Archive for the ‘தமிழ் மாதம்’ Category

செப்டம்பர்-அக்டோபர் பண்டிகைகாலத்தைக் குறிவைத்து திராவிடத்துவ இந்துவிரோதிகள் தூஷணத்தில், தாக்குதல்களில் இறங்கியுள்ளனரா? (1)

ஒக்ரோபர் 28, 2021

செப்டம்பர்அக்டோபர் பண்டிகைகாலத்தைக் குறிவைத்து திராவிடத்துவ இந்துவிரோதிகள் தூஷணத்தில், தாக்குதல்களில் இறங்கியுள்ளனரா? (1)

நாத்திக ஆட்சியாளர்கள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களைக் குறிவைப்பதேன்?: செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அதிகம் இந்து பண்டிகைகள் வரும், அவற்றைத் திசைத் திருப்ப வேண்டும் என்ற திட்டத்துடன், பெரியார், வள்ளலார், அயோத்திதாசர் என்றெல்லாம் கொண்டு வந்து, திராவிடத்துவவாதிகள் கிளம்பியுள்ளனர். ரூ 100 கோடிகளில் பெரியாருக்கு சிலை வைப்போம், நூலகம் வைப்போம் என்றும் திட்டங்களை அறிவித்து விட்டனர். உலக புகழ்பெற்ற திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஒரு பகுதி அக்.25, 2021 அன்று பெய்த கனமழையின் காரணமாக சரிந்து விழுந்தது. இந்நிலையில் சரிவு ஏற்பட்ட இடத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 26-10-2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்[1]. சேகர் பாபு, “கமலாலய குளத்திற்கு என்று நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கருணாநிதி விளையாடிய இடம் இது. சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்[2]. பதவிக்கு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அந்த மகத்துவம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம் தான். இப்பொழுது, கருணாநிதி ஆவி வந்து சொன்னது போலும். ஆக, இனி கருணாநிதி புராணமும் எழுதப் படும். ஆஸ்தான வித்வான்கள் லியோனி, சுபவீ, வைரமுத்து முதலியோர் தயாராக இருக்கிறார்கள். “இராவண காவியம்,” புனைந்த, இந்த திராவிட குஞ்சுகளுக்கு, குழந்தைகளுக்கு, குட்டிகளுக்கு இதெல்லாம் சொல்லியாத் தெரிய வேண்டும்.

மேலே தினமலர், கீழே தினத்தந்தி – செய்தி வெளியீட்டு முறையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ் மாதமா, இந்து பாரம்பரிய மாதமா?: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டாடி மகிழும் பொங்கல் திருநாளையொட்டி, கனடா அரசு ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக அறிவித்தது[3]. கனடாவில் ஈழம், எல்.டி.டி.இ, தனித்தமிழ்நாடு என்றெல்லாம் ஊக்குவிக்கும், செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்கள் அங்கிருக்கின்றன என்பது தெரிந்த விசயம். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா ஆளுநர் ராய் கூப்பர், அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஃபுளோரிடா, ஜார்ஜியா, நியூஜெர்சி, மாசாசூசெட்ஸ், டெக்சாஸ் உள்பட அமெரிக்காவில் 20 மாகாணங்கள், 28 நகரங்கள் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அங்கீகரித்துள்ளன[4]. இந்தியா உள்பட உலகெங்கும் வாழும் இந்து மக்கள் அக்டோபர் மாதத்தில்தான் நவராத்திரி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்க மாகாணங்கள் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதத்தை இந்துக்கள் பாரம்பரிய மாதமாக அறிவித்து சிறப்பு சேர்த்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்து அமைப்புகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அக்டோபா் மாதத்தில் நவராத்திரி, தசரா, துா்கா பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதால், இந்து பாரம்பரிய மாதமாக அக்டோபரை கொண்டாட மிகவும் பொருத்தமாக இருக்கும். யோகாசனம், உணவு, நாட்டியம், இசை, அஹிம்சை, கொண்டாட்டம், கொடை என பல அம்சங்களை அமெரிக்கர்களின் வாழ்வியலில் இந்து மதம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது. அக்டோபா் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதை எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனா்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திராவிடத்துவவாதிகளின் திரிபுகள், கோஷங்கள்: அமெரிக்க மாகாண ஆளுனர்கள் அறிவித்ததை, தினத்தந்தி, “அமெரிக்க இந்துக்கள் அறிவிப்பு,” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5]. “இதற்கான அறிவிக்கையை 20 மாகாணங்கள் வெளியிட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று கடைசி வரியில் குறிப்பிட்டது[6]. ஒருவேளை தமிழர்களுக்கு தீபாவளி கொண்டாட விருப்பம் இல்லை அல்லது அவர்கள் இந்து இல்லை என்றால் தாராளமாக அறிவித்துக் கொள்ளலாமே? தமிழ் பிரிவினைவாதிகள், ஒருவேளை கனடாவிலிருந்து ஆரம்பித்து, ஃபேட்னா மூலம் அமெரிக்காவில் நுழைத்து குழப்ப திட்டம் போட்டுள்ளார்கள் போலும். கீழடி போர்வையில் கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன், அவ்வப்பொழுது கலாட்டா செய்து வருவதும் தெரிந்த விசயமே. சமஸ்கிருதம்-இந்தி என்று சொல்லிக் கொண்டு அறிக்கைகள் விடுவதே அவருக்கு வேலையாக இருக்கிறது. இப்பொழுதும், சொமேட்டோ விசத்தில் இந்தி விசயத்தை ஊதி பெரிதாகி அடங்கி விட்டதையும் கவனிக்கலாம்.

05-10-2021 தனிப்பெருங்கருணை நாள்: அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் ‘தனிப்பெருங்கருணை நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்[7]. பதவிக்கு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அந்த மகத்துவம் எல்லாம் இவருக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம் தான். இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 05) வெளியிட்ட அறிவிப்பு[8]: “அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார்[9].

அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது[10].

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும்தனிப்பெருங்கருணை நாள்எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது,” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] இ.டிவி.பாரத், காணாமல் போக ஓடை என்ன மளிகைப் பொருளா? – அமைச்சர் சேகர் பாபு, Published on: 21 hours ago

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thiruvarur/minister-sekar-babu-questions-is-rill-converted-to-grocery-item-to-disappear/tamil-nadu20211027094140303

[3] Asianet Tamil, இந்து மக்களின் பாரம்பரிய மாதம் அக்டோபர்.. அமெரிக்காவில் பெருகும் ஆதரவு.. அணிவகுக்கும் மாகாணங்கள்.!, , America, First Published Oct 27, 2021, 9:53 AM IST.

[4] https://tamil.asianetnews.com/world/october-is-the-traditional-month-of-the-hindu-people-growing-support-in-the-united-states–r1mc6f

[5] தினத்தந்தி, இந்து பாரம்பரிய மாதம் அக்டோபா்; அமெரிக்க இந்துக்கள் அறிவிப்பு, பதிவு: அக்டோபர் 27,  2021 05:55 AM.

[6] https://www.dailythanthi.com/News/World/2021/10/27055521/October-is-the-Hindu-traditional-month-Announcement.vpf

[7] தமிழ்.இந்து, அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் இனிதனிப்பெருங்கருணை நாள்‘: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, செய்திப்பிரிவு, Published : 05 Oct 2021 12:17 PM; Last Updated : 05 Oct 2021 12:18 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/723156-mk-stalin-announcement-on-vallalar-birthday.html

[9] மாலைமலர், வள்ளலார் பிறந்தநாள்: தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்மு..ஸ்டாலின், பதிவு: அக்டோபர் 05, 2021 14:01 ISTமாற்றம்: அக்டோபர் 05, 2021 15:08 IST

[10] https://www.maalaimalar.com/news/district/2021/10/05140107/3079945/Tamil-news-MK-Stalin-Announcement-for-vallalar-birthday.vpf