Posts Tagged ‘மடாதிபதி’

சங்கரர் எதிர்ப்பு, சங்கரமட துவேசம், இக்கால சங்கராச்சாரியார்கள் தூஷணம் ஏன்?: இதற்கு சைவம்,  பிராமண எதிர்ப்பு, இந்து விரோதம் முதலியவை தேவையா? (1)

ஜூலை 27, 2022

சங்கரர் எதிர்ப்பு, சங்கரமட துவேசம், இக்கால சங்கராச்சாரியார்கள் தூஷணம் ஏன்?: இதற்கு சைவம்பிராமண எதிர்ப்பு, இந்து விரோதம் முதலியவை தேவையா? (1)

திமுக ஆட்சியும், ஜாதி அரசியல் ஆரம்பமும், முதலியார் ஆதிக்கமும்: திராவிடத்துவ, இந்துவிரோத ஆட்சி, அதிகாரம், ஆக்கிரமிப்பு முதலியவற்றை மறந்து, மறைத்து சைவம் போர்வையில் நடக்கும் திட்டம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது. அண்ணாதுரை முதலமைச்சர் ஆனதும், முதலியார்கள் அரசு-ஆட்சி-அதிகாரம் என்று பல பதவிகளில் அமர்ந்தார்கள், தொடர்ந்தார்கள், பெரிய ஆட்கள் ஆனார்கள்[1]. ஆனால், சைவத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஈவேரா இந்துவிரோத காரியங்களில் இடுபட்டபோது, அடக்கி வாசித்தனர். கருணாநிதி முதலமைச்சரானதுடன், ஜாதி அரசியலை வளர்த்து, அதிகாரங்களை உடைக்க மற்ற ஜாதியினருக்கு இடம் கொடுத்தார்கள். இதனால், பிள்ளை, போன்றவர்கள் தெற்கில் ஆதிக்கம் பெற்றார்கள்.  சைவ வேளாளர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர். இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர். மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதகளில் முக்குலத்தோர் ஆதிக்கம் பெற்றனர். இதனால், வன்னியர் போன்றோர் ஜாதி ரீதியில் போராட்டங்களில் இறங்கினர்[2]. இவர்களது பிரச்சினைகளுக்கு, பார்ப்பன்னீயம், பார்ப்பன- எதிர்ப்பு போன்றவை வழக்கம் போல உதவின. நெடுஞ்செழியன், அன்பழகன் அடக்கி வாசித்தாலும், மற்ற வகையறாக்கள் அதிகமாகவே பிரச்சினைகளை உண்டாக்கின.

அறநிலையத் துறை ஊடுருவல், தில்லுமுல்லுகள், மோசடிகள்: மதுரை ஆதீனத்தை அடக்கி, திமுக-காரர்கள் கோவில்-சொத்துக்களை அனுபவித்து வந்தார்கள். ஒரு தலைமுறை போய், இரண்டாம் தலைமுறையும் வந்தது. வாடகை-குத்தகை-ஆக்கிரமிப்பு வழக்குகள் நீதிமன்றங்களுக்கு செல்ல-செல்ல, மற்றவர்களும் அதில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதனால், எதிர்கட்சிகளுக்கும் பங்கு கொடுப்பது போன்ற சமரசங்களும் ஏற்பட்டன. இந்து அறநிலையத் துறையில் தங்கள் ஜாதியினர் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டனர். மற்றவர் நுழைவதையும் தடுக்க முறைகள் மேற்கொண்டனர். நடக்கும் ஊழல்களும் பெரிதளவில், ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொண்டனர். எல்லோருக்கும் ஷேர், மாமூல், அன்பளிப்பு என்ற கலாச்சாரம் நன்றாக வேலை செய்தது. கோவில் சம்பந்தப் பட்டவர்கள் வீட்டில் சமைக்கவே வேண்டாம் என்ற நிலை தொடர்ந்தது. பிறகு, வந்த வரும்படிகள் எல்லாம் முதலீடுகள் ஆக, கொழுக்க ஆரம்பித்தார்கள். “பட்டை-கொட்டை” எல்லாம் ஊருக்குத் தான். கூட்டுக்கொள்ளை அடிப்பது தான் முக்கியமாக இருந்தது. “மக்கள் சேவை மகேசன் சேவை” ஆகியது, நன்றாகவே வேலை செய்து கொண்டிருக்கிறது.

மடாதிபதிகளின் பிணக்குகள் ஜாதிகளை அடங்கியது: மடங்களின் கோடிக் கணக்கான சொத்துக்கள் முதலியவை தெரியவர, மடாதிபதியாக அல்லது அவருக்குக் கீழுள்ள பதவிகளைப் பெற பல திட்டங்கள் வகுக்கப் பட்டது. சைவ வேளாளர் இல்லாத யாரும் மடாதிபதியாக முடியாது. சைவர்கள் எல்லோரும் மடாதிபதிகள் ஆக முடியாது. குருக்கள், தேசிகர், ஓதுவார் ஆகிய பட்டங்கள் சைவ சமய பணிகளில் சிறந்து விளங்கிய சைவ வேளாளர்க்குரியன. இருந்தாலும், அவர்கள், வேறு ஜாதியினர் எனில், மடாதிபதி மற்ற உயர்பொறுப்புகளுக்கு பாத்தியதை ஆக முடியாது. இதை எந்த அரசியல்வாதியும் கேட்க மாட்டான்[3]. அந்நிலையில், சிதம்பரம் கோவிலில் நுழைய முற்பட்ட போது தான், தீக்ஷிதர்கள் போராட்டத்தைத் துவக்கினர். உச்சநீதி மன்றம் வரை சென்று வெற்றி பெற்று, தங்களது உரிமைகளை மீட்டனர். அதனால், தில்லை தீக்ஷிதர்கள் எப்பொழுதும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். சைவ-வேளாளர்களே இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்[4].

அரசுவரிவருமானம்மக்கள் குழுமங்கள்: ஆளும் அரசு, இப்பொழுதைய இந்திய பாராளுமன்ற, முந்ஹைய ஆங்கிலேய அந்நிய, முகலாய, துலுக்க முதலிய ஆட்சிகாலங்களில், மக்களிடமிருந்து எதையாவது வரியாகப் பெறவேண்டும் என்றுதான் குறியாக வேலை செய்தனர். கோவில்-கோவில் சொத்து, கோவில் விழா, பூஜை, கிரியைகள், அதற்கு வேண்டிய பொருட்கள்-ஆட்கள், நடக்கும் முறை, கோவில்களினால் மக்களுக்குக் கிடைக்கும் ஆதாயம் மற்றும் கோவில்களினால் மக்களுக்குக் கிடைக்கும் ஆதாயம், இவற்றைத் தாண்டி அரசு-ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கும் ஆதாயம், என்று தான் எல்லாமே பின்னப் பட்டு வேலை செய்து கொண்டிருந்தன. கோவில்கள், விவசாயம் முக்கியமான தொழில்கள், அவற்றை செய்வோர், நீர்-நிலை அவற்றின் அமைப்பு, பாதுகாப்பு முதலியன இவற்றை செய்து வரும் குழுமத்தினர், தத்தம் கடமைகளை செய்து வந்தனர். அவை ஜாதிகளாக இருந்தாலு, தொழில்-செய்யும்-குழுமங்களாக இருந்தாலும், கடமையினை செவ்வன செய்து வந்தன.

கோவில்கோவில் சார்ந்த தொழில்கள்இந்துக்கள், இந்துக்கள்அல்லாதவர்: இந்துக்கள் கைகளில் இருக்கும் வரை அவை ஒழுங்காக நடந்து வந்தன. ஆனால், துலுக்கர் வந்த பிறகு, விக்கிரங்கள் உடைக்கப் பட்டன; கோவில்கள் இடிக்கப் பட்டன; விலையுயர்ந்தவை கொள்ளையடிக்கப் பட்டன; இதனால் கோவில்-கோவில் சம்பந்தப் பட்ட காரியங்கள்-வேலகள் பாதிக்கப் பட்டன. வருமானம் குறைந்தது. விவசாயம் பாதித்தது, விளைச்சல் குறைந்தது. மக்களின் வேலைகளும் பாதிக்கப் பட்டன. தத்தம் தொழில் என்றிருந்த நிலை மாறி, வெவ்வேறு வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  துலுக்கர்களது ஆதிக்கம் அதிகமாக, மதம் மாற்றப் பட்டவர் பிரிக்கப் பட்டனர்.  இதனால், அத்தொழில்-வியாபாரமும் பிரிந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சு, கட்டிடத் தொலை போன்றவை முக்கியமாக பாதிக்கப் பட்டன. தோல் தொழிகளுக்கு முக்கியத்துவம், லாபம் முதலியவை அதிகமானதால் அவற்றில் துலுக்கர் அதிகம் ஈடுபட்டனர். ஆடு-மாடுகள் கொல்லப் படுதல், மாமிசம் உண்ணப் படுதல், தோல் மற்றவை – பிசின், காலணி, இடுப்பு பட்டை மற்ற பொருட்கள் உற்பத்தி செய்ய உபயோகப் படுத்தப் பட்டன. குதிரைப் படை அதிகரிப்பு, ராணுவம் அதிகரிப்பு முதலியவையும் இத்தொழில் ஊக்கம் அதிகமானது.கோவில்கள் இடிக்கப் பட்டு மசூதிகள் கட்டப் படும் நிலைகளில், அத்தொழிலாளிகளும் மாறினர்-மாற்றப் பட்டனர். இவ்வாறாகத்தான் வரி கிடைப்பது மாற்றப் பட்டது. வரிவசூலும் கடுமையானது, கொடுமையானது..

2000களில் கொலை அளவுக்கு சென்ற மடங்களின் துறவிகள்: நித்யானந்தாவின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு[5] தெரிவித்த தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, சங்கர மடங்களின் மடாதிபதிகளும் மதுரை ஆதீன‌ மீட்புக் குழுவினரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அரசின் இந்த வழக்கு பற்றியும் நித்யானந்தாவின் நீக்கம் பற்றியும் இதுவரை கருத்து ஏதும் சொல்லவில்லை என்று சிலர் எடுத்துக் காட்டுகின்றனர். திருவாவ‌டுதுறை பெரிய ஆதீன‌த்தை இளைய ஆதீன‌ம் கொல்ல முயற்சி [2002], சங்கரராமன் கொலை [2004], தாம்பரம் சேலையூர் அகோபில மடத்தில் ஒரு கொலை [2010], இவை சமீபகாலத்து சம்பவங்கள். மடங்கள், கோவில்கள், பிடதி, சாய்பாபா ஆசிரமங்கள் வரை வரலாற்றில் கொலைகள், சூழ்ச்சிக் கவிழ்ப்புகள், ஊழல்கள், முறைகேடுகள், என்று செய்திகள் வந்தன. பகதர்கள் வருத்தப் படுவதை விட, அச்சப்பட்டார்கள். கடவுள் காப்பாற்றவில்லையா என்று திகவினர் மாதிரி நக்கலும் அடிக்க முடியாது[6].

© வேதபிரகாஷ்

26-07-2022


[1]  2021 தேர்தலின் போது, முதலியார்களின் வாக்கு, ஆதரவு பற்றி விவாதிக்கப் பட்டது கவனிக்கத் தக்கது. அரசு பதவி, அதிகாரம், வியாபாரம், என்றெல்லம் ஸ்திரப்படுத்திக் கொண்டப் பிறகு, அரசியலில் ஓரங்கட்டப் பட்டாலும், தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

[2]  கருணாநிதி, வன்னியர்களை, வன்னியர்களைக் கொண்டே ஓட்டுவங்கியைப் பிரித்தார். கட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

[3]  திக-திமுகவினர், விசிகவினர், பாமகவினர் மற்ற கம்யூனிஸ, முற்போக்கு வகையறாக்கள் இதைப் பற்றி கேட்கமாட்டார்கள், பிட்-நோட்டீஸ், குறும்புத்தகங்கள், வீடியோ போட மாட்டார்கள்.

[4]  இந்த சட்ட யுத்தங்கள், நீதிமன்ற போர்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பழைய கோவில்கள் சிதிலமடைந்து மறைந்து கொண்டிருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்து, சண்டைப் போட்டுக் கொள்வதில், சைப்ப் பிரிவினர் ஊக்குவிக்கப் பட்டு வருகிறார்கள்.

[5]  நித்யானந்தா முதலியார் என்று கண்டுபிடிக்கப் பட்டதும், அமுக்கி வாச்க்கப் பட்டது. முதலியார்களின் விசுவசம் போலிருக்கிறது. “நித்தி” என்று தான் கிண்டல் செய்வார்களே தவிய “முதலி” என்று குறிப்பிட்டு பேச்சு-எழுத்து இருக்காது. ஜாதிய செக்யூலரிஸம் அல்லது திராவிட ஜாதியத்துவம் அல்லது ஒட்டு மொத்த பார்ப்பன எதிர்ப்பு என்று விளக்கம் கொடுப்பார்கள் போலும்.

[6]  இதில் ஜெயேந்திர சரஸ்வதி தூஷணம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும், மற்ற விசயங்கள் மறைக்கப் படும். இது பிராமண எதிர்ப்பா, இந்து எதிர்ப்பா என்பதனை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (1)

ஜூன் 13, 2022

மதுரை ஆதீனத்தை திமுகவினர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிரட்டுவது ஏன்? (1)

முருகன், விசாகம், தமிழ் என்று இருந்த இந்துக்கள்: 12-06-2022 சுபகிருது, வைகாசி , விசாகம் பிறகு அனுஷம், சுக்ல பக்ஷ திரயோதசி  பிறகு சுக்ல பக்ஷ சதுர்தசி அன்று முருக பக்தியில் ஆழ்ந்து, உலகை மறந்து, நிம்மதியாக இருந்தவர்கள் பக்தர்கள். அதே நேரத்தில், இதையெல்லாம் சொல்லிக் கொண்டு, தமிழ் என்ற நிலையிலும் இருந்த நிலையில், மதுரை ஆதீனத்தை மிரட்டி வசை பாடியுள்ளது, முரசொலி! ஒரு ஆதீனத்தை, மடாதிபதியை அவர்கள் அந்த வஞ்சனையைப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. பிரிக்கும் சூழ்ச்சியாளர்களுக்கு இதெல்லாம் சுலபமானது……ஏனெனில், திமுகவை எதிர்க்கும் இந்துக்கள் அப்படித்தான் இருக்கின்றனர்…….100, 200 ஜால்றா அடித்துக் கொண்டு குறுகிய கால பலன்களை அனுபவித்து சென்று விடுவர்……..ஆனால், தொடரும் பழி, வினைகள், முதலியவை அப்பாவி இந்துக்களைத் தான் பாதிக்கும், தொடரும்…….. மேலும், இவ்வாறு ஊடகங்களில் விமர்சிக்க, பழிக்க, மிரட்ட எப்படி அவர்களுக்கு உரிமை வருகிறது? இதே போன்ற விமர்சனத்தை மற்ற மத-மடாதிபடிகளின் மீது வைப்பார்களா?

திமுகஇந்துக்கள், இந்துத்துவ இந்துக்கள்: திமுகவில் 80% இந்துக்கள் இருக்கிறார்கள், ஆமாம், ஒட்டு மொத்தமாக திமுகவிற்கு ஓட்டுப் போடுகிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள்… ஆனால், இந்துத்துவப் போர்வையில் 99% இந்துக்கள் இருந்தாலும் அவர்கள் ‘இந்துக்கள்’ ஆக இல்லை…..இதைத் தான், இந்துவிரோதிகள் அறிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்………. மதுரை ஆதீனத்தை ஒருவன் வசைப் பாடுகிறான், மிரட்டுகிறான் என்றால், ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்….. முதலியார், பிள்ளை, செட்டி, தேவர், ரெட்டி, நாயக்கர், வேளாளர், நாயுடு, என்றுதான் இருக்கின்றனர்……………ஆட்சி, அதிகாரம், அந்தஸ்து, பணம், சுகம்……………எல்லாம் அனுபவித்து வருகின்றனர்……………வேலை செய்கிறவன் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறான்……………வேலைகாரன் எஜமானன் ஆனால், அவனுக்கு ஒரு வேலைகாரன் வருகிறான்…………………எந்த கட்சி இதனை மாற்றியது? ஆனால், ஆதீனங்களை, மடங்களை, மிரட்ட ஒன்றாக வந்து விடுகின்றனர்……………..முரசொலியின் எச்சரிக்கையை, கலைஞர்.செய்திகள் விசுவாசத்துடன் வெளியிடுகிறது.

12-06-2022 – முரசொலி எச்சரிக்கையை வெளியிட்ட கலைஞர்.செய்திகள்: தமிழக முதல்வர் குறித்து பி.ஜே.பி.யின் எச்.ராஜா கூறியதையும் மதுரை ஆதினத்துக்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறோம்[1]. “Stalin is more Dangerous than Karunanithi” எச்.ராஜாவின் இந்தப் பதிவில் பல பொருள்கள் பொதிந்துள்ளன[2]. இதனையும் அரிஹர தேசிகர் உணரவேண்டும் என முரசொலி நாளிதழ் ‘சிலந்தி’ கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை, சமீப காலங்களாக பெருமை மிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர். மதுரை பாஷையில் சொல்வதென்றால், தாங்கள் ஆதினம் என்பதை மறந்து ஏதாவது ‘குண்டக்க, மண்டக்க’ என பேச்சிலும் செயலிலும் ஈடுபடுகின்றனர்! தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற நிலைக்குள்ளாக்கியுள்ளனர்![உபயொகப் படுத்தப் பட்டுள்ள வார்த்தைகளை கவனிக்கவும்]

நித்தியானந்தா பெயர் சொல்லி தோஷிப்பது: முன்பு ஆதினமாக இருந்து மறைந்த அருணகிரி ஆதினம் காலத்தில், அவரது செயல்களால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாடறியும்! அவரது பல செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளாகி, ஆதினத்தையே தலைகுனிய வைத்தது! அவர் ஆன்மிகத்தில் அரசியலை நுழைத்து – ஆன்மிகவாதியாகவோ – அரசியல் வாதியாகவோ இல்லாமல் இரண்டும் கெட்டானாக நடத்திய ‘கோமாளி’ கூத்துக்களால் திருநாவுக்கரசர் தோற்றுவித்த சீர்மிகு அந்த ஆதினம் பல தலைக்குனிவுகளை சந்தித்தது! நித்யானந்தா எனப் பெயர் சூட்டிக்கொண்டு, நித்தம் ஆனந்தம் அனுபவித்துவிட்டு, அதனால் பல வழக்குகளில் சிக்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடி, இன்று தேடப்படும் குற்றவாளியாக உள்ள ஒரு கிரிமினலை அன்று மதுரை ஆதினத்தின் பீடாதிபதியாக நியமித்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார் அன்றைய பீடாதிபதி அருணகிரி! [ஆட்சி-அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் மனிதர்களின் சரித்திரத்தையும் மற்றவர்கள் அறிய சொவார்களா? அல்லது அதை மற்றவர்கள் வெளியிட்டால் சும்மா இருப்பார்களா?]

நித்யானந்தாவை நியமிக்க பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது என்று குறிப்பிட்டது: நித்யானந்தாவை வாரிசாகவும் அடுத்த பீடாதிபதியாகவும் நியமித்த அன்றைய மதுரை ஆதினத்தின் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளானது மட்டுமல்ல; அந்த நியமிப்பின் மூலம் பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது. அருணகிரி பணம் பெற்றுக்கொண்டு பீடாதிபதி பதவியை நித்யானந்தாவுக்கு வழங்கியதாக விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காஞ்சி மடமும், திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட சைவமதங்கள் பலவும் மடாதிபதி அருணகிரியின் செயலுக்கு கண்டனக்குரல் எழுப்பின! அப்போது நெல்லை கண்ணன் தலைமையில் ஆதின மீட்புக்குழுவே அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எல்லா சைவ மடங்களும் மதுரை மடத்தின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவித்தன. [அந்த நெல்லை கண்ணன் நிலை எப்படி என்று அறிந்ததே. கொள்கையற்றவர்கள், பணம், விருது, அந்தஸ்து என்று எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.]

ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்ற ஆரூடம் பொய்த்தது: ஆதினம் அருணகிரி, அதைவிட அத்துமீறி அ.தி.மு.க.வை ஆதரித்து நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு நடத்தியது கேலிக்கூத்துக்களாகும்! நாகர்கோவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அருணகிரி பேசியது இன்றும் வலைதளங்களில் உள்ளது. நாகர்கோவில், வடிவீஸ்வரம் தேரடி வீதியில் அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசிய நகைச்சுவைகளை கீழே தருகிறோம்; நீங்களும் ரசியுங்கள். “தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, கோயில்களில் இதுவரை எழுந்தருளியவன் அம்மா பிரதமராகிட இன்று குமரி மக்களிடம் வாக்குசேகரிக்க உங்கள் முன் எழுந்தருளியுள்ளேன். இந்த வரத்தை கொடுத்தது இறைவன். அம்மா இந்தியாவின் பிரதமராகி நம்மை எல்லாம் காப்பாத்தப் போறாங்க, அதுவும் இறைவன் கொடுத்த வரம். அதை நிறைவேற்ற இந்த சன்னிதானத்தை இறைவன் அனுப்பியுள்ளார். அம்மா பிரதமர் ஆவார் என அவர் ஜாதகம் சொல்லுகிறது,” ஜெயலலிதா பிரதமராவார் என்பது ஆண்டவன் கட்டளை – ஜாதகம் சொல்லுகிறது என்றெல்லாம் பேசி ஜாதகத்தைப் பொய்யாக்கி, ஆண்டவனுக்கும் அவப்பெயர் உருவாக்கிவிட்டு திருமிகு மதுரை ஆதினத்தின் திருவை சீரழித்துச் சென்றார்! [பிரதமர் ஆக வேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் உள்ளது, ஆகவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாராவது, ஆரூடம், ஜோசியம் என்று யாதாவது சொல்லிவிடப் போகிறார்கள்…..]

அறநிலையத் துறை அமைச்சரை எதிர்த்துப் பேசிய ஆதினம்: இப்போது மதுரை ஆதினமாகியுள்ள அரிகர தேசிகர் ஞான சம்பந்தமோ முன்னாள் பீடாதிபதி ‘அருணாகிரியை’ விட தான் குறைந்தவறில்லை என்பது போல அபத்தங்களைப் பேசி வருகிறார். கழக அமைச்சரவையில் அடக்கத்துக்கும் பொறுமைக்கும் பக்திக்கும் பணிவுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவையே கோபம் கொள்ளச் செய்யும் அளவு ஆதினம் அரிகரதேசிகரின் பேச்சும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. மத நம்பிக்கைகள் அது எந்த மதத்தினருடையதாக இருந்தாலும் அதில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு செயல்படுகிறது, கழக ஆட்சி! [அடேங்கப்பா, ‘‘கோபம் கொள்ளச் செய்யும் அளவு” என்று இனி சட்டத்தில் விவரிக்கப் பட வேண்டும், பிரிவையும் சேர்க்க வேண்டும், பிறகு அத்தகைய சட்டப் பிரிவை மீறுபவர்களை கைது செய்து விடலாம்.]

சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது: இந்தியாவிலேயே மத நல்லிணக்கம் தமிழகத்திலேதான் சீராக, சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் தருமபுர ஆதின குரு பூஜையை ஒட்டி நடைபெற இருந்த பட்டினபிரவேச நிகழ்ச்சியில் ஆதினகர்த்தரை பல்லக்கில் சுமந்து மனிதர்கள் வருவதற்கு சில கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்ததை ஒட்டி, அதனால் எந்த சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற போக்கில் அந்த நிகழ்வுக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்த நிலையில் – அதனை ஒட்டி விவாதம் உருவானபோது, இதனால் தமிழகம் கட்டிக்காக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஊறு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலும், இதனை வைத்து குளிர் காய நினைத்த சில மதவெறிக் கூட்டத்தின் செயலுக்கு இடம்தராத வகையிலும், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உடனடியாக தலையிட்டு ஆதினகர்த்தர்களுடன் அவரும் பேசி, அவர்களை முதலமைச்சரையும் சந்திக்க வைத்து – ஒரு சுமூக நிலையை உருவாக்கினார்! [ஆக, ‘‘சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது,” இதையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்படியாவது உள்ளே தள்ளவேண்டும் என்றால், இப்படியெல்லாம் யோசித்து எழுதுவார்கள் போலும்.]

© வேதபிரகாஷ்

13-06-2022


[1] கலைஞர்.செய்திகள், குறுக்கு சால் ஓட்டி, களங்கம் விளைவிக்கும் மதுரை ஆதீனம் கவனத்திற்கு.. முரசொலியில்சிலந்திஎச்சரிக்கை!, Prem Kumar, Updated on : 12 June 2022, 09:32 AM.

[2] https://www.kalaignarseithigal.com/politics/2022/06/12/silandhi-article-in-murasoli-newspaper-warning-madurai-aadheenam

[3]  முரசொலி, அத்து மீறும் ஆதீனம் அறிவதற்கு, சிலந்தி, 2-06-2022, பக்கம்.3.

பல்லக்கில் செல்வது, பல்லாக்குத் தூக்குவது, சாமி பல்லக்குத் தூக்குவது, பட்டின பிரவேசம் செய்வது – முதலியவற்றில் உள்ள திரிபுவாதங்களும், இந்துவிரோத போக்கும் – 2022 தொடரும் அவலம்!

மே 3, 2022

பல்லக்கில் செல்வது, பல்லாக்குத் தூக்குவது, சாமி பல்லக்குத் தூக்குவது, பட்டின பிரவேசம் செய்வது முதலியவற்றில் உள்ள திரிபுவாதங்களும், இந்துவிரோத போக்கும் 2022 தொடரும் அவலம்!

பல்லாண்டுகளாக நடந்து வரும் பாரம்பரியத்தை எதிர்ப்பது: மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது[1]. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்[2]. 500 ஆண்டுகளாக நடந்து வருவதாக ஆதீனங்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் காலம்-காலமாக நடந்து வரும் நிலையில் கடவுள் நம்பிக்கை இல்லாத, இந்துவிரோதிகளாக இருக்கும் திராவிடக் கழக வகையறாக்கள் எதிர்த்து வருவது தமாஷாக இருக்கிறது. மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது[3], என்று செய்திகள் வெளியிடப் படுகின்றன. அதாவது, ஏதோ அடிமைகள் எஜமானனை, ஜமீந்தாரை, தலைவரைத் தூக்கிச் செல்வது போல குறிப்பிடுகிறார்கள் போலும். திராவிட அரசியலில் யார், யாரைத் தூக்கி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான்.

மனிதனை மனிதன் தூக்குகிறான்: மனிதனை மனிதன் தூக்குகிறான் என்பதே விசித்திரமான எதிப்பு தான், ஏனெனில், இது ஒரு சாதாரணமான நிகழ்வு. எல்லா இடங்களிலும் நடைபெற்று வரும் விசயம். “டோலி” உபயோகம் மலைக் கோவில்களில் உள்ளது. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், பெண்கள், சிறுவர்கள் போன்றோர் அதை உபயோகித்துச் செல்கின்றனர். இதில் என்ன தவறு அல்லது புதிர் இருக்கிறது என்று தெரியவில்லை. தேர்தலில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றால், வெற்றி பெற்றவனை, தலைவனை, கேப்டனைத் தூக்கிச் செல்வது பாராட்டுவது என்பதெலாம் சகஜமான சமாச்சாரங்கள். திரைப்படங்களில் காதலியை காதலன் தூக்குகிறான். மலைப்பிரதேசங்களில் குறிப்பாக படிகட்டுகள் மூலம் ஏற முடியாதவர்கள் நாற்காலிகளை பல்லக்குப் போன்று அமைத்துத் தூக்கிச் செல்கிறார்கள். அதற்கு பணமும் வசூலிக்கப் படுகிறது. அந்நிலையில், பல்லக்கில் மடாதிபதியை வைத்து, பக்தர்கள் தூக்குவது எப்படி வித்தியாசமாக பார்க்கப் படுகிறது என்று தெரியவில்லை.

2021ல் பட்டின பிரவேசம் நடந்தது: கடந்த ஆண்டு 2021 திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது[4]. ஆனால், எந்த பிரச்சினையும் நடகவில்லை, நடந்ததாக செய்தி இல்லை. அதாவது, வெறும் மிரட்டலில் ஈடுபட்டு, விளம்பரம் தேடியுள்ளனர் என்றாகிறது. தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் 22-05-2022 அன்று நடைபெறவுள்ளது[5]. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து[6] மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருக்கிறார்[7]. “ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும், பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது,” எனக் கோட்டாட்சியர் பாலாஜி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்[8].

சட்டம் ஒழுங்குப் பிரச்னையை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:  “சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால்,” எனும்போழுது, யாரால் ஏற்படும் என்பதனை அறிந்து கொள்ளலாம். 500 ஆண்டுகளில் நடக்காதது, அண்ணா-கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயலலிதா-ஓபிஎஸ்-இபிஎஸ் ஆட்சிகளில் நடக்காதது, இப்பொழுது ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும் என்றால், பிரச்சினை பக்தர்களிடம் இல்லை. அதை எதிர்க்கும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், முதலிய வகையறாக்களில் தான் உள்ளது. அத்தகைய தைரியம், போக்கு எங்கிருந்து வந்தது என்பதனை கவனிக்க வேண்டும். கவர்னருக்கு கருப்புக் கொடி காட்டி, கொம்புகளை எரிந்தது போல, இங்கும் தாக்குதல் நடத்தினால், அதனை இந்த நாத்திகர்கள் தான் செய்வார்க்கள். அப்படியென்றால், முதலில் அவர்களை கைது செய்து, “சட்டம் ஒழுங்குப் பிரச்னை..,” யை சரிசெய்து, நிலை நிறுத்த வேண்டும். அதை விடுத்து, சம்பந்தமே இல்லாமல், ரிவர்ஸ் கியரில் சென்று பக்தர்களை இம்சிக்கக் கூடாது. பாரம்ப்ரிய சம்பிரதாயங்களைத் தடுக்கக் கூடாது. அதுவே சட்டமீறல் ஆகும்.

திராவிட பாரம்பரையத்தின் பல்லக்குத் தூக்கல்: பல்லாக்கு, பல்லாக்குத் தூக்கி, பல்லாக்கு புராணங்கள் திராவிடத்தில் அதிகமாகவே உள்ளன…….மேடைப் பேச்சுகள், திரைப்பட வசனங்களில் அவை அதிகமாகவே இருந்தன. இப்பொழுதும், ஆதரவு கொடுப்பது போன்ற ரீதியில், “பல்லக்குத் தூக்குதல்” சொல்லாடல் உள்ளது. அண்ணாதுரை பல்லக்கில் சென்றது எல்லாம் இருக்கிறது. இப்பொழுது புகைப்படங்கள், விவரங்கள் மறைக்கப் படுகின்றன. பிறகு, சாரட்டு வண்டிகளில் தொண்டர்கள் சூழ கருணாநிதி, வீரமணி போன்றோர் உலா, ராஜ பவனி வந்துள்ளனர். அதுவும் அரசியல் என்று வந்து விட்டால் கேட்க வேண்டாம்…..இன்றைக்கு அமைச்சராக இருக்கும் பொய்யாமொழி, கூட 2020ல் சாமி பல்லக்குத் தூக்கி இருக்கிறார்! அப்பொழுது பகுத்தறிவுகள் யாரும் விமர்சிக்கவில்லை………பெரியார் பிஞ்சுகள், பெரியாரிஸ குஞ்சுகள் துடிக்கவில்லை…….சாமி பல்லாக்குத் தூக்குவது ஒரு பாக்கியமாகக் கருதப் பட்டு வருகிற்து. அப்படி பல அரசியல்வாதிகள் செய்திருக்கிறார்கள். ஆக, இப்பொழுது, இப்பிரச்சினையைக் கிளப்புவது, அரசியல் ரீதீல் தான், மற்றும் தடை விதிப்பது போன்றதும்,  உள்நோக்கம் கொண்டது தான்.

திராவிட அரசியலில், பல்லக்கு வார்த்தை பிரயோகம் சாதாரணமானது!

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் (1894-1994)  பல்லக்கில் சென்றது முதலியன: பழைய காஞ்சி சங்கராச்சாரியாரை நடக்க வைத்தோம் என்று திராவிடக் கட்சிகள், ஆதரவாளர்கள், சித்தாந்திகள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அது மிகவும் தவறு. அவருக்கு 1914, 1924, 1934, 1954, 1964, ஆண்டுகளில் முறையே 20, 30, 40, 50, 60 வயதுகளில் இருந்த போது, துடிப்பாக, வேக-வேகமாக நடப்பார். இன்னும் சொல்லப் போனால், கூட வருபவர்கள் ஓடி வரவேண்டும் அந்த அளவுக்கு வேகமாக நடப்பார். வயதாகியபோது, பல்லக்கு நான்கு சக்கர சைக்கிள் வண்டியாகியது. பிறகு தான் கார் ஆகியது. அப்பொழுது அவர் நடந்து சென்றதை எல்லாம் அறிந்தவர்கள் உண்டு. காரில் சென்றால் சரி, பல்லக்கில் சென்றால் தவறு என்பது காலம் மாறி வரும் நிலையைக் காட்டுகிறது. 1964ல் 70 மற்றும் 1974ல் 80 வயதில் இருந்தார். ஆகவே உண்மை அறியாமல், ஏதோ ஒருவர் ஆதாரம் இல்லாமல் எழுதுவது, அதனை இன்னொருவர் எழுதுவது என்று பரப்புவது பொய்யாகும். ஏனெனில், இந்த தேதிகளே எடுத்து காட்டுகின்றன. இப்பொழுது, கார் / வேன் இருப்பதால் அதன் மூலம் மடாதிபதிகள் சென்று வருகின்றனர். எனவே சங்கராச்சாரியாரே செய்யாததை, இந்த சைவ மடாதிபதிகள் செய்கிறார்களே போன்ற பேச்சுகள் தேவையில்லை. வேண்டுமென்றால், திராவிடத் தலைவர்களை நடந்து போக சொல்லலாம்.

© வேதபிரகாஷ்

03-05-2022


[1] புதியதலைமுறை, தருமபுரம் ஆதீனம்: பல்லக்கு தூக்கி செல்ல அனுமதி மறுத்து கோட்டாட்சியர் உத்தரவு, தமிழ்நாடு,    Veeramani Published :02,May 2022 03:12 PM

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/136508/RDO-order-denying-permission-to-lift-the-pallakku-festival-in-Dharmapuram-Aadeenam

[3] தமிழ்.இந்து, தருமபுரம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமக்க தடை: மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு, செய்திப்பிரிவு, Published : 03 May 2022 07:08 AM; Last Updated : 03 May 2022 07:08 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/795014-devotees-are-not-allowed-to-carry-pallakku-1.html

[5] தந்தி.டிவி, தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை, பதிவு : மே 02, 2022, 02:09 PM.

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2022/05/02140958/3319374/Dharmapuram-Adinath-Brkg.vpf

[7] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதால்..! – தருமபுர ஆதீன நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க கோட்டாட்சியர் தடை, மு.இராகவன், Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/govt-banned-palanquin-in-dharumapuram-aadheenam-function

ரங்கநாதன்-ராமசாமி, ரங்கநாதன் பிள்ளை-ராமசாமி நாயக்கர், குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (1)

ஒக்ரோபர் 6, 2020

ரங்கநாதன்-ராமசாமி, ரங்கநாதன் பிள்ளை-ராமசாமி நாயக்கர், குன்றக்குடி அடிகள்-ஈவேரா பெரியார்: ஆத்திக-நாத்திக கூட்டா, இந்து-இந்துவிரோத மோதலா, அரசியல் சமரசமா? (1)

ரங்கநாதன் கந்தசாமி தம்பிரான் ஆகி, 1952ல் “ஶ்ரீலஶ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” ஆனது: குன்றக்குடி அடிகளின் வாழ்க்கை வரலாறு, ஆன்மீகத்தையும் தாண்டியதாகத் தெரிகிறது. ஒரு பக்கம் அவர் சைவத்தை, இந்துமதத்தை ஆதரித்து செயல்பட்டார் என்றிருந்தாலும், பிறகு, திக-திமுக தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு, ஆன்மீக நலன்களுக்காக பாடுபடவில்லை, எதிர்மறையாக் செயல்பட்டார் என்பது போல் உள்ளது. எனவே, அவரது வாழ்க்கை குறிப்புகளை ஆராய்வோம். தமிழ்நாடு தஞ்சாவூரில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும்  சிற்றூரில் சீனிவாசம் பிள்ளை, சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு ரங்கநாதன் ஜூலை 11, 1925 அன்று பிறந்தான். இவன் தான் பிறகு குன்றக்குடி அடிகள் என்றறியப்பட்டார். ரங்கநாதனுக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர். 1944ல் பள்ளிப் படிப்பு முடிந்ததும், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலைக்கு சேர்ந்தார். 1945-48 காலகட்டத்தில் “கந்தசாமி தம்பிரான்,” என்று தீக்ஷைப் பெற்று முறைப்படி தருமபுரம் தமிழ்க் கல்லூரியில், தமிழ் கற்றுக் கொண்டார். 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-இல் ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16 ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 1952ல் “ஶ்ரீலஶ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்று 45ஆவது குருமகா சந்நிதானமாக, ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம், என்று தினமணி வர்ணிக்கிறது[1].

இறைமறுப்பு காலத்தில் அடிகள் மடாதிபதி ஆனது: இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. தமிழகத்தில் திராவிடர் கழகம் / திமுக மற்றும் அதன் தலைவர் ஈவேரா / பெரியார், அண்ணா, கருணாநிதி முதலியோர்களின் அரசியல், சித்தாந்தம் மற்றும் இந்துவிரோத சித்தாந்தம் எல்லோரும் அறிந்தது எனலாம். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று ஈவேரா தொடர்ந்து 1953ல் “ஆபாச விநாயகர்” உருவத்தை உடைத்து, உருவ வணக்கக் கடவுள்- பித்தலாட்டம் என்றும் பிரச்சாரம் செய்தார்[2]. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார், என்று தினமணி செய்தியில் உள்ளது. இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11 ஆம் நாள் சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே “அருள்நெறித் திருக்கூட்டம்,”[3] என்றெல்லாம் விவரித்தது. 1954ல் ஈவேராவை சந்தித்ததாக உள்ளது. ஆனால், அச்சந்திப்பிற்குப் பிறகு, போக்கு ஒன்றும் மாறவில்லை. அடிகளின் தொகுப்பு நூல்கள் 16 வெளியிடப் பட்டுள்ளன. அவற்றிலிருந்து விவரங்கள் எடுக்கப் பட்டுள்ளன. பிறகு ஈவேரா-பெரியார் புத்தகங்களுடன் ஒப்பிடப் படுகின்றன. மற்ற துணை புத்தகங்களும் (secondary-secondary sources) உதவிக்கு எடுத்தாளப் படுகின்றன. 01-08-1953 அன்று விநாயகர் சிலையை உடைத்தால், 01-11-1953 அன்று, குன்றக்குடி அடிகளுடன் காரில், மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு பிரயாணம் செய்தாராம்! பிறகு என்ன சைவம், வெங்காயம் எல்லாம்!

1953-1956: ஈவேரா-அடிகள் சந்திப்பு, விநாயகர் சிலை உடைப்பு, அடிகளின் பாராட்டு: 1954 ஜூலை 10 ஆம் நாள் இதன் முதல் மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இங்கு இவர் பார்ப்பனர் என்பதை விட, இந்தியாவின் கவர்னர்-ஜெனரல் என்ற முறையில் அழைக்கப் பட்டிருக்கலாம்[4]. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. 1955ல் இந்திஎதிர்ப்பு என்று மறுபடியும் ஆரம்பித்து, ஈவேரா ராமன் படத்தை எரிக்கச் செய்து ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினார். அதாவது, அடிகளாரின் சந்திப்பு பிரயோஜனமாகவில்லை என்று தெரிகிறது. “அருள்நெறித் திருக்கூட்டம்” – அதன் செயலாக்கப்பிரிவாக “அருள்நெறித் திருப்பணி மன்றம்” எனும் அமைப்பும் 1955 ஜூன் 10 ஆம் நாள் கிளைத்தது என்பது வியப்பு தான். ஏனெனில், அதே ஈவேராவுக்கு, 12-09-1956 அன்று, இதே அடிகள் தலைமையில் “தன்மான வீரர்” என்று டாலர் பரிசளித்தார்! அதாவது, இருவரும் சேர்ந்து ஏதோ செய்வது உறுதியாகிறது.

“தெய்வீகப் பேரவை”  ஆரம்பிக்கப் பட்டது: அப்போதைய தமிழக அரசின் (காங்கிரஸ்) துணையோடு தமிழ்நாடு “தெய்வீகப் பேரவை” எனும் அமைப்பு, 1966 இல் ஆரம்பிக்கப்பட்டது. தருமை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் திராவிட சித்தாந்திகளுடன் நட்பு வைத்துக் கொண்டார். இதனால், தனது “இந்து சார்பு” பேச்சுகள்-எழுத்துகள் குறைந்தன. ஈவேரா, வீரமணி, அண்ணா, கருணாநிதி என்று எல்லோரிடத்திலும் பழகினார்.  1956ல் அண்ணா குன்றக்குடி மடத்திற்கு வந்தார், வினோபா பாவே வந்தார்; 1959ல் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வந்தார் என்பது எல்லாம், இவர் தனது அரசியல் தாக்கம் மூலம் தனது பள்ளி முதலியவற்றை ஏற்படுத்தப் பயன்படுத்தி கொண்டார் என்று தெரிகிறது. காங்கிரஸ்காரர் போன்று காட்டிக் கொண்டு, இந்துவிரோத திராவிட நாத்திகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். தனது தாக்கத்தினால், அவர்களது விக்கிர உடைப்பு, இந்து பழிப்பு, முதலியவற்றை அவரால் தடுக்க முடியவில்லை. மாறாக, அத்தகையோரைப் பாராட்டி வந்துள்ளது முரண்பாட்டை அல்லது உள்ளிருக்கும் உறவை எடுத்துக் காட்டுகிறது.

காங்கிரஸிலிருந்து விலகி, திகதிமுகவிற்கு சென்றது: 1950ஆம் ஆண்டின் மத்தியில் பிள்ளையார் சிலை உடைப்பு மற்றும் ராமர் சிலை உடைப்பு போராட்டங்களை பெரியார் முன்னெடுத்தார். ஆனால், இவர் எதிர்க்கவில்லை. இந்தப் போராட்டத்துக்கு அருள்நெறி திருக் கூட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பெரியாரின் போராட்டத்துக்கு எதிர்வினை ஆற்றினார். துண்டறிக்கைகளை வெளியிட்டார், என்று திராவிடத்துவவாதிகள் விளக்கம் கொடுத்தாலும், இவரது பிறழ்ச்சி வெளிப்பட்டது. மறைமலை அடிகள் போன்று, இவரும், திராவித்துவத் தலைவர்கள் நன்றாகப் பயன்படுத்துக் கொண்டார்கள் என்று தெரிகிறது[5]. 1948-49ஆம் ஆண்டில் மாவட்ட கழகங்களுக்கு நடந்த தேர்தலிலும், 1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் காமராசரை ஆதரித்து காங்கிரசுக்கு வாக்குகேட்டு பிரச்சாரம் செய்தவர், பிறகு திராவிட கட்சிகளின் பின் சென்றது திகைப்பாக இருக்கிறது. 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் முரண்பட்டது வியப்பாக இருந்தது. 1967ஆம் ஆண்டு காரைக்குடி திருக்குறள் விழாவுக்கு வந்த அண்ணாவை மடத்திற்கு சிறப்பு விருந்தினராக வரவேற்று, அவருக்கு மடத்தின் மரபுப்படி வரவேற்பு கொடுத்து பேச வைத்தார். 1965ஆம் ஆண்டில் “மொழிப்போராட்டம்” என்று நடந்தபோது குன்றக்குடியில் அடிகளார் தலைமையில் அமைதிகாக்கும் ஊர்வலம் நடந்தது. “தமிழ் வாழ்க என்பது மட்டுமே இந்த ஊர்வலத்தில் முழக்கமாக இருந்தது,” என்றெல்லாம் விளக்கம் அளித்தாலும், இவரது அரசியலிலலஈடுபடும் போக்குத் தெரிந்தது.  இதனால், குன்றக்குடி அடிகளார் கைது செய்யப்பட்டு 350 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது[6].  ஆக சைவம் என்றும் இல்லாமல், இந்து என்ற நிலையும் இல்லாமல், திராவிட நாத்திகர்களுடன் சமரசம் செய்து கொண்டது தான் வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

05-10-2020


[1] தினமணி, அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார், Published on : 20th September 2012 04:20 PM.

[2]  சாமி.சிதம்பரனா, தமிழர் தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார கழகம், சென்னை, 1997.

[3] https://www.dinamani.com/editorial-articles/2009/oct/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-88054.html

[4]  பிராமணர் அல்லாத இயக்கம் என்று ஆரம்பித்தாலும், அது பார்ப்பன வெறுப்பு-காழ்ப்பு-விரோத இயக்கமாக மாறி செயல்பட்டது. மற்ற உயர்ஜாதியினர், குறிப்பாக முதலியார், பிள்ளை, நாயக்கர், முதலியோர் அதிகமாகவே அத்தகைய உணர்வு கொண்டிருந்தனர்.

[5]  மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கம் என்ற போர்வையில், சைவத்திற்கு திரிபு விளக்கம் கொடுத்து, சைவர்களைப் பிரித்தார். அதன் தாக்கம் தான் இன்றும் சுகிசிவம் போன்றோரிடம் வெளிப்படுகிறது.

[6] சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ஒருவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது, ‘மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ்காரராகிய அடிகளார். இந்தியை எதிர்த்து ஊர்வலம் நடத்தி யுள்ளார்” என்று பேசினார். அப்போது முதல்வர் பக்தவச்சலம், “அடிகளார் எங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. அடிகளார் காங்கிரஸ் வேறு” என்று பதில் கூறினார்.  குன்றக்குடி அடிகள், பக்கம்.120.

அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வழக்கு நடவடிக்கைகளைத் திரும்பப்பெற ஆணை பிறப்பித்தார். அதுமட்டுமா? அரசு பெற்ற அபராதத் தொகை யையும் திரும்பக் கொடுக்கும்படி ஆணை பிறப்பித்தார்! வழக்கு நடவடிக்கையைத் திரும்பப்பெற்ற அரசாணை கிடைத்தது. பணமும் கிடைத்தது. பக்கம்.121.

இந்துத்துவம் பிணைக்கும் போது பிஜேபிகாரன், ஆர்.எஸ்.எஸ்.முதியவரைக் கொலை செய்ய முடியுமா? குற்ற மனப்பாங்கு எப்படி வந்தது – சுயபரிசோதனை செய்யவேண்டும்!  

ஜூலை 3, 2020

இந்துத்துவம் பிணைக்கும் போது பிஜேபிகாரன், ஆர்.எஸ்.எஸ்.முதியவரைக் கொலை செய்ய முடியுமா? குற்ற மனப்பாங்கு எப்படி வந்ததுசுயபரிசோதனை செய்யவேண்டும்!

Self-introspection required to check-power struggle or ideology failure

கருடா சௌக்கியமா? பரசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது!: அதிகாரம் ஊழலை உண்டாக்கும், சிதைக்கும், அதுபோல, அளவுக்கு அதிகமான அதிகாரம், எதேச்சாதிகாரம் அதிக அளவில் ஊழலை, நாசத்தை, சேதத்தை உண்டாக்கும் (Power corrupts, absolute power corrupts absolutely). ஒரு சாதாரண மனிதன் கூட, அதிகாரத்தைக் கொடுத்தால், கொஞ்சம் கொஞ்சமாக அகம்பாவம், ஆணவம், திமிர், மமதை, இருமாப்பு என்று ஆட ஆரம்பித்து விடுவான். “யாரும் இருக்கும் இடத்தில் இருது கொண்டால், எல்லாம் சௌக்கியமே,” கருடன் சொன்னது. இந்துத்துவ வாதிகளுக்கு, இதெல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது. தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால், முதலில் சுய-பரிசோதனை செய்து கொண்டு, என்ன பிரச்சினை என்று அறிந்து, அதனை தீர்க்க முயற்சிக்க வேண்டும். பிரம்மாவை ஒதுக்கி, சிவனைப் போல வரம் கொடுத்துக் கொண்டே இருந்தால், பஸ்மாசுரர்கள் அதிகமாகிக் கொண்டே இருப்பார்கள். கட்டுப் படுத்த வேண்டும். லெட்டர்பேட், விசிடிங் கார்டுகள் அதிகமாகின்றன எனும்போதே, செக் வைக்க வேண்டும்.

Shri Vijayendra Swamigal Mutt, Kumbakonam HO - Temples in Kumbakonam

அபினவ் தீர்த்தசுவாமி சொத்துக்களும், ஆக்கிரமித்த பிஜேபி தலைவரும்: மடத்தின் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் வடக்கு மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன் (68), (வயது 80) என்கிறது மாலைமுரசு, 65 என்கிறது இன்னொரு ஊடகம்[1]. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மகன் வாசுதேவன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளர்[2]. அப்பகுதியில் உள்ள அபினவ் தீர்த்தசுவாமி மடத்தின் பொறுப்பாளராக கோபாலன் இருந்துவந்தார்[3]. இந்த மடத்துக்கு கும்பகோணம், நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளதால், இதை கோபாலன்தான் நிர்வகித்து வந்துள்ளார். இந்த மடத்துக்கு சொந்தமான 13 கடைகள் அப்பகுதியில் உள்ளன. இங்கு கடை நடத்தியவர்களில் பலர் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்ததால், மடத்தின் நிர்வாகத்தினர் கூறியதன்பேரில், அனைவரும் கடைகளை காலி செய்துவிட்டனர். ஆனால், அங்கு டெய்லர் கடை நடத்திவந்த பாஜகவின் நாச்சியார்கோவில் நகரத் தலைவரான சரவணன் (48) மட்டும், கடையை காலி செய்ய மறுத்துவிட்டார்.

BJP person kills RSS worker, Velli Idazh, 02-07-2020

நீதி மன்றத்திற்குச் சென்றது, காலிசெய்யச் சொன்னது:  இதையடுத்து, நீதிமன்றத்தில் கோபாலன் தொடர்ந்த வழக்கில், கடையை காலிசெய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடை காலி செய்யப்பட்டது. இதுதான் இவர்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது[4]. முதலில் 2 லட்சம் வாடகை பணத்தை தருகிறேன் என்றவர் நாளடைவில், “இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்,” என்று சொல்லி உள்ளார். சரவணன் இப்படி சொல்லிவிட்டதால், கோபாலன் வேறு வழி தெரியாமல் கோர்ட் உதவியை நாடினார்.. கடைசியில் சரவணனை கடையை காலி செய்ய கோர்ட் சொல்லிவிட்டது. இந்த உத்தரவையடுத்து, “கடையை காலி செய்தால் ரூ.2 லட்சம் தரேன்னு சொன்னீங்களே அந்த பணம் எங்கே,” என்று கோபாலன் கேட்டார்.. அதற்கு சரவணன், “அது கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொன்னது, இப்பதான் தீர்ப்பு வந்துடுச்சே” என்று வாக்குவாதம் செய்து வந்துள்ளார்[5].

How BJP Saravanan could kill RSS old man-news

முதியவர் கோபாலன் 30-06-2020 அன்று கொலை செய்யப் பட்டார் – 01-07-2020 மாலை செய்தி: 30-06-2020 செவ்வாய் கிழமை, இரவு தனது வீட்டின் திண்ணையில் கோபாலன் அமர்ந்து இருந்தார்[6]. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது[7]. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கோபாலனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்[8]. இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கோபாலன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்[9]. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மடத்தின் பொறுப்பாளராக பதவி வகித்து வந்த கோபாலன், மடத்துக்கு சொந்தமான சில கடைகளை பல மாதங்களாக போராடி காலி செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

BJP person kills RSS worker, Tamil Hindu, 02-07-2020

பிஜேபி நகரத்தலைவர் கொன்றதை ஒப்புக் கொண்டது, 02-07-2020 மாலை செய்தி இதனால், கோபத்தில் இருந்துவந்த சரவணன் 30-06-2020 இரவு மதுபோதையில் சென்று, தன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த கோபாலனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில், கோபாலன் உயிரிழந்தார். நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்[10]. விசாரணையில் உண்மையினை ஒப்புக் கொண்டார் என்று போலீஸார் கூறுகின்றனர்[11]. இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்[12]. “கடையை காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். இந்நிலையில் கொரோனாவால் டெய்லர் கடை வருமானமும் போய்விட்டதால், பணரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் கோபாலன் மீதான ஆத்திரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சரவணன் மாம்பழம் வெட்டுவதற்கு எனக் கூறி புதிய கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு முன் நின்றுகொண்டிந்த கோபாலனிடம், ` என் கடையைக் காலி செய்ய வைத்துவிட்டாயே.. உன்னை சும்மாவிடமாட்டேன்’ எனக் கூறி கத்தியைக் கொண்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரவணனைக் கைது செய்துவிட்டோம்” என்றனர்[13].

BJP person kills RSS worker, Tamil One India, 02-07-2020

இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்,”: பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ள சரவணன் இவ்வாறு சொன்னதில் பல திடுக்கிடும் விவரங்கள் வெளி வருகின்றன:

  1. கோவில்-மடத்து சொத்து என்று சரவணனுக்குத் தெரிந்திருக்கிறது.
  2. பிஜேபி கோவில்-மடத்து சொத்துக்களை அரசிடமிருந்தே மீட்க போராடி வருவது தெரிந்த விசயமே.
  3. “உழுதவனுக்குத் தான் நிலம்,” என்பது போல, “ஆக்கிரமிப்புக் காரனுக்குத் தான் சொத்து சொந்தம்,” என்ற தத்துவத்தை யார் சொல்லிக் கொடுத்தது?
  4. அந்நிலையில் பிஜெபி தலைவரே, அவ்வாறு மடத்து சொத்தினை அபகரித்து, தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
  5. பிஜேபிகாரர்களுக்கு அவ்வாறு தான் பயிற்சி அளிக்கப் படுகிறதா? சரவணனுக்கு அத்தகைய எண்ணன் வந்தபோதே, அவன் தடுக்கப் பட்டிருந்தால், இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்திருக்காது.
  6. கோவில்-மடத்து சொத்துக்கள் ஆக்கிரமிப்பு என்றால், சமூகவளைதளங்களில் இந்துத்துவவாதிகள் பிண்ணி எடுத்து விடுகிறார்கள்.
  7. ஆனால், இதை எப்படி கண்டு கொள்ளாமல் விட்டர்கள் என்று தெரியவில்லை.
  8. ஆகவே, சட்டப் படியான நடவடிக்கை, போராட்டம், மீட்பு எனும்போது, சம்பந்தப் பட்டவர்கள் கொள்கைகளுடன் செயல்பட வேண்டும்.
  9. நானும் மற்றவர்களைப் போல [திக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் ஆக்கிரமிப்புக் காரர்கள்] ஆக்கிரமித்துக் கொள்வேன், தனதாக்கிக் கொள்வேன் என்ற மனப்பாங்கில் இருந்தால், பிஜேபியில் இருக்க வேண்டிய அவசியமே இல்லையே?
  10. அதிகாரம், பணம் எல்லாம் வந்தால், அகம்பாவம், ஆணவம், திமிர் எல்லாம் வரலாம், ஆனால், இந்து என்ற உணர்வு இருக்க வேண்டும். அது இல்லாமல், இவ்வாறு செயல்பட்டதால் தான், இந்த ஆள் கொலையும் செய்திருக்கிறான்.

இந்துத்துவவாதிகள், இந்துத்துவ அரசியல்வாதிகள், இந்துத்துவ சிந்தனையாளர்கள், இந்துத்துவ அபிமானிகள் …இவற்றைப் பற்றி பொறுமயாக ஆராய வேண்டும், மாற்றிக் கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

02-07-2020

BJP person kills RSS worker, Tanjai Malar, 02-07-2020

[1] ஊடகங்கள் எப்படி விவரங்களை சேகரிக்கின்றன, செய்திகளாகப் போடுகின்றன, செய்திகளாக்குகின்றன, அவற்றின் தரம் எப்படியுள்ளது என்பதனை, இது போன்று என்னுடைய பல பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

[2] தமிழ்.இந்து, ஆர்எஸ்எஸ் பிரமுகரின் தந்தை கொலை; நாச்சியார்கோவில் நகர பாஜக தலைவர் கைது, Published : 02 Jul 2020 07:33 AM; Last Updated : 02 Jul 2020 07:37 AM

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/562225-bjp-leader-arrested-for-rss-cadre-murder.html

[4] தமிழ்.ஒன்.இந்தியா, 65 வயது ஆர்எஸ்எஸ் பிரமுகரை.. கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற.. பாஜக நிர்வாகி.. ஷாக்கில் கும்பகோணம்! By Hemavandhana | Updated: Wednesday, July 1, 2020, 17:44 [IST]

[5] https://tamil.oneindia.com/news/thanjavur/kumbakonam-mattam-incharge-murder-by-bjp-cadre-390012.html

[6] தினமணி, கும்பகோணம் அருகே அபிநவதீர்த்தர் மடத்தின் பொறுப்பாளர் கொலை, By DIN | Published on : 30th June 2020 10:36 PM.

[7] https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2020/jun/30/uttaradi-mutt-incharge-killed-near-kumbakonam-3431524.html

[8] மாலைமலர், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை கொலைமர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு, பதிவு: ஜூலை 01, 2020 13:23 IST

[9] https://www.maalaimalar.com/news/district/2020/07/01132323/1661015/RSS-Administrator-father-murdered-police-investigation.vpf

[10] NEWS18, தஞ்சையில் 87 வயது முதியவர் கொலையில் சிக்கிய பாஜக முன்னாள் நிர்வாகி, LAST UPDATED: JULY 2, 2020, 8:59 PM IST.

[11] https://tamil.news18.com/news/live-updates/tanjore-rss-man-murder-ex-bjp-man-arrested-san-312139.html

[12] விகடன், `வருமானமும் போச்சு.. கடையும் போச்சு!’ –மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.. நிர்வாகி, கே.குணசீலன், Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[13] https://www.vikatan.com/news/crime/old-man-murdered-by-bjp-cadre-in-kumbakonam?artfrm=v4

How BJP Saravanan could kill RSS old man-Vikatan

ஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது!

பிப்ரவரி 21, 2020

ஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது!

Muslim mutt head annointed, Karnataka-2

லிங்காயத்து மடத்திற்கு, ஒரு துலுக்கன் மடாதிபதி ஆகிறான்[1]: செக்யூலரிஸம் என்று சொல்லிக் கொண்டு, இந்துக்களை கடந்த 70 ஆண்டுகளாக ஏமாற்றி வந்த அரசியல்வாதிகள், ஊடகவாதிகள் மற்ற அடிப்படைவாதிகள், இப்பொழுது, வேறுவிதமான யுக்திகளைக் கையாள்கிறார்கள் போலிருக்கிறது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பசவண்ணரின் கொள்கைகள் மற்றும் உபதேசங்களைத் தன் சிறு வயது முதல் கேட்டு, அதன்படி வாழ்ந்து வரும் திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா (33) என்ற முஸ்லிம் இளைஞர், வரும் புதன்கிழமை லிங்காயத்து மடத்தின் மடாதிபதியாக மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார், என்று செய்திகள் அதிரடியாக சிவராத்திரிக்கு முன்பாக ஊடகங்களில் வெளி வருகின்றன. கலாபுராகியில் உள்ள கஜ்ஜுரி கிராமத்தில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த் கோரனேஷ்வர சாந்திதம மடத்துடன் இணைந்துள்ள அசுதி கிராமத்தில் இயங்கி வரும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சாந்திதமா மடத்தின் மடாதிபதியாக நியமிக்கப்படுகிறார் முஸ்லிம் இளைஞர் ஷரீஃப்[2]. கோவில் கொள்ளை அடுத்து, செக்யூலரிஸம், சமூகநீதி பெயரில் இந்து மடங்களை துலுக்கன் / கிருத்துவர்கள் அபரிக்கும் திட்டம் செயல்படுகிறதா?

Muslim mutt head annointed, Karnataka-3

கஜ்ஜுரி மடத்தின் மடாதிபதியாக இருக்கும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சிவயோகி கூறும் விளக்கம்: “கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகப்பெரிய மடமாக இந்த லிங்காயத்து மடம் விளங்குகிறது[3]. பசவண்ணரின் தத்துவங்கள் உலகளவில் புகழ்பெற்றவை. எங்கள் லிங்காயத்  சமூகத்தில் எந்த ஜாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களும் இணையலாம். 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானி பசவண்ணர், சமூக நீதி மற்றும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபட்டார். ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் போதனைகளைக் கற்பித்தார். அவரது போதனைகளைப் பின்பற்றியே இந்த மடம் திறக்கப்பட்டது. இங்கு எந்த மதத்தினரும் வரலாம். அனைவருக்காகவும் கதவுகள் திறந்தே இருக்கும்,” என்று கஜ்ஜுரி மடத்தின் மடாதிபதியாக இருக்கும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சிவயோகி கூறுகிறார்[4]. எனது மிகச் சிறிய சேவையை அங்கீகரித்து மடாதிபதி முருகராஜேந்திர சுவாமிஜி, என்னைத் தனது குடையின் கீழ் ஏற்றுக் கொண்டார். நானும் பசவண்ணர் மற்றும் எனது குருக்களின் வழியைப் பின்பற்றி நடப்பேன் என்று கூறுகிறார் ஷரீஃப்[5].

Muslim mutt head annointed, Karnataka

அசுதி மடத்திற்கு தந்தை நிலத்தை வழங்கினாராம், தனயன் மடாதிபதி ஆனானாம்!: சிவயோகியின் உபதேசங்களின்பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப்பின் தந்தை மறைந்த ரஹிமான்சாப் முல்லா, அசுதி மடத்துக்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கினார். பசவண்ணாவின் தத்துவங்கள் பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப், லிங்க தீட்சையும் பெற்று, அதனைப் பின்பற்றியே வாழ்ந்து வருகிறார். அவரது தந்தையும் லிங்காயத்து வழிமுறைகளைபின்பற்றி வந்தனர். மேனாசகி கிராமத்தில் மாவு மில் நடத்தி வந்த ஷரீஃப், கிடைக்கும் நேரத்தில் எல்லாம், பசவண்ணர் மற்றும் 12ம் நூற்றாண்டில் உருவான மகான்களின் உபதேசங்களைப் படித்தும், பிறருக்குக் கற்பித்தும் வந்தார். சரி, துலுக்கனாகவே இருந்து கொண்டு அவ்வாறு செய்தனர் என்பது முரண்பாடாக உள்ளது. ஏனெனில், மற்றா துலுக்கன்கள் அவ்வாறு அனுமதிக்க மாட்டார்கள். தீக்ஷை கொடுக்கப் பட்டு, இவ்வாறு செய்யப் பட்டது என்றால், இவன் துலுக்கனாக இருக்க முடியாது, துலுக்கன் என்றால் எல்லாமே பொய்யாகிறது!

Muslim mutt head, Karnataka

இந்துக்கள் இல்லை என்று கூறிக்கொள்ளும் கூட்டங்களை கவனிக்க வேண்டும்: தாங்கள் இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய கர்நாடகாவின் லிங்காயத் மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க இருப்பது மதநல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாக போற்றப்படுகிறது[6] இப்படி, ஒரு பகுத்தறிவு விளக்கம் அளிக்கிறது. கர்நாடகாவில் லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைக்கக் கூடாது; வீரசைவர்கள் என்ற தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்[7]. இதனை கர்நாடகாவில் ஆண்ட காங்கிரஸ் அரசும் அங்கீகரித்தது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. பிறகு, என்ன இதைப் பற்றி கூறுவது? கர்நாடகாவின் லிங்காயத்துகளைப் பின்பற்றி தமிழகத்திலும் ஐயா வைகுண்டரை பின்பற்றுவோரும் தங்களை தனி மதமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அண்மையில் கூட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கன்னியாகுமரியில் நாங்கள் இந்துக்கள் அல்லர்; சைவர்கள் என பிரகடனப்படுத்தும் மாநாட்டை நடத்துவோம் என கூறியிருந்தார். சரவணன் என்ற சைவசித்தாந்த புரொபவசர் நடத்திய அனைத்துலக மாநாட்டிலும், “நாங்கள் இந்துக்கள் அல்ல,” என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஒன்று துலுக்க அல்லது கிருத்துவ ஆதரவு இருப்பது தெரிகிறது.

Basava reformer

துலுக்கர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்து வரும் நிலையில், சிவராத்திரி அன்று, செக்யூலரிஸ நாட்டில், இவ்விவிவகாரம், செய்தியாக வெளிவருகிறது: இதனிடையே வடகர்நாடகாவில் லிங்காயத்துகளுக்குரிய மடங்களில் ஒன்றின் மடாதிபதியாக திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா என்ற 33 வயது முஸ்லிம் இளைஞர் பொறுப்பேற்க உள்ளார்[8]. லிங்காயத்து கோட்பாடுகளை உருவாக்கிய பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி வருவதால் முஸ்லிம் இளைஞராக இருந்த போது மடாதிபதியாக அவருக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது[9]. 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோரனேஷ்வர சாந்திதம மடத்தின் கீழ் வரும் அசுதி கிராமத்தின் முருகராஜேந்திர கோரனேஷ்வர மடத்துக்குத்தான் ஷரீஃப் மடாதிபதியாகிறார்[10]. ஷரீப்பின் தந்தை ரஹிமான்சாப் முல்லா இதே அசுதி மடத்துக்காக 2 ஏக்கர் நிலத்தை வழங்கியவர். மேலும் லிங்காயத் கோட்பாடுகளை மீறி திருமணமாகி குழந்தைகள் பெற்றவரான ஷரீப் மடாதிபதியாக்கப்படுகிறார் என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது[11].  நாடெங்கிலும், துலுக்கர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்து வரும் நிலையில், சிவராத்திரி அன்று, செக்யூலரிஸ நாட்டில், இவ்விவிவகாரம், செய்தியாக வெளிவருகிறது[12]. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளிலிருந்து விரட்டப் படும் இந்துக்களுக்காகா ஆதரவாக உள்ளது எனேய் துலுக்கன்கள் எதிர்த்து வருகின்றனர்[13]. பிறகு, துலுக்கன் மடாதிபாதி ஆனால், இந்துக்களுக்கு என்ன நலன், பலன் கிடைக்கும்? ஆகவே, இது விளம்பரத்திற்காக சொருகப் பட்ட செய்தியா அல்லது அத்தகைய நியமனம் சட்டப் படி செல்லுமா என்று பார்க்கவேண்டும்.

Muslim become Hindu mutt head, Basava reformer

இந்துவிரோத மடங்களின் செயல்பாடுகள்: பழனி ஆதீனம், பொம்மபுரம் மடம், சைவசித்தாந்த பெருமன்றம் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று தீர்மானம் போட்டுள்ளன! இப்படியே ஷிருடி மற்றும் புட்டபர்தி சாய்பாபா குழுக்கள் மற்ற மடங்கள் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தால், இந்துக்கள் என்று எத்தனை பேர் இருப்பர்? காங்கிரஸ், கர்நாடகாவில், சைவ மடங்களைத் தூண்டி விட்டு, “மைனாரிடி” அந்தஸ்து கோரி போராடும் படி தூண்டின. பிறகு, அத்தகைய அந்தஸ்த்தை கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தது. பீஜேபியும் கூட ஒப்புக் கொண்டது. ஆனால், நிலைமையை உணர்ந்ததும் திர்க்க ஆரம்பித்துள்ளது. இதெல்லாம், கிருத்துவர்களாக மதம் மாறிய எஸ்.சிக்களுக்கு, தொடர்ந்து அந்த அந்தஸ்து, இடவொதிக்கீடு, சலுகைகள் தோடர வேண்டும் என்ற சதிதிட்டத்துடன் போராடுவதற்கு சாதகமாக இருக்கவே, அவ்வாறு செய்து வருகின்றன. 1985ல் சூசை வழக்கில் தோற்று, மேல் முறையீடு செய்யாமல், இப்பொழுது மறுபடியும், அப்பிரச்சினையை உச்சநீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்[14]. The Constitution (Scheduled Castes) Order 1950, மூன்றாவது பிரிவை நீக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்[15]. இந்துக்களுக்கு தான் என்றிருக்கும் போது, கிருத்துவர்கள் அதில் தலையிடுவதும் வேடிக்கைதான். கிடைக்காது என்று தெரிந்தும், அவ்வாறு வழக்குத் தொடுப்பது, அதனை, நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது முதலியன, சதிதிட்டத்தை வெளிப்படுத்துகிறது.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim become Hindu mutt head, Basava reformer-2

[1]  கடவுளையே அவன் – இவன் என்று ஏகாரத்தோடு விளித்து, எழுதி, பேசி வருவது தமிழரின் பண்பாடு.

[2] Deccan Chronicle, In a first, Muslim to head Lingayat mutt in Karnataka: ReportHe is also the first family man to be given the position, DH Web Desk, FEB 20 2020, 15:14 PM IST UPDATED: FEB 20 2020, 15:44PM IST

[3] https://www.deccanherald.com/state/karnataka-politics/in-a-first-muslim-to-head-lingayat-mutt-in-karnataka-report-806441.html

[4] தினமணி, லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதி 33 வயது முஸ்லிம் இளைஞர், 05:27 pm Feb 20, 2020 |

[5] https://m.dinamani.com/article/india/the-next-head-of-the-lingayat-is-a-33-year-old-muslim-youth/A2020-3362723

[6] தமிழ்.ஒன்.இந்தியா, இந்துக்கள் அல்ல என போர்க்கொடி தூக்கிய லிங்காயத்துகளின் மடாதிபதிகளில் ஒருவராகிறார் முஸ்லிம் இளைஞர், By Mathivanan Maran | Published: Thursday, February 20, 2020, 15:18 [IST]

[7] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-lingayat-mutt-set-to-announce-muslim-pontiff-377644.html

[8] Bangalore Mirror, Muslim youth Rahimansab Mulla set to head Lingayat mutt in Karnataka, By Sangamesh Menasinakai, TNN | Updated: Feb 20, 2020, 13:44 IST.

[9] https://bangaloremirror.indiatimes.com/others/muslim-youth-rahimansab-mulla-set-to-head-lingayat-mutt-in-karnataka/articleshow/74222995.cms

[10] Siasat, Karnataka: Muslim to become head of Lingayat Mutt, POSTED BY SAMEER, PUBLISHED: FEBRUARY 20, 2020, 12:49 PM IST

[11] https://www.siasat.com/karnataka-muslim-become-head-lingayat-mutt-1831681/

[12] The appointment comes in the backdrop of huge protests against the citizenship law, which for the first time, makes religion a factor in citizenship. The new law facilitates citizenship for non-Muslim refugees from Pakistan, Bangladesh and Afghanistan, who flees because of religious persecution. https://www.ndtv.com/india-news/muslim-man-chosen-to-head-gadags-lingayat-math-in-karnataka-2183110

[13] NDTV, Muslim Man Chosen To Head New Lingayat Mutt In Karnataka, All IndiaWritten by Maya SharmaUpdated: February 20, 2020 05:19 pm IST

[14] India Legal Bureau, Supreme Court issues notice on Dalit Christians’ demand for reservation, January 8, 2020, 4:32 pm.

[15] The Supreme Court on Wednesday issued notice to the Centre on the plea of National Council of Dalit Christians seeking reservation for the converts among them as Scheduled Caste members. The court was informed that despite their conversion to Christianity, there was no change in their backward social condition – they still faced exclusion as caste hierarchy prevailed within Christianity too – and therefore they deserve reservation. The petitioner further seeks the removal of paragraph 3 of the Constitution (Scheduled Castes) Order 1950 that denies SC status and rights to Dalit Christians. A state resolution related to this was passed in Andhra Pradesh in which it appealed to the central government that Dalit Christians should also get the benefit of reservation like the Scheduled Castes. This proposal was presented by the then Chief Minister Chandrababu Naidu. The Court was asked to consider referring this question of extending reservation to Dalit Christians to a bench larger than the present three-judge bench comprising CJI Bobde, and Justices B R Gavai and Surya Kant. The Court tagged the matter with similar writ petitions pending since 2004, and is expected to list it for hearing soon.

https://www.indialegallive.com/constitutional-law-news/supreme-court-news/supreme-court-issues-notice-on-dalit-christians-demand-for-reservation-81702

கற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை?

மே 5, 2012

கற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை?


அமர்-அக்பர்-அந்தனி பாணியில் கோர்ட்டில் வக்கீல்கள் வாத-பிரதிவாதங்கள்: இந்தியில் அமர்-அக்பர்-அந்தனி பாணியில் அல்லது தமிழில் சங்கர்-சலீம்-சைமன் பாணியில் சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகி வாத-பிரதிவாதங்கள் புரிந்தது, செக்யூலரிஸ புற்களின் அரிப்பு தாங்கமுடியாமல் போய்விட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[1], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”, என்றெல்லாம் சொன்னபோது, வேடிக்கையாக இருந்தது. அதற்கு என்ன ஆதாரங்கள் என்ரு அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. ஏதோ குற்றஞ்சாட்டவேண்டும் என்ற போக்கில் வாரியிறைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆயிரங்காலமாக இருந்துவரும் ஒரு சைவ மடத்தின் மீது உண்மையிலேயே அக்கரையுள்ளவர்கள் அல்லது படித்துத் தெரிந்து கொண்டவர்கள் இத்தகைய விதத்தில் மனுக்களில் குறிப்பிடமாட்டார்கள், வாதங்களும் செய்திருக்க மாட்டார்கள். இதிலிருந்தே அவர்களுக்கு உண்மையில் இந்து மதத்தில் எந்த அக்கறையும் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.

இந்துமதத்தில் அக்கரையுள்ளவர்கள் வழக்குகள் போடுகிறார்களா? மடாதிபதி, பீடாதிபதி, மதத்தலைவர் என்றாவதற்கு நிச்சயமாக மற்ற மதங்களிலும்[2] போட்டிகள், பொறாமைகள் முதலிய இருந்து வருகின்றன. கற்பழிப்பு, சொத்து மோசடி[3], நில-அபகரிப்பு[4], பணம் கையாடல்[5], சர்ர்சுகளில் சண்டை[6] போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியவிவகாரங்கள் கிருத்துவமதத்திலும், அதே போன்ற பிரச்சினைகள் மற்ற மதங்களிலும் உள்ளன. மற்ற மதத்தினரோ தமது செல்வாக்கினால், அதிகாரத்தினால், பணபலத்தினால் ஏன் மிரட்டல்களினால் மறைத்துவிடுகின்றனர். ஆனால், அவற்றைப் பற்றி செக்யூலர்வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள், அல்லது “இந்து மக்கள் கட்சி” போன்றவர்கள் கண்டு கொள்வதில்லை. அத்தகையப் பிரச்சினைகள் அடிக்கடி வருகின்றன. அவற்றில் குறைந்த அளவிலேயே ஊடகங்களில் வருகின்றன. இருப்பினும் அவர்களை கோர்ட்டில் ஆஜராக இவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை. இந்து மதத்தில் பிரச்சினை என்றால், ஏதோ இந்துக்களுக்கு உதவுவது போல வந்து விடுகிறார்கள்.உண்மையில், இவர்கள் இந்து மத நலன்களுக்கு எதிராகச் செயல் படுகின்றனர் என்பது தான் உண்மை.

மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி தருமபுரம் ஆதீனம் வழக்கு வியாழக்கிழமை, மே 3, 2012, 8:41 [IST]

மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் சதி நடந்துள்ளதாகவும், தற்போதைய ஆதீனத்தை மீட்கவும், நிர்வாகத்தை, அரசே ஏற்க உத்தரவிடக் கோரியும், தாக்கலான வழக்கின் மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. இந்து மக்கள் கட்சித் தலைவர், சோலைகண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: நித்யானந்தா, சைவ சிந்தாந்தத்தை பின்பற்றுபவர் இல்லை. அவரது நியமனத்தில் சதி உள்ளது. ஆதீன சொத்துக்களைப் பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து விசாரிக்கவும், அரசே ஆதீன நிர்வாகத்தை ஏற்கவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனுக்கள் நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், டி.ஹரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகினர்

மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[7], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”. அவர்களிடமிருந்து மதுரை ஆதீனத்தை மீட்டு அவரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், தருமபுரம் ஆதீனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[8].
மதுரை ஆதீனம் சம்பந்தமாக புகார் வந்தால் அரசு தலையிடும்: அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் முகமது மைதீன் வாதிடுகையில், ”ஆதீனம் பிரச்னைக்கு இந்து அறநிலைய துறை சட்டம் 59வது பிரிவின் கீழ் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். மேலும், இந்து அறநிலைய துறைக்கு ஆதீன நிர்வாகம் தொடர்பாக புகார் வரும்பட்சத்தில், சட்டப்பிரிவு 60ன் கீழ் அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி ஆதீன நிர்வாகத்தை தற்காலிகமாக அரசு எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்தப் புகாரும் அறநிலையத் துறைக்கு வரவில்லை’ என்றார்[10].

இதுதொடர்பாக தருமபுரம் ஆதீன மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி அவர் கூறியதை செயல்படுத்தி உள்ளார்.

தற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எடுத்த முடிவு அல்ல. அந்த முடிவினை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர். ஒரு இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தினை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார். அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது[11]. எனவே மதுரை ஆதீனத்தை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தப் புதிய வழக்கால் மதுரை ஆதீனத்திற்கும்,  நித்யானந்தாவுக்கும் சிக்கல் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

நான்யார்கட்டுப்பாட்டிலும்இல்லை: மதுரைஆதீனம்ஐகோர்ட்டில்பதில்[12]: மதுரை ஆதீனம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம்: நான், நித்யானந்தா உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும், சட்டவிரோத காவலிலும் இல்லை[13]. தினமும் பக்தர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். மடத்தை நிர்வகிக்க, சரியான அடுத்த ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. நான் வெளிநாடு செல்ல திட்டமிடவில்லை. மனுதாரர் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் பிறர் தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையான குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்துள்ளார். சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.

பிறர்தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையானகுற்றச்சாட்டுகளுடன், சுயவிளம்பரத்திற்காகஏன் மனுதாக்கல் செய்யப்படவேண்டும்? “இந்து மக்கள் கட்சி” நாத்திக ஆட்சிக்காரர்களின் ஆதரவில், “இந்து முன்னணி”க்கு எதிராக உருவாக்கப் பட்டக் கட்சியாகும். ஒருசில செயல்களைத் தவிர மற்ற செயல்பாடுகள், ஆர்பாட்டங்கள், முதலியவற்றை கவனித்துவரும் போது, அவர்கள் நிச்சயமாக இந்துக்களின் நலன்களுக்கு எதிராக, ஏன் சமயங்களில் மற்ற மதங்களுக்கு ஆதரவாக அரசு தீர்மானங்களை எடுக்க உதவும் முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். எனெவே இப்பொழுதும் அதே போக்கில் அவர்கள் நடந்து கொள்வதை காணமுடிகிறது. இவர்கள் ஏதோ சைவைத்தையே கரைத்துக் குடித்து வந்தவர்கள் போல பேசுகிறார்கள். மனுவில் குறிப்பிடுகிறார்கள். இதைப் படிக்கும்போதே, அவர்களது அஞ்ஞானம் இல்லை, உள்மனது எதிராக செயல்படும் போக்கை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டியுள்ளது.

வேதபிரகாஷ்

04-05-2012


[4] வேதபிரகாஷ்,கிருத்துவர்களின்நிலம்அபகரிப்பு தொடர்கிறது!,

http://christianityindia.wordpress.com/2011/02/10/christian-land-grabbing-continues-in-tamilnadu/

வேதபிரகாஷ், நிலமோசடி,ஆக்கிரமிப்புசெய்வதில்ஒன்றும்தவறில்லை சொல்வதுஎஸ்ராசற்குணம்! ,http://christianityindia.wordpress.com/2010/09/27/nothing-illegal-in-encroaching-land-for-church/

வேதபிரகாஷ்,நிலமோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!,

http://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/

[9] தினகரன், 05-05-2012