Posts Tagged ‘இந்து துறவியர்’

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்தது (1)

ஜூன் 6, 2022

இந்து துறவியர் மாநாடு ஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில் மதுரையில் நடந்தது (1)

தமிழக மடாதிபதிகள் இந்து என்ற நிலையில் செயல்பட வேண்டும்: துறவியர் மாநாட்டில், ‘சைவர் இந்துக்கள் அல்லர்” என்று பிரகடனப் படுத்திக் கொண்டவர்களும் கலந்து கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது[1]. விசுவ ஹிந்து  பரிஷத் என்ற பேனரின் அமைப்பின் / கீழ் அவர்கள் குழுமியுள்ளனர், மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் அரசியல் நிர்ணய சானம் மற்றும் இருக்கின்ற சட்டங்களின் படியுள்ள வரையறைகள், நெறிமுறைகள் மீறி அறிக்கைகள் வெளியிடுதல், செயல்படுதல் மறுபடியும் அத்தகைய நிலையை மாற்றிக் கொள்ளுதல் முதலியன அவர்களின் முரண்பாட்டை காட்டுகிறது என்பதில்லாமல், உள்நோக்கம் என்ன, திட்டம் என்ன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆட்சி மாறியதும், அத்தகைய போக்கு காண்பிக்கப் படுகிறதா அல்லது இப்பொழுதைய அரசின் ஒற்றர்களாக வேலை செய்யும் நிலையில் உள்ளார்களா என்றும் நோக்க வேண்டியுள்ளது[2]. துறவியர் என்று சொல்லிக் கொள்வதனால், மடாதிபதிகளாக இருப்பதனால், காவி அணிந்து கொள்வதனால், அவர்கள் துறவியர் என்பதை விட நடந்து கொள்வதில் தான் அவர்களது துறவறம் மற்றும்  துறவியர் குணாதிசயங்கள் தீர்மானிக்கப் படும்.

திராவிடத்து அரசியல் மாறாது (1970-2022): இந்து அறநிலையைத் துறை அமைச்சரும் தினம்-தினம் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.  ஒருவருடத்தில் என்ன நடந்தது, அவர்களின் போக்கு என்ன என்பதனை அறிந்தாகி விட்டது. இவேரா-அண்ணா-கருணாநிதி அழி வந்தவர்கள், அவர்கள் வழியில் தான் ஆட்சி செய்வோன் என்ற பின், அவர்களிடம் , இந்துக்களுக்கு சாதகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக சேகர்பாபு, குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு கோவில்-கோவிலாக சுற்றி வருவார். துர்கா ஸ்டாலினும் தனது பாணியில் செய்து வருவார். யூ-டியூப்புகள், செய்திகள், புகைப் படங்கள் வந்து கொண்டே இருக்கும். கோவில் கொள்ளை, கோவில் நிலம் அபகரிப்பு, கிருத்துவர்-முஸ்லிம் ஆக்கிரமிப்பு-அபகரிப்பு எல்லாம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீதிமன்றங்களுக்கு சென்று முடக்கப் படும். முக்கால்வாசி விவகாரங்கள் கோவிலுள் உள்ளவர்களுக்கேத் தெரியாமல் இருக்கும், அதனால், பொது மக்கள் பற்றி கவலைப் பட வேண்டாம்.

04-06-2022 அன்று திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் அமைச்சர்: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு 04-06-2022 அன்று சென்றிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற அமைச்சர், ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து ஆதீன மடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அமைச்சர் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானம் திறந்து வைத்தனர். பின்னர் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஒரு பகுதியாக ஆதீன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அமைச்சர், அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். அங்கு ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆக, இத்தகைய மரியாதைகள் தொடரும், தொடர்ந்து கொண்டிருக்கும்….. கணக்கில் அமைச்சருக்கு மரியாதை கொடுத்த செலவு என்று எழுதுவார்களா, தணிக்கையாளர்களும் அதைப் பற்றி கேட்பார்களா?

ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்: தொடர்ந்து செய்தியாளர்களை ஆதீன மடாதிபதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சந்தித்தனர்[3]. அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது[4],  “சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும். அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை..”.

இந்து அறநிலையைத் துறை அமைச்சர் தொடர்ந்து பேசியது: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கடையூர் கோயில் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது. இதுபோன்ற கோயில்களில் இந்து சமய அறநிலையத்தறை தலையிடவே தலையிடாது. பொது கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்,” என்று தெரிவித்தார். அதாவது, அத்தகைய போர்வைகளின் நுழைவுகள், தொந்தரவுகள், இடையூறுகள், இருந்து கொண்டே இருக்கும். இந்து அறநிலையச் சட்டம் இருக்கும் வரையில், அது தொடரத்தான் செய்யும். விபூதி-குங்குமம் கொடுக்கலாம்-பூசலாம், அவர்கள் கீழே கொட்டி விடுவார்கள் அல்லது அழித்து விடுவார்கள்.

04-06-2022ல் மதுரையில் துறவியர் மாநாடு துவங்கியது: விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,), அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் 2 நாட்கள் துறவியர் மாநாடு மதுரை பரவை ஆகாஷ் பேமிலி கிளப்பில் நேற்று துவங்கியது. விசேஷ ேஹாமங்கள், பூர்ணாஹூதி, கோபூஜை, கொடியேற்றம், துறவிகளுக்கு பாத பூஜை நடந்தது.சிறப்பு விருந்தினர்களை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் அறிமுகம் செய்தார். வரவேற்புக்குழு செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். ”வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுஉள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன். இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்,” என மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் மதுரை ஆதினம் பேசினார். வி.எச்.பி., அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன் பேசியதாவது: “பாரத தேசத்தில் புராண காலத்திலிருந்து தவத்தால் சமூகத்தை நல்வழிப்படுத்துபவர்கள் ரிஷிகள். தெய்வீக தமிழகமாக இருந்தது இன்று திசை மாறுகிறது. தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க உள்ளோம். அதற்கான வேலையைச் செய்ய வேண்டும். அப்பணியை சிவபெருமான் பாதம் பட்ட மண், பிட்டுக்கு மண் சுமந்த இடம், திருஞான சம்பந்தர் மதமாற்றத்தில் ஈடுபட்ட மதுரையிலிருந்து துவக்குகிறோம்,” என்றார்.

விபூதி அழிப்புபற்றி எடுத்துக் காட்டியது: மதுரை ஆதினம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி தலைமை வகித்து பேசியதாவது[5]: மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மசூதிகள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் கோயில்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இவற்றை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதியை பூச மாட்டோம் என்கின்றனர். கோவையில்  நடந்த செம்மொழி மாநாட்டில் ஒரு அமைச்சருக்கு விபூதி பூசப்பட்டது. அதை அவர் பின் அழித்துவிட்டார். இதைக் கேட்டால் என்னை சங்கி, மங்கி என்கின்றனர். நான் சங்கியும் இல்லை; மங்கியும் இல்லை. சமயத்திற்காக பாடுபடுகிறேன்[6]. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன்[7]. இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார்[8]. நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்.ஹிந்து கடவுள்களை சிலர் விமர்சிக்கின்றனர். மாற்று சமயம் பற்றி சினிமாவில் ஒரு காட்சி வந்தால் அதற்கு எதிராக உடனே எதிர்வினையாற்றுகின்றனர்.

© வேதபிரகாஷ்

06-06-2022


[1]  விவரங்களை . சைவ மாநாடுகள் நடந்தது, தீர்மானங்கள் போட்டது, சரவணனின் பேச்சுகள் முதலியன – என்னுடைய பிளாக்குகளில் பார்க்கலாம்.

[2]  விவரங்களை திராவிடத்து அரசியல்வாதிகள், திராவிடத்துவ வாதிகளுக்கு தெரிவிக்கப் படுவது………மிகச் சுலபம்…..

[3] புதிய.தலைமுறை, ஆதீன பாரம்பரியங்களில் இந்து அறநிலையத் துறை தலையிடாது’- அமைச்சர் தகவல், தமிழ்நாடு,    Jnivetha Published :05, Jun 2022 07:40 AM.

[4] https://www.puthiyathalaimurai.com/newsview/140664/Chidambaram-Natarajar-temple-is-not-planned-to-be-taken-over-by-the-charitable-department

[5] தினமலர், மதுரை ஆதினம் பாடிய தேவாரம் கேட்டு கண்ணீர்விட்ட பிரதமர் : மதுரை துறவியர் மாநாட்டில் தகவல், Added : ஜூன் 05, 2022  08:05

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3046149

[7] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரை ஆதீனம் பாடிய தேவாரம்.. மெய் மறந்து கேட்ட பிரதமர் மோடி.. கண்ணீர் விட்ட நெகிழ்ச்சி சம்பவம், By Vishnupriya R Published: Sunday, June 5, 2022, 10:48 [IST]

[8] https://tamil.oneindia.com/news/madurai/pm-narendra-modi-shed-tears-after-madurai-aathinam-sang-devaram-460979.html