திமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா? ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? [2]
நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடிகம் ஆடிய ஸ்டாலின் (2015): ஸ்டாலின் தனது ‘நமக்கு நாமே’ பயணத்தின் 10 ஆவது நாளான செப்டம்பர் 2015 அன்று, திருக்கோஷ்டியூர் நோக்கி மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். சுற்றுப்பயணத்தில் திட்டமிடாத பகுதிக்கு ஸ்டாலின் சென்றதால் தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார்[1]. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது[2]. இதைத் தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்[3]. அதாவது, வேடிக்கைப் பார்க்கச் சென்றார் அவ்வளவுதான். இந்து போல அல்லது பக்தியுடன் செல்லவில்லை. பிறகு, அக்டோபர் முதல் வாரத்தில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து குறை கேட்டார். தஞ்சை மேல வீதி காமாட்சி அம்மன் கோவிலில் இந்து மத குருக்கள், அர்ச்சகர்களுடன் கலந்துரையாடினார்[4]. பட்டாச்சாரியர்கள், குருக்கள், அர்ச்சகர்கள் சந்திப்பு என்று ஶ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது அந்த நாடகம். ஸ்டாலின், பின்னர் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ஆயர் மற்றும் தேவாலய பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இதுதான் அந்த இந்துவிரோதியின் செக்யூலரிஸ நாடகம் எனலாம். ஆனால், இந்து அமைப்பினர் இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ரு தெரியவில்லை. ஶ்ரீரங்கத்தில், சந்தனத்தை நெற்றியில் வைத்ததும், போத்திய பொன்னாடையாலேயே அழித்த ஸ்டாலின், இந்து விரோதி தானே?
நாத்திகன் கோவிலுகுச் சென்றதும், பூரண கும்ப மரியாதை பெற்றதும்–ஜூன் 2018: ஜூன் 21-22, 2018 தேதிகளில், இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீனின் துணைவியார் ஹாஜியானி லத்திபா பேகத்தை அவரின் இல்லத்தில் சென்று உடல் நலம் விசாரித்தார். காலை 8 மணியளவில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீராமனுஜர் மடத்தில் இருக்கும் பத்மசாலி திருமண மண்டபத்துக்குச் சென்றார். வரும் வழியில் திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள ரெங்கா கோபுரம் அருகே திருக்கோயில் சார்பில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினை யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது. பின்னர் வெள்ளை கோபுரம் அருகே அகோபிலம் மடத்தைச் சேர்ந்த தேசிய ஆச்சாரியார் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது[5]. இதையடுத்து ஶ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு சுந்தர் பட்டர் தலைமையில் ராஜகோபுரம் அருகே, யானை மாலை அணிவிக்க, அடுத்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்[6]. இதற்கு “நக்கீரன்” கொடுத்துள்ள வக்காலத்து இதோ!
நக்கீரனின் வக்காலத்து – ஆன்மீக அரசியலும், பெண்டாட்டியின் சுக்கிரபரிகார பூஜையும், நாத்திக ஸ்டாலினும்: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பெருமாளை தரிசனம் செய்ய இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் எப்போதும் திரண்டு வருவார்கள்.
தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி தன்னை தக்கவைத்து கொள்வதற்காக மக்களிடையே ஆன்மீகம் குறித்து நிறைய பேச ஆரம்பித்தனர். அதன் ஓரு பகுதியாக தான் சமீபத்தில் ரஜினி அரசியல் இறங்குவேன் என்று அறிவித்ததற்கு பிறகு ஆன்மீக அரசியல் பற்றி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பபட்டது. இந்த நிலையில் இந்த ஆன்மீக அரசியல் என்பது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை என்கிறார்கள். |
நாத்திகர்களுக்கும், பகுத்தறிவுகளுக்கும், வெங்காயங்களும் என்ன ஆன்மீகம் இருக்கிறது, அதிலிருந்து ஆன்மீக அரசியல் வருவதற்கு என்று தெரியவில்லை! அரசமரத்தைச் சுற்றினால் இடுப்புப் பெருக்குமா என்று கேள்வி கேட்கும் கோஷ்டியினருக்கு, ஏனிந்த “ஆன்மீக” ஆசை? யார் நம்புவார்கள்? |
உடன் பிறப்புகள். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிராத்தனை செய்வதற்காக மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி வருவது வழக்கம்.
அப்படி அவர் வரும்போது எல்லாம் அவருடன் கே.என். நேருவின் மனைவியும் வருவார்களாம். எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும், இழந்ததை மீண்டும் பெறுவதற்காகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுக்கிரபரிகாரா பூஜை செய்ததன் பலனாக தான் தன் குடும்பத்திலும், அரசியலிலும் இரு தனித்தன்மை கிடைத்தாம்[7]. அதே போல தான் தற்போதும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்[8]. மு.க.ஸ்டாலின் என்கிறார்கள். |
நாத்திகனுக்கு பெண்டாட்டி சுக்கிரபரிகாரா பூஜை செய்தால், பலன் கிடைக்கும் என்று எந்த புராணம் சொல்கிறது? பெண்டாட்டியின் ஆசையை நிறைவேற்ற மற்ற கோவில்களுக்கும் சென்றிருக்க வேண்டுமே? செல்லவில்லையே? இங்கே மட்டும், பலன் கிடைக்க வேண்டுமானால், வெங்காயம், பெண்டாட்டியுடன் வரவேண்டும் என்று சொல்லப் பட்டதா? |
இதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறவினர்கள் இரண்டு பேரின் திருமணமும், கட்சியினர் இருவரது மகளுக்கும், மகனுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சியும் ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுர வாசலில், யானை வைத்து மாலை அணி்வித்து ஸ்ரீரங்க பட்டர்கள் தலைமையில் ஸ்டாலினுக்கு பூரண மரியாதை கொடுத்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு திருமஞ்சன பொட்டு வைத்தார் பட்டர். அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் மெதுவாக அழித்தார். |
அதாவது ஸ்டாலின் – துர்கா தம்பதியராக வந்து செல்ல, எல்லாமே, திமுகவினரால் செய்த “செட்–அப்” போலும்! அப்படி, எந்த திராவிடப் புரோகிதர் சொன்னார் என்று தெரியவில்லை. பட்டர் வைத்த சந்தனத்தை பட்டென்று, போத்திய பட்டு வஸ்திரத்தினால், துடைத்தெரிந்ததும், பரிகார பூஜை தானோ? சிரித்துக் கொண்டே துரோகம் செய்யும் போக்கு வெளிப்பட்டு விட்டதே? |
உடன் இருந்த வழக்கறிஞர் பாஸ்கர் மாலை அணிவித்த யானைக்கு கரும்பு சாப்பிட கொடுத்தார். கோவிலுக்குள் வருமாறு பட்டர்கள் அழைத்த போது, மறுத்து சென்று விட்டார். அதன் பிறகு உடனே கோவிலின் வெளி சுற்று வழியே ஒரு சுற்று சுற்றி நேராக கல்யாண மண்டபத்திற்கு சென்றார்.
© வேதபிரகாஷ்
15-09-2018
[1] விகடன், மனைவியுடன் ஸ்டாலின் கோவிலுக்கு திடீர் வருகை; சாமி தரிசனம்: கட்சியினரிடையே பரபரப்பு!, Posted Date : 13:03 (29/09/2015)Last updated : 13:43 (29/09/2015)
[2] https://www.vikatan.com/news/tamilnadu/53036.html
[3] தமிள்ஸ்.நவ்.நியூஸ், திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்லள் மு க ஸ்டாலின், அக்டோபர் 17, 2015.
[4] http://tamilsnow.com/?p=62030
[5] விகடன், பூரண கும்ப மரியாதை… யானை ஆசீர்வாதம்… ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு நடந்த வரவேற்பு, சி.ய.ஆனந்தகுமார், மற்றும்ன்.ஜி.மணிகண்டன், Posted Date : 11:48 (22/06/2018)Last updated : 11:48 (22/06/2018)
[6] https://www.vikatan.com/news/tamilnadu/128482-stalins-srirangam-visit.html
[7] நக்கீரன், மனைவிக்காக ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின்!, ஜே.டி.ஆர், Published on 22/06/2018 (12:28) | Edited on 22/06/2018 (12:30)
[8] https://nakkheeran.in/24-by-7-news/politics/mk-stalin-cames-srirangam-temple-his-wife
குறிச்சொற்கள்: இந்து, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துத்துவம், இந்துமதம் தாக்கப்படுவது, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், சுடாலின், துர்கா, நெற்றியில் குங்குமம், ரத்தம், ஸ்டாலின்
10:17 முப இல் ஏப்ரல் 2, 2019 |
[…] https://antihidnu.wordpress.com/2018/09/26/proven-anti-hindus-like-dravidian-leaders-need-not-be-apo… […]
LikeLike
10:27 முப இல் ஏப்ரல் 2, 2019 |
[…] https://antihidnu.wordpress.com/2018/09/26/proven-anti-hindus-like-dravidian-leaders-need-not-be-apo… […]
LikeLike