Posts Tagged ‘நடனம்’

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழி வெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள்- – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (3)

ஏப்ரல் 9, 2023

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழிவெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள்- – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (3)

கலைக்கூடமா, கலவிக் கூடமா?: கலைக்கூடமா, கலவிக் கூடமா? இப்படியெல்லாம் தலைப்பிட்டு செய்திகள். அப்படியென்றால் இவர்களின் இலக்கு யார்? இவர்கள் உண்மையிலேயே கலையில், கலையில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிப்பதாக இருந்தால், அத்தகைய பெண்களின் புகைப் படங்களை ஒழுங்காக வெளியிடுவார்களா? அவ்வாறு கலவிக் கூடம் எனும் பொழுது, இங்கு படிக்கும் எல்லா மாணவியரையும் அவதூறு பேசுவது ஆகாதா? ஆக, இதில் யாரைத் தாக்குகிறார்கள் என்று தெரிந்தே, யாரையோ தாக்குகிறார்களா? லாஜிக்கே இல்லாமல், இவ்வாறு செய்து, தமது பிராமண துவேசத்தை வெளிப் படுத்திக் கொள்கிறார்களா? ஒருவேளை “திராவிட மாடலில்” இவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள், செய்தி வெளியிடுவார்கள் போலும்!

மூடி மறைக்கும் பார்ப்பனர்கள்! ஆக, இப்படி பார்ப்பனர்களையும் இழுத்தாகி விட்டது!: ஒரு பக்கம் மலையாளிகளின் ஆதிக்கம், ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல், என்றெல்லாம் அளந்து, பார்ப்பனர்களையும் சேர்ந்து அடைந்துள்ளது! பிறகு, பார்ப்பனர் அல்லாதவர்களின் கதை என்னவோ?

  • பார்ப்பன லாபி!
  • யார் அந்த பார்ப்பன லாபியில் இருக்கிறார்கள்?
  • பெயர்கள், விவரங்கள் தர முடியுமா?

குற்றவாளிகளுக்கு உடந்தை என்று அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாமே? தினம்-தினம் யூ-டியூப்புகள் வந்து கொன்டிருக்கின்றன. வரும் செய்திகளைத் தொகுத்து, தமது பிராமண வெறுப்பைக் கக்கி கொன்டிருக்கின்றன. ஏதோ பார்ப்பனர்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் போன்ற பேச்சுகள், விளக்கங்கள்….ஶ்ரீதேவி என்ற பெண்மணியின் வீடியோக்கள் இந்திய அரசே பார்ப்பனியமயமாகப் பட்டு விட்டது என்று திகவை விட 1000 மடங்கு அதிகமாக கதை விடுகிறார். பொழுது போக்கிற்காக, இதைப் பார்த்து மறந்து விடுவர். இருப்பினும், சித்தாந்த ரீதியில், இப்படி யாரோ தயார் செய்து அரங்கேற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், இதெல்லாம் ஒரு தரப்பு பொய்யான-பிரச்சார ரீதியிலான பேச்சுகள். யூ-டியூப் பிரச்சாரம் இப்பொழுது பொழ்து போக்கிற்காக உள்ளது. செல்போனில் பார்ப்பதால், அதிக “வியூவ்ஸ்” கிடைக்கிறது என்று அள்ளி வீசுகின்றனர். இவர்களுக்கு உண்மை, பொறுப்பு, சமூக அமைதி முதலியவற்றைப் பற்றி கவலை இல்லை.

மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணுவும், காமக்ஷேத்ரமும்:  “காமக்ஷேத்ரவான கலாக்ஷேத்ரா!” என்று அட்டைப் படம் போட்டு, “”நக்கீரன்” விற்கிறது. “பார்ப்பன” டுவிஸ்ட் செய்யலாம் என்றால் கோபாலனுக்கு சந்டோச தான். பார்ப்பன துவேச ரீதியில் இத்தகைய இணைத்தளப் பதிவுகளும் வெளியாகியுள்ளன[1]. “அறம்” என்ற பெயர் இருந்தாலும், அதிலும் பார்ப்பன காழ்ப்பு இருக்கத்தான் செய்திறது[2]. லீலா சாம்சன் டுவிட்டர் பதிவு ஆரம்பித்து, ஒரு கதையைச் சொல்லி, பார்ப்பன கோணத்தில் திரிபு விளக்கம் கொடுத்து வீடியோவையும் போட்டாகி விட்டது. நக்கீரனுக்கு, கோபாலனுக்கு, “பார்ப்பனரான” இந்து-ராம் ஆதரவு கொடுப்பது தெரிந்த விசயம். “ஜார்னலிஸ்டிக்-எதிக்ஸ்” பேசும் என்.ராமுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? இருப்பினும் “என்.ராம்” போன்றவர்கள் ஆதரவு தருகின்றனர் என்றால், அனைத்தையும் மீறி, ஏதோ ஒன்று அவர்களை பிணைத்துள்ளது என்று தெரிகிறது. ஆமாம், அவர் வீட்டுப் பெண்ணைத் தான் தயாநிதி மாறன் கல்யாணம் செய்துக் கொண்டிருக்கிறார். “சாவிப்’ பிரச்சினை எல்லாம் இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. மாமனார் “மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணு” என்று நக்கல் அடித்தாலும், மறுமகள் கண்டுகொண்டதில்லை. அதைத்தான் முதலில் “இந்துத்துவ வாதிகள்” வெளிப்படுத்த வேண்டும்.

இந்துத்துவ வெறுப்பு பார்ப்பன வெறுப்பாகி, பிராமண துவேஷமாவதேன்?: வழக்கம் போல,ஆர்-எஸ்-எஸ்- எதிர்ப்பு, பிஜேபி-எதிர்ப்பு, இந்துத்துவ-எதிர்ப்பு, அவாள்- எதிர்ப்பு, பார்ப்பன- எதிர்ப்பு என்றெல்லாம் பதிவுகள் போட்டு, இந்து-விரோத, இந்து-துவேஷ, இந்து-தூஷணங்களில் முடிந்து விடும். அத்தகையோரையும் கண்டு கொள்ளலாம்! “வினவு” போன்ற இந்துவிரோத தளங்கள் விஷத்தைக் கக்குவது தெரிந்த விசயம் தான்[3]. ஏனெனில், அங்கும் அதே ஃபார்புலா தான் பின்பற்றப் படுகிறது[4]. அதாவது, பார்ப்பனத் திரிபு விலக்கத்தை வைத்து, கதையை உருவாக்கி, செய்தியாக்குவது[5]. பிறகு மற்ற ஜாதியினரின் ஆதிக்கம், செல்வாக்கு, முதலியவை வரும்பொழுது, வியாபாரம் கருதி, அமைதியாவது, சரண்டாராகுவது என்று முடிவதும் சகஜமாகிறது[6]. இருப்பினும், அந்த பார்ப்பன தூவேஷப் பதிவு நிலைத்திருக்கும். வேண்டும் என்றால் பிராமணர்களை முக்கியமான வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள். ஆனால், வெளியில் அவர்களை வசைப் பாடுவார்கள். இது “சன்’ குழுமத்திலேயே கவனிக்கலாம்.

பார்ப்பனிய வாதமும், குஷ்பு பதிலும்: இந்நிலையில் ட்விட்டரில் ரத்தினவேலு வசந்தா என்ற பெயரில் செயல்படும் ஒருவர், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை டேக் செய்து, ‛‛இன்று வீட்டு கடனுக்கான வட்டி அதிகமாகியுள்ளது. கலாசேத்ராவில் பார்ப்பன ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவை எதிர்த்து மாணவிகள் போராடுகின்றனர். மகளிர் ஆணைய உறுப்பினர் ஆன நீங்கள் என்ன செய்கிறீர்கள்,” என கேள்வி எழுப்பியதோடு மேலும் சில வார்த்தைகளை காட்டமாக தெரிவித்து இருந்தார்[7]. இதற்கு உடனடியாக குஷ்பு பதிலடி கொடுத்தார். அதாவது, ‛‛நீங்கள் எவ்வளவு விரக்தியில் இருக்கிறீர்கள். முதல்வர் உங்களுக்கு ஏதாவது வேலை ஒதுக்கீடு செய்ய வண்டும். நீங்கள் கேள்விகள் கேட்பதற்கு முன்பு சட்டம் அல்லது தேசிய மகளிர் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் வயதுக்கு மரியாதை உண்டு. அதுவும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். dravidan Stockகளிடம் இருந்து சில சிறந்த உணர்வுகளை எதிர்பார்ப்பது என்பது என் மீதான தவறு தான். உங்களிடம் இருந்து சிலவற்றை கற்று கொள்ள வேண்டியுள்ளது. உங்களை போல் நானும் சொன்னால் அது அவமரியாதையாக இருக்கும். எனவே கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என கூறுகிறேன்,” என விமர்சனம் செய்திருந்தார்[8].

லாஜிக்கே இல்லாத வாத-விவாதங்கள் தொடர்கின்றன, அரங்கேறுகின்றன: லாஜிக்கே இல்லாத அதாவது தர்க்கத்தில் காரணம், நியதி, முறை, உண்மை, ஏற்புடைத் தன்மை என்று எதையும் பின்பற்றாமல், வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன:

  • பிராமணரை எதிர்க்கவில்லை, பிராமணத்துவத்தை எதிர்க்கிறோம்
  • இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்
  • இந்துக்களை எதிர்க்கவில்லை, எங்கள் கட்சியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள்.
  • சனாதனத்தை வேரறுப்போம், இந்துத்துவத்தை கருவறுப்போம் என்றால் குற்றமில்லையா?
  • மத்திய அரசை வெறுக்கிறோம், ஒன்றியத்தை ஆதரிக்கிறோம்.
  • திராவிட இனம், இனத்துவம், முதலியவற்றை நம்புவோம் என்றால், திராவிட இனவெறி, இனவெறித்துவ செயல்பாடுகள் முதலியவற்றை ஆதரிப்பது எப்படி?

இதில் ஏதோ பெரிய லாஜிக் இருப்பது போல பேசுகிறார்கள், ஆனால், இவையெல்லாம் ஒன்றுமே இல்லாத, அர்த்தமற்ற, அபத்தமான வெற்றுப் பேச்சுகள் தாம்.

  1. எக்ஸை ஆதரிக்கிறோம், ஆனால் அதன் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம்
  2. எக்ஸை போற்றுகிறோம், ஆனால், அதன் அடிப்படைவாதத்தை வெறுக்கிறோம், அதனால் கருவறுப்போம்.
  3. எக்ஸை ஆதரிக்கிறோம், ஆனால் அதன் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்

என்று சொல்ல மாட்டார்கள், ஏனெனில், அவர்களுக்கு உண்மை எது, பொய்மை எது என்பது. பிறகு அவ்வாறு பேச வேண்டிய அவசியம் என்ன? மக்களை ஏமாற்ருவதர்குத் தான்.

© வேதபிரகாஷ்

09-04-2023


[1] அறம், கலாஷேத்திராவா? காமஷேத்திராவா?, -சாவித்திரி கண்ணன், April 2, 2023

[2] https://aramonline.in/12972/kalakshetra-student-protest/

[3] வினவு, கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம், By மக்கள் அதிகாரம் -April 1, 2023

[4] https://www.vinavu.com/2023/04/01/arrest-kalakshetra-management-peoples-power-condemnation/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கலாஷேத்ரா..தவறான தகவல் பரப்பாதீர்கள்..கூடுதல் ஆணையர் வேண்டுகோள்..மாநில மகளிர் ஆணைய தலைவர் விசாரணை, By Jeyalakshmi C, Published: Friday, March 31, 2023, 11:46 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/don-t-spread-wrong-information-about-kalakshetra-says-chennai-additional-commissioner-of-police-505302.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, வயதுக்கு தான் மரியாதை.. ட்விட்டரில் திடீரென டென்ஷனான நடிகை குஷ்பு.. கடும் விமர்சனம்.. என்னாச்சு? By Nantha Kumar R Updated: Friday, March 31, 2023, 20:34 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/actress-and-ncw-member-khushbu-attacks-who-trolled-her-on-the-row-of-kalakshetra-harassment-issue-505385.html

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழி வெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள் – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (2)

ஏப்ரல் 9, 2023

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழிவெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள் – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (2)

கேரள ஆதிக்கம் என்று ஆரம்பித்து ஆர்.எஸ்.எஸ் என்று முடித்தது: இவர்களுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாது. இவர்களை கேட்டுத்தான் இயக்குநர் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். மீட்டிங் நடத்தினால் கூட இவர்கள் மட்டுமே பேசுவார்கள். இவர்கள்தான் முடிவை சொல்வார்கள். அதை ஆமாம் போட்டு விட்டு அனைவரும் செல்ல வேண்டும் என்பதுதான் ரேவதி ராமச்சந்திரனின் எழுதப்படாத உத்தரவாகவே இருந்தது. இந்த தற்காலிக நிறுவனம்தான் சென்னையில் மட்டுமல்ல வெளிமாநிலங்களில் நடத்தும் நடனம், பாட்டு என அனைத்து போட்டிகளையும் நடத்தும். இவர்கள்தான் நிதியை கையாளுவார்கள். அதில்தான் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் ரேவதி ராமச்சந்திரனின் கணவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருப்பதால், இயக்குநரை யாரும் கேள்வி கேட்க முடியாது.

வாய்ப்பை காட்டி வலை விரிப்பு: இதனால் ஆண் ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெண் ஆசிரியர்களும் பணத்தை போட்டிகள் என்ற பெயரில் சுரண்ட ஆரம்பித்தனர். பல ஆண்டுகாலமாக இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல்களை செய்யத் தொடங்கினர். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் நடனத்திற்கோ, போட்டிகளுக்கோ அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தைகளை கூறித்தான் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். பல இடங்களில் விஐபிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களுடன் தனியாக சந்திப்புக்கும் ஏற்பாடுகளை இவர்கள் செய்து கொடுத்துள்ளனர். தாங்கள் சொன்னபடி நடந்தால்தான், இதுபோன்ற வாய்ப்புகளை வாங்கித் தருவோம் என்று ஹரிபத்மன், சாய்கிருஷ்ணன், ஸ்ரீநாத், சஞ்சித் லால் ஆகியோர் கூறியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

பொதுவாக குறை கூறி கதையைத் திசைத் திருப்பும் போக்கு: இதுகுறித்து ஆசிரியைகளிடம் மாணவிகள் புகார் செய்தபோது, அவர்கள் தட்டிக் கேட்பதற்கோ, அல்லது மாணவிகளுக்கு ஆதரவாகவோ செயல்படாமல், புகார்கள் கொடுக்கும் மாணவிகளை மிரட்டவும் தொடங்கினர். விஷயம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் பணிகளை பெண் ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டனர். இதற்கு காரணம், அவர்கள் பணம் சுருட்டுவதை ஆண் ஆசிரியர்கள் கேட்பதில்லை. இதனால் நமக்கான பங்கு போய்விடும், வருமானம் போய்விடும் என்று கருதி, மாணவிகளுக்கு என்ன ஆனால், எங்களுக்கென்ன என்று இருந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இயக்குநரின் ஆதரவு, பணம், பணத்துக்காக துணை போகும் ஆசிரியைகள் என்று அனைத்து தரப்பினரின் ஆதரவு இருந்ததால் ஹரிபத்மன் போன்ற ஆசிரியர்கள் தங்களை கேட்க ஆள் இல்லை என்ற தைரியத்தில் ஆட்டம் போட்டுள்ளனர். மேலும், வெளியில் தெரிந்தாலும் இயக்குநரின் கணவர் ஆர்.எஸ்.எஸ்சில் இருப்பதால் பிரச்னைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக, துணிந்து மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடியுள்ளனர்.

தமிழ் பெண்ணால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு இன்று மலையாளிகளின் கையில் மொத்தமாக சிக்கிக் கொண்டது: சமூக அக்கறை, ஆன்மீகத்துக்காக தமிழ் பெண்ணால் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு இன்று மலையாளிகளின் கையில் மொத்தமாக சிக்கிக் கொண்டதோடு, கலாச்சாரத்தை பரப்ப பயன்படுத்தப்பட்ட அமைப்பு இன்று செக்ஸ் ஷேத்திரமாக மாறியுள்ளதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கலா ரசிகர்களும் குற்றம் சாட்டுகின்றனர். ருக்மணி தேவிக்குப் பிறகு சங்கரமேனன், நிர்வாகத்துக்கு பொறுப்பு ஏற்றார். அவரது காலத்திற்குப் பிறகு கலாஷேத்திராவின் தரமும், நிறமும் மாறிவிட்டது. சங்கரமேனன் நிர்வாகம்தான் சிறந்த நிர்வாகம் என்று போற்றப்பட்டது. அவரது காலத்தில் 1991ல் அடுத்த வாரிசு (தலைமைப் பதவிக்கு) யார் என்ற போட்டியில் சங்கரமேனன் (1907-1995) தாக்கப்பட்டார். அந்த தாக்குதலை நடத்தியது யார்? யாருக்காக தாக்குதல் நடந்தது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

கதகளிக்கு முக்கியத்துவம்: கலாஷேத்திரத்தில் ஆரம்பத்தில் பரதநாட்டியம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் வீணை, வயலின், ஓவியம், நெசவு என்று தமிழர்களின் பாரம் பரியத்தை பறைசாற்றும் விதமாக தொடங்கப்பட்ட அமைப்பு, இப்போது மலையாளிகளின் கதகளி நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம், இயக்குநர்கள் முதல் ஆசிரியர்கள் அனைவரும் என 90 சதவீதம் பேர் மலையாளிகள்தான். இதனால் தங்கள் மாநிலத்தில் பிரசித்த பெற்ற கதகளிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அந்த மாநில மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுத்தனர். ஒவ்வோர் ஆண்டும் கதகளி போட்டியை நடத்தி வந்தனர். சமீபத்தில் கலாஷேத்ராவில் 5 நாட்கள் கதகளி விழா கொண்டாடப்பட்டது. இதற்கான நிதியை, ஒன்றிய அரசும், தொழில் அதிபர்களும் தாராளமாக வழங்கினர். இதைக் கொண்டு தமிழகத்தில் கதகளி விழா நடத்தினர். அதிலும் பெரிய அளவில் பணத்தை சுருட்டினர். தமிழரால் தொடங்கப்பட்ட நிறுவனம் மலையாளிகளின் கேந்திரமாக மாறிவிட்டது.

ஆர்எஸ்எஸ் கணவரால் கைமாறிய ஆதிக்கம்[1]: தமிழர்களால், தமிழ் கலாச்சாரத்தால், தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுக்க தொடங்கப்பட்ட கலாஷேத்திரம், அதன்பின்னர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. தற்போது ரேவதி ராமச்சந்திரன் இயக்குநராக உள்ளார். இவரது கணவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகராக உள்ளார். இதனால்தான், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. ஏன் மலையாளிகளின் கோட்டையாகவே கலாஷேத்ரா மாறி விட்டது. அதன்பின்னர் பரதநாட்டியத்திற்கு பதில் கதகளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ரேவதி ராமச்சந்திரன் பதவி ஏற்றார். கலாஷேத்ராவைப் பொறுத்தவரை அங்கு பயின்றவர்கள், தலைமை பொறுப்புக்கு வந்தால், 5 ஆண்டுகள் இயக்குநராக இருக்கலாம். அங்கு பயிலாதவர்கள் பணியில் சேர்ந்தால், 3 ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் ரேவதி ராமச்சந்திரன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளார். அவரது பணியை நீட்டிக்கவும் தற்போது முயற்சிகள் நடக்கின்றன[2].

பிரிய தர்ஷினி கோவிந்த் இயக்குனர் – அன்றும் இப்படித்தான்: ரேவதி ராமச்சந்திரனுக்கு முன்னர் பிரிய தர்ஷினி கோவிந்த், இயக்குநராக இருந்தார். அவரும் கேரளாவைச் சேர்ந்தவர். ஆனால் அவரது காலத்திலும் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் ஒரு ஆசிரியர் தவறு செய்தது உண்மை என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்த விசாரணைக்கும் உத்தரவிடாமல், தொடர்ந்து காப்பாற்றத் தொடங்கியதால்தான் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. தினகரன் இவ்வாறு ஏதோ மலையாளத்தவர்களின் ஆதிக்கத்தில் கலாக்ஷேத்ரா சென்று விட்டது, ரேவதி ராமச்சந்திரன் 2018லிருந்து ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் இதையெல்லாம் செய்து வருகிறார் என்பது போலவும் விளக்கி செய்தி வெளியிட்டுள்ளது.

பாலியல் பிரச்சினை அரசியலாக்கப் பட்டு திசைத் திருப்பும் போக்கு: பிரச்சினை பாலியல், பாலியல் சதாய்ப்பு என்றால் அதன்படியே சட்டப் படி நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். ஆனால், சமீப சில ஆண்டுகளில் பற்பல புகார்கள், வழக்குகள், கைதுகள் என்றிருந்தாலும், சில மட்டும் பெரிதாகி அல்லது பெரிதாகக் காட்டி, செய்திகளாக வந்து, ஊடங்களால் ஊதி, பிறகு புஸ் என்று கிளம்பிய வேகத்திலேயே அமுக்கப் பட்டு மறக்கப் படுகின்றன. இப்பொழுது கூட, பாலியல் புகார் என்பதை விட, சித்தாந்தம் அல்லது அரசியல் ரீதியில், இன்னொரு கோணத்தில் நகர்ந்து தூவேஷத்தைக் காட்டும் போக்கு தான் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. ஏற்கெனவே பலமுறை எடுத்துக் காட்டியுள்ளது போல், சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி மற்றும் சிவசங்கர் பாபா விசயங்கள் பெரிதாக்கப் பட்டு, ஊடகங்களில் தினம்-தினம் ஓடிக் கொண்டிருந்தன. பிறகு அமைதியாகி விட்டன. ஆனால், கிருத்துவ-முஸ்லிம் பள்ளி விவகாரங்களில் முதலிலிருந்தே விவகாரங்களை அமுக்கும் போக்கு தான் காணப் பட்டது. ஊடக தர்மம் அப்பொழுது ஊனமானதை எல்லோரும் கண்டு கொண்டார்கள்.

© வேதபிரகாஷ்

09-04-2023


[1] தினகரன், உலகப் பிரசித்தி பெற்ற கலைகளின் ஷேத்திரம் செக்ஸ் ஷேத்திரமாக மாறியது எப்படி? பணத்துக்காக பாதை மாறிய பயங்கரம், April 4, 2023, 2:24 am.

[2] https://www.dinakaran.com/the-world_historical_industry_turned_intothe_sexindustry_moneypath/

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழி வெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள் (1)

ஏப்ரல் 9, 2023

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழிவெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள் (1)

கலாக்ஷேத்திராவில் காலடி எடுத்து வைத்த மாணவிகள், இன்று நெருப்பாற்றில் விழுந்ததுபோல் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர்: தினகரன் இவ்வாறு விவரிக்கிறது. பரதமும் இசையும் நமது கலை பண்பாட்டு அடையாளமாக திகழும் நிலையில், இவற்றை வளர்ப்பதற்காக துவக்கப்பட்ட ஒரு கலைக்கூடம், இன்று காம விளையாட்டுக்கான களமாகி, இதுவரை சேர்த்து வைத்த அத்தனை பெருமைகளையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. கவின் கலைக் கல்லூரியான கலாஷேத்ராதான் அது. காலில் சலங்கையுடனும், நெஞ்சில் கலைக் கனவுகளுடனும் இதற்குள் காலடி எடுத்து வைத்த மாணவிகள், இன்று நெருப்பாற்றில் விழுந்ததுபோல் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர்[1]. உலக நாடுகள் வரை பெருமையை பரப்பிய இந்தக் கல்லூரியை, உயரிய நோக்கத்தோடு உருவாக்கியவர் ருக்மணி தேவி. சமூக அக்கறையும், ஆன்மீக சிந்தனையும் கொண்ட இவர், மதுரையில் 1904 பிப்ரவரி 24ல் பிறந்தார். இவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி சென்னையில் உள்ள தியாசபிக்கல் சொசைட்டியில் பணியாற்றியதால், ருக்மணி தேவியும் சென்னையில் படித்தார். பின்னர் அன்னிபெசன்ட் அம்மையாரை சந்திக்க லண்டனுக்கு ஜார்ஜ் அருண்டேலுடன் 1920ல் சென்றார். அப்போது அவருக்கு வயது 16. அவர், அருண்டேலை திருமணம் செய்து கொண்டார். அந்தக் காலத்தில் சாஸ்திரியின் மகள், அருண்டேலை திருமணம் செய்தது பெரிய புரட்சியாக பார்க்கப்பட்டது.

ருக்மணி தேவி சதிரை பரதநாட்டியமாக்கி அரங்கேற்றியது: அதன்பின்னர் அவர், வெளிநாட்டில் வசித்தபோது ரஷ்யாவின் பாலே நடனத்தை முறைப்படி கற்றார். பின்னர் இந்தியாவுக்கு அவர் திரும்பியபோது தேவதாசிகளால் மட்டுமே ஆடக்கூடிய ‘சதிர்’ என்ற பரதநாட்டிய நடனத்தைப் பார்த்தார். அந்த நடனம், பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த நடனத்தின் மீது பற்றுக் கொண்ட ருக்மணிதேவி, அதை முறைப்படி கற்றுக் கொண்டார். இந்த நடனத்தை பார்ப்பதே தவறு என்ற காலக்கட்டத்தில் இந்த நடனத்தைக் கற்றுக் கொண்டவர், சதிர் என்ற பரதநாட்டியத்தை, பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் ஆன்மிகத்தையும் கலந்து அனைவரும் ரசிக்கும்படி அரங்கேற்றினார். பின்னர் இதை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கலாஷேத்ரா என்ற அமைப்பைத் தொடங்கி பரதநாட்டியத்தை உலகறியச் செய்தார். ஆரம்பத்தில் இங்கு பரதநாட்டியம் மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் மோகினி ஆட்டம், கேரளாவின் கதகளி ஆகிய நடனங்களோடு சேர்த்து, வீணை, வயலின் மற்றும் பாட்டு ஆகிய கலைகளோடு, சிற்ப கலை. பெயின்ட்டிங், நெசவு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். நெசவில் இயற்கை முறையிலான சாயத்தையும் பயன்படுத்தி நெசவு செய்ய தறிகளையும், நெசவுக் கூடங்களையும் ருக்மணிதேவி ஆரம்பித்தார். கலாஷேத்ரா புடவை உலக பிரசித்தி பெற்றவை.

கலாக்ஷேத்திரம் செக்ஸ் ஷேத்திரமாக மாறியது; சமூக அக்கறை மற்றும் ஆன்மீகத்தை வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட இந்த கலாஷேத்ரா, இன்று செக்ஸ் ஷேத்திரமாக மாறியதைக் கண்டு முன்னாள் மாணவ, மாணவிகள், அந்த நிறுவனத்தோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள், அதன் நலன் விரும்பிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ருக்மணிதேவியின் சேவையைப் பார்த்த மெரார்ஜி தேசாய், 1977ம் ஆண்டு ருக்மணி தேவிக்கு குடியரசுத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஆனால், தனக்கு ஜனாதிபதி பதவி வேண்டாம் என்று மறுத்த ருக்மணி தேவி, மக்களுக்கு தொண்டு செய்வதுதான் முக்கியம் என்றார். இதற்காக கலாஷேத்ராவில் இந்த நடனம், இசை கல்லூரியோடு, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அடங்கிய இரு பள்ளிகளும் தொடங்கப்பட்டன. சமூக மாற்றத்திற்காக தொடங்கப்பட்டு நாட்டின் உச்சப்பட்ச பதவியான ஏன் இந்த நாட்டின் முதல் குடிமகனாக பார்க்கப்படும் ஜனாதிபதி பதவியை வேண்டாம் என்று தள்ளிய ருக்மணிதேவியின் நிறுவனம், இன்று பணத்தை பங்கிடுவதிலும், பதவிக்காக ஒருவரை ஒருவர் வீழ்த்துவதிலும் பதவி வெறி ஷேத்திரமாகவும், செக்ஸ் ஷேத்திரமாகவும் மாறியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ருக்மணி தேவிக்குப் பிறகு வாரிசு போட்டி: ருக்மணி தேவிக்குப் பிறகு சங்கரமேனன், நிர்வாகத்துக்கு பொறுப்பு ஏற்றார். அவரது காலத்துக்குப் பிறகு, கலாஷேத்திராவின் தரமும் நிறமும் மாறி விட்டது. அவரது நிர்வாகம்தான் சிறந்த நிர்வாகம் என்று போற்றப்பட்டது. அவரது காலத்தில் 1991ல் அடுத்த வாரிசு (தலைமைப் பதவிக்கு) யார் என்ற போட்டியில் சங்கரமேனன் (1907-1995) தாக்கப்பட்டார். அந்த தாக்குதலை நடத்தியது யார்? யாருக்காக தாக்குதல் நடந்தது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. 84 வயதான கிழவரைத் தாக்கினர் என்பது வேடிக்கையாக இருக்கிறது. ‘அந்த தாக்குதலுக்குப் பிறகு மனமுடைந்த சங்கரமேனன், சில மாதங்களிலேயே உயிரிழந்தார். அவர் மரணத்துக்கு தாக்குதலும் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது,’ என்று தினகரன் கூறுகிறது.

கலாஷேத்திராவை ஒன்றிய காங்கிரஸ் அரசு கையகப்படுத்தியது; சங்கரமேனன் நிர்வாகம் செய்த காலத்தில், சாரதா ஆப்மென் டீச்சர், பத்மாஷினி டீச்சர், கமலா டீச்சர் ஆகியோர் பணியாற்றினர். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு ருக்மணி தேவையை போல் உயரிய பண்புகளையும் போதித்து வழிநடத்தினர். அவர்கள் மாணவ, மாணவிகளோடு சக நண்பர்களாக பழகி, கலாஷேத்திரத்தை வளர்த்தனர். அவர்களது காலத்துக்குப் பிறகு அந்த இடங்களை இதுவரை யாரும் நிரப்பவில்லை. வெற்றிடமாக உள்ளது. இதனால் சங்கரமேனன் காலத்துக்குப் பிறகு, 1993ம் ஆண்டு ஆர்.வெங்கட்ராமன் (1987-1992) ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பரிந்துரையின் அடிப்படையில் கலாஷேத்திராவை ஒன்றிய காங்கிரஸ் அரசு கையகப்படுத்தியது. அப்பொழுது திராவிட கட்சிகள் எல்லாம் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை போலிருக்கிறது, பார்ப்பன ஆதிக்கத்தையும் கவனிக்கவில்லை போலும்.

ஒன்றிய காங்கிரஸ் அரசு, லீலா சாம்சனைநியமித்தது: நிதி உதவிகளை ஒன்றிய அரசே செய்ய ஆரம்பித்தது. அதன்பின்னர் ஒன்றிய காங்கிரஸ் அரசு, லீலா சாம்சன் என்பவரை இயக்குநராக நியமித்தது. அவரது காலத்தில் பல போட்டிகளை நடத்தத் தொடங்கியதால், நிதி கொட்ட ஆரம்பித்தது. ஒன்றிய அரசும் பணத்தை வாரி இறைத்தது. இதனால் சமூக அக்கறையோடு தொடங்கப்பட்ட கலாஷேத்ராவில் அரசியல் புகுந்து விளையாடத் தொடங்கியது. பல நிதிமுறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இருப்பினும், திராவிட கட்சிகள், துப்பறியும் வல்லுனர்கள், நக்கீரன் – கோபால் போன்றோர் கண்டுகொள்ளவில்லை போலும். பின்னர் பாஜ தலைமையில் ஒன்றிய அரசு அமைந்தபோது, அவர் வெளியேற்றப்பட்டார்.

பணத்தை சுருட்ட போட்ட புது திட்டம்: கலாஷேத்ரா மாணவர்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெங்களூர், டேராடூன், அகமதாபாத் ஆகிய நகரங்களில் கலை நிகழ்ச்சிக்கள் நடத்தப்படும். இதற்காக கோலம் போடுவது முதல் அனைத்துப் பணிகளுக்கும் ஆட்களை அழைத்துச் செல்வார்கள். இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படும். அதில்தான் முறைகேடுகள் நடக்க ஆரம்பித்தன. முன்பு சென்னையில் உள்ள கலாஷேத்ராவில்தான் போட்டிகள் நடத்தப்படும். ஆனால் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் நிர்வாகம் சென்ற பிறகு வெளி மாநிலங்களில் நடத்த ஆரம்பித்தனர். அப்போதுதான் பணத்தை சுருட்ட முடியும் என்று முடிவெடுத்தனர்.

கேரளத்தவர் அதிகமாக நியமிக்கப் பட்டது: அதோடு, இதற்காக கலாஷேத்ராவில் தற்காலிகமாக (ரெப்பெட்ரி கம்பெனி) ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு மூலம்தான் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹரிபத்மன், சஞ்சித் லால், சாய்கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு ரேவதி ராமச்சந்திரனால் நியமிக்கப்பட்டனர். இவர்களோடு சேர்த்து மோகன், கிரித்மது, கே.பி.ராகேஷ், ஸ்ரீஜித் மற்றும் ஜோஷ்னா மேனன், ஸ்ரீதேவி, இந்துநிதி ஆகிய பெண் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த கேரளா ஆசிரியர்களுக்கு தலைவர்போல ஹரிபத்மனும், ஜோஷ்னா மேனனும் செயல்பட்டு வந்தனர்.

© வேதபிரகாஷ்

09-04-2023


[1] தினகரன், உலகப் பிரசித்தி பெற்ற கலைகளின் ஷேத்திரம் செக்ஸ் ஷேத்திரமாக மாறியது எப்படி? பணத்துக்காக பாதை மாறிய பயங்கரம், April 4, 2023, 2:24 am

யார் ஜாகிர் உசேன், வைகுண்ட ஏகாதசி நேரத்தில், ஶ்ரீரங்கம் கோவிலில் என்ன வேலை? பிரச்சினையை ஏன் பெரியாரிஸ்டுகள் உண்டாக்க வேண்டும்? (1)

திசெம்பர் 22, 2021

யார் ஜாகிர் உசேன், வைகுண்ட ஏகாதசி நேரத்தில், ஶ்ரீரங்கம் கோவிலில் என்ன வேலை? பிரச்சினையை ஏன் பெரியாரிஸ்டுகள் உண்டாக்க வேண்டும்? (1)

யார் ஜாகிர் உசேன், வைகுண்ட ஏகாதசி நேரத்தில், ஶ்ரீரங்கம் கோவிலில் என்ன வேலை?: ஜாகிர் ஹுஸைன் என்றால் பெரும்பாலான தமிழருக்கு, தமிழ்நாடுவாசிகளுக்கு / யாருக்கும் தெரியாது என்றே சொல்லலாம், ஆனால், 10-12-2021ம் தேதிக்குப் தமிழக ஊடகங்களில், தீடீரென்று அவரைப் பற்றி செய்திகளை வெளியிட ஆரம்பித்தன. இவரது ஶ்ரீரங்கம் கோவில் நுழைவு மற்றும் ரங்கராஜன் நரசிம்மனின் மறுப்பு, ஏதோ பெரிய செய்தி போல தமிழக ஊடகங்கள் முக்கியத்தும் கொடுத்து வெளியிட்டன. ரங்கராஜன் பாண்டே என்பவரும், இருவரையும் (ரங்கராஜன் நரசிம்மன் மற்றும் ஜாகிர் உசேன்) பேட்டி கண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு வெளியீட்டிலும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. கொஞ்சம்-கொஞ்சமாக கோவில், தரிசனம், பக்தி, வைஷ்ணவம், வைணவம் என்ற போர்வையில், முடிவாக கேவலமான இந்துவிரோத அரசியல் தான் வெளிப்பட்டு முடிகிறது. ஊடகங்களில் உள்ள வார்த்தைப் பிரயோகங்கள், குறிப்பாக ஜாகிர் ஹுஸைனின் தடித்த, கடுமையான, கொடுமையான, அநாகரிகமான வார்த்தைகள் அவரது அழகனான முகத்திற்கும், பின்னே இருக்கும், மனத்திற்கும் சம்பந்தமே இல்லாத தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

ஜீ.நியூஸ்.தமிழ்ரங்கராஜன் நரசிம்மன் அவரை துரத்தி அடித்து, மத துவேசமும் செய்துள்ளார்: ஜீ.நியூஸ்.தமிழ், “பிரபல பரத நாட்டிய கலைஞரான ஜாஹிர் ஹூசைன் கடந்த 10 ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு (Srirangam Ranganathar Temple) சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்[1]. அவர் முஸ்லிம் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என  ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்,” என்று ஆரம்பித்து, கீழ்கண்டவாறு முடித்துள்ளது[2]. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து விசாரணை மேற்கொண்டார். இந்து மதத்தின் மீதும், வைணைவ சமயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஜாஹிர் ஹீசைன் பல முறை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென ரங்கராஜன் நரசிம்மன் அவரை துரத்தி அடித்து, மத துவேசமும் செய்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதுதவிர, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோவில் குறித்து பல பொய் செய்திகளை பரப்பி வருகிறார். தற்போது மத வேற்றுமையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளார் என்றும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து சார்பில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரங்கராஜன் மீது ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்களும் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

பிபிசி.தமிழ்இன்னொரு தடவை உள்ளே வந்தால் கொலை செய்துவிடுவேன் என்றார்: தொடர்ந்து இந்து கோயில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் ரங்கராஜன் நரசிம்மன். இந்து அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும் என்றும் கோரும் இவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தையும் கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் டிசம்பர் பத்தாம் தேதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பெரும் சத்தமிட்டு, தன்னை கோவிலைவிட்டுத் துரத்தியதாக ஜாகிர் ஹுசைன் தெரிவித்திருக்கிறார். “நம்பிள்ளை உட்கார்ந்து ஏடு சொன்ன இடத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் என்னைப் பார்த்து சத்தமிட்ட ஆரம்பித்தார். அங்கிருந்து ஆரம்பித்து ரங்க ரங்கா மண்டபம் வரையில் “வெளியே போடா” என்று சத்தம் போட்டார். இன்னொரு தடவை உள்ளே வந்தால் கொலை செய்துவிடுவேன் என்றார். அதனால் வேறு வழியில்லாமல் வெளியே வந்துவிட்டேன்” என்று பிபிசியிடம் தெரிவித்தார் ஜாகிர் ஹுசைன்.”

பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் வந்து நிற்க அந்த ரங்கராஜன் யார்?” என்கிறார் ஜாகிர் ஹுசைன்: …..”நான் இஸ்லாமிய பெற்றோருக்குத்தான் பிறந்தேன். என் பெரியப்பாவுக்கு குழந்தை இல்லை என்பதால் என்னைத் தத்துக் கொடுத்துவிட்டார்கள். என்னுடைய பெரியப்பா இந்து நாயுடு சமூகத்தை சேர்ந்த அலமேலு மங்கா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர் மிகப் பெரிய பெருமாள் பக்தர். அவரின் தாக்கத்தில் நான் பெருமாளை சேவிக்க ஆரம்பித்தேன்……….பரத நாட்டியம் கற்றுக்கொண்டேன். பரத நாட்டியத்தில் நான் இந்துக் கதைகளைத்தானே ஆடுகிறேன். கோவில்களின் சன்னிதிக்கு முன்பாக இந்து அல்லாதவர்கள் உள்ளே செல்லக்கூடாது என போர்டு வைத்திருப்பது உண்மைதான். ஆனால், ஒருவர் இந்து நம்பிகைக்களுடன் இருக்கும்போது அவரைத் தடுப்பது எப்படி சரியாகும்? பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் வந்து நிற்க அந்த ரங்கராஜன் யார்?” என்கிறார் ஜாகிர் ஹுசைன்.

நக்கீரன்கலையை மதத்தால்  பிரிக்க முயல்கிறார்கள் மதவெறியர்கள்: நக்கீரன் வழக்கம் போல வன்மத்துடன், தனது, இந்துவிரோத பாணியில்[3], “வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து நிகழ்வில் தினமும் ரெங்கநாதர் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் தருவதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் திரள்கிறார்கள். பக்தர்களில் ஒருவராக கடந்த 9ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார் பரதநாட்டிய கலைஞரான கலைமாமணி ஜாகிர் உசேன். அவரைப் பிடித்து வெளியே தள்ளினார் ரங்கராஜன் நரசிம்மன்,” என்று குறிப்பிட்டுள்ளது. “கலையை மதத்தால்  பிரிக்க முயல்கிறார்கள் மதவெறியர்கள்,” என்று முடிக்கிறது[4]. மற்ற ஊடகங்கள் 10-12-2021 அன்று உள்ளே நுழைந்தார் என்றால், நக்கீரன் 09-12-2021 என்கிறது. ஶ்ரீரங்கத்தில் ஏற்கெனவே பல பிரச்சினைகள், வழக்குகள் இருந்து கொண்டிருக்கும் நேரத்தில், இந்த மாற்று மதத்தவர் ஏன் வர வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், திமுக கட்சியினரான இவர் முகநூலில், இந்துக்களின் நம்பிக்கைளைப் பற்றி, மிகக் கடுமையாக, மோசமாக, தூஷித்து பதிவுகளை பதிவு செய்துள்ளார். வைணவர் என்று சொல்லிக் கொண்டு, நாமம் போட்டு டான்ஸ் ஆடினாலும், இவரது முகநூல் பதிவுகள் கேவலமாக இருக்கிறது. நாற்றம்-வாசனை, கும்பி-சந்தனம், போன்ற நிலைகளில் பெரிதும் வேறுபடுகிறது. அவற்றை நியாமமும் படுத்தியுள்ளது, திகைப்பாக உள்ளது[5].

சேகர் பாபுஇது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்: திருவரங்கத்திலேயே துலுக்க நாச்சியாருக்கு சன்னிதி உண்டு. பெருமாளுக்கு லுங்கி கட்டி ரொட்டி நைவேத்தியம் செய்கிறார்கள். பெருமாளே இஸ்லாமியர்களை ஏற்கிறார், இவர்கள் ஏன் தடுக்கிறார்கள் என்கிறார் ஜாகிர். ஜேசுதாஸ் கிறிஸ்தவர் என்பதால் ஐயப்பன் கோவிலில் அவரது பாடல்கள் ஒலிக்காமல் இருக்கிறதா என்கிறார் அவர். இது குறித்து கேட்பதற்காக ரங்கராஜன் நரசிம்மனை பிபிசி தமிழ் அழைத்தபோது, “இதைக் கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது,” என்று கூறியதோடு, கடுமையான வார்த்தைகளில் ஏசினார்[6]. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக பிபிசி கேட்டபோது, “இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறேன். விசாரணை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, ஒருவர் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று சொன்னால் அந்த நடவடிக்கையை கோவில் நிர்வாகம்தான் எடுக்க வேண்டும். யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள முடியாது. விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்[7].

© வேதபிரகாஷ்

22-12-2021


[1] ஜீ.நியூஸ்.தமிழ், Temple: ஜாஹிர் ஹீசைன் விவகாரத்தில் ரங்கராஜன் மீது கோவில் நிர்வாகம் போலீஸில் புகார், Written by – ZEE Bureau | Last Updated : Dec 13, 2021, 09:30 AM IST.

[2] https://zeenews.india.com/tamil/tamil-nadu/srirangam-temple-administration-lodged-complaint-against-rangarajan-narasimhan-in-dancer-zakir-hussain-issue-377339

[3] நக்கீரன், கலைமாமணிக்கு நேர்ந்த அவமானம்!-ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேறிய வன்மம்!, மகேஷ், Published on 15/12/2021 (06:43) | Edited on 15/12/2021 (07:48).

[4] https://www.nakkheeran.in/nakkheeran/shame-kalaimamani-srirangam-temple-violence/shame-kalaimamani-srirangam-temple-violence

[5] ரங்கராஜன் பாண்டே வீடியோ பேட்டியில் காணலாம். உபயோகப் படுத்தியுள்ள வார்த்தைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன.

[6] பிபிசி தமிழ், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து துரத்தப்பட்டாரா நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன்? இந்து சமய விதி தடுக்கிறதா?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், 11 டிசம்பர் 2021

புதுப்பிக்கப்பட்டது 12 டிசம்பர் 2021

[7] https://www.bbc.com/tamil/india-59621107

குடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)!

மார்ச் 15, 2018

குடித்துகும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)!

Pink Chaddi Campaign (Pink Underwear Campaign) by Nisha Susan against Shri RAMA Sena violence against Valentine Day couples

பிங்க் ஜட்டிஅனுப்பும் போராட்டம்: பிப்ரவரி 4, 2009 அன்று வேலன்டைன் கொண்டாட்டத்தையும் எதிர்ப்பதாக, புத்தாலிக் அறிவித்த போது, நிஷா சூஸன் என்ற டெஹல்காவின் நிருபர், “பிங்க் ஜட்டி”  பிரச்சாரம் என்று ஆரம்பித்து வைத்தார். அதாவது, போராட்டம் மூலம் பெண்களின் ஜட்டி, கீழுள்ளாடைகளை கொரியர் மூலம் அனுப்பி வைக்கும் போராட்டமும் நடத்தப் பட்டது! ஆனால், இதே பெண்பணி, தர்ண் தேஜ்பால், பாலியல் வக்கிரத்தில் கைதானபோது, கண்டுகொள்ளாமல் இருந்ததை மற்றவர்கள் எடுத்துக் காட்டினர். இதிலும் பாரம்பரிய பெண்கள் எதிர்ப்புத் தெர்விக்கவில்லை என்றாலும், தங்களது மறுப்பை வெளிப்படுத்தினர். ரேணுகா அம்மையாரின் தவப்புதல்வி தேஜஸ்வினி தான், கொரியர் மூலம் “பிங்க் ஜட்டி” அனுப்பும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் என்று சில ஊடகங்கள் எடுத்துக் காட்டின. ஒருவேளை 2009 தேர்தல் ஆண்டு என்பதனால், இப்பிரச்சினை பெரிதாக்கப்பட்டது போல தெரிகிறது என்பது எடுத்துக் காட்டப்பட்டது.

Mangalore-pub attack- Pink chaddi campaign

12-03-2018 அன்று பிரமோத் முத்தாலிக் உட்பட மற்றும் 25 பேர், அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டது[1]: 12-03-2018 அன்று பிரமோத் முத்தாலிக் உட்பட மற்றும் 25 பேர், அவ்வழக்கிலிருந்து [குடித்த இளசுகளை அடித்த] விடுவிக்கப் பட்டனர்[2]. மங்களூர் பப்பில் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி-கல்லூரி மாணவிகளுள் ஒருத்தி கூட புகார் கொடுக்கவில்லை, சாட்சி சொல்ல வரவில்லை[3]. வழக்கை விசாரித்த நீதிபதி, போதிய ஆதாரம் இல்லாததால், அனைவரையும் அறிவித்ததாக அறிவித்தார்[4]. குற்றம் சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடிய வக்கீல், எவ்வாறு அவர்கள் வேண்டுமென்றே, சம்பந்தமில்லாத சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடுக்கப் பட்டதை சுட்டிக் காட்டினார்[5].

Section 120B – குற்றம் செய்ய வேண்டும் என்ற சதி திட்டம் தீட்டியது, குறிப்பிட்ட குற்றத்தை செய்ய வேண்டும் என்று கூடியது.

Section 143 – சட்ட விரோதமாக கூடியது.

Section 147 –  கலவரத்தை உண்டாக்கியது

Section 323 – வேண்டுமென்றே தாக்கியது.

Section 341 – சட்டத்திற்குப் புறம்பாக தடுத்தது.

Section 342 – சட்டத்திற்குப் புறம்பாக பிடித்து வைத்தது.

Section 448 – வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.

Section 505 (2) – இரு பிரிவுகளுக்குள் விரோதம், வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுவது.

Section 506 – குற்றம் செய்யும் வகையில் மிரட்டுவது.

இப்படியெல்லான் வழக்கு தொடுத்தாலும், நடந்தவை எல்லாமே வீடியோக்களில் உள்ளன. போதாகுறைக்கு, பாதிக்கப் பட்டதாகக் கூறப்படும், எந்த பெண்ணும் புகார் கொடுக்கவில்லை[6].

Pink Chaddi campaign led by Tejaswini, Renukas daughter

காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், அறிவுஜீவிகள், ஆகியோர் எனது எதிரிகள். ஆனால் இவர்கள் வெளிப்படையான எதிரிகள்: நியூஸ்18 செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த அவர், “எனது எதிரிகைளை நான் நன்றாக அறிவேன். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், அறிவுஜீவிகள், ஆகியோர் எனது எதிரிகள். ஆனால் இவர்கள் வெளிப்படையான எதிரிகள். இவர்கள் எனக்கு எதிராக இயங்குபவர்கள். ஆனால் தற்போது எனக்கு தீங்கு ஏற்படுத்த நினைக்கும் எனது சொந்த மக்களை நினைத்து நான் கவலை கொள்கிறேன். இவர்கள் முதுகில் குத்துவதில் தேர்ந்தவர்கள். பிரவின் தொகாடியாவிற்கு நடந்தது எனக்கும் நடக்கலாம்.” என்று கூறியுள்ளார்[7]. ஆர்எஸ்எஸ் அமைப்பை நேரடியாக குறை கூறிய முதாலிக், “கர்நாடக மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் தலைவர் மங்கேஷ் பெந்தேவிற்கு என்னை பிடிக்காது. அவருக்கு முன்னாள் முதல்வர் ஜகதீஷ் செத்தார் மற்றும் எம்.பி.ப்ராஹ்லத் ஜோஷியின் ஆதரவு உள்ளது. இவர்கள் வடக்கு கர்நாடகாவில் நான் இருப்பதை விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்[8]. மேலும், “என்னுடைய மக்களே என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர். என்னுடைய புகழ் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் கவலையடைந்துள்ளேன். அவர்களுக்கு யாரும் பேரும் புகழும் அடைவது பிடிக்காது. அவர்கள் அடிமை மனோபாவம் உடையவர்கள். அவர்களுடன் சேர்ந்து நான் பலவற்றை சாதித்துள்ளேன். அவர்கள் இல்லாமலும் நான் பலவற்றை சாதித்துள்ளேன். இதனாலேயே நான் அவ்வியக்கத்தில் இருந்து வெளியேற கட்டாயப் படுத்தப்பட்டேன்.” என்று கூறியுள்ளார்.

Mangalore-pub attack-Promod, Prahalad Joshi etc BJP

ஆர்எஸ்எஸ் இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது ஆனால் அவர்களுக்கு இந்து மக்களில் சிலரையே பிடிக்கவில்லை: இன்னும், தனது 40 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக வீனாக்கிவிட்டதாகவும், தன்னைப் போல ஆயிரம் ஆயிரம் பேர் ஆர்எஸ்எஸ் இல் உள்ளதாகவும் ஆனால் அவர்களால் இப்போது எதுவும் செய்ய இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்[9]. மேலும் ஆர்எஸ்எஸ் இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது ஆனால் அவர்களுக்கு இந்து மக்களில் சிலரையே பிடிக்கவில்லை. அப்படியிருக்க அவர்கள் இந்து ஒற்றுமையை எவ்வாறு அடைவார்கள், என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருந்தும் இந்துத்வாவில் தனக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அப்படியே தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ராம் சேனா அமைப்பை தொடங்குவதற்கு முன் கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் தலைவராக இருந்தார். சமீபத்தில் அவர் கர்நாடக மாநில சிவ சேனா அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டதோடு வர இருக்கும் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட்டு பாஜகவிற்கு தகுந்த பாடம் கற்பிக்க போவதாக அறிவித்திருந்தார்[10]. இந்நிலையில் முதாலிக் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது குறித்து கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளது.

Mangalore-pub attack-Promod, Prahalad Joshi etc BJP-in and out

இப்பொழுதும் அரசியல் மயமாக்க செய்யப்படும் முயற்சிகள்: மேலே குறிப்பிட்ட படி, இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுருத்தப்படுகிறது. இப்பிரச்சினை பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்ற திரிபுவாதமும் வைக்கப் படுகிறது[11]. தீர்ப்பு அரிராம் சேனையின் சட்டவிரோதமான செயலை நியாயப்படுத்தியுள்ளது, மற்றும், பிஜேபுக்கு ஆதரவாக உள்ளது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது[12]. சங்கப் பரிவார் என்று சொன்னாலும், முத்தாலிக் மற்றும் பிஜேபிக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் திகைக்க வைக்கின்றன. 2009ல் நிர்மலா வெங்கடேஷ் காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தது. 2014ல் முத்தாலிக் பிஜேபியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, உடனடியாக விலக்கப்பட்டார். இப்பொழுது 2018-19களில் என்னாகும் என்று நோக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

13-03-2018

Renuka was condemned by her talibanization comments

[1]  Times of India, Pub attack: Police took a year to file chargesheet, TNN | Mar 13, 2018, 08:54 IST.

 

[2] NDTV, Sri Ram Sene’s Pramod Muthalik Acquitted In 2009 Mangalore Pub Attack Case, Reported by Nehal Kidwai, Edited by Deepshikha Ghosh | Updated: March 12, 2018 18:51 IST

[3] https://www.ndtv.com/karnataka-news/sri-ram-senes-pramod-muthalik-acquitted-in-2009-mangalore-pub-attack-case-1822876

[4] News18, Mangalore Pub Attack Case: Pramod Muthalik, 30 Others of Sri Ram Sene Walk Free Due to ‘Lack of Evidence’, Updated:March 12, 2018, 6:32 PM IST

[5] https://www.news18.com/news/india/mangalore-pub-attack-case-pramod-muthalik-30-others-of-sri-ram-sene-walk-free-due-to-lack-of-evidence-1686951.html

[6] https://timesofindia.indiatimes.com/city/mangaluru/pub-attack-police-took-a-year-to-file-chargesheet/articleshow/63278925.cms

[7] தினமலர், என் உயிருக்கு ஆபத்துமுத்தாலிக் அலறல், Added : ஜன 20, 2018 22:35

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1942558

[9] புதிய தலைமுறை, தொகாடியாவிற்கு அடுத்து ஆர்எஸ்எஸ் இடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக கூறும் பிரமோத் முதாலிக், By Wafiq Sha, January 20, 2018

[10]http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/

[11] The First Post, Verdict on 2009 Mangaluru pub attack legitimises Pramod Muthalik’s Sri Ram Sene: Acquittal could benefit BJP ,TS Sudhir Mar 13, 2018 14:24:15 IST; Published Date: Mar 13, 2018 12:28 PM | Updated Date: Mar 13, 2018 14:24 PM.

[12] http://www.firstpost.com/india/verdict-on-2009-mangalore-pub-attack-legitimises-pramod-muthaliks-sri-ram-sene-acquittal-could-prove-advantageous-for-bjp-4387699.html

குடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (1)!

மார்ச் 15, 2018

குடித்துகும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (1)!

Amnesia, the lounge, Mangalore

பப்புகளில் நடந்தவை வீடியோ படம் பிடிக்கப் பட்டது: மங்களூர் பப்பில் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி-கல்லூரி மாணவிகளை, ஶ்ரீராம் சேனா 24-01-2009 அன்று தட்டிக் கேட்டு, அடித்ததாக செய்திகள் வந்தன. ஶ்ரீராம் சேனா மற்றும் பஜ்ரங்தள் ஆட்கள் பல்மடா ரோட்டில் [Balmatta Road] உள்ள ஒரு பப்பில் நுழைந்து, அங்கிருந்த வாடிக்கையாளர்களை, சுமார் 40 பேர் தாக்கியதாக தெரிகிறது என்று “டைம்ஸ்-நௌ” டிவி அறிவித்தது[1]. வீடியோக்களில் எம்னீஸியா – த லுங் [Amnesia – The Lounge] மற்றும் உட் சைட் [Woodside] என்ற இரண்டு கட்டிடங்களைக் காட்டப்பட்டன. அவற்றில் ஆட்கள் நுழைவது, பெண்களிடம் விசாரிப்பது, அவர்களை விரட்டுவது, இரண்டு பெண்கள் கீழே விழுவது, ஒரு பையனை அடிப்பது, பெண்கள் ஓடிப் போய் காரில் ஏறுவது என்று காட்சிகள் இருந்தது. இவற்றையெல்லாமே, பலர் வீடியோ கேமராவுடன், வீடியோ எடுப்பதும் தெரிந்தது. அதாவது, ரகசியமாக செய்யப் பட்ட காரியம் அல்ல என்று தெரிகிறது. அவ்வாறு வீடியோ எடுத்தவர்களை விரட்டியவர்கள் ஹடுத்ததாகவும் இல்லை. ஆகவே, திட்டம் போட்டு வந்தது போலவும் தெரியவில்லை.

Mangalore-pub attack- boys also attacked

பெண்கள் மற்றும் பையன்களும் தாக்கப்பட்டிருக்கின்றனர்: முதலில் அக்குழு “உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்,” என்று உள்ளே செல்ல அனுமதி கேட்டது. உள்ளே சென்ற பிறகு, சில பெண்கள் குடித்த நிலையில் காணப் பட்டபோது, விசாரித்தனர். அவர்கள் தங்களுடைய “பாய் பிரென்ட்ஸ்” உடன் வந்ததாக கூறினர். இதனால், அவர்களை, வீட்டிற்கு செல்லும் படி பணித்தனர். அதற்கு, அவர்கள், “எங்கள் பணத்தில், நாங்கள் வாங்குகிறோம், குடிக்கிறோம், உங்களுக்கு என்ன?” என்று எதிர்த்துப் பேசியுள்ளனர். அதற்கு பையன்களும் ஆதரவாக கத்திப் பேசி, வாதிட்ட போது, கைகலப்பு ஏற்பட்டது. பெண்கள் எல்லோரையும் வெளியே போகும் படி கத்தினர். மறுத்தவர்களை, அடித்து துரத்தவும் செய்தனர். தடுத்த பையன்கள், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதெல்லாம், வீடியோவில் பதிவாகின[2]. ஶ்ரீராம் சேனையின் துணைத் தலைவர் பிரஷாத் அவதார், “தொடர்ந்து பெண்கள் பாரம்பரிய மரியாதைக்குரிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், இது ஒரு உடனடியாக பீரிட்டெழுந்த உணர்வு பூர்வமான எதிர்வினை ஆகும். இந்த பெண்கள் எல்லோரும் இந்துக்கள், ஆனால், இவ்வாறு முஸ்லிம் பையன்களுடன் இருப்பதற்கு வழிவகுக்கிறார்கள்,” என்று விளக்கம் அளித்தார்.

Amnesia Pub- some of the girls drunken

பெண்கள் பிரச்சினை மென்மையாக கவனத்துடன் அணுக வேண்டிய தேவை, கவனம்: பெண்கள் அடிக்கப்பட்டனர், தலிபான் போன்ற தன்மை இந்துத்துவாதிகளிடம் காணப்பட்டது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது, வாத-விவாதங்கள் நடந்தன. செக்யூலரிஸ ஊடகங்கள் இதனைப் பெரிது படுத்தினாலும், பெண்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் கவனமாக கையாள வேண்டியதை உணர்ந்தனர். பெண்கள் உரிமைகள் என்று பேசப் படுகின்றோர் உண்மையில் எதற்காக அக்கோஷத்தை முன் வைக்கின்றனர் என்பதும் அக்கறாஇயாக நோக்கப் பட்டது. பொதுவாக, இத்தகைய மென்மையான பிரச்சினைகளை, எழுப்பி, உசுப்பி விட்டு பெண்கள் உரிமைவாதிகள் அடங்கி விடுவர் அல்லது காணாமல் போய் விடுவர். ஆனால், எப்பொழுதும் அவரவர் இடங்களில், பாதிக்கப் பட்டவர் மற்றும் இதர மக்கள், வாழ வேண்டும், தொடர்ந்து தங்களது கடமைகளை ஆற்ற வேண்டியுள்ளது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால், தான், தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக விசாரணைக்கு வந்தவர், மிக்க அக்கரையுடன் பிரச்சினையை அணுகியுள்ளனர். ஆனால், அரசியலாக்க வேண்டும் என்ற போது, அதில் ஈடுபட்ட பெண்களே மாறியுள்ளனர், மாற்றப்பட்டுள்ளனர்.

Mangalore-pub attack- Nirmala Venkatesh removed from NCW

தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக முரண்பட்ட விசாரணை, அறிக்கைகள்:

24-01-2009 அன்று தாக்குதல் நடந்திருக்கிறது.

27-01-2009 அன்று தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக, நிர்மலா சீனிவாசன் தலைமையில், மூன்று பேர் நேரிடையாக வந்து விசாரித்தனர்.

30-01-2009 அன்று பப் சொந்தக்காரர்கள் மற்றும் பொய்யான காரணங்கள் சொல்லி அந்த இடத்திற்குள் நுழைந்துள்ளதாக கூறினார். பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப் படவில்லை என்று குற்றம் சாட்டி, பப் லைசென்ஸ் நீக்க பரிந்துரைத்தார்[3].

02-02-2009 அன்று அரைகுறை உடைகளுடன் ஆடிக்கொண்டிருந்த பெண்களால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அவர்கள் தாக்கியுள்ளனர். பெண்கள் எப்பொழுதும் தங்களை காத்துக் கொள்ள முயல வேண்டும். என்றார்.

06-02-2009 அன்று தேசிய பெண்கள் கமிஷன் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.

26-06-2018 அன்று பிரமோத் முத்தாலிக் கைது செய்யப் பட்டார்.

28-06-2018 அன்று தேசிய பெண்கள் கமிஷன் இரண்டாவது முறையாக, கிரண் சத்தா என்றவர் கீழ் அனுப்பியது[4]. உயிருக்கு பயந்து பெண்கள் ஓடியதாக அக்குழு கூறியது.

06-03-2009 அன்று நிர்மலா வெங்கடேஷ் பிஜேபியில் சேர்ந்தார்.

09-03—2009 அன்று பிரமோத் முத்தாலிக், தெற்கு கன்னட பகுதிற்குள்நுழைய தடை விதிக்கப் பட்டது.

Amnesia, the lounge, Mangalore-pub attack

சங்கப்பரிவார் குற்றஞ்சாட்டப்பட்டது: அன்றிலிருந்து, அது தேசிய செய்தியாகி, குறிப்பாக, ஆங்கில ஊடகங்கள் அதிகமாகவே வரிந்து கட்டிக் கொண்டு, நாள் முழுவதும் அதையே, திரும்ப-திரும்ப காட்டிக் கொண்டிருந்தது. “மாரல் போலீஸிங்” அதாவது, தார்மீகப் பெயரில் போலீஸ் போல தட்டிக் கேட்கிறார்கள், அடாவடித் தனம் செய்கிறார்கள் என்றா முறையில், வாத-விவாதங்கள் நடத்தப் பட்டன. பெண்கள் பப்புக்கு போகலாம், குடிக்கலாம், ஆடலாம், இதெல்லாம் அவர்களுடைய உரிமைகள் என்று தான் வாதிக்கப் பட்டது. ஆனால், சம்பந்த பெண்கள் அல்லது அவர்களது பெற்றோர் கலது கொள்ளவில்லை. நவநாகரிகமான பெண்கள் கலந்து கொண்டு அதிரடியாக பேசினர். டேடிங் வைப்போம், சேர்ந்து வாழ்வோம், கருத்தடை மாத்திரைகள் கூட உபயோகிப்போம் என்றெல்லாம் பேசியது திகைக்க வைத்தது. அப்பொழுதைய மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி இதனை ஆர்பாட்டமாக ஆதரித்தார். ஆஹா, சங்கப் பரிவார் எங்களை போலீஸ் போல நடத்துகிறது, எங்களுக்கு குடிக்க, கூத்தடிக்க எல்லாம் உரிமைகளும் உள்ளன என்று பயங்கர போராட்டம் வெடித்தது! “பப் பரோ”, பப்புகளை எல்லாம் நிரப்புங்கள் என்று அம்மையார் ரேணுகா சௌத்ரி, இளசுகளை உசுப்பி விட்டு, போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்! இப்பொழுது கூட, ஶ்ரீராம் சேனா, முன்பு ஆர்.எஸ்.எஸ் அங்கமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றது[5].

Mangalore-pub attack- charge sheeted

தற்கொலை செய்து கொண்ட பையன்களுக்கு இருக்கின்ற ஈரம், துக்கம், மானம், குடித்து கலாட்டா செய்த பெண்களிஅம் இல்லாதது: பெண்களின் பெற்றோர், உற்றோர் இப்பிரச்சினையின் தீவிரம், முக்கியத்துவம், பெண்களின் எதிர்காலம் முதலியவற்றை அறிந்து, அடக்கி வாசிக்க முடிவு செய்தனர். ஶ்ரீராம் சேனை நல்லது தான் செய்தது என்றனர். அதற்குள், புகார் கொடுக்கப்பட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்ட்டு, சுமார் 40 பேர் கைது செய்யப் பட்டனர்[6]. மங்களூர் பப் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட இளைஞர்களுள் இருவர் அஸ்வின் மற்றும் பிரவீன் அக்ஷபவன் [Ashwin and Praveen Akashbhavan], கைது, ஜெயில் என்று மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டனர்![7] ஆனால், குடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் வருத்தப் பட்டனரா என்று தெரியவில்லை. இருவர், வெளிநாட்டிற்கு சென்று விட்டனர். அதாவது, சம்பந்தப் பட்டோர், இப்பிரச்சினையை சுமூகமாக முடித்து விட பார்த்தனர். இந்தியாவை தாலிபன் போன்று பெண்களை அடக்கியாள போகின்றனர் என்ற பிரச்சாரத்தை மங்களூர் மக்கள் விரும்பவில்லை. ரேணுகா சௌத்ரி, அவ்வாறு சொன்னதை உள்ளூர் மக்கள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர். மேலும், இதில் ஈடுபட்ட பெண்ளில் சிலர் பணக்காரர்கள் மற்றும் பப்புகளை வைத்திருப்பவர்கள் அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள்.

© வேதபிரகாஷ்

13-03-2018

Amnesia Pub- some of the girls drunken-2

[1] Girls assaulted in Mangalore pub by Sri Ram Sena and Bajrang Dal activists

https://www.youtube.com/watch?v=l7yg-bdlmko

[2] tv daijiworld, Mangalore’s first internet tv. Owned by Daijiworld Media Pvt Ltd, https://www.youtube.com/watch?v=lEbD2aXs-XU

[3] The Hindu, Another official in Mangalore to investigate pub attack, March 2 2009. 00:00 IST; March 31 2010 17:26 IST.

[4]  Union Minister of Women and Child Development Renuka Chowdhury has sent Kiran Chadha, Joint Secretary (Women Bureau), Union Ministry of Women and Child Development, to Mangalore to inquire into the attack on January 24 against women guests at a local pub by Sri Rama Sene activists. Ms. Venkatesh’s statements in Mangalore had stirred a hornet’s nest as she blamed the pub owner for failing to provide proper security to the women and recommended cancelling of its licence.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Another-official-in-Mangalore-to-investigate-pub-attack/article16653223.ece

[5] Indian Express, 26 accused acquitted in Mangalore pub attack, Published: 13th March 2018 03:18 AM; Last Updated: 13th March 2018 03:18 AM.

[6] Deccan Herald, Amnesia: Freedom for Mangaluru pub attackers,, Published: Mar 13, 2018, 3:03 am IST; UpdatedMar 13, 2018, 3:03 am IST

[7] https://www.deccanchronicle.com/nation/crime/130318/amnesia-freedom-for-mangaluru-pub-attackers.html

இரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்!

நவம்பர் 26, 2016

இரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்!

under-the-guise-of-folk-dance-vulgarity-spread

1960களிலிருந்து 2016 வரை திரைப்படங்கள் அவ்வாறு கேடுகெட்டது ஏன், அத்தகைய படங்களை எடுப்பது யார்?: திரைப்படங்கள் ஏற்கனவே நமது கோவிலை நல்ல விதமாக காண்பிக்கத் தவறி விட்டன.

இனி திரைப்படங்களில் கோவில்களில் காதல் பாடல்கள், நடனங்கள் இடம்பெறுவது போன்ற காட்சிகளை சென்சார் தடை செய்ய வேண்டும். ஒரு மதத்தை, ஜாதியை இழிவாக பேசுவதை ஏற்காத சென்சார் போர்டு, அந்த மதத்தின் புனிதமான கோவிலை மட்டும் காதலர்கள் மோசமான உடையில் ஆபாச நடனம் ஆடும் இடமாகவும், குத்துப்பாட்டு ஆடும் இடமாகவும் மக்களிடம் காண்பிக்க எப்படி அனுமதிக்கிறது? காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ என எங்கும் சினிமா பாட்டு தான்.

ஏ. பி. நாகராஜன், குன்னக்குடி வைத்தியநாதன் முதலியோர் ஞாபகம் உள்ளதா? அத்தகையோர் இப்பொழுது தமிழகத்தில் ஏனில்லை? 1960களுக்குப் பிறகு என்ன நடந்தது? “கோவிகளில் டூயட்” போன்ற “ஐடியா” எப்படி, யாரிடத்திலிருந்து உருவானது? காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ முதலியவற்றை இயற்றும் கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள்…….யார், அவர்களுக்கு விருதுகள் கொடுத்து, கௌரவிப்பது யார்?

அதிலும் பள்ளி, கல்லூரி தேர்வுப்பருவத்தில் கோவில் திருவிழா என்ற பெயரில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை ஆடல் பாடல் குத்தாட்ட நிகழ்ச்சியை கோவில் நிர்வாகமே செய்து கொடுப்பது தெய்வத்தை நினைக்காமல் தெருக்கூத்தையே நினைக்க வைக்கும்.

obscene-and-vulgar-dances-promoted-by-cine-world

திராவிட நாத்திக அரசியலை அடையாளங்காணாமல், நடிகர்கள்ஜாதி என்றெல்லாம் பேசுவது போலித்தனமே: முன்பெல்லாம் கோவில்களில் கட்டுப்பாடு இருந்தது [அப்படியென்றால், இப்பொழுது ஏனில்லை என்று கூறிவிட்டு தொடர வேண்டும், ஆனால், அவ்வாறு நோய் மூலம் அறியப்படவில்லை].

இன்று இருக்கும் இளைய தலைமுறை அஜித், விஜய், சூர்யா என பிரிவாக பிரிந்து தெருவுக்கு தெரு ஜாதி ரீதியில் நடிகர் பாடலும், ஜாதிப் பாடல்களும், ஜாதி தலைவருக்கு சுவரொட்டி ஓட்டுவதும், குடித்து விட்டு கோவில் திருவிழாவில் ஆடுவதை பெருமையாக நினைப்பதும் காளிக்கே பொறுக்குமா எனத் தெரியவில்லை. சிவராத்திரி அன்று கூட தெருவுக்குத் தெரு சினிமாப்பாடல்களை (பக்திப் பாடல்கள் அல்ல) ஒலிபரப்பி சிந்தனையில் சினிமாப் பாடல்கள் தான் நிற்கும் நிலை உள்ளது.

ஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன திராவிட சித்தாந்திகளால் ஏன் ஜாதிகளை அழிக்க முடியவில்லை? ஜாதிகளை, ஜாதி சங்கங்களைப் பெருக்கியதை அவர்கள் ஏன் தடுக்கவில்லை? “காளிக்குப் பொறுக்குமா” என்று கேட்பதை விட, அவ்வாறு ஆடும், ஆடுவதை பார்க்கும், அவர்களுக்கு காசு கொடுக்கும்….முதலியோரின் அம்மாக்கள், சகோதரிகள், மகள்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், பாட்டிகள் ……முதலியோர் எப்படி அமைதியாக இருக்கின்றனர்?

obscene-and-vulgar-dances-at-dravidian-parties-even-bjp-followed

கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்: இதற்கும் மேலாக வாண வேடிக்கை என்று இதயம் பதற வைக்கும் வெடியுடன் திருவிழா நடத்துவார்கள். வெடி போட்டு விழா நடத்துகிறேன் என்று ஊரில் உள்ள வயதானவர்கள், பசு, நாய் விலங்கினங்கள் முடங்கும் அளவிற்கு வெடிச் சத்தமும், கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்.

நமது தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய இசை மட்டுமே உகந்தது. முன்பு வெடி போட்டு சாமி ஊர்வலமாக வருவதை சொன்னார்கள். இன்று சிங்கப்பூர் முருகனுக்கு விழா எடுப்பதை ஒரு நிமிட அலைபேசியில் தெரிவித்து விடுகின்றனர். பிறகு எதற்கு வீண் வெடிச்சத்தம், வெடிச் செலவு? அந்த வெடிச் செலவில் 10 மாணவர்களை படிக்க வைக்கலாமே அல்லது ஊருக்கு சுத்திகரிப்பு குடிநீர் சாதனம் அமைக்கலாமே?

“சப்த மாசு” விசயத்தில் இறங்கி, குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது. வெடி-வாணவேடிக்கைகள் எல்லாம் கோவில் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. உண்மையில், நீரை மாசு படுத்தியது யார் என்று தெரிந்து கொண்ட பிறகு, அதனை சுத்தக்ரிப்புப் பற்றி பேசலாம். சமூக சீரழிகளின் மூலங்களை வெளிப்படையாக சொல்லாமல், சுற்றி வளைக்கும் போக்குதான் தெரிகிறது.

இனி வரும் வெயில் காலத்தில் மக்களின் மன நிலையும் சூடாகவே இருக்கும். விவசாய வேலைகள் இல்லாததால் வீண் பிரச்னைகளும், மது போதைத் தகராறுகளும், சாதி ரீதியில் சண்டைகளும் அதிகமாக ஏற்படும். ஆகவே கோவில்கள் நமது ஒழுக்கத்தை மேம்படுத்தவே முன்னோர்கள் கோவிலை கொடுத்தார்கள் என்பதை மறந்து, கோவிலை பொழுது போக்கு இடமாக மாற்றியதை அரசும் வேடிக்கை பார்ப்பது கோவிலின் புனித தன்மையை அழிக்கிறது.

obscene-and-vulgar-dances-at-temples-under-the-guise-of-folk-dance

ஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை, அதிலுள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும்[1]: பல ஆயிரம் வருடங்கள் புயல், மழை பார்த்த கோவில்கள், பல நூறு அந்நிய படை எடுப்பை மீறி வளர்ந்த கோவில்கள், குடி போதையால், சினிமாவால் வீழ்த்தப்படுகிறது.

ஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை. அந்த மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும். தற்போது அந்தக் காரியம் கோவில் திருழா என்ற பெயரில் அடாவடியாக மது போதைக் கும்பலால் நடக்கிறது என்றால் மிகையாகது

இது வரை கொஞ்சம் பெரியாரிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் கலந்து கருத்துகளை சொல்லியப் பிறகு, இங்கு ஏதோ “ஒரு மதத்தை” ஆதரிப்பது போல எழுதுவது போலித்தனமே. முதலில், “மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை,” அழித்து வருவது யார் என்று வெளிப்படையாக சொல்லப்படவேண்டும்.

obscene-and-vulgar-dances-at-temples-pudukottai-july-2015-dinakaran

குழப்பவாதத்தில் வெளிப்பட்டுள்ள தீர்வு பரிந்துரைகள்: திருவிழாவில் தெய்வ அனுக்கிரகம் கூட,

1.       சிறிய கோவில், பெரிய கோவில் என்றாலும் கடவுள் ஒன்றே என நினைத்து சினிமா பாடல், ஜாதிப்பாடல், ஜாதி ரீதியான சுவரொட்டிகள் இல்லாத கோவில் திருவிழா வேண்டும்.

2.       அசைவ உணவு இல்லாமல் இருக்க வேண்டும்.

3.       பொது இடங்களில் புகை பிடிக்க, மது அருந்த தடை இருப்பது போல, பொதுக்காரியங்களில் மது குடித்து விட்டு வருவோருக்கு கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

4.       திருவிழா நேரங்களில் உள்ளூர் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளித்து மக்களின் குடிபோதைக்கு விடுமுறை தர வேண்டும்.

5.       வான வேடிக்கை, அதிக சத்தம் தரும் வெடிகள், காது கிழியும் கேரளா போன்ற மேளத்திற்கு தடை வேண்டும்.

1.       கடவுளே இல்லை, இந்து கடவுளே இல்லை என்று அறிவித்து தானே, இவையெல்லாம் நடக்கின்றன. “பராசக்தி”யில் ஆரம்பித்தது, இவ்வாறு விரிந்துள்ளது.

2.       பசுக்கறி சாப்பிடும் விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இது கிண்டலா, கேலியா என்று தெரியவில்லை!

3.       அது தான், கோவில் “பொது இடம்” என்று அறிவித்து விட்டதால், கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே? அவர்கள் தானே இப்பொழுது தக்கார், தர்மகர்த்தா என்றெல்லாம் பதவிகளில் இருந்து கொண்டு, இத்தகைய “கொண்டாட்டங்களை” நடத்துகின்றனர்!

4.       பாவம், உண்ணாவிரதத்திற்கு, எதிராக உண்ணும் விரதம் கொண்டாட்டம் நடத்தப்படும் தமிழக்த்தில், அப்படியே விடுமுறை அளித்தாலும், சரக்கடிக்காமலா இருப்பார்கள்?

5.       இதெல்லாம், தீபாவளி வேண்டாம் போன்ற, போலித்தனமான வாதங்கள் தாம்.

‘டங்கா மாரி’ இனி அடங்கட்டும். …மாரியம்மன் மனம் குளிரட்டும்..![2], என்று முடித்திருக்கும் போது, இந்து மதம் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகிறது. எஸ். அசோக் நல்ல கருத்துகளை பதிவு செய்ய ஆசைப்பட்டாலும், குழப்புவாதத்தால், “கிச்சடி” சித்தாந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

© வேதபிரகாஷ்

26-11-2016

obscene-and-vulgar-dances-at-temples-madurai-dinakaran

[1] விகடன், மாரியம்மனுக்கும்டங்கா மாரியா‘?, எஸ்.அசோக், Posted Date : 15:43 (06/04/2015), Last updated : 16:00 (06/04/2015)

http://www.vikatan.com/news/vasagar-pakkam/44753.art

[2] http://www.vikatan.com/news/vasagar-pakkam/44753.art

 

கோவில்களில் ஆபாச-அசிங்க நடனங்கள் நடப்பதற்கு யார் காரணம்? இரட்டை உடை நடனத்தை ஆடுவது, ஆட்டுவிப்பது, அத்தகையோரைக் கூட்டி வருவது யார்-யார்?

நவம்பர் 26, 2016

கோவில்களில் ஆபாச-அசிங்க நடனங்கள் நடப்பதற்கு யார் காரணம்? இரட்டை உடை நடனத்தை ஆடுவது, ஆட்டுவிப்பது, அத்தகையோரைக் கூட்டி வருவது யார்-யார்?

obscene-and-vulgar-dances-at-temples-denied-permission

சட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்கும் பொறுப்பு போலீசிடம் ஒப்படைப்பு[1]: “பிரவீன் பாய் தொக்காடியா மற்றும் கர்நாடகா மாநில அரசு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2004-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ‘சட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்கும் பொறுப்பை போலீசாரிடம் ஒப்படைத்து விட வேண்டும்என்று தெளிவாக கூறியுள்ளது. இதன்படி, மனுதாரர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்க எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை என்று முடிவு செய்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்”. இவ்வாறு, கோவில் திருவிழாவின் போது ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்[2].

obscene-and-vulgar-dances-at-temples-ramanathapuram-tv-18நீதிபதியை ஏமாற்றிய வக்கீலும், கோவில்களை கொள்ளையடிக்கும் திராவிட கூட்டமும்: நீதிபதியில் உத்தரவில் பல விசயங்கள் வெளியாகியுள்ளன. வரம்பு மீறிய திருவிழா அமைக்கும் கூட்டத்தினருக்கு ஆஜரான வக்கீல், நிதிபதியையே நம்பும்படி, ஏமாற்றியுள்ளார். இதனால், அவரும், நம்பி முன்பு அனுமதி கொடுத்துள்ளார். அதை அறிந்ததால் தான், இப்பொழுது, வருத்தம் தெரிவித்துள்ளார்[3]. “மனுதாரர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்க எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை என்று முடிவு செய்கிறேன்,” என்றபோது, அவர்களது உண்மை உருவத்தைத் தோலுரித்திக் காட்டியுள்ளார்[4]. அவ்வாறு உரிமைகள் இல்லாதவர்கள் கோவில்களை நிர்வகிப்பதால் தான், கோவில்கள் சீரழிந்து வருகின்றன, சிலைகள் களவாடப்பட்டு வருகின்றன, சொத்துகள் கொள்ளை போகின்றான. போதாகுறைக்கு, முஸ்லிம்கள், கிருத்துவர்கள் எல்லாம் கோவில் சொத்துகளை வாங்கியுள்ளனர். இன்றும் அனுபவித்து வாடகையை லட்சக்கணக்கில், கொடுக்காமல் ஏய்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் துணைபோவது, நாத்திக-இந்து-விரோத திராவிட ஆட்சியாளர்களும், அரசு நிர்வாகிகளும் தான் காரணம். “இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்,” என்று தள்ளுபடி செய்துள்ளார். இனி, மேல் முறையீடு செய்வார்களா என்று பார்க்க வேண்டும்.

omalur-chemmandippatti-mariamman-koil-nude-dance-june-2016ஜூலை 2013ல் நடந்த ஆபாச நடனம், கைது: உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது. அரூரை அடுத்த முத்தானூரில் கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக 2 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். அரூர் வட்டம், முத்தானூரில் மாரியம்மன் கோவில் திருவிழா ஜூன் 26 ஆம் தேதி 2013 நடைபெற்றது. இந்த விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த கிராம மக்கள் காவல்துறையில் அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறையிலனர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விழா குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதிப்பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை காவல்துறையினர் வீடியோ படம் பிடித்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், நடன நிகழ்ச்சியில் ஆபசமாகவும், பெண்களை கேலியாக சித்தரிக்கும் வகையிலும் இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக, நடனக்குழு மேலாளர் சுபாஷ் (32), முத்தானூர் கிராமத் தலைவர் அம்மாசி (எ) திருப்பதி (49) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்[5]. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முத்தானூர் ஊர்க்கவுண்டர் ராஜேந்திரன், கோயில் தர்மகர்த்தா சக்கரவர்த்தி, பொங்களூர் மல்லிக்கரையைச் சேர்ந்த ராஜி மனைவி அமிர்தா, சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி அழகுஜோதி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்[6].

obscene-and-vulgar-dances-at-dravidian-partiesகோவில் திருவிழா பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் முதலிய காரணிகளை மீறுவது ஏன்?: விகடனில், எஸ். அசோக் என்பவர், செக்யூலரிஸம் மற்றும் இந்துமத ஆதரவு தோரணையில் எழுதியுள்ள ஒரு கட்டுரை, தமிழகத்தின் கோவில்களில் நடக்கும் போக்கை அறியமுடிவதால், அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவர் கொடுத்துள்ளவற்றை இடது பக்கம் மற்றும் எனது கருத்தை வலது பக்கம் என்று கொடுக்கப்பட்டுள்ளன:

கோவில் திருவிழா என்றாலே ஆபாசப் பாடலும், அடிதடி பிரச்னையும், போலீஸ் தடியடியும் நவீன திருவிழாக்களின் அடையாளமாக மாறி வருகிறது. போலிச் சாமியார், காமச் சாமியார், ஆபாச அர்ச்சகர், ஊழல் கோவில் நிர்வாகம், கோவில் வருமானத்தை மட்டுமே பார்க்கும் அரசாங்கம் என்பதையெல்லாம் தாண்டி கடவுள் அருள் நமக்கு கிடைக்க கோவிலுக்கு சென்றால் அங்கே ‘டங்கா மாரி’ பாடலுக்கும் சாமி வந்து ஆடும் அளவிற்கு பாடல் ஒலிபரப்பபடுகிறது. முதலில், அத்தகையவை எவ்வாறு, எப்பொழுதிலிருந்து நடக்க ஆரம்பித்தன, யாரால், எவ்விதமாக ஊக்குவிக்கப்பட்டன, இப்பொழுதும் அவற்றை நடத்துவது யார் போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லியாகி வேண்டும். போலி என்று எதுவும் திடீரென்று உருவாகிவிட முடியாது. அந்த போலிகளின் உபயோகம் யாருக்கு லாபத்தைக் கொடுக்கிறது என்பதனையுமாராய வேண்டும்.

obscene-and-vulgar-dances-at-dravidian-parties-admkகோவில் திருவிழாவா? இல்லை, ஆபாச நடனகுடிகாரர்களின் போதைவிழாவா: கோவில் திருவிழாவா? இல்லை, குடிகாரர்களின் போதைவிழாவா எனச் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு நிலைமை உள்ளது.

இன்றைக்குள்ள சூழலில் நாகரீகமான குடும்பத்தினர் கோவில் திருவிழா, முக்கியமான கோவில் நிகழ்ச்சி என்றாலே பயந்து வீட்டில் முடங்கும் நிலை உள்ளது. ஆதி சங்கரர், ஜீயர், மோட்சம் அடைந்த காஞ்சி பெரியவர் போன்றோரால் வளர்க்கப்பட்ட புனிதமான கோவில் சடங்குகள் இன்று சங்கடங்களாக மாறி விட்டது. மதத்தலைவர்களை இழிவு படுத்தும் நிலையில், தமிழக பௌத்தறிவுவாதிகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் போது, அவர்களின் சீடர்கள் பயங்ரமாகத் தாக்கப்பட்டு வரும் போது, பக்தர்களும் வீடுகளில் முடங்கித் தான் கிடக்கின்றனர். நடைபெற வேண்டிய சடங்குகள், கிரியைகள், விழாக்கள் எல்லாம் இவர்களால் தடுக்கப்பட்டுள்ளன.

obscene-and-vulgar-dances-at-temples-madurai-dinakaranகோவிலுக்காக மாண்ட மனிதர்கள் பிறந்த பூமி இது: அன்னியப்படை எடுப்பின் போது கோவிலுக்காக மாண்ட மனிதர்கள் பிறந்த பூமி இது. சரண் அடைந்து தூக்கு கயிறை ஏற்க வேண்டும் என்று சொன்ன ஆங்கிலேயருக்கு சவலாக விளங்கிய மருது சகோதரர்கள், காளையர் கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று ஆங்கிலேயர் மிரட்டியவுடன் உயிரைக்கொடுத்தாவது கோவிலை காக்க வேண்டும் என்று உயிர் துறந்து கோவிலை மீட்ட மருது சகோதரர்கள் வாழ்ந்த மண்ணா இது என சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இங்கிருந்து பல ஆயிரம் செலவழித்து கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை சட்டை இல்லாமல் பக்தியுடன் வணங்கும் தமிழன், திருப்பதியில் விரதமிருந்து பெருமாளை சேவிக்கும் நம்மவர்கள் இங்கு மட்டும் ஆட்டம் போடுவது ஏன்? முன்பெல்லாம் கோவில் விழாக்களில் ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், பட்டிமன்றம் என ஆன்மிகத்தோடு இணைந்த நிகழ்ச்சிகள் நடக்கும். தற்போது ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்துகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குத்துப்பாட்டை பார்த்தால் நம் தெய்வ வழிபாட்டின் புனிதத்தை எப்படி புரிந்துகொள்வார்கள்? கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று, ஆங்கிலேயர் போல, இன்றும் சொல்லி மிரட்டியது அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தானே? ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், …..முதலியவை ஒழிக்கத்தான் “பட்டிமன்றம்” வந்தது. பிற்கு, இந்த ஆபாச-அசிங்க “இரட்டை உடை” நடனம் வந்தது. கேரளா-ஆந்திரா சென்று வந்தவர்களுக்கு, இதெல்லாம் தெரியாமல் போனது ஏன்? “ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்து”, என்று எந்த அப்பன், பெருமாள் சொன்னார்? இங்கிருக்கும் பெரியார், அறிஞர், கலைஞர், பேராசிரியர், மூதறிஞர், கவிக்கோ, பெருங்கவிக்கோ, ……முதலிய இத்யாதிகள் ஏன் கவலைப்படவில்லை?

© வேதபிரகாஷ்

26-11-2016

Karu-as-nataraja

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா!

[1] தினத்தந்தி, ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனத்தை அனுமதிக்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு,  பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 26,2016, 1:32 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 26,2016, 3:45 AM IST.

http://www.dailythanthi.com/News/State/2016/11/26013226/High-Court-judge-orders.vpf

[2] http://www.dailythanthi.com/News/State/2016/11/26013226/High-Court-judge-orders.vpf

[3] The Hindu, Court declines permission for ‘dance programmes’ at temple, STAFF REPORTER,CHENNAI: NOVEMBER 26, 2016 00:26 IST UPDATED: NOVEMBER 26, 2016 00:26 IST.UPDATED: NOVEMBER 26, 2016 00:26 IST

[4] http://www.thehindu.com/news/national/tamil-nadu/Court-declines-permission-for-%E2%80%98dance-programmes%E2%80%99-at-temple/article16702780.ece

[5] வெப்துனியா, கோவில் திருவிழாவில் ஆபாச நடனம், சனி, 26 நவம்பர் 2016

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-113070100033_1.htm

இரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி

நவம்பர் 26, 2016

இரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி

adal-padal-dance-court-denied-permission-26_11_2016_007_014

நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவு: நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்தனர்[1]. ஆபாச நடனங்கள் நடைபெறுவதாலும், அதற்கு தடை இருப்பதாலும், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீஸ் அனுமதி வழங்காததால், நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த மணி, ராமசாமி உட்பட 6 பேர் தனித்தனியாக, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்[2]. அதில், ‘தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். “பாதுகாப்பும் வழங்கும்படியும்” என்றதே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக இருக்கிறது.

obscene-and-vulgar-dances-at-temples-judge-misled-by-the-advocateவழக்குக் கோப்புகளைப் பார்த்த்போது நீதிபதிக்கு சந்தேகம் வந்தது: இந்த வழக்கு வெள்ளிக்கிழமை 24-11-2016 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் [Justice P N Prakash] விசாரித்தார். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அடிக்கடி அனுமதிக் கேட்டு வழக்கு தொடர்வதை கண்டு சந்தேகம் கொண்டார்[3]. மேலும் “சுயவிளக்க” முனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் முரண்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கறிஞர் வேறுபட்ட ஆறு குழுக்களுக்கு ஆஜராவது முதலியனவும் சந்தேகங்களைக் கிளப்பின. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்[4].

court-declines-permission-for-dance-programmes-at-temple-the-hindu-26-11-2016-1

போலீஸ் அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தது[5]: இதன்படி, போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன் ஆஜராகி அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தார்[6]. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பலர் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டும், மனுதாரரின் கோரிக்கை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசுக்கு உத்தரவிடுகிறது. இந்த உத்தரவை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வக்கீல்களுடன், கிராமத்தினர் பலர் கூட்டமாக வந்து விடுகின்றனர். ஐகோர்ட்டே உத்தரவிட்டுள்ளது, அதனால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரச்சினை செய்து, ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.”

court-declines-permission-for-dance-programmes-at-temple-the-hindu-26-11-2016-2சாதி ரீதியாக மனு, ஆனால், ஆஜராகுவது ஒரே வக்கீல்: போலீஸ் சூப்பிரண்டு தொடர்கிறார், “ஒரு கிராமத்தில் உள்ள பொது கோவிலின் திருவிழாவுக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த பல்வேறு சாதியினர் தனித்தனியாக இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக ஒவ்வொரு சாதியினரும், தனித்தனியாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உத்தரவினை பெறுகின்றனர். அந்த உத்தரவின் அடிப்படையில் கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர். சந்தைபேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த 6 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தனித்தனியாக உத்தரவுகளையும் பெற்றுள்ளனர். அதேநேரம், இந்த 6 மனுதாரருக்கும் ஆஜரானவர் ஒரே வக்கீல் தான்,” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஆக, கோவில் திருவிழா நடத்துவதை விட, மற்ற விவாகரங்கள் தான், அதிகமாக இருக்கின்றன. ஜாதி-கட்சி-பணம் வசூல் போன்ற விவகாரங்கள் பின்னணியில் இருக்கும் போது, கடவுள், கடவுள் நம்பிக்கை, கோவில்…….முதலியவற்றாஇப் பற்றி இவர்கள் எப்படி கவை கொள்வார்கள்?

obscene-and-vulgar-dances-at-templesநல்ல அனுபவம்பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர். ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர்: இந்த அறிக்கையை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியையும் போலீசாரிடம் இருந்து வாங்கி பார்த்தார். இதன்பின்னர் நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட மனுக்களை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசாருக்கு நான் தான் பல்வேறு தேதிகளில் உத்தரவிட்டேன். அந்த உத்தரவுகள் எல்லாம், வக்கீல்கள் மீது வைத்துள்ள நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பிறப்பித்தேன். கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி, ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இதற்காக ஆழ்ந்த வேதனை, வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். கடந்த காலத்தில் நடந்த கெட்ட சம்பவங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும். அதில் நீதிபதியான நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. எனக்கும் இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.”

 obscene-and-vulgar-dances-at-temples-judge-p-n-prakash

நடக்கும் நடனங்கள் சட்டத்தில் உள்ள விளக்கங்களையும் மீறுயுள்ளன: நீதிபதி தொடர்கிறார், நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை பார்த்தோம்[7]. பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர்[8]. ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர். அது நிச்சயமாக அபாசம் மற்றும் அசிங்கம் என்ற வார்த்தைகளின் [ surpassed the very definition of the words “obscenity” and “vulgarity”] விளக்கத்தையும் மீறுகின்றன[9]. குழந்தைகள், மாணவர், முதியோர், பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது நிச்சயம்[10]. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரும், இதுபோன்ற நிகழ்ச்சியை தனித்தனியாக நடத்துவதால், இதில் ஏற்படும் சிறு பிரச்சினைகள் கூட மிகப்பெரிய சாதி கலவரமாக மாறி விடுகிறது என்று போலீசார் தன் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், சேலத்தை சேர்ந்த தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் நலச்சங்கம், இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தன்னிடம் மனு கொடுத்துள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்”.

© வேதபிரகாஷ்

26-11-2016

temple-dance-acceotable-form

[1] தினமணி, கோயில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்த எந்த உரிமையும் கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு, Published on : 26th November 2016 02:55 AM .

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/nov/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2605107.html

[3] தினகரன், கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு, Date: 2016-11-25 19:57:45.

[4] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=261508

[5] லைவ்டே, கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு !!, ஜூலை.2, 2013.

[6] http://liveday.in/chennai-online-tamil-news/hc-refused-to-allow-archestra/

[7] The Times of India, HC says no for two piece dance at temple festivals, TNN | Updated: Nov 26, 2016, 02.14 AM IST.

[8] http://timesofindia.indiatimes.com/city/chennai/HC-says-no-for-two-piece-dance-at-temple-festivals/articleshow/55628876.cms

[9] Indian Express, Judge regrets grant of permission for ‘adal-padal’, By Siva Sekaran  |  Express News Service  |   Published: 26th November 2016 04:00 AM, Last Updated: 26th November 2016 04:00 AM.

[10] http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/nov/26/judge-regrets-grant-of-permission-for-adal-padal-1542780.html