Archive for the ‘நாத்திகம்’ Category

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – சென்னை உயர்நீதி மன்றம்! (1)

நவம்பர் 7, 2023

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்சென்னை உயர்நீதிமன்றம்! (1)

சனாதன விவாதம் தொடர்கிறதா?: உதயநிதி மீது ஏற்கெனவே இந்தியாவில் பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து நிலுவையில் உள்ள நிலையில், அவர் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காதது பற்றி சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழர் சமுதாய கூட்டமைப்பு ஆகஸ்ட் மாதம் 2023 உள்ளரங்கு கூட்டம் தெரிவித்தது. திராவிட கருத்தியலுக்கு எதிராக “திராவிட ஒழிப்பு மாநாடு” என்ற பெயரில் நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பூந்தமல்லி காவல் துறையினர் நிரகரித்தனர். இதனால், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தனர். அதை விசாரித்து உத்தரவிட்ட போது, இக்கருத்தைநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அமைச்சர்களளை, போலீஸார் அவ்வாறு கைது செய்ய முடியுமா, அல்லது ஏன் செய்யவில்லை போன்ற கேள்விகளுக்கு யார் பதிலளிப்பர் என்று பார்க்க வேண்டும்.

விண்ணப்பத்தை பூந்தமல்லி காவல் துறையினர் நிராகரித்தது: தமிழ்-திராவிடம் மோதல்களும் வெளிப்பட்டுள்ளது, உண்மையான சித்தாந்த மோதலா அல்லது திமுகவைக் காப்பாற்ற செய்யப் படும் நாடகமா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே “தமிழ் தேசியக் குழுக்கள்” தங்களது பிரிவினைவாத நோக்கத்தில், “திராவிடத்தை” எதிர்த்து வருகின்றன. இதனால், இப்பொழுதும், அவை அத்தகைய வாதத்தை முன் வைக்கின்றன. “திராவிட” என்ற அடைமொழியை வைத்து அரசியல் செய்வதால், அத்தகையைக் கட்சிகளுக்கு அது தேவையாகிறது. ஆனால், தமிழ்-திராவிடம் வாத-விவாதங்கள் உதவாது. ஏனெனில், இவற்றால், யாருக்கும் எந்தவித பலனும் இல்லை. “சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது” என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது[1]. திராவிட கருத்தியலுக்கு எதிராக “திராவிட ஒழிப்பு மாநாடு” என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2023 உள்ளரங்கு கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி கோரிய தமிழர் சமுதாய கூட்டமைப்பின் விண்ணப்பத்தை பூந்தமல்லி காவல் துறையினர் நிரகரித்தனர்[2]. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[3].

திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு: இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்துக்காக மட்டும் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது எனக்கூறி, மனுதாரர் அளிக்கும் புதிய விண்ணப்பத்தின் மீது அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது[4]. மேலும், யாரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தது[5]. இந்த உத்தரவின் அடிப்படையிலும், சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டதன் அடிப்படையிலும், திராவிட கொள்கைகளுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் மாதவரம் காவல் நிலையத்தில் மனு அளித்தார்[6]. இந்த மனுவை காவல்துறை பரிசிலீக்கவில்லை எனக்கூறி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உள்ளரங்குகளில் நடக்கும் கூட்டங்களுக்குக் கூட ஏன் போலீஸாரிடம் அனுமதி கேட்கப் படவேண்டும் என்று தெரியவில்லை. சமீப காலத்தில், அவ்வாறு உள்ளரங்கங்களில் பேசிய பேச்சுகள் சர்ர்சைகளுக்கு உள்ளாவதால், அத்தகைய கட்டுப் பாடு வந்துள்ளதா என்று தெரியவில்லை. வயதான ஆர்.பி.வி.எஸ். மணியன் கூட உள்ளரங்கத்தில் பேசிய பேச்சிற்காகத் தான் கைது செய்யப் பட்டு, பிறகு, பிணையில் வெளியில் விடப்பட்டுள்ளார்.

நீதிபதி ஜெயசந்திரன் முன்பு திங்கள்கிழமை 6-11-2023 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு திங்கள்கிழமை 6-11-2023 அன்று விசாரணைக்கு வந்தது[7]. சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது[8]. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்[9]. குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது, போதைப்பொருட்கள், ஊழல், தீண்டாமை, சமூக தீமை ஆகியவற்றை ஒழிப்பது குறித்து பேசுவதில் கவனம் செலுத்தலாம்[10]. சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது[11]. சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்[12].

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அவர்கள் பேசியது சட்டவிரோதமானது மக்களை பிளவுபடுத்துவது அல்லது இந்துக்களை தாக்குவது என்ற நிலை இருக்கும் பற்றத்தில் ஏற்கனவே போலீசார் அவர் மீது அத்தகைய நட எடுத்து இருக்கலாம். ஆனால் எடுக்கவில்லை, இப்பொழுது நீதிமன்றம் வெளிப்படையாக அத்தகைய நிலையை எடுத்து காட்டி இருப்பதனால் இப்பொழுது அவர்களை போலீசார் கைது செய்வார்களா அல்லது ஏதாவது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. சட்டத்திற்கு முன்பாக எல்லோரும் சமம் என்ற பொழுது இத்தகைய வெறுப்பு பேச்சுகள் பேசும் நிலையில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள், சிலர் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள், மேன்மேலும் சிலர் தொடந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இது காலங்காலமாக அதாவது 70 மற்றும் நூறு ஆண்டுகளாகவே இத்தகைய வெறுப்பு பேச்சுகள், வன்முறை வாய்ப்பேச்சுகள், ஏற்றுக் கொள்ள முடியாத காழ்ப்பு வாத-வாதங்கள் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே ஒரு செக்யூலர் அரசு, சமதர்மமான அரசு, அதிலும் பெரியார், பகுத்தறிவு நாத்திகம் என்று எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த திராவிடத்துவ அரசு இந்து விரோதமாக செயல்படுவது தான் விசித்திரமாக இருக்கிறது.

நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது: அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாப்பதற்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்கள், அவர்கள் உறுதிமொழியை மீறி செயல்படுவதால், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் சில குழுக்கள் மீது பொதுமக்களின் அதிருப்தி இருக்கும். இந்நிலையில், இந்த கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது பொதுமக்களிடையே நிலவும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, கூட்டத்துக்கு அனுமதி அளிப்பதன் மூலம் நீதிமன்றமும் தவறிழைக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், நடந்து விட்ட கூட்டம், பேசிய பேச்சாளர்கள், அவர்கள் அமைச்சர்களாக இருக்கும் நிலை முதலியவற்றையும் மீறி, இப்பொழுது, போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

© வேதபிரகாஷ்

07-11-2023.


[1] தமிழ்.இந்து, சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிருப்தி, ஆர்.பாலசரவணக்குமார், Published : 06 Nov 2023 12:38 PM, Last Updated : 06 Nov 2023 12:38 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1149695-police-should-have-taken-action-against-ministers-who-spoke-about-abolition-of-sanatana-dharma-hc-1.html

[3] தினமலர், சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் மது, ஊழலை ஒழிக்க கவனம் செலுத்தலாம்: உதயநிதிக்கு ஐகோர்ட் அறிவுரை, மாற்றம் செய்த நாள்: நவ 06,2023 18:23.

[4] https://m.dinamalar.com/detail.php?id=3475350

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சனாதன சர்ச்சை! திமுக அமைச்சர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்! சென்னை ஐகோர்ட் கருத்து, By Vigneshkumar Updated: Monday, November 6, 2023, 17:24 [IST].

[6] https://tamil.oneindia.com/news/madras-high-court-says-no-one-can-spread-hatred-in-udhayanidhi-sanatan-dharma-row-554599.html?story=1

[7] விகடன், சனாதான ஒழிப்பு மாநாடு: “அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்!” – உயர் நீதிமன்றம், ராணி கார்த்திக், VM மன்சூர் கைரி, Published: 06-11-2023, at 11 AM; Updated: 06-11-2023 at 11 AM

[8] https://www.vikatan.com/news/action-should-have-been-taken-against-the-ministers-participated-in-the-sanatana-abolition-meeting-high-court

[9] ஜீ.நியூஸ்.இந்தியா, சனாதன விவகாரம்கடமை தவறிய காவல்துறைதமிழக அமைச்சர்களுக்கு நீதிபதி அறிவரை!, Mon, 06 Nov 2023-10:53 am,

[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-disappointed-with-police-department-on-udhayanidhu-stalin-sanatan-dharma-issue-471343/amp

[11] தினத்தந்தி, “காவல்துறை கடமை தவறிவிட்டது..” சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி, நவம்பர் 6, 11:13 am (Updated: நவம்பர் 6, 11:52 am).

[12] https://www.dailythanthi.com/News/State/police-failed-in-their-duty-dissatisfaction-of-chennai-high-court-1081823

ஸ்டாலின், உதயநிதி வழியில், அப்பாவு பேசிய இந்துவிரோத வியாக்கியானம்! திராவிடத்துவ வாதிகள் தொடர்ந்து அவதூறாக, இந்துவிரோதமாக பேசிக் கொண்டிருப்பது எப்படி?:

செப்ரெம்பர் 22, 2023

ஸ்டாலின், உதயநிதி வழியில், அப்பாவு பேசிய இந்துவிரோத வியாக்கியானம்! திராவிடத்துவ வாதிகள் தொடர்ந்து அவதூறாக, இந்துவிரோதமாக பேசிக் கொண்டிருப்பது எப்படி?:

அப்பாவு பேச்சு ஏன் இப்படி?

கிறிஸ்தவ லயோலா கல்லூரியில் திமுக கருணாநிதி மற்றிய மாநாடு: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கருணாநிதியை பற்றி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பில் ”சட்டமன்ற நாயகர் – கலைஞர்” என்ற தலைப்பில் கருத்தரங்கம், பேச்சு, கட்டுரை உள்பட போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது[1]. இதன் தொடக்க நிகழ்வாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் சட்டமன்ற நாயகர்-கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் 21-09-2023 அன்று நடந்தது[2]. அப்படியென்றால், இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும் போலிருக்கிறது. இவ்வாறு கட்சிக்கு ஆதரவான கூட்டங்கள் எப்படி கல்லூரிகளில் அனுமதிக்கப் படுகின்றன என்று தெரியவில்லை. இதே போல, லயோல கல்லூரி மற்ற கட்சி, கட்சித் தலைவர் பற்றிய கூட்டங்களை ஏற்பாடு செய்யுமா, அனுமதிக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், “சிறுபான்மையினர்” அந்தஸ்தை வைத்துக் கொண்டு, செக்யூலரிஸ போர்வையில், நாத்திகர்களை வைத்து இவ்வாறு கூட்டங்களை நடத்தினால், பெரியாரிஸ பகுத்தறிவு சேர்ம் பொழுது, அது இந்து விரோதமாகிறது. இப்பொழுதும் அது தான் நடந்திருக்கிறது.

மாணவர்களை வைத்து சித்தாந்த விளையாட்டு??

நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்: நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் கல்லூரி முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் சாதனைகளை போற்றும் வகையில் மாணவர்கள் அவரது சாதனைகள் குறித்து விளக்கினர். அப்போது மேடையில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, “தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய சாதனைகள் இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் செய்திருக்க முடியாது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் தான். சமூகத்திற்காக கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றும் மறையாது” என்றார்[3]. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “சாதி, மத ஆதிக்கத்திற்கு எதிரானது கலைஞர் ஆட்சி. தலைவர் கலைஞர் காலத்தில் மேற்படிப்புக்கு நுழைவுத்தேர்வு வேண்டும் என ஒன்றிய அரசு அப்போது கூறிய போது, அதனை முதல் ஆளாக வேண்டாம் என்றவர் கலைஞர். அவரின் தொலைநோக்கு பார்வையை ஒன்றிய அரசு இன்று பிறப்பித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வுக்கு பூஜ்ஜியம் மார்க் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அப்போதே இதனை வேண்டாம் என்றார் கலைஞர்” என்றார்[4].

மாணவர்களும்தயாரா?

இந்தியாவில் 96 சதவீதம் ஹிந்துக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தது கிறிஸ்த பாதிரிகள் தாம்: பகுத்தறிவு அப்பாவு பேசியது, ”இந்தியாவில் 96 சதவீதம் ஹிந்துக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர் மற்றும் அருட்சகோதர சகோதரிகள்தான்,” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்[5]. சென்னை லயோலா கல்லுாரி வளாகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை ஒட்டி ‘சட்டசபை நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது[6]: “தமிழகம் சுதந்திரத்துக்கு முன்பு இவ்வாறு இருக்கவில்லை; திராவிட இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பு இவ்வாறு இருக்கவில்லை. 119 ஆண்டுகளுக்கு முன்பு, மதராஸ் மாகாணத்தில், 100 பட்டதாரிகள் இருந்தால் அவர்களில் 94 சதவீதம் பேர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்[7]; மீதி, ஆறு சதவீதம் மற்ற சமூகத்தினர். அந்த நிலையில் இருந்து எப்படி இந்த நிலைக்கு வந்தோம் என பார்க்க வேண்டும்[8]. நீதிக் கட்சி முதன்முதலாக பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை கொண்டு வந்தது. கருணாநிதி ஆற்றிய பணிகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் படிக்க சட்டம் கொண்டு வந்தார்; பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்தார். திருமண உதவித் தொகை திட்டத்தை கொண்டு வந்து பெண்கள் படிக்க உதவினார்.

ஹிந்துக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தது கிறிஸ்த பாதிரிகள் தாம்[9]: பகுத்தறிவு அப்பாவு பேசியது, இந்தியாவில் பட்டம் படித்த பெண்களின் சராசரி 26 சதவீதம் என்றால் தமிழகத்தில் சராசரி, 78 சதவீதம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி; கருணாநிதி செய்த சாதனை[10]. இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் இருந்தன[11]. ஆனால் படிக்க நான்கு சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி; மீதி 96 சதவீதம் ஹிந்துக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர், அருட்சகோதரிகள், சகோதரர்கள் தான்[12]. கிறிஸ்தவ மத போதகர்கள் பள்ளிகளை ஆரம்பித்துஜாதி, மதம் இல்லை. அனைவரும் கல்வி கற்க வாருங்கள்என்றனர். அதன் அடிப்படையில் தமிழகம் இந்த வளர்ச்சி அடைந்துள்ளது. அதை முதல் புள்ளியாக எடுத்து திராவிட இயக்கங்கள் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளன,” இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா செழியன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பரந்தாமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன், சட்டசபை முன்னாள் பேரவை செயலாளர் செல்வராஜ், கல்லூரிக்கல்வி துணை இயக்குனர் ராவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் அல்லது மற்ற எந்த கிருத்துவ பாதிரியும், இவ்வாறு இந்துக்களுக்கு எதிரான பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்ட்க் கொண்டதாகத் தெரியவில்லை. ஆக, அவர்களும் சந்தோசமாகக் கேட்டுக் கொண்டு ரசித்தார்கள் போலும்.

திராவிடத்துவ வாதிகள் தொடர்ந்து அவதூறாக, இந்துவிரோதமாக பேசிக் கொண்டிருப்பது எப்படி?: திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளிலேயே தொடர்ந்து, அக்கட்சித் தலைவர்கள் கிறிஸ்தவ மத நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் என்று தொடர்ந்து கலந்து கொண்டு, ஸ்டாலின் முதல் உதயநிதி வரை அபத்தமாக பேசுவது, உதயநிதி தான் கிறிஸ்துவன் என்பது, சேகர் பாபு, அல்லேலுயா என்று கத்துவது, இப்பொழுது அப்பாவு இப்படி பேசுவது எல்லாமே செக்யூலரிஸத்தை மீறும் செயல்கள் தான். ஆனால், நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருப்பதும், பேசுவதும், அப்படியே கடந்து செல்வதும் என்றுகடந்த 50-100 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால், அவர்களும் மேன்மேலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதானால், அவர்களுக்கு நாம் எதை வேண்டுமானாலும் பேசலாம், எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற அகம்பாவம் உண்டாகி, அது நாளடைவில் இறுகி, அவ்வாறே தூஷித்துக் கொண்டிருக்கலாம் என்ற மனபாங்கும் உண்டாகியிருக்கிறது. இதனால் தான், இவ்வாறு பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

22-09-2023


[1]  தினத்தந்தி, சமச்சீர் கல்வி தந்து சாமானியனையும் கல்வி கற்க வைத்தவர் கருணாநிதிசபாநாயகர் அப்பாவு பேச்சு, செப்டம்பர் 22, 12:10 am

[2] https://www.dailythanthi.com/News/State/karunanidhi-was-the-one-who-gave-balanced-education-and-made-the-common-man-to-get-educated-speakers-fathers-speech-1057569

[3] கலைஞர்.செய்திகள், உலகமே வியப்படையும் சாதனை.. இதற்கான பாதையை அன்றே வகுத்தவர் கலைஞர்..” – சபாநாயகர் அப்பாவு புகழாரம் !, , KL Reshma, Updated on : 21 September 2023, 05:48 PM

[4] https://www.kalaignarseithigal.com/tamilnadu/2023/09/21/a-feat-that-will-amaze-the-world-kalaignar-paved-the-way-for-this-on-that-day-speaker-appavu

[5] தினமலர், 96 சதவீத ஹிந்துக்கள் படிக்க அருட்தந்தையர் தான் காரணம், பதிவு செய்த நாள்: செப் 22,2023 06:28; https://m.dinamalar.com/detail.php?id=3437785

[6] https://m.dinamalar.com/detail.php?id=3437785

[7] மாலைமுரசு, கலைஞர் கருணாநிதி பற்றி மாநில அளவிலான பேச்சு போட்டி தொடக்கம்!, webteam,Sep 21, 2023 – 16:17

[8] https://www.malaimurasu.com/posts/education-employement/State-Level-Elocution-Competition-on-Artist-Karunanidhi-Begins

[9] தினகரன், பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கு: லயோலா கல்லூரியில் இன்று நடக்கிறது, September 21, 2023, 12:20 am

[10] https://www.dinakaran.com/councilpresidentappavu_artistcentennial_seminar_loyolacollege/

[11] தமிழ்.ஒன்.இந்தியா, நாட்டில் 96 சதவீத இந்துக்கள் படிக்க அருட்தந்தையர்கள் தான் காரணம்: சபாநாயகர் அப்பாவு பேச்சு, By Mani Singh S Published: Friday, September 22, 2023, 11:50 [IST].

[12] https://tamil.oneindia.com/news/chennai/reverend-s-are-reason-for-96-percent-of-hindus-in-the-country-able-to-study-assembly-speaker-appavu-541223.html

‘சனாதன ஒழிப்பு மாநாடு’ பெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது? உதயநிதி மீது போலீஸில் புகார்! (2)

செப்ரெம்பர் 3, 2023

சனாதன ஒழிப்பு மாநாடுபெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது? உதயநிதி மீது போலீஸில் புகார்! (2)

02-09-2023 இந்துவிரோத பேச்சிற்கு, 03-09-2023 அன்று போலீஸில் புகார்: தமிழகத்தில் 1950களிலிருந்து வாழும், திராவிடத்துவ அரசியல்வாதிகளின் பேச்சு, நடவடிக்கை முதலியவற்றைக் கவனித்து வருபவர்களுக்கு, நிச்சயமாக, இப்பொழுது உடனடியாக உதயநிதியின் மீது, போலீசில் புகார் அளித்திருப்பது திகைப்பாகவும், ஆச்சரியமாகவும், ஏன் சந்தோசமாகக் கூட இருக்கலாம். அதாவது இத்தனை ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கப் பட்டு, மிரட்டப் பட்டு வரும் இந்துக்கள் அவ்வாறு மகிழ்ச்சியடையலாம். தமிழ்நாட்டில், சென்னையில் ஏன் புகாரைக் கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம். ஆனால், இங்கு அவ்வாறு யாராவது புகார் கொடுக்க தைரியமாக வருவார்களா? அப்படியே புகார் கொடுத்தாலும், போலீசார் ஏற்றுக் கொள்வார்களா, பதிவு செய்வார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. டில்லியில் ஒரு வழக்கறிஞர் கொடுத்திருக்கிறார், அதனால், ஏற்றுக் கொள்ளப்பட்டது போலும். டில்லியில் ஜி-20 மாநாடு நடக்கும் நேரத்தில், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், திமுகவினர் தங்களது, இந்திய் அளவில் விளம்பரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடையலாம்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்: சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் 03-09-2023 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது[1]. சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[2]. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[3]. அவர் தனது புகாரில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களை தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது[4]. இந்து மதத்தை கொசு, டெங்கு, கரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒரு இந்து என்ற வகையில் எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தின் மீதான அவரது வெறுப்பையே வெளிப்படுத்தி இருக்கிறது.

ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு: சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் அவர், தான் எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார். சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும், அதை தூண்டுவதாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது[5]. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்[6].

மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்உதயநிதி சவால்: மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்[7]. பொய்யான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” எனத் தெரிவித்திருந்தார்[8]. இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனத்தை வெளிப்படுத்தத் தொடங்கின. இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் கருத்து அவரது குறுகிய மனப்பான்மையையும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளின் புனிதமற்ற கூட்டணியையும் காட்டுகிறது,” என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுடன் இந்தியா கூட்டணி சண்டையிடவில்லை, அவர்கள் சனாதன தர்மத்துடன் போராடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிஜேபிஉதயநிதி டுவிட்டர் சண்டை: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா, “சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்” என குற்றம்சாட்டினார்[9]. அதற்குப் பதலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்[10]. மறுபுறம், Legal Rights Observatory- LRO (சட்ட உரிமை கண்காணிப்பகம்) என்ற பெயரிலான ஒரு என்.ஜி.ஓ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பதிவைப் பகிர்ந்து, அதன்பேரில் புகார் ஒன்று அளிக்கப்படுமென கூறியது. இதை ரீ-ட்வீட் செய்த அமைச்சர் உதயநிதி, “கொண்டு வாருங்கள், நான் எந்தச் சட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளேன். இதுபோன்ற சனாதன மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியைப் பின்தொடர்பவர்கள். இதனை இன்றும், நாளையும் என்றும் சொல்வேன்[11]. திராவிட மண்ணில் சனாதனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் பின்வாங்க மாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்[12].

அண்ணாமலை முதல் மற்ற மதத்தலைவர்கள் கண்டனம்: உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, ராமஜென்ம பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் உள்ளிட சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்[13]. ஏற்கெனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்[14]. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை, “மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே உறுதி. உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. நீங்கள், உங்கள் தந்தை ஆகியோர் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து வாங்கிய ஐடியாவைக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மிஷனரிகளின் எண்ணம், அவர்களின் தீய சித்தாந்தத்தை வளர்க்க உங்களைப் போன்ற மந்தமானவர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான். தமிழகம் ஆன்மிக பூமி. இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான் உங்களால் செய்ய முடிந்த ஒரேவிஷயம்,” என பதிவிட்டிருந்தார்.

சனாதன பேச்சுஅமித் ஷா கண்டனம்: தொடர்ந்து புதுக்கோட்டையில் இதுதொடர்பாக பேசிய அண்ணாமலை, “சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி யார்? சனாதனம் ஒழிக்கப்பட்டுவிட்டால், கோயில்கள் மற்றும் மதச்சடங்குகள் அனைத்தும் அழிந்துவிடும்“ என தெரிவித்தார். காங்கிரஸைச் சாடிய அமித்ஷா! – இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[15]. இன்று ராஜஸ்தானில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில்தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். மதத்தை விமர்சித்ததற்காக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் கலாசாரம், சனாதன தர்மத்தை INDIA கூட்டணி அவமதித்து வருகிறது; வாக்குவங்கி அரசியலுக்காக INDIA கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம்,” எனத் தெரிவித்துள்ளார்[16].

© வேதபிரகாஷ்

03-09-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‘சனாதன தர்மம் ஒழிப்புஉதயநிதி பேச்சால் மத உணர்வுகள் புண்பட்டுவிட்டதாம். டெல்லி போலிசில் புகார்!, By Mathivanan Maran Published: Sunday, September 3, 2023, 11:48 [IST].

[2] https://tamil.oneindia.com/news/delhi/a-lawyer-files-complaint-in-delhi-police-againt-minister-udhayanidhi-stalin-535409.html

[3] தமிழ்.முரசு, சனாதனம் குறித்த பேச்சு, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார், 3 Sep 2023 18:56.

[4] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20230903-136279

[5] தமிழ்.இந்து,  சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புடெல்லி காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார், செய்திப்பிரிவு, Published : 03 Sep 2023 12:29 PM; Last Updated : 03 Sep 2023 12:29 PM

[6] https://www.hindutamil.in/news/india/1117228-objection-to-udayanidhi-stalin-s-speech-on-sanatana-dharma-a-lawyer-s-complaint-to-delhi-police.html

[7] பிபிசி.தமிழ், சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் பேச்சு எதிர்க்கட்சி கூட்டணியை வலுவிழக்கச் செய்யுமா?, 03-09-2023

[8] https://www.bbc.com/tamil/articles/c90j1k5eqy2o

[9] புதியதலைமுறை, சனாதனம் பற்றிய விமர்சனம்: அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வலுக்கும் புகார்கள்!, Published on: 03 Sep 2023, 5:03 pm

[10] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/political-leaders-reaction-on-udhayanidhi-stalin-sanatanam-speech

[11] விகடன்,  சனாதனம் குறித்த பேச்சு; டெல்லி போலீஸில் புகார்; `காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்‘- உதயநிதி, Published: 03-09-2023  at 4 PM; Updated: 03-09-2023 at 4 PM.

[12] https://www.vikatan.com/government-and-politics/politics/sanatana-dharma-is-against-the-idea-of-social-justice-and-must-be-eradicated-says-udhayanidhi-stalin

[13] தினமலர், சனாதனத்தை ஒழிக்க வேண்டுமாம்; அமைச்சர் உதயநிதி திடீர் ஆவேசம், மாற்றம் செய்த நாள்: செப் 03,2023 16:37; https://m.dinamalar.com/detail.php?id=3421837

[14] https://m.dinamalar.com/detail.php?id=3421837

[15] நியூஸ்.7.தமிழ், சனாதனம் குறித்த பேச்சுஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார், by Web Editor, September 3, 2023

[16] https://news7tamil.live/talk-on-sanathanam-complaint-against-minister-udayanidhi-stalin-in-delhi-police-station.html

ஆவியாக வந்து திராவிட மாடலில் அவிநாசி கோவிலில் கொள்ளையடித்த மனித உருவில் வந்தவன் யார்?

மே 26, 2023

ஆவியாக வந்து திராவிட மாடலில் அவிநாசி கோவிலில் கொள்ளையடித்த மனித உருவில் வந்தவன் யார்?

தமிழகத்தில் கோவில் கொள்ளை, திருட்டு, கடத்தல் என்பதெல்லாம் சகஜமப்பாவா?: தமிழகத்தில் கோவில் கொள்ளை, திருட்டு, கடத்தல் என்பதெல்லாம் அலுத்துப் போன செய்திகளாகத் தான் வெளியிடப் படுகின்றன. திரும்ப-திரும்ப நடக்கின்றனவே என்று எந்த நிருபரும், ஊடகக் காரரும், புலன் விசாரணை வீர-சூரப் பத்திரிக்கையாளனும் எதையும் கண்டுபிடிக்க உற்சாகம் பெறவில்லை. இந்து அறநுலைய அமைச்சரை நிற்கவைத்து கேள்விகளைக் கேட்கவில்லை. பி.டி.ஐ பாணியில்,ஒரு வரி கூட மாறாமல் அப்படியே வெளியிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது[1].  ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவிலாகும். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாகவும், முதலை விழுங்கிய பாலகனை காப்பற்றுவதற்காக சுந்தரர் பதிகம் பாடி அதன் பின் அந்த சிறுவனை மீட்டதாகவும் வரலாறு கொண்ட தலமாக இது விளங்குகிறது, என்று புராண விசயங்களைக் குரிப்பிட்டாலும், குற்றவியல் ரீதியில் ஒன்றையும் கவனிக்கவில்லை.

22-05-2023 அன்று கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையன் செய்த காரியகள்: வழக்கம்போல் 23-05-2023 அன்று அதிகாலை கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்தபோது,

  • உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததையும்,
  • கோயிலுக்குள் இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும்,
  • தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்ததையும்,
  • சிலைகள் மீது அணிவித்திருந்த ஆடைகள், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த பொருட்கள் உள்ளிட்டவை களைந்து கிடந்ததையும்

கண்டு அதிர்ச்சியடைந்தனர்[2]. இதையெல்லாம் சாதாரணமாக செய்ய முடியாது. மேலும், விவரம் அறிந்தவன் தான் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். அதாவது, 22-05-2023 அன்று யாரோ அத்தகைய வேலைகளை செய்திருக்க வேண்டும். அதிர்ச்சி அடைந்த அர்சகர்கள் உடனே கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்[3]

போலீஸார் வருவது, விசாரிப்பது, கைது செய்து கொண்டு செல்வது: இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீஸார் சென்று விசாரித்தனர்[4]. இதில் முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்த வேல், சேவல் கொடியுள்ள 2 வேல்கள் மற்றும் உபகாரப் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது[5]. அப்படியென்றால் திருடப் பட்டது என்றாகிறது. கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் சத்தம் கேட்டதால் சென்று பார்த்துள்ளனர்[6]. அப்போது, அங்கு பதுங்கி இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்[7](இப்படி மிக்க மரியாதையுடன் ஊடகத்தால் வெளியிட்டுள்ளனர்). இதில், பிடிபட்ட நபர் அவிநாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடையை சேர்ந்த சரவணபாரதி (32) என்பது தெரியவந்தது[8]. மேலும், இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும், 22-05-2023 அன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது[9]. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிசிடிவி பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடப் படவில்லை.

வாக்குமூலத்தில் தான் பைத்தியம் என்பது போல சொல்வது: இதற்கிடையே, சரவணபாரதி அளித்த வாக்குமூலத்தில், “தன்னை சிலர் தாக்கிவிட்டதாகவும், தான் முன்பே இறந்துவிட்டேன். தற்போது ஆவியாக உள்ளே வந்தேன்,” என்றார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், “அவர் ஏற்கெனவே மனநல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதால், தற்போது அவர் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாரா அல்லது பிடிபட்டவுடன் நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்” என்றனர்.  “அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று சொல்லி விட்டு, அந்த ஆள் பைத்தியம் என்பது போல குறிப்பிடுவதும், ஊடகங்கள், அப்படியே செய்திகள் வெளியிடுவதும் தமாஷாக இருக்கிறது.

இந்து அமைப்புகள் போராட்டம்: முன்னதாக, தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பினர், கோயில் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால், கோயிலில் நேற்று கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை[11]. பக்தர்களும் அனுமதிக்கப்படாததால் வேதனையடைந்தனர்[12]. மேலும், கோயிலில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து, கோவை – அவிநாசி நெடுஞ்சாலையில் இந்து அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[13]. அப்போது, அங்கிருந்த கடைகளை மூடக் கூறியும், சாலையோரம் இருந்தவர்களை மறியலில் ஈடுபட வலியுறுத்தியும் பேசினர்[14]. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது[15]. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால், 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்[16]. இங்கு மட்டும் போலீஸார் சரியாக வேலை செய்து விடுவர்.

பரிகார பூஜைகள் நடந்த பிறகு கோவில் திறக்கப் பட்டது: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், வரதாசல அடிகளார், காமாட்சி தாச சுவாமிகள், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று பார்வையிட்டனர். அவிநாசி எம்எல்ஏ ப.தனபால் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு கோவில் கருவறை மற்றும் சன்னதிகளில், அந்நபர் புகுந்தால், பிராயச்சித்த ஹோமம் செய்யப்பட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் செந்திலாண்டவர் சன்னதிகளில் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன[17]. அதன்பின், 12 மணியளவில், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டடனர்[18]. ஆனால், இவ்வளவு நடந்தும், இந்து அறநிலையத் துறை அமைச்சரோ அல்லது பொறுப்பான மற்ற எந்த அதிகாரியோ எதையும் சொல்லவில்லை, பேசவில்லை, கண்டுகொள்லாமல் இருந்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

26-05-2023


[1] தமிழ்.இந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி; சிலைகள் சேதம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்தவர் பிடிபட்டார், செய்திப்பிரிவு, Published : 24 May 2023 06:19 AM, Last Updated : 24 May 2023 06:19 AM

[2] https://www.hindutamil.in/news/crime/995254-avinashilingeswarar-temple-robbery-attempt-damage-to-idols.html

[3] தினமணி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி, By DIN |  Published On : 23rd May 2023 09:30 AM  |   Last Updated : 23rd May 2023 11:07 AM

[4] https://www.dinamani.com/tamilnadu/2023/may/23/robbery-attempt-at-avinasi-lingeswarar-temple-4010345.html

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Avinashi Lingam Temple: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி; ஒருவர் கைது, Pandeeswari Gurusamy, 23 May 2023, 13:35 IST

[6] https://tamil.hindustantimes.com/astrology/avinashilingeswarar-temple-robbery-attempt-one-arrested-131684828784555.html

[7] சமயம்.காம், பிரபல அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு முயற்சி; கோவிலுக்குள் மறைந்திருந்த நபர் கைது!, Ramya Subburaj | Samayam Tamil | Updated: 23 May 2023, 11:14 am.

[8] https://tamil.samayam.com/latest-news/tiruppur/burglary-attempt-at-avinashi-lingeswarar-temple/articleshow/100437682.cms

[9] தமிழ்.18.நியூஸ், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சிலைகள் சேதம்.. கோபுரத்தில் பதுங்கி இருந்த நபர் கைது, Reported By :BALAJI BHASKAR, Published By :Raj Kumar, LAST UPDATED : MAY 23, 2023, 17:57 IST, First published: May 23, 2023, 17:40 IST

[10] https://tamil.news18.com/tiruppur/thief-caught-while-trying-to-steal-in-avinasi-lingeswarar-temple-988834.html

[11] இ.டிவி.பாரத், பிரசித்திபெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட முயற்சிகுற்றவாளி கைது!, Published: May 23, 2023, 1:33 PM.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/a-robbery-attempt-is-underway-at-the-famous-avinashi-lingeswarar-temple-in-coimbatore-district/tamil-nadu20230523133242190190881

[13] மாலை மலர், அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிலைகள்கலசங்கள் உடைப்பு, ஆபரணங்கள் திருட்டுமர்மநபர்கள் கைவரிசை, By மாலை மலர், 23 மே 2023 3:16 PM; https://www.maalaimalar.com/news/district/will-security-be-strengthened-612957

[14] https://www.maalaimalar.com/news/district/will-security-be-strengthened-612957

[15] தினகரன், அவிநாசி கோயிலுக்குள் புகுந்து சிலைகள், கலசங்கள் உடைப்பு: வாலிபர் கைது, MAY 24, 2023; https://m.dinakaran.com/article//1133402/amp

[16] https://m.dinakaran.com/article//1133402/amp

[17] தினமலர், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கோபுர சிலைகள் திருட முயற்சி, மாற்றம் செய்த நாள்: மே 23,2023 19:12

[18] https://m.dinamalar.com/detail.php?id=3328403

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழி வெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள் (1)

ஏப்ரல் 9, 2023

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழிவெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள் (1)

கலாக்ஷேத்திராவில் காலடி எடுத்து வைத்த மாணவிகள், இன்று நெருப்பாற்றில் விழுந்ததுபோல் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர்: தினகரன் இவ்வாறு விவரிக்கிறது. பரதமும் இசையும் நமது கலை பண்பாட்டு அடையாளமாக திகழும் நிலையில், இவற்றை வளர்ப்பதற்காக துவக்கப்பட்ட ஒரு கலைக்கூடம், இன்று காம விளையாட்டுக்கான களமாகி, இதுவரை சேர்த்து வைத்த அத்தனை பெருமைகளையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. கவின் கலைக் கல்லூரியான கலாஷேத்ராதான் அது. காலில் சலங்கையுடனும், நெஞ்சில் கலைக் கனவுகளுடனும் இதற்குள் காலடி எடுத்து வைத்த மாணவிகள், இன்று நெருப்பாற்றில் விழுந்ததுபோல் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர்[1]. உலக நாடுகள் வரை பெருமையை பரப்பிய இந்தக் கல்லூரியை, உயரிய நோக்கத்தோடு உருவாக்கியவர் ருக்மணி தேவி. சமூக அக்கறையும், ஆன்மீக சிந்தனையும் கொண்ட இவர், மதுரையில் 1904 பிப்ரவரி 24ல் பிறந்தார். இவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி சென்னையில் உள்ள தியாசபிக்கல் சொசைட்டியில் பணியாற்றியதால், ருக்மணி தேவியும் சென்னையில் படித்தார். பின்னர் அன்னிபெசன்ட் அம்மையாரை சந்திக்க லண்டனுக்கு ஜார்ஜ் அருண்டேலுடன் 1920ல் சென்றார். அப்போது அவருக்கு வயது 16. அவர், அருண்டேலை திருமணம் செய்து கொண்டார். அந்தக் காலத்தில் சாஸ்திரியின் மகள், அருண்டேலை திருமணம் செய்தது பெரிய புரட்சியாக பார்க்கப்பட்டது.

ருக்மணி தேவி சதிரை பரதநாட்டியமாக்கி அரங்கேற்றியது: அதன்பின்னர் அவர், வெளிநாட்டில் வசித்தபோது ரஷ்யாவின் பாலே நடனத்தை முறைப்படி கற்றார். பின்னர் இந்தியாவுக்கு அவர் திரும்பியபோது தேவதாசிகளால் மட்டுமே ஆடக்கூடிய ‘சதிர்’ என்ற பரதநாட்டிய நடனத்தைப் பார்த்தார். அந்த நடனம், பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த நடனத்தின் மீது பற்றுக் கொண்ட ருக்மணிதேவி, அதை முறைப்படி கற்றுக் கொண்டார். இந்த நடனத்தை பார்ப்பதே தவறு என்ற காலக்கட்டத்தில் இந்த நடனத்தைக் கற்றுக் கொண்டவர், சதிர் என்ற பரதநாட்டியத்தை, பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் ஆன்மிகத்தையும் கலந்து அனைவரும் ரசிக்கும்படி அரங்கேற்றினார். பின்னர் இதை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கலாஷேத்ரா என்ற அமைப்பைத் தொடங்கி பரதநாட்டியத்தை உலகறியச் செய்தார். ஆரம்பத்தில் இங்கு பரதநாட்டியம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் மோகினி ஆட்டம், கேரளாவின் கதகளி ஆகிய நடனங்களோடு சேர்த்து, வீணை, வயலின் மற்றும் பாட்டு ஆகிய கலைகளோடு, சிற்ப கலை. பெயின்ட்டிங், நெசவு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். நெசவில் இயற்கை முறையிலான சாயத்தையும் பயன்படுத்தி நெசவு செய்ய தறிகளையும், நெசவுக் கூடங்களையும் ருக்மணிதேவி ஆரம்பித்தார். கலாஷேத்ரா புடவை உலக பிரசித்தி பெற்றவை.

கலாக்ஷேத்திரம் செக்ஸ் ஷேத்திரமாக மாறியது; சமூக அக்கறை மற்றும் ஆன்மீகத்தை வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட இந்த கலாஷேத்ரா, இன்று செக்ஸ் ஷேத்திரமாக மாறியதைக் கண்டு முன்னாள் மாணவ, மாணவிகள், அந்த நிறுவனத்தோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள், அதன் நலன் விரும்பிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ருக்மணிதேவியின் சேவையைப் பார்த்த மெரார்ஜி தேசாய், 1977ம் ஆண்டு ருக்மணி தேவிக்கு குடியரசுத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஆனால், தனக்கு ஜனாதிபதி பதவி வேண்டாம் என்று மறுத்த ருக்மணி தேவி, மக்களுக்கு தொண்டு செய்வதுதான் முக்கியம் என்றார். இதற்காக கலாஷேத்ராவில் இந்த நடனம், இசை கல்லூரியோடு, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அடங்கிய இரு பள்ளிகளும் தொடங்கப்பட்டன. சமூக மாற்றத்திற்காக தொடங்கப்பட்டு நாட்டின் உச்சப்பட்ச பதவியான ஏன் இந்த நாட்டின் முதல் குடிமகனாக பார்க்கப்படும் ஜனாதிபதி பதவியை வேண்டாம் என்று தள்ளிய ருக்மணிதேவியின் நிறுவனம், இன்று பணத்தை பங்கிடுவதிலும், பதவிக்காக ஒருவரை ஒருவர் வீழ்த்துவதிலும் பதவி வெறி ஷேத்திரமாகவும், செக்ஸ் ஷேத்திரமாகவும் மாறியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ருக்மணி தேவிக்குப் பிறகு வாரிசு போட்டி: ருக்மணி தேவிக்குப் பிறகு சங்கரமேனன், நிர்வாகத்துக்கு பொறுப்பு ஏற்றார். அவரது காலத்துக்குப் பிறகு, கலாஷேத்திராவின் தரமும் நிறமும் மாறி விட்டது. அவரது நிர்வாகம்தான் சிறந்த நிர்வாகம் என்று போற்றப்பட்டது. அவரது காலத்தில் 1991ல் அடுத்த வாரிசு (தலைமைப் பதவிக்கு) யார் என்ற போட்டியில் சங்கரமேனன் (1907-1995) தாக்கப்பட்டார். அந்த தாக்குதலை நடத்தியது யார்? யாருக்காக தாக்குதல் நடந்தது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. 84 வயதான கிழவரைத் தாக்கினர் என்பது வேடிக்கையாக இருக்கிறது. ‘அந்த தாக்குதலுக்குப் பிறகு மனமுடைந்த சங்கரமேனன், சில மாதங்களிலேயே உயிரிழந்தார். அவர் மரணத்துக்கு தாக்குதலும் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது,’ என்று தினகரன் கூறுகிறது.

கலாஷேத்திராவை ஒன்றிய காங்கிரஸ் அரசு கையகப்படுத்தியது; சங்கரமேனன் நிர்வாகம் செய்த காலத்தில், சாரதா ஆப்மென் டீச்சர், பத்மாஷினி டீச்சர், கமலா டீச்சர் ஆகியோர் பணியாற்றினர். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு ருக்மணி தேவையை போல் உயரிய பண்புகளையும் போதித்து வழிநடத்தினர். அவர்கள் மாணவ, மாணவிகளோடு சக நண்பர்களாக பழகி, கலாஷேத்திரத்தை வளர்த்தனர். அவர்களது காலத்துக்குப் பிறகு அந்த இடங்களை இதுவரை யாரும் நிரப்பவில்லை. வெற்றிடமாக உள்ளது. இதனால் சங்கரமேனன் காலத்துக்குப் பிறகு, 1993ம் ஆண்டு ஆர்.வெங்கட்ராமன் (1987-1992) ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பரிந்துரையின் அடிப்படையில் கலாஷேத்திராவை ஒன்றிய காங்கிரஸ் அரசு கையகப்படுத்தியது. அப்பொழுது திராவிட கட்சிகள் எல்லாம் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை போலிருக்கிறது, பார்ப்பன ஆதிக்கத்தையும் கவனிக்கவில்லை போலும்.

ஒன்றிய காங்கிரஸ் அரசு, லீலா சாம்சனைநியமித்தது: நிதி உதவிகளை ஒன்றிய அரசே செய்ய ஆரம்பித்தது. அதன்பின்னர் ஒன்றிய காங்கிரஸ் அரசு, லீலா சாம்சன் என்பவரை இயக்குநராக நியமித்தது. அவரது காலத்தில் பல போட்டிகளை நடத்தத் தொடங்கியதால், நிதி கொட்ட ஆரம்பித்தது. ஒன்றிய அரசும் பணத்தை வாரி இறைத்தது. இதனால் சமூக அக்கறையோடு தொடங்கப்பட்ட கலாஷேத்ராவில் அரசியல் புகுந்து விளையாடத் தொடங்கியது. பல நிதிமுறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இருப்பினும், திராவிட கட்சிகள், துப்பறியும் வல்லுனர்கள், நக்கீரன் – கோபால் போன்றோர் கண்டுகொள்ளவில்லை போலும். பின்னர் பாஜ தலைமையில் ஒன்றிய அரசு அமைந்தபோது, அவர் வெளியேற்றப்பட்டார்.

பணத்தை சுருட்ட போட்ட புது திட்டம்: கலாஷேத்ரா மாணவர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெங்களூர், டேராடூன், அகமதாபாத் ஆகிய நகரங்களில் கலை நிகழ்ச்சிக்கள் நடத்தப்படும். இதற்காக கோலம் போடுவது முதல் அனைத்துப் பணிகளுக்கும் ஆட்களை அழைத்துச் செல்வார்கள். இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படும். அதில்தான் முறைகேடுகள் நடக்க ஆரம்பித்தன. முன்பு சென்னையில் உள்ள கலாஷேத்ராவில்தான் போட்டிகள் நடத்தப்படும். ஆனால் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் நிர்வாகம் சென்ற பிறகு வெளி மாநிலங்களில் நடத்த ஆரம்பித்தனர். அப்போதுதான் பணத்தை சுருட்ட முடியும் என்று முடிவெடுத்தனர்.

கேரளத்தவர் அதிகமாக நியமிக்கப் பட்டது: அதோடு, இதற்காக கலாஷேத்ராவில் தற்காலிகமாக (ரெப்பெட்ரி கம்பெனி) ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு மூலம்தான் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹரிபத்மன், சஞ்சித் லால், சாய்கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு ரேவதி ராமச்சந்திரனால் நியமிக்கப்பட்டனர். இவர்களோடு சேர்த்து மோகன், கிரித்மது, கே.பி.ராகேஷ், ஸ்ரீஜித் மற்றும் ஜோஷ்னா மேனன், ஸ்ரீதேவி, இந்துநிதி ஆகிய பெண் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த கேரளா ஆசிரியர்களுக்கு தலைவர்போல ஹரிபத்மனும், ஜோஷ்னா மேனனும் செயல்பட்டு வந்தனர்.

© வேதபிரகாஷ்

09-04-2023


[1] தினகரன், உலகப் பிரசித்தி பெற்ற கலைகளின் ஷேத்திரம் செக்ஸ் ஷேத்திரமாக மாறியது எப்படி? பணத்துக்காக பாதை மாறிய பயங்கரம், April 4, 2023, 2:24 am

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம்– 300 ஆண்டுகள் பழமையானது இடிக்கப்பட்டது – தொல்லியல் துறையினர் கண்டுகொள்ளவில்லை!

மார்ச் 20, 2023

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் – 300 ஆண்டுகள் பழமையானது இடிக்கப்பட்டது – தொல்லியல் துறையினர் கண்டுகொள்ளவில்லை!

திருவண்ணாமலையில், 400 ஆண்டு பழமையான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் மடத்தை இடித்ததை கண்டித்து, கட்டடத்தின் மீது அமர்ந்து ஹிந்து முன்னணியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அம்மணி அம்மாள். இவர், 17ம் நுாற்றாண்டில் அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு புறம், 108 துாண்களுடன் கூடிய மடம் கட்டி, அங்கேயே தங்கி கோவிலின் வடக்கு கோபுரத்தை பலரின் பொருளுதவியுடன் கட்டினார். இதனால் வடக்கு கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் என, அழைக்கப்படுகிறது. அம்மணி அம்மாள், 17ம் நுாற்றாண்டின் இறுதியில், ஈசான்ய லிங்கம் எதிரே ஜீவ சமாதி அடைந்தார். அந்த மடத்தை அவரது சீடர்கள் பராமரித்தனர். மடத்தை, 30 ஆண்டுகளாக முறையாக பராமரிக்க ஆட்கள் இல்லை. இதனால் சில தனி நபர்கள் ஆக்கிரமித்தனர்.

18—03-2023 அன்று இடிப்பு: இதை மீட்க, 1976 முதல், ஹிந்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் போராடியதால், ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் பராமரிக்க உத்தரவிடப்பட்டது. முன்னரே குறிப்பிடப் பட்டப் படி, 1976க்குப் பிறகு என்ன நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை. திருவண்ணாமலை கோவில் சுற்றிலும் ம்ச்டங்கள் உள்ளன. மடங்களிலேயே கடைகள் உள்ள அல்லது கடைகள் வைத்த பிறகு, அவை கொஞ்சம்-கொஞ்சமாக இடிக்கப் பட்டு, வணிக வளாகங்களாக மாற்றப் பட்டு வருகின்றன. அந்த இடத்தில், 3,800 சதுர அடியில், பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் ஆக்கிரமித்து, வீடு, கார் ‘ஷெட்’ கட்டியிருந்தார். இதை அகற்ற கோவில் நிர்வாகம், திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆக்கிரமிப்பை அகற்றி மடத்தை பாதுகாக்க, மூன்று நாட்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக, 18-03-2023 அன்று போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப் பட்டது.


19-03-2023 எதிர்ப்பு போராட்டம்: வீடு, கார் ஷெட் அகற்றப்பட்ட நிலையில், திடீரென அம்மணி அம்மன் மடமும் இடிக்கப்பட்டது. மடம், 70 சதவீதம் இடித்த நிலையில், தகவலறிந்த ஹிந்து முன்னணியினர், அம்மணி அம்மாள் பக்தர்கள், அப்பணியை 19-03-2023 நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை அணுகிய போது, கட்டடம் சேதமடைந்ததால் இடித்ததாக தெரிவித்தனர். இதனால் ஹிந்து முன்னணியினர், பாதி இடிக்கப்பட்ட கட்டடம் மீது அமர்ந்து நேற்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர்[1]. இதையடுத்து 2-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்[2]. அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி, 400 ஆண்டு பழமையான, நல்ல நிலையில் உள்ள மடத்தை இடித்து, புராதனத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட அறநிலையத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்[3]. அவர்களை திருவண்ணாமலை டவுன் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்[4]. இதுதொடர்பாக, அதிகாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் மற்றும் இந்து அமைப்பினர் கலந்துகொண்டனர்[5]. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து மடம் இடிக்கப்பட்ட இடத்தின் அருகில் கற்பூரம் ஏற்றி ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர்[6]. தொடர்ந்து அவர்கள் கோவிலுக்குள் அதிகாரிகளை சந்திக்க சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் கலைந்து சென்றனர்.

19-03-2023 – பா... நிர்வாகி போராட்டம்: இந்த போராட்டம் ஒருபுறம் நடைபெற அம்மணி அம்மன் மடத்தை ஆக்கிரமித்ததாக கூறப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி சங்கர் அவரது ஆதரவாளர்களுடன் பாதி இடிக்கப்பட்ட அந்த மடத்தின் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்[7]. அப்போது அவர் கூறியதாவது[8]:- “அம்மணி அம்மன் மடம் என்பது கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது அல்ல. இது அறக்கட்டளை தான். இந்த அறக்கட்டளைக்கு தேவையான உதவிகளை கோவில் நிர்வாகம் செய்ய தான் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. நான் மடத்தின் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி இடித்தனர். அதை நான் நீதிமன்றம் மூலம் எதிர் கொண்டு அதற்கான நஷ்டஈடு பெறுவேன்[9]. பழைய, புராதன கட்டிடங்களை இடிப்பதற்கு முன்பு பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதனை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் அம்மணி அம்மன் மடத்தை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் இந்த பணி நடைபெற்று உள்ளது,”  இவ்வாறு அவர் கூறினார்[10]. இவர் தான் ஆக்கிரமிக்கவில்லை என்று சொல்லவில்லை. எல்லோரும் செய்துள்ளார்கள், நானும் செய்கிறேன் என்பது போலத்தான் பேசியிருப்பது தெரிகிறது.

இந்திய தொல்லியல் சட்டங்களை வளைத்தல், மீறுதல், நீர்த்தல் முதலியன: புராதன சின்னங்கள் மற்றும் கட்டுமானங்கள் பாதுகாப்பு சட்டம் முதலியவற்றின் பிரிவுகள் தளர்த்தப் படுவதால், கோவில்கள், புராதன சின்னங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் முதலியற்றிற்கு அருகிலேயே, கட்டிடங்கள் எழும்பி வருகின்றன. பல புராதன நகரங்களில் அத்தகைய கட்டிடங்களை ஒட்டியே, வீடுகள், கடைகள், ஓட்டல்கள் முதலியவை இருப்பதை காணலாம். பல ஆண்டுகளாக, இந்திய தொல்பொருள் ஆய்வு மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களின் பாதுகாப்புக்கு வெளியே வரும் நூற்றுக்கணக்கான நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாமல் இருக்கிறது.  மேலும் பல இடங்கள், இந்திய தொல்பொருள் ஆய்வு மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களின் பாதுகாப்பு-வரையறை, சட்ட-திட்டங்களையும் மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின் றன.மத்திய மற்றும் மாநில அரசுகள், புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்களை சட்டப் படி, ‘பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக’ அறிவித்துள்ளது. அத்தகைய இடங்கள் இருக்கும் இடங்களிலிருந்து 100 மீ தொலைவு வரை, பாதிக்கும் முறையில், எந்த பணியும் மேற்கொள்ளலாகாது என்றும் சட்டப் பிரிவு உள்ளது. ஆனால், நகர்புற மயமாக்கம் என்ற திட்டங்களில், சாலைகள் போடுவது, மனைகள் விற்பது, புதிய குடியிருப்புகளை உண்டாக்குவது, தொழிற்சாலைகளுக்கு என்று இடங்களை ஒதுக்கிக் கொடுப்பது, நாளடைவில் அவ்விடங்களே, நகரகள் போன்று விரிவாகுதல் முதலியவற்றாலும், பழங்கால கோவில்கள், கட்டிடங்கள், சின்னங்கள் முதலியன பாதிக்கப் படுகின்றன. ரியல் எஸ்டேட், அடுக்கு மாடிகள் கட்டும் நிறுவனங்கள் முதலியன கோடிகளில் வியாபாரம் செய்வதால், அத்தகைய பாதிப்புகள், அழிப்புகள் முதலியவற்றை மறைத்து விடுகின்றன.

பழம்பொருட்களை பாதுகாக்கும் முறைகள்: ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்வது இத்துறையின் பெரும் பணிகளில் ஒன்றாகும் கல்வெட்டுகளைப் படியெடுத்து, படித்து, பதிப்பித்து நூலாக வெளியிடுவது தொல்லியல் துறையின் முதன்மைப் பணிகளில் ஒன்றாகும். மத்திய அரசு, பழமையான கலைப் பொருட்கள் இந்தியாவிலிருந்து கடத்தப்படுவதைத் தடை செய்வதற்கு ‘பழம் பொருள் பாதுகாப்புச் சட்டம் – 1972’-ஐ இயற்றியுள்ளது. தொல்லியல் என்பது பண்டைய எச்சங்களை மேற்பரப்பாய்வு மற்றும் அகழாய்வு மூலம் அறிதலாகும். இது வரலாறு, பண்பாடு மற்றும் அப்பகுதிகளின் தொன்மையினை நம்பத் தகுந்த தொல்லியல் சான்றுகளுடன் மறுகட்டமைப்பு செய்வதற்கு நமக்கு உதவி புரிகிறது. இது மானுடவியல், வரலாறு, கலை வரலாறு, சங்கவியல், மக்கள் இன விளக்க நூல், புவியியல், மண்ணியல், மொழியியல், இயற்பியல், வேதியியல், பண்டைய சுற்றுச்சூழலியல், தொல் உயிரியல் போன்ற பல்வேறு இயல்களை கற்பிக்கும் அறிவியலாகும். பழம்பொருட்களை பாதுகாக்கப்பது என்பது, சில நேரங்களில், பலர் அலட்சியமாக இருக்கும் போக்கையும் கவனிக்கலாம். இதனால், யாருக்கு என்ன பயன் என்றமுறையில் செயல் படும் போது, மக்களும் அவ்வாறே, பிரஞையற்ற நிலைக்குச் சென்று விடுவதால், ஒரு நிலையில் மறந்துவிடுகிறார்கள், இதனால் தான், பல இடங்களில், மண்டபங்கள், கோவில் மன்டபங்கள் முதலியவை ஆக்கிரமிக்கப் பட்டு, வீடுகளாக, கடைகளாக, தங்கும் இடங்களாக மற்றப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன.

© வேதபிரகாஷ்

20-03-2023


[1] தினமலர், 400 ஆண்டு பழமையான மடம் இடிப்பு; திருவண்ணாமலையில் பக்தர்கள் அதிர்ச்சி, Added : மார்ச் 19, 2023  23:30

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3270560

மாலைமலர், அம்மணி அம்மன் மடம் இடிப்புக்கு எதிர்ப்பு, By மாலை மலர்19 மார்ச் 2023 2:20 PM

https://www.maalaimalar.com/news/district/tirupur-the-purchase-price-of-milk-should-be-raised-and-given-bjp-came-with-milk-and-gave-the-petition-585892?infinitescroll=1

அக்னிமுரசு, அம்மணி அம்மன் மடம் இடிப்புஇந்து முன்னணி எதிர்ப்பு, மார்ச் 19, 2023 

[3] மாலைமலர், அம்மணி அம்மன் மடம் இடிப்புக்கு எதிர்ப்பு, By மாலை மலர்19 மார்ச் 2023 2:20 PM.

[4] https://www.maalaimalar.com/news/district/tirupur-the-purchase-price-of-milk-should-be-raised-and-given-bjp-came-with-milk-and-gave-the-petition-585892?infinitescroll=1

[5] அக்னிமுரசு, அம்மணி அம்மன் மடம் இடிப்புஇந்து முன்னணி எதிர்ப்பு, மார்ச் 19, 2023 

[6] https://www.agnimurasu.com/2023/03/demolition-of-ammani-amman-mutt-hindu-front-demonstration.html

[7] தினத்தந்தி, திருவண்ணாமலையில் இந்து அமைப்பினர் 2-வது நாளாக போராட்டம், மார்ச் 19, 11:05 pm.

[8] https://www.dailythanthi.com/News/State/hindu-organizations-protest-for-2nd-day-in-tiruvannamalai-923354

[9] இன்ஸ்டா.நியூஸ், திருவண்ணாமலையில் இந்து அமைப்பினர் போராட்டம், By S.R.V.Bala Reporter 20 Mar 2023 8:09 AM

[10] https://www.instanews.city/tamil-nadu/tiruvannamalai/tiruvannamalai/protest-by-hindu-organizations-in-tiruvannamalai-1205821?infinitescroll=1

பெரியாரிஸ வக்கிரமும் திராவிடத்துவ இந்துவிரோதமும், இந்துவிரோத தூஷணங்களும்: ஈவேரா முதல் ஸ்டாலின்வரை (1)

ஒக்ரோபர் 4, 2022

பெரியாரிஸ வக்கிரமும் திராவிடத்துவ இந்துவிரோதமும், இந்துவிரோத தூஷணங்களும்: ஈவேரா முதல் ஸ்டாலின் வரை (1)

இந்துஎதிர்ப்பில் முடியும் பிஜேபிஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு: தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் அரைவேக்காட்டுத் தனமாக, முழுவிவரங்கள் தெரியாமல், திமுகவை ஆதரிக்க வேண்டும் அல்லது அரசை போற்றவேண்டும், அப்பொழுது தான் பிரச்சினை இல்லாமல் வியாபாரம் நடக்கும், தொழில் நடக்கும் என்று பலரும் பேசி-எழுதி வருவது தெரிந்த விசயமாக இருக்கிறது. குறிப்பாக, சினிமா, ஊடகம், விளம்பரம் சம்பந்தப் பட்ட துறைகள், வணிகங்கள் முதலியவற்றில் திமுகவைப் பகைத்துக் கொண்டு, யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான், பிஜேபியே பலநேரங்களில் அமுக்கி வாசிக்கிறது. இந்துத்துவ வாதிகள் கூட சும்மா கொஞ்ச நேரம் கத்திவிட்டு அமைதியாகி விடுவர். மத்திய அரசு உதவி, ஆதரவு முதலியவை தேவை என்பதால் சினிமாக்காரர்கள் “காரட்-அன்ட்-ஸ்டிக்” பாலிசியைக் கடைபிடித்து சாதித்துக் கொள்கிறார்கள். இந்துவிரோதம் என்பதனை பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பில் ஆரம்பித்து முடிப்பார்கள். இதனை, பலமுறை நான் எடுத்துக் காட்டியுள்ளேன்.

போன்ற திராவிட, திராவிடத்துவ பெரியாரிஸ பாசிஸம் செயல்படுகிறதா?: இந்த இந்துவிரோத கூப்பாடிகள், கூத்தாடிகள், சித்தாந்த கூலிகள், திராவிடத்துவ அடிமைகள், தொடர்ந்து அந்த வெறுப்பை, காழ்ப்பை, தூஷணத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  ஆனால், இவர்கள் எல்லோருமே அம்பேத்கர் தொகுத்த அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, இந்துக்கள் தாம். அம்பேத்கர் எயரைச் சொல்லி அரசியல் நடத்தும் இவர்கள் இதனையே மறைத்துத் தான் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இல்லையென்று தாராளமாக அறிவித்து, தங்களது சான்றிதழ்களை அரசிடம் ஒப்புவித்து, கொடுத்து விட்டு, இந்துக்கள்-அல்லாதவராகி விடலாம். ஆனால், முட்டாள்தனமாக, அறிவற்ற முறையில், சட்டவிரோதமாக, இத்தகைய பேச்சுகளைப் பேசி, திராவிட நாடகம் ஆடி தமிழர்களை ஏமாற்ற வேண்டாம். திராவிடத்துவ வாதிகள் என்றால் என்னவேண்டுமானாலும், சரித்திரம் அறியாமல், ஆதாரமில்லாமல் பேசலாம், ஈவேரா, அண்ணா, கருணாநிதி என்று சொல்லி குழப்பலாம். உலகமே ஏற்றுக் கொள்ளாத இனம், இனவெறி, இனவெறுத்துவம் ரீதியில் இன்றும் பேசி-எழுதிக் கொண்டிருக்கலாம். இதனால் தான், உலக, அனைத்துலக, தேசிய அறிவுசார்ந்த மேடைகளில் இவர்களது இனத்துவ ரீதியிலான கருத்துகள் எடுபடுவதில்லை. இவர்கள், இவர்களைச் சுற்றியுள்ள கூட்டம், மற்ற ஜால்றா அடிக்கும் அடிமைகள் போன்ற கும்பல்கள் கிடைக்கும் ஆதாயங்களுக்காக விசுவாசத்துடன் பாடி, ஆடி, கால்களைப் பிடித்து சேவை செய்து கொடுப்பதை வாங்கிச் செல்கின்றனர்.

சரித்திர ஆதாரம் இல்லாத இனம், இனவெறி, இனவெறித்துவம் மூர்க்கத்தனமான சித்தாங்களுடன் செயல்படுவது ஏன்?: பாசிஸம் என்று சொல்லி இவர்கள் மற்றவர்களை விமர்சிக்கிறார்கள், ஆனால், இவர்கள் தான் உண்மையில் பாசிஸ்டுகளாக அதிலும் மூர்க்கத் தனமான பாசிஸ்டுகளாக இருக்கிறார்கள். தாங்கள் ஒல்வது, பேசுவது, எழுதுவது தான் உண்மை மற்றதெல்லாம் பொய் என்ற ரீதியில் பிடிவாதமாக இருக்கிறார்கள், செயல்பட்டு வருகிறார்கள். எடுத்துக் காட்டினால், தீவிரவாதம் வாய்ப்பேச்சு, வசவுகள் என்று ஆரம்பித்து அடிப்பதில் முடிகிறது. பாசிஸத்தையும் மீறிய தீவிரமான தீவிரவாதக் கொள்கைகளுடன், அரசு, அதிகாரம் என்று வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளலாம் என்ற முறையில் தான், இத்தனையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முரட்டுத் தனமான போக்கை அறிந்து தான், மற்ற மாநிலத்தவரும் இதை ஒரு விதமான மனரீதியிலான பாங்கு என்று கொண்டு விட்டுவிடுகிறார்கள், பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  இதனை திராவிட, திராவிடத்துவ பெரியாரிஸ பாசிஸம் என்றே குறிப்பிடலாம். ஏனெனில், மற்ற மாநிலங்களுக்கு வரும் போது, அவர்கள் அடங்கி விடுகிறார்கள். இந்த மனோதத்துவத்தை அறிந்தவர்களாக இருபதால் தான், இவர்களை, “அரவக்காரர்கள்,” “மதராஸி” என்றெல்லாம் குறிப்பிட்டதைக் கவனிக்கலாம்.

திருமாவளவன் செய்யும் இந்துவிரோத அரசியல், பிரச்சாரம்: திருமாவளவன் தொடர்ந்து இந்துமத தூஷண, இந்துவிரோத காழ்ப்பு, இந்துமக்கள் தாக்குதல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரிந்த விசயம் தான். புகார்கள் கொடுத்தாலும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எம்.பியாக இருப்பதால், அதற்கான பாதுகாப்பு உள்ளது போலும். ஒவ்வொரு மேடையையும், விழாவையும் அதற்கு பயன்படுத்திக் கொள்வதும் தெரிந்தது தான். அதுபோல, தமிழ் ஸ்டுடியோ அமைப்பு ஒருங்கிணைத்த விசிக தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும், தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியின் தலைவருமான ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலை விழாவில் பங்கேற்ற ஆவண மற்றும் குறும்படங்களின் இயக்குனர்களுக்கு சான்றிதழை வழங்கினார்[1].  சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது[2].

இனிமா இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசியது: இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, ”அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன்[3]. இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன்[4]. வெற்றிமாறன் அதற்கு அவர், “தனிமனிதனால் சமூகத்திற்கு தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். அதே தவறு தான் நிகழ்கிறது. அமைப்பால் திரள வழிசெய்யுங்கள்” என்றார்[5]. மேலும், “கலை என்பது ஒரு அரசியல். நாம் தெரிந்தோ, தெரியாமலோ அரசியலுக்குள் தான் இருக்கிறோம்,” என திருமாவளவன் சொல்லியிருந்தார்[6]. இலக்கியம், சினிமா எப்படி அவர்கள் கையில் இருந்தது[7]. அந்த தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது[8]. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் சினிமா பெற்றுள்ளது என நினைக்கிறேன்[9]. சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம்[10]. வெற்றிமாறன் சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம்[11]. சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள்[12].

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாகக் காட்டுவது: மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது. வெற்றிமாறன் சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்,” என்றார்.

© வேதபிரகாஷ்

04-10-2022


[1] நக்கீரன், வள்ளுவருக்கு காவி உடை, ராஜராஜ சோழனுக்கு இந்து பட்டம்” – வெற்றிமாறன் விமர்சனம், நக்கீரன் செய்திப்பிரிவு,Published on 03/10/2022 (15:50) | Edited on 03/10/2022 (16:13).

[2] https://www.nakkheeran.in/cinema/cinema-news/vetrimaaran-talk-about-rajaraja-cholan-and-vallurvar

[3] மாலை மலர், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது தொடர்ந்து நடக்கிறதுஇயக்குனர் வெற்றிமாறன் , By மாலை மலர், 3 அக்டோபர் 2022 9:54 AM.

[4] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-director-vetrimaran-speaks-about-raja-raja-chozhan-519805

[5] NEWS18 TAMIL,. வள்ளுவருக்கு காவி உடை, ராஜராஜன் இந்து மன்னன் என அடையாளங்கள் பறிக்கப்படுவதாக இயக்குனர் வெற்றி மாறன் பேச்சு…,  TAMIL NADU, INDIA, LAST UPDATED : OCTOBER 03, 2022, 13:40 IST.

[6] https://tamil.news18.com/news/entertainment/cinema-we-losing-our-identity-like-as-saffron-on-thiruvalluvar-rajarajan-hindu-king-said-812330.html

[7] பாலிமர்.நியூஸ், ராஜராஜ சோழனை இந்து அரசனாக காட்டுவத? வெற்றிமாறன் என்ன சொல்ல வருகிறார் , October 03, 202 06: 35:42 AM.

[8] https://www.polimernews.com/dnews/188787

[9] தமிழ்.ஒன்.இந்தியா, ராஜராஜ சோழனைஇந்துஅரசனா மாத்திட்டாங்கஇயக்குநர் வெற்றிமாறன்.. ஆர்எஸ்எஸ் பேரணிக்கும் எதிர்ப்பு , By Noorul Ahamed Jahaber Ali Published: Sunday, October 2, 2022, 11:54 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/they-changed-raja-raja-cholan-as-hindu-king-director-vetrimaaran-reveals-478653.html

[11] ஐ.பி.சி.தமிழ்நாடு, ராஜராஜ சோழன் இந்து அரசனா? : இயக்குநர் வெற்றிமாறன் எதிர்ப்பு, Published on 03/10/2022

[12] https://ibctamilnadu.com/article/changed-raja-raja-cholan-as-hindu-vetrimaaran-1664709999

சங்கரர் எதிர்ப்பு, சங்கரமட துவேசம், இக்கால சங்கராச்சாரியார்கள் தூஷணம் ஏன்?: இதற்கு சைவம்,  பிராமண எதிர்ப்பு, இந்து விரோதம் முதலியவை தேவையா? (1)

ஜூலை 27, 2022

சங்கரர் எதிர்ப்பு, சங்கரமட துவேசம், இக்கால சங்கராச்சாரியார்கள் தூஷணம் ஏன்?: இதற்கு சைவம்பிராமண எதிர்ப்பு, இந்து விரோதம் முதலியவை தேவையா? (1)

திமுக ஆட்சியும், ஜாதி அரசியல் ஆரம்பமும், முதலியார் ஆதிக்கமும்: திராவிடத்துவ, இந்துவிரோத ஆட்சி, அதிகாரம், ஆக்கிரமிப்பு முதலியவற்றை மறந்து, மறைத்து சைவம் போர்வையில் நடக்கும் திட்டம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது. அண்ணாதுரை முதலமைச்சர் ஆனதும், முதலியார்கள் அரசு-ஆட்சி-அதிகாரம் என்று பல பதவிகளில் அமர்ந்தார்கள், தொடர்ந்தார்கள், பெரிய ஆட்கள் ஆனார்கள்[1]. ஆனால், சைவத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஈவேரா இந்துவிரோத காரியங்களில் இடுபட்டபோது, அடக்கி வாசித்தனர். கருணாநிதி முதலமைச்சரானதுடன், ஜாதி அரசியலை வளர்த்து, அதிகாரங்களை உடைக்க மற்ற ஜாதியினருக்கு இடம் கொடுத்தார்கள். இதனால், பிள்ளை, போன்றவர்கள் தெற்கில் ஆதிக்கம் பெற்றார்கள்.  சைவ வேளாளர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர். இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர். மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதகளில் முக்குலத்தோர் ஆதிக்கம் பெற்றனர். இதனால், வன்னியர் போன்றோர் ஜாதி ரீதியில் போராட்டங்களில் இறங்கினர்[2]. இவர்களது பிரச்சினைகளுக்கு, பார்ப்பன்னீயம், பார்ப்பன- எதிர்ப்பு போன்றவை வழக்கம் போல உதவின. நெடுஞ்செழியன், அன்பழகன் அடக்கி வாசித்தாலும், மற்ற வகையறாக்கள் அதிகமாகவே பிரச்சினைகளை உண்டாக்கின.

அறநிலையத் துறை ஊடுருவல், தில்லுமுல்லுகள், மோசடிகள்: மதுரை ஆதீனத்தை அடக்கி, திமுக-காரர்கள் கோவில்-சொத்துக்களை அனுபவித்து வந்தார்கள். ஒரு தலைமுறை போய், இரண்டாம் தலைமுறையும் வந்தது. வாடகை-குத்தகை-ஆக்கிரமிப்பு வழக்குகள் நீதிமன்றங்களுக்கு செல்ல-செல்ல, மற்றவர்களும் அதில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதனால், எதிர்கட்சிகளுக்கும் பங்கு கொடுப்பது போன்ற சமரசங்களும் ஏற்பட்டன. இந்து அறநிலையத் துறையில் தங்கள் ஜாதியினர் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டனர். மற்றவர் நுழைவதையும் தடுக்க முறைகள் மேற்கொண்டனர். நடக்கும் ஊழல்களும் பெரிதளவில், ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொண்டனர். எல்லோருக்கும் ஷேர், மாமூல், அன்பளிப்பு என்ற கலாச்சாரம் நன்றாக வேலை செய்தது. கோவில் சம்பந்தப் பட்டவர்கள் வீட்டில் சமைக்கவே வேண்டாம் என்ற நிலை தொடர்ந்தது. பிறகு, வந்த வரும்படிகள் எல்லாம் முதலீடுகள் ஆக, கொழுக்க ஆரம்பித்தார்கள். “பட்டை-கொட்டை” எல்லாம் ஊருக்குத் தான். கூட்டுக்கொள்ளை அடிப்பது தான் முக்கியமாக இருந்தது. “மக்கள் சேவை மகேசன் சேவை” ஆகியது, நன்றாகவே வேலை செய்து கொண்டிருக்கிறது.

மடாதிபதிகளின் பிணக்குகள் ஜாதிகளை அடங்கியது: மடங்களின் கோடிக் கணக்கான சொத்துக்கள் முதலியவை தெரியவர, மடாதிபதியாக அல்லது அவருக்குக் கீழுள்ள பதவிகளைப் பெற பல திட்டங்கள் வகுக்கப் பட்டது. சைவ வேளாளர் இல்லாத யாரும் மடாதிபதியாக முடியாது. சைவர்கள் எல்லோரும் மடாதிபதிகள் ஆக முடியாது. குருக்கள், தேசிகர், ஓதுவார் ஆகிய பட்டங்கள் சைவ சமய பணிகளில் சிறந்து விளங்கிய சைவ வேளாளர்க்குரியன. இருந்தாலும், அவர்கள், வேறு ஜாதியினர் எனில், மடாதிபதி மற்ற உயர்பொறுப்புகளுக்கு பாத்தியதை ஆக முடியாது. இதை எந்த அரசியல்வாதியும் கேட்க மாட்டான்[3]. அந்நிலையில், சிதம்பரம் கோவிலில் நுழைய முற்பட்ட போது தான், தீக்ஷிதர்கள் போராட்டத்தைத் துவக்கினர். உச்சநீதி மன்றம் வரை சென்று வெற்றி பெற்று, தங்களது உரிமைகளை மீட்டனர். அதனால், தில்லை தீக்ஷிதர்கள் எப்பொழுதும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். சைவ-வேளாளர்களே இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்[4].

அரசுவரிவருமானம்மக்கள் குழுமங்கள்: ஆளும் அரசு, இப்பொழுதைய இந்திய பாராளுமன்ற, முந்ஹைய ஆங்கிலேய அந்நிய, முகலாய, துலுக்க முதலிய ஆட்சிகாலங்களில், மக்களிடமிருந்து எதையாவது வரியாகப் பெறவேண்டும் என்றுதான் குறியாக வேலை செய்தனர். கோவில்-கோவில் சொத்து, கோவில் விழா, பூஜை, கிரியைகள், அதற்கு வேண்டிய பொருட்கள்-ஆட்கள், நடக்கும் முறை, கோவில்களினால் மக்களுக்குக் கிடைக்கும் ஆதாயம் மற்றும் கோவில்களினால் மக்களுக்குக் கிடைக்கும் ஆதாயம், இவற்றைத் தாண்டி அரசு-ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கும் ஆதாயம், என்று தான் எல்லாமே பின்னப் பட்டு வேலை செய்து கொண்டிருந்தன. கோவில்கள், விவசாயம் முக்கியமான தொழில்கள், அவற்றை செய்வோர், நீர்-நிலை அவற்றின் அமைப்பு, பாதுகாப்பு முதலியன இவற்றை செய்து வரும் குழுமத்தினர், தத்தம் கடமைகளை செய்து வந்தனர். அவை ஜாதிகளாக இருந்தாலு, தொழில்-செய்யும்-குழுமங்களாக இருந்தாலும், கடமையினை செவ்வன செய்து வந்தன.

கோவில்கோவில் சார்ந்த தொழில்கள்இந்துக்கள், இந்துக்கள்அல்லாதவர்: இந்துக்கள் கைகளில் இருக்கும் வரை அவை ஒழுங்காக நடந்து வந்தன. ஆனால், துலுக்கர் வந்த பிறகு, விக்கிரங்கள் உடைக்கப் பட்டன; கோவில்கள் இடிக்கப் பட்டன; விலையுயர்ந்தவை கொள்ளையடிக்கப் பட்டன; இதனால் கோவில்-கோவில் சம்பந்தப் பட்ட காரியங்கள்-வேலகள் பாதிக்கப் பட்டன. வருமானம் குறைந்தது. விவசாயம் பாதித்தது, விளைச்சல் குறைந்தது. மக்களின் வேலைகளும் பாதிக்கப் பட்டன. தத்தம் தொழில் என்றிருந்த நிலை மாறி, வெவ்வேறு வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  துலுக்கர்களது ஆதிக்கம் அதிகமாக, மதம் மாற்றப் பட்டவர் பிரிக்கப் பட்டனர்.  இதனால், அத்தொழில்-வியாபாரமும் பிரிந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சு, கட்டிடத் தொலை போன்றவை முக்கியமாக பாதிக்கப் பட்டன. தோல் தொழிகளுக்கு முக்கியத்துவம், லாபம் முதலியவை அதிகமானதால் அவற்றில் துலுக்கர் அதிகம் ஈடுபட்டனர். ஆடு-மாடுகள் கொல்லப் படுதல், மாமிசம் உண்ணப் படுதல், தோல் மற்றவை – பிசின், காலணி, இடுப்பு பட்டை மற்ற பொருட்கள் உற்பத்தி செய்ய உபயோகப் படுத்தப் பட்டன. குதிரைப் படை அதிகரிப்பு, ராணுவம் அதிகரிப்பு முதலியவையும் இத்தொழில் ஊக்கம் அதிகமானது.கோவில்கள் இடிக்கப் பட்டு மசூதிகள் கட்டப் படும் நிலைகளில், அத்தொழிலாளிகளும் மாறினர்-மாற்றப் பட்டனர். இவ்வாறாகத்தான் வரி கிடைப்பது மாற்றப் பட்டது. வரிவசூலும் கடுமையானது, கொடுமையானது..

2000களில் கொலை அளவுக்கு சென்ற மடங்களின் துறவிகள்: நித்யானந்தாவின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு[5] தெரிவித்த தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, சங்கர மடங்களின் மடாதிபதிகளும் மதுரை ஆதீன‌ மீட்புக் குழுவினரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அரசின் இந்த வழக்கு பற்றியும் நித்யானந்தாவின் நீக்கம் பற்றியும் இதுவரை கருத்து ஏதும் சொல்லவில்லை என்று சிலர் எடுத்துக் காட்டுகின்றனர். திருவாவ‌டுதுறை பெரிய ஆதீன‌த்தை இளைய ஆதீன‌ம் கொல்ல முயற்சி [2002], சங்கரராமன் கொலை [2004], தாம்பரம் சேலையூர் அகோபில மடத்தில் ஒரு கொலை [2010], இவை சமீபகாலத்து சம்பவங்கள். மடங்கள், கோவில்கள், பிடதி, சாய்பாபா ஆசிரமங்கள் வரை வரலாற்றில் கொலைகள், சூழ்ச்சிக் கவிழ்ப்புகள், ஊழல்கள், முறைகேடுகள், என்று செய்திகள் வந்தன. பகதர்கள் வருத்தப் படுவதை விட, அச்சப்பட்டார்கள். கடவுள் காப்பாற்றவில்லையா என்று திகவினர் மாதிரி நக்கலும் அடிக்க முடியாது[6].

© வேதபிரகாஷ்

26-07-2022


[1]  2021 தேர்தலின் போது, முதலியார்களின் வாக்கு, ஆதரவு பற்றி விவாதிக்கப் பட்டது கவனிக்கத் தக்கது. அரசு பதவி, அதிகாரம், வியாபாரம், என்றெல்லம் ஸ்திரப்படுத்திக் கொண்டப் பிறகு, அரசியலில் ஓரங்கட்டப் பட்டாலும், தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

[2]  கருணாநிதி, வன்னியர்களை, வன்னியர்களைக் கொண்டே ஓட்டுவங்கியைப் பிரித்தார். கட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

[3]  திக-திமுகவினர், விசிகவினர், பாமகவினர் மற்ற கம்யூனிஸ, முற்போக்கு வகையறாக்கள் இதைப் பற்றி கேட்கமாட்டார்கள், பிட்-நோட்டீஸ், குறும்புத்தகங்கள், வீடியோ போட மாட்டார்கள்.

[4]  இந்த சட்ட யுத்தங்கள், நீதிமன்ற போர்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பழைய கோவில்கள் சிதிலமடைந்து மறைந்து கொண்டிருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்து, சண்டைப் போட்டுக் கொள்வதில், சைப்ப் பிரிவினர் ஊக்குவிக்கப் பட்டு வருகிறார்கள்.

[5]  நித்யானந்தா முதலியார் என்று கண்டுபிடிக்கப் பட்டதும், அமுக்கி வாச்க்கப் பட்டது. முதலியார்களின் விசுவசம் போலிருக்கிறது. “நித்தி” என்று தான் கிண்டல் செய்வார்களே தவிய “முதலி” என்று குறிப்பிட்டு பேச்சு-எழுத்து இருக்காது. ஜாதிய செக்யூலரிஸம் அல்லது திராவிட ஜாதியத்துவம் அல்லது ஒட்டு மொத்த பார்ப்பன எதிர்ப்பு என்று விளக்கம் கொடுப்பார்கள் போலும்.

[6]  இதில் ஜெயேந்திர சரஸ்வதி தூஷணம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும், மற்ற விசயங்கள் மறைக்கப் படும். இது பிராமண எதிர்ப்பா, இந்து எதிர்ப்பா என்பதனை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்தது (1)

ஜூன் 6, 2022

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்தது (1)

தமிழக மடாதிபதிகள் இந்து என்ற நிலையில் செயல்பட வேண்டும்: துறவியர் மாநாட்டில், ‘சைவர் இந்துக்கள் அல்லர்” என்று பிரகடனப் படுத்திக் கொண்டவர்களும் கலந்து கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது[1]. விசுவ ஹிந்து  பரிஷத் என்ற பேனரின் அமைப்பின் / கீழ் அவர்கள் குழுமியுள்ளனர், மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் அரசியல் நிர்ணய சானம் மற்றும் இருக்கின்ற சட்டங்களின் படியுள்ள வரையறைகள், நெறிமுறைகள் மீறி அறிக்கைகள் வெளியிடுதல், செயல்படுதல் மறுபடியும் அத்தகைய நிலையை மாற்றிக் கொள்ளுதல் முதலியன அவர்களின் முரண்பாட்டை காட்டுகிறது என்பதில்லாமல், உள்நோக்கம் என்ன, திட்டம் என்ன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆட்சி மாறியதும், அத்தகைய போக்கு காண்பிக்கப் படுகிறதா அல்லது இப்பொழுதைய அரசின் ஒற்றர்களாக வேலை செய்யும் நிலையில் உள்ளார்களா என்றும் நோக்க வேண்டியுள்ளது[2]. துறவியர் என்று சொல்லிக் கொள்வதனால், மடாதிபதிகளாக இருப்பதனால், காவி அணிந்து கொள்வதனால், அவர்கள் துறவியர் என்பதை விட நடந்து கொள்வதில் தான் அவர்களது துறவறம் மற்றும்  துறவியர் குணாதிசயங்கள் தீர்மானிக்கப் படும்.

திராவிடத்து அரசியல் மாறாது (1970-2022): இந்து அறநிலையைத் துறை அமைச்சரும் தினம்-தினம் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.  ஒருவருடத்தில் என்ன நடந்தது, அவர்களின் போக்கு என்ன என்பதனை அறிந்தாகி விட்டது. இவேரா-அண்ணா-கருணாநிதி அழி வந்தவர்கள், அவர்கள் வழியில் தான் ஆட்சி செய்வோன் என்ற பின், அவர்களிடம் , இந்துக்களுக்கு சாதகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக சேகர்பாபு, குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு கோவில்-கோவிலாக சுற்றி வருவார். துர்கா ஸ்டாலினும் தனது பாணியில் செய்து வருவார். யூ-டியூப்புகள், செய்திகள், புகைப் படங்கள் வந்து கொண்டே இருக்கும். கோவில் கொள்ளை, கோவில் நிலம் அபகரிப்பு, கிருத்துவர்-முஸ்லிம் ஆக்கிரமிப்பு-அபகரிப்பு எல்லாம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீதிமன்றங்களுக்கு சென்று முடக்கப் படும். முக்கால்வாசி விவகாரங்கள் கோவிலுள் உள்ளவர்களுக்கேத் தெரியாமல் இருக்கும், அதனால், பொது மக்கள் பற்றி கவலைப் பட வேண்டாம்.

04-06-2022 அன்று திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் அமைச்சர்: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு 04-06-2022 அன்று சென்றிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற அமைச்சர், ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து ஆதீன மடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அமைச்சர் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானம் திறந்து வைத்தனர். பின்னர் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஒரு பகுதியாக ஆதீன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அமைச்சர், அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். அங்கு ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆக, இத்தகைய மரியாதைகள் தொடரும், தொடர்ந்து கொண்டிருக்கும்….. கணக்கில் அமைச்சருக்கு மரியாதை கொடுத்த செலவு என்று எழுதுவார்களா, தணிக்கையாளர்களும் அதைப் பற்றி கேட்பார்களா?

ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்: தொடர்ந்து செய்தியாளர்களை ஆதீன மடாதிபதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சந்தித்தனர்[3]. அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது[4],  “சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும். அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை..”.

இந்து அறநிலையைத் துறை அமைச்சர் தொடர்ந்து பேசியது: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கடையூர் கோயில் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. இதுபோன்ற கோயில்களில் இந்து சமய அறநிலையத்தறை தலையிடவே தலையிடாது. பொது கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்,” என்று தெரிவித்தார். அதாவது, அத்தகைய போர்வைகளின் நுழைவுகள், தொந்தரவுகள், இடையூறுகள், இருந்து கொண்டே இருக்கும். இந்து அறநிலையச் சட்டம் இருக்கும் வரையில், அது தொடரத்தான் செய்யும். விபூதி-குங்குமம் கொடுக்கலாம்-பூசலாம், அவர்கள் கீழே கொட்டி விடுவார்கள் அல்லது அழித்து விடுவார்கள்.

04-06-2022ல் மதுரையில் துறவியர் மாநாடு துவங்கியது: விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,), அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் 2 நாட்கள் துறவியர் மாநாடு மதுரை பரவை ஆகாஷ் பேமிலி கிளப்பில் நேற்று துவங்கியது. விசேஷ ேஹாமங்கள், பூர்ணாஹூதி, கோபூஜை, கொடியேற்றம், துறவிகளுக்கு பாத பூஜை நடந்தது.சிறப்பு விருந்தினர்களை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் அறிமுகம் செய்தார். வரவேற்புக்குழு செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். ”வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுஉள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன். இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்,” என மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் மதுரை ஆதினம் பேசினார். வி.எச்.பி., அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன் பேசியதாவது: “பாரத தேசத்தில் புராண காலத்திலிருந்து தவத்தால் சமூகத்தை நல்வழிப்படுத்துபவர்கள் ரிஷிகள். தெய்வீக தமிழகமாக இருந்தது இன்று திசை மாறுகிறது. தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க உள்ளோம். அதற்கான வேலையைச் செய்ய வேண்டும். அப்பணியை சிவபெருமான் பாதம் பட்ட மண், பிட்டுக்கு மண் சுமந்த இடம், திருஞான சம்பந்தர் மதமாற்றத்தில் ஈடுபட்ட மதுரையிலிருந்து துவக்குகிறோம்,” என்றார்.

விபூதி அழிப்புபற்றி எடுத்துக் காட்டியது: மதுரை ஆதினம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி தலைமை வகித்து பேசியதாவது[5]: மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மசூதிகள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் கோயில்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இவற்றை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதியை பூச மாட்டோம் என்கின்றனர். கோவையில்  நடந்த செம்மொழி மாநாட்டில் ஒரு அமைச்சருக்கு விபூதி பூசப்பட்டது. அதை அவர் பின் அழித்துவிட்டார். இதைக் கேட்டால் என்னை சங்கி, மங்கி என்கின்றனர். நான் சங்கியும் இல்லை; மங்கியும் இல்லை. சமயத்திற்காக பாடுபடுகிறேன்[6]. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன்[7]. இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார்[8]. நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்.ஹிந்து கடவுள்களை சிலர் விமர்சிக்கின்றனர். மாற்று சமயம் பற்றி சினிமாவில் ஒரு காட்சி வந்தால் அதற்கு எதிராக உடனே எதிர்வினையாற்றுகின்றனர்.

© வேதபிரகாஷ்

06-06-2022


[1]  விவரங்களை . சைவ மாநாடுகள் நடந்தது, தீர்மானங்கள் போட்டது, சரவணனின் பேச்சுகள் முதலியன – என்னுடைய பிளாக்குகளில் பார்க்கலாம்.

[2]  விவரங்களை திராவிடத்து அரசியல்வாதிகள், திராவிடத்துவ வாதிகளுக்கு தெரிவிக்கப் படுவது………மிகச் சுலபம்…..

[3] புதிய.தலைமுறை, ஆதீன பாரம்பரியங்களில் இந்து அறநிலையத் துறை தலையிடாது’- அமைச்சர் தகவல், தமிழ்நாடு,    Jnivetha Published :05, Jun 2022 07:40 AM.

[4] https://www.puthiyathalaimurai.com/newsview/140664/Chidambaram-Natarajar-temple-is-not-planned-to-be-taken-over-by-the-charitable-department

[5] தினமலர், மதுரை ஆதினம் பாடிய தேவாரம் கேட்டு கண்ணீர்விட்ட பிரதமர் : மதுரை துறவியர் மாநாட்டில் தகவல், Added : ஜூன் 05, 2022  08:05

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3046149

[7] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரை ஆதீனம் பாடிய தேவாரம்.. மெய் மறந்து கேட்ட பிரதமர் மோடி.. கண்ணீர் விட்ட நெகிழ்ச்சி சம்பவம், By Vishnupriya R Published: Sunday, June 5, 2022, 10:48 [IST]

[8] https://tamil.oneindia.com/news/madurai/pm-narendra-modi-shed-tears-after-madurai-aathinam-sang-devaram-460979.html

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு – கவனிக்க வேண்டியது (1)

மே 4, 2022

பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு கவனிக்க வேண்டியது (1)

மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு: மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் திராவிட ஆட்சி நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், முதன் முதலாக, சைவ மடாதிபதியிடமிருந்து, மிக்க ஆழமான, செருமை மிக்க, ஆன்மீகத் தன்மை, மதப் பொறுப்பு, சமய உணர்வு என்றெல்லம் கொண்டு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவரது பேச்சில், ஒவ்வொரு வாத்தையில், வரியில், இப்பொழுதுள்ள அரசின் போக்கை எடுத்துக் காட்டி, கண்டித்துள்ளார். மடாதிபதிகள் முதலமைச்சருடன் பேசிய சில நாட்களில் இத்தகைய தடை அறிவித்திருப்பது, எத்தகைய மடமை என்பதனையும் எடுத்துக் காட்டியுள்ளார். இந்த இந்துவிரோத அரசைத் தட்டிக் கேட்டுள்ள தொணியும் மறைமுகமாக வெளிப்படுகிறது. ஒரு மடாதிபதியே, இந்த அளவுக்கு எடுத்துக் காட்டியுள்ளது, பெரியாரிஸம் பேசிக் கொண்டு, ஆன்மீகப் போர்வையில், திராவிடியன் ஸ்டாக், மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, இந்துக்களை பாதித்து வருவதும் தெளிவாக வெளிப்படுகிறது.

தமிழக இந்துக்களின் பாதிக்கப் படும் நிலைகள்: உண்மையில், தமிழகத்தில், இந்துக்கள், “இந்துக்களாக” இருந்து கொண்டு, அமைதி, சத்தியம் மற்றும் அஹிம்சை போன்ற கொள்கைகளைப் பேணி வருகிறார்கள் என்றும் தெரிகிறது. ஒவ்வொரு நாள், வார, மாத, பருவ மற்றும் ஆண்டு விரதம், பண்டிகை, சடங்கு, கிரியை முதலியவற்றை பெருமான்மையான மக்கள் விடாமல் எய்து வருவதால் தான் சமூகம் நிலைத்து நிற்கின்றது. மேலே-மேலே மக்களின் மீது கெட்டது, தீயது, ஒவ்வாதது, எதிர்மறையானது என்று பல மக்களின் மீது கடந்த 60 ஆண்டுகளாகத் திணிக்கப் பட்டு வருவதால், இன்றைய 2022 சமூகம், பெருமளவில் சமூக சீரழிவுகள், குடும்பப் பிரச்சினைகள், தனிமனித ஒழுங்கீனம் முதலியவை அதிகமாகி, குற்றங்கள், வன்மம், வன்முறை முதலியவை தினம்-தினம் நடக்கும் செயல்களாக மாறி விட்டன. இவற்றை முதலமைச்சர் மறந்து, விளம்பர அரசியல் மூலம் தட்டிக் கழிக்க முடியாது. திட்டங்கள் அறிவிப்பு, கல்வெட்டுகள் வைத்து ஆரம்ப / திறப்பு விழாக்கள் என்றெல்லாம் நடத்துவது 60 ஆண்டுகளாக மக்கள் பார்த்து வருகின்றனர். அவற்றில் பாதிக்கு மேல் கல்வெட்டுகளாகவே இருந்து மறைந்து விடுகின்றன. மற்ற திட்டங்கள் மாறி-மாறி ஆட்சிக்கு எற்றமுறை உருமாறி வருகின்றன.

மத்திய அரசு மோதல் கவனர் மோதல் முதலியவை அரசியலாக்கப் பட்டு இணைக்கப் படுகிறதா?: இனி இப்பிரச்சினை எப்படி எழுந்ததது என்பதனை பார்ப்போம். திராவிடர் கழகம் சார்பில் இந்த “பல்லக்கு ஊர்வலம்” நடத்தப் படக் கூடாது என்று புகார் கொடுத்தது. உடனே, அதைப் பற்றி நடவடிக்கை எடுக்கப் பட்டு, போலீஸார் மற்றும் கோட்டாட்சி அதிகாரிகள் வேலை செய்ய ஆரம்பித்தனர்.

  • வாராந்திர கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், கோட்டாட்சியர் முதலியோர் இப்பிரச்சினைப் பற்றி பேசி 06-4-2022 அன்று துணை கண்காணிப்பாளர் அறிக்கைக் கொடுத்துள்ளார் (The Report of Mayilathurai Sub-Inspector – C.No.222/SDO-M/V/2022 dated 06-04-2022).
  • இதன் ஆதாரமகக் கொண்டு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் “பட்டின பிரவேசம்” நிக்ழ்வை தடை செய்து, ஆணை பிறப்பித்தார்.
  • 27-04-2022 அன்று ஸ்டாலின் மடாதிபதிகளை சென்னையில் சந்திக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆன்மிக அரசு என ஆதீனங்கள் புகழாரம் சூட்டினர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.
  • மயிலாடுதுறை கோட்டாட்சியரின் ஆணை தேதி 27-04-2022 என்றுள்ளது (Mayilathurai Administrative and Revenue Division order ந.க.1210/2022/ஆ.1 நாள்: 27-04-2022).
  • ஆனால், இந்த அறிக்கை ஆதீன மடத்திற்கு 02-05-2022 அன்று தெரிவித்தார் / அனுப்பப் பட்டது என்றுள்ளது (The Order communicated to the Adheenam by J. Balaji on 02-05-2022).
  • 27-04-2022 அன்று ஆதீனங்கள்-ஸ்டாலின் சந்திப்பு மற்றும் போலீஸாரின் பல்லாக்கு-தடை தீர்மானம், நடந்துள்ளதை கவனிக்கலாம்.
  • இதற்குள் கவர்னர் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை நகரங்களுக்கு வந்து விழாக்களில் கலந்து கொண்டுள்ளார்: இதற்கே, திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கவர்னர் கூட்டம் – TN Governor at the Annamalai University –Review – 17-04-2022
  • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு – TN Governor at the Annamalai University convocation – 18-04-2022. இவற்றையெல்லாம் யாரும் தடுக்க முடியாது.
  • கவர்னர் மயிலாடுதுறைக்கு வருகிறார், கருப்புக் கொடிகள் காட்டப் பட்டு, கொம்புகள் வீசப் படுகின்றன – TN Governor’s visit to Mayiladthurai 19-04-2022
  • கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதுகிறார் – Governor’s security officer letter dated 19-04-2022 to the IG Police, TN.
  • கவர்னர் துணைவேந்தர்கள் கருத்தரங்கத்தில் ஊட்டியில் கலந்து கொள்கிறார் – TN Governor at Ooty – two day Education seminar – 23-04-2022

இவ்விவரங்கள், ராஜ்பவன் அறிக்கைகளில் காணக்கிடைக்கிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது யார்?: இவையெல்லாம் தற்செயலாக நடந்த செயல்களாகத் தெரியவில்லை. கவர்னர் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்றால், ஸ்டாலின் அரசு அதற்கு மேல் கில்லாடியாக விசயங்களை அறிந்து வேலை செய்துள்ளது. அதாவது, திமுக விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளார்கள் என்று தெரிகிறது. சன் – குழுமம் மற்றும் கட்டுக்குள் உள்ள மீடியாக்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 2022ல் ஒரு திட்டத்துடன் கவர்னரை எதிர்ப்பது, பிரச்சினை உண்டாக்குவது என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வந்தது அப்பட்டமாகவே தெரிந்தது. இங்கு, மயிலாடுதுறைக்கு கவர்னர் வருவது தெரிந்து, திராவிட கட்சியினர், சார்புடைய அரசு அதிகாரிகள் செயல்பட்டது போல தோன்றுகிறது. அரசியல் ரீதியில் கட்சிகள் மற்ற லாபங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம், ஆனால், அரசியல் நிர்ணய சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். பல்கலைக் கழகங்கள், மடங்கள், கோவில்கள் முதலியவற்றில் தலையிட்டு, அரசியலாக்கக் கூடாது. மேலும், கடந்த 60 ஆண்டுகளில் இவற்றில் அரசியல் தலையீடுகளால், ஊழல் தான் மலிந்து அதிகமாகியுள்ளது. ஆனால், ஊழலை எதிர்த்து இக்கும்பல்கள், கட்சிகள் ஆர்பாட்டங்கள் நடத்துவதில்லை.

திராவிடர் கழகத்தின் புகார் பெயரில், போலீஸார் ஆணையின் படி, கோட்டாட்சியர் 27-04-2022 அன்று தடை விதித்தது: இந்த ஆண்டு இந்த மாதம் (மே) 22-ந் தேதி பட்டின பிரவேசம் விழா நடைபெற உள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு அந்தப் பகுதியின் கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மனிதனை மனிதன் சுமக்க கூடாது என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையின்பேரில், பல்லக்கு தூக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் புகார் அளித்தால், எவ்வாறு மடத்தின் சம்பிரதாய நிகழ்வுகளை தடுப்பது முதலியன செய்ய முடியும் என்று தெரியவில்லை. இந்த நிலையில், இது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி அளித்தார்.

03-05-2022 அன்று மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியது: அப்போது அவர், “நான் தருமபுர ஆதீனத்தில்தான் படித்தேன். தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். பட்டினப் பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பர்யம். 500 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பர்யத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. முதல்வர் ரகசிய காப்பு எடுப்பதை கூடாது என சொல்வது போல தான் பட்டினபிரவேச நிகழ்ச்சியை கூடாது என சொல்வது. வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர் காலத்தில்கூட இந்த நிகழ்வு நடந்தது. இதற்கு ஏன் தற்போது தடை விதிக்க வேண்டும். தருமபுர ஆதீன மடத்துக்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணமாகும். பாரம்பர்ய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்[1]. முதல்வர் இந்த நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை விடுக்கிறேன்[2].

© வேதபிரகாஷ்

04-05-2022


[1] விகடன், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்!” – மதுரை ஆதீனம், சாலினி சுப்ரமணியம், Published:Today at 2 PM; Updated:Today at 3 PM.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/madurai-adheenam-press-meet-about-dharmapuram-aadeenam-issue