திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (2)

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (2)

சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசியது: தொடர்ந்து, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய போது, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைவரிடமும் சிரிப்பை ஆழ்த்தியது. அவர் பேசியதாவது: “1967ல் காந்தி தந்த அறிஞர் அண்ணா வழியில், திருவாரூர் தந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியிலும், கோபாலபுரம் தந்த எங்கள் குமாரர் மக்கள் தளபதி மு..ஸ்டாலின் வழியிலும் தான் என்றென்றும் தமிழகம் செல்லும். இந்த சபையில் நீங்கள் எல்லாருமே பயப்படுகிறீர்கள். சிறுபான்மை என்று கூறினீர்கள். நாம் அனைவருமே பெரும்பான்மை தான். நம் எல்லாருமே இனத்தில் தமிழர்கள், மொழியில் தமிழ் பேசுகிறோம், அப்படியானால் நாம் எல்லாரும் ஒன்றுதானே. அப்போது ஏன் நாம் பயப்பட வேண்டும்……”, இப்படி சிரித்து நக்கலாக பேசியதும், மேடையில் உள்ளவர் ஸ்டாலின் உட்பட கைதட்டி சிரித்ததும், அரங்கத்தில் உட்கார்ந்திருந்த பாதிரிகள் கைதட்டி சிரித்து கரகோஷம் இட்டதும் கவனிக்கலாம்.

அரசியல் பேசக் கூடது என்று அரசியல் பேசியசைவ சாமியார்:  எந்த பாசிச சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசக்கூடாது, இருந்தாலும் வட இந்தியாவில் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா எனும் கொள்கை இருந்தது. ஆனால் நம் கேரளத்தில் கம்யூனிஸ்டும், தமிழகத்தில் திராவிட கழகமும் இருந்ததால் அவர்களால் ஒருபோதும் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ஓட்டுரிமை உங்கள் கையில் இருக்கும் போது ஏன் பயப்பட வேண்டும். நமக்கு தெரிந்தது இரண்டு சின்னம் தான். ஒருவர் இங்கிருக்கிறார். இன்னொன்று நான் சொல்லக்கூடாது. இவர்களோடு முதுகில் ஏறிதான் அவர்கள் பயணம் பண்ண முடியும். யாராக இருந்தாலும் எதிரி இருந்தால் தான் நாம் வளர முடியும், இல்லையெனில் நாம் வளர முடியாது. மதமாற்றத்துக்கு நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். உங்கள் வழிபாடுகளை சிறப்பாக செய்யுங்கள், அவர்கள் தானாகவே வருவார்கள்,” எனக் கூறினார்[1]. ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது[2]. அவரது இந்தப் பேச்சுக்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மதமாற்றத்தை ஊக்குவிப்பது போன்ற அவரது பேச்சு இருப்பதாக பல்வேறு இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

கம்யூனிஸமும், பெரியாரிஸமும் இந்துவிரோதம் தான்: “ஆனால் நம் கேரளத்தில் கம்யூனிஸ்டும், தமிழகத்தில் திராவிட கழகமும் இருந்ததால் அவர்களால் ஒருபோதும் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை,” என்றதையும் கவனிக்க வேண்டும். கம்யூனிஸமும், நாத்திகமும் “ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா” வைணவத்தை எனும் கொள்கை தமிழகத்தில் நுழைய “அனுமதி கிடைக்கவில்லை,” என்றால், அவர்களா அனுமதி கொடுக்கிறார்கள் என்று கேள்வி எழுகின்றது. பிறகு, பலவித தீவிரவாத-பயங்கடவாத-தேசவிரோத கோஷ்டிகள் இவர்கள் அனுஅதித்து தான் உள்ளே வந்தார்கள் போலும். “ராஜிவ் காந்தி கொலை,’ இங்குதான் நடந்துள்ளது என்பதனை அவர்கள் மறைக்க முடியாது.

இந்துபோல ஒருவரை கூட்டி வந்து பேச வைத்தல்: வருடா வருடம் ஏதோ ஒரு “சைவ” சாமியாரை, பிரதிநிதித்துவப் படுத்தும் நிலையில், ஒப்புக்குக் கூட்டி வருகின்றனர். அப்படி சென்றவர், “இந்துவாக” இல்லாமல், தெரிந்தே, இந்துவிரோத கூட்டத்தில் பங்கேற்றி, இந்துதூஷண மேடையில் பேசியிருப்பது, அவர்களின் துரோகத்தை வெளிக்காட்டுகிறது.

  1. மேலமங்களம் பாலயோகி மடத்தின் தலைவராக இருக்கும் இந்த பாலயோகி தம்பிரான்
  2. கலையரசி நடராஜன்
  3. சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்

இவர்கள் தான் சமீபத்தில் பேசி வந்துள்ளனர். இவர்களை நிச்சயமாக எல்லா இந்துக்களும் அறியமாட்டார்கள், இவர்கள் பேசியதையும் அறியமாட்டார்கள். கிருத்துவர்கள், முகமதியர்கள் என்றும் கலந்து கொன்டு பேசியுள்லார்கள். ஆனால், அவர்கள் தங்களது மதத்தை விட்டுக் கொடுக்காமல் தான் பேசியுள்ளனர். எல்லா பிரிவினர்களும், இவ்விசயத்தில் ஒன்றாக இருக்கும் பொழுது, “இந்து” என்று சொல்லிக் கொள்பவர் தாம், இப்படி விலை போகின்றனர் அல்லது ஏதோ ஒரு ஆதாயத்திற்காக, சென்று பேசி விட்டு வருகிறனர். இல்லை, அவ்வாறு பேச வைக்கப் பட்டுள்ளனர் எனலாம்.

ஸ்டாலின் செக்யூலரிஸ்ட் அல்ல: ஸ்டாலின் தமிழக முதலமைச்சர், செக்யூலரிஸம் பின்பற்றுவதாக இருந்தால், ஒன்று மதசம்பந்தப்பட்ட விவகாரங்களிலிருந்து முழுமையாக விலகி இருக்க வேண்டும் அல்லது எல்லா மதநம்பிக்கையாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும், நடத்தப் பட வேண்டும். ஆனால், ஸ்டாலின் அவ்வாறில்லை, அதாவது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின், பொறுப்பற்ற முறையில், இந்துவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து, முஸ்லிம்-கிருத்துவ பண்டிகை-விழாக்களில் கலந்து கொள்வது, அதே நேரத்தில் இந்து பண்டிகைகளை விமர்சிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதை மக்கள் கவனித்து வருகிறார்கள். சட்டப் படியும்,, சமமாக நடப்பதில்லை, ம்மேடையிலும் அந்த “பட்டை-கொட்டை-வீபூதி’ பூசிய நபர் பேசியதை ரசித்து, கைதட்டி, ஆராவாரம் செய்து ரசித்த விதம் நாடகம் போன்றே இருந்தது. ஆக, கதை, வசனம், எல்லாம் தயாரித்து அரங்கேற்றப் பட்ட விதம் தான் தெரிந்தது. அந்நிலையில் தான், உதயநிதியின், “நானும் கிறிஸ்துவன் தான்,” என்ற பேச்சும் வருகிறது.

22-12-2022 – உதயநிதிஇன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான்[3]. கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்: 20-12-2022 அன்று அந்நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில், 22-12-2022 அன்று இன்னொரு “கிறிஸ்துமஸ் கொண்டாட விழா” நடக்கிறது. அதை திமுக ஏரற்பாடு செய்ததாகத் தெரிகிறது. திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்க பள்ளி மைதானத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது[4]. சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர்[5]. 2,000 குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார்[6]. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு, மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்[7]. சேகர் பாபு[8], “எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…, எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆட்சியில் யாரும் ஓரங்கட்டப் பட்டவர்கள் இல்லை… ஸ்டாலினை நோக்கி ஓரடி முன் வைத்தால், நூறடி பாய்ந்து வந்து நலன் திட்டங்கள் செய்வார்……..எல்லோரும் சொல்லுங்கள் அல்லேலூயா, உரக்க சொல்லுங்கள் அல்லேலூயா …..அல்லேலூயா….” என்று கத்திப் பேசியது தமாஷாக இருந்தது[9]. அது கிறிஸ்துவ போதகர்களையும் மிஞ்சுவதாக இருந்தது.

© வேதபிரகாஷ்

22-12-2022


[1] அப்டேட்.நியூஸ்.360.காம், மதமாற்றம் செய்ய நீங்க எங்கும் செல்ல வேண்டாம்’… கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சாமியார் சர்ச்சை பேச்சு.. சிரித்தபடி கவனித்த CM ஸ்டாலின்!, Author: Babu Lakshmanan, 22 December 2022, 12:49 pm

[2] https://www.updatenews360.com/trending/priest-sri-mahalinga-thesiga-paramachariya-swamy-controversy-speech-front-of-cm-stalin-2212222/

[3] தினத்தந்தி, நானும் கிறிஸ்தவன் தான்” “இத சொன்ன அவங்களுக்கு எரியும்“-உதயநிதி பரபரப்பு பேச்சு, By தந்தி டிவி, 22 டிசம்பர் 2022 9:32 PM.

[4] நியூஸ்.7.தமிழ், நானும் கிறிஸ்துவன் என சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்’- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், by G SaravanaKumar, December 22, 2022

[5] https://news7tamil.live/i-am-also-proud-to-say-that-i-am-a-christian-minister-udayanidhi-stalin.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, நானும் ஒரு கிறிஸ்துவன் தான்..” கிறிஸ்துமஸ் விழாவில் பட்டுனு சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், By Vigneshkumar, Published: Thursday, December 22, 2022, 23:51 [IST]

[7] https://tamil.oneindia.com/news/chennai/even-i-m-also-a-christian-says-dmk-minister-udhayanidhi-stalin-in-christmas-function-490878.html

[8] அல்லேலூயா சொன்ன அமைச்சர் Sekar Babu | Mayor Priya Rajan | Christmas Celebration | Udhayanidhi Stalin; https://www.youtube.com/watch?v=7T7fvfRgJ5A

[9] மீடியான், அல்லேலூயா அல்லேலூயாசிப ரிப ரீட்டாசேகர்பாபு ஜெபம்!, Kathiravan Mediyaan News , 23-12-2022. https://mediyaan.com/sekar-babu/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக