Posts Tagged ‘விஸ்வ ஹிந்து பரிஸத்’

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ்மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

செப்ரெம்பர் 15, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

சனாத எதிர்ப்பு பேச்ச்களால் மக்களை பாதித்த நிலை: சனாதனத்தைப் பற்றிய பேச்சுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தேவையில்லாமல், அமைச்சர்கள் அளவில், செக்யூலரிஸத்தை மறந்து, அவர்கள் பேசியதும், தொடர்ந்து மற்ற தலைவர்கள், எம்.பிக்கள் முதலியோர் ஆதரித்து விளக்கம் கொடுப்பதும், இந்தியா முழுவதும், இது அறியப் பட்டு பிரச்சினையாகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு இது அரசியலாக உள்ளது. ஆனால், இவர்களது பேச்சுகள் இந்துக்களை வெகுவாக பாதித்து வருகின்றன. இவர்கள் அரசியல் போர்வையில், தினம்-தினம் எதையதையோ சம்பந்தம் இல்லாமல் பேசி, பொது மக்களின் மனங்களில் சலனங்களை உண்டாக்கி வருகின்றனர். அரசியல் சார்புள்ள நிலையில் தமிழகத்தில் மடாதிபதிகள் அமைதியாக மௌனம் காக்கின்றனர். இதனால், நம்பிக்கையாளர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமக்குள் தம்முடைய பிரச்சினைகளை பேசிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதும், தனிப்பட்ட முறையில், உள்ளரங்களில் குறிப்பிட்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப் படும் நிகழ்ச்சிகளில் பேசுவதும் ஒன்றாகுமா என்பதெல்லாம் சட்ட வல்லுனர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

11-09-2023 அன்று பாரதிய வித்யாபவனில்பாரதியும், விவேகானந்தரும்என்ற தலைப்பில் நடந்த சொற்பொழிவு: அந்நிலையில் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் சென்னையில் 14-09-2023 அன்று கைது செய்யப்பட்டார்[1], என்று செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் சென்னையில் தியாகராயநகரில் உள்ள பாரதிய வித்யாபவனில் ‘பாரதியும், விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் கடந்த 11-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது[2]. நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருவள்ளூவர் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது[3]. சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் குறித்துப் பேசினார்[4]. திருவள்ளுவர் என்ற பெயரை யார் வைத்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்டார்[5]. திருவள்ளுவர் என்பவர் உண்மையில் இருந்ததே இல்லை என்றும் அவர் பேசினார்[6]. உண்மையில் அவர் பேசிய வீடியோ இணைதளங்களில் சுற்றுக்கு வந்தது. அவர் முழுவதும் என்ன பேசினார், என்ற விவரங்கள் தெரியவில்லை.

திருவள்ளுவர், அவரது பெற்றோர் விவரங்கள் தெரியாது: பிபிசி தமிழ் தளத்தில் உள்ளதிலிருந்து காணப்படும் விவ்ரங்கள்: “திருவள்ளுவர் இருந்தார் எனச் சொல்வது கற்பனை. அவர்தான் திருக்குறளை எழுதினார் எனச் சொல்வது அதைவிடக் கற்பனை,” என்று அவர் நிகழ்வில் பேசினார். ‘திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நூலே’ என்ற நூலை எழுதியுள்ள மணியன், ராமர் பிறந்த நட்சத்திரம் தெரியும், ஆனால் வள்ளுவர் என்று பிறந்தார், அவரது பெற்றோர்கள் யார் எனத் தெரியுமா என்றார். விவேகானந்தரின் கருத்துகளைப் பரப்புவதில் தீவிர பங்காற்றியுள்ள மணியன், கிறிஸ்தவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என விவேகானந்தர் தெரிவித்ததாகப் பேசினார். “கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதே எனக் கூறியுள்ளேன். விவேகானந்தரும் சொன்னார். பாரதியாரும் சொன்னார்,” நமது பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என அவர் பேசினார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள் எனக் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் பேசியதாக கொடுக்கப் படும் விவரங்கள்: “ராமனை ஏற்றுக்கொண்டால் ஒழிய ஒரு கிறிஸ்தவன் இந்த நாட்டில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். அந்த முஸ்லிமும் அருகதை இல்லாதவன்,” என்று அவர் அந்த நிகழ்வில் பேசினார். இதே அளவுகோலை வைத்து அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சாடினார். ராகுல் காந்தி கிறிஸ்தவர் ஐரோப்பியர் என்றும், அவருக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரையும் தாக்கிப் பேசினார். அரசியல் சாசன சட்டத்தை எழுதியது அம்பேத்கரே இல்லை என்று பேசினார். “அம்பேத்கர், தன்னுடைய மூளையில் இருந்து எழுதியதாக எழுதவே கிடையாது. எல்லாம் பேசிடுவாங்க.. அது எல்லாத்தையும் ஒரு ஸ்டெனோகிராஃபர் எழுதுவான். தட்டச்சு செய்வார், ஸ்டெனோ கிராஃபர் கரெக்டா அடிச்சிருக்காரா அடிக்கலையா என்று சரிபார்ப்பார். அந்த வேலைதான் அம்பேத்கருக்கு,” என்றார்.

அரசியல் நிர்ணய சட்டம் வரையரைக் குழுவிற்கு அம்பேத்கர் தலைவர், ஆனால், பலர் வேலை செய்தனர்: அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும்[7]. அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர்[8]. அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக.

அம்பேத்கர், பட்டியல் இன உட்பிரிவு பிரச்சினைகள்: அவரது பேச்சின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தாக்கிப் பேசியிருந்தார். திருமாவளவன் பறையர் என்றும் அம்பேத்கர் சக்கிலியர் என்றும் கூறிய மணியன், சக்கிலியரும் பறையரும் திருமணம் செய்துகொள்வார்களா, பறையரும் பள்ளர்களும் திருமணம் செய்துகொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினார்[9]. மணியன் தன்னுடைய பேச்சு முழுவதிலும், திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை ஒருமையில் பேசி கடுமையாகச் சாடினார்[10]. இவரது பேச்சு சமூகவலை தளத்தில் பரவியது.  பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது[11]. அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தை தெரிவித்திருந்தனர்[12]

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமலர், ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது; 14 நாள் நீதிமன்ற காவல், மாற்றம் செய்த நாள்: செப் 14,2023 12:28.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3431645

[3] அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு: ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By Maalaimalar .14 செப்டம்பர் 2023 11:41 AM (Updated: 14 செப்டம்பர் 2023 4:00 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/chennai-police-arrested-rbvs-manian-arrested-662383

[5] விகடன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது : அம்பேத்கர், திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் பேச்சுவிரிவான தகவல்கள், சி. அர்ச்சுணன், Published: Yesterday 14-09-2023, at 10 AM; Updated: Yesterday at 11 AM

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/rpvs-maniyan-arrested-over-allegations-against-him-about-his-speech-insults-ambedkar

[7]  தமிழ்.ஒன்.இந்தியா, திருவள்ளுவர், அம்பேத்கர், தலித்துகளை இழிவாக பேசிய பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது– 14 நாள் ஜெயில்!, By Mathivanan Maran, Updated: Thursday, September 14, 2023, 13:34 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/hindutva-leader-rbvs-manian-arrested-by-chennai-police-538479.html

[9] பிபிசி தமிழ், ஆர்.பி.வி.எஸ் மணியன்: அம்பேத்கர், திருவள்ளுவரை அவதூறாகப் பேசியதாக கைதான இவர் யார்?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், 14 செப்டெம்பர் 2023

[10] https://www.bbc.com/tamil/articles/cd13pmkyxero

[11] தமிழ்.நியூஸ்.18, அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: VHP முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, LAST UPDATED : SEPTEMBER 14, 2023, 15:14 IST,

[12] https://tamil.news18.com/chennai/chn-rbvs-manian-arrest-for-ambedkar-controversial-speech-1154345.html – gsc.tab=0