Posts Tagged ‘திக’

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கோரல், பிஜேபி அல்லாத கட்சிகள் எதிர்ப்பு – நிதர்சனமா, தேர்தல் யுக்தியா? (1)

திசெம்பர் 12, 2023

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கோரல், பிஜேபி அல்லாத கட்சிகள் எதிர்ப்புநிதர்சனமா, தேர்தல் யுக்தியா? (1)

04-12-2023 முதல் 22-12-2023 வரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டம்: திமுக, திமுக ஆதரவு எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் ஏதாவது ஒரு விதத்தில் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்ள எதையாவது பேசுவது என்பதனை கொள்கையாகக் கொண்டுள்ளனர் என்பதை அறியலாம். இதற்கு, ஏ. ராஜா, திருமாவளவன், வெங்கடேசன் முதலியோரை உதாரணமாக சொல்லலாம். தமிழில் பேசுவது என்பது மட்டுமல்லாது, திராவிடம்-ஆரியம், வடக்கு-தெற்கு, இந்தி-தமிழ், பெரியாரிஸம்-நாத்திகம் என்று பேசி பிரிவினை நோக்கில் கருத்துத் தெரிவிப்பர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா பற்றிய விவாதத்தில் மறுபடியும் அத்தகையப் பிரச்சினை உண்டாகியது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது[1]. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது[2]. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

திமுக செந்தில்குமாரின் அநாகரிகமான இந்துவிரோத பேச்சு: இதனையடுத்து, நேற்று (05-12-23) இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.  ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா விவாதத்தில், மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. செந்தில் குமார், “இந்தி  பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் தான் பா.. பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவான கெளமூத்ரா என்று தான் சொல்வோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா...வால் ஆட்சியை கைப்பற்ற முடியாது,” என்று பேசினார். திமுக எம்.பி. செந்தில் குமார், பா.ஜ.க வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசிய போது பயன்படுத்திய வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பியது. தேசிய ஒற்றுமை, இந்திய மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மூலம் அமைதி மேலோங்க வேண்டும் என்றெல்லாம் நல்லமுறையில் விவாதிப்பதை விடுத்து, இத்தகைய கேவலமான சொல்லாடலை உபயோகித்ததை, பெரும்பாலான எம்.பிக்களை கோபமூட்டுவதாக இருந்தது.

காங்கிரஸ், சமஜ்வாதி கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தது: செந்தில் குமார் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் செந்தில் குமார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், செந்தில் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.கவினர் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில், செந்தில் குமார் அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருகிறது என்பதால் நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.  வழக்கம் போல மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், அவரின் நிலை, சித்தாந்தம், இந்துவிரோத சிந்தனை எல்லாம் மாறிவிட்டதா என்று கவனிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எல்லோரும் கேட்டு விட்டார்கள், அவரது விரோத-சிந்தனை கோடிக் கணக்கான இந்தியர்களுக்குத் தெரிந்து விட்டது, இதனால், அரசியல் நஷ்டம் உண்டாகும் என்ற பயத்தில், மன்னிப்புக் கேட்டுள்ளது தெரிகிறது. ஏனெனில், விகடன், அந்த ஆள் அப்படியில்லையே என்ற தொணியில் செய்தி வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம்.

கோமூத்திரம் / பசுவின் சிறுநீர் பேச்சு: ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா விவாதத்தில் டிசம்பர் 5ம் தேதி பங்கேற்று பேசிய தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் செந்தில்குமார், ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவது குறித்து குறிப்பிட்டபோது[3], “வடக்கே இந்துத்துவாவை ஆதரிக்கும் மாநிலங்கள் அல்லது நாங்கள்மாட்டு மூத்திர மாநிலங்கள்என்று அழைக்கும் மாநிலங்களில்தான் பா.. வெற்றிபெற முடியும். தென்னிந்தியாவுக்குள் பா..வால் வரவே முடியாது,” கௌ மூத்ரா (கோ மூத்ரா) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்[4]. அந்த வார்த்தை பின்னர் அவைக் குறிப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு நீக்கப்பட்டது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக எம்.பி. செந்தில்குமார் கூறிய கருத்துக்கு மக்களவையில் பாஜக உறுப்பினர்களும் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.பி. செந்தில்குமார் பேசியது தொடர்பாகப் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘கோ மூத்திர மாநிலங்கள்தொடர்பாக, மக்களவையில் அவர் பேசியதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது சொந்த கருத்து. ஆனால், கௌமுத்ராவை நாங்கள் மதிக்கிறோம்,” எனப் பதில் தந்துள்ளார்[5].

காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கௌமதாவையும் நம்புகிறது: மற்றொரு காங்கிரஸ் எம்.பியான ராஜீவ் சுக்லா[6], “திமுகவின் அரசியல் வேறு. காங்கிரஸின் அரசியல் வேறு. இந்த விஷயத்தில் காங்கிரஸ் உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கௌமதாவையும் நம்புகிறது. நாங்களும் நம்புகிறோம். அனைத்து மதத்தினரையும் இணைத்து முன்னேறுவோம்,” எனத் தெரிவித்துள்ளார்[7]. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிரிஷ்ணம் கூறுகையில், “திமுக தலைவர்கள் தொடர்ந்து இதோபோன்று சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருந்தால், பாஜக “கோ மூத்திர மாநிலங்கள்” மட்டுமல்ல அனைத்து மாநிலங்களில் ஆட்சி அமைக்கும்,” என்று கூறினார்[8]. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்.பி, கார்தி சிதம்பரம்[9], “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் தாம் பேசிய கருத்துகளை திரும்ப பெற வேண்டும்” என கூறி இருந்தார்[10]. இவர் சனாதன தர்மம் விவகாரத்திலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது[11]. இதனால் ஏற்பட்ட அமளியால் கேள்வி நேரம் 06-12-2023 புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது[12].

மன்னிப்புப் போர்வையில் அமுக்கி வசிக்கும் திமுக: ஆக காங்கிரஸ், சமஜ்வடி கட்சிகளுக்கு தங்களுக்கு இருக்கும் இந்து ஓட்டுகளும் போய் விடுமோ என்ற பயம் வந்து விட்டது. இனியும் இந்த இந்துவிரோத திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தால், நிச்சயமாக, வடமாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்பது அக்கட்சிகளுக்குத் தெரிந்து விட்டது. முஸ்லிம் ஓட்டு இருக்கிறது, அதனால், இந்து ஓட்டும் கிடைக்கும் என்று மம்தா உறுதியுடன் இருப்பதால், திமுக-கூட்டுப் பற்றி கவலைப் படுவது இல்லை. ஆம்-ஆத்மி மட்டும் சீக்கியர் ஆதரவு முதலியன இருப்பதால், இதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. எனவே, கடைசியில் பாதிப்பு திமுகவிற்குத் தான். ஆகவே தான், “மன்னிப்பு” போர்வையில், அமுக்கி வாசிக்க தீர்மானித்துள்ளது. போதா குறைக்கு வெள்ளம்-நிவாரணம் போன்ற பிரச்சினைகள் இருப்பதால், மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால் பணமும் கிடைக்காது என்பதும் தெரியும்.

© வேதபிரகாஷ்

08-12-2023


[1] நக்கீரன், நாடாளுமன்றத்தில் சர்ச்சை பேச்சு; “மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – செந்தில் குமார் எம்.பி,  நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 06/12/2023 | Edited on 06/12/2023

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/india/controversial-speech-parliament-and-senthil-kumar-mp-says-i-beg-your-pardon

[3] தினமணி, திமுக எம்.பி. செந்தில்குமார் கருத்தால் மக்களவையில் அமளி, By நமது சிறப்பு நிருபர்  |   Published On : 07th December 2023 03:09 AM  |   Last Updated : 07th December 2023 03:09 AM.

[4] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2023/dec/07/lok-sabha-by-dmk-mp-senthilkumar-4118398.html

[5] புதியதலைமுறை, PT National : “வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்“- திமுக எம்பி செந்தில்குமார்! பிரதமர் மோடி ட்வீட்!, PT Web, 06 December 2023, 10:44 pm.

[6] https://www.puthiyathalaimurai.com/india/today-pt-national-news

[7] புதியதலைமுறை, வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்“- திமுக எம்பி செந்தில்குமார்!, PT Web, 06 December 2023, 10:44 pm.

[8] https://www.puthiyathalaimurai.com/india/dmk-mp-senthilkumar-stokes-controvers-on-bjp-won?utm_source=website&utm_medium=related-stories

[9] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Gomutra: திமுக எம்.பியின் சர்ச்சை பேச்சு! வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டார், Kathiravan V HT Tamil, Dec 06, 2023 11:44 AM IST

[10] https://tamil.hindustantimes.com/tamilnadu/dmk-mp-senthil-kumars-gomutra-states-controversy-zoho-ceo-sridhar-vembu-apologizes-to-north-indians-131701842415756.html

[11] மாலைமலர், கோமூத்ரா மாநிலங்கள்என்று சர்ச்சை பேச்சுசெந்தில்குமார் மன்னிப்பு கேட்டார், By Maalaimalar .6 டிசம்பர் 2023 12:36 PM (Updated: 6 டிசம்பர் 2023 1:22 PM).

[12] https://www.maalaimalar.com/news/national/tamil-news-dmks-controversial-talk-of-gaumutra-states-691922

தீபாவளி ஆதரவு-எதிர்ப்பு விடுதலைக்கு முன்பும், பின்பும் – திக முதல் திமுக வரை, 1940 முதல் 2022 வரை! (1)

ஒக்ரோபர் 16, 2022

தீபாவளி ஆதரவுஎதிர்ப்பு விடுதலைக்கு முன்பும், பின்பும்திக முதல் திமுக வரை, 1940 முதல் 2022 வரை! (1)

தீபாவளியின் தொன்மை: இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது[1]. அதாவது, சந்திர மாத கணக்கில் அத்தகைய கணக்கீடு வரும்[2]. ஆங்கில நாட்காட்டியின்படி, அக்டோபர் 17 முதல் நவம்பர் 15க்குட்பட்ட நாட்களில் தீபாவளிப் பண்டிகை அமைகிறது. இந்தியா மட்டுமல்லாது, வேறு சில நாடுகளிலும் இந்தப் பண்டிகை தினத்தன்று அரச விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் தொன்மை காலத்தின் படி, திராதா யுகத்தில் ராமரோடு தொடர்பு படுத்தப் படுகிறது. அதாவது ராமன் தனது 14 வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு, லட்சுமணன், சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை அந்நாட்டு மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதுவே தீபாவளி தினம் ஆனது. துவாபர யுகத்தில், பெரும் அட்டகாசம் செய்துவந்த நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தபோது, தான் இறந்த தினத்தை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அந்த அசுரன் கேட்டுக்கொண்டதால், அதன்படியே தீபாவளி கொண்டாடப்பட்டபடுகிறது.

இந்துக்களைக் காப்பியடித்து, மற்ற மதத்தினர் தீபாவளி கொண்டாட ஆரம்பித்தது:  பிறகு கலியுகத்தில் 3102 BCEக்குப் பிறகு தோன்றிய மதங்களும் அதைப் பின்பற்றி தங்களது  அதததலைவர்களுடன் இணைத்துக் கொண்டன. பௌத்த மதத்தினருக்கு புத்த பூர்ணிமாபோல, ஜைனர்களுக்கு அவர்களது கடைசித் தீர்த்தங்கரரான மகாவீரர், நிர்வாணம் அல்லது முக்தி அடைந்த நாள்தான் தீபாவளி! அதேபோல, சீக்கியர்களுக்கும் தீபாவளி ஒரு பண்டிகை நாள்தான். முகலாய மன்னர்களால் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த், தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 இந்து அரசர்களுடன் சிறையிலிருந்து தப்பி வந்த தினமாக சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். சிறையிலிருந்து தப்பி வந்த குரு ஹர்கோவிந்த் அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோவிலில் விளக்கை ஏற்றி மகிழ்ந்ததைக் குறிக்கும் விதத்தில் எல்லா சீக்கிய குருத்வாராக்களும் தீபாவளி அன்று ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன. வாண வேடிக்கைகளும், விருந்துகளும் சீக்கியர்களுக்கும் உண்டு. இதனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் மற்ற பகுதிகளில் புதிய கதை உருவாக்கப் பட்டு சொல்லப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும்கூட இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அவ்வாறே, வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன[3]. இப்பொழுது, கிருத்துவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே, நாளைக்கு, கிறிஸ்துவ “பண்டிதர்கள்” இதைப் பார்த்து தான், இந்துக்கள் தீபாவளி கொன்டாட ஆரம்பித்தனர் என்று கதை விடுவார்கள். அதை “பகுத்தறிவு’ இந்துவிரோதிகள் எடுத்த்க் கொண்டு கதை விட ஆரம்பிக்கலாம்.

இந்தியா, முழுவதும் கொண்டாடப் படும் பண்டிகை: மராட்டியம், குஜராத் பகுதிகளில் இது “தன திரயோதசி”, “தண்டெராஸ்” என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. அட்சய திருதியை போலவே தன திரயோதசி அன்றும் தங்கம், ஏனைய பொருட்கள் வாங்குவது சிறப்பு என்று நம்பப்படுவதுடன், வணிகர்களாலும் வியாபார நிலையங்களாலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால், நேபாளத்தில் “காக் திஹார்” என்றழைக்கப்படும் இந்நாளில் காகங்களே உணவளித்துப் போற்றப்படுகின்றன. வடநாட்டில், பொதுவாக “நரக சதுர்த்தசி” என்று அறியப்படும் இந்நாளே தமிழர்களால் தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது. அடுத்தநாள் அமாவாசையையே தீபாவளியாகக் கொண்டாடும் வடநாட்டவர், இந்நாளை “சோட்டி தீபாவளி” என்று அழைப்பதுடன், எண்ணெய்க்குளியல்  செய்து, புத்தாடை புனைந்து இந்நாளில் மகிழ்வர். நேபாளிகளோ “குகுர் திஹார்” என்ற பெயரில் இந்நாளில் நாய்களுக்கு உணவிட்டு அவற்றை வழிபட்டு மகிழ்வர்.

பெண்-தெய்வ வழிபாடாவும் கொண்டாடப் படுகிறது: “இலக்குமி பூசை” என்று பொதுவாகச் சொல்லப்படும் இந்நாளில் புத்தாடை புனைவதும், திருமகளைப் போற்றுவதும் பட்டாசு வெடித்து வாணவேடிக்கைகள் நிகழ்த்துவதும் முக்கியமான மரபுகள். தீபங்கள் ஏற்றுவது அன்று விசேடம். வடநாட்டின் சில  பகுதிகளில், கணவன்-மனனவியின் அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்காக “பலி பிரதிபதா” எனும் நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.  இருவரும் மாறிமாறித் திலகமிடுவதும், பரிசளிப்பதும் அன்றைய மரபுகள். உத்தரப்பிரதேசத்தில், இந்நாளில் “கோவர்த்தன பூசை” நிகழ்த்தப்பட்டு கண்ணன் வழிபடப்படுகின்றான். “அன்னகூடம்” என்ற பெயரில் பலவகைக் கறிகளுடன் சோறு சமைத்து மலைபோலக் குவிக்கப்பட்டு, கோவர்த்தன மலையைக் கண்ணன் தூக்கிய தொன்மம் நினைவு  கூறப்படுகின்றது. ஒடியா, பீகார், அசாம் மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளில் மட்டும் தீபாவளி, காளி பூசையாகக் கொண்டாடப்படுகின்றது. தேய்பிறை பதினான்காம் நாளை அவர்கள் “காளி சௌடஸ்” (காளி சதுர்த்தசி) என்று கொண்டாடுவதுடன், அமாவாசையன்று “சியாமா பூசை” என்ற பெயரில் காளிக்கு விழாவெடுக்கின்றார்கள்.

தென்கிழக்காசிய நாட்டுகளிலும் கொண்டாடப் படும் பண்டிகை: நேபாளத்தில் இலக்குமி பூசையுடன், கோமாதா பூசை கொண்டாடுவார்கள். நேபாளப் புத்தாண்டும், குஜராத், மராட்டியப் புத்தாண்டும் இந்நாளாக அமைகின்றது. தீபாவளித் திருநாள் இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மியான்மர் (பர்மா), மொரீஷியஸ், கயானா, சுரிநாம், மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி, போன்ற இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் நாடுகளில் எல்லாம் அரசு விடுமுறை நாளாக இருப்பதிலிருந்தே இந்தப் பண்டிகையின் முக்கியத்துவம் எத்தகையது என அறியலாம். ப்பானில் மூன்று நாள் கொண்டாட்டமாக தீபாவளி அமர்க்களப்படுகிறது. லேசியாவில் கொண்டாடப்படும் தீபாவளியின் பெயர்- ஹரி தீபாவளி. சிங்கப்பூரில் தீபாவளி அன்று மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடத்துவார்கள். தீபாவளியைச் சிறப்பித்து தபால்தலை வெளியிட்ட நாடும் சிங்கப்பூர்தான்! தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, ஜப்பான், போன்ற நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது.

கம்யூனிஸ விமர்சனம், ஆங்கிலேயர் தண்டனை, இந்துவிரோதமாக மாறியது: இனி, திகவின் சமாசாரத்தை கவனித்தால், ஈவேராவுக்கு ராமநாதன் பெருமளவில் “விசய தானத்தில்” உதவி வந்தார். இவருக்கு ஆங்கிலம், உலக ஞானம் எல்லாம் தெரியும். அவருடன் தான் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று வந்தார். ரஷ்யாவுக்குச் சென்று வந்த பிறகு, கம்யூனிஸ புத்தகங்களின் மொழிபெயர்ப்பு சுருக்கமாக “குடி அரசில்” வெளி வந்தன. ஆனால், ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்து, கைது செய்த போது, மன்னிப்பு கேட்டுக் கொண்டு, தண்டத்தைக் கட்டி அத்தகைய விமர்சனத்தை நிறுத்திக் கொண்டார். சில உதவியாளர்கள் இதிகாச-புராணங்களைப் படித்து அரைகுறையாக விசயங்களை சொல்லி வந்தார்கள். அதை வைத்து, அவரது எழுத்தாளர் குழுவை வைத்து, “குடி அரசில்”, எல்லாம் தெரிந்தது போல கட்டுரைகள் வெளியிட்டு கலாட்டா செய்து வந்தார்கள்.  இது இந்துவிரோதமாகி  “பகுத்தறிவு”, “நாத்திகம்” போர்வைகளில் வெளி வந்தன.1944ல் ஈவேரா, “சித்திர குப்தன்” பெயரில் வந்ததாக, ஒரு கதையை ஒவ்வொரு தீபாவளிக்கும் பிரசுரிப்பர்.

© வேதபிரகாஷ்

16-10-2022.


[1]  சில தமிழ்-சார்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, திரிபுவாதிகள், கார்த்திகை தீபவிழாவை வைத்தும் குழப்புவர். அப்படி பார்த்தால், “க்ஷிரா துவாதசி” என்று ஹீபாவளிக்குப் பிறகு, கர்நாடகாவிலும் அவ்வாறான பண்டிகை கொண்டாடுவர்.

[2]  சந்திர மாதம், சூரிய மாதம், சந்திர-சூரிய வருடம் என்ற கணக்கீடுகள் இருப்பது தெரிந்தவையே. அவை தெரியாதவர்கள் ஏதோ வித்தியாசம் இருப்பதாக, கற்பனையில் உளறும் வாதங்கள் தான் அத்தகைய திரிபுகள்.

[3] சீனி. வேங்கடசாமி, அயோத்திதாஸர்,  பரமசிவன், வேல்சாமி போன்றோர் சில புத்தகங்களைப் படித்து விட்டு, தலைகீழாக்கி, கல்லக்கிரமம் மறந்து, கருதுகோள்களின் படி, புனைந்துள்ள வாதங்கள் சரித்திர ரீதியில் இல்லாதவை, ஏர்புடைதல்ல, அவ்வகையில் திக-திமுகவினர் கதைகள் காழ்ப்பில், வெறுப்பில், தூஷணங்களில் உருவனவை, அவற்றில் வக்கிரத்தைத் தான் காண முடியும்.

இந்து நம்பிக்கை இல்லாத நாத்திக-பெரியாரிஸ ஸ்டாலின், மடாதிபதிகளுடன் சந்தித்து பேச்சு மற்றும் ஆதீனங்கள் மெச்சுதல்! (1)

ஏப்ரல் 28, 2022

இந்து நம்பிக்கை இல்லாத நாத்திக-பெரியாரிஸ ஸ்டாலின், மடாதிபதிகளுடன் சந்தித்து பேச்சு மற்றும் ஆதீனங்கள் மெச்சுதல்! (1)

17-04-2022 அன்று மு..ஸ்டாலினை சந்தித்த ஆதீனங்கள், மடாதிபதிகள்: பொதுவான இந்துக்கள் இந்துமத விரும்பிகள், இந்துத்துவ ஆராய்ச்சியாளார்கள், கீழ்கண்ட சந்நியாசிகள் / ஆதீனங்கள் / மடாதிபதிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்:.

  1. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  2. திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனம் ஆகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்,
  3. ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்,
  4. தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்,
  5. தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,
  6. ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய குருமகா சன்னிதானம்,
  7. ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்,
  8. ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி 28ஆவது குருமகா சன்னிதானம்,
  9. அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜஜீயர்,
  10. திரு கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள்,
  11. ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஆகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள் 29ஆவது குருமகா சன்னிதானம்,
  12. ஸ்ரீ காமாட்சிதாஸ் சுவாமிகள்

ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்துப் பேசினார்கள். இவர்கள் யார், இவர்களை மட்டும் முதலமைச்சர் தேர்ந்தெடுத்து பேச வரவழைக்கப் பட்டரா, அல்லது வந்தார்களா, மற்றவர்கள் வரவில்லையா? தவிர கடந்த ஆண்டுகள் இவர்களில் சிலர், சிலர் கிருத்துவர், “சைவர் இந்துக்கள் அல்ல” என்று அறிவித்த மற்றும் இதர மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளனர். எனவே, இதைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.

மடத்து நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பல்வேறு மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் – திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், துலாபார ஆதீனம், அவிநாசி மடாதிபதி, மலையப்ப ஆதீனம் உள்பட 11 ஆதீனங்கள், 27-04-2022 (புதன் கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தெய்வீகப் பேரவையை மீண்டும் நடத்த வேண்டும், மடத்து நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்[1].  அறநிலையத்துறை திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர் என்று தினகரன் கூறுகிறது[2]. “மடத்து நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,” என்பது திகைப்பாக இருக்கிறது. அப்படியென்றால், பட்டா இல்லாமலா மடத்து நிலங்கள் உள்ளன என்ற கேள்வி எழுகின்றது! முழு விவரங்கள் கொடுக்காமல், இவ்வாறு ஒரு வரி செய்தி போட்டிருப்பது, இன்னொரு முறையில் கோவில் கொள்ளை நடக்கப் போகிறதோ என்ற அச்சம் எழுகிறது. ஏற்கெனவே கோவில் நிலங்கள் அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவற்றிற்கு பட்டாக்கள் இல்லையா என்ன? இன்னொரு ஊடகம், “பட்டா மாறுதல்” என்கிறது, ஆக, நிச்சயமாக, இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

கருணாநிதியின் “தெய்வீகப் பேரவை”: சந்திப்புக்குப் பின், தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் கூறும்போது, ‘‘தெய்வீகப் பேரவையை மீண்டும் நடத்தவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளோம்[3]. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சியில் சைவ, வைணவம் இணைந்து ஆன்மிக பேரவை ஒன்றை உருவாக்கி மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆதீனங்களிடம் குறைகளை கேட்டு நிவா்த்தி செய்து வந்தார். அதன் பிறகு நீண்ட காலம் இந்தப் பேரவையின் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தது. தங்களது ஆட்சியில் மீண்டும் ஆன்மிக பேரவை உருவாக்க வேண்டும்,” என ஆதீனங்கள் வலியுறுத்தினா்[4]. கருணாநிதியின் “தெய்வீக” நம்பிக்கை எல்லோரும் அறிந்தது தான்.நோன்பு-உபவாசம், ராமர்-பாலம், இந்து-திருடன் போன்ற தூற்றல்கள் தெரிந்தது தான். ஆக, இதில் எங்கு எவ்வாறான “தெய்வீகம்” வந்தது என்று தெரியவில்லை. இனி, ஸ்டாலின் தலைமையில், “தெய்வீகப் பேரவை” உருவானால், அது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அது “மாங்கல்யம் தந்துனானே”வா, இன்னொரு வசைப்பாடலா என்று பார்க்க வேண்டும்.

மே5 மானிய கோரிக்கை விவாதத்திற்கு ஒத்திகையா?: இந்தச் சந்திப்பின்போது அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அறநிலையத் துறை செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்[5]. மே 5-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை வர உள்ளது, அதன் பேரில் விவாதமும் நடக்கும்[6]. நிலையில், முதல்வரை சந்தித்த குருமார்கள் தங்கள் மடங்களின் தேவைகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கோரிக்கை விடுத்தனர்[7]. திருக்குவளையில் மரகத லிங்கத்தை திருக்கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அரசைப் பொறுத்தவரை ஆன்மீக அரசுதான்‘‘ என்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறும்போது, ‘‘தஞ்சையில் எதிர்பாராமல் நடந்த விபத்து அனைவரின் உள்ளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளோம்’’ என்றார்.

“முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஆன்மிக அரசு..” : தி.மு.க அரசை பாராட்டி புகழாரம் சூட்டிய ஆதீனங்கள்: திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜக -அதிமுக அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன[8]. அதிலும் குறிப்பாக பாஜக ஸ்டாலின் அரசு மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறது[9].  தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. மீண்டும் மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கி விட்டது. என விமர்சித்து வரும் அதே நேரத்தில் திமுக அரசு இந்து விரோத அரசு என்றும் அடிக்கடி குறை கூறி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராகவே இவ்வாறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வரை சந்தித்த ஆதினங்கள் தமிழக அரசின் நிர்வாகத்தை பாராட்டியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு ஆன்மிக அரசு எனவும் தெரிவித்தார்[10].  ஆக, ஒரு அரசியல் கணக்கு, சமன்பாடு ரீதியில், இக்கூட்டம் கூட்டப் பட்டிருக்கிறது என்றாகிறது. நாத்திகம்-இந்துவிரோதம் கொண்டவர்கள் ஆட்சிசெய்வது இருப்பதோடு, கோவில் விவகாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு, பிரச்சினைகள் செய்து வருவது செய்திகளாக, நீதி மன்ற தீர்ப்புகள் மூலம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நாத்திகம்-இந்துவிரோத அரசு, பெரியாரிஸ-அடிவருடி ஆட்சி, சிலைகள்-உடைத்த ஆளுமை முதலிய குணாதிசயங்கள் கொண்ட அரசு, ஆன்மீக அரசு என்பதாகாது.

© வேதபிரகாஷ்

28-04-2022


[1] தமிழ்.இந்து, தலைமை செயலகத்தில் முதல்வர் மு..ஸ்டாலினுடன் ஆதீன குருமார்கள் சந்திப்பு, செய்திப்பிரிவு, Published : 28 Apr 2022 04:40 AM; Last Updated : 28 Apr 2022 04:40 AM.

[2] தினகரன், தமிழக முதல்வர் மு..ஸ்டாலினுடன் ஆதீனங்கள் சந்திப்பு: அறநிலையத்துறை திட்டங்கள் குறித்து ஆலோசனை, 2022-04-28@ 00:02:38.

https://www.dinakaran.com/news_detail.asp?Nid=761110

[3] தினமணி, மு..ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மிக அரசு: தருமபுரம் ஆதீனம் புகழாரம், By DIN  |   Published On : 28th April 2022 02:16 AM  |   Last Updated : 28th April 2022 03:24 AM.

[4] https://www.dinamani.com/tamilnadu/2022/apr/28/dharmapuram-athenam-says-tamil-nadu-is-a-spiritual-state-3834785.html

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/793184-cm-stalin-meets-various-aadheenams-of-tamilnadu.html

[6] மாலைமலர், தலைமைச் செயலகத்தில் ஆதீனங்களுடன் முதல்வர் மு..ஸ்டாலின் இன்று ஆலோனை, பதிவு: ஏப்ரல் 27, 2022 09:36 IST

[7] https://www.maalaimalar.com/news/district/2022/04/27093639/3717043/Tamil-news-Chief-Minister-MK-Stalin-today-Alonso-with.vpf

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அரசு ஆன்மீக அரசு.. பாஜவை அலறவிட்ட 11 ஆதீனங்கள், Ezhilarasan Babu, Chennai, First Published Apr 27, 2022, 12:59 PM IST, Last Updated Apr 27, 2022, 12:59 PM IST.

[9] https://tamil.asianetnews.com/politics/stalin-led-government-is-a-spiritual-government-11-adhinams-praised-dmk-government-shocking-to-bjp-razm5a

[10] தமிழ்.நியூஸ்.18, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆன்மீக அரசு: தருமபுர ஆதினம், NEWS18 TAMIL, LAST UPDATED : APRIL 27, 2022, 11:52 IST.

இந்துவிரோதிகள் மைலாப்பூரில் பன்றிக்கு பூணூல் போட்டால், துலுக்கர், சங்கர மடம் எதிரில் பூணூலை அறுப்போம் என்று போராட்டம் நடத்துவார்களாம்! (1)

பிப்ரவரி 23, 2022

இந்துவிரோதிகள் மைலாப்பூரில் பன்றிக்கு பூணூல் போட்டால், துலுக்கர், சங்கர மடம் எதிரில் பூணூலை அறுப்போம் என்று போராட்டம் நடத்துவார்களாம்! (1)

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்பு போராட்டம்: இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் ரஹீம் வெளியிட்ட அறிக்கையில்[1], “ஹிஜாப்-பை வைத்து மதக்கலவரம் செய்ய நினைக்கும் பிராமண ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு எதிராக, காஞ்சி சங்கர மடத்திலிருந்து கோட்சேயின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுப்பு போராட்டத்தைத் தொடர்வோம். பாபாவின் மாணவர்களாகிய எங்களது பூணூல் அறுக்கும் இந்த போராட்டம் இஸ்லாமிய சமூகத்தின் தற்காப்பு போராட்டமே ஒழிய யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை,” என்று தெரிவித்திருந்தார்[2]. “இஸ்லாமிய சமூகத்தின் தற்காப்பு போராட்டம்” எப்படி பிராமணர்களின் உரிமைகள், பாதுகாப்பு போன்றவற்றிற்கு எதிராக இருக்கக் கூடும்? உண்மையில் இத்தகைய வெறுப்பு பேச்சு, குரூர மிரட்டல் மற்றும் தீவிரவாத கூக்குரலுக்கு, தமிழக அரசு சட்டப் படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்று நடக்கவில்லை. கோட்ஸே வாரிசுகள் என்று குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் ஒன்றும் காந்தியின் வாரிசுகள் இல்லை. காந்தியை இம்சித்து, “பாகிஸ்தானை” உருவாக்கிய துரோகியின் வாரிசுகள். காந்தியின் ஒரு வாரிசே துலுக்கனாக மாறிய சோகக்கதையும் உள்ளது.

காஞ்சி சங்கர மடத்துக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: பல்வேறு இடங்களில் ஹிஜாப் சர்ச்சைகள் வெடித்து வருவதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது[3]. கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல் மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்தபெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஹிஜாப்விவகாரத்தில் ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சங்கர மடத்தின் முன் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது[4]. இதன் பின்னர் சங்கர மடத்துக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சங்கர மடம் என்று குறிப்பிட்டால் அதிக கவன ஈர்ப்பு கிடைக்கும், அதே நேரத்தில் திசைத் திருப்பி, வேறு ஒரு இடத்திலும் தாக்க்தல் நடத்தலாம். ஆக, இவ்விவகாரம் உளவுத்துறை வரைக்குக்குச் சென்றுள்ளது தெரிகிறது. அதாவது, துலுக்கர் தயாராக இருந்தனர் என்றாகியது. இல்லையென்றால், மற்ற துலுக்கர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்காது. மேலும், தேர்தல் சமயம், ஓட்டு எண்ணிக்கை போன்றவற்றால் கட்டுப் படுத்தப் பட்டது எனலாம்.

 காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரே நடக்கவுள்ள பூணுால் அறுக்கும் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: “காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரே நடக்கவுள்ள பூணுால் அறுக்கும் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’ என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, கோரிக்கை விடுத்து உள்ளார்[5]. இது எதோ கொஞ்சல்-கெஞ்சல் பாணியில் கூட இல்லை, பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் போக்காக உள்ளது. அவரது அறிக்கை[6]: “பூணுால் அணிவது, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். இலக்கியங்களில் பூணுால் குறித்த குறிப்புகள் உள்ளன. பிராமணர்கள் மட்டுமின்றி, பல சமுதாய மக்கள் பூணுால் அணிந்து வருகின்றனர். இந்தியா மதசார்பற்ற நாடு. இங்கு பலதரப்பட்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சில பிரிவினைவாத சக்திகள், சகோதரர்கள் இடையே பிளவை ஏற்படுத்த, சதிகளை செய்து வருகின்றனர். இதை உணர்ந்து கொள்ளாமல், பூணுால் அறுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக சிலர் அறிவித்திருப்பது, மனித சமுதாயத்திற்கு எதிரான செயலாகும்.

எந்த மதத்தையும் இழிவுப்படுத்தக் கூடாது என்பது, இறைதுாதர் நபிகள் நாயகம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, அறிக்கை கூறுவது,ஹிஜாப் விவகாரத்தில், ஹிந்து, முஸ்லிம் சகோதரர்கள் இடையே, சில தீய சக்திகள் மதக்கலவரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று, சதிச் செயலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில், முஸ்லிம் மக்களின் நியாயத்தை, அமைதியான முறையில், மாற்று சமூகத்தினருக்கு நாம் எடுத்து சொல்ல வேண்டும். பிற சமுதாயத்திற்கு எதிரான செயலில் ஈடுபடுவதை, ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த மதத்தையும் இழிவுப்படுத்தக் கூடாது என்பது, இறைதுாதர் நபிகள் நாயகம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம். அதன்படி மாற்று மத சகோதரர்களின் சடங்குகளையும், வழிபாட்டு முறைகளையும் மதிக்க வேண்டியது முஸ்லிம் மக்களின் கடமை.நாம் எதிர்க்க வேண்டியது, நம்மிடையே மதமோதலை ஏற்படுத்த துாண்டும், மதவாத சக்திகளுக்கு எதிராகத்தானே தவிர, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக அல்ல. எனவே, காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரே நடக்க உள்ள, பூணுால் அறுக்கும் போராட்டத்தை, திரும்பப் பெற வேண்டும்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். “எந்த மதத்தையும் இழிவுப்படுத்தக் கூடாது என்பது, இறைதுாதர் நபிகள் நாயகம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம்,” என்றால் எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.

பூணூல் அறுக்கு போராட்டம் கூடாது என்று ஏன் சொல்லவில்லை?: “காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரே நடக்கவுள்ள பூணுால் அறுக்கும் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,” என்று அறிக்கை விடுகிறார்களே தவிர, “பூணுால் அறுக்கும் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,” என்று கூறவில்லை. அவ்வளவு ஏன், அது கூடாது என்ற கருத்து கூட அவர்களது அறிக்கைகளில் பிரதிபலிக்கவில்லை. ஆக, அவர்களது கள்ளத்தனமும் வெளிப்படுகிறது. ஸ்டாலினிடமிருந்து கண்டிப்பு, கண்டனம் வரவில்லை, ஆனால், “திராவிட மாடல்,” என்ற பேச்சு தான் வந்துள்ளது. ஆக, தாக்கப்படும் இலக்கு இன்னும் இருக்கிறது, எண்ணமும் உறுதியாக உள்ளது, ஒத்தி வைக்கப் பட்டுள்ளது அல்லது இடம் மாற்றப் பட்டுள்ளது போலும்.

பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்திருப்பது சமூக அமைதியை குலைக்கும் செயலாகும்: தமிழகத்தில் பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்திருப்பது சமூக அமைதியை குலைக்கும் செயலாகும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்[7]. இதுகுறித்து அவர் 21-02-2022 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது[8]: “கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கும் கர்நாடகபாஜக அரசை எதிர்த்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், எழுத்தாளர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[9]. சமூக வலைதளங்களில் இந்துக்கள் தமது குழந்தை களுக்கு ஹிஜாப் அணிவித்து புகைப்படம் எடுத்து பதிவேற்றி ஆதரவு தெரிவிக்கின்றனர். ஹிஜாப் வழக்கில் வாதாடியவர்களில் பிராமணர் சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் இருந்தார் என்பதே இங்கு சமூக நல்லிணக்கம் நிலைத்து நிற்பதற்கான சாட்சியாக உள்ளது[10]. இந்தச் சூழலில் பூணூல் அறுக்கும் போராட்டம் என சிலர் அறிவித்திருப்பது சமூக அமைதியை சீர்குலைப்பதாக உள்ளது. மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பதில் பகைமையை கூர் தீட்டும் இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது. அனைத்து மக்களாலும் புறந்தள்ளப் படவேண்டியது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்,” இவ்வாறு அவர் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

23-02-2022


[1] விகடன், பூணூல் அறுப்பு போராட்ட விவகாரம்தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டனம்!, V.M. மன்சூர் கைரி,  Published:Yesterday at 9 AMUpdated:Yesterday at 9 AM

[2] https://www.vikatan.com/government-and-politics/controversy/poonol-cutting-protest-brahmin-association-condemnation

[3] தமிழ்.இந்து, காஞ்சி சங்கர மடத்துக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு, செய்திப்பிரிவு, Published : 22 Feb 2022 05:35 am; Updated : 22 Feb 2022 05:35 am.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/770097-police-security-fir-sankara-madam-~XPageIDX~.html

[5] தினமலர், பூணூல் அறுக்கும் போராட்டத்தை திரும்ப பெற முஸ்லிம் லீக் வலியுறுத்தல்,  Updated : பிப் 22, 2022  09:49 |  Added : பிப் 22, 2022

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2967340

[7] தமிழ்.இந்து, பூணூல் அறுப்பு போராட்டம் சமூக அமைதியை குலைக்கும் : ஜவாஹிருல்லா கண்டனம், செய்திப்பிரிவு, Published : 22 Feb 2022 06:10 AM; Last Updated : 22 Feb 2022 06:10 AM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/770148-jawahirullah-mmk.html

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சமூக அமைதியை சீர் குலைக்கவே பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்பு; ஜவாஹிருல்லா கண்டனம், Written by WebDesk, February 22, 2022 11:06:09 am.

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/jawahirullah-condemns-poonol-slaughter-struggle-in-tamilnadu-414921/

ரங்கநாதன்-ராமசாமி, ரங்கநாதன் பிள்ளை-ராமசாமி நாயக்கர், குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (2)

ஒக்ரோபர் 6, 2020

ரங்கநாதன்-ராமசாமி, ரங்கநாதன் பிள்ளை-ராமசாமி நாயக்கர், குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (2)

செக்யூலரிஸ பாணியில் சென்ற அடிகள் திமுக வழியில் சென்றது: 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் பக்தவச்சலம் திருமறை தமிழ் அர்ச்சனையைத் தொடங்கி வைத்தார். சைவ, சமய சின்னங்களை அணிந்தபடியே பெரியார் கூட்டிய நாத்திகர் அவைகளிலும், கிறுத்துவ, இசுலாமிய சமய அமைப்புக் கூட்டங்களிலும் சென்று கலந்துகொண்டவர்களில் முதல் சமயத் தொண்டர் குன்றக்குடி அடிகளார். 1969ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி பாரி விழாவுக்கு வந்த பிறகு, அவரது கோரிக்கையின் பேரில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பதவியை ஏற்றுக்கொண்டார் அடிகளார், என்றெல்லாம் விவரிக்கப் படுகின்றன. இதிலிருந்து தான், இவரது அரசியல் தாக்கத்தினால், இவரது நண்பர்களே, வேறுபட்டனர். ஏனெனில், அவரது அதிகாரத்தால், பெரியார், திகவினர் செய்து வந்த இந்துவிரோத செயல்களை அவரால் தடுக்க முயலவில்லை. இங்கு சைவவிரோதம் என்றும் அவர் புரிந்து கொண்டு எதிர்க்கவில்லை.

திமுக சித்தாந்தத்துடன் இணைந்து செயல்பட்டது: இதனால், பிரச்சினையைத் திசைத் திருப்ப, பிறப்பில் வேறுபாடின்றி அனைவருக்கும் பயிற்சி கொடுத்து, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டு மென்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி ஆரம்பித்தார். இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வழி செய்வதற்கான மசோதாவை தி.மு.க. அரசு கொண்டுவந்தது. சட்ட மன்றத்தில் இந்த மசோதாவை எதிர்க்கும் படி காஞ்சி காமகோடி பீடத்திலிருந்து குன்றக்குடி அடிகளாருக்கு கோரிக்கை வந்தது. ஆனால் அந்த மசோதாவை எதிர்ப்பதற்குரிய நிலையில் தான் இல்லையென்று துணிவோடு தைரியமாக வெளிப்படுத்தினார் அடிகளார். அதாவது, மடாதிபதி என்பதை விட சிறந்த அரசியல்வாதி என்பதை உறுதி செய்தார். இது, திராவிடத்துவ வாதிகள் இவரை காஞ்சிமடத்திற்கு எதிராக செயல்பட திட்டமிட்டது தெரிகிறது. அதாவது, பார்ப்பன எதிர்ப்பு என்பது, இதன் மூலம் வெளிப்படுகிறது. ஒரு மடாதிபதியாக இருந்தாலும், இந்துவிரோத கூட்டினால், இவர் அவர்கள் சொற்படி நடந்து கொண்டார் என்றே தெரிகிறது. மேலும் நாத்திக-இந்துவிரோதிகளின் இவரது கூட்டினால் தான், காஞ்சி மடாதிபதி விலக நேர்ந்தது என்பது, அடிகளின் விளக்கத்திலிருந்தே புலனாகிறது[1]. உண்மையில் சைவத்தை-இந்துமதத்தைக் காக்கிறேன் என்றால், அத்தகைய மதவிரோதிகளின் சகவாசத்தை விட்டிருக்க வேண்டும், ஆனால், செய்யவில்லை, நட்பு பாராட்டினார்.

அப்பர் சிலை மறுப்பும், அடிகளின் சமரசமும்: அடிகளின் நண்பர், ஈவேரா 10-04-1965 அன்று கம்ப ராமாயணத்தைத் தூஷித்து எரிக்கவும் செய்தார். 1968ல் ‘உலகத் தமிழ் மாநாட்டில் தமிழறிஞர்களின் சிலைகளை த் திறக்கும் போது அப்பர் அடிகள் சிலையையும் திறக்கும்படி கேட்டுக் கொண்டபோது[2], அண்ணா மற்றும் திகவினர் மறுத்தனர். உண்மையினை நேரடையாக பதிவு செய்யாமல், மறைமுகமாக, அடிகள் தமது நூலில் எழுதி வெளிப்படுத்தியுள்ளார். “கலந்துரையாடலின் முடிவில் அறிஞர் அண்ணாவிடம் ஒரு தயக்கம் வெளிப்பட்டது,” என்கிறார். அது இந்து எதிர்ப்பு என்பது, மெத்தப் படித்த மடாதிபதிக்கு தெரியாதா என்ன? ஒரு கிருத்துவப் பாதிரியின் ஆணைக்கு ஏற்ப, கிருத்துவர்களின் சிலைகள் எல்லாம் இடம் பெற்ற நிலையில், அப்பரின் சிலை மறுக்கப் பட்டது, திராவிடத்துவ வாதிகளின் விரோதம் நன்றாகவே வெளிப்பட்டது. இருப்பினும் அடிகள் அரசியலில் வீழ்ந்து விட்டதால், அமைதியாகி விட்டார். பிறகு பேரவை உறுப்பினர் பதவியும் கிடைத்தது. உண்மையான கடவுள் நம்பிக்கையாளர், இந்து, சைவர், மடாதிபதி என்றால், இதுவிரோதிகளின் போக்கு அவருக்குத் தெரிவில்லை, புரியவில்லை என்பதல்ல, ஆனால், வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக, அவர்களிடம் கட்டுண்டு இருந்தார் என்பது தெரிகிறது.

குன்றக்குடி-ஈவேரா சந்திப்பு: அதன் பிறகு பெரியாருக்கும் அடிகளாருக்குமிடையே உரையாடல்கள் துவங்கின[3]. அடிகளின் எழுத்துப் படி, அவர்கள் சென்னியப்ப முதலியார் வீட்டில் ரகசியமாக சந்தித்து, பல மணிநேரம் பேசினர் என்றுள்ளது, ஆனால், என்ன பேசினர் என்று தெரியவில்லை. “அருள்நெறித் திருக்கூட்ட இயக்கத்தின் வளர்ச்சி, தமிழ் இனத்தில் இருவேறு பிளவுகளை உண்டாக்கித் தமிழின மேம்பாட்டைத் தடுத்து விடுமோ என்று கருதிய சில சான்றோர் நம்மிடம் தூது வந்தனர். 1954-இல் நாமும் பெரியார் அவர்களும் தமிழறிஞர்களின் ஏற்பாட்டின்படி ஈரோட்டில் திரு. சென்னியப்பச் முதலியார் அவர்கள் வீட்டில் இரகசியமாகச் சந்தித்தோம். சிலமணி நேரங்கள் பயந்தரத்தக்க வகையில் கலந்துரையாடினோம். அன்று தலைவர் பெரியார் அவர்கள் பழங்கின பாங்கு அவர் “பெரியார்” என்பதை உறுதிப் படுத்தியது. அதன்பிறகு, தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் விழாவைத் திருச்சி பொன்மலைப்பட்டியில் எடுத்தனர். விழாவுக்கு நம்மை அழைத்தனர். நாமும் இசைவு தந்து விழாவுக்குச் சென்றிருந்தோம். தலைவர் பெரியார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திப் பாராட்டினோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்[4]. இதனால், இவருக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர் இந்துவிரோதிகளுடன் நெருங்கி பழகுவது நல்லதல்ல என்றும் எச்சரித்தனர். இவர் மாறதலால் தான், இவரது நண்பர்கள், இவரை விட்டு விலக நேர்ந்தது.

குன்றக்குடிஈவேரா சந்திப்புதிராவிடத்துவ வாதிகளின் விளக்கம்: இதை திராவிடத்துவ வாதிகள் இவ்வாறு விவரிக்கின்றனர், “பெரியார் கடவுள், மூடநம்பிக்கை, ஜாதிப்பிரிவினை, தீண்டாமை குறித்து தொடர்ந்து பேசினார். பெரியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்த குன்றக்குடி அடிகளார், பேச வார்த்தைகள் இன்றி அமைதியாக இருந்தார். இது வரை ஆன்மீக பெரியோர்களின் சொற்பொழிவைக் கேட்டு அப்பர், சுந்தரர், ராமானுஜர், ராமலிங்க அடிகள் போன்றவர்களின் நூல்களைப் படித்த அடிகளார், பகுத்தறிவு பகலவனிடமிருந்து அருவி போல் தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்த கருத்துகளை எதிர் வாதம் செய்யாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டு உள்வாங்கிக் கொண்டிருந்தார்,” என்று விளக்கம் கொடுத்தனர். பேச்சின் முடிவில் பெரியார் நகைச்சுவையாக, “எனக்கும் கடவுளுக்கும் எந்த ஒரு சச்சரவும் இல்லை. என்று நான் கடவுளைக் கண்களால் காண்பேனோ அன்று நான் நம்பிக் கொள்கிறேன்,” என்று கூறினார். “அதுவரை மனிதகுலத்திற்கு தொண்டாற்றுவேன்” என்று பெரியார் கூறினார். “அது போன்றே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு இயக்கம் மக்களிடையே மலிந்துள்ள முட நம்பிக்கைகளை மாற்றுவதின் மூலமே அவர்களிடத்தில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் என்னும் இலட்சியத்துடன் நடைபோடுவதையும், பெரியார் அவர்களையே நேரில் கண்டு உரையாடித் தெளிந்தார்,” என்று குறிப்பிட்டுள்ளது வியப்பாக உள்ளது[5].  ஏனெனில், இறக்கும் வரை பெரியாரால் கடவுளைப் பார்க்க முடியவில்லை. 1995ல் இவர் இறந்த போதும், இவர் கடவுளைப் பார்த்தது மாதிரி குறிப்பு இல்லை. ஆகவே, நாத்திகத்தால், நாத்திகக் கூட்டால், இருவருக்கும் ஒரே நிலை ஏற்பட்டது போலும்.

© வேதபிரகாஷ்

05-10-2020


[1]  குன்றக்குடி அடிகள், குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை , பகுதி. 15, பக்கம்.28-29

[2] 1968-ல் உலகத் தமிழ் மாநாட்டு முயற்சி நடந்தது! மாநாடு தொடர்பாக முதல்வர் அறிஞர் அண்ணாவை நாம் சந்தித்தோம். மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் முதலியோர் சங்க உறுப்பினர்களாக அப்போது இருந்தனர். தலைசிறந்த தமிழறிஞர்களைக் கொண்ட இந்தத் திருப்புத்துார் தமிழ்ச் சங்கம் டிசம்பரில் கூடியது. இந்தக் கூட்டத்தில், ‘உலகத் தமிழ் மாநாட்டில் தமிழறிஞர்களின் சிலைகளைத் திறக்கும் போது அப்பர் அடிகள் சிலையையும் திறக்கும்படி தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வது என்று தீர்மானம் நிறைவேறியது. முதலமைச்சர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து இந்தத் தீர்மானத்தைத் தந்து எடுத்துக் கூறி இசைவுபெறும் பணியைத் திருப்புத்துTர் தமிழ்ச் சங்கம் நம்மிடம் ஒப்படைத்தது. இதற்காக நாம் சென்னைக்குச் சென்றோம்……. அப்பர் அடிகள் பற்றிய கலந்துரையாடல் நீண்டது. கலைஞர், “அப்பர் அடிகள் சாதிகளையும் எதிர்த்தவர்” என்று சுருதி கூட்டினார். கலந்துரையாடலின் முடிவில் அறிஞர் அண்ணாவிடம் ஒரு தயக்கம் வெளிப்பட்டது. குன்றக்குடி அடிகள், குன்றக்குடி அடிகளார் நூல்வரிசைபொது, தொகுதி.16, பக்கங்கள்.121-122.

தமிழ், தமிழில் பேசி, தமிழக மக்களின் மூளையை மழுங்கடித்து, ஆட்சி-அதிகாரம் பெற்று, மக்களை ஏமாற்றியதும், ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை, பாரம்பரியம் முதலியவற்றிற்காக தமிழ் வசனம் பேசி நடித்ததும்

[3] The Hindu, The atheist and the saint , by A. R. Venkatachalapathy, Published: September 16, 2016 01:14 IST | Updated: September 16, 2016 03:45 IST  September 16, 2016.

Soon the two were left alone to have a frank discussion. Periyar launched a diatribe against god and religion which sanctioned caste-based oppression and untouchability. His impassioned outburst left Adigalar speechless. What answer can I provide, he wondered. Mulling over the chasm between precept and practice, he consoled himself that if only the ideas of the great Tamil saints Appar, Ramanuja and Ramalinga Adigal had been practised, there would have been no need for a Periyar. Finally, Periyar said: “What personal quarrel do I have with god? I have not even set my eyes on him. My objective is that the indignities heaped on men should be wiped away.” “Let’s work together,” replied Adigalar. “But will your traditions give room for such cooperation?” asked Periyar. “Traditions are meant to change!” responded an optimistic Adigalar.

http://www.thehindu.com/opinion/op-ed/on-the-friendship-between-kundrakudi-adigalar-and-periyar/article9111692.ece

[4]  குன்றக்குடி அடிகள், குன்றக்குடி அடிகளார் நூல்வரிசைபொது, தொகுதி.16, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002, பக்கம்.26-27.

[5]  குன்றக்குடி நூல் தொகுப்பு, 16, பக்கம்.539.

இந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்- இது தேர்தல் நேரம்! [3]

ஏப்ரல் 2, 2019

இந்துவிரோத திகதிமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்இது தேர்தல் நேரம்! [3]

Veeramani condemned, Charu Nivedita-2

இந்து திருமணங்களை விமர்சிக்கும் ஸ்டாலின்[1]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[2], “அடுத்து, இந்து திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம் என்கிறார் ஸ்டாலின். எப்போது ஸ்டாலின், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார் என, தெரியவில்லை. அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது? வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா? தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா? தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், .பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள்!”

June 2018, SriRangam temple, Stalin, priest apply paste-Stalin removed-2

ஜெயலலியாவின் இறப்பை அரசியலாக்கியது[3]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[4], “உண்மையில் பார்த்தால், ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தின் போது, கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருமே, .தி.மு..,வை வெறுத்தனர். ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு பெட்டிக்கடைக்கு போய் வெற்றிலை பாக்கு வாங்கினாலே, அது, ‘சிசிடிவியில் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு மனிதர்களின் அந்தரங்கமே காணாமல் போய், எல்லாமே காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஜெ.,வின் உடல் மட்டும், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது. காலை வெட்டி விட்டனர்; ‘எம்பார்மிங்பண்ணின உடம்பு என்றனர். எல்லாமே யூகங்கள்; மர்மங்கள். இவை அனைத்தும், மாயாஜால கதைகளில், ராஜா ராணி கதைகளில் வருவது போலத்தான் நடந்தது. மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே போயினர். ஜெ.,வின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தையும், ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தி.மு..,வை போல, .தி.மு.., அல்ல. தி.மு..,வுக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்கிறது. தலைமையில் யார் இருந்தாலும் சரி, தி.மு.., காரன், தி.மு.., காரன் தான். குடும்பமே, தி.மு..,வில் இருக்கும். அப்பன், மகன், பேரன் என்று, தலைமுறை தலைமுறையாக, தி.மு..,வில் இருப்பர். ஆனால், .தி.மு..,வுக்கு அப்படிப்பட்ட அடித்தளம் உண்டா என்பது சந்தேகமே.”

Stalin visited temple- 2015

அதிமுகவின் அணுகுமுறை, ஸ்டாலினின் எதிர்மறை போக்கு[5]: “எம்.ஜி.ஆர்., ரசிகர்களே, .தி.மு..,வில் இணைந்தனர். ‘அங்கே, எம்.ஜி.ஆர்.,தான் எல்லாம்; அவருக்கு பின், .தி.மு..,வே இருக்காதுஎன, தி.மு..,வினர் நினைத்தனர். நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின், ஜெ., வந்தார். ஒரே தலைவர்; அவர் வைத்ததுதான் சட்டம்; அவரே கட்சி; அவரே எல்லாம். ஜெ.,க்குபின், .தி.மு.., இருக்காது என, தி.மு..,வினர் நினைத்தனர். நானும், அப்படித்தான் நினைத்தேன். ஆனால். ஜெ., இருக்கும் போது, யாருக்குமே தெரியாத, .பி.எஸ்., இன்று முதல்வராக நிலைத்து விட்டார். மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர். இதற்கு, மூன்று காரணங்கள். மக்களின் மறதி; ஸ்டாலினின் வாய்; மூன்றாவது, ‘எனக்கு எல்லாம் தெரியும்என்ற மனோபாவம் இல்லாமல், .பி.எஸ்., அதிகாரிகளை வைத்து, காரியம் சாதிக்கிறார். மக்களுக்குத் தொந்தரவு இல்லை. இருந்தாலும், என்னால் முந்தைய தேர்தல்களை போல, இந்த முறை முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. காரணம், மக்கள் ஒரு விரக்தியான நிலையில் இருக்கின்றனர். யாருக்கு ஓட்டுப் போட்டாலும், மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன.” -சாருநிவேதிதா, எழுத்தாளர்[6].

veeramani remarks - news today

2019ல் இந்துத்துவாதிகளுக்கு ஏன் திடீரென்று ரோஷம், கோபம் வந்துள்ளது?: ஆக இவையெல்லாமே தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொதிக்கும், குதிக்கும், பொங்கும் போக்கு தான் தெரிகிறதே தவிர, என்னடா, ஶ்ரீகிருஷ்ணரை இவ்வாறு தூஷிக்கிறார்களே என்று பொங்கிய்யதாகத் தெரியவில்லை. பகவத் கீதை மீது கை வைத்து, நீதிமன்றங்களில் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், வருடா வருடம், அக்கயவர்கள் தூஷித்துக் கொண்டிருக்கும் போது, இவ்வருடம் தான், இவர்களுக்கு, சூடு, சொரணை, ரோஷம், மானம் எல்லாம் வந்தது போல இருக்கிறது. பணம், பதவி, புகழ், விளம்பரம் போன்ற ஆதாயங்களுக்காக, அக்கயவர்களுடனே கூட்டு வைத்துக் கொண்டனர், தேர்தல் போது, பிரச்சாரமும் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஶ்ரீகிருஷ்ண தூஷணத்தை எதிர்க்க வேண்டும் என்று இவர்களில் எவருக்கும் தோன்றவில்லை போலும். பதவியைப் பெற்ற இந்துத்துவ வக்கீலுக்கும் தோன்றவில்லை போலும். ஒரு வேளை வழக்குகள் கிடைக்காது, காசு கிடைக்காது என்று ஒதுங்கி விட்டனர் போலும்.

DK Veeramani hate speech 28-03-2019

இந்துமதம் எல்லா இந்துக்களுக்கும் தான்: “டெக்கான் குரோனிகல்” என்ற ஆங்கில நாளேடு, “வீரமணி பேசியதை எதிர்த்து பிராமணர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,” என்று ஒரு புகைப்படம்ம் போட்டு, செய்தி வெளியிட்டுள்ளது! சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா? இந்துக்கள் என்று ஏன் போடவில்லை? இங்குதான், ஊடகங்களின் குசும்புத்தனம் வெளிப்படுகிறது. ஏதோ, இந்துமதம் தாக்கப் பட்டால், பிராமணர்களுக்குத் தான் கோபம்-ரோஷம் வரும் மற்றவர்களுக்கு வராது என்பது போன்ற திரிபுவாதம், சித்தரிப்பு மற்றும் அவ்வாறான திணிப்பு. இந்துமதம், பிராமணிஸம் என்றால், பிறகு, க்ஷத்திரியரிஸம், வைசியரிஸம், சூத்திராயிஸம் என்றெல்லாம் வர வேண்டும். ஆகவே, முதலில் இந்துக்கள், இத்தகைய விசமத்தனங்களை எதிர்க்கவேண்டும். பார்ப்பன எதிர்ப்புப் போர்வையில், இந்துவிரோத சித்தாந்திகள் ஒளிந்து கொண்டு வேலை செய்வதை கவனிக்கலாம். இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத வரையில், அவர்கள் இணைந்து தான் வேலை செய்வார்கள்.

Stalin pleading that the are not against religion,DM 02-04-2019-1

ஶ்ரீகிருஷ்ண தூஷணத்திற்கு பதில் [2017-2019]: 2017லிருந்தே திக-வீரமணி, ஸ்டாலின் இதே பல்லவியைப் பாடி வருகின்றனர். விவரங்களை கீழ்கண்ட எனது பதிவுகளில் விளக்கமாக படிக்கலாம்.

  1. “கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும்தூஷணங்கள் [1]

https://antihidnu.wordpress.com/2018/09/07/blaspheming-krishna-on-the-occasion-of-krishna-jayanti-dravidian-way/

  1. ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [2]

https://antihidnu.wordpress.com/2018/09/07/blaspheming-krishna-anti-hindu-atheist-and-mohammedan-way/

  1. ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]

https://antihidnu.wordpress.com/2018/09/07/medieval-mohammedan-anti-krishna-blasphemy-continues-through-europeans-and-atheists/

  1. ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன்? பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]

https://antihidnu.wordpress.com/2018/09/07/anti-krishna-propaganda-continues-through-atheists-and-secularists/

  1. திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [1]

https://antihidnu.wordpress.com/2018/09/26/dmk-not-anti-hindu-clarifying-stalin-though-atheist/

  1. திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]

https://antihidnu.wordpress.com/2018/09/26/proven-anti-hindus-like-dravidian-leaders-need-not-be-apologetic/

  1. திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]
  2. https://antihidnu.wordpress.com/2018/09/27/anti-hindu-dravidian-gangs-cannot-compromise-with-hindus-but-continue-blasphemy/

Stalin pleading that the are not against religion,DM 02-04-2019-2

இந்துவிரோதிகளும், போலி இந்துத்துவ வாதிகளும் கூட்டு சேர்வது எப்படி?: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின? வழக்கை சந்தித்தார்களா, இல்லை இந்துத்துவவாதிகள், தொடர்ந்து நடத்தினார்களா?

© வேதபிரகாஷ்

02-04-2019

stalin-on-anti-hindu-stance-24-09-2018

[1] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922

[3] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922

[5] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?, Updated : மார் 25, 2019 06:40 | Added : மார் 25, 2019 06:38.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2240922

தமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது (2)

ஜூலை 22, 2013

தமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது (2)

Sonia-as-Durga

Sonia-as-Durga

ஆரிய-திராவிட உறவுகள்: 2ஜி-ஊழல் ஆரிய-திராவிட மாயைகளை தகர்த்து விட்டது எனலாம். கருணாநிதி குடும்பத்தினரின் ஆரிய-சோனியா உறவை கண்டு மக்கள் திகைத்து விட்டனர்[1]. ஜெயலலிதாவை விமர்சிக்கும் திராவிட சித்தாந்திகள் ஆரிய-சோனியாவை ஆதரிப்பது, போற்றுவது, புகழ்வது முதலியன தமிழக மக்களுக்கு புரிய வைத்து விட்டன. திருமாவளவன் போன்றோர் சோனியாவுக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவில் மாயைகள் விலகின.

Karu-as-nataraja

Karu-as-nataraja

திராவிடத்தில் ஊறிய தமிழகம், அதன் மாயையிலிருந்து விடுபட ஆரம்பித்துள்ளது. அதனால், சில திராவிட சித்தாந்திகள், தமிழ் என்றும், ஈழப் பிரச்சினை என்றும் அவ்வப்போது உசுப்பிப் பார்த்து வருகின்றனர். தொழிற்துறையில் பின்தங்கி வருவதை தமிழக மக்கள் கண்கூடாகப் பார்த்து வருகின்றனர். மாறாக, மற்ற மாநிலத்தவர் அதிகமாக வேலை செய்ய வந்து கொண்டிருக்கின்றனர்.

Muslims demonstrate against Modi Chennaiமோடி சென்னைக்கு வந்து போவதை விரும்பாதவர்கள் யார்?: இந்நிலையில் மோடி தமிழக்கத்திற்கு வந்து போவதும், வியாபாரம் பேசுவதும், ஜெயலலிதாவுடன் நட்பாக இருப்பதும் நிச்சயமாக நிறைய பேர்களுக்குப் பிடிக்கவில்லை. காமராஜர் அரங்கத்தில் நரேந்திரமோடி துக்ளக் விழாவில் கலந்து கொள்ள வந்தபோது, முக்கியமாக, அதிகமாக முஸ்லிம்கள் தான் பங்கு கொண்டனர். வைஷ்ணவ கல்லூரி நிகழ்சியில் பங்கு கொள்ள ஜூலை 2008ல் வந்தபோது, தமுமுகவே எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர்[2]. “மோடியின் தோழி ஜெயலலிதா” என்று முஸ்லிம் அமைப்பினர் வர்ணித்து[3], ஆர்பாட்டம் நடத்தினர். Muslims demonstrate against Modi1செப்டம்பர் 2011ல் குஜராத்தில் உண்ணாவிரதம் இருந்தப்போது, அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை கலந்து கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்[4]. ஜெயலலிதாவைக் கண்டித்தும் ஆர்பாட்டம் நடத்தினர்[5]. குறிப்பாக ஜவாஹிருல்லா பேசியதாக “டூ—சர்கிள்ஸ்” என்ற முஸ்லிம் இணைதளம் வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. “மோடி முஸ்லிம்களின் கொலைக்காரர் என்பதனால் இங்கு வருவதை எதிர்க்கிறோம். மதவாத இந்துத்வ-வாதிகள் கல்விசாலைகளிலும் ஊடுருவியுள்ளனர். அவர்கள் தமிழகத்தை மதவாதத்தில் மூழ்கடிக்கப் பார்க்கின்றனர்”, என்றெல்லாம் பேசியுள்ளார்[6]. Muslims demonstrate against Modi2இந்தியாவில் செக்யூலரிஸம், கம்யூனலிஸம் என்பவை அவரவர் சௌகரியங்களுக்காக உபயோக்கப் படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான ஐ.யு.எம்..எல், அடிப்படைவாதத்தில் ஊறியுள்ள எம்.ஐ.எம் போன்ற முஸ்லிம் கட்சிகள் எல்லாமே தங்களை செக்யூலார் ஏன்று கூறிக்கொண்டு, பிஜேபியை கம்யூனல் என்று வசைபாடி வருகின்றன. காங்கிரஸும் பிஜேபியை கம்யூனல் என்று சொல்லிக் கொண்டு, தனக்கு செக்யூலார் சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறது. சில கட்சிகள் தாங்கள் அவ்வாறு கூறிக்கொள்ள பெயர்களுக்குப் பின்னர் அடைப்புகளில் செக்யூலார் என்று போட்டுக் கொள்கிறது. ஆக முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் மோடி வருவதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டன.

??????????????????????????????????????????சித்தாந்தங்கள் மாறினாலும், அரசியல் திட்டங்கள் மாறினாலும், அரசியல்வாதிக்கள் நாங்கள் ஒன்றுதான்: மே 2011ல் ஜெயலலிதா பதவி ஏற்கும் விழாவிற்கு நரேந்திர மோடி வந்தபோது, சிபிஐ தலைவர் ஏ.பி.பரதன்[7], சிபிஎம் ராஜா, சந்திரபாபு நாயுடு, சரத் குமார் போன்றோர் சந்தித்துள்ளனர். என்ன மோடியுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறீர்களே, என்று பரதன்னிடம் கேட்டதற்கு, “நாங்கள் சித்தாந்தகளினால் வேறுபட்டிருந்தாலும் ஒரே துறையில் இருக்கிறோம். எங்களது அரசியல் திட்டங்களும் மாறலாம். ஆனால், மனிதர்களகாக நாங்கள் சந்திக்கிறோம், மரியாதை நிமித்தமாக பேசிக்கொள்கிற்றோம்”, என்றரவர் பதிலளித்தார். Chandrababu-Bharahdan-Raja-Modi-togetherமுன்பு பாஜக-கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் வரக்கூடாது என்று வெளியிலிருந்து ஜனதா தளத்தை ஆதரித்தது. இப்பொழுது கூட, பொருளாதார விஷயங்களில் இரண்டு கட்சிகளின் அணுகுமுறை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. தமிழகத்தின் ஆட்சி மாற்றம் மத்திய அரசு ஆட்சிமாற்றத்தை உண்டாக்கும் என்று மோடி கருத்துத் தெரிவித்தார்[8]. ஆனால், அதே நேரத்தில் சுவரொட்டிகளில் மோடி “ரத்தக் காட்டேரி, மரண வியாபாரி, கொலைகாரன்” என்றெல்லாம் வர்ணித்தன. அவற்றில் சில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெயரும் இருந்தது. அதாவது, கம்யூனிஸ்டுகள் அவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டினார்களா அல்லது அவர்களது பெயரில், வேறு யாராவது ஒட்டினார்களா என்று தெரியவில்லை.

TNTJ Rally Chennai-Feb 5 - IIIமுஸ்லிம்களின் கனவுகள், பேராசைகள்: மதத்தின் பெயரால் பாகிஸ்தானை உருவாக்கினாலும், இன்னும் இந்தியாவை இஸ்லாம் மயமாக்க வேண்டும், பாராளுமன்றத்தைப் பிடிக்க வேண்டும் என்ற கனவும், பேராசையும் இருக்கிறது. மக்கட்தொகை பெருக்கத்தின் மூலம் அடையலாம் என்ற முறையோடு, பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி இந்தியாவில் பரவுதல் என்ற திட்டமும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதனால்தான், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கலவரங்கள் நடந்து வருகின்றன. மேற்கு வங்காள அரசுகள், ஓட்டுவங்கி அரசியலுக்காக, அத்தகைய ஊருடுவலை அனுமதித்து வருகின்றன. காஷ்மீரத்தில் பாகிஸ்தானியர் ஊடுருவி வருகின்றனர். Muslims aiming to capture Parliament - bannerஇந்துமதம் ஜாதியத்தைக் கொண்டது, அதனால், சமூக முன்னேற்றம் வேண்டுமானால், சூத்திரர்கள், தலித்துகள், எஸ்.சி போன்றோர் மதம் மாற வேண்டும் என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றனர். இப்படி முஸ்லிம் எண்ணிக்கை அதிகரித்து விட்டால், இன்னும் 50-100 வருடங்களில், இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாகி விடும் என்று கனவு கண்டு வருகின்றனர். இவ்வாறான முறைகளினின்று மாறுபட்டு அடிப்படைவாத, தீவிரவாத, பயங்ககரவாத, ஜிஹாதித்துவ முறைகளையும் கையாண்டு வருகின்றனர்.

Sarath Kumar with Narendra Modiதமிழக கட்சிகள் பாஜபவுடன் கூட்டு வைத்துக் கொள்வது பற்றி விரும்பாதது யார், பயப்படுவது யார்?: கர்நாடகத்தில் பாஜக தோற்றுவிட்டதால், அல்லது காங்கிரஸ் ஜெயித்து விட்டதால், தம்மிழகத்தின் மீது சோனியாவின் கண் விழுந்துள்ளது. கேரளாவில் ஆட்சியைப் பிடித்தாகி விட்டது. ஆந்திரத்தில், தெலுங்கானா மற்றும் ஜகன்மோகன் ரெட்டி பிரச்சினைகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, நாராயணசாமி போன்ற மந்திரிகள் எல்லாம் கர்வமாகப் பேசிவந்தது வியப்பாக இருந்திருக்கும். “விஸ்வரூபம்”, ஐபிஎல், ஶ்ரீனிவாசன் பிரச்சினைகளில் சீண்டிப் பார்த்தன ஆனால், ஜெயலலிதா அப்பொழுதெல்லாம் அமைதியாக வேலை செய்து வந்தார். ஆங்கில ஊடகங்கள் சில நேரத்தில், தூண்டிவிடும் வகையில் விமர்சனம் செய்தாலும் கண்டு கொள்வதில்லை.  பீகாரைத் தொடர்ந்து, மதிய ஊணவு திட்டத்தில் குறைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்கின்றன. இன்றும் ஊடகங்கள் காட்டி வருகின்றன[9]. இருப்பினும், நரேந்திர மோடியுடன் கூட்டு வைத்துக் கொள்வாரோ என்ற பயம் காங்கிரஸ் முதலிய கட்சிகளுக்கு பயம் இருந்து கொண்டு இருக்கிறது.

Narendra Modi greeting Jeyalalitaஅதிமுக- பாஜக- தேதிமுக கூட்டு தேவை- சோ[10]: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைத்து போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் அவை வெற்றி பெறும் என்று, பத்திரிக்கையாளர் ‘சோ’ ராமசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜனவரி 2008ல் நடந்த ‘துக்ளக்’ பத்திரிக்கை ஆண்டு விழாவில் பேசிய சோ, தமிழகத்தில் பாஜக- அதிமுக இடையே தேர்தல் கூட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகச் சொன்னார். இக்கட்சிகளுடன் விஜயகாந்தின் தேமுதிகவும் இணைந்து தேர்தலை சந்தித்தால், 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்ற அவர், விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் தான் பிரியும் என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிருப்தி தெரிவித்த சோ, கூலிப்படையினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். இச்செய்தியை தேசிய திராவிட முன்னேற்றக் கழக இணைதளமே வெளியிட்டிருந்தது. இப்பொழுது ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் ஏமாற்றி விட்டதால், பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள தயாராக இருப்பதாத செய்திகள் வந்துள்ளன[11]. சரத் குமார் ஏற்கெனவே பிஜேபி கூட்டணியில் இருந்தார். திருநாவுக்கரசு பிஜேபியிலிருந்து சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.
Ý®†ì˜ ó«ñS¡ àì¬ô ⴂèMì£ñ™ ð£.üùî£Mù˜ «ð£h꣬ó î 裆C.

தமிழகத்தில் இந்து இயக்கத்தினர் கொலை: மதுரையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பா.ஜனதா மாவட்ட தலைவர் வக்கீல் ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் குண்டு வெடித்தது. மேலும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திலும் குண்டு வெடித்தது. இந்நிலையில் கடந்த 1–ந் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில தலைவர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். மேலும் நாகர்கோவிலில் பா.ஜனதா முன்னாள் பொருளாளர் எம்.ஆர்.காந்தியையும் கொல்ல முயற்சி நடந்தது. தற்போது பா.ஜனதா மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த வழக்குகளில் இதுவரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த கொலைகளில் யார் ஈடுபட்டார்கள் என்று தெரியவில்லை.

Blood soaked body of Ramesh 2013சந்தேகிக்கப்படும் மூன்று கும்பல் அல்லது நபர்கள்[12]: ஆனால் இந்த அனைத்து தலைவர்கள் கொலையிலும் 3 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. ஆனாலும் அவர்களை பிடிக்கவில்லை. மேலும் 3 பேரும் தீவிரவாத கும்பலின் பின்னணியில் இருந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு பிரமுகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் அவர்கள் மிகப்பெரிய அளவில் சதி திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பல தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. எனவே இந்த தலைவர்கள் கொலையின் பின்னணியில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தற்போது கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேசுக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் லைன்மேட்டில் ஒரு கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தற்போது அவர் வசித்து வந்த பகுதியில் இரவில் நடந்து வரும் கட்டிட பணியை எதிர்த்தார். எனவே இந்த பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்றும் விசாரணை நடந்து வருகிறது[13].

Ramesh - body lying in the pool of blood - courtesy Nakkeeranதொண்டர்களின் கதறல் – எல்லோரையும் அனுசரித்து செல்பவர்: உடலெங்கும் பலத்த வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருக்க ‘எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பாரே நம்ம தலைவரை சிதைச்சுட்டானுங்களே!’ என திரண்ட பா.ஜ.க.வினர் கதறி அழுதனர். அந்த அக்ரகார வீதியில் அனைவரும் கதவை சாத்தியபடி உள்ளே இருக்க ‘உங்களுக்காகவும் தானே போராடினார்’ என கதறினர். நாம் சேலம் மாவட்ட செயலாளர் கோபிநாத்திடம் நம் இரங்கலை தெரிவித்துவிட்டு பேசினோம். “யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவரு. ரொம்ப தங்கமான மனுசர். அவரை கோபமான தோற்றத்தில் யாரும் பார்துருக்கவே முடியாது. எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பார். எல்லோரையும் அனுசரித்து செல்பவர். கொள்கை வேறு நட்பு வேறு என மாற்று கொள்கை கொண்ட அமைப்பினரிடமும் நட்பு பாராட்டுபவர். கிட்டத்தட்ட இருவத்தி அஞ்சு வருஷமா இயக்கத்தில இருக்காரு. இந்துகளின் வளர்ச்சிக்காகவே எந்நேரமும் சிந்திசுகிட்டே இருப்பாரு. ரோட்டுல போகும் போது வீட்டு வாசல்களில் கோலம் போடப்பட்டு இருந்தால் அதில் கார் சக்கரம் ஏறாதபடி எப்படியாவது தள்ளி செல்வாரு. கஷ்டப்பட்டு கோலம் போட்டு இருக்காங்க இது நம் பாரத பெண்களின் ஆன்மிகம் நிறைந்த ஓவிய கலை நாம இதுல காரை ஏற்றினால் அவர்கள் இதயத்தில் ஏற்றியது போல அவங்க மனசு கஷ்டப்பட கூடாதுனு’  சொல்லும் உயர்ந்த மனிதர். அந்த மனிதநேயத்தை தான் படுபாவிங்க சாச்சுட்டானுங்க. குடும்பத்தோட டின்னர் போயிட்டு அலுவலகம் திரும்பியவர கொன்னுட்டானுங்க. திட்டம் போட்டு தான் செஞ்சுருப்பானுங்க. இந்துகளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. நியாயம் கிடைக்கணும்”, என குமுறினார்[14].

ஆடிட்டர் ரமேஷ் கொலை: ராமகோபாலன் கண்டனம்[15]: சென்னை, ஜூலை.20, 2013–இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “பாரதீய ஜனதாக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1–ந்தேதி வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பனை பயங்கரவாதிகள் கொலை செய்தனர். முன்னாள் பாரதத் துணைப் பிரதமர் அத்வானி ரத யாத்திரையில் குண்டு வைத்த முக்கிய குற்றவாளியை கைது செய்த போலீஸ் அவரது டைரியில் இந்து முன்னணியன் நான்கு முக்கிய நபர்களை கொலை செய்வதற்கான குறிப்புகள் இருந்ததை கண்டு பிடித்தனர். ஆனால் அதன் பிறகும் காவல்துறை விழித்துக் கொள்ளவில்லை. புலானய்வுத்துறையின் செயலிழந்தத் தன்மையைக் கண்டு தமிழகம் கவலை கொண்டுள்ளது. காவல்துறை மீதும், நீதிமன்றத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பது என்பது நாட்டிற்கு நல்லதல்ல!

 Auditor Rameh in a meeting

ஒரு நெருக்கடியான காலகட்டத்தை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது! இதனை வளரவிட்டு பின்னர் வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. ராமேஸ்வரம் கோயிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தியதாக காவல்துறை மார்தட்டுகிறது. இந்த இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை ஏன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை, கைது செய்யவில்லை? புலனாய்வுத்துறை என்ன நவடிக்கை எடுத்துள்ளது? புலானய்வுத் துறையின் குறிப்புகளை காவல்துறை மதிக்கவில்லையா? வேலூரில் டாக்டர் அரவிந்த ரெட்டி கொலை செய்த பயங்கரவாதிகளில் யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை. இப்படி செயலிழந்தத் தன்மையால் பயங்கரவாதிகளுக்கு தைரியம் கூடியிருக்கிறது. தொடர் கொலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தவறுவது தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்தி காவல் துறையை முடுக்கிவிட்டு பயங்கரவாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் துயரமான நேரத்தில் ஆடிட்டர் ரமேஷ் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்”, இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Muslims demonstrate against Modi3அரசியலைத் தாண்டி கொலைகளைச் செய்யத்தூண்டும் காரணிகள் யாவை?: தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது, ஒரு குறிப்பிட்ட மாதிரி, உதாரணம், போக்கைக் காட்டுவதைப் போலிருக்கிறது. திக்விஜயசிங், சுசில்குமார் ஷிண்டே, ஷகில் அஹமது போன்றோர் வார்த்தைகளால் காவி தீவிரவாதம் என்றெல்லாம் பேசிவரும் வேலையில், தமிழகத்தில் கொலைகள் நடந்து வருவது அம்மாதிரியான முறையைக் காட்டுவதாக தோன்றுகிறது. அரசியலாக இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம், ஜெயிக்கலாம், தோற்கலாம். வியாபரமாக இருந்தாலும், அவரவர் சாமர்ட்தியற்த்திற்கு ஏற்றப்படி லாபம்-நஷ்டம் பெறலாம். ஆனால், இவற்றை விடுத்து வேறொரு முறையில் கணக்குப் பார்த்துக் கொள்கின்றனர், கொலை செய்கின்றனர் என்றால், பின்னணியை ஆராய வேண்டியுள்ளது. அதாவது, இவ்விவகாரங்கள் அரசியல், வியாபாரம் முதலிய காரணிகளையும் தாண்டி, வேறொதையோச் சுட்டிக் காட்டுகிறது.Muslims demonstrate against Modi Chennai Sept.2011

வேதபிரகாஷ்

© 22-07-2013


[1] முதலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, பெரியார் சுயமரியாதை கழகம் “ஆரிய-திராவிட போர் தொடர்கிறது” என்ற சிறுநூலை வெளியிட்டது. பிறகு, ஜெயலலிதா, திராவிடகழகத்திற்கு அரசு சார்பில் நிதி அளித்ததும் அமைதியாகி விட்டார்.

[2] Modi arrived in the capital city of Tamil Nadu on July 11 to attend a function at D. G. Vaishnawa College located in the city. To protest against his visit around 600 activists of Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) demonstrated, out of which around 350 were arrested. All of them, however, were released late night on the day. http://twocircles.net/node/89182

[3]  மோடியோடு ஜெயலலிதா நட்புறவு கொண்டாடுவதை முஸ்லிம்கள் வெறுக்கிறார்கள் என்பதை அவருடைய பதவி ஏற்பு விழாவில் மோடி வருகையை எதிர்த்து த.மு.மு.க. இ.த.ஜ.  போன்ற இயக்கங்கள் புறக்கணித்தும் கூட இதை ஜெயலலிதா உணர்ந்தவராக இல்லை, என்று முஸ்லிம்கள் எடுத்துக் காட்டுகின்றனர் – http://atheeqs.blogspot.in/2011/09/jayalalitha-vin-muslim-virodapoku.html

[6] TwoCircles.net contacted Dr. Jawahirullah, president of TMMK, to know the reason for the demonstration.

Dr. Jawahirullah said that they were demonstrating to show their anger that in spite of being responsible, directly or indirectly, for the genocide which killed hundreds of Muslims, Modi is moving free in the country pricking the conscience of the country. He said this is against the idea of India as secular and democratic country. And not only Indian Muslims but all the people who believe in secularism across the globe are pained to see this, said Jawahirullah. “This demonstration was the expression of our feelings and anger. We consider Narendra Modi a mass murderer of Muslims in Gujarat, and the law has not yet taken any steps to bring him to book,” he said on phone from Chennai. Although the press release by the state BJP says that the visit by Modi had no political purposes, but Jawahirullah refutes it saying, whether a visit by a person like Narendra Modi can be ever without political implications. Pointing towards the Hindutva organizations working silently in the state, Jawahirullah says that the visit by Modi was an attempt to showcase their agenda. If not this then why else the college authorities invited him to address the gathering of academicians, he asks. After all Modi is not the embodiment of freedom of expression and academic freedom as the attack painting exhibition in Vadodra University, boycott of Amir Khan’s movie “Fanna” and another movie based on the Gujarat riot “Parzania” and several other instances show. In reality Modi personifies fascist and authoritarian ideology which is opposed to the very idea of freedom of expression itself, he says. The symbolism of Modi addressing a college gathering shows the dangerous precedent emerging in the state. It tells how the right wing Hindutva elements have managed to penetrate the academia of the state. And this is where lies the failure of the state government, as one can never take for granted the secularism and an atmosphere which is free of communal elements. That is why Jawahirullah considers it the failure of the state government that it could not prevent Modi from addressing an academic gathering, which it could have done strategically, citing the law and order problem that his visit has created. http://twocircles.net/node/89182

[7] Asked for his reaction on participating in a function along with Mr. Modi, CPI leader A.B. Bardhan said: “Both are in the same field. Ideologies will differ. Political programmes will differ. As human beings, it was courtesy.”

[9] டைம்ஸ்-நௌ, 20-07-2013

[13] மாலைமலர்,ஆடிட்டர்ரமேஷ்கொலையில்தீவிரவாதிகளுக்குதொடர்பு?: போலீசார்விசாரணை, மாற்றம் செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 20, 10:45 AM IST; பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 20, 10:43 AM IST

[15] பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 20, 12:32 PM IST

http://www.maalaimalar.com/2013/07/20123256/ramagopalan-condemn-Ramesh-Aud.html