருப்பதாலும், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீஸ் அனுமதி வழங்காததால், நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த மணி, ராமசாமி உட்பட 6 பேர் தனித்தனியாக, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்[2]. அதில், ‘தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். “பாதுகாப்பும் வழங்கும்படியும்” என்றதே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக இருக்கிறது.

obscene-and-vulgar-dances-at-temples-judge-misled-by-the-advocateவழக்குக் கோப்புகளைப் பார்த்த்போது நீதிபதிக்கு சந்தேகம் வந்தது: இந்த வழக்கு வெள்ளிக்கிழமை 24-11-2016 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் [Justice P N Prakash] விசாரித்தார். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அடிக்கடி அனுமதிக் கேட்டு வழக்கு தொடர்வதை கண்டு சந்தேகம் கொண்டார்[3]. மேலும் “சுயவிளக்க” முனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் முரண்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கறிஞர் வேறுபட்ட ஆறு குழுக்களுக்கு ஆஜராவது முதலியனவும் சந்தேகங்களைக் கிளப்பின. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்[4].

court-declines-permission-for-dance-programmes-at-temple-the-hindu-26-11-2016-1

போலீஸ் அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தது[5]: இதன்படி, போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன் ஆஜராகி அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தார்[6]. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பலர் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டும், மனுதாரரின் கோரிக்கை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசுக்கு உத்தரவிடுகிறது. இந்த உத்தரவை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வக்கீல்களுடன், கிராமத்தினர் பலர் கூட்டமாக வந்து விடுகின்றனர். ஐகோர்ட்டே உத்தரவிட்டுள்ளது, அதனால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரச்சினை செய்து, ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.”

court-declines-permission-for-dance-programmes-at-temple-the-hindu-26-11-2016-2சாதி ரீதியாக மனு, ஆனால், ஆஜராகுவது ஒரே வக்கீல்: போலீஸ் சூப்பிரண்டு தொடர்கிறார், “ஒரு கிராமத்தில் உள்ள பொது கோவிலின் திருவிழாவுக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த பல்வேறு சாதியினர் தனித்தனியாக இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக ஒவ்வொரு சாதியினரும், தனித்தனியாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உத்தரவினை பெறுகின்றனர். அந்த உத்தரவின் அடிப்படையில் கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர். சந்தைபேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த 6 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தனித்தனியாக உத்தரவுகளையும் பெற்றுள்ளனர். அதேநேரம், இந்த 6 மனுதாரருக்கும் ஆஜரானவர் ஒரே வக்கீல் தான்,” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஆக, கோவில் திருவிழா நடத்துவதை விட, மற்ற விவாகரங்கள் தான், அதிகமாக இருக்கின்றன. ஜாதி-கட்சி-பணம் வசூல் போன்ற விவகாரங்கள் பின்னணியில் இருக்கும் போது, கடவுள், கடவுள் நம்பிக்கை, கோவில்…….முதலியவற்றாஇப் பற்றி இவர்கள் எப்படி கவை கொள்வார்கள்?

obscene-and-vulgar-dances-at-templesநல்ல அனுபவம்பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர். ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர்: இந்த அறிக்கையை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியையும் போலீசாரிடம் இருந்து வாங்கி பார்த்தார். இதன்பின்னர் நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட மனுக்களை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசாருக்கு நான் தான் பல்வேறு தேதிகளில் உத்தரவிட்டேன். அந்த உத்தரவுகள் எல்லாம், வக்கீல்கள் மீது வைத்துள்ள நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பிறப்பித்தேன். கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி, ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இதற்காக ஆழ்ந்த வேதனை, வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். கடந்த காலத்தில் நடந்த கெட்ட சம்பவங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும். அதில் நீதிபதியான நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. எனக்கும் இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.”

 obscene-and-vulgar-dances-at-temples-judge-p-n-prakash

நடக்கும் நடனங்கள் சட்டத்தில் உள்ள விளக்கங்களையும் மீறுயுள்ளன: நீதிபதி தொடர்கிறார், நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை பார்த்தோம்[7]. பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர்[8]. ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர். அது நிச்சயமாக அபாசம் மற்றும் அசிங்கம் என்ற வார்த்தைகளின் [ surpassed the very definition of the words “obscenity” and “vulgarity”] விளக்கத்தையும் மீறுகின்றன[9]. குழந்தைகள், மாணவர், முதியோர், பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது நிச்சயம்[10]. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரும், இதுபோன்ற நிகழ்ச்சியை தனித்தனியாக நடத்துவதால், இதில் ஏற்படும் சிறு பிரச்சினைகள் கூட மிகப்பெரிய சாதி கலவரமாக மாறி விடுகிறது என்று போலீசார் தன் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், சேலத்தை சேர்ந்த தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் நலச்சங்கம், இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தன்னிடம் மனு கொடுத்துள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்”.

© வேதபிரகாஷ்

26-11-2016

temple-dance-acceotable-form

[1] தினமணி, கோயில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்த எந்த உரிமையும் கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு, Published on : 26th November 2016 02:55 AM .

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/nov/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2605107.html

[3] தினகரன், கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு, Date: 2016-11-25 19:57:45.

[4] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=261508

[5] லைவ்டே, கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு !!, ஜூலை.2, 2013.

[6] http://liveday.in/chennai-online-tamil-news/hc-refused-to-allow-archestra/

[7] The Times of India, HC says no for two piece dance at temple festivals, TNN | Updated: Nov 26, 2016, 02.14 AM IST.

[8] http://timesofindia.indiatimes.com/city/chennai/HC-says-no-for-two-piece-dance-at-temple-festivals/articleshow/55628876.cms

[9] Indian Express, Judge regrets grant of permission for ‘adal-padal’, By Siva Sekaran  |  Express News Service  |   Published: 26th November 2016 04:00 AM, Last Updated: 26th November 2016 04:00 AM.

[10] http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/nov/26/judge-regrets-grant-of-permission-for-adal-padal-1542780.html

தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (3)?

நவம்பர் 8, 2015

தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும்இந்தியஇந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (3)?

தீபாவளி எதிர்ப்பு - அதியமான் - ஆ.த.பே

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: இதைப்பற்றி முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. இனி தமிழகத்து கோணத்தில் பார்ப்போம். தமிழகத்தைப் பொருத்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்து, தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்கல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள்[1]. வீரமணி கோஷ்டிகள் விளாசித் தள்ளி விடுவார்கள். இம்முறை, அது “விடுதலையில்” ஆதித்தமிழர் பேரவை உருவத்தில் ஆரம்பித்துள்ளது.

போத்தீஸ், கமல், தீபாவளி

போத்தீஸ், கமல், தீபாவளி

மது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு: தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க ஆதித் தமிழர் பேரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனத் தலைவர் அதியமான் திருச்சியில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி[2]: “மது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளியன்று மட்டும் டாஸ்மாக்கில் ரூ.350 முதல் 400 கோடி வரை விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுவால் ஏற்படும் பிரச்னைகளால் தலித் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதை முறியடிக்கும் வகையில் அன்றைய தினம் நாங்கள் வீடுவீடாகச் சென்றும், டாஸ்மாக் கடைகள் முன்பாக நின்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரசாரம் செய்வோம். நாட்டில், கருத்து சொல்வது கூட தவறு என்பது போல், சங்பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன[3]. சிறுபான்மை மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யாமல், இந்த அரசு செயல்பட்டு வருகிறது[4]. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போக்கு அதிகரித்துள்ளது”, என்றார்.  அப்போது பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்டச் செயலாளர் குயிலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்[5]. இப்படி தினகரன், தினமலர், நக்கீரன் முதலியவை சுருக்கமாகக் கொடுத்துள்ளது. மற்ற குறிப்பிட்ட இணைதளங்கள் அதியமானின் அறிக்கை என்று கீழ்கண்டவாறு முழுவதுமாக வெளியிட்டுள்ளன.

தீபாவளி எதிர்ப்பு - அதியமான் - ஆ.த.பே- அறிக்கை. கீற்று.காம்

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை. கீற்று.காம்

மாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமைதானே, பிறகு ஏன் அதை எதிர்க்கிறார்கள்?: தெரிந்தோ, தெரியாமலோ, நன்னத்தை, ஒழுக்கம், பண்பு, கட்டுப்பாடு, தூய்மை என்றெல்லாம் பேசும் போது, பலவித நற்குணங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் பதிஎன்கீழ்கணக்கில், “நீதி நூல்கள்” அதிகமாகவே உள்ளன. 19-20ம் நூற்றாண்டுகள் வரை தமிழச்சிகள், தமிழச்சன்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள, இங்கிலீஷ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே” என்றேல்லாம் பாடல்கள் எழுதப்பட்டு, பட்டி-தொட்டில்களில் எல்லாம் ஒலித்தன. ஆனால், இன்றோ, நிலைமை வேறுமாதிரி இருக்கிறது:

  1. பப்புக்கு போவது என்னுடைய உரிமை!
  2. குடித்து ஆடுவது என்னுடைய உரிமை!!
  3. குடித்து மற்ற ஆணோடு அல்லது பெண்ணோடு சேர்ந்து ஆடுவது என்னுடைய உரிமை!!
  4. திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், சேர்ந்து வாழ்வது என்னுடைய உரிமை.
  5. தாலி கட்டினாலும், கழட்டிப் போடுவது, வெட்டுவது முதலியனவும் என்னுடைய உரிமை.
  6. நான் ஆணாக இருந்தாலும், ஆணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை!!
  7. நான் பெண்ணாக இருந்தாலும், பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை!!
  8. என்னுடைய உரிமையில் யாரும் தலையிட முடியாது!!
  9. என்னை இதை சாப்பிடு, அதை சாப்பிடு அல்லது சாப்பிடாதே என்று சொல்லமுடியாது!!!
  10. அதேபோலத்தான் இவையெல்லாம்!!!!!!!!!

பிறகு குடிப்பதைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும். சங்கத்தமிழ் சமூகத்தில் குடியும், கூத்தியும் விலக்கப்பட்டதல்ல[6]. ஆகவே, அவற்றை சமூகத்தில் இருக்கக்கூடாது என்று ஏன் விலக்க வேண்டும். மேலும் இதற்கெல்லாம், வெறெதையோ ஏன் குற்றஞ்சாட்ட வேண்டும்?

தீபாவளி எதிர்ப்பு - அதியமான் - ஆ.த.பே- அறிக்கை.இந்நேரம்.காம்

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை.இந்நேரம்.காம்

பாரதீய ஜனதாவின் மோடி இந்துத்துவ அரசுதான்[7]: அதியமான் சொல்கிறார், “அரசு இந்தியா என்பது பலதரப்பட்ட மொழியை பேசக்கூடியவர்களும், பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் வாழக்கூடிய, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதச்சார்பற்ற மாபெரும் ஜனநாயக நாடு. இங்கு வாழுகின்ற மக்கள் அனை வரும் இனத்தாலும் மொழியாலும் கலாச்சார பண்பாட்டாலும் மாறுபாடு கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே! இந்திய அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள நீதி. அந்த நீதியின் அடிப்படையில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள சட்ட நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தரத்து மக்களையும் பாகுபாடின்றி, அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட ஆட்சிபுரிய வேண்டும் என்பதே! அதனுடைய விதி[8]. ஆனால்! அந்த விதிகள் எவற்றையும் பின்பற்றாமல் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாவின் மோடி அரசு. இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட பழங் குடியின மக்களுக்கும் உரிய பாது காப்பை உறுதி செய்யாமல் இந்துமத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் துணைபோவது என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை மறைமுகமாக தூண்டி விட்டு தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதைப் பார்க்கின்ற போது, இது ஓர் இந்துத்துவ அரசுதான்! என்பதை வெளிப் படையாகவே உறுதிசெய்கிறது”.

தீபாவளி எதிர்ப்பு - அதியமான் - ஆ.த.பே- காரணங்கள்

தீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- காரணங்கள்

மத்தியமாநில அரசுகளை எதிர்க்க தீபாவளியை எதிர்ப்போம்[9]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “பகவத்கீதையை தேசிய நூல் என்பது, சமஸ்கிருதத்தை உலக மொழி தகுதிக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள், கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவங்கள், மாட்டுக்கறி உண்டதற்காக நடத்திக்காட்டிய கோரப்படுகொலைகள் என நீளும் இந்த அராஜகங்களின் விளைவாக மதுவெறி, மதவெறி, ஜாதி வெறிகளைத் தூண்டி நாட்டை அமைதியிழக்கச் செய்யும் மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க. தமிழகஜெஅரசோ! பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்கின்ற வகையில் மத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கி வருகிறது. மக்களை மரணக்குழிக்கு அனுப்பும் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்தாமல், மக்கள் விரோத போக்கையே கடைபிடித்து வருகிறது[10]. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாமல்  செயலற்ற மக்கள் விரோத அரசாக இருந்து வருவது மேலும் வேதனை அளிக்கின்றது. இப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற இந்தியாவை மதுவெறி, மதவெறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு நாட்டை துண்டாடும் மதவாத, ஜாதியவாத சக்திகளின் செயல்களுக்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி, “தீபாவளியை புறக்கணிப்பதுஎன்று ஆதித்தமிழர் பேரவை முடிவு செய்து, மக்களை விழிப்பூட்டி ஒன்றுபடுத்தும் வேலையில் ஈடுபடுகின்றது”.

© வேதபிரகாஷ்

08-11-2015

[1] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/111650-2015-11-08-09-47-13.html

[2] தினகரன், தீபாவளியை புறக்கணிக்க ஆதி தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நேரம்:2015-11-02 13:03:45.

[3]  தினமலர், தீபாவளி புறக்கணிப்பு போராட்டம்: ஆதி தமிழர் பேரவை அறிவிப்பு, நவம்பர்.2, 2015.06.50.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1378107

[5] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=504517&cat=504

[6]  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் படித்துப் பார்க்கவும். இன்றைய தமிழர்கள் அவற்றையெல்லாம் படிப்பார்களா என்று தெரியவில்லை.

[7] அதியமான், மதுவெறி, மதவெறி ஜாதி வெறியை எதிர்த்து  தீபாவளியைப் புறக்கணிப்போம்!, விடுதலை, நவம்பர்.7, 2015, பக்கம்.3.

[8] நக்கீரன், மதவெறி, சாதிவெறியை எதிர்த்து தீபாவளி புறக்கணிப்பு: ஆதித்தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நாள் : 1, நவம்பர் 2015 (0:54 IST) ; மாற்றம் செய்த நாள் :2, நவம்பர் 2015 (8:39 IST).

[9]  http://www.viduthalai.in/page3/111562.html

[10] மது உற்பத்தி, விநியோகம், விற்பனை, அவற்றிலிருந்து வரும் லாபக்கொள்ளை, இவற்றில் மிதப்பவர்கள் யார் என்று இப்போராளிகள் எடுத்துக் காட்டுவார்களா?