திராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது!
இதுகுறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்ட அறிக்கை[1]: நாத்திக கும்பலின் அறிக்கை, “மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது. அவ்வாறு ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பனந்தாளில் திராவிடர் கழகத்தினர் திரண்டு மறியல் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த தருமபுரம் ஆதீனகர்த்தர், “பல்லக்கில் செல்லவில்லை, நடந்தே செல்கிறேன்” என காவல்துறையினர் மூலம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே, காவல் துறைக்கும், ஒத்துழைத்த தருமபுரம் ஆதீனகர்த்தருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம்!, என்றே செய்தி வெளியிட்டுள்ளது[3]. நாத்திக-இந்ட்உவிரோத கும்பல்களுக்கு பயந்து, அடிபணிவது[4], அதாவது,நிச்சயமாக, இது மடத்திற்கு இழுக்கு தான்.,
கோவில்–மடம் அபகரிப்பு தான் திட்டம், இதெல்லாம் விளம்பரம்: நக்கீரன் ஓரளவிற்கு இந்துவிரோதிகளின் திட்டத்தை செய்தியில் சேத்திருக்கிறது. பட்டின பிரவேசம் என்பது மனிதனை மனிதன் தொழில் சுமக்கும் ஒரு மோசமான செயல்,”என போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். “நவீன காலத்திலும் பாசிசத்திற்கு எதிராக சமூக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கின்ற போது, ஒரு மனிதனை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்கள் செல்ல வேண்டும் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த செயலை எந்த சமூகம் செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டியது எங்களின் கடமை[5]. மடம் என்பது நிலவுடமையை கையில் வைத்துக்கொண்டு இங்கே வசிக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நிலத்தின் மீது உரிமை அற்றவர்களாக்கி, ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட பல லட்ச ரூபாய் மடத்தின் நிர்வாகத்திற்கு படியளந்த பின்புதான் வீடு கட்ட முடியும் என்ற நிலை இருக்கிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உழைக்கிற விவசாயிக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்று விவசாயிகள் மீது மடம் என்னும் நிறுவனம் எதேச்சதிகாரம் செய்கிறது. ஆகவே உழைக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மடாதிபதியை சுமக்கும் இந்த செயலை எதிர்த்தாக வேண்டியது எங்களின் கடமையாகும். எனவே பட்டின பிரவேசத்தை தடை செய்யக்கோரி திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது,” என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். இந்தநிலையில் மடத்திற்கு நெருக்கமானவர்கள், தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட மடங்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், கடைகளை குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் அனைவரையும், பட்டினபிரவேசத்திற்கு ஆதரவாக வரவேண்டும் என அழைத்துள்ளது மடத்தின் நிர்வாகம், அதோடு திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகனுக்கும் போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து கைதுசெய்ய உத்தரவிட சொல்லியிருக்கின்றனர்[6]. அதன்படியே பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா, திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவித்துள்ளனர். மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சா முறையை கலைஞர் ஒழித்தார், அதைவிட கொடுமையான இந்த நிகழ்வை பலரும் கண்டித்துவருகின்றனர்.
நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிர்மறையாக செயல்படுவது என்றால், பல்லக்கின் முன்பு உருண்டு எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்: சிறு வயதில் ஈவேரா, அண்ணா, கரு…இவர்களை தூக்கியது,……..மேடைகளில், வண்டிகளில் ஏற்றும் போது மற்ற இடங்களில் ………முதலியவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். கைரிக்ஷாக்களில் சென்றதையும் பார்த்திருக்கிறோம். அண்ணவை ரிக்ஷாவில் வைத்து, ஈவேகி சம்பத் இழுக்கும் புகைப்படம் உள்ளது. பெரியாருக்கு எல்லா வேலைகளையும் செய்யத் தான் மணியம்மை வேலைக்கு வைக்கப் பட்டது; பிறகு அந்நியோன்னியமாகி விட்டதால், திருமணமும் நடந்து; அப்பொழுது அண்ணா கண்டபடி வசைப் பாடியது முதலியவை தெரிந்த விசயங்களே. திக-இந்துவிரோத கும்பல்கள் –
- கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை;
- உண்ணா விரதம் என்றால் உண்ணும் விரதம், துலுக்க-கிருத்துவ கூட்டங்களுக்குச் சென்று கஞ்சி குடித்தது, கேக் நக்கியது…..
- சூரியகிரகணம் என்றால் வாழை இலையில் சாப்பிட்டது..,
- தாலி கட்டினால், தாலியை வெட்டுவது, தாலி அறுப்பு விழா நடத்தியது…….
- குங்குமம், விபூதி, சந்தனம் வைத்தால் அழிப்பது,
- பூணூல் போட்டால், பூணூலை அறுப்பது, [குல்லா, சிலுவை அறுக்கவில்லை…]
- பன்றிக்கு பூணூல் போடுவது
என்றெல்லாம் செய்த போது, அவற்றில் “உல்டா லாஜிக்கை” கவனிக்கலாம். பிறகு, பல்லக்கு-தேர் பவனி எனும் போது, எதிர்மறையாகத் தானே செய்யவேண்டும்? தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு! அவ்வாறு செய்யாமல், மடத்திற்குள் சென்று மடாதிபதியை மிரட்டுவது என்ன அறிவு?
ஈவேரா முதல் கருணாநிதி வரை தூக்கப் பட்டவர்கள் தான், தூக்க பல ஆட்கள் இருந்தனர்: ஈவேரா முதல் கருணாநிதி வரை தம்மை தூக்க வைத்து தாராளமாகவே வாழ்க்கையை அனுபவித்தனர். தூக்குவதற்கு பல ஆட்கள் இருந்தனர். ஈவேரா மணியம்மை உதவி பெற்றார் என்றால், கருணாநிதிக்கு உதவ வீட்டிலும், வெளியிலும், ஆஸ்பத்திரியிலும் பல பேர் இருந்தனர். இப்பொழுது வரை விவரங்கள்-விவகாரங்கள் தெரிந்ததது தான், ஆனால், ஒரு புகைப்படம் வெளிவரவில்லை. “என்னை கொல்றாங்க, என்னை கொல்றாங்க,” வீடியோ மட்டும் இன்றும் உலா வருகின்றது. “உள்ளே-வெளியே” என்று வாழ்ந்தபோது, புகைப் படங்கள், வீடியோக்கள் எடுத்திருக்கலாம், ஆனால், ஒன்று கூட இல்லை என்ற நிலை. அப்பொழுதெல்லாம் கேமரா என்பது, பணக்காரர் விசயமாக இருந்தது. அதனால், எல்லாவற்றையும், எல்லோரும் புகைப் படம் எடுப்பதில்லை. எடுத்தாலும் நகல் பெறுவது அவ்வளவு கடினம்! பணம் இருந்ததால், எல்லாம் வேலைகளை செய்விக்க ஆட்கள வைத்துக் கொண்டனர். எப்படி ஈவேரா-பெரியார் புத்தகங்கள் பல உண்மைகள் மறைக்கப் பட்டுள்ளனவோ, அதே போல, அண்ணா, கருணாநிதி, புத்தகங்களிலும் மற்றும் எதிர்வினையாக, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிய புத்தகங்களிலிலும் உண்மைகள் மறைக்கலாம். ஆனால், திராவிடத்துவ வாதிகள் போலிகள் தாம் என்பதனை, வருங்கால சந்த்சதியர் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறந்து தான், இப்பொழுது வீரமணி போன்ற அரைகுறைகள், போலிகள் ஒரு சைவ மடாதிபதியை எதிர்த்து, சம்பிராதாயத்தை, பாரம்பரியத்தைத் தடுத்துள்ளன. கோர்ட்டுக்குச் சென்றால், நிச்சயமாக, இத்தகைய போலிகளை தோலுரிக்கலாம்!
© வேதபிரகாஷ்
15-02-2020.
[1] தி.இந்து, திராவிடர் கழகத்தினர் போராட்ட திட்டம்: திருப்பனந்தாளில் பல்லக்கில் செல்வதை கைவிட்டார் தருமபுரம் ஆதீனகர்த்தர், Published : 13 Feb 2020 07:55 AM; Last Updated : 13 Feb 2020 07:56 AM
[2] https://www.hindutamil.in/news/tamilnadu/539287-dravidar-kazhagam-protest-2.html
[3] தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம்!, பிப்ரவரி 10, 2020.
[4] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/d-k-protest-in-tirupananthal-succeed-120021300013_1.html
[5] நக்கீரன், மனிதனை மனிதன் சுமக்கும் தருமை புதிய ஆதீன பட்டினபிரவேசத்திற்கு எதிராக போராட்டம்!, செல்வகுமார், Published on 12/02/2020 (14:39) | Edited on 12/02/2020 (14:52)
[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dharumapuram-aadhinam
குறிச்சொற்கள்: ஆதீனகர்த்தர், ஆதீனம், இந்து விரோத திராவிட நாத்திகம், தருமபுர ஆதினகர்த்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருப்பனந்தாள், பட்டின பிரவேசம், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை சுமத்தல்
மறுமொழியொன்றை இடுங்கள்