“கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு , சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும் தூஷணங்கள் [1]
கோபிகைகளின் உடைகளை அபகரித்த ஓவியத்தை வைத்டுக் கொண்டு இந்து—தூஷணம் செய்வது: ராஜா ரவி வர்மா [1848-1906] வரைந்த “கோபிகா வஸ்திர ஹரன” [கோபிகைகளின் உடைகளைக் கவர்ந்தது] ஓவியத்தை வைத்துக் கொண்டு, இந்து-விரோதிகள், நாத்திகர்கள் தூஷணத்தை செய்து வருகிறார்கள். “கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார்கள்[1]. அத்தகைய ஓவியத்தை வரைவதற்கு ரவி வர்மா ஒன்றும் முட்டாள் அல்ல. கிருஷ்ணருக்கு அப்பொழுது வயது ஐந்து மற்றும் ஒன்பது என்பதால் அவ்வாறே வரைந்தார். அதாவது, “கோபிகா வஸ்த்ர ஹரனம்” ஐந்து வயதில் மற்றும் “ராஸலீலா” [கோபிகைகளுடன் கிருஷ்ணர் நதியில் நீராடியது] ஒன்பதாவது வயதில் நடந்தது என்பதை அறிந்தே, அதனால் அவர் அவ்வாறு சித்தரித்தார். ஆனால், இந்துவிரோதிகள், நாத்திகர்கள், வலதுசாரி-மார்சிஸ்ட் எழுத்தாளர்கள் முதலியோர், இதனை ஆபாசமாக விமர்சிப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
துலுக்க–நாச்சியும், இந்து–நாச்சியும் – செக்யூலரிஸத்திலும் வேகாத பருப்புகளும் ஒப்பீடுகளும்: கலையை கலையாகப் பார்த்து ரசித்து பாராட்ட வேண்டும் என்று விளக்கம் கொடுக்கும் சகிப்புத் தன்மை தொட்டாச் சிணுங்கிகள் தாம், இந்த குரூர விமர்சனம் செய்வது என்பதனை கவனிக்க வேண்டும். நாயக-நாயகி பாவம் என்ற ரீதியில், துலுக்க பாடகர்கள், “ராதா-கிருஷ்ண” பாவத்தை ரசித்து எழுதியுள்ளனர் என்றும் ஒரு பக்கம் எழுதுவார்கள், பாராட்டுவார்கள். ஆனால், அவர்கள் கடவுளை அவ்வாறு எந்த பெண்ணும் அணுக முடியாது. துலுக்கநாச்சியாரைப் போற்றுவார்கள், ஆனால், எந்த இந்து-நாச்சியும் அல்லாவையே கணவனாக அடைவேன் என்று சொன்னால், அவ்வளவு தான், நடப்பதே வேறு. அதே போலத்தான், கிருத்து மேரியுடன், நாயக-நாயகி பாவம் என்று எந்த பகுத்தறிவு கவியரசும் பாட்டெழுத / ஆராய்ச்சி செய்ய[2] முடியாது. “அல்லா / மொஹம்மது / கதீஜா / பாத்திமா / ஆயிஷா பிள்ளைத் தமிழ்” இப்பொழுது, எந்த வைரமுத்துக் கூட எழுத முடியாது[3]. இருப்பினும் சகிப்புத் தன்மை, எண்ணவுரிமை, மறுப்புத் தெரிவிக்கும் உரிமை என்றெல்லாம் விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கும்.
இந்துத்துவவாதி என்று சொல்லிக் கொண்டு, செக்யூலரிஸ போதையில் ஆதரிக்கும் கூட்டம் (ஏப்ரல் 2015): கடந்த ஆண்டுகளில், ஒரு பெரிய இந்துத்துவவாதியே, இதெல்லாம் சரிதான், ரசிக்கனும் என்று சொன்னது ஞாபகத்தில் உள்ளதா என்று தெரியவில்லை, தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், சமூக மற்றும் தனிப்பட்ட முறைகளிலும் அத்தகைய புரிதல்கள், சமரசங்கள், பரஸ்பர லாப-பங்கீடுகளை வைத்து, இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். அந்நிலையில், இந்து-விரோதிகளை என்னென்பது, ஏனென்பது. இன்றும் அவரை ஆதரிக்க கூட்டம் உள்ளது. அக்ரம் ஹுஸைன் [Akram Hussain, a Guwahati-based artist] என்பவன், ஶ்ரீகிருஷ்ணர் பாரில் [மது குடிக்கும் இடத்தில்], ஜட்டி-பாடி அணிந்த பெண்களுடன் இருப்பது போன்ற சித்திரம், கௌஹாத்தி அருங்காட்சியகத்தில் இருப்பது எடுத்துக் காட்டப்பட்டது[4]. அப்பொழுது அரவிந்தன் நீலகண்டன் போன்றோர், ஆக்ரம் ஹுஸைனை ஆதரித்தனர். அங்கோ, இந்து அமைப்பினர், போலீஸாரிடம் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்தனர்[5]. வழக்கம் போல, பிறகு எல்லோரும் மறந்து விட்டனர். ஆனால், இந்துத்துவவாதிகள், ஏன் இதனை ஆதைக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும். ஒருநிலையை அடைந்து விட்டோம், அதனால், இனி “செக்யூலரிஸப் பழம்” என்று காட்டிக் கொண்டால் தான், அந்நிலை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்று சரசம் செய்து கொள்கிறார்கள் என்று தெரிகிறது. சாகித்ய அகடெமி மற்ற பரிசுகள் வேண்டும் என்றால், “மோடி வாழ்க,” கிடைக்காது என்றால், “பாசிச மோடி ஒழிக” என்பதும் கடைபிடிக்கப் படுகிறது[6].
குழந்தைத் தன்மையினை எப்படி அறிவது, உணர்வது, புரிவது: குழந்தை பெற்று அதன் குறும்புகளை அனுபவிக்காதாவன், ஶ்ரீகிருஷ்ணரின் லீலைகளை அறிந்து-புரிந்து-ரசித்து-அனுபவிக்க முடியாது. ஆக அவனுக்கும் அத்தகைய உணர்வுகளை உண்டாக்கத்தான் “குழந்தை தெய்வம்” கிருஷ்ணர் உண்டாக்கப் பட்டார். அதாவது, குழந்தை இல்லாதவகள் கூட, ஒரு குழந்தை இருந்திருந்தால் முதல் னாதம் இருந்து, ஒவ்வொரு மாதமும் வளர்ந்து, ஒன்று-இரண்டு-மூன்று வயதுகளில் என்னவெல்லாம், மழலையாக பேசியிருக்கும், குறும்புகளை செய்திருக்கும் என்பதை தத்ரூபமாக கிருஷ்ணர் மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. உலகத்தில் இத்தகைய சித்தரிப்பு, ஓவியங்கள், இலக்கியம் எங்கும் இருக்க முடியாது. இடைக்காலத்தில் துலுக்கர்களின் குரூரங்கள் முதலியவற்றால், அது தீவிரமாக்கப் பட்டது. குறிப்பாக அக்கலகட்டத்தில், வளைகுடா நாடுகளில் ஜைனர் மற்றும் பௌத்தர்கள் அதிகம் பாதிக்கப் பட்டதால், அவர்கள் பாரதத்தில் வந்து அடைக்கலமான போது, அவர்களுக்குள் சச்சரவு ஏற்பட்டது. 12ம் நூற்றாண்டில் இதைத்தான், கோரி-கஜினி மொஹம்மது கொள்ளைக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டனர். 16ம் நூற்றாண்டில் பாபர் பயன்படுத்திக் கொண்டான்.
பறிப்பு, கவர்தல் முதலியவற்றில் பலவகை உண்டு: “வஸ்த்ர ஹரன்” இதிகாஸ-புராணங்களில் பலவுள்ளன[7], பீஷ்மர் போன்றவர்களின் முன்னே, துச்சாதனன் திரௌபதியின் ஆடையைப் பறித்தான். கௌரவர்கள் விராடனின் மகள், உத்தரையைக் கூட விட்டு வைக்கவில்லை, அவளுடைய ஆடையையும் பரித்தனர். “ப்ராண ஹரன்,” அதாவது, உயிரை கவர்வது, மனம் அல்லது ஆன்மாவை கவர்வது, போன்றவையும் கிருஷ்ணரின் ராஸலீலைகளில் உண்டு. “சித்த ஹரன்,” மனத்தைத் திருடுவது – விரஜபூமியில் நடந்ததை, கோபியர் மட்டுமே காண-உணர முடியும், மற்றவரால் முடியாது. புல்லாங்குழல் இசையில் கோபியர் [கோகுலத்தில் வாழ்ந்த பெண்கள்] தமது கடமைகளை மறந்து யமுனைக்கு வந்தது “சித்த ஹரண்” ஆகும். துலுக்கரின் “ஸ்திரி ஹரன்” குரூரங்களை கட்டுப்படுத்தவே, புஸ்டி மார்க்கத்திலும், இந்த தத்துவம் அறிமுகப்படுத்தப் பட்டது. இடைகாலத்தில் துலுக்கரின் அட்டகாசம் அதிகமாக இருந்தது, பெண்கள் மற்றும் குழந்தைகளை அபகரித்துச் செல்வது அதிகமாக இருந்தனர். ஒரு பக்கம் காமக்குரூர வெறியர்கள், இன்னொரு பக்கம் ஓரின புணர்ச்சி வக்கிர அரக்கர்கள். இந்நிலையில் தான், பெண் தெய்வம், குழந்தை தெய்வம், தாய்-சேய் தெய்வம் போன்றவற்றிற்கு புனிதம் ஏற்றி, மதிக்க, ஆராதிக்க மற்றும்ன் போற்ற இம்முறை கையாளப்பட்டது. பொதுவாக, மக்களிடையே படும் பஜனைகளில் கூட இவ்விசயங்கள் சேர்க்கப்பட்டன. தவறான அர்த்தம் / விரசம் இருந்திருந்தால், அவ்வாறு செய்யமுடியாது. பெரியவர், மடாதிபதிகள் அப்பொழுதே எதிர்த்திருப்பர். ஆனால், அந்த பஜனைகள் இன்றும் பாடப்படுகின்றன. மக்கள் பக்தியுடன் சிரத்தையுடன் கேட்டு, ரசித்து வருகின்றனர்.
© வேதபிரகாஷ்
08-09-2018
[1] செப்டம்பர் 2015லும், சமூக ஊடகங்களில் அத்தகைய, சித்தரிப்புகள், தூஷண எழுத்துகள் காணப்படுகின்றன.
[2] பிரான்சிஸ் சேவியர் குளூனி என்ற ஹார்வார்ட் புரொபசரின் மேரி-ஶ்ரீ ஆராய்ச்சி பற்றி விவைத்துள்ளேன். அங்கு இப்பிரச்சினை விவரிக்கப் பட்டுள்ளது.
[3] நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் நூல்களை எல்லாம் அழித்து விட்டதாகத் தெரிகிறது. ஏனெனில், மொஹம்மது அவ்வாறெல்லாம் விவரிக்கக் கூட்டாதாம். அது அவர்களது கொள்கைகளுக்கு எதிரானதாம்! இதில் வேடிக்கை என்னவென்றால், இவையெல்லாமே 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. வஹாபியிஸம் தலைதூக்கியதும், அந்த தமிழ்-புலமை எல்லாம் மறைந்து விட்டது.
[4] The Telegraph, FIR on artist for Krishna depiction – Plea for tolerance and artistic freedom follows protess in Assam, by, Nilotpal Bhattacharjee, Sunday , April 12 , 2015.
[5] https://www.telegraphindia.com/1150412/jsp/northeast/story_14095.jsp
[6] தமிழ்புலவர்கள் எப்படி அரசர்களை, குருநில மன்னர்களை, மற்றவர்களை பாராட்டி பரிசு, பொருள் பெற்று வாழ்க்கை நடத்தினரோ, அதே முறையில் தான், இக்கால எழுத்தாளர்கள், புலவர்கள் போன்றோர் இருக்கின்றனர். காசு, பரிசு, பதவி, பாராட்டு கிடைத்தால் “வாழ்த்துகள்,” கிடைக்காவிட்டால் தூஷணங்கள்!
[7] தமிழ் இலக்கியங்களில் “ஆநிரைக் கவர்தல்” ஒரு வீரனுக்கும் அரசனுக்கு, புலவனுக்கு, முக்கியமான விசயமாக இருந்தது. தமிழ் இலக்கியத்தில் மாடு = செல்வம் என்பதால், அத்தகைய கோ-ஹரனம், முக்கியமாக விவைக்கப் பட்டது. இன்றைக்கும் மாடு திருடுதல், கவர்தல், கடத்துதல் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
குறிச்சொற்கள்: அக்ரம் ஹுஸைன், அபகரிப்பு, அரவிந்தன் நீலகண்டன், உடை, உடை அபகரிப்பு, ஓவியம், கண்ணன், காமுகன், கிருஷ்ணர், கோபிகை, சரசம், நிரியாணம், நிர்வாணம், யமுனை, ராசலீலா, ராசலீலை, ராஸலீலா, ராஸலீலை, வஸ்த்ர ஹரண்
10:17 முப இல் ஏப்ரல் 2, 2019 |
[…] https://antihidnu.wordpress.com/2018/09/07/blaspheming-krishna-on-the-occasion-of-krishna-jayanti-dr… […]
LikeLike
10:27 முப இல் ஏப்ரல் 2, 2019 |
[…] https://antihidnu.wordpress.com/2018/09/07/blaspheming-krishna-on-the-occasion-of-krishna-jayanti-dr… […]
LikeLike