Posts Tagged ‘பெரியாரிஸ்ட்’

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது, பாடகர்கள் எதிர்ப்பு, அரசியல்வாதிகள் ஆதரவு, அரசியலாக்கப் பட்டு, சித்தாந்தமும் சேர்ந்த நிலை (2)

மார்ச் 25, 2024

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது, பாடகர்கள் எதிர்ப்பு, அரசியல்வாதிகள் ஆதரவு, அரசியலாக்கப் பட்டு, சித்தாந்தமும் சேர்ந்த நிலை (2)

சர்ச்சைக்குட்பட்ட பாடகராக இருந்து வந்துள்ளார்: டி.எம்.கிருஷ்ணா, ஒரு பாடகர் என்பதை விட, ஏதோ அரசியல்வாதி என்ற முறையில், சமீபத்தில் மக்கள் அவரை காண ஆரம்பித்துள்ளனர். கர்நாடக பாடகர் என்பதை விட, ஒரு நவநாகரிகமான, ஜாலியான பேர்வழி போன்று தான், அவரது செயல்கள், பேச்சுகள், நையாண்டி விமர்சனங்கள் முதலியன் இருந்து வருகின்றன. அவரது அத்தகைய வீடியோக்களும் திகைப்பாக இருக்கின்றன. கர்நாடக பாடகர்கள் சினிமாவில் பாடினாலே கொஞ்சம் குறைவானது என்ற எண்ணமும் இருந்தது. அந்நிலையில், இவரது போக்கு கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாகவே இருந்து வந்துள்ளது. ஏதோ தான் முற்போக்குவாதி என்று காட்டிக் கொள்ள அவ்வாறெல்லாம் பேசினாலும், தொடர்ந்து செய்யும் விமர்சனங்கள் எல்லைகளை மீறித்தாண் உள்ளது.

ஜேம்ஸ் வசந்தன் ஆதரித்து பதிவு செய்தது; இந்நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த விவகாரத்தில் டிஎம் கிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்[1]. இதுதொடர்பாக தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர்[2], “கர்நாடக சங்கீத இசை உலகின் உயரிய விருதானசங்கீத கலாநிதிஇந்த ஆண்டு பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு சங்கீத உலகத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது. கிருஷ்ணாமிகப்பெரிய ஞானஸ்தன்; அபாரமான கலைஞர்என ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிற சங்கீத உலகம் இந்த விருது விஷயத்தில் இரண்டாகப் பிரிகிறதென்றால் அது இசையின் அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகிறதுதானே?? ”வேறென்ன பிரச்சனை? அவருடைய சமூகநீதிப் பார்வையும், அதைப் பளீரென்று உரத்த குரலில் அஞ்சாமல் சொல்லும் இயல்புந்தான். கடந்த சில ஆண்டுகளாக அவர் முன்னெடுத்து வரும் சில கோட்பாடுகள்தான் காரணம். ’சபாக்களில் பிராமண ஆதிக்கம் இருக்கிறது; அதைக் களைய வேண்டும். சாஸ்திரீய சங்கீதத்தை வெகுஜனத்துக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.’ என்று அவர் வெளிப்படையாகக் சொன்னதுதான் இசை உலகத்தில் பெரிய பூதத்தைக் கிளப்பிவிட்டு, பாரம்பரியத்தை  உலுக்கி, பலரது சினத்தைத் தூண்டியது.”

ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து விமர்சித்தது: ”யாரை மேல்மட்டச் சமூகம் தீண்டாமல் ஒதுக்கி வைத்ததோ அவர்களோடு சேர்ந்து ஆல்காட் குப்பத்திலும், சேரிகளிலும் கர்நாடக இசையை எளிமைப்படுத்திப் பாடினார். மூன்றாம் பாலினத்தவரோடு சேர்ந்து ஒரு கச்சேரி நடத்தினார். இதைப்போல பல கலைகலாச்சாரப் புரட்சிகளைத் தொடர்ந்து செய்கிறார். 21-ம் நூற்றாண்டு பாரதியைப் பார்ப்பது போல் இருக்கிறதா? இவரும் பிராமணர்தான்!” ”ஆனால் பிராமணியத்தின் தவறான சில பகுதிகளைக் களைய முயற்சிக்கிறவர். இன்றைய சங்கீத உலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஞ்சனிகாயத்ரி சகோதரிகள் டி.எம். கிருஷ்ணா தலைமையில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிற இசை விழாவைப் புறக்கணிப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.”  ”அந்த அறிக்கையில், டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்து பேசியிருக்கிறாராம். அதனால் அவர் ரொம்ப ஆபத்தானவராம். பாடகி சின்மயி இவர்களது அறிக்கைக்கு எதிர் அறிக்கை விட்டிருக்கிறார். ’ஆன்மீகத்தின், சங்கீத உலகத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று இப்போது கொதிக்கிறீர்களேஇதே சங்கீத உலகில் பல பெரிய மனிதர்கள், வித்வான்கள் தங்களிடம் இசை பயில வரும் பல குழந்தைகளின் கற்பை சூறையாடுகிறார்கள், காப்பாற்றுங்கள் என்று ‘Me Too’ இயக்கத்தில் நாங்கள் குரலெழுப்பி கூக்குரலிட்டபோது எதுவுமே நடக்காதது போல அமைதி காத்தீர்களே. அப்போது உங்கள் பொறுப்பும், அக்கறையும் எங்கே போனது?,’ என்று கேட்டிருப்பதாக ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார்[3]. இந்த விவகாரத்தில் பலரும் டிஎம் கிருஷ்ணாவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது[4].

கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணாவுக்கு ஆதரவு தெரிவிப்பது: அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார். ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது. பெரியார் பிராமணர்கள் கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தை திணிக்க நினைத்தவர் பெரியார். ஏற்கெனவே சாரு நிவேதிதா இவரைப்பற்றி நன்றாகவே அலசி எழுதியுள்ளார்[5].

பிராமண விமர்சனமாக மாறி, தூஷணத்தில் முடிந்துள்ள நிலை: விமர்சனத்தை விமர்சிக்கும் விமர்சனங்கள் ஜாதியம், செக்யூலரிஸம், சமூதாயம் என்றெல்லாம் பேசுவதை கவனிக்கலாம்[6]. மதவாத கண்ணோட்டத்திலும், சாதிய ஏற்றத் தாழ்வுகளை கட்டி அழும் பிற்போக்கு கருத்து நிலையில் ரஞ்சனி காயத்திரி சகோதரிகள் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மீது காழ்ப்புணர்வை கருத்துக்களாக கொட்டி வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது[7]. இப்படி கம்யூனிஸவாதிகளிடமிருந்து ஆதரவு வந்துள்ளதையும் கவனிக்கலாம். ஆக ஏற்கெனவே அரசியலாக்கப் பட்டது வெளிப்படுகிறது. சித்தாந்த ரீதியில், பிறகு,, கட்சிகள் இணைவது, நிச்சயமாக இசையின் மீதான ஆர்வம் இல்லை. ஆக, இப்பொழுது, இந்த சர்ச்சை முடிவாக,பிராமணர்களை விமர்சிப்பது, எதிர்ப்பது, தூஷிப்பது என்ற நிலையில் முடிந்துள்ளது.

© வேதபிரகாஷ்

23-03-2024


[1] குமுதம், TM Krishna: ”TM கிருஷ்ணாவின் சமூகநீதிப் பார்வை தான் பிரச்சினை..?” களமிறங்கிய ஜேம்ஸ் வசந்தன்!, Mar 21, 2024 – 17:33

[2] https://kumudam.com/TM-Krishna:-James-Vasanthan-supported-to-TM-Krishna-for-Sangita-Kalanidhi-award-issue

[3] தமிழ்.பிஹைன்ட்.த.டாக்கீஸ், சங்கீத உலகத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று இப்போது கொதிக்கிறீர்களேடி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது சர்ச்சை குறித்து ஜேம்ஸ், By Rajkumar- மார்ச் 23, 2024

[4] https://tamil.behindtalkies.com/james-vasanthan-over-tm-krishna-issue/

[5]  சாரு நிவேதிதா, டி.எம். கிருஷ்ணா, March 22, 2024; https://charuonline.com/blog/?p=14480

[6] தினகரன், இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு; டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கி இருப்பது பொருத்தமானது: முத்தரசன் வரவேற்பு, March 22, 2024, 5:09 pm

[7] https://www.dinakaran.com/caste-inequality-dm-krishna-award-mutharasan-reception/

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது, பாடகர்கள் எதிர்ப்பு, அரசியல்வாதிகள் ஆதரவு, அரசியலாக்கப் பட்டுள்ள நிலை (1)

மார்ச் 25, 2024

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது, பாடகர்கள் எதிர்ப்பு, அரசியல்வாதிகள் ஆதரவு, அரசியலாக்கப் பட்டுள்ள நிலை (1)

கர்நாடக பாடகர்களுக்கு ஆண்டுதோறும் விருது: திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பாடகர்களின் போட்டி போல, கர்நாடக பாடகர்களிடம் இப்பொழுது, ஒரு விவகாரம் எழுந்துள்ளது. கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் யாருக்குக் கொடுக்கப் பட்டது, ஏன் கொடுக்கப் பட்டது, என்று யாரும் கவலைப் படவில்லை. ஊடகங்களும் செய்திகள் வெளியிடவில்லை. சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில் வழங்கப்படும் இந்த விருந்தானது கடந்த ஆண்டு 2023 பாம்பே ஜெய் ஸ்ரீ-க்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான 2024 – விருது பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு சிலர் தற்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

2024ம் ஆண்டு விருது சர்ச்சைக்குண்டானது: குறிப்பாக கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் இந்த விவகாரத்தில் தங்களது எதிர்ப்பை முன்வைத்துள்ளனர். காரணம் டி.எம்.கிருஷ்ணா ஆன்மீகத்துக்கு எதிராகவும், பெரியார் குறித்து ஆதரவாகவும் பேசியதாக தெரிவித்துள்ளனர். மேலும் பெரியாரை புகழ்ந்து பேசியவருக்கு இந்த விருது வழங்கப்படக்கூடாது என்றும், வழங்கப்பட்டால் தாங்கள் இசைக்கச்சேரிகளை புறக்கணிப்பதாகவும் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாக மாறியுள்ளது. தொடர்ந்து இவருக்கு சிலர் எதிர்ப்புகள் தெரிவித்து வந்தாலும், பலரும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் இசைக்கு மொழி எப்படி கிடையாதோ, அது போல் திறமை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவரது சொந்த கருத்துகளை ஒரு கலை விருது அறிவிப்புக்குள் திணித்து அவருக்கு எதிர்ப்புகள் தெரிவிக்க கூடாது என்று பலரும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக பாடகிகள் ரஞ்சனிகாயத்ரி கடிதமும், என்.முரளியின் பதிலும்: கர்நாடக பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை மியூசிக் அகாதெமி தலைவர் என். முரளிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர்[1]. அந்த கடிதத்தை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருந்தனர்[2]. சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கான ஒரே அளவுகோல், ஒருவர் தனது வாழ்நாள் முழுக்க இசைக்கான பணியில் நீடித்து ஈடுபடுவதும், அவரது இசைத் திறனும்தான் என்று பாடகிகள் ரஞ்சனி-காயத்ரிக்கு மியூசிக் அகாதமி தலைவர் சற்று காட்டமாகவே பதிலளித்துள்ளார். தனக்கு எழுதிய கடிதத்தை சமூக தளத்தில் பதிவு செய்திருந்தது நாகரீகமான செயல் அல்ல என்றும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தைகள் மற்றும் அர்த்தங்கள் மிக மோசமானதாக அமைந்திருந்ததால் அதிருப்தி அடைந்ததாகவும் குறிப்பிட்ட என். முரளி, அவர்களது கடிதத்துக்கு காட்டமாக ஒரு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் முரளி கூறியிருப்பதாவது, பாடகிகள் ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள், மியூசிக் அகாதெமிக்கு அனுப்பியிருக்கும் கடிதம் தேவையற்ற மற்றும் அவதூறான கூற்றுக்கள் மற்றும் அவதூறுகளை தூண்டும் வகையில், மரியாதைக்குரிய மூத்த சக-இசைக்கலைஞருக்கு எதிரான கடுஞ்சொற்கள் நிரம்பியதாக இருக்கிறது.

செயற்குழுவால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது: டி.எம். கிருஷ்ணா, சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, மார்கழி மாதத்தில் நடைபெறும் இசைக் கச்சேரியில் கலந்துகொள்ள மாட்டோம் என்று பாடகிகள் எடுத்திருக்கும் முடிவானது, இசைக் கலைஞர்களுக்கு ஏற்புடையது அல்ல என்றும் மிக மோசமான செயல் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவரது இசைத் திறனை அடிப்படையாக வைத்தே விருது வழங்கப்படுவதாகவும், இந்த ஆண்டு டி.எம். கிருஷ்ணாவுக்கு, அவரது வெளிப்படையான, ரசிகர்களிடையே இருக்கும் செல்வாக்கு, விதிவிலக்கான இசை வாழ்க்கைக்காகவே செயற்குழுவால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது[3]. இவர்களுக்கு எல்லாம் மேலாக, சித்ரவீணை ரவிக்கிரண் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மியூசிக் அகாதெமி தனக்கு வழங்கிய சங்கீத கலாநிதி விருதை திருப்பித் தர முடிவு செய்திருக்கிறேன் என்றும், எதையும் விட கொள்கை முக்கியம் என்பதை பரிசீலித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்[4].

விருதுகள் பரிந்துரைக்கும் பொழுது, அரசியல் கலக்கும் நிலையுள்ளது: இங்கு பெரியாரைக் குறிப்பிட்டது, விமர்சனமாகக் கொண்டு, திமுகவினர் – கனிமொழி, ஸ்டாலின் மற்றும் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்[5]. அது மோசமான விமர்சனம், என்றால், அதற்கு அவர்கள் எவ்வாறு விளக்கம் கொடுக்கப் போகிறார்கள்[6]. சொல்லப் பட்ட விசயம் அவ்வாறில்லை என்று சொல்லாமல், மறுபடியும், பிராமண விமர்சனம் என்று தான் திசைமாறியுள்ளது. அகடமி தரப்பிலும்கண்டனம் தெரிவிக்கப் பட்டது[7]. தலைவர் முதலியோரும் கண்டித்துள்ளனர்[8]. இது சிறிய உள்-விவகாரம் என்றால், இந்த அளவுக்கு, இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விசயம், அவசரம், அவசியம் இல்லை. ஆக, அரசியல் ரீதியில் ஏதோ உள்-நோக்கத்துடன் வ்வகாரம் இருக்கிறது என்று தெரிகிறது. பொதுவாக, விருதுகள் எல்லாம் பரிந்துரைக்கப் படுகின்றன. அவ்வகையில், திறமை, அனுபவம் எல்லாம் இருந்தாலும் கூட, பரிந்துரை தேவைப் படுகிறது. அந்நிலையில், ஒவ்வொரு வகைக்கும் விருது கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம்வரும்பொழுது, செக்யூலரிஸத்தனமாக, இம்முடிவை எடுத்திருக்கலாம்.

TM கிருஷ்ணா விவகாரம் : பெரியார் குறித்த பேச்சு – “இசையில் அரசியலை கலக்க வேண்டாம்” – முதலமைச்சர் கருத்து![9]: இந்த நிலையில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டன கருத்தையும், டி.எம்.கிருஷ்ணாவுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்[10]. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் மியூசிக் அகாடமியின்சங்கீத கலாநிதிவிருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்[11]. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது[12]. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல[13]. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்[14]. கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்[15]. டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது[16]. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்![17] விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!,” என்று குறிப்பிட்டுள்ளார்[18].

© வேதபிரகாஷ்

23-03-2024


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Ranjani – Gayathri Issue: பெரியாரை போற்றிய டி.எம்.கிருஷ்ணா.. சங்கீத அகாடமி மாநாட்டை புறக்கணிக்கும் ரஞ்சனிகாயத்ரி..,By : ஆர்த்திPUBLISHED AT : 21 MAR 2024 09:18 AM (IST),  | Updated at : 21 Mar 2024 09:24 AM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/popular-carnatic-singers-ranjani-and-gayathri-has-announced-withdrawn-from-98th-music-academy-conference-as-it-is-persuaded-by-t-m-krishna-173947

[3] தினமணி, இசைத் திறனுக்குத்தான் விருது: டி.எம். கிருஷ்ணா விவகாரத்தில் மியூசிக் அகாதெமி விளக்கம், இணையதள செய்திப்பிரிவு, Published on:  22 மார்ச் 2024, 12:05 pm; Updated on:  22 மார்ச் 2024, 12:05 pm

[4] https://www.dinamani.com/tamilnadu/2024/Mar/22/music-academy-slams-vocalists

[5] புதியதலைமுறை, பெரியார், டிஎம் கிருஷ்ணா குறித்த மோசமான விமர்சனம்பாடகர்கள் ரஞ்சனி காயத்ரிக்கு வலுக்கும் எதிர்ப்பு, ரஞ்சனி காயத்ரிடிஎம் கிருஷ்ணா, pt web, Published on: 21 Mar 2024, 11:23 am.

[6] https://www.puthiyathalaimurai.com/india/ranjani-gayatri-contreversial-comment-on-sangeetha-kalanidhi-award-to-tm-krishna

[7] இ.டிவி.பாரத், டி.எம்.கிருஷ்ணா விருது விவகாரம்; பாடகர்கள் ரஞ்சனி, காயத்ரிக்கு மியூசிக் அகாடமி கண்டனம்! – TM Krishna Award Issue,By ANI, Published : Mar 21, 2024, 7:41 PM IST.

[8] https://www.etvbharat.com/ta/!bharat/tm-krishna-award-issue-music-academy-condemns-singers-ranjani-gayathri-tns24032105556

[9] கலைஞர்.செய்திகள், TM கிருஷ்ணா விவகாரம் : பெரியார் குறித்த பேச்சு – “இசையில் அரசியலை கலக்க வேண்டாம்” – முதலமைச்சர் கருத்து!, KL Reshma, Updated on : 23 March 2024, 11:24 AM.

[10] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2024/03/23/tm-krishna-issue-speech-on-periyar-dont-mix-politics-with-music-cm-mk-stalin-condmens

[11] தமிழ்.இந்து, இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்” – டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து, செய்திப்பிரிவு, Published : 23 Mar 2024 10:47 AM; Last Updated : 23 Mar 2024 10:47 AM

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/1220076-don-t-mix-politics-in-music-chief-minister-stalin-s-comment-on-tm-krishna-issue.html

[13] விகடன், டி.எம்.கிருஷ்ணா விவகாரம்: `அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல இசையிலும்..!”- முதல்வர் ஸ்டாலின், VM மன்சூர் கைரி, Published: 2303-2024 at 11 AM; Updated: 23-03-2024 at 11 AM

[14] https://www.vikatan.com/government-and-politics/cm-stalin-wish-to-musician-tm-krishna-for-sangeetha-kalanithi-award

[15] பிபிசி தமிழ், ‘பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ – இசையுலகில் எதிர்ப்பு ஏன்?,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, 22 மார்ச் 2024

[16] https://www.bbc.com/tamil/articles/c2v98z8xgx1o

[17] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், TM Krishna: ’இசையிலும் அரசியலா! பெரியார் மீது அவதூறா!’ பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் மு..ஸ்டாலின் ஆதரவு, Kathiravan V HT Tamil, Mar 23, 2024 11:27 AM IST

[18] https://tamil.hindustantimes.com/tamilnadu/cm-krishnas-support-to-carnatic-music-singer-tm-krishna-131711169992654.html

மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதி – பெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா? (1)

ஜனவரி 19, 2024

மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை! – அமைச்சர் உதயநிதிபெரியாரிஸ பகுத்தறிவா, இந்துவிரோதமா? (1)

அயோத்தியா கோவில் வைத்து அரசியல் செய்வது யார்?: உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில், பா.ஜ.க ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது[1] என்று தமிழ் ஊடகங்கள் பீடிகையுடன் ஆரம்பிக்கின்றன. ஆனால், அகழாய்வு அறிக்கை முன்னர் இருந்த கோவிலை இடித்து மசூதி கட்டப் பட்டது போன்றவற்ரைப் பற்றி மூச்சுக் கூட விடாததைக் கவனிக்கலாம். இப்படித்தான், தமிழக ஊடகங்களின் செக்யூலரிஸம் வேலை செய்து கொண்டிருக்கிறது. அதிலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சமீப காலமாக, மிக்க சார்புடையதாக வேலை செய்து வருகின்றன. ராமர் கோயில் முழுமையாகக் கட்டிமுடிக்க இன்னும் சில காலம் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், அவசர அவசரமாக லோக் சபா தேர்தலுக்கு முன்பாக ஜனவரி 22-ம் தேதி கோயில் திறக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன[2] என்றெல்லாம் குறிப்பிட்டதையும் கவனிக்கலாம், அதாவது, எதிர்மறையாக, என்னவெல்லாம் “சாக்கு-போக்கு” சொல்லலாம், லாஜிக்கே இல்லாமல் வாதம் புரியலாம் என்ற போக்கு தான் வெளிப் படுகிறது.

கூட்டணி அரசியல் இப்பிரச்சினையில் இரட்டை நிலை?: பிரதமர் மோடி முதல் பா.ஜ.க தலைவர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் அதேவேளையில், `தேர்தல் ஆதாயத்துக்காக மதத்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது’ என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி போன்ற எதிர்க்கட்சிகள் இதனைப் புறக்கணித்துவிட்டன, என்று கூட சேர்த்து செய்தி போடுகின்றன. ஆப் தலைவர் குடும்பத்துடன் கலந்து கொள்வேன் என்கிறார். ஆனால், இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்துவும் பெருமைப் படுகிறான். இந்நிகழ்வை பெரிய அளவில் போற்றுகிறான். பல்லாண்டுகளாக அடக்கி வைத்த இந்து உணர்வுகள் நிச்சயமாக வெளிவருகின்ற அல்லது மனங்களில் நினைத்துப் பூரிப்பு அடைகின்றனர். உண்மையில், பிஜேபிக்கு சாதகமாகி விடுமே என்ற அச்சத்தில், மறுபடியும், மோடியை தூஷிக்கிறாம், பிஜேபியை எதிர்க்கிறோம் என்று இந்துவிரோத பிரச்சாரத்தில் இறங்கி விட்டதையும் கவனிக்கலாம். திமுகவைப் பொறுத்த வரையில், யாரும் ஒன்றும் கண்டுகொள்ளப் போவதில்லை.

தி.மு.. இளைஞரணி மாநாட்டு விழாவும், செய்தியாளர் சந்திப்பும்: தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்[3]. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது[4] என்று வெளியிடப் பட்டுள்ள செய்திகள், “பி.டி.ஐ” பாணியில் தான் இருக்கின்றன. ஊடகக் காரர்கள், உதயநிதி சொன்னதை அப்படியே செய்திகளாகப் போட்டிருக்கிறார்களே தவிர, அவர்கள் பதிலுக்குக் கேள்வி கேட்டதாக எதுவும் குறிப்பிடப் படவில்லை. முன்னர் தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் ராமாயணத்தை, ராமரைப் பற்றியெல்லாம் பேசியதை, எழுதியதைப் பற்றியும் கேட்கவில்லை. இப்பொழுது, அம்மா அயோத்தியா போவதைப் பற்றியும் கேட்கவில்லை.

 அயோத்தியா, ராமர் கோவில் என்ன அதிமுகதிமுக பிரச்சினையா?: ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியலாக்கக்கூடாது என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்[5], ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல[6]. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார்[7]. இதையெல்லாம் யாரும் நம்பக் கூடிய நிலையில் யாருமில்லை, என்ற முறையில் உதயநிதி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்[8]. அப்போது அவரிடம், “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம் அதை அரசியலாக பார்க்கக்கூடாது” என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது[9]. அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்[10], ‘அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம்[11]. திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது என்று கலைஞர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்[12].

முரண்பட்ட, இரட்டைவேட திராவிடத்துவ நாத்திகம்: ராமசாமி நாயக்கர் என்ற பெரியார், ராமாயணத்தை பற்றி கேவலமாக எழுதியிருக்கிறார்; அண்ணாவும் கம்பரசரம் போதையுடன் தள்ளாடியிருக்கிறார்; கருணாநிதி பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; ராமர் பிறந்த இடத்தை பற்றி கேவலமாக பேசியதுடன், ராமர் எந்த இஞ்னியரிங் கல்லூரியில் படித்தார், இந்துக்கள் எல்லாம் திருடர்கள் என்று பலவிதமாக பேசியிருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் அதேபோல, ஸ்டாலின் திருமண மந்திரங்களைப் பற்றி கேவலமாக பேசியதும் தெரிந்த விசயமே. இவையெல்லாம் ஒரு உதாரணம் தான். இதை விவரித்து சொல்லலாம். இப்பொழுது தனயன்சனாதனத்தை வேரறுப்போம், அது ஏதோ பெரிய கிருமி போன்றது என்றெல்லாம் பேசியதும், அது பற்றிய வழக்கங்கள் எல்லாம் நிலுவையில் இருக்கும் பொழுது, இந்த விதமாக எல்லாம் பேச ஆரம்பித்திருப்பதும் கவனிக்கத்தக்கது அதே நேரத்தில் இவருடைய தாயார், தனது மாமனார் இறந்ததற்கு காசிக்கு சென்று பிண்டம் வைத்ததும். கோவில்களுக்கு எல்லாம் சேர்ந்து நேர்த்திக்கடன் செய்ததும், இப்பொழுது கூட அயோத்தி நிகழ்ச்சிக்கு செல்வேன் என்று அறிவித்துள்ளதும் உன்னிப்பாக நோக்கலாம். ஆகவே இவ்வாறு இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது என்பது, இவர்கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த குடும்பம் தான் செய்து கொண்டிருக்கிறது என்று வெளிப்படையாக தெரிகிறது. என் குடும்பத்தில் என்னுடைய தாயார், மனைவி, சகோதரி, மகள் சாமி கும்பிடுவார்கள் அது அவர்கள் உரிமை என்றால், அதே உரிமை தான் தமிழக மக்களுக்கும் இருக்கின்றது. அதில் நான் அதில் தலையிட மாட்டேன் என்றெல்லாம் பேசும்பொழுது, அதே போல தான் மற்ற நம்பிக்கை உள்ளவர்ககுளும் உள்ள உரிமை.

© வேதபிரகாஷ்

19-01-2024


[1] விகடன், “மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை!” – அமைச்சர் உதயநிதி, சி. அர்ச்சுணன்,Published: 18-01-2024 at 11 AM; Updated: 18-01-2024  at 1 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/ayodhya-ramar-temple-temple-built-by-demolition-of-babri-masjid-says-dmk-minister-udhayanidhi

[3] மாலைமலர், மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால் திமுகவிற்கு உடன்பாடு இல்லைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின், By மாலை மலர்18 ஜனவரி 2024 10:16 AM.

[4] https://www.maalaimalar.com/news/state/tamil-news-minister-udhayanidhi-stalin-says-dmk-did-not-agree-because-mosque-was-demolished-and-temple-was-built-698817

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ராமர் கோயில் திறப்பு மத நம்பிக்கைக்கு திமுக எதிரியல்ல! ஆனா மசூதியை இடிச்சது தப்புஉதயநிதி ஸ்டாலின், By Halley Karthik, Updated: Thursday, January 18, 2024, 11:52 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/udhayanidhi-stalin-said-that-dmk-is-not-an-enemy-of-ram-temple-opening-or-religious-faith-575201.html

[7] தமிழ்.இந்து, மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” – உதயநிதி ஸ்டாலின் கருத்து , செய்திப்பிரிவு, Published : 18 Jan 2024 12:19 PM; Last Updated : 18 Jan 2024 12:19 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1184998-we-are-not-for-building-a-temple-over-destroyed-mosque.html

[9] ABP.Live, ‘Won’t Support Building Temple Where Mosque Was Demolished’: DMK’s Udhayanidhi, By: ABP News Bureau | Updated at : 18 Jan 2024 03:10 PM (IST)

[10] https://news.abplive.com/states/ayodhya-ram-mandir-won-t-support-building-temple-where-mosque-was-demolished-dmk-s-udhayanidhi-1657480

[11] நியூஸ்.தமிழ்.7.லைவ், அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதை திமுக ஏற்கவில்லைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, by Web EditorJanuary 18, 2024

[12] https://news7tamil.live/dmk-does-not-approve-of-building-a-temple-after-demolishing-a-mosque-in-ayodhya-minister-udayanidhi-stalins-speech.html

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், உதயநிதியின் நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (3)

திசெம்பர் 23, 2022

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், உதயநிதியின் நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (3)

Udhyanidhi declared that he is a Christian, as he is married to a woman who is a Christian..

He was reportedly blessed by a priest when he contested for election inside a Triplicane church, Chennai during 2021

The Tamil press cutting mentioning the details……….a special prayer was also conducted…….

Then, it has become news started appearing in all other media in different languages.

22-12-2022 – உதயநிதிஇன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்: அப்போது பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன? சொல்றேன் கேளுங்க.. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்அல்லேலுயாஎன சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதுதான் சமூக நிதி ஆட்சி. இதுதான் பெரியார், கலைஞர் கற்றுக்கொடுத்தது. அந்த ஆட்சியைதான் முதலமைச்சர் மு..ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான்[1]. கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்[2]. சேகர்பாபு  அல்லேலுயானு சொல்றாரு. உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்[3]. நான் எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன்[4]. லயோலா கல்லூரியில்தான் படித்தேன்[5]. நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்[6]. கடந்த 4 நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கு நான் தான் தீனியாகி கொண்டிருக்கிறேன். முதலில் அமைச்சர் பொறுப்பு கொடுக்கும்போது எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் என்னை வழிநடத்த அமைச்சர் சேகர்பாபு போன்ற பல அண்ணன்கள் அமைச்சரவையில் இருப்பதால் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்,” என தெரிவித்தார்.

தீவிரவாதம்-பயங்கரவாதங்களை மறைக்க விழாக்களா?: யார் வேண்டுமானாலும், என்ன மதத்தையாவது பின் பற்றலாம், அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை, கவலைப் படுவதில்லை என்றே சொல்லலாம். முகலாயர்கள், முஸ்லிம்கள், துலுக்கர் என்று கோவில்களை இடித்து, இதுக்களின் வழிபாடுகளில் இடைஞ்சல் செய்த வரை அவர்களை இந்துக்கள் கண்டுகொள்ளவில்லை எனலாம். அவர்களை கொள்லைக் காரர்கள், கொலைக்காரர்கள், கொடியவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று தான் நினைத்துக் கொண்டார்கள், பிறகு எச்சரிக்கையாகில் கோவில்களை மாற்றிக் கட்டிக் கொண்டார்கள். கோவாவில் ஆரம்பித்த கிருத்துவர்களின் அதை விட மோசமான குரூரங்கள், காலிகட்டிலும் தொடர்ந்தது. பிறகு ஆங்கிலேயர் காலத்தில் கொஞ்சம் குறைந்து அளவில், ஆட்சி-அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, அதே கோஷ்டிகள், பலவித பேனர்களில், கட்சிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. செக்யூலரிஸம் அவர்களுக்கு, ஒரு பாதுகாப்பான கவ்சம் போல அமைந்ஹு விட்டது. இப்பொழுது, இந்துவிரோத திமுக அத்தகைய திட்டத்துடன், சூழ்ச்சிகளுடன் செயல்பட்டு வருகிறது. அது 1967-1970களிலிருந்து நடந்து வந்தாலும், இப்பொழுது அதிகமாகி விட்டது. கோவை கார் குண்டு, மங்களூரு குக்கர்-வெடிகுண்டு எல்லாம் மறந்தாகி விட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தான் பெரிதாகி விட்டது.

உதயநிதிநான் கிறிஸ்துவன் பேச்சுஅலசல்; செக்யூலரிஸ நாட்டின், மாநில அமைச்சர், முதலமைச்சர், எம்பி, எம்.எல்.ஏ எல்லாம் எந்த அளவுக்கு தங்களது பேச்சை பேச முடியும். அவர்களுக்கு வரையறை, கட்டுப்பாடு உண்டா-இல்லையா என்று அலசவேண்டியுள்ளது:

1. உதயநிதி- இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான் . கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்…..

2. உதயநிதி – நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்……உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்……

3. அதெல்லாம் சரிதான், ஆனால், இந்துவிரோதமாக இருப்பதில் தான் உங்களது திராவிடத்துவ முகமுடி கிழிகிறது. இந்து தூஷணம் மெய்ப்பிக்கிறது…

4. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலுயா என சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தால் அது போலித்தனமே, செக்யூலரிஸம் இல்லை!

5. அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார் என்றா, அதுதான் சமூக நிதி ஆட்சி ஆகும்..

6. உதயநிதி தைரியமாக நான் கிறிஸ்தவன் என்று அறிவித்தது போல, அந்த பிரியாவும் செய்வாரா? பெரியார் வழி பின்பற்றுவாரா?

7. பெட்ரென்ட் ரஸல் – நான் ஏன் கிறிஸ்தவன் இல்லை; உதயநிதி – நான் ஒரு கிறிஸ்தவன்;

இது பகுத்தறிவா, பெரியாரிஸமா, திருவிடத்துவமா, எது?

8. பெரியார் சுயமரியாதை பிரச்சார கழகம் அதே போல குறும் புத்தகம் வெளியிட தைரியம் உண்டா? திராவிட ஆராய்ச்சி மையம் கவனிக்குமா?

9. இங்கு ஒரு இந்து போலி வந்து அரசியல் பேச மாட்டேன் என்று, பேசியிருக்கிறது.

அது போல, கிறிஸ்த்துவ-முகமதிய மாடல்கள் வருவதில்லையே?

10. ஆக, நாத்திக + பெரியாரிஸ + முகமதிய + கிறிஸ்துவ + கம்யூனிஸ + திராவிடத்துவ + மற்ற வகையாறாகள் = இந்துவிரோதம் என்றாகிறது!

11. திராவிட மாடல் ஆட்சி என்று, திராவிட ஸ்டாக் என்றும் சொல்லிக் கொள்ளும் இந்த வகைறாக்கள் செக்யூலரிஸ நாட்டில் மாநில அமைச்சராக இருப்பது விஷேசம் தான்!

கிருத்துவன், துலுக்கன் தனது மதங்களைப் போற்றும் போது, “சைவன்என்று சொல்லிக் கொண்டு, எப்படி இந்து மதத்தை தூஷிப்பான்?: துலுக்கரும், கிருத்துவரும் எத்தனை கோவில்களை இடித்தனர் என்பது தெரிந்த விசயம்! திராவிட நாத்திக இந்து-விரோத ஆட்சியில் எத்தனை கோவில்கள் சிதிலமடைந்தன, சிலைகள்-விக்கிரங்கள் களவாடப் பட்டன என்பதும் தெரியும். பிறகு இந்த பட்டை-கொட்டை-காவிகள் ஏன் அத்தகைய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்?  இவர்கள் உண்மையில் இந்துக்களா, சைவர்களா, வேடதாரிகளா, யார்? இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. வேண்டுமென்றே, இத்தகையோரை ஏற்பாடு செய்து, கூட்டி வந்து, பேச வைத்துள்ளனர் என்று தெரிகிறது. கிருத்துவன் கிருத்துவனாக பேசி, தன் மதத்தைப் போற்றினான்/, துலுக்கனும் அவ்வாறே தனது மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சிலர் இவ்வாறு சரித்திரம், மதம், மற்றும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பேசியிருப்பது, திட்டமிட்ட செயல் என்றேயாகிறது. ஒரு உண்மையான “சைவனாக,” இருந்தால் கூட, இவ்வாறு மானம்-ரோசம்-சூடு-சொரணை இல்லாமல் பேசியிருக்க மாட்டான். ஆக, இந்துக்கள் அடிமையாக இருக்கத் தயாராகிறான் என்றே, இதைக் காட்டுகிறது.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கெட்ட எண்ணங்கள் எதனைக் காட்டுகிறது?: “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்,” என்ற பெயரை வைத்துக் கொண்டு, அநாகரிகமாக, கீழ்த்தரமாக, முறையற்ற விதங்களில் எப்படி கிருத்துவ-துலுக்க மதத் தலைவர்கள், இந்து விரோத பேச்சுகளை ஊக்குவித்தார்கள்? பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால், ஸ்டாலின், அவ்வாறு பொறுத்திருப்பாரா? பிறகு, செக்யூலரிஸ அளவுகோலை பயன்படுத்தினாலும், தமிழகத்தை ஆளத் தகுதியற்றவராகிறாரே?  சிறுபான்மையினருக்கு, இதெல்லாம் செய்யப் பட்டது, என்று பட்டியல் இடும் ஸ்டாலின், இந்துக்களுக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்ல முடியவில்லையே. கடந்த 70 ஆண்டுகளில், கோவில்களைக் கொள்ளையடித்தது, சிலைகள்-விக்கிரங்களைத் திருடி விற்றது, மடங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, பட்டா போட்டு சொந்தமாக்கிக் கொண்டது, விற்றது என்று தான் இன்று வரை நடந்து வருகிறது. அந்நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு, ஆட்சிக்கு வருவது அல்லது ஆசைப் படுவதே, கேடுகெட்ட செயலாகிறது.

பாரபட்சமிக்க, அரசியல் நிகழ்சியாக இருந்தது: இனிகோ இருதயராஜ் தனது பேஸ்புக்கில் இந்த விழாவைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளார். புகைப்படங்களையும் போட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று, பொன்னாடைப் போர்த்தி, அழப்பிதழ் கொடுதது, வரவேற்றப் புகைப்படங்களையும் போட்டுள்ளார். இந்த அளவுக்கு, விழா நடத்தவும், நிதி இருப்பதும் தெரிகிறது. கத்தோலிக்க சபையின் முழு ஆதரவுடன் நடைபெறுவதும் தெரிகிறது. ஆகவே, கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு, பண முடிப்பு, வந்து போக செலவு முதலியவை கொடுப்பதற்கு, எந்த பிரச்சினயும் இல்லை. உண்மையிலேயே, அவர்கள் “நல்லெண்ணத்துடன்” விழா நடத்தினால், மற்றவர்களையும் அழைத்திருலாம். ஆனால், ஒரே நாளில், அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தனித்தனியாக, கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டதே, இது அரசியமாக்கப் பட்ட நிலையை வெளிக்காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

22-12-2022


[1] தினத்தந்தி, நானும் கிறிஸ்தவன் தான்” “இத சொன்ன அவங்களுக்கு எரியும்“-உதயநிதி பரபரப்பு பேச்சு, By தந்தி டிவி, 22 டிசம்பர் 2022 9:32 PM.

[2] https://www.thanthitv.com/latest-news/dmk-minister-udhayanidhistalin-speech-157328

[3] தினத்தந்தி, நானும் கிறிஸ்தவன் தான்“.. “இத சொன்னா அவங்களுக்கு எரியும்“.. உதயநிதி பரபரப்பு பேச்சு, தினத்தந்தி டிசம்பர் 22, 11:17 pm (Updated: டிசம்பர் 22, 11:21 pm)

[4] https://www.dailythanthi.com/News/State/i-am-also-a-christian-udhayanidhi-sensational-speech-863391

[5] டாப்.தமிழ்.நியூஸ், நானும் கிறிஸ்தவன் தான்உதயநிதி ஸ்டாலின், By AISHWARYA G Thu, 22 Dec 202210:10:52 PM.

[6] https://www.toptamilnews.com/thamizhagam/Udhayanithistalin-press-meet/cid9527250.htm

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (2)

திசெம்பர் 23, 2022

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (2)

சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசியது: தொடர்ந்து, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய போது, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைவரிடமும் சிரிப்பை ஆழ்த்தியது. அவர் பேசியதாவது: “1967ல் காந்தி தந்த அறிஞர் அண்ணா வழியில், திருவாரூர் தந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியிலும், கோபாலபுரம் தந்த எங்கள் குமாரர் மக்கள் தளபதி மு..ஸ்டாலின் வழியிலும் தான் என்றென்றும் தமிழகம் செல்லும். இந்த சபையில் நீங்கள் எல்லாருமே பயப்படுகிறீர்கள். சிறுபான்மை என்று கூறினீர்கள். நாம் அனைவருமே பெரும்பான்மை தான். நம் எல்லாருமே இனத்தில் தமிழர்கள், மொழியில் தமிழ் பேசுகிறோம், அப்படியானால் நாம் எல்லாரும் ஒன்றுதானே. அப்போது ஏன் நாம் பயப்பட வேண்டும்……”, இப்படி சிரித்து நக்கலாக பேசியதும், மேடையில் உள்ளவர் ஸ்டாலின் உட்பட கைதட்டி சிரித்ததும், அரங்கத்தில் உட்கார்ந்திருந்த பாதிரிகள் கைதட்டி சிரித்து கரகோஷம் இட்டதும் கவனிக்கலாம்.

அரசியல் பேசக் கூடது என்று அரசியல் பேசியசைவ சாமியார்:  எந்த பாசிச சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசக்கூடாது, இருந்தாலும் வட இந்தியாவில் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா எனும் கொள்கை இருந்தது. ஆனால் நம் கேரளத்தில் கம்யூனிஸ்டும், தமிழகத்தில் திராவிட கழகமும் இருந்ததால் அவர்களால் ஒருபோதும் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ஓட்டுரிமை உங்கள் கையில் இருக்கும் போது ஏன் பயப்பட வேண்டும். நமக்கு தெரிந்தது இரண்டு சின்னம் தான். ஒருவர் இங்கிருக்கிறார். இன்னொன்று நான் சொல்லக்கூடாது. இவர்களோடு முதுகில் ஏறிதான் அவர்கள் பயணம் பண்ண முடியும். யாராக இருந்தாலும் எதிரி இருந்தால் தான் நாம் வளர முடியும், இல்லையெனில் நாம் வளர முடியாது. மதமாற்றத்துக்கு நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். உங்கள் வழிபாடுகளை சிறப்பாக செய்யுங்கள், அவர்கள் தானாகவே வருவார்கள்,” எனக் கூறினார்[1]. ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது[2]. அவரது இந்தப் பேச்சுக்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மதமாற்றத்தை ஊக்குவிப்பது போன்ற அவரது பேச்சு இருப்பதாக பல்வேறு இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

கம்யூனிஸமும், பெரியாரிஸமும் இந்துவிரோதம் தான்: “ஆனால் நம் கேரளத்தில் கம்யூனிஸ்டும், தமிழகத்தில் திராவிட கழகமும் இருந்ததால் அவர்களால் ஒருபோதும் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை,” என்றதையும் கவனிக்க வேண்டும். கம்யூனிஸமும், நாத்திகமும் “ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா” வைணவத்தை எனும் கொள்கை தமிழகத்தில் நுழைய “அனுமதி கிடைக்கவில்லை,” என்றால், அவர்களா அனுமதி கொடுக்கிறார்கள் என்று கேள்வி எழுகின்றது. பிறகு, பலவித தீவிரவாத-பயங்கடவாத-தேசவிரோத கோஷ்டிகள் இவர்கள் அனுஅதித்து தான் உள்ளே வந்தார்கள் போலும். “ராஜிவ் காந்தி கொலை,’ இங்குதான் நடந்துள்ளது என்பதனை அவர்கள் மறைக்க முடியாது.

இந்துபோல ஒருவரை கூட்டி வந்து பேச வைத்தல்: வருடா வருடம் ஏதோ ஒரு “சைவ” சாமியாரை, பிரதிநிதித்துவப் படுத்தும் நிலையில், ஒப்புக்குக் கூட்டி வருகின்றனர். அப்படி சென்றவர், “இந்துவாக” இல்லாமல், தெரிந்தே, இந்துவிரோத கூட்டத்தில் பங்கேற்றி, இந்துதூஷண மேடையில் பேசியிருப்பது, அவர்களின் துரோகத்தை வெளிக்காட்டுகிறது.

  1. மேலமங்களம் பாலயோகி மடத்தின் தலைவராக இருக்கும் இந்த பாலயோகி தம்பிரான்
  2. கலையரசி நடராஜன்
  3. சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்

இவர்கள் தான் சமீபத்தில் பேசி வந்துள்ளனர். இவர்களை நிச்சயமாக எல்லா இந்துக்களும் அறியமாட்டார்கள், இவர்கள் பேசியதையும் அறியமாட்டார்கள். கிருத்துவர்கள், முகமதியர்கள் என்றும் கலந்து கொன்டு பேசியுள்லார்கள். ஆனால், அவர்கள் தங்களது மதத்தை விட்டுக் கொடுக்காமல் தான் பேசியுள்ளனர். எல்லா பிரிவினர்களும், இவ்விசயத்தில் ஒன்றாக இருக்கும் பொழுது, “இந்து” என்று சொல்லிக் கொள்பவர் தாம், இப்படி விலை போகின்றனர் அல்லது ஏதோ ஒரு ஆதாயத்திற்காக, சென்று பேசி விட்டு வருகிறனர். இல்லை, அவ்வாறு பேச வைக்கப் பட்டுள்ளனர் எனலாம்.

ஸ்டாலின் செக்யூலரிஸ்ட் அல்ல: ஸ்டாலின் தமிழக முதலமைச்சர், செக்யூலரிஸம் பின்பற்றுவதாக இருந்தால், ஒன்று மதசம்பந்தப்பட்ட விவகாரங்களிலிருந்து முழுமையாக விலகி இருக்க வேண்டும் அல்லது எல்லா மதநம்பிக்கையாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும், நடத்தப் பட வேண்டும். ஆனால், ஸ்டாலின் அவ்வாறில்லை, அதாவது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின், பொறுப்பற்ற முறையில், இந்துவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து, முஸ்லிம்-கிருத்துவ பண்டிகை-விழாக்களில் கலந்து கொள்வது, அதே நேரத்தில் இந்து பண்டிகைகளை விமர்சிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதை மக்கள் கவனித்து வருகிறார்கள். சட்டப் படியும்,, சமமாக நடப்பதில்லை, ம்மேடையிலும் அந்த “பட்டை-கொட்டை-வீபூதி’ பூசிய நபர் பேசியதை ரசித்து, கைதட்டி, ஆராவாரம் செய்து ரசித்த விதம் நாடகம் போன்றே இருந்தது. ஆக, கதை, வசனம், எல்லாம் தயாரித்து அரங்கேற்றப் பட்ட விதம் தான் தெரிந்தது. அந்நிலையில் தான், உதயநிதியின், “நானும் கிறிஸ்துவன் தான்,” என்ற பேச்சும் வருகிறது.

22-12-2022 – உதயநிதிஇன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான்[3]. கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்: 20-12-2022 அன்று அந்நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில், 22-12-2022 அன்று இன்னொரு “கிறிஸ்துமஸ் கொண்டாட விழா” நடக்கிறது. அதை திமுக ஏரற்பாடு செய்ததாகத் தெரிகிறது. திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்க பள்ளி மைதானத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது[4]. சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர்[5]. 2,000 குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார்[6]. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு, மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்[7]. சேகர் பாபு[8], “எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…, எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆட்சியில் யாரும் ஓரங்கட்டப் பட்டவர்கள் இல்லை… ஸ்டாலினை நோக்கி ஓரடி முன் வைத்தால், நூறடி பாய்ந்து வந்து நலன் திட்டங்கள் செய்வார்……..எல்லோரும் சொல்லுங்கள் அல்லேலூயா, உரக்க சொல்லுங்கள் அல்லேலூயா …..அல்லேலூயா….” என்று கத்திப் பேசியது தமாஷாக இருந்தது[9]. அது கிறிஸ்துவ போதகர்களையும் மிஞ்சுவதாக இருந்தது.

© வேதபிரகாஷ்

22-12-2022


[1] அப்டேட்.நியூஸ்.360.காம், மதமாற்றம் செய்ய நீங்க எங்கும் செல்ல வேண்டாம்’… கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சாமியார் சர்ச்சை பேச்சு.. சிரித்தபடி கவனித்த CM ஸ்டாலின்!, Author: Babu Lakshmanan, 22 December 2022, 12:49 pm

[2] https://www.updatenews360.com/trending/priest-sri-mahalinga-thesiga-paramachariya-swamy-controversy-speech-front-of-cm-stalin-2212222/

[3] தினத்தந்தி, நானும் கிறிஸ்தவன் தான்” “இத சொன்ன அவங்களுக்கு எரியும்“-உதயநிதி பரபரப்பு பேச்சு, By தந்தி டிவி, 22 டிசம்பர் 2022 9:32 PM.

[4] நியூஸ்.7.தமிழ், நானும் கிறிஸ்துவன் என சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்’- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், by G SaravanaKumar, December 22, 2022

[5] https://news7tamil.live/i-am-also-proud-to-say-that-i-am-a-christian-minister-udayanidhi-stalin.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, நானும் ஒரு கிறிஸ்துவன் தான்..” கிறிஸ்துமஸ் விழாவில் பட்டுனு சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், By Vigneshkumar, Published: Thursday, December 22, 2022, 23:51 [IST]

[7] https://tamil.oneindia.com/news/chennai/even-i-m-also-a-christian-says-dmk-minister-udhayanidhi-stalin-in-christmas-function-490878.html

[8] அல்லேலூயா சொன்ன அமைச்சர் Sekar Babu | Mayor Priya Rajan | Christmas Celebration | Udhayanidhi Stalin; https://www.youtube.com/watch?v=7T7fvfRgJ5A

[9] மீடியான், அல்லேலூயா அல்லேலூயாசிப ரிப ரீட்டாசேகர்பாபு ஜெபம்!, Kathiravan Mediyaan News , 23-12-2022. https://mediyaan.com/sekar-babu/

பூமி பூஜை எதிர்ப்பில் வெளிப்பட்ட இந்துவிரோதம் – இனி இமாம், பாஸ்டர், வீரமணி, எல்லோரும் வந்து பூஜைகள் செய்ய வேண்டுமாம்! (1)

ஜூலை 18, 2022

பூமி பூஜை எதிர்ப்பில் வெளிப்பட்ட இந்துவிரோதம்இனி இமாம், பாஸ்டர், வீரமணி, எல்லோரும் வந்து பூஜைகள் செய்ய வேண்டுமாம்! (1)

பூமி பூஜையை திமுக எம்பி எதிர்த்தது: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரி 1.38 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தருமபுரி திமுக எம்.பி., செந்தில்குமார் 16-07-2022 அன்று தொடங்கிவைக்க வந்திருந்தார்[1]. பொதுப் பணித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பூமி பூஜையில் அர்ச்சகரை வைத்து இந்துமுறைப்படி பூஜை செய்யத் திட்டமிடப்பட்டு இருந்தது[2]. அங்கு பணி தொடங்கும் பொழுது சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க பூமி பூஜை நடைபெற்றது என்கிறது ஒரு ஊடகம்[3], வீடியோவில் ஒரு அர்ச்சகர் இருப்பது தெரிகிறது[4]. இன்னொரு ஊடகம். பூமி பூஜை நடப்பது என்பது சாதாரண விசயம், அது எல்லா இடங்களிலும், எப்பொழுதும், சாதாரண மக்கள் கூட செய்து, வேலையை ஆரம்பிப்பார்கள். ஒரு கொலுத்துக்காரர், மேஸ்திரி என்று இருந்தாலே,ஏழு கற்களை வைத்து, பூஜை செய்து, தேங்காய் உடைத்து, சிரத்தையாக செய்து தான், கடப்பாரை, மண்வெட்டி எடுத்து வேலை செய்ய ஆரம்பிப்பார். அந்த அடிப்படை கூட இந்த மெத்தப் படித்த எம்.பிக்குத் தெரியாது அல்லது அத்தகைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை தெரியாது என்று சொல்ல முடியாது.

திராவிட மாடலில் கிடையாது என்று ஆக்ரோஷத்துடன் தடுத்து நிறுத்தியது: இதை கண்ட எம்பி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்து இருந்தார். பொதுப் பணித் துறை அதிகாரியை அழைத்து, அரசு விழாவில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் செய்யக் கூடாது என உங்களுக்குத் தெரியாதா. விதிமுறைகள் வழங்கவில்லையா என கண்டித்தார்[5]. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது[6]. இப்படியெல்லாம் ஊடகங்கள் செய்தி வெளியிடுவது, ஒருதலைப் பட்சமாக இருக்கிறது. ஏனெனில், பூமி பூஜை ஏன் செய்யப் படுகிறது, செய்கிறார்கள் போன்ற விவரங்களைக் கூறாமல், இதில் என்ன தவறு இருக்கிறது என்று எடுத்துக் காட்டாமல், “திராவிட மாடல்,” என்று சொல்லிவிட்டதால், ஆளும் இந்துவிரோத அரசுக்கு ஜால்றா போடும் வகையில், செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆக்ரோஷமாக பேசிய விதம், தோரணை, “பாடி லாங்குவேஜ்” முதலியவை அப்பட்டமாக, இந்துவிரோதத் தன்மையினை எடுத்துக் காட்டியது.

டுவிட்டரில் வீடியோவைப் பகிர்ந்து கண்டித்தது: இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பகிர்ந்த அவர்[7], “ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள்” என்றும் பதிவிட்டிருந்தார். அத்தகைய உணர்ச்சிப் படுபவர்கள் எப்படி அரசியல்வாதிகள் ஆகிறார்கள். செக்யூலரிஸமாகஸைருக்கக் கூட, தகுதியற்றவர்களாகத் தான் இருப்பார்கள். மேலும் அந்த வீடியோவில், “அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூஜைகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு கொடுத்த பின்னரும், பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஏன்என அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, “இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. கிறிஸ்டியன் ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி. இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக்கூடாது,” என்று கூறி அதிகாரிகளிடம் கடுமை காட்டிய எம்பி செந்தில்குமார், அங்கிருந்த பூஜை பொருட்களை உடனடியாக அகற்றிய பின்னரே தொடங்கிவைத்தார்[8].

கூட்டணி கட்சியினரின் விமர்சனம்: இந்தக் காணொளி வைரலாக, வரவேற்பு எதிர்ப்பு என எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, “அரசு நிகழ்ச்சிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற எம்பி செந்தில்குமாரின் துணிச்சல்மிகு செயல்பாடு பாராட்டத்தக்கது” என்று பாராட்டியுள்ளார். இன்னும் சிலர் ட்விட்டரில் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், எதிர்ப்புகளும் பதிவாகியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், “இது தேவையற்ற கோபம். நல்ல நேரம் பார்க்காமல் நடந்த உங்கள் கட்சி உறுப்பினர்களின் யாராவது ஒருவர் திருமணமோ அல்லது பதவியேற்பு விழா போன்ற வேறு சடங்குகளை சொல்ல முடியுமா. மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால் அனைத்து வகையான சடங்குகளையும் மறுப்பதாக திராவிடத்தை பின்பற்றுபவர்கள் தவறாக நினைக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

எதிர் கட்சியினரின் விமர்சனம்: பாஜக துணைப் பொதுச்செயலாளர் நாராயணன் திருப்பதியும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு எம்பியின் சிறுபிள்ளைத்தனமான செயல் இது[9]. பூஜை செய்வது என்பது பணியாற்றுபவர்களின் நம்பிக்கைகாக, அரசுக்காக அல்ல[10]. பூஜையில் திக-வினர் எங்கே என்று கேட்பது வன்மத்தின் வெளிப்பாடு. அந்த அதிகாரி ஒரு இஸ்லாமியராக இருந்திருந்து, பணி தொடங்கும் முன் இஸ்லாமிய வழக்கப்படி தொழுதிருந்தால் கண்டித்திருப்பாரா? தைரியம் இருந்திருக்குமா. ஓவ்வொரு மதத்திலும் வழிபாட்டு முறைகள் மாறுபடும் என்ற பொது அறிவு உள்ளவர்கள், இது போன்று தகாத முறையில், அநாகரீகமாக நடந்து கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இமாம்கள் எங்கே? பாதிரியார் எங்கே? திராவிடர் கழகத்தினர் எங்கே? அவர்கள் அனைவரும் இல்லாமல் ஹிந்து மத வழக்கப்படி மட்டும் பூஜை போடுவது சரியா? என்று கேட்கிறார் எம்பி செந்தில்குமார். மசூதிகள் எங்கே? சர்ச்சுகள் எங்கே? தி க வின் சொத்துக்கள் எங்கே? அவைகள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமல் ஹிந்து கோவில்களை மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சரியா? என கேட்பாரா செந்தில் குமார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிபு விளக்கம் மற்றும் போலித்தாமான செய்தி: இப்பிரச்சினை முழுமையாக புரிந்து கொள்ளப் படவில்லை, அல்லது வேண்டுமென்றே திரித்து கருத்து வெளியிட்ட நிலையும் வெளிப்படுகிறது[11]. “மத்த மதம் எல்லாம் எங்கே? சீறிய செந்தில் குமார் எம்பி.. “துணிச்சல்“.. திரும்பி பார்த்த வடஇந்தியர்கள்!,” ஓன்ற செய்திகள் அதை மெய்ப்பிக்கின்றன[12]. பெரியாரிஸ்டுகள் நாத்திகர் மற்றும் இந்துவிரோதிகள் என்று அவர்களுக்குத் தெரியாது. மேலும், வீடியோ மூலம் அவர்களுக்கு விவகாரமும் புரிந்திருக்காது. தெரிந்தால், எதிர்வினை வேறுவிதமாக இருக்கும், இருந்திருக்கும். அவரது போலித் தனமும் தெரிந்திருக்கும். திராவிடத்துவ மாடல், இந்துவிரோதமானது, என்பது அவர்களுக்குத் தெரியாது. பெரியாரை, பெரியாரிஸத்தை வடக்கில் அவ்வாறு தான், மறைத்து, வியாபாரம் செய்கின்றனர். தெரிந்தால், விளைவு வேறு மாதிரி இருக்கும்.

© வேதபிரகாஷ்

18-07-2022


[1] தமிழ்.இந்து, அரசு விழாவில் இந்துமத பூஜைக்கு எதிர்ப்புசெந்தில்குமார் எம்பியின் கொந்தளிப்பும் எதிர்வினையும், செய்திப்பிரிவு; Published : 17 Jul 2022 12:04 AM; Last Updated : 17 Jul 2022 12:04 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/827153-where-is-catholic-priest-and-imam-asks-dmk-mp-senthilkumar-at-tn-govt-bhoomi-puja-event-1.html

[3] NEWS18 TAMIL, ‘சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க அரசு விழாவில் இந்து மத பூஜையா?” – திமுக எம்.பி செந்தில் குமார் எதிர்ப்பு, LAST UPDATED : JULY 16, 2022, 19:00 IST

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/dharmapuri-district-sanskrit-vedic-chanting-is-a-hindu-religious-puja-at-a-government-function-dmk-mp-senthil-kumar-opposes-772761.html%3E

[5] தினத்தந்தி, அரசு விழாவில் பூஜை செய்ய தர்மபுரி எம்.பி. எதிர்ப்பு, ஜூலை 16, 10:18 pm

[6] https://www.dailythanthi.com/News/State/resistance-747026

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கிறிஸ்தவர், முஸ்லீமையும் கூப்பிடுங்கஇது திராவிடமாடல் ஆட்சி; தருமபுரி எம்.பி காட்டம், Written by WebDesk, July 16, 2022 8:34:17 pm.

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/dharmapuri-mp-dr-senthilkumar-oppose-hindhu-pooja-at-government-function-480431/

[9] சமயம், திமுக எம்.பி., சிறுபிள்ளைத்தனமான செயல்: பாஜக கண்டனம்!, Manikandaprabu S | Samayam TamilUpdated: 16 Jul 2022, 7:08 pm.

[10] https://tamil.samayam.com/latest-news/state-news/bjp-narayanan-thirupathy-condemns-dmk-mp-senthil-kumar-for-insulting-hindu-beliefs/articleshow/92923476.cms

[11] தமிழ்.ஒன்.இந்தியா, மத்த மதம் எல்லாம் எங்கே? சீறிய செந்தில் குமார் எம்பி.. “துணிச்சல்“.. திரும்பி பார்த்த வடஇந்தியர்கள்!, By Shyamsundar I Published: Sunday, July 17, 2022, 9:29 [IST]

[12] https://tamil.oneindia.com/news/chennai/senthil-kumar-mp-stops-hindu-ritual-in-govt-function-north-india-debates-on-the-video-466632.html

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நித்தியானந்தா-சங்கராச்சாரியார் என்று சொல்லி  நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (2)

ஜூன் 13, 2022

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நித்தியானந்தா-சங்கராச்சாரியார் என்று சொல்லி  நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (2)

மதுரை ஆதினம் மட்டும் குறுக்கு சால் ஓட்டிஅந்தப் புகழ்மிகு ஆதினத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்: சம்பந்தப்பட்ட தருமபுர ஆதினகர்த்தரும் அதற்கு நன்றி தெரிவித்தார். மற்ற மற்ற ஆதினங்களும் இந்த சுமூக முடிவை வரவேற்றனர்! ஆனால் மதுரை ஆதினம் மட்டும் குறுக்கு சால் ஓட்டி – அந்தப் புகழ்மிகு ஆதினத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்! தமிழக அரசும், முதலமைச்சரும், துறை சார்ந்த அமைச்சரும் – தமிழகம் அமைதிப் பூங்காவாக – அனைத்து மதத்தினரும் அண்ணன் – தம்பிகளாக ஒன்று இணைந்து வாழவேண்டும் என்ற நோக்கில் எடுக்கும் முடிவுகள் பலராலும் பாராட்டப்படும் நிலையில், மதுரை ஆதினகர்த்தர் மட்டும் வெறுப்பு உருவாகும் நிலையில் தொடர்ந்து கிறுக்குத் தனமாகப் பேசிவருகிறார்! “அமைச்சர்கள் வெளியேநடமாட முடியாது” என்கிறார். அரசியல்வாதிகளுக்கு ஆதினத்தில் என்ன வேலை என்று மிரட்டுகிறார்”அமித்ஷாவையும் மோடியையும் காட்டி பயமுறுத்த நினைக்கிறார். [ஆதினமே, புகழ்மிகு ஆதினத்துக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், அடேங்கப்பா, ஆதினங்கள் மீது தான் இந்த நாத்திகர்களூக்கு, விக்கிரங்கள் உடைப்பவர்களுக்கு, இந்துவிரோதிகளுக்கு எவ்வளவு அக்கரை, கரிசனம்??]

மதுரை ஆதினம் எல்லை மீறுகிறார்! அவருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்!: மதுரை ஆதினம் இருப்பது தமிழ்நாடு! இந்த மண்ணில் பல சைவ ஆதினங்கள் உள்ளன! அவை அனைத்தும் தங்கள் பணிகளை எந்தவித சலசலப்புமின்றி செய்து வருகின்றன! அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்! [இனி இவர்கள் தான் சான்றிதழ் கொடுப்பார்கள் போலும்] ஆனால் மதுரை ஆதினம் எல்லை மீறுகிறார்! பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் உணர வேண்டும். அவருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்! காஞ்சி மடத்தில் – அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது என்ன என்பதை அவர் அறிந்திருப்பார் என்று எண்ணுகிறோம். இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் முதல் மாநில, மத்திய அமைச்சர்கள் பலரும் அந்த காஞ்சி பீடத்துக்கு விஜயம் செய்துள்ளனர். அவர் பெயரை உச்சரிக்கக் கூடமாட்டார்கள் – பெரியவாள், “சின்னவாள்” என்று பயபக்தியுடன்தான் அழைப்பார்கள்! அந்த சங்கராச்சாரியார் தரிசனம் கிடைப்பதே பெரும் பாக்யம் என்று நாட்டிலே பலர் மணிக்கணக்கில், நாட்கணக்கில் காத்துக் கிடப்பர்!

ஜெயேந்திரருக்கு என்ன கதி ஏற்பட்டது? கைது செய்து சிறைக்கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சின்னவாள், ஜெயேந்திரருக்கு என்ன கதி ஏற்பட்டது? அந்த மகாகுருவையே சிறைக்கம்பிகளை எண்ண வைத்த நிகழ்வுகள் மதுரையின் இன்றைய பீடாதிபதிக்கு நினைவிருக்கும் எனக் கருதுகிறோம்! கைது செய்து சிறைக்கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை; அதனைத் தொடர்ந்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எத்தனை நிகழ்வுகள் நடந்தன என்பதை மதுரை ஆதினம் உணர்ந்திருப்பார் என்று எண்ணுகிறோம்! இவை எல்லாம் மதுரை ஆதினத்தை மிரட்ட தரும் தகவல்கள் என அவர் கருதிவிடக் கூடாது; “பிரதமர் மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன்” – என்று பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதினத்தின் புரிதலுக்காக இதனை நினைவூட்டுகிறோம்! இவர் பிரதமரைத் தேடிச் செல்லும் நிலையில் உள்ளார்; ஆனால் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களைப் பிரதமர், குடியரசுத்தலைவர் போன்றவர்கள் எல்லாம் காத்திருந்து, தேதி வாங்கி பேட்டி கண்டு சென்றவர்கள்! அப்படிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஏற்பட்ட நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து பேச்சில் மதுரை ஆதினம் சிறிது நிதானம் காட்ட வேண்டும்! [ஆக, தீர்மானமாக, கைது செய்து சிறையில் அடைப்போம் என்று மிரட்டியுள்ளது தெரிகிறது]

அரிஹர தேசிக ஞான சம்பந்தர்இவருக்கு அரசியல் பலம், பத்திரிகை பலம், பக்தர்கள் பலம் இல்லை: எந்த காஞ்சி சங்கராச்சாரியாருக்கு இருந்த அரசியல் பலம், பத்திரிகை பலம், பக்தர்கள் பலம் இவற்றோடு ஒப்பிட்டால் அரிஹர தேசிக ஞான சம்பந்தர் ஒரு ‘ஜீரோ’! மதத்தலைவர் என்ற போர்வையினால் பாதுகாப்பு கிடைக்கும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று கருத வேண்டாம். தன்னை சிவபெருமானின் மறு அவதாரம் என்று கூறித் திரிந்து கொண்டிருக்கும் நித்யானந்தாவை கருநாடகப் போலிஸ் கைது செய்தது. ஒரு தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவுக்குள்ளே நுழைய முடியாத அளவு ஓடி ஒளிந்து திரிகிறார் அவர்! அவர்கூட மதுரை ஆதினத்தின் ஆதின கர்த்தராக முடிசூட்டப்பட்டவர். [அதே போல இவரும் கைது செய்து சிறையில் அடைப்போம் என்கிறார்கள் போலும்]

பொது அமைதிக்கு ஊறுதேடுபவர்கள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களைஅவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கைப் பார்க்கஇயலாது: பொது அமைதிக்கு ஊறுதேடுபவர்கள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களை – அவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கைப் பார்க்கஇயலாது; சட்டம் தனது கடமையை செய்திடும் என்பதை மதுரை ஆதினம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மேலே கண்ட நிகழ்வுகளை நினைவுபடுத்தினோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், மத வெறிப் பேச்சுக்கள் பேசுவதை மதுரை ஆதினம் உடனடியாக நிறுத்த வேண்டும்! தமிழக முதல்வர் குறித்து பி.ஜே.பி.யின் எச்.ராஜா கூறியதையும் மதுரை ஆதினத்துக்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறோம். “Stalin is more Dangerous than Karunanithi” எச்.ராஜாவின் இந்தப் பதிவில் பல பொருள்கள் பொதிந்துள்ளன. இதனையும் அரிஹர தேசிகர் உணரவேண்டும்.

மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு: மதுரை ஆதீனமாக, ஹரிகர தேசிக ஞானசம்பந்தர் பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது; அரசியல்வாதிகள் தலையீடு இருக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு அரசு தடைவிதித்த போது, முதல் ஆளாக குரல் கொடுத்தார். தொடர்ந்து, அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் அமைச்சர் சேகர்பாபு பேசினார். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.இந்நிலையில், தி.மு.க., நாளிதழான முரசொலியில் ‘ஆதீனம் கைது செய்யப்படுவார்’ என எச்சரிக்கும் வகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுரை ஆதீனம் இருப்பது தமிழகம். இம்மண்ணில் பல சைவ ஆதீனங்கள் உள்ளன. அவை அனைத்தும் தங்கள் பணிகளை எவ்வித சலசலப்புமின்றி செய்து வருகின்றன.

12-06-2022 ஆதீனத்தை மிரட்டும் முரசொலி: ஆனால் மதுரை ஆதீனம் எல்லை மீறுகிறார். பொறுமைக்கும் எல்லை உண்டு. ஜெயலலிதா ஆட்சியில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது செய்யப்பட்டதை மதுரை ஆதீனம் உணர வேண்டும்[1]. ‘பிரதமர் மோடியிடம் சொல்வேன்; அமித் ஷாவிடம் செல்வேன்’ என பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதீனத்தை அரசியல் பலம், பத்திரிகை பலம், பக்தர்கள் பலத்துடன் ஒப்பிட்டால் அவர் ஒரு ‘ஜீரோ!’ ‘மதத்தலைவர்’ என்ற போர்வையில், பாதுகாப்பு கிடைக்கும் என்று எதை வேண்டுமானாலும் பேசலாம் என கருத வேண்டாம்[2]. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலையில் மதவெறி பேச்சுகள் பேசுவதை ஆதீனம் உடனடியாக நிறுத்த வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் குறித்து, பா.ஜ.,வின் எச்.ராஜா கூறியதை ஆதீனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்… ‘கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர்’ என ராஜா கூறியதில் பல பொருள் பொதிந்துள்ளது. இதை மதுரை ஆதீனம் உணர வேண்டும்.இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வின் பகிரங்க கைது எச்சரிக்கைக்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன[3]. பிஜேயும் எச்சரித்துள்ளது[4].

© வேதபிரகாஷ்

13-06-2022


[1] தினமலர், மதுரை ஆதீனத்திற்கு தி.மு.., கைது எச்சரிக்கை:  Updated : ஜூன் 13, 2022  00:31 |  Added : ஜூன் 13, 2022  00:30.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3051825

[3] தமிழ்.ஒன்.இந்தியா, “சங்கராச்சாரியார்கம்பி எண்ணி.. சீறிய முரசொலி.. “சாது கொதித்தெழுந்தால் அரசு தாங்காதுபாஜக வார்னிங் , By Hemavandhana Updated: Sunday, June 12, 2022, 17:23 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/tirupati-narayanan-slams-murasoli-and-dmk-government-and-tweeted-about-it-461945.html

இந்து நம்பிக்கை இல்லாத நாத்திக-பெரியாரிஸ ஸ்டாலின், மடாதிபதிகளுடன் சந்தித்து பேச்சு மற்றும் ஆதீனங்கள் மெச்சுதல்! (1)

ஏப்ரல் 28, 2022

இந்து நம்பிக்கை இல்லாத நாத்திக-பெரியாரிஸ ஸ்டாலின், மடாதிபதிகளுடன் சந்தித்து பேச்சு மற்றும் ஆதீனங்கள் மெச்சுதல்! (1)

17-04-2022 அன்று மு..ஸ்டாலினை சந்தித்த ஆதீனங்கள், மடாதிபதிகள்: பொதுவான இந்துக்கள் இந்துமத விரும்பிகள், இந்துத்துவ ஆராய்ச்சியாளார்கள், கீழ்கண்ட சந்நியாசிகள் / ஆதீனங்கள் / மடாதிபதிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்:.

  1. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  2. திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனம் ஆகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்,
  3. ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்,
  4. தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்,
  5. தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,
  6. ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய குருமகா சன்னிதானம்,
  7. ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்,
  8. ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி 28ஆவது குருமகா சன்னிதானம்,
  9. அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜஜீயர்,
  10. திரு கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள்,
  11. ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஆகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள் 29ஆவது குருமகா சன்னிதானம்,
  12. ஸ்ரீ காமாட்சிதாஸ் சுவாமிகள்

ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்துப் பேசினார்கள். இவர்கள் யார், இவர்களை மட்டும் முதலமைச்சர் தேர்ந்தெடுத்து பேச வரவழைக்கப் பட்டரா, அல்லது வந்தார்களா, மற்றவர்கள் வரவில்லையா? தவிர கடந்த ஆண்டுகள் இவர்களில் சிலர், சிலர் கிருத்துவர், “சைவர் இந்துக்கள் அல்ல” என்று அறிவித்த மற்றும் இதர மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளனர். எனவே, இதைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.

மடத்து நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பல்வேறு மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் – திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், துலாபார ஆதீனம், அவிநாசி மடாதிபதி, மலையப்ப ஆதீனம் உள்பட 11 ஆதீனங்கள், 27-04-2022 (புதன் கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தெய்வீகப் பேரவையை மீண்டும் நடத்த வேண்டும், மடத்து நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்[1].  அறநிலையத்துறை திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர் என்று தினகரன் கூறுகிறது[2]. “மடத்து நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,” என்பது திகைப்பாக இருக்கிறது. அப்படியென்றால், பட்டா இல்லாமலா மடத்து நிலங்கள் உள்ளன என்ற கேள்வி எழுகின்றது! முழு விவரங்கள் கொடுக்காமல், இவ்வாறு ஒரு வரி செய்தி போட்டிருப்பது, இன்னொரு முறையில் கோவில் கொள்ளை நடக்கப் போகிறதோ என்ற அச்சம் எழுகிறது. ஏற்கெனவே கோவில் நிலங்கள் அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவற்றிற்கு பட்டாக்கள் இல்லையா என்ன? இன்னொரு ஊடகம், “பட்டா மாறுதல்” என்கிறது, ஆக, நிச்சயமாக, இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

கருணாநிதியின் “தெய்வீகப் பேரவை”: சந்திப்புக்குப் பின், தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் கூறும்போது, ‘‘தெய்வீகப் பேரவையை மீண்டும் நடத்தவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளோம்[3]. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சியில் சைவ, வைணவம் இணைந்து ஆன்மிக பேரவை ஒன்றை உருவாக்கி மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆதீனங்களிடம் குறைகளை கேட்டு நிவா்த்தி செய்து வந்தார். அதன் பிறகு நீண்ட காலம் இந்தப் பேரவையின் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தது. தங்களது ஆட்சியில் மீண்டும் ஆன்மிக பேரவை உருவாக்க வேண்டும்,” என ஆதீனங்கள் வலியுறுத்தினா்[4]. கருணாநிதியின் “தெய்வீக” நம்பிக்கை எல்லோரும் அறிந்தது தான்.நோன்பு-உபவாசம், ராமர்-பாலம், இந்து-திருடன் போன்ற தூற்றல்கள் தெரிந்தது தான். ஆக, இதில் எங்கு எவ்வாறான “தெய்வீகம்” வந்தது என்று தெரியவில்லை. இனி, ஸ்டாலின் தலைமையில், “தெய்வீகப் பேரவை” உருவானால், அது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அது “மாங்கல்யம் தந்துனானே”வா, இன்னொரு வசைப்பாடலா என்று பார்க்க வேண்டும்.

மே5 மானிய கோரிக்கை விவாதத்திற்கு ஒத்திகையா?: இந்தச் சந்திப்பின்போது அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்[5]. மே 5-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை வர உள்ளது, அதன் பேரில் விவாதமும் நடக்கும்[6]. நிலையில், முதல்வரை சந்தித்த குருமார்கள் தங்கள் மடங்களின் தேவைகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கோரிக்கை விடுத்தனர்[7]. திருக்குவளையில் மரகத லிங்கத்தை திருக்கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அரசைப் பொறுத்தவரை ஆன்மீக அரசுதான்‘‘ என்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறும்போது, ‘‘தஞ்சையில் எதிர்பாராமல் நடந்த விபத்து அனைவரின் உள்ளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளோம்’’ என்றார்.

“முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஆன்மிக அரசு..” : தி.மு.க அரசை பாராட்டி புகழாரம் சூட்டிய ஆதீனங்கள்: திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜக -அதிமுக அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன[8]. அதிலும் குறிப்பாக பாஜக ஸ்டாலின் அரசு மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறது[9].  தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. மீண்டும் மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கி விட்டது. என விமர்சித்து வரும் அதே நேரத்தில் திமுக அரசு இந்து விரோத அரசு என்றும் அடிக்கடி குறை கூறி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராகவே இவ்வாறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வரை சந்தித்த ஆதினங்கள் தமிழக அரசின் நிர்வாகத்தை பாராட்டியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு ஆன்மிக அரசு எனவும் தெரிவித்தார்[10].  ஆக, ஒரு அரசியல் கணக்கு, சமன்பாடு ரீதியில், இக்கூட்டம் கூட்டப் பட்டிருக்கிறது என்றாகிறது. நாத்திகம்-இந்துவிரோதம் கொண்டவர்கள் ஆட்சிசெய்வது இருப்பதோடு, கோவில் விவகாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பிரச்சினைகள் செய்து வருவது செய்திகளாக, நீதி மன்ற தீர்ப்புகள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நாத்திகம்-இந்துவிரோத அரசு, பெரியாரிஸ-அடிவருடி ஆட்சி, சிலைகள்-உடைத்த ஆளுமை முதலிய குணாதிசயங்கள் கொண்ட அரசு, ஆன்மீக அரசு என்பதாகாது.

© வேதபிரகாஷ்

28-04-2022


[1] தமிழ்.இந்து, தலைமை செயலகத்தில் முதல்வர் மு..ஸ்டாலினுடன் ஆதீன குருமார்கள் சந்திப்பு, செய்திப்பிரிவு, Published : 28 Apr 2022 04:40 AM; Last Updated : 28 Apr 2022 04:40 AM.

[2] தினகரன், தமிழக முதல்வர் மு..ஸ்டாலினுடன் ஆதீனங்கள் சந்திப்பு: அறநிலையத்துறை திட்டங்கள் குறித்து ஆலோசனை, 2022-04-28@ 00:02:38.

https://www.dinakaran.com/news_detail.asp?Nid=761110

[3] தினமணி, மு..ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மிக அரசு: தருமபுரம் ஆதீனம் புகழாரம், By DIN  |   Published On : 28th April 2022 02:16 AM  |   Last Updated : 28th April 2022 03:24 AM.

[4] https://www.dinamani.com/tamilnadu/2022/apr/28/dharmapuram-athenam-says-tamil-nadu-is-a-spiritual-state-3834785.html

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/793184-cm-stalin-meets-various-aadheenams-of-tamilnadu.html

[6] மாலைமலர், தலைமைச் செயலகத்தில் ஆதீனங்களுடன் முதல்வர் மு..ஸ்டாலின் இன்று ஆலோனை, பதிவு: ஏப்ரல் 27, 2022 09:36 IST

[7] https://www.maalaimalar.com/news/district/2022/04/27093639/3717043/Tamil-news-Chief-Minister-MK-Stalin-today-Alonso-with.vpf

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அரசு ஆன்மீக அரசு.. பாஜவை அலறவிட்ட 11 ஆதீனங்கள், Ezhilarasan Babu, Chennai, First Published Apr 27, 2022, 12:59 PM IST, Last Updated Apr 27, 2022, 12:59 PM IST.

[9] https://tamil.asianetnews.com/politics/stalin-led-government-is-a-spiritual-government-11-adhinams-praised-dmk-government-shocking-to-bjp-razm5a

[10] தமிழ்.நியூஸ்.18, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆன்மீக அரசு: தருமபுர ஆதினம், NEWS18 TAMIL, LAST UPDATED : APRIL 27, 2022, 11:52 IST.

வைஷ்ணவர்களின் உதவியுடன் வளர்ந்து, வளர்த்த கடாவை முட்டியது போல, முட்டியுள்ள ஜாகிர் உசேன்! (4)

திசெம்பர் 22, 2021

வைஷ்ணவர்களின் உதவியுடன் வளர்ந்து, வளர்த்த கடாவை முட்டியது போல, முட்டியுள்ள ஜாகிர் உசேன்! (4)

வைணவர்களின் உதவியுடன் கோவில்களில் நுழைந்தது: ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில்களுக்குள் நுழைந்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளான். பெருமையாக சமூக ஊடகங்களில் போட்டுக் கொண்டுள்ளான். இந்த மாதிரி போட்டோ எடுத்துக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது? சாதாரண பக்தன் எடுக்க ஆசைப் பட்டால், எடுக்கக் கூடாது என்கிறார்கள்! பிறகு இந்த பெரியாரிஸ்ட், நாத்திக-வேடதாரி, நாமதாரி எப்படி?????????????ஶ்ரீரங்கநாதனுக்கு நாத்திக / பெரியாரிஸ்ட் குண்டு வைக்காமல் இருந்தால் சரி என்று தோன்றுகிறது! நல்ல வேளை அண்ணா அறிவலத்திற்குள் சென்ற போது, அங்கு விரட்டி விட யாரும் இல்லை போலிருக்கிறது! இவன் / ஜாகிர் உஸைன் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார். பிறகு பற்று அங்குதானே இருக்கும்! ஶ்ரீரங்கநாதனின் மீது எப்படி இருக்கும்?? ஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்ற கட்சியில் சேர்ந்தது, எந்த பற்றினைக் காட்டுகிறது? இந்துவிரோதிகள் தெளிவாக வேலை செய்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்! ஆனால், அறிவற்ற இந்துக்கள் (முட்டாள் இந்துக்கள் என்றால் கோபம் வருகிறதாம், புகார் வேறு செய்கிறார்கள்) உண்மை அறியாமல், தனித்தையாக கும்பல் சேர்ந்து கொண்டு, குழிபறித்துக் கொண்டிருக்கின்றன… யாரை கண்டிப்பது, எதை எதிர்ப்பது, என்று கூடத் தெரியாமல் அல்லது வேண்டுமென்றே எதிரிகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு அரசியலாக்கிய ஜாகிர் உசேன்:

  • உண்மையில் மத நல்லிணக்கம் தேவையென்றால், அதனை நல்லவிதமாக, நேரிடையாக, செய்யலாம்!
  • அறிக்கைகள் விடுவது, ஆஸ்பத்திரியில் படுத்துக் கொள்வது, போட்டோ எடுத்துக் கொள்வது, ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பது ………எல்லாம் பக்தி இல்லை……….
  • அரசியல்வாதி போல, அரசியலாக்கி, விளம்பரம் தேடும் வேலை தேவையில்லை!
  • கலை தெய்வீகம் ஆகும் போது, அது மதிக்கப் படுகிறது, ஆனால், அகம்பாவத்துடன் செயல்படும் பொழுது, பாண்டித்யம் கேள்விக்குறியாகிறது, கேள்விக்கு உட்படுகிறது!
  • ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாமா? இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப் படுவரா? அல்லது, ஶ்ரீரங்கநாதனை / ஶ்ரீவிஷ்ணுவை நம்புகிறவர்கள் செல்லலாமா?
  • முன்பு ஃபிரான்சிஸ் சேவியர் குளூனி விசயத்தில் உண்டான விவகாரம், இப்பொழுது வேறொரு உருவில் எழுதுள்ளது…..
  • “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை……..”, எனும்பொழுது, முன்னரே பலமுறை சென்றுள்ளது தெரிகிறது…..
  • பிறகு, அமைதியாக சென்று வந்திருக்கலாம்…..படோபடத்துடன் விளம்பரம் செய்யும் நோக்கம் தேவையில்லை!  
  • “……எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்,”. இவ்வாறு அவர் கூறினார், என்பது பக்தர் போல சொல்லவில்லை, ஏதோ அரசியல்வாதி தோரணைதான் வெளிப்படுகிறது…………….
பேஸ்புக்கில் உள்ள பதிவுகள் அப்பட்டமாக மோசமான பதிவுகளாக இருக்கின்றன.
மோடியைப் பற்றி மிகவும் அநாகரிகமன பதிவுகள் உள்ளன. ஒருமையில் மோசமான தாக்குதல் வார்த்தைப் பிரயோகங்களுடன் காணப்படுகின்றன.

மக்களே !கொரோனாவ விட கொடுமையானத பாத்திருக்கீங்களா ???பாருங்க !! என்னத்த சொல்ல. யப்பா சாமி , உன் ரீலு அந்து போய் ரொம்ப நாளாச்சுடா !!பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கணும் …மோடி அரசு போன்ற கேவலமான , கொள்ளைக் கூட்டம் உலகில் வேறெங்கும் இல்லை ; மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா – நின் திருவடியும் திமுகவும்
தமிழ்நாட்டின் காப்பு; India wasted two “Bharat Rathna” on unethical and ruthless personalities #Sachin & #Latha

ஏன் நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், இந்துக்கள்அல்லாதவர்கள் தடுக்கப் படவேண்டும்?: சட்டரீதியாக இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில்களுக்குள் செல்லக் கூடாது.

  1.  எஸ்.கே. கிருஷ்னசாமி ஐயங்கார் என்பவரின், “தென்னிந்தியாவும் அதன் மொஹம்மதியர் படையெடுப்பாளர்களும்” (S.K.Krishnasway Iyengar South India and its Mohammedan Invaders) என்ற புத்தகத்தில், சரித்திர ஆதாரங்களுடன், ஶ்ரீரங்கம் கோவில் எவ்வாறு முகமதியர்களால் கொள்ளையடிக்கப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்பது விளக்கப் பட்டுள்ளது.
  2. ஏனெனில், இடைக் காலத்திலிருந்து, துலுக்கர் இக்கோவில் மீது படையெடுத்து, கொள்ளையடித்து, இடித்து நாசமாக்கியுள்ளனர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஐரோப்பியர்களால், பல கொள்ளைகள் நடந்துள்ளன.
  3. ஒரு பிரெஞ்சு ராணுவ வீரன் ஶ்ரீ ரங்கநாதரின் கண்களை (வைரங்களை) களவாட திட்டம் போட்டான்! ஶ்ரீவைஷ்ணவன் போலவே நாமம்-வேடமிட்டான்! பட்டர்களின் நட்பு நம்பிக்கை பெற்று, வந்து சென்றான், 1747ல் அவன் கர்பகிருகத்தில் நுழைந்து வைரங்களைத் திருடிக் கொண்டான்! ஶ்ரீரங்கநாதரின் ஒரு கண் / வைரம் தான் Orlov / Orloff என்று மிஞ்சியுள்ளது, இரண்டாவது கண் எங்கே போனது தெரியவில்லை! . ஶ்ரீரங்கத்தை ஶ்ரீ ரங்கநாதர் தான் காக்க வேண்டும்! உண்மையான பக்தர்கள் படும் தொந்தரவுகள், அவதிகள், துன்பங்கள்……..
  4. 1950-70களில் ஶ்ரீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்றெல்லாம் ஔரங்கசீப் வெறித்தனத்துடன், திராவிடத் தலைவர்கள் பேசியிருக்கின்றனர். அவ்வாறே கொள்ளையடித்துள்ளனர்.
  5. பெரும்பாலான பக்தர்கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வருகிறார்கள்! பெரிய மதத்தலைவர்கள்-துறவிகள்-ஞானிகளும் வந்திருக்கிறார்கள்!
  6. ஶ்ரீமத் சங்கரதேவர், சைத்தன்யர், வல்லபாச்சாரியார், குருநானக் என்று பல வந்து ஶ்ரீ ரங்கநாதரை தரிசித்துள்ளனர்!
  7. எல்லோரும் சிரத்தையுடன் காதலாக கசிந்து கண்ணீர் மல்கி, பக்தியுடன் தம்மையே அர்பணித்துக் கொண்டனர், மக்களுக்கு சேவை செய்தனர்!
  8. 20-12-2021 அன்று ஒருவர் நான் 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன் என்று அடாவடியாக, கும்பலுடன் கோவிலுக்குள் நுழைந்து கலாட்டா செய்துள்ளார்!
  9. ஆனால் ரூ 250/- வாங்கிக் கொண்டு பக்தர்களை விரட்டுகிறார்கள், தள்ளுகிறார்கள், ஒருமையில் பேசுகிறார்கள், கதவை சாத்தி அடைக்கிறார்கள்!
  10. அந்த வைஷ்ணவ துலுக்க கபட வேடதாரி, நாமதாரி, கூத்தாடியும் நான் தங்கம்-வெள்ளி கொடுத்துள்ளேன் என்று பறையடித்து உள்ளே நுழைகிறான்! பிறகு பொய் சொல்லி புகார் கொடுக்கிறான், அதற்கெல்லாம் விளம்பரம் கொடுக்கப் படுகிறது.
  11. ஆனால், உண்மையான பக்தர்கள் 3 முத 5 மணி வரை வரிசையில் நின்று அவதிபடுவதைப் பற்றி யாரும் கவலைக் கூடப் படுவதாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-12-2021

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோத-துவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

திசெம்பர் 22, 2021

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோததுவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும்எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு ஆவினத்தைத் தூஷித்தது: ஜாகிர் உசேனின் கபடத் தனம், ஈவேராவை ஆதரிப்பதலிருந்தே அறிந்து கொள்ளலாம். கோபுரத்திற்கு முன்னால், இருக்கும் இந்துவிரோதியின் சிலையை அகற்ற இந்த வைஷ்ணவ-துலுக்கன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.  உண்மையான வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும். கங்காதேவியைப் போன்று எவ்வாறு துலுக்கர் ஶ்ரீரங்கம் கோவிலை இடித்தார்கள், கொள்ளையிட்டார்கள், படைகளுடன் அங்கேயே தங்கினார்கள் என்றெல்லாம் விவரித்து, நாட்டிய நாடகம் ஆடியிருக்கலாம். ஆனால், மேடைகளில் வேடமிட்டு ஆடி பணம்-புகழ் சேர்த்து, இந்துக்களுக்கு பெரிய நாமத்தைத் தான் இந்த ஆள் போட்டிருக்கிறான். இந்து நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை புண்படும் விதங்களில் பேஸ்புக்கில் பதிவுகள் போட்டு, தூஷித்து இருக்கிறான். ஶ்ரீ ரெங்கநாதர் ஶ்ரீ கிருஷ்ணர் என்றால், பசுவை அவனால், அந்ந்த அளவுக்கு தூஷித்து இருக்க முடியாது. ஆனால், செய்துள்ளான். பாண்டே கேட்ட போது, அவன் முகமே சுருங்கி, ஆபாசமாகி விட்டது, குற்ற-வஞ்சக உணர்வு முகத்தை காட்டி விட்டது. ஆண்டாள் பக்தன் என்றாலும், அவனது குரூரம் வெளிப்படுகிறது. துலுக்கனாக, பெரியாரிஸ்டாக, திமுக உறுப்பினராக இருந்து கொண்டு புலால் உண்கிறானா-இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், பசுக்கொலையை எதிர்ப்பதற்கு பதிலாக, ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளான்.

1311, 1318 மற்றும் 1327 ஆண்டுகளில் ஶ்ரீரங்கம் தாக்கப் பட்டது: 1311ல் மாலிகாபூருக்கு பயந்து, வீரபாண்டியன் அரச கருவூல செல்வங்களை எடுத்துகொண்டு ராமேஸ்வரம் அருகில் உள்ள தீவுக்கு தப்பி சென்றான். மலிக்காபூர் பாண்டிய அரசின் மதுரை மீனாட்சிகோவில்,சிதம்பரம் நடராஜர் கோவில் , ஶ்ரீரங்கம் கோவில் போன்ற அனைத்து கோவில்களின் செல்வதையும் பல நூறு யானை, ஒட்டகம் ஆகியவற்றில் டெல்லி கொண்டு சென்றான். அவை அந்த நாட்களில் டெல்லி சுல்தான்கள் அது வரையிலும் பெறாத செல்வமாக இருந்தது என சம கால வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

  • 1318 ஆம் ஆண்டு டெல்லி சுல்தான் குஸ்ருகான் தமிழகத்தை தாக்கி ஶ்ரீரங்கம் கோவிலை கொள்ளை அடித்து சென்றான். 
  • இஸ்லாமியப் படைகள் தொண்டைமண்டலத்தின் அத்தனை பகுதிகளிலும் அழிவுகளை நிகழ்த்தியதாக ஸ்ரீரங்க வரலாறான “கோவிலொழுகு” விளக்குகிறது. இதன்மூலம் ஸ்ரீரங்க ஆலயத்தை இஸ்லாமியப்படைகள் 1327-ஆம் வருடம் தாக்கியது உறுதியாகிறது.
  • ஆலயத்தைத் தாக்கிய இஸ்லாமியப்படைகள் ரங்கநாதரின் சிலையைக் காணாது கோபமுற்று அங்கிருந்த பல பூசாரிகளின் மற்றும் பக்தர்களின் தலையைக் கொய்ததாக கோவொலொழுகு மேலும் கூறுகிறது.
  • ஆல்யத்திலிருந்த நாட்டியப் பெண்மணி ஒருத்தியின் முயற்சியின் காரணமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெரும் அழிவிலிருந்து தப்பியதாகத் தெரிகிறது. மேற்கூறியபடி 1327-ஆம் வருடம் ஸ்ரீரங்க ஆலயத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டன.
  • ஸ்ரீரங்கம் மற்றும் ஜம்புகேசுவரரர் ஆலயங்களில் இஸ்லாமியப் படைகள் நிகழ்த்திய அழிவுகளைக் குறித்து கங்காதேவி தனது மதுரா விஜயத்தில் விளக்கியிருக்கிறார்.

ஸ்டாலின் நெற்றியில் வைத்ததை அழித்த போது, பட்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்படவில்லை, ஆஸ்பத்திரிக்குச் சென்று படுத்துக் கொள்ளவில்லை: பரதநாட்டிய கலையில் மூலம் அறியப்பட்ட ஜாகிர் உசேன் 05-01-2021 செவ்வாயன்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். ஆக, இவர் மூலம், அரசியல் ஆக்க திமுக, ஸ்டாலின் நினைத்திருக்கலாம்….முன்னரே ஸ்டாலின் ஶ்ரீரங்கத்திற்கு வந்தபோது, பட்டர்கள் மரியாதை கொடுத்து, நெற்றியில் சந்தனம்-குங்குமம் வைத்த போது, அழித்து அவமரியாதை செய்தது தெரிந்த விசயமே……..அப்பொழுது எத்தனை இந்துக்களுக்கு மன உலைச்சல் ஏற்பட்டிருக்கும் என்று ஸ்டாலின் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்…… அப்பொழுது பட்டர்கள் எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்துக் கொண்டு, போட்டோ வெளியிடவில்லை! உசேனும் கவலைப்படவில்லை. ஆக, இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதனை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது, இதைப் பற்றி எந்த மனிதனும் நினைத்துப் பார்த்தால் வெட்கப் படவேண்டும். ஆனால், எல்லா உண்மைகளையும் மறைத்து, உசேன், ஸ்டாலின் மற்ற இந்துவிரோதிகள் நாடகம் ஆடுகின்றனர், அறிக்கை விடுகின்றனர்.

பிரபலங்களைப் பிடித்து அரசு உதவி பெற்று வளர்ந்தது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். பரதநாட்டியம் மீதான ஆர்வத்தால் சென்னைக்கு 90-களில் வந்தார். நான்கு ஆண்டுகள் சித்ரா விஷ்வேஸ்வரன் என்ற கலைஞரிடம் பரதநாட்டியம் பயின்றார். அதன் பிறகு மார்கத்திலிருந்து விலகி நாட்டிய நாடகங்களை அரங்கேற்ற தொடங்கினார். அது பற்றி ஆராய்ச்சிகளும் செய்துள்ளார். இவருக்கு நடிகர் ரஜினி, சத்யராஜ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் ஆதரவளித்தனர். இவரது திறமையை அறிந்து 1992-ல் இந்திய ஜனாதிபதி 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கினார். பிறப்பால் ஒரு முஸ்லீம் என்றாலும், வேதங்கள், ஆகமங்கள் குறிப்பாக வைணவ பாரம்பரியம் பற்றிய ஆழமான புரிதலும், அறிவும் அவருக்கு உண்டு என்றெல்லாம் ஊடகங்கள் அளந்து விடுகின்றன. வைஷ்ணவ ஆகமங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக மத்திய அரசு இவருக்கு விருது வழங்கியிருக்கிறது. மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களைப் பற்றிய அவரது பரந்த அறிவு, பாஞ்சாலி சபாதம் மற்றும் சீதாயணம் போன்ற நடன நாடகங்களை கருத்தாக்க அவருக்கு உதவியது.

திமுகவில் சேர்ந்தது, பெரியாரிஸ்ட் என்று பிரகடனப் படுத்திக் கொண்டது: இவர் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார்.   முகநூலில் மிகவும் மோசமான பதிவுகளை செய்துள்ளார். பிரதம மந்திரி என்ற மரியாதைக் கூட இல்லாமல், ஒருமையில் விமர்சித்து, கேவலப் படுத்தியுள்ளான்.பிறகு இந்த ஆளை எப்படி கலைஞனாக மதிக்க முடியும்? நிச்சயமாக, இந்த மனிதன், குணாதிசயங்களால் அரக்கனாகத்தான் இருக்க வேண்டும்…. உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக கடூரமாக இருக்கிறதே? அந்த ஆள் மூஞ்சிக்கும், மனதுக்கும், காரியத்திற்கும் சம்பந்தமே இல்லை…….உள்ளே காரிருள், குரூரம், வஞ்சம்……….என்று தான் உள்ளன!பிஜேபியை, ஆர்.எஸ்.எஸ்.ஐ தூஷிக்கும் இந்த இந்துவிரோதி மீது ஏன் நடவடிக்கை இல்லை? உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக இருக்கிறதே? அடியேன் கருணாநிதி தொண்டன்,  ஸ்டாலின் தாசன், ………………………. திமுகவின் விசுவாசமான தொண்டன்,  திராவிடியன் ஸ்டாக் என்று கூறி  பெருமைப் பட்டுக் கொள்ளும்  நாட்டியக்காரன்,  நாடகத்திலும் கெட்டிக்காரனாகத் தான்  இருப்பது ஆச்சரியமில்லை!

© வேதபிரகாஷ்

22-12-2021